Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த மாதம் திரைக்கு வந்த படம் ‘மாரி 2’ . இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார் .
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற " ரவுடி பேபி " பாடல் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இப்பாடலின் வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது யூடியூப் ரெண்டிங்கில் இந்த பாடல் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சற்றுமுன்வரை 4.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார சாதனையை படைத்துள்ளது . இதன் மூலம் ரவுடி பேபி சிம்டாங்காரன் பாடலின் சாதனையை முறியடித்துள்ளது என்பது கூடுதல் தகவல் .
தனுஷ் எழுதி பாடியிருந்த ரவுடி பேபி பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடல் இவ்வளவு சாதனை படைக்க அராத் ஆனந்தியின் நடனம் முக்கிய பங்காக அமைந்துள்ளது என்கிறது சினிமா வட்டாரம்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
04-01-2019, 10:02 AM
(This post was last modified: 04-01-2019, 10:03 AM by johnypowas.)
பேட்ட’ படத்தின் கேரள உரிமையை வாங்கிய பிருத்திவிராஜ்
prithviraj jayasurya
சென்னை, ஜன.2: ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் கேரள மாநில உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான பிருத்திவிராஜ் வாங்கியிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் ஜன.10-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.
தமிழில் பேட்ட படத்தின் உரிமையை உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் வாங்கியிருக்கிறது.
தற்போது, கேரள மாநில உரிமையை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிருத்திவிராஜ் வாங்கியிருக்கிறார். பிருத்திவிராஜுக்கு சொந்தமான பிருத்திவராஜ் புரெக்டஷன் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் மேஜிக் பிரேம் என்ற நிறுவனமும் கூட்டாக இணைந்து பேட்ட படத்தின் வினியோக உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
05-01-2019, 12:50 PM
(This post was last modified: 05-01-2019, 12:51 PM by johnypowas.)
மீண்டுமீமீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்ண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்ம் `பேட்ட' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேறொரு படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் `பேட்ட' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
`பேட்ட' படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
`பேட்ட' படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படம் அரசியல் படமாக இருக்காது என்றும், சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். ரஜினி சென்னை திரும்பியவுடன் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் தொடங்கவிருக்கிறது. ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்த நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் கூறிய வேறொரு கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும், முருகதாஸ் படத்தை முடித்த பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்திற்கு பிறகு அவர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj #Rajinikanth167
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
2018-ல் இலங்கையின் வசூல் மன்னன் விஜயா? ரஜினியா? – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sri Lanka Top 5 Movies : 2018-ல் இலங்கையின் வசூல் மன்னன் விஜயா? ரஜினியா? என்று இலங்கையில் உள்ள பிரபல திரையரங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீஸாகி வருகின்றன. கடந்த 2018-ல் மட்டும் மொத்தம் 171 படங்கள் ரிலீஸாகி இருந்தன.
அவைகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் தான் பெரியளவில் வசூல் செய்து சாதனை படைக்கும்.
தமிழகத்திலும் பல்வேறு திரையரங்குகளில் விஜயின் சர்கார் படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ படமும் தான் இடம் பிடித்திருந்தன.
இந்நிலையில் தற்போது இலங்கையில் உள்ள பிரபல திரையரங்க நிறுவனமான வசந்தி சினிமாஸ் நிறுவனம் 2018-ன் டாப் 5 படங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.
இந்த லிஸ்டில் சர்கார், 2 பாயிண்ட் ஓ, காலா, கடைக்குட்டி சிங்கம், வடசென்னை ஆகிய படங்கள் பிடித்துள்ளன.
குறிப்பாக தளபதி விஜயின் சர்கார் படம் முதலிடத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ படம் இரண்டாம் இடத்தையும் காலா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
06-01-2019, 10:46 AM
(This post was last modified: 06-01-2019, 10:47 AM by johnypowas.)
மாணிக்
நடிகர்
மாகாபா ஆனந்த்
நடிகை
சூசா குமார்
இயக்குனர்
மார்டின்
இசை
சி.தரண்குமார்
ஓளிப்பதிவு
எம்.ஆர்.பழனிகுமார்
மா.கா.பா. ஆனந்த் பிறக்கும்போதே சர்ச்சைக்குரிய குழந்தையாக பிறக்கிறார். பிறந்த உடனே அவரை கொன்றுவிடும்படி சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் தனது குழந்தை மீதான பாசத்தால் மா.கா.பா.வின் அம்மா உயிர் தப்ப வைக்கிறார்.
இதையடுத்து பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கிறார் மா.கா.பா.ஆனந்த். பாட்டி இறந்த பிறகு, தனது நண்பன் வஸ்தவனுடன் சென்னை வரும் மா.கா.பா. தடைவிதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டியில் திரும்பவும் விளையாட வைத்து கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற சபதம் கொள்கிறா
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்த நிலையில், மா.கா.பா. சாமியார் ஒருவரை சந்திக்க, அவர் மா.கா.பா.வுக்கு தெரியாமல் அவருக்குள் இருக்கும் சக்தி பற்றி சொல்கிறார். அதை பரிசோதித்து பார்க்கும் மா.கா.பா., தாதாவான அருள்தாசிடம் மாட்டிக் கொள்கிறார். அருள்தாஸ், தான் சொல்வதை செய்யாவிட்டால் மா.கா.பா.வின் காதலி, குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.
கடைசியில் தனது சக்தியை வைத்து மா.கா.பா. பணம் சம்பாதித்தாரா? தனது கனவை நிறைவேற்றினாரா? தனது காதலியை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மா.கா.பா. ஆனந்த் வழக்கமான தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். சூசா குமார் படம் முழுக்க அழகு தேவதையாக வருகிறார். நடிப்பிலும் தேறியிருக்கிறார். மனோபாலா, மதுமிதா ஆகியோரும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார். வில்லன் அருள்தாஸ் அறிமுக காட்சியும் அவர் செய்யும் அலப்பறைகளும் காமெடி கலந்த பயத்தை உண்டு பண்ணுகிறது.
முழு காமெடி படத்தை எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் மார்டின் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு சில இடங்களில் மட்டுமே காமெடி எடுபடுகிறது. மற்றபடி வழக்கமான கதையாகவே காட்சிகள் நகர்கிறது
மா.கா.பா. ஆனந்த் வழக்கமான தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். சூசா குமார் படம் முழுக்க அழகு தேவதையாக வருகிறார். நடிப்பிலும் தேறியிருக்கிறார். மனோபாலா, மதுமிதா ஆகியோரும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார். வில்லன் அருள்தாஸ் அறிமுக காட்சியும் அவர் செய்யும் அலப்பறைகளும் காமெடி கலந்த பயத்தை உண்டு பண்ணுகிறது.
முழு காமெடி படத்தை எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் மார்டின் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு சில இடங்களில் மட்டுமே காமெடி எடுபடுகிறது. மற்றபடி வழக்கமான கதையாகவே காட்சிகள் நகர்கிறது.
[size][font]
சி.தரண்குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `மாணிக்' வீரியமில்லா டானிக். #MaaniikReview #Maaniik #MaKaPaAnand #SuzaKumar[/font][/size]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இளையராஜாவுக்குப் பாராட்டு விழா- விஷால்
இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது
. இசைஞானி இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திட உள்ளதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். அவருக்கு விழா எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா 75-வது வயது நிறைவு பெற்றதையொட்டி தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அவரின் இசை சேவையை பாராட்டி மாபெரும் விழா பிப்ரவரி 23 அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த கடந்த மூன்றாம் தேதி செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள மகேந்திரா வேர்ல்டு சிட்டி சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா மூலம் தெரிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்டது.
இதன் நிறைவு விழா இன்று மாலை மகேந்திரா சிட்டி மைதானத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால், திரைப்பட நடிகர் நாசர், பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இதில் வரும் பிப்ரவரி இரண்டாம் மற்றும் மூன்றாம் தேதிகளில் நடைபெற உள்ள மாபெரும் விழாவில் பல்வேறு பின்னணி பாடகர்கள் மற்றும் தென்னிந்திய பாடகர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளதாகவும் இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதன் தலைவர் விஷால் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடக்க விழாவும் டிக்கெட் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இசைஞானி இளையராஜா முதல் டிக்கெட்டை திரைப்பட நடிகர் நாசர் அவர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் விஷால் பேசுகையில் ’மாபெரும் இசைக் கலைஞரை கௌரவிப்பது நமது கடமை. இதை அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒருங்கிணைத்து அவர் வைக்க வரவைப்பது நமது இசைக்கு மகுடம் செலுத்துவது போன்றதாகும். மேலும் இசைஞானி இளையராஜாதனக்கு இசை மூலம் வரும் ராயல்டி தொகையை ஒரு ஒரு சிறு பங்கு தயாரிப்பாளர் சங்க சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.
