31-12-2018, 07:26 PM
![[Image: matacantik.jpg]](http://www.vitaminkita.net/wp-content/uploads/2014/05/matacantik.jpg)
happy new year

தமிழ் திரைப்பட செய்திகள்
|
31-12-2018, 07:26 PM
![]() happy new year
![]()
01-01-2019, 05:24 PM
பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ்: யாருக்கு பாதிப்பு? - விவரிக்கும் வினியோகஸ்தர்
![]() பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 10-ந் தேதி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். பேட்ட பொங்கலுக்கு வரும் என்று முதலில் அறிவித்ததுமே விஸ்வாசம் தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் பொங்கலுக்கு உறுதியாக வரும் என்று படக்குழுவினர் அறிவித்து விட்டனர். இது இருவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் வசூல் பாதிக்குமோ என்ற குழப்பத்தில் உள்ளனர். பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகைகளிலும் சிறிய படங்களை மற்ற நாட்களிலும் வெளியிட விதித்திருந்த கட்டுப்பாட்டை கிறிஸ்துமஸ், பொங்கலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நீக்கி விட்டது. பேட்ட, விஸ்வாசம் படத்தை அதிக தியேட்டர்களில் திரையிட போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர், "பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஒரு வார இடைவெளியில் வந்தால் நல்ல வசூல் பார்க்கும். ஆனால் ஒரே நாளில் இரு படங்கள் வெளியாவது வசூலை நிச்சயம் பாதிக்கும். மொத்தம் உள்ள 1,090 தியேட்டர்களில் சுமார் 600 தியேட்டர்கள் பேட்ட படத்துக்கும், மீதி விஸ்வாசம் படத்துக்கும் ஒதுக்கப்படலாம். முதல் மூன்று, நான்கு நாட்கள் ரசிகர்கள் பார்ப்பார்கள். அதன்பிறகுதான் பொதுமக்கள் வருவார்கள். இரண்டு படங்களுக்கும் டிக்கெட் கட்டண விலையை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியமா? என்பது சந்தேகம். உதாரணத்துக்கு ரூ.5 கோடி வசூலித்தால் ரூ.3 கோடி ஒரு படத்துக்கும், ரூ.2 கோடி இன்னொரு படத்துக்கும் பிரியும். ஒரே தேதியில் இரண்டு படங்கள் வெளியாவதை தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் வரவேற்க மாட்டார்கள். ஜி.எஸ்.டி வரிகுறைப்பால் டிக்கெட் கட்டணம் குறைகிறது. இதற்காக மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றி." என்று கூறியதாக விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
01-01-2019, 05:27 PM
தமிழ் சினிமாவின் 2018: அசரடித்த டீசர்கள், கதையம்சம் மிக்க படங்கள், #MeToo சர்ச்சைகள்
![]() திரைத்துறையில் நடந்த வேலை நிறுத்தம், ரஜினிகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியானது, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களின் வெற்றி என 2018ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு. 2018ஆம் ஆண்டின் துவக்கமே மிக பரபரப்பானதாகத்தான் இருந்தது. தமிழின் முன்னணி நடிகர்களாக நீண்டகாலம் கோலோச்சிய ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் வெளிப்படையாகவே அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தனர். ![]() பொதுவாக அரசியல் விவகாரங்களைப் பேசுவதைத் தவிர்த்துவந்த ரஜினிகாந்த் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து வெளிப்படையாக பல கருத்துகளைத் தெரிவிக்க ஆரம்பித்தார். இதனால், அவருக்குக் கிடைத்த வரவேற்பைவிட உருவான சர்ச்சைகளே அதிகமாக இருந்தது.
