screw driver ஸ்டோரீஸ்
Interesting bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
"ம்ம்..!!" வாயிலிருந்து வந்த வார்த்தை கூட குறைந்த டெசிபலில் ஒலித்தது.

"அந்த தொலைஞ்சுபோன செல்ஃபோன்ல இருந்த ஸிம்மை வச்சுத்தான்.. உன் ஆளு உன்கூட இத்தனை நாள் வெளயாண்ட்ருக்கா..!!"

ஏதோ ஒரு உணவகத்தில் கண்டெடுத்த.. யாருடைய கைபேசியையோ வைத்துக்கொண்டா.. இத்தனை நாட்கள் மீரா தன்னிடம் பேசிக் கொண்டிருந்தாள்..?? அசோக்கிற்கு ஏனோ அதை நம்புவதற்கு கடினமாக இருந்தது..!!

"ந..நம்ப முடியல ஸார்..!!"

"என்ன நம்ப முடியல..??"

"யாரோ ஒருத்தரோட ஃபோனை வச்சுக்கிட்டு.. இத்தனை நாளா..!! என் மீரா அந்த மாதிரி ஆளு கெடையாது ஸார்..!!"

"ம்ம்.. சரி.. வேற ஏதோ ஒரு வழில.. வேற யார் மூலமாவோ.. தொலைஞ்சு போன அந்த ஃபோன் அவ கைக்கு போயிருக்கலாம்..!! ஆனா.. இப்போ அது மேட்டர் இல்ல..!!"

"பின்ன..??"

"அவளை ட்ரேஸ் பண்றதுக்கு இருந்த ஒரே ரூட்டும்.. இப்போ க்ளோஸ் ஆயிடுச்சு..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் சொன்ன வார்த்தைகள், அசோக்கின் மனதில் ஒரு இனம்புரியாத வேதனையை கிளறிவிட ஆரம்பித்தன.

"வே..வேற வழியே இல்லையா ஸார்..??" என்று பரிதாபமாக கேட்டான்.

"இருக்கு.. அவ திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணினா.. கண்டிப்பா ட்ரேஸ் பண்ண முடியும்..!!"

"அவ எப்படி ஸார் திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணுவா..?? அவதான் என்கூட இருந்த எல்லா லிங்கையும்.. ப்ளான் பண்ணி பக்காவா கட் பண்ணிட்டு போயிருக்காளே..?? அவ எப்படி திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணுவா..??"

"அப்போ எதுவும் செய்ய முடியாது அசோக்..!!" ஸ்ரீனிவாச பிரசாத் இயல்பாக சொல்ல, அசோக்கின் மனவேதனை உச்ச பட்சத்தை எட்டியது.

"எ..என்ன ஸார்.. நீங்களே இப்படி சொல்றீங்க..??"

அசோக்கின் கண்கள் இப்போது லேசாக கலங்கிப் போயிருந்தது.. அவனுமே சோர்ந்து தளர்ந்து போயிருந்தான்..!! அவனுடைய மூளை சிந்திக்க மறுத்து, மரத்துப்போன மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! அடுத்து என்ன செய்வது என்று புரியாத ஒரு குழப்பம்.. அவளைக் கண்டுபிடிக்க இருக்கிற வழிகளெல்லாம் ஒவ்வொன்றாக அடைபடுகிறனவே என்கிற ஆதங்கம்.. சிக்கலான வலைக்குள் சிக்கி மீள முடியாமல் தவிக்கிற மீனுடைய இயலாமை.. எங்கே அவளை திரும்ப பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்பது போலொரு பயம்..!! உள்ளத்தால் உடைந்தும், உடலால் உறைந்தும் போய் நின்றிருந்தான்..!!

ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அசோக்கை அவ்வாறு பார்க்க பாவமாக இருந்தது.. தனது வலது கையால் அவனுடய தோளைப் பற்றினார்.. ஆறுதலாக ஒரு அழுத்தம் கொடுத்தார்.. அசோக் இப்போது அவரை ஏறிட்டு.. 'என்ன?' என்பது போல பாவமாக பார்த்தான்..!!

"நான் ஒன்னு சொல்வேன்.. தப்பா எடுத்துக்க மாட்டியே..??"

"சொ..சொல்லுங்க ஸார்..!!"

"அ..அவளை.. மறந்துடுடா அசோக்..!!"

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் அசோக்கின் மனதுக்குள் கொப்பளித்துக்கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து.. வேறொரு உருவம் எடுத்துக்கொண்டன.. ஏமாற்றம், குழப்பம், இயலாமை, பயம் எல்லாம் உருமாறி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் மீதான கோபமாக மாறின..!! அவனுடைய குழப்பமான மனதின் முன்பு.. அவர் அவனது காதலுக்கு முளைத்த புது எதிரியாகவே தோன்றினார்..!! தனது தோளைப்பற்றியிருந்த அவரது கையை வெடுக்கென தட்டிவிட்டான்..!!

"டேய்..!!"

அவனுடைய செய்கையில் ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே எரிச்சலானார். அசோக்கோ அவருடைய கண்களை நேருக்கு நேராக சந்தித்து, சூடாக சொன்னான்.

"மறக்கலாம் முடியாது ஸார்..!!"

"ப்ச்.. உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்..!!"

"எனக்கு எது நல்லதுன்னு நீங்க சொல்ல வேணாம் ஸார்.. எல்லாம் எனக்கு தெரியும்..!!"

"புரியாம பேசாதடா..!!"

"யாரு ஸார் புரியாம பேசுறா..?? நீங்கதான் புரியாம பேசுறீங்க..!! எப்படி ஸார் மறக்க சொல்றீங்க..?? அவ என் உசுரோட கலந்துட்டா ஸார்.. உசுரை விட்டாத்தான் அவளை மறக்க முடியும்..!!"

"டேய்.. என்ன பேசுற நீ..??"

அசோக் உபயோகப் படுத்திய வார்த்தைகளில், ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே அரண்டு போனார்.. அவனுடைய முகத்தையே ஒருவித திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்..!! அசோக் ஒரு தெளிவற்ற ஆவேசத்தில் இருந்தான்.. ஜூரம் வந்தவன் மாதிரி உடலை சிலிர்த்துக்கொண்டான்.. முகத்தை அப்படியும், இப்படியுமாய் வெட்டிக்கொண்டான்.. உள்ளுக்குள் பொங்கிய உணர்வுகளில், அவனது முகம் கிடந்தது துடித்தது..!! பற்களால் உதட்டை அழுத்திக்கடித்து அந்த உணர்வுகளை அடக்க முயன்றவன்.. அப்புறம் அவனது ஆவேசம் குறையாமலேயே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் கேட்டான்..!!

"உங்க ஆளு.. அவ பேர் என்ன..??" அசோக் திடீரென அப்படியொரு கேள்வி கேட்பான் என்று எதிர்பாராத ஸ்ரீனிவாச பிரசாத்..

"அ..அனிதா..!!" என்றார் திணறலாக.

"ஆங்.. அனிதா..!! அவள்லாம் ஒரு பொண்ணா ஸார்..??? ச்சை..!! உங்க காதலை புரிஞ்சுக்காம.. சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு.. அப்பா, அம்மா மேல பழியைப் போட்டு.. உங்களை அப்படியே தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போனவ..!! உங்களோட உண்மையான காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவ ஸார் அவ..!! அந்த மாதிரி ஒரு பச்சைத்துரோகியையே.. அவளை உண்மையா நேசிச்ச உங்களால மறக்க முடியல.. போறவன், வர்றவன்ட்டலாம் பொலம்பிட்டு இருக்கீங்க..!! இல்ல..??"

"............................."

அசோக்கின் வார்த்தைகளில் இருந்த உண்மை, ஸ்ரீனிவாச பிரசாத்தின் இதயத்தில் சுருக்கென தைக்க, அவர் இப்போது வாயடைத்துப் போனார்.

"என் மீரா உங்க ஆளு மாதிரி இல்ல ஸார்..!! என் காதலை நல்லா புரிஞ்சுக்கிட்டவ.. பதிலுக்கு என்னையும் உண்மையா நேசிச்சவ.. என்னை விட்டு அவ விலகி இருக்குறதே என் மேல இருக்குற காதாலாலதான்..!! அவளுக்கு ஏதோ பிரச்னை இருக்கு.. அந்தப் பிரச்சினையை கூட எங்கிட்ட சொல்லி, என்னை கஷ்டப்படுத்த விரும்பாதவ ஸார் அவ..!! அவளை எப்படி ஸார் என்னால மறக்க முடியும்..??" அசோக் ஆவேசமாக கத்தினான்.

"............................."

"மறக்க முடியாது ஸார்.. மறக்கலாம் முடியாது..!!"

தனது வலது கையை சரக்கென உயர்த்தி.. ஐந்து விரல்களை விறைப்பாக விரித்து வைத்து.. 'முடியாது' என்பது போல அசோக் அசைத்துக் காட்டினான்..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஒருமாதிரி ஸ்தம்பித்துப்போய் பார்த்துக் கொண்டிருக்க.. அவன் சரேலென திரும்பி நடந்தான்.. பைக்கில் ஏறி அமர்ந்தான்.. ஆத்திரத்துடன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை திருகி புயல் வேகத்தில் பைக்குடன் பறந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஒருவித பயமும், கவலையும் தொற்றிக்கொண்டவராய்.. அவன் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தார்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Interesting bro
Like Reply
அத்தியாயம் 23

மனித மனதில் ஒரு மாற்றத்தை விதைப்பதென்பது.. மலையைக் குடைந்து பாதை அமைப்பதற்கு சமானம்..!! அந்த மனம் அத்தனை நாளாய் நம்பியிருந்த சித்தாந்தங்கள்.. எல்லாவித நிகழ்விற்குமான அந்த மனதின் எதிர்வினை சிந்தனைகள்.. இயல்பான அதன் அணுகுமுறைகள்.. இறுகிப்போன அதன் குணநலன்கள்.. இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிந்தால் மட்டுமே.. எந்தவொரு ஒரு மனிதனின் மனதையும் மாற்றிவிடுகிற சூத்திரம் மட்டுப்படக்கூடும்..!! சாத்தியமான காரியமே எனினும்.. சாதாரணமான காரியம் என இயலாது..!!

கடினமான அந்த காரியத்தை, மிக எளிதாக செய்து முடிக்கிற ஒன்று.. அண்டத்தில் உண்டெங்கில், அதனை அன்பென்றுதான் சொல்ல வேண்டும்..!! ஒரு உயிர் இன்னொரு உயிர் மீது கொண்ட உறுதியான அன்பென்பது.. உன்னதமானது மட்டுமல்ல.. சக்தி வாய்ந்தது.. வலிமை கொண்டது.. அளப்பரிய ஆற்றல் படைத்தது..!! அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!! அன்பு.. மனதை இளக, உருக செய்கிறது.. இறுக, உறைய வைக்கிறது.. மென்மையாக்குகிறது.. வன்மையாக்குகிறது.. மூர்க்கமாக்குகிறது.. சில சமயங்களில் முட்டாளாக்குகிறது..!! ஒரு வடிவத்தில் இருக்கிற மனதினை.. வேறொரு வடிவத்துக்கு சுலபமாக மாற்றுகிற பண்பு.. அன்பின் அனுகூலங்களில் ஒன்று..!!

'காதல் வீரனை கோழையாக்கும்.. கோழையை வீரனாக்கும்..' என்கிற பிரபலமான மேற்கோள் வாசகத்தில்.. காதல் என்ற சொல்லுக்கு பதிலாக, அன்பு என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்பது எனது அபிப்ராயம்.. நம்மூரில் காதல் என்கிற சொல், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்தரங்க அன்பை மட்டுமே குறிக்கிற சொல்லாக இருப்பதாலேயே இதை சொல்கிறேன்..!! எந்தவகை அன்புக்குமே மனிதமனத்தை மாற்றிவிடுகிற வல்லமையுண்டு.. சங்ககாலத்தில் முறத்தால் அடித்து புலியை விரட்டியவள் ஒரு தமிழ்த்தாய்தானே ஒழிய.. தமிழ்க்காதலி அல்ல..!!

'கவலைப்படாதடா.. கண்டுபிடிச்சிடலாம்' என்று நம்பிக்கையாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத்தின் மனது.. 'அவளை மறந்துடுடா' என்று சொல்கிற அளவிற்கு மாறியிருக்கிறது என்றால்.. அதற்கும் கூட அன்பையே காரணமாக கொள்ளலாம்.. அசோக்கின் மீது அவருக்கிருந்த அன்பு.. அவனுடைய பரிதாபமான நிலையை பார்க்கசகியாத பரிதவிப்பில் பிறந்திட்ட அன்பு..!! 

அசோக்கிற்கும் கூட மீராவின்மீது அன்பிருந்தது.. அளந்தெடுத்தோ, அறுதியிட்டோ கூற முடியாத மாதிரியான ஒரு அதீத அன்பு..!! நெஞ்சை அடைத்திருக்கிற அவளை.. இனி நேரில் சந்திப்பதே உறுதியற்றுப் போனநிலையில்.. அவள் மீது அவனுக்கிருந்த அந்த அதீத அன்பு.. அவனை என்ன பாடுபடுத்தியிருக்க கூடும்.. அவனது மனதில் எந்தவித மாற்றத்தை தூண்டியிருக்க கூடும்..??

'இனி செய்வதற்கு எதுவும் இல்லை..' என்று ஸ்ரீனிவாச பிரசாத் கையை விரித்தபோதே.. அவனுடைய மனதை ஒரு மாயவகை அழுத்த மண்டலம் சூழ ஆரம்பித்தது.. அச்சம் கலந்த ஒரு வேதனையை அவன் மனதுக்குள் அனுப்பி அழுத்தியது..!! மீராவின் மீதிருந்த அளவிலா அன்பினாலும்.. அவளை அடையமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினாலும்.. அவன் மனதில் உருவான அழுத்தம் அது..!! இதயம் இரும்புக்குண்டென கனத்துப் போனது.. மூளையில் முறுக்காணி ஏற்றியது மாதிரியாக ஒரு வலி..!!

அந்த வலி பொறுக்காமல்தான் அங்கிருந்து அவன் உடனே அகன்றுவிட்டான்.. ஆனால் அவனது அகத்தை விட்டுத்தான் மீரா அகலுவதாய் இல்லை..!! எந்த நேரமும் அவளைப் பற்றிய எண்ணத்துடனே அசோக்கை தத்தளிக்க வைத்தாள்.. உணர்விருக்கையில் அவன் நினைவை நிறைத்திருந்தாள்.. உறங்கிப்போகையில் அவன் கனவை நிரப்பியிருந்தாள்..!! காணுமிடமெல்லாம் அவளது பிம்பம் அசைவது போலொரு மாயை.. காதுகளுக்குள் அவளது குரல் ஒலிப்பது போலொரு மயக்கம்.. காற்றினில் அவளது வாசம் வீசுவது போலொரு மருட்சி.. பித்துப்பிடிக்காத குறைதான் அசோக்கிற்கு..!!

சாலைப்போக்குவரத்து மிகுந்த அண்ணாசாலையில்.. சாலமனும் அவனும் பைக்கில் பறந்து கொண்டிருந்தபோது.. மீராவுடையவை போன்ற பின்னலும், பின்னழகுமாய் ஒருத்தி குறுக்கிட..

"ஏய் மச்சி.. மீராடா...!!"

என்று அலறிய அசோக், தலையை அப்படியே 180 டிகிரிக்கு திருப்பினான்.. சாலமனும் பதறிப்போய் ஒருபக்கமாக சாய.. சமநிலை இழந்த வண்டி சாலையில் சரிந்து சறுக்கியது..!! அசோக்கிற்கு அப்படியொன்றும் அடி பலமில்லை.. இவர்கள் விழுந்த சப்தத்தில், அந்தப்பெண் திரும்பி பார்க்க.. 'அவள் மீரா இல்லை' என்று உறைத்திட்ட உண்மைதான்.. அவனுடைய முழங்கை சிராய்ப்பை விட அதிக வலியை தந்தது..!! சாலமனின் நிலைதான் பரிதாபம்.. கீழே விழுந்ததில் முட்டி பெயர்ந்து ரத்தம் கொட்டியது..!!

"டேய்..!!! கொலைகாரப்பாவி..!!! கொஞ்சம்னா அப்டியே எகிறிருப்பேன்டா..!!" என்று வேதனையும் வெறுப்புமாய் அசோக்கைப் பார்த்து கத்தினான். அவனை கண்டுகொள்ளாத அசோக்,

"மீ..மீரான்னு நெனச்சுட்டேன் மச்சி.. அ..அவ இல்லடா..!!" என்று உதிர்த்த வார்த்தைகளில் இருந்த வேதனையை சாலமனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சிந்தாதிரிப்பேட்டையில் அந்த ஃப்ளக்ஸ் போர்டை சூழ்ந்திருந்த, அத்தனை வீடுகளின் கதவையும் தயக்கமில்லாமல் தட்டியாயிற்று.. மக்கள்தொகை கணக்கெடுக்கிற போர்வையில், மனம் திருடிச்சென்றவளின் மதிமுகம் தென்படுகிறதாவென தேடிப் பார்த்தாயாயிற்று.. மாடிவீடுகள் மட்டுமல்லாது, மண்குடிசைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை..!! ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி.. ஆயிரத்து சொச்ச வீடுகளை சலித்தெடுத்தும்.. அகப்பட மறுத்தாள் அவனது அன்புக்காதலி..!! எப்படி அகப்படுவாள்.. அந்த வீடுகளில் அவள் இருந்தால்தானே..?? பார்த்த முதல் வீட்டிலேயேதான் பாவையவள் பதுங்கியிருந்தாள் என்கிற உண்மை.. பாவம் அசோக்கிற்கு தெரியாதல்லவா..??

ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் ஐந்து நாட்கள் ஏறி இறங்குகையில்.. ஒருசில வீடுகளில் அச்சமயம் ஆளிருக்க மாட்டார்கள்.. வெளிப்புற தாழ்ப்பாள்கள் அவர்களை வெறுங்கையுடன் திருப்புவன..!! அந்த மாதிரி வீடுகளை அசோக் ஒரு தனிக்கணக்கில் வைத்திருந்தான்.. அடுத்தநாள் செல்லும்போது அந்த வீடுகளை மீண்டும் அணுகுவதை வழக்கமாக கொண்டிருந்தான்..!! தனது வீட்டிற்கு அசோக் வந்தபொழுதினில்.. மீரா தப்பியோடி இருந்திருந்தால் கூட.. அசோக் அவளை மீண்டும் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்க கூடும்..!! அந்த நெருக்கடிநிலைமையை அவள் மனோகரைக்கொண்டு சமாளித்தபடியால்.. அசோக்கின் தனிக்கணக்கில் மீராவின் வீடு அங்கம் வகிக்காமல் போனது..!!

ஐந்தாம் நாள் இறுதி.. அசோக்கின் நம்பிக்கையைபோல ஆதவனின் வெளிச்சமும் மங்கிப்போயிருந்த மாலைப்பொழுது.. அட்டவணையில் இருந்த அனைத்து வீடுகளிலும் தேடிமுடித்து.. அலைந்து திரிந்த களைப்புடன்.. அருகிலிருந்த ஒரு சாலையோர கடையில்.. பஜ்ஜி கடித்து அவர்கள் பசி தீர்த்துக் கொண்டிருந்த சமயம்..!! அசோக்கின் மனதில்.. ஆரம்பத்திலிருந்தே ஒருசில வீடுகளின் மீதும், அங்கிருந்த மனிதர்கள் மீதும் ஒருவித சந்தேகம்.. அவன் முதன்முதலில் அணுகிய மீராவின் வீடுமே அதில் அடக்கம்.. அடுத்தநாள் அந்த வீடுகளை எல்லாம் திரும்ப ஒருமுறை சென்று பார்க்கலாமா என்று அவனுக்குள் ஒரு எண்ணம்..!!

உள்ளுக்குள் எழுந்த அந்த எண்ணத்தை.. அசோக் சாலமனிடம் உரைத்தான்..!! அவ்வளவுதான்.. ஏற்கனவே கடும் எரிச்சலில் இருந்த சாலமன், அப்படியே கொதித்துப் போனான்.. வாயிலிருந்த பஜ்ஜியை அவசரமாய் விழுங்கியவன், அசோக்கிடம் ஆத்திரமாய் சீறினான்..!!

[Image: RA+55.jpg]

"டேய்..!!! உனக்கு என்ன பைத்தியமாடா..????"

"ப்ச்.. என்னாச்சு இப்போ..??"

