Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: Raatchasi-Review-Jyothika-750x506.jpg]
Raatchasi Review: ஜோதிகாவின் நடிப்புக்காகவே தாராளமாகப் பார்க்கலாம் - ’ராட்சசி’ விமர்சனம்!
தன் தந்தை இழப்பில் கூட அழாமல், பள்ளிக்கு செல்லும் ஜோதிகா பார்வையாளர்களை கவர்கிறா
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Jyothika’s Raatchasi Review: திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா. ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த இவர், ’மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘காற்றின் மொழி’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள ‘ராட்சசி’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, கெளதம் ராஜ் இயக்கியுள்ளார். பெரும் பொறுப்பில் கை நிறைய சம்பளத்துடன் எத்தனை வேலைகள் இருந்தாலும், அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற ஆவலுடன் பணியாற்றத் தொடங்குகிறார் ஜோ.
ஆனால், அந்தப் பள்ளிக்கூடத்திலோ எதுவுமே சரிவர கடைப்பிடிக்கப்படாமல், மாணவர்களை அலட்சியமாக வழி நடத்த அனுமதிக்கிறது. எல்லா விஷயங்களுக்கும் முட்டுக் கட்டை போடும் நபர் அங்கும் இருக்கிறார். எதிர்ப்புகளைத் தாண்டி, இதை சரி செய்து பள்ளியை எப்படி ஜோதிகா சீர்திருத்துகிறார் என்பதே மீதி கதை.
இதற்கு முன் ‘காக்க காக்க’ படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்திருப்பார் ஜோதிகா. மாயா என்ற அந்த கதாபாத்திரம் ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் முக்கியமானது. ’ராட்சசி’யில் வரும் கீதா ராணியும் அப்படித்தான். குறிப்பாக அவர் திருமணத்துக்குப் பிறகு நடித்தப் படங்களில் இது தான் டாப் எனும் அளவுக்கு பெர்ஃபார்மென்ஸில் மிரட்டியிருக்கிறார்.
‘கணக்கு பாடத்தில் ஒரு பையன் 100 மார்க் எடுத்து, சயின்ஸில் தோல்வி பெற்றால், அவன் மக்கு பையனா, கல்வி சிஸ்டம் சரியில்லையா’ என்ற வசனங்கள் யோசிக்க வைக்கின்றன. தன் தந்தை இழப்பில் கூட அழாமல், பள்ளிக்கு செல்லும் ஜோதிகா பார்வையாளர்களை கவர்கிறார். நிதானம், கோபம், நட்பு, முறைப்பு என ஒரே கதாபாத்திரத்தில் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார் ஜோ.
வெறும் மாணவர்களுக்கான படமாக இதனை கடந்து செல்லாமல், ஒவ்வொரு பெற்றோரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒளிப்பதிவும், சான் ரோல்டனின் இசையும் ராட்சசிக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
ஆனால் இதற்கு முன் இதே களத்தை மையமாக வைத்து வெளியான, ’சாட்டை’ படம் நினைவுக்கு வருவதைத் தான் தவிர்க்க முடியவில்லை.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]யோகிபாபுவின் 'கூர்கா' பட டிரெய்லர்![/color]

[color=var(--title-color)]சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நடித்த 'கூர்கா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.[/color]
[color=var(--content-color)]'டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர் சாம் ஆன்டன். அதர்வா - ஹன்சிகா ஜோடியை வைத்து '100' என்ற படத்தை எடுத்து முடித்தார். அந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, யோகி பாபுவை வைத்து 'கூர்கா' படத்தை முடித்திருக்கிறார். யோகி பாபு கூர்கா கேரக்டரில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கனடாவைச் சேர்ந்த எலிஸா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F650d3178-d4c5-4070-9...2Ccompress]யோகி பாபு[/color]
[color=var(--content-color)]சார்லி, ஆனந்தராஜ், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு ஷாப்பிங் மாலில் பலபேர் பணயக் கைதிகளாக மாட்டிக்கொள்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதை ஹியூமராகச் சொல்வதுதான் இப்படத்தின் களம். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், விக்னெஷ் சிவன் ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F3c3fef64-e72c-4017-9...2Ccompress]கூர்கா[/color]
[color=var(--content-color)]யோகிபாபுவுடன் ஒரு நாயும் நடித்திருக்கிறது. முழுக்க முழுக்க காமெடி டிராமா ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் டீசரை தனுஷ் வெளியிட்டதைத் தொடர்ந்து, அதன் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply

பிக்பாஸ் மீரா மிதுன் நடித்துள்ள "போத ஏறி புத்தி மாறி"டிரைலர்!


[Image: 1562399979-3321.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
திரை விமர்சனம்- ராட்சசி

[Image: jythikajfif]

கிராமத்து அரசு மேல்நிலைப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கிறார் ஜோதிகா. ஒழுங்கில்லாத மாணவர் கள், பொறுப்பில்லாத ஆசிரியர்கள், பாதுகாப்பு இல்லாத பள்ளிக் கட்டிடங் கள் என அங்கு எல்லாமே தவறாக இருப்பதை கவனிக்கிறார். அங்கு பணி புரியும் சில ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர் கவிதாபாரதி ஆகி யோரின் அலட்சியப் போக்கே இதற் கெல்லாம் காரணம் என்பதை அறி கிறார். உடனடியாக கவிதாபாரதியை இடைநீக்கம் செய்துவிட்டு, பள்ளியை சீரமைக்கும் பணியில் அதிரடியாக இறங்குகிறார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் கட்சிப் பிரமுகர், தனியார் பள்ளி தாளாளரால் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். ஜோதிகா அவர்க ளது சதி வலையில் சிக்கி சறுக்கு கிறாரா? அல்லது, தான் விரும்பியது போல அரசுப் பள்ளியையும், மாணவர் களையும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றாரா? இதுவே ‘ராட்சசி’ களம்.
இன்றைய தலைமுறையின் சீரழி வுக்கு பொறுப்பற்ற சில ஆசிரியர் களே முக்கிய காரணம் என்பதை மைய மாகக் கொண்டு நகரும் கதை. சொல்ல வந்ததை தெளிவாக கூறி யிருக்கிறார் இயக்குநர் கவுதம்ராஜ். ஆசிரியர்களுக்கு எதிராக சமுத்திரக் கனி சொடுக்கிய ‘சாட்டை’யை, இதில் ஜோதிகாவைக் கொண்டு சுழற்ற வைத்திருக்கிறார். ஒரு கிராமம், ஒரு பள்ளி, அங்கு படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் என ஒரு வட்டத்துக்குள் கதைக்களம் சுழன்றாலும், அடுத்தடுத்து சரியான கேள்விகள், அதற்கான விடைகளை பூர்த்தி செய்துகொண்டே தொய்வின்றி நகர்கிறது திரைக்கதை.
காட்டன் புடவை கெட்டப்பில் ‘அறம்’ நயன்தாராவை நினைவூட்டி னாலும், பொறுப்புள்ள தலைமை ஆசி ரியராக, நடிப்பில் உண்மையாகவே ராட்சசியாக மிரட்டியிருக்கிறார் ஜோதிகா. கோபம், பாசம் ஆகிய வற்றை தேவையான இடத்தில் நன்கு வெளிப்படுத்துகிறார். படம் முழுவதும் விறைப்பாக வலம் வந்து, அத்தனை உணர்ச்சிகளையும் பார்வையிலேயே அநாயாசமாக வெளிக்காட்டி ரசிக்க வைக்கிறார்.
ஹரீஷ் பெராடி அலட்டல் இல்லாத நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கவிதா பாரதி, அருள்தாஸ், பூர்ணிமா பாக்ய ராஜ், ஜோதிகாவின் தந்தையாக வரும் நாகிநீடு, ஆட்டோ ஓட்டும் மூர்த்தி உள் ளிட்டோரின் கதாபாத்திரத் தன்மையும், அவர்களது நடிப்பும் சிறப்பு. 2-ம் வகுப்பு படிக்கும் சுட்டிப் பையனின் சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன.
பொறுப்பற்ற மனிதர்கள் சூழ்ந்த, சுகாதாரமற்ற ஒரு பள்ளி, நல்ல தலைமை ஆசிரியரின் வருகைக்கு பிறகு புத்துயிர் பெறும் காட்சிகள் உயிரோட்டமாக உள்ளன. கதைக்கு பெரும் அடித்தளம் வசனம். ‘குற்ற வாளிகளையும், கூலித்தொழிலாளர் களையும் உருவாக்க பள்ளிக்கூடம் எதற்கு?’, ‘வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்குறவங்க மட்டுமே அரசாங்க பள்ளியில் படிக்கிறாங்க. உயர்கல்வி யில் அவங்களுக்கு 50 சதவீதம் ஒதுக் கினாலே வறுமையைப் போக்கலாம்’ என்பது போன்ற இடங்களில் பாரதி தம்பி - கவுதம்ராஜின் கூர்மையான வசனங்கள் படத்துக்கு வலுசேர்க் கின்றன.
ஷான் ரோல்டனின் பின்னணி இசை, மனதுக்கு இதம். சில இடங்களில் மான்டேஜ் பாடல்கள், தேவையற்ற இடைச் செருகல். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு சிறப்பு.
ஜோதிகாவின் ராணுவத் துறை வாழ்க்கைப் பின்னணி, பூர்ணிமாவுக் கும் அவருக்குமான தொடர்பு, தந்தையின் இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு அதே நாளில் பள்ளிக்கு புறப்பட்டுப் போவது என சில இடங் களில் மட்டும் சினிமாத்தனம்! நமது கல்விமுறை சரியில்லை என்று குற்றம் சாட்டும் ‘ராட்சசி’ அதற்கான தீர்வாக வலுவான யோசனை எதையும் முன் வைக்கவில்லை. ஜோதிகா தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களையும் விவரம் இல்லாதவர்களாக காட்டு வதும், ஒரே பள்ளியைச் சுற்றி நாடகத் தனமாக காட்சிகள் நகர்வதும், ஒரு கட்டத்தில் சோர்வைத் தருகிறது. மாணவ, மாணவியரின் நலனை கருத் தில்கொண்டு ஜோதிகா எடுக்கும் தைரியமான முடிவும், அதற்காக படத்தின் இறுதியில் அவர் எதிர்கொள் ளும் நிகழ்வும் வெகுவாக கவர்கிறது.
ஆசிரியர்கள் சரியாக இருந்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்ற கருத்தை, தற்போதைய நடைமுறை சம்பவங்களோடு பிணைத்து பிரதிபலித்துள்ளது பாராட்டுக்குரியது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக கொஞ்சம் ஓவராகவே பொங்கியிருந்தாலும், ஜோதிகாவுக்காக பொறுத்துக் கொள்ளலாம்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
முதல் பார்வை: களவாணி 2

