Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா

[Image: 201907011446338027_Director-Bharathiraja...SECVPF.gif]
பாரதிராஜா

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இயக்குநர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இணை, துணை, உதவி இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி. 

[Image: 201907011446338027_1_bharathiraja-2._L_styvpf.jpg]
[size][font]

ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டுதலுக்கு, பேரம்பும் என்றும் தொடரும்...

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[/font][/size]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
ரொம்ப வாக்குகள் வாங்கிய மீரா மிதுன், மதுமிதா: வெளியேறப்போவது யார்?

இந்த வாரம் எலிமினேஷனுக்கு மீரா மிதுன், மதுமிதா ஆகிய இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளதால், இவர்களில் மீரா மிதுன் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[Image: madu.jpg]ரொம்ப வாக்குகள் வாங்கிய மீரா மிதுன், மதுமிதா: வெளியேறப்போவது யார்?


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வழக்கமாக நேற்றும் பரபரப்பாக சென்றது. முதல் வாரத்தில் போட்டியாளர்களின் சோகங்களை பகிர்ந்து கொள்ள மனதை திறந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், ரேஷ்மா, சரவணன், மோகன் வைத்யா, மீரா, லோஸ்லியா, சேரன் ஆகியோர் அவர்களது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதற்காக அவர்களுக்கு இந்த வாரம் 3200 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. இதில், அவர்கள் தங்களது முதல் லக்‌ஷூரி பட்ஜெட்டுக்கான ஷாப்பிங் செய்து கொண்டனர்.

 இதையடுத்து, அகம் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசுபவர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக எலிமினேஷனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டது. இதில், வனிதா மற்றும் மோகன் வைத்யாவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதில், மதுமிதா 6 வாக்குகள், மீரா 8 வாக்குகள், சாக்‌ஷி 2 வாக்குகள், கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 5 வாக்குகள், ஃபாத்திமா பாபு 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் கவின், மீரா மிதுன், மதுமிதா, ஃபாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. 

உண்மையில், நண்பர்களாக பழகிக் கொண்டு அவர்களது பெயரையே எலிமினேஷனுக்கு சொல்லுறாங்க…ஆம், நேற்று முன் தினம் சேரனைப் பற்றி நல்ல கருத்துக்களை பதிவு செய்த வனிதா, நேற்றைய நிகழ்ச்சியில் அவரது பெயரை எலிமினேஷனுக்கு தெரிவித்தார். சரி, அபிராமி மற்றும் சாக்‌ஷி இருவரும் தோழிகள். ஆனால், சாக்‌ஷி, சேரன் பெயர் எலிமினேஷன் பட்டியலில் இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சேரனுக்காக இரக்கப்பட்டுள்ளார் அபிராமி. இதனால், சாக்‌ஷி தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஷெரின் மற்றும் அபிராமியிடம் தெரிவித்துள்ளார். 

எது எப்படியோ, மதுமிதா மற்றும் மீரா மிதுன் இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். ஆனாலொ, அதிக் வாக்குகள் பெற்றவர்கள் தான் வெளியேற்றப்படுவார்களா? இல்லை சரவணன், சேரன், சாக்‌ஷி, ஃபாத்திமா பாபு ஆகியோரில் யாரேனும் வெளியேற்றப்படுவார்களா? என்று கேள்வி இங்கு எழுகிறது. இதற்கிடையில், மக்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்? ஜாங்கிரி மதுமிதாவா? இல்லை மீரா மிதுனா? 

மக்களின் ஆதரவை வைத்து தான் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
என்னடா இது புதுசா இருக்கே? விஜய் சேதுபதியை விட யோகி பாபுவின் தர்மபிரபு அதிக வசூலா?

விஜய் சேதுபதி நடிப்பில் வந்த சிந்துபாத் படத்தை விட இப்படத்தைத் தொடர்ந்து வெளியான யோகி பாபுவின் தர்மபிரபு அதிக வசூல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

[Image: dharmaprabhu.jpg]என்னடா இது புதுசா இருக்கே? விஜய் சேதுபதியை விட யோகி பாபுவின் தர்மபிரபு அதிக வசூ...

இந்த நிலையில், கடந்த மாதம் வெளியாக வேண்டிய சிந்துபாத் தொடர்ந்து பல சிக்கல்களை கடந்து ஜூன் 27ம் தேதி திரையிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவரது மகன் சூர்யாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆன நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை சிட்டியில் ரூ.1.26 கோடி மட்டுமே வசூல் குவித்துள்ளது. பொதுவாக வசூலில் கில்லாடி என்று கூறப்படும் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து தோல்வியே மிஞ்சுகிறது. கதையை தேர்ந்தெடுப்பதில், கோட்டைவிடுகிறாரா? இல்லை ஹீரோ ரோல் செட்டாகவில்லையா? இல்லையென்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று கவனம் செலுத்துவதால் ஹிட் கொடுக்க முடியவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. 

ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். பேட்ட படத்தின் வெற்றியோடு இந்தாண்டை தொடங்கினார். ரஜினிக்கு வில்லனாக நடித்து மகாநடிகன் என்று பாராட்டப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். தன்னை திருநங்கையாக காட்டிய விஜய் சேதுபதிக்கு இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூலில் அப்படி ஒன்றும் இல்லை
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இணையத்தில் வைரலாகும் விஜய்யின் “ID Card”
நடிகர் விஜய்யின் ID Card ஒன்று இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. 
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பிகில். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு வர இருக்கும் இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருக்கிறார். இதுவரை இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் பிகில் படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ID Card தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல் என்ற பெயரும், தலைமை பயிற்சியாளர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விஜய்யின் ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
[Image: Vijay-ID-Card.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: Bigg-Boss-Tamil-3-Losliya-Nomination-750x506.jpg]
Bigg Boss Tamil 3:’அவசரப்பட்டு சேரனை திட்டிவிட்டோமே..’ என வருந்தும் லாஸ்லியா ஆர்மி!
இந்த வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குரூர முகங்களுடன் இருக்கிறார்கள்

  1. Tamil News
  2. Entertainment News In Tamil
  3. Bigg Boss Tamil 3 Losliya Nomination Cheran

 
[color][size][font]
[Image: Bigg-Boss-Tamil-3-Losliya-Nomination-750x506.jpg]

[/font][/size][/color]
Bigg Boss Tamil 3:’அவசரப்பட்டு சேரனை திட்டிவிட்டோமே..’ என வருந்தும் லாஸ்லியா ஆர்மி!
இந்த வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குரூர முகங்களுடன் இருக்கிறார்கள்.



Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 15 பேர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர். மீரா மிதுன் இரண்டு நாட்கள் கழித்து வைட்ல் கார்ட் எண்ட்ரியாக வீட்டுக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் முதல் வாரம் என்பதால் போன முறை எலிமினேஷன் இல்லை. இனி வரும் வாரங்களில் கட்டாயம் எலிமினேஷன் முறை பின்பற்றப்படும். இதற்கிடையே இந்த சீசனுக்காக முதல் எலிமினேஷன் நேற்றைய நிகழ்ச்சியில் தொடங்கியது.
முன்னதாக இதில் இயக்குநர் சேரன், லாஸ்லியா மற்றும் தர்ஷனை நாமினேட் செய்யும் புரோமோ நேற்று வெளியானது. முதல் நாளிலேயே ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ள லாஸ்லியாவை சேரன் எதற்காக நாமினேட் செய்தார் என கொதித்துப் போனார்கள் ‘லாஸ்லியா ஆர்மியினர்’. அதோடு சேரனை திட்டி தீர்த்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே நேற்றிரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில், ”இந்த வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குரூர முகங்களுடன் இருக்கிறார்கள். லாஸ்லியாவும், தர்ஷனும் அப்பழுக்கற்ற குழந்தைகளாக இருக்கிறார்கள். அவர்கள் இப்படியான இடத்தில் இருக்கத் தேவையில்லை” என கன்ஃபெஷன் ரூமில் தனது நாமினேஷனுக்கு விளக்கமளித்தார் சேரன்.
இதைப் பார்த்த பின், “ஆமால்ல அவர் சொல்றதும் சரிதான்” என்கிற ரீதியில், அவசரப்பட்டு சேரனை திட்டி விட்டோமே என்று வருந்துகிறார்கள் லாஸ்லியா ஆர்மியினர்.


first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோட் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை


ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை பிரபல கிரிக்கெட் வீராங்கனை புரமோட் செய்து வருகிறார்.



[Image: 201907021223300304_cricketer-mithali-raj...SECVPF.gif]
ஐஸ்வர்யா ராஜேஷ்
[color][size][font]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழில் கெளசல்யா கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யாவும், வில்சன் கேரக்டரில் நடித்திருந்த சிவகார்த்திகேயனும் தெலுங்கிலும் நடித்துள்ளனர். 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார். 

[/font][/size][/color]
[Image: 201907021223300304_1_kk26._L_styvpf.jpg]
[color][size][font][size][font]

இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் நடிகை ராஷி கண்ணாவும் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்கிறார். 

ஏற்கனவே 'கனா' திரைப்படத்தின் இடை வெளியீட்டு விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது[/font][/size][/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தளபதி ரசிகர்களுக்கு ஷங்கரின் ”புது ட்ரீட்” – படத்தின் கதையால் குஷியாக இருக்கும் ரசிகர்கள்
சங்கர் – விஜய் கூட்டணியில் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
[Image: bigil.jpg]