"பின்ன என்ன.. அஞ்சு நாளா பிச்சைக்காரன் மாதிரி வீடுவீடா ஏறிஎறங்கிருக்குறோம்.. அறிவு வரலை உனக்கு இன்னும்..?? அவ இங்க இல்லடா..!!"

"இல்ல மச்சி.. அவ இங்கதான்டா எங்கயோ இருக்குறா.. எனக்கு நல்லா தெரியும்..!!"

"ஆமாம்.. உனக்கு எங்க பாத்தாலும் அவ இருக்குற மாதிரியே இருக்கும்.. எவளை பாத்தாலும் அவளை மாதிரியே தோணும்..!! ஏன்டா இப்படிலாம் பண்ற..??"

"ஏய்.. இது அப்டி இல்லடா..!!"

"என்ன நொப்டி இல்லடா.. அன்னைக்கு ரோட்ல எவளையோ பாத்துட்டு பைக்கை கீழ வுட்டியே..?? த்தா.. அன்னைக்கு ஜஸ்ட் மிஸ்ஸு.. இல்லனா சங்கு ஊதிருப்பானுக..!! உன்கூட பைக்ல போற ஒவ்வொரு செகண்டும், அப்டியே பக்கு பக்குன்னு இருக்குதுடா எனக்கு..!! போதுன்டா சாமி.. என்னால முடியாது இனிமே.. உன் ஆளை தேடுறோம்னு என் உசுரை தொலைச்சுருவேன் போல இருக்கு..!! போதும்.. இத்தோட நிறுத்திக்கலாம்..!!" சாலமன் சலிப்புடன் சொல்ல, 

"எ..என்னடா இப்படி சொல்ற..??" அசோக்கின் குரல் உடைந்து போய் ஒலித்தது. இப்போது சாலமனுக்குமே அசோக்கின் மீது மெலிதான ஒரு பரிதாபம்.

"சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மச்சி.. இது வேலைக்காவாது..!! அவ இந்த ஏரியாலதான் இருப்பான்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல..!!"

"இல்லடா.. அவ சொல்லிருக்குறா.. அவ வீட்டுக்கு எதுத்தாப்ல.."

"ம்க்கும்.. நல்லா சொன்னா.. என்னை பாடைல ஏத்துறதுக்கு..!! அவ ஏதோ ரோட்ல அந்த போர்டை பாத்துட்டு.. என் வீட்டுக்கு எதுத்தாப்லன்னு பொய் சொல்லிருப்பாடா.. நாமளும் அதை உண்மைன்னு நம்பிட்டு நாய் மாதிரி அலைஞ்சுட்டு இருக்கோம்..!!"

"சேச்சே.. மீரா அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாடா..!!" அசோக் அந்த மாதிரி அடம்பிடிக்க, இப்போது சாலமன் மீண்டும் டென்ஷன் ஆனான்.

"டேய்.. அப்புறம் எனக்கு வாயில நல்லா வந்துரும் ஆமாம்..!! மீராவாம் மீரா.. மசுரு..!!!! அந்த மீரான்ற பேரே ஒரு பெரிய பொய்தானடா.. பேர் மட்டுமா.. அவ அவளைப்பத்தி சொன்ன எல்லாமே பொய்தான..?? அப்புறம் எப்படி இதை மட்டும் உண்மைன்னு நம்புற நீ..?? உனக்கே இது பைத்தியக்காரத்தனமா தோணல..?? மொதல்ல அவளோட உண்மையான பேரை கண்டுபிடிடா.. அப்புறம் அவளை கண்டுபிடிக்கலாம்..!!"

சாலமன் பொரிந்து தள்ள.. அசோக் தளர்ந்து போனான்..!! சாலமன் உதிர்த்த வார்த்தைகளில் இருந்த உண்மை.. அசோக்கின் புத்தியை அறைந்தது..!! என்ன பதில் சொல்வதென்று எதுவும் புரியவில்லை அவனுக்கு..!! சோகம் அப்பிய முகமும்.. சோர்ந்து போன கால்களுமாய்.. சொத்தென்று பெஞ்சில் அமர்ந்தான்..!! அவனது மனதைச் சூழ்ந்திருந்த அந்த மாயவகை அழுத்த மண்டலம்.. இப்போது இரக்கமே இல்லாமல் இறுக்க ஆரம்பித்திருந்தது..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அடுத்த நாளும் சிந்தாதிரிப்பேட்டையில் அலைய நினைத்திருந்த அந்த எண்ணத்தை.. அவநம்பிக்கையுடன் அசோக் கைகழுவினான்..!! ஆனால்.. அவன் மனதில் எப்போதும் எழுந்து.. அவனைப்பார்த்து கைகொட்டி நகைக்கிற மீராவின் நினைவுகளை கலைந்திடத்தான்.. அவனுக்கு வழியேதும் புலப்படவில்லை..!! அலுவலகச்சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அவளது கவிதைக்காகிதம்.. அவர்கள் அமர்ந்து உண்டு கதையடிக்கிற அந்த ஃபுட்கோர்ட் மேஜை.. சிவந்த மூக்குடன் சிரிக்கிற குரங்கு பொம்மை.. மஞ்சள் இதழ்களுடன் மலர்ந்து குலுங்கும் ரோஜாத்தோட்டம்.. அர்த்தம் புரியாத பார்வையுடன் அவனையே வெறிக்கிற அவளது வால்பேப்பர்.. அவளது அழைப்புக்கென பிரத்தியேகமாக செலக்ட் செய்து, செட் செய்து வைத்திருந்த செல்ஃபோன் ரிங்டோன்..!! கண்ணில் படுகிற அனைத்துமே.. காயம்பட்ட அவன் நெஞ்சில் திராவகம் தெளிப்பதாகவே இருந்தன..!!

மனதில் இருந்த குழப்பமும், பயமும், வேதனையும்.. அசோக்கின் முகத்திலும் வெளிப்படாமல் இல்லை.. வீட்டிலிருப்பவர்கள் அவனுடைய நடவடிக்கைகளை வித்தியாசமாக பார்த்தனர்.. எனினும் அவர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.. ஏதாவது கேட்டாலும் இவன் 'ஒன்றுமில்லை' என்றே கூறி சமாளித்தான்..!!

"போதும் மம்மி.. எனக்கு பசி இல்ல..!!"

பெயருக்கு கொறித்துவிட்டு அசோக் எழ முயல.. பாரதி பொறுமை இழந்து போனாள்.. மகனின் முகத்தை ஏறிட்டு கடுமையாக ஒரு முறை முறைத்தாள்.. அவனது கண்களை நேருக்கு நேராக எதிர்கொண்ட கூரான பார்வை.. அந்தப்பார்வையில் அப்படி ஒரு உஷ்ணம்.. எழுந்தாய் என்றால் எரித்துவிடுவேன் என்பது மாதிரி..!! பாரதியின் அனல்கக்கும் பார்வை ஒன்றே அசோக்கிற்கு போதுமானதாக இருந்தது.. எழ முயன்றவன், பிறகு தயக்கத்துடன் மீண்டும் அமர்ந்தான்.. தட்டை அருகில் இழுத்து, சாதத்தை கொஞ்சமாய் அள்ளி, மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்..!!

மகன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்ததும், பாரதியின் கோபமும் மறைந்து போனது.. உள்ளத்தில் அவன் மீதான அன்பு, உடனடியாய் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.. அதேநேரம் 'இவனுக்கு ஏதோ பிரச்னையோ' என்கிற கவலையும் அவளை ஆட்கொண்டது.. சாதம் மெள்ளுகிற மகனின் கேசத்தை, இதமாய் வருடிக்கொடுத்தாள்..!!

"அவ கூட ஏதாவது சண்டையா..??" பாரதியின் கேள்வி கூர்மையாக இருந்தது.

"ச..சண்டையா.. அ..அதுலாம் இல்லையே..??" அசோக்கிடம் ஒரு தடுமாற்றம்.

"அப்புறம் என்னாச்சு..??"

"எ..என்னாச்சுனா..??"

"ப்ச்.. நடிக்காத அசோக்.. நானும் ஒருவாரமா பாத்துட்டுத்தான் இருக்கேன்.. நீ ஒன்னும் சரியில்ல..!! உன் மூஞ்சில ஒரு களையே இல்ல.. எந்தநேரமும் எதையாவது யோசிச்சுட்டே இருக்குற..?? ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. சரியா தூங்குறது இல்ல.. வீடே தங்குறது இல்ல..!! எ..என்னாச்சு உனக்கு.. ம்ம்..?? சொல்லு.. மீரா கூட எதும் பிரச்சினையா..??"

"இ..இல்ல மம்மி.. அதுலாம் ஒன்னும் இல்ல..!!"

"அப்புறம்..??"

"ஆபீஸ் டென்ஷன்தான்..!! கொஞ்சநாளா ரொம்ப ஹெக்டிகா போயிட்டு இருக்கு..!!" அசோக் கம்மலான குரலில் சொல்ல, பாரதி அவனை ஒருசில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். பிறகு, 

"வேற ஒன்னும் இல்லையே..??" என்றாள் முழு நம்பிக்கை இல்லாதவளாகவே.

"அதான் சொல்றன்ல..??"

"ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! ஆபீஸ் டென்ஷன்லாம் ஆபீஸ்லயே விட்டுட்டு வர மாட்டியா.. வீட்டுக்கு வந்தும் அதையே நெனச்சுட்டு இருப்பியா.. என்ன புள்ள நீ..??" பாரதியின் குரலில் ஒருவித பொறுமல்.

".................."

"ஆன்னா ஊன்னா சாப்பாடு மேல கோவத்தை காட்ட வேண்டியது..!!"

".................."

"அவதான் வந்து உன்னை அடிச்சு திருத்தணும்..!!"

அப்படி சொல்லும்போதே, பாரதிக்கு திடீரென மீராவின் நினைவுகள்..!! ஒரே ஒரு நாள்தான் சந்தித்து பேசியிருந்தாலும்.. மீராவுடன் ஒரு அன்னியோன்ய உணர்வு அவளுக்கு அன்றே வந்திருந்தது..!! 'தனக்குப்பிறகு தனது இடத்தில் இருந்து.. தன் மகனை அன்புடன் கவனித்துக் கொள்ளப்போகிற ஒரு ஜீவன்.. தான் ஈன்றெடுத்தவனுடன் சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்டு, அவனை முழுமனிதனாக்கப் போகிற ஒரு உயிர்..' என்பது மாதிரியான எண்ணத்தில் பிறந்த உணர்வு அது.. மகனை உண்மையாக நேசிக்கிற எந்த தாய்க்குமே, அவனுடைய மனைவியை பார்த்து வரவேண்டிய உன்னதமான உணர்வு..!!

குரலில் உடனடியாய் ஒரு மென்மையை வரவழைத்துக்கொண்டு.. ஒருவித ஏக்கம் தொனிக்க.. அசோக்கிடம் பாரதி கேட்டாள்..!!

"இ..இந்த வாரம் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா அசோக்..??"

அம்மா அப்படி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. மனதில் சுருக்கென்று ஒரு வலியுடன், அம்மாவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான்..!! மகனின் முகத்தை கவனியாத பாரதி.. எங்கேயோ பார்த்துக்கொண்டு தொடர்ந்து பேசினாள்..!!

"ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! பார்த்து ஒருவாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ளயே வருஷக்கணக்கான மாதிரி இருக்குது..!!"

".................."

"அவகிட்ட பேசிட்டு இருந்தா, நேரம் போறதே தெரியல தெரியுமா..?? ரொம்ப நல்ல பொண்ணுடா..!! நீதான் கோவக்காரி, டெரர் பார்ட்டின்னு என்னன்னவோ சொன்ன..!!"

".................."

"பாக்கணும் போல இருக்குடா.. கூட்டிட்டு வர்றியா..??"

ஏக்கத்துடன் கேட்டுவிட்டு வெள்ளந்தியாக சிரிக்கிற அம்மாவுக்கு, என்ன பதில் சொல்வதென்று அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!! அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவனுடைய கண்களில்..!! அதனை அடக்கிக்கொண்டு..

"ம்ம்.. கூ..கூட்டிட்டு வர்றேன்..!!" சற்றே பிசிறடிக்கிற குரலில் சொன்னான்..!!

பாரதி மட்டுமல்ல.. அசோக்கின் குடும்பத்தார் அனைவருமே.. அவர்களையும் அறியாமல், அசோக்கின் நிலையையும் அறியாமல்.. மீராவின் நினைவுகளை அவனுக்குள் தூண்டிக்கொண்டே இருந்தனர்..!! ஏற்கனவே நொறுங்கிப்போயிருந்த அசோக்கிற்கு.. அவர்களின் நடவடிக்கைகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தன..!!

"ஸ்பென்ஸர் போயிருந்தேண்டா.. இயர் ரிங் வாங்கினேன்.. நல்லாருந்துச்சேன்னு அண்ணிக்கும் ஒரு செட் வாங்கினேன்.. இந்தா.. அவங்களை பாத்தா குடுத்துடு..!!"

அண்ணனின் கையில் காதணி பெட்டகத்தை திணித்துவிட்டு.. திரும்பி நடந்தாள் சங்கீதா..!! வலிக்கிற மனதுடனே அசோக் அந்த பெட்டகத்தை பார்க்க.. வாசலை அடைந்திருந்த சங்கீதா திரும்பி கேலியாக சொன்னாள்..!!

"மவனே.. நான் வாங்கி தந்ததா சொல்லி குடுக்கணும்..!! நீயே வாங்கினதா பீலா வுட்டு.. முத்தம் கித்தம் கேட்டு எங்க அண்ணியை டிஸ்டர்ப் பண்ணினேன்னு தெரிஞ்சது.. கொன்னுடுவேன்..!! ஹாஹாஹா..!!"

மத்தாப்பு கொளுத்திய மாதிரி சிரித்துவிட்டு.. மறைமுகமாக அண்ணனுக்கு ரொமான்ஸ் ஐடியாவும் வழங்கிவிட்டு.. அறையை விட்டு வெளியேறினாள் சங்கீதா..!! அசோக்குக்குத்தான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.. வேதனை கொப்பளிக்கிற நெஞ்சுடன்.. வெகுநேரம் அந்த காதணியையே பார்த்துக் கொண்டிருந்தான்..!!

"ஹ்ம்ம்... என் அருமை, என் புள்ளைக்குத்தான் தெரியல.. அட்லீஸ்ட் வரப்போற மருமகளாவது தெரிஞ்சுக்கட்டும்..!! என்னோட நாவல் எதுவும் மீரா படிச்சது இல்லன்னு சொன்னா.. இது நான் எழுதினதுல ரீசன்ட் ஹிட்.. இதை அவகிட்ட குடுத்து படிக்க சொல்லு... மாமனாரோட மகிமை என்னன்னு அவ தெரிஞ்சுக்குவா..!! ஹாஹா..!!"

மணிபாரதி தன் பங்குக்கு அசோக்கின் உணர்வை சீண்டினார்..!! அவர் வைத்துவிட்டு சென்ற நாவலின் தலைப்பை பார்த்த அசோக்கிற்கு.. அழுகை மேலும் பீறிடவே செய்தது..!!

"எங்கே அந்த வெண்ணிலா..??"

நாராயணசாமியும் அமைதியாய் இருக்கவில்லை.. அனுபவத்தால் தான் கற்ற காதல் பாடங்களை, அறிவுரைகளாக பேரனுக்கு அவ்வப்போது அள்ளி வீசிக்கொண்டிருந்தார்..!!

"சும்மா உம்முனே இருக்காத.. நானும் லவ் பண்றேன்னு ஏதோ பேருக்கு லவ் பண்ணாத..!! அவளை சிரிக்க வை.. அழ வை.. கோவப்பட வை.. வெக்கப்பட வை..!! அவளை அடி.. அவளுக்கு முத்தம் குடு..!! என்னை மாதிரி நீ கெழட்டுப்பயலானப்புறமும் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற மாதிரி.. ஏதாவது பண்ணிக்கிட்டே இரு..!! எந்த லட்சணத்துல நீ லவ் பண்ணினன்னு.. எழுபது வயசுல பெருமையா சொல்லிக்கிற மாதிரி உன் லவ் இருக்கணும்..!! புரியுதா..??"

"ம்ம்.. புரியுது தாத்தா..!!" மனதில் எழுந்த ஆதங்கத்தையும் சோகத்தையும் மறைத்துக்கொண்டு, அமைதியாக சொன்னான் அசோக்.

வீடே தங்குவதில்லை என்று.. அசோக்கைப் பற்றி பாரதி குறைபட்டுக்கொண்டது சரிதான்..!! வீடு தங்கவே அவன் விருப்பப்படவில்லை என்பதுதான் அதன் பின்னணியில் உறைந்திருந்த உண்மை..!! அடிக்கடி இந்த மாதிரி மீரா பற்றி பேசி.. அசோக்கின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்தால்.. அவன் என்ன செய்வான் பாவம்..?? உள்ளம் கவர்ந்து சென்றவளை கண்டறியவும் வழியில்லை.. உள்ளது உள்ளபடி குடும்பத்தாரிடம் உரைக்கவும் துணிவில்லை.. உடைந்து போனான்..!! வீட்டை தவிர்த்தான்.. அலுவலக வேலை இருக்கிறதென அங்கேயே அடிக்கடி முடங்கிப் போனான்..!!

அலுவலகத்தில் மட்டும் என்ன அவனுக்கு நிம்மதியா கிட்டிவிடப் போகிறது..?? அவள்தான் நினைவை நிறைய கொடுத்துவிட்டு.. நிம்மதியை முழுதாய் எடுத்துச் சென்றுவிட்டாளே..?? அலுவலகத்தில் எப்போதும்.. புகை மண்டலத்துக்கு இடையில்தான் அவன் முகம் தேட வேண்டியிருக்கும்.. அந்த அளவுக்கு எந்த நேரமும் சிகரெட் புகைத்தான்..!! அவன் நெஞ்சில் எரிகிற நெருப்புக்கு தற்காலிக மருந்தாய்.. உதட்டில் பொருத்திய சிகரெட்டின் சிரத்தில் நெருப்பு வைத்தான்..!! நச்சுப்புகை உள்ளே சென்று அத்தனை உறுப்புகளையும் தடுமாறச்செய்ய.. அந்த தடுமாற்ற உணர்வில், தன் மனவேதனையின் வீரியம் குறைக்க முயன்றான்..!!

[Image: RA+56.jpg]

அலுவலக வேலைகளும் எதுவும் செய்வதில்லை.. அப்படியே செய்தாலும்.. யாருடனாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு சண்டை..!! புது ப்ராஜக்ட் சம்பந்தமாக பாலாஜி அட்வர்டைஸிங்குக்கு கலந்தாய்வு செய்ய சென்றவன்.. மோகன்ராஜுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டான்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
"டேய்.. சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா..??"

"இன்னும் இதுல புரிஞ்சுக்க என்ன இருக்கு..?? என் முடிவை நான் சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்..!!"

"ப்ச்.. ஏண்டா இப்படி அடம் புடிக்கிற..??"

"யாரு அடம் பிடிக்கிறா..?? நான் சொன்ன கான்சப்ட்ல என்ன குறைன்னு சொல்லுங்க மொதல்ல..!! நீங்க எப்போவும் கேக்குற மாதிரி.. லவ், ஃபீல், எமோஷன், டெப்த் எல்லாம் இருக்கு.. அப்புறம் என்ன..??"

"குறைலாம் சொல்லலடா.. க்ளயன்ட்டுக்கு பிடிக்கல.. அவ்வளவுதான்..!!"

"புல்ஷிட்..!!"

"Emergency lamp ad.. கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றாங்க..!! அவங்க சொன்ன கான்சப்ட்ல மட்டும் என்ன குறை.. நல்லாத்தான இருக்கு..??"

"ப்ச்.. எனக்கு பிடிக்கல.. இதெல்லாம் என்னால ஷூட் பண்ணமுடியாது..!!"

"ஷ்ஷ்ஷ்.. இப்போ முடிவா என்னதான் சொல்ற..??"

"நான் சொன்ன கான்சப்ட்ன்னா பண்றேன்.. இல்லனா என்னை ஆளை விடுங்க..!!"

"அவசரப்படாத அசோக்.. It's going to affect your career..!!"

"பரவால ஸார்.. எனக்கு பரவால..!!"

