Posts: 406
Threads: 0
Likes Received: 169 in 146 posts
Likes Given: 237
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 33
Threads: 2
Likes Received: 37 in 24 posts
Likes Given: 167
Joined: Feb 2024
Reputation:
0
சோழர் கால கதையை படிக்க சுவாரசியமாக இருக்கு
•
Posts: 182
Threads: 3
Likes Received: 131 in 105 posts
Likes Given: 27
Joined: Feb 2020
Reputation:
0
(13-10-2024, 07:36 PM)snegithan Wrote: பாகம் - 139
மன்னர் காலம்
படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு இளங்கோவை தூக்கி தோளில் வைத்து கொண்டாட,அருள்மொழியால் இளங்கோவை நெருங்க முடியவில்லை..வீரர்கள் யாரும் இல்லாவிட்டாலும் அவள் நாணத்தால் எப்படியும் அவனிடம் சென்று பேசி இருக்க போவது இல்லை. கண்களால் பேச போவதற்கு எத்தனை பேர் நடுவில் இருந்தால் என்ன..?இருவரும் மௌனமாக காதல் பாஷை பேசி கொண்டு இருக்க,தேவி என்று அழைக்கும் குரல் சங்காவிடம் இருந்து வந்தது..
"தேவி,நமக்கான வாகனம் வந்து விட்டது.வாருங்கள் அரண்மனை திரும்பலாம்" என்று சங்கா அழைக்க,அருள்மொழி அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஏக்கத்துடன் சென்றாள்.
அவள் ஏக்கத்தை இளங்கோவும் புரிந்து கொண்டான்.இதுவரை இளங்கோ ஒருமுறை கூட அருள்மொழியிடம் பேசியதே இல்லை.அவள் மேல் அவனுக்கும் காதல் தான்.செப்பு சிலை போல் இருக்கும் அவளை பார்த்து யாருக்கு தான் காதல் வராது.ஆனால் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் அவளை தவிர்த்து சென்று விடுவான்.காரணம் அவள் எட்டா உயரத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்தது.அருள்மொழியை வேங்கி இளவரசன் நரேந்திரனுக்கு திருமணம் செய்ய தான் ராஜேந்திர சோழனுக்கு விருப்பம் என்பது ஊரறிந்த விசயம்..அது இளங்கோவிற்கு மட்டும் தெரியாமல் இருக்காதா..!மேலும் இளங்கோ சிற்றரசரின் மகன்.ஆனால் நரேந்திரனோ வேங்கி நாடு என்னும் பேரரசின் இளவரசன்.அதை நினைத்து தன் நிலையை எண்ணி அவன் ஒதுங்கியே நின்றான்.இருவருக்கும் உள்ள காதலை அனு,மற்றும் லிகிதா கவனித்து விட்டனர்.தாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவர்கள் புரிந்து கொண்டனர்.
அன்னப்பறவை வடிவில் இருந்த பிரமாண்டமான படகு நீரில் மிதந்து வர,அதில் அரண்மனை பெண்டிர்கள் ஏறினர். கொஞ்சம் கொஞ்சமாக இளங்கோ பார்வையில் இருந்து படகு மறைந்து போனது.
அதே நேரத்தில் அங்கிருந்து சில மைல்கள் தொலைவில் இருந்த பள்ளிப்படை என்ற சுடுகாட்டில் மூன்று பேர் சந்தித்து உரையாடி கொண்டு இருந்தனர்..
"வா இடும்பன்காரி கொண்டு வந்த நற்செய்தி என்ன..?சாம்பவன் என்பவன் கேட்டான்..
இடும்பன்காரி சற்று தடிமனாக இருந்தான். "கோபத்தில் என் கண்கள் சிவக்கிறது சாம்பவா..இந்திரன் நம் வம்சத்திற்கு அளித்த மணிமுடியை எடுத்து அந்த ராஜேந்திர சோழன் அவன் மகனுக்கு முடிசூட்ட போகிறனாம்.."
சாம்பவன் அதிர்ந்து,"என்ன..! சோழர்களிடம் அந்த மணிமுடி கிடைக்கக்கூடாது என்பதற்காக தானே நாம் அதை இலங்கை மன்னனிடம் கொடுத்து வைத்து இருந்தோம்..அதையும் மீறி எப்படி அவர்களிடம் மணிமுடி கிடைத்தது.."
