மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 11

அவளுக்கு,, அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றாப்பா...." என்ற சத்யன் கண்களிலும் கண்ணீர் குரலிலும் கண்ணீர்....

அதிர்ந்து போனார் அருணகிரி "என்னடா சொல்ற? கல்யாணம் ஆன பொண்ணையா நீ காதலிச்ச?" என்று கேட்டவரின் குரலிலோ ஒரு மாதிரியான அருவருப்பு

கண்ணீருடன் நிமிர்ந்து தகப்பனின் முகம் பார்த்தவன் "ஆமாம்ப்பா... அப்படித்தான் அவ சொன்னா" என்று கூறிவிட்டு முகத்தை இரு கையாலும் மூடிக்கொண்டு "அதான்ப்பா என்னால தாங்க முடியலை... செத்துடனும் போல இருந்தது டாடி.... நான் அவளை ரொம்ப விரும்பினேன் டாடி" என்று குமுறலாய் கூறிய மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார் அருணகிரி....

அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார் அருணகிரி.... மகனை பார்த்து ஆத்திரமாய் விழித்து "கல்யாணம் ஆன பெண்களை தாயாவும் சகோதரியாவும் நினைக்கின்ற பரம்பரைல வந்தவனாடா நீ? இப்படியொரு கேவலத்தை செய்திருக்கயே?" மகனை குற்றவாளியாக நோக்கினார்....

அந்த பார்வையில் கூசி குறிகிப் போனான் சத்யன் "அப்பா,, ப்ளீஸ்ப்பா... நான் சொல்றதை முழுசா கேட்டுக்கிட்டு அப்புறமா எதையும் முடிவு செய்ங்க.... நான் ஒன்னும் ஒருத்தனோட மனைவியை விரும்பலை.... முன்னாடி அவளே தனக்கு கல்யாணம் ஆகலைனு சொல்லிருக்காப்பா.... அதுமட்டுமில்ல மேரேஜ்ல தனக்கு இஷ்டமில்லைனும் சொல்லிருக்கா.... இப்போ நான் லவ்வை சொன்னதும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றா... என்னை தவிர்க்கறதுக்காக பொய் சொல்றா அப்பா,, சத்யன் தன்னிலை விளக்கமாக நடந்தவற்றைக் கூறியதும்....

குழப்பமாக மகனைப் பார்த்தவர் "மொதல்ல நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ சத்யா,, ஆன்லைன் என்பது தகவல் தொடர்புக்கு மட்டும் தான்.... வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க இல்லை.... அதுவும் இதெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்து வராத ஒரு விஷயம்... இப்போ நீ சொல்றதை வச்சு என்னால ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க முடியுது..... அதாவது நீ தீவிர ரசிகன்னு தெரிஞ்சதும் திருமணம் ஆகாத பெண் அப்படினு சொல்லி உன்கிட்ட பழகியிருக்கா... ஏன்னா நம்ம தமிழ் பசங்களுக்கு கல்யாணம் ஆன பொண்ணு அப்படின்னாலே ஆன்ட்டினு தான் கூப்பிடுவானுங்க... இதை விரும்பாம உன்கிட்ட திருமணம் ஆன விஷயத்தை மறைச்சிருக்கலாம்.... நீ அவளை விரும்பறேன்னு தெரிஞ்சதும் பிரச்சனைகளுக்குப் பயந்து உண்மையை ஒத்துக்கிட்டு ஒதுங்க நினைச்சிருக்கலாம்.... அவ சேப்ஃடி தான் அவளுக்கு முக்கியம் சத்யா...." என்றார்....



தகப்பனிடம் ஆறுதல் தேடியவன் அவர் கூறிய வார்த்தைகளில் இடிந்து போனான்.... "அப்பா அவ அந்த மாதிரி பொண்ணு இல்லப்பா.... ரொம்ப நல்லவ... இதுபோல துரோக சிந்தனைலாம் அவளுக்கு வராதுப்பா" கெஞ்சினான்....

மகனைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.... ஆனால் இது அவனது வாழ்க்கை மட்டுமல்ல உயிர் பிரச்சனையும் கூட என்ற அடிப்படை உண்மை புரிந்தது.... மகனின் எதிர்காலம் பயமுறுத்த "சத்யா அந்த பொண்ணு கூட எத்தனை நாளா பழக்கம்?" என்று கேட்க.....

"ஆறு மாசம் இருக்கும்ப்பா....." சிமியின் முதல் கவிதையும் முதல் பேச்சும் மனதில் படமாக விரிய கண்களில் கனவினை சுமந்தபடி கூறினான்....

"அவளை பார்த்திருக்கியா? ஐ மீன் போட்டோஸ் ஏதாவது?"

"இல்லப்பா,, நான் எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தேன்... அவளோட கான்டாக்ட் நம்பர் கூட குடுக்கலை"

"சரி,, எதை வச்சு அவமேல உனக்கு காதல் வந்ததுன்னு சொல்ற?"

"அப்பா,, அவ எழுத்துக்கள் தான்.... அதிலிருக்கும் தேடல் தான் என் மனசுல பதிஞ்சது... அப்புறம் அவள் தேடும் ஆறுதலாக நான் இருக்கனும்னு நினைச்சேன்... ரொம்ப சீக்கிரத்திலேயே அந்த ஆறுதல் என் மட்டும் தான் கிடைக்கனும்னு.... அதாவது காதலா மாறிடுச்சு... இப்ப அவளை மறக்கவும் முடியலை அவ சொன்னதை ஏத்துக்கவும் முடியலை.... ஒவ்வொரு நிமிஷமும் நரகத்துல இருக்குற மாதிரி இருக்கு டாடி" உணர்ச்சியில் கொந்தளித்து கொதித்து வந்தது அவனது வார்த்தைகள்....

மகனை தீர்க்கமாக பார்த்தார் அருணகிரி "அதுக்காக தற்கொலைக்கு முயற்சி செய்வியா சத்யா... உன்னை அந்த மாதிரி கோழையா வளர்க்கலையேடா?" ஆற்றாமையுடன் பேசியவரைக் கண்டு தலைகுனிந்தான் சத்யன்......

"நீங்களும் அப்படியே சொல்றீங்களேப்பா? செத்துப் போகனும்னு நினைச்சிருந்தா அந்த பாட்டில்ல இருந்த அத்தனை மாத்திரையையும் முழுங்கிருப்பேன்.... ஆறு மாத்திரை மட்டும் சாப்பிட்டிருக்க மாட்டேன்.... எனக்குத் தூங்கனும் டாடி... நான் தூங்கி பலநாள் ஆச்சு.... அவளோட தாக்கம் இல்லாமல் கொஞ்ச நாளாவது தொடர்ச்சியா தூங்க நினைச்சேன்.... தூக்கமின்மையே என்னை அடுத்தது பத்தி சிந்திக்க விடாமல் முடக்கி வச்சதுப்பா.... அதனாலதான் அப்படி செய்தேன்... மாத்திரையோட பவர்ல நான் நினைவிழந்ததும் எல்லாரும் பயந்துட்டாங்க" மெல்லிய குரலில் கூறிய மகனை அந்தப் பெண் எவ்வளவு பாதித்திருக்கிறாள் என்று அந்த தகப்பனால் உணரமுடிந்தது.

"நீ சொல்றதை புரிஞ்சுக்க முடியுது சத்யா,, ஆனா நீ சொன்னதிலிருந்து நான் கெஸ் பண்ணது என்னன்னா.... ஆன்லைன் தவிர வேற எந்தவிதத்திலும் உன்கிட்ட தொடர்பு வச்சுக்க அந்தப் பெண் விரும்பலை... அதாவது அவள் செய்யும் திருட்டுத்தனம் தெரிஞ்சிடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்திருக்கா.... திருட்டுத்தனம்னு நான் சொல்றது அவ சொன்ன மேரேஜ் விஷயத்தைத் தான்..... அதாவது அவ திருமணம் ஆனவனு எந்த விதத்திலும் உனக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு கவனமா இருந்திருக்கா சத்யா,, இது புரியாம காதலை வளர்த்தது உன் தப்பு...." அருணகிரி தீர்க்கமாகப் பேச அதை மறுக்கவும் வழியின்றி மறுகிக் கொண்டிருந்தான் சத்யன்....

தலை குனிந்திருந்த மகனின் கேசத்தை வருடியவர் "சத்யா நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கனும்.... பெண்களைத் தாழ்த்திப் பேசனும்னு நான் இதைச் சொல்லலை... இப்படியும் சில பெண்கள் இருக்காங்க.. அவங்களுக்கும் மனசிருக்கு... அந்த மனதிலும் ஏக்கங்கள் இருக்குன்னு பல ஆண்களுக்கு புரியலை அல்லது புரிஞ்சுக்கவும் அந்த ஆண்கள் தயாராக இல்லைனு தான் சொல்லனும்... அதனால் தான் சில ஆன்லைன் ஆண் பெண் நட்புகள் முறைதவறி அடுத்தக் கட்டுத்துலப் போய் நிற்குது..." என்று சொல்லிக்கொண்டிருந்த அப்பாவை குழப்பமாகப் பார்த்த சத்யன் "புரியலைப்பா,, இதில் தவறு யார்மேலனு சொல்ல வர்றீங்க?" என கேட்க....

"தவறு அப்படின்னு சொல்ல முடியாது சத்யா... அவசர உலகத்தில் ஆண் பெண்ணுக்கான புரிதல் குறைஞ்சிடுச்சின்னு தான் சொல்லனும்.... அதாவது பெண் என்பவள் மென்மையானவள் மட்டுமில்லை எதிர்பார்ப்புகள் நிறைந்தவள்... திருமணமான புதிதில் ஆர்வமும் அக்கரையும் காட்டும் பல ஆண்கள் அதன்பிறகு ஒரு மிஷின் மாதிரி ஆகிடுறாங்க.... ஆனா பெண்ணுக்குள்ளே இருக்கும் எதிர்பார்ப்புகள் அப்படியேதான் இருக்கும்.... அந்தப் பெண்ணுக்குள் ஆயிரக்கனக்கான திறமைகள் இருக்கும் அதில் ஒன்னையாவது ஆண் வெளிக்கொணர முயற்சிக்கனும்...

ரொம்ப சாதரணமா ஒரு உதாரணம் சொல்லனும்னா அழகான கோலங்கள் வரையும் பெண்ணுக்கு அதை ஒருநாளாவது தன் கணவன் பாராட்டனும்னு ஆசையிருக்கும்... பல நாட்கள் பார்க்காமல் செல்லும் கணவனின் நண்பன் ஒரு நாள் வந்து அந்த கோலத்தை ரசித்து பாராட்டும் போது அந்த பெண்ணின் எதிர்பார்ப்பு அந்த நண்பன் பக்கம் திரும்புது... அது நட்பாகவும் இருக்கலாம்... நட்பின் அடுத்தக் கட்டமாகவும் இருக்கலாம்..... அவளைப் பொருத்தவரையில் பாராட்டும் ஆறுதலும் தரும் அவன் தான் ஹீரோ... இந்த தவறு கணவனால் மட்டுமல்ல குடும்பத்திலிருக்கும் மற்ற உறுப்பினர்களாலும் நடக்கும்.... அப்பா அம்மா சகோதரன் சகோதரி யாராயிருந்தாலும் சரி அந்தப் பெண் எதிர்பார்ப்பது ஒரு வார்த்தை பாராட்டு தான்..... இதேபோல் கதை, கவிதைகள், நடனம், பாட்டு, ஓவியம், இப்படி எத்தனையோ வித திறமைகள் கொட்டிக்கிடக்கும் பெண்களுக்கு அதற்கு தகுந்த பாராட்டும் ஆதரவும் கிடைக்காத பட்ச்சத்தில் ஆதரிக்கும் பக்கம் தன்னையறியாமல் சாய்ந்துவிடுகிறாள்.... அப்படித் தடுமாறி சாயும் தோள் ஒரு நண்பனாக இருந்தால் அவளது திறமை மேலும் மெருகேறும்.... அப்படி சாயும் தோள் காமுகனாக இருந்தால் அது புரியாமலே அந்தப் பெண் தடமாறிப் போக அதிக வாய்ப்பு இருக்கு.... இன்றைய அதிகபட்சமான விவாகரத்துகள் இப்படித்தான் புரிதல் இல்லாம புதுப்பிக்கப்படுது சத்யா" அப்பா சொல்ல சொல்ல அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான் மகன்.....

"அப்பா,, அவளும் இப்படிதான் மாறியிருக்கிறாள்னு சொல்றீங்களா" சற்றே கோபம் கலந்த குரலில் கேட்டான் சத்யன்

"இல்ல சத்யா நான் அந்த பெண்ணையோ மற்றவர்களையோ தவறா சொல்லலை... பெண் என்பவள் முகம் பார்க்கும் கண்ணாடியைப் போன்றவள்.... எதன் பிம்பம் கண்ணாடியில் விழுகிறதோ அதாகவே காட்சித் தருபவள்... அப்படிப்பட்ட பெண்ணின் எதிர்பார்ப்புகள் ஏக்கமாக மாறும் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்புண்டுனு தான் சொல்றேன்... இன்றைக்கு பெருகி வரும் நெட்வொர்க் டெக்னாலஜியால் அழகான நட்புகள் பல உருவாகவும் செய்கின்றன.... பெண்மையை மதித்து சகோதரியாக தாயாக நினைச்சுப் பழகுறவங்களும் இருக்கிறாங்க... அதே பெண்களை அவர்கள் அறியாமலேயே அசிங்கப்படுத்தும் சம்பவங்களும் நடந்துக்கிட்டு தான் இருக்கு சத்யா... உனது கவிதை தோழிக்கு வெளியுலகில் கிடைக்காத ஆறுதல் உன்கிட்ட கிடைச்சதால சாஞ்சிருக்கா... ஆனா நீ அந்த நட்பை காதல்னு மொழிபெயர்ப்பு செய்ததால் பயந்து உண்மையைச் சொல்லி ஒதுங்க நினைச்சிருக்கா... இந்தப் பிரச்சனைக்கு முடிவு என்க்கிட்ட கேட்டால்...." அடுத்ததை கூறாமல் அப்படியே நிறுத்திவிட்டு மகனை கூர்ந்து நோக்கினார்.....

"முடிவு? என்ன முடிவு பண்ணுவீங்க டாடி? சொல்லுங்க?" சத்யன் ஆர்வமாக கேட்டான்... 

"நடந்தவை உன்னோட பர்ஸ்னல்னு நீ நினைச்சா நான் உனக்கு விடை சொல்லமுடியாது சத்யா... என்னைப் பொருத்தவரை இது நமது குடும்பம் மொத்தமும் பாதிக்கக்கூடிய விஷயம் சத்யா?"

"புரியுதுப்பா,, நீங்க சொன்னா நான் புரிஞ்சுப்பேன்" சத்யன் நிதானத்துடன் கூற.....

