Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அஜித் 60 அறிவிப்பு : ரேஸ் கதைக்களம்
நடிகர் அஜித் நடித்து, இயக்குநர் வினோத் இயக்கி உள்ள ‛நேர் கொண்ட பார்வை' படம் ஆகஸ்டு 8ல் ரிலீசாகிறது. அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் போனிக் கபூர், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், 'அஜித்தின் 60வது படத்தையும் நானே தயாரிக்கிறேன். மீண்டும் வினோத் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது' என தெரிவித்திருக்கிறார்.
அஜித்தின் 60வது படத்துக்கு தற்காலிகமாக ஏ.கே.60 என பெயர் சூட்டி இருக்கின்றனர். 'இந்தப் படம் மோட்டார் சைக்கிள் ரேசை மையமாக வைத்து கதைப் பின்னப்பட்டிருக்கிறது. படத்தின் நாயகனாக நடிக்கும் நடிகர் அஜித், படத்தில் பைக் ரேஸ் ப்ரியர். ரேஸில் கலந்து கொள்வதுதான் வாழ்க்கை என வாழ்கிறவர். அவர் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்தே படம் எடுக்கப்படுகிறது' என படக் குழுவினர் தெரிவித்தனர்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தனுஷுக்கு வில்லனா ஹ்ருத்திக் ரோஷன் – மீண்டும் பாலிவுட் !
தனுஷ் புதிதாக நடிக்க இருக்கும் பாலிவுட் படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான படத்தை இயக்கியவர் ஆனந்த் எல் ராய். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தனுஷை பாலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது. அதையடுத்து தனுஷ் அமிதாப் பச்சனோடு நடித்த ஷமிதாப் படம் எதிர்பார்த்த அளவு போகததால் பாலிவுட்டில் இருந்து சற்றுகாலம் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகவும், தனுஷுக்கு ஜோடியாக சாயிப் அலிகானின் மகள் சாரா அலிகான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவலை ஆனந்த் எல் ராய் தரப்பில் இருந்து இன்னும் உறுதி செய்யவில்லை.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பப்பில் ஆண் நண்பருடன் செம செக்ஸி டான்ஸ் போடும் மீரா.. வைரலாகும் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விரட்டப்பட்ட மீரா மீதுன் ஆண் நண்பருடன் பப் ஒன்றில் பயங்கர செக்ஸி டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா, நாள்தோறும் ஒரு ஏழரையை கூட்டிக் கொண்டிருந்தார். யாருடனும் ஒத்துப்போகாமல் வாக்குவாதம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் வனிதா கேங்க் அவரை டார்கெட் செய்த ஓரங்கட்டினர். இதனால் மீரா மீது மக்களுக்கு பரிதாபம் ஏற்பட்டது. அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தர்ஷன் மீது புகார்
ஆனால் நாள் ஆக ஆக அவரின் ஒரிஜினல் கேரக்டர் வெளிப்படத் தொடங்கியது. தர்ஷன் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று கமல்ஹாசனிடமே புகார் கூறினார்.
[color][font]
கண்ணீர்விட்ட சேரன்
கடந்த வாரம் பிக்பாஸ் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது, சேரன் மீது அவர் கூறிய குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் தவறான எண்ணத்தில் மீராவை தொடவில்லை என சத்தியம் செய்து கூறி கண்ணீர்விட்டார் சேரன்.
[/font][/color]
[color][font]
வேட்டு வைத்த கமல்
இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டால் தனது மகள்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கருதிய சேரன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், குறும்படம் போட்டு மீராவுக்கு வேட்டு வைத்தார்.
கெட்ட ஆட்டம்
இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே போயும் அடங்காமல் சேரன் மீது பொய் புகார்களை கூறி வருகிறார். இந்நிலையில் பப்களில் மீரா மிதுன் கெட்ட ஆட்டம் போடம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்தியாவில் 100 கோடி வசூலில் இணைந்த தி லயன் கிங்... சாதனை படைத்த 4-வது ஹாலிவுட் படம்!
இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் செய்த 4-வது ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்துள்ளது தி லயன் கிங் திரைப்படம்
தி லயன் கிங்
Web Desk | news18
Updated: July 30, 2019, 2:49 PM IST
தி லயன் கிங் திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
1994-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கார்ட்டூன் தொடரான ‘தி லயன் கிங்’ திரைப்படமாக 3டி அனிமேஷனில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் தமிழில் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
தி லயன் கிங் திரைப்படத்தை கார்ட்டூன் தொடராக ரசித்தவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு 3டி வடிவில் திரைப்படமாக பார்க்க ஆசைப்படுவதால் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படம் இந்தியா முழுவதும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளது.
Quote:
[/url]taran adarsh
✔@taran_adarsh
#TheLionKing biz at a glance...
Week 1: ₹ 81.57 cr
Weekend 2: ₹ 32.70 cr
Total: ₹ 114.27 cr#TheLionKing is the fourth #DisneyIndia film to cross ₹ 100 cr [#TheJungleBook, #AvengersInfinityWar, #AvengersEndgame].
India biz. All versions.
SUPER-HIT.
3,348
2:34 PM - Jul 29, 2019
Twitter Ads info and privacy
[color][size][font][color][size]
317 people are talking about this
[url=https://twitter.com/taran_adarsh/status/1155765976090066950]
இதன்மூலம் இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் செய்த 4-வது ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்துள்ளது. முதல் வாரத்தில் 81 கோடியும், இரண்டாவது வாரத்தில் 32 கோடியும் வசூல் செய்துள்ளது.முன்னதாக தி ஜங்குள் புக், அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசுல் செய்துள்ளன[/size][/color][/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கைவிடப்பட்டது 24ஆம் புலிகேசி - ஷங்கருக்கு நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம்?
24ஆம் புலிகேசி படம் கைவிடப்பட்டதாகவும், ஷங்கருக்கு இதற்கான நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேல், ஷங்கர்
[size][font]
வடிவேல் நடித்து வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர். சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று ஷங்கர் புகார் கூறினார்.
