Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கொரில்லா திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல தரமான படங்களை கொடுத்தவர் ஜீவா. ஆனால், சமீப வருடமாக இவர் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகின்றார், அவரின் போராட்டத்திற்கு விடையாக அமைந்ததா இந்த கொரில்லா, பார்ப்போம்.
கதைக்களம்
ஜீவா சிறிய சிறிய திருட்டு வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகின்றார். அவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்று இருக்கும் விவேக் ப்ரசன்னா ஆகியோரும் உள்ளனர்.
இவர்கள் வீட்டின் கீழேயே வங்கியில் லோன் கேட்டு அழையும் ஒரு விவசாயிம் உள்ளார். இவர்கள் நால்வருக்குமே தற்போது தேவை பணம்.
இதற்காக எப்படியோ நால்வரும் இணைந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்க செல்கின்றனர். எதிர்ப்பார்த்தப்படியே வங்கியில் கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது இவர்களுடன் வந்த சிம்பன்ஸி அபாய பட்டனை அழுத்த போலிஸார் இவர்களை சுற்றி வளைக்கின்றனர். பிறகு என்ன இவர்கள் மாட்டினார்களா? இல்லை வெற்றிகரமாக பணத்தை வெளியே கொண்டு வந்தார்களா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜீவா எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்தவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்த வகையில் காமெடி கலந்த இந்த மெசெஜ் கதையை தேர்ந்தெடுத்ததில் கொஞ்சம் பாஸ் மார்க் வாங்கியுள்ளார்.
படமாக ஜாலியாக சென்றாலும் அதில் விவசாய கடன் ரத்து குறித்து பேசிய விதம் நன்றாக இருந்தது. அதே நேரத்தில் அட இன்னும் எத்தனை படத்தில் விவசாயிகள் மாட்டிக்கொள்வார்களோ என்ற அச்சமும் வருகிறது.
ஏனெனில் விவசாயிகள் வலியை பேசிய படங்கள் போக, இன்று விவசாயிகள் பற்றி பேசி கைத்தட்டல் வாங்க வேண்டும் போன்ற படக்காட்சிகள் தான் அதிகம் வருகிறது.
இன்றைய ட்ரெண்ட் வசனங்கள் குறிப்பாக தர்மாகோல் வைத்து யோகிபாபு செய்யும் காமெடி, சிஸ்டம் சரியில்லை, நேசமணி என இளைஞர்கள் கலாய்க்கும் அனைத்து விஷயங்களை படத்தில் அங்கங்கு தூவிவிட்டது சூப்பர்.
ஆனால், முகத்தை வைத்து தோற்றத்தை வைத்து, பெண்களை கிண்டல் செய்து வரும் வசனங்கள் சிரிப்பை வர வைத்தாலும் இன்னும் எத்தனை படத்தில் இதையே செய்வீர்கள்? அதை விட இந்த பொட்டேட்டோ மூஞ்சு, பர்கர் மூஞ்சு போன்ற வசனத்தை எப்போ விடுவீர்கள், சிரிப்பு வரவில்லை என்றாலும் தொடர்ந்து இதையேவா வைப்பது.
படத்திற்கு சிம்பன்ஸி எந்த ஒரு இடத்திலும் பெரிதாக பயனில்லை என்றாலும், ஏதோ பட்டன் அழுத்துவதற்கும் கவன ஈர்ப்பிற்கும் பயன்படுகின்றது. அதை எதிர்ப்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றம் தான்.
படத்தின் ஒளிப்பதிவு பல காட்சிகள் பாரீனில் செட் போட்டு இங்கு நடப்பது போல் எடுத்தாலும் நன்றாக மேட்ச் செய்துள்ளனர். பின்னணி இசை கலக்கல்.
க்ளாப்ஸ்
ஜீவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் அசால்ட்டான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.
வங்கிக் நடக்கும் கூத்துக்கள், குறிப்பாக யோகிபாபு காமெடி காட்சிகள்.
பின்னணி இசை
பல்ப்ஸ்
மிக செயற்கைதனமாக இருந்த சில எமோஷ்னல் காட்சிகள் மற்றும் வசனங்கள்.
லாஜிக் எத்தனை கிலோ.

மொத்ததில் லாஜிக் மீறிய ஒரு ஜாலி ரைட் தான் இந்த கொரில்லா
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
கன்னட நடிகர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் : நடிகை விஜயலட்சுமி கதறல்

[Image: NTLRG_20190712102615667854.jpg]

சென்னை: தமிழ் பெண் என்ற காரணத்தால், பெங்களூரில் சிக்கி அவதிப்படுவதாக, நடிகை விஜயலட்சுமி, திடீர் புகார் தெரிவித்துள்ளார்.


விஜய், சூர்யா நடித்த, ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், விஜயலட்சுமி. சமூக வலைதளத்தில் இவர் வெளியிட்டுள்ள, வீடியோ பதிவு: தமிழில், சினிமா வாய்ப்பு இல்லாததால், பெங்களூரு வந்தேன். இங்கு வந்து, இரண்டு படத்தில் நடித்தேன். அதன்பின், கன்னட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வற்புறுத்தினர்.

மருத்துவமனை
உடல்நிலையை காரணம் காட்டி மறுத்து விட்டேன். ஒரு கட்டத்தில், உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில், இரண்டு மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நடிகர் சுதீப் உதவினார். இதற்கிடையில், உடல்நிலை மோசமாகி, அங்கிருந்து, வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ரவிபிரகாஷ் என்ற கன்னட நடிகர், எனக்கு, 1 லட்சம் ரூபாய் கொடுத்து, உதவி செய்தார். அதன் காரணமாக, அவர், என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அதனால், அவர் மீது புகார் கொடுத்தேன்.

இதையடுத்து, எனக்கு அதிகம் செலவு செய்ததாகவும், என் சிகிச்சை பற்றியும் தவறான தகவல்களை, அவர் பரப்பினார். நான் தெரிவித்த புகாரில், அவர் மீது, போலீசில் வழக்குப்பதிவு செய்தனர்; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையுலகிலும், என்னை பற்றி, அவர் தவறாக சித்தரித்து உள்ளார்.