[Image: kalavani-2jpgjfif]

வேலை வெட்டி இல்லாமல் நண்பர்களுடன் திரியும் நாயகன், காதலுக்காக பஞ்சாயத்துத் தலைவருக்கான தேர்தலில் வேட்பாளராக நின்றால், களவாணித் தனத்தால் தலைவராக வென்றால் அதுவே 'களவாணி 2'.
நாயகன் விமலுடன் படித்த நண்பர்கள் லண்டன், அமெரிக்கா என்று செட்டில் ஆகிவிட, படிக்காமல் வேலையும் செய்யாமல் அரசனூரை விட்டுப் போகமாட்டேன் என்று வெட்டியாய் ஊர் சுற்றித் திரிகிறார். ஓவியாவின் ஒற்றை வார்த்தை அவருக்குள் பஞ்சாயத்துத் தலைவர் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்புகிறது. ஒரு பக்கம் ஓவியாவின் அப்பா வேட்பாளராகவும், இன்னொரு பக்கம் விமலின் மாமா வேட்பாளராகவும் களம் இறங்குகின்றனர்
இந்த சூழலில் விமலும் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆனால், 4 வாக்குகளைத் தவிர வேறு யாரும் விமலுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்கிற அளவுக்கு விமல் அண்ட் கோ அவமானப்படுகிறார்கள், அசிங்கப்படுகிறார்கள். இந்நிலையில் விமல் என்ன செய்கிறார், அவரின் காதல் என்ன ஆனது, தேர்தலில் வெற்றி பெற அவர் செய்யும் வியூகங்கள் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
'களவாணி' படத்தை இயக்கிய சற்குணம் அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். ஆனால், முதல் பாகத்தில் இருந்த புதுமையும் திரைக்கதை நேர்த்தியும் இரண்டாம் பாகத்தில் இல்லை. கதாபாத்திரங்களின் வார்ப்பிலும் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார்.
'கில்லி', 'கிரீடம்', 'குருவி' ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த விமல் 'பசங்க' படத்தின் மூலம் அறிமுக நாயகன் ஆனார். 'களவாணி' படம்தான் அவருக்கான அடையாளத்தைக் கொடுத்தது. தற்போது அதன் இரண்டாம் பாகமே விமலின் 25-வது படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் விமலுக்கு வாழ்த்துகள். ஒருவிதத்தில் பார்த்தால் இயக்குநர் சற்குணம், விமல், ஓவியாவுக்கு இது முக்கியமான படம். இன்னும் சொல்லப்போனால் மறு வருகைக்கான படம் என்று சொல்லலாம். ஆனால், அதை மூவருமே இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
'களவாணி' படத்தின் தொடர்ச்சியாக 'களவாணி 2' இல்லையென்றாலும் கூட, முதல் பாகத்தின் முக்கிய அம்சங்களை இயக்குநர் சற்குணம் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தியுள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த 'களவாணி' படத்தின் அறிக்கி என்ற அறிவழகன் கதாபாத்திரத்தில் விமல் அச்சு அசலாக இப்போதும் பொருந்துகிறார். அதே முகத் தோற்றம், களவாணித்தனம், பொய்யான வாக்குறுதி என்று அறிக்கி கதாபாத்திரத்துக்கு பாதகம் இல்லாமல் நடித்திருக்கிறார். ஆனால், அதில் எந்தப் புதுமையும் வித்தியாசமும் இல்லாமல் முதல் பாகத்தின் டெம்ப்ளேட்டாகவே இருப்பதுதான் நெருடல்.
ஓவியாவுக்கு அதிகம் வேலையில்லை. அழகாக வருகிறார், போகிறார். காதலனைத் தவறாகப் புரிந்துகொள்வது பின் சேர்வது என வழக்கமான கதாநாயகிக்குரிய பங்களிப்பில் குறையில்லாமல் நடித்துள்ளார்.
'ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா என் மகன் அன்னபோஸ்ட் தலைவர்' என்பதையே அட்சரம் பிசகாமல் பேசுகிறார் சரண்யா பொன்வண்ணன். முதல் பாகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பன்ச் என்பதால் அதையே பட்டி டிங்கரிங் பார்த்துப் பயன்படுத்தியுள்ளனர். அதைத் தவிர சரண்யா பொன்வண்ணனுக்கும் இளவரசுவுக்கும் படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை. மகன் மீதான பிணைப்பையும், வெறுப்பையும் இருவருமே சரியாக வெளிப்படுத்தாத அளவுக்கு திரைக்கதை பலவீனமாக உள்ளது.
மயில்சாமி, வினோதினி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.
மாசானியின் ஒளிப்பதிவு அரசனூரின் வளமையை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. மணி அமுதவன், வி2, ரொனால்ட் ரீகன் ஆகியோர் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் தங்கவில்லை. நடராஜன் சங்கரனின் பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தம்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் சில சங்கதிகளை மட்டும் வைத்து புது அம்சங்களை சேர்த்த விதத்தில் இயக்குநர் சற்குணத்தின் புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கது. ஆனால், தேர்தல் என்கிற ஒற்றை விஷயத்தை வைத்துக்கொண்டு எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் படத்தை நகர்த்தியிருப்பதுதான் சோகம். நகைச்சுவைக் காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை. விக்னேஷ் காந்த், கஞ்சா கருப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் அயர்ச்சியையும் சோர்வையும் வரவழைக்கின்றன. ஓட்டு கேட்கச் செல்லும்போது எதிரணியினர் கஞ்சா கருப்பை அள்ளிக் கொண்டு செல்லும் காட்சியில் மட்டும் நகைச்சுவை தெறிக்கிறது.
விமலின் வியூகங்களும் ஏனோதானோவென்று இருக்கிறதே தவிர, புத்திசாலித்தனம் துளியும் தென்படவில்லை. ஓவியாவின் தந்தையை நம்ப வைப்பதற்காக சித்தப்பா என்று அழைப்பதெல்லாம் வேற லெவல் திருப்பம் என்று இயக்குநர் நம்பியிருக்கிறார். ஆனால், அது ரசிகர்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் விடப்பட்ட சவால்.
தாயன்பனின் எழுத்தில் ஒரு கதையாக இருக்கும் படம் திரைக்கதையாக விரிவடையாமல் கதையின் போக்கிலும், கதாபாத்திர வார்ப்பிலும் மிகவும் சுருங்கிப் போவதால் படம் தடம் தெரியாமல் திணறுகிறது. இந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் சாதாரணமாக ஒரு படம் பார்க்க நினைப்பவர்கள் 'களவாணி 2'-க்கு விசிட் அடிக்கலாம்.