[/font][/size]
[size][font][size][font]
இதைத்தொடர்ந்து வடிவேல் புதிய படங்களில் நடிக்க பட அதிபர் சங்கம் தடை விதித்தது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களில் சம்பளம் வாங்காமல் நடித்து ஷங்கரின் நஷ்டத்தை ஈடுகட்டுவதாக வடிவேல் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இதைத்தொடர்ந்து வடிவேல் மீதான தடை நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 24-ம் புலிகேசி படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.[/font][/size][/font][/size]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மீராவை ‘பொளேர்’ என கன்னத்தில் அடித்த சேரன் மனைவி? தொடர்ந்து கணவர் பற்றி அவதூறு பரப்பியதால் ஆத்திரம்!
சென்னை: தொடர்ந்து தனது கணவர் மீது அவதூறு பரப்பி வரும் மீரா மிதுனை நேரில் சந்தித்து, சேரனின் மனைவி அடித்ததாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே சேரனுக்கும், மீராவுக்கும் ஆகவில்லை. இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்ததால், மக்கள் மத்தியில் மீரா மீதான வெறுப்பு அதிகரித்தது. கடந்த வாரம் கிராமத்து டாஸ்க்கில் அவர் சேரன் மீது பாலியல் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் குறும்படம் போட்டுக் காண்பித்தும் மீரா சமாதானம் ஆகவில்லை.
தொடர்ந்து சேரன் மீதே அவர் கூறிக் கொண்டிருந்தார். இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தியைச் சந்தித்த மீரா, கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மீராவின் பேச்சு:
ஆனாலும் சேரன் மீதான விரோதப் போக்கை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளிலும் சேரன் மீது அவர் தொடர்ந்து புகார் கூறியே வருகிறார். பிக் பாஸ் வீட்டில் சேரன் ஒரு இயக்குநராகவே நடந்து கொள்வதாகவும், தன்னை கருப்பு கருப்பு என மட்டம் தட்டியதாகவும், தாழ்வுமனப்பான்மை உடையவர் எனக் கூறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் பேட்டிகளில் கூறி வருகிறார்.
[color][font]
சேரன் மனைவி கோபம்:
இந்நிலையில், சேரன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதால், மீரா மீது ஆத்திரமடைந்த சேரனின் மனைவி செல்வராணி, அவரை நேரில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மீராவை அவர் அடித்ததாகவும் ஒரு தகவல் இணையத்தில் உலா வருகின்றன. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் செய்தி வைரலாகி இருக்கிறது.
[/font][/color]
[color][font]
வைரலாகும் தகவல்:
இது தொடர்பாக செல்வராணியோ அல்லது மீராவோ அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தால் தான், இந்த சம்பவம் பற்றிய உண்மைத்தன்மை தெரிய வரும். ஆனால் இந்தச் செய்தி சேரன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியிருக்கிறது என்பது மட்டும் அவர்களது கமெண்ட் மூலம் உறுதியாகி இருக்கிறது. தனது படங்களில் கூட பெண்களைக் கண்ணியமாகக் காட்டும் சேரன் மீது, தகாத புகார் கூறியதால் அவர்களது ரசிகர்கள் மீரா மீது இன்னமும் கோபத்தில்தான் உள்ளனர்.
[/font][/color]
[color][font]
போட்டியாளர்களின் பாராட்டு:
மீரா தவிர பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற அனைத்து போட்டியாளர்களுமே சேரன் பழகும் விதம் குறித்து நல்ல விதமாகவே கூறி வருகின்றனர். சமயத்தில் அவர் இயக்குநராக அதிகாரம் செய்வதாகக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பிரச்சினைகளில் அவரே நடுநிலையாளராக நின்று இருதரப்பிற்கும் பாதகம் இல்லாமல் தீர்வு சொல்வதாக அவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] ``ப்ச்... கொஞ்சம் முன்னாடியே அந்த முடிவை நான் எடுத்திருக்கணும்..!’’ - நடிகை கௌசல்யா[/color]
[color=var(--title-color)]நடிகை கெளசல்யா பேட்டி...[/color]
[color=var(--meta-color)]நடிகை கௌசல்யா[/color]
[color=var(--content-color)] தமிழ் சினிமா ஹோம்லி ஹீரோயின்களின் வரிசையில் 90-களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்தவர் கௌசல்யா. தற்போது பெங்களூரில் இருக்கும் அவரிடம் பேசினோம்.[/color]
[color=var(--content-color)] [color=var(--accent-color)]நீங்க பேஸிக்கா ஒரு மாடல்.. அதுக்கப்புறம் எப்படி ஹீரோயின் ஆனீங்க..?[/color]
``எனக்கு சொந்த ஊர் பெங்களூரு. சின்ன வயசுல இருந்து எனக்கு மாடலிங் பண்ணணும்னு ஆசை இருந்தது. ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ என் அம்மாவோட தோழி மூலமா, சொட்டு நீலம் விளம்பரம் ஒண்ணுல முதன்முறையா நடிச்சேன். அதைத்தொடர்ந்து நிறைய விளம்பரங்கள் வர ஆரம்பிச்சது. அப்போ மலையாள டைரக்டர் பாலச்சந்திர மேனன், அவரோட `ஏப்ரல் 19’ படத்துக்கு புதுமுகம் தேடிக்கிட்டிருந்தாரு. அந்த நேரத்துல அம்மாவோட தோழி மூலமா அவரைப் பார்த்து அந்த படத்துல ஹீரோயினா அறிமுகமானேன். அந்தப் படம் ஷூட் முடிஞ்சு, ரிலீஸுக்கு ரெடியாகிக்கிட்டிருந்தப்போ, அந்தப் படத்தோட விளம்பரங்களை ஏசியாநெட் சேனல்ல பார்த்துட்டு, தமிழ்ல `காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்துக்குக் கூப்பிட்டாங்க.’’