"ம்ம்" என்றபடி தாடையை தடவிக்கொண்டு விண்ணை வெறித்தவர் "இதுக்கு ரெண்டே வழி தான் இருக்கு சத்யா... ஒன்னு இந்த பெண்ணின் நட்பே... அதாவது உன் பார்வையில் அவள் மீதான காதலே வேணாம்னு எல்லாத்தையும் குளோஸ் பண்ணிட்டு வெளியே வரனும்.... அடுத்து அந்தப் பெண் மீதான காதலை மறந்து... அது முடியாது தான் இருந்தாலும் காதலை மறந்துட்டு நல்ல நண்பனா இருக்க ட்ரை பண்ணு... அவளோட வாழ்க்கையை யோசிச்சு இதைச் செய்தே ஆகனும் சத்யா இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு நடந்தால் தான் அவளோட நிம்மதியும்... உன்னோட வாழ்க்கையும் காப்பாற்றப்படும் சத்யா" தீர்க்கமாக சொல்லிமுடித்தார் அருணகிரி...
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அப்பாக் கூறிய வார்த்தைகளின் அதிர்வு மாறாமல் அப்படியே அமர்ந்திருந்த மகனின் தோளில் தட்டி "அவ சொல்ற மாதிரி நிஜமாகவே திருமணம் ஆனவளா இருந்தால் உன்னால ஒரு பெண்ணின் குடும்ப வாழ்க்கை பாதிக்கக் கூடாது சின்னு... பெண் என்பவள் ஆத்ம சக்தி மகனே... எக்காலமாயினும் அவளை அசிங்கப்படுத்த நினைப்பவன் ஏதாவது ஒரு விதத்தில் அழிஞ்சிடுவான்... யோசிச்சு முடிவு பண்ணு சத்யா" என்று இறுதியாக உறுதியாக கூறிவிட்டு எழுந்து வீட்டை நோக்கிச் சென்றார்.....

அமைதியாக அமர்ந்திருந்த சத்யனை இருள் சூழ ஆரம்பித்ததும் அவனும் எழுந்து வீட்டை நோக்கிச் சென்றான்... ஹாலில் அமர்ந்து தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஹவுஸ் ஓனருடன் பேசிக்கொண்டிருந்தார் அறுணகிரி...

தனது அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டு கட்டில் அமர்ந்தான்... அவனுக்கு எதிரே அவனது லாப்டாப் 'என்னைத் தொட்டு வாரமாகி விட்டது’ என்று வருத்தமாகப் பார்த்தது...

ஒரு முடிவுடன் எழுந்து லாப்டாப்பை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு திறந்தான்...







" மலரினும் மென்மையான...

" மனம் படைத்த என் காதலியே....

" உன்னை மனதுக்குள் புதைத்து...

" மண்மேடாக்க வேண்டுமாம்...

" முடியுமா என்னால்?

" நினைத்தாலே மூச்சு முட்டிப் போகிறதடி...

" முள் தைத்த என் இதயத்தை...

" உன் கவிச்சிறகால் மருந்திடுவாயா மலரே?
இரவு உணவு முடிந்து ஹாலில் படுக்கை விரித்துவிட்டு தகப்பனின் காலடியில் அமர்ந்தாள் மான்சி.... முகம் இறுக படுத்திருந்த அப்பாவைக் கானா நெஞ்சுப் பதறியது...

"என்னப்பா தூக்கம் வரலையா?" பதட்டத்தை மறைத்துக் கொண்டு பதுமையாகக் கேட்டாள்....

மல்லாந்து படுத்திருந்தவர் திரும்பி மகளைப் பார்த்தார் "முன் செய்த வினை முதல் குடிகளுக்குனு சொல்வாங்க.... நான் செய்த வினை உன் தலையில வந்து விடிஞ்சிருச்சேன்னு வேதனையா இருக்கும்மா" என்றவரின் கால்களை பிடித்து விட்டபடி "அதெல்லாம் இல்லைப்பா.... எல்லாம் நானா ஏற்படுத்திக்கிட்டது" என்று சிரித்தாள்.

மகளை உற்று நோக்கிவிட்டு சோர்வுடன் திரும்பிப் படுத்தார்...

"அப்பா இன்னைக்கு ஆபிஸ்ல ஒரு ஜோக்.... உங்க டிபார்ட்மெண்ட் ஜோக் தான்... கேளுங்களேன்... ஒரு அப்பா தன்னோட மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தாராம்.... அப்போ ஒரு மாப்பிள்ளையை தரகர் கூட்டி வந்தாராம்... ‘மாப்ள என்ன வேலை செய்றார்’னு கேட்டாரு அப்பா... அதுக்கு அந்த மாப்ளை ‘ரயில்வேயில் வேலை செய்றேன்’னு சொல்லிருக்கான்.... ‘ரயில்வேலயா? என்ன வேலை மாப்ளை’னு கேட்டிருக்கார் அப்பா.... ‘அதுவந்துங்க ரயில் நிற்கும் போது நான் ஓடுவேன்... நான் நிற்கும் போது ரயில் ஓடும்’னு மாப்ளை சொல்லிருக்கான்... உடனே பொண்ணோட அப்பாவும் ரொம்ப பெரிய உத்யோகம்தான் போலருக்குன்னு நினைச்சி தன் மகளுக்கு நிறைய நகைலாம் போட்டு கார் வாங்கி குடுத்து கல்யாணத்தை முடிச்சாராம்... கொஞ்ச நாள் கழிச்சு மருமகனைப் உத்தியோகத்துல கம்பீரமா பார்க்கனும்ற ஆசைல ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் மருமகன் பெயரை சொல்லி விசாரிச்சிருக்கார்... எல்லாரும் ஒரு பக்கம் கை காட்டிருக்காங்க... அங்க அப்பதான் ஒரு ரயில் வந்து நின்னது... இவரோட மருமகன் காபி கேனை தூக்கிகிட்டு காபி, காபி, காபி னு கத்திக்கிட்டே ஓடி ஓடி காபி வித்திருக்கான்... கொஞ்ச நேரத்துல ரயில் கிளம்பியதும் இவன் ஓட்டம் நின்னுடுச்சு... பார்த்த மாமனாருக்கு மாரடைப்பு வராத குறை தானாம்.... எப்புடி இந்த கதை? இதை கேட்டதுமே எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது அப்பா" என்று கூறிவிட்டு சிதறிய சில்லரையாக சிரித்த மகளைக் கண்டு பத்ரிக்கு புன்னகைக்க முடிந்தது...

"என் ஞாபகமா? ஏன்ம்மா?" என்று மகளை கேட்க....

"அது வந்துப்பா,, நீங்களும் பர்ஸ்ட் வெறும் கேட்கீப்பரா தானே இருந்தீங்க... அதான் என் அழகு அம்மாவை கல்யாணம் செய்ய ஆபிஸர் ரேஞ்சுக்கு எதையாவது சொல்லி கல்யாணம் செய்துகிட்டீங்களோனு தோணுச்சு... அதான் செம சிரிப்பு" என்று மீண்டும் சிரித்தாள் மான்சி...

சிரிப்பின் சாயல் சட்டென்று மறைந்துவிட "நான் எந்த பொய்யும் சொல்லலை கண்ணம்மா... என்னை கல்யாணம் செய்ய உன் அம்மா தான் தான் ஒரு ஏழைனு சொல்லி என் ஊருக்கு வந்து என்னை கல்யாணம் செய்துகிட்டா... அப்புறம் உண்மை தெரிஞ்சதும் "அன்னைக்கு கதையை விடுங்க... இப்போ நான் ஒரு ஏழை தான்... உலகத்துலயே சந்தோஷமான ஏழை நான்தான்னு சொன்னா" என்றவர் மனைவியின் நினைவில் மூழ்கிப் போனார்...

தகப்பனின் கனவுகளை கலைக்க விரும்பாதவளாய் மெதுவாக அங்கிருந்து நகன்று தனது படுக்கையில் வந்து படுத்துக்கொண்டாள்... அப்பாவை சிரிக்க வைக்கும் முயற்சியில் வேதனையை கிளறி விட்டதாகவே தோண்றியது....

இன்றும் உறக்கம் அவளுக்கு இரக்கம் காட்டவில்லை.... சத்யனின் நினைப்பில் சுமக்கும் சோகத்தை தலையணையாக்கிக் கொண்டு உறங்கமுயன்றவளை அவளது நாயகனே வந்து உறங்க விடாமல் படுத்தினான்...

மூடிய இமைகளுக்குள் வந்து இம்சித்தவனை இதயத்தில் சென்று இருக்குமாறு கூறினாள்... சத்யன் தனது காதலைச் சொல்லிவிட்ட சில நாட்களாய் இப்படித்தான் எங்கும் அவன் எதிலும் அவன் என்று எல்லாவற்றிலும் அவளுடன் இருந்து இழப்பின் விகிதத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டிருந்தான்...

சத்யனை ரீத்துவுக்குக் கொடுத்துவிட்டு அதன்பிறகு வாழப்போகும் நாட்கள் இப்போதே மான்சியை பயமுறுத்தத் தொடங்கியிருந்தன... நீ பொய் சொல்றடி என்ற அவனது வார்த்தைகள் எப்போதுமே காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது...

தூக்கம் பிடிக்காமல் புரண்டவள் அதிகாலையே எழுந்து அத்தனை வேலைகளையும் முடித்தாள்... வழக்கம் போல மதிய உணவை கப்பில் அடைத்துக் கொண்டு பத்ரியுடன் வெளியே வந்தவள் "அப்பா ஆபிஸ்க்கு மூணு நாள் லீவு போட்டிருக்கேன்.... ஆனா லீவு போட்டது தெரிஞ்சா சித்தி திட்டுவாங்க... அதான் ஆபிஸ் போற மாதிரியே கிளம்பி ஆக்ரா கோட்டைக்குப் போய் கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு வரலாம்னு இருக்கேன்" என்ற மகளை உற்று நோக்கினார்....

"நடந்துக்கிட்டுருக்க விஷயமெல்லாம் உன்னை பாதிக்காத மாதிரி நீ காட்டிக்கிட்டாலும்.... பாதிப்பு எவ்வளவுனு எனக்குப் புரியும்மா... நீ போய்ட்டு அமைதியா யோசிச்சிட்டு வாம்மா" என்று கூறி மகளை அனுப்பி வைத்தார்.....

எதுவும் பேசவில்லை... அமைதியாக பேருந்து நிலையம் சென்று செல்ல வேண்டிய பேருந்தில் ஏறி அமர்ந்தாள்... அவளுக்கு அமைதியும் அவள் மனதிற்கு திடமும் வேண்டும்... தொடர்ந்து தினமும் சத்யனை சந்தித்தால் அந்த அமைதியும் திடமும் கிடைக்காது என்பதால் தான் இந்த ஓய்வு.....

யமுனா நதிக்கரையில் இருக்கும் தாஜ்மஹாலுக்கு சென்றாள் நதிக்கரையோரம் இருக்கும் பூங்கா மரத்தடியில் அமர்ந்தாள்.... காதலின் சின்னமாக கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹாலின் தோற்றம் யமுனா நதியில் பிம்பமாக விழுந்தது...

பார்க்க பார்க்க பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய உலக அதிசயம் தான்.. உள்ளுக்குள் பல்லாயிரம் அதிசயங்களையும் ரகசியங்களையும் புதைத்துக்கொண்டு புன்னியஸ்தலமாக நிற்கும் தாஜ்மஹாலிலும் அவளுக்கு சத்யன் தான் தெரிந்தான்...
first 5 lakhs viewed thread tamil
Like Reply
காதலர்களின் கண்கள் அப்படி... காணும் யாவிலும் தனது துணை மட்டும் தெரியவைக்கும் காதல் தான் உலகின் முதல் அதிசயம்...

காதலுக்கு சாட்சியாக நிற்கும் தாஜ்மஹாலைப் போல யமுனைக்குள்ளும் ஒரு காதல் கதை புதையுண்டு கிடப்பதை சமீபத்தில் படித்தது ஞாபகம் வந்தது... அந்த உன்னத காதலிலும் தன் உயிர் காதலனையே இருத்தி கனவு கான ஆரம்பித்தாள் மான்சி....

"மும்தாஜ் என்ற முப்பத்தேழு வயது பவுர்ணமி உதிர்ந்துவிட்டதால் ஷாஜகான் எனும் கற்பாறையின் கண்ணிலிருந்து கண்ணீர் நட்சத்திரங்கள் உதிர்ந்துகொண்டிருந்த காலமது....

சிறகுகள் இல்லா பறவையாய் மும்தாஜின் கல்லரை... சிறகிருந்தும் விரிக்க முடியாப் பறவையாக ஷாஜகான்....

அன்று ஷாஜகான் ஒரு கல்லை செதுக்கினார் மும்தாஜ் எனும் சிற்பம் கிடைத்தது... சிற்பம் உடைந்ததும் ஷாஜகான் கல்லானார்....

ஷாஜகானின் நண்பரும் அமைச்சருமான ஆசிப்புக்கு புரிந்தது ஷாஜகான் எனும் கப்பல் மும்தாஜ் எனும் கடலுக்குள் மூழ்கத் தொடங்கிவிட்டது என்று... ஏழு லட்சம் வீரர்களின் தலைவன் பாழும் மண்டமாக காதலியின் கல்லரையே கதியென கிடந்தார்....

மொகலாஜ சிங்கம் உடல் பொருள் ஆவி அத்தனையும் ஒடுங்கிக் கிடப்பதைக் கண்டு ஆசிப்பின் மனம் பதறுகிறது... "ஹொசூர் தங்களின் உடல் நலம் பறிசோதிக்க வைத்தியர் வந்திருக்கிறார்"

ஷாஜகானின் மூடிய விழிகள் திறந்தாலும் அவற்றில் உயிரில்லை... "நண்பனா நீ" சிங்கம் கர்ஜிக்கிறது... 



"நண்பனாய் நீயிருந்தால் வைத்தியனை அல்ல... எனக்கு எமனையல்லவா அழைத்து வந்திருப்பாய்?" ஆசிப் பதிலின்றி திணறுகிறார்

"நண்பா எனக்கான வைத்தியன் அதோ வருகிறான் பார்" மகராஜ் விரல் நீட்டிய திசையில் அனைவரும் நோக்கினர்....

கையில் மாதிரி ஓவியச்சுருளுடன் வந்துகொண்டிருந்தான் ஓவியன் ஹரின்...

"ஆலம்பனா" அழைக்கிறான் இளம் ஓவியன்...

"மும்தாஜின் மஹால்?" என்று ஷாஜகான் கூறியதும் ஹரின் தனது ஓவியங்களை விரித்து அனைவர் கண்களுக்கும் விருந்தாக்கினான்... அசந்து போயினர் அனைவரும்...

ஆனால் அரசர் மட்டும் கண்களை கதவாக்கி மூடிக்கொண்டார் "இது நான்காவது மாதிரி ஓவியம் ஆலம்பனா... இதுவும் சரியில்லையா?" ஹரினின் குரலில் வாட்டம்...

"ஓவியம் அழகாக இருக்கிறது ஹரின்.. மும்தாஜ் அழகாக இருப்பாள்.. ஓவியம் சோகமாக இல்லை... நான் சோகமாக இருக்கிறேன்... என்னையும் மும்தாஜையும் கலந்து ஒர் ஓவியம் தேவை" ஷாஜகான் இதைத்தான் சிந்தித்துக் கூறினார்...

"மும்தாஜ் ஒரு பேரழகி,, அழகை ஓவியமாக்கினேன்... மும்தாஜ் ஒரு மொகலாய ரோஜா.. ரோஜாவை ரோஜாவால் வரைந்தேன்... ஏன் அரசருக்கு அதுப் பிடிக்கவில்லை?" இறகாய் சென்றவன் விறகாய் வீடு திரும்பினான்...

புதுமண வாழ்வு... புது மனைவி திலோத்தி பூக்கூடையுடன் வெளிப்பட்டு பூக்களாய் புன்னகைக்கிறாள்.. விறகு மீண்டும் இறகாகிறது...

திலோத்தியின் கையிலிருந்தப் பூக்கூடை கீழே விழுந்து பூக்கள் சிதறுகின்றன.... திலோத்தி எனும் பதினாறு வயது பாற்கடலை ஹரின் என்ற ஓவியனின் உதடுகள் குடிக்கத் தொடங்கின...

