Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
Arun Vijay: இறுதிச்சுற்று ரித்திகா சிங்குடன் பாக்ஸிங் போடும் பாடி பில்டர் அருண் விஜய்!

அருண் விஜய் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு அவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகமாக அமைந்தது. தற்போது ரித்திகா சிங்குடன் பாக்ஸிங் போட்டும் அசத்தல் பாக்ஸராக அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
“பாக்ஸர்” படக்குழு நீண்டகால முன் தயாரிப்புகளுக்கு பிறகு படப்பிடிப்பை இன்று தொடங்கியிருக்கிறது. இயக்குனர் ஹரி & திருமதி ப்ரீதா ஹரி, நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி, இயக்குனர் சாம் ஆண்டன் மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் போன்ற பிரபல நபர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள மிக எளிமையாக துவங்கியது. அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார், அறிமுக இயக்குனர் விவேக் இயக்குகிறார். 

[Image: Master.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
விஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் வெளிநாட்டு உரிமையை யுனைடட் இந்தியா எக்ஸ்ஃபோர்ட்ஸ் நிறுவனமும், எக்ஸ் ஜென் ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து பல கோடிக்கு வாங்கியுள்ளனர்.

[Image: bigil.jpg]விஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா?
முழுக்க இது ஒரு கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போஸ்டர் இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. அப்பா மகன் கதையாக ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு வாங்கிய நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமை தற்போது விற்கப்பட்டுள்ளது. 

நமக்கு கிடைத்த தகவலின் படி யுனைடட்இந்தியா எக்ஸ்ஃபோர்ட்ஸ் நிறுவனமும், எக்ஸ் ஜென் ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து பிகில் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாய் 30 கோடிக்கு வாங்கியுள்ளார்கள். தமிழ்ப்படம் ஒன்று இத்தனை கோடிக்கு வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டது ஆச்சர்யமாகக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னதாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த சர்கார் படம் வெளிநாட்டு சேட்டிலைட் உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் தளபதி 63 படத்துக்கு பிகில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் பிறந்தநாளை ஒட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டடது. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. போஸ்டரில் விஜய் மட்டுமே முழுக்க ஆக்கிரமித்திருந்தார். இப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். கதிர், இந்துஜா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறாரகள். ஜாக்கி ஷெராப் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் இந்தப்படத்தில் கால்பந்தாட்ட கோச்சாக நடிக்கிறார். ஏ ஜி எஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படததை தயாரிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்ய விஷ்னு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]நடிகர் சங்கத் தேர்தலில் ஐசரி கணேஷ் என்னை அணுகினார்: நீதிபதி குற்றச்சாட்டு[/color]

[color=var(--title-color)]வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தால், தேர்தலையும் தள்ளிப் போட வசதியாக இருக்கும்[/color]
[Image: vikatan%2F2019-06%2Fc4d4d4dc-235a-44f0-b...2Ccompress][color=var(--meta-color)]ஐசரி கே கணேஷ்[/color]
[color=var(--content-color)]கடந்த மூன்று வாரங்களாக சினிமா வட்டாரத்தின் பேசு பொருளாக இருந்தது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல். கட்டட வேலைகளை செவ்வன செய்ததால் எதிர்ப்பின்றி வருவோம் என்றிருந்த பாண்டவர் அணிக்கு, ஷாக் கொடுத்தார்கள் உதயா, ஆர்.கே. சுரேஷ், `பிதாமகன்’ சங்கீதா. ஆம், இவர்களுக்கும் விஷாலுக்கும் இருந்த தனிப்பட்ட மனஸ்தாபத்தை இந்தத் தேர்தலில் காட்டி வென்றிடலாம் என நினைத்தார்கள். அதற்கு அனைவரும் மதிக்கத்தக்க தலைமையும் பணமும் வேண்டும் என்று நினைத்தவர்கள். சுவாமி சங்கரதாஸ் அணி ஒன்றை உருவாக்கி பாக்யராஜ் தலைவர் மற்றும் ஐசரி கே கணேஷ் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவார்கள் எனத் தீர்மானமானது. ஐசரிதான் எதிரணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்றவுடன் பாண்டவர் அணியிலிருந்து சுவாமி சங்கரதாஸ் அணிக்கு மாறினர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F6747198f-a1ef-4093-b...2Ccompress][/color]
[color=var(--content-color)]அதன்பின் பல விஷயங்களும், குற்றசாட்டுகள், நீதிமன்றத் தடைகள் எனக் கடைசி நிமிட பரபரப்புகள் பலவற்றையும் கடந்தே இந்தத் தேர்தல் நடந்துள்ளது. அப்படி தேர்தலிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு போடப் பட்ட வழக்கு அவசர வழக்காக தேர்தலுக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முழு போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காவல்துறைக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். தவிர, வழக்கின் போக்கில் தடை செய்ய முற்பட்ட ஐசரி கே கணேஷ் மற்றும் அனந்தராமன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் தானே முன்வந்து எடுக்கும் எனவும் கூறினார். இந்நிலையில் நீதிமன்றம் தாக்கல் செய்த ரிட் மனுவில் நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.[/color]
[color=var(--content-color)]அதிலிருந்து, ``தலைமை நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் எனது வீட்டில் வழக்கு எண் 16949 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எனது இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக காலை 11.55 மணிக்கு நீதிமன்றப் பதிவாளர் எனக்கு போன் செய்தார். நிகழ்ச்சி நிமித்தமாக வேலூர் சென்றிருந்த நான் அதை வேகமாக முடித்து விட்டு வீடு திரும்பினேன். அப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நெருங்கும்போது மணி 4.20. எனக்கு நன்கு அறிமுகமான ஆனந்தராமன் என்பவர் போன் செய்தார். தொடர்ந்து, மெதுவாக நடிகர் சங்க வழக்கு குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது, ``இந்த வழக்கில் ஐசரி கே கணேஷ் சம்பந்தப்பட்டுள்ளார். நடிகர் சங்கத்தின் பல பிரச்னைகளுக்கு உதவி செய்துள்ளார் " எனவும் தெரிவித்தார்.
``வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தால், தேர்தலையும் தள்ளிப் போட வசதியாக இருக்கும்" எனவும் தெரிவித்தார். எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் அவர் பேசியதையத்து அந்த போன் இணைப்பைத் துண்டித்து விட்டேன். நான் எனது இல்லத்தை அடையும் போது நேரம் 4.45 மணி. ஏற்கெனவே பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு என்பதால் எனது வீட்டின் முன் காவல்துறையும், பத்திரிகை ஆள்களும் இருந்தனர்.
[/color]