first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]ஹீரோயின் நீயா.. நானா? - `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பஞ்சாயத்தால் விருது விழாவைப் புறக்கணித்தாரா சுஜிதா?[/color]

[color=var(--title-color)]பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துக்குள் பஞ்சாயத்து பண்ண முடியாத அளவுக்குப் பனிப்போர் முற்றிவிட்டது[/color]
[Image: vikatan%2F2019-07%2Fdbd89aa4-b65c-4f15-b...2Ccompress][color=var(--meta-color)]சுஜிதா[/color]
[color=var(--content-color)]மாமியார் மருமகளுக்கிடையே பிரச்னை, கூட்டுக் குடும்பமாக இருந்தால் குடும்பத்துக்கு வந்த மருமகள்களுக்கிடையில் பிரச்னை.. என்றைக்கு சீரியல்களின் ஒளிபரப்பு தொடங்கியதோ, அந்தநாள் தொட்டே இந்த இரண்டு விஷயங்கள்தான் முக்கால்வாசி சீரியல்களின் கதையாக இருந்து வந்திருக்கின்றன. `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை மட்டும் குறை சொன்னால் என்ன நியாயம்?[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F7de98b7d-a31f-41f4-9...2Ccompress]
பாண்டியன் ஸ்டோர்ஸ்
[/color]
[color=var(--content-color)]அட, அந்த சீரியலே மம்முட்டி, முரளி நடிச்ச `ஆனந்தம்’ படத்துக் கதைங்க’ என்கிறீர்களா, அது நமக்குத் தெரியாது. ஆனால், `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துக்குள் பஞ்சாயத்து பண்ண முடியாத அளவுக்குப் பனிப்போர் முற்றிவிட்டது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். `இவருக்குப் பதில் இவர்’னு யாராவது மாறினாலும் மாறலாம்’ என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.[/color]
[color=var(--content-color)]`என்ன பிரச்னை’ என தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம்.[/color]
[color=var(--content-color)]கூட்டுக் குடும்பத்துல நாலு அண்ணன் தம்பிங்க. மளிகைக் கடை நடத்தறாங்க. மூத்த மருமகள் மட்டும் இருக்கிற வரை பிரச்னை இல்லை. ரெண்டாவது மருமகள் வந்ததும் ஆரம்பிக்குது பிரச்னை. அந்தப் பிரச்னைகள்தான் தினசரி ட்விஸ்ட். மூத்த மருமகளா சுஜிதா வர்றாங்க. அடுத்த மருமகள் சித்ரா. கதைப்படி ரெண்டு பேருக்குமிடையே பழைய பகை இருக்கும்’ – சீரியலின் கதையை சில வார்த்தைகளில் சொன்ன அந்த பெயர் குறிப்பிட விரும்பாத துணை நடிகர், மேற்கொண்டு சொன்னதெல்லாம் சீரியஸ் ரகம்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F33e6c35f-c5f9-4534-8...2Ccompress]
பாண்டியன் ஸ்டோர்ஸ்
[/color]
[color=var(--content-color)]`சுஜிதா, சித்ரா ரெண்டு பேரும் ஆரம்பத்துல அவ்வளவு ஒற்றுமையா இருந்தாங்க. `நாங்க அக்கா தங்கச்சிகளாக்கும்’னு வளைய வந்தாங்க. ரெண்டு பேரும் முறைக்கிற மாதிரி, சண்டை போடற மாதிரி சீன் இருந்தா, அது முடிஞ்சதும், அதையே இமிடேட் செய்து ஒருத்தருக்கொருத்தர் ஜாலி கேலி பண்ணிட்டிருப்பாங்க.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சீரியல் நல்லபடியா போனதால சேனல்ல இருந்து விருதுக்கும் தேர்வாச்சு.இங்கதான் பிரச்னை தொடங்கினதா தெரியுது. பெஸ்ட் சப்போர்ட்டிங் கேரக்டர்ங்கிற பிரிவுல சுஜிதாவுகக்கு விருது தந்தாங்க. அதேநேரம் சிறந்த நடிகைக்கான நாமினேஷன் லிஸ்ட்ல சித்ரா பெயர் இடம் பிடித்தது. சேனல் தன்னை ஹீரோயினாக் கருதலைங்கிற வருத்தம் சுஜிதாவுக்கு. 'விழா மேடையில 'யாருக்கு சப்போர்ட் பண்ணினேன்னு தெரியலை' ன்னு தன்னோட அதிருப்தியை வெளிப்படுத்திட்டு, பாதியிலேயே வெளியேறிட்டாங்க அவங்க. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும், நாளுக்கு நாள் இந்தப் பிரச்னை வளர்ந்துட்டேதான் போகுதே தவிர தீர்வுக்கு வழி தெரியலை. ஷூட்டிங்கிற்கு தேதி தர்றதுல தொடங்கி, ’கதையில யாருக்கு முக்கியத்துவம்’ங்கிற வரைக்கும் போய் நிக்குது. இது எங்க போய் முடியும்னு தெரியலை. இவங்க பஞ்சாயத்துக்கு நடுவுல மாட்டிக்கிட்டு பாவம் இயக்குநர்தான் தவிக்கிறார்’ என்பதே அந்த மேலதிக தகவல்.

[color=var(--content-color)]சீரியலுக்கு தன்னை கமிட் பண்ணினப்ப, ‘நீங்கதான் லீட் ரோல்’னு சொன்னதா சித்ரா சொல்றாங்க. ’கதையில எனக்குத்தான் முக்கியத்துவம், நான் சீனியரும் கூட, அதனால என்னோட கேரக்டர்தான் லீட்’னு சுஜிதா நினைக்கிறாங்க, இதான் மேட்டர்’ என உடைத்துப் பேசிய டெக்னீசியன் ஒருவரும் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.[/color]
[color=var(--content-color)]அந்த சீரியலைத் தயாரிக்கிற தயாரிப்பு நிறுவனத்தோட ராசி போல சார் அது. ‘ஆண்டாள் அழகர்’, ’பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’னு பல சீரியல்களைத் தயாரிச்சவங்கதான். இந்த எல்லா சீரியல்களிலுமே இதே டைப் பஞ்சாயத்து நடந்துதான் அந்தந்த தொடர்களை முடிச்சிருக்காங்க. ரெண்டு ஹீரோ அல்லது ரெண்டு ஹீரோயின்னு கமிட் செய்து சீரியலைத் தொடங்கிடுறாங்க. ஆரம்பத்துல சுமூகமாப் போனாலும் எங்காவது ஒருகட்டத்துல பிரச்சினை வந்திடுது. அதேபோல சீரியல்ல ஏதாவது பிரச்னைனு வந்தா சரி செய்ய முயற்சிக்காம, சைலண்டா இருக்கிற அணுகுமுறையை தயாரிப்புத் தரப்பு மாத்தினா மட்டுமே இந்த மாதிரி பிரச்னை வராமத் தடுக்க முடியும்’ என்கிறார், ஏற்கெனவே இப்படியொரு அனுபவத்தைச் சந்தித்த அந்த ஹீரோ.[/color]
[color=var(--content-color)]உங்களுக்கும் சுஜிதாவுக்கும் இடையே பிரச்னையாமே’ என சித்ராவைக் கேட்ட போது, சீரியல்லயா அல்லது நிஜத்துலயா’ என்றவர், 'விருது விழாவுல என்ன நடந்ததுனு எல்லாருக்கும் தெரியும். நான் எதுவும் பேச விரும்பலை. என்னைப் பொறுத்தவரை என்னால ஷூட்டிங் பாதிக்கப்படக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன்' என்கிறார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வசூலை வாரிக்குவிக்கும் ஸ்பைடர்மேன்... 4 நாட்களில் எவ்வளவு தெரியுமா?

ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் , இது ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் படத்தின் தொடர்ச்சியாகும். ஸ்படைர்மேனாக டாம் ஹாலாண்டு நடிப்பில் கடந்தா நான்காம் தேதி இந்தியாவில் ரிலீஸானது.
 
[color][font]

[Image: spiderman-far-from-home.jpg]

[/font][/color]
முன்னதாக மார்வெல் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஏப்ரல் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை செய்தது. இந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ஸ்பைடர் மேன் படத்தை வெளியிட்டுள்ளது மார்வெல். எண்ட் கேம் படத்தில் அயர்ன் மேன் இறந்த பின்பு அவரது இடத்தை யார் பூர்த்தி செய்வார்கள் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.
 

இந்நிலையில் ட்ரைலரில் அயர்ன்மேன் இறந்தபின் நடப்பது போன்ற கதை என்று காட்டப்பட்டது. இதுவே பலருக்கு இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டியது. இதன் காரணமாக ஸ்பைடர்மேன் படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.
 

ஸ்பைடர்மேன் பட வரிசையில் இந்தப்படம் தான் இந்தியாவில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த படம். 2019-ம் ஆண்டு இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த படங்களில் 2ஆவது இடம் பிடித்துள்ளது ஸ்பைடர்மேன். முதலிடத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இருக்கிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: FotoJet-2-750x506.jpg]
அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள் - ரஜினி, விஜய், அஜித்... முதலிடத்தில் யார் தெரியுமா?
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் சினிமா பரந்து விரிந்தது. இங்கு தயாரிக்கப்படும் பல படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டாகும்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பலம் கணக்கிட முடியாதது. இங்கு அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகர்கள் யார் என்று பார்ப்போம்…
பட்டியலுக்கு நெருக்கமானவர்கள் 
ஜீவா, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா, சந்தானம் ஆகியோர் முதல் 15 பேர் பட்டியலில் இடம் பிடிக்கக் கூடியவர்கள். ஜீவா 2-3 கோடியும், விஷால், ஆர்யா, சந்தானம் 3-5 கோடியும், ஜெயம் ரவி 4-5 கோடியும் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
10. சிம்பு – 7-8 கோடி
[Image: simbu-1.jpg]
Simbu – சிம்பு

உண்மையான ரசிகர்களையும், நல்ல ஓபனிங்கையும் கொண்டவர் சிம்பு. முதலில் 10 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த இவர் கொடுத்ததோ அடுத்தடுத்த ஃப்ளாப் படங்கள். பின்னன் ‘செக்க சிவந்த வானம்’ ஹிட்டானதால், இவர் மார்க்கெட் ஏறத் தொடங்கியது. இருப்பினும் உயர்ந்த மார்க்கெட்டை ‘வந்தா ராஜாவா தான் வருவேன்” பதம் பார்த்து விட்டது.
9. விஜய் சேதுபதி – 8 கோடி
[Image: vijay-1.jpg]
Vijay sethupathy – விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் இன்றைய ட்ரெண்ட் விஜய் சேதுபதி தான். 2018-ல் இவர் நடித்த அத்தனைப் படங்களும் சமச்சீரான வெற்றியைப் பெற்றன. தற்போது தமிழகம் தவிர்த்து, வெளி மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
8. கார்த்தி – தனுஷ் – 10 கோடி
[Image: FotoJet-1-1.jpg]
Karthi, Dhanush – கார்த்தி, தனுஷ்

வெற்றி தோல்வி என இரண்டையும் மாறி மாறி பேலன்ஸ் செய்துக் கொண்டிருக்கும் நடிகர்கள். தீரன், கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்த ஹிட்களைக் கொடுத்த கார்த்திக்கு சமீபத்தில் வெளியான ’தேவ்’ தோல்வியை தழுவியது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தனுஷின் ‘வட சென்னை’ வெற்றி பெற்றது. ஆனால் மாரி 2 தோல்வியடைந்தது.
7. சிவகார்த்திகேயன் – 15 கோடி
[Image: Sivakarthikeyan-4.jpg]
Sivakarthikeyan – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் அசூர வளர்ச்சியடைந்த நடிகர். ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர். சீக்கிரம் வளர்ந்து வரும் இவர், நிறைய பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
6. விக்ரம் – 20 கோடி
[Image: Film_Companion_Vikram_performances_lead_1.jpg]
Vikram – விக்ரம்

திறமை வாய்ந்த, கதைக்காக எது வேண்டுமானாலும் செய்யத் துணிந்த நடிகர். தென்னிந்திய சினிமா ரசிகர்களின் அன்பை அளவுக் கடந்து பெற்றிருப்பவர். சமீபத்தில் இவருக்கு பெரிதாக எந்தப் படமும் கை கொடுக்கவில்லை. இருப்பினும் அவருக்கான க்ரேஸ் அப்படியே தான் இருக்கிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
5. சூர்யா – 20-22 கோடி 
[Image: surya-pasanga2-hd-photos-05.jpg]
Surya – சூர்யா

இவரின் காப்பான் ஆகியப் படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபிஸில் சராசரி இடங்களைப் பிடிக்கும் இவரது படத்திற்கு, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ரசிகர்கள் உண்டு.
4. கமல் ஹாசன் 25-30 கோடி
[Image: aa-Cover-e9nldtpor48758bmjk2v3eldp4-2017...Medi_.jpeg]
Kalmal Haasan – கமல் ஹாசன்

யாருடனும் ஒப்பிட முடியாத நடிகர் கமல். புது புது யுக்திகளை கலையில் கையாள்பவர். எத்தனை காலம் கடந்தாலும் கொண்டாடும்படியான படங்களை கொடுப்பவர்.
3. அஜித் – 35 கோடி
[Image: Ajith_2.jpeg]
Ajith – அஜித்

பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் வெற்றியடைந்ததால், தனது அடுத்தப் படமான ‘நேர்க்கொண்ட பார்வைக்கு’ சம்பளத்தை உயர்த்தியிருக்கிறாராம் அஜித்.
2. விஜய் – 50 கோடி
[Image: DwmG1j6UYAE9HV_.jpg]
Vijay – விஜய்

தமிழ் சினிமாவில் புதிய ரெக்கார்டுகளை உருவாக்குபவர் விஜய். தெறி, மெர்சல், சர்கார் என அடுத்தடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். தென்னிந்தியா முழுக்கவே வேர் பிடித்தி பரவியிருக்கிறது இவருக்கான ரசிகர்கள் கூட்டம்.
1.ரஜினி – 60 கோடி
[Image: kabali.jpg]
Rajinikanth – ரஜினிகாந்த்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டாரான இவரின் ரசிகர்களை கணக்கிடுவது கடினம். அப்படி உலகளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். இவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களுக்கு திருவிழா தான். சமீபத்தில் வெளியான இவரின் 2.0 மற்றும் பேட்ட ஆகிய திரைப்படங்களும் வசூல் சாதனை படைக்க மறக்கவில்லை!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]`ராஜா ராணி'யின் கடைசி நாளில் கலங்கிய ஆல்யா... பரிசாகக் கிடைத்த ஆச்சர்யம்![/color]