[color=var(--accent-color)]விஜய்கூடவும் பிரபுதேவாகூடவும் தொடர்ந்து படங்கள் பண்ணுனீங்க.. அந்த அனுபவங்கள் எப்படி இருந்தது..?[/color]
[color=var(--content-color)]
நடிகை கௌசல்யா
[/color]
[color=var(--content-color)]``விஜய் சார் பார்க்கத்தான் படு சைலண்ட்; நல்லா காமெடி பண்ணுவாரு. ஆனா அதை எல்லோர்கிட்டயும் பண்ணமாட்டாரு. அவரோட மனசுக்கு நெருக்கமானவங்கதான் அதை பார்க்கமுடியும். `ப்ரியமுடன்’ படம் பண்ணும்போது, `பூஜா வா’ பாட்டுக்காக ராஜஸ்தான் போயிருந்தோம். அந்த டைம்லலாம் விஜய் அடிச்ச காமெடி பஞ்சுகள் ஒவ்வொண்ணும் இன்னும் மனசுல இருக்கு. அந்த அளவுக்கு அவரோட பேச்சு காமெடியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அதேமாதிரி அவரோட டான்ஸ் பத்தி சொல்லவே வேணாம். `பூஜா வா’ பாட்டுல மூவ்மென்ட்ஸ் எல்லாமே ரொம்ப ஆக்ரோஷமா ஆடுற மாதிரி இருக்கும். விஜய் அந்த மூவ்மென்ட்ஸை எல்லாம் அசால்ட்டா ஆடிடுவாரு. நானோ டான்ஸ்ல ரொம்ப வீக். ரொம்ப கஷ்டப்பட்டேன். விஜய் அதைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு டிப்ஸ் தருவாரு. எத்தனை தடவை ஒன்மோர் போனாலும் பொறுத்துப்பாரு. பிரபுதேவா அப்படியே வேற மாதிரி, `வானத்தைப்போல’ படத்துல வர்ற `நதியே..’ பாட்டு மூவ்மென்ட்ஸ் ஒவ்வொண்ணும் ரொம்பக் கஷ்டம். ஆனா, அதை நான் கத்துக்கிறவரைக்கும் அவர் விடவே இல்லை. ரொம்ப ஈஸியா சொல்லிக்கொடுத்து ஆட வெச்சு எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தாரு.’’[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--accent-color)] உங்க கரியர்ல முக்கியமான படம் `பூவேலி’. அதைப் பத்தி சொல்லுங்க..?[/color]
`` `பூவேலி’ என் கரியர்ல மிக முக்கியமான படம். கே.பாலச்சந்தர் சாரோட `கவிதாலயா’வுல எனக்கு அது முதல் படம். அதுக்கப்பறம் நான் தொடர்ந்து அங்கே படங்கள் பண்ணேன். `பூவேலி’க்காக எனக்கு ஃபிலிம்பேர் விருது கிடைச்சது. அந்தப் படத்துல கார்த்திக் சார்கூட நடிச்சது மறக்கமுடியாதது. கார்த்திக் சாரைப் பத்தி பொதுவா எல்லாரும் தப்பா சொல்லுவாங்க, அவரு டைமுக்கு ஷூட் வரமாட்டாரு, அப்படி இப்படின்னு. அதெல்லாம் உண்மை இல்லை; நான் அவர்கூட தொடர்ந்து வொர்க் பண்ணியிருக்கிற அனுபவத்துல சொல்றேன். அவருக்கு ஒரு ப்ராஜெக்ட் செட் ஆச்சுன்னா ஷார்ப்பா ஷூட்டுக்கு வந்துடுவாரு. அவரால எந்தத் தொந்தரவும் வராது. ரொம்ப நல்ல மனிதர். மனசுல பட்டதை அப்படியே பேசக்கூடியவர். இதை அவரே, `நான் ரொம்ப நல்லவன், ஆனா அது யாருக்கும் புரியாது’னு அடிக்கடி சொல்லுவாரு. அது உண்மைதான்.’’
[color=var(--accent-color)]நீங்க மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்ட வாய்ப்புகள் எதுவும் இருக்கா..?
[color=var(--content-color)]
நடிகை கௌசல்யா
[/color]
[color=var(--content-color)]``ராஜீவ் மேனன் சார் `சொல்லாமலே’ படம் பார்த்துட்டு என் நடிப்பு பிடிச்சுப்போய், அவரோட `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்துல நடிக்கக் கேட்டாரு. அப்போ, அந்தக் கேரக்டரோடத் தன்மை எனக்கு சரியா பிடிபடலை, அதனால அந்த வாய்ப்பைத் தவிர்த்திட்டேன். அதுக்கப்பறம்தான் அந்த கேரக்டர்ல ஐஸ்வர்யா ராய் நடிச்சாங்க. படம் வந்ததும் பார்த்துட்டு, `அடடா இந்த கேரக்டரையா நாம மிஸ் பண்ணோம்’னு ரொம்ப ஃபீல் பண்ணேன்.’’[/color]
[color=var(--content-color)][color=var(--accent-color)]2000-க்குப் பிறகு கிளாமராகவும் நடிக்கப்போறேன்னு சொல்லி, கிளாமர் ஸ்டில்ஸ்லாம் ரிலீஸ் பண்ணி பரபரப்பைக் கிளப்புனீங்க.. அந்த மாற்றம் ஏன் உங்களுக்கு கை கொடுக்கலை..?[/color]
``எனக்கு கிளாமர் ரோல்ஸும் பண்ணணும்னு ஆசை வந்ததால் அந்த முடிவை எடுத்தேன். ஆனா அது ரொம்ப காலம் கடந்து எடுத்த முடிவு. கொஞ்சம் முன்னாடியே அந்த முடிவை நான் எடுத்திருக்கணும். அதேமாதிரி இந்த மாற்றத்துக்குப் பிறகு கார்த்திக் சாரோட நடிக்கக் கமிட் ஆன `மனதில்’ படமும் பாதியிலேயே டிராப் ஆச்சு. இப்படி அந்த நேரத்துல நான் கமிட் ஆன மூணு படங்களுமே வேற வேற காரணத்தால கிடப்புக்குப் போச்சு. இந்தக் காரணங்களாலதான் அந்த மாற்றம் வொர்க் அவுட் ஆகலை.’’ நீங்க நித்தியானந்தாவோட பக்தையாமே..?
