17-04-2025, 07:51 AM
Part 42
உமாவும் கீர்த்தியும் அன்று மாலை 6 மணி போல முன்னாரில் இருக்கும் ஒரு சின்ன ரிசார்ட்டில் வந்து சேர்ந்தனர். அது சீசன் இல்லாத சமயம் அதனால் கூட்டம் அதிகம் இல்லை. அந்த ரிசார்ட்டில் ஒரு 15 சின்ன சின்ன வீடுகள் இருந்தது. இவர்களை தவிர ஒரு 4 வீடு மட்டுமே நிறைந்து இருந்தது. அதனால் ரிசார்ட்டில் இருந்த சமையல்காரர்களுக்கு விடுப்பு விட்டு இருந்தனர். ரிசார்ட்டை பார்த்து கொள்ள ஒரு மேனேஜரும் மூன்று பணியாள்கள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு ஒரு வீடு ஏற்கனவே சுந்தரேசன் ஏற்பாடு செய்து இருந்தார். உமா, கீர்த்தி இருவரும் கொண்டு வந்த தங்கள் பேகை உள்ளே எடுத்து வைத்தனர். ட்ரைவர் தங்குவதற்கு ஒரு சின்ன இடம் அந்த ரிசார்ட்டில் இருந்தது.
கொஞ்சம் ஃபிரெஷ் ஆகி விட்டு சாப்பிட ஏதாவது இருக்குமா என்று பார்க்க எதுவும் இல்லை. வெளியே சென்று தான் சாப்பிட்டு வர வேண்டும் அல்லது சமைத்து சாப்பிட வேண்டும். சமையல் அறையில் எல்லா பொருட்களும் இருந்தன. கீர்த்தி "வெளியே போய் சாப்பிடலாம்" என்று சொல்ல, உமா "வேண்டாம் டைர்ட் ஆ இருக்கு. இங்கேயே ஏதாவது சமைத்துக் கொள்ளலாம்" என்று சொல்லி உடனே கொஞ்சம் சாப்பாடு, ரசம், முட்டை குழம்பு செய்தாள். இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தனர். தங்களுக்குள் நடந்தவற்றை பேசாமல் தள்ளினர்.
இரவு 10 மணிக்கு படுக்கை அறை சென்றனர். ஒரு அளவான கட்டில் அது . இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் உக்கார்ந்ததும் படுத்து கொள்ள யோசித்தனர். கீர்த்தி "உமா.. தைரியமா தூங்கு."
உமா "ஹ்ம்ம்.."
இருவரும் சில நிமிடம் படுத்து இருந்தனர். லேசாக குளிர் எடுக்க போர்வையால் போர்த்தி கொண்டனர்.
"உமா.. சாரி.. என்னோட மாமா, அத்தையால தான்.."
"ஹ்ம்ம்.."
"கோவமா"
"கோவப்படவா.. இல்லை கவலைப்படவா..இல்லை அசிங்கபடவா.. இனிமே கதிர் முன்னாடி எப்படி முழிப்பேன்.." லேசாக கண்ணீர் துளித்தாள்.
"எனக்கு மட்டும் கஷ்டம் இல்லையா.. நான் இனிமே நந்தினி முகத்துல எப்படி முழிப்பேன்"
மேலும் சில நேரம் இதை பற்றி பேசி கொண்டே தூங்கினர். எந்த பிரச்னையும் தூங்கி எழுந்தாள் தெளிவு கிடைக்கும். அதே மாதிரி தான் அவர்களும் நன்கு அசந்து தூங்கினர். மனசில் இருந்த பாரம் எல்லாம் இறக்கி வைத்து போல இருந்தது.
காலை 7 மணி போல உமா விழித்தாள். ரொம்ப நேரம் தூங்கிவிட்டோமோ என்று சுத்தி பார்த்தாள். கீர்த்தியும் போர்வை இழுத்து போர்த்தி கொண்டு தூங்கி கொண்டு இருப்பதை பார்த்ததும் ஒரு பெருமூச்சு விட்டாள். மெல்ல எழுந்து பாத்ரூம் சென்று பல்விளக்கி, முகம் கழுவி விட்டு சூடா காபி குடிச்சா நல்லா இருக்கும் என்று தோன்றியது. பிரிட்ஜில் பால் எதுவும் இல்லை. மீண்டும் பெட் அருகே வந்து கீர்த்தியை பார்த்து "என்னங்க.."