இடும்பன்காரி கோபம் குறையாமல் "எப்படியோ இலங்கையில் இருந்து போராடி கொண்டு வந்து விட்டார்கள் நம் எதிரிகள்..போதாக்குறைக்கு இலங்கையை வென்று சிங்கள மன்னன் மகிந்தனையும்,அவர் குடும்பத்தாரையும் கைது செய்து அழைத்து வந்து உள்ளார்கள்.அப்படி அழைத்து வரும் பொழுது மகிந்தனின் மகன் அவர்களிடம் இருந்து தப்பி விட்டான். சடாசரன் எங்கே..?இன்னும் வரவில்லையா..!என இடும்பன்காரி கேட்க,
"வரும்நேரம் தான் சாம்பவா..!ஆமாம் சிங்கள இளவரசன் தப்பித்து விட்டான் என்று சொன்னாயே..அவன் இப்போது எங்கே இருக்கிறான்.."என சாம்பவன் இடும்பன்காரியிடம் கேட்டான்.
"என்னோட கணிப்பு சரியாக இருந்தால் அவன் இந்நேரம் நம் சடாசரனை சந்தித்து இருக்க வேண்டும்..இளவரசனை அழைத்து கொண்டு எந்நேரமும் சடாசரன் இங்கே பிரவேசிக்க கூடும்.நாம் அவனை அதற்காக தானே அனுப்பினோம்.."என இடும்பன் காரி கூறினான்..
இடும்பன்காரி கருந்திருமனை பார்த்து,"நீ சொல் கருந்திருமா..!நீ கொண்டு வந்த சேதி என்ன?
"இடும்பா,நீ சொன்னது போல அரண்மனையை நோட்டம் விட்டேன்.அதில் எனக்கு முக்கிய ரகசிய செய்தி கிடைத்தது.சோழர்கள் நாராயணபுரி ஏரியை பாசனத்திற்காக ஒன்றும் கட்டவில்லை."
"பின் எதற்காக கட்டி உள்ளார்கள்..கருந்திருமா.."
"சாம்பவா..!திடீரென ஒருநாள் சோழ வீரர்கள் என்னிடம் வந்து உனக்கு படகு ஒட்ட தெரியுமா?என்று கேட்டார்கள்..நானும் தெரியும் என்று சொன்னேன்.அவர்கள் என்னை ஏரியின் நடுவில் உள்ள நிலா மண்டபம் அழைத்து செல்ல சொன்னார்கள்..நானும் படகில் அமர்ந்து காத்திருக்க, சோழ நாட்டு இளவரசி தன் பரிவாரங்களுடன் வந்து ஏறினாள். நான் அவர்களை நிலா மண்டபம் அழைத்து சென்று விட்ட பிறகு என்னை அங்கிருந்த வேறு படகில் இருந்து கரை திரும்ப சொன்னார்கள்..எனக்கு ஒரு சந்தேகம்..நிலா மண்டபத்தில் இருந்து திரும்ப கரைக்கு அழைத்து செல்ல வேண்டாமா..?என்று கேட்டேன்.ஆனால் அவர்கள் வேண்டாம் என மறுதலித்து விட்டார்கள்..இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது என படகை வேகமாக கரையை நோக்கி செலுத்தி விட்டு,மீண்டும் நிலா மண்டபத்தை நோக்கி உயிரை பணயம் வைத்து நீந்தியே வந்தேன்..அப்போ தான் எனக்கு அந்த ரகசியம் தெரிந்தது.."
"என்ன ரகசியம்..!"என இருவரும் ஆவலுடன் கேட்டனர்.
கருந்திருமன் அவர்களிடம்,"சாம்பவா..அந்த நிலா மண்டபத்தில் பரமசிவன்,பிரம்மனின் ஒரு தலையை கொய்வது போல சிலையை வடித்து உள்ளனர்.அந்த பரமசிவன் சூலாயுதத்தை ஒரு வீரன் பிரம்மனின் தலையை நோக்கி குத்த கீழே ஒரு ரகசிய வழி உண்டாகியது.அதில் உள்ளே இறங்கி நடந்து சோழ நாட்டு இளவரசி அரண்மனை சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.."
"என்னது ஏரிக்குள் ரகசிய வழியா..!இது எப்படி சாத்தியம்..!"இடும்பன்காரி கேட்க,
"நான் என் ரெண்டு கண்ணால் பார்த்தேன்..இடும்பா.. நான் சொல்வது முற்றிலும் உண்மை.."என கருந்திருமன் கூறினான்.