மேலும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திட உள்ளதாகவும் இதன்மூலம் ஒரு பிரச்னையை முடிவுக்கு வர உள்ளதாகவும் இதனால் நலிந்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த தொகை செலவிடப்படும் என்பதும் தெரியப்படுத்தினர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பேட்ட, விஸ்வாசம் படங்கள் பொங்கலுக்கு 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நிறைய தியேட்டர்களில் 3 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையிலும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களையும் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.
இந்த படங்களுடன் போட்டியிடாமல் ஏற்கனவே சில படங்கள் ரிலீசை தள்ளி வைத்து விட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி அதிக காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைசெயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, ‘‘வழக்கமாக தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி 10–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இரண்டு படங்களுக்கும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு 2 படங்களும் லாபம் ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
08-01-2019, 09:53 AM
(This post was last modified: 08-01-2019, 09:54 AM by johnypowas.)
விஜய்யின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றார். தமிழகம் தாண்டி கேரளாவிலும் இவருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்நிலையில் விஜய்யின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் என்ன தெரியுமா? கேட்டால் உங்களுக்கே ஷாக் ஆகும்.
- சர்கார்- ரூ 252 கோடி
- மெர்சல்- ரூ 254 கோடி
- பைரவா- ரூ 116 கோடி
- தெறி- ரூ 152 கோடி
- புலி- ரூ 91 கோடி
இதன் மூலம் கடைசி 5 படங்களின் வசூல் மட்டுமே ரூ 865 கோடி வரை விஜய்க்கு உள்ளது, இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு விஜய் சென்றுவிட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
21 ஆண்டுகளுக்குபின் மோதும் ரஜினி, அஜித்... முந்துவது யார்?
21 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினியின் அருணாசலம், அஜித்தின் ராசி ஆகிய படங்கள் 3 நாள் இடைவெளியில் மோதின. இந்நிலையில், முதல் முறையாக ரஜினி, அஜித்தின் படங்கள் ஒரே நாளில் திரையில் மோதுவுள்ளன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கபாலி, காலா நல்ல படங்கள் தான் ஆனால்...: கார்த்திக் சுப்புராஜ்
சென்னை: கபாலி, காலா ஆகியவை நல்ல படங்கள் தான் ஆனால் அவற்றில் ஒரு விஷயம் இல்லை என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் நாளை ரிலீஸாக உள்ளது. அதிகாலை காட்சியை பார்க்கும் ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.
இந்நிலையில் படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேட்டி அளித்துள்ளார்.
ரஜினி
பேட்ட படம் ரஜினியின் மாஸ் அப்பீலை மீண்டும் கொண்டு வரும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். கபாலி மற்றும் காலா ஆகியவை நல்ல படங்கள். ஆனால் அந்த படங்களில் ரஜினி ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த மாஸ் அப்பீல் இல்லை. அதை பேட்ட படம் கொண்டு வரும் என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மாஸ்
பேட்ட படத்தில் மாஸ் மட்டும் இல்லை நல்ல கதையும் உள்ளது. கதையை மாஸ் ஓவர்டேக் செய்யாது. இது ரஜினியின் பழைய படங்கள் போன்றும் இருக்காது. இது தனித்துவமான கதை, அது ரஜினிக்காக ஸ்பெஷலாக எழுதப்பட்டது. ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் ரஜினி மாஸ் காட்சிகள் உள்ளன. இது புதிய கதை என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
படங்கள்
பேட்ட படத்தில் ரஜினி செய்யும் சில மேனரிசங்கள் அவரின் பழைய படங்களை கவுரவிக்கும் வகையில் இருக்கும். அவரின் முல்லும் மலரும் படத்தை கவுரவிக்கும் வகையில் தான் காளி என்று அவருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஸ்டைல்
கார்த்திக் சுப்புராஜ் கூறுவது போன்று காலா, கபாலி ஆகிய படங்களில் ரஜினியின் மாஸ் அப்பீல் இல்லை. பேட்ட பட ட்ரெய்லரை பார்த்தபோது பல காலம் கழித்து பழைய ரஜினியை அதே ஸ்டைலுடன் பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பேட்ட ரிவியூ... முதல் பாதி மாஸ், இரண்டாம் பாதி பக்கா மாஸ்
பொங்கல் விருந்தாக ரிலீஸாகியுள்ள 'பேட்ட' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக பூர்த்தி செய்துள்ளது.
சூப்பர்ஸ்டார் ரசிகர்களின் வெறித்தனமான எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் படம் தான் பேட்ட. இந்த படம் இப்படி இருக்குமோ? அல்லது அப்படி இருக்குமோ? என பல்வேறு எதிர்பார்ப்புகளோடு திரையரங்குகளுக்கு சென்ற அனைவருக்குமே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. ஏனென்றால், ரஜினியை இதற்கு முன்பு யாரும் பார்த்திடாத புதிய பரிமாணத்தில் செதுக்கி காட்டியுள்ளார் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியிஸம் தெறிக்கும் வகையில் திரைக்கதையும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளன.
ரஜினியை மாஸ் லுக்குடன் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கார்த்திக் சுப்பாராஜ் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, ஓப்பனிங் சீனும், இடைவேளை சீனிலும் சூப்பர்ஸ்டாரின் மாஸ் மகுடம் வேறு லெவலில் தூக்கி வைக்கப்பட்டிருக்கும். படத்தின் கதைக்களம் மலைப்பிரதேசத்தை பின்புலமாகக் கொண்டு நகர்வதால் சூப்பர்ஸ்டாருக்கு அளிக்கப்பட்டிருந்த உடைகள் அனைத்துமே ஸ்டைலின் உச்சமாக அமைந்திருந்தது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முதல் பாதியில் ரஜினியின் மெர்சலான நடிப்பைக் கண்டு வியந்திருந்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் மேலும் மேலும் காத்திருந்தது மாஸ் சர்ப்ரைஸ்கள். படத்தின் தொடக்க காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை ரஜினியிசம் பரவிக் கிடக்கின்றது. சூப்பர்ஸ்டாரின் 2 கதாநாயகிகளும் கலர்ஃபுல் கனாவாக திரையில் வலம் வருகின்றனர். ரஜினியின் மாஸ் ஸ்டைலுக்கு ஈடு இணையாக திரையை ஹோல்டு செய்தனர் திரிஷாவும், சிம்ரனும்.
விஜய் சேதுபதியின் கெத்தான கெட்டப் கலந்த நடிப்பும், அனிருத்தின் பின்னணி இசையும் படத்தின் சுவாரஸ்யத்தை குறையாமல் தாங்கிப் பிடித்தன. ரஜினியிஸத்தில் இந்த இருவரின் பங்களிப்பும் மிகப்பெரிய இடம் வகித்தன. இவர்கள் அத்தனை பேருக்கும் மேலாக ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு சிங்கிள் சிங்கிள் ஃபிரேம்களையும் அழகாக செதுக்கியுள்ளார். தலைவரின் ஸ்டைலும், திருவின் கேமரா ஹாண்ட்லிங்கும் இணைந்து நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது.
ஒரு ரஜினி ரசிகராக திரையரங்கிற்கு செல்வோர்களின் அனைத்து விதமான எதிர்பார்ப்புகளும் ஃபுல் மீல்ஸ் அளவுக்கு பூர்த்தியாகி இருக்கிறது என்பதே பேட்ட படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். 'ரஜினிஃபைடு' என்ற வார்த்தைக்கு இந்த பேட்ட படம் உயிர் கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. திரையரங்கிற்கு சென்று மக்கள் காசு கொடுத்து வாங்கும் டிக்கெட்டுக்கு வொர்த்தான படமாக பேட்ட திகழும் என்பது நீங்களும் படம் பார்த்த பிறகு தான் தெரியும்.
•
|