கஷ்டம்
இப்போது, நான் வீடு கூட இல்லாமல், ரொம்பவே கஷ்டப்படுகிறேன். இரண்டு வாரத்திற்கு முன், என்னை கைது செய்வதற்கு முயன்றனர். தமிழ் பெண் என்பதால், என்னை அதிகம் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். புகாரை கூட, கன்னடத்தில் எழுதி வரும்படி சொல்கின்றனர். நிறைய தமிழர்கள், இங்கு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்; அது வெளியே தெரிவதில்லை.

தமிழ் பெண்
இந்த ஊரில் சிக்கி, ரொம்பவே கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவி செய்ய வேண்டுகிறேன். நான் மீண்டும், சென்னை திரும்ப வேண்டும். நான்பட்ட கடன், 1 லட்சம் ரூபாயை திருப்பி தர வேண்டும். தமிழ் திரை உலகினர், எனக்கு உதவி செய்ய வேண்டும். இங்குள்ள கன்னட நடிகர்கள், போலீசார், வழக்கறிஞர் என அனைவரும், என்னை தமிழ் பெண் என்ற ஒன்றை கூறியே, சிரமப்படுத்துகின்றனர்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வெண்ணிலா கபடி குழு 2 - விமர்சனம்

விமர்சனம்
Advertisement

நடிப்பு - விக்ராந்த், பசுபதி, அர்த்தனா பினு
தயாரிப்பு - சாய் அற்புதம் சினிமாஸ்
இயக்கம் - செல்வசேகரன்
இசை - செல்வகணேஷ்
வெளியான தேதி - 12 ஜுலை 2019
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2/5

2019ம் ஆண்டில் வெளிவந்துள்ள மற்றுமொரு இரண்டாம் பாகத் திரைப்படம். முதல் பாகப் படங்கள் தனி விதத்தில் முத்திரை பதித்த நிலையில் எதற்காக இப்படி இரண்டாம் பாகப் படங்களை எடுத்து முதல் பாகத்தின் மரியாதையை குறைக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

இயக்குனர் செல்வசேகரன் கதைக்கான பின்னணி, கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் ஒரு யதார்த்தம் இழையோட இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், திருப்புமுனையான அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது.

குற்றாலம் அருகில் ஒரு கிராமத்தில் அரசு பஸ் ஓட்டுனராக இருக்கிறார் பசுபதி. கபடி விளையாட்டின் மீது அவ்வளவு ஆர்வம் கொண்டவர். வேலையை விட்டு கூட எங்கு கபடி நடக்கிறதோ அங்கு சென்றுவிடுவார். தொடர்ந்து அப்படி சென்றதால் வேலையை விட்டு சஸ்பென்ட் செய்யப்படுகிறார். சஸ்பென்ட் ஆகி வீட்டுக்கு வரும் அப்பா பசுபதியை, சற்றே ஏளனமாகப் பேசுகிறார் மகன் விக்ராந்த். மகனைக் கண்டிக்கும் அம்மா அனுபமா, பசுபதி யார் என்பதை மகனுக்குப் புரிய வைக்கிறார். திறமையான கபடி விளையாட்டு வீரரான பசுபதி, வீண் பழியால் பழனிக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து வெளியேறி குற்றாலத்தில் வந்து செட்டிலாகியுள்ளார். கபடி என்றாலே பிடிக்காத விக்ராந்த், அப்பாவுக்குத் தெரியாமல், சென்னை செல்வதாகச் சொல்லிவிட்டு, சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி பெறுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் நாயகன் விக்ராந்த்தா அல்லது பசுபதியா என்ற சந்தேகம் வருகிறது. படத்தின் கதை பசுபதியை மையப்படுத்திதான் நகர்கிறது. அதற்கேற்றபடி ஒரு காட்சியில் விக்ராந்த்தை சிலர் கொல்ல வர, அவர்களைக் கூட பசுபதிதான் காப்பாற்றுகிறார்.

இடைவேளைக்குப் பின்னர்தான் படம் விக்ராந்த்தைச் சுற்றி நகர்கிறது. கிராமத்து இளைஞராக கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாகச் செய்துள்ளார் விக்ராந்த். இடைவேளை வரை காதல், காதல் என அர்த்தனா பினு பின்னாடி சுற்றுகிறார். பின்னர் கபடி, கபடி என கணக்கம்பட்டி கிராமத்தைச் சுற்றுகிறார்.

கபடி விளையாட்டின் மீது வெறியராக நடித்திருக்கிறார் பசுபதி. குடும்பத்தை நேசிக்கும் அளவிற்கு கபடியையும் நேசிக்கிறார். சமயங்களில் அதைவிட அதிகமாகவே நேசிக்கிறார். இருந்தாலும் தன் குடும்பத்தினர் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறார் என்பதைப் புரிய வைக்கும் காட்சியில் கண் கலங்க வைக்கிறார். அப்படிப்பட்ட பாசமான மனிதருக்கு கிளைமாக்சில் அப்படி ஒரு முடிவைக் கொடுத்திருக்கக் கூடாது இயக்குனர்.

அர்த்தனா பினுவுக்கு அதிக வேலையில்லை. பாவாடை, தாவணியில் பாந்தமாய் வந்து போகிறார். விக்ராந்தைப் பார்த்து சிரிப்பதும், கொஞ்சம் கேலியாகப் பேசுவதையும் தவிர அவருக்கு வேலையில்லை.

அர்த்தனாவின் அப்பாவாக ரவி மரியா. எதற்குத் இப்படி கத்தி நடிப்பாரோ தெரியவில்லை. இடைவேளைக்குப் பின்னர்தான் சூரி வருகிறார். இருந்தாலும் ஒரு காட்சியில் கூட சிரிக்க வைக்கவில்லை. கிஷோர் வழக்கம் போல அவரது கதாபாத்திரத்தில் நிறைவு.