அலுவலகத்தில் அடைந்து கிடக்கிற நேரங்களில்.. காதல் உல்லாசம் திரைப்படத்தை திரும்ப திரும்ப பெரிய திரையில் பார்த்தான்..!! அந்தப்படத்தின் நாயகன் நாயகியுடன்.. தன்னையும் மீராவையும் அவனால் எளிதில் பொருத்திப் பார்க்க முடிந்தது.. திரையில் அவர்கள் அழுகையில், நிஜத்தில் இவனால் இங்கு உருக முடிந்தது..!! முக்கியமாக.. முன்பொருமுறை 'என்ன எழவெடுத்த படம்டா இது..??' என்று நண்பர்களை கிண்டல் செய்த அதே காட்சி.. இப்போது அவனது ஏக்கத்தையும் துக்கத்தையும் கிளறிவிடுகிற காட்சியாக இருந்தது..!!

'ப்ளீஸ் ப்ரியா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்.. நீ இல்லனா, அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!'

'ப்ளீஸ் ஷிவா.. நான் போய்த்தான் ஆகணும்.. என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..!!'

'இல்ல.. நான் உன்னை போக விடமாட்டேன்..!! நீ எனக்கு வேணும் ப்ரியா.. என் லைஃப் புல்லா நீ எனக்கு வேணும்..!!'

'ப்ளீஸ் ஷிவா..!! கையை விடு ப்ளீஸ்.. நான் போகணும்..!!"

'போ ப்ரியா.. போ..!! ஆனா.. போறதுக்கு முன்னாடி எனக்கும், என் காதலுக்கும் ஒரு முடிவு சொல்லிட்டு போ..!!'

'என்ன முடிவு சொல்ல சொல்ற என்னை..??'

'எதுக்கு என் லைஃப்ல வந்த..?? எதுக்கு எங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பழகின..?? காதல்னா என்னன்னே தெரியாம.. நான் சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன்.. ஏன் என் மனசுல காதல்ன்ற ஆசையை வளர்த்த..?? கனவுல மிதக்க வச்ச..?? இப்போ எல்லாத்தையும் கைகழுவிட்டு போற..?? எப்படி ப்ரியா.. எப்படி உனக்கு மனசு வந்தது.. சொல்லு ப்ரியா..!!'


அந்தக்காட்சியை பார்க்கையில் அவனையும் அறியாமல் அவனுடைய கண்களில் இருந்து நீர் கசியும்.. அவனையும் அறியாமல் அவனது உதடுகள் 'மீரா' என்ற பெயரை நடுக்கத்துடன் உச்சரிக்கும்..!! ரீவைன்ட் செய்து, ரீவைன்ட் செய்து.. திரும்ப திரும்ப அந்தக்காட்சியை ஓடவிட்டு.. அழுது அழுது கண்கள் சிவந்து..!! அவனுடைய மனநிலை அழுத்தம் குறைவதற்கு.. நிச்சயம் அந்தப்படமும், காட்சியும் கொஞ்சம் கூட உதவவில்லை.. மாறாக அவனது மனக்காயத்தை மேலும் புரையோடச் செய்யவே பயன்பட்டது..!!

ஸ்ரீனிவாச பிரசாத்தை போலவே.. அசோக்கின் நண்பர்களுக்கும் அவனது அந்த கோலத்தை காண சகிக்கவில்லை..!! 'சும்மா இருந்தவனை காதலித்துப்பார் என்று ஏற்றிவிட்டு.. இந்த நிலைக்கு தள்ளிவிட்டோமோ..' என்ற குற்ற உணர்வு வேறு அவர்களுக்கு..!! ஆனால்.. அவனுடைய நிலைக்கு என்ன தீர்வு காண்பது என்றுதான்.. அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை..!! அவர்களால் முடிந்த அளவுக்கு அவனுடைய மனதை வேறுபக்கம் திருப்ப முயன்றார்கள்.. அதிலும் தோல்விதான்..!!

மதுவின் போதை அவனது மனதின் வேதனையை குறைக்கும் நினைத்தார்கள்.. மதுவருந்த அழைத்து சென்றார்கள்..!!

"இதே டேபிள்தான் மச்சி.. நான் இங்க.. அவ அங்க..!!"

"....................."

"இவ்ளோஓஓஓ பெரிய பச்சைமொளகாடா கிஷோரு..!! எடுத்து அவ பாட்டுக்கு கேரட் மாதிரி, 'கர்ச் கர்ச் கர்ச்'ன்னு கடிச்சு தின்ன ஆரம்பிச்சுட்டா..!! எனக்குலாம் அப்டியே டவுசர் லூஸாயிடுச்சு..!!"

"....................."

"திடீர்னு அப்டியே அழுறா.. எனக்கு ஒன்னும் புரியல..!! 'என்னை விட்டு எங்கயும் போயிடாத அசோக்'ன்னு அப்டியே கொழந்தை மாதிரி ஏக்கமா சொன்னாடா.. பாவமா இருந்துச்சு..!! சொல்லிட்டு அப்டியே என்னை இறுக்க்க்கி கட்டிப் புடிச்சுக்கிட்டா..!!"

"....................."

"எனக்கு அப்போ எப்டி இருந்துச்சு தெரியுமா..?? அவளுக்காக என்னவேணா பண்ணலாம்னு தோணுச்சுடா.. சத்தியமா சொல்றேன் மச்சி.. என்னவேணா பண்ணலாம்னு தோணுச்சு ..!!"

"....................."

உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்த அசோக்.. திடீரென உணர்ச்சி வசப்பட்டுப் போனான்..!! கடிப்பதற்காக கையில் எடுத்த சிக்கனை.. பிறகு கடிக்காமலே தட்டில் விசிறினான்..!! அவனுடைய கண்கள் பட்டென குளமாகிப்போக.. வேணுவை ஏறிட்டு உடைந்துபோன குரலில் கேட்டான்..!!

"அ..அப்டிலாம் சொல்லிட்டு.. கடைசில.. அவ ஏன்டா என்னை விட்டுட்டு போயிட்டா..?? ம்ம்..?? நான் ஒண்ணுமே செய்யலையேடா மச்சி..??"

"மச்சி.. போதுண்டா.. விடுறா..!!"

சாலமன்தான் அவ்வாறு பொறுக்கமாட்டாமல் சொன்னான்..!! அசோக்குக்கு மதுவை ஊற்றிவிட்டு.. அவனது மனதை மீராவிடம் இருந்து மீட்டெடுத்து.. சற்றேனும் அவனை சந்தோஷத்தில் வைத்திருக்க நினைத்த அவனது நண்பர்களின் திட்டம்.. பலிக்கவில்லை.. தவிடு பொடியானது..!! அங்கு சென்றும் அவன் புலம்பலைத்தான் இவர்கள் கேட்க வேண்டி இருந்தது.. அதுவும் வேதனையில் போதையை மிக்ஸ் செய்த புலம்பல் எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை..!! மூன்று பேரும் நெற்றியை பிசைந்தவாறு.. ஒருவர் முகத்தை அடுத்தவர் அவஸ்தையாக பார்த்துக்கொண்டனர்..!!

"மச்சி.. எனக்கு இன்னொரு லார்ஜ் சொல்லேன்..!!" ஆறாவது லார்ஜையும் முடித்துவிட்டு அசோக் அவ்வாறு குழறலாக கேட்க.. இப்போது கிஷோர் எரிச்சலானான்..!!

"ஹேய்.. போதுண்டா.. ஏற்கனவே கன்னாபின்னான்னு குடிச்சுட்ட..!! கெளம்பலாம் வா..!!"

"ஹ்ஹ.. போதுமா..?? அதெல்லாம் நீ சொல்லக் கூடாது.. எனக்கு போதும்னா அதை நான்தான் சொல்லணும்..!! நோ.. எனக்கு போதாது.. போதவே போதாது..!!"

எகத்தாளமாக சொன்ன அசோக்.. தூரத்தில் தெரிந்த பேரரை பார்த்து.. இங்கிருந்தே பெருங்குரலில் கத்தினான்.. மீராவின் ஸ்டைலில்..!!

"ரிப்பீட்..!!!!"

அதிகமாக புகைத்தான்.. அளவில்லாமல் குடித்தான்.. ஆல்கஹாலும், டொபாக்கோவும் அவனது சிந்தனை ஓட்டத்தை மேலும் சிக்கலாக்கின.. மூளையின் செயல்பாட்டை முடக்கி வைத்தன..!! அசோக்கின் நிலை அவனது நண்பர்களுக்கும் கவலையையே தந்தது..!! சில நேரங்களில்.. அவன் மனநிலை பிறழ்ந்தவன் மாதிரியெல்லாம் பேச.. அவர்கள் மிரண்டு போய் பார்த்தார்கள்..!!

"அவ மட்டுந்தான் கவிதை எழுதுவாளா..?? எங்களுக்குலாம் எழுத தெரியாதா..?? நானும் எழுதுவேன்..!! அவள் பறந்து போனாளே.. என்னை மறந்து போனாளே..!!"

[Image: RA+57.jpg]

மோகன்ராஜுடன் அசோக் சண்டையிட்டதிலிருந்து மூன்றாவது நாள்.. ஓவராக குடித்து, ஓவராக புலம்பி நண்பர்களுக்கு கிலி கிளப்பியதிலிருந்து நான்காவது நாள்.. பாலாஜி அட்வர்டைஸிங்கில் இருந்து அசோக்கின் அலுவலகத்துக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.. புது வேலை தொடர்பாக இவர்களுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை, முறித்துக் கொண்டுவிட்ட செய்தியை தாங்கி வந்த அழைப்பு அது..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கிஷோர்தான் அந்தக்காலை அட்டன்ட் செய்தான்.. விஷயம் கேள்விப்பட்டதுமே கொதித்துப் போனான்.. அசோக்கின் மீது அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்..!! ரிஸீவரை அதனிடத்தில் அறைந்து சாத்தியவன்.. அலுவலக அறையை விட்டு அவசரமாக வெளியே வந்தான்.. 'எங்க அவன்..?' என்று முனுமுனுத்துக்கொண்டே வீடியோ எடிட்டிங் அறைக்குள் நுழைந்தான்..!!

அந்த அறைக்குள் புகை மண்டலத்துக்கு நடுவே அசோக் அமர்ந்திருந்தான்.. அளவுக்கதிகமாய் ஆல்கஹால் உட்கொண்டு ஏற்கனவே எக்கச்சக்க போதையில் இருந்தான்.. திரையில் காதல் உல்லாசம் ஓடிக்கொண்டிருக்க.. இவன் அதை இருநூறாவது முறையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! மற்ற நண்பர்களும் அங்கேதான் இருந்தனர்.. வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்..!!

உள்ளே நுழைந்த கிஷோர்.. முதல்வேலையாக சென்று வீடியோ சிஸ்டத்தில் செருகியிருந்த மெமரி ஸ்டிக்கை படக்கென உருவினான்.. உடனே வீடியோ ஸ்க்ரீன் பட்டென இருட்டு போனது.. ஆர்வமாக படம் பார்த்துக்கொண்டிருந்த அசோக்கிற்கோ கிஷோரின் மீது சுருக்கென்று ஒரு ஆத்திரம்..!!

"ஏய்.. ஏன்டா இப்போ ஆஃப் பண்ண..??" என்று சீறினான்.

"ஆஃப் பண்ணது மட்டும் இல்லடா.. இனிமே இந்தப்படத்தை பாக்க உன்னை அல்லோ பண்ணவும் முடியாது..!!"

கிஷோரும் பதிலுக்கு சூடாக சொன்னான். சொன்னவன் கையிலிருந்த மெமரி ஸ்டிக்கை சரக்கென விசிறி எறிந்தான். அது தரையில் மோதி, உடைந்து சிதறி தெறித்து ஓடியது. அது அசோக்கின் கோபம் இன்னும் அதிகமாக்கியது. அமர்ந்திருந்த சேரில் இருந்து விருட்டென எழுந்தான். கோபத்தில் சிவந்த முகத்துடன் கிஷோரை நெருங்கி, அவனது மார்பில் கைவைத்து தள்ளியவாறே கேட்டான்.

"ஏய்ய்ய்.. என்னடா ஆச்சு உனக்கு இப்போ..??"

"எனக்கு எதுவும் ஆகலைடா.. நான் நல்லாத்தான் இருக்கேன்..!! உனக்குத்தான் பைத்தியம் புடிச்சிருச்சு.. உன் பைத்தியக்காரத்தனத்தால.. நாப்பது லட்ச ரூபா ப்ராஜக்ட், அப்படியே நக்கிக்கிட்டு போயிருச்சு..!!"

கிஷோர் கொதிப்புடன் கத்தினான். ப்ராஜக்ட் கைநழுவி சென்றதை அறிந்ததும், சாலமனும் வேணுவும் அதிர்ந்து போய், அவரவர் இருக்கையில் இருந்து எழுந்தார்கள். செய்தி கேட்டு அசோக்கின் கோபமுமே அப்படியே வடிந்து போயிருந்தது.

"போ..போனா போகட்டும்.. விடு..!! அதுக்கு ஏன் இப்படி டென்ஷனாகுற..??" என்றான் கம்மலான குரலில்.

"விட்டுர்றதா..?? போனா போகட்டும்னு ப்ராஜக்ட்டை வேணா விட்ரலாம்டா.. உன்னை எப்படி விடுறது..?? இந்த ப்ராஜக்ட் இல்லனா இன்னொரு ப்ராஜக்ட்.. ஆனா நீ அப்படி கெடையாது..!! அவளையே நெனச்சுக்கிட்டு.. நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை அழிச்சுக்குறதை.. இனிமேலும் என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது..!! எனக்கு இன்னைக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!!"

"எ..என்ன தெரியனும்..??"

"எத்தனை நாளைக்கு இன்னும் இப்படியே இருக்கப் போற..?? எந்த நேரமும் தம்மடிச்சுட்டு.. தண்ணியடிச்சுட்டு.. பைத்தியக்காரன் மாதிரி பொலம்பிக்கிட்டு..!! ம்ம்..??"

"................."

"கேக்குறேன்ல..?? பதில் சொல்லுடா..!! இப்படி இருக்குறது உனக்கே வெறுப்பா இல்ல.. மாறணும்னு தோணல..??"

"இல்ல.. தோணல..!! எனக்கு இப்படி இருக்குறதுதான் புடிச்சிருக்கு..!!"

"அப்படியே அறைஞ்சுடுவேன்..!! ஏன்டா இப்படி என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்ற..??"

"உங்களுக்குத்தாண்டா புரியல.. என் மனசைப் பத்தி யாருக்கும் புரியல.. எதுவும் புரியல..!!"

"ப்ச்.. உன் வேதனையை எங்களால புரிஞ்சுக்க முடியுதுடா..!! கஷ்டந்தான்.. அதுக்காக நீ இப்படியேதான் இருப்பேன்னா என்ன அர்த்தம்..?? உன்னை பார்த்தா எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்குடா..!!" கிஷோர் ஆதங்கத்துடன் கத்தினான்.

"................."

அசோக் அமைதியாய் இருக்க, கிஷோர் இப்போது சற்றே சாந்தமானான். குரலை இதமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

"இங்க பாரு.. நாங்கதான் உன்னை ஏத்திவிட்டோம்.. லவ் பண்ணி காட்டுன்னு சவால்லாம் விட்டோம்..!! இப்போ நாங்களேதான் சொல்றோம்.. போதுண்டா மச்சி.. இதை முடிச்சுக்கலாம்.. It's over now.. try to understand the fact..!!"

"fact-ஆ.. என்ன fact..??"

"அவ இனிமே திரும்ப வரப்போறது இல்லடா.. அவ்ளோதான்.. she's gone..!! அவளை கண்டுபிடிக்கிறதுக்கும் எந்த வழியும் இல்ல..!! அவ இனிமே உன் லைஃப்ல இல்ல.. That's the fact..!!"

"So..??"

"Accept the fact ashok..!! அவ உனக்கு வேணாம்.. அவளை மறந்து தலைமுழுகு..!!"

அசோக் மீதிருந்த அன்பில், ஸ்ரீனிவாச பிரசாத் செய்த அதே தவறையே கிஷோரும் செய்தான்.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் மீது வந்த அதே அர்த்தமற்ற கோபமே, கிஷோர் மீதும் அசோக்கிற்கு வந்தது..!! அவனுடைய உடம்பில் உடனடியாய் ஒரு நடுக்கம் ஏறியிருக்க.. நண்பனின் முகத்தை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான்..!!

"லைஃப்ல இன்னும் எவ்ளோவோ இருக்கு மச்சி.. Life is larger than love..!!"

சொல்லிக்கொண்டே ஆறுதலாக பற்றிய கிஷோரின் கையை, அசோக் வெடுக்கென உதறினான். அவனுடைய செய்கை கிஷோருக்கு மீண்டும் கோவத்தை கிளறிவிட்டது.

"ஏய்..!!" என்றான் எரிச்சலாக.

"போடா..!! புத்தி சொல்ல வந்துட்டான்.. பெரிய புடுங்கி மாதிரி..!! மறக்கனுமாம்..!!! ம..மறக்கலாம் முடியாது.. என்னை மாத்திக்கவும் முடியாது.. நான் இப்படியேதான் இருப்பேன்.. போதுமா..??" அசோக் உறுதியான குரலில் சொல்ல, கிஷோரின் ஆத்திரம் இப்போது உச்சபட்சத்தை எட்டியது.

"ஓஹோ.. இப்படியேதான் இருப்பியோ..?? உன்னை இருக்க விட்டாத்தான..??"

சூடாக சொன்ன கிஷோரின் பார்வையில்.. சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த மீராவின் கவிதைக்காகிதம் கண்ணில் பட்டது.. உடனே..

"மொதல்ல இதெல்லாம் ஒழிச்சு கட்டனும்..!!"

என்று கருவியவாறு அந்த காகிதத்தை நோக்கி சென்றான்..!! அவனுடைய எண்ணம் அசோக்கிற்கு உடனே புரிந்து போனது.. கிஷோரை தடுப்பதற்காக அவனும் அவசரமாக அவனை நோக்கி ஓடினான்..!! அதற்குள்ளாகவே கிஷோர் அந்த காகிதத்தை சரக்கென கிழித்து எடுக்க.. அசோக் பாய்ந்து சென்று அதை அவனிடமிருந்து பறித்தான்.. பறித்த வேகத்தில் புறங்கையை வீசி, கிஷோரின் கன்னத்தில் 'ரப்'பென ஒரு அறை விட்டான்..!! கிஷோருக்கு சுள்ளென்று கோவம் கிளம்பியது.. நிலமையைப்பார்த்து கலவரமாகி வேணுவும் சாலமனும் ஓடிவந்து அவனை தடுப்பதற்குள்ளாகவே.. அவனும் அசோக்கின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்து விட்டான்..!!

அடிபட்ட வேகமும், ஆல்கஹாலின் போதையும் சேர்ந்து அசோக்கை தடுமாறச்செய்ய.. அவன் அப்படியே சுவற்றில் மோதி.. தள்ளாடிச்சென்று மேஜையில் விழுந்து.. அதிலிருந்த பொருட்களை எல்லாம் கீழே சிதற செய்து.. அவனும் தரையில் போய் பொத்தென்று விழுந்தான்..!! விழுந்த வேகத்தில் எழுந்து வந்து திரும்ப கிஷோரை தாக்கப் போகிறான் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க.. அவனோ தரையில் கிடந்தவாறே கையிலிருந்த காகிதத்தை பார்த்தான்.. 'சேதம் அதிகமில்லை' என்று சந்தோஷப்பட்டான்..!! கசங்கிப் போயிருந்தது அந்த காகிதம்.. அதை தரையில் விரித்து வைத்து.. கைகளால் தடவி அந்த கசங்கலை நீக்க முயன்றான்..!!

"ஒன்னுல்ல.. ஒன்னுல்ல..!!"

என்று பித்துப் பிடித்தவன் மாதிரி முனுமுனுத்தவாறே அந்த காகிதத்தின் கசங்கலை நீக்கினான். நண்பர்கள் மூவருமே அவனுடைய செய்கையை மிரட்சியாக பார்த்தனர்.

"எ..என்னடா இவன்..??" கிஷோர் நொந்துபோனவனாய் சொன்னான். இப்போது வேணு கிஷோரின் புஜத்தை பற்றி,

"அவனை விடு மச்சி..!! நீ வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!!"

என்று அவனை இழுத்து சென்றான். இருவரும் அலுவலகத்தை ஒட்டியிருந்த அந்த பால்கனியை நோக்கி நகர்ந்தார்கள். அசோக்கையே மேலும் ஒருசில வினாடிகள் பரிதாபமாய் பார்த்த சாலமன், பிறகு அவர்களை பின்தொடர்ந்து ஓடினான்.