சாம்பவன் அவனிடம்,"அவன் சொல்வது உண்மையாக தான் இருக்கும் இடும்பா,ஆயிரம் வருடங்களுக்கு முன்பே காவிரியில் கல்லணை கட்டியவர்கள் சோழர்கள்.இதோ இப்போ கூட நம்மை பிரமிக்க வைக்கும் நிழலே தரையில் படாமல் பெரிய கோவிலை தஞ்சையில் கச்சிதமாக கட்டி உள்ளார்கள்..அவர்களிடம் சிறந்த கட்டிட கலை அறிவு உள்ளது..நாம் அரண்மனைக்குள் சென்று அவர்களை கொல்ல சிறந்த வழி ஒன்றை கண்டுபிடித்து கொண்டு வந்து உள்ளாய் கருந்திருமா..உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நாம் பட்டாபிஷேகம் செய்யும் முன்னிரவு அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்க வேண்டும்.."
"ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு சாம்பவா..அந்த ஏரியில் நாம் நீந்தி செல்ல முடியாது..நானே மரணத்தின் பிடியில் இருந்து மயிரிழையில் தப்பி வந்து உள்ளேன்.."
"நீ என்ன சொல்கிறாய் கருந்திருமா..சொல்வதை புரியும்படி சொல்."
"ஆம்..இடும்பா..!ஏரியில் முதலைகள் உள்ளன..!என் நீச்சலின் வேகம் உனக்கே தெரியும்.அவ்வளவு வேகத்தில் சென்றே ஒரு முதலை என்னை துரத்த ஆரம்பித்து விட்டது..அதன் வாயில் சிக்கும் நேரம் அங்கே இருந்த பாறையில் தாவி அமர்ந்து இரவு முழுக்க அங்கேயே கழித்தேன்.விடிந்த பிறகு மிகவும் கவனமாக நீந்தி வந்து கரை சேர்ந்தேன்.
"அப்போ அங்கே எப்படி போவது..!என்று இடும்பன் கேட்க,.
"இரவில் தான் அங்கு போக முடியும்.அதுவும் படகின் வழியே தான் அங்கே செல்ல முடியும்.."
அப்பொழுது காலடி சத்தம் கேட்க,உடனே மூன்று பேரும் தனித்தனியாக பிரிந்து சடசடவென அருகில் இருந்த மரங்களில் ஏறி,இலைகளுக்கு நடுவே தங்களை மறைத்து கொண்டனர்.
வந்திருந்த இருவரில் தங்களுக்கே உரிய சங்கேத மொழியில் கோட்டான் கூவுவது போல கூவிய உடன் மறைந்து இருந்த மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு கீழே குதித்தனர்.
"வா சடாசரா..!உன் வரவை தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தோம்.ஏன் இந்த தாமதம்"என்று கேட்ட இடும்பன்காரி பக்கத்தில் ராஜ உடையுடன் மிடுக்கொடு இருந்தவனை பார்த்த உடன் இலங்கை இளவரசன் என்று புரிந்து கொண்டான்..
சடாசரன் அவர்களிடம்,"எங்கு நோக்கிலும் நம் பகைவர்கள் நிறைந்து உள்ளனர் இடும்பா..அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சிங்கள இளவரசனை இங்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.."
இலங்கை இளவரசன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருக்க,அதை பார்த்த இடும்பன்"என்ன இளவரசே..!சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள்.."என்று கேட்டான்.
"இது என்ன இடம்"இலங்கை இளவரசன் கேட்க..
"இது நம் பகைவனின் பள்ளிப்படை வீடு.அதாவது சோழர்களுக்கும், பல்லவர்களுக்கும் போர் புரிந்த இடம்..இங்கு தான் நம் பகைவனின் படைவீரர்கள் புதைக்கப்பட்டு உள்ளனர்."
"இங்கே மனிதர்கள் யாரும் இல்லையா"இலங்கை இளவரசன் கேட்க
"இங்கு ஆந்தைகளும்,நரிகளையும் ,நம்மை தவிர வேறு யாரும் இங்கு வருவது இல்லை."
"ஓ பகைவனின் படைவீட்டில் இருந்தே பகைவனை அழிக்கும் திட்டமா.."என்று இலங்கை இளவரசன் சிரித்தான்.ஆனால் சிறிது நேரத்திலேயே அவன் முகம் வாடி போனது..
"ஏன் இளவரசே தங்கள் முகம் வாடி விட்டது.."
"எனக்கு இங்கே ஒரு எதிரி இருக்கிறான்.அவனை நான் அழிக்க வேண்டும்.."என அவன் கூறும் பொழுதே அவன் கண்கள் சிவந்தது.
"யார் அது இளவரசே..?"கருந்திருமன் கேட்டான்.
"கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான்."என சொல்லி கொண்டு இலங்கை இளவரசன் பற்களை நறநறவென கடித்தான்."ராஜ ராஜ சோழன் காலத்தில் கூட எங்களை சோழர்கள் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை.எங்கள் கோட்டையை கைபற்றி விடுவார்கள்.ஆனால் இலங்கையில் உள்ள எங்களுக்கு மட்டுமே பரிச்சயமான அடர்த்தியான காடுகளில் நாங்கள் மறைந்து இருந்து சரியான சமயம் பார்த்து மீண்டும் எங்கள் கோட்டையை கைப்பற்றுவது தான் வழக்கமா இருந்தது.ஆனால் இந்த இளங்கோ நாங்கள் காட்டில் மறைந்து இருந்த இடத்தையும் கண்டு பிடித்து வெறும் சில வீரர்களை மட்டுமே வைத்து எங்கள் பெரும்படையை அங்கே நிர்மூலமாக்கி விட்டான்.நாங்கள் காட்டில் மறைத்து வைத்து இருந்த உங்கள் மணிமுடியையும் கைப்பற்றி விட்டான்.அவனோடு நேருக்கு நேர் சண்டையிட்ட நான் அவனால் தோற்கடிக்கப்பட்டேன்.என்னை அவன் கொல்ல முயன்ற பொழுது என் தமக்கை ரோகிணி அவன் காலில் விழுந்து காப்பாற்றியது எனக்கு பெருத்த அவமானமாகி போய் விட்டது.அவனை நான் கொல்ல வேண்டும்.ஆனால் நேருக்கு நேர் அவனை போரிட்டு வெல்லும் சக்தி என்னிடம் கிடையாது.அவனை ஏதாவது குறுக்கு வழியில் தான் வெல்ல வேண்டும்."
"அதற்கான சந்தர்ப்பம் வந்து விட்டது இளவரசே..!பட்டாபிஷேகம் அன்று உள்ளிருந்தும் நாம் நம் வேட்டையை தொடுக்கும் அதே நேரம்,வெளியில் இருந்து ராஜேந்திர சோழனிடம் தோற்ற கங்க நாட்டு அரசனும்,ராஜகூட அரசர்களும் சேர்ந்து வெளியில் இருந்து போர் தொடுக்க போகிறார்கள்..இம்முறை நம் பகைவர்களை வேரோடு அழிக்க போகிறோம்.."என இடும்பன்காரி கடகடவென சிரித்தான்.அவன் போட்ட சத்தத்தை கேட்டு அமைதியாக இருந்த அந்த இடத்தையே நடுநடுங்க வைத்தது.நரிகள் சிதறி ஓடின.பறவைகள் பயந்து பறக்கும் சத்தம் கேட்டது.
"இளவரசே..!நீங்கள் தப்பி வரும் பொழுது உங்கள் குடும்பத்தாரையும் அழைத்து வந்து இருக்கலாமே.."
"இல்லை,அவர்கள் சோழ நாட்டு அரண்மனையில் இருப்பது தான் உச்சிதம்..எதிரிகளின் பலவீனங்களை அறிந்து கொள்ள அவர்கள் அருகில் இருப்பது தான் சரியானது..
மேலும் என் தமக்கை ரோஹிணி அங்கே இளவரசன் இளங்கோவை காதல் வலையில் வீழ்த்த காத்து இருக்கிறாள்.
இடும்பன்காரி நகைத்தான்."ஒரு இளவரசனை மயக்கும் அளவிற்கு உங்கள் தமக்கை அவ்வளவு பெரிய அழகியோ...!என இடும்பன் கேட்க,
"ஆமாம்"என சிங்கள இளவரசனான ரோஹன் வாளின் உறையில் சுருட்டி வைக்கப்பட்டு இருந்த ஓவியத்தை எடுத்தான்.அதை பார்த்த இடும்பன் கண்கள் அகல விரிந்தன..
"ஆகா..!என்ன ஒரு பேரழகி...இவளை அணு அணுவாக ரசித்து ருசிக்க வேண்டுமே..என இடும்பன்காரியின் கருத்த தோள்கள் துடித்தது.
Views இப்போ bad என்ற நிலையில் Worst என்ற நிலைக்கு சென்று கொண்டு இருக்கு.என்ன காரணம் என்று புரியல.இன்னும் கொஞ்சம் views குறைந்தால் அடுத்து zero தான்.பிறகு எழுதுவதன் அர்த்தமே இல்ல.
தொடரும்
NANBA DONT THINK LIKE THAT PLEASE. VIEWS WILL COME DEFINIETLY. DONT STOP NANBA PLEASE.