01-01-2019, 05:28 PM
ஒரு செய்தியாளர் சந்திப்பில் 'சிஸ்டம்' சரியில்லை என்று அவர் சொல்லிவிட்டுப்போக, அப்படியானால் இந்தியாவில் 'சிஸ்டம்' சரியாக இருக்கிறதா என்ற பதில் கேள்வியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அரசியலுக்கு வரப்போகிறேன் என வெளிப்படையாகவே அவர் சொல்லிவிட்டாலும் தற்போதுவரை அரசியல் கட்சி எப்போது துவங்கப்படும் என்பது குறித்து அவர் ஏதும் பேசவில்லை. ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பு உருவானதோடு, ரஜினியின் அரசியல் பயணம் தொக்கி நிற்கிறது. இதற்கு நடுவில், "எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்", "கொள்கை என்னானு கேட்டவுடனே தலை சுத்தீருச்சு" என்பதுபோன்ற அவரது கருத்துகள் பலத்த அதிர்வலைகளை உருவாக்கின. ஆனால், இதற்கு நடுவில் ரஜினிகாந்த் நடித்து இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாயின. ஒன்று, பா. ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்திருந்த காலா. இரண்டாவது ஷங்கரின் இயக்கத்தில் பல வருடங்களாக தயாரிப்பில் இருந்த 2.0. இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டிலும் கோச்சடையான், லிங்கா என இரு படங்கள் ஒரே ஆண்டில் ரஜினிக்கு வெளியாகியிருந்தாலும், கோச்சடையான் ஒரு அனிமேஷன் திரைப்படமாகவே வெளியானது. அப்படிப்பார்த்தால், 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே ஆண்டில் ரஜினி நடித்து ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படம் தமிழில் வெளியானது இந்த ஆண்டில்தான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படமும் ரிலீஸிற்குத் தயாராக நிற்பதில், ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ![]()
01-01-2019, 05:29 PM
மற்றொரு முக்கிய நட்சத்திரமான கமல்ஹாசன், கடந்த ஆண்டில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியையும் துவக்கிவிட்டார். 2015ல் அவர் நடித்து வெளிவந்த தூங்கா வனம் படத்திற்குப் பிறகு இந்த ஆண்டுதான் அவரது அடுத்த படமான விஸ்வரூபம் - 2 வெளியானது.
இதையெல்லாம்விட தமிழ் சினிமாவை இந்த ஆண்டு கடுமையாக பாதித்த விஷயம், மார்ச் மாதத்தில் நடைபெற்ற போராட்டம்தான். திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை வெளியிட, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைய கட்டணம் வசூலிப்பதாகக் கூறி திரையுலகினர் போராட்டத்தில் இறங்கினர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கேளிக்கை வரியை ரத்து செய்யும் கோரிக்கை உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திரையரங்கங்களும் போராட்டத்தில் இறங்கின. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக திரைப்படங்கள் ஏதும் வெளியாகாததால், வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. இதற்குப் பிறகு, திரைப்படங்களை வெளியிடும் தேதியை தயாரிப்பாளர் சங்கமே அறிவிக்கும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. மாதத்தில் ஒரு வாரம் சிறிய படங்களுக்கு என ஒதுக்கப்பட்டது. இந்த நடைமுறையிலும் பல சிக்கல்கள் தற்போதும் நீடிக்கின்றன. தமிழ் திரைத்துறையை கலங்கவைத்த #Me too உலக அளவில் பிரபலமான மீ டூ 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் குறிப்பாக தமிழ் திரைத்துறையில் பரவலாக பேசப்பட்டது. தமிழ் திரைப்படத்துறையை சார்ந்தவர்கள் சிலரின் மீது வெளிப்படையாக மீ டூ மூலம் குற்றம் சாட்டப்பட்டன. அதில் பாடகி சின்மயி பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து மீது #Me too புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ![]() பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். இந்த குற்றச்சாட்டை கவிஞர் வைரமுத்து மறுத்து விளக்கமளித்தார்.
01-01-2019, 05:30 PM
மேலும், 'மீ டூ' இயக்கம் மூலம், கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஸ்ருதி தன்னிடம் பணம் பறிக்க முயல்வதாக குற்றம்சாட்டினார்.
தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதை பிப்ரவரி மாதத்தில் தமிழ் திரையுலகத்துக்கு பெரும் அதிர்ச்சியாக, தமிழ் திரையுலகில் கோலோச்சிய பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். ![]() துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். நடிகை ஸ்ரீதேவி தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்த குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டது. அவரது திடீர் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்கள் எழுந்த நிலையில், இறுதியில் பிப்ரவரி 28-ஆம் தேதியன்று பல கோடி ரசிகர்களின் கனவு தேவதையான ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் எரியூட்டப்பட்டது.