[color=var(--title-color)]`ராஜா ராணி' தொடர் முடிவடைவதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது.[/color]
[Image: vikatan%2F2019-05%2F8122dc5a-7161-4f50-b...2Ccompress][color=var(--meta-color)]ஆல்யா மனசா - சஞ்சீவ்[/color]
[color=var(--content-color)]சீரியல் ரசிகர்களால் ரொம்பவே விரும்பிப் பார்க்கப்பட்ட விஜய் டிவி-யின் பிரைம் டைம் தொடரான `ராஜா ராணி', அடுத்த சில தினங்களில் நிறைவடைகிறது. சில தினங்களுக்கு முன் கடைசி நாள் ஷூட்டிங் நடந்தபோது, சீரியலில் நடித்த அத்தனை பேரும் உணர்ச்சித் ததும்பலில் இருந்தனர். கடைசி நாள் ஷூட்டிங்கில் நடந்தவற்றைப் பார்க்கும் முன், `ராஜா ராணி' கடந்து வந்த பாதையின் மேடு பள்ளங்களைக் கொஞ்சம் திருப்பிப் பார்க்கலாம்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fbbad0836-07b7-4aff-9...2Ccompress]
ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட்
[/color]
[color=var(--content-color)]'குளிர் 100 டிகிரி' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சஞ்சீவையும், `மானாட மயிலாட' ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமாகியிருந்த ஆல்யா மானசாவையும், ஹீரோ - ஹீரோயினாக்கி தொடங்கப்பட்ட சீரியல் இது. ஒரு பெரிய குடும்பத்துக்குள் வேலைக்காரியாக வந்து, அந்த வீட்டு மருமகளாகிற கதை. `செம்பா' என்கிற கேரக்டரில் அப்பாவிப் பெண்ணாக வந்தார், ஆல்யா. அவரைப் பார்ப்பதற்காகவே தொடரைப் பார்த்தவர்களுடன், சோஷியல் மீடியாவில் அவருக்கு இருக்கும் ரசிகர்களும் சேர்ந்துகொள்ள, சீரியல் செம ரீச் ஆனது. கூடவே சர்ச்சைகளும்.[/color]
[color=var(--content-color)]`ஆல்யா - சஞ்சீவ் இடையே காதல்' எனக் கிளம்பத் தொடங்கி, 'ஆல்யாவுக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குநர் ஒருவரை சஞ்சீவ் அடித்துவிட்டார்' என்பது வரை சர்ச்சைகள் வந்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில் அத்தனை சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து `நாங்கள் இனி ரியல் ஜோடி' என அதிகாரபூர்வமாகவே அறிவித்தனர் இருவரும். தொடர்ந்து சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவிலேயே இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அது முடிந்த சில நாள்களில் ஷூட்டிங்கிற்காக ஒட்டுமொத்த யூனிட்டும் சிங்கப்பூர் சென்றது. சமூக ஊடகங்களில் `கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா?!' எனக் கலாய்த்தார்கள்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F20349a84-f3b7-4865-9...2Ccompress]
ஆல்யா - சஞ்சீவ்
[/color]
[color=var(--content-color)]`திருமணத் தேதியை எப்போது அறிவிப்பார்கள்' என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.
சரி, கடைசி நாள் ஷூட்டிங்கில் என்ன நடந்தது, ஆல்யாவிடமே பேசினோம்.

[color=var(--content-color)]"பொதுவா சீரியல்னாலே அழுகாச்சியா இருக்கும்னு ஒரு கருத்து இருக்கும். `ராஜா ராணி' மாதிரியான சீரியல்கள்தான் அந்தப் பெயரை உடைச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஹீரோயின் அப்பாவிதான். அவளைப் பார்த்தா உங்களுக்கு இரக்கம் வரும். ஆனா, எப்போவாவது 'சீரியல் அழுகாச்சியா இருக்கு'ன்னு நீங்க நினைச்சிருக்கீங்களா சொல்லுங்க, அப்படியொரு சலிப்பே வராம கதையை நகர்த்தினதுக்கு இயக்குநருக்குத்தான் நன்றி சொல்லணும்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fae165a35-0048-4a78-9...2Ccompress]
இயக்குநர் பிரவீன் பென்னட்
[/color]
[color=var(--content-color)]அதேநேரம், கடைசி நாள் ஷூட்டிங் ரியாலாகவே அழுகாச்சியா இருந்தது. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் எங்களால அழுகையைக் கட்டுப்படுத்த முடியல. வருடக் கணக்கா பழகிட்டுப் பிரிகிற துயரம் இருக்கே, அந்த நிமிடத்தை வார்த்தைகளால விவரிக்க முடியாது.[/color]
[/color]
Quote:என்னைப் பொறுத்தவரை கரியர்லேயும் சரி, பெர்சனல் வாழ்க்கையிலும் சரி, திருப்புமுனையா அமைந்த சீரியல் இது. என் வாழ்க்கைத் துணையா சஞ்சீவ் கிடைச்ச ஒரு மொமென்ட் போதாதா... இந்த சீரியல் என் வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்னு சொல்றதுக்கு?!"
[color][size][font][color=var(--white)]
ஆல்யா[/color]
[color=var(--content-color)]`கல்யாணத்துக்குக் கூப்பிட மறக்காதீங்க' என ஆர்ட்டிஸ்டுகள் ஒவ்வொருவரும் ஆல்யாவிடம் கேட்டுக்கொண்டு விடைபெற, அதன் பிறகே கவலையில் இருந்த ஆல்யாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது, அந்தக் கற்கண்டுச் செய்தி. அந்த ஆச்சர்யம் இதுதான்![/color]
[color=var(--content-color)]யெஸ்... `ராஜா ராணி' சீசன் 2 தொடங்க உள்ளது. `ராஜா ராணி' என்கிற அதே பெயரிலா அல்லது வேறு பெயரிலா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், ஆல்யா - சஞ்சீவ் ஜோடி மீண்டும் நடிக்க, அதே இயக்குநர், அதே தயாரிப்பு நிறுவனம் என மீண்டும் ஒரு சீரியல் அடுத்த சில மாதங்களிலேயே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்![/color]
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
”லாஸ்லியா ஒரு பட்டாம்பூச்சி, வனிதா...” - ஃபாத்திமா பாபு பகிரும் பிக்பாஸ் சீக்ரட்ஸ்

ரியோ தவறோ, பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி வந்துள்ள ஃபாத்திமா பாபுவை சந்தித்தோம். மற்ற போட்டியாளர்களிடம் தனக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
 
[Image: fathima%20babu2%20-%20Copy.jpg]


வனிதா: தனக்கு பிடிச்சிருந்தா என்ன வேண்டுமானாலும் செய்வாள். பிடிக்கலைனா தூக்கிபோட்டுட்டு ஈஸியா போயிடுவா, இதான் அவளுடைய கேரக்டர்.

அபிராமி: மனசில் நினைப்பதை டமால்னு சொல்லக்கூடியவள், பெரிய டான்ஸர், பெரிய நடிகர்களின் படங்களில் எல்லாம் நடித்து வருகிறாள்.

சேரன்: அவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை 100 சதவீதத்துக்கு மேல் சிறப்பாக அதிகம் செய்வார். அதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாம கூட போயிருக்கு. ஆனால், அவர் என்னை எப்போதும் ஒரு சமையல்காரி மாதிரி நினைப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கவின்: பெரியவர்களை அவன் ஆட்டத்திலேயே சேர்த்துக்க மாட்டான், எப்போதும் சின்ன வயசு பசங்க, பொண்ணுங்க கூட மட்டும்தான் பேசுவான். அது எனக்கு பிடிக்காது. எல்லா விஷயத்தையும் முயற்சி பண்ணி பார்க்கனும்னு நினைப்பான்.

லாஸ்லியா: அவள் ஒரு பட்டாம்பூச்சி, 10 வருஷமா அவள் அவளுடைய அப்பாவிடம் வீடியோ காலில்தான் பேசி வருகிறாள். அது எவ்வளவு பெரிய விஷயம். இந்த தமிழ்நாட்டை விட்டு அவள் இலங்கை போகமாட்டாள், தமிழ்நாடு அவளை ஏற்றுக்கொள்ளும். அவளிடம் பிடிக்காத விஷயம்னு எதுவும் இல்லை.

தர்ஷன்: ரொம்ப தெளிவான பையன். தனக்கு யார் வேண்டும் என்பதில் தெளிவா இருப்பான். இன்னும் அவன் விவரமா இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
முகின்: ரொம்ப நல்லா பாடுவான். என்னை எம்.ஜி.ஆர் என்று கூப்பிடுங்கள் என்று எங்களிடம் சொல்லுவான்.நாங்கள் யாரும் அப்படி கூப்பிட மாட்டோம்.

மதுமிதா: ரொம்ப வெகுளியான பொண்ணு, முதல் வாரம் என்னை நாமினேட் பண்ணிட்டு அடுத்தவாரம் என்னிடமே தலைவாரிக்கிட்டவள். நான் எதையும் மனதில் வைத்துக் கொள்வதில்லை.

