Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--title-color)]ஆடை' பட போஸ்டர்களை அகற்றுங்கள்!'' - கொதிக்கும் அரசியல் கட்சி[/color]

[color=var(--title-color)]ஆடை' படத்தின் போஸ்டர்களை அகற்ற வேண்டும் எனக் கூறி சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.[/color]
[Image: vikatan%2F2019-07%2F5ebfa413-1c56-4ff4-b...2Ccompress][color=var(--meta-color)]ராஜேஸ்வரி பிரியா[/color]
[color=var(--content-color)]நடிகை அமலாபால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் போஸ்டர்களை அகற்ற வேண்டும் எனக் கூறி சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 'மேயாத மான்' இயக்குநர் ரத்னகுமார் இயக்கி, அமலாபால் நடித்திருக்கும் 'ஆடை' திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, 'ஆடை' படத்தின் போஸ்டர்களை அகற்ற வேண்டும் எனக் கூறி சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்தார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F39720054-71ca-430f-b...2Ccompress]
புகார் கடிதம்
[/color]
[color=var(--content-color)]பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆபாசக் காட்சிகளை வைத்து போஸ்டர்களை ஒட்டிப் படத்தை விளம்பரப் படுத்தக் கூடாது. மற்ற காட்சிகள் இருக்கும்போது இதை மட்டும் வைத்து ஏன் விளம்பரம் செய்கிறார்கள். வியாபார நோக்கத்துக்காகப் பெண்களை இழிவுபடுத்துவதுபோல இருக்கிறது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[color=var(--content-color)]அதைத்தான் நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என டி.ஜி.பி உறுதியளித்திருக்கிறார். திரைப்படத்தில் காட்சி வருவதைப் பற்றிப் பேச முடியாது. சென்சார் போர்டு அதற்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள். அதனால், ஆபாச காட்சிகளை நீக்குங்கள் எனச் சொல்ல முடியாது. விருப்பப்பட்டவர்கள் அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள். ஆனால், ஆபாச போஸ்டர்கள் ஒட்டும்போது அதைக் கடந்து செல்லும் 10 வயதுச் சிறுவன் முதல் அனைவரும் பார்த்து மனநிலை நிச்சயமாக மாறும்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fb867795a-062a-4765-a...2Ccompress]
ராஜேஸ்வரி பிரியா
[/color]
[color=var(--content-color)]சமூக அக்கறை இருந்தால், அமலாபால் இப்படிச் செய்திருக்க மாட்டார். அவருக்குத் தேவை விளம்பரம், பணம். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். ஏற்கெனவே பொள்ளாச்சி சம்பவங்கள் உட்பட அதிகமான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில், இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்படுவது இன்னும் குற்றங்களை அதிகப்படுத்தும். மேலும், பாஞ்சாலி குறித்துப் பேச நடிகை அமலாபாலுக்குத் தகுதியே கிடையாது" என்றார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை - வனிதா

[Image: NTLRG_20190718150450288773.jpg]

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இரவு முழுவதும் விளக்குகள் எரிந்த வண்ணம் தான் இருக்கும் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வெளியேறியவர் வனிதா விஜயகுமார். அவர் வீட்டில் இருந்தவரை, பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தார். வீடே எப்போதும் சண்டை சத்தமாக இருந்தது. இப்போது வனிதா வெளியேறி விட்டதால், நிகழ்ச்சியே அவ்வளவாக சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது.

இந்நிலையில், வனிதா பிக்பாஸ் வீட்டில் கிடைத்த அனுபவங்கள் குறித்து பேட்டியளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்களாம். ஆனால், ஒரு சில நிமிடங்களில் மீண்டும் விளக்கைப் போட்டு விடுவார்களாம். இரவு முழுவதும் விளக்கு வெளிச்சத்தில் தான் போட்டியாளர்கள் உறங்குவார்களாம்.

பகலிலும் பிக்பாஸ் வீட்டில் தூங்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், இரவில் இப்படி விளக்குகளை எரிய விட்டால் எப்படி, போட்டியாளர்கள் பாவமில்லையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஹகூனாமட்டாரா".. சீறும் சிம்பா.. கலாய்க்கும் பும்பா.. தி லயன் கிங் விமர்சனம்

சென்னை: சூழ்ச்சியால் வீழ்த்தப்படும் ஒரு சிங்கக் குட்டி, வளர்ந்து பெரியவனாகி சிம்மாசனம் ஏறும் கதையே தி லயன் கிங்.
கார்ட்டூன் வெர்ஷனில் தி லயன் கிங் படம் பார்த்தவர்களுக்கு இந்த கதை ஒன்றும் புதிதல்ல. இன்னும் புரியும்படி சொல்வதென்றால், பாகுபலி கதையை லைட்டாக பட்டி, டிங்கரிங் பார்த்து காட்டுக்குள் ஓடவிட்டால், அதுவே தி லயன் கிங்கின் ஸ்டோரி.