[color=var(--content-color)]
நடிகை கௌசல்யா
[/color]
[color=var(--content-color)]``சில வருடங்களுக்கு முன்னாடி எனக்கு உடம்புல நிறைய பிரச்னைகள் இருந்தது. அந்த சமயத்துலதான் நான் ரொம்ப குண்டா இருந்தேன். அந்த நேரத்துல மன அமைதியைத் தேடி ஒரேயொரு தடவை அவரோட ஆசிரமத்துக்குப் போனேன். மத்தபடி நான் அவரோட பக்தையெல்லாம் இல்ல. இப்போ நான் வேற ஒரு குருவை பின்பற்றி யோகா, தியானம் பண்ணிக்கிட்டிருக்கேன். அந்த குரு வேற யாருமில்ல, நடிகை பூமிகாவோட கணவர் பரத் தாகூர்தான். அவர் ஒரு யோகா குரு. யோகாவும் தியானமும் ஒரு மனிதனுக்கு ரொம்ப முக்கியம். தினமும் பாத்ரூம் போற, அந்த அஞ்சு நிமிஷம் மட்டும் கண்ணை மூடி தியானம் பண்ணாலே மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதுவும் ஒரு சரியான குருவைத் கண்டடைஞ்சு பின்பற்றினா இன்னும் நிறைய மாற்றங்களை உணரலாம்.’’[/color]
[color=var(--content-color)][color=var(--accent-color)]ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை..?[/color]
``கல்யாணம் பண்ணிக்கிட்டு என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள்னு ரொம்ப குறுகிய எண்ணத்தோட வாழ எனக்கு விருப்பமில்லை. பரந்த மனப்பான்மையோட எல்லோருக்காகவும் இயங்கணும்னு விரும்புறேன். அதுக்கான முயற்சிகள்லதான் இருக்கேன். அதுவுமில்லாம இப்படி சிங்கிளா இருக்குறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அதனால இப்போதைக்கு கல்யாணம்ங்கிற பேச்சே இல்லை.'’[/color]
[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] விஜய் சேதுபதி படத்தைத் தயாரிக்கும் ராணா![/color]
[color=var(--title-color)]ம்.எஸ்.ஸ்ரீபதி இயக்க இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படத்தை, தெலுங்கு நடிகரான ராணா தயாரிக்க இருக்கிறார்.[/color]
[color=var(--meta-color)]ராணா டகுபதி[/color]
[color=var(--content-color)] தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் 'லாபம்', விஜய் சந்தர் எடுத்துக்கொண்டிருக்கும் 'சங்கத்தமிழன்' மற்றும் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்தில் இசைக் கலைஞர் என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் 'சங்கத்தமிழன்' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நடிக்க இருக்கிறார், விஜய் சேதுபதி.
[/color]
[color=var(--content-color)] விஜய் சேதுபதி
[/color]
[color=var(--content-color)] இப்படத்தில் கமிட்டான பிறகு, `முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது' என எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 800 விக்கெட்களை எடுத்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமை முத்தையா முரளிதரனுக்கு உண்டு. அதனால், இப்படத்திற்கு '800' என்று தலைப்பிடத் திட்டமிட்டுள்ளனர்.
வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து எனப் பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமன்றி, இப்படத்தை முதல் முறையாக தமிழில் 'தார் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், படத்தின் இணை தயாரிப்பாளராக தெலுங்கு நடிகர் ராணா கைகோத்துள்ளார். இதைத் தவிர நானி நடிப்பில் வெளிவந்த 'ஜெர்ஸி' படத்தின் தமிழ் ரீமேக்கையும் ராணா தயாரிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சக்களத்தி சண்டையால் நாறிய பிக் பாஸ் வீடு.. முக்கோண காதலில் உச்சகட்ட டிராமா.. வெறுப்பில் ஹவுஸ்மேட்ஸ்
சென்னை: கவின், சாக்ஷி மற்றும் லாஸ்லியா, இந்த மூவரில் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றால் ஒழிய இந்தக் காதல் பிரச்சினை இப்போதைக்கு தீராது போல.
சாக்ஷி, லாஸ்லியா சண்டையை சக்களத்தி சண்டை என்று தான் நெட்டிசன்களே கலாய்க்கின்றனர். அந்தளவுக்கு கவினை காரணமாகக் கொண்டு இரண்டு பேரும் அடித்துக் கொள்ளாத குறையாக சண்டை போட்டு வருகின்றனர்.
இந்தப் பிரச்சினை கடந்த சில வாரங்களுக்கு முன்பே உருவானது தான். இதில் மூன்று பேருக்குமே சம்பந்தம் இருக்கிறது. ஆனால் மூன்று பேருமே தங்களது தவறை உணராமல், மற்றவர்கள் மீது தவறு சொல்வது தான் இத்தனைப் பிரச்சினைகளுக்குமே காரணம்.
நேற்றும் வழக்கம் போல், மொட்டைக் கடுதாசி டாஸ்க்கை வாய்ப்பாகக் கொண்டு, தங்களது பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல முயற்சித்தனர் கவின், சாக்ஷி மற்றும் லாஸ்லியா.