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்தப் படம் விஜய்யின் 64-வது படமாக உருவாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் சங்கர், முதல்வன் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து நடிகர் விஜய்யிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தின் கதை விஜய்க்கு சொல்லப்பட்டதுதான் என்று பல நேர்காணல்களில் இயக்குநர் சங்கர் தெரிவித்திருந்தார்.
முதல்வன் படம் வெளியான சமயத்தில் அரசியல் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜய் தற்போது அரசியல் பேசும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். அதனால் முதல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சர்கார் படத்தில் முதல்வர் பொறுப்பை தட்டிக் கழித்த விஜய், முதல்வன் 2-ம் பாகத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.
சங்கர் – விஜய் கூட்டணி இணையுமா? நடிகர் விஜய் முதல்வராக திரையில் தோன்றுவாரா என்ற கேள்விகளுக்கு முதல்வன் 2-ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே விடை சொல்லும்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரு மாநில போலீசார்! நடிகை வனிதாவை கைது செய்ய முடியாமல் திணறல்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் மாணி்க்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாகவும், சந்திரலேகா படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்தார்.  கடந்த 2000ம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.   இவர்களுக்கு விஜய் ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள்  உள்ளார்.  இதன் பின்னர் வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் விவாகரத்து ஆனது.  2007ம் ஆண்டில் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா.  இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் பிறந்தார்.
 
[Image: vanithaa.jpg]

2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆனந்தராஜையும் விவாகரத்து செய்த வனிதா, நடன இயக்குநரை காதலித்து வருவதாக தகவல்.
தற்போது அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.   இந்த நிகழ்ச்சி கடந்த 9 நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.  பிக்பாஸ் முதல் நாள் அறிமுக நிகழ்ச்சி்யில் வனிதாவுடன் இரு பெண் குழந்தைகளும் வந்திருந்தனர்.
 
தந்தை ஆனந்தராஜுடன் ஜெயந்திகா தெலுங்கானாவில் வசித்து வந்தார்.  மகள் ஜெயந்திகாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வனிதா சென்றுவிட்டதால் தாயும் இல்லாமல் மகள்  கஷ்டப்படுவார் என்று ஆனந்தராஜ் போலீசாரிடம் அழுத்தம் கொடுத்துள்ளார். 
இந்த வழக்கில் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாட்டு போலீசை உதவியை நாடியது தெலுங்கானா போலீஸ்.  பிக் பாஸ் வீடு காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து நசரத் பேட்டை போலீசாரிடன் சென்றனர் தெலுங்கானா போலீசார்.  
 
வனிதாவை சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர் நசரத்பேட்டை போலீசார்.   பிக்பாஸ் சட்ட விதிமுறைகளின்படி தற்போது வனிதா வெளியே வரமுடியாது என்பதை அறிந்து கொண்ட போலீசார் தெலுங்கானா போலீசாருடன் அது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
2019 அரையாண்டு முடிந்த நேரத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்

2019 தமிழ் சினிமாவிற்கு ஆரம்பமே கொண்டாட்டமாக அமைந்தது. விஸ்வாசம், பேட்ட என்று இரண்டு மெகா ஹிட் படங்கள் திரைக்கு வந்தது.
ஆனால், அதை தொடர்ந்து என்னமோ அமைந்தது சோகம் தான், இதன் பிறகு பெரியளவில் எந்த ஒரு படமும் வசூல் செய்யவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் 2019 தொடங்கி அரையாண்டு முடியும் தருவாயில் எந்த படம் தமிழகத்தில், உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்தது என்பதை பார்ப்போம்...
உலகம் முழுவதும்
  1. பேட்ட
  2. விஸ்வாசம்
  3. காஞ்சனா-3
  4. NGK
  5. மிஸ்டர் லோக்கல்
இதில் பேட்ட, விஸ்வாசம், காஞ்சனா-3 படங்களே ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் எது என்பதை பார்ப்போம்.
  • விஸ்வாசம்
  • பேட்ட
  • காஞ்சனா-3
  • NGK
  • மிஸ்டர் லோக்கல், தடம்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை தலைப்பு உரிமைகளையும் வேறு யாருக்கும் வழங்கவில்லை - விஜயா புரொடக்ஷன்
பதிவு : ஜூலை 02, 2019, 08:56 PM

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டு பிள்ளை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

[Image: 201907022056086633_Enga-Veettu-Pillai-fi...SECVPF.gif]
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டு பிள்ளை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எங்க வீட்டு பிள்ளை படத்தின் தலைப்பு உரிமையை வைத்திருக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து படங்களின் தலைப்பு உரிமைகளையும் வேறு யாருக்கும் வழங்கவில்லை என கூறியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
காமெடியா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க – தர்ம பிரபு விமர்சனம்.!

[Image: Dharma-Prabhu-Movie-Review.jpg?resize=696%2C418&ssl=1]

எஸ். முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதா ரவி, ரமேஷ் திலக், ரேகா, ஜனனி ஐயர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்ம பிரபு.
Dharma Prabhu Movie Review : 
படத்தின் கதைக்களம் :
எமதர்ம ராஜாவான ராதா ரவி தன்னுடைய வயது முதிர்ச்சியால் எம தர்ம பதவியை யோகி பாபுவுக்கு கொடுத்துகிறார். யோகி பாபு எம தர்மனாக ஆனது பிடிக்காமல் சித்திர குப்தரான ரமேஷ் திலக் எம தர்ம பதிவுக்கு ஆசைப்பட்டு சில சூழ்ச்சிகளை செய்கிறார்.
இந்த சூழ்ச்சியில் சிக்கிய எமதர்ம யோகி பாபு தன் வேலை உயிரை எடுப்பது என்பதை மறந்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றி விடுகிறார். இதனால் இந்த மண்ணுலகில் பல பாவங்களை செய்து வரும் ஒரு மனிதரும் காப்பாற்றப்பட்டு விடுகிறார்.
இதனால் ஆவேசமான சிவ பெருமான் இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்த கொடூரனை கொன்றாக வேண்டும், இல்லையேல் உங்கள் எல்லாரையும் அழித்து விடுவேன் என கூறி விடுகிறார்.
அதன் பின்னர் என்ன நடக்கிறது? யோகி பாபு அந்த கொடூரனை கொண்டாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல் :
நடிப்பு :
யோகி பாபுவும், ரமேஷ் திலக்கும் செய்யும் நகைச்சுவை அமர்க்களம் தான் இந்த படம். முதல் 15 நிமிடம் வரை மொக்க காமெடியால் நம்மை சிரிக்க வைக்க முயல்கின்றனர், ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது.
அதன் பின்னர் இருவரும் ஸ்கோர் செய்ய தொடங்கி விட தியேட்டர்களில் சிரிப்பலைக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.
ராதா ரவி, ரேகா, ஜனனி ஐயர் ஆகியோரெல்லாம் சும்மா ஒரு சிறிய கதாபத்திரமாக இருந்து விட்டு சென்று விடுகிறார்கள்.
தொழில்நுட்பம் :
இசை :
ஐன்ஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை சிறப்பு, ஆனால் பெரியதாக பாடல்கள் எதுவும் இல்லை. அவை நம் மனதை கவரவும் இல்லை.
ஒளிப்பதிவு & எடிட்டிங் :
மகேஷ் முத்து ஸ்வாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு தகுந்தாற் போல அமைந்துள்ளது. சான் லோகேஷின் எடிட்டிங்கும் அற்புதம்
இயக்கம் :
முத்துகுமரன் இந்த படத்தை முழு நீள காமெடி படமாக கொடுத்துள்ளார். முதல் 15 நிமிடம் வரை காமெடி டிராக்கை பிடிக்க முடியாமல் தடுமாறினாலும் அதன் பின்னர் சரியாக கேட்ச் செய்து கொண்டு சென்றுள்ளார்.
அநியாயமாக கொலை செய்யப்படுபவர்கள், இறந்து விடுபவர்களுக்கு எமதர்ம ராஜா யோகி பாபு கொடுக்கும் 1+1 ஆப்பர் சூப்பரோ சூப்பர். ஆனால் இதெல்லாம் கற்பனைக்கு மட்டும் தான் சரி வரும்.
முதலில் போற போக்கில் அரசியல் வாதிகளை கலாய்த்து வந்த இவர்கள் இடைவெளிக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சாதி ரீதியிலான அரசியல் கட்சியை கிழி கிழி என கிழித்தெடுத்து விட்டார் இயக்குனர்.
தம்ப்ஸ் அப் :
1. படத்தின் காமெடி
2. யோகி பாபு, ரமேஷ் திலக்கின் நடிப்பு
3. படத்தின் செட் அமைப்பு
4. விவசாயம், விவசாயத்தை பற்றிய டைலாக்
தம்ப்ஸ் டவுன் :
1. பல இடங்களில் லாஜிக் மீறிய காட்சிகள்
2. கற்பனைக்கு மட்டுமே ஒத்து வரும் காட்சி அமைப்புகள்

மொத்தத்தில் தர்ம பிரபு சிரிப்பதற்காக மட்டும் ஓரிரு முறை பார்க்கலாம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
“தெலுங்கானா போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வோம்” - வனிதாவின் வழக்கறிஞர்

[Image: 66822.jpg]
நீதிமன்ற உத்தரவு ஏதுமின்றி அத்துமீறி வனிதாவிடமும் அவரது குழந்தையிடமும் விசாரணை நடத்திய தெலுங்கானா போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வோம் என நடிகை வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “வனிதா விஜயகுமார் அவரது மூன்றாவது மகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு பொய்யானது. அந்த குழந்தையின் தந்தைக்கும் தெலுங்கானாவில் உள்ள காவல்துறைக்கும் தெரிந்தே தான் அந்த குழந்தையை வனிதா விஜயகுமார் அழைத்து வந்தார்.
[Image: 103117_vanitha%202.jpg]
வனிதாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தெலுங்கானா போலீஸ் வந்தது.  இந்த வழக்கு உள்ள நீதிமன்றத்தில் குழந்தையை ஏற்கெனவே காண்பித்து விட்டோம். ஆனால் இதையெல்லாம் மறைத்து ஆனந்தராஜ் தெலுங்கானா போலீசிடம் தவறான தகவலைச் சொல்லி அழைத்து வந்துள்ளார்.
[Image: 100217_vanitha.jpeg]
சட்டத்தை மதித்து தெலுங்கானா போலீசார் முன் வனிதாவின் குழந்தை ஜெனிதாவை ஆஜர்படுத்தினோம். தந்தையிடம் எனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அம்மாதான் எனக்கு பாதுகாப்பு எனவும் ஜெனிதா தெலுங்கானா போலீசாரிடம் தெளிவாக கூறிவிட்டாள். தெலுங்கானா காவல்துறை விசாரணை வாக்குமூலத்தை வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. 
வனிதா விஜயகுமார் விவகாரத்தில் தெலுங்கானா போலீஸ் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியில் வந்த பிறகு மனித உரிமை ஆணையத்தில் தெலுங்கானா காவல்துறை மீது புகார் அளிப்போம்” எனத் தெரிவித்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஒரு பெரிய அரசாங்கமே துரத்தும் அளவுக்கு படம் எடுப்பவர்கள் நாங்கள்'.. கமல் செம நக்கல்!