Posts: 182
Threads: 3
Likes Received: 131 in 105 posts
Likes Given: 27
Joined: Feb 2020
Reputation:
0
Posts: 471
Threads: 0
Likes Received: 228 in 195 posts
Likes Given: 298
Joined: Dec 2019
Reputation:
4
•
Posts: 112
Threads: 0
Likes Received: 21 in 19 posts
Likes Given: 28
Joined: Oct 2019
Reputation:
0
You are super writer for sure.
•
Posts: 143
Threads: 0
Likes Received: 50 in 45 posts
Likes Given: 60
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 544
Threads: 0
Likes Received: 231 in 199 posts
Likes Given: 337
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 2,622
Threads: 3
Likes Received: 4,132 in 1,261 posts
Likes Given: 2,162
Joined: Dec 2022
Reputation:
125
(13-10-2024, 09:04 PM)rkasso Wrote: மிக நல்ல பாகம்
நன்றி நண்பா
(14-10-2024, 01:32 AM)Rahul1984 Wrote: அருமை..
நன்றி நண்பா
(14-10-2024, 06:15 AM)omprakash_71 Wrote: சோழர்களின் வீரத்தையும் கட்டிட கலைகளையும் மிகவும் அழகாக எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
நன்றி நண்பா..
(14-10-2024, 06:48 AM)Karmayogee Wrote: Great going
Thank you bro
(14-10-2024, 04:58 PM)Priya99 Wrote: சோழர் கால கதையை படிக்க சுவாரசியமாக இருக்கு
மிக்க நன்றி
(14-10-2024, 10:07 PM)Johnnythedevil Wrote: Super update
நன்றி நண்பரே
(16-10-2024, 05:00 AM)Vettaiyyan Wrote: You are super writer for sure.
You made my day bro
(16-10-2024, 07:09 AM)Mookuthee Wrote: Awesome
Thank you very much.
(16-10-2024, 12:26 PM)sexycharan Wrote: Superbbb updatessss
Thank you
•
Posts: 2,622
Threads: 3
Likes Received: 4,132 in 1,261 posts
Likes Given: 2,162
Joined: Dec 2022
Reputation:
125
(14-10-2024, 06:27 PM)rameshsurya84 Wrote: NANBA DONT THINK LIKE THAT PLEASE. VIEWS WILL COME DEFINIETLY. DONT STOP NANBA PLEASE.
முன்பு வந்த views இப்போ வருவது இல்லை நண்பா..கொஞ்ச கொஞ்சமா குறைந்து கொண்டே வருது
•
Posts: 2,622
Threads: 3
Likes Received: 4,132 in 1,261 posts
Likes Given: 2,162
Joined: Dec 2022
Reputation:
125
16-10-2024, 05:03 PM
(This post was last modified: 16-10-2024, 10:05 PM by snegithan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 140
மன்னர் காலம்
ராஜேந்திர சோழன் அரண்மனைக்குள் சிங்கள அரசன்,மற்றும் அவன் மனைவி இளவரசி ரோஹிணி அழைத்து வரப்பட்டனர்.
சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த ராஜேந்திர சோழன் சிங்கள மன்னனுக்கும் உரிய சிம்மாசனம் கொடுத்து அமர செய்தான்.அவனை நோக்கி,"சிங்கள அரசே..உங்களுக்கும் எங்களுக்கும் பழைய பகை விரோதம் இல்லை.ஒரு தமிழ் மன்னனின் மணிமுடி தங்களிடம் சிறைப்பட்டுள்ளதே..!அதை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.அதற்காக தான் நாங்கள் உங்களிடம் மூன்று தலைமுறையாக யுத்தம் செய்தோம்.எங்களுக்கு தேவையானது கிடைத்தாகி விட்டது.இப்பொழுது உங்கள் நிலப்பரப்பை நாங்கள் ஒப்படைக்க வேண்டிய தருணம் இது"என ராஜேந்திர சோழன் வாய்மொழி வார்த்தைகளை கேட்ட உடன் சிங்கள மன்னன் கண்கள் ஒளிர்ந்தது.
"ஆனால்..!"என ராஜேந்திர சோழன் சற்று இடைவெளி விட்டார்.
"உங்களிடம் யுத்தம் செய்ததின் விளைவு எங்களுக்கு பெருமளவு உயிர்சேதம்,மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது.அதை சீர்செய்ய வேண்டும் அல்லவா...அதனால் உங்கள் நிலப்பரப்பை சில காலம் எம் தளபதிகள் ஆண்டு மக்களிடம் வரி வசூலித்து வரட்டும்.நேரம் வந்த உடன் உங்கள் அரசை நான் உங்களிடமே ஒப்படைக்கிறேன்.அதுவரை தாங்கள் என் விருந்தினர் மாளிகையை அலங்கரியுங்கள்"என்று சோழன் சொல்ல சிங்கள மன்னன் முகம் வாடி போனது.