குற்றாலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அழகை ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி அழகாக படம் பிடித்திருக்கிறார். சாலைகளின் அழகு கூட ரசிக்க வைக்கிறது. செல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.

இடைவேளைக்குப் பின் படம் இப்படித்தான் போகப் போகிறது என்று புரிந்துவிடுகிறது. கொஞ்சம் பரபரப்பு, விறுவிறுப்பு என வித்தியாசமாக யோசித்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

வெண்ணிலா கபடி குழு 2 - நிலா அல்ல பிறை
Like Reply
அபிராமியை அழவைத்த வனிதா..! மூக்கை உடைத்த கமல்..! உச்சகட்ட பரபரப்பில் ப்ரோமோ..!

பிக்-பாஸ் தொடங்கியதில் இருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள வனிதா விஜயகுமார், மற்ற போட்டியாளர்களிடம் குரலை உயர்த்தி பேசி மற்றவர்களை பேசவிடாமல் செய்கிறார் என்று ரசிகர்கள் செம கோபத்தில் இருக்கின்றனர்.
இவரின் இந்த பேச்சுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், அடங்கி செல்கின்றனர். தர்ஷன் மட்டும் நேற்றைய போட்டியின் போது, வனிதாவிற்கு எதிராக பேசியிருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டிக்கான புரோமே அந்த தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியிருந்தது
[Image: D_WgRAIXYAAKw6T?format=jpg&name=small]
Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
[/url]Vijay Television

@vijaytelevision






தான் பேசுற அளவுக்கு கேக்கவும் வேணும்! #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision

4,359
4:52 PM - Jul 13, 2019
[color][size][font]

920 people are talking about this

[url=https://twitter.com/vijaytelevision/status/1150002569579769856]
Twitter Ads info and privacy

[/font][/size][/color]
அதில், அபிராமியை பற்றி குறை கூறுகிறார் வனிதா. அதற்கு பதில் அளிக்கும் கமல், உங்களுடைய பேச்சின் மூலம் வேறு ஒருவருக்கு கவனம் சென்றுவிடும் எனும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது.

ஒரு குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாம் பேசும் அளவுக்கு கேட்கவும் வேண்டும் எனக் கூறி வனிதாவின் மூக்கை உடைத்திருக்கிறார். இந்த புரொமோ பிக் பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Thozhar Venkatesan Review: வலிகள் நிறைந்த வாழ்வை கலகலப்பாக அணுகும் 'தோழர் வெங்கடேசன்'..! விமர்சனம்

சென்னை: அரசு பேருந்து மோதியதால் இரண்டு கைகளையும் இழக்கும் நாயகன், இழப்பீட்டுக்காக படும்பாடுதான் தோழர் வெங்கடேசன் படத்தின் ஒன்லைன்.
யாரிடமும் கைக்கட்டி வேலை பார்க்க விருப்பமில்லாத அரிசங்கர், காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டிலேயே சின்னதாக ஒரு சோடா கம்பெனி நடத்தி வருகிறார். தாய் - தகப்பனை இழந்த அரிசங்கருக்கு அவரது ஒண்ணுவிட்ட சித்தப்பா தான் ஒரே ஆதரவு. சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் அரிக்கு, பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை.

[Image: thozhar587-1563003718.jpg]

இந்நிலையில் இட்லி கடை நடத்தி வரும் சார்மிளா திடீரென இறந்து போக, அனாதையாகும் அவரது மகள் மோனிகாவுக்கு ஆதரவு தருகிறார் அரி. மோனிகாவும், அரியும் வாழ்வை சந்தோஷமாக நடத்தத் தொடங்கும் நேரத்தில் நிகழ்கிறது அந்த கோர விபத்து. ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, அரிசங்கர் மீது மோதி அவரது இரண்டு கைகளையும் பறித்துச் செல்கிறது.
இரண்டு கைகளையும் இழந்த அரிக்கு ஆதரவாக தோள் கொடுக்கிறார் மோனிகா. ஒரு வழக்கறிஞர் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்துக்கு செல்கிறார் அரி. சுமார் மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ரூ.20 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடுகிறது கோர்ட். ஆனால் அதனை தர மனமில்லாத போக்குவரத்து கழகம் அரியை அலையவிடுகிறது. இறுதியில் இழப்பீட்டு பதிலாக ஒரு பேருந்தை ஜப்தி செய்ய ஆணையிடுகிறது கோர்ட். அந்த அரசுப் பேருந்தை வைத்துக்கொண்டு அரியும், மோனிகாவும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்கிறது 'தோழர் வெங்கடேசன்'.

[Image: thozhar87-1563003725.jpg]
தோழர் வெங்கடேசன் சொல்லும் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வராத புதிய கான்செப்ட். 'இழப்பீட்டுக்காக அரசு பேருந்து ஜப்தி' என நாம் கடந்துபோகும் ஒன்றைவரி செய்திக்கு பின், இத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கை இருக்கிறதா? என புருவம் உயர்த்த வைக்கிறார் இயக்குனர் மகாசிவன். ஒரு சோகமான கதையை, காமெடியாக சொல்லிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.

[Image: thozhar8-1563003732.jpg]

முதல்பாதியில், நண்பர்களுடன் சேர்த்து சரக்கடித்து, ஊர் சுற்றிக்கொண்டே சொந்த பிசினசிலும் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாயகன், கைகளை இழந்து இரண்டாம் பாதியில் பேருந்தை பாதுகாக்கப் படும்பாடு மனதை நெகிழ வைக்கிறது. சதா சண்டைப்போடும் பக்கத்து வீட்டுக்காரர், மோனிகாவை கரக்ட் செய்ய துடிக்கும் கவுன்சிலர் என பாத்திரப்படைப்புகளும் கச்சிதம். அரசுத்துறைகள் எவ்வளவு அலட்சியமாக செயல்படுகின்றன என்பதை உண்மையாக பதிவு செய்திருக்கும் விதமும் பாராட்டுக்குறியது.