[color=var(--content-color)]இரண்டாம் தளத்தில் இருக்கும் எனது வீட்டை அடைவதற்குள் ஆனந்தராமனை லிஃப்ட் அருகே பார்த்தேன். மீண்டும் ஐசரி பற்றியும் வழக்கை ஒத்தி வைப்பது குறித்து பேசினார். "
நடிகர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் ஒருவரே நீதிபதியை தவறான முறையில் அணுகுவது அதிர்ச்சியாக இருந்தது. நீதிமன்ற வழக்கின் போக்கில் குறுக்கிட்டதால் ஏன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கக் கூடாது" எனக் கூறியுள்ளார்.
[/color]
[color=var(--content-color)]இதையடுத்து, அனந்தன் மற்றும் ஐசரி கே கணேஷ் இருவரும் நான்கு வார காலத்துக்குள் இந்த வழக்கு சம்பந்தமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தியுள்ளார்.
சங்கத் தேர்தலுக்கு எதிராகச் செயல்படுவது. இது நடிகர் சங்கத்தின் சட்ட விதிப்படி, சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தண்டனை விதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: Ner-Konda-Paarvai-Trailer-Ajith-kumar-750x506.jpg]
'நேர் கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் ஆகலையாம்!
நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘நேர் கொண்ட பார்வை’.
2016-ம் ஆண்டில் இந்தியில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் இது. இந்தியில் நடிகர் அமிதாப் பச்சனும், நடிகை டாப்ஸியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தற்போது பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். தமிழ் ரீமேக்கான ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார்கள்.
Ner Konda Paarvai Trailer: ‘அப்படி எல்லாம் நடக்காது, நடக்கவும் கூடாது’! – நேர் கொண்ட பார்வை ட்ரைலர்!
இதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, நேர் கொண்ட பார்வை படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்தது.
இந்நிலையில் முன்னதாக, இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 10 நாட்கள் முன்பாக அதாவது ஆகஸ்ட் 1-ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம் படக்குழுவினர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி ஓனர் கைது!

நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டியிடம் ரூ.86 லட்சம் பண மோசடி செய்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலுவை போலீசார் கைது செய்துள்ளனர்

[Image: reddy-g-k.jpg]விஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி ஓனர் கைது!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவரது தந்தை ஜிகே ரெட்டி. இவர், சென்னை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர், பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கான ராக்‌ஷஸி என்ற படத்தில் ராதாரவி கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் நேத்ரா என்ற படத்திலும் நடித்துள்ளார். பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்
இவர், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: தனது குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி ஆகியவற்றை தருவதாக கூறி மதுரையைச் சேர்ந்த கல்வாரி உரிமையாளர் வடிவேலு என்பவர் ரூ.86 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அவர் குறிப்பிட்டபடி கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும், பணத்தையும் திருப்பி தராமலும் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது. 

ஜிகே ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வடிவேலுவை அழைத்து முதலில் விசாரணை நடித்தியுள்ளனர். விசாரணையைத் தொடர்ந்து மோசடி வழக்கில் வடிவேலுவை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து வடிவேலுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் ரொம்பவே பிஸியாக இருக்கும் நிலையில், அப்பா கல்குவாரி உரிமையாளர் மீது புகார் கொடுத்திருப்பது கொஞ்சம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு வெளியான அயோக்யா படத்தைத் தொடர்ந்து விஷால் தனது 27ஆவது படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார். ஆனால், நடிகர் சங்க தேர்தலில் பிஸியாக இருந்ததால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விஜய் சேதுபதி படம் : அமலாபால் விலகல், மேகா ஆகாஷ் இணைந்தார்

[Image: NTLRG_20190625170606518713.jpg]

விஜய் சேதுபதியின் 33வது படத்தை சந்திரா ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க, எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார். இந்தப்படம் குறித்து சமீபத்தில் அதகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.


இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதோடு, தடயற தாக்க, தடம் படங்களின் இயக்குநரான மகிழ்திருமேனி இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் அமலா பால் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஊட்டியில் தொடங்க உள்ளது.

இந்த சூழலில் அமலாபால் ஏன் மாற்றப்பட்டார்? முதலில் ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக்கொண்ட அமலாபால் அதன் பிறகு பேசிய சம்பளத்தைவிட கூடுதல் தொகை கேட்டதாகவும் சிலபல கண்டிஷன்களை அடுக்கியதாகவும், அதனால் தயாரிப்பாளர் அமலாபால் வேண்டாம் என கூறிவிட்டதாகவும் பட தரப்பில் சொல்லப்படுகிறது. 

அதேசமயம், கால்ஷீட் பிரச்னை காரணமாக அமலாபால் நடிக்கவில்லை, மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என அமலாபால் தரப்பில் கூறப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஒரே சமயத்தில் ஆறு படங்கள் வெளியாவதா?: பிரபல தயாரிப்பாளர் அதிருப்தி!

[Image: Sindhubaadh_Movie_Stills_4xx.jpg]
 

இந்த வாரம் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் உள்ளிட்ட ஆறு படங்கள் வெளியாவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். ட்விட்டரில் அவர் கூறியதாவது:




ஒரே சமயத்தில் ஆறு படங்கள் வெளியாவது நல்லதல்ல. கொலைகாரன் படத்துக்கு தொடக்கத்தில் நல்ல வசூல் கிடைத்ததற்குக் காரணம், தனியாக 370 திரையரங்குகளில் வெளியானதுதான். இதுபோன்ற போட்டிகள் தவிர்க்கப்படவேண்டும். நிறைய படங்கள் ஒரே சமயத்தில் வெளியானால் உங்கள் படம் வெளியாவதைத் தவிர்த்துவிடுங்கள். ஓரிரு படங்கள் வெளிவரும்போது உங்கள் படத்தை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் 50 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்த் நடித்த படம் சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாவது இது முதன்முறையாகும். சீன மொழியில் ஒரே நேரத்தில் 50ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதால் இந்தியாவில் வசூல் சாதனை படைத்தது போல அங்கும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது சீனாவில் வெளியிட இருந்த நிறுவனம் தற்போது பின்வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2.0, வெளியாகும் சமயத்தில் தி லயன் கிங் படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதால், 2.0 வெளியீட்டை விநியோக நிறுவனம் தள்ளிப்போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிக் பாஸ் லொஸ்லியாவுக்கு தமிழில் இந்த நடிகர்களை மட்டும்தான் பிடிக்குமாம்.. அப்படினா சினிமா சான்ஸ் கிடைச்சுடும்
விஜய் டிவியில் வெளிவந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லொஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் இந்த நடிகர்களை மட்டும்தான் பிடிக்கும் என தெரிவித்து உள்ளார். யார் அவர்கள்  என்பதை பற்றி பார்க்கலாம்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிக ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர் லொஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவரும் ,செய்தி வாசிப்பாளரும் ஆவார். பிக்பாஸ் 3 போட்டியில் 16 contestant உள்ளனர்.பிக்பாஸில் உள்ள லொஸ்லியா ரசிகர்கள் லொஸ்லியா ஆர்மி பக்கத்தை உருவாக்கி உள்ளனர்.
ஆனால் ரசிகர்கள் லொஸ்லியா பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ் இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அவருடைய தோழி ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவருக்கு தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர்களில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் மட்டும்தான் பிடிக்குமாம். ஆனால் ரஜினி தான் ஆல் டைம் ஃபேவரிட் எனக் கூறியுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தென்னிந்திய சினிமாவை கேலி செய்த தொகுப்பாளர்: பதிலடி கொடுத்த பாகுபலி நடிகர்
[Image: 1561540899-3987.jpg]


பிரபல தெலுங்கு நடிகர் ராணா, சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில், தென்னிந்திய சினிவாவை கேலி செய்த தொகுப்பாளருக்கு பதிலடி கொடுத்தார்.




ராணா டக்குபடி, தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவர் வில்லனாக நடித்த பாகுபலி திரைப்படமே இந்திய சினிமா ரசிகர்களுக்கு அவரை அடையாளப்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ராணா, ஒரு யூட்யூப் சேன்னலுக்கு தன்னுடைய பேட்டியை அளித்தார். அப்போது அந்த பேட்டியின் தொகுப்பாளர், தென்னிந்திய சினிமாவைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், தான் ரோஜா மற்றும் பாகுபலி அகிய திரைப்படங்களை மட்டுமே தான் பார்த்துள்ளதாகவும் கூறினார்.

உடனே நடிகர் ராணா, தொகுப்பாளருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சினிமாவிற்குள் பிரிவு எதுவும் இல்லை என்றும், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் தற்போது அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவெஞ்சர்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள் தற்போது இந்தியாவில் பெரிய வசூலை அள்ளுகிறது என்றும், தென்னிந்திய சினிமா என்று தனியே பிரிப்பது நியாயமில்லை எனவும் தெரிவித்துள்ளர்.

