பாகம் - 35
நேரம் 1:00 மணி
தி ராயல் இன் ஹோட்டலுக்கு வெளியே 100m தள்ளி உள்ள சந்தில்,
விஜயன் காரை நிறுத்த, அதற்க்கு முன்னே இருந்த காரிலிருந்து ஒருவர் இறங்கி ஓடி வந்து, விஜயன் இருக்கும் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் உள்ள கதவிடம் வந்து நின்றார்.
அவரை பார்த்தவுடன் விஜயன் windowவை இறக்கினார்.
அவர்: Good afternoon சார்!
விஜயன் அதை பெற்றுக்கொண்டதை போல் தலையை ஆட்டிவிட்டு,
விஜயன்: எல்லாம் இங்க தான் இருக்கீங்களா?
அவர்: ஆமா சார். வெங்கட்ட receptionலயும், கோபால ஹோட்டல்க்கு வெளியேயும் வேவு பாக்க வச்சிருக்கோம். மத்த எல்லாரும் இங்க தான் இருக்கும். நம்ம டீம் 3 பேர், அப்புறம் லேடி போலீஸ் 4 பேர். எல்லாரும் casualsல தான் இருக்கோம்.
விஜயன்: எதுக்குயா லேடி போலீஸ் 4 பேர்?
அவர்: உள்ள இருக்க 2 பேர்ல இருக்க லேடிய handle பண்றதுக்கு சார்.
விஜயன்: அதுக்கு ஏன்யா 4 பேரு?
அவர்: இல்ல சார், search வேகமா முடிக்க சொல்லி கேட்டுருக்காங்க. இவளுங்களும் சும்மா தான சம்பளம் வாங்கிட்டு இருக்காளுங்கன்னு கூட்டிட்டு வந்துட்டோம்.
விஜயன்: இவளுங்கள வச்சு என்ன பண்ணுறதா உத்தேசம்? strategy finalise பண்ணிட்டீங்களா?
அவர்: சார் இப்போதைக்கு 4 டீமா split ஆகி search பண்ற மாதிரி பிளான் சார்.
விஜயன்: சந்துரு தான போட்டான்? அவன வர சொல்லு. அப்டியே மத்த எல்லாரையும் வர சொல்லு.
என்று சொல்ல, அந்த காவல் அதிகாரி ஓடி சென்று இரு கார்களிலும் இருப்பவர்களையும் அழைத்துவிட்டு மீண்டும் ஓடி வந்து விஜயன் அருகில் நின்றார்.
விஜயன் முன்னே இருக்கும் காரில் இருந்து 2 ஆண்கள் வேகமாக வந்து விஜயன் பக்கத்தில் நின்றனர்.
அதற்கு முன்னே உள்ள காரின் உள்ளே இருக்கும் பெண்கள் heelsஐ மாட்டிக்கொண்டு இருந்ததால், நடக்க முடியாமல் பொறுமையாக நடந்து வந்தனர். அவர்கள் அணிந்திருக்கும் உடையையும், அவர்களின் முக அலங்காரத்தையும் பார்த்த விஜயனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தபடி, பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து,
விஜயன்: எவன்யா இந்த குந்தாணிகளுக்கு இந்த ட்ரெஸ்ஸ மாட்டிவிட்டது? காக்காவ குளிப்பாட்டி, மேக்கப் போட்டா மட்டும் அதென்ன மயிலாவா மாறிட போகுது? ஏன்யா இப்படி பண்றீங்க?
என்று சொல்லி சிரிக்க, அந்த மூவரும் அவருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தனர். அந்த 4 பெண் காவலர்களும் அங்கு வந்து அவர்கள் மூவருடன் சேர்ந்து நின்றனர்.
நால்வரும் விஜயனுக்கு வணக்கம் வைத்தனர்.
விஜயன்: ஒரே நாள்ல எல்லாம் மாடல் மாதிரி ஆகிட்டீங்க? இவ்ளோ அழக இத்தன நாள் எங்க ஒளிச்சி வச்சிட்டுருந்தீங்க?
அந்த நால்வரும் விஜயனின் சொற்களை கேட்டு வெட்கப்பட்டனர். முதலில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்,
பெண் காவலர்: சார், போங்க சார்!