சென்னை: ஒரு பெரிய அரசாங்கமே துரத்தும் அளவுக்கு படம் எடுப்பவர்கள் தாங்கள் என நடிகர் கமல் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் கடாரம் கொண்டான். கமலின் உதவியாளரும், தூங்காவனம் படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம் செல்வா தான் இப்படத்தை இயக்குகிறார்.

[Image: kamal234-1562206613.jpg]
கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டார்.

பின்னர் பேசிய கமல், ஒரு பெரிய அரசாங்கமே துரத்தும் அளவுக்கு படம் எடுப்பவர்கள் தாங்கள் என்றார்.

"ராஜ்கமல் பிலிம்ஸ் துவங்கப்பட்ட போது அக்ஷரா பிறக்கவில்லை. பலருடைய கனவை நிறைவேற்ற துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ். என்னுடைய குருநாதர் அனந்து தான் இந்த நிறுவனத்தில் இன்டர்நேஷனல் எனும் வார்த்தையை சேர்த்தார்.

மீரா படத்தில் விக்ரமை பார்த்து வியந்தேன். அவர் சீயான் விக்ரமாக வளர்வதற்கு ஏற்பட்ட தாமதம் எனக்கு பிடிக்கவில்லை. இது கமல்ஹாசன் எனும் எழுத்தானனின், கலைஞனின் வருத்தம்.
நான் நல்ல படம் பார்த்தால் சந்தோஷப்படுவேன். பாராட்டுவேன். ஒரு ரசிகனாக மிகவும் ஜாலியாக படம் பார்த்தேன். ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். படத்தை விற்பதற்கான யுத்தி அல்ல இந்த விழா. விக்ரமுக்காக இந்த படத்தை பார்க்க வேண்டும்.

எனக்கு பதட்டமாகவே இல்லை. நல்ல யூனிட்டிடம் நல்ல கதையை ஒப்படைத்துள்ளேன் எனும் திருப்தி எனக்கு இருந்தது. ஒரு பெரிய அரசாங்கமே துரத்தும் அளவுக்கு நாங்கள் படம் எடுப்போம். எனவே எந்த பிரச்சினை வந்தாலும் இயக்குனர் சமாளிப்பார் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.
ராஜ்கமலின் புதிய யுகம் இது. கடாரம் கொண்டான் அந்த துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் ஜூலை 19ம் தேதி வெளியாகும். இன்னும் நிறைய நல்ல படங்களை ராஜ்கமல் தொடர்ந்து தயாரிக்கும். நல்ல படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது." என அவர் கூறினார்.


first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஜோதிகாவின் 'ஜாக்பாட்' படமும் ரெடி

[Image: NTLRG_20190703164642993139.jpg]

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின் '36 வயதினிலே' படம் மூலம் மீண்டும் நாயகியாக நடிக்க வந்தார். தொடர்ந்து 'மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்தார்.


அதன்பின் ஒரே சமயத்தில் 'ராட்சசி, ஜாக்பாட்' ஆகிய படங்களில் நடித்து வந்தார். இவற்றில் 'ராட்சசி' படம் நாளை மறுநாள் ஜுலை 5ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'ஜாக்பாட்' படத்திற்கும் தணிக்கை முடிந்து 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். அடுத்த மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் 'ஜாக்பாட்' படத்தை இயக்கியுள்ளார். ரேவதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோதிகா அடுத்து ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply

இதனால் தான் மெர்சல் படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்தேன் - ஜோதிகா ஓபன் டாக்!

தமிழ் சினிமாவின்  உச்ச நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய பாலமாக அமைந்த படம் "மெர்சல்" அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தனர். 


 
மெர்சல் படத்தில் அழகான மனைவியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்கைகளை வெகுவாக கவர்ந்த நடிகை நிதயமேனனுக்கு சிறந்த நடிகைக்கான  பிலிம்பேர் விருது கிடைத்தது. ஆனால் இந்த ரோலில் நடிக்க நடிகை ஜோதிகாவுக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் நான் இந்த ரோலில் நடிக்கமாட்டேன் என நிராகரித்துவிட்டார். இதனால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். 
 