01-01-2019, 05:30 PM
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிப்பட்ட குறிப்பிடத்தக்க போக்காக, நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளிவந்த படங்களுக்குக் கிடைத்த வெற்றியையும் கவனிப்பையும் நிச்சயம் குறிப்பிட வேண்டும். நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரு திரைப்படங்களுமே அந்தப் படங்களில் நயன்தாராவின் பாத்திரங்களுக்காகவும் நடிப்பிற்காகவுமே முக்கியமாகப் பேசப்பட்டன. ஜோதிகா நாயகியாக நடித்த காற்றின் மொழி, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்த கனா ஆகிய திரைப்படங்களும் விமர்சகர்களால் கவனிக்கப்பட்டதோடு, குறிப்பிடத்தக்க வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றன.
![]() இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படங்கள் ஏதும் வர்த்தக ரீதியில் பெரும் வசூலை வாரித்தந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், வருட இறுதியில் வெளியான 2.0, சர்கார் ஆகிய படங்கள் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்திருக்கின்றன. அதேபோல, 96, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்றிருப்பது ரசிகர்களுக்கும் புதிதாக வரும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் நிச்சயம் கொடுத்திருக்கும்.
01-01-2019, 05:31 PM
ஏற்கனவே வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்கள் இந்த ஆண்டில்தான் பெரும் எண்ணிக்கையில் வெளிவந்தன. கலகலப்பு - 2, கோலி சோடா - 2, விஸ்வரூபம் - 2, தமிழ் படம் - 2, சண்டக்கோழி - 2, மாரி - 2, 2.0, சாமி - 2 என எட்டு திரைப்படங்களின் அடுத்த பாகங்கள் இந்த ஆண்டில் வெளியாயின. இவற்றில் 2.0, தமிழ்படம் - 2, கலகலப்பு -2 ஆகியவற்றைத் தவிர பிற படங்களை வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லை.
![]() இந்த ஆண்டில் உருவான ஒரு முக்கியமான போக்காக, அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்டீரிமிங் சேவைகள் மிக முக்கியமான பொழுதுபோக்கு தளங்களாக உருவாகியிருப்பதைச் சொல்லலாம். தமிழ் சினிமாவுக்குக் கூடுதல் வருவாயை இந்த தளங்கள் தரும் அதே நேரம், ரசிகர்களுக்கும் புதிய ஜன்னல்களைத் திறந்திருக்கின்றன. உலகின் மிகச் சிறந்த சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு தற்போது எளிதில் கிடைத்துவிடுவதால், தமிழ் சினிமாவின் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்த தளங்கள் உதவக்கூடும். தமிழிலேயே நேரடியாக வெப்சீரிஸ்களை இயக்கும் வாய்ப்பும் இயக்குனர்களுக்குக் கிடைக்கும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அதிக படங்களில் நடித்த கதாநாயகன், விஜய் சேதுபதிதான். கௌரவத் தோற்றத்தில் அவர் நடித்த டிராஃபிக் ராமசாமி படத்தை விட்டுவிட்டால், 6 படங்களில் அவர் நடித்திருக்கிறார். கதாநாயகிகளைப் பொறுத்தவரை கீர்த்தி சுரேஷ்தான் முதலிடம். 6 படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் வரலட்சுமியும் தலா ஐந்து படங்களில் நடித்திருக்கின்றனர். சமந்தாவுக்கு நான்கு படங்கள். ![]() 2018ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை,பேட்ட வெளியாகும் தினத்தன்று 2019ஆம் ஆண்டு துவங்கவிருக்கிறது.
