Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ரஜினியின் இமேஜைக் காப்பாற்றிய சிவகுமார்

[Image: NTLRG_20190723124913519985.jpg]

தமிழ்த் திரையுலகத்தின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் வில்லனாக, இரண்டாவது கதாநாயகனாக நடித்த படங்கள் உள்ளன. அவற்றில் சிவகுமாருடன் அவர் இணைந்து நடித்த கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி ஆகிய படங்கள் முக்கியமானவை.


புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் சிவகுமாரை விடவும் அதிகப் பெயர் வாங்கியவர் ரஜினிகாந்த். அந்தப் படங்களில் சிவகுமாருடன் இணைந்து நடித்த அனுபவத்தைப் பற்றியும், தன் இமேஜ் கெடக்கூடாது என்பதற்காக சிவகுமார் செய்த விஷயத்தைப் பற்றியும், காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

“கவிக்குயில் பட ஷூட்டிங்ல அந்தப் படத்தோட கதாநாயகிகள் ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சுமி ரெண்டு பேர் கிட்டயும் பேசிக்கிட்டே இருப்பேன். அதைப் பார்த்து சிவகுமார், எப்பப் பார்த்தாலும் பொன்னுங்க்கிட்டயே பேசிட்டு இருக்கியே, புத்தகம் ஏதாவது படிக்கலாமில்லையான்னு திட்டுவாரு.

அப்புறம் புவனா ஒரு கேள்விக்குறி பட ஷுட்டிங் சமயத்துல படத்தோட ஹீரோயின் சுமித்ராகிட்ட பேசிட்டிருப்பேன். ஒரு நாள் ஒரு உதவி இயக்குனர் வந்து இரண்டு பக்கத்துக்கு வசனம் கொடுத்து, ஈவ்னிங் அந்த காட்சியை எடுப்போம் படிச்சிக்கோங்கன்னு சொன்னாரு. நானும் அப்புறம் அதையே மனப்பாடம் பண்ணிட்டிருந்தேன்.

சிவகுமார் வந்து படத்துல அப்படி ஒரு சீன் எதுவுமில்லை. நீ ரொம்ப நேரமா சுமித்ரா கூட பேசிட்டிருந்த, யாராச்சும் பார்த்தால் உன்னை பொம்பள பொறுக்கினு சொல்லிடக் கூடாது இல்லையா, அதான் இப்படி பண்ணேன் எனச் சொன்னாரு. எனக்கு கெட்ட பெயர் வந்துடக் கூடாதுன்னு என்னைப் பார்த்துக்கிட்டவரு அவரு,” என ரஜினிகாந்த் பேசிய போது அரங்கில் சிரிப்பலையும், கைத்தட்டல்களும் ஒன்றாய் எழுந்தன
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

மேக்கப் இல்லாமல் வசமாக சிக்கிய காஜல் அகர்வால்" - அவரது ரசிகராக இருந்தால் இந்த புகைப்படத்தை பார்க்காதீங்க!


தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.



 
காஜல் தான் ஒரு நடிகை என்பதையும் தாண்டி பிசினெஸ் உமென் ஆகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆம் ,சமீபத்தில் ஹைட்ரபாதில் துணிக்கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார் காஜல். தன்னுடைய ஓய்வான நேரத்தில் அந்த துணிக்கடையை கவனித்து கொள்வார். 

[Image: 1563868530-0504.jpg]

 
அப்படித்தான் சில தினங்களுக்கு முன்னர் மேக் அப் இல்லாமல் ஹைதராபாத்தில் இருந்து மும்பை திரும்பிய காஜல் அகர்வாலை மும்பை விமான நிலையத்தில் சில போட்டோகிராபர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். அப்போது ரொம்ப சில்பிளான உடையணிந்து மேக்கப் எதுவும் போடாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது காஜல் அகர்வாலின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து சமூகவலைத்தளங்ககளில் வைரலாக்கி வருகின்றனர்
[Image: 1563868392-7885.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மும்பை கமிஷனராக நடிக்கும் ரஜினிகாந்த்- மீண்டும் கசிந்த தர்பார் பட ஸ்டில்ஸ்..!

தர்பார் ஷீட்டிங்க் படங்க்கள் மீண்டும் வெளியாகி உள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

[Image: -.jpg]மீண்டும் கசிந்த தர்பார் பட ஸ்டில்ஸ்
இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, தலீப் தஹில், ப்ரதீக் பாப்பர் என பலர் நடித்து வருகின்றனர். 
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். 

[Image: Master.jpg]மீண்டும் கசிந்த தர்பார் பட ஸ்டில்ஸ்


[Image: Master.jpg]மீண்டும் கசிந்த தர்பார் பட ஸ்டில்ஸ்


[Image: Master.jpg]மீண்டும் கசிந்த தர்பார் பட ஸ்டில்ஸ்


லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ரஜினி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது ஷீட்டிங் படங்கள் இணையத்தில் வெளிவந்தது.கடும் பாதுகாப்பையும் மீறி படங்கள் வெளி வந்தது படக்குழுவை அதிர்ச்சியடயவைத்தது. அப்போதிலிருந்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது ஆனால் மீண்டும் இப்போது தர்பார் படத்தின் ஷீட்டிங்க் படங்கள் லீக்காகியுள்ளது. 

இப்படத்தில் ரஜினி மும்பை போலீஸ் உடை அணிந்து நடந்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ரஜினியின் போலீஸ் லுக் வெளியானதில் படக்குழு கடும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளது. எப்படி இப்படங்கள் வெளிவந்தது என தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் "தர்பார்" படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
''தல படத்தை நம்புனேன்...தகுதி இல்லனு சொல்லிட்டாங்க'' - தயாரிப்பாளர் ரவிந்திரன் ஆதங்கம்

நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் தயாரிப்பாளரும், 'கூர்கா' படத்தின் விநியேகஸ்தருமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவிந்திரன் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படம் குறித்து நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசும்போது....
 