"ரோஹிணிக்கு இதை கேட்டு ஆச்சரியம்.வழக்கமாக எதிரி நாட்டு மன்னன் சிறைபட்டால் ஒன்று கொன்று விடுவார்கள்.இல்லையெனில் பாதாள சிறையில் தள்ளி விடுவார்கள்.இதென்ன ஆச்சரியம்..!விருந்தினர் போல உபசரிக்கிறார்களே..!என திடுக்கிட்டாள்..
ராஜேந்திர சோழன் தன் உதவியாளரை அழைத்து,"தாங்கள் சென்று அருள்மொழியை அழைத்து வாருங்கள் என்று சொல்ல அங்கிருந்து அவர் அகன்றார்.
சில நொடிகளிலேயே அருள்மொழி சபையில் பிரவேசிக்க,ராஜேந்திர சோழன் அவளிடம்,"மகளே,இவர்கள் நம் விருந்தினர்.இவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்,அது உன்னுடைய பொறுப்பு,விருந்தினர் மாளிகை அழைத்து செல்..என சொல்ல அருள்மொழி அவர்கள் முன்னே வந்தாள்..
ஒரே நேரத்தில் இரு பவுர்ணமி நிலவுகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன.அருள்மொழியின் தெய்வீக அழகை பார்த்து ரோஹிணி ஒரு கணம் மலைத்தாள்.ரோஹிணி மனதுக்குள்,நான் தான் உலகத்திலேயே மிகவும் அழகானவள் என்று இறுமாந்து இருந்தேன்..இவள் அழகில் என்னுடனே போட்டி போடும் அளவுக்கு அல்லவா இருக்கிறாள் என உள்ளுக்குள் பேசி கொண்டாள்.
அருள்மொழி அவளிடம்,"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.வாருங்கள் மாளிகை நோக்கி செல்லலாம்.."என்று அழைத்து சென்றாள்.
விருந்தினர் மாளிகையில்,அருள்மொழி பணியாட்களிடம் சரியாக வேலை வாங்கிய விதம் அவளின் திறமை பளிச்சிட்டது..இதை எல்லாம் ரோஹிணி உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தாள்.விருந்தினர் மாளிகை சுத்தம் செய்யப்பட்டு,வண்ணமயமான திரைச்சீலைகள் மாற்றப்பட்டு,நறுமண திரவியங்கள் தூவப்பட்டு,
சில மணித்துளிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ப மாளிகை தயார் ஆகி விட்டது..ஒரு மாபெரும் பேரரசின் இளவரசி என்ற தலைக்கனம் கொஞ்சம் கூட இல்லாமல் பணியாட்களிடம் சகஜமாக பழகி என்ன அழகாக அவர்களிடம் வேலை வாங்கி விட்டாள்..கொஞ்ச நேரத்தில் இந்த விருந்தினர் மாளிகையே இவள் சொர்க்கலோகம் போல் அல்லவா ஆக்கி விட்டாள் என்று ரோஹிணி வியந்தாள்.
ஒரு குறிப்பிட்ட பணியாளை ரோஹினியிடம் அருள்மொழி காட்டி," இவரிடம் உங்களுக்கு என்ன தேவையோ கூறுங்கள்.அவர் உடனே செய்து தருவார். நான் அவ்வப்போது இங்கே வந்து சரிபார்த்து கொள்கிறேன்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் நவராத்திரி விழா விசேஷமாக நடைபெறும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க,நீங்கள் காண பிரத்யேகமாக தங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன்.." என சொன்னாள்.
"ம்...சரி "என்று ரோஹிணி கூற அருள்மொழி விடைபெற்றாள்.
உடனே ரோஹிணி,"ஒரு நிமிஷம் நில்லுங்க.."என்றாள்.
அருள்மொழி திரும்பி,"ம்..சொல்லுங்க...!" என கேட்க,
ரோஹிணி அவளிடம்,"பட்டாபிஷேகம் முடிந்த உடன் உங்களுக்கும் வேங்கி நாட்டு இளவரசன் நரேந்திரனுக்கும் திருமணம் என்று பேசி கொள்கிறார்களே..!..?என கேட்டாள்..
இந்த கேள்வி கேட்டதும் அருள்மொழி முகம் மாறியதை ரோஹிணி கண்டுகொண்டாள்."மன்னிக்கவும்..இது என்னோட தனிப்பட்ட விசயம்..இதை தாங்கள் கேள்வியாக கேட்பது நன்றாக இருக்காது.."என நாசூக்காக பதில் அளித்து விட்டு அருள்மொழி சென்று விட ரோஹிணி தவித்தாள்..