ஹரினின் உதடுகள் விடுதலையானது.. திலோத்தியின் உடல் விடுவிக்கப்படுகிறது.... நீலம் பூத்த மங்கிய இருள் விலகி கண்களுக்கு ஒளி தோன்றுகிறது... ஹரின் துள்ளிப் பரவுகிறான்...

திலோத்தி எரியும் தன் உதடுகளுக்குப் பாலாடை தடவியபடி ஹரினை குறும்பாக நோக்கினாள்.. புரிந்த ஹரின் சிரிக்கிறான்... மீண்டும் மன்மதலீலை சொர்க்கத்தின் கதவைத் தட்டுகிறது..

அப்போது ஒரு ராஜாங்க ஓலை ஓவியனின் வீட்டைத் தட்டுகிறது.. இன்பத்தில் மூழ்கிய தம்பதிகளுக்கு கதவு தட்டும் ஓசை எட்டுகிறது.. ஹரினின் மனம் கதவைத் திட்டுகிறது...

திறந்தான் கதவை... பிரித்தான் ஓலையை... படித்தான் செய்தியை... ஹரின் திகைத்தான் மிரண்டான் பதிறி துடித்த திலோத்தியும் ஓலையைப் படித்தாள்...

மொகலா பேரரசின் அமைச்சர் ஆசிப்பின் கட்டளை... இன்னும் ஒரே ஒரு ஓவியம் தான் வரையலாம்... அந்த ஓவியம் அரசர் மனம் படி அமைய வேண்டும்.. இல்லையேல்... மரண தண்டனை!

இரவு எனும் இன்பத்தேன் மண் தரையில் கொட்டுகிறது... ஹரின் திலோத்தியின் மனதை பயம் எனும் தேள்கள் வந்து கொட்டுகின்றன....

மரண தண்டனை எனும் தீர்ப்பின் அதிர்விலிருந்து மெல்ல வெளியேறிக் கல்லானாள் திலோத்தி...

காதல் - ஹரினுக்குச் சிறகு.. காதல் - ஷாஜகானுக்குப் புதை மணல்... சிறகடிப்பவனுக்கு புதைந்து கொண்டிருப்பவனின் மனோநிலை இமயத்தை விட அதிக தூரத்தில் இருக்கிறதென்பதை திலோத்தி உணர்ந்தாள்...

அரசர் அழகான ஓவியம் கேட்கவில்லை.. சோகமான அழகைக் கேட்கிறாரோ? திலோத்தி திறனாய்ந்தாள்....

அன்று முழு பவுர்ணமி.. அண்ணாந்து கிடந்தான் ஹரின்.. ஹரினின் விரல் நீவினாள் திலோத்தி "அன்பே அரசர் எதைத்தான் எதிர்பார்க்கிறார்?"

எரிந்து விழுந்தான் ஹரின் "மும்தாஜை.. மும்தாஜை ஒரு பிரமாண்டமான கண்ணீர்த் துளியை ஷாஜகானின் இதய வலியை... அவர் அழுத கண்ணீரையெல்லாம் ஒரே சொட்டாக்கினால், அவர் விரும்பும் ஓவியம் வரையலாம் திலோத்தி" ஹரின் குமைந்து கொட்டினான்...

மூன்றாம் நாள் பால் காய்ச்சும் இரவு... திலோத்தி வெள்ளிக் கோப்பையில் பசும்பாலை ஊற்றிக் கொண்டிருந்தாள்... 'அரசர் கேட்பது கண்ணீர் சிந்தும் ரோஜாவை.. அன்பர் வரைவதோ புன்னகை சிந்தும் ரோஜா... அரசர் துயரத்தின் ஆழத்திற்கு இவரால் இறங்க இயலவில்லையோ?' சிந்தனையுடன் மாம்பழத்தை நறுக்கினாள்..

கத்தி பழத்தை அறுக்க.. கண்கள் ஹரினை உற்றுக் கொண்டிருந்தது.. மனம் மஹாலை எண்ணிக் கொண்டிருந்தது... கவனக் குறைவால் கத்தி மெல்ல அவளது கனிந்த விரலை வெட்டிவிட்டது... "ஸ்... ஆ...," அடுத்த நொடி அவளின் விரல் ஹரினின் உதட்டுக்குள்...

திலோத்தி அவனையே நோக்கினாள்.. ஆச்சரியமாய் அதிசயமாய் அடங்காதக் காதலுடன் தனக்காகத் துடிக்கும் அவனையே நோக்கினாள்..

நகக் கண்ணில் தீப்பொறி பட்டதைப்போல் பதறினான் ஹரின்.. திலோத்தியின் மனதிலே ஒரு பொறி புறப்பட்டது...

"ஆலம்பனா" குயில் அழைக்க ஷாஜகான் நிமிர்ந்தார்.. "யாரம்மா நீ?"

"ஓவியர் ஹரினின் மனைவி திலோத்தி நான்" குயில் பேசிற்று... "ஒரு மாத கால அவகாசம் தேவை ஆலம்பனா"

"எதற்கு?" பேரரசர் புருவம் வளைய கேட்டார்...

"மும்தாஜ் மஹால் மாதிரி ஓவியம் வரைவதற்கு"

"ஒரு மாத காலம் அவகாசம் தந்தோம்" சிங்கம் கூறியதும் குயில் சிட்டுக்குருவியாய் மாறி சிறகடித்துச் சென்றது...

திலோத்தி காதல் கடலானாள்... ஓவியன் ஒரு மாத காலமும் காதலாய் கசிந்து உல்லாசியானான்...

காதலின் உச்சி வரை..., இன்பத்தின் சிகரம் வரை... தாம்பத்தியத்தின் எல்லைவரை.. ஹரினை அழைத்துச்சென்றாள் திலோத்தி....

ஓவியப் பலகையில் ஒட்டடைகள் மண்டின... வர்ணக் குழம்புகள் கெட்டிப்பட்டுப் போயின...

ஒருநாள் மாலை வீடு திரும்பினான் ஹரின் "திலோத்தி.... திலோத்தி..." இசையாய் அழைத்தான்...

ஓவியப் பலகை சுத்தம் செய்யப்பட்டிருந்தது.. வர்ணக் குழம்பு தயார் நிலையில்...



அங்கே ஒரு கடிதம் ஊசலாடியது...

"அன்பே சோகத்தின் ஆழம் அந்த சோகத்தின் ஆழம் வரை இறங்குபவரால் தான் உணர முடியும்... ஆலம்பனாவின் நிலைக்கு நீ வர வேண்டும்.. என்னை யமுனைத் தாயிடம் ஒப்படைத்துக் கொள்ளப் போகிறேன்.. என் மரணம் உனக்குள் ஆலம்பனாவின் உணர்ச்சிகளை நிரப்பும்... ஒரே ஒரு ஓவியம் வரை... அது மும்தாஜ் மஹாலை உருவாக்கும்... அழுது முடித்தப்பின் நமக்காக வரை அன்பே... இன்நேரம் இறந்து போயிருக்கும் திலோத்தி...

"திலோத்தி....." திசைகளில் எதிரொளிக்கக் கத்தினான் கதறினான்.. உடைந்தான் ஹரின்.. தூளானான் தூசாகப் பறந்தான்... ஒன்றுமேயில்லாமல் ஒடுங்கிப் போனான்... திலோத்தி அவனுக்கு கடலானாள்.. இவன் கப்பலாக மூழ்கத்துவங்கினான்... 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 12

இப்போது ஷாஜஹானின் வலி ஹரினுக்குள்... அவனால் ஒரு பிரம்மாண்டமான கண்ணீர் துளியை கற்பனை செய்ய முடிந்தது..

வர்ணங்களை ஒதுக்கிவிட்டு கண்ணீரின் நிறத்திலேயே அந்த கண்ணீரை வரைந்தான்...

"அற்புதமான ஓவியம்" ஆண்டுகள் பலவற்றுக்குப் பின் அரசர் உதடு மலர்ந்தார்...

"அவள் எங்கே? ஓவியனின் மனைவி எங்கே? அவள் ஏதோ செய்திருக்கிறாள்... ஹரினை.. ஷாஜஹானாய் மாற வைத்து ஓவியம் செய்திருக்கிறாள்"

அமைச்சர் ஆசிப் நடந்ததை கூறுகிறார்... அதிர்கிறார் அரசர் "என்னது அவள் யமுனையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாளா? அந்த ஓவியன் ஹரின் எங்கே?"

யமுனைத் தாய் ஹரினுக்கு மட்டும் இடமளிக்க மறுத்துவிடுவாளா என்ன? தன் மனைவியைத் தேடி யமுனைக்குள் ஹரினும்" என்கிறார் ஆசிப்...

உலகில் எல்லா நதிகளும் சிரித்துக் கொண்டு ஓடினால்... அழுது கொண்டே ஓடும் நதி யமுனை நதியாகத்தான் இருக்கும்.... கரையில் ஒரு காதல் சின்னமும்... தனக்குள் ஒரு காதல் ஜோடிகளையும் புதைத்துக் கொண்ட யமுனை அழத்தான் வேண்டும்....

( " நன்றி,, பா. விஜய் அவர்களின் பதிப்பிலிருந்து சில வரிகள் ")

இதோ இன்று அதன் கரையில் அமர்ந்திருக்கும் மான்சியும் இன்னொரு திலோத்தி தான்... காதலனுக்காக திலோத்தி தற்கொலை செய்து கொண்டாள்... இவளோ காதலுக்காக தன் மனதை கொலை செய்திருக்கிறாள்.... பெண் என்றாலே தியாகத்தின் ரூபம் தானோ?






" பெண் எனும் பிஞ்சுப் பிரபஞ்சமே....

" அன்பிலிருந்து ஆவேசம் வரை...

" உலகின் அத்தனைக்கும் உன் பெயர்...

" நீ தாயாகப் பிறக்காவிட்டால்...

" கடவுளுக்கு கடமைகள்...

" கழுத்து வரை இருந்திருக்கும்..

" கடவுளால் முடியாததை செய்யும்...

" கருப்பொருள் பெண் தானோ??

மான்சியின் விடுமுறை மொத்தமும் யமுனையின் கரையிலேயே கழிந்தது... கொண்டு வரும் மதிய உணவை புறாக்களுக்கு வீசிவிட்டு மாலை வரை அந்த காதல் சின்னத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பாள்...

ஆயிரம் கதை கூறும் தாஜ்மஹால் இவளுக்கு மட்டும் ஆறுதலைக் கூற மறந்தது... நெஞ்சுக்குள் காதல் தீயாய் வளர்ந்து தேகமெல்லாம் எரிய வைத்தது... பறவையின் சிறகாய் இறகுகள் அடித்துக் கொண்டே இருக்கும் நேசத்திற்கு பதில் தெரியாது விழி நீருக்கு வழிவிட்டு விரக்தியாய் அமர்ந்திருப்பாள்...

இறுதியாக ஓரே ஒரு கேள்வி... "என்னவனை விட்டுக் கொடுத்துவிட்டு இயல்பாய் வாழ என்னால் முடியுமா?" கேள்வி எழும் போதெல்லாம் கண்ணீர் மட்டுமே பதிலாய்...

இதோ மூன்று நாள் விடுமுறையும் முடிந்தது.... அதன் தொடர்ச்சியாக வந்த சனி ஞாயிறு விடுமுறையும் சென்று விட்டது... திங்கள் அலுவலகம் கிளம்பினாள்... பிடிவாதமாய் கணனியில் காத்திருக்கும் காதலனை மறந்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினாள்... செவ்வாயையும் வென்றவளால் புதன் கிழமையை வெல்ல முடியவில்லை...

நெஞ்சம் பூஞ்சிறகாய் மாறி அந்த கம்பியூட்டரில் சென்று ஒட்டிக் கொள்ள... இனி முடியாதென்ற நிலையில் தனது மெயிலைத் திறந்தாள்... நேசத்திற்கு முகவரி கொடுத்தவனைத் தேடியது நெஞ்சம்...

ஒப்புக்குக் கூட ஒற்றை மெயில் வரவில்லை... திடுக்கிட்டது மனம்.... கல்யாணக் கதையை நிஜமென்று நம்பி ஒதுங்கிவிட்டானோ? கண்ணீர் திரையை மறைத்தது... சரி அப்படியே இருக்கட்டும் என்றும் விட முடியவில்லை....

மணி பத்தானது... அவள் பதியாக எண்ணியிருக்கும் சத்யனிடமிருந்து ஒரு மெயில் வந்தது.. உள்ளம் துள்ள.. உடலெல்லாம் பதற... ஏழு நாட்கள் கழித்து வந்த தன்னவனின் வரிகளைப் படிக்க ஆயத்தமானாள்.... 

"அன்பு சிமி,,

முதலில் மன்னிக்கவும்... சில நாட்கள் தகவல் தொடர்பின்றி இருந்ததுற்காக மன்னிக்கவும்....

சற்று உடல்நிலை சரியில்லாததால் உன்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை....

நீ சொன்னவற்றை நம்ப முடியாவிட்டாலும் நம்புவதற்கு முயற்சி செய்கிறேன்...

காதலனாய் வேண்டாம்.. தோழனாக வா என்றாய்... அது என்னால் முடியுமா என்று தெரியவில்லை... ஆனால் முயன்று பார்ப்பதென்று முடிவு செய்துவிட்டேன்..... நீ திருமணம் ஆனவள் என்று ஒதுங்கியிருக்க நினைப்பதைவிட நீ விரும்பாத ஒன்றை உனக்குள் திணிக்க எனது பிறப்பும் வளர்ப்பும் ஏற்கவில்லை என்பதே உண்மை... பெண் என்பவள் ஆத்ம சக்தி... இது என் அப்பா சொன்னது... நானும் அதையே சொல்கிறேன்... நீ ஒரு ஆத்ம சக்தி... ஆறுதல் எனும் பெயரில் உன்னை அழிக்க நினைப்பது என் தவறு தான்... இனி உனக்கு தோழனாய் இருக்க முயற்சி செய்கிறேன்... ஆனால் என் காதல் கல்வெட்டு கடைசிவரை என்னுள் கூடவே இருக்கும்.. உனக்குள் புகுத்த மாட்டேன்....

என்றென்றும் எனது தீராக் காதலைப் புதைத்துக் கொண்டு தோழனாய் நடிக்கக் காத்திருக்கும் நண்பன் (?).

மெயில் முடிந்து போயிருந்தது... ஆனாலும் பார்வை விலகிவில்லை... இப்படிக் காதலிக்கப்பட நான் என்ன புண்ணியம் செய்தேன்... உன் காதலால் புனிதப்படுத்தப்பட்ட நான் பாக்கியசாலி தான்.... ஆனாலும் கொடுத்த வாக்கும் எடுத்து வைத்த அடிகளும் என்னை இறுக வைக்கிறதே எனதன்பு காதலா? கவிதை வரிகளிலும் துயரமாய் வந்தன...

கண்ணீர் விட்டு அழக்கூட முடியாத தன் நிலையை வெறுத்தாள்... தோழனா நீ? முடியுமாடா உன்னால்? ஏழுநாள் பிரிவில் இவ்வளவு தான் முடிந்ததா உன்னால்? நான் என்ன செய்தேன் தெரியுமா? வாழ்ந்தேனடா உன்னுடன் ஏழு நாளும் ஏழு உலகிலும் உன்னோடு சுற்றியலைந்து வாழ்ந்தேனடா... உதடுகளைக் கடித்துக் கொண்டு உள்ளக் குமுறலை அடக்கினாள்...

சுடும் என்று தெரிந்தே நெருப்பில் கை வைக்கும் நிலைமை... சுட்டுவிட்டதும் துடிக்கும் உடலும் மனமும்.... தொன்றுத் தொட்டு வரும் இந்தத் துயரம் காதலுக்குத் தோழனா? தோழியா? இல்லை ஓர் சூலில் வந்த இரு பிறப்போ?

கட்டுப்படுத்த முடியாமல் சாட்டை ஓபன் செய்து "சத்யன்?" என்று காதலனை அழைத்துவிட்டு காத்திருந்தாள்....

அந்த வார்த்தை கடல் கடந்து சென்று அவள் காதலனை அடைய ஒரு நொடி தானா ஆகும்? மறுநொடி பதில் வந்தது "சிமிம்மா?"

சிமிம்மா? நான் தான், நெஞ்சில் அறைந்து கொள்ள எழுந்த கரங்களை அவசரமாக கீபோர்டில் வைத்தாள் வார்த்தைகளை இதயத்திலிருந்து சேகரித்தாள் "எப்படியிருக்கீங்க சத்யா?"

இமைக்கும் நேரத்தில் பதில் அனுப்பினான் "நல்லாயிருக்கேன் சிமி... இத்தனை நாளாய் எனைத் தேடவில்லையா நீ?"

என்ன பதில் சொல்வாள்? அவனுடன் வாழ்ந்த கதையை சொல்வாளா? அவனது காதலில் வீழ்ந்த கதையை சொல்வாளா? பதறும் நெஞ்சை பதப்படுத்தும் வித்தை தெரியாதவள் பாவம்.... "நானும் ஆபிஸ் வரலை சத்யன்... அதனால ஆன்லைனிலும் வரலை... இன்று தான் ஞாபகம் வந்து மெயிலை ஓபன் செய்தேன்...." பொய்தான்... வார்த்தையால் அதிகம் அலங்காரம் செய்தால் பொய்யும் பொய்த்துப் போகும்

மான்சியின் பொய்யும் நிமிடத்தில் பொய்த்துப் போனது... "ஹாஹாஹாஹாஹா நம்பிட்டேன் சிமி,, நீ என்னைத் தேடலைனு நம்பிட்டேன்"

மந்திரம் தான் செய்தானோ... நின்ற விழிநீர் மீண்டும் மழைக்கால ஊற்றாக பெருகியது "உங்க உடம்புக்கு என்னாச்சு சத்யன்?" பேச்சை திசைத் திருப்பும் எளிய முயற்சிக்கு இமயம் போல் கனத்தது இதயம்...

"உண்மை சொல்லவா? பொய் சொல்லவா?" சிரிக்கும் பொம்மையுடன்...

"சூழ்நிலைக்கு எது பொருந்துமோ அதைச் சொல்லுங்கள்" இதுதான் கழுவுற மீன்ல நழுவுற மீன் என்ற கிராமத்துப் பழமொழியோ?

"ஹாஹாஹாஹா,, சூழ்நிலைக்குப் பொருந்துவது எப்பவுமே பொய் தான்... ஆனால் இப்போ நான் உண்மை சொல்லப் போறேன்..." சல்யூட் அடிக்கும் பொம்மையின் படம் கூடவே...

"ம்ம் "

"எனக்கொரு காதலி இருக்கின்றாள்.. அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்,, அப்படின்னு நான் நினைச்ச என் காதலி இன்னொருத்தனுக்கு சொந்தமானவன்னு சொல்லிட்டா... அந்த வேதனை கொடுத்த விரக்தியில் தூக்கம் தொலைஞ்சி போச்சு... தூக்கத்தை வரவழைக்கும் முயற்சியாக நான் தின்ற மாத்திரைகளை மயக்கத்தைக் கொடுக்க காலேஜ்ல எல்லாரும் பயந்து போய் ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி என் அப்பாவுக்கு தகவல் சொல்லி பெரிய கலவரமாக்கிட்டாங்க... பாவம் அப்பாவும் பதறியடிச்சிக்கிட்டு கலிபோர்னியா வந்துட்டார்... இப்போ நான் ஓகே தான்.. என் அப்பாவின் ஆறுதலும் அறிவுரையும் என்னை நிதானப்படுத்தியிருந்தாலும் என் காதலை அசைச்சுக் கூட பார்க்க முடியலை... ஹாஹாஹாஹா மகன் வேற காதலன் வேற... மகன் அன்புக்கு மட்டுமில்லை மற்ற அத்தனைக்கும் கட்டுப் படுவான்.. காதலன் எதற்குமே கட்டுப்பட மாட்டான் காதலைத் தவிர" மிக நீண்ட மெசேஜ்ஜாக வந்த விழுந்தன சத்யனின் வார்த்தைகள்...

இதயம் இருக்கிறதா? அது துடிக்கிறதா? என்று தட்டுத்தடுமாறி நெஞ்சில் கை வைத்துப் பார்த்துக் கொண்டாள்.... முல்லைக் கொடியில் முட்கள் முளைக்குமா? முட்கள் முளைத்து இதயத்தைக் கிழித்துக் கொண்டிருந்து... வழியும் ரத்தமெல்லாம் உப்பு நீராய் மாறி விழிகள் வழியாகக் கொட்டியது...

"ஏன் சத்யன் இப்படி?"

"எப்படி? ஏய் நான் நிஜக் காதலன் சிமி... நீ பொய்யாக இருக்கலாம்... என் காதல் பொய்யாகாது... கல்லரை செல்லும் வரை எனது கவிதாயினியை காதலித்துக் கொண்டேயிருப்பேன்... நீ யாருக்கு வேண்டுமானாலும் மனைவியாக இரு எனக்கு அவசியமில்லை... என் காதலை நான் காதலிக்கிறேன்... இனி இதைக் கூட பேச மாட்டேன்... தோழனாய் மட்டுமே உன் கண்களுக்குத் தெரிவேன்... நேசம் எனக்குள் புதைந்து போகட்டும்" வேக வேகமாக வந்த வார்த்தைகளில் தான் எத்தனை வீரியம்?

தவிப்பும் துடிப்பும் மான்சியை செயலிழக்க வைத்து வேடிக்கைப் பார்த்தது... பூப்போன்ற இதயத்துக்குள் புயலடித்துப் பொட்டலானது போன்றதொரு வரட்சி... நெஞ்சு வரண்டு தொண்டைக்கு நாக்கு ஒட்டிக்கொள்ள தண்ணீர் பாட்டிலைத் தேடியது அவள் கரங்கள்.... நீர் குடித்து நிமிர்ந்தவளுக்குள் 'ஒருவனால் இப்படியும் காதலிக்க முடியுமா?' என்ற கேள்விதான் 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வேணாம் சத்யன்" ஒரு வார்த்தையில் தனது மனதைச் சொல்ல முயன்றாள்...

அவளிடமிருந்து பதில் வர தாமதம் ஆனதும் சத்யனிடமும் நிதானம் வந்திருந்தது "மன்னிச்சிடு சிமி,, கொஞ்சம் எமோஷனாகிட்டேன்"

"ம்ம்,, இப்போ நீங்க எங்க இருக்கீங்க? யார் கூட இருக்காங்க?"

"அப்பா வந்திருக்கார்... என் ரூம்ல தான் இருக்கேன்... காலேஜ்க்கு கொஞ்ச காலம் லீவு போட்டாச்சு.. அடுத்த வருஷம் வந்து படிப்பைத் தொடர சொல்லிருக்காங்க... இன்னும் இரண்டுநாளில் அப்பாக் கூட இந்தியா வரப் போறேன் சிமி"

இன்னும் அதிகமாக அதிர்ந்தாள்...,இவ்வளவு நடந்திருக்கா? அருணகிரி அங்கிள் கலிபோர்னியா போகும் அளவிற்கு சத்யன் பாதிக்கப் பட்டிருக்கானா? துயரப்பட முடியாதளவுக்கு துக்கம் பிரமாண்டமாய் நின்றது...

அவன் நலம் அறியாமல் உறக்கம் வராது "நான் உங்கப்பா கூட பேசனும் சத்யன்"

"என்னது?"

"ஆமாம் சத்யன் உங்கப்பா கூட பேசனும்... வாய்ஸ் சாட் மூலமா பேசனும்" தீர்மானத்துடன் பதில் அனுப்பினாள்...

சற்றுநேரம் சத்யனிடமிருந்து பதிலில்லை... பிறகு "இப்பக்கூட என்கிட்ட பேசனும்னு உனக்குத் தோனலையே சிமி?" வார்த்தைகள் சொன்னது அவனது விரக்தியை....

"ப்ளீஸ் சத்யன்" நிஜத்தில் அழுது அனுப்பினாள் தகவலை...

"ம் சரி எப்போ பேசனும்?"

"இன்னைக்கு ஈவினிங் ஆறரை மணிக்கு பேசுறேன் சத்யன்...."

"சரி அப்பாக்கிட்ட சொல்றேன்"

"ம்... நேரமாச்சு போய் தூங்குங்க சத்யன்"

"தூங்குறேன்... அதுக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்வி"

"கேளுங்க"

"நீ சொன்னது பொய் தானே சிமி?"

அவனது நேசத்தைக் கண்டு கோபம் தான் கொந்தளித்தது "நிஜம் சத்யன்.. சொன்னது நிஜம்... நான் ஜீவனாய் சுவாசிக்கும் என் தாய் மீது தாய்க்காக எழுதும் கவிதைகள் மீது சத்தியம்... நான் திருமணம் ஆனவள்... என்னை உயிராய் நேசிக்கும் புருஷன் இருக்கார் சத்யன்... அவரோட உன்னதமான வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்... அவரின் அடையாளம் என் கழுத்தில் தாலியாக.... எல்லாம் நிஜம் சத்யன்" மெசேஜ்ஜை அனுப்பியப் பிறகும் மான்சியால் நிதானப்பட முடியவில்லை....

வெகுநேரம் கழித்து "ஓ..... சரி சிமி,, குட்நைட்... காலை சந்திப்போம்" என்ற பதிலுடன் ஆப்லைன் போனான் சத்யன்...

மீண்டும் தண்ணீர் குடித்து கண்ணீரை அடக்கினாள்.... நான் தேவியின் மகள் சத்யா.... உபகாரம் மட்டுமே தெரியும்... உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்....


“ உன் சேலை வாசம்

“ மறக்கவும் இல்லை..

“ நீ கொஞ்சிய நாட்கள்

“ என் நெஞ்சம் விட்டு

“ நீங்கவும் இல்லை...

“ இன்றும் வாடுகிறேன்

“ இன்னும் தேடுகிறேன்

“ என்னை மறந்து..

“ எங்கே சென்றாய் அம்மா?

“ இமயம் போன்ற இடர்கள் வந்து...

“ இதயத்தை நொறுக்குகிறதே அம்மா...

“ என்னுயிர் காக்க இன்னுயிர் தந்த தாயே...

“ துயர் தீர வழித் தெரியவில்லை...

“ மீண்டும் குழந்தையாக மாற்றி

“ துன்பம் தீண்டா உலகுக்கு....

“ உன் தோளில் சுமந்து சென்றுவிடேன்...
[color][font]

சத்யனின் அப்பாவிடம் பேசுவதாக சொல்லிவிட்டாள், ஆனால் உள்ளுக்குள் உதறலெடுத்தபடியே தான் இருந்தது..... ஐந்து மணிக்கெல்லாம் அவசர அவசரமாய் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டாள்... அலுவலகத்தில் இன்னும் பரபரப்பு அடங்காததால் நகத்தைக் கடித்தபடி பதட்டமாக அமர்ந்திருந்தாள்....

எம்டி கிளம்பிச்சென்ற அரைமணி நேரத்தில் மற்ற ஊழியர்களும் வேலை முடிந்து ஒவ்வொருத்தராக கிளம்பினர்.... இன்னும் தனது வேலை முடியாதது போல் பாவனை செய்து கொண்டு அமர்ந்திருந்தாள்....

மணி ஆறானது... அலுவலகத்தில் சந்தடிகள் அடங்கியது...... ஆயிரம் தெய்வங்களை துணைக்கழைத்தபடி ஆன்செய்தாள்... திரை திறந்து கொண்டது...... அரட்டைப் பகுதியை திறந்து அவளின் ஆத்மாவைத் தேடினாள்....

பச்சை விளக்கு ஒளிர தயாராக இருந்தான் சத்யன்.... இப்போது அவனது நேரம் அதிகாலை நான்கு முப்பது என்று தெரியும்... இந்த நேரத்தில் விழித்திருந்து காத்திருக்கும் அவனை நினைக்கையில் இதயத்தில் ஈரம் கசிய ஆரம்பித்தது.... "ஹாய் சத்யன்" என்று எழுதியனுப்பினாள்....

அடுத்த நொடி பதில் வந்தது "வந்துட்டியா சிமி?"

அந்த வந்துட்டியா என்ற வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி? உள்ளுக்குள் போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது... "ம்ம்" என்று இவள் சொன்னதும்...

"இந்த ம்ம்,, நீ சொன்னா மட்டும் எவ்வளவு அழகா இருக்கு சிமி"......

நக்கலடிக்கிறான் என்று தெளிவாகப் புரிந்தது.... "உங்க அப்பா இருக்காங்களா?"

"ம் இருக்கார்.... கொஞ்சநேரம் நாம பேசிட்டு அப்பாவை கூப்பிடலாம்னு நினைச்சேன்" அசடு வழியும் பொம்மையுடன் வந்தது செய்தி....

"இல்ல எனக்கு ஆபிஸ் குளோஸிங் டைம்... சீக்கிரமா பேசிட்டு கிளம்பனும்"

"ஓ...... சரி சரி... ஆனா அப்பாகிட்ட என்ன பேசப்போற சிமி?"

"அதை அவர்கிட்ட சொல்றேன்.... "

"யப்பா ரொம்ப கரார் பேர்வழியா இருக்கயே?"

"...........?"

"ஓகே ஓகே... டாடிய வரச்சொல்றேன்... நீ வாய்ஸ் சாட் ஆன்பண்ணு சிமி" என்றவன் வாய்ஸ் சாட்க்கு ரிக்வெஸ்ட் அனுப்பினான்....

உடனடியாக அக்சப்ட் செய்துவிட்டு மைக்ரபோனுடன் கூடிய ஹெட்போனை எடுத்து காதில் மாட்டிக்கொண்டாள்....

தனது ரசனைக்குரிவள் சிமியின் குரலை கேட்கப்போகிறோம் என்று சத்யனுக்குள்ளும்.... தனக்காக ஒருவன் தரணியில் பிறந்திருக்கிறானே அவனின் குரல் கேட்கப்போகிறோம் என்று மான்சிக்குள்ளும் ஒரே சமயத்தில் சிலிர்ப்பு ஓடிய அந்தத் தருணம்....... இருவரின் மனதுக்குள்ளும் குறிஞ்சிப் பூத்தத் தருணம்....

முதலில் அழைத்தது சத்யன் தான் "சிமிம்மா" என்ற அந்தக் குரல் கூறிய நேசத்தை குறை கூறவே முடியாதே....

பதில் கூற வார்த்தையின்றி பரிதவித்தாள்.... வார்த்தையின் கம்பீரம் அவளின் இதயத்தை கசக்கியெடுத்தது....

மீண்டும் அவனது நேசக்குரல் சாமரம் வீசுவது போல் "சிமி பேசு ப்ளீஸ்" என்று அழைத்தது....

மான்சி பேசவில்லை.... டைப் செய்தாள் "உங்க அப்பாவிடம் மட்டுமே பேசுவேன்... அவரை கூப்பிடுங்கள் சத்யன்"

"உன் நெஞ்சை கல்லாலயா செய்தாங்க?" என்று பேசியவன் "சரி நீ இரக்கமில்லாதவன்னு தான் ஏற்கனவே தெரியுமே.... இரு டாடியை கூப்பிடுறேன்" என்றான்....

உருண்டு வந்த விழிநீரை இமை மூடி உதிரவிட்டாள்.... தனது கைக்குட்டையை எடுத்து ஹெட்போனிலிருந்த மைக் மீது சுற்றினாள்.... அருணகிரி இவளின் குரலை அடையாளம் காணக் கூடாதே.... அவர் காணாவிட்டாலும் சத்யன் இதை ரெக்கார்ட் செய்தால் அதுவும் என்றாவது ஒருநாள் தன்னைக் காட்டிக்கொடுத்துவிடுமே?

சற்றுநேரம் பொறுத்து "நான் சத்யனோட அப்பா பேசுறேன்" என்ற அருணகிரியின் குரல் வந்தது....

"ம்,, நான் சத்யனோட தோழி சிமி... சிவாத்மிகா பேசுறேன் அங்கிள்" சத்யன் அவளுக்கு வைத்தப் பெயரையே அவனது தந்தைக்குச் சொன்னாள்....




"ம்.. நல்லது... ஏதோ பேசனும்னு சொன்னீங்களாம்?"

"ஆமாம் அங்கிள்..... பக்கத்துல சத்யன் இருந்தால்... கொஞ்சம் வெளியேப் போகச் சொல்லுங்க... நான் உங்ககூட தனியாக பேசனும்"

"சரிம்மா" என்றவரின் குரல் பக்கத்திலிருந்த சத்யனிடம் பேசுவது கேட்டது.... பிறகு "ம் சொல்லும்மா"

"அங்கிள்,, இப்போ சத்யன் எப்படியிருக்கார்? என்னதான் ஆச்சு?"

"தெரியலைம்மா,, போன வாரத்துல ஒருநாள் இவன் காலேஜ்ல இருந்து கால் பண்ணி சத்யன் சூசைட் அட்டம்ப்ட் பண்ண ட்ரை பண்ணிட்டான் உடனே கிளம்பி வாங்கன்னு சொன்னாங்க... நானும் கிளம்பி வந்தேன்... வந்து விசாரிச்சதுல தூக்க மாத்திரைக்கள் போட்டுக்கிட்டு க்ளாஸ் ரூம்லயே மயங்கி விழுந்திருக்கான்.. காலேஜ் நிர்வாகம் பயந்துட்டு என்னை வரவழைச்சிருக்காங்க... நான் பார்க்கும் போது ஆஸ்பிட்டல்ல தான் இருந்தான்... ஆபத்தில்லைனு சொன்னாலும் நீங்க இந்தியா கூட்டிப் போயிடுங்க... சில கவுன்சிலிங் பிறகு வந்து ஸ்டடியை கண்டினியூ பண்ணட்டும்னு கல்லூரி நிர்வாகம் சொல்லிட்டாங்க... அவன் தங்கியிருக்கும் வீட்டுக்காரங்களும் காலி பண்ண சொல்லிட்டாங்க... இன்னும் ரெண்டுநாள்ல இந்தியா கிளம்பி வர்றோம்" என்று தனக்குத் தெரிந்ததை எதையும் மறைக்காமல் அப்படியேச் சொன்னார் அருணகிரி.....

மறுபடியும் கேட்ட சத்யனின் காதல் சரிதம் மான்சியை கலங்க வைத்தது "சத்யனோட பியூச்சரே போயிடுச்சே" என்று கலங்கிய குரலில் கூறவும்...

"அப்படிச் சொல்லிட முடியாதும்மா.... படிப்பு முடிய ஒரு வருஷம் தாமதமாகும் அவ்வளவு தான்.... ஆனா சத்யனோட இந்தப்பிரச்சனை?" என்று மேலே கூறாமல் நிறுத்தினார்....

"ம்ம்... நான்தான் காரணம்னு தெளிவா புரியுது அங்கிள்.... உங்களுக்கு எவ்வளவு தெரியும்னு தெரியலை.... ஆனா நான் தெரிஞ்சே எதையும் செய்யலை அங்கிள்... நீங்க நம்பனும்" கலங்கிய குரலை திடப்படுத்த முயன்று தோற்றுப் போனாள்...

"இதுல நம்புறதுக்கு எதுவுமில்லைம்மா..... சத்யன் எல்லா விஷயமும் சொல்லிருக்கான்.... ஆனால் திருமணம் ஆனப் பெண்ணை என் மகன் விரும்பியிருப்பான்னு எனக்கு இன்னும் நம்பமுடியலைம்மா" என்ற அருணகிரியின் வேதனைக் குரல் அவளின் இதயத்தைப் பிசைந்தது 
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Nice bro
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 13

இந்த நம்பிக்கையை நான் உடைக்க வேண்டுமா? வேறு வழியில்லை ஒன்று அழிந்து தான் இன்னொன்று உருவாகவேண்டும்... எனது குடும்பம் உருவாக அழிவது என் காதலாக இருக்கட்டும்... "சத்யன் சொன்னது நிஜம் தான் அங்கிள்.... ஆனால் நான் இதை எதிர்பார்க்கலை.... நட்பு எந்த இடத்துல காதலா மாறிச்சுனு இன்னும் புரியலை அங்கிள்... ரொம்ப குற்றவுணர்வா இருக்கு..... என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்.... இப்போ நீங்க என்ன சொல்றீங்களோ அதைச் செய்ய நான் காத்திருக்கேன் அங்கிள்" கெஞ்சுதலாய் கேட்டாள்....

அருணகிரியிடம் சற்றுநேரம் அமைதி.... பின்னர் "நான் என்ன சொல்றதுனு புரியலைம்மா.... அவன் முதல்ல கேட்டப்பவே நீ கல்யாணம் ஆனவன்னு சொல்லியிருந்தா அவன் உன்னை விரும்பியிருக்கவே மாட்டான்.... விரும்பினதுக்குப் பிறகு அதை மாத்திக்கவும் அவனால முடியலை.... மறுபடியும் நல்ல நண்பர்களா பழக உன்னால் முடியும்.... ஆனா சத்யனால முடியுமானு தெரியலை..... ஒரு விஷயத்தை உறுதியா சொல்வேன்... அடுத்தவன் மனைவின்னு தெரிஞ்சப் பிறகு அவனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது... அதுமட்டுமில்லாம எங்க குடும்ப நண்பரோட மகளை சத்யனுக்கு கல்யாணம் பேசியிருக்கோம்.... அதை சொல்ல நினைச்சப்ப தான் இந்த மாதிரிலாம் நடந்துடுச்சு... இப்போ இந்தியா போனதும் முதல் வேலையா இவனுக்குப் புரிய வச்சு கல்யாணத்தை முடிக்க வேண்டியது தான்" நம்பிக்கையோட அருணகிரி பேசியதும்...

தனது நேசம் வந்து நெஞ்சில் அறைய.... கண்ணீர்க் குரலை கடுமைக்கு மாற்றி... "ரொம்ப சந்தோஷம் அங்கிள்... இப்போ நான் என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க" என்று கேட்டாள்....

"நீ என்ன செய்ய முடியும்ன்னு எனக்குத் தோனலை... முடிஞ்சா சத்யனை மாத்தப் பாரு... அவனை அசைக்கக்கூடிய விஷயம் ஒன்னே ஒன்னு தான்.... சத்யன் இப்படியே இருந்தா உன்னோட குடும்ப வாழ்க்கை பாதிக்கும்னு சொல்லு.... அப்படி பாதிக்கும் பட்சத்தில் நீ உயிரோடவே இருக்கமாட்டேன்னு அவனுக்கு சொல்லு.... தன் உயிரை விட உன் உயிருக்கு அதிக மதிப்பு கொடுப்பான்னு தோனுது... இது சுயநலம் தான்... ஆனா ஒரு தகப்பனா எனக்கு வேற வழி தெரியலைம்மா" அருணகிரியின் குரலில் கண்ணீர்....

"ம்,, புரியுது அங்கிள்.... நிச்சயம் சொல்றேன்... இந்தியா திரும்பும் போது சத்யன் கிட்ட ஓரளவுக்கு மாற்றம் தெரியும்" என்றாள்....

"ரொம்ப நன்றிம்மா....."

"பரவாயில்லை அங்கிள்.. என்னால் ஏற்பட்ட பிரச்சனையை நான்தான் தீர்க்கனும்.... அப்புறம் ஒரு விஷயம்,, இந்த வாய்ஸ் சாட்டை சுத்தமா அழிச்சிடுங்க...." 




"நிச்சயம் அழிச்சிடுறேன்ம்மா..... ஒரு விஷயம் கேட்டா தப்பா நினைக்க மாட்டியேம்மா"

"கேளுங்க அங்கிள்"....

"சத்யன் விரும்புறான் சரி... உன் மனசுல அந்த மாதிரி சலனம் எதுவுமில்லையே?"

மான்சியின் மனம் பதறியது.... என்ன சொல்வது? "இல்லை அங்கிள்... நானும் தமிழ் பொண்ணு தான்.. தாலி கட்டிய கணவனைத் தவிர மற்றொருவனை நேசிக்க மாட்டேன்.... இந்த நிமிஷமே சத்யனோட எந்த தொடர்பும் இல்லாம விலகச் சொன்னாலும் நான் தயார்" என்று அமைதியாக அறிவித்தாள்

"இது போதும்மா..... இது போதும்... நீங்க நண்பர்களா இருக்க நான் தடை சொல்ல மாட்டேன்.. நட்பை மதிக்கிறவன் நான்... ஆனா சத்யன் மாறவில்லை.. அவனை மாற்ற முடியவில்லைன்னா... அவன் விஷயமா உன்னோட இந்த மெயிலுக்கு நான் மெசேஜ் செய்யலாமா?".

"தாராளமா மெசேஜ் பண்ணுங்க அங்கிள்" என்றவள்... ஒரு நீண்ட மூச்சுடன்.... "ஓகே அங்கிள் நான் வீட்டுக்கு கிளம்பனும்..." என்றாள்..

"சரிம்மா நல்லபடியாக போம்மா... எல்லாம் சரியாகும்" என்றார்...

"பை அங்கிள்" என்றுவிட்டு ஹெட்போனை கழட்டிவிட்டு சாட்டை குளோஸ் செய்து கம்பியூட்டரை ஆப் செய்தாள்....

மகன் விரும்பும் பெண்ணிடம் இத்தனை மரியாதையாக பேசும் அருணகிரியின் உயர்ந்த குணம் புரிந்தது... இவர்களுக்கு மருமகளாகப் போகும் ரீத்து புண்ணியம் செய்தவள் தான்.... நான் பாவம் செய்தவள் போல... அன்பு காட்டிய தாயும் அல்பாயுசில் போய்விட்டாள்... தாயைப் போல வந்தவனையும் தானாக ஒதுக்க வேண்டிய நிலைமை.....

அருணகிரியிடம் பேசியதில் மனதுக்கு அமைதி கிடைத்தது... தவிப்பெல்லாம் போய்விட்டு விரக்தி நிலைக்கு சென்றுவிட்டாள்....

அம்மாவின் கவிதைகள் தரும் ஆறுதல் மட்டுமே என் ஆயுட்காலத்துக்கும் போதும் என்று ஆண்டவன் முடிவு செய்துவிட்டான் போலிருக்கு...




“ பூக்கள் கூட புன்னகைக்கும்

“ புராணகாலத்தில்...

“ சூரியனை உதிக்காமல் தடுத்தாள்..

“ நளாயினி!

“ எமனிடமிருந்து கணவனை காத்தாள்...

“ சாவித்திரி!

“ நீ உயிர் துறக்கும் போது....

“ அப்படி எதுவும் நிகிழவில்லையே ஏன்?

“ எனக்கு சக்தியிருந்திருந்தால்

“ உலகையே அழித்து....

“ உன்னை மட்டுமே...

“ உயிர்த்திருப்பேன் அம்மா!
சிமியிடம் பேசி முடித்தப் பிறகு வாய்ஸ் சாட்டை சுத்தமா அழித்துவிட்டு சிமியின் மெயில் ஐடியை மட்டும் குறித்துக் கொண்டார்.... அதிகாலை குளிரில் தோட்டத்தில் உலவிய மகனைத் தேடிச் சென்றார்...

இவரைப் பார்த்ததும் வேகமாக வந்தவன் "பேசிட்டீங்களாப்பா? என்ன சொன்னா?" ஆர்வமாய் கேட்டான்.

அருகே வந்து மகனை தோளோடு அணைத்தவர்.... "அந்த சிவாத்மிகா ஒரு கல்யாணமாகாத கன்னிப் பெண்ணாய் இல்லாமல் போனது நம்ம குடும்பம் செய்த துர்பாக்கியம் தான் சத்யா... அற்புதமான பெண்.... நீ எப்படியாவது போன்னு சொல்லிட்டு ஒதுங்காம.. பிரச்சனையை எப்படித் தீர்ப்பதுன்னு துணிச்சலோட என்கிட்டயே பேசினாப் பாரு... நிஜத்தில் இவள் சாத்வீகம் தான்...." என்று பெருமையாகப் பேசியவரை குழப்பமாக நோக்கியவன்.... "அப்படின்னா......?" என்று கேட்க...

"ம்ம்,, உன்னிடம் சொன்னதெல்லாம் நிஜம்தான் சத்யா.... நீ இப்படி மாறியதற்கு ரொம்ப வருத்தப்படுறா... உன் வாழ்வில் நல்லது நடக்கனும் ஆசைப்படுறா.. அதே சமயம் உன்னால் அவள் குடும்ப வாழ்விற்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாதுன்னும் பயப்படுறா" என்று மகனுக்குத் தெளிவுப் படுத்தினார்

"என்னால் சிமியோட லைப் பாதிக்குமா?" கலங்கிப் போய் கேட்டான்...

"ஆமாம் சத்யா,, நீ இப்படி மாறாமல் இருந்தால் நிச்சயம் சிமியோட லைப் பாதிக்கப்படும்... நீ மாறனும்... நாம் நேசிக்கிறவங்களை நல்லா வாழ வச்சுப் பார்க்கிறதும் உண்மையான நேசம் தான்.... அந்த அற்புதப் பெண்மைக்கு ஒரு ஆத்மார்த்தமான நண்பனா இருக்கனும் சத்யா..." என்றவர் மகனின் முன்பு தனது வலக்கையை நீட்டினார் "சத்தியம் செய் சத்யா... உன்னால் சிவாத்மிகாவோட லைப்ல எந்தப் பிரச்சனையும் வராதுன்னு சத்தியம் செய் சத்யா" என்று உறுதியாகக் கேட்டார்....

"என்னை நம்பலையாப்பா?" கலங்கிய விழிகளுடன் கேட்டான்.........

"என் மகனை நம்புறேன் சத்யா... ஆனா நீ இப்போ காதலால் கருத்தை இழந்தவன்... காதலனுக்கும் காதலுக்கும் விதி செய்ய முடியாது... ம் அந்தப் பெண்ணின் வாழ்வு பாதிக்கது என்று சத்தியம் செய்" இதுவரை அமைதியாகப் பேசியவர் இப்போது மகனிடம் அதட்டலாக கேட்டார்..

சத்யனுக்கு ஒரு மாதிரி இம்சையாக இருந்தது..... எதிரில் நிற்கும் அப்பா அன்னியமாகத் தெரிந்தார்... அவர் கூறும் நியாயத்தை அறிவு ஏற்றாலும் காதல் கொண்ட இதயம் ஏற்க்கவில்லை... சத்தியம் செய்யாமலும் விடமார் போலிருக்கு... தகப்பனின் கையில் தன் கையை வைத்தான் "என்னால சிமியோட குடும்ப வாழ்க்கைக்கு ஒரு பாதிப்பும் வராதுப்பா... நிச்சயம் அவள் நலன் விரும்பும் நல்ல நண்பனா இருப்பேன்" உறுதியாக கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றான்

மகன் செய்த சத்தியம் அருணகிரியை கொஞ்சம் சாந்தப்படுத்தியது... இந்தியா சென்றதும் பத்ரியின் மகளைப் பற்றிச் சொல்லி சீக்கிரமாகவே திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனதுக்குள் உறுதியெடுத்தார்....