[Image: thozhar58-1563003740.jpg]
முதல் படத்திலேயே வித்தியாசமான கதை களத்துடன் வந்து கவனம் ஈர்க்கிறார் அரிசங்கர். 'என்னா ஓய் நீ' என காஞ்சிபுரத்து ஸ்லாங்கில் பேசி, நடந்து கொண்டு அந்த ஊர் பையனாகவே மாறியிருக்கிறார். வாழ்க்கையை நினைத்து ஏங்கி அழுவது, பேருந்தை பாதுகாக்க போராடுவது என நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகன் அறிமுகமாகி இருக்கிறார்.
அமைதியாகவே நடித்து செமையாக ஸ்கோர் செய்கிறார் மோனிகா சின்னகோட்லா. பாந்தமான பக்கத்து வீட்டு போல இருக்கும் மோனிகா, நாயகி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். மற்ற நடிகர்களும் யதார்த்த மனிதர்களாக வந்து போகிறார்கள்.


[Image: thozhar12-1563003748.jpg]
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாமே படத்தோடு ஒன்றியிருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் உறுத்தல். படத்தை எப்படி முடிப்பது என தெரியாமல், ஏற்கனவே நிகழ்ந்த அரசியல் சம்பவங்களோடு (தர்மபுரி பஸ் எரிப்பு) தொடர்புப்படுத்தி முடித்திருப்பது தான் மைனஸ்.
இருந்தாலும் 'தோழர் வெங்கடேசன்' வரவேற்கத்தக்க புதிய முயற்சி.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
'கரகாட்டக்காரன் - 2'ல் ராமராஜன், கவுண்டமணி?

[Image: NTLRG_20190713114243061312.jpg]

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடித்த, கரகாட்டக்காரன் படத்தை, கங்கை அமரன் இயக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். 500 நாட்கள் வரை திரையரங்கில் ஓடி சாதனை படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது
இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, படம் உருவாகலாம் எனக் கூறியுள்ள கங்கை அமரன், ''ராமராஜன், கவுண்டமணி சம்மதித்தால், இரண்டாம் பாகத்திலும் அவர்கள் நடிப்பர்,'' என, தெரிவித்து உள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Episode 21 Highlights: வெளியேறினார் வனிதா- கதறி அழுதார் ரேஷ்மா..!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டது, அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவர் எலிமினேட் ஆனதற்கு வருத்தம் ஏற்பட்டது போல எங்கும் காட்டிக்கொள்ளவில்லை.

[Image: -.jpg]பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் வனிதா
ஹைலைட்ஸ்
  • பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் வனிதா விஜயகுமார்.
  • அவருக்கு ஹவுஸ்மேட்ஸ் ப்ரியா விடை கொடுத்து வெளியே அனுப்பி வைத்தனர்.



இந்த வாரத்திற்கான எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்புடன் இன்று தொடங்கிய நிகழ்ச்சியில், நேற்று மோகன் வைத்தியா சேவ் பட்டத்தை தொடர்ந்து, இன்று மதுமிதா, மற்றும் சரவணன் போன்றோர் காப்பாற்றப்பட்டன
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து இந்தவாரத்தில் நடிகை வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டுள்ளார். 

முன்னதாக, இன்றைய நிகழ்ச்சியில் தொடக்கத்தில் பேசிய கமல்ஹாசன், நேற்று தர்ஷன் மற்றும் மீரா மிதூன் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்து விசாரித்தார். அதில், தர்ஷன் மீது காதலை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் அதை தர்ஷன் மறுத்துவிட்டதாகவும் கூறினார். 

இதுதொடர்பாக இருவருக்குமிடையில் விவாதம் ஏற்பட்டது. பிறகு, கமல் இருவரிடமும் பேசி சமாதானம் செய்து வைத்தார். எனினும், தொடர்ந்து அவர்களுக்குள் விவாதம் எழுந்து கொண்டே இருந்தது. 

அதை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்த தருணம் வந்தது. இந்த வாரத்தில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். 

இது அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக, ரேஷ்மா மிகவும் கதறினார். வழக்கம் போல மோகன் வைத்தியாவும் அழுதார். கடைசியில் வனிதாவை எதிர்த்துப் பேசிய சாக்‌ஷியும் அவருடைய வெளியேற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தார். 

பிக்பாஸ் வீட்டிலேயே வனிதா தான் தைரியாக பேசி வந்தார். அவரை வெளியேற்றுவதற்கான காரணம் என்ன? அப்போது நடித்துக் கொண்டே இந்த வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தான் மரியாதையா என சாக்‌ஷி மிகவும் வருத்தமாக பேசினார். 

வெளியே வந்த வனிதா கமலை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அனைத்து போட்டியாளர்களும் வெற்றியை நோக்கமாக கொண்டு மட்டும் இல்லாமல், நேர்மையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டா. அதை தொடர்ந்து கமல் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். 

அதன்படி, வெளியேற்றப்பட்ட வனிதா பார்வையாளர்களுடன் அமர்ந்து, அவர் குறித்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறும் கருத்துக்களை கேட்கலாம் என்கிற வாய்ப்பு வழங்கப்பட்டது. வனிதா இருப்பதை தெரியாமல் பேசிய போட்டியாளர்கள் வனிதா குறித்து சச்சரவான, சந்தோஷம் நிறைந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

அப்போது சேரன், லோஸ்லியா, அபிராமி, தர்ஷன், கவின் போன்றோர் வனிதாவிடம் இருக்கும் குறைகளை தெரிவித்தனர். அதை தொடர்ந்து பேசிய சாக்‌ஷி, ரேஷ்மா, ஷெரின் போன்றோர் அவர் மீதான் நிறைகளை தெரிவித்தனர். குறிப்பாக ”வனிதா தன்னுடைய மகள்களுக்காக யாருடைய ஆதரவுமின்றி தனியே போராடும் பெண்” என்று ரேஷ்மா சொன்ன போது பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த வனிதா அதற்கு கண் கலங்கினார். 

பிறகு, வனிதாவை மேடைக்கு அழைத்த கமல் அவரிடம் குறைகளை திருத்திக்கொள்ளுமாறு கூறினார். அப்போது பேசிய வனிதா, தனியாக வாழ்க்கையை வாழும் பெண்களுடன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வலிமையாக இருக்க வேண்டும். குழந்தைகளை முன்னிறுத்தி வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று கண்கலங்க பேசினார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]எனக்கே சில படங்கள்ல கிரெடிட்ஸ் தரல!'' - வடிவேலு, கவுண்டமணிக்கு காமெடி டிராக் எழுதிய ராஜகோபால்[/color]

[color=var(--title-color)]ஒரு சில படங்கள்ல நல்லா வேலைபார்த்திட்டு, சம்பளம்னு வரும்போது சில கசப்பான சம்பவங்கள் நடக்கும். அந்தச் சண்டை, படத்தோட டைட்டில் கார்டு வரைக்கும் எதிரொலிக்கும். மனத்தளவுலேயும் இது பெரிய பாதிப்பை உண்டாக்கும்." - ராஜகோபால்[/color]
[Image: vikatan%2F2019-07%2Ff38f8425-13a3-4465-a...2Ccompress][color=var(--meta-color)]Writer Rajagopal with Senthil[/color]
[color=var(--content-color)]"1984-ல், சினிமா மேல இருக்கிற ஆசையில அப்படியே சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். சில வருஷ போராட்டங்களுக்குப் பிறகு, 90கள்ல நிறைய படங்களுக்கு காமெடி டிராக் எழுத ஆரம்பிச்சேன். கவனம் என் மேல விழ ஆரம்பிச்சது!" என மகிழ்ச்சி பொங்க தனது சினிமா பயணம் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார், 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகள் மற்றும் வசனம் எழுதிய ராஜகோபால்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Faedb6860-c618-43b3-b...2Ccompress]
Writer Rajagopal Title Card[color=var(--meta-color)]Screenshot from YouTube[/color]
[/color]
[color=var(--content-color)][color=var(--accent-color)]"சென்னை உங்களை எப்படி வரவேற்றது?"[/color]
"சென்னைக்கு வந்ததும் வேலை தேடினேன். வண்ணாரப்பேட்டையில ஜாக்கெட் பிட்டுகளை மொத்தமா வாங்கி, சென்னையில இருக்கிற ஒவ்வொரு மூலைக்கும் அதை விற்பனை செய்ற வேலை கிடைச்சது. இதுக்கு நடுவுலதான் சினிமா வாய்ப்புகளும் தேடி அலைஞ்சேன். சில மாதங்கள் கழித்து பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வேலை கிடைச்சது. இதுகூட மதுரையில இருக்கும்போது விளையாட்டா பழகிப் பார்த்த வேலைதான். இது எனக்கு சென்னையில கை கொடுத்தது. காலையில 6 மணிக்கு ஆரம்பிக்கிற வேலை, 9.30-க்கே முடிஞ்சிடும். அப்புறம் படம் பார்க்கிறது, வாய்ப்பு தேடுறதுன்னே ஒரு நாள் போயிடும். சென்னை இப்படித்தாங்க வரவேற்பு கொடுத்தது எனக்கு.
[/color]
[color=var(--accent-color)]"முதல் சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது?"[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F069b252f-1bfe-416a-b...2Ccompress]
Goundamani with Rajagopal
[/color]
[color=var(--content-color)]"மதுரையில என் அண்ணனுடைய நண்பர் திருஞானம்னு ஒருத்தர் இருக்கார். 1985-ல் 'கொலுசு'னு ஒரு படம் இயக்கினார். அந்தப் படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அதுதான் எனக்கு முதல் படம். அந்தப் படத்துல நான் கிளாப் போர்டு அடிக்கிற வேலை பார்த்தேன். படம் வெளிவந்த பிறகு சரியா போகலை. அதுக்கப்புறம், பெருசா வாய்ப்புகளும் இல்லாத காரணத்துனால, மறுபடியும் மதுரைக்கே கிளம்பிப் போயிட்டேன். இப்படி சென்னைக்கும் மதுரைக்கும் அலைஞ்சிட்டே இருந்த காலம்தான் என்னுடைய வாழ்க்கையின் போராட்ட காலம். அப்புறம் ஒரு வழியா 1990-ல் மலேசியா வாசுதேவன் இயக்கிய 'நான் சிரித்தால் தீபாவளி' படத்துல இணை இயக்குநரா வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு அடுத்த வருடமே, 'வைதேகி கல்யாணம்' படத்துலேயும் இணை இயக்குநரா வேலைபார்த்தேன். அதுலதான் கவுண்டமணி சாரும், செந்தில் சாரும் பழக்கமானாங்க. அந்தப் படத்தோட நகைச்சுவைப் பகுதியை எழுத உதவினேன். டைட்டில் கார்டில் 'உதவி மற்றும் இணை இயக்குநர்'னு என்னுடைய பெயர் வந்தது. அங்கிருந்துதான் படங்களுக்கான நகைச்சுவைப் பகுதியை எழுத ஆரம்பிச்சேன்."[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--accent-color)]அப்புறம் என்னென்ன படங்களில் வேலைபார்த்தீங்க?"[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fa54b6ff3-d69b-4025-a...2Ccompress]
Kovai Sarala with Raja Gopal
[/color]
[color=var(--content-color)]" 'கட்டபொம்மன்', 'ராக்காயி கோயில்', 'பட்டத்து ராணி' போன்ற படங்கள்ல வேலைபார்த்தேன். 1994-ல் வெளியான 'ஜெய் ஹிந்த்' படம்தான் என்னுடைய வாழ்க்கையில முக்கியமான படமாக அமைந்தது. வணிக ரீதியா படம் மாபெரும் ஹிட்டாகி என்னுடைய சினிமா வாழ்க்கையில எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. 'இணை இயக்குநர் மற்றும் நகைச்சுவை பகுதி' ரெண்டுலேயும் என்னுடைய பெயர் வந்திருந்தது. எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமா வரலாற்றிலே எனக்கு மட்டும்தான் இப்படி வந்திருக்கும்னு நினைக்கிறேன். 'லக்கி மேன்', 'கட்ட பஞ்சாயத்து', 'மனதை திருடிவிட்டாய்', 'மகனே என் மருமகனே', 'பட்ஜெட் பத்மநாபன்', 'மிடில் கிளாஸ் மாதவன்', 'சீனா தானா 001', 'பெரியதம்பி', 'பாலக்காட்டு மாதவன்' இப்போ வரைக்கும் 100 படங்களுக்கும் மேல வேலைபார்த்திருக்கேன். சிங்கமுத்துவோட மகன் வாசன் கார்த்திக்கை வெச்சு ஒரு படம் இயக்குறேன். அதுக்கான வேலைகள்தான் இப்போ போயிட்டிருக்கு."[/color]

[color=var(--content-color)][color=var(--accent-color)]நடிகர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணிகூட பல படங்கள் வேலைபார்த்திருக்கீங்க? அவங்களைப் பத்தி...[/color]
இப்போது வரை இரண்டு பேரோடும் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறேன். சென்னை வந்தாலே செந்தில் சார் கூடவே இருப்பேன். கவுண்டமணி சார் ரெண்டு நாளைக்கு ஒரு முறை பேசுவார். இரண்டு பேருமே என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர்கள்

[color=var(--accent-color)]சினிமாவுல உள்ள சவால்னு எதைச் சொல்வீங்க?"[/color]
"சினிமா துறையில இருக்கிற கலைஞர்களுக்கு முக்கியமான சில பிரச்னைகள்லாம் இருக்கு. கனவுகளையும் மேடைகளையும் துரத்தி ஓடுறவங்களுக்கு சம்பளமும் முக்கியம், பெயரும் முக்கியம். ஒரு சில படங்கள்ல நல்லா வேலைபார்த்திட்டு சம்பளம்னு வரும்போது சில கசப்பான சம்பவங்கள் நடக்கும். அந்தச் சண்டை, படத்தோட டைட்டில் கார்டு வரைக்கும் எதிரொலிக்கும். மனத்தளவுலேயும் இது பெரிய பாதிப்பை உண்டாக்கும். என்னோட பெயர்களே சில படங்கள்ல தவிர்க்கப்பட்டிருக்கு. இருந்தாலும் பரவாயில்லை சினிமா பிடிக்கும். சினிமாதானங்க நமக்கு எல்லாம்' என சிரித்தபடி முடிக்கிறார் ராஜகோபால்.
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த காதல்.!

[Image: mugen-696x392.jpg]

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வார்த்தை கடந்துவிட்டது முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறிய நிலையில் இரண்டாவது போட்டியாளராக நேற்று வனிதா விஜயகுமார் வெளியேறியிருந்தார். வனிதா வெளியேறி இருப்பதால் இனி நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்று ரசிகர்கள் பீல் செய்து வருகின்றனர்.
[/url]
[Image: D_gHKc6XoAAQ8O2?format=jpg&name=small]
Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
Vijay Television

@vijaytelevision





#Day22 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

2,084
பிற்பகல் 3:30 - 15 ஜூலை, 2019
[color][size][font][color][size][font]

இதைப் பற்றி 479 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/vijaytelevision/status/1150706574077378560]
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை

[/font][/size][/color]
[/font][/size][/color]
இன்று(ஜூலை 15) வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதற்கான நாமினேஷன் துவங்க உள்ளது. இதில் எந்த வார கேப்டனாக உள்ள சாட்சியை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அதே போல இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளரும் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர் யார் என்பதற்கான நாமினேஷன் பிராஸஸ்ஸை துவங்கியுள்ளனர். அதில் மிகவும் வியப்பூட்டும் விதமாக சாக்க்ஷி, தனது நெருங்கிய தோழி என்று இதுநாள் வரை சொந்தம் கொண்டாடிய அபிராமியை நாமினேட் செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முகன் மற்றும் அபிராமிக்கு இடையே ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, முகன் மற்றும் அபிராமிக்கு இடையே ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று போட்டியாளர்கள் சிலர் அரசல் புரசலாக பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வனிதா வெளியேற இதுதான் காரணமா?-

சென்னை: பிக் பாஸ்க்கும் வனிதாவுக்கும் இடையேயான ஒப்பந்த உடன்படிக்கை என்ன என்பது தெரியவந்துள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் வனிதா. பிக் பாஸ் வீட்டில் கடந்த மூன்று வாரமாக அவரது குரல் தான் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. அதுவே அவரது வெளியேற்றத்துக்கு காரணமாகிவிட்டது.
எல்லாப் பிரச்சினையிலும் வாண்டடாக உள்ளே நுழைந்து பஞ்சாயத்து செய்த வனிதாவின் நடவடிக்கைகள் பார்வையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சக போட்டியாளர்களுக்கும் அவர் மீது கோபம் இருந்தது உண்மையே.
கெட்ட இமேஜ்:
அதனால் தான் தர்ஷன் வனிதாவை எதிர்த்து நின்றபோது, உள்ளேயும், வெளியேயும் கைத்தட்டல்கள் காதை கிழித்தன. முதல் நாளில் இருந்தே வனிதா மீது ஒரு வகையான கெட்ட இமேஜ்தான் இருந்தது. அந்த இமேஜ் அப்படியே வளர்ந்து, மூன்றாவது வாரத்தில் உச்சிக்கு சென்றது.
[Image: vanitha22-1563164193.jpg]
 

வனிதா எவிக்சன்:
இந்த நிலையில் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார். ஆனால் அவர் வெளியேறிய பிறகு, அவர் மீது மக்களுக்கு பரிவும், பரிதாபமும் ஏற்பட வேண்டும் எனும் நோக்கில் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. வனிதா வெளியேற என்ன காரணம் என ஹவுஸ்மேட்சிடம் கமல் கேட்டபோது, லாஸ்லியா மற்றும் தர்ஷனை தவிர மற்ற அனைவரும் வனிதாவை பற்றி பாசிடிவ் விஷயங்களையே பகிர்ந்தனர்.
[Image: vanitha2-1563164186.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
குறும்படம்:
வேறு யாருக்கும் இதுவரை செய்யப்படாத வகையில், ஹவுஸ்மேட்ஸ் தன்னை பற்றி சொல்லும் விஷயங்களை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து வனிதாவும் கேட்டார். பிறகு தன்னை பற்றிய நியாயத்தை எடுத்துக்கூற அவருக்கு நீண்ட நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக திரையிடப்பட்ட குறும்படத்திலும், வனிதா மீது பரிவு ஏற்படும் வகையிலான காட்சிகளே காண்பிக்கப்பட்டன.