[Image: lion-king23223-1563500492.jpg]


உலகின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் ஒரு பெரிய காடு. அந்த காட்டின் அரசன் முஃபாசா (அப்பா சிங்கம்). சூரியனின் ஒளிபடும் இடம் அனைத்தும் முஃபாசாவின் ராஜ்யத்துக்கு உட்பட்டவை. அப்பாவின் பாசமிகு மகன் சிம்பா (குட்டிச்சிங்கம்). முஃபாசாவிற்கு பிறகு அந்தக் காட்டை ஆளப்போகும் இளவரசன். அத்தை மகள் நாலாவுடன் (பெண் சிங்கம்) ஊர் சுற்றி... ஸாரி காட்டைச் சுற்றி டூயட் பாடி திரிகிறான் சிம்பா.
முஃபாசாவின் அரியணை மீது அதன் தம்பி ஸ்காருக்கு (சித்தப்பா சிங்கம்) பேராசை. உடல் வலிமையற்ற ஸ்கார் பெரிய தந்திரக்காரன். சூழ்ச்சி செய்து அரியணை ஏற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். ஒருநாள் ஸ்காரின் திட்டம் நிறைவேறுகிறது. கழுதைபுலிகளுடன் சேர்ந்து, சதி செய்து முஃபாசாவை கொலை செய்து, சிம்பாவை காட்டை விட்டே ஓடவிட்டு, ஆட்சியை கைப்பற்றுகிறான். அருமையான காடு, சுடுகாடாக மாறுகிறது.
உயிர் பிழைக்க தப்பி ஓடும் சிம்பா, வேறு ஒரு காட்டுக்கு போகிறான். தான் ஒரு சிங்கம் என்பதையே மறந்து, பும்பா (காட்டுப்பன்றி) மற்றும் டிபுனுடன் (தேவாங்கு) சேர்ந்து வளர்கிறான். உருவத்தில் தனது தந்தை போலவே காட்சியளிக்கும் சிம்பா, ஸ்காரை வெற்றி பெற்று எப்படி ஆட்சி அமைக்கிறான் என்பதே சுவாரஸ்ய வசனங்களுடம் பயணிக்கும் மீதிக்கதை.
வாவ்... இப்படி ஒரு உயிரோட்டமான படத்தை பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. கார்ட்டூன் வெர்ஷனில் 3 பாகங்களாக வெளிவந்த தி லயன் கிங்கின், சிங்கிள் வெர்ஷன் இது. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதற்கு தி லயன் கிங் ஒரு மிகப்பெரிய சான்று. எது கிராபிக்ஸ், எது நிஜம் என பிரித்து பார்க்க முடியாது அளவுக்கு, அத்தனை உண்மையாக உள்ளன காட்சிகள்.


[Image: lion-king-1563500499.jpg]


ஆங்கிலப் பதிப்பைவிட தமிழ் பதிப்பு தான் மிக சுவாரஸ்யம். அதற்கு முக்கிய காரணம் நம் டப்பிங் கலைஞர்கள். ஹாலிவுட்காரர்கள் என்ன தான் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்திருந்தாலும், எந்த நாட்டு படத்தையும் நம் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, சுவையாக மாற்றக்கூடிய வல்லவர்கள் நம் டப்பர்கள்.
சாசு எனும் மரங்கொத்தி பறவைக்கு குரல் கொடுத்திருக்கும் மனோபாலா, சின்ன சின்ன டைமிங் டயலாக்குளால் மனதை கொத்துகிறார். காட்டுப்பன்றி பும்பாவுக்கு குரல் கொடுத்திருக்கும் ரோபோ சங்கரும், டிபூன் எனும் தேவாங்குக்கு குரல் கொடுத்திருக்கும் சிங்கம்புலியும் காட்டுக்குள் செய்யும் அட்ராசிட்டி, செம வெரைட்டி. அவங்க நடிச்ச படங்களில்கூட இந்த அளவுக்கு சுவாரஸ்யமா வசனம் பேசியிருப்பாங்களாங்குறது டவுட் தான்.
"இந்த தண்ணியில்லா காட்டுக்கா இவ்வளவு பெரிய சண்டை", என டிபூன் கேட்கும் போது, நம்ம மைண்ட் வாய்சை கேட்ச் செய்த மாதிரி தியேட்டரில் அப்படி ஒரு சிரிப்பொலி. வில்லன் ஸ்காருக்கு அரவிந்த்சாமியின் குரல் அவ்வளவு கச்சிதம். கொஞ்சம் கூட பிசிர் இல்லாமல் செமையாக செட்டாகி இருக்கு. சிம்பாவுக்கு நம்ம சித்தார்த் குரல் அதேபோல தான். என்ன குட்டி சிம்பா குரல் கொஞ்சம் அதிகமாகவே டாமினேட் பண்ணிட்டதால, சித்தார்த் குரல் அவ்வளவா எடுபட. சில காட்சிகளில் பாய்ஸ் படத்துல ஜெனிலியாவிடம் சித்தார்த் பேசுவது போன்ற உணர்வே ஏற்படுகிறது.

தமிழ் வெர்ஷனின் மிகப்பெரிய பலமே டப்பிங் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தகுந்த மாதிரி, ஆட்களை பிடிச்சு போட்டிருப்பதற்கு மில்லியன் லைக்ஸ். சின்ன பசங்க மட்டுமில்லாம, பெரியவங்களும் சேர்ந்து என்ஜாய் பண்ணும் விதமாக தி லயன் கிங்கை மாத்தியிருக்காங்க.
தமிழ் படங்களை போல அடிக்கடி பாடல்களும் ஒலிக்குது. ஆனால் அவையும் சுவாரஸ்ய சுகமே. "டேய் மறுபடியும் பாட்டு போடாதீங்க. எழுந்து போய்ட போராங்கன்னு", சிங்கம்புலி கவுண்டர் தரும் போது தியேட்டரே சிரிப்பலையில் மூழ்கிடுது.
தமிழில் இப்படி ஒரு நேரடி படம் வருவதற்கு இன்னும் எத்தனை வருஷம் பிடிக்கும் என்பது தெரியவில்லை. பசுமை நிறைந்த காடு, தகிக்கும் பாலைவனம், பொட்டல்காடான மலைமுகடு, கூட்டம் கூட்டமாக திரியும் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், குரங்கு, மான், என ஒரு பெரிய டிரிப்புக்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்கள். தி லயன் கிங் நிச்சயமாக ஒரு அபூர்வமான அனுபவம். எவ்வளோ செலவு செய்து மொக்கப் படத்துக்கு எல்லாம் போறோம். இந்த படத்தை பார்க்கலைன்னா எப்படி?

ஏ.. மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் பீல் பண்ணுவீங்க.
பி.கு: தொழில்நுட்பக் கலைஞர்களைப் பத்தி இங்க அதிகம் பேச வேண்டிய தேவையில்லை. காரணம் வழக்கம் போல், ஹாலிவுட் தரத்தில் படத்தைத் தந்திருக்கிறார்கள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]நேர்கொண்ட பார்வை'யின் வியாபார வியூகம்!- வசூலில் சாதனை படைக்குமா அஜித் படம்?
[color=var(--content-color)]சக்தி தமிழ்ச்செல்வன்[/color]
[color=var(--title-color)]தமிழகம் முழுக்க ஒருவருக்கே படத்தை விற்காமல், ஏரியா வாரியாகப் பிரித்து விற்கலாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.[/color]
[/color]
[Image: vikatan%2F2019-07%2F047e4bea-da30-4824-b...2Ccompress][color=var(--meta-color)]நேர்கொண்ட பார்வை[/color]
[color=var(--content-color)]அஜித்தின் நடிப்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது, `நேர்கொண்ட பார்வை'. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து பரபரப்பான வெற்றியைப் பெற்ற `பிங்க்' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F46cd7a59-e0e4-42d9-a...2Ccompress]
அஜித்
[/color]
[color=var(--content-color)]`சதுரங்கவேட்டை', 'தீரன்' ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள `நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில், ஷ்ரத்தா ஶ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், அஜித்தின் முந்தைய படமான `விஸ்வாசம்' நல்ல வசூலைக் குவித்ததால், இந்தத் திரைப்படத்தை நல்ல விலைக்கு விநியோகஸ்தர்களிடம் விற்கலாம் எனத் திட்டமிட்டது படக்குழு.[/color]
[color=var(--content-color)]ஆனால், தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்த விலைக்கு விநியோகஸ்தர்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டவே, தயாரிப்பு நிறுவனமே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. தமிழகம் முழுக்க ஒருவருக்கே படத்தை விற்காமல், ஏரியா வாரியாகப் பிரித்து விற்கலாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fda442bde-7f1b-4ad7-a...2Ccompress]
விஸ்வாசம்
[/color]
[color=var(--content-color)]அப்படி விற்பனை செய்யும் பட்சத்தில் `விஸ்வாசம்' படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தைவிட, நல்ல விலைக்குப் படம் விற்பனையாகும் எனத் திட்டமிட்டுள்ளனர். அமிதாப் ரோலில் அஜித் நடிக்கும் இப்படத்துக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் ரசிகர்களுடன் சேர்ந்து படக்குழுவும் காத்திருக்கிறது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கடாரம் கொண்டான் - சினிமா விமர்சனம்

[Image: _107943591_5393e68e-43a3-4226-a216-5bc38b696056.jpg]