சாண்டி மாஸ்டர்: ரொம்ப ஜாலியானவன். அந்த மாதிரி கேரக்டர் நம்ம கூட இருப்பது நமக்கு புத்துணர்வாக இருக்கும், சடார்னு ஏதாவது அடுத்தவர்களிடம் சொல்லிடுவான், அதை அவன் குறைக்கணும். மதர், மதர்னு அவன் கூப்பிடும்போது ரொம்ம சந்தோஷமா இருக்கும்.
சாக்ஷி: சின்ன விஷயத்தை பெரிசா நினைத்து பேசுவாள், அதை அவள் கண்டிப்பா மாற்றிக்கொள்ள வேண்டும். கவின்கிட்ட அவள் அதிகம் உரிமை எடுத்துகிறதும் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மதத்தைச் சுற்றி நடக்கும் குற்றங்கள்... என்ன செய்கிறார் ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா?! 

ஊரே சிரிக்கும் அளவுக்கு ‘நானும் டிடெக்டிவ்தான்’ ‘நானும் டிடெக்டிவ்தான்’ என்று சுற்றி வரும் ஒருவன் ஊரே வியக்கும்படி ஒரு மிகப்பெரிய வழக்கை துப்பறிந்து கண்டுபிடிப்பதுதான் ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா. மிகச்சிறிய பட்ஜெட்டில் சிறிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு, படத்தை பார்த்தவர்கள் கொண்டாடி ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலமாக ப்ரொமோஷன் செய்ய, ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா.

 
[Image: agent%20sai4.jpg]


டிடெக்டிவ் சினிமாக்களை பார்த்து கரைத்துக் குடித்து, தன் ஆஸ்தான குரு ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஒரு பெரிய டிடெக்டிவ் ஆகவேண்டும் என்கிற கனவுடன் எஃப்.பி.ஐ எனும் ஃபாத்திமா இன்வஸ்டிகேடிவ் பீரோவை நடத்தி வருகிறான் ஆத்ரேயா. ஆனால் மாட்டுவது சில்லரை வழக்குகள் மட்டும். என்றாவது ஒரு பெரிய கேஸ் மாட்டும், நானும் ஊர் புகழும் டிடெக்டிவ் ஆவேன் என்ற வெறியுடன் வாழும் ஆத்ரேயா யதேச்சையாக ஒரு வழக்கை துப்பறியப் போக, அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விஸ்வரூபமெடுத்து அவன் முன் நிற்கிறது. இத்தனை வருடங்களாக தேடிக்கொண்டிருந்த அந்த பெரிய வழக்கு இதுதான் என்று ஆத்ரேயா ஆர்வமாகும்போது, அந்த வழக்கில் ஆத்ரேயாவையே குற்றவாளி என ஜெயிலில் தள்ளுகிறது போலீஸ்.

என்ன நடந்தது என்று நிதானித்து யோசிக்கும்போதுதான், தன்னைச் சுற்றி ஒரு பெரிய சதிவலை பின்னப்பட்டிருப்பதையும் அதையறியாமல் தான் அதில் சிக்கிவிட்டதையும் உணர்கிறான். ஜாமீனில் வெளியே வந்து  நீண்டுகொண்டே போகும் அந்த புதிருக்கான விடையை கண்டுபிடித்தானா என்பதை விறுவிறு திரைக்கதையும் சொல்கிறது ASSA. படத்தின் மிகப்பெரிய பலம் சுவாரசியமான திரைக்கதையும் புத்துணர்ச்சியான எழுத்தும்தான். ஆத்ரேயா யார் என காட்டுவதில் தொடங்கி, அவனிடம் வேலைக்கு வரும் நாயகி, அவர்கள் சந்திக்கும் சின்னச் சின்ன வழக்குகள் என படத்தின் ஆரம்ப காட்சிகளின் நகைச்சுவையும் சுவாரசியமும் சட்டென்று நம்மை படத்தோடு ஒன்றவைக்கின்றன. முதல் காட்சியில் துவங்கும் நகைச்சுவை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து பார்வையாளர்களை கூலாக்கி செல்கிறது.

 
 
[Image: agent%20sai3%20-%20Copy.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஆத்ரேயா யதேச்சையாக ஒரு வழக்கை தொடப்போக, அது கொஞ்சம் கொஞ்சமாக பாண்டோரா பாக்ஸ் போல விரிந்துகொண்டே போவதும், அதை மூடப்போகும் ஆத்ரேயாவே ஒருகட்டத்தில் அதில் அடைபட்டுக்கொள்வதும் சுவாரசியமான முடிச்சுகள். ஆனால் படம் ஜெட் வேகமெடுப்பது இரண்டாம் பாதியில்தான். இந்த அத்தனை முடிச்சுகளுக்கும் காரணம் என்ன என்று ஆத்ரேயா தேடத்துவங்கும் இடத்தில் பறக்க ஆரம்பிக்கும் படம் கடைசிவரை அந்த வேகம் குறையாமல் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது. ஆத்ரேயா தோண்டத் தோண்ட வெளியே வரும் உண்மைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட காட்சிகள் என்று தெரிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும்போது அந்த அதிர்ச்சி இன்னும் கூடுகிறது. புதிருக்கான ஒரு விடை கிடைத்தாலும்  அதில் ஏதோ ஒரு புள்ளிக்கான பதில் தெளிவாகாமல் உறுத்திக் கொண்டே இருப்பதும், அதற்கான பதிலின் மூலமே அந்த முடிச்சு அடுத்த கட்டத்திற்கு போவதும் அட்டகாசமான திரைக்கதையின் வெளிப்பாடு.

பதைபதைப்பை ஏற்படுத்தும் அந்த சம்பவங்களோடு நாயகனின் வாழ்வை சாமர்த்தியமாக கோர்த்திருப்பதும், படத்தின் மையமான உணர்வலைகளை அதனையொட்டியே கட்டமைத்திருப்பதும் பார்வையார்களை படத்தோடு வெகுவாக நெருங்கச் செய்வதோடு உணர்வுப்பூர்வமான ஒரு பந்தத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.  முதல் படத்திலேயே நிறைய அடுக்குகள் உள்ள ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதை சுவாரசியமாகவும் ஜனரஞ்சகமாகவும் கொடுப்பது பெரும் சவால். அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் ஸ்வரூப். பல வருடங்கள் காத்திருப்பிற்குப் பின் கிடைத்த ஹீரோ வாய்ப்பில் தனது இயல்பான நடிப்பான நகைச்சுவையாலும் முடிந்தவரை முத்திரை பதித்திருக்கிறார் நவீன் பாலிஷெட்டி. அசிஸ்டென்ட் டிடெக்டிவாக வரும் ஸ்ருதி, ஆத்ரேயாவிற்கு உதவும் போலீஸ், கர்னாடக டிடெக்டிவ், நாடக நடிகர், பர்கர் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும் இன்ஸ்பெக்டர் என சுவாரசியமான பாத்திரப் படைப்பும் நடிப்பும் படத்தை மேலும் அழகாக்குகின்றன. குறிப்பாக கர்னாடக டிடெக்டிவ் பாத்திரம் சீரியஸாக செல்லும் இரண்டாம் பாதியை கலகலப்பாக்குகிறது. சின்ன பட்ஜெட் என்பது ஒளிப்பதிவில் ஆங்காங்கே தெரிகிறது. நேர்த்தியான படத்தொகுப்பும் படத்தின் தன்மைக்கேற்ப பயணிக்கும் இசையும் விறுவிறுப்பை கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

 
 
[Image: agent%20sai%20-%20Copy.jpg]


நாயகன் கண்டுபிடிக்கும் பெரும்பாலான விஷயங்கள் எதிரில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டே கண்டுபிடிப்பதுபோல் அமைத்திருப்பது சற்றே செயற்கைத்தனமாய் உள்ளது. அதேபோல, கிட்டத்தட்ட ஒரு பெரிய சிண்டிகேட் போல செயல்படும் இந்த சதிக்கூட்டத்தின் மூளையாக செயல்படுவது யார் என்று தெரிய வரும்போது, ஒரு சிறிய ஏமாற்றமும் வருகிறது. அதற்கு முந்தைய காட்சிகளில் அந்தக் கூட்டத்தை பற்றிய ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்த  விதமும், அவர்கள் செய்யும் அதிர்ச்சிகரமான, சாமர்த்தியான செயல்களும் அவர்கள் குறித்த எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ஏற்றிவைத்திருக்க, அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக இல்லை அந்த பாத்திரங்களின் கனம். அந்த உண்மைகள் தெரியவரும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமுமே கூட கொஞ்சம் அவசரத்துடன் எடுக்கப்பட்ட உணர்வையே ஏற்படுத்தியது.