என்று வெட்கம் கொண்ட படி சொல்ல,
விஜயன்: வெக்கத்த பாரு! சரி, இப்போ எதுக்கு எல்லாம் கும்பல் கூடி மாநாடு போட்டுட்டு இருக்கீங்க? சந்தேகம் வரதுக்கா? நீங்க 4 பேரும் உள்ள வந்து உக்காருங்க.
என்று பெண் காவலர்களை பார்த்து சொல்ல, அவர்கள் நால்வரும் காரின் உள்ளே சென்று அமர்ந்தனர்.
விஜயன் அவரிடம், முதலில் பேசிய அந்த நபரை பார்த்து,
விஜயன்: சொல்லுங்க திலீப். ஹோட்டல் மேனேஜர் கிட்ட நீங்க தான பேசுனீங்க?
திலீப்: yes, சார்! நான் தான் பேசுனேன்.
விஜயன்: என்னையா சொன்னான்?
திலீப்: உங்க கிட்ட போன்ல சொன்னதுதான் சார். detailsலாம் தர மாட்டாங்களாம். கிளைண்ட்ஸோட பிரைவசி தான் முக்கியமாம். surveillance கேமராவையும் செக் பண்ண முடியாதாம். வேணும்னா நம்மளையே ஒவ்வொரு ரூமா check பண்ண சொல்லிட்டான்.
விஜயன்: ப்ச்...வெங்கட் அங்க தான இருக்கான்? இரு நான் அவனுக்கு போன் பண்றேன்.
என்று சொல்லி, வெங்கட்டிற்கு அழைத்தார். வெங்கட் அழைப்பை ஏற்றார்.
வெங்கட்: சொல்லுங்க சார்!
விஜயன்: வெங்கட், receptionல தான இருக்க?
வெங்கட்: ஆமா சார்.
விஜயன்: சரி, அந்த ஹோட்டல் மேனேஜர் கிட்ட ஃபோன குடு.
வெங்கட் சோபாவில் இருந்து எழுந்து சென்று, ஹோட்டல் மேனேஜர் திவாகரிடம் bluetooth headsetஐ கொடுத்து பேச சொல்ல, திவாகர் அதை வாங்கி காதில் மாட்டிக்கொண்டு,
திவாகர்: ஹலோ!
விஜயன்: மிஸ்டர்.....
திவாகர்: திவாகர் சார்..
விஜயன்: மிஸ்டர் திவாகர். This is DIG விஜயன்.
திவாகர்: சொல்லுங்க சார்!
விஜயன்: நீங்க சொன்னதெல்லாம் என் கிட்ட சொன்னாங்க. see திவாகர், நீங்க உங்க clientsஓட privacyக்கு இவ்ளோ importance குடுக்கறீங்கன்றத நான் appreciate பண்றேன். but, அதே privacyகாக தான் நானும் சொல்றேன். எல்லா ரூமையும் தட்டி உள்ள யாரு இருக்காங்கனு பாக்றதும் privacy issue தான? infact, அதுல பல பேர் உள்ள என்ன பண்ணிட்டு இருப்பாங்கன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு இல்ல. so, நீங்க அந்த floorல இருக்கவங்க detailsலாம் சொன்னீங்கன்னா, ,மத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாம, நாங்க எங்களுக்கு தேவையானவங்கள மட்டும் கூட்டிட்டு கெளம்பிடுவோம். இல்லனா,in the worst case scenario, எல்லா ரூமையும் knock பண்ண வேண்டி இருக்கும். so, ப்ளீஸ் reconsider.
திவாகர்: sorry சார், கண்டிப்பா என்னால எந்த detailsayum provide பண்ண முடியாது. photoவ மட்டும் தனியா systemla store பண்றதில்ல. அவங்களோட மத்த detailsayum தான் store பண்றோம். so, நீங்க verify பண்ணும்போது, மத்த கிளைண்ட்ஸோட detailsலாம் reveal ஆக வாய்ப்பிருக்கு. so, no chance.
விஜயன்: சரி, அட்லீஸ்ட் surveillance cameraவோட footage ஆவது செக் பண்ண allow பண்ணுங்க.