கீர்த்தி சோம்பல் முறித்து கண் விழித்து "என்ன உமா"
"பால் வேணும், காபி போட"
"காபி வாங்கிட்டு வர சொல்லட்டுமா"
"இல்லைங்க வேணாம். வெளி காபி குடிக்க விருப்பம் இல்லை. பால் மட்டும் வாங்கி வர சொல்லுங்க"
கீர்த்தி போன் எடுத்து சொல்ல மேனேஜர் ஒரு ஆளை அனுப்பி பால் வாங்கி வர செய்தார். உமா வாங்கி சூடா 2 டம்பளரில் காபி போட்டு கொண்டு வந்தாள். கீர்த்தி இன்னும் பெட் விட்டு எழாமல் அவள் கொடுத்த காபி வாங்கினார். உமாவும் கட்டிலின் மறுமுனையில் உக்கார்ந்து காபி ஐ சுவைக்க ஆரம்பித்தாள். காபி குடிச்ச பிரெஸ்னஸ் இல் கீர்த்தி பெட் விட்டு எழுந்தார். காபி ரொம்ப சுவையாக அந்த குளிருக்கு இதமாக இருந்தது. உமாவை பாராட்டி விட்டு பாத்ரூம் சென்றார். சில நிமிடங்களில் குளித்து வந்தார். அதன் பின் உமா தன்னுடைய உடுப்புகளை எடுத்து கொண்டு குளித்து வந்தாள்.
மணி ஒரு 9 போல ஆனது. டிரைவர் கதவை தட்டினார். கீர்த்தி கதவை திறக்க டிரைவர் கையில் ஒரு டூரிஸ்ட் கைட் கார்டு இருந்தது. அதில் முன்னாரில் பார்க்க வேண்டிய இடங்களின் குறிப்பு இருந்தது. அதை பார்த்து கொண்டே கீர்த்தி, டிரைவர் சேர்ந்து ஒரு சின்ன பிளான் போட்டனர். உமாவும் கிளம்பிட ஒரு சின்ன ஹோட்டலில் ப்றேக்பாச்ட் முடித்து விட்டு சுத்தி பார்க்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு இடமாக பார்த்து முடிக்க நேரம் ஓடியது. மாலை 5 மணி வரை சுத்தி பார்த்து விட்டு ரிசார்ட் திரும்பும் போது டிரைவர் ஒரு நல்ல காபி ஷாப்பில் நிறுத்தி விட்டு
"இங்கே காபி நல்லா இருக்கும். குடிச்சிட்டு போகலாம். வேணும்னா உங்க ஊருக்கும் கொஞ்சம் வாங்கிக்கோங்க"
இருவரும் உள்ளே செல்ல டிரைவர் வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே வந்து கடைக்காரரிடம் கொஞ்சம் விலைபேசி வாங்கி கொடுத்தார். சீசன் இல்லாததால் கடையில் கூட்டமும் இல்லை. கீர்த்தி, உமா ஒரு காபி எடுத்து ஒரு டேபிள் இல் உக்கார்ந்து இருக்கும் போது டிரைவர் காபி வாங்கி கொண்டு வெளியே சென்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மீண்டும் உள்ளே வந்து கீர்த்தியை பார்த்து "சார்.. நான் ஒன்னு சொல்லணும்னு ரெண்டு நாலா நினைச்சிட்டு இருக்கேன். தப்பா நினைக்கலைனா சொல்லட்டுமா"
டிரைவர் பெயர் முருகன். கீர்த்தி அவரை பார்த்து "என்ன முருகா.. கேட்கணுமா.. சொல்லு"
அவர்கள் இருந்த டேபிள் இல் அவரும் உக்கார்ந்தார் "எனக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கிறீங்க"
"இதை சொல்ல தானா இந்த பீடிகை.. என்ன ஒரு 45 இருக்கும்"
"ஹ்ம்ம்.. இல்லை சார்.. எனக்கு இப்போ 58 ஆகுது. "
"சரி அதுக்குஎன்ன.. சொல்ல வந்ததை தயங்காம சொல்லு"
"அது எப்படி சொல்ல" கொஞ்சம் பெருமூச்சு விட்டு விட்டு "எங்க ஐயா (சுந்தரேசன்) உங்கள பத்தி சொல்லி இருக்காரு. நீங்க எங்க ஐயா பொண்ணு இறந்ததுக்கு அப்புறம் இவுங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டதை பத்தி"
"ஹ்ம்ம்..அதுல என்ன"
"அது தான்.. உங்க ரெண்டு பெற பாக்கும் போது உங்களுக்குள்ள ஏதோ வேண்டா வெறுப்போடு சேந்து இருக்குற மாதிரி இருக்கு"
"இல்லையே நல்லா தானே இருக்கோம்"
"எனக்கு தெரியும் சார். உங்களுக்குள்ள ஏதோ ஒரு பிரச்சனை ஒளிஞ்சி இருக்கு. அதை என் கிட்ட சொல்ல சொல்லி கேக்கலை. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன் சார். வாழ்க்கைல உங்களுக்கு ஆண்டவன் நல்ல வழிய காமிச்சு இருக்கான். எனக்கும் உங்க வயசு இருக்கும் போது என்னோட மனைவி இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் என்னோட புள்ளைங்களுக்காகவே வாழ்க்கையை ஒட்டிட்டேன். இப்போ திரும்பி பார்த்தா என்னோட பசங்க அவுங்க அவுங்க வாழ்க்கைனு போயிட்டாங்க. நான் இப்போ தனி மரமா நிக்குறேன்."
ஒரு வினாடி மௌனமானாக இருந்து விட்டு மீண்டும் தொடங்கினார். "தனியா வாழ்க்கை வாழுறது ரொம்ப கொடுமை சார். அதுவும் மனைவி இறந்த பிறகு நம்மள புரிஞ்சுகிட்டு அரவணைச்சு போக இன்னொருத்தங்க கிடக்கிறது ரொம்ப புண்ணியம். நீங்க உங்க பழைய வாழ்க்கையையும் அவுங்க அவுங்க பழைய வாழ்க்கையையும் மறந்துட்டு இனிமே உங்களுக்காக வாழ்ந்தீங்கன்னா கடைசி வரை துணையோடு நல்லா இருக்கலாம்"
சொல்லி நிறுத்தினார்.
கீர்த்தி "அது வந்து முருகா.." ஏதோ சொல்ல வந்தார்.
"நீங்க உங்களுக்குள்ளே இருக்குற பிரச்சனையா என் கிட்ட சொல்ல வேணாம். ஆனா நாம வாழ போற வாழ்க்கை ஒரு முறை தான். அதுல சந்தோஷமா வாழ்ந்துட்டு போகலாமே. ஐயா சொல்லி இருக்காரு உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பையன் பொண்ணு இருக்காங்கன்னு. எப்படியும் இன்னும் கொஞ்சம் வருஷத்துல அவுங்க அவுங்க வாழ்க்கையை தேடிட்டு போயிடுவாங்க. அதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரு மட்டும் தான். அதனாலே என்னோட ஆசை நீங்க ரெண்டு பெரும் சந்தோஷமா சேந்து கடைசி வரை இருக்கணும் " அவர் சொல்லும் போது அவர் கண்ணில் லேசான நீர் எட்டி பார்க்க அதை கர்ச்சீப் கொண்டு துடைத்தார்.
கீர்த்தி அவரை பார்த்து கொண்டு இருக்க, உமா காபி பருகி கொண்டு இருந்தாள்.
முருகன் இப்போது உமாவை பார்த்து "அம்மா.. நீங்களும் தான்.. உங்க பழைய வாழ்க்கையை மறந்துடுங்க. உங்களுக்கு இவர் தான், அவருக்கு நீங்க தான். அதனாலே.." என்று சொல்லும் போது எப்படி முடிக்க என்று தெரியாமல் எழுந்து வெளியே சென்றார். தன் தனிமை வாழ்க்கையின் கொடுமையை இவர்கள் இருவருக்கும் நேர கூடாது என்ற எண்ணத்தில் சொல்ல வந்ததை சொல்லி விட்டோம் என்று ஒரு வித பூரிப்பில் எழுந்து சென்றார்.
கீர்த்தி, உமா இருவரும் என்ன பேச என்று புரியாமல் எழுந்து சென்றனர். முருகன் கார் ஸ்டார்ட் செய்ய இருவரும் ஏறி கொண்டனர். கார் கொஞ்சம் செல்ல செல்ல இருள ஆரம்பித்தது. அவர்களுடைய ரிசார்ட் வந்ததும் இருவரும் இறங்கி கொள்ள முருகன் "சார் தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க. நாளைக்கு நான் உங்கள பாக்கும் போது உங்க முகத்துல முழு சந்தோஷத்தை பாக்கணும். நீங்களும் தான் ம்மா" சொல்லிவிட்டு கார் பார்க் செய்து விட்டு அவனுடைய சின்ன ரூமுக்கு சென்றான்.
கீர்த்தி உமா அவர்கள் ரூமுக்கு சென்றனர்.
உள்ளே சென்றதும் கீர்த்தி உமா இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. உமா பெட்ரூம் சென்று கதவை பூட்டி உடைமாற்றி கொண்டாள். ஒரு நயிட்டி அணிந்து வந்தாள். கீர்த்தி அடுத்து முகம் கை கால் கழுவி உடை மாற்றி வந்தார். உமா கிட்சனில் ஏதோ காய்கறி வெட்டி கொண்டு இருந்தாள். கீர்த்தி மெல்ல உள்ளே நுழைந்து அவள் அருகில் நின்றார். அவர் நின்று இருப்பதை கவனித்தும் என்ன சொல்ல என்று தெரியாமல் தன்வேலையில் கவனத்துடன் இருந்தாள்.
மெல்ல கீர்த்தி லேசாக கனைத்து இறுமினார். உடனே உமா கைகளை கழுவிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து நீட்டினாள். அவளின் குறிப்பறிந்து செய்கின்ற உணர்வை நினைத்து ஒரு நிமிடம் அவருக்கு புல்லரித்தது. தண்ணீரை குடித்து கொண்டே "உமா இன்னைக்கு முருகன் சொன்னதை பத்தி நீ என்ன நினைக்குறே"
உமா அவரை பார்த்து "ஹ்ம்ம்.. ஏதோ தப்பு பண்ணிக்கிட்டு இருக்கோம்னு தோணுது"
"ஆமா.. என்னோட தனிமையில என்னோட சுயநலத்துல நந்தினி கிட்ட பழகிட்டேனோன்னு தோணுது"
"அப்படி பார்த்தா நான் கூட கதிர் கிட்ட அப்படி பழகிட்டேனா"
"தெரியல உமா. அப்போ எதை பத்தியும் யோசிக்க தோணலை. இந்த உடம்பு சுகமும், மனசுல ஏற்பட்ட ஒரு காதல் உணர்வுல பின்னாடி எப்படி வாழ்க்கை இருக்கும்னு யோசிக்காம பண்ணிட்டோம்னு தோணுது"
"ஆமா.. நான் என்னோட கணவர் விட்டு பிரிஞ்சு, கதிர் கிட்ட எனக்கு கிடைத்த அக்கறையை தப்பா பயன்படுத்திட்டேனோ. அவனுக்குன்னு future இருக்குன்னு அப்போ தோணாம போயிடுச்சு"
"பாவம் நந்தினியும். அவளுக்கும் future கனவு எல்லாம் இருந்திருக்கும்ல"
இப்படியே ஒருவர் மாத்தி ஒருவர் தங்களின் கடந்த கால காதல் உணர்வு இப்போது தப்போ என்று யோசிக்கும் அளவுக்கு பேசி கொண்டு இருந்தனர். பேசிக்கொண்டே உமாவும், கீர்த்தியும் சமைத்து முடித்து இருந்தனர். டைனிங் டேபிளில் உணவை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தனர்.
"ஏன் உமா இன்னும் 3 - 4 வருஷத்துல நந்தினிக்கு மாப்பிள்ளை தேடனும்ல. அவளுக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தரனும்ல. அதை பத்தி எதுவுமே யோசிக்காம இருந்துட்டேனே"
"ஹ்ம்ம்.. ஆமா.. நானும் யோசிக்கலை. சே.. என்ன அம்மா நான். என்னோட தனிமையை யோசிச்சேன் தவிர என் பொண்ணோட எதிர்காலத்தை பத்தி யோசிக்காம விட்டுட்டேனே"
"ஏன் உமா முருகன் சொன்னது போல இன்னும் ஒரு 10 வருஷத்துக்கு அப்புறம் நம்ம பசங்க நம்மள விட்டுட்டு போயிடுவாங்கல்ல"
அவன் அப்படி கேட்டதும் உமா கண்ணில் தேக்கி வாய்த்த நீர் வடிந்தது. அவள் கண்களை தொடைத்து கொண்டு. "ஆமா.. அப்போ.. நாம மட்டும் தான் தனியா இருப்போம்" அவள் சொல்லும் போது தனக்கு துணை கீர்த்தி தான் என்பது போல உணர்ந்து சொன்னது போல இருந்தது.
கீர்த்தி அவளை பார்க்க அவள் லேசாக சிரித்து விட்டு தலை குனிந்தாள். "ஆமா உமா.. பிற்காலத்துல எனக்கு துணை நீ, உனக்கு துணை நான் அப்படி தான் இருப்போம்ல. இப்போ நடந்த விஷயம் எல்லாம் நினைச்சு பார்த்த என்ன சொல்லண்ணே தெரியல"
"வாழ்க்கைல கடவுள் இதெல்லாம் எழுதி வச்ச விதி." அவள் கொஞ்சம் வேகமாக சாப்பிட, கீர்த்தியும் பேசுவதை குறைத்து விட்டு சாப்பிட்டு முடித்தார். உமா எல்லா பாத்திரத்தையும் எடுத்து கழுவி சுத்த படுத்திட கீர்த்தி சாப்பிட்ட டைனிங் டேபிளை சுத்த படுத்தி இருந்தார். ஒரு அரை மணி நேரத்தில் எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்க பட்டு இருந்தது.
மணி 10 இருக்கும். இருவரும் நெறய மனம் விட்டு பேசிவிட்ட களைப்பில் பெட்ரூம் சென்றனர்.