பால்கனியை அடைந்தவர்கள், நிலைமையின் டென்ஷன் குறைக்க சிகரெட் புகைத்தனர். வேணுவே ஆளுக்கொரு சிகரெட் எடுத்துக்கொடுத்து, அவனும் ஒன்று பற்ற வைத்துக்கொண்டான். புகையை ஊதிக்கொண்டே கிஷோரிடம் சொன்னான்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
என்ன மச்சி நீ.. அவன்தான் அப்படி இருக்கான்னா.. நீயும்..!!"

"ப்ச்.. வேற என்னடா பண்ண சொல்ற..?? அவ போய் ரெண்டு வாரம் ஆச்சு.. இவன் கொஞ்சம் கூட மாறுற மாதிரி தெரியல..!! இப்படியே விட்டா ஆளே ஒன்னும் இல்லாம போயிடுவாண்டா..!!"

"புரியுது மச்சி..!! ஆனா அவன் கூட இப்படி மல்லுக்கட்டுறதுல எந்த பிரயோஜனமும் இல்லடா.. அதை நீ மொதல்ல புரிஞ்சுக்கோ..!! அவன் எந்தமாதிரி ஸ்டேட்ல இருக்கான்னு தெரிஞ்சா.. இப்படிலாம் அவன்கூட சண்டை போடமாட்ட..!!" வேணு சொல்ல, கிஷோர் இப்போது குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.

"எ..என்ன சொல்ற நீ..?? எந்த மாதிரி ஸ்டேட்ல அவன் இருக்கான்..??"

"நேத்து.. அந்த சுமங்கலி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ப்ராஜக்ட் விஷயமா.. ஷூட்டிங் லொகேஷன் பாத்துட்டு வர சொல்லிருந்தல..??"

"ம்ம்.."

"ஆபீஸ்ல சும்மாதான இருக்கான்னு.. இவனையும் கூட்டிட்டு போயிருந்தேன்..!!"

"சரி..!!"

"பதினஞ்சு மாடி பில்டிங் மச்சி.. மேல நின்னுக்கிட்டு லொகேஷன் பாத்துட்டு இருந்தோம்..!! திடீர்னு இவன்.. 'இங்க இருந்து இப்படியே குதிச்சிடலாம் போல இருக்குடா'ன்றான்..!! எனக்கு ஒன்னும் புரியல.. திரும்பி இவன் மூஞ்சை பாத்தா.. மூஞ்சில அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! எங்க இவன்பாட்டுக்கு டப்புன்னு குதிச்சிருவானோன்னு.. நான் அப்படியே மெர்சலாகி போயிட்டேன்..!!"

"ஓ..!!" வேணு சொல்ல சொல்ல.. கிஷோரும் சாலமனும் திகைப்பாக அவனையே பார்த்தனர்..!!

"அப்புறம்.. அப்படியே நைஸா.. பேச்சை வேற மாதிரி மாத்தி.. அவனை கீழ இழுத்துட்டு வந்தேன்..!!"

"ம்ம்..!!"

"அன்பா பேசித்தான்டா அவனுக்கு நெலமையை புரிய வைக்கணும்..!! அதைவிட்டுட்டு.. சும்மா சும்மா அவளை மறந்துடுன்னு சொன்னா.. அவன் என்னடா பண்ணுவான்..?? அவன் அந்த ஸ்டேஜ்லாம் தாண்டிட்டான்டா..!! ஆளாளுக்கு அவனை போட்டு டார்ச்சர் பண்ணி.. அவன்பாட்டுக்கு ஏடாகூடமா ஏதாவது பண்ணிக்கிட்டான்னு வச்சுக்கோ.. நெனச்சு பாரு..!!"

"ம்ம்.. புரியுதுடா..!!"

"வா.. கொஞ்சம் நல்லவிதமா பேசி.. அவனை கூல் பண்ணு.. வா..!!"

வேணுதான் அசோக்கின் நிலையை ஓரளவு சரியாக கணித்திருந்தான்.. இப்போது அவன்மூலமாக சாலமனும், கிஷோரும் அதன் தீவிரத்தை புரிந்து கொண்டிருந்தார்கள்.. மூவரும் சிகரட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு, மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்..!! நுழைந்தவர்கள்.. ஒருகணம் திகைத்துப் போனார்கள்..!! அசோக்கை அங்கே காணவில்லை..!!!!

"எங்கடா போயிருப்பான்..??"

"தெரியலையே மச்சி..!!"

"அவன் நம்பருக்கு கால் பண்ணு..!!"

கிஷோர் சொல்ல.. வேணு ஒருவித பதற்றத்துடன் தனது செல்போனை எடுத்து.. அசோக்கின் எண்ணை தேட ஆரம்பித்தான்..!!

அதே நேரத்தில்.. அசோக்கின் வீட்டில்.. அவனுடைய அறையில்..

வெட்டி நேரத்தை செலவழிக்க.. ஏதாவது ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன்.. DVD எடுத்துச்செல்கிற நோக்கத்துடன்.. அண்ணனின் அறைக்கு வந்திருந்தாள் சங்கீதா..!! அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த DVDகளை ஆராய்ந்து.. அதில் ஒன்றை தேர்வு செய்து வெளியே இழுக்க.. DVDயுடன் சேர்ந்து இன்னொன்றும் வெளியே வந்து விழுந்தது.. 'டிங்டடாங்டாங்..' என்ற சப்தத்துடன் தரையில் விழுந்து சிதறி ஓடியது..!! அது.. அசோக்கின் பாட்டி மீராவுக்கு அன்பளிப்பாக தந்த பரம்பரை மோதிரம்.. மீரா அசோக்கை விட்டு பிரிகையில், அவனிடம் திருப்பியளித்த மோதிரம்..!!

அதைப் பார்த்த சங்கீதா ஒருகணம் குழம்பிப் போனாள்.. குனிந்து கையில் எடுத்தாள்..!! அது பாட்டியின் பரம்பரை மோதிரம், விலைமதிப்பில்லாதது என்று அவளுக்கு தெரியும்..!! ஆனால்.. அது எப்படி இங்கே.. அண்ணனின் அறையில்..??

"பாட்டிஈஈ..!!"

என்று கத்தியவாறே படிக்கட்டு இறங்க ஆரம்பித்தாள் சங்கீதா..!! பாட்டியிடம் சென்று அந்த மோதிரத்தை அவள் நீட்ட.. அவளுக்கும் அந்த மோதிரத்தை பார்த்து அதிர்ச்சி..!!

"நான் இதை.. நம்ம மீரா பொண்ணுட்ட குடுத்தேனே.. இது எப்படி உன்கிட்ட..??"

"அ..அங்க அண்ணன் ரூம்ல கெடந்துச்சு பாட்டி..!!"

பாரதியும் அவர்கள் இருவருடனும் வந்து சேர்ந்துகொண்டாள்.. விஷயம் தெரிந்ததும் அவளுக்கும் குழப்பம்..!! 'இது எப்படி இங்கே வந்திருக்கும்' என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ள.. அந்த குழப்பம் அதிகரித்துக்கொண்டே சென்றது.. இரண்டு வாரங்களாக அசோக்கின் நடவடிக்கைகள் வேறு அவர்களுடைய சந்தேகத்தை கிளப்பியது..!!

"கொஞ்சநாளாவே அவன் ஒன்னும் சரியில்ல மம்மி..!! முன்னாடிலாம் அண்ணி பத்தி பேசினாலே அவன் மூஞ்சி அப்படியே ப்ரைட் ஆயிடும்.. இப்போலாம் அண்ணி பத்தி பேசினாலே அவன் அவாய்ட் பண்ணிடுறான்.. அவன் மட்டும் இல்ல.. இந்த கிஷோரும்..!!" சங்கீதா சொல்ல, இப்போது மற்ற இருவரையும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது.

"அவனுக்கு ஃபோனை போடுடி..!!" என்றாள் பாரதி, மூளையில் பலப்பல எண்ண ஓட்டத்துடன்.

"ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கான் மம்மி..!!" முயன்று பார்த்து சொன்னாள் சங்கீதா.

"ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கானா..??"

பாரதியின் பதற்றம் இப்போது மேலும் அதிகரித்தது..!! நெஞ்சில் ஒருவித கிலியுணர்வு கிளம்ப.. நெற்றியை பற்றி பிசைந்துகொண்டவள்.. சற்றே தடுமாற்றமான குரலில் மகளிடம் சொன்னாள்..!!

"ச..சரி.. கி..கிஷோருக்கு ஃபோனை போடு..!!"

அதே நேரத்தில்.. அசோக்கின் அலுவலகத்தில்.. வீடியோ எடிட்டிங் அறையில்..

"விடு மச்சி.. ஃபோன் பண்றது வேஸ்ட்..!! அவன் ஃபோனை இங்கயே விட்டுட்டு போயிருக்கான்.. ஸ்விட்ச் ஆஃப் ஆகி வேற இருக்கு..!!" சாலமன் சொல்லிக்கொண்டே மேஜையில் இருந்த செல்ஃபோனை கையில் எடுத்தான்.

"இப்போ என்னடா பண்றது..?? திடீர்னு எங்க போய் தொலைஞ்சான்..??" வேணு கையை பிசைந்தான்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனுடைய செல்ஃபோன் அலறியது..!! எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன், நெற்றியை பிசைந்தான்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
"யார்டா..??"

"சங்கி..!!"

அடுத்த அரைமணிநேரத்தில் அசோக்கின் நண்பர்கள் அவனுடைய வீட்டில் இருந்தார்கள்..!! அசோக்குடைய குடும்பத்தினர் அவர்களை சூழ்ந்துகொள்ள.. கடந்த இரண்டு வாரங்களாக அசோக்கிற்கு நேர்ந்ததை எல்லாம்.. ஒவ்வொன்றாக அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்..!! மீரா அசோக்கை விட்டு பிரிந்து சென்றது.. அவர்களுக்கு தெரியாமல் இவர்கள் அவளை தேடிப்பிடிக்க முயன்றது.. இப்போது அவளை கண்டுபிடிக்கிற வழியெல்லாம் அடைபட்டுப்போனது.. அவளை அடையமுடியாத ஏக்கத்தில் அசோக்கின் மனநிலை மிக மோசமாகிப்போனது.. சற்றுமுன் கிஷோருடன் ஏற்பட்ட சண்டை.. அதைத்தொடர்ந்து அவன் காணாமல் போனது.. எல்லாவற்றையும் வேறுவழியில்லாமல் சொல்லிமுடித்தார்கள்..!!

[Image: RA+58.jpg]

அவர்கள் சொன்னதை எல்லாம்.. அசோக்கின் குடும்பத்தினர் அதிர்ச்சியும் திகைப்புமாய் கேட்டுக்கொண்டனர்..!! அசோக்கைப் பற்றி அவர்கள் சொன்னவை எல்லாம்.. பாரதியைத்தான் மிகவும் பாதிப்பதாக அமைந்தன.. பெற்ற மகனுக்கு நேர்ந்த பெருந்துயரத்தை.. குமுறுகிற நெஞ்சுடன் கேட்டுக்கொண்டாள் பாரதி..!! 'ஐயோ.. எம்புள்ளை..' என்று மனதுக்குள்ளேயே மருகி மருகி.. கலங்கி கண்ணீர் வடித்தாள்..!!

"இவ்வளவு நடந்திருக்கு.. இத்தனை நாளா எதையுமே சொல்லாம மறைச்சுட்டிங்களேடா..?? ஒன்னுக்கு மூணு பேரு ஃப்ரண்டுன்னு இருந்தும்.. எம்புள்ளையை இப்படி தொலைச்சுட்டு வந்து நிக்குறீங்களே..??"

வேதனையுடன் பாரதி வெடித்து சிதற.. பதில் சொல்ல வார்த்தையின்றி நண்பர்கள் மூவரும் தலையை குனிந்துகொண்டனர்..!!

அசோக்கை தேடி இரண்டு காரில் கிளம்பினார்கள்.. நண்பர்கள் மூவரும் வேணுவின் காரில்.. பாரதி, மணிபாரதி, சங்கீதா மூவரும் மணிபாரதியின் காரில்..!! வெளியே கோடைமழை 'ச்ச்சோ'வென்று கொட்டிக்கொண்டிருந்தது.. மழை நீர் பாதையை மறைக்காமல் இருக்க.. காரின் வைப்பர்கள் 'தடக் தடக்'என அடித்து.. தமது பணியை செய்துகொண்டிருந்தன..!!

அசோக்கின் குடும்பத்தினர்.. தங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று.. அவனை தேடினர்..!! அசோக்கின் நண்பர்கள்.. அவன் வழக்கமாக தண்ணியடிக்கிற பார்களுக்கெல்லாம்.. சென்று பார்த்தனர்..!! மணி இரவு பத்துமணியையும் தாண்டிப் போனது.. ஆனால் அசோக்கை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..!!

"கொஞ்ச நேரம் முன்னாடிதான் ஸார் வந்துட்டு போனாரு.. கன்னாபின்னான்னு குடிச்சாரு.. சொன்னாகூட கேக்கல..!!"

அண்ணாநகரில் இருக்கிற ஒரு பார் பேரர் சொன்ன செய்தியை.. சங்கீதாவுக்கு கால் செய்து சற்றே நாசுக்காக சொன்னான் கிஷோர்..!! அதை அவள் அப்படியே அம்மாவிடம் சொன்னாள்..!! பாரதியின் கண்களில் இருந்து வடிகிற கண்ணீரின் அளவு இப்போது இன்னும் அதிகமானது.. வேதனையில் துடித்த அவளது உதடுகள் மேலும் வெடவெடத்தன.. அவளுடைய பதைபதைப்பு எல்லை மீறி சென்று கொண்டிருந்தது..!!

சங்கீதா திடீரென.. "ஒருவேளை.." என்று ஆரம்பித்து.. அசோக் சென்றிருக்கக் கூடிய இடத்தை கெஸ் செய்ய.. அனைவருக்கும் அதில் ஒரு நம்பிக்கை பிறக்க.. மணிபாரதி காரை யு-டர்ன் அடித்து திருப்பினார்..!!

சங்கீதாவின் கணிப்பு நூறு சதவீதம் சரிதான்..!! அசோக் அந்த நேரத்தில்.. அவர்கள் வழக்கமாக சாப்பிடுகிற அந்த ஃபுட்கோர்ட்டில்தான் அமர்ந்திருந்தான்..!! வெளியே 'சடசட'வென மழை கொட்டுகிற சப்தம் இரைச்சலாக கேட்டது.. அசோக் அல்ரெடி மழையில் நனைந்திருப்பான் போலிருக்கிறது.. அவனுடைய சட்டையும் தலைமுடியும் ஈரமாக இருந்தன..!!

பரந்து விரிந்த அந்த தளத்தில்.. அவனையும், டேபிள் சேர்களையும் தவிர வேறு ஆட்களை காணோம்..!! அவன் மட்டும் தனியே.. அவனும் மீராவும் எப்போதும் அமர்ந்து உண்கிற அந்த டேபிளில் அமர்ந்திருந்தான்..!! அளவுக்கதிகமான போதையில்.. அவனுடைய கருவிழிகள் இரண்டும் மேலே ஏறி செருகியிருந்தன.. அவனது தலை நிலையில்லாமல் தள்ளாடியது..!!

வெகுநேரம் பொறுத்து பொறுத்து பார்த்த ஃபுட்கோர்ட் ஊழியர்கள் நான்கு பேர்.. இப்போது அவனுக்கு எதிரே வந்து நின்றனர்..!! கைகளை பின்னால் கட்டியிருந்தவர்கள்.. கடுமையான குரலில் அசோக்கிடம் சொன்னார்கள்..!!

"ஹலோ.. சொன்னா உங்களுக்கு புரியாதா..?? சர்விஸ் டைம் முடிஞ்சு போச்சு.. எடத்தை காலி பண்ணுங்க..!!"

"ஹ்ஹ.. எ..என் மீரா வராம.. நா..நான் எடத்தை காலி பண்ண மாட்டேன்..!! ஓகே..??" அசோக் குழறலாக சொன்னான்.

"மீராவா.. அது யாரு..??" ஒரு ஆள் அந்த மாதிரி கேட்க, இப்போது அசோக் சேரை விட்டு எழுந்தான்.

"மீ..மீரா தெரியாது உனக்கு..?? ம்ம்..?? உனக்கு தெரியுமா..?? உ..உனக்கும் தெரியாதா..??" கிண்டலாக கேட்டவாறே, சுற்றி நின்றவர்களின் கன்னத்தில் 'பட்.. பட்.. பட்..' என்று தட்டினான்.

சங்கீதாவின் பேச்சைக்கேட்டு ஃபுட்கோர்ட் வந்த அசோக்கின் பெற்றோர்.. அவர்களுடைய வாழ்நாளின் மிக மோசமான காட்சியை அன்று காண நேர்ந்தது..!! ஃபுட்கோர்ட்டுக்கு வெளியே.. கொட்டுகிற மழையில்.. அவர்களுடைய மகன் யாரோ நான்கு பேருடன்.. ஒரு ரவுடி ரேஞ்சுக்கு அடிதடி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்..!! போதையின் பிடியில் சிக்கியிருந்த அவனது உடலும் மூளையும் அவனுடன் ஒத்துழைக்காமல் போக.. மற்ற நான்குபேராலும் அவனை எளிதில் சுற்றிவளைத்து அடித்து வீழ்த்த முடிந்தது..!!

"ஐயோ.. விடுங்கப்பா.. எம்புள்ளையை விட்ருங்க..!!" மணிபாரதி ஓடிச்சென்று அவர்களை தடுக்க, அவரை மதியாமல் தள்ளிவிட்டு,

"குடிச்சுட்டு வந்து சலம்பல் பண்ணா.. சும்மா விட சொல்றியா..??" என்றவாறே அசோக்கை அடித்து உதைப்பதை தொடர்ந்தனர்.

பாரதியும் சங்கீதாவும் கூட அலறியடித்து ஓடிச்சென்று அவர்களை தடுக்க முயன்றார்கள்..

"வேணாம்பா.. விட்ருங்கப்பா.." கெஞ்சினாள் பாரதி.

"அண்ணாஆஆ..!!" அலறினாள் சங்கீதா.

அவர்களுடைய முயற்சி வெற்றிபெற சிறிது நேரம் பிடித்தது..!! இறுதியாக.. நான்கு பேரும் சேர்ந்து அசோக்கை தூக்கி வீச.. நடுரோட்டில் சென்று மல்லாந்து விழுந்தான் அசோக்.. அவனுடைய நெற்றி உடைந்து ரத்தம் கொட்டியது..!! அந்த ரத்தம்.. சடசடவென முகத்தில் அடித்து தெறிக்கிற மழைநீருடன் கலந்து.. கன்னம் வழியாக ஓடியது..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
"அசோக்க்க்..!!!" கதறியவாறே ஓடிவந்த பாரதி.. மகனை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டாள்..!!

மூன்று பெரும் கைத்தாங்கலாக அழைத்து சென்று அசோக்கை காரில் ஏற்றினார்கள்.. கார் கிளம்பியது.. காரின் வைப்பர்கள் தங்களது 'தடக் தடக்' ஓசையை தொடர்ந்தன..!! மணிபாரதி காரை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தார்.. அவருக்கு அருகே அமர்ந்திருந்த சங்கீதா, அடிக்கடி திரும்பி பின்சீட்டை பார்த்துக்கொண்டாள்..!! பின்சீட்டில் பாரதியும்.. அவள் மார்பில் அசோக்கும்..!! பாரதி தன் ஈரமான புடவைத்தலைப்பால்.. தனது கண்களில் வழிந்த நீரை துடைக்காமல்.. மகனின் நெற்றியில் வழிந்த உதிரத்தை துடைத்தெடுத்தாள்..!!

"ரொம்ப வலிக்குதாயா..??" கனிவாக கேட்டாள்.

"ஹ்ஹ.. இது என்ன மம்மி வலி..?? அவ என்னை விட்டுட்டு போயிட்டான்னு தெரிஞ்சப்போ வலிச்சதே ஒரு வலி.. அதுக்குலாம் முன்னாடி இது ஒன்னும் இல்ல மம்மி..!!" அசோக் சொல்ல பாரதிக்கு அழுகை வெடித்து கிளம்பியது.

"ஐயோ.. எம்புள்ளை..!!!" என்று அவனை மார்போடு இறுக்கிக் கொண்டாள்.

"நீ சொன்னமாதிரிதான் எல்லாம் செஞ்சேன் மம்மி.. நல்லபுள்ளையா நடந்துக்கிட்டேன்..!! ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரியவச்சேன்.. கண்கலங்காம அவளை பாத்துப்பேன்னு கான்ஃபிடன்ஸ் குடுத்தேன்..!! அப்புறமும் ஏன் மம்மி என்னை விட்டுட்டு போயிட்டா..??"

அசோக்கின் ஏக்கம் பாரதியின் இதயத்தை பிசைவதாக இருந்தது..!! மகனுக்கு காதலென்ற மகிழ்ச்சியை கொடுக்க முயன்று.. இப்போது அவனையே இழந்துவிடுவோமோ என்பது மாதிரியான பயம்.. அவளது இதயத்தை வந்து கவ்விக்கொண்டது..!! அந்த பயம்.. மகன் மீதிருந்த அளவுகடந்த அன்பு.. அவனுடைய பரிதாபநிலையை பார்க்க சகியாமை.. அடுத்தவர்கள் செய்த தவறையே அவளையும் செய்ய தூண்டின..!!

"வேணாய்யா.. அவ உனக்கு வேணாம்.. அவளை மறந்துடு..!! இந்தப்பாழாப்போன காதலே உனக்கு வேணாம்..!! எனக்கு எம்புள்ளை வேணும்.. எம்புள்ளை மட்டும் எனக்கு போதும்..!!" சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவ்வளவுதான்..!! அசோக் அப்படியே நொறுங்கிப் போனான்.. அம்மாவின் வாயிலிருந்தே அந்தமாதிரி வார்த்தைகளை கேட்போமென்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திரவில்லை..!! விக்கித்துப் போனவனாய் பாரதியின் முகத்தையே பரிதாபமாக பார்த்தான்..!!

"ஆமாண்ணா.. அம்மா சொல்றதுதான் கரெக்ட்..!! அண்ணியை..." என்று ஆரம்பித்த சங்கீதா சற்றே நிறுத்தி,

"அ..அந்தப்பொண்ணை மறந்துடுண்ணா..!!" என்று முடித்தாள்.

தங்கையை ஏறிட்டு ஒருசிலவினாடிகள் வெறுமையாக பார்த்த அசோக்.. பிறகு அப்பாவிடம் திரும்பினான்..!!

"நீங்க எதுவும் சொல்லலையா டாடி..??" என்று கேட்டான்.

"எ..என்ன சொல்ல..??" மணிபாரதி காரை ஓட்டிக்கொண்டே தளர்வான குரலில் கேட்டார்.

"ஏதாவது சொல்லுங்க டாடி..!! அவ ஒரு ஃப்ராடு.. அவளை மறந்துடு.. வேற யாரையாவது கட்டிக்கோ.. சந்தோ...ஷமா இருக்கலாம்.. ஆகாசத்தை கிழிக்கலாம்.. மலையை புடுங்கலாம்..!! ஏதாவது சொல்லுங்க டாடி..!!"

"எங்களுக்கு.. அந்தப்பொண்ணைவிட நீ ரொம்ப முக்கியம்டா.. அதைத்தவிர வேற எதுவும் எனக்கு சொல்ல தோணல..!!"

மணிபாரதி பின்னால் திரும்பிப்பார்த்து சொன்னார்..!! அப்பா சொன்னதைக்கேட்ட அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான்.. அப்புறம் திடீரென.. அழுகை கலந்திட்ட குரலில் வெடித்து சிதறினான்..!!

"அப்போ அவ்ளோதான்ல..?? எல்லாமே போச்சுல.. எல்லாமே என்னாலதான் போச்சுல..?? இந்தக்குடும்பம் காதல் மேல வச்சிருந்த நம்பிக்கை.. எல்லாமே என்னால நாசமா போச்சுல..??"

"ஐயோ.. அப்படி இல்லடா..!!" பாரதி மகனை அணைத்துக்கொண்டாள்.

"அப்படித்தான்..!! நான்தான் தோத்துட்டேன்ல..?? போச்சு.. எல்லாம் போச்சு..!!"

அசோக் புலம்ப ஆரம்பித்தான்.. 'இல்லடா.. இல்லடா..' என்றவாறு, பொங்கி வருகிற அழுகையுடன் அவனை ஆறுதல் படுத்த முயன்றாள் பாரதி..!!

[Image: RA+59.jpg]

வீடு வந்து சேர்ந்தது.. தாத்தாவும், பாட்டியும் பாவமாக பார்த்துக்கொண்டிருக்க.. அவனை அழைத்து சென்று அவனுடைய அறையில் படுக்க வைத்தனர்..!! அவன் தூங்கிப் போகும் வரையில், பாரதி அவனருகே அமர்ந்து, அவனுக்கு தலைகோதி விட்டுக்கொண்டிருந்தாள்..!! பிறகு கீழே வந்து.. அசோக்கின் எதிர்காலம் பற்றியும்.. அவனிடம் அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைககளை பற்றியும்.. மற்றவர்களிடம் பேசினாள்..!! அசோக் கிடைத்துவிட்ட செய்தியை.. சங்கீதா கிஷோருக்கு முன்பே தெரிவித்துவிட்டிருந்தாள்..!! அனைவரும் தூங்க செல்ல நள்ளிரவு ஒருமணிக்கு மேல் ஆகிவிட்டது..!!

அடுத்த நாள் காலை ஏழு மணி..

வீடு மட்டுமல்ல.. வெளியுலகமும் மிக அமைதியாக இருந்தது..!! எங்கேயோ 'கா.. கா.. கா..' என்று கரைகிற காக்கையின் சப்தம் மட்டும் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது..!! பாரதி சமையலறையில் இருந்தாள்.. முந்தினநாள் இரவு நெடுநேரம் விழித்திருந்ததால், வீட்டில் அனைவரும் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தனர்..!! பாரதியுமே.. உறக்கம் இழந்த, அழுது அழுது சோர்ந்து போயிருந்த விழுகளுடன்.. வேலை செய்துகொண்டிருந்தாள்.. பாத்திரங்களை கழுவி அடுக்குகிற வேலை..!! அப்போதுதான்..

"பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!!" உள்ளறையில் இருந்து தாத்தாவின் குரல் சற்றே ஈனஸ்வரத்தில் ஒலித்தது.

"என்ன மாமா..??" பாரதியின் பதில் அவருடைய காதில் விழவில்லை போலிருக்கிறது.

"பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!! செத்த இங்க வாயேன்..!!" என்று மீண்டும் அழைத்தார்.

"இருங்க மாமா.. இதோ வந்துட்டேன்..!!"

பெருமூச்சொன்றை எறிந்த பாரதி.. செய்துகொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு.. சமையலறையில் இருந்து வெளியேறினாள்..!! நடந்து சென்று நாராயணசாமியின் அறையை நெருங்கியவள்.. கதவை உட்பக்கமாய் தள்ளி..

"என்ன மாமா..??" என்றாள்.

"காலாங்காத்தாலேயெ காலு ரெண்டும் கொடைச்சல் குடுக்குதுமா.. எந்திரிக்கவே முடியல.. அந்த தைலத்தை கொஞ்சம் எடுத்து தாரியா..??"

"ம்ம்.. சரி மாமா..!!"

சொல்லிவிட்டு பாரதி முன்னறைக்கு வந்தாள்..!! டைனிங் ரூமுக்குள்ளேயே.. ரெஃப்ரிஜரேட்டரை ஒட்டியிருக்கும் அந்த அலமாரியில்தான்.. மருந்துப்பொருட்களை அவர்கள் அடைத்து வைத்திருப்பது..!! அந்த அலமாரியை நோக்கித்தான் பாரதி இப்போது சென்றாள்..!! அலமாரி திறந்து.. தாத்தா கேட்ட அந்த தைல சீசாவை எடுத்துக்கொண்டாள்..!! அலமாரியை மூட சென்றபோதுதான்.. எதேச்சையாக அதை கவனித்தாள்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் மணிபாரதி தனது எழுத்துல வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார்.. இரவெல்லாம் கண்விழித்து கதை எழுதியாகவேண்டிய கட்டாயம்..!! அது அவருடைய உடல்நிலையை பாதித்தது.. இன்சோம்னியா எனப்படுகிற தூக்கமின்மை வியாதியை கொடுத்தது..!! அடிக்கடி அந்த வியாதியால் அவர் அவதிப்படுகிறபோது.. உறக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைப்பதற்காக.. தூக்க மாத்திரைகளை அவர் உட்கொள்வது வழக்கம்..!! அந்த தூக்க மாத்திரைகள் அடைத்து வைத்திருக்கும் டப்பாவை.. இப்போது அலமாரியில் காணவில்லை..!!!!

அதை கவனித்ததுமே பாரதிக்கு திக்கென்று இருந்தது..!! அவ்வளவு நேரம் களைப்பாக இருந்த அவளுடைய மூளை.. இப்போது சுறுசுறுப்பாக எதையோ யோசிக்க ஆரம்பிக்க.. சுருக்கென்று அவளுடைய புத்தியில் அந்த எண்ணம் தைத்தது..!!

"ஒருவேளை.. ஒருவேளை.."

நினைத்துப் பார்க்கும்போதே அவளுக்கு குலைநடுங்கிப் போனது..!! தைல சீசாவை அலமாரியிலேயே போட்டுவிட்டு.. சரக்கென திரும்பி ஓடினாள்.. படிக்கட்டை அடைந்தவள் விழுந்தடித்துக்கொண்டு தடதடவென மேலேறினாள்..!! அவளுடைய முகத்தில் அப்படி ஒரு பதற்றம்.. உடலில் அப்படி ஒரு நடுக்கம்.. மகனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதே என்று அப்படி ஒரு பயம்..!!

"இந்த மீரா சரியான லூஸு மம்மி..!!"

"ஹாஹா.. ஏன்டா அப்படி சொல்ற..??"

"பின்ன என்ன மம்மி.. அடிக்கடி ஏதாவது லூஸுத்தனமா உளர்றா..!! இன்னைக்கு அவ கண்டுபிடிப்பை பாரேன்..!!"

"என்ன..??"

"சூசயிட் பண்ணிக்கிறதுக்கு தூக்க மாத்திரைதான் பெஸ்ட் ஆப்ஷனாம்..!! மத்ததெல்லாம் பெயின்ஃபுல்லாம்..!!"

"ஹாஹா.. கரெக்டாத்தான சொல்லிருக்குறா என் மருமக..!!"


எப்போதோ மகனிடம் பேசி சிரித்தது இப்போது பாரதியின் நினைவில் வர.. அவளுடைய இதயம் கிடந்தது குமுறியது.. கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து நின்றது..!! அழுது வடிகிற கண்களை துடைக்ககூட தோன்றாமல்.. பரபரப்பாய் படிக்கட்டு ஏறினாள்.. அசோக்கின் அறைக்கு விரைந்தாள்..!! 'கடவுளே.. எம்புள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது..' என்று வாய்க்குள்ளேயே முனுமுனுத்துக்கொண்டாள்..!!

ம்ம்ம்... அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Interesting bro
Like Reply
அத்தியாயம் 24

'கண்ணிழந்தான்.. பெற்றிழந்தான்.. எனவுழந்தான்..' என்கிற கம்பராமாயண வரிகள் கொண்டு.. அசோக்கின் மனநிலையை கொஞ்சமேனும் அளந்திட, அறிந்திட முயலுவோம்..!! கண்பார்வையற்ற மனிதவாழ்வு மிகவும் கொடுமையானதொரு வாழ்வுதானே.. கனவென்ற போலிமகிழ்ச்சி பெறவும் கொடுத்துவைத்திடாத வாழ்வுதானே..?? பிறவியிலிருந்தே பார்வையற்ற ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும்.. தொடுகிற பொருட்களின் தோற்றம் கண்டிட துடிக்கும் அவனது ஏக்கம் எப்படி இருக்கும்..?? துயரம்தானே..??

அதைவிட பெருந்துயரம் எது தெரியுமா..?? மண்ணில் ஜீவித்த நாள்முதலாய், கண்ணில் ஜீவனன்றி வாழும் ஒருவனுக்கு.. விழிகளில் ஒளி கொடுத்து.. வெளிச்ச வெள்ளத்தில் அவனை நனைத்து.. உலகின் அழகை அவனுக்கு உணர்த்தி.. வண்ணங்களின் அற்புதத்தை அக்கண்களில் வார்த்து.. கண்பார்வையின் அருமையை முழுதாக அறியவைத்து.. பிறந்ததன் பலனை அடைந்துவிட்டதாய் அவன் பறந்து திரிகையில்.. மீண்டும் அவனது பார்வையை பறித்து இருளில் தள்ளினால்.. அவனது மனநிலை எப்படி இருக்கும்..?? முன்பிருந்ததைவிட பெருந்துயரம்தானே..??

காதலும் கூட கண்பார்வை போன்றதுதான்.. அசோக்கின் நிலையும்கூட கிட்டத்தட்ட அத்தனை கொடிதுதான்..!! பெரியவன் ஆனதிலிருந்தே பெண் நட்பு அறியாதவன்.. காதலர்களுக்கு மத்தியிலே காலம் சென்றாலும், அவனுக்கென்று ஒரு காதல் அமையப் பெறாதவன்.. வெளியிலே வெறுப்பென்று நடித்து திரிந்தாலும், உள்ளுக்குள் காதலுக்காக உண்மையாய் ஏங்கியவன்..!! தேடியிருந்த தேவதையாய் மீரா அவன் வாழ்வில் வந்தாள்.. பெண்ணின் ஸ்பரிஸத்தை அவனுக்கு உணர்த்தினாள்.. காதலெனும் உன்னத உணர்வை அவனுக்குள் ஊற்றினாள்.. அந்த உணர்வு தந்த ஆனந்தத்தில் அவன் திளைத்துக் கொண்டிருக்கும்போதே.. கண்ணைப் பிடுங்கிப் போனது மாதிரி.. அவனது காதலைப் பறித்துச் சென்றால்..??


அசோக்கையும் அவன் மனநிலையையும் யாருமே துல்லியமாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்..!! அவன் மீராவின் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான காதலாலும்.. அவளை அடையமுடியாமல் போய்விடுமோ என்கிற அச்சுறுத்தலாலும்.. மனதளவில் தளர்ந்து போயிருந்தான்.. புத்தியளவில் குழம்பி போயிருந்தான்..!! நம்பிக்கையான வார்த்தைகளையே அவன் மனம் நாடியது.. தெளிவான வழிகாட்டலே அவன் புத்திக்கு தேவையாயிருந்தது..!! ஆனால்.. அவனுக்கு கிடைத்தது என்ன..??

ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. அசோக்கின் நண்பர்களும் சரி.. அவனது குடும்பத்தாரும் சரி.. அவனிடம் அன்பு கொண்டிருந்தார்களே ஒழிய.. அவனது அவசியத்தை அறிந்துகொண்டார்கள் இல்லை..!! அவன் மீதிருந்த அன்பின் காரணமாக.. அவனது நிலையை பார்க்க சகியாமல்.. அவநம்பிக்கையான வார்த்தைகளை சிந்திவிட்டனர்..!! அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மை புரியவில்லை.. அவநம்பிக்கையை ஊட்டுகிற அன்பு எப்போதுமே.. மனித மனதில் மறுதலையான மாற்றத்தையே தோற்றுவிக்க கூடும்..!! அசோக்கின் மனதிலும் அத்தகைய மாற்றமே..!!

பதைபதைப்புடன் படிக்கட்டு ஏறிய பாரதி, மூச்சிரைக்க அசோக்கின் அறையை வந்தடைந்தாள்.. அவரசமாக கதவை திறந்து, அறைக்குள் பார்வையை வீசினாள்..!! உள்ளே அவள் கண்டகாட்சியில்.. ஒருவித நிம்மதியும், குழப்பமும் ஒருசேர அவளுடைய முகத்தில் படர்ந்தன..!! அசோக் சுயநினைவுடன் இருந்ததினால் வந்தது அந்த நிம்மதி.. குழப்பத்துக்கு காரணம் அவன் அமர்ந்திருந்த நிலை..!!

கால்கள் தரையில் பதிந்திருக்க கட்டிலில் அமர்ந்திருந்தான்.. முழங்கைகளை தொடைகளில் ஊன்றி, முகத்தினை உள்ளங்கைகளில் கவிழ்த்திருந்தான்.. மூச்சு விடுவதற்கு சாட்சியாய் அவனது முதுகு விரிந்து சுருங்கிக் கொண்டிருந்தது..!! அடுத்து என்ன செய்வது என்று புரியாத ஒரு சூனிய உணர்வில் ஆழ்ந்திருக்கிறான் என்பதினை.. அவன் அமர்ந்திருந்த தோற்றத்தில் இருந்தே அறிந்துகொள்ள முடிந்தது..!!

பதற்றம் குறையாத பாரதியின் உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருக்க.. படியேறி ஓடிவந்ததில் அவளது நெஞ்சுக்கூடு காற்றுக்காக அடித்துக்கொண்டு கிடக்க.. அதற்குள்ளாகவே சப்தம் கேட்டு அசோக் தலையை நிமிர்ந்து பார்த்தான்..!! வாசலில் தாயின் உருவம் கண்டதும்.. அவனது நெற்றியில் உடனடியாய் ஒரு சுருக்கம்..!! அதுவும்.. அவள் வந்து நின்றிருக்கிற கோலம் அவனை சற்றே திகைப்பில் ஆழ்த்தியது..!!

ஒருசில வினாடிகள்தான்.. அசோக்கிற்கு புரிந்து போனது.. வாசலில் அவள் நின்ற கோலமும், வந்திருப்பதற்கான காரணமும்..!! சிறிது தடுமாறியவன், பிறகு பொறுமையாக பக்கவாட்டில் திரும்பினான்.. கையை நீளமாக்கி சற்றே எட்டி அதை எடுத்தான்.. எடுத்ததை பிறகு உள்ளங்கையில் வைத்து அம்மாவிடம் நீட்டினான்.. தூக்க மாத்திரைகள் நிரம்பிய டப்பா..!!

வாசலின் இருபுறமும் கையூன்றி நின்று.. மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்த பாரதி.. இப்போது அறைக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!! மகனை நெருங்கியவள்.. அவன் கையிலிருந்த டப்பாவை கைப்பற்றிக்கொண்டாள்..!! அவளுடைய முகத்தில் இன்னமும் முழுநிம்மதி வந்திருக்கவில்லை.. அச்சம் இன்னும் மிச்சம் இருந்தது..!! அம்மாவின் எண்ண ஓட்டம் அசோக்கிற்கு புரிந்திருக்கவேண்டும்..!!

"சா..சாப்பிடலாம்னுதான் எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிடல..!!"

தளர்வான குரலில் சொன்னவன்.. தலையை மெல்ல குனிந்துகொண்டான்..!! பாரதி இப்போது மகனின் தாடையை பற்றி.. அவனது முகத்தை நிமிர்த்தினாள்..!! அம்மாவை ஏறிட்டு அவளது கூர்மையான பார்வையை சந்தித்த அசோக்கிற்கு.. தனது வார்த்தைகளில் அவளுக்கு நம்பிக்கையில்லை என்று தோன்றியது..!!

"சாப்பிடல மம்மி.. ப்ராமிஸ்..!!" என்றான் சற்றே சலிப்பாக.

பாரதிக்கு இப்போது மகனின் வார்த்தைகளில் நம்பிக்கை வந்தது.. அவளிடம் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.. 'என்னாயிற்றோ ஏதாயிற்றோ' என்று பதைபதைப்புடன் ஓடிவந்திருந்ததில், அவளது இருதயம்தான் இன்னும் 'படக் படக்' என துடித்துக்கொண்டிருந்தது..!! படபடப்பை குறைக்கும் பொருட்டு.. பாரதியும் அசோக்கின் அருகாக மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்..!! கையிலிருந்த டப்பாவை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு.. கண்களை மூடி.. சுவாசத்தை சீராக்கிக்கொள்ள முயற்சித்தாள்..!!

"ஆ..ஆனா.. கூடிய சீக்கிரத்துல எனக்கு அந்த நெலமை வந்துடுமோன்னு பயமா இருக்கு மம்மி..!!"

[Image: RA+60.jpg]



அசோக் அவ்வாறு சொன்னதும்.. பாரதி இப்போது தலையை திருப்பி.. பக்கவாட்டில் தெரிந்த மகனின் முகத்தை கலவரமாக பார்த்தாள்..!! அம்மாவை கவனியாத அசோக்.. எங்கேயோ வெறித்து பார்த்தபடி தொடர்ந்து பேசினான்..!!

"ஆளாளுக்கு அவளை மறந்துடு மறந்துடுன்னு சொல்றீங்க..!! எ..என்னால முடியல மம்மி.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், என்னால அவளை மறக்க முடியும்னு எனக்கு தோணல..!!"

"..............................."

"அவளோட பிரச்சினையை சொல்லி கஷ்டப்படுத்தக்கூட விரும்பாம.. என்னைவிட்டு பிரிஞ்சு போயிருக்கா.. எந்த அளவுக்கு என்னை உண்மையா நேசிச்சிருக்கணும்.. எந்த அளவுக்கு எதையுமே எதிர்பார்க்காம என்மேல அவளுக்கு காதல் வந்திருக்கணும்..?? அந்த மாதிரி ஒருத்தியை எப்படி என்னால மறக்க முடியும் மம்மி..??"
first 5 lakhs viewed thread tamil
Like Reply
"..............................."

"அவளை மறக்கனும்னா இதுதான் ஒரே வழி.. அதான்..!!"

"..............................."

"ஏ..ஏதோ ஒருவேகத்துல எடுத்துட்டு வந்துட்டேன்.. ஆனா சாப்பிட போறப்போ.. என்னன்னவோ யோசனை மம்மி..!! நீ.. டாடி.. சங்கி.. தாத்தா, பாட்டி.. ஃப்ரண்ட்ஸ்..!! ரொம்ப கஷ்டமா இருந்தது..!!"

"..............................." அமைதியாக மகனின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த பாரதிக்கு, இப்போது கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்தது.

"அ..அவகூடதான் என் லைஃப்னு.. நான் எப்போவோ முழுசா நம்பிட்டேன் மம்மி.. மனசுக்குள்ள என்னல்லாம் ஆசை தெரியுமா..?? இப்போ.. 'அவ இல்லாம ஒரு லைஃப் இருக்குது.. அடம்புடிக்காம வாழ்ந்துபாரு'ன்னு.. நீங்க எல்லாரும் சொல்றப்போ.. என்னால அதை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல மம்மி..!! அந்த லைஃப் மேலேயே எனக்கு வெறுப்பா வருது..!!"

அசோக் சொல்ல சொல்ல.. பாரதியின் மூளைக்குள் பலவித யோசனைகள்..!! அவளும் மற்றவர்களும் செய்த தவறு, இப்போது அவளுக்கு தெளிவாக புரிந்தது.. ஆறுதலும், நம்பிக்கையும் நாடியவனுக்கு அவநம்பிக்கையை கொடுத்துவிட்ட தவறு..!! தாங்கள் செய்த அந்த தவறை உடனே சரி செய்தாகவேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.. இல்லாவிட்டால் ஆசையாக வளர்த்த மகனை அநியாயமாக இழக்க நேரிடும் என்றும் புரிந்தது..!!

அதே நேரம்.. அசோக் செய்த தவறும் அவளுடைய மனதை தைக்காமல் இல்லை.. அதையும் அவனுக்கு சுருக்கென சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்தாள்..!! இனி இந்த மாதிரி எண்ணம் அவனுக்கு என்றுமே தோன்றக்கூடாது..!! மனதுக்குள்ளேயே ஒரு கணக்கு போட்டவள்.. சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. குரலிலும் ஒரு கடுமையை கூட்டிக்கொண்டு.. பட்டென்று சொன்னாள்..!!

"சரி எங்களுக்குத்தான் அறிவு இல்ல.. உனக்கு எங்க போச்சு புத்தி..??"

பாரதி திடீரென அந்தமாதிரி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. பேசிக்கொண்டிருந்தவன் பேச்சை படக்கென நிறுத்தினான்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அம்மாவை திரும்பி பார்த்தான்..!! சற்றே தடுமாற்றமான குரலில்..

"எ..என்ன சொல்ற.." என்றான்.

"பின்ன என்ன..?? நாங்க 'மறந்துடு'ன்னு சொன்னா.. 'என்னால மறக்க முடியாது.. உங்க வேலையை பாத்துட்டு போங்க'ன்னு மூஞ்சில அடிச்சமாதிரி நீ சொல்ல வேண்டியதுதான..?? 'அவ கெடைக்க மாட்டா'ன்னு சொன்னா.. 'கண்டுபிடிக்கிறனா இல்லையா பாருங்க'ன்னு சவால் விட வேண்டியதுதான..?? குடிச்சுட்டு கண்டவன் கூட ரோட்ல சண்டை போடுறதுக்கு பதிலா.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு வேற ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சிருக்கலாம்ல..??"

பாரதி படபடவென பேசப்பேச.. அசோக்கின் மனதில் ஒரு புதுவித உணர்வு பரவ ஆரம்பித்தது..!! இரண்டு வாரங்களாக இருந்த இறுக்க உணர்வை தளர்த்த ஆரம்பித்த, ஒரு இலகுவான உணர்வு.. தளர்ந்து போயிருந்த அவனது இதயத்திற்கு தைரியமூட்டுகிற மாதிரியான நம்பிக்கை உணர்வு..!! பாரதி தொடர்ந்து பேசினாள்..!!

"அடுத்தவங்க சொல்றதைக்கேட்டு உனக்கா ஒரு வைராக்கியம் வந்திருக்கனும்.. 'இதுக்குலாம் உடைஞ்சு போயிடக்கூடாது.. அவளை தேடிக்கண்டுபிடிச்சு எல்லார் முன்னாடியும் நிறுத்தனும்..!! அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து.. பேரன் பேத்தியை அவங்க கொஞ்சுறப்போ.. ஒருகாலத்துல என்னல்லாம் சொன்னீங்கன்னு கேலி பண்ணனும்..!!' அந்த மாதிரிலாம் உனக்கு வைராக்கியம் வந்திருந்தா.. உனக்கும் புத்தி இருக்குன்னு அர்த்தம்..!!"

[Image: RA+61.jpg]



"..............................."

"அதைலாம் விட்டுட்டு.. இப்படி தம்மடிக்கிறதும், தண்ணியடிக்கிறதும், பொலம்புறதும், சண்டை போடுறதும்.. என்னடா இதெல்லாம்..?? அதெல்லாம் பாக்குறப்போ எங்க மனசு என்னபாடு படும்னு கொஞ்சமாவது நெனச்சு பாத்தியா..?? பத்தாக்கொறைக்கு மாத்திரை டப்பாவை வேற தூக்கிட்டு வந்துட்டான்.. புத்திசாலிப்புள்ள..!!"

பாரதி இகழ்ச்சியாக சொல்ல.. அசோக் தலையை தொங்கப் போட்டுக்கொண்டான்..!! அவனுக்குமே இப்போது அவன் செய்த தவறு தெளிவாக விளங்கிற்று..!! தனக்கிருந்த மன அழுத்தைத்தை அப்பட்டமாக வெளியே காட்டி.. தன்மீது அன்பு வைத்திருந்தவர்களை பயமுறுத்திவிட்டோம் என்று தோன்றியது.. தைரியம் இழந்தது தவறென்று புரிந்தது..!!

"உன் காதல் உண்மையானதுதானடா..??" பாரதி திடீரென கேட்க, அசோக் திகைத்துப் போனான்.

"எ..என்ன மம்மி இப்படி கேக்குற..??"

"ப்ச்.. சொல்லுடா..!! உன் காதல் உண்மையானதுதான..??"

"ஆ..ஆமாம்..!! அதுல என்ன உனக்கு சந்தேகம்..??"

"உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா..??"

"கா..காதல் மேல நம்பிக்கையா.. அ..அப்படினா..?? என்ன கேக்க வர்றன்னு எனக்கு புரியல..!!"

அசோக் குழப்பமாக அம்மாவின் முகத்தை ஏறிட.. இவள் இப்போது சற்றே நிதானித்தாள்..!! எதைச்சொல்லி மகனுக்கு புரியவைப்பது என்று ஒருசில வினாடிகள் யோசித்தாள்..!! பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு.. மெல்லிய குரலில் ஆரம்பித்தாள்..!!

"உன் அப்பாவோட எழுத்தை மட்டுந்தான் நான் அப்போ பாத்திருக்குறேன் அசோக்.. வேற எதுவும் எனக்கு அறிமுகம் இல்ல.. அவரு கருப்பா செவப்பான்னு கூட எனக்கு தெரியாது.. அவரோட குரலை கூட மெட்ராஸ்க்கு கெளம்புறதுக்கு மொதநாள்தான் கேட்டேன்..!! வீட்டுக்கு பின்னாடி இருக்குற ஆத்துக்கு போறதுக்கே அவ்வளவு பயப்படுற பாரதிதான்.. ஐநூறு கிலோமீட்டர் தனியா தாண்டி வந்தேன்..!! உடம்பெல்லாம் ரத்தம் வடிய.. கைல காசு இல்லாம.. கால்ல செருப்பு இல்லாம.. கட்டின பொடவையோட.. முன்னப்பின்ன அறிமுகமே இல்லாத ஊருக்கு..!! எந்த நம்பிக்கைல வந்தேன்னு நெனைக்கிற..??" பாரதி கேட்டுவிட்டு மகனை கூர்மையாக பார்க்க,

"..............................." அவனிடம் எந்த பதிலும் இல்லை.

"காலங்காத்தால நாலு மணிக்குலாம்.. கொஞ்சம் சீக்கிரமாவே.. அந்த ட்ரெயின் மெட்ராஸ் வந்துடுச்சு.. கொட்டுற பனில.. சென்ட்ரல் ஸ்டேஷன்ல தன்னந்தனியா நின்னுட்டு இருந்தேன்..!! யாராரோ வர்றாங்க போறாங்க.. ஒருமாதிரி பாக்குறாங்க.. பேச்சு குடுக்குறாங்க.. அம்மாக்கு ரொம்ப பயமா இருந்துச்சுடா..!!"

"..............................."

"உன் அப்பா வந்து சேர்றதுக்கு அரை மணி நேரம் ஆச்சு..!! அந்த அரைமணி நேரமும்.. 'எப்போடா அவர் வருவாரு.. அவர் நெஞ்சுல சாஞ்சு ஓன்னு அழலாம்..'னு நெனச்சுட்டு இருந்தேனே ஒழிய.. ஒரு செகண்ட் கூட.. 'அவரு வருவரோ வரமாட்டாரோ'ன்னு என் மனசு சந்தேகப்படல அசோக்.. சத்தியமா..!!"

"..............................."

"என் காதல் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கைடா.. 'நம்ம காதல் உண்மையானது.. அது நம்மள கஷ்டத்துல தள்ளிடாது'ன்னு ரொம்ப நம்பிக்கை..!! இன்னைக்கு எனக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கெடைச்சிருக்குன்னா.. அதுக்கு காரணம், என் காதல் மேல நான் வச்சிருந்த நம்பிக்கைனாலதான்..!! அந்த நம்பிக்கை உன் காதல் மேல உனக்கு இருக்கா..?? ஒரு நல்ல வாழ்க்கையை அந்தக்காதல் அமைச்சு குடுக்கும்னு.. உன் மனசார நம்புறியா..??"

"..............................." அசோக் அமைதியாகவும், திகைப்பாகவும் பார்த்துக்கொண்டிருக்க, பாரதியே தொடர்ந்தாள்.

"நம்பு.. உன் காதலை முழுசா நம்பு..!! காதலும் கூட கடவுள் மாதிரிதான்டா.. நம்புனவங்களை சோதிக்கும்.. ஆனா கைவிடாது..!! காதலுக்கு உண்மையா இருந்தா மட்டும் பத்தாது.. உண்மையான அந்த காதல் மேல அசைக்கமுடியாத நம்பிக்கையும் வைக்கணும்..!! இது ரெண்டும் இருந்துட்டா.. அந்த காதலே உங்களை சேர்த்து வைக்கும்..!!"

மிக உறுதியான குரலில் சொல்லி முடித்தாள்..!! அசோக் எதுவுமே பேசத்தோன்றாதவனாய் அமர்ந்திருந்தான்.. அம்மா சொன்ன வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தையே, அவன் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தது..!! அந்த அர்த்தம் புரிய புரிய.. இருண்டு போயிருந்த அவனது இதயத்தில்.. மெலிதாக ஒரு ஒளிக்கீற்று எட்டிப்பார்த்தது..!!

தீவிர யோசனையில் இருக்கும் மகனையே.. பாரதி சிறிது நேரம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! மகனின் மனநிலை இப்போது அவளுக்கு தெளிவாக புரிய.. அவள் மனதில் ஒரு நிம்மதி..!! அந்த நிம்மதி அவளது முகத்திலும் பரவ.. பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியவாறே.. கட்டிலில் இருந்து எழுந்துகொண்டாள்..!!

"சரிடா.. அம்மா கெளம்புறேன்.. தலைக்கு மேல வேலை இருக்குது.. பாத்திரம்லாம் அப்டியே கெடக்குது.. கழுவி எடுத்து வச்சுட்டு டிபன் ரெடி பண்ணனும்.. மாமா வேற கால்வலின்னாரு.. போய் தைலம் தேச்சு விடனும்.. எந்திரிக்கிறப்போ காபி ரெடியா இல்லைன்னா, உன் தங்கச்சி வேற பேயாட்டம் ஆடுவா..!! ஹ்ம்ம்... நீ குளிச்சுட்டு சீக்கிரம் கீழ வா.. நைட்டு வேற சாப்பிடல.. வயிறுலாம் காஞ்சு போய் கெடக்கும்.. வந்து சுடச்சுட ஒரு பத்து இட்லியாவது இன்னைக்கு சாப்பிடனும்.. சரியா..!!"

மிக இயல்பாக சொல்லிக்கொண்டே அறைவாசலை நோக்கி நடக்கிற அம்மாவை.. அசோக் வித்தியாசமாக பார்த்தான்..!! அடுத்த கணமே.. மேஜை மீதிருந்த தூக்கமாத்திரை டப்பா அவனது கண்களில் படவும்.. அவசரமாக அவளை அழைத்தான்..!!

"ம..மம்மி.."

"ம்ம்..??" பாரதி திரும்பி பார்த்து கேட்டாள்.

"இ..இது.. இ..இந்த டப்பா.." அசோக் இழுத்தான்.

"ஆங்.. அதுக்கென்ன..??"

"இல்ல.. இ..இங்கயே வச்சுட்டு போயிட்ட..??"

"ஹ்ம்ம்.. நல்லாருக்கே..!! நான் என்ன உனக்கு எடுபுடியா..?? நீதான எடுத்துட்டு வந்த.. நீயே போய் எடுத்த எடத்துல வச்சுடு..!!"

கிண்டலான குரலில் சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க.. அசோக்காலும் அவனுடைய உதட்டில் கசிந்திட்ட ஒரு புன்முறுவலை கட்டுப்படுத்த முடியவில்லை.. நீண்ட நாட்களுக்கு அப்புறம் அவனது இதழ்களில் பூத்துக்கொண்ட மெலிதான ஒரு புன்னகை அது..!!

"தேங்க்ஸ் மம்மி..!!" என்றான், திரும்பி நடக்கிற பாரதியின் முதுகை பார்த்து.

அசோக்கிடம் ஒருவித அலட்சியத்துடன் பேசிவிட்டு வந்திருந்தாலும்.. பாரதியின் மூளை என்னவோ உள்ளே ஆர்ப்பரித்துக்கொண்டுதான் இருந்தது.. படி இறங்கியவளின் முகத்தில் அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! மகனின் நிலை பற்றி பலவிதமான சிந்தனைகள்.. அடுத்து என்னென்ன செய்வது என்பது மாதிரியான கேள்விக்குறிகள்.. அவசர அவசரமாக ஆனால் மிக தெளிவாக எடுக்கப்பட்ட சில முடிவுகள்..!! படியிறங்கி கீழ் தளத்திற்கு வந்த பாரதி..

"பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!!"



என்று இன்னமும் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்த மாமனாரை.. தற்காலிகமாக அலட்சியம் செய்தாள்..!! சுவற்றோடு ஒட்டியிருந்த அந்த டெலிஃபோனைத்தான் முதலில் அணுகினாள்.. டயல் செய்துவிட்டு ரிஸீவரை காதில் பொருத்திக்கொண்டாள்.. அடுத்த முனையில் இருந்து 'ஹலோ' ஒலித்ததும்..


"ஆங்.. பவானி.. அத்தை பேசுறேன்மா..!!" என்றாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அத்தியாயம் 25

அதன்பிறகு வந்த ஒருவாரம்.. பத்து நாட்கள்..!! அசோக் முழுமையாக மாறிப்போனான் என்று சொல்ல இயலாது.. ஆனால் குறிப்பிடத் தகுந்த மாதிரியாக சில மாற்றங்கள் அவனிடம்..!! அவனுடைய நினைவு எப்போதும் மீராவைத்தான் சுற்றி வந்தது.. அவளை இழந்துவிட்ட துக்கம் அவன் மனதில் எப்போதுமே உறைந்து கிடந்தது.. ஆனால்.. முன்பு மாதிரி கழிவிரக்கத்தில் மூழ்கி அவன் சோர்ந்திருக்கவில்லை.. புகையினாலும், மதுவினாலும் அவனது சிந்தனையை சிதைத்துக் கொள்ளவில்லை..!! மாறாக.. உரம் கொண்டதென நெஞ்சினை மாற்றிக்கொள்ள முயன்றான்.. உடைந்து போய்விடக்கூடாதென உறுதியாய் இருந்தான்..!!

மீராவை கண்டுபிடிக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று.. திரும்ப திரும்ப யோசித்து பார்த்தான்..!! மீராவுடனான பழைய நினைவுகளை எல்லாம்.. மீண்டும் மீண்டும் அசை போட்டான்.. ஏதாவது வழி தென்பட்டுவிடாதா என ஏங்கினான்..!! எந்த ஒரு வழியும் அவனது புத்திக்கு புலப்படவில்லை.. அதற்காக அவன் தளர்ந்து போய் விடவும் இல்லை.. மறுபடியும் வேறொரு நினைவை அசைபோட்டு.. அவனது முயற்சியை தொடர்ந்துகொண்டே இருந்தான்..!!

அம்மா உதிர்த்த அறிவுரைகள் அவனுக்கு உபயோகமானதாய் இருந்தன..!! அத்தனை நாள் காதலுக்கு உண்மையாய் இருந்தவன்.. அதன்பிறகு .. உண்மையான அந்தக்காதல் மீது உறுதியான நம்பிக்கையும் வைக்க நினைத்தான்..!! வாழ்க்கையில் இடர்பாடுகளை சந்திக்க நேருகிற வறியவர்கள்.. 'எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்' என்று.. கடவுள் மேல் பாரத்தை போடுவது போல.. ஆசைக்காதலியின் அழகுமுகம் காணத்துடித்த அசோக்.. 'எங்க காதல் எங்களை சேர்த்து வைக்கும்' என்பது மாதிரி.. காதல் மேல் தனது பாரத்தை போட்டான்..!!

பாரதி அன்று பேசுகையில்.. 'அவளை கண்டுபிடிச்சு.. அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து..' என்கிற ரீதிரில்.. ஒரு எதிர்கால கனவுடன் அவன் மனதில் நம்பிக்கையூட்ட முயன்றவிதம்.. அசோக்கை பொறுத்தவரையில் மிக சக்தி வாய்ந்ததாக அமைந்தது..!! அவனது மனம் சோர்ந்து போக ஆரம்பிக்கும் போதெல்லாம்.. அம்மா சொன்ன அந்த வார்த்தைகளையே அசோக் நினைவுறுத்திக் கொள்வான்..!! சட்டென்று ஒரு எதிர்கால கனவில் மூழ்க ஆரம்பித்து விடுவான்.. அந்த கனவு முழுக்க மீராவே நிறைந்திருப்பாள்..!!

[Image: RA+62.jpg]



திடீரென இவன் எதிரே வந்து நிற்பாள்.. திணறிப்போகிற மாதிரி இறுக்கி அணைத்துக் கொள்வாள்.. 'உன்னை பாக்காம என்னால இருக்க முடியலடா' என்று இவன் மார்பில் முகம் புதைத்து அழுவாள்..!! கன்னங்களில் வழிகிற நீர் துடைத்து இவன் கனிவுமொழி பேச.. கண்கள் இரண்டும் திறந்து வைத்து அவள் காதலாக பார்ப்பாள்..!! காதல்க்கதிர்வீச்சு நடத்துகிற அந்த காந்தப்பார்வையில்.. இவன் கசிந்துருகி, கவர்ந்திழுக்கப்பட்டு, கவனம் தடுமாறி நிற்கையில்.. அவள் இமைகளை மூடிக்கொள்வாள்.. இதழ்களை திறந்து வைப்பாள்..!! 'அமுதம் பருகிக்கொள்.. அதனையே பகிர்ந்தும்கொள்..' என.. அசைவேதுமின்றியே அழைப்பு விடுப்பாள்..!!