நடிகர் ராணாவின் இந்த பதிலடியால் தொகுப்பாளர் அதிர்ந்து போனார். ராணா பதிலடி குடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
திரை விமர்சனம்: சிந்துபாத்
[Image: e90921afP2373728mrjpg]

தென்காசி பெண்ணான அஞ்சலி, அக்கா கணவர் வாங்கிய கடனுக் காக மலேசியாவின் ரப்பர் தோட்டத் துக்கு வேலைக்கு போகிறார். விடுமுறை யில் ஊருக்கு வரும் அவர், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சில்லறைத் திருடனான விஜய்சேதுபதியை காதலித்து கரம்பிடிக் கிறார். மீண்டும் மலேசியா செல்லும் அஞ்சலியை ஒரு கும்பல் தாய்லாந்துக்கு கடத்திச் செல்கிறது. அவரை மீட்டுவர கடல் கடந்து செல்லும் விஜய்சேதுபதி, கடத்தல் கும்பலுடன் மோதி, மனைவியை மீட்டாரா, இல்லையா என்பது கதை.
இயக்குநர் எஸ்.யு.அருண்குமாருடன் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள விஜய்சேதுபதி, சிறு இடைவெளிக்குப் பிறகு, குடும்ப சென்டிமென்ட் கலந்த ஆக்சன் கதையில், கமர்ஷியல் கதாநாய கனாக முகம் காட்டியிருக்கிறார். லாஜிக் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர்.
செவித்திறன் குறைந்தவராக விஜய் சேதுபதியின் நடிப்பு சுவாரஸ்யம். சண்டைக் காட்சிகளில் வேகம் காட்டி ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்து படைக் கிறார். அவரிடம் கத்திக் கத்திப் பேசியே காதலிக்கத் தொடங்குகிறார் அஞ்சலி. மாமா அருள்தாஸிடம் முறைப்பு காட்டும் போதும், விஜய்சேதுபதியிடம் விரைப்பு காட்டும்போதும் கெத்தாக தெரிகிறார். கடத்தல் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் போது நடிப்பில் மிளிர்கிறார்.
குறும்பும், கில்லாடித்தனமும் நிறைந்த ‘சூப்பர்’ என்ற பாத்திரத்தில் அறிமுகமாகி உள்ள விஜய்சேதுபதியின் மகன் சூர்யா வுக்கு நல்வரவு. கிடைக்கும் இடங்களில் எல்லாம் அப்பா போலவே ஸ்கோர் செய்கிறார்.
சிறுமியின் தந்தையாக வரும் விவேக் பிரசன்னாவும், கண்களால் மிரட்டும் வில்லனாக லிங்காவும் அளவான நடிப்பை வழங்குகின்றனர்.
முதல் பாதியில் அவ்வப்போது பாடல் கள் குறுக்கிட்டாலும் விஜய்சேதுபதி, சிறுவன் சூர்யா செய்யும் அலப்பறைகள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன. ஆனால், அதில் கிராமியத் தன்மை குறைந்து, ஹீரோயிஸ காட்சிகளாகச் சுருங்கிவிடுகின்றன. அதேநேரம், ஆணா திக்க செருக்கை எதிர்த்துப் போராடும் துணிச்சலான பெண்ணாக சித்தரிக்கப் பட்டுள்ள அஞ்சலி கதாபாத்திரம் இயல்புத் தன்மையுடன் ஈர்க்கிறது. வீட்டை விற்க முயற்சிக்கும் ஜார்ஜ் மரியானின் இயல் பான நகைச்சுவை ரசிக்க வைக்கிறது.
மலேசியா, தாய்லாந்து, கம்போடியா என கதை பயணிக்கிறது. ஆனால், இடை வேளையை நெருங்கும் வரை படம் எதை நோக்கிப் போகிறது என்பதே தெரிய வில்லை. கடத்தல் கும்பலிடம் அஞ்சலி சிக்கும்போதுதான் கதை சூடுபிடிக்கிறது. மலேசியாவுக்கு பயணிக்கும் விஜய் சேதுபதி, சைக்கோ கொலைகாரன் லிங்கா வீட்டில் திருடப் போகும்போது திரைக்கதை வேறு தளத்துக்கு மாறுகிறது. லிங்காவின் கும்பலிடம் சிக்கி, அங்கிருந்து தப்பி, மீண்டும் சிக்கி, மீண்டும் தப்பி என நாடு விட்டு நாடு கதை பயணிக்கும்போது அலுப்பு தட்டுகிறது. ஒரு கட்டத்தில் நாய கன் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற குழப் பத்தை ஏற்படுத்திவிடுகிறார் இயக்குநர்.
முதல்பாதியில் தென் தமிழக கிராமத் தின் அழகையும், பிற்பாதியில் கடத்தல் கும்பலின் தாய்லாந்து கொட்டகையின் மிரட்சியையும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் கச்சிதமாக பதிவு செய்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு பெரும் பலம்.
அஞ்சலி எதற்காக மாமனை வெறுக் கிறார்? மொழி தெரியாத ஊரில் வில்லனை விஜய்சேதுபதி எளிதாக வெல்வது எப்படி? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. கதையில் ஒட்டாத உணர்வுகளும், லாஜிக் மீறிய காட்சிகளும் அயர்ச்சியை தரு கின்றன. அழகுசாதன துறையில் தோல் விற்பனை நடக்கும் அம்சத்தை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாம்.
கதாநாயகன் - வில்லன் ஆக்சன் காட்சி கள் அமர்க்களம். ஆனால் ‘திரு’ என்ற முரட்டுக் கதாநாயகனுக்கு ஏற்றவராக வில் லன் இல்லை. பெரிய பீடிகை கொடுத்து விட்டு, வில்லன் கதாபாத்திரத்தை மொக்கையாக முடித்தது, அந்நிய மண்ணில் மனைவியை மீட்கப் போராடும் நாயகனிடம் புத்திசாலித்தனங்கள் இல்லா தது ஆகிய குறைகளால் ‘சிந்துபாத்’ திக்கு தெரியாமல் தடுமாறினாலும், மசாலா ஆக்சன் படமாக மனதை கவர்கிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கலாய்த்த கஸ்தூரி
[Image: bigg-boss-3-kasthurijpg]