இதையெல்லாம் தாண்டி சுவாரசியமான எழுத்து, புத்திசாலித்தனமான திருப்பங்கள், முடிச்சுகள், அதன் மூலம் வெளியே வரும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள், நாயகன் நாயகிக்கு இடையேயான க்ளிஷேக்கள் இல்லாத திரைக்கதை, ஸ்டைலிஷான மேக்கிங் என ஒரு விறுவிறுப்பான சுவாரசியமான க்ரைம் த்ரில்லர் பார்த்து நிறைவைத் தருகிறது ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா. மதம் ஆழமாக வேரூன்றி இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், அதைச் சுற்றி நடக்கும் குற்றசெயல்களை மையப்படுத்தி ஒரு கதையை எழுதியதையும், அதனை அடிக்கடி நாம் நாளிதழ்களில் கடந்து செல்லும் ஒரு செய்தியோடு தொடர்புபடுத்தி மிக சுவாரசியமான ஒரு திரைப்படமாக உருவாக்கியதையும் உச்சிமுகர்ந்து பாராட்டலாம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மீண்டும் விலைபோனது காப்பான் கேரள உரிமை

[Image: NTLRG_20190711105549745393.jpg]

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் என இரண்டு மொழி முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள படம் காப்பான். இவர்களுடன் ஆர்யா, சமுத்திரகனி, சாயிஷா சைகல் என மினி நட்சத்திர பட்டாளமும் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது. மோகன்லால் படம் என்பதாலும் சூர்யாவுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பதாலும் இந்த படத்திற்கு கேரளாவிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை புலி முருகன் படத்தை தயாரித்த முலக்குப்பாடம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஆனால் அதன்பின் வெளியான சூர்யாவின் என்ஜிகே படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவியது. தொடர்ந்து சூர்யாவின் கடந்த சில படங்கள் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வருவதால் காப்பான் பட கேரள வெளியீட்டு உரிமையை திருப்பிக் கொடுத்து வெளியேறியது முலக்குப்பாடம் பிலிம்ஸ். இந்த நிலையில் இந்த படத்தை காயத்ரி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம் கேரளாவில் வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
 போதை ஏறி புத்தி மாறி... வாழ்வை தொலைக்கும் நாயகன்..! விமர்சனம்

சென்னை: தெரியாத்தனமாக செய்யும் தவறு ஒரு இளைஞனின் வாழ்வை எப்படி எல்லாம் மாற்றிப் போடுகிறது என்பதை தலைச்சுற்ற காட்டுகிறது போதை ஏறி புத்தி மாறி திரைப்படம்.
மறுநாள் திருமணத்தை வைத்துக்கொண்டு நண்பனின் வீட்டுக்கு செல்கிறார் நாயகன் கார்த்திக் (டாக்டர் தீரஜ்). அங்கு அவரது நண்பர்கள் குடியும் குடித்தனமாக கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நண்பர் கூட்டத்தில் ஒருவர் விபரீதமான ஒரு போதை பழக்கத்துக்கு அடிமைப்பட்டு கிடக்கிறார். விளையாட்டாக அந்த போதை மருந்தை எடுத்துக்கொள்கிறார் கார்த்திக். போதை தலைக்கு ஏறி புத்தி மாறி ஏதேதோ செய்ய ஆரம்பிக்கிறார். அதில் இருந்து அவருக்கு பிரச்சினை தொடங்குகிறது.

[Image: review22-1562899957.jpg]

இதற்கிடையே பக்கத்து பிளாட்டில் இருக்கும் பத்திரிக்கையாளர் பிருந்தா (பிரதாயினி), போதை மருந்து மாஃபியாக்களின் தகவல்களை திரட்டி ஒரு ஹார்ட்டிஸ்கில் வைத்திருக்கிறார். அதனை அவரது காதலரான (லிவிங்டூகெதர் கணவர்) போலீஸ் அதிகாரி அபகரிக்க முயற்சிக்கிறார். அந்த ஹார்ட்டிஸ்கை போதையில் இருக்கும் கார்த்திக்கிடம் தருகிறார் பிருந்தா. ஒருகட்டத்தில் போதை உச்சிக்கு ஏறி மட்டையாகிறார் கார்த்திக். போதை தெளிந்து எழும் போது,பிருந்தாவும், கார்த்திக்கின் நண்பர்களும் அந்த அப்பார்ட்மெண்ட்டில் இறந்துகிடக்கிறார்கள். அவர்களை யார் கொன்றது? அந்த வீட்டில் இருந்து கார்த்திக் எப்படி தப்பிக்கிறார் என்பதை நமக்கும் போதை ஏறும் அளவுக்கு காட்டுகிறது மீதிப்படம்.
போதை பழக்கம் ஒருவரது வாழ்வை எப்படி எல்லாம் சீர்க்குலைக்கிறது என்பதை சொல்ல முயன்றிருக்கும் அறிமுக இயக்குனர் சந்துருவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அதை தலைச்சுற்று திரைக்கதையில் சொல்லியிருப்பது தான் நமக்கு போதை ஏற்றுகிறது. வித்தியாசமான திரைக்கதையின் மூலம் படம் நகர்கிறது. இது புதிது தான் என்றாலும், திருப்பங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பல காட்சிகளை வலிய திணித்திருப்பது நன்றாக தெரிகிறது.
முதல் காட்சியில் கார்த்திக்கின் நண்பர் ரோஷன் அவரை ஏமாற்றிய காதலி மீரா மிதுனை போதையில் அடித்துக் கொல்கிறார். ஆனால் அதன் பிறகு கடைசி வரை அது தொடர்பான காட்சிகளோ, விளக்கமோ மருந்துக்குகூட எட்டிப்பார்க்கவில்லை. மதுவைக்கூட கையில் தொடாத கார்த்திக், ஆபத்தான டிரக்சை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார். அதனால் அவர் வாழ்க்கை சீரழிகிறது. ஆனால் இந்த டிரக்சுக்கு அடிமையான நண்பர் ரோஷன் (மீராவை கொன்றவர்) கடைசி வரை நன்றாக தான் இருக்கிறார். இப்படி பல முரண்களும், கேள்விகளும் படம் முழுவதும் எழுந்து தலைச்சுற்ற வைக்கிறது.

[Image: review1212-1562899949.jpg]

அடுத்து என்ன நடக்கும் என பார்வையாளர் யூகித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து, கதில் நடராசனுடன் சேர்ந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சந்துரு. ஆனால் அவர்களது மெனக்கெடல்கள் பார்வையாளர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. ஒருகட்டத்தில் இது தான் கதை என எளிதில் யூகித்துவிட முடிகிறது.
படத்தின் நாயகன் தீரஜ் ஒரு புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படத்தை தோளில் தூக்கி சுமக்க நினைத்திருக்கிறார். தன்னால் முடிந்த அளவு போதையாகியிருக்கிறார். ஆனால் இன்னும் நிறைய பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்.
பிரதாயினி, துஷாரா என இரண்டு நாயகிகளும் அவ்வப்போது வந்து தலைகாட்டுகிறார்கள். பிரதாயினி மட்டுமே ஓரளவுக்கு நடித்திருக்கிறார். சின்ன சின்ன ரியாக்ஷன்களை மட்டுமே செய்து கவர்கிறார் துஷாரா. மீரா மிதுனுக்கு இவர்கள் அளவுக்கு கூட வேலை இல்லை.
சீனியர் நடிகர் ராதாரவி நாயகனின் அப்பாவாக அமைதியாக நடித்து கடந்து போகிறார். நண்பர்கள் பட்டாளத்தில், ரோஷனின் நடிப்பு மட்டுமே கவனிக்க வைக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜய், சில காட்சிகளில் அசத்துகிறார். சரத், அர்ஜுன், ஆஷிக், செந்தில் குமரன் என மற்ற நண்பர்கள் அனைவருமே சதா குடித்துக்கொண்டு, நமக்கும் போதை ஏற்றுகிறார்கள்.
படத்தை தூக்கி நிறுத்துவது கேபியின் இசையும், பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும் தான். கேபியின் பின்னணி இசையும், வெர்ஷின் ஸ்டோனர் பாடலும் தான் படத்தை காப்பாற்றுகிறது. ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கும் காட்சிகளை, விதவிதமான கோணத்தில் காட்டி, மிரள வைக்கிறார் கேமராமேன் பாலசுப்பிரமணியம். குழப்பமான திரைக்கதையை தெளிவாக காட்ட முயற்சித்திருக்கிறார் எடிட்டர் ரூபன்.