உதடுகள் உரசிக்கொள்ளும்.. உடனடியாய் ஒரு தீப்பிடிக்கும்..!! உதட்டுவரிப் பள்ளத்தில்.. உமிழ்நீர் என்கிற பெயரினில்.. சுரந்து வடிகிற தேனொன்றே.. சுகமான அத்தீயினை மூட்டியிருக்கும்..!! ஆசை ஏக்கம் அத்தனையும்.. அதரம் சுவைத்தே அடுத்தவருக்கு அறிவித்திட முயல்வர்..!! முத்தம் இவனை முரடனாக்கும்.. காதலனின் வேகம் அவளை கர்வம் கொள்ள வைக்கும்..!! இதழில் நடக்கும் வன்முறைக்கு.. அவளும் இயன்ற அளவு ஒத்துழைப்பாள்..!!

முத்தம் முடிந்து நெடுநேரம் ஆகியும்.. மூடிய இமைகளோடு.. முகமெல்லாம் உணர்ச்சி கொப்பளிக்க நின்றிருப்பாள்..!! அவள் உதட்டில் மினுமினுக்கும் முத்த ஈரத்தினை.. விரலினால் இவன் துடைக்க.. விழிகள் திறந்து கொள்ளும் அவளுக்கு..!! உதட்டினை உடனடியாய் உள்ளே மடித்துக் கொள்வாள்.. எச்சில் மிச்சத்தை நாவால் தடவி சுவை ருசிப்பாள்..!! கண்களில் பளிச்சென ஒரு மின்னல் பிறந்திட.. கன்னங்களில் அழகாய் ஒரு பள்ளம் தோன்றிட.. காதலும் குறும்பும் கலந்த குரலில் கேட்பாள்..!!

"கல்யாணம் பண்ணிக்கலாமா..??"

பட்டு உடலை தொட்டுப் போர்த்திய பட்டுப்புடவையும்.. மலர்ப்பந்து மார்பினில் வந்து புரண்டிடும் மலர்மணமாலையும்.. நடுவகிடு வழியிறங்கி நெற்றி தவழும் சுட்டியும்.. நாசியின் நடுத்தண்டுதனில் தொங்கி மேலுதடு முத்தமிடும் புல்லாக்கும்.. அஞ்சனம் பூசிய வண்டின கண்களும்.. சந்தனம் தடவிய பஞ்சின கன்னங்களுமாய்.. குத்துக்கால் இட்டமர்ந்து.. குனிந்ததலை குனிந்தேயிருக்க.. மணமகளோடு குணமகளுமாக மாறிப்போய்.. மந்திரத்தோடு வாத்தியமும் சேர்ந்தொலித்திட.. மஞ்சளால் ஆனதொரு மங்கலநாணினை வாங்கிக்கொள்வாள்.. மாலைகளை தோள்மாற்றிக்கொண்டு மனைவியும் ஆகிப் போவாள்..!!

அட்சதை தலையில் படிந்திருக்கும்.. ஆசீர்வாதம்பெற தரையில் பரவுவார்கள்.. அத்தையின் காலில் விழுந்து கிடக்கும் அவள்.. அப்பாவின் பாதம் பணிந்திருக்கிற இவனை பார்த்து.. குறும்பாக கண்சிமிட்டி குழிவிழுகிற கன்னத்தோடு சிரிப்பாள்..!!

கல்யாணம் முடிந்துவிடும்.. கனவோட்டம் முடிந்திடாது.. முதலிரவு தேனிலவென முடிவிலாமல் முன்னேறும்..!! நெஞ்சத்தில் பூத்திருந்தவள் மஞ்சத்தில் வீற்றிருப்பாள்.. நேரங்காலம் தெரியாமல் வெட்கமுற்று வெறுப்பேற்றுவாள்..!! தாகம் முற்றிப்போன இவன் மாராப்பினை பற்றியிழுக்க.. தளிர்க்கரங்களால் அவள் மலர்க்குவியல்கள் மறைத்திடுவாள்..!! ஆசையெனும் ஆயுதம் ஏந்தி.. நாணமெனும் கோட்டையை தகர்த்து.. ஆடையெனும் பகைவனை வெல்வார்கள்.. உள்ளத்தால் ஒன்றானவர்கள், இப்போது உடலாலும் உறவாடுவார்கள்..!! இவனது வேகம் அவளுக்கு பிடிக்கும்.. அவளது வியர்வையும் இவனுக்கு மணக்கும்..!! நெற்றிக் குங்குமம் ஈரத்தில் கரையும்.. மெத்தை மல்லிகை மோகத்தில் கசங்கும்..!! உஷ்ணம் கொண்டு உடல்கள் தகிக்கும்.. உச்சம் கண்டும் தேடல்கள் தொடரும்..!! பகல்ப்பொழுதுகளே பகையாகிப் போகும்.. இருமனங்களுமே இரவுக்கென ஏங்கும்..!!

"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. வா..!!"

தனியாக அழைத்து செல்வாள்.. தனது அடிவயிறு திறந்து காட்டுவாள்..!! புரியாமல் இவன் விழிக்க.. 'புத்தூ' என்று தலையில் தட்டுவாள்..!! கருத்தரித்த செய்தியை காதோரமாய் கிசுகிசுப்பாள்..!! ஆனந்தத்தில் இவன் திளைத்துக் கொண்டிருக்க.. அவளும் அதே ஆனந்தத்தில் விழைந்த கண்ணீரோடு..

"தேங்க்ஸ்டா..!!" என்று பைத்தியம் போல் உளறுவாள்.

வயிறு பெரிதாகிப்போக அவள் இடுப்பு பிடித்து நடப்பாள்.. கர்ப்பிணி மனைவிக்கு இவன் கால் அமுக்கி விடுவான்..!! அகம் இருப்பவனை நெஞ்சில் சாய்த்து அவள் தாலாட்டுவாள்.. அடம் பிடிப்பவளை கெஞ்சிக் கூத்தாடி இவன் சாதமூட்டுவான்..!!

"கண்ணு மூக்குலாம் அப்படியே உன்னை மாதிரிதான்..!!"

களைத்துப்போன உடலும், தளர்ந்துபோன குரலுமாய் அவள் சொல்ல.. இவன் கலங்கிப்போன விழிகளுடன், கையிலிருக்கும் குழந்தையை விடுத்து.. மனைவியின் நெற்றியிலேயே முதலில் முத்தம் வைத்திடுவான்..!!

"தேங்க்ஸ்டி..!!" என்று இவன் இப்போது பைத்தியம் போல் உளறுவான்.

ஐந்தே வருடங்கள்.. ஒன்று கழுத்தை பற்றி தொங்கும்.. ஒன்று மீசை பற்றி இழுக்கும்.. ஒன்று தொடையில் விழுந்து கடிக்கும்.. ஒன்று மூக்கில் விரலை நுழைக்கும்.. எல்லாவற்றிற்கும் கடைக்குட்டியோ மடியில் கிடந்துகொண்டு, எட்டி எட்டி இவன் மார்பிலேயே உதைக்கும்..!! ஐந்து குழந்தைகளுடன் இவன் அவஸ்தைப் படுவதை.. அடக்கமுடியா சிரிப்புடன் அவள் பார்த்து ரசிப்பாள்..!!

இந்த மாதிரியாகவே அவனது கனவு நீளும்.. திரும்ப திரும்ப அதே கனவினை காணுவான்.. சற்றேனும் திகட்டிடாது..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
உறக்கத்தில் காண்கிற கனவு, உறங்கி எழுகையில் உபயோகமில்லாமல் போகலாம்.. விழித்திருக்கையில் காண்கிற கனவு, விழிப்புடனே வைத்திருக்க உதவலாம்..!! அசோக் கண்ட கனவு அவனது மனநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. அடுத்த நாளை நோக்கி அவனது வாழ்க்கையை உந்தித் தள்ளியது.. நனவாக அக்கனவினை மாற்றிட வேண்டுமென.. நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் கொடுத்தது..!!

அசோக்கிடம் மட்டுமில்லாது அவனை சுற்றி இருந்தவர்களிடமும் ஒரு மாற்றத்தை காண முடிந்தது..!! அவனிடம் எதிர்மறையாக பேசுவதை முதலில் விட்டொழித்தார்கள்.. அசோக்கின் மனநிலையை இலகுவாக்குகிற மாதிரியான வார்த்தைகளையே கவனமாக சிந்தினர்.. 'இன்றோ நாளையோ மீரா கிடைத்துவிடப் போகிறாள்' என்பது மாதிரியான கற்பனையை அவர்களுமே மனதுக்குள் வளர்த்துக் கொண்டனர்.. அது அவர்களது பேச்சிலும் வெளிப்பட்டது.. அசோக்கின் மன இறுக்கம் அகல, அது மிக அவசியமாயிருந்தது..!!

"தைரியமா இரு மச்சி.. எங்க போயிட போறா அந்த கோயில்பட்டி வீரலட்சுமி.. புடிச்சிடலாம்..!!" என்று நம்பிக்கையாக சொன்னது, எப்போதும் எதிர்மறையாக பேசுகிற சாலமனேதான்.

எல்லாம் பாரதி இட்ட கட்டளை.. தனது குடும்பத்தாரிடம் மட்டுமில்லாது, அசோக்கின் நண்பர்களிடமும் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தாள்..!! அசோக் தூக்க மாத்திரையை தூக்கி சென்ற விஷயத்தை.. இரண்டு பேரிடம் மட்டுமே பாரதி சொல்லியிருந்தாள்..!! ஒன்று அசோக்கின் அப்பா மணிபாரதியிடம்.. இன்னொன்று கிஷோரின் அக்கா பவானியிடம்..!! பவானியை டெலிஃபோனில் அழைத்த பாரதி.. அன்றே அவளை வீட்டுக்கு வரவழைத்தாள்.. அசோக்கின் நிலையை கவலையுடன் எடுத்துரைத்தாள்..!!

"எப்படி இருந்த எம்புள்ளை இப்படி ஆயிட்டான்.. ஆளாளுக்கு எதை எதையோ சொல்லி அவன் மனசை ரொம்ப நோகடிச்சுட்டோம்..!! அவனை நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குது பவானிம்மா..!!" தளர்ந்த குரலில் சொன்ன பாரதிக்கு,

"ப்ச்.. என்னத்தை நீங்க..?? நீங்களே இப்படி உடைஞ்சு போயிட்டா எப்படி..?? ஹ்ம்ம்.. அவனை பத்தி நீங்க இனிமே வொர்ரி பண்ணிக்காதிங்க.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!" பவானி தைரியமூட்டினாள்.

அசோக்கை தனது அரவணைப்புக்குள் எடுத்துக்கொண்டாள் பவானி..!! தனது உறவினன் என்பதை மறந்து.. மனஅழுத்தம் கொண்ட ஒரு பேஷண்ட்டை எப்படி அணுகுவாளோ, அந்த மாதிரி மிக கவனமாக அவனை அணுகினாள்..!! அசோக்கின் நிலை பற்றிய கவலையும், பாரதிக்கு கொடுத்த வாக்குறுதியும் அவள் மனதில் இருந்தன.. ஆனால் அவற்றை எப்போதும் அவளது குரலிலோ, நடவடிக்கையிலோ அவள் காட்டிக்கொண்டது இல்லை..!! இயல்பாக நடந்து கொள்வாள்.. இலகுவான குரலில் பேசுவாள்.. மிக அழகாக அசோக்கின் கவனத்தை திசை திருப்புவாள்.. அவன் அறியாமலே அவன் மனதுக்குள் நம்பிக்கை விதைகளை தூவுவாள்..!! மேற்சொன்ன அசோக்கின் மனமாற்றத்தில் பவானியின் பங்கும் மிக முக்கியமானது..!!

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? Stress-ன்றது நம்ம எல்லார்ட்டயுமே இருக்குது அசோக்.. நம்மளோட நார்மல் லைஃப்க்கு அந்த Stress ரொம்ப ரொம்ப essential..!! Stress இல்லாத மனுஷன்னா.. அது ஏதாவது கோமால கெடக்குற பேஷன்ட்தான்..!! என்ன.. அந்த Stress ஒருஅளவுக்கு மேல போறப்போதான் பிரச்னை.. அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சினா நஞ்சுதான..?? காய்ச்சல் தலைவலி மாதிரிதான் இதுவும்.. கொஞ்சநாள் ட்ரீட்மன்ட் எடுத்துக்கிட்டா எல்லாம் சரியா போய்டும்..!! உன் ஆளு திரும்ப வர்றப்போ.. இப்படியா சீக்குக்கோழி மாதிரி அவ முன்னாடி நிப்ப..?? அப்படியே சிங்கம் மாதிரி நிக்க வேணாம்.. ஹஹா..!! என்ன சொல்ற..??"

"அச்சச்சோ.. அக்காக்கு லேட் ஆயிடுச்சுடா.. உன் பைக்ல என்னை ஹாஸ்பிடல் வரை ட்ராப் பண்றியா..??"

"ம்ம்.. வந்தது வந்துட்ட.. 'Art of Living' class ஆரம்பிக்கப் போகுது.. சும்மா அட்டண்ட் பண்ணி பாக்குறியா..??"

தற்கொலையை முயலாம் என்று அசோக் நினைத்த அன்றே.. அவன் வாழ்தல்கலையை பயிலுமாறு அமைந்து போனது..!! முதல்நாள் அனுபவம் அவனுக்குமே பிடித்திருந்ததால்.. அதன் பிறகு தினமும் அந்த வாழ்தல்கலை வகுப்புக்கு வருகை தர ஆரம்பித்தான்..!! முன்பொருமுறை டாகுமன்ட்ரி எடுப்பதற்காக அங்கே வந்திருந்தபோது அறிமுகமான மும்தாஜ்தான்.. இப்போது அசோக்கிற்கு யோகா பயிற்றுவித்தாள்..!! அசோக்கின் நிலையை பவானியின் மூலமாக மும்தாஜும் ஓரளவு அறிந்திருந்தாள்.. அவளும் அசோக்கிடம் தனிக்கவனம் எடுத்துக் கொண்டாள்..!!

"தலையை மேல கொண்டு போறப்போ மூச்சை நல்லா உள்ள வாங்கணும்.. அப்புறம் தலையை கீழ கொண்டு வர்றப்போ கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணனும்..!!" கண்கள் மூடி அமர்ந்திருந்த அசோக்கின் தாடையை தாங்கியவாறு மும்தாஜ் சொன்னாள்.

"உடம்புன்றது நாம சாப்பிட்ட சாப்பாட்டோட விளைவு.. மனசுன்றது நாம பார்த்த, கேட்ட, படிச்ச விஷயங்களோட விளைவு..!! உடம்பு, மனசு.. இது ரெண்டுமே நாம கெடையாது..!! இது ரெண்டுல இருந்தும் நம்மள நாமளே பிரிச்சு எடுக்குறதுதான் தியானம்..!!" மேடையில் நின்று மும்தாஜ் சொல்ல, தரையில் இன்னும் சிலருடன் அமர்ந்திருந்த அசோக், அதை கவனமாக கேட்டுக்கொண்டான்.

"இந்த உலகத்துல வந்து பொறக்குறதை.. நாம எப்படி முடிவு பண்றது இல்லையோ.. அந்த மாதிரி இந்த உலகத்தை விட்டு போறதையும்.. நாம முடிவு பண்ணக் கூடாது அசோக்..!! அட்வைஸ் பண்றேன்னு நெனச்சுக்காதிங்க.. எனக்கு அந்த அருகதைலாம் இல்ல.. ஹ்ஹ..!! ஏதோ என் மனசுல தோணுனதை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! ம்ம்.. இந்தாங்க..!!" அசோக்கிற்கு தேநீர் கலந்து நீட்டிக்கொண்டே, ஒரு இதமான புன்னகையுடன் மும்தாஜ் சொன்னாள்.

வகுப்பின்போதும்.. வகுப்பு முடிந்து உரையாடுகிறபோதும்.. அசோக்கின் மனக்காயம் ஆறுவதற்கு.. மும்தாஜும் முடிந்த அளவு உபயோகமாக இருந்தாள்..!! மீதி நேரங்களில்.. பவானி தன்னால் இயன்ற அளவுக்கு அசோக்குடன் நேரத்தை செலவழித்து.. அவனது மனமாற்றத்துக்கு பெருவுதவி செய்தாள்..!!

"ஏன் கோவம் வருது..?? உன் மனசுல ஒரு கான்ஃபிடன்ஸ் இருந்தா.. உனக்கு கோவம் வர்றதுக்கு அவசியமே இல்லையே..?? யாரோ என்னவோ சொல்லிட்டு போறாங்கன்னு நீ கூலா இரு..!!" - அசோக்குடன் பைக்கில் செல்கையில் பவானி.

"தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறதுலாம் உனக்கு ஒரு temporary comfort தரலாம் அசோக்.. But.. long termல பாக்குறப்போ.. it's too dangerous..!! உன் ப்ராப்ளத்துக்கு அது சொல்யூஷன் இல்ல..!!" - அலுவலக அறையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கிடம் பவானி.

"ஏண்டா.. அவளுக்கு பிடிக்குமேன்னு ஆசையா வளர்த்தேன்னு சொல்ற.. இப்படியா தண்ணி ஊத்தாம காய விடுறது..?? நாளைக்கு அவ வந்து இதை பாத்தான்னா என்ன நெனைப்பா..?? அவ வர்றவரைக்கும் நீதான் இதை நல்லா கவனிச்சுக்குற.. சரியா..?? மார்னிங், ஈவினிங் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்தணும்.. அவ வந்து பாக்குறப்போ அப்படியே சொக்கிப் போயிடணும்..!!" - வீட்டின் பின்புறமிருந்த மஞ்சள் ரோஜா தோட்டத்தை நோட்டமிட்டவாறே பவானி.

மீராவின் வருகை பற்றி, அசோக் அறியாமல் அவன் மனதில் நம்பிக்கை வளர்ப்பது மட்டுமல்லாமல்.. சில சமயங்கள் நேரிடையாகவே, அசோக்கிடம் மீரா பற்றி பேசி அறிந்துகொள்வாள்..!!

"ஹ்ம்ம்.. தேடுதல் வேட்டை எந்த லெவல்ல இருக்குது..?? ஏதாவது லீட் கெடைச்சதா..?? என்னைக்கு அந்த அழகு மூஞ்சியை என் கண்ணுல காட்டப்போற..??"

"ப்ச்.. எந்த லீடும் கெடைக்கலக்கா.. எல்லாம் அப்படியே ப்ளாங்கா இருக்கு.. ஏதோ இருட்டு ரூமுக்குள்ள குருட்டு பூனை அலையுற மாதிரி இருக்கு..!!"

"ஏண்டா இப்படி பேசுற..?? அவகூட பேசினது பழகினதுலாம் கொஞ்சம் பொறுமையா நெனச்சு பாரு.. ஏதாவது லீட் கெடைக்கும்..!!"

"எல்லாம் நெனச்சு பாத்துட்டேன்க்கா.. எதுவும் பிடிபடல..!! எவ்வளவு பொய் சொல்லிருக்கா தெரியுமா..?? நான் உண்மைன்னு நெனச்சது எல்லாமே.. கடைசில பொய்..!! வரைமொறையே இல்லாம பொய் பொய்யா சொல்லிருக்கா.. சரியான புழுகு மூட்டை..!!" அசோக் சொன்னவிதம் பவானிக்கு சிரிப்பை வரவழைத்தது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
"ஹாஹாஹாஹா..!! ஓகே ஓகே..!! ஹ்ம்ம்... சரி.. அப்போ இப்படி பண்ணு.. கொஞ்சம் உல்ட்டாவா திங்க் பண்ணி பாரு.. ஏதாவது யூஸ்ஃபுல் மேட்டர் கெடைக்குதான்னு பாக்கலாம்..!!"

"உல்ட்டானா.. எப்படி..??"

"ம்ம்ம்ம்ம்.. எப்படி சொல்றது.. நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..?? அந்த ஆங்கிள்ல யோசிச்சு பாரு..!!"

"ம்க்கும்.. ஏன்க்கா நீங்க வேற..?? நானே கன்ஃப்யூஸ் ஆகிப்போய் கெடக்குறேன்.. நீங்க காமடி பண்ணிட்டு இருக்குறீங்க..??" அசோக் நொந்துபோன குரலில் சொல்ல,

"ஹாஹாஹாஹா..!! காமடி பண்ணலடா.. சீரியஸா சொல்றேன்..!!" பவானி சிரித்தாள்.