லாஸ்லியாவின் ஆட்டிடியூட்:
ஆனால், இந்தப் பிரச்சினையில் சக போட்டியாளர்களை அவர்கள் நடத்திய விதம் தான் எரிச்சலூட்டும்படி இருந்தது. அதிலும் குறிப்பாக லாஸ்லியா மற்றும் சாக்ஷியின் நடவடிக்கைகள். தனக்கு தேவைப் படும்போது, அனைவரையும் பேச அழைப்பது, பின் எடுத்தோம், கவிழ்த்தோம் என பேசி விட்டு, மற்றவர்களை மதிக்காமல் அங்கிருந்து செல்வது என ஓவராக ஆட்டிடியூட் காட்டினார் லாஸ்லியா.
[color][font]
கோபமூட்டிய சாக்ஷி:
இவர் இப்படி என்றால், சாக்ஷியோ வேறு மாதிரி கோபமூட்டினார். அவரது உணர்ச்சிகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அவர் சொல்ல வருகிறார். ஆனால், எங்கே லாஸ்லியா தன்னை ஓவர் டேக் செய்து விடுவாரோ என, அவரைப் போலவே தானும் சாரி கேட்டதெல்லாம் ஓவர். இதனாலேயே ஷெரீன், ரேஷ்மா என சக போட்டியாளர்கள் எரிச்சல் அடைந்தனர்.
[/font][/color]
[color][font]
குழப்பவாதி கவின்:
இவர்கள் இருவரும் தான் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்றால், இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணமான கவினோ, வேறு மாதிரி பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறார். அத்தைப் பெண்கள் கூட்டத்திற்கு நடுவே வளர்ந்தவர் எனக் கூறுகிறார். ஆனால் பெண்களின் மனதைப் புரியாதவர் மாதிரியே நடிக்கிறார்.
[/font][/color]
[color][font]
கமல் தான் தீர்வு:
நிஜமாகவே இவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு தேடுகிறார்களா இல்லை பிக் பாஸுக்கு கண்டெண்ட் கொடுக்க பிரச்சினையை ஜவ்வாக இழுக்கிறார்களா என்ற சந்தேகமே கடந்த சில நாட்களாக பிக் பாஸைப் பார்க்கும் போது தோன்றுகிறது. எப்படியும் இன்றும் இந்தப் பிரச்சினையை முடிக்க மாட்டார்கள் என்றேத் தெரிகிறது. பார்ப்போம் கமலாவது வந்து இதற்கு ஒரு தீர்வு தருகிறாரா என.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Kazhugu 2 Review:அடர்வனத்தில் செந்நாய்களின் தாக்குதலுக்கு நடுவில் ஓர் அழகான காதல்-கழுகு 2 விமர்சனம்
Star Cast: கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட், யாஷிகா ஆனந்த், கிரேன் மனோகர்
Director: சத்யா சிவா
சென்னை: எளிய மனிதர்களுக்கு இடையேயான காதலை, அடர் வனத்தின் பின்னணியில் குளிர்ச்சியாக கூறும் படம் கழுகு 2.
கொடைக்கானலில் ஓர் அடர்ந்தக் காடு. அதில் செந்நாய்களின் ஆட்சி. மனிதர்களை வேட்டையாடும் செந்நாய்களுக்கு பயந்து, அந்த காட்டுக்குள் நுழையவே பயப்படுகின்றனர் ஊர் மக்கள். சுயநலம் கொண்ட ஒரு வியாபாரி மரங்களை வெட்டி லாபம் பார்ப்பதற்காக அந்த காட்டை ஏலம் எடுக்கிறார்.
தொழிலாளர்களின் அச்சத்தை போக்க துப்பாக்கியுடன் திரியும் இரண்டு வேட்டைக்காரர்களை (கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட்) பாதுகாப்பு பணியில் நியமிக்கிறார். ஆனால் அந்த இரண்டு பேரும் போலீசிடம் துப்பாக்கியை களவாடிய டுபாக்கூர்கள். அது தெரியாமல் மரம் வெட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள் தொழிலாளர்கள்.
அதில் ஒரு தொழிலாளியான பிந்து மாதவி, வந்தவர்கள் உண்மையான வேட்டையர் அல்ல என்பதை கண்டுகொள்கிறார். இருப்பினும் அனாதையான கிருஷ்ணா மீது பரிதாபம் கொண்டு, அவரை காதலிக்கத் தொடங்குகிறார். முதலில் காதலை ஏற்க மறுக்கும் கிருஷ்ணா, பின்னர் பிந்துவை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்த காதலுக்கு பிந்துவின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர் வில்லனாக வருகிறார்.
அதேசமயம் பேராசைப் பிடித்த உள்ளூர் எம்எல்ஏ ஹரிஷ் பிராடி, காட்டுக்குள் இருந்து கொள்ளையடித்த பழங்காலத்து நகைகளை, கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் ஆட்டையப் போடுகிறார்கள். தனது நகைகளை கொள்ளையடித்தவர்களை தேடி அலைகிறார் ஹரிஷ் பிராடி. கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் எம்எல்ஏவிடம் சிக்காமல் தப்பிக்கிறார்களா?, கிருஷ்ணா - பிந்து மாதவி காதல் என்ன ஆகிறது என்பதே மீதிக்கதை.
முதலில் நாம் பாராட்ட விரும்புவது ஒளிப்பதிவாளர் ராஜாவை தான். ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு ஃப்ரேமையும் கவிதையாய் படைத்திருக்கிறார். முதல் காட்சியில் பச்சை பசேல் என காட்சியளிக்கு காட்டையும், அதன் அழகையும், அதில் ஒளிந்திருக்கும் அபாயத்தையும் ஒரு சேர படம் பிடித்து அசத்துகிறார். வெண்பனி ஓடும் மாலைப் பொழுதுகளில் மனதை மயக்குகிறார்.
ஒவ்வொரு காட்சியிலும் அசாதாரணமான நடிப்பை கொட்டியிருக்கிறார் பிந்து மாதவி. கிருஷ்ணாவின் மீது பரிதாபம் கொள்வது, தனது காதலுக்காக பெற்றோரை எதிர்ப்பது என ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். பழைய பாவாடை தாவணி, அதற்கு மேல் ஒரு கட்டுத்துணி என சிம்பிளான ஆடையிலும் அழகாய் ஜொலிக்கிறார்.