"ஆகா..இவளை போன்ற பேரழகி ஒருத்தி இருப்பதால் தான் இலங்கையில் என்னை இளங்கோ ஏறேடுத்தும் பார்க்கவில்லையோ..!இவள் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று புரியவில்லையே..இவளுக்கும்,நரேந்திரனுக்கும் மணம் முடிந்து விட்டால் என் பிரச்சினை தீர்ந்து விட்டது என நினைத்தேனே..!இளங்கோவை வழிக்கு கொண்டு வர தாமே தான் களத்தில் இறங்க வேண்டும்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் விசேஷம் என்று அருள்மொழி சொன்னாளே..ஒருவேளை அங்கு இளங்கோ வருவானா..கண்டிப்பா வரக்கூடும்..கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விடக்கூடாது.."என மனதில் நினைத்து கொண்டாள்..
அடுத்த நாள் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுக்க அமர்க்களப்பட்டது.அதுவும் பட்டாபிஷேகம் ஒரு நாளுக்கு முன்பாக வந்த நவராத்திரி கொண்டாட்டம் இன்னும் விமர்சியாக மக்கள் கொண்டாடி கொண்டு இருந்தார்கள்.
தளிக்குலத்தார் ஆலயம் கோட்டையின் உள்ளே இருப்பதால்,(வேலூர் கோட்டையில் உள்ளே ஜலகண்டேஸ்வரர் ஆலயம் போல)அரசினர் குடும்பம் வந்து கும்பிட தனி வழி இருந்தது..மேலும் அரச குடும்பம் வந்து செல்லும் கோவில் என்பதால் அலங்காரங்கள், பூ மற்றும் ஒளி வேலைப்பாடுகள் மிக பிரமாதமாக இருந்தது.
மேலும் ஆடல் நிகழ்ச்சிகளை கண்டு களிக்க ஆடல் மண்டபமும் மிக பெரிதாக இருந்தது. ஒவ்வொரு ஊரில் உள்ள தலைமை கோவில்களில் மேடை போல் அமைத்து இருப்பார்கள்.அங்கு எப்பொழுதும் சொற்பொழிவு ,ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும்.அதற்கு தான் அதை அமைப்பது.அந்த மேடை முன்பு மக்கள் அமர விசாலமான இடம் இருக்கும்.அதில் மக்கள் அமர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள்.அந்த மேடையில் தான் நவராத்திரிக்கான கொலு அமைத்து இருந்தார்கள்.
இளங்கோவை காணும் ஆவலுடன் ரோஹிணி சென்றாள்.ஆனால் அங்கே இளங்கோ இன்னும் வரவில்லை.அரச குடும்பத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அவளுக்கும் கிடைத்தது.சற்று நேரத்தில் ராஜேந்திர சோழன் தன் அரசி மற்றும் மகள் உட்பட அவர்களுக்கான பிரத்யேகமான வழியில் வந்து முதலில் இறைவனை வழிபட்டனர்.
ரோஹிணியை பார்த்த அருள்மொழி,"எங்கே உங்கள் பெற்றோர்கள் வரவில்லையா" என கேட்டாள்.
"இல்லை..
அவர்கள் வரவில்லை.நான் மட்டும் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க வந்தேன்.."
ராஜேந்திர சோழன் தன் மகளிடம்,அவளுக்கே உரிய நாட்டிய திறமையை அரங்கேற்ற சொன்னார்.
அங்கே நரேந்திரனும் வந்து இருந்ததால்,"இப்போ வேண்டாமே" என அவள் மறுதலிக்க,இளங்கோ ஆலயத்தின் உள்ளே நுழைந்தான்.மக்கள் அவனை வரவேற்கும் சத்தம் கேட்டது.
ரோஹிணி அதை கவனித்து,இளங்கோவை கவர மேடை ஏறி தன் நாட்டியத்தை ஆட தொடங்கினாள்.அவளுக்கு தெரிந்த அனைத்து கலைகளையும் செய்து காட்டினாள்.மக்கள் அனைவரும் மெய்மறந்து அவள் நாட்டியத்திற்கு கை தட்டினர்.
ஆட்டம் முடிந்த பிறகு ராஜேந்திர சோழனும் பாராட்ட,ரோஹிணி சற்று திமிருடன்,"நான் ஆடிய ஆட்டத்தை போல இதே மேடையில் ஆட இந்த சோழ நாட்டில் யாரும் இருக்கிறார்களா.."என கேட்டாள்.