திவாகர்: சாத்தியமே இல்ல சார். நீங்க செக் பண்ணும்போது அது மத்தவங்க faceலாம் reveal ஆகும். நெறய high profile clients அண்ட் VIPs ரெகுலரா வர ஹோட்டல் இது. so, no way. 3rd floorல இருக்கவங்க VIPs இல்ல. அதனால தான் நான் அங்க search பண்ண permission குடுத்தேன். பட், அவங்க VIPs இல்லன்றதால, அவங்களையும் என்ன வேணாலும் பண்ணலாம்னு இல்ல. அவங்க privacyum பாதிக்கப்படக்கூடாது. so, நீங்க முடிஞ்ச அளவுக்கு ரூம்க்கு உள்ள இருக்கவங்களுக்கும், ரூம்க்கு வெளிய இருக்கவங்களுக்கும் இப்படி ஒரு விஷயம் நடக்குதுன்னு தெரியாம பாத்துக்கணும் சார்! just in case ஏதாவது ஆகி ஹோட்டல் nameக்கு பாதிப்பாச்சுனா, அதுக்கு நீங்க தான் சார் பொறுப்பு. எங்க owner இதெல்லாம் கொஞ்சமும் tolerate பண்ண மாட்டாரு. so, please consider that as well.
விஜயன்: alright!
திவாகர்: சார், and one more thing! இங்க ஒரு பெரிய கம்பெனியோட confidential meeting 2:30க்கு ஸ்டார்ட் ஆக போகுது. அத attend பண்றவங்களாம், 1:30 போலவே வர ஆரம்பிச்சிடுவாங்க. எல்லாம் high profile clients. so, நீங்க 1:30குள்ள அத முடிக்கிற மாதிரி பாருங்க சார். அவங்கள arrest பண்ணி கூட்டிட்டு போரப்போவும், மத்தவங்களுக்கு தெரியாத மாதிரியே கூட்டிட்டு போக பாருங்க சார். its my humble request!
விஜயன்: ஒகே, நான் பாத்துக்கறேன்.
திவாகர்: மத்தபடி என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க சார். என்னால முடிஞ்சத செய்யறேன்.
விஜயன்: ஓகே திவாகர். நான் ஏதாவது தேவைப்பட்டா கேக்கறேன்.
திவாகர்: alright சார்!
விஜயன் அழைப்பை துண்டிக்க,
திலீப் அவரிடம்,
திலீப்: என்ன சார் சொன்னான்?
விஜயன்: அதையே தான்யா சொன்னான்.
திலீப்பிற்கு வலது புறம் இருக்கும் கார்த்திக் பேசினார்.
கார்த்திக்: சார், அவன் என்ன சார் சொல்றது? உள்ள criminalsஅ வச்சிட்டு நமக்கு rules போட்டுட்டு இருக்கான்? அவன தனியா கூப்ட்டு மிரட்டி, வேணும்னா ரெண்டு தட்டு தட்டி, வேலைய முடிச்சிடுவோம் சார்.
விஜயன்: ஏன்யா? நான் நல்லா இருக்கிறது புடிக்கலயா உனக்கு? ஹோட்டல் யாரோடது தெரியும்ல? ஹோட்டல் பேருக்கு ஏதாவது ஆச்சு, அப்புறம் இனிமேல் நாம காலம் fullஆ கலர் டிரஸ்லேயே இருக்க வேண்டியது தான். அதான் rooms search பண்ண permission குடுத்துட்டானே. அது போதாதா?
கார்த்திக்: சாரி சார். கொஞ்சம் கோபப்பட்டுட்டேன்.
விஜயன்: நீ எப்போ தான்யா கோவப்படல. கோபத்த control பண்ணுங்க கார்த்தி.
கார்த்திக்: ஓகே சார்.
விஜயன்: சரி விடு!
திலீப்பிற்கு இடது புறம் நிற்பவரை பார்த்து,
விஜயன்: strategy சொல்லுயா சந்துரு!
சந்துரு: சார், உங்களோட சேர்த்து நாம 4 பேர் இருக்கோம் சார். and, we split into four teams, each one of us gets accompanied by a lady security officer. so, நாலு டீமும் தனி தனியா நாலு couple மாதிரி உள்ள போறோம்.