[Image: zravi2.jpg]
 
''விநியேகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்தில் அஜித் நடித்திருக்கும் நேர அளவு குறித்தும், படத்தின் கண்டன்ட் குறித்தும், வணிகரீதியான பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை இப்படம் குறித்து எங்கு விசாரிக்க வேண்டுமோ அங்கு விசாரித்ததில் படம் அல்டிமேட்டாக உள்ளது. இது படத்தின் உண்மையான, மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து எனக்கு கிடைத்த தகவல். இப்படம் மாபெரும் வெற்றிபெறும் என்று எனக்கு நம்பிக்கை இருந்ததால் விநியேக உரிமைக்கு தொடர்புகொண்டேன். யாருக்கும் இல்லாமல் எனக்கு மட்டும் படத்தை விநியேகம் செய்ய பல்வேறு கண்டிஷன்கள் போட்டாரகள். 

குறித்த நேரத்தில் அட்வான்ஸ் கொடுக்கவேண்டும், ஒப்பந்தம் போடாமல் வெறும் லெட்டர் ஹெட்டில் தான் தருவோம் எனவும், என்னுடைய லோகோவை பயன்படுத்த கட்டுப்பாடு, அதிக விலை என பல்வேறு கட்டுப்பாடுகளை நான் சந்தித்தேன். இத்தனைக்கும் படத்தை நான் அதிக விலைக்கு கேட்டும் பார்த்தேன். அது நடக்கவில்லை. இது ஏன் எனக்கு மட்டும் என பார்த்தால் அஜித் படம் பண்ண எனக்கு என்ன தகுதி இருக்கிறது என பார்க்கிறார்கள். இது என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. என்னுடைய கம்பெனி சின்ன படங்கள் மட்டும் விநியேகம் செய்யாது என நிரூபிக்கவே முயற்சி செய்தேன். எனக்கென்று சில ஆக்கபூர்வமான ஐடியாக்கள் இருந்தது. அதன்படி இப்படம் கிடைத்திருந்தால் கொண்டாடி இருப்பேன். தல படம் என்னை கைவிடாது என நம்பிக்கையோடு இருந்தேன். இருந்தாலும் இப்படம் யாரிடம் சென்றாலும் சரி, படம் நன்றாக வந்துள்ளது. இது மாபெரும் வெற்றிபெறுவது உறுதி" என்றார்.  
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஷங்கர் படத்தை நிராகரித்த காமெடி நடிகர்!
[Image: fc66d348d3be4be6bd1709bd7ca3aa2c.jpg]

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மட்டும் இன்றி பிரம்மாண்ட இயக்குநர் என்றும் பெயர் எடுத்தவர் ஷங்கர். இவரது படங்களில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் பலர் ஆர்வம் காட்டி வர, வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஒருவர் இவரது படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கிறது.

 

‘2.0’ படத்தை தொடர்ந்து கமலை வைத்து ஷங்கர் இயக்குவதாக இருந்த ‘இந்தியன் 2’ பல பிரச்சினைகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேதிகளை வாங்கி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது.

 

இந்த நிலையில், ‘இந்தியன் 2’ வில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஆர்ஜே பாலாஜியை இயக்குநர் ஷங்கர் அனுகியிருக்கிறார். முதலில் ஓகே சொன்ன ஆர்ஜே பாலாஜி, பிறகு ஷங்கருக்கு நோ சொல்லி, நடிக்க மறுத்திருக்கிறார்.

 

விசாரித்ததில், இயக்குநர் ஷங்கர், ஆர்ஜே பாலாஜியிடம் மொத்தமாக 150 நாட்கள் கால்ஷீட் கேட்டாராம். இதனால் தான் ஆர்ஜே பாலாஜி, ஷங்கருக்கு நோ சொல்லியிருக்கிறார்.

 

[Image: rj-balaji_1.jpg]

 

காமெடி வேடங்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, ‘எல்.கே.ஜி’ படத்திற்குப் பிறகு சில படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கும் நிலையில், இப்படி ஒரே படத்திற்காக 150 நாட்கள் தேதிகளை ஒதுக்கி வைத்துவிட்டால், தான் ஹீரோவாக நடிப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள், என்ற பயத்தில் தான் ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

 

புத்தியுள்ள புள்ள!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
“கும்பல் கொலைகளை தடுத்து நிறுத்துங்கள்” - டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள், பிரதமருக்கு கடிதம்
[Image: 201907250111424614_Stop-gang-killings--4...SECVPF.gif]

புதுடெல்லி, 

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில், சில குறிப்பிட்ட சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் வடமாநிலங்களில் நடந்து வருகின்றன. இதில், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இந்நிலையில், பிரபலங்கள் பலர் இதற்கு கவலை தெரிவித்துள்ளனர்.

சினிமா இயக்குனர்கள் ஷியாம் பெனகல், அபர்ணா சென், மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், நடிகைகள் ரேவதி, கொங்கனா சென், வங்காள சினிமா ஜாம்பவான் சவுமித்ரா சாட்டர்ஜி, பாடகி சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, சமூக ஆர்வலர் விநாயக் சென் உள்பட 49 பிரபலங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சமீபகாலங்களில் கும்பல் கொலைகள் அதிகரித்து வருவது, அமைதியை விரும்பும் எங்களுக்கு கவலை அளிக்கிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது ஆத்திரத்தை தூண்டும் கூச்சலாகி விட்டது.

ராமர், பெரும்பான்மை சமூகத்தினருக்கு புனிதமானவர். அவரை மாசுபடுத்த வேண்டாம். மேலும், மாற்றுக்கருத்து இல்லாவிட்டால், ஜனநாயகமே இருக்காது. ‘தேச விரோதி’, ‘நகர்ப்புற நக்சல்’ என்று பலவாறாக முத்திரை குத்துவதும், அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்துக்காக சிறையில் அடைப்பதும் நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த 2016-ம் ஆண்டு, பட்டியல் இனத்தவர் மீது 840 தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.

**, பட்டியல் இனத்தவர் மற்றும் இதர சிறுபான்மையினரை கும்பல் கொலை செய்யும் சம்பவங்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலைகளை நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டித்து இருக்கிறீர்கள். அது போதுமானதல்ல. இதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
டியர் காம்ரேட்

[Image: 201907262321380112_Dear-Comrade-review-i...MEDVPF.gif]
நடிகர்
விஜய் தேவரகொண்டா
நடிகை
ராஷ்மிகா மந்தனா
இயக்குனர்
பாரத் கம்மா
இசை
ஜஸ்டின் பிரபாகரன்
ஓளிப்பதிவு
சுஜித் சராங்க்






தூத்துக்குடியில் வசித்து வருகிறார் நாயகன் விஜய் தேவரகொண்டா. இவரது தாத்தா சாருஹாசன் காம்ரேட்டாக இருக்கிறார். காம்ரேட் என்றால் எதற்கும் அஞ்சாமல், போராடுபவர்கள் என்று அர்த்தம். இந்த கொள்கையை பின்பற்றி கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராடி வருகிறார்.

இந்நிலையில், ஒரு திருமணத்தில் கலந்துக் கொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிறார் நாயகி ராஷ்மிகா. இவருடன் பழகும் விஜய் தேவரகொண்டாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. திருமணம் முடிந்து சென்னைக்கு செல்லும் நிலையில், ராஷ்மிகாவிடம் தன்னுடைய காதலை சொல்லுகிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால், ராஷ்மிகா விஜய்யின் காதலை ஏற்க மறுத்துவிடுகிறார்.

[Image: 201907262321380112_1_dear-4._L_styvpf.jpg]


நாளடைவில் விஜய்யின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ராஷ்மிகா. வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் எம்.எல்.ஏ. தம்பியுடன் விஜய்க்கு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் விஜய்க்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த விஷயத்தில் ராஷ்மிகாவும் விஜய்யுடன் காதலை முறித்துக் கொள்கிறார்.

அதே வேளையில் கிரிக்கெட்டில் தேசிய லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ராஷ்மிகாவிற்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலில் இணைந்தார்களா? ராஷ்மிகாவின் பிரச்சனை என்ன? எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

[Image: 201907262321380112_2_dear-1._L_styvpf.jpg]


விஜய் தேவரகொண்டா ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது காம்ரேட் ஆக நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். 

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா எண்டிரி ஆகும் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழிக்கிறது. இருவருக்குமான காதல், ரொமான்ஸ் கெமிஸ்டிரி சூப்பராக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார் ராஷ்மிகா.

[Image: 201907262321380112_3_dear-2._L_styvpf.jpg]


முதல் பாதி காமெடி, காதல், கொஞ்சம் ஆக்‌ஷன் என்று திரைக்கதை நகர, இரண்டாம் பாதி செண்டிமெண்ட், மெசேஜ் என்று நகர்ந்திருக்கிறார் இயக்குனர் பாரத் கம்மா. ஆண்களால் பெண்கள் சவாலை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். படம் பார்க்கும் போது நீண்ட நேரம் செல்வது போல் இருக்கிறது. இதை இயக்குனர் கவனித்திருக்கலாம். மற்றபடி, பெரியதாக குறை ஏதும் தெரியவில்லை.

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையில் வெளுத்து வாங்கி இருக்கிறார். காட்சிகளை தனது கேமரா மூலம் அழகாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சராங்க்.

மொத்தத்தில் ‘டியர் கம்ரேட்’ மிரட்டல்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கொளஞ்சி


[Image: 201907260904256190_kolanji-movie-review-...MEDVPF.gif]
நடிகர்
சமுத்திர கனி
நடிகை
சங்கவி
இயக்குனர்
தனராம் சரவணன்
இசை
நடராஜன் சங்கரன்
ஓளிப்பதிவு
அத்தியப்பன் சிவா




சமுத்திரகனி, சங்கவி தம்பதியின் மகன் கிருபாகரன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனங்கள் அதிகமாக இருக்கிறது. சமுத்திரகனி அவனை கண்டிக்கிறார். இதனால் அப்பா மீது கோபமும் வெறுப்பும் உண்டாகிறது. 

அந்த வெறுப்பு ஒரு பக்கம் அதிகமாகிக்கொண்டே போக இன்னொரு பக்கம் ஒரு எதிர்பாராத சம்பவத்தின் மூலம் சமுத்திரகனி, சங்கவிக்கு இடையே மோதல் ஏற்பட்டு பிரிகின்றனர். அம்மாவுடன் கிருபாகரன் வந்துவிடுகிறார். சமுத்திரகனியின் பாசத்தை கிருபாகரன் புரிந்துகொண்டாரா? தாய், தந்தை இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.


[Image: 201907260904256190_1_kol3502._L_styvpf.jpg]

[Image: 201907260904256190_2_kol3503._L_styvpf.jpg]

[Image: 201907260904256190_3_kol3504._L_styvpf.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி : ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மேலும் 2 நடிகைகள்


[Image: 201907270047434592_Amala-Paul-Aishwarya-...SECVPF.gif]

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தற்போது அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யாராய் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று அவர் கூறினார். படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இறுதி பட்டியல் தெரியவரும். கதையில் 60-க்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவனமும் லைகா புரொடக்‌ஷனும் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. 

first 5 lakhs viewed thread tamil
Like Reply
கே.ஆர். மார்க்கெட் கேர் ஆப் தீனா

[Image: 201907221717469628_K-R-Market-CO-Dheena-...MEDVPF.gif]
நடிகர்
பார்த்திபன்
நடிகை
ஸ்ரவியா
இயக்குனர்
சந்தோஷ்
இசை
அனுப்செலின்
ஓளிப்பதிவு
நாகேஷ் வி ஆச்சார்யா




கே.ஆர்.மார்க்கெட்டை தன் வசமாக்கிக் கொண்டு தாதாவாக இருக்கிறார் பார்த்திபன். இந்த மார்க்கெட்டுக்கு தாதாவாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் சரத் லோஹிதஸ்வா. ஜெயில் இருக்கும் இவர் மகன் வெளியே வந்தவுடன் பார்த்திபனுடன் சண்டை போட்டு மார்க்கெட்டை கைப்பற்ற நினைக்கிறார்.

பார்த்திபனை அழிக்க சரத்தின் மகன் ஜெயிலில் பலருடன் நட்பை ஏற்படுத்தி ஆள் சேர்க்கிறார். பார்த்திபனுக்கு வலது, இடது கைபோல் இரண்டு பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரே பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.

[Image: 201907221717469628_1_KRMarket-3._L_styvpf.jpg]
[size][font][size][font]

இந்நிலையில், சரத் லோஹிதஸ்வா பார்த்திபனை சண்டைக்கு அழைக்கிறார். இதை பார்த்திபன் எப்படி எதிர்கொண்டார்? கே.ஆர்.மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கன்னட மொழியில் வெளியான தாதா இஸ் பேக் என்ற படம், தமிழில் கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் தாதாவாக நடித்திருக்கும் பார்த்திபன், தனக்கே உரிய பாணியில் கிண்டல், நக்கல், நையாண்டியுடன் கலக்கியிருக்கிறார்.

[/font][/size][/font][/size]
[Image: 201907221717469628_2_KRMarket-4._L_styvpf.jpg]
[size][font][size][font]

தாதா சீட்டை அடைய நினைக்கும் சரத் லோஹிதஸ்வாவின் வில்லத்தனம் சிறப்பு. அருண், அஜய், ஸ்ரவியா ஆகியோர் புதுமுக என்பதால், தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

தாதா கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் இப்படமும் பல திரைக்கதையின் சாயலுடன் இருக்கிறது. நாகேஷ்.வி.ஆச்சார்யாவின் கேமராவும், அனுப்செலின் - முஜிப் ரகுமான் இருவரும் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா’ சுமாரான தாதா[/font][/size]
[/font][/size]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஏ 1

[Image: 201907261928089264_A1-Movie-Review-in-Tamil_MEDVPF.gif]
நடிகர்
சந்தானம்
நடிகை
தாரா அலிசா பெர்ரி
இயக்குனர்
ஜான்சன் கே
இசை
சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு
கோபி ஜெகதீஷ்வரன்




நாயகி தாரா அலிசா ‘தளபதி’ படத்தில் வரும் ரஜினியை போல வீரமிக்க ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். அப்போது ஐயங்கார் தோற்றத்தில் வரும் சந்தானம், ரிட்டேரான ரவுடிகளை அடித்து நொறுக்குகிறார். இதைப்பார்க்கும் தாரா, அங்கேயே சந்தானத்திற்கு முத்தம் கொடுத்து தனது காதலை சொல்லுகிறார்.

மறுநாள் சந்தானம் ஒரு லோக்கல் ஏரியா பையன் என்று தெரிந்ததும், தன்னுடைய காதலை முறித்துக் கொள்கிறார் தாரா. இந்நிலையில், சமூக சேவகரும், ஊரில் மிகவும் மரியாதையும் கொண்ட தாராவின் தந்தை, நெஞ்சுவலியால் மயங்கி விழுகிறார். அவரை சந்தானம் மருத்துவமனையில் சேர்க்கிறார். இதையறியும், தாராவிற்கு மீண்டும் சந்தானம் மீது காதல் ஏற்படுகிறது. 

[Image: 201907261928089264_1_a11._L_styvpf.jpg]


தாராவை திருமணம் செய்வதற்காக, சந்தானம் தனது தந்தை எம்.எஸ்.பாஸ்கர், தாய் மீரா கிருஷ்ணன், லொள்ளு சபா மனோகர் ஆகியோரை அழைத்துக் கொண்டு தாரா வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு தாராவின் அப்பா, சந்தானம் மற்றும் குடும்பத்தினரை அவமானப்படுத்தி அனுப்புகிறார். இதனால், தாரா மீண்டும் சந்தானம் மீதான காதலை முறித்துக் கொள்கிறார். கடுப்பாகும் சந்தானம், தனது நண்பர்களிடம் தாரா அப்பாவை பற்றி கோபமாக பேச, அவர்கள் சந்தானத்திற்கு நல்லது செய்யும் நோக்கத்தில் தாரா அப்பாவை கடத்தி கொலை செய்து விடுகிறார்க ள்.


இதன்பின் என்ன ஆனது? சந்தானம் நாயகியை எப்படி கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

[Image: 201907261928089264_2_a14._L_styvpf.jpg]


நாயகன் சந்தானம், வழக்கம் போல் தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். உடனிருக்கும் நண்பர்களுக்கும் அதிகப்படியாக நடிக்க வாய்ப்பு கொடுத்து காமெடியில் ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறார்.

நாயகி தாரா அலிசா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தன் பங்குக்கு வந்து செல்லாமல், கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். சந்தானம் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக வரும் மூன்று பேரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 

[Image: 201907261928089264_3_a12._L_styvpf.jpg]


எளிமையான கதையை காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களை அழகாக கையாண்டிருக்கிறார். காமெடியை மட்டுமே முன்னிருத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார் ஜான்சன்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஏ 1’ காமெடி கலாட்டா.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ரொம்ப நாட்களா மூடிய திரையரங்கம் மீண்டும் திறப்பு.. முதல் படமே தல படம்.. எந்த தியேட்டர் தெரியுமா?
சென்னை மவுண்ட் ரோடு சிந்தாரிப்பேட்டை அமைந்துள்ள காசினோ திரையரங்கம் வெகு நாட்களாக மூடப்பட்டிருந்தது.  பல பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் இந்த திரையரங்கம் மூடப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் பிங்க் ரீமேக்கில் தமிழில் வெளிவர இருக்கும் நேற்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவர உள்ளது. முதல் முதலில் பிரம்மாண்டமாக தல படத்தை இந்த தியேட்டரில் இறக்கப் போவதாக  தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தலயை வைத்து தொடங்கினால் எல்லாமே வெற்றிதான் என்பது அவரின் நம்பிக்கை. தற்போது இந்த தியேட்டரில் ஆன்லைன் புக்கிங் இருப்பதால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான்.

[Image: casino-1.jpg]casino
[Image: casino.jpg]casino

Quote:[Image: ctO8A2Ju_normal.jpg]
[/url]Sangeetha Kandavel

@sang1983






Chennai’s iconic Casino Theatre to re-open with Ajith’s ‘Nerkonda Paarvai’ https://www.thehindu.com/entertainment/movies/casino-theatre-gets-a-revamp/article28709964.ece …
[Image: ucRk-pZp?format=jpg&name=600x314]
Chennai’s iconic Casino Theatre to re-open with Ajith’s ‘Nerkonda Paarvai’
The 78-year-old theatre is likely to open on August 8 again after its revamp
thehindu.com



1,149
4:27 PM - Jul 26, 2019
Twitter Ads info and privacy


528 people are talking about this

[url=https://twitter.com/sang1983/status/1154707219427889152]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வெப் சீரிஸில் காஜல் அகர்வால்

[Image: NTLRG_20190727150405205260.jpg]

சென்னை: வெங்கட் பிரபு இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது கமலில் இந்தியன் 2வில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தவிர குயின் பட ரிமேக்கிலும் நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் 'கோமாளி', தெலுங்கில் 'ரனரங்கம்' ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகின்றன.

இந்நிலையில், காஜல் அகர்வால் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 10 பகுதிகளைக் கொண்ட இந்த வெப் சிரீஸை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸிற்குப் பிறகு தான் சிம்புவின் மாநாடு படத்தை வெங்கட் பிரபு தொடங்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

சமீபகாலமாக திரைப்படங்களைவிட வெப் சீரிஸ் மீது திரை பிரபலங்களின் கவனம் அதிகரித்து வருகிறது. சென்சார் பிரச்சினை இல்லாததால், தங்களது மனதில் நினைத்ததை அப்படியே திரையில் காட்சிகளாக்கும் சுதந்திரம் வெப் சீரிஸில் இருப்பதாலேயே அதற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Chennai Palani Mars Review: பரமா... மரண பயத்த காட்டிட்டாங்க பரமா.. சென்னை பழனி மார்ஸ்..! விமர்சனம்

சென்னை: சிந்தனை ஆற்றல் வழியாக செவ்வாய்கிரகத்திற்கு செல்ல விடாமுயற்சி செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதையே சென்னை பழனி மார்ஸ்.
நாயகன் பிரவீன் ராஜாவின் குரலில் தான் படம் துவங்குகிறது. விஞ்ஞானியான பிரவீனின் தந்தைக்கு செவ்வாய்கிரகத்திற்கு போக வேண்டும் என்பது வாழ்க்கை லட்சியம். அதற்காக அவர் இஸ்ரோவில் வேலைக்கு சேராமல், ராவணன் போல் சிந்தனை ஆற்றலின் மூலமாக வேறு கிரகத்திற்கு பயணிக்க முடிவு செய்கிறார்.


[Image: chennaimarspalani-2-1564124539.jpg]

பிறரது பரிகாசங்களை காதில் போட்டுக்கொள்ளாமல் அப்பாவும், மகனும் ஒரு மலை உச்சிக்கு சென்று, ஆஸ்ட்ரோனட் போல உடையணிந்து கொண்டு, பிரமிட்டின் மினியேச்சர் போல ஏதோ ஒரு கருவியை கையில் வைத்துக்கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறார்கள்.
ஆண்டுக்கணக்காக அவர்கள் முயற்சி செய்தும், அந்த மலை உச்சியைவிட்டு அவர்களால் நகரமுடியவில்லை. 20 ஆண்டுகள் கழித்து அப்பாவின் கனவை நிறைவேற்றியே தீர வேண்டும் என சபதம் ஏற்கிறார் மகன். அவரது கணிப்பில் பழனி மலை உச்சிக்கு சென்று முயற்சித்தால் செவ்வாய்க்கு விசா கிடைத்துவிடும் என கண்டுபிடிக்கிறார்.

ஆனால் இதற்கிடையே போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நாயகன், தன்னை கிண்டல் செய்யும் நண்பனை கொலை செய்துவிட்டு போதை மருந்து மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுகிறார். பிறகு அங்கிருக்கும் மற்றொரு போதை நண்பருடன் பைக்கில் ஏறி தப்பித்து சென்னையில் இருந்து பழனிக்கு புறப்படுகிறார். அவரது பயணம் மார்ஸ்க்கு போய் முடிகிறதா என்பதே 'சென்னை பழனி மார்ஸ்'.
இதை படிக்கும் போது ஏற்படும் தலைச்சுற்றலைவிட படம் பார்க்கும் போது இன்னும் அதிகமாக ஏற்படும். கிட்டத்தட்ட ராட்சச ராட்டிணத்தில் ஏறி இறங்கும் போது ஏற்படுமே, அதுபோன்ற உணர்வு தான் நமக்கும் வரும்.


[Image: chennaimarspalani-1-1564124549.jpg]

படம் முழுக்க ஏதோ இரண்டு போதை ஆசாமிகளிடம் சிக்கிக்கொண்ட உணர்வு. ஆரஞ்சு மிட்டாய் எடுத்த இயக்குனரின் படைப்பா இது எனும் கேள்வி தான் படம் பார்த்த பிறகு ஏற்படுகிறது. அதுவும் இந்த படத்தின் கதை விஜய் சேதுபதியாம். சத்தியமா நம்ப முடியல.

நாயகன் பிரவீனும் அவருடய நண்பராக வரும் ராஜேஷ் கிரி பிரசாத்தும் சதா போதையிலேயே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் செய்யும் சேட்டைகள் லேசாக சிரிக்க வைத்தாலும், போக போக எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
படத்தின் முடிவில் இயக்குனர் ஒரு மெசேஜ் சொல்லியிருப்பார் பாருங்க, அது தான் செம ஹைலைட். அது என்னன்னா... ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாடி பல ஜென்ம உழைப்பு இருக்குமாம். கண்ணா பின்னான்னு படம் எடுத்துட்டு கடைசியில் மெசேஜ் சொல்றேன்னு எதையாவது போட்டு முடிக்கிறது இப்ப பேஷனா போயிடுச்சு.
படத்தின் ஒரே ஆறுதல் ஒளிப்பதிவு மட்டும் தான். அதற்காக வேண்டுமானால் பிஜுவை பாராட்டலாம். இண்டர்வெல் பிளாக்கில் வரும் சில்ஹவுட் காட்சி செம பீலிங். மற்றப்படி படத்தின் கதை, இயக்கம், எடிட்டிங் என எதையும் பாராட்ட முடியவில்லை.
நிரஞ்சன் பாபுவின் இசை ஆங்காங்கே லேசா வந்துட்டு போகுது. அதனால் ரசிக்க முடியவில்லை. "இத்தனை வருஷம் நீ அந்த மலைக்கு போனதுக்கு சபரி மலைக்கு போயிந்தா குருசாமியாவது ஆகியிருப்ப", என்பது போன்ற விஜய் சேதுபதியின் வசனங்கள் தான் மூச்சுவிட வைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டரும், அவருடன் வரும் கான்ஸ்டபிளும் தான் படத்தின் மற்றொரு ஆறுதல் ஐட்டங்கள்.

சென்னையில் இருந்து கிளம்பி பழனி போறத்துக்கு மெயின் ரோடு அவ்ளோ பெரிசா இருக்கும் போது, காடு, மேடு, சந்துலயே வண்டி ஓட்டிட்டு போறதெல்லாம் எந்த ஊர்ல நடக்கும்னு தெரியல. இந்த வண்டி நிச்சயம் செவ்வாய்க்கிரகம் வரைக்கும் இல்ல, வரும் செவ்வாய்க்கிழமை வரைக்கும் கூட போய் சேராது.

சென்னை பழனி மார்ஸ்... வெறி வெறி ஒர்ஸ்!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பெண்களை இடிக்கவே பேருந்தில் சென்ற பிக்பாஸ் சரவணன்.. இதுக்கு கைத்தட்டுவதா?.. சின்மயி சீறல்

சென்னை: பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றதாக பிக்பாஸ் சரவணன் கூறியுள்ளதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியின் 3-ஆவது சீசன் கடந்த 34 நாட்களாக நடைபெற்று வருகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கமல் ஹாசன் உரையாடுவார். இதில் நாமினேட் செய்யப்படுபவர்களில் யார் காப்பாற்றப்படுவார் என்பதை சனிக்கிழமை அறிவிப்பார்.
அது போல் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை ஞாயிற்றுக்கிழமைகளில் தெரிவிப்பார். இப்படியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


[Image: chinmayee-1564320427.jpg]






தொகுத்து வழங்கிய கமல்
இந்த நிலையில் நேற்றைய தினம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அப்போது இயக்குநர் சேரன் மீது மீரா மிதுன் வீண்பழி சுமர்த்தினார். அதாவது அந்த நிகழ்ச்சியில் டாஸ்கின் போது சேரன் தன்னை தவறாக இடத்தில் கைவைத்ததாக மீரா கூறியிருந்தார்.

[Image: kamal-012-1564238886-1564320413.jpg]
 

கருத்தை ஆமோதித்த சரவணன்
இந்த நிலையில் இதில் யார் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு குறும்படம் ஒளிபரப்பானது. இதையடுத்து மீராமிதுனிடம் கமல் பேசியது போது தெரியாமல் கை பட்டதற்கே இப்படி செய்கிறீர்களே அரசு பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே முண்டியடித்து கொண்டு பயணம் செய்வோர்களும் உண்டு. அப்படியிருக்கும் போது நீங்கள் பஸ்ஸில் எல்லாம் பயணம் செய்ய முடியாது போலயே என கமல் கூறிய கருத்தை சரவணன் ஆமோதித்தார்.

[Image: saravanan4555656-1564320420.jpg]
 

புனிதராகி
இதற்கு கமல், பாருங்கள் சரவணன் கூட இது போன்ற அநியாயத்தை தட்டிக் கேட்டிருக்கிறார் போல் என கூற, அதற்கு சரவணனோ சார் நான் கல்லூரி படிக்கும் பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் பயணம் செய்துள்ளேன் என்றார். இதற்கு நீங்கங்கள் அதையும் தாண்டி புனிதராகிவிட்டீர்கள் என்றார்.


Quote:[Image: uwHYZKle_normal.jpg]
[/url]Chinmayi Sripaada

@Chinmayi





A Tamil channel aired a man proudly proclaiming he used the Public Bus Transport system to molest/grope women - to cheers from the audience.

And this is a joke. To the audience. To the women clapping. To the molester.

Damn. https://twitter.com/sindhu0/status/1155195837191901185 …
Sindhu@sindhu0
@Chinmayi -க்கான பதிலில்
Check this



[Image: evACF6KSFq-hfM8T?format=jpg&name=small]




3,619
முற்பகல் 12:50 - 28 ஜூலை, 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 2,363 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/Chinmayi/status/1155196265363197953]





வீடியோ
இதை கேட்ட பார்வையாளர்கள் கைதட்டினர். இந்த வீடியோவை பாடகி சின்மயிக்கு சமூகவலைதளத்தில் ஒருவர் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ குறித்து சின்மயி கூறுகையில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறுகிறார்கள். அதையும் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்களுக்கும் நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பெண்களும் ஆடியன்ஸும் கை தட்டுகிறார்கள் என கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ராஜபக்சே அடிமை முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதா? விஜய்சேதுபதிக்கு விசிக எதிர்ப்பு

சென்னை: ஈழத் தமிழர்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்கும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது வரலாற்று பிழை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சமூக வலைதளத்தில் எழுதியுள்ளதாவது:
நடிகர் விஜய்சேதுபதி இலங்கை விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்துள்ளது. வருத்தத்தை தருகிறது.


[Image: vijay22311112-1564398769.jpg]



விஜய் சேதுபதி இன உணர்வாளர்
நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகர். பண்பாடு மிக்க, மனிதநேயமிக்க மனிதர். நடிப்பு அவரது தொழிலாக இருந்தாலும் சமூக அக்கறையோடும் தமிழின உணர்வோடும் செயல்படுபவர். அப்படிப்பட்டவர் முத்துயா முரளிதரன் போன்ற ராஜபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது.

[Image: vijay223111-1564398777.jpg]
 
[color][font]

தமிழர் என்பதில் அவமானப்படும் முரளி
முத்துயா முரளிதரன் கண்டியில் பிறந்து தமிழராக இருந்தாலும் ஒரு சிங்களராகவே வாழ்ந்து வருபவர்.தமிழர் என்று சொல்வதில் அவமானப்படுபவர். சில ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி 'தனக்கு தமிழ் தெரியாது" என்று சிங்களத்தில் உரையாடிய போது ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் முத்தையா முரளியை தாக்க முற்பட்டார்கள் என்பதெல்லாம் தனி வரலாறு.

[Image: vanniyarasu2-1564398818.jpg]
[/font][/color]
 
[color][font]

முத்தையா முரளிதரன் துரோகி
சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக்கொண்டிருந்த போது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்து வருபவர். இதை விட கொடுமை தமிழினப்படுகொலைக்கு பிறகு பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு போகாமல், சிங்கள கிராமங்களுக்கு போய் ஆறுதல் சொன்னவர். அதுமட்டுமல்லாது,

[Image: muttiahmuralitharan-s01-600-1564398897.jpg]
[/font][/color]
 
[color][font]


தத்தெடுத்த சிங்கள கிராமங்கள்
தென்னிலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே வசிக்கும் 'தங்கல்லை"என்ற இடத்தில் இரண்டு சிங்கள கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறார். லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு, அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே என்று முத்தையா முரளிதரன் பாராட்டினார்.

[Image: vijay22323-1564398784.jpg]
[/font][/color]
 
[color][font]

விஜய் சேதுபதியின் வரலாற்று பிழை
இனப்படுகொலை நடத்திய ஒரு குற்றவாளிக்கு உறுதுணையாய் இருக்க கூடிய துரோகி முரளிதரனின் கதாபாத்திரத்தில் தமிழர்களால் அதிகம் நேசிக்ககூடிய விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகர் நடிப்பதை ஈழத்தமிழர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். ஒரு தமிழினத்துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு நல்லவனாக-நாயகனாக காட்ட முயற்சிப்பது வரலாற்று பிழையாகத்தான் முடியும்.

இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கடும் கோபத்தைக் காட்டிய கமல்.. பாவம் மீரா.. வனிதா அளவுக்குக்கூட பிக் பாஸும் கருணை காட்டலையே!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் மீது கமல் கடும் கோபத்தில் இருக்கிறார் என்பது நிகழ்ச்சியை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர், யார் சொல்வதையும் கேட்காமல் தான் சொல்வது தான் சரி என வாதாடுபவராக வந்து சேர்ந்து விடுகிறார். அந்தவகையில் இந்த சீசனில் மீரா மிதுன்.
அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சூழலிலும் கூட, தான் சொன்னது தான் சரி என கமலிடம் வாதாடினார். இதனாலேயே அவர் மீது கமலுக்கு கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.


[Image: meera22323-1564377988.jpg]



வனிதா:
பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தவர் வனிதா. இதனால் மக்கள் மத்தியில் அதிக வெறுப்புணர்வை சம்பாதித்தார். ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியேறிய போது, பிக் பாஸும் சரி, கமலும் சரி, அவர் மீதான தவறான விமர்சனங்களை மாற்றி, சிம்பதி ஏற்படும் வகையில் பேசினர்.
[Image: meera-1564377995.jpg]
 
[color][font]
பாவம் மீரா:
இதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, வனிதா அவ்வளவாக பிரச்சினையில் சிக்கவில்லை. மீண்டும் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று தான் மக்கள் விரும்பினர். ஆனால் மீரா விசயத்தில் அப்படியில்லை. அவர் என்ன எதிர்பார்த்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றாரோ, அதை முழுவதும் நிறைவேற்றாமலேயே அவர் வெளியில் வந்து விட்டார்.
[Image: meera12323-1564377980.jpg][/font][/color]
 
[color][font]
ஜூலி:
குறும்படத்திலும் சரி, கமலின் மேடையிலும் சரி மீராவுக்கு பேசுவதற்கு வாய்ப்பே தரப்படவில்லை. அவர் அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், மீரா மீதான மக்களின் பார்வை மாற, கமல் வாய்ப்பே தரவில்லை. முந்தைய சீசன்களில் ஜூலி, காயத்ரிக்கு கூட, தனிப்பட்ட முறையில் தனது ஆதரவைத் தெரிவித்து, மக்களிடம் இருந்து காப்பாற்றினார் கமல்.

[Image: bb22223-1564378004.jpg][/font][/color]
 
[color][font]

கமல் கோபம்:
ஆனால், மீரா விசயத்தில் அது கடைசி வரை நடக்கவேயில்லை. அகம் டிவி வழியே பேசிய போதுகூட, மீராவிடம் அவ்வளவாக முகம் கொடுத்துப் பேசவில்லை கமல். சேரன் விவகாரத்தில் மீரா நடந்து கொண்டது கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கமல் எடுத்துக் கூறியும் கூட தன் கருத்தில் இருந்து மீரா பின்வாங்காதது கமலுக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தீபாவளிக்கு வெடிக்க இருக்கும் ’ ‘பிகில்’- ‘பட்டாஸ்’!!!
படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்

[Image: gous75ag_bigil-vijay-pattas-dhanush_625x...uly_19.jpg]
ஹைலைட்ஸ்

  1. தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கிறார்

    புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தனுஷுடன் ஸ்நேகா இப்படத்தில் நடிக்கிறார்

    பிகில் படத்தோடு இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது

[color][font]


வெற்றிமாறனின் வடச்சென்னையை அடுத்து தமிழில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தைத் தொடர்ந்து துறை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகி இருந்தார்.
இதனை அடுத்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷின் பிறந்தநாளான நேற்று படக்குழு வெளியிட்டது. சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு பட்டாசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இப்படத்தைப் பற்றி கூறியுள்ள இயக்குநர் துரை செந்தில் குமார், ‘படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படம் களரிக்கு முன்பு சோழர் காலத்தில் இருந்த ஒரு தற்காப்பு கலையை மைய்யப்படுத்தியது.


இந்த கதாபாத்திரத்திற்காக தனுஷ் மற்றும் ஸ்நேகா 15 முதல் 20 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டனர். இப்படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உணர்ச்சிபூர்வமான படமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
COMMENT
பட்டாஸ் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நேர்கொண்ட பார்வைக்கு நெருக்கடி.. அஜித் படத்தை கார்னர் செய்யும் தயாரிப்பாளர் சங்கம்.. காரணம் இதுவா?

சென்னை: தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்று கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், சேலம் ஏரியா விநியோகஸ்தர்கள் கவுன்சிலும் அவசர ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ் விக்ரம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இனி சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது.


[Image: movie657-1564464082.jpg]



டிஜிட்டல் பிரிண்ட்கள்:
சேலம் ஏரியாவை பொறுத்தவரை டாப் ஹீரோக்களின் படங்கள் குறைந்தபட்சம் 65 டிஜிட்டல் பிரிண்ட்கள் ரிலீஸ் செய்யப்படும். அதாவது 65 திரையரங்குகள் அல்லது ஸ்கிரீன்களில் திரையிடப்படும். அப்போது தான் வியாபாரம் அதிகமாக நடைபெறும். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் திடீரென இப்படியொரு நிபந்தனை விதித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
[Image: ner-konda-paarvai-1564464065.jpg]
 
[color][size][font]
நேர்கொண்ட பார்வைக்கு பிரச்சினை:
குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதிய கட்டுபாடுகள் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் 8ம் தேதி வெளியாகிறது. விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால், இந்த படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த வேளையில் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பு, நேர்கொண்ட பார்வை படத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
[Image: nerkondapaarvaitrailer-1564464047.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
ஆலோசனை கமிட்டி:
ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பொறுத்தவரை தற்போது இருப்பது ஆலோசனைக் கமிட்டி மட்டுமே. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தான் தற்போது நிர்வாகிகளாக உள்ளனர் என்பதால், அவர்கள் எடுக்கும் எந்த முடியும் யாரையும் கட்டுப்படுத்தாது என்ற பேச்சும் இருக்கிறது.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: ajith-kumar-1564464025.jpg]
 


சேலம் சிண்டிகேட்:
இது ஒருபுறம் இருக்க சேலம் ஏரியாவை பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் சங்கத்தைவிட, அங்குள்ள சில முக்கிய புள்ளிகள் தான் வலுவானவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த சிண்டிகேட்டை உடைக்கவே தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக பேசப்படுகிறது.
[Image: tamilfilmproducerscouncil-1564464222.jpg]
 

8ம் தேதி தெரியும்:
ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அந்த சிண்டிகேட்டை எதுவும் செய்ய முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இது எல்லாமே வரும் 8ம் தேதி தெரிந்துவிடும் என்கிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்திற்கு சேலம் ஏரியாவில் எத்தனை டிஜிட்டல் பிரிண்டுகள் போடப்படுகின்றன என்பதை பொறுத்தே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வலிமை தெரியவரும்
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 12 Guest(s)