களவாணிப் பயல், டுபாக்கூர் வேட்டைக்காரன், அப்பாவிக் காதலன் என அனைத்து சூழ்நிலைக்கும் அச்சு அசலாய் பொருந்துகிறது கிருஷ்ணாவின் முகம். பீடியை இழுத்துக் கொண்டு காளி வெங்கட்டுடன் அவர் செய்யும் ரகளைகள் ரசிக்க வைக்கின்றன.
நீண்ட நாட்கள் கழித்து முழுப்படத்திலும் வருகிறார் காளி வெங்கட். ஹீரோவின் நண்பன் ரோலுக்கு செமபிட். இருந்தாலும் உங்களிடம் நிறைந்திருக்கும் திறமைக்கு இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ப்ரோ. பிந்துவின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கரும், தாயாக ரமாவும் கனக்கச்சிதம்.
கிருஷ்ணா, காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் காமெடி ஒரு சில இடங்களில் நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. வில்லன் ஹரிஷ் பிராடி வழக்கம் போல சைலண்டாக வந்து வைலண்டாக பயமுறுத்துகிறார்.
காடு, மரம் வெட்டும் தொழிலாளர்கள், செந்நாய்க்கூட்டம் என புதிய களத்தை காட்டுகிறார் இயக்குனர் சத்யசிவா. இரண்டாம் பாதியில் வரும் மரச்சாவி திருட்டு சீக்வென்ஸ் பிரெஷ் மெட்டிரியல். அதேபோல் பெண் பார்க்கும் காட்சியில் அந்த முதியவர் பேசும் டயலாக், அல்டிமேட் காமெடி.
ஆனால் படம் ஆரம்பித்ததில் இருந்து கும்கி படத்தின் பாதிப்பை உணர முடிகிறது. இரண்டாம் பாதியின் பாதி வரை ஒழுங்காக நகரும் படம், அதன் பிறகு முதுமக்கள் தாழி, திருட்டு, நகைக் கொள்ளை என திசை மாறிவிடுகிறது. அதனாலேயே படத்துடன் ஒன்ற முடியாமல் போய்விடுகிறது. காமெடி ஏரியாவிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறை காட்டியிருக்கலாம். அதேபோல் செந்நாய்கள் தொடர்பான கிராபிக்ஸ் காட்சிகளிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில், 'காந்த கண்ணழகி' யாஷிகா ஆடும் பாட்டு செம பீட்டு. பின்னணி இசையிலும் வழக்கம் போல் தனது முத்திரையை பதித்திருக்கிறார். கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங் படத்தை போரடிக்காமல் நகர்த்துகிறது.
கதையிலும், திரைக்கதையிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இந்த கழுகு 2-ம் வானுயரப் பறந்திருக்கும்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜாக்பாட் - விமர்சனம்
ஜாக்பாட் - பட காட்சிகள் ↓
-
-
-
-
[color][size][font][color]
ஜாக்பாட்
நேரம் 2 மணி நேரம் 22 நிமிடம்
[/color][/font][/size][/color] - ஜோதிகா
- 02 ஆக, 2019
- குலேபகாவலி கல்யாண்
- ஜாக்பாட் - ஜஸ்ட் பாஸ்...
2.75
[color][size][font][color]
விமர்சனம்
[/color][/font][/size][/color]
நடிப்பு - ஜோதிகா, ரேவதி, ஆனந்தராஜ்
தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - கல்யாண்
இசை - விஷால் சந்திரசேகர்
வெளியான தேதி - 2 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களை இயக்குவதற்கென்று ஒரு சில இயக்குனர்கள் தனியாகவே இருந்தார்கள். அவர்களது படங்களை நம்பி பார்க்கச் சென்றால் நிச்சயம் சிரித்துவிட்டு வரலாம் என்ற நிலை இருந்தது. இப்போது நகைச்சுவைப் படங்களை இயக்கும் நடிகர்களும் குறைவு, நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் நடிகர்களும் குறைவு.
நகைச்சுவைப் படம் என்றால் ஆரம்பம் முதல் கடைசி வரை சிரிக்க வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆங்காங்கே சில காட்சிகளிலாவது சிரிக்க வைக்க வேண்டும். இந்த ஜாக்பாட் படத்தின் டிரைலரைப் பார்த்த போது நமக்கும் படம் வரும் போது பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறோம் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை சற்றே ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர் கல்யாண்.
காமெடிப் படங்களுக்குக் கதையே தேவையில்லை, நல்ல நடிகர்கள் இருந்தால் போதும், நச்சென்று நான்கு காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்தால் போதும், ரசிகர்கள் திருப்தியடைந்துவிடுவார்கள். இந்தப் படத்தில் நல்ல நடிகர்கள் கிடைத்துவிட்டார்கள், சுமாரான கதை கிடைத்துவிட்டது, காமெடிக்கான காட்சிகளை அமைக்க சரியான இடங்கள் இருந்தும் அங்கே வசனங்கள் சரியாக அமையவில்லை.
அண்ணன் மகள் ஜோதிகாவுடன் சேர்ந்து சின்னச் சின்ன ஏமாற்று மற்றும் திருட்டு வேலைகளில் ஈடுபடுபவர் ரேவதி. அவர்களுக்கு அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரம் பற்றிய ரகசியம் ஒன்று தெரிய வருகிறது. அந்தப் பாத்திரம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆனந்தராஜ் வீட்டிற்குச் சென்று அதை எடுக்க முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களுக்குத் தோல்வி ஏற்படுகிறது. கடைசியில் அவர்கள் அந்த அட்சய பாத்திரத்தை எடுத்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
குலேபகாவலி படத்தில் கோயிலில் புதைக்கப்பட்ட வைரப் புதையல் என்று சொன்ன இயக்குனர் கல்யாண் இந்த ஜாக்பாட் படத்தில் அதைக் கொஞ்சம் மாற்றி அட்சய பாத்திரப் புதையல் என்று சொல்லிவிட்டார். குலேபகாவலி படத்திலிருந்த பிரபுதேவா மட்டும் இந்தப் படத்தில் இல்லை. ஹன்சிகாவுக்குப் பதிலாக ஜோதிகா. மற்றபடி புதையல், தேடல், சண்டை என குலேபகாவலியை அடிக்கடி ஞாபகப்படுத்துவதால் இந்தப் படத்திற்கு குலேபகாவலி 2 என்று கூட பெயர் வைத்திருக்கலாம்.
படத்தில் ஹீரோ இல்லாத குறையை ஹீரோயின் ஜோதிகா தீர்த்து வைக்கிறார். அவருக்காக இரண்டு, மூன்று சண்டைக் காட்சிகளையும் அமைத்திருக்கிறார் இயக்குனர். பறந்து பறந்து அடிக்கிறார். ஆரம்பத்தில் மட்டும் அவரை நகைச்சுவைக் கதாபாத்திரத்திலும், ஒரு திருடியாகவும் பார்க்க கொஞ்சம் தடுமாற்றம் வருகிறது. போகப் போக அவருடைய கதாபாத்திரத்திற்குள் நம்மையும் இழுத்துக் கொள்கிறார். வழக்கம் போல சில காட்சிகளில் மட்டும் கொஞ்சம் ஓவர் ஆகவே நடிக்கிறார்.
குலேபகாவலி படத்தில் பார்த்ததை விட இந்தப் படத்தில் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார் ரேவதி. அதற்காக, அந்தக் காலத்தில் கமல்ஹாசன், கார்த்தி ஆகியோர் காதலித்த ரேவதியை, இந்தப் படத்தில் மொட்ட ராஜேந்திரனை காதலிக்க வைப்பது எல்லாம் ரொம்பவே ஓவராகத் தெரியவில்லையா இயக்குனரே. படம் முழுவதும் இவரும் ஜோதிகாவும் நடிப்பதை விடவும், சண்டை போட்டதை விடவும், ஒரு பொய்யை எப்படித் திரித்துச் சொல்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்.
படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் ஆகியோரைவிடவும் காமெடியில் ஓவர்டேக் செய்து செல்பவர் ஆனந்தராஜ் மட்டுமே. ரைஸ் மில் வைத்திருக்கும் அவர் தன்னைத் தானே தாதா என்று வேறு சொல்லிக் கொள்கிறார். அப்படிப்பட்டவர் ஜோதிகா, ரேவதியிடம் அடிக்கடி ஏமாந்து நம்மை சிரிக்க வைக்கிறார். அதிலும் அவர்கள் சொன்னபடி படத்தை எடுத்துக் கொண்டு ஆந்திரா பார்டர் செல்லும் போது தப்புத் தப்பாக எழுதி வைத்த தமிழைப் படித்து அவர் அடிக்கும் கமெண்ட்டுகளுக்கு தியேட்டரில் அப்படி ஒரு சிரிப்பலை. இந்தக் காட்சியில் இருந்த சிரிப்பலையை படம் முழுவதும் வைத்திருக்க வேண்டும். படத்தில் இன்னொரு ஆனந்தராஜ், இல்லை.. இல்லை.. ஆனந்தி ராஜும் உண்டு. தாதாவின் அக்கா மானஸ்தியாக பெண் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும் ஆனந்தராஜே நடித்திருக்கிறார். ஆஜானுபாகுவாக பல ஹீரோக்களை மிரட்டியவர், பெண் வேடத்தில் சிரிக்க வைத்திருக்கிறார். படத்தில் யாருக்கு ஜாக்பாட் கிடைக்கிறதோ இல்லையோ ஆனந்தராஜுக்கு டபுள் ஜாக்பாட்.
விஷால் சந்திரசேகர் பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பின்னணி இசை பரவாயில்லை. ஜோதிகாவுக்கு சண்டைப் பயிற்சி அளித்த மாஸ்டர் பாராட்டுக்குரியவர்.
படத்தின் கதை கிராமத்தில் நடக்கிறதா அல்லது நகரத்தில் நடக்கிறதா என்பதில் குழப்பம். வீடு, வீடாக மட்டுமே மாற்றி மாற்றி காண்பித்துள்ளார்கள். செட்டுக்குள்ளேயே படத்தை முடித்திருப்பார்கள் போலிருக்கிறது. சில முறை மட்டும் சாலைகளை காட்டுகிறார்கள்.
படத்திற்கு ஸ்கிரிப்ட்டை எழுதிய இயக்குனர் கல்யாண், அதை நகைச்சுவைப் படம் என எழுதிய பேப்பர்களை அந்த அட்சய பாத்திரத்திற்குள் போட்டிருந்தால் கூட இன்னும் கூடுதலான நகைச்சுவைக் காட்சிகள் வந்திருக்குமோ...?.
ஜாக்பாட் - ஜஸ்ட் பாஸ்...
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 247
Threads: 0
Likes Received: 8 in 8 posts
Likes Given: 0
Joined: Jul 2019
Reputation:
1
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கோமாளி டிரெய்லரில் கிண்டலடிக்கப்படும் ரஜினியின் அரசியல் பிரவேசம்: கமல் எதிர்ப்பு!
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2019%2Faug%2F05%2Fkamal-haasan-lends-support-to-rajinikanth-in-comali-trailer-row-3207462.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=56e0b5463f[/img]
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த வசனம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் முதல் ரஜினி ரசிகர்கள் வரை பலரும் அந்தக் காட்சியைப் படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் தொடர்பாளர் முரளி அப்பாஸ், இந்த விவகாரம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோமாளி படத் தயாரிப்பாளரை கமல் ஹாசன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். ட்வீட்டில் அவர் கூறியுள்ளதாவது:
நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரெய்லரைப் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய விமரிசனத்தை பார்த்தவர், உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா, நியாயத்தின் குரலா என்று கூறியுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிக் பாஸ் வீட்டிலிருந்து சித்தப்பு சரவணன் வெளியேற்றம் என்ன காரணம் தெரியுமா?
Actor Saravanan Ousted from BIGG BOSS Hose:பிக் பாஸ் வீட்டில் நேற்று டாஸ்க் எல்லாம் முடிந்து மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது. அப்போது பிக் பாஸ் திடீரென..
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிக் பாஸ் வீட்டில் நேற்று டாஸ்க் எல்லாம் முடிந்து மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது. அப்போது பிக் பாஸ் திடீரென நடிகர் சரவணனைக் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றுவதாகக் கூறினார்.
முன்தின நாள்தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐந்தாவது போட்டியாளராக ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். அதனால், இனிமேல் யாராவது வெளியேற்றப்பட வேண்டுமானால், அடுத்த வாரம்தான் வெளியேற்றப்படுவார்கள் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அதனால், பிக் பாஸ் வீட்டில் நேற்று டாஸ்க் எல்லாம் முடிந்து மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான், பிக் பாஸ் திடீரென நடிகர் சரவணனனை கன்ஃபெஷன் அறைக்கு வரச் சொன்னார். அங்கே சரவணனிடம், அவர் சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில், கல்லூரி படிக்கிற நாட்களில் பேருந்தில் பெண்களை உரசியது தொடர்பாக கூறியதைப் பற்றி குறிப்பிட்டு இந்த காரணத்துக்காக நீங்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறீர்கள் என்று கூறினார். இதையடுத்து சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸின் இந்த திடீர் முடிவு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், சிலர் பேருந்துகளில் பெண்களை உரசுவதற்காகவே செல்கின்றனர் என்று கூறினார். அப்போது, சரவணன் தானும் கல்லூரி படிக்கும்போது அப்படி செய்திருப்பதாகக் கூறினார். அந்த நேரத்தில், கமல்ஹாசன் அதையும் தாண்டி நீங்கள் புனிதமாகிவிட்டீர்கள் என்று கம்மெண்ட் செய்து கடந்துவிட்டார். ஆனால், சரவணன் கூறியது பற்றி சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சை எழுந்தது. பல லட்சம் பேர் பார்க்கிற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவர் கடந்த காலங்களில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதை கூறுவது மிக மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் சரவணனும் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து அதற்காக மன்னிப்பும் கேட்டார். ஆனாலும், அந்த பிரச்னை தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. இந்த நிலையில்தான் பிக்பாஸ் நடிகர் சரவணனன் கல்லூரி படித்த காலத்தில் பேருந்துகளில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதைக் கூறியதைக் குறிப்பிட்டு இந்த காரணத்துக்காக உங்களை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றுவதாகக் கூறினார். பிக் பாஸின் தாமதமான நடவடிக்கை என்றாலும் இது குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஒருவர் செய்த தவறுக்கு பல ஆண்டுகள் கழித்து அவரே எதிர்பாராமல் தண்டனை கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு சித்தப்பாவாக நடித்ததிலிருந்து சரவணனனை பலரும் சித்தப்பு என்று செல்லமாக அழைத்து வந்தனர். அதே போல, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் சித்தப்பு என்று அழைக்கப்பட்டார். தற்போது அவர், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது போட்டியாளர்களிடையேயும் பார்வையாலர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இயக்குனர் சேரன் :
இது ஒருபுறம் இருக்க, பிக் பாஸின் செல்லப்பிள்ளையாக சேரன் இருக்கிறாரோ என்றொரு சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சேரனை பகைப்பவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டு வருவதே அதற்குக் காரணம். பிக் பாஸ் வீட்டில் சேரனை பகைத்த மூன்றாவது நபர் தற்போது வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
மீரா வெளியேற்றம்:
முதலில், மீரா மிதுன். இவர் கிராமம் டாஸ்க்கின் போது சேரன் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக மோசமான புகார் ஒன்றை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் சேரன் அழுததால், பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாக மக்கள் ஒன்றாக கூடினர். அந்த வாரம் மீரா வெளியே அனுப்பப்பட்டார். அப்போது தான், பெண்கள் பற்றி கமல் முன்னிலையில் சரவணன் தரக்குறைவாகப் பேசினார்.
ரேஷ்மா வெளியேற்றம்:
அதனைத் தொடர்ந்து கிராமம் டாஸ்க்கின் போது தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறி, சேரனை ரேஷ்மா நாமினேட் செய்தார். அதோடு அந்த வாரம் அவரும் சேரனிடம் மரியாதைக் குறைவாகவே நடந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறன்று நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
சேரனுடன் பிரச்சினை:
இந்நிலையில் கடந்த 27ம் தேதி சரவணன் பேசியதற்காக நேற்று நிகழ்ச்சியில் இருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப் பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக அவர் கூறியது தான் காரணமாகக் கூறப்பட்டாலும், கடந்த வாரம் அவருக்கும் சேரனுக்கும் இடையே ஒரு பிரச்சினை உண்டானது இங்கே நினைவுகூரத் தக்கது.
[color][size][font]
ரெட் கார்டு:
அப்போது சேரனை மரியாதைக்குறைவாக நடத்தினார் என்ற புகாரும் சரவணன் மீது எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், கமல் அறிவுரை கூறி, அவரை சேரனிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். சரவணனும் சேரனின் காலில் விழ முயற்சித்ததால் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.
[/font][/size][/color]
[color][size][font]
சேரன் ராசி:
இந்த சூழ்நிலையில் தான், சரவணன் அதிரடியாக பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். எனவே, சேரனை எதிர்த்த ராசியால் தான் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டிருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. நேற்று யாருக்கும் தெரியாமல் சரவணன் பிக் பாஸில் இருந்து வெளியேறி விட்டார். இன்று தான் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் ரியாக்சன் என்ன என்பது தெரியும்.
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
|