02-01-2019, 10:28 AM
02-01-2019, 10:30 AM
ஹாலிவுட் டாப் 10: வசூலில் கலக்கிய படங்கள்
2018, பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்தவரை ஹாலிவுட்டுக்கு சிறப்பாகவே அமைந்தது. எதிர்பார்ப்பை உருவாக்கிய கையளவு படங்கள் மண்ணைக் கவ்வினாலும் பல படங்கள் வசூல் சாதனை படைத்தன. முக்கியமாக சூப்பர் ஹீரோ படங்களுக்கு இந்த வருடம் அதிக மவுசு. டாப் 10-ல் 6 படங்கள் சூப்பர் ஹீரோ களம் கொண்டவை. இந்த ஆறில் ஒன்று அனிமேஷன் படம். மேலும் மூன்று படங்கள் பிரபல franchise-ன் பட வரிசைகள். ஒன்று மட்டுமே தனிப்படம். ஹாலிவுட்டின் மொத்த வசூலும் 2017-ஐ விட இந்த வருடம் சற்று அதிகமாகவே இருந்தது. இதோ சர்வதேச அளவில் சிறப்பாக வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்களின் பட்டியல். 10 - FANTASTIC BEASTS: THE CRIMES OF GRINDELWALD ஹாரிபாட்டரின் மேஜிக் உலகில் நடக்கும் கதை. முதல் பாகத்தின் வெற்றி என இந்த பாகத்துக்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாக்வே இருந்தது. கூடுதலாக, க்ரிண்டல்வால்ட் கதாபாத்திரத்தில் ஜானி டெப்பை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால் படம் ஹாரிபாட்டர் படிக்காத பெரும்பான்மை ரசிகர்களை நிறைய தகவல்கள் சொல்லி திக்குமுக்காட வைத்தது. எதிர்பார்த்ததை விட வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி சுமாரான படமாகவே அமைந்தது. எனினும் சர்வதேச அளவில் 600 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்து சிறிய அளவு லாபமாக அமைந்தது. 9 - ANT-MAN & THE WASP மார்வல் சூப்பர்ஹீரோ படங்களுக்கென ஒரு திரைக்கதை வடிவம் உள்ளது. அதிலிருந்து பிசகாது சொல்லி அடித்த இன்னொரு படம். அவெஞ்சர்ஸ் இன்ஃபினி வார் படத்துக்குப் பிறகு வெளியான படம் என்பதால் கடைசியில் எண்ட் கிரெடிட்ஸ் முடிந்து வரும் காட்சி என்னவாக இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. சர்வதேச அளவில் 622.7 மில்லியன் டாலர்களை வசூலித்தது. விமர்சனங்களும் சாதகமாகவே இருந்தன. சீனாவில் மார்வல் படங்களில் குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்தது. 8 - BOHEMIAN RHAPSODY குயின் இசைக்குழுவின் கதையைச் சொல்லும் படம். விமர்சனங்கள் சுமாராகவே இருந்தாலும் சர்வதேச அளவில் குயின் இசையின் ரசிகர்கள் இந்தப் படத்தை ஆரத்தழுவிக் கொண்டனர். வரலாற்றில் நடந்த சில விஷயங்களை மாற்றிச் சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்தாலும் ரசிகர்களுக்கு அது பெரிய குறையாகத் தெரியவில்லை. 643.6 மில்லியன் டாலர்களை இதுவரை வசூலித்துள்ளது. 7 - DEADPOOL 2 2016-ல் வந்த முதல் பாகத்தின் தொடர்ச்சி. கெட்டவார்த்தை பேசி, வன்முறையக் கையாளும், அவ்வப்போது கேமராவைப் பார்த்து ரசிகர்களிடம் பேசும் சூப்பர் ஹீரோவின் கதை. முந்தைய பாகத்தின் வசூலை முந்தவில்லை என்றாலும் 735.6 மில்லியன் டாலர்கள் வசூலை ஃபாக்ஸ் நிறுவனம் எந்த குறையும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளும். படத்தின் இறுதியில் வந்த டைம் டிராவல் திருப்பத்தைப் பற்றி இன்றளவும் ரசிகர்களிடையே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
02-01-2019, 10:31 AM
![]() 6 - MISSION: IMPOSSIBLE - FALLOUT டாம் க்ரூஸ் என்றாலே மிஷன் இம்பாசிபிள் என்ற ரீதியில் இந்தப் பட வரிசையோடு ஒன்றிப் போய்விட்டார். கடந்த வருடம் மம்மி படம் மூலம் ஏமாற்றம் தந்தவர் இந்தப் படத்தில் காலை உடைத்துக் கொண்டு ரசிகர்களுக்கு பரபரப்பையும் கவலையையும் ஒருசேர கொடுத்தார். சூப்பர் மேன் ஹென்றி காவில்லின் வில்லத்தனும் இம்முறை ரசிகர்களுகு போனஸ். முந்தைய மிஷன் இம்பாசிபிள் படங்களை விட வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் முந்தியது இந்த ஃபால் அவுட். 791 மில்லியன் டாலர் வசூலுடன் அடுத்த பாகத்துக்காக ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்கச் செய்துள்ளது. 5 - VENOM உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வெனம் கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு சூப்பர் ஹீரோ படம் என்ற அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஸ்பைடர்மேன் உலகத்திலிருந்து ஒரு வில்லன் கதாபத்திரம் எப்படி தனிப்படமாக வெற்றியடையும் என்ற கேள்வியே இருந்தது. ஆனால் சோனி நிறுவனமே வெனம் படத்தின் வெற்றியைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கும். விமர்சகர்கள் ஆதரவு இல்லை என்றாலும் 854.4 மில்லியன் டாலர்களை வசூலித்து அசரடித்தது. சீனாவிலும் படம் மெகா ஹிட் அடிக்க படத்தின் அடுத்த பாகத்துகான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. 4 - INCREDIBLES 2 15 வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அது வசூல் சாதனையையும் படைக்கும் என்று எவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பெரும்பான்மையான விமர்சகர்கள் இப்படத்தைக் கொண்டாட, ரசிகர்கள் அதற்கும் அதிகமாகவே கொண்டாடித் தீர்த்தார்கள். முந்தைய பாகம் 633 மில்லியன் டாலர்களை வசூலித்திருந்தது. இரண்டாம் பாகம் 1.24 பில்லியன் டாலர்களை வசூலித்தது. சர்வதேச அளவில் அதிக வசூல் செய்திருக்கும் இரண்டாவது அனிமேஷன் படம் இது. அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் அதிகம் வசூலித்த படம் என முதலிடத்தைப் பிடித்தது. இந்தப் பட்டியலில், முதலிடத்தில் இருக்கும் இன்க்ரடிபிள்ஸ் 2-வுக்கும், அடுத்த இடத்தில் இருக்கும் ஃபைண்டிங் டோரிக்கும் வசூலில் இருக்கும் வித்தியாசம் கிட்டத்தட்ட 50 மில்லியன் டாலர்கள். இதுவே இந்தப் படத்தின் வெற்றி எந்த அளவு என்பதைச் சொல்லும். 3 - JURASSIC WORLD: FALLEN KINGDOM 2015-ல் வந்த ஜுராசிக் வேர்ல்ட் வெற்றியையும், வசூலையும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இரண்டாம் பாகத்தால் விமர்சன ரீதியாக முதல் பாகத்தோடு போட்டியிட முடியவில்லை என்றாலும் 1.30 பில்லியன் வசூலோடு, கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. நாயகன் கிறிஸ் பிராட்டுக்கு அவெஞ்சர்ஸோடு சேர்த்து ஒரே வருடத்தில் இரண்டு மெகா ஹிட் படங்கள். இயக்குநர் பயோனாவின் ஹாரர் பட பாணி திரைக்கதைக்கு கலவையான எதிர்வினைகளே வந்தாலும் படத்தின் வெற்றி அடுத்த பாகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டது. 2 - BLACK PANTHER மார்வல் சூப்பர் ஹீரோ படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்வது என்ன புதிதா எனப் பலரும் நினைக்கலாம். ஆனால் மார்வல் நிறுவனமே எதிர்பார்க்காத அளவு ஒரு வெற்றி என்றால் அது ப்ளாக் பேந்தரின் 1.35 பில்லியன் டாலர் வசூல் வெற்றி தான். கருப்பின மக்களின் சூப்பர் ஹீரோ என்று அடையாளப்படுத்தப்பட்டத்து படத்துக்கு சாதகமாகப் போக, சிறப்பான விமர்சனங்களைப் பெற்ற சூப்பர் ஹீரோ படம், முன்பதிவில் அதிக வசூல் செய்த சூப்பர்ஹீரோ படம், பிப்ரவரி மாத வெளியீட்டில் அதிக வசூல் செய்த படம் என அடுத்தடுத்து சாதனைகளை உடைத்துக் கொண்டே போனது. அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த காமிக் புக் திரைப்படம் என்ற சாதனையையும் ப்ளாக் பேந்தரே வைத்துள்ளது. 1 - AVENGERS: INFINITY WAR 10 வருடங்களாக கட்டமைக்கப்பட்ட மார்வல் உலகின் க்ளைமேக்ஸ். ஐயர்ன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, தார், ஹல்க், ப்ளாக் பேந்தர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என முக்கிய சூப்பர் ஹீரோக்களும், இவர்களுக்கெல்லாம் இணையாக, தனியாளாக நின்று வில்லத்தனம் காட்டிய தானோஸும் சேர்ந்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தனர். இந்த வருடத்தின் இன்னொரு சொல்லி அடித்த ஹிட். சர்வதேச அளவில் 2.05 பில்லியன் வசூல். why kattappa killed bahubali என்ற கேள்விக்கு இணையாக ஒரு ட்விஸ்டுடன் முதல் பாகம் முடிந்து, 2019-ன் Avengers: End Game படத்துக்கு ரசிகர்கள் காத்திருக்க பொறுமையின்றி தவித்து வருகின்றனர். தானோஸை நமது ஹீரோக்கள் வெல்லப்போவது எப்படி என்பதே அடுத்த சில மாதங்களுக்கு மார்வல் ரசிகர்களின் கேள்வி.
03-01-2019, 09:35 AM
அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட..
![]() அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வியாபாரமும் படுஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் பேட்ட படத்தை ரஷ்யா, உக்ரைனில் இதுவரை வெளியான தமிழ் சினிமா படங்களை காட்டிலும் அதிக அளவிலான இடங்களில் வெளியிட இருப்பதாக படத்தை வாங்கியுள்ள “7th Sense Cinematics” நிறுவனம் அறிவித்துள்ளது. ![]()
03-01-2019, 09:38 AM
![]() ஒரே நாளில் பேட்ட, விஸ்வாசம் ரிலீஸ்: வசூல் பாதிக்குமா? 2019ல் வசூலை தொடங்குவது யார்? ஒரே நாளில் மாஸ் ஹீரோக்களின் இரு படங்கள் திரைக்கு வருவதால், பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதிரைக்கு வரவுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் மாஸாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
03-01-2019, 09:40 AM
(This post was last modified: 03-01-2019, 09:41 AM by johnypowas.)
இந்த நிலையில், இப்படத்துடன் இணைந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால், விஸ்வாசமும், பேட்ட படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால், அதிக திரையரங்கம் கிடைப்பதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. [/url] [size=undefined][size=undefined][url=https://twitter.com/YouTubeIndia/status/1079663942207565827] [/size][/size]உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சீதக்காதி, கனா, மாரி 2, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், கேஜிஎஃப் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில், எந்தப் படமும் அதிகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:- இரு படங்களும் ஒரே நாள் இடைவெளியில் வந்தால் இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிக்கும். ஆனால், ஒரே நாளில் இரு படங்களும் வெளியாகிறது. இதனால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கும். மொத்தம் உள்ள 1,090 தியேட்டர்களில் சுமார் 600 தியேட்டர்கள் பேட்ட படத்துக்கும், மீதி விஸ்வாசம் படத்துக்கும் ஒதுக்கப்படலாம். முதல் மூன்று, நான்கு நாட்கள் ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள். அதன் பிறகு தான் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து பொதுமக்கள் பார்க்க வருவார்கள். ஒரு நேரத்தில் வசூல் கொடுக்கக் கூடிய மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாவதை தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் வரவேற்க மாட்டார்கள். ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
03-01-2019, 05:27 PM
'பிரான்மலை' - விமர்சனம்!