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 3’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், 16 பேர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களே ஆனாலும், பலரும் கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
குறிப்பாக, ஆரம்பம் முதலே நிறைய அழுகாச்சி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருவதால், அதைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“போதும்பா... விட்ருங்கப்பா... இன்னும் எத்தனை நாளைக்கு சென்டிமென்ட்டை பிழியப் போறீங்க? இப்பவே யாரு எவ்வளவு சோகக்கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை. இதுக்கு மேலயும் சோகத்தைப் பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தைப் பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோனு திக்கு திக்குனு இருக்கு.
இதே சேனல்ல ‘கதையல்ல ...’னு சொல்லி ஒரு நிகழ்ச்சி. வந்தவங்களை அமுக்கிப் பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க. அதில் ஆரம்பித்தது, எல்லா புரோகிராமிலும் அழுவாச்சி ஃப்ளாஷ்பேக். எங்க ஃபிளாட்ஸ்ல எல்லா வீட்டிலும் குழந்தைகள் பார்க்குறாங்க. குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியா இது? பெற்றோர்களே... பொறுப்புடன் இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா இருவருக்கும் பிடிவாரண்ட்!

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிரவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

[Image: sarath.jpg]நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா இருவருக்கும் பிடிவாரண்ட்!
ராடன் மீடியா திரைப்படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மேஜிக் ஃபிரேம்ஸ் எனும் நிறுவனத்திடம் ரூ 2 கோடி கடனாகப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார், ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர். ஆனால் அந்தக் கடனை இதுவரை அவர்கள் திருப்பி செலுத்தாமல் உள்ளதனர். 

இதனால் ரேடியன்ஸ் மீடியா சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது சம்மந்தமாக நேற்று நடைபெற்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் ஆஜரராகதால் ராதிகா,சரத்குமார் ஸ்டீபன் ஆகியமூவருக்கும் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது. 

ராதிகா மற்றும் சரத்குமார் தங்கள் மீதான வழக்கு பொய் வழக்கு என்று கூறியுள்ளார்கள். மேலும் தங்கள் தரப்பில் ஜாமினுக்கு முயற்சித்து வருகிறார்கள். 


நடிகை ராதிகா பல டீவி சீரியல்களை ராடன் மீடியா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.சில படங்களையும் ராடன் மீடியா நிறுவனம், ரேடியன்ஸ் மீடியாநிறுவனத்துடன்இணைந்து தயாரித்தது. இரண்டு நிறுவனங்களிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை எழுந்தது. ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் ராதிகா மீதும் சரத்குமார் இருவர் மீதும் பண மோசடி வழக்கு தொடுத்தது. ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் பெற்ற தொகையைத் திருப்பிச் செலுத்தாத ராதிகா மற்றும் சரத்குமாருக்கு வாரண்ட் பிறப்பித்துள்ள்து சைதாப்பேட்டை நீதிமன்றம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
திரை விமரசனம்: ஹவுஸ் ஓனர்

[Image: e8f689d0P2376141mrjpg]