தற்போது இதற்கான காரணத்தை நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றி கூறியுள்ளார், அதாவது "படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி எனக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் படத்தில் இருந்து விலகிவிட்டேன். creative difference மட்டும் தான் காரணம்" என ஜோதிகா கூறியுள்ளார்.

[Image: 1562141137-2509.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நடிக்கிறதோட நிறுத்துக்கோ! இல்லைனா அவ்வளவு தான் - நடிகைக்கு மிரட்டல் விட்ட முக்கிய அமைச்சர்

சினிமா பிரபலங்களில் சிலர் தங்கள் பிசியான வாழ்க்கைக்கு நடுவிலும் சமூக விசயங்களிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். பலருக்கும் உதவி புரிய முன் வருகிறார்கள்.
அதே வேளையில் சில சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில் கன்னட சினிமாவை சேர்ந்த இளம் நடிகை ஹர்ஷிகா பூனாச்சா தற்போது அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த வருடம் கர்நாடகாவில் பெய்த மழையால் குடகு மாவட்டத்தில் மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளார். இதுகுறித்து அவர் அரசு கட்டி தரும் வீடுகள் தரமானதாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் அந்த மாவட்ட அமைச்சர் கண்டனம் தெரிவித்ததோடு நடிப்பதோடு நிறுத்திக்கொள், அரசு விஷயங்களில் தலையிட வேண்டாம் என மிரட்டல் விட்டுள்ளார்.
இதற்கு ஹர்ஷிகா நான் குடகு மாவட்டத்தை சேர்ந்த நடிகை மட்டுமல்ல. பொறியியல் பட்டதாரி என்பதால் கட்டப்படவுள்ள வீடுகளின் வரைபடங்களை பார்த்த பிறகே கருத்து தெரிவித்திருக்கிறேன். நடிகை என்றால் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற தடை எதுவும் இல்லை என அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
'Spiderman Far from Home' - விமர்சனம்

[Image: spider-man-far-from-home-ending-explainedjpg]

ஒரு மிகப்பெரிய பேரிடரை விசாரிக்க நிக் ஃப்யூரியும், ஏஜென்ட் மரியா ஹில்லும் மெக்ஸிகோ வருகின்றனர். அந்தப் பேரிடரைத் தடுக்க க்வெண்டின் பெக் எனப்படும் சூப்பர் ஹீரோ அங்கு வருகிறார். படம் தொடங்குகிறது.
’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தின் கதை முடிந்து 8 மாதங்கள் கழித்து தொடங்குகிறது படம். நியூயார்க் நகரில் தானோஸால் அழிக்கப்பட்டு மீண்டும் ப்ரூஸ் பேனரால் உயிர்ப்பிக்கப்பட்ட மிட்டவுன் பள்ளி மாணவர்களை 2 வாரச் சுற்றுலாவாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறது.
டோனி ஸ்டார்க்கின் மரணத்தினால் ஏற்பட்ட சோகத்திலிருந்து இன்னும் மீண்டு வராத ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர் தன் காதலை மேரி ஜேனிடம் சொல்வதற்கு இந்த சுற்றுலாவைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். இதனிடையே நிக் ஃப்யூரி அழைப்புகளைத் தவிர்த்து விட்டு ஐரோப்பா செல்கிறார்.
அவர்கள் வெனிஸ் நகருக்குச் செல்லும்போது அங்கே நீர் போன்ற ராட்சத உருவம் ஒன்று தாக்குகிறது. பீட்டர் பார்க்கர் அதைத் தடுக்க முயல்கையில் முதல் காட்சியில் வந்த பெக் அங்கு வந்து அந்த உருவத்தை அழிக்கிறார். பின்னர் பீட்டரைச் சந்திக்கும் நிக் ஃப்யூரி டோனி ஸ்டார்க் கொடுக்கச் சொன்னதாக ஒரு கண்ணாடியைக் கொடுக்கிறார். அது ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸின் அனைத்து விதமான தகவல்களையும் உள்ளடக்கிய 'EDITH' என்னும் பல பில்லியன் மதிப்பு கொண்ட கண்ணாடி என பின்னர் பீட்டர் தெரிந்து கொள்கிறார்.
நிக் ஃப்யூரியோடு இருக்கும் பெக் தான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர் என்றும், தன்னுடைய கிரகத்தை பஞ்ச பூதங்களான ‘Elemental' எனப்படும் தீய சக்திகளை அழித்து விட்டதாகவும், அவை இப்போது பூமிக்க வந்துள்ளதால் அதை அழிக்கவே தான் வந்துள்ளதாகவும் கூறுகிறார்.
'Prague' எனப்படும் நகரத்துக்கு அவர்கள் செல்லும்போது நெருப்பைப் போன்ற ராட்சத உருவம் ஒன்று தாக்குகிறது. பீட்டரின் உதவியோடு அதையும் பெக் முறியடிக்கிறார். அதன்பிறகு EDITH கண்ணாடிக்கு முழு தகுதியுடையவர் பெக் தான் என்று அந்தக் கண்ணாடியை பெக்கிடம் கொடுத்து விடுகிறார் பீட்டர். அதன் பிறகு என்னவானது? Elemental சக்திகளிடமிருந்து பூமி மீட்கப்பட்டதா? பெக் யார்? இதற்கான பதிலே 'Spiderman Far from Home'
[Image: p07fpkntjpg]
 
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 23-வது படமாக வெளியுள்ளது இந்தப் படம். ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே ட்ரைலர் போஸ்டர் எல்லாம் வெளிவந்துவிட்டாலும், படத்தில் இதற்குப் பிறகு மார்வெல் யுனிவர்ஸில் என்ன நடக்கப்போகிறது என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.
வழக்கமாக மார்வெல் படங்களில் இருக்கும் நகைச்சுவை வசனங்கள் இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் இதற்கு முந்தைய மார்வெல் படங்களில் இருந்ததைக் காட்டிலும் ஒரு படி மேலே என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. ஸ்டான் லீயின் கேமியோ இல்லாமல் வெளியாகும் முதல் மார்வெல் படம் இதுதான்.
படத்தின் வில்லனைப் பற்றிய பின்னணி இன்னும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கலாம். விட்ட குறை தொட்ட குறையாக இருப்பது படத்தின் மைனஸ். தேவையற்ற காட்சிகள் எதுவுமின்றி விறுவிறுப்பாக எழுதப்பட்ட திரைக்கதை, படத்தின் வேகத்துக்கு இணையான இசை, நேர்த்தியான கிராபிக்ஸ் என பாராட்ட பல விஷயம் இருக்கிறது.
படத்தில் இரண்டு போஸ்ட் கிரெடிட் சீன்கள் இருக்கிறது. ஒன்று அடுத்த ’ஸ்பைடர்மேன்’ படத்துக்கான லீட். இன்னொன்று ’மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின்’ அடுத்த பகுதிக்கான லீட்.
நல்ல ஒலி, பெரிய திரையுடன் கூடிய திரையரங்கில் 3Dயில் பார்த்தால் முழு அனுபவத்தையும் தரும் 'Spiderman Far from Home'
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய வனிதா விஜயகுமார்! 11 மணி நேர போலீஸ் விசாரணையில் பரபரத்த பிக்பாஸ் வீடு!

“பிக்பாஸ் தமிழ் மூணாவது சீசன்-ல எல்லாமே நல்லாத் தானே போயிட்டு இருக்கு? வீட்ல இருக்கும் எல்லோருக்குள்ளும் தினம் தினம் ஏதாவது சண்டை வருது. மக்களும் அதை ஆர்வமா பாத்துட்டு தானே இருக்காங்க… அப்படியெனில், டிஆர்பி நல்லா தானே இருக்கணும்?  பிறகு எதற்கு இந்த கைது டிராமா-லாம்?” என்ற ரீதியில் பல ட்வீட்களை சமூக வலைத்தளங்களில் நம்மால் காண முடிகிறது.
இந்த கைது நடவடிக்கை டாக்-கிற்கு முக்கிய காரணம் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டில் ‘எங்கப்பன் இப்படித் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தான்’ என்று போகிறபோக்கில் பகீர் பேச்சுக்களை அள்ளி வீசி சக போட்டியாளர்களை அலற வைத்துக் கொண்டிருக்கிறார் வனிதா. மதுமிதா, மீரா மிதுன் ஆகியோரிடம் இவரது அணுகுமுறை, பார்க்கும் நேயர்களையே எரிச்சலடைய வைக்கிறது. (அவர்கள் இருவரும் அதற்கு மேல் எரிச்சல் ஏற்படுத்துவது தனிக்கதை). இனிவரும் நாட்களில் கைக்கலப்பே ஆகலாம் எனும் ரேஞ்சுக்கு கலவரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மகளை கடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் வனிதாவை, பிக்பாஸ் அரங்கிற்குள்ளேயே நுழைந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
வனிதா கடந்த 2000ல் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து, ஆகாஷை விவாகரத்து செய்துவிட்டு, தொழிலதிபரான ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெயந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
இந்த நிலையில், வனிதா மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2012ம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு ஆனந்தராஜூடன் தான் ஜெயந்திகா வசித்து வருகிறார். இவர்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். அப்படியிருக்கும் போது வனிதா ஜெயந்திகாவை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். அதன்பிறகு தான், பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து, தனது மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.
ஆனந்தராஜ் கொடுத்த புகாரைத் தொடர்ந்து வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் போலீஸ் தேடிக் கொண்டிருக்க, தமிழ் பிக்பாஸ் ஷோவில் வனிதா இருப்பதை அறிந்த ஆனந்த்ராஜூ, போலீசுக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகிலுள்ள நசரத்பேட்டை பகுதியில் பிவிஆர் பிலிம்சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் 3 வீட்டுக்கு, நசரத்பேட்டை போலீஸ் உதவியுடன் தெலங்கானா போலீசார் விரைந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் வனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வனிதா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை போலீஸ் கைது செய்யவில்லை.
இந்நிலையில், வனிதாவின் மகள் ஜெயந்திகாவிடம் மகளிர் உரிமை ஆணைய துணைத் தலைவர் வசுந்தரா இன்று மாலை வாக்குமூலம் பெற்றார். அதில், தாய் வனிதாவுடன் செல்ல விரும்புவதாக ஜெயந்திகா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கைது நடவடிக்கையில் இருந்து வனிதா தப்பியுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஓவியாவிடம் எந்த மாற்றமும் இல்லை!
[Image: NTLRG_20190705001511910931.jpg]


களவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகள் கழித்து, அதன் இரண்டாம் பாகமாக,களவாணி - 2 படம், தற்போது வெளியாகிறது. படத்தின் நாயகன் விமல் உடன் பேசியதிலிருந்து:


களவாணி - 2 படத்தை பற்றி கூறுங்கள்?


களவாணி முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் தொடர்பு உள்ளது. அரிக்கி, மகேஷ் என கதாபாத்திரங்கள், அந்தந்த பாத்திரத்தின் பெயரிலேயே நடிக்கின்றனர். முதல் பாகம், தஞ்சை, ஒரத்தநாடு பகுதியில் நடந்தது.


இரண்டாம் பாகம், கண்ணுக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கிற கதை. ஆனால், கதை மட்டும், தற்போதைய காலத்திற்கேற்றதாக இருக்கும்.இந்த படத்தில், காமெடியில்,


ஆர்.ஜே.விக்னேசும், என் மாமாபாத்திரத்தில், சுதாகர் என்பவரும், ஓவியா தந்தையாக, ராஜமோகன்உள்ளிட்டவர்களும் புதிதாக இணைந்து உள்ளனர்.


இந்த படத்தின் ஸ்பெஷல் என்ன?


களவாணி முதல் பாகம், எல்லா கிராமத்திலும், ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்றடைந்தது. அதே போல் இரண்டாம் பாகமும், அனைத்து வீடுகளுக்கும் சென்றடையும். காமெடி, நகைச்சுவை என, அனைத்து அம்சமும், களவாணி முதல் பாகத்தை விட, இதில் அதிகமாகவே இருக்கும்.


படத்தின் கதை என்ன?


கிராமத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து, கதை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கிராமத்தில் நடக்கிற பஞ்சாயத்து தேர்தலில், ஓட்டு போடுபவர்கள், அதிகபட்சம், 3,000 வரை தான் இருப்பர்.அத்தனை பேரும் உறவினர்களாகவே, நண்பர்களாகவே, அனைவருக்கும் தெரிந்தவர்களாகவே இருப்பர். பஞ்சாயத்து தேர்தலில் ஜெயிப்பதற்காக செய்யும் களவாணித்தனம் தான், இந்த படத்தின் கதை.


அரசியல் படமாக இருக்குமா?


அரசியல் பேசும் படமாக இருக்காது. ஊருக்குள் நடக்கிற இயல்பான பஞ்சாயத்து தேர்தலை, காதல், காமெடியுடன் சொல்கிற படமாக இருக்கும்.


களவாணி ஓவியாவுக்கும், 'பிக்பாஸ்' முடித்து திரும்பிய, களவாணி - 2 ஓவியாவுக்கும், வித்தியாசம் பார்த்தீர்களா?


களவாணி படம் தான், ஓவியாவின் முதல் படம். 'பிக்பாஸ்' சென்று விட்டு திரும்பிய ஓவியா, இப்படத்தில் வரும் போது, முதல் படத்தில் பார்த்த, அதே ஓவியாவை போலவே இருந்தார். படப்பிடிப்பில் மற்ற அனைவரிடமும் முதல் பாகத்தில் பழகியதே போலவே பழகினார். அவரிடம் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை.


அடுத்து நடிக்கும் படம்?


மலையாளத்தில், மை பாஸ் படத்தின் ரீமேக்கான, சண்டக்காரி படத்தில் நடித்து வருகிறேன். கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்ரேயா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


ஓவியா, அஞ்சலி, இவர்களில், உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார்?


இருவரில் யாராக இருந்தாலும்,பாத்திரத்திற்கு ஏற்ற நபர் நடிக்கும் போது, இரண்டு பேருமே, பொருத்தமான ஜோடியாக அமைந்து விடுவர்.


எதிர்காலத்தில் இயக்குனர் ஆகும் ஆசை உண்டா?


இதுவரை இல்லை. நடந்தால் நடக்கும்; இல்லையென்றால் இல்லை
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம் கோடிகளில்

பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகா அடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக தளபதி64 படத்தில் நடிக்கிறார் என கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த படத்திற்காக அவர் ஒரு கோடி ருபாய் சம்பளமாக பெறவுள்ளார் எனவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
அவர் தெலுங்கில் பிரபலமான நடிகை என்பதால் அங்கும் வியாபாரத்தில் பிரச்சனை இருக்காது என்பதால் அவர் கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆரம்பத்திலேயே கோடியில் சம்பளம் வாங்குவது மற்ற நடிகைகளுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியும் கொடுத்துள்ளது.
[Image: Rashmika-Mandanna-Salary-For-Thalapathy-...Crores.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 17 Guest(s)