திரைப்படம்
கடாரம் கொண்டான்


நடிகர்கள்
விக்ரம், அபி ஹசன், அக்ஷராஹாசன், லேனா


ஒளிப்பதிவு:
ஸ்ரீநிவாஸ் ஆர். குதா


படத்தொகுப்பு
கே.எல். பிரவீண்


இசை
ஜிப்ரான்


இயக்கம்
ராஜேஷ் எம். செல்வா




ஏற்கனவே பல மொழிகளில் எடுக்கப்பட்ட ஒரு கதை இப்போது 'கடாரம் கொண்டான்' மூலம் தமிழுக்கும் வந்திருக்கிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
2010ல் À bout portant என்ற பெயரில் ஒரு ஃபிரெஞ்சுத் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் 2014ல் கொரிய மொழியில் 'தி டார்கெட்' என்ற பெயரில் ரீ - மேக் செய்யப்பட்டது. பிறகு ஹாலிவுட்டிலும் Point Blank என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதுதான் இப்போது தமிழில் 'கடாரம் கொண்டான்'.
மலேசியாவில் ஒரு மருத்துவமனையில் ஜூனியர் டாக்டராக பணிபுரிகிறான் வாசு (அபி ஹசன்). அவனது மனைவி ஆதிரா (அக்ஷரா ஹாசன்) கர்ப்பிணி.
இந்த நிலையில், காயத்துடன் யாராலோ துரத்தப்படும் ஒரு நபர் (விக்ரம்) விபத்திற்குள்ளாகிறார். அந்த நபர் வாசு பணியாற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்.
[Image: _107944100_ee67e3a4-5165-43bd-8f06-8b71bb225acd.jpg]படத்தின் காப்புரிமைAFP
திடீரென ஆதிராவைக் கடத்தும் சில மர்ம நபர்கள், மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வாசுவுக்கு நிபந்தனை விதிக்கிறார்கள்.
அதன்படியே வாசு செய்ய முயலும்போது, நடுவில் சிலர் குறுக்கிட, எல்லாம் குளறுபடியாகிவிடுகிறது. முடிவில் வாசுவின் மனைவி மீட்கப்பட்டாளா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் மர்ம நபர் யார், அவரைத் துரத்தியது யார் என்பதெல்லாம் மீதிக் கதை.
ஒரு முழு நீள ஆக்ஷன் - த்ரில்லர் திரைப்படத்தை முடிந்த அளவு சிறப்பாகச் செய்திருக்கிறார் ராஜேஷ். படத்தின் முதல் காட்சியிலிருந்து முடியும்வரை ஒரே வேகத்தில் தடதடக்கிறது திரைக்கதை.
ஆனால், படத்தின் பிற்பகுதியில் காவல்துறை அலுவலகத்திற்குள் நடக்கும் காட்சிகள் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
[Image: _107943595_9bf16fda-ef34-465c-ba30-4a6360538c4e.jpg]
நாடு முழுவதும் தேடப்படும் இரண்டு குற்றவாளிகள் சர்வ சாதாரணமாக காவல்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து, அடித்து துவம்சம் செய்கிறார்கள்.
அதேபோல, ஒரு சாதாரண ஜூனியர் டாக்டர், தன் மனைவியைக் காப்பாற்ற காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கும் ஒரு மர்ம நபரை, அதுவும் மயக்கத்திலிருப்பவரை வெளியில் கொண்டுவந்து ஒப்படைக்க ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால், இந்த லாஜிக் மீறல்களையெல்லாம் கண்டுகொள்ளாவிட்டால் ரசிக்கக்கூடிய திரைப்படம் இது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, விக்ரமிற்கு சொல்லும்படியான ஒரு திரைப்படம். இந்தப் படத்தில் அவருக்கான வசனம் பத்து வரிகள்தான் இருக்கும். இருந்தபோதும், பல காட்சிகளில் உள்ளம் கவர்கிறார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வாசுவாக வரும் நாசரின் மகன் அபிஹசனுக்கு இது நல்ல அறிமுகம். மனைவியைத் தேடும் பரிதவிப்பை படம் முழுக்க சிறப்பாக செய்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் சில காட்சிகளிலேயே வந்தாலும் சொல்லத்தக்க பாத்திரம்.
[Image: _107940558_bdf2e4fc-c3e6-4c97-a1f0-88d500357699.jpg]
இந்தப் படத்தில் பின்னணி இசையும் ஒரு முக்கியப் கதாபாத்திரத்தைப் போலவே படம் முழுக்க வருகிறது. ஆனால், பல சமயங்களில் வசனங்கள் காதில் விழாத அளவுக்கு இருப்பதுதான் பிரச்சனை.
ஒரு காட்சியில், எதிரியைத் தேடிப்போகும் விக்ரம், அங்கிருப்பவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்திவிடுகிறார். அந்தக் காட்சியில் பின்னணி இசை உச்சத்தில் ஒலிக்கிறது.
எல்லோரையும் சுட்டு வீழ்த்திய பிறகு, அருகிலிருக்கும் ஒரு பெட்டியைப் பார்த்துச் சுடுகிறார். சட்டென இசை நின்றுவிடுகிறது. அந்தப் பெட்டியை படத்தின் துவக்கத்திலேயே சுட்டிருந்தால், வசனங்கள் ஒழுங்காகக் கேட்டிருக்குமே என்று தோன்றுகிறது.
[Image: _107943680_7df47155-6f0a-4fd7-9b00-7209f6c55e89.jpg]
படத்தில் வரும் இரண்டு பாடல்களுமே சிறப்பானவை. 'வேறென்ன வேணும், நீ மட்டும் போதும்' பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்று.
முன்னும் பின்னுமாக நகரும் இந்த த்ரில்லர் படத்தை, குழப்பமே வராத அளவுக்கு கச்சிதமாகத் தொகுத்திருக்கிறார் பிரவீண்.
கடந்த சில வாரங்களாக வெளியான பல திரைப்படங்கள் ஏமாற்றமளித்து வந்த நிலையில், இந்தப் படம் அந்த ஏமாற்றத்தைத் தீர்க்கிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
AADAI (TAMIL) MOVIE REVIEW

மேயாத மான் படத்துக்கு பிறகு ரத்ன குமார் இயக்கியிருக்கும் படம் ஆடை. இந்த படத்தின் நாயகி அமலா பால். தைரியமான, தெளிவான சிந்தனைகள் கொண்ட பெண். ஆண்களுடன் பைக் பந்தயங்களில் ஈடுபடுவார். யாரேனும் சவால்விட்டால் அதை நிறைவேற்றாமல் ஓய மாட்டார்.
டிவி சேனல் ஒன்றில் வேலை செய்யும் அமலா பால், விவேக் பிரசன்னா உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து பிராங்க் வீடியோ செய்து வருகிறார். ஒரு நாள் அமலா பாலின் பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்கள் இணைந்து தங்களது பழைய காலி அலுவலகத்தில் மது அருந்தி கொண்டாடுகிறார்கள். விடிந்ததும் பார்த்தால் அவர் யாருமற்ற பில்டிங் ஒன்றில் நிர்வாணமாக இருக்கிறார்.
அவரது அந்த நிலமைக்கு யார் காரணம்? அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே இந்த படத்தின் கதை. இந்த படத்தில் அமலா பாலை தவிர்த்து வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிர்வாணமாக நடிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். அதை முடிந்தவரை நேர்த்தியாக செய்திருக்கிறார். படத்தின் கதை அமலா பாலை சுற்றியே நகர்ந்தாலும் விவேக் பிரசன்னா, விஜே ரம்யா ஆகியோர் படத்துக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
அமலா பாலுக்கு பிறகு கவனம் ஈர்ப்பது ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். பெரும்பாலான காட்சிகளில் நிர்வாணமாய் அமலா ஓடித்திரிந்தாலும் அதனை துளியும் ஆபசமில்லாமல் பதிவு செய்திருக்கிறார். அதற்கு பிரதீப்பின் பின்னணி இசை துணை புரிந்திருக்கிறது.
நமக்கு தெரிஞ்சவங்கள பண்ணா தான் அது பிராங்க், யாரோ ஒருத்தர பண்ணா அது நியூசன்ஸ் போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. சமூக வலை தளங்களுக்கு அடிமையாகி அதனையொட்டி சமூகப் பிரச்சனைகளை அனுகும் இளைஞர்களுக்கு இந்த படம் சவுக்கடி கொடுக்கிறது.
படத்தில் ஒரு சில நம்பகத்தன்மையற்ற காட்சிகளால் சுவாரசியம் சற்று குறைகிறது. இறுதி காட்சிகளை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம். இருப்பினும் தற்போதைய சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை நறுக்கென சொன்ன விதத்தில் இயக்குநர் ரத்ன குமார் கவனம் ஈர்க்கிறார்

Verdict: அமலா பாலின் போல்டான நடிப்பு , சிறப்பான ஒளிப்பதிவு, இசை மற்றும் சமூக கருத்துக்களுடன் கவனம் ஈர்க்கிறது இந்த ஆடை
first 5 lakhs viewed thread tamil
Like Reply

சந்தானம் படத்துக்கு எதிர்ப்பு: பிராமணர் சங்கம் போலீசில் புகார்


[Image: santhanam.jpg]நடிகர் சந்தானம்

[Image: sficon.gif][Image: sticon.gif]
news18 
Updated: July 18, 2019, 8:04 PM IST

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘A1’ படக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமணர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா நடித்திருக்கிறார். இவர் '100% லவ்' என்ற தெலுங்கு படம் மற்றும் பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் இரண்டாவது டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த டீசரில், ஆஃப்பாயில் சாப்பிட்டு தனது காதலை நிரூபிக்கும் அக்ரஹாரத்து மாமி,  இதைக் கேட்டு மயங்கி விழுந்த தோப்பனார்’ என்ற வசனத்துடன் காட்சி இடம்பெற்றுள்ளது.

[Image: a1.jpg]

இந்த வசனத்தை நீக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலையத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் ஹரிஹரமுத்து மற்றும் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் படத்தின் இயக்குநர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

first 5 lakhs viewed thread tamil
Like Reply
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிக்பாஸ் வீட்டில் கவின் காதல் நாயகனாக சுற்றுவது ஏன் தெரியுமா? வனிதா போட்டுடைத்த உண்மை!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவின் ஏன் பெண்கள் உடன் கடலை போட்டுக்கொண்டு காதல் மன்னனாக சுற்றுகிறார் என்ற தகவலை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சாக்ஷி, ஷெரின், அபிராமி, லாஸ்லியா என கடலை போட்டு வந்தார். நான்கு பேரையும் காதலிப்பதாக முதலில் விளையாட தொடங்கிய அவர் பின்னர் சாக்ஷி மீது காதல் கொண்டார்.
சாக்ஷியும் கவினும் ஒருவருக்கொருவர் காதலை பரிமாறிக் கொண்டனர். ஒரு பக்கம் சாக்ஷியை காதலித்துக்கொண்டே மறுபுறம் லாஸ்லியாவையும் ஓட்டிக் கொண்டிருந்தார் கவின்.


[Image: kavin-23-1563639113.jpg]



வாய் திறக்கவில்லை
இது சாக்ஷிக்கு பிடிக்காமல் போகவே இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை காரணமாக வைத்து லாஸ்லியாவிடம் மேலும் நெருக்கம் காட்டிய கவின், தனக்கும் சாக்ஷிக்கும் இடையிலான காதல் குறித்து வாய்திறக்கவில்லை.
[Image: losliya0-1563639120.jpg]
 
[color][size][font]
திட்டிய லாஸ்லியா
இந்நிலையில் இந்த விவகாரம் மிகவும் தாமதாமாக லாஸ்லியாவுக்கு தெரியவந்தது. இதனால் கவினை எங்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறாய். சாக்ஷியுடனான காதல் குறித்து நீ என்னிடம் ஏன் சொல்லவில்லை. நீ செய்தது பெரிய தப்பு என பயங்கரமாக திட்டினார்.
[Image: kavin-32-1563639158.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்
பிக்பாஸ் வீட்டில் பெண்கள் பின்னாடி சுற்றுவதையே முழு நேர பணியாக வைத்திருந்தார் கவின். இதனால் சமூக வலைதளங்களில் கவினை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். சரவணன் மீனாட்சி மூலம் சம்பாதித்த பெயரையெல்லாம் மொத்தமாக கெடுத்துக்கொண்டார் கவின்.
[Image: vanithavijayakumar-15-1563639268.jpg][/font][/size][/color]
 
[color][size][font]

வனிதா ஒரே பிஸி
இந்நிலையில் கவின் ஏன் இப்படி கடலை, காதல் என சுற்றுகிறார் என்ற விவரத்தை விலாவாரியாக சொல்லியுள்ளார் வனிதா. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, டிவி சேனல்களுக்கு பேட்டிக் கொடுப்பதில் பிஸியாக உள்ளார்.

[Image: kavin-12-1563639218.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
சினிமாவில் காதல் நாயகனாக
அந்த வகையில் அவர் கொடுத்த பேட்டியில் கவினின் காதல் லீலைகள் குறித்து பேசியுள்ளார். அதாவது கவினுக்கு காதலும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாம். சினிமாவில் காதல் நாயகனாக நடிக்க விரும்புகிறாராம் கவின்.
[Image: vanitha56-1-1563639275.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
அப்படி வாய்ப்பு
அதற்காக பிக்பாஸ் வீட்டில் இப்படி நடந்துகொண்டால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நப்பாசையில் காதல், கத்தரிக்காய் என சுற்றுகிறாராம். இப்படிதான் ஒவ்வொருவரும் சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து ஒரு முகமூடி போட்டு சுற்றுகின்றனர் என போட்டுடைத்துள்ளார் வனிதா.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கடாரம் கொண்டான் படத்திற்கு தடை !!

தமிழகத்தில் வசூலைக் குவித்து வரும் விக்ரமின் கடாரம் கொண்டான் படம் மலேயாசியாவில் வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

[Image: vikram-kadaram-kondan.jpg]கடாரம் கொண்டான் படத்திற்கு தடை !!
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் விக்ரமை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் “கடாரம் கொண்டான். தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இப்படத்தினை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். 

முதலில் இப்படத்தில் கமலஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அரசியலில் ஈடுபட்ட காரணத்தால் கமல் நடிக்க முடியாமல் போகவே விக்ரம்நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. 

அக்‌ஷரா ஹாசன், நாசர் மகன் அபி ஆகியோர் வெகு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். விக்ரம் ஸ்டைலிஷானகேரக்டரில் நடித்துள்ளார். 

கடாரம் கொண்டான் படம் வெள்ளிக் கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கமல் தயாரிப்பு விக்ரமின் வித்தியாசமான கெட்டப் என படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. 

கடாரம் கொண்டான் நேற்று சென்னை திரையரங்குகளில் மட்டும் ரூ.52 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது. எதிர்ப்பார்ப்பை தாண்டி இது நல்ல வசூல் தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிக எதிர்பார்ப்பில் இருந்த ஆடை படம்முதல் மூன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டது இதனால் அந்த திரையரங்குகளிலும் கடாரம் கொண்டான் திரையிடப்பட்டது. 

மேலும், தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 4.5 கோடிகளுக்கு மேல்வசூல் செய்திருப்பாதாக தகவல்கள் தெரிவிக்கிறது 

கடாரம் கொண்டான் 2010ல் வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான Point blank படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். படத்தின் கதைக்களம் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடாரம் கொண்டான் மலேசியாவில் வெளியாக வில்லை. மலேசியா போலீஸை படத்தில் தவறாக சித்தரித்துள்ளதால்,Film Censorship Board of Malaysiaஇப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. இதனை பட விநியோகம் செய்யும் லோட்டஸ் ஃபைவ் ஸாடார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனால் மலேசியாவில் உள்ள ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் 


அண்மையில் வெளியான கடாரம் கொண்டான்திரைப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், மலேசியாவில் இப்படத்தை வெளியிடவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அன்று ஸ்கூல் … இன்று காலேஜ் – வெளியானது சமுத்திரக்கனியின் “அடுத்த சாட்டை” டீஸர்.

சமுத்திரகனி நடிப்பில், அன்பழகன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாட்டை’. அரசு பள்ளி ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காண்பித்திருந்தார்கள். மேலும் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு வரும் இடையூறுகள் பற்றியும் காண்பித்திருப்பர்.
கல்லூரி பின்னாளில் நடக்கும் இப்படத்தை அன்பழகன் தான் ‘அடுத்த சாட்டை’ என்று இப்படத்தை இயக்கியுள்ளார் . இதில் சமுத்திரகனி, யுவன், கன்னிகா ரவி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை. ஒளிப்பதிவு ராசாமணி. எடிட்டிங் நிர்மல்.


first 5 lakhs viewed thread tamil
Like Reply
தி லயன் கிங்', முதல் வார இறுதி இந்தியா வசூல் எவ்வளவு ?

[Image: NTLRG_20190722150644984922.jpg]

ஹாலிவுட்டின் பிரபலமான நிறுவனங்கள் தயாரிக்கும் பெரிய படங்கள் இந்தியாவிலும் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெறும். கடந்த சில வருடங்களாக வருடத்திற்கு ஒன்றிரண்டு ஹாலிவுட் படங்களாவது இந்தியப் படங்களின் வசூல் அளவிற்கு இந்தியாவிலும் வசூல் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த விதத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'தி லயின் கிங்' படமும் முதல் வார இறுதியில் இந்தியாவில் சுமார் 55 கோடி வரை வசூலித்துள்ளதாம். ஹாலிவுட் படங்களின் அதிக முதல் வார இறுதி வசூலில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்பு, இந்த வருடத்தில் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படம் முதல் வார இறுதி வசூலாக 158 கோடியையும், கடந்த வருடம் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் 94 கோடியையும் வசூலித்துள்ளது. 

'அவெஞ்சர்ஸ்' அல்லாத படங்களில் மற்ற ஹாலிவுட் படங்களின் வசூலை முறியடித்து 'தி லயன் கிங்' புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தியாவில் வெளியாகி உள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அழுது கொண்டே வெளியேறிய மோகன் வைத்யா

[Image: NTLRG_20190722140437230859.jpg]

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஏற்கனவே பாத்திமா பாபு மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் கடந்த வாரங்களில் வெளியேறினர். இந்த வாரம் சரவணன், மீரா, சேரன், அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோரது பெயர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. அதில், மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்ற மோகன் வைத்யா நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மோகன் வைத்யா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்பது தெரியாமலேயே, விளையாட்டாக சாண்டி மற்றும் கவின் அவருக்காக பாடல் ஒன்றை கம்போஸ் செய்து வைத்திருந்தனர். அந்தப் பாடலை கமல் பாடிக் காட்டச் சொன்னார்.

இதனால் கோபமடைந்த மோகன் வைத்யா, அதனை வெளிப்படையாக சக போட்டியாளர்களிடம் காண்பித்தார். பின் வழக்கம்போல், கண்ணீரே வராமல், கதறி அழுது, அனைவரையும் கட்டிப்பிடித்து விடை பெற்றார்.

மேடையில் கமலுடன் தோன்றிய போது, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வர மனதுக்கு கஷ்டமாக இருந்ததாகவும், அதனால் அழுததாகவும் கூறினார் மோகன் வைத்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
என்னடா காதல் இது.. காதலியேவே நாமினேட் செய்த கவின்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், தான் காதலிக்கும் பெண்ணையே நாமினேட் செய்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அந்த வகையில் முதல் வாரம் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.
கடந்த வாரம் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். நேற்று முன்தினம் மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


[Image: bigboss-32-1563818950.jpg]



இரண்டு பேர்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் புராசஸ் நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும்.
[Image: sakchi-1-1563818943.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சேரன் நாமினேஷன்
அதன்படி போட்டியாளர்கள் 2பேரை நாமினேட் செய்தனர். பிக்பாஸ் வீட்டின் விஷ பாட்டிலான சாக்ஷி, அபிராமியையும் மீராவையும் நாமினேட் செய்தார். இயக்குநர் சேரன் சாக்ஷி பெயரையும் கவின் பெயரையும் நாமினேட் செய்தார்.
[Image: cheran-1563818972.jpg]
 

சேரன் பெயரை சொன்ன ரேஷ்மா
மதுமிதாவும் கவின் பெயரையும் சாக்ஷி பெயரையும் நாமினேட் செய்தனர். ரேஷ்மா யாரும் எதிர்பாராத வகையில் சேரனுடன் ஒட்டி உறவாடிக்கொண்டே அவரது பெயரை நாமினேட் செய்தார்.
[Image: cheran-32-1563818980.jpg]
 

சேரன் செய்ததில்லை
சரவணனுக்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை வந்த நாள் முதல் சேரனை வைத்தேன் தீர்த்தேன் என்ற முடிவில் உள்ளார். வழக்கம்போல இந்த வாரமும் அவர் சேரனைதான் நாமினேட் செய்துள்ளார். ஆனால் சேரன் ஒருமுறை கூட சரவணன் பெயரை இதுவரை நாமினேட் செய்ததில்லை.

[Image: kavin-32-1563818936.jpg]
 


காதலிய நாமினேட் செய்த கவின்
அதெல்லாம் இருக்கட்டும் கவின் யாரை நாமினேட் செய்துள்ளார் என்று பாருங்கள். கவின், தான் உருகி உருகி காதலித்த சாக்ஷியின் பெயரை நாமினேட் செய்துள்ளார். நேற்று முன்தினம் போட்ட குறும்படத்திற்கு பிறகு கவினிடம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
[Image: meera-12-1563818965.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடம்

[Image: 201907221646359987_Kamal-playing-dual-ro...SECVPF.gif]

கமல்ஹாசன் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இயக்குநர் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து கமல் - சங்கர் கூட்டணியில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்தனர். போட்டோ ஷூட் முடிந்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் அதன் பிறகு அதனை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வாரம் இது தொடர்பாக ரகுமானை சந்தித்திருக்கிறார் கமல். ‘கமலுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என ரகுமான் பதிவிட்டு இருந்தார். கமலும் தலைவன் இருக்கின்றான் படத்தை உறுதி செய்தார்.

[Image: 201907221646359987_1_kam879._L_styvpf.jpg]



தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவ தாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான். 

அமைதிப்படை பாணியில் இந்த வேடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் தலைவன் இருக்கின்றான் படம் ஒரு சீரியசான அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். கமலின் அரசியலுக்கு இந்த படத்தின் கதை பெரிதும் உதவும் என்பதால் தான் இந்த படத்தை தூசி தட்டி எடுத்துள்ளார் என்கிறார்கள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஜோதிகாவின் 'ஜாக்பாட்' டிரைலர் எப்படி?

[Image: NTLRG_20190723170507746769.jpg]

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலரை, சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இன்று(ஜூலை 23) வெளியிட்டுள்ளனர்.


ராட்சசி படத்தில் செம சீரியசான கேரக்டரில் நடித்திருந்த ஜோதிகா, இப்படத்தில் அதற்கு நேர் எதிரான ஜாலியான கேரக்டரில் நடித்திருக்கிறார். டிரைலரிலேயே அவரும், ரேவதியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

நான் 100 காலா, 500 கபாலி, 1000 பாட்ஷா, என பஞ்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமே இல்லை. டிரைலரையே வித்தியாசமாக, 'காசு போட்டது சூர்யா, நடிச்சது ஜோதிகா, கூட நடிச்சது ரேவதி' என வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர்.

டாக்டர், போலீஸ் என பல கெட்டப்புகளில் ஜோதிகாவும், ரேவதியும் வருகின்றனர். எனவே நிச்சயம் இப்படத்தில் அவர்கள் தில்லாலங்கடிகளாகத் தான் நடித்துள்ளனர் எனத் தெரிகிறது. இந்த படம் அடுத்த மாதம் 2ம் தேதி ரிலீசாகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 18 Guest(s)