திரைக்கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் க்ளைமாக்ஸ் வேறு ரூட்டுக்கு நம்மை அழைத்து செல்கிறது. படம் முடிந்து வெளியே வரும் போது நமக்கும் போதை ஏறி புத்தி மாறிவிடுகிறது.
'போதை ஏறி புத்தி மாறி' புதியவர்களின் வித்தியாச முயற்சி மட்டுமே.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
காமெடியில் இறங்கிய அஞ்சலி, ஏன் இப்படி?

நடிகை அஞ்சலியின் நடிகர்களுக்கு இணையாக கதாபாத்திரங்களுக்காக தன்னை மாற்றிக் கொள்பவர். வித்தியாசமான வேடங்களை தேடி, தேடி நடிப்பவர். தற்போது முழுக்க காமெடி கதாப்பத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.


[Image: anali.jpg]காமெடியில் இறங்கிய அஞ்சலி, ஏன் இப்படி?


கிருஷ்ணன் ஜெயராஜ்இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க உள்ளார் அஞ்சலி. கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள். இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரிதயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போ
தும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம்
 நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன்" என்றார்.

அஞ்சலியை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.சினிஷ் விரிவாகக் கூறுகையில், “நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன்வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்" என்றா

இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது. 
இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்" என்றார். 
[Image: Master.jpg]


இந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது. 
[Image: Master.jpg]


அர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா - ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கூர்கா திரைவிமர்சனம்

கூர்கா என்ற சொல்லை நாம் கேட்காமல் இருந்திருக்க மாட்டோம். காவலாளியாக இரவு நேரத்தில் உலாவந்து கொண்டுருக்கும் கூர்க்கர் இன மக்கள் இன்னும் பாரம்பரியமான அதே தொழிலை தான் செய்து வருகிறார்கள். அவர்களை பற்றிய கதை தான் இது. சரி., இந்த கூர்கா எப்படிப்பட்டவர் என தெரிந்துகொள்ளலாம்.
கதைக்களம்
கதைப்படி யோகி பாபு கூர்கா வம்சம்த்தை சேர்ந்தவர். இவருக்கு போலிஸ் ஆக வேண்டும் ஆசை. இதற்காக என்னென்னவோ செய்கிறார். ஆனால் ஆசை நிறைவேறவில்லை. வேண்டா வெறுப்பாக செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக பெண் அமெரிக்க தூதரை சந்திக்கிறார். அவர் அழகில் மயங்கி அவர் மீது காதல் வயப்படுகிறார். பின்னர் என்ன? ஒரே ட்ரீம்ஸ் தான்.
ஒரு நாள் தீவிரவாத செயலில் ஒரு கும்பல் ஈடுபட பெரிய ஷாப்பிங் மாலில் இவர் சிக்கிக்கொள்கிறார். அங்கிருந்த மக்களும் மாட்டிகொண்டு தவிக்கிறார்கள். அங்கு வரும் யோகிபாபுவும் இதை அறிந்துகொண்டார்.
தான் உயிராக நினைக்கு அந்த பெண்ணை காப்பாற்ற இவர் களத்தில் இறங்குகிறார். அந்த கும்பல் யார், அவர்களின் நோக்கம் என்ன, அந்த பெண் தூதருக்கு என்ன தொடர்பு, மக்கள் காப்பாற்றப்பட்டார்களா, யோகி பாபு என்ன செய்தார் என்பதே இந்த கூர்க்கா.
படத்தை பற்றிய அலசல்
இரவில் விசல் சத்தம் கேட்காமல் நாம் இருந்திருக்க மாட்டோம். நாம் நிம்மதியாக உறங்க தங்கள் தூக்கத்தை தொலைக்கும் கூர்க்கா மக்களை சமூகத்தில் நாம் மனிதராக மதிப்பதில்லை. கூர்க்கர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ராணுவ வீரர்களுக்கு இணையாக பலம் பெற்றவர்கள். நாட்டின் பல பகுதிகளிலும் பிரிந்து வாழ்ந்தாலும் தன் பாரம்பரிய தொழிலை செய்து வருகிறார்கள். தீபாவளி, பொங்கல் டிப்ஸ் வாங்க வரும் சாதாரண மக்கள் என நம்மில் பலரும் நினைக்கிறோம்.
இந்நிலையில் கூர்காவாக வரும் யோகி பாபு ஒரு சீரியஸ் ஆன நபர் போல இல்லாமல் வழக்கமான தன்னுடைய காமெடி, கவுண்டர், பாடி லாங்குவேஜ் என கலந்து அந்த கூர்க்காவாக மாறியுள்ளார். ஒரு சாதாரண கூர்க்காவாலும் சமூகத்திற்கு நல்ல காவலாளியாக இருக்க முடியும், அவர்கள் மதிக்கப்படவேண்டும் என அவர் படத்தில் சொல்லியிருக்கிறார்.
அவரின் மனம் ஈர்த்த இளம் பெண் அமெரிக்க தூதரை யோகி பாபு காதலிக்கு விதம் எண்டெர்டெயின்மெண்ட் ஆன ஸ்டைல். பிறகு என்ன ஒரே காதல் கனவு தான்.
சினிமாவில் ஒரு நேரத்தில் காமெடியில் முக்கிய நடிகராக இருந்த சார்லியை நீண்ட நாட்கள் கழித்து படத்தில் பார்த்தது மகிழ்ச்சி யோகிபாபுவுக்கு நண்பராக வரும் இவரும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளை மக்களின் கவனம் ஈர்க்கிறது. லவ் காட்சிகள் குறைவு ஆனாலும் சிரிப்பும் தான். படத்தில் அவர்கள் தவிர ஆடுகளம் நரேன், மனோ பாலா, தேவ தர்ஷினி என வேறு சிலரும் இதில் நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் சாம் ஆண்டன் ஏற்கனவே டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு என கவனம் ஈர்த்த படங்களை இயக்கியவர் யோகிபாபுவை ஒரு வித்தியாசமான ஹீரோவாக காட்டியிருக்கிறார்.
படத்தின் இரண்டாம் பாதியில் மிகவும் விறுவிறுப்பு. தியேட்டரில் படம் பார்க்கவந்தவர்களை சிரிக்கவைத்துவிடுகிறது.
அஜித், விஜய், விஷால், சிம்பு, தனுஷ், ரஜினி என பலரின் நடிகர்களின் முக்கிய விசயங்களை பெர்ஃபார்மன்ஸ்ல் கொண்டு வந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கிறார்.
மேலும் அரசியல் சர்ச்சை, பாலியல் சர்ச்சைக்குரிய முக்கிய நபர்கள், டிவி சானல் என பலரையும் உள்ளே இழுத்து விட்டு ஆட்டம் காட்டுகிறார்கள்.
படத்தில் வில்லனாக மாறும் ஒரு ராணு வீரரின் பின்னாலும் ஒரு முக்கிய விசயத்தை வைத்திருக்கிறார்கள். இவர்களையும் விட்டுக்கொடுக்கவில்லை.
கிளாப்ஸ்
தர்ம பிரபுவில் விட்டதை கூர்க்காவில் பிடித்துவிட்டார்.
காமெடி, கவுண்டர் வசனங்கள் சிரிப்புக்கு கியாரண்டி.
கூர்க்கா, ராணுவ மக்கள் பற்றி நல்ல சோசியல் மெசேஜ்.
பல்பஸ்
முதல் பாதி மெதுவாக நகர்வது போல தெரிந்தாலும் இரண்டாம் பாதி வேகமாக நகர்ந்து விடுகிறது.
மொத்தத்தில் கூர்கா படம் மக்களின் மனம் கவரும். கூர்க்கா காவலாளிகள் மீதான அன்பு பெருகும்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 65 Guest(s)