விஜயன்: அடுத்து?
சந்துரு: சார், இந்த ஹோட்டல் layout....
விஜயன்: தெரியும்யா. நான் ஏற்கனவே இந்த ஹோட்டலுக்கு வந்திருக்கேன். ஒரு floorla மொத்தம் 24 ரூம்ஸ். east facing 12 and west facing 12.
சந்துரு: அதே தான் சார். east facing roomsla lift பக்கத்துலயே இருக்கிறது 301, அதே rowல lastஆ cornerல இருக்குறது 312. 312கு oppositeல 313. அப்டியே ரூம் numbers reverseல increase ஆகி, 301க்கு oppositeல 324.
விஜயன்: ஹ்ம்ம்
சந்துரு: so, நாலு டீமும் நாலு cornerல இருந்து search start பண்ணுவோம். to be exact, 301, 312, 313, 324. நாலு டீமும், மிடில் ரூம நோக்கி ஒவ்வொரு ரூமா search பண்ணிட்டு வருவோம். so, முதல் team 301-306, ரெண்டாவது டீம் 312-307, மூணாவது டீம் 313-318, 4th team 324-319.
விஜயன்: alright!! நல்ல strategyயா! அப்டியே அவங்கள கொஞ்சம் கொஞ்சமா சுத்தி வளச்சிட்டே narrrow down பண்ற மாதிரி! great! சரி, இவங்களுக்கென்ன வேல?
திலீப் பதிலளித்தார்.
திலீப்: யாருக்கும் சந்தேகம் வராம உள்ள enter ஆகுறதுக்காக தான் சார். அப்புறம் உள்ள இருக்க பொம்பளைய கவனிக்குறதுக்கும்.
விஜயன் உள்ளே இருக்கும் நால்வரையும் பார்த்துவிட்டு,
விஜயன்: இல்ல, இவங்களுக்கு வேற ஒரு வேலயும் இருக்கு!
விஜயனுக்கு பக்கத்தில் இருக்கும் கல்பனா கேட்டாள்.
கல்பனா: என்ன வேல சார்?
விஜயன்: இந்த operation sneaky. யாருக்கும் சந்தேகம் வராம சீக்கிரமா முடிச்சிட்டு போகணும். ஆம்பள யாரவது கதவை தட்டி, ரூம் நம்பர் மாத்தி தட்டிட்டேன்னு சொன்னா, doubt வரும். so, லேடீஸ் will be knocking the door.
கல்பனா சற்றே பதற்றத்துடன்,
கல்பனா: ஐயோ சார், கதவ தொறந்த உடனே துப்பாக்கி வச்சு சுட்டுட்டாங்கனா?
அனைவரும் சிரிக்க,
விஜயன்: அதெல்லாம் ஒன்னும் ஆகாது. பெரிய ஹோட்டல். உள்ள எல்லாத்தயும் செக் பண்ணிட்டு தான் அனுப்புவாங்க. so, அவங்க weapons வச்சிருக்க chances are negligible.
கல்பனா நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளுடன் சேர்ந்து பின்னே இருந்தவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
விஜயன்: அப்டியே weapons வச்சிருந்து, உன்ன சுட்டாலும் departmentகாக உயிர் தியாகம் பண்ண மாட்டியா?
பெரு மூச்சு விட்ட அனைவரும், மீண்டும் பதறி விட்டனர். என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.
அவர்களின் முகத்தை பார்த்த விஜயன், சிரித்துவிட்டு,
விஜயன்: பயப்படாதீங்க தெய்வங்களே! அதான் நாங்க இருக்கோம்ல? என்ன ஆகிட போகுது. ஒன்னும் ஆகாது. so, guys கதவு பக்கத்துல, உள்ள இருக்கவங்களுக்கு தெரியாத மாதிரி சுவத்தோட ஒட்டி நின்னுட்டு இருப்போம். ladies door knock பண்ணுவீங்க. உள்ள இருந்து வந்து கதவ தொறக்குறவங்க, நாம தேடுற ஆளா இருந்தா, நீங்க எங்களுக்கு சிக்னல் குடுப்பீங்க.
பின்னே உள்ள சீட்டின் நடுவில் அமர்ந்திருக்கும் சுந்தரி பேசினாள்.
சுந்தரி: என்ன மாதிரி சிக்னல் சார்?
விஜயன்: எதிர்ல இருக்கவங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி ஏதாவது....
அனைவரும் யோசிக்க,
திலீப்: சார், throat adjustment மாதிரி.
விஜயன்: நல்ல ஐடியா. ஆனா திடீர்னு அவங்க வேற ஏதாவது ரூம்க்கு முன்னாடி உண்மையிலேயே throat adjust பண்ணி ஏடாகூடம் ஆகிட கூடாது. so, ஒரு சின்ன pattern வச்சிப்போம்.
கல்பனா: என்ன சார்?
விஜயன்: generalaa right handஅ மூடி வாய் மேல வச்சு தான், அட்ஜஸ்ட் பண்ணுவோம். இதுல left hand use பண்ணுங்க. அது மட்டும் இல்ல. வழக்கமா ரெண்டு தடவ "ஹ்ம்ம்" னு sound வரும். இதுல 3 தடவ பண்ணுங்க. லைக்,
தன் இடது கையை மூடி, வாயின் மீது வைத்து, "ஹ்ம்ம்...ஹ்ம்ம்..ஹ்ம்ம்"
விஜயன்: புரிஞ்சுதா?
உள்ளே அமர்ந்திருந்த பெண்கள் அனைவரும், "புரிஞ்சுது சார்." என்று சொல்ல,
விஜயன்: எங்க பண்ணி காட்டுங்க?
அனைவரும் செய்து காட்ட,
விஜயன்: அதே தான். mostly தொறக்குறது ஆம்பளையா தான் இருக்கும். நாங்க அவன gunpointல நிக்க வைப்போம். லேடீஸ் உள்ள போய் அங்க இருக்க பொம்பளைய கவனிப்பீங்க. யார் கிட்ட மாட்டுறாங்களோ அவங்க மத்தவங்களுக்கு சிக்னல் குடுக்க, மத்தவங்களாம் ஓடி வருவோம். ஹோட்டல்க்குள்ள handcuffலாம் போட்டு கூட்டிட்டு வந்தா, கண்டிப்பா மத்தவங்களுக்கு தெரிஞ்சிடும். so, ஆம்பளய ரெண்டு சைடும் ரெண்டு பேரும் cover பண்ண மாதிரி, அவன் கைய pant பாக்கெட்ல விட வச்சு, ஒருத்தர் அவன் தோள் மேல கை போட்டு சட்டைக்குள்ளயும், இன்னொருத்தர் பின்னாடி கை வச்ச மாதிரி அவன் புட்டத்த aim பண்ணியும் gun வெளிய தெரியாத மாதிரி வச்சு, casualலா 3 பேரும் ஒன்னா நடந்து ஹோட்டல்க்கு வெளிய வருவீங்க. அந்த பொம்பளைக்கும் அதே தான். ஒரு gun ஜாக்கெட்குள்ளேயும், இன்னொரு gun பின்னாடி புடவைக்குள்ளயும். ஆனா லேடீஸ் handle பண்ணுவீங்க. திலீப் and கார்த்திக் ஆம்பளைய கூட்டிட்டு வருவீங்க. கல்பனா and சுந்தரி நீங்க அந்த பொம்பளைய கூட்டிட்டு வருவீங்க. மீதி இருக்க 2 men and women, ஜோடி போட்ட மாதிரி ஒரு ஜோடி உங்களுக்கு பின்னாடியும், இன்னொரு ஜோடி உங்களுக்கு முன்னாடியும் வருவோம். என் ஜோடி முன்னாடி, சந்துரு ஜோடி பின்னாடி. department vehicle எங்க இருக்கு?
கார்த்திக்: பக்கத்துல தான் சார், 500m distancela. doubt வரக்கூடாதுன்னு அங்க நிறுத்தி வச்சிருக்கோம்.
விஜயன்: ஆல்ரைட். என் கார நான் ஹோட்டல் வரைக்கும் கொண்டு வந்து விடுறேன். ஹோட்டல் வெளியவே நிக்குற என் கார்ல இவங்கள உள்ள ஏத்தி விலங்க போடுவோம். இங்க கொண்டு வந்து நிறுத்தி, department vehicle வந்த உடனே, அதுல ஏத்தி அனுப்புறோம். அதான் பிளான்.
அனைவரும், "ஆல்ரைட் சார்" என்று சொல்ல,
விஜயன்: ஒரு வேல கதவ தொறக்குறது நாம தேடுற ஆளா இல்லனா, லேடீஸ் எவன் பேரையாவது சொல்லி, உள்ள இருக்காங்களான்னு கேளுங்க.
கல்பனா: யார் பேர சார் விசாரிக்கிறது?
விஜயன்: உன் புருஷன் பேரையே கேளு. யாருக்கு தெரியும், உள்ள இருந்தாலும் இருப்பான்.
கல்பனா: சாரி சார், தெரியாம கேட்டுட்டேன்.
விஜயன்: உள்ள இருக்கவங்க அப்டிலாம் யாரும் இல்லனு சொல்ல, மேல நிமிந்து பாத்து, தப்பான ரூம் கதவ தட்டிட்டேன்னு சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு, அங்க இருந்து பக்கத்து ரூம்க்கு நடையை கட்டுற மாதிரி ஒரு acting போடுங்க. அவங்க உள்ள போனப்புறம், இதையே அடுத்த ரூம்லயும் continue பண்ணுறோம்.
விஜயன்: 301-306 நான், 312-307 திலீப், 313-318 கார்த்தி, 324-319 சந்துரு. கல்பனா... நீ என் கூட இரு. மத்தவங்க அவங்களுக்கு புடிச்ச ஜோடி கூட சேருங்க.
அவர்கள் கதவை திறக்க, விஜயன் இடைமறித்து,
விஜயன்: இருங்க.. யாரும் எறங்காதீங்க.
என்று சொல்லி சிறிது நேரம் யோசித்தார்.
திலீப்: என்னாச்சு சார்?
அவருக்கு பதில் அளிக்காமல் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து,
விஜயன்: சந்துரு, இப்படி நாலு டீமும் outwards to inwards போனா, எப்போவுமே ரெண்டு teams oppositeல இருந்துட்டே இருக்கும்ல? ரெண்டு endlayum ரெண்டு pair of couple opposite ரூம்ஸ்ல இருக்கிறது கொஞ்சம் doubt create பண்ணலாம். அப்டி இருந்து opposite ரூம்ல ஒரு ஆம்பள சுவத்த ஒட்டி நின்னுட்டு பொம்பள கதவ தட்டுறத பாத்தா கண்டிப்பா சந்தேகம் வரும். so, we will change the strategy a little bit.
சந்துரு: என்ன change சார்?
விஜயன்: ரெண்டு pair of teamsம் outwards to inwards போறதுக்கு பதிலா, ஒரு pair of team ourwards to inwardsம், இன்னொரு pair inwards to outwardsம் search பண்ணட்டும். That way, ரெண்டு pair of teamsம் only once மட்டும் தான், எதிர் எதிர் ரூம்ல ஒரே நேரத்துல இருக்கும். அதுவும் எல்லா roomsயும் search பண்றதுக்கு எல்லா teamsகும் ஒரே நேரம் தான் ஆகும்னு assume பண்ணா மட்டும் தான். மத்தபடி, அதுக்கும் வாய்ப்பில்ல. கதவ தொறக்கறவங்க கண்டிப்பா முழு கதவ தொறக்க மாட்டாங்க. கொஞ்சம் தான் தொறப்பாங்க. so, opppsite ரூம்க்கு பக்கத்து ரூம்ஸ்ல நாம இருக்கிறது தெரிய வாய்ப்பு கம்மி. வேலையும் நாம நெனச்ச மாதிரி sneakyயாவே முடிச்சிடலாம். என்னையா சொல்றீங்க?
நின்று கொண்டிருந்த மூவரும், "great idea சார்" என,
சந்துரு: இதையே implement பண்ணிடுவோம் சார்.
விஜயன்: so, நானும் திலீப்பும் முதல்ல இருந்த பிளான் படியே 301 and 312 ல search start பண்ணி, towards the centre move பண்ணுவோம். and, கார்த்தி team will start at 318 and move towards 313 and சந்துரு will start at 319 and move towards 324. so, both the team will move outwards. எங்க pair of teams will search outwards to inwards, உங்க pair of teams, will search inwards to outwards. புரிஞ்சுதா?
அனைவரும் புரிந்தது என்று தலையாட்ட,
விஜயன்: மறுபடியும் சொல்றேன். உள்ள இருக்கவங்க கிட்ட weapons இருக்க வாய்ப்பு கம்மி. so, operation கண்டிப்பா sneaky தான். but, if needed dont hesitate to use your guns.
அனைவரும், "alright சார்" என்று சொல்ல,
விஜயன்: handcuffs, guns, bluetooth எல்லாம் எல்லாரும் வச்சிருக்கீங்கள?
அனைவரும், "yes,சார்!" என்று சொல்ல,
விஜயன்: சரி, கிளம்புவோம். எல்லா காரும் ஹோட்டல் முன்னாடி நிறுத்துனா சந்தேகம் வரும். so, ரெண்டு காரும் இங்கயே இருக்கட்டும். என் கார மட்டும் நான் எடுத்துட்டு வந்து ஹோட்டல்க்கு வெளிய நிறுத்துறேன்.
கல்பனா நீ என் கூட இரு. மத்த மூணு பேரும், அவங்களுக்கு புடிச்ச ஜோடி கூட போய் சேருங்க.
பின்னே இருந்த மூன்று பேரும், விஜயனின் நக்கல் பேச்சுக்கு பதில் கூற முடியாமல் சிரித்தபடி, இறங்கி அவர்களுக்கு பிடித்த ஜோடியுடன் சேர்ந்தனர்.
விஜயன்: எல்லாரும் ஒன்னா போக வேணாம்.கார்னெர்ல இருக்க திலீப் pair முதல்ல போங்க. அவங்களுக்கு அடுத்து கார்த்தி pair. next சந்துரு, கடைசியா நான்.ஒவ்வொரு pairkkum 75 seconds gap இருக்கட்டும். முதல் pair போன 5 நிமிஷம் கழிச்சு, கடைசி pairஆன நாங்க வருவோம்.மணி இப்போ 1:10 ஆகுது. இங்க இருந்து நடந்து போக 2-3 மினிட்ஸ் ஆகும். liftக்கு வெயிட் பண்றதையும் சேர்த்து 5 மினிட்ஸ்ல உங்க positionகு போயிடுவீங்க. முதல் டீம் 1:15க்குள்ள அங்க போகும். கடைசி டீம் 1:20குள்ள வந்துடும். சொன்ன எல்லாம் ஞாபகம் இருக்குல்ல? கொஞ்சம் சொதப்பி ஹோட்டல் பேருக்கு ஏதாவது ஆச்சுனாலும், எல்லாருக்கும் வேல போய்டும். so, கவனமா இருங்க.
அனைவரும், ஓகே சார் என்று சொல்ல,
விஜயன்: சரி, கிளம்புவோம். திலீப் team, move!!
திலீப்பின் அணி அங்கிருந்து நகர்ந்து 1:15 மணி அளவில் அறை எண் 312க்கு முன் வந்து சேர, அவர்கள் திட்டப்படி மற்ற இரு அணிகளும், சரியான நேரத்துக்கு வந்து அவர்கள் அறைக்கு முன் நிற்க, விஜயன் தன் காரை ஹோட்டலுக்கு முன் நிறுத்திவிட்டு உள்ளே வந்து, 1:20க்கு 30 வினாடிகள் இருக்கும்போது, அறை எண் 301ஐ அடைந்தார்.
அனைவரும், விஜயனை பார்த்தபடி இருக்க, விஜயன் தன் bluetooth headsetல்,
விஜயன்: Everyone ready?
அனைவரும் "yes sir" ,
விஜயன்:
3...2...1....START!
1:20 மணிக்கு, 301, 312, 318, 319 நான்கு அறைகளின் கதவுகளும் தட்டப்பட்டன.
************************************************************************************************************************
Guest users can share their thoughts here,
https://www.secretmessage.link/secret/67c3bff6405f7/
************************************************************************************************************************