மறுநாள் காலை சிமியிடம் பேச சத்யன் முயன்ற போது அவளிடமிருந்து "ஹாய் சத்யா,, ஆபிஸ்ல அதிகமான வேலை,, இன்று உங்களிடம் பேச நேரமில்லை... நாளை பேசலாம்" என்ற தகவல் மட்டும் மெயிலில் வந்திருந்தது... சத்யனின் மனம் சோர்ந்தது.... பச்சை மரத்தில் அடிக்கப்பட்ட ஆணியாக மனதில் பதிந்தவளை தவிர்க்கவேண்டிய நிலைமை.... வேறு வழியில்லையா??
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அன்றும் மறுநாளும் இந்தியா செல்வதற்கான ஆயத்தப் பணிகள் சரியாக இருந்தது..... அன்று இரவு விமானத்தில் சார்ஜா சென்று அங்கிருந்து இந்தியா செல்லவேண்டும்.... அதற்குள் ஒருமுறையாவது மான்சியிடம் பேசிவிடவேண்டும்....

மெயிலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான்.... இந்திய நேரப்படி மாலை ஐந்து நாற்பதுக்கு மான்சி வந்தாள் "ஹாய் சத்யா" என்ற வழக்கமான வார்த்தையுடன்....

"ம் இருக்கேன் சிமி" சத்யனின் வரிகளில் உயிர் பிரியும் அவஸ்த்தை....

"ஹேப்பி ஜர்னி சத்யா... வெல்கம் ட்டூ இந்தியா" முதன்முறையாக சிரிக்கும் பொம்மையுடன் கூடிய மான்சியின் உற்சாகமான வரிகள்....

"என்னை மிஸ் பண்ணப் போறதா உனக்குத் தோனவே இல்லையா சிமி?"...

"ஏன் மிஸ் பண்றேன் சத்யன்? நீங்க இந்தியா தானே வர்றீங்க? வந்ததும் செட்டிலாக சில நாட்கள் ஆகும்... மத்தபடி மீண்டும் எனது கவிதைகளின் ரசிகனா உங்களை வரவேற்க காத்திருக்கேன்"

"ம்ம்,, ஆனா இந்தியா போனதும் உன்னை மிஸ் பண்ணுவேன்னு எனக்கு வேதனையா இருக்கு சிமி"

"என்ன சத்யன் இது? அப்படியே மிஸ் பண்ணாலும் ஏன் வேதனைப்படனும்? இது ஆன்லைன் சத்யன்... நட்புக்கும் நம்பிக்கைக்கும் உத்திரவாதம் தரமுடியாத ஆன்லைன்.... இங்க போய் பிரிவு வேதனைனு பேசுறது அபத்தம்.... சில நாள் வலியிருக்கும் தான்... அப்புறம் உங்களைவிட நல்ல ரசிகன் கிடைச்சா நான் மாறிடுவேன்.... என் கவிதைகளை விட அழகான கவிதை கிடைச்சா நீங்க மாறிடுவீங்க... இதுதான் இங்கே நிஜம்.... அதனால நல்லபடியா இந்தியா வாங்க சத்யன்... மத்ததையெல்லாம் பிறகுப் பார்க்கலாம்" என்ற மான்சியின் வரிகளில் ஒரு இடத்தில் கூட சோர்வில்லை சுனக்கமில்லை.... வெகு நிதானமாக இருந்தன.....

சத்யன் அமைதியாக அமர்ந்திருந்தான்... சிமியின் வரிகளை பலமுறைப் படித்தான்.... இதற்கு மேல பேச்சை வளர்த்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் போய் முடியும்... அப்புறம் நாடு திரும்பியதும் அவள் வராமலேக் கூட போய்விடலாம்.... "ம் சரி சிமி.... இந்தியா வந்ததும் தொடர்பில் வர்றேன்... இப்போ நான் ரெடியாகனும்... பை சிமி" என்று எழுதியனுப்பினான்.......

"சரி சத்யன் நல்லபடியா கிளம்புங்க... இந்தியா வந்ததும் முடிஞ்சா ஒரு மெசேஜ் போடுங்க சத்யன்.. பை" என்று கூறிவிட்டு இவளும் அவனும் ஒரே சமயத்தில் ஆப்லைன் போயினர்....

அப்பாவுடன் கிளம்பி விமானத்தில் ஏறியும் கூட விடாமல் துரத்தியது சிமியின் வரிகள்... நிஜமாவே அவள் திருமணம் ஆனவள் தானா? வழக்கமான இறுதி கேள்வியுடன் கண்மூடினான்.....



" நானும் நல்லது நடக்கத்தான் விரும்புகிறேன்....

" உன் மீதான நேசம் என்னை பொல்லதவனாக்கி...

" என்னை எனக்கே விரோதி ஆக்குகிறதே!!
ஆக்ராவின் சுமாரான இரண்டு நட்சத்திர விடுதியின் பார்ட்டி ஹால் ஒன்றில் மதனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தது... நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் பார்ட்டிக் கொடுக்கும் அளவிற்கு மதன் ஒன்றும் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைக் கிடையாதுதான்... அப்படியிருந்தும் பார்ட்டி கொடுக்கிறான் என்றால்.... அது அவன் காதலி ரீத்துவுக்காகத் தான்....

ரீத்து,, அவன் வாழ்வில் வீசப்பட்ட காதல் ஆந்த்ராக்ஸ்..... வீசப்பட்ட மறுநிமிடமே மெத்தமும் பரவி அவனது சிந்தனையை பழுதடைச் செய்திருந்தது......

ரீத்துவின் அலட்சியமும் வெளிப்படையான பேச்சும் நிமிர்வும் நிதானமுமே மதனை அவளிடம் வீழ்த்தியிருந்தது... அவளுக்கு ஆடம்பரம் பிடிக்கும் என்பதால் தனது தாயிடம் மன்றாடி பணம் பெற்று பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தான்.....

நண்பர்கள் புடைசூழ ஜிகினா காகிதங்கள் பறக்க கேக் வெட்டி முதல் துண்டை எடுத்து ரீத்துவுக்கு ஊட்டினான்... அவளும் ஒரு துண்டு கேக்கை எடுத்து அவனுக்கு ஊட்ட... கூட்டம் கரகோஷம் செய்தது... பீர் பாட்டில்கள் ஓபன் செய்ப்பட்டு நுரையை நண்பர்களின் மேல் பீய்ச்சியடித்துக் கொண்டனர்... மியூசிக் அதிர ஆரம்பிக்க... துணைகளின் இடையை வளைத்து நடனம் ஆரம்பம் ஆனது...

தனித்தனியாக... ஜோடிகளாக.... ஆங்காங்கே நடனமாடத் தொடங்கினர்... மெல்லிசை ராப் ஆக மாற.... அத்தனை பேரும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர்..... மதன் ரீத்துவை நோக்கித் தனது கையை நீட்ட... புன்னகையுடன் பற்றிக்கொண்டாள்... அவர்கள் நெருக்கமாக நடனமாட ஆரம்பித்ததும் மதனின் நண்பனிடம் இருந்த கேமிரா அவர்களை ஆவலுடன் பதிவு செய்தது...

ரீத்துவின் அருகாமை மயக்கத்தைத் தர மதன் மயங்கினான்.... அவளின் இடைப்பற்றியவன் இறுக்கியணைக்க... ரீத்துவும் எதிர்ப்பின்றி அனுமதித்தாள்..... நண்பர்கள் அனைவரும் கத்தி கூச்சலிட்டப்படி "மதனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் கிப்ட் குடு ரீத்து" என்றனர்

மதன் சிரிப்புடன் ரீத்துவைப் பார்க்க... "என்ன வேணும் மதன்?" என்று ஒரு மகாராணியின் தோரணையுடன் கேட்டாள் ரீத்து...

ஒன்றும் சொல்லாமல் தன் உதடுகளின் மேல் விரல் வைத்து கண்சிமிட்டினான் மதன்.... "ச்சீ நாட்டி" என்று அவன் தலைமுடியை கலைத்து விளையாடியவள் அவன் கழுத்தில் கைப்போட்டு தன் பக்கமாக இழுக்க... நண்பன் கையில் இருந்த கேமிரா சுறுசுறுப்பானது....

இளம் காதலர்களின் இனிக்கும் முத்தம்... அத்தனை பேரின் முன்பும் துணிச்சலாக மதனின் உதடுகளை கவ்வினாள் ரீத்து..... சில நிமிடம் அவளுக்கு விட்டுக் கொடுத்த மதன்... அதன்பிறகு அவளின் இதழ்களை தனதாக்கிக் கொண்டான்....

நண்பர்கள் அத்தனை பேரும் அந்த அற்புதமான முத்தக்காட்சியை தங்களின் மொபைல்களில் பதிவு செய்துகொண்டனர்

அதன்பின் பார்ட்டி முடியும் வரை மதன் ரீத்து இருவரின் நெருக்கமும் விலகவேயில்லை... முதல் முத்தத்திற்குப் பிறகு முத்தமும் முற்று பெறாமல் தொடர்கதையாகப் போனது....

இரவு ஒன்பது மணி சுமாருக்கு ஓவராய் குடித்தவர்கள் வாந்தியும் மயக்கமுமாக சரிந்தனர்.... நிதானத்தில் இருந்த மற்ற நண்பர்களிடம் அவர்களை ஒப்படைத்து விட்டு ரீத்துவுடன் வெளியேறினான் மதன்.....

நண்பனின் காரை இரவல் வாங்கி வந்திருந்தான் தன் காதலிக்காக.... "வா ரீத்து உன்னை வீட்டுல டிராப் பண்றேன்" என்றான்....

"ஏய் என்ன அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சதா? நான் இன்னும் சாப்பிடலைடா" என்று அவன் தோளில் சரிந்து செல்லம் கொஞ்சியவளை நிமிர்த்தி....

"சாப்பிடலைனா பரவால்ல ரீத்து... உன் வீட்டுல போய் சாப்பிட்டுக்க... இப்போ டைம் ஒன்பதுக்கு மேல ஆகிடுச்சு.... உன் அக்கா மான்சி வெயிட் பண்ணுவாங்க" என்று மதன் சொல்லவும்...

"ஓய் மதன்,, நானே என் அக்காவுக்கு பயப்பட மாட்டேன்.... நீ ஏன் பயப்படனும்?" எரிச்சலாக கேட்டாள்...

"இது பயம் இல்லை ரீத்து,, மரியாதை..... உன் அக்காவும் என் அண்ணாவும் ஒரே காலேஜ்ல படிச்சவங்கன்னு எனக்கே சமீபத்துல தான் தெரியும்.... அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள்ன்றதும் என் அண்ணன் சொல்லிதான் தெரியும்... மான்சியைப் பத்தி நிறைய சொன்னான்... ரொம்ப மரியாதை வச்சிருக்கான் மான்சி மேல.... அப்படியிருக்குறப்ப உன்னை இவ்வளவு நேரம் என்கூட வச்சிருக்குறது நல்லதில்லை.... கிளம்பு ரீத்து" என்று கூறிவிட்டு கார் கதவை திறந்து வைத்து காத்திருந்தான்....

அவனை முறைத்தபடி காரில் ஏறியவள்.... "எனக்கு இப்படில்லாம் இருந்தா பிடிக்காது மதன்... எதுக்கும் துணிஞ்சவன் தான் என் லவ்வரா இருக்க முடியும்" என்றாள்...

காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியவன் "ம்ம் சரிதான்,, ஆனா ஓவர் கான்பிடன்ஸ் ஒண்ணுத்துக்கும் உதவாம போயிடும்ன்றதும் தெரியும் ரீத்து.... நீயும் தமிழ் பேமிலி,, நானும் தமிழ் பேமிலி... நம்ம கல்ச்சர்க்கு மரியாதை தரனும்" என்றான் மதன்....



"போடா லூசு.... ம்ஹூம் நீ சரியான சாம்பார்" என்று கோபமாக கூறியவள் அதன்பிறகு மதனிடம் பேசவில்லை.... மதனும் அமைதியாக காரைச் செலுத்தினான்...

வீட்டுக்கு சற்று தொலைவில் காரை நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பி கையைப் பற்றி வேகமாக இழுத்தவன் "என் செல்லத்துக்கு கோபமா?" என்றபடி அவளின் தேன் இதழ்களை கவ்விக் கொண்டான்...

முரண்டு பிடித்து அவனிடமிருந்து விலக முயன்றவளை பிடிவாதமாக இறுக்கியணைத்தான்.... இதழ்களை விடுத்து அவள் பிடரியை முகர்ந்தவன் "எனக்கும் துணிச்சல் இருக்கு ரீத்து... அதை எந்த இடத்துல பயன்படுத்தனுமோ அங்கே பயன்படுத்துவேன்" என்றான்....

இன்னும் ரீத்துவின் கோபம் தணிவில்லை.... மதனின் பிறந்தநாள் பார்ட்டியை வைத்து அவள் போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்.... முதன்முறையாக ஆல்ககாலை ருசித்துப் பார்க்க நினைத்தது நிறைவேறவில்லை.... ஒருவேளை இவளது மனதை அறிந்துதான் மதன் அழைத்து வந்துவிட்டானோ? சந்தேகத்துடன் அவனைப் பார்த்துவிட்டு "பை மதன் டியர்" என்று கூறிவிட்டு காரைவிட்டு இறங்கினாள்....

யாருக்கும் அடங்கிப் போக நினைக்காதவளை மதன் அமைதிப்படுத்த முனைவது அவளுக்குப் பிடிக்கவில்லை... சரியான சாம்பிராணியா இருக்கான்.... ‘எனக்குன்னு வந்து கிடைச்சான் பாரு... எப்பப்பாரு ரூல்ஸ் பேசிக்கிட்டு... ச்சே' கோபத்தில் கால்களை உதறியபடியே வீட்டுக்குள் நுழைந்தாள்.....

தங்கைக்காக காத்திருந்தாள் மான்சி..... அவள் உடைமாற்றிவிட்டு வந்ததும் இரவு உணவை எடுத்து வைத்தாள்.... சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் ரீத்து...

"ரீத்தும்மா ஏதோ கோபத்துல இருக்குற மாதிரி தெரியுதே?" இயல்பாய் கேட்டாள் மான்சி.....

அடங்காத எரிச்சலுடன் நிமிர்ந்துப் பார்த்தவள் "எந்த அட்வைஸையும் ஆரம்பிக்காத... இப்போ உன் அட்வைஸை கேட்குற மூடுல நான் இல்லை" என்றாள் ரீத்து...

அதன்பிறகு மான்சி எதுவும் கேட்கவில்லை தான்... ஆனால் உள்ளுக்குள் அரித்துக்கொண்டே இருந்தது.... இன்னும் இரண்டு நாளில் சத்யன் வந்துவிடும் நிலையில் திருமணம் சீக்கிரமாகவே நிச்சயிக்கப்படலாம்... அதற்குள் அருணகிரியின் குடும்பத்துக்கேற்ற மருமகளாக ரீத்துவை தயார் செய்ய வேண்டுமே?

அதுவும் சத்யன் இருக்கும் நிலையில் இனி ரீத்து தானே அவனுக்கு மருந்தும் விருந்தும்.... இதை எண்ணிப்பார்க்கையில் நெஞ்சம் இனிக்கவில்லை தான்... வேப்பங்காய் கசப்பென்றாலும் அது நோய் தீர்க்கும் மருந்தென்றால் தின்று தான் ஆகவேண்டும்

குழப்பமாகவே உறங்கச் சென்றவள் படுக்கையில் அமர்ந்து "எல்லாம் நல்லபடியா நடக்கனும் அம்மா" என்று தனது தாய் தேவியை மனதார வேண்டிக்கொண்டுப் படுத்தாள்...