ஆனால் எல்லோரும் அமைதியாக இருக்க ரோஹிணி சிரிப்புடன்,"ஆயகலைகள் அறுபத்து நான்கு,அதில் சிறந்த நாடு சோழ நாடு என்று கேள்விபட்டு இருக்கிறேன்.ஆனால் என்னோட இந்த ஒரு கலைக்கே சோழ நாட்டினால் பதில் சொல்ல முடியவில்லையே.ஆடல் அரசன் ஈசனின் தலைமை தலம் சிதம்பரம் இருக்கும் சோழ நாட்டில் என் நாட்டியத்திற்கு பதில் சொல்லும் ஒருவர் கூட இல்லையா..கேவலம்..மிக கேவலம்"என்று இகழ்ந்து பேச,
ராஜேந்திர சோழன் உடனே"அவசரப்பட வேண்டாம் இளவரசி,உன் நாட்டியத்திற்கு என் மகள் அருள்மொழி மறுமொழி அளிப்பாள்"என்று அவர் சொன்ன உடன் அருள்மொழி,இளங்கோவை பார்க்க,அவன் பார்வையால் அனுமதி கொடுத்தான்.
அடுத்த நொடியே அருள்மொழி மேடை ஏறினாள்.திருவெம்பாவையை மனதில் நினைத்து கொண்டாள்.ஏனெனில் திருவெம்பாவை இறைவனை காதலனாகவும்,தன்னை காதலியாகவும் மாணிக்கவாசகர் நினைத்து கொண்டு பாடியது.அந்த வரிகள் மனதில் ஓட,தகுந்த தாளங்கள் வாசிக்க அதற்கேற்ப நளின அசைவுகளை அருள்மொழி ஆட ,மக்களுக்கு ரெட்டிப்பு சந்தோசம்.ரோஹிணியின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் அதில் தான் என்ற திமிர் வெளிப்பட்டது.ஆனால் அருள்மொழியின் ஆட்டத்தில் ஒரு நளினம் மற்றும் உயிர்த்தன்மை வெளிப்பட்டது..காரணம் அவள் நாயகனாக மனதில் இளங்கோவை வைத்து கொண்டு ஆடியதால் அந்த காதலின் தன்மை நன்றாகவே தெரிந்தது.
எல்லோருக்கும் சந்தேகமே இன்றி அருள்மொழி ஆட்டம் தான் சிறந்தது என கூற தொடங்கினர்...அருள்மொழி கண்கள் அடிக்கடி இளங்கோ பக்கம் சென்றதை ரோகிணி கண்டு பிடித்து விட்டாள்."ஆகா..!எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடக்கிறதே..!என அவள் மனம் சஞ்சலபட்டது.
ராஜேந்திர சோழன் தலைகுனிந்து அமர்ந்து இருந்த ரோகிணியை பார்த்து,"உனக்கு பதில்மொழி கிடைத்து இருக்கும் என நம்புகிறேன் இளவரசி..! சோழ நாட்டில் கலைகளுக்கு பஞ்சமில்லை.அதே சமயத்தில் நாங்கள் வேற்று நாட்டு கலைஞரையும் மதிக்க தவறுவது இல்லை.
உங்கள் நடன திறமையும் அபாரம்.ஈடு இணையில்லாதது.ஈசன் உங்களுக்கு அருமையான நாட்டிய கலையை அளித்து உள்ளான்."என்று ரோஹிணியையும் உயர்த்தி பேசினார்.
ஆட்டம் முடிந்த உடன்,இளங்கோ கோவிலின் பின்புறம் சென்றதை பார்த்த ரோஹிணி,உடனே அவனை தன் வசப்படுத்த வேண்டும் என பின்தொடர்ந்து,"ம்ஹீம்...!என்று குரலை செருமி கொண்டு அழைக்க,இளங்கோ திரும்பினான்..
"என்ன தேவி..!இங்கே தனியா வந்து உள்ளீர்கள்..தங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா..இந்த கோவிலை சுற்றி பார்க்க வேண்டுமா.."என கேட்டான்..
"நான் தங்களிடம் சற்று பேச வேண்டுமே..கொஞ்சம் தனிமையில்.."என்று அவள் கூற..,
"சரி வாருங்கள்.."பக்கத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே அழைத்து சென்றான்.
"இப்பொழுது சொல்லுங்கள்..!என்ன விசயம்..உங்கள் தம்பி எங்கள் படையினரிடம் இருந்து தப்பி ஒடி விட்டான்.அவரை கண்டுபிடித்து தரவேண்டும்,அதுதானