05-03-2025, 05:52 PM
(03-03-2025, 08:35 PM)Pannikutty Ramasamy Wrote: Hi நண்பா,
இந்த கதை என்னை மிகவும் கவர்ந்து விட்டது.காரணம்,நாயகன்,நாயகி ஆரம்பத்தில் நீங்கள் உருவாக்கிய தன்மை கடைசி வரை மாறாமல் கொண்டு போனது சிறப்பு.நாயகன் சற்று முரட்டு குணம் உள்ளவனாக காண்பித்தாலும், இரக்க குணம் உள்ளவனாகவும் கடைசி வரை காண்பித்தீர்கள்.ஜார்ஜ் கிட்ட நாயகன் மோதும் பொழுது முரட்டு தனத்தை காண்பித்தாலும்,அதே ஜார்ஜ்ஜுக்காக அவன் மாமா அன்பரசு வந்து உதவி கேட்கும் பொழுது தயங்காமல் நாயகன் உதவுகிறான்.
நாயகி கேரக்டரை என்னவென்று சொல்ல..!அவள் தான் இந்த கதையின் ஆணிவேர்.நாயகனுக்காக என்ன வேணுமானாலும் செய்ய துணிகிறாள்.என்ன பிரச்சினை வந்தாலும் தயங்காமல் எதிர்கொண்டு போராடி நாயகனை அடைவது சிறப்பு.
இதில் வரும் நண்பர்கள் காட்சிகள் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.காதல் காட்சிகள் இயல்பாக இருக்கிறது.கொஞ்சம் கூட தவறான காட்சிகள் இல்லாதது இந்த கதைக்கு இன்னும் ஒரு சிறப்பு.
இந்த கதை 8 முறை தொடர்ந்து வாசித்தேன்.கொஞ்சம் கூட அலுக்கல.மீண்டும் இது போன்ற கதையை படைக்க வாழ்த்துக்கள்.
Thanks for your comment bro