பவானியின் சிரிப்பு அசோக்கின் முகத்திலும் புன்னகையை பூக்க செய்தது..!! இந்த மாதிரி.. அசோக்கின் மனநிலை தேறுவதற்கும்.. ஒரு இதமான சூழ்நிலையை அவனுக்கு உருவாக்கி தருவதற்கும்.. அடுத்த நாளின் மீது அவனுக்கு ஒரு பிடித்தத்தை ஏற்படுத்துவதற்கும்.. பாரதி, பவானி, மும்தாஜ் ஆகிய மூன்று பெண்களுமே.. மிக மிக முக்கியமான பங்காற்றியிருந்தனர்..!!

மும்தாஜுடன் முன்பே இருந்த அறிமுகத்துடன்.. இப்போது வகுப்புக்கு வந்த இந்த பத்து நாட்களில்.. அவளுடனான அசோக்கின் நெருக்கம் நிறையவே அதிகரித்திருந்தது..!! மாலை நேரத்தில் வகுப்பு முடிந்தவுடன்.. மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே இருந்த சிறிய பூங்காவில்.. விளையாடுகிற குழந்தைகளையும், வாக்கிங் செல்கிற நோயாளிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே.. சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிப் போனது..!! ஆரம்பத்தில் பொதுவான விஷயங்கள் பேசிக்கொண்டவர்கள்.. பிறகு பர்சனல் விஷயங்களைக்கூட பகிர்ந்து கொண்டனர்கள்..!!

[Image: RA+63.jpg]



"இந்த புக் எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்..!! உங்களுக்கு படிக்கிறதுக்கு டைம் இருக்காதுன்னு எனக்கு தெரியும்.. இருந்தாலும்.. எனக்காக கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.. சரியா..??"

மும்தாஜ் நீட்டிய புத்தகத்தை வாங்கிகொண்டான் அசோக்.. பக்கங்கள் நிறைந்த தடிமனான புத்தகம்..!! புன்னகை படிந்திட்ட உதட்டுடன்.. புத்தகத் தலைப்பின் மீது பார்வையை வீசியவனுக்கு.. ஒரு புதுவித ஆச்சரியம்..!!

"தட்டுங்கள் திறக்கப்படும்..!!"

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை உள்ளடக்கிய புத்தகம் என்பது.. அந்த தலைப்பை பார்த்ததுமே புரிந்து போனது..!! அட்டையை புரட்டி பொருளடக்க பட்டியல் பார்த்து.. அந்த சந்தேகத்தை உறுதியும் செய்துகொண்டான் அசோக்..!! அப்படியே மும்தாஜை ஏறிட்டு.. மெலிதான ஒரு புன்முறுவலுடன் சொன்னான்..!!

"க்ரேட்..!!!"

"எ..என்ன.. என்ன க்ரேட்..??"

"இல்ல.. ஒரு முஸ்லிம் பொண்ணு.. ஒரு ஹிந்து பையனுக்கு.. கிறிஸ்டியன் புக் படிக்க தர்றீங்களே.. அதை சொன்னேன்..!!"

"ஹஹ.. இதுல என்ன இருக்கு..?? நான் எல்லா மத கொள்கைகளையும் படிப்பேன்.. எனக்கு எல்லா மதங்கள் மேலயும் நம்பிக்கை உண்டு..!!"

"ஓ..!! எனக்கு எந்த மதத்துலயும் நம்பிக்கை இல்லை..!!"

"ம்ம்.. தெரியும்..!! இந்த புக் படிச்சு பாருங்க.. அந்த நம்பிக்கை வர சான்ஸ் இருக்கு..!! மனுஷங்க பண்ற தப்புக்கு மதங்கள் என்ன பண்ணும்னு தோணும்..??"

"அப்படி என்ன ஸ்பெஷல் இந்த புக்ல..??"

"ம்ம்ம்ம்ம்.. எப்படின்னு சொல்ல தெரியல..!! ஜீசஸோட வாழ்க்கை சரிதம்.. அவரோட எண்ணங்கள்.. போதனைகள்.. எல்லாம் படிக்கிறப்போ.. மனசு அப்படியே ப்யூர் ஆகிப்போய்.. ஒருமாதிரி லேசான ஃபீல் கெடைக்கும்..!! புத்தில ஏதாவது குழப்பம் இருந்தா.. அது உடனே சரியாகிடும்..!! படிச்சு பாருங்க.. உங்களுக்கும் புரியும்..!!"

"ஹ்ஹ.. ஓகே.. ட்ரை பண்றேன்..!!"

ஆர்வம் இல்லை என்றாலும்.. மும்தாஜின் மனதை நோகடிக்க விரும்பாதவனாய்.. அந்த புத்தகத்தை தனது பேகுக்குள் திணித்துக் கொண்டான் அசோக்..!! ஒரு சில வினாடிகள் எதையோ யோசித்தவன்.. பிறகு தானும் அவளுடன் ஏதாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்துடன்..

"நா..நான்.. நெறைய ஹாரர் மூவி கலக்க்ஷன்லாம் வச்சிருக்கேங்க.. உங்களுக்கு எதாவது எடுத்துட்டு வந்து தரட்டுமா.. பார்ப்பிங்களா..??" என்று அப்பாவியாக கேட்டான்.

"ஹாரர் மூவினா.. பேய்ப்படமா..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"அய்யோ.. நமக்கு அதுலாம் ஆகாதுங்க.. உவ்வே..!!" - மும்தாஜிடம் ஒரு முகச்சுளிப்பு.

"இ..இல்லைங்க.. இ..இது நீங்க நெனைக்கிற மாதிரி பேய் இல்ல.. வேற மாதிரி இருக்கும்..!!"

"வாட்..?? வேற மாதிரி பேயா..??"

"ம்ம்.. எல்லாம் ஜப்பானீஸ் ஹாரர் மூவிஸ்..!!"

"ஓ.. என்ன வித்தியாசம்..??"

"இந்த ஹாலிவுட் பேயிங்கதான் அசிங்கமா அருவருப்பா இருக்குங்க.. பாத்தாலே பயமா இருக்கும்..!! ஜப்பான் பேயிங்கள்லாம் அப்படி இல்ல.. நல்லா பவுடர், கண்மை, லிப்ஸ்டிக்லாம் போட்டுக்கிட்டு.. அழகா, செமக்யூட்டா இருக்குங்க.." அசோக் சீரியஸாக சொல்லிக்கொண்டே போக,

"ஹாஹாஹாஹாஹாஹா..!!" மும்தாஜுக்கு சிரிப்பை நிறுத்த வெகுநேரம் ஆனது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Super bro
Like Reply
அத்தியாயம் 26

நெடுநாட்களுக்கு அப்புறம் மும்தாஜ் மனம் விட்டு சிரித்ததற்கு மறுநாள்..!!

வடபழனி முனுசாமி சாலையில்.. வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் அசோக்.. பைக்கின் பின்சீட்டில் மும்தாஜ்..!! இரண்டு கால்களையும் ஒருபக்கமாக போட்டு அமர்ந்திருந்தாள்.. அசோக்குடைய முதுகை உரசிவிடக்கூடாது என.. மிகவும் பிரயத்தனப்பட்டு உடலை ஒடுக்கிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய அவஸ்தையை புரிந்துகொண்ட அசோக்.. தன் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்..!! இப்படி ஒரு பிரயாணத்துக்கு காரணமே மும்தாஜ்தான்..!!

"எ..என்னாச்சுன்னு தெரில அசோக்.. வ..வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன்னுது..!! எ..என்னை கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ண முடியுமா..??"

சற்றுமுன் அசோக்கிடம் தயங்கி தயங்கி கேட்டதே அவள்தான்..!! அவன் மீதிருந்த நன்மதிப்பில் அவ்வாறு கேட்டுவிட்டாலும்.. இப்போது அருகில் அமர்ந்து பயணிக்கையில், அவளிடம் ஒரு கூச்சம்.. அந்த கூச்சம் தந்த ஒருவித அவஸ்தையுடனே பயணித்துக் கொண்டிருந்தாள்..!!

முனுசாமி சாலையில் இருந்து இடதுபுறம் திரும்புகிற மற்றொரு குறுகிய சாலையில்தான்.. அசோக்குடைய அலுவலகம் இருக்கிறது..!! பேருந்து நிலையத்துக்கும் அந்த குறுகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்..!! சீறிக்கொண்டிருந்த வண்டியின் வேகத்தை குறைத்து.. அலுவலகம் இருக்கிற கட்டிடத்தின் முன்பாக நிறுத்திய அசோக்.. பின்பக்கமாக திரும்பி..

"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க மும்தாஜ்.. வந்துடுறேன்..!!" என்றான்.

மும்தாஜ் இறங்கிக்கொள்ள, வண்டியை சாய்த்து ஸ்டான்ட் இட்டுவிட்டு, அவனும் இறங்கிக்கொண்டான்.

"உங்க ஆபீஸ்க்கு எங்களைலாம் இன்வைட் பண்ண மாட்டிங்களா..??" மும்தாஜ் சற்றே குறும்பாக கேட்க,

"இ..இல்ல.. அ..அதுக்காக இல்ல..!!" அசோக்கிடம் ஒரு தயக்கம்.

"அப்புறம்..??"

"நீ..நீங்க நெனைக்கிற மாதிரிலாம் எங்க ஆபீஸ் இருக்காது..!! ஒரே குப்பையா.. ஒரு கேவலமான ஸ்மெல்லோட.. ரொம்ப கச்சடாவா இருக்கும்..!!"

"ஹாஹா.. அதனால என்ன.. எனக்கு ஓகே..!!" சொல்லிவிட்டு மும்தாஜ் புன்னகைக்க, அசோக் மேலும் ஓரிரு வினாடிகள் தயங்கினான். பிறகு,

"தென்.. இட்ஸ் ஃபைன்..!!"

என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் நடக்க.. மும்தாஜ் அவனை பின்தொடர்ந்தாள்..!! பக்கவாட்டில் இருந்த படிக்கட்டு ஏறி, இருவரும் மேலே சென்றார்கள்.. மூடியிருந்த கதவு திறந்து, அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்..!!

இவர்கள் சென்ற நேரத்தில் அசோக்கின் நண்பர்கள் மூவருமே அலுவலகத்தில் இல்லை.. ஏதோ படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியே சென்றிருந்தனர்..!! அவர்களிடம் வேலை செய்கிற அசிஸ்டன்ட்கள்தான்.. சிஸ்டத்தில் ஏதோ கேம்ஸ் ஆடியபடி ஹாயாக அமர்ந்திருந்தனர்..!!

அசோக் அவர்களிடம் சென்று ஏதோ ஃபைல் பற்றி கேட்க.. அவர்களில் ஒருவன் மேஜை ட்ராவை கைகாட்டினான்..!! மேஜையை அணுகிய அசோக் ட்ராவை திறந்தான்.. உள்ளே கைவிட்டு, அந்த ஃபைல் அடங்கிய மெமரி ஸ்டிக்கை தேடினான்..!!

அதேநேரம்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியிருந்த மும்தாஜ்.. காத்திருக்கிற நேரத்தில் அந்த அறையை சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்..!! சுவற்றில் ஒட்டியிருந்த அந்த கவிதை காகிதம் அவளுடைய கண்ணில் பட்டது.. ஒரு ஆர்வத்துடன் அந்தக்கவிதையை வாசிக்க ஆரம்பித்தாள்..!!

அகப்பொருளுல் ஒன்றினை..
முதற்பொருள் செய்த மூடா..!!
உரிப்பொருளுல் ஒன்றானபின்..
இறுதிப்பொருள் செய்த இராட்சசா..!!

உந்துதல் தணிக்கவே..
முகர்ந்தாயோ என் புணர்புழை..??
வெந்து எரியுதடா..
வெட்டி எறிந்திடவோ..??

நரமாமிசத்துக்குட்புறம் நரம்புண்டு..
நரம்புக்குள்ளோடும் உதிரமுண்டு..
உதிரத்துக்குள்ளாடும் உணர்வுமுண்டு..
அறிவாயோ நீ அற்பப்பதரே..??

புறப்பொருள் போதுமோடா..
போகப்பொருள் கசந்தேனோடா..
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!


"ம்ம்.. கவிதை நல்லாருக்கு..!!" மும்தாஜ் திடீரென சொல்ல, மேஜை ட்ராவுக்குள் கவனத்தை தொலைத்திருந்த அசோக், இப்போது தலையை நிமிர்ந்து பார்த்தான்.

"ஓ.. பிடிச்சிருக்கா..??" என்று கேட்டவாறே மெலிதாக புன்னகைத்தான்.

"எஸ்.. ரொம்ப ரொம்ப..!! எழுதினது யார்னு தெரிஞ்சுக்கலாமா..??"

"வேற யாரு.. நான்தான்..!!" அசோக்கின் குரலில் ஒருவித குறும்பு.

"ஹாஹா.. சான்ஸே இல்ல.. சத்தியமா இது நீங்க எழுதினது கெடையாது..!!" மும்தாஜ் உறுதியான குரலில் சொன்னாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
"எ..எப்படி சொல்றீங்க..??" அசோக் சற்றே புருவத்தை நெறித்தவாறு கேட்டான்.

"ஒரு பொண்ணோட வலி அப்படியே அப்பட்டமா தெரியுது.. ஒரு ஆம்பளையால இந்த அளவுக்கு அந்த வேதனையை உணர்ந்து எழுதிருக்க முடியாது..!! அந்த வார்த்தைகள்ல தெரியிற கோவமும்.. அந்த அர்த்தத்துல தெறிக்கிற வீரியமும்.. கண்டிப்பா இதை எழுதினது ஒரு பொண்ணாத்தான் இருக்கணும்னு தோணுது..!!"

மும்தாஜ் அந்த மாதிரி சொன்னதுமே.. அசோக்கின் மனதில் ஒரு அதிர்வலை.. அவனது மூளையில் ஒரு மின்னல் வெட்டு..!! ஃபைல் தேடிக்கொண்டிருந்த அவனது கவனம் சிதறி.. வேறொரு யோசனையில் சென்று குவிய ஆரம்பித்தது..!! மும்தாஜ் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!

"கொஞ்ச நாள் முன்னாடி நான்கூட நெறைய கவிதைலாம் எழுதுவேன் அசோக்..!! என்னோட பாஸ்ட்லாம் உங்களுக்கு தெரியும்ல.. நான் அந்த மாதிரி ஒரு கொடுமையான பீரியட்ல இருந்தப்போ.. நெறைய எழுதுவேன்..!! எல்லாம் இந்த மாதிரி கவிதையாத்தான் இருக்கும்.. ஆம்பளைங்க மேல வெறுப்பு.. அப்படியே ஒரு ஆத்திரம்.. அடக்க முடியாம ஒரு பழியுணர்ச்சி..!! மனசுல இருக்குற கோவத்தை எல்லாம்.. இந்த மாதிரி கவிதையாத்தான் கொட்டுவேன்..!!"

மும்தாஜ் சொல்லிக்கொண்டே போக.. அசோக்கின் மூளை இப்போது சுறுசுறுப்பாகியிருந்தது.. மிக தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தது..!! அசோக்கிற்கு அந்த கவிதையின் அர்த்தம் ஓரளவுக்கு தெரியும்.. அகராதி புரட்டி அந்தக்கவிதையின் உள்ளர்த்தத்தை கொஞ்சம் உணர்ந்தே வைத்திருந்தான்..!! 'ஒரு ஆணிடம் ஏமாந்த பெண்ணின் வேதனையை சொல்கிற கவிதை இது' என்கிற அளவிலேதான் அவனது எண்ணம் இருந்ததே ஒழிய.. மீராவுக்கு நிஜத்திலே நடந்த கொடுமையின் பிரதிபலிப்பாக இருக்குமோ என்று.. அவனது மனம் எப்போதும் சந்தேகப்பட்டது இல்லை..!! இப்போது மும்தாஜ் சிந்திய வார்த்தைகளில்.. அவனுக்கு அந்த சந்தேகம் பிறந்திருந்தது..!!

"உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த ஆம்பளை மேலயுமே எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல..!!"

"நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!!"


அவனை விட்டு பிரிந்து செல்கிற அன்று.. கண்களில் நீர் வழிய மீரா சொன்ன வார்த்தைகள்.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவனது சந்தேகம் வலுப்பட ஆரம்பித்தது..!! அந்தப்பக்கம் மும்தாஜ் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.. இந்தப்பக்கம் அசோக், நடந்துமுடிந்த பலசம்பவங்களை பரபரவென நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவனுடைய உணர்வு நரம்புகளில் எல்லாம், சர்சர்ரென ஒரு அதிர்வு மின்சாரம் பாய.. அந்த சம்பவங்கள் அனைத்தும் அவன் மனதில் சரசரவென குழப்பப்படங்களாய் ஓடின..!!

"என் அக்கா சொன்னேன்ல............................. கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா................................. ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்................... நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு.............." - ஃபுட்கோர்ட்டில் அமர்ந்துகொண்டு, முகத்தை மிக இயல்பாக வைத்தவாறு, அக்காவின் காதல் என்கிற பெயரில் மீரா சொன்னவை.

"நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??" - புன்னகையுடன் கேட்டாள் பவானி.

"மொளைக்கிறதுக்கு முன்னாடியே, ஆம்பளை புடிக்கிற வேலையை விட்டுட்டு.. ஒழுங்கா படிச்சு முன்னேர்ற வழியைப் பாரு.. போ..!!" - பூங்காவில் ஒரு பள்ளி மாணவியிடம் வெறுப்பை உமிழ்ந்தாள் மீரா.

"அந்தப்பையனோட ஃபாரீன் காண்டாக்ட் நம்பர் வாங்கி பேசினேன்.. ............... அவனுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல..!! திடீர்னு.. சென்னைல இருந்து போலீஸ்ன்னதும்.. என்ன ஏதுன்னு தெரியாம.. பையன் கொஞ்சம் டென்ஷனாயிட்டான்..!!" - புகை வழிகிற வாயுடன் ஸ்ரீனிவாச பிரசாத்.

"எனக்கு விஜய்ன்ற பேரே பிடிக்காது..!!!!" - நடிகர் விஜய் நடித்த சினிமாவிற்கு செல்லலாம் என்று அழைத்தபோது, மீரா முகம் சிவக்க உக்கிரமாக கத்தியது.

"நீ சொன்ன அந்த நம்பர் விஜயசாரதின்ற பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு..!!" - மீண்டும் புகைமண்டலத்துக்கு நடுவே ஸ்ரீனிவாச பிரசாத்.


அவ்வளவுதான்.. அசோக்கை உடனடியாய் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.. அவன் முகத்தில் உச்சபட்சமாய் ஒரு தீவிரம் கொப்பளித்தது..!! உடலின் அத்தனை செல்களிலும் ஒரு பதற்றம் நிறைந்துபோயிருக்க.. நடுங்குகிற கையால் தனது செல்போனை எடுத்தான்.. வெடவெடத்த விரல்களால் ஏதோ ஒரு எண்ணுக்கு டயல் செய்தான்..!! அவனுடைய மாற்றத்தை கவனித்த மும்தாஜ்..

"என்னாச்சு அசோக்..??"

என்று குழப்பமாக கேட்க.. அசோக் அதை அலட்சியம் செய்தான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதும்..

"ஹலோ ஸார்.. நான் அசோக் பேசுறேன்..!!" என்றான்.

"ஆங்.. சொல்லு அசோக்..!!" என்றார் மறுமுனையில் ஸ்ரீனிவாச பிரசாத்.

"ஸார்.. நீங்க அந்த விஜயசாரதின்ற பையன் பத்தி சொன்னிங்கள்ல..??"

"ம்ம்..!!"

"அவன் வெளிநாட்டுல இருக்கான்னு சொன்னிங்க..!!"

"ஆமாம்..!!"

"அந்த வெளிநாடு.. யூ.எஸ்தான..??"

"ஆ..ஆமாம்..!! உனக்கு எப்படி தெரியும்..??"

ஸ்ரீனிவாச பிரசாத் குழப்பமாக கேட்க.. இந்தப்பக்கம் அசோக்கின் மனம் இன்னும் தெளிவு பெற ஆரம்பித்தது.. அவனது சந்தேகம் இப்போது மிகவும் உறுதிப்பட்டுப் போனது.. நெஞ்சில் எழுந்திருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது..!! அவசரமாக ஏதோ யோசித்தவன், உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்து.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் கேட்டான்..!!

"ஸார்.. நீங்க இப்போ ஃப்ரீயா..?? எனக்காக கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியுமா..??"

ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள.. அவன் நன்றி சொல்லி காலை கட் செய்தான்..!! உடம்பில் ஒரு பதட்டத்துடன் அந்த அறைவாசலை நோக்கி நகர்ந்தான்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 15 Guest(s)