சென்னை டிஃபென்ஸ் கால னியில் ஒரு வீடு. அங்கு அல்சைமர் (மறதி) நோயால் பாதிக்கப்பட்ட முன் னாள் ராணுவ அதிகாரியான கர்னல் கிஷோரும், அவரது மனைவி ஸ்ரீரஞ்சனியும் வசிக் கின்றனர். கன மழையால் ஏற் பட்ட பெரு வெள்ளம் அப்பகு தியை சூழ்கிறது. எல்லோரும் அங்கிருந்து வெளியேறுகின்ற னர். சொந்த வீட்டைவிட்டு வெளி யேற மறுக்கிறார் கிஷோர். அவ ருடன் வீட்டுக்குள் அடைபட்ட ஸ்ரீரஞ்சனி நிலைமையை எப்படி சமாளிக்கிறார்? வெள்ளத்தில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இதற்கு பதில் சொல்கிறது ‘ஹவுஸ் ஓனர்’.
சென்னையை புரட்டிப் போட்ட 2015 வெள்ளத்தை பின் னணியாகக் கொண்டு, உணர்வுப் பூர்வமான படத்தை வழங்க பிரயத்தனப்பட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். பிள் ளைகளால் தனித்துவிடப்பட்ட முதிய தம்பதியை முன்வைத்து வெள்ள பாதிப்பை கண்முன் நிறுத்தியிருக்கிறார். படத்தை இயக்கியதோடு, கலை, ஆடை வடிவமைப்பு என பல வேலைக ளையும் செய்திருக்கிறார்.
படத்தில் பெரிய அளவில் நடிகர்கள் இல்லை. பெரும் பாலான காட்சிகளில் கிஷோ ரும், ஸ்ரீரஞ்சனியும் மட்டும்தான். செல்போன் உரையாடல் வழி யாகவே மற்ற பாத்திரங்களை உணர்த்துகின்றனர். கிஷோர் ஒரு ரோபோ போல நடித்திருப்ப தால், பாத்திரத்துக்கான இயல் பான உணர்வு வெளிப்பட வில்லை. அதனால், இறுதிக் காட்சி நம்மிடம் எவ்வித பதற் றத்தையும் ஏற்படுத்தவில்லை.
பல படங்களில் துணை கதாபாத்திரமாக கவனம் ஈர்த்த ஸ்ரீரஞ்சனி இதில் மையக் கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் ஒட்டுமொத்தமாகவே நான்கைந்து கதாபாத்திரங்கள் தான் என்பதால், படத்தின் பெரும் பகுதியை தன் தோளில் தாங்கி நிற்கும் பொறுப்பை சிறப்பாக செய்கிறார். மறதி நோயால் பாதிக்கப்பட்ட கணவனை ஒரு குழந்தைபோல கவனித்துக் கொள்வதும், எரிச்சலை ஏற்படுத் தும் அவரது செயல்பாடுகளை பொறுத்துக் கொள்வதும் என சிறப்பான நடிப்பை வழங்கி யுள்ளார்.
‘பசங்க’ கிஷோர் இளவயது கர்னலாக வருகிறார். அவருக்கு ஜோடியாக விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின்.
படத்தில் பாலக்காட்டு பாஷை அழகாக வெளிப்படு கிறது. சில காட்சிகளில் அது படத்துக்கு வலு சேர்க்கிறது; உணர்வை ஊட்டுகிறது. ஆனால், பதற்றமான நேரத்தி லும், ‘ஷாவி ஷாவி’ என்று ஸ்ரீரஞ்சனி பரபரக்கும்போது, அது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
படம் முழுக்க மழை சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மழைக்கு நடுவில் நாம் அமர்ந் திருப்பதான ஓர் உணர்வை சவுண்ட் எஃபெக்ட்ஸ் மூலமா கவே ஏற்படுத்திவிடுகின்றனர்.
தபஸ் நாயக்கின் ஒலிக் கலவையும், ஜிப்ரானின் இசை யும் படத்தை தூக்கி நிறுத்து கின்றன.
கிருஷ்ணா சேகர் ஒளிப்பதி வில் படம் முழுக்க பசுமை தெரி கிறது. போதாக்குறைக்கு ஓர் அழகிய திருமணத்தை தொடர்ந்து வரும் காதல் காட்சி கள். மழை - காதல் இரண்டின் காரணமாக ஒருவித ரொமான் டிக் உணர்வு நிரம்பி வழிகிறது. நிகழ்காலக் காட்சிகள் மழை, வெள்ளத்தின் நடுவே நடப்பது போல, ஃப்ளாஷ்பேக் காட்சிகளி லும் மழையை அதிகம் பயன் படுத்தியுள்ளார்.
வாழ்வின் ஒரு கட்டத்தில் ரசிக்கத்தக்கதாக இருக்கும் மழை, இன்னொரு கட்டத்தில் வாழ்வை அச்சுறுத்துவதாக அமைந்திருக்கும் முரணை இப்படி காட்சிவழியாக சொல்லி யிருப்பது ரசனை. ஆனால், தண்ணீரால் ஏற்பட்ட துயரத் துக்கான சுவடே படத்தில் இல்லை. தெருவில், வெளியில் வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு பேரழிவு வெறுமனே டிவி செய்தியாக மட்டுமே வந்து போகிறது.
முந்தைய படங்களை ஒப் பிடும்போது, இப்படத்தில் இயக்குநராக லட்சுமி ராமகிருஷ் ணன் மேம்பட்டிருக்கிறார். அல்சைமர் நோயாளியான கர்ன லின் தொப்பியில் அவரது செல்போன் எண் எழுதப்பட்டி ருப்பது போன்ற சில நுட்பங்கள் அழகு.
கடைசிக் காலத்தில் பெற் றோரை தனியாக தவிக்க விட்டு விட்டு, வெளிநாடுகளில் செட்டில் ஆகும் இளைய சமுதாயத்துக் கான எச்சரிக்கையாகவும் இப் படத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு குறும்படம் அளவுக்கான ஒற்றைவரி செய்தியை முழு நீளப் படம் ஆக்கியிருக்கிறார் களோ என்ற எண்ணம் ஏற்படு கிறது. மழையை உணர்த்திய தோடு, வெள்ள பாதிப்பையும் உணர்த்தி, திரைக்கதையில் சில திருப்பங்களை சேர்த்திருந்தால், நல்ல ‘ஹவுஸ் ஓனர்’ ஆகி யிருப்பா
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அடிச்சு மண்டைய உடைச்சிடுவேன்.. தன்னிடம் Flirt செய்த நடிகரால் கோபமான லாஸ்லியா