" நாம் அல்லும் பகலும் அயராது...

" வாழ்க்கையைப் பாடமாகப் படித்து...

" ஆயிரம் கணக்குகள் போட்டாலும்....

" ஆயிரத்து ஒன்றாவது கணக்கை..

" ஆண்டவன் தான் போடுவான்...

" ஆயிரம் கணக்கும் தப்பாகும் போது...

" அமைதியாக ஆண்டவன் போட்ட...

" ஆயிரத்தி ஒன்றாவது கணக்குக்கு...

" சரியான விடையை தந்துவிடும்!!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Nice bro
Like Reply
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 14

பெங்களூர் வந்திறங்கிய இருவரையும் காருடன் காத்திருந்த மேனஜர் எதிர்கொண்டு நலம் விசாரித்தப் பிறகு வீட்டுக்கு அழைத்து வந்தார்...

சத்யன் சாதரணமாக காலேஜ் விடுமுறைக்கு வந்தாலே வீடு திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.... இன்று வெளிநாடு சென்று திரும்பி வருகிறான்... ஆனால் வீட்டில் சந்தோஷமில்லை... கண்ணீரும் துயரமுமாகவே கிடந்த சந்திரா மகனுக்காக எழுந்து வெளியே வந்து வாசலில் நின்றிருந்தாள்...

சத்யன் காரை விட்டு இறங்கியதும் மகனின் தோளில் கைப்போட்டு அழைத்துவந்தார் அருணகிரி.... மகனை கண்டதும் தாயின் கால்களுக்கு இறகு முளைத்தது "சின்னும்மா" என்றபடி வேகமாக ஓடிவந்து மகனை அணைத்துக் கொண்டாள்...

மனம் இருந்த நிலையில் தாயை கண்டதும் இளங்கன்றாய் மாறினான் சத்யனும்.... "ம்மா...." என்றபடி அணைத்து தோளில் முகம் புதைத்தவன் கண்களிலும் கண்ணீரின் தடம்....

மனைவியின் தோளைத் தட்டி "வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போ சந்திரா" என்று அருணகிரி கூறியதும் மகனை அணைத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தாள்...

சோபாவில் சத்யனை அமர்த்திவிட்டு பக்கத்தில் அமர்ந்து தனது விரல்களால் மகனின் முகம் முழுவதும் வருடினாள் "என்ன சாமி ஆச்சு? உனக்காகத் தானே நாங்க உசுரோட இருக்குறதே? எங்களைப் பத்தி ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாமே சின்னு?" மகன் தற்கொலைக்கு முயன்றான் என்ற அதிர்ச்சி நீங்காமல் பேசினாள்...

சத்யன் பதில் சொல்லவில்லை... அமைதியாக தலைகுனிந்தான்... மனைவியின் அருகில் வந்த அருணகிரி "மொதல்ல ஏதாவது சாப்பிடக் குடுத்து அவனை ரூமுக்கு அனுப்பு... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்.... மத்ததெல்லாம் பிறகு பேசலாம்" என்றார்...

"ம் சரிங்க" என்ற சந்திரா மகனின் கையைப் பற்றி "முகம் கழுவிட்டு வா சின்னு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்று அன்பாக கூறவும்...... சரியென்று தலையசைத்துவிட்டு எழுந்து சென்றான் சத்யன்.....

பார்வையால் மனைவியை எச்சரித்துவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார் அருணகிரி...... என்ன நடந்தது என்று புரியாமல் அந்த தாயுள்ளம் தவிப்புடன் இருக்க... மகனுக்கு உணவு எடுத்து வைக்க சென்றாள்...



அமைதியாக உணவு முடிந்தது... பட்டும் படாமலும் சாப்பிட்ட மகனைப் பார்த்து கண்ணீர் நீர் கசிந்தவளை "பரவாயில்லை விடு.. சரியாயிடுவான்" என்றார்.....

சத்யன் அவனது மாடியறைக்கு சென்றதும் மனைவியை அழைத்துக்கொண்டு தங்களின் அறைக்கு வந்தார் அருணகிரி.... உள்ளே நுழைந்ததுமே "என்னங்க இப்புடியிருக்கான்?" வேதனையின் விழிம்பில் நின்று கேட்டாள்....

அமைதியாக கட்டிலில் அமர்ந்தவர் "விதி சந்திரா விதி.... சத்யன் வாழ்க்கையில ரொம்ப வேடிக்கையா விளையாண்டிருக்கு....." என்றவர் கலிபோர்னியா சென்றதிலிருந்து நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்.... சிவாத்மிகாவிடம் பேசியதையும் அவளின் நற்குணத்தையும் கூறவும் சந்திராவின் கண்களில் கண்ணீர் தான் வழிந்தது...

"என்னங்க இது சோதனை? சத்யனுக்கு கல்யாணம் செய்ய நாம ஆசைப்பட்ட தேவியோட மகள் சிமிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு... நம்ம சின்னு ஆசைப்பட்ட சிமிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.... ஏன் நமக்கு மட்டும் இப்படிலாம் நடக்குது?" என்றவள் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்த மனைவியை ஆறுதலாகப் பார்த்தார்.....

"கடவுள் எதை விதிச்சிருக்கானோ அது தான் கிடைக்கும் சந்திரா.... நாம நினைக்கிறதெல்லாம் நடந்துட்டா அப்புறம் தெய்வம் தேவதைலாம் எதுக்கு இருக்காங்க? எது கிடைக்குதோ அதைதான் ஏத்துக்கனும்" என்றவரின் குரலில் குடும்பத்தில் யாருடைய ஆசையும் நிறைவேறாத ஆதங்கம் தெரிந்தது....

"நீங்க சொல்றது புரியுதுங்க... ஆனா இப்படியிருக்குறவன் கிட்ட போய் பத்ரி அண்ணன் மகள் ரீத்துவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எப்படி சொல்றது? ஒத்துக்குவானா?" சந்தேகமாக கேட்டாள்....

"இப்ப எதையும் சொல்ல வேண்டாம்.... இன்னும் கொஞ்சநாள் போகட்டும்... சொல்ற விதமா சொல்லி சம்மதிக்க வைக்கலாம்.... அதுவரைக்கும் என்கூட பேக்டரிக்கு வரட்டும்...." என்று அருணகிரி சொல்லவும் "சரிங்க" என்று சம்மதித்தாள் சந்திரா....

மகனைப்பற்றி கவலையில் அன்று இரவு உறக்கம் கூட வரவில்லை இருவருக்கும்..... ரீத்துவுடன் கல்யாணத்துக்கு எப்படி சம்மதிப்பான் என்ற கவலையே அதிகமாக இருந்தது.....

பெற்றவர்களின் கவலை இப்படியிருக்க அவர்களின் மகனோ தனது முதல் காதல் முன்னுரை எழுதும் முன்பே முற்றுப்புள்ளி வைக்கப்படதன் துயரம் தாளாமல் விரக்தியுடன் விழித்துக் கிடந்தான்.....

சிமியுடன் நட்பு மட்டுமே போதுமென்று தன்னால் இருக்க முடியுமா? அதெப்படி முடியும்? காதலி மனைவியாகலாம்... மனைவியாக நேசித்தவள் மறுபடியும் தோழியாக முடியுமா? சத்யனது எதிர்காலம் அவனையே பயமுருத்தத் தொடங்கியது.... எப்படி யோசித்தாலும் முடிவு தெரியாமல் விழி பிதுங்கியது....

கலக்கமாய் நோக்கும் தந்தை... கண்ணீருடன் தடுமாறும் தாய்... இவர்களுக்காக வேனும் தெளிவுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு சிமியின் ஞாபகம் வந்தது... நூற்றில் ஒரு சதவிகிதமாக அவள் கூறிய திருமணம் ஆனவள் என்ற செய்தி நிஜமாக இருந்தால்?.... அடுத்தவன் மனைவியை நேசிக்கும் ஈனத்தை செய்வதும் பெற்றோரின் வளர்ப்புக்கு இழுக்கு தானே? அவர்களின் நிம்மதிக்காவது தன்னிடம் மாற்றம் தேவை என்றும் தோன்றியது.... குழம்பிய குட்டையாய் மனம் தவிக்க விடிய விடிய விழித்திருந்தவன்... விடியும் தருவாயில் தான் விழி மூடினான்.....

மறுநாள் காலை உணவு முடிந்து அருணகிரி பேக்டரிக்கு கிளம்பி வந்தார்.... "சத்யா,, என்கூட கம்பெனிக்கு வாயேன்ப்பா... மனசுக்கு ஒரு மாற்றமா இருக்கும்" என்று மகனை அழைத்தார்....

"நாளையிலருந்து வர்றேன்ப்பா...." என்று மட்டும் பதில் சொல்ல.... சரியென்று தலையசைத்தவர் மகனைப் பார்த்துக் கொள்ளும்படி மனைவியிடம் பார்வையால் சொல்லிவிட்டு கிளம்பினார்....

தனது அறைக்கு வந்தவன் லாப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு திரையையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.... மணி பத்தடித்ததும் சட்டென்று சுறுசுறுப்படைந்தவன் சாட்டை திறந்து "சிமி இருக்கியா?" என்று தகவல் அனுப்பினான்

அழைக்கப்பட்டவளிடமிருந்து பதில் இல்லை.... அலுவலகத்தில் வேலை அதிகமிருக்கலாம் வந்துவிடுவாள் என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டு சிமியின் தகவலுக்காக காத்திருந்தான்.....

பதினொன்று இருபதுக்கு பதில் வந்தது "நல்லபடியா வந்துட்டீங்களா சத்யன்?"

சட்டென்று உடலின் அத்தனை செல்களும் உயிர்பிக்கப் பட்டது போல ஒரு புத்துணர்வு பரவ.... "வந்துட்டோம் சிமி... நீ எப்படியிருக்க?" என்று கேட்டு அனுப்பினான்...

"நல்லாருக்கேன் சத்யன்,, உங்க அம்மா நல்லாருக்காங்களா?"

"நல்லாருக்காங்க சிமி"


"சத்யன் ப்ளீஸ் வெயிட்... போன் கால்" என்ற தகவலுடன் சில நிமிடங்கள் காணமல் போனாள்....

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆன நிலையில்.... "சிமி என்னாச்சு... இருக்கியா?" என்று சத்யன் செய்தி அனுப்பவும்..

"ம் ம்" என்று பதில் வந்து இரண்டு நிமிடம் கழித்து "ஸாரி சத்யன்... ரொம்ப நேரமா பேசிட்டேன்... மனுசன் வைக்க மாட்டேங்குறார்..." என்ற தகவலுடன் சிரிக்கும் பொம்மை ஒன்று...

"ஓ...... யாரது?"

"அவர்தான் சத்யன்.... என் ஹஸ்பண்ட்.... எப்பவும் நைட்ல தான் கால் பண்ணுவார்... இப்போ திடீர்னு இந்த நேரத்துல பண்ணிட்டார்.... ஏன்னு கேட்டா.... பேசனும்னு தோனுச்சு கால் பண்ணேன்னு கொஞ்சுறார்" காதலைச் சொல்லும் பொம்மையுடன் வந்தது செய்தி....

"ஓ.........."

"ம்ம்... தினமும் ஒன் அவர் பேசலைனா மனுசனுக்கு தூக்கம் வராது"

"ஓ.... சரி சரி... நீ பேசு சிமி.... நான் பிறகு வர்றேன்"

"இல்ல அவர் வச்சிட்டுப் போய்ட்டார்.... இதோட நைட் தான்.... நீங்க சொல்லுங்க"

"என்ன சொல்லனும்?"

"என்ன சத்யா இப்படி சொல்றீங்க? ரொம்ப நாள் கழிச்சி அம்மாவைப் பார்த்திருக்கீங்க.... அவங்க எத்தனை கிஸ் குடுத்தாங்க? நீங்க அவங்களுக்கு எத்தனை குடுத்தீங்க? அம்மாவோட அன்பு கலந்த முத்தம்னாலே ஸ்பெஷல் தானே சத்யா?"

அப்போது தான் சத்யனுக்கு ஞாபகம் வந்தது.... சிமி சொல்வது நிஜம் தான்... கொஞ்சியோ கெஞ்சியோ ஒரு நாளைக்கு பல முத்தங்களை பெற்றுவிடுவான்... ஆனால் வந்ததிலிருந்து தாயிடம் சரியாக முகம் கொடுத்தே பேசவில்லையே....

"இன்னும் அம்மா கூட சரியா பேசவே நேரமில்லை சிமி.... அம்மா கொஞ்சம் பிஸி" என்று பொய்யுரை அனுப்பினான்....

"அதான் தப்பு... இதெல்லாம் எப்பவுமே கிடைக்காது... போங்க போய் அம்மாவோட கழுத்தை கட்டிக்கிட்டு நிறைய முத்தம் வாங்கிக்கங்க.... அப்புறம் சாப்பாடு போட்டு ஊட்டிவிடச் சொல்லி அடம் பண்ணுங்க.... மடியில படுத்து தான் தூங்குவேன்னு பிடிவாதம் பண்ணுங்க...... அம்மா மடி சம்திங் ஸ்பெஷல் சத்யன்... எப்படிப்பட்ட துயரத்தையும் போக்கி நிம்மதி தரும் சக்தி நம்ம தாய்மடிக்கு உண்டு" சிமி சாதரணமாக சொன்னாலும் அதில் அப்பட்டமாய் அவளது வலிகள் தெரிந்தன....



"இது எதுவுமே உனக்குக் கிடைக்கலையே சிமி?"

"ஹாஹாஹாஹா இதெல்லாம் கிடைக்கலைன்னா என்ன சத்யன்?? இதைவிட பலமடங்கு சக்தி வாய்ந்த என் கணவரோட காதல் கிடைச்சிருக்கே? அவரோட காதல் தான் இப்போ என்னை வாழ வைக்குது சத்யன்"

"ஓ..... நீ லக்கி தான் சிமி.... காதலிப்பதை விட... காதலிக்கப்படுவதில் தான் சுகம் அதிகம்"

"ம்ம் நிஜம்.... அவரோட காதலுக்கு எல்லையே இல்லை சத்யன்"

"ம்ம்.... ஓகே சிமி... நீ உன் ஒர்க் பாரு.... நான் பிறகு பேசுறேன்"

"ஓகே சத்யன்.... ஆனா இப்போ போய் அம்மா கூட பேசுங்க.... பை... டேக் கேர்" என்ற செய்தியுடன் காணாமல் போனாள்....
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அப்படியே வெறித்தபடி அமர்ந்திருந்தான் சத்யன்... சிமி கூறிய அவள் கணவனின் காதல்.... சத்யனின் மனதை தற்காலிகமாக முடமாக்கியது.... அமைதியாக லாப்டாப்பை மூடிவிட்டு எழுந்தான்...

இப்போது அவனுக்கு நிஜமாகவே தாய்மடி வேண்டும்...

அம்மாவைத் தேடி படிகளில் இறங்கி கீழே வந்தான்... சமையலறையில் இருந்த சந்திரா மகன் வருவதைப் பார்த்து "என்ன சின்னும்மா? ஏதாவது வேணுமா?" என்று அன்போடு கேட்க....

இரு கைகளையும் விரித்தவன் "கொஞ்சநேரம் உன் மடியில தூங்க வைம்மா" என்றான்....

தாயன்பில் இதயம் கசிய "இதோ வந்துட்டேன் சின்னு" என்றவள் மகனை அணைத்தார்ப்போல் அழைத்துவந்து சோபாவில் அமர்ந்து தனது மடியில் மகனை சாய்த்து கேசத்தை விரல்களால் கோதிவிட்டாள்....


“ நிமிர்ந்து படுத்தால்

“ கொடி சுற்றும்!

“ கவிழ்ந்து படுத்தால்

“ மூச்சு முட்டும்!

“ அதிர்ந்து நடக்காமல்!

“ அயர்ந்து தூங்காமல்!

“ ஆசைக்கு உண்ணாமல்!

“ அல்லும், பகலும்....

“ ஈரைந்து மாதங்கள்...

“ கருவோடு என் உயிர் சுமந்த...

“ என் அம்மா!!

“ இன்றும் கூட....

“ இன்னும் சிறகுகள் முளைக்காத

“ சின்னஞ்சிறு குழந்தையாய்

“ உன் சுவாசத்தைத் தேடி நான்!!!

அதன்பின் நாட்கள் விரைவாகத்தான் சென்றது.... தாய்மடி சத்யனை வெகுவாக ஆறுதல் படுத்த... மூன்றாவது நாளிலேயே சுறுசுறுப்படைந்து எழுந்து அப்பாவுடன் அலுவலை கவணிக்க கிளம்பினான்....

வழக்கம் போல சிமியுடன் தனது சாட்டை அலுவலகத்திலிருந்து செய்தான்.... ஆனால் சிமிக்கு தான் அதிக நேரமில்லாமல் போனது... நான்கு வார்த்தை பேசினாள் ஜந்தாவது வார்த்தையாக "ஆபிஸ்ல நிறைய ஒர்க் சத்யன்" அல்லது "ஆடிட்டிங் நடக்குது சத்யன்,, ஸாரி பேச டைமில்லை..." "என் வீட்டுக்காரர் இப்போ கால் பண்றேன்னு சொல்லிருக்கார் சத்யன்,, ஸாரி" இப்படி ஏதாவது சொல்லி சாட் செய்வதை நிமிடங்களாக குறைத்துவிட்டாள்...

அதுவும் தினமும் கணவனைப் பற்றி அதிகமாக பேசினாள்... அவர் இப்படி... இது இவருக்கு பிடிக்கும்... எனக்கு புடவை வாங்கி அனுப்பிருக்கார்... சல்வார் வாங்கி கிப்ட் பண்ணினார்...... இப்படி குறைந்த பட்சமாக காதுகளில் மாட்டும் பிளாஸ்டிக் தொங்கலில் இருந்து... அதிகபட்சமாக வைர மோதிரம் வரை அவள் கணவனின் பரிசுப் பொருட்களை பட்டியலிடுவாள்.....

இவளின் புருஷன் புராணத்தில் எதிர்பக்கம் இருப்பவனின் உயிர் ஊதித் தள்ளப்படுகிறது என்று புரியாமலேயே புருஷனைப் பற்றிய பெருமையை பேசிக் கொண்டேயிருப்பாள்.... இறுதியாக சத்யனே "ஓகே சிமி,, நீ பாரு... நான் பிறகு வர்றேன்" என்று கூறிவிட்டுப் போய்விடுவான்....

ஆனால் சத்யன் தனது சோகத்தால் ஒரு விஷயத்தை யோசிக்க மறந்தான்.... கலிபோர்னியாவில் இருக்கும் வரை ஒருநாள் கூட கணவனைப் பற்றி ஒரு வார்த்தை பேசாதவள்... இன்று வந்ததும் தன்னவனைப் பற்றி பேசுகிறாளே? ஏன்? என்று ஆராய்ந்திருந்தால்.... அது ஏன் என்று அன்றே புரிந்திருக்கும்.....

நெஞ்சு முழுக்க காதலை நிரப்பிக்கொண்டு சுவாசிக்கத் தடுமாறியவனை சிமியின் வார்த்தைகள் இன்னும் மூச்சடைக்க வைத்தது.... முகம் தெரியாத சிமியின் கணவனை சத்யனும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பேசுவாள் சிமி "இன்னைக்கி சிவா கிட்ட உங்களைப் பத்தி பேசினேன்..... அவருக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு சத்யன்"

"யாரது சிவா?"

"ஓ.... ஸாரி சத்யன்... இன்னும் என் கணவர் பெயரை உங்ககிட்ட நான் சொல்லவே இல்லையா... ஸாரிம்மா..... அவரோட பெயர் தான் சிவா... பெயர்ல கூட எங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு பொருத்தம் பார்த்தீங்களா சத்யன்? நான் சிவாத்மிகா.. அவர் சிவா.. ஹாஹாஹாஹா சூப்பர்ல"

"ம் பொருத்தமாதான் இருக்கு"

நாளைடைவில் சத்யனின் மனம் ஏங்க ஆரம்பித்தது... இவன் நாலு வார்த்தை பேசினால் ஒரு வார்த்தையில் பதில் சொல்லும், அந்த தேடல் நிறைந்த சிமிக்காக மனம் ஏங்க ஆரம்பித்தது... இந்த சிமி குறைந்த நேரமே வந்தாலும் நிறைய பேசினாள்... அந்த நிறையவில் புருஷனைப் பற்றி பேச்சு தொன்னூறு சதவிகிதம் இருந்தது.... மீதி பத்து சதவிகிதம் வேறு ஏதாவது பேசுவாள்... நாட்கள் செல்ல செல்ல நலம் விசாரிப்புக் கூட குறைந்து போனது.....

அந்த நாட்களில் சத்யனுக்குத் துணை அவர்களின் பழைய சாட் ஹிஸ்ட்ரி தான்... எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் படித்துப் பார்த்து ஆறுதல் படுத்திக்கொள்வான்...

இப்போதெல்லாம் கவிதைகள் கூட அதிகமாக எழுதுவதில்லை.... அதைப் பற்றி சத்யன் கேட்ட போது "அம்மாவை போல அன்பு காட்ட ஒரு உறவைத் தேடினேன்.... இப்போ என் கணவர் மூலமா அந்த அன்பு கிடைச்சிடுச்சே... அதான் கவிதை கூட சரியா வரலை சத்யன்" என்று காரணம் சொன்னாள்....

சாய்ந்து கொள்ள தோள்களின்றி துவளும் போது தாய்மடியே அவனுக்கு ஆறுதலானது..... அன்று சிமிக்குத் தேவைப்பட்ட தாயின் ஆறுதல் இன்று சத்யனுக்கு அத்யாவசியத் தேவையானது....

மகனுக்காக அருணகிரியும் ஒரு யுக்தியை கையாண்டார்.... கத்தை மாத்திரைகளை கையில் வைத்துக் கொண்டு... "கொஞ்சம் உடம்பு சரியில்லை சத்யா.... பேக்டரில இன்னைக்கு லேபர்ஸ் மீட்டிங் இருக்கு... எம்டியா நீ போய் அட்டன் பண்ணி சின்னதா ஒரு ஸ்பீச் குடுத்துட்டு வந்துடு சின்னு" என்று மிகவும் சோர்வாக படுக்கையில் படுத்துக் கொண்டு சொல்வார்....

கெஞ்சுதலாக கூறும் தகப்பனின் சொல்லைத் தட்ட முடியாமல் கம்பெணி அலுவல்களை கவணித்தவன் நாளடைவில் அவர் சொல்லாமலேயே எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்தான்...

சத்யனின் இந்த மாற்றம் பெற்றவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தாலும் ரீத்துவுடனான திருமணப் பேச்சை ஆரம்பிக்கத் தயங்கி அந்த நாளுக்காக காத்திருந்தனர்.....

சத்யன் கலிபோர்னியாவிலிருந்து திரும்பிய மூன்றாவது மாதம்..... சந்திரமதியின் நாற்பத்தைந்தாவது பிறந்தநாள் வந்தது.... நடு இரவில் வந்து எழுப்பி அணைத்து முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மகனிடம் சந்திரா ஒரு கோரிக்கை வைத்தாள்....

"சின்னும்மா,, இன்னைக்குப் பூராவும் நீயும் அப்பாவும் என் கூடத்தான் இருக்கனும்... ப்ளீஸ்டா" குழந்தையாய் மாறி கெஞ்சிய அம்மாவுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் "ம் சரிம்மா" என்றான்....

அன்று வேலைகாரர்களை விடுத்து இவர்கள் மூவருமே சேர்ந்து காலை உணவை தயார் செய்தனர்... சாப்பிட்டப் பிறகு வேலைகாரர்களுக்கும் விருந்து வைத்தனர்.... மதிய உணவிற்கு அவர்களின் வழக்கமாக ஆசிரமம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தபடி ஆதரவற்ற குழந்தைகளுடன் உண்டனர்... ஆசிரமத்திற்கு நன்கொடை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தனர்... மீண்டும் குளித்து உடை மாற்றிக்கொண்டு பெங்களூரில் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்றனர்....

கோயிலின் அமைதியும் சுற்றுப்புறமும் சத்யனிடம் பேசுவதற்கு ஏற்ற இடம் என்று தோன்ற... அர்ச்சனை முடிந்து சுவாமி தரிசனமும் ஆராதனையும் முடிந்து பிரசாதத்துடன் வெளிப் பிரகாரத்திற்கு வந்து அமர்ந்தனர்....

தேங்காயை உடைத்து மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்துவிட்டு மனைவியைப் பார்த்து ஜாடை செய்தார் அருணகிரி....


first 5 lakhs viewed thread tamil
Like Reply
சத்யன் அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான்... அவனது பார்வை கோபுரத்தைச் சுற்றித் திரிந்த மாடப்புறாக்களின் மீது இருந்தது....

"சின்னு,, நம்ம தேவிம்மாவோட பேமிலியை சமீபத்துல பார்த்தோம்டா" என்று மெதுவாக ஆரம்பித்தாள் சந்திரா.....

ஏதோ கவனத்தில் இருந்தவன்... திரும்பி "யாரும்மா?" என்று கேட்க...

"தேவிம்மாடா.... உன்னை எனக்கு காப்பாத்திக் கொடுத்த தேவதை தேவி"

"அவங்க தெரியாதாம்மா?... தினமும் தான் கும்பிடுறேனே"

"ஆமா சின்னு... ஆனா தேவியோட பேமிலியை கொஞ்சநாள் முன்னாடி பார்த்தோம்டா... பத்ரிநாத் அங்கிள் சின்னு"

சத்யன் ஆர்வமானான்.... "ஓ.. எப்படிம்மா இருக்கார்? இப்போ எங்க இருக்காராம்" என்று கேட்டதும்...

சட்டென்று ஒரு நிம்மதி பரவ "ஆக்ரால இருக்கார் சின்னு,, சிமி கூட நல்லாருக்கா... அவப்பெயர் மான்சியாம்... மான்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு" ஆர்வமாக சொல்லிக்கொண்டே போனாள் சந்திரா...
சிமி என்ற பெயரை கேட்டதுமே இதயத்தில் ஒரு இனம்புரியா வலி பரவ "ஓ சிமிக்கு மேரேஜ் ஆகிடுச்சா?" என்று கேட்டான்...

"ஆமாம் சத்யா,, நாங்க வேற மாதிரி நினைச்சோம்... ஆனா அது நடக்காம போயிடுச்சு" வருத்தமாகச் சொன்ன அம்மாவை கூர்ந்த சத்யன் "என்னம்மா நினைச்சீங்க?" என்று கேட்டான்...



" அது வந்து... உன் அப்பாவைக் காப்பாத்தி கொடுத்தார் பத்ரி அண்ணா... உன் உயிரை காப்பாத்திக் கொடுத்தா தேவி இவங்களோட மகள் மான்சி தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரனும்னு நினைச்சோம்.... ஆனா அதுக்கு நமக்கு குடுப்பினை இல்லாம போச்சு..... ஆனா ஒரு கதவை மூடினா இன்னொரு கதவு திறக்கும்ன்ற மாதிரி நமக்க அந்த குடும்பத்தோட இணைய இன்னொரு வழியும் கிடைச்சது" என்று மெதுவாக சொல்லிக்கொண்டு போனவளை கையசைத்து தடுத்த சத்யன் "புரியலைம்மா" என்றான்....

சந்திரா அருணகிரியைப் பார்க்க.... மனைவி விட்ட இடத்திலிருந்து அவர் ஆரம்பித்தார் "அதாவது சத்யா தேவி மகள் மான்சிதான் உனக்குனு நினைச்சு பெண் கேட்டோம்... அவளுக்கு கல்யாணம் ஆகிட்டதால நமக்கு உயிர் கொடுத்த அந்த குடும்பத்தை மிஸ் பண்ணப் போறோமேனு வருத்தமா இருந்துச்சு.... அப்புறம் தான் விஷயம் தெரிஞ்சது நம்ம பத்ரி செகன்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டார்.... அந்த மனைவிக்கு ஒரு மகள்... பெயர் ரீத்துவாம்.... அந்த பெண்ணை உனக்கு மேரேஜ் பண்றது மூலமா அந்த குடும்பத்துக்கு நாம செய்ற நன்றியா இருக்கும்னு முடிவு பண்ணிருக்கோம்" அருணகிரி முடிக்கவில்லை...

ரௌத்திரமாக நிமிர்ந்தான் சத்யன் "நன்றி காட்டுறதுக்காக ஒரு கல்யாணமா? என்னப்பா இது ஸ்டுபிட்டா இருக்கு.... நன்றி செய்ய நினைச்சா நம்ம சொத்துல பாதியைக் குடுங்க... ஏன் எல்லாத்தையும் கூட குடுங்க... ஆனா அதுக்காக கல்யாணத்தை முடிவு பண்றது நியாயமில்லைப்பா" குரலை அடக்கிப் பேசினாலும் அதில் உச்சக்கட்ட கோபம் தெரிந்தது....
"என்ன சத்யா இப்படி பேசுற? பணமும் சொத்தும் உங்க ரெண்டு பேரோட உயிருக்கு ஈடாகுமா? தலைமுறைக்கும் ஒரு நிலையான சொந்தம் உருவாகனும்னு நான் நினைச்சது தப்பா? தேவியோட மகள் வயித்துல நம்ம குடும்ப வாரிசு வரனும்னு நாங்க நினைச்சது தப்பா?" குரலை உயர்த்திப் பேசினாள் சந்திரா

"அம்மா புரியாம பேசாதீங்க.... கல்யாணம்ன்றது ஒரு விபத்தை மையமா வச்சு முடிவு பண்ற விஷயமா?"

"இதென்னடா புதுசா பேசுற? ஆன்லைன்ல பார்க்காமலேயே திருமணத்தை நிச்சயம் பண்ணிக்கிற இந்த காலத்தில்... நம்ம உயிரை காப்பாத்தின குடும்பத்தோட திருமண உறவு வச்சுக்கறதில என்ன குற்றம் இருக்கு?" அருணகிரி மகனை கூர்ந்து பார்த்து கூர்மையாக கேட்டார்....

"என்னப்பா குத்திக் காட்டுறீங்களா? சரி பரவாயில்லை... ஆனா அங்கே காதல்ன்ற ஒரு விஷயம் கடைசி வரை இருக்கும்ப்பா... இப்போ நீங்க சொல்றது கடமை.... கடமைக்காக காதல் இல்லாம கல்யாணம் செய்துக்க முடியாது" உறுதியாக கூறினான் சத்யன்...
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நண்பரே நான் அன்பே மான்சி சத்யன்...

எனது அனுமதியின்றி எனது கதைகளை பதிவு செய்தது சரியான செயலா? 

நான் எனது கதைகளை புத்தகமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற தரமற்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கிறது... 

தயவுசெய்து  எனது கதைகளை நீக்கிவிடுங்க... இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ....
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)