சென்னை: ஆணவக்கொலையால் ஒரு காதல் ஜோடிக்கு நேரும் கொடுமைகளை பேசுகிறது பிரான்மலை திரைப்படம். பிரான்மலை ஊரின் முக்கிய தலைக்கட்டான வேலராமமூர்த்தியின் மகன் வர்மன். அப்பா போல் இல்லாமல் மிகவும் சாதுவானவர், அம்மா இல்லாததால் பாசத்துக்காக ஏங்ககூடிய நபர். ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்ந்து, எல்லோர் மீதும் அன்பு செலுத்தும் நேகா மீது வர்மனுக்கு காதல் மலர்கிறது. நேகாவும் வர்மனை காதலிக்கிறார். அப்பாவிடம் தன் காதலை சொல்ல தயங்கும் வர்மன், யாருக்கும் தெரியாமல் நேகாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த தொடங்குகிறார். இந்த விஷயம் சாதி வெறிப்பிடித்த வேலராமமூர்த்தி மற்றும் குடும்பதாருக்கு தெரிந்துவிடுகிறது. இதையடுத்து நடக்கும் அதிரடி சம்பவங்களை அழுத்தமாக பதிவு செய்கிறது பிரான்மலை. ![]() படத்தின் ஹீரோவாக நடித்துள்ள வர்மன், தனது பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார். ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல் என தனது கடமையை நிறைவாக செய்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் நடிப்பை மெருகேற்றினால், எதிர்காலம் சிறக்க வாய்ப்புகள் அதிகம். புதுமுகம் நேகா தமிழ் சினிமாவுக்கு நல்ல அறிமுகம். கயல் ஆனந்தி சாயலில், பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார். வழக்கம் போல இந்த படத்திலும் தனது நடிப்பால் படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார் வேலராமமூர்த்தி. கறிக்குழம்பை அள்ளிக்குடிக்கும் அந்த காட்சியில் உண்மையிலேயே மிரளவைக்கிறார். காமெடிக்காக பிளாக் பாண்டி, கஞ்சா கருப்பு என இருவர் இருக்கிறார்கள். ஆனால் படத்தில் காமெடி தான் இல்லை. சிரிக்க வைப்பதற்கு பதிலாக 'கடுப்பேத்துறாங்க மைலார்டு' என புலம்ப வைக்கிறார்கள்.
03-01-2019, 05:27 PM
![]() ஒவ்வொரு காட்சியும் நிறுத்தி நிதானமாக செல்வதால் படத்தில் சுவாரஸ்யமே இல்லை. அதுவும் க்ளைமாக்சில் இருந்து தான் படமே ஆரம்பமாகிறது. நல்ல திரைக்கதை அமைத்திருந்தால், கதைக்கு வலு சேர்த்திருக்கும். இதை அடுத்த படத்திலாவது கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இயக்குனர் அகரம்குமரா. ஆனால் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமான காட்சிகளோ இல்லை. அதற்காக வேண்டுமானால் இயக்குனரை பாராட்டலாம்
03-01-2019, 05:28 PM
![]() முதல் படம் என்றாலும், அதில் ஆணவக்கொலையை பற்றி பேசியிருப்பதால் 'பிரான்மலை'க்கு சின்னதா ஒரு கைத்தட்டல்.
04-01-2019, 09:52 AM
‘பேட்ட’ படத்தை அடிச்சு தூக்கி ஆப்பு வைக்க முன்பே ரிலீஸாகுதா ‘விஸ்வாசம்’?
![]() Highlights
[b]சென்னை:[/b] பேட்ட படம் வெளியாகும் முன்பே விஸ்வாசம் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதிரைக்கு வரவுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
04-01-2019, 09:53 AM
![]() இந்த நிலையில், இப்படத்துடன் இணைந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ![]() அண்மையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால், விஸ்வாசமும், பேட்ட படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால், அதிக திரையரங்கம் கிடைப்பதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ![]() Petta_Rajini இந்நிலையில் பேட்ட படத்துக்கு முன்னதாகவே விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்வாசம் படத்தை, ஜனவரி 10ம் தேதி அதிகாலை 1 மணிக்கு ரிலீஸ் செய்ய அனுமதி கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின் பேட்ட படம் வழக்கம் போல அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்படுவதாகவும் தெரிகிறது.
04-01-2019, 09:58 AM
(This post was last modified: 04-01-2019, 09:59 AM by johnypowas.)
அராத் ஆனந்தியின் அலப்பறையால் ரௌவடி பேபி செய்த சாதனை..!
![]() |
« Next Oldest | Next Newest »
|