பிக்பாஸ் மூன்றாவது சீசன் துவங்கி ஒரு வாரம் முடிந்து இன்று கமல் வீட்டுக்கு வரவுள்ளார். ஆரம்பம் முதலே சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் கவின் பல பெண் போட்டியாளர்களிடம் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இலங்கையில் இருந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் லாஸ்லியாவிடம் இன்று கவின் வழிமறித்து flirt செய்துள்ளார். லாஸ்லியா வீட்டுக்கு உள்ளே செல்ல முயன்றபோது கதவை பிடித்துக்கொண்டார் கவின்.
இதனால் டென்ஷன் ஆன லாஸ்லியா "அடிச்சு மண்டைய உடைச்சிடுவேன்" என கூறி அவரை கண்டித்துள்ளார்.

[Image: 625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஹீரோவுக்கு நோ - யோகிபாபு எடுத்த திடீர் முடிவு

[Image: NTLRG_20190629161729566935.jpg]

தமிழ் சினிமாவின் நம்பர் 1 காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகிபாபு. ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வரும் அவர், நேற்று திரைக்கு வந்துள்ள தர்மபிரபு படத்தில் நாயகனாக நடித்துள்ளர். இதையடுத்து கூர்கா, ஜோம்பி உள்பட சில படங்களிலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

தர்மபிரபு வெற்றி பெற்றிருப்பதால், தொடர்ந்து யோகிபாபு ஹீரோவாக நடிக்கத் தொடங்கி விடுவாரோ என்றொரு பேச்சும் கோலிவுட்டில் எழுந்திருக்கிறது.

இதுப்பற்றி அவர் கூறுகையில், நண்பர்கள் வற்புறுத்தியதால் இந்த படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தேன். இனி வழக்கம் போல் மற்ற நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடங்களில் மட்டுமே நடிப்பேன். ஹீரோவாக நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளா
first 5 lakhs viewed thread tamil
Like Reply
எம்.ஜி.ஆருடன் நடிக்காதது வருத்தம் - கமல்ஹாசன்


[Image: 201907010452095913_Sad-to-not-acting-wit...SECVPF.gif]

தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

“என் மீதான விமர்சனங்களில், எனக்கு பயன்படும் விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்வேன். விமர்சனத்துக்கு விமர்சனம் சொல்லும் பழக்கம் எனக்கில்லை. விமர்சிப்பதையே தொழிலாக வைத்திருப்பவர்கள் அந்நிலையில் இருந்து மீளமாட்டார்கள். எம்.ஜி.ஆருடன் ‘நாளை நமதே’ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அப்போது ஒரு மாதம் எனக்காக எம்.ஜி.ஆர். காத்திருந்தார்


அந்த படத்தின் டைரக்டர் சேதுமாதவன் என்னிடம் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்கவேண்டிய கதாபாத்திரம் அது. யோசித்து பாருங்கள் என்றார். நாளை நமதே என்று அவருடன் பாட்டுப்பாடி ‘டான்ஸ்’ ஆடியிருந்தால் இன்று எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கும்? ‘நாளை நமதே’ அந்த மந்திரத்தை தான் நான் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். அதை இப்போது யோசித்து பார்த்தால் எவ்வளவு இழப்பு என்று தெரிகிறது.

கடுமையான தருணங்களில் எனக்கு தோள் கொடுத்தோர் ஏராளம். என் வாழ்க்கையில் ‘தோள் கண்டேன், தோளே கண்டேன்’. விஸ்வரூபம் பட பிரச்சினையின்போது தமிழக மக்கள் எனக்கு தோள் கொடுத்து நின்றதை மறக்கவே முடியாது. எனக்காக தான் வாழும் 200 சதுர அடி வீட்டை எழுதி தர ஒருவர் முன்வந்தார்.

இவர்களை போன்றவர்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று யோசித்து யோசித்துத்தான் எனது இன்றைய வாழ்க்கை நகருகிறது. என் எஞ்சிய வாழ்க்கை இனி மக்களுக்காக தான் என்று சொல்வது வெறும் சினிமா வசனம் அல்ல. கடனை அடைக்க முடியாமல் வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டு இருக்கிறேன் என்பது தான் அதன் அர்த்தம். இந்த கடனை அடைக்க முடியாது. இது செய்த கணக்கு அல்ல, தனி கணக்கு.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
'சுடுகாட்டுல இருந்துக்கிட்டு கிரேஸியைக் கூப்பிட்டேன்’’ - கமல் நெகிழ்ச்சி

[Image: crazy-mohan-2gif]

‘’சுடுகாட்டுல இருந்துக்கிட்டு கிரேஸியைக் கூப்பிட்டேன். அங்கேருந்து சினிமால, தன் கேரியரைத் தொடங்கினார் கிரேஸி மோகன்’’ என்று பேசினார் கமல்.
நாடக கதாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன், கடந்த ஜூன் 10ம் தேதி காலமானார். இதையடுத்து, இன்று 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கிரேஸி கிரியேஷன்ஸ் தன் நாடகத்தை இன்று மேடையேற்றியது. இதற்கான விழா இன்று நாரத கான சபாவில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கூட சொன்னேன்... செல்போனில் உள்ள பல எண்களை அழிக்கவே மனம் வரவில்லை. கே.பி.சார், நாகேஷ், அனந்து சார், சந்திரஹாசன், இப்போது மோகன். இந்த எண்களை அப்படியே அழிக்காமல் வைத்திருக்கிறேன்.
இருந்ததைக் கொண்டாடுகிறோமேயொழிய, இறந்ததை நான் ஒருபோதும் கொண்டாடுவதே இல்லை. கிரேஸி மோகன் எங்கும் சென்றுவிடவில்லை. இங்குதான் எங்கேயோ உடலின் ஒருமூலையில் இருந்துகொண்டிருக்கிறார். இதைத்தான் பலரும் ஆத்மா என்றும் ஆத்மாவுக்கு அழிவில்லை என்றும் சொல்கிறார்கள் போல!
நானும் மோகனும் தினமும் பேசிவிடுவோம். ஏதாவது பேசுவோம். செயிண்ட் மேரீஸ் சுடுகாட்டில் படப்பிடிப்பில் இருந்தபோது, ரோட்டில் கிரேஸி மோகன் மாதிரியே ஒருவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். உற்றுப் பார்த்தேன். மோகன் தான். அவர் பெயரைச் சொல்லி கூப்பிட்டேன். சுடுகாட்டில் இருந்து குரல் கேட்கிறதே என்று பயந்திருப்பார் மோகன்.
ஆனாலும் மோகன் வந்தார். அங்கே சந்தித்துக் கொண்டோம். அதன் பிறகு, சினிமாவில் தன் கேரியரையே வளர்த்துக்கொண்டார் கிரேஸி மோகன். அவர் விட்டுச் சென்றதை, கிரேஸி கிரியேஷன்ஸ் தொடரவேண்டும். அவரின் திறமை, அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும். அதில் உங்களுக்கும் எனக்கும் பங்கு இருக்கிறது.
இவ்வாறு கமல் பேசினார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: losliya.jpg]
நடிகைகளை ஓரங்கட்டும் லொஸ்லியா.! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.

விஜய் டிவியில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து உள்ளனர். ஆனால் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் லொஸ்லியா தனது குறும்புத்தனத்தால் எதார்த்தமான செயல்களாலும் அனைவரிடமும் கவனத்தைப் பெற்று தற்போது அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார்.

அவர் பிக்பாஸில் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அந்த வீடியோவை எடுத்து ரசிகர்கள் ஷேர் மற்றும் ட்ரென்டிங் வருகின்றனர். இப்படி இருக்கையில் ஒரு பெண் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த சிலர் இதில் லொஸ்லியாதான் எனக் கூறி வருகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் இது லொஸ்லியா இல்லை வேற யாராவது கூட இருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதில் லொஸ்லியா இல்லை என்பது உறுதிபடத் தெரிவிக்கவில்லை. நீங்களே அந்த புகைப்படத்தை பார்த்து அது உண்மையா பொய்யா என தெரிந்து கொள்ளுங்கள்.
[Image: D-Sf4a5U4AEpZeR?format=jpg&name=small]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சர்ச்சையைக் கிளப்பிய சமந்தாவின் ஆடை

[Image: NTLRG_20190701121533178394.jpg]

திருமணம் முடிந்த பிறகும் தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவருடைய சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவார். அதற்கே பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவிப்பார்கள்.

சமீபத்தில் அவர் நடித்து வெளிவர உள்ள 'ஓ பேபி' பட நிகழ்ச்சி ஒன்றில் அவர் அணிந்து வந்த ஆடை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் சமந்தா, சிகப்பு நிறத்தில் நீளமான கவுன் ஒன்றை அணிந்து வந்தார். ஆனால், மேற்புறத்தில் கழுத்துக்குக் கீழ் நீளமான கட் இருந்ததால் அந்த உடை ஆபாசமாகத் தெரிந்தது.

அந்த நிகழ்ச்சியில் அவருடைய அம்மாவும் கலந்து கொண்டார். மேலும் படத்தைத் தயாரித்தது அவரது கணவரான நாகசைதன்யாவின் அம்மா குடும்பத்தினர். அதனால், நாகசைதன்யாவின் மாமா வெங்கடேஷ், மற்றொரு மாமா மகன் ராணா டகுபட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் உறவினர்களுடன் கலந்து கொள்ளும் போது இப்படிப்பட்ட கிளாமரான ஆடையை அணிந்ததை சமந்தா தவிர்த்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், மற்றொரு சாரார் இந்தக் காலப் பெண்களைப் போல இருப்பதற்காக சமந்தா இப்படி நடந்து கொள்கிறார் என்றும், வேறு சிலரோ, இந்தக் கால பேஷனை மிகச் சரியாக வெளிப்படுத்துகிறார் சமந்தா என்றும் பாராட்டுகிறார்கள்
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 15 Guest(s)