[Image: vanitha223-1563164200.jpg]
 

டிஆர்பிக்கு உதவினார்:
கடந்த மூன்று வாரமாக பிக் பாஸ் டிஆர்பி எகிற வனிதா தான் காரணம் என்பது ஊர் அறிந்த விஷயம். அதுவும் ஆள்கடத்தல் வழக்கு தொடர்பாக வனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் பிக் பாஸ் மீது தான் இருந்தது. இதுவே அந்த வார டிஆர்பிக்கு கேரண்டியானது.
[Image: bigg-boss1211-1563158455.jpg]
 

இது தானா அது?
ஹவுஸ்மேட்சிடம் சண்டை போடும் போதெல்லாம் வனிதா ஒரு விஷயத்தை கூறுவார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் ஒரு விதமான காண்ட்ராக்டில் கையெழுத்திட்டிருப்பதாக அவர் கூறுவார். இப்போது வனிதாவுக்கும் பிக் பாஸ்க்கும் இடையேயான காண்ட்ராக்ட் என்ன என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. தான் சண்டைக்கோழியாக வீட்டில் திரிந்தாலும், வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது தனது இமேஜை காப்பாற்ற வேண்டும் என்பதே அது. அதன்படியே பிக் பாஸ் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டிருக்கிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை?

[Image: pandiyan-300x200.jpg]விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்கள் நடத்தி வரும் ஒரு கடை, அவர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் சீரியலில் காட்டப்படுகிறது.
மூத்த மறுமகளாக சுஜிதா நடிக்க, இளைய மருமகளாக சித்ரா நடித்துவருகிறார். ஆரம்பத்தில் நெருக்கமாகவே இருந்த அவர்கள் நடுவில் சண்டை வெடித்துள்ளதாம்.
காரணம் விஜய் டிவி நடத்திய விருது விழாவில் சிறந்த நடிகை நாமினேஷன் லிஸ்டில் சித்ரா பெயர் இருந்தது. ஆனால் சுஜிதாவுக்கு சப்போர்டிங் கேரக்டர் விருது மட்டுமே கொடுக்கப்பட்டது.
தான் தான் ஹீரோயின் என நினைத்திருந்த சுஜிதாவுக்கு இது அதிர்ச்சி ஏற்படுத்தி, பணிப்போருக்கு காரணமாகிவிட்டது. விரைவில் அவர் இந்த சீரியலை விட்டு வெளியேறினாலும் ஆச்சர்யமில்லை என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
'எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்'- தயாரிப்பாளர் டி.சிவா

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா , படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
[Image: t-siva.jpg]

அப்போது விழாவில் கலந்துகொண்ட அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா பேசும்போது, "இது ஒரு நம்பிக்கை தரும் பட முயற்சி என்று சொல்லலாம். குறும்படத்திலிருந்து நிறைய நம்பிக்கையானவர்கள் வருகிறார்கள். தெலுங்கில் எப்படி விஜய் தேவர்கொண்டா ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்தாரோ அதே போல் துருவா அவர்களுக்கும் ‘சூப்பர் டூப்பர்’ பெரிய வெற்றி படமாக அமையும். பார்ப்பதற்கு அவரைப் போலவே இருக்கிறார் என்று பாராட்டினார். சூப்பர் டூப்பர் ட்ரைலரை பார்க்கும் போது இது ஒரு மாஸ் கமர்சியல் படங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். ஊடகங்களில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதனால் இந்த விளக்கம் தர வேண்டி உள்ளது. தயாரிப்பாளர்கள் விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். ஒருபோதும் தயாரிப்பாளர்கள் விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. தரக்குறைவான விமர்சனங்களைத்தான் எதிர்க்கிறோம். மோசமாக விமர்சனம் செய்த படங்களும் ஓடி இருக்கின்றன. விமர்சனங்கள் நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும். அதற்கு வரம்பு உண்டு. அந்த எல்லை மீறிப் போகக்கூடாது. “என்ன படம் எடுத்திருக்கிறார்? தியேட்டருக்குப் போகாதீர்கள்” என்று எல்லாம் கேவலமாகப் பேசக் கூடாது. தி.நகரில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டு “அந்த கடையில் பொருள் வாங்காதே, எதுவும் எடுக்காதே” என்று கூறினால் அவர் அந்த நேரம் எந்தச் சட்டை போட்டு இருந்தாலும் அதைக் கிழித்து விடுவார்கள். சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல. படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். முதல் நாள் முதல் ஷோவே வெற்றி பெறுவதில்லை. அவன் பார்க்க அவகாசம் கொடுங்கள். விமர்சனங்களால் ஓடிய படம் நிறைய உண்டு. நல்ல விமர்சனங்களால் ஓடாத படங்களும் உண்டு. விமர்சனம் என்கிற பெயரில் சிலர் செய்யும் இந்த செயல்களால் வருத்தப்படுகிறோம். இது எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கிறோம்" என்றார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சபாஷ் நாயுடு' டிராப், 'தலைவன் இருக்கின்றான் ரீ-ஸ்டார்ட்

[Image: NTLRG_20190716134139406168.jpg]

'பாபநாசம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'தூங்காவனம், விஸ்வரூபம் 2' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. அதற்குப் பிறகு கமல்ஹாசன் ஆரம்பித்த 'சபாஷ் நாயுடு' படமும் அமெரிக்காவில் ஒரு கட்டப் படப்பிடிப்புடன் அப்படியே நின்று போனது. 'இந்தியன் 2' நிலைமை என்னவென்றே புரியாமல் இருக்கிறது.

'தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தை 2010ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பின் அந்தப் படத்தின் நிலை என்ன ஆனதென்றே தெரியாமல் இருந்தது. அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வெளியாகும், ஆனால் ஒன்றும் நடக்காது. 2017ம் ஆண்டில் மீண்டும் படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்கள். கடந்த இரண்டு வருடங்களாக எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் நேற்று திடீரென 'தலைவன் இருக்கின்றான்' படத்திற்கு இசையமைக்கப் போவதாக ஏஆர் ரஹ்மான் டுவிட்டரில் அறிவித்தார். அதற்கு பதிலளித்து கமல்ஹாசனும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.

லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள்தான் 'சபாஷ் நாயுடு, இந்தியன் 2'. இப்போது அந்தப் படங்களை அப்படியே விட்டுவிட்டு கமல்ஹாசன் 'தலைவன் இருக்கின்றான்' படத்தை ஆரம்பிக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சபாஷ் நாயுடு' படம் கண்டிப்பாக டிராப் என்கிறார்கள். 'இந்தியன் 2' சஸ்பென்ஸ் மட்டும் தொடர்கிறது. ஆகஸ்ட்டில் தொடங்கும் என கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்கும் படங்களைப் பொறுத்தவரையில் அவர்தான் 'பிக் பாஸ்'. அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கும்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிகில்-ன் ”சிங்க பெண்ணே” என்ற பாடல் வெளியானது

பிகில் படத்தின் ‘சிங்க பெண்ணே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் ‘பிகில்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
[Image: D9ldtomU0AcktpJ-768x1024.jpg]
தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்கு பிறகு அட்லீ தற்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்திற்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. இதில் விஜய் அப்பா-மகன் என்று இருவேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
[Image: bigil_156135247420.jpg]
பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து, விவேக், கதிர், நயன்தாரா, இந்துஜா  உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் இடம்பெற்றிருக்கும் ”சிங்க பெண்ணே” என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருபுறம் பெண்கள் கால் பந்தாட்டத்தை அடிப்படையாக கொண்டு பிகில் படம் உருவாவதும், அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாலும், அனைவரும் இது ‘பிகில்’ திரைப்பட பாடல் எனக்கூறி பகிர்ந்து வருகிறார்கள். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஆகஸ்ட் முதல் இந்தியன் 2 மீண்டும் ஆரம்பம்

[Image: NTLRG_20190716183011600364.jpg]

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமான படம் இந்தியன் 2. சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்து பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பின் கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியானதால் படம் தேர்தலுக்குப் பின் ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், படம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. படம் கைவிடப்பட்டது என்றெல்லாம் கூட சொன்னார்கள்.


இருப்பினும் தற்போது புதிய தகவலாக படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள். அவர்களுக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம்தானாம். ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

படப்பிடிப்பு ஐந்தாறு மாதங்கள் தள்ளிப் போனதால் பட வெளியீடும் திட்டமிட்ட தேதியில் வெளியாகாமல் கொஞ்சம் தள்ளிப் போகும் என்கிறார்கள். 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அல்லது தீபாவளி வெளியீடா இருக்கவும் வாய்ப்புள்ளது. இல்லையெனில் 2021 பொங்கலுக்கு படம் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள். படப்பிடிப்பே எதிர்பாராமல் நின்று போனதால் வெளியீட்டை இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது. படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அது பற்றி சரியாகச் சொல்ல முடியும் என்பதே உண்மை
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா? மீராவை விளாசிய சாக்ஷி!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா என கேட்டு மீராவை விளாசியிருக்கிறார் சாக்ஷி.
பிக்பாஸ் வீட்டில் உள்ள மீராவை யாருக்கும் பிடிக்கவில்லை. காரணம் யாருடனும் ஒத்துப்போகாத அவரின் குணம்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள எல்லோரிடமும் அவர் முகத்தை காட்டி வருகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மீராவை கண்டால் சுத்தமாக பிடிக்கவில்லை.





ஹவுஸ் மேட்ஸுடன் மீட்டிங்
இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் மீராவை சாக்ஷி திட்டுவது போல் உள்ளது. அதாவது, பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான சாக்ஷயிடம் ஹீவுஸ் மேட்ஸ் உடன் மீட்டிங் அரெஞ்ச் செய்து தர கோரியிருக்கிறார் அதன்படி மீட்டிங்கும் நடந்துள்ளது.
[Image: sakshi1-1563279576.jpg]
 

பல்டி அடித்த மீரா
அந்த மீட்டிங்கில் என்ன நடந்ததோ தெரியவில்லை, லிவிங் ஏரியாவில் அமர்ந்து பேசும் போது நீ தான் இந்த மீட்டிங் ஏற்பாடு செய்தாய் என சாக்ஷியிடம் ஏறுகிறார் மீரா. இதனை பார்த்து ஷாக்கான ரேஷ்மா, நீ தானே மீட்டிங் ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டாய் என்கிறார்.
[Image: meera-912-1563279671.jpg]
 

லூசா? லூஸ் மாதிரி நடிக்கிறீயா?
ஆனாலும் விடாத மீரா சாக்ஷியை குற்றம்சாட்டுகிறார். இதனால் டென்ஷனான சாக்ஷி நீ லூசா இல்லை லூசுபோல் நடிக்கிறாயா என்கிறார். ஆக இன்றைய எபிசோடில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்

சென்னையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று காலமானார்.



[Image: 201907171410367110_actor-vivek-mother-dead_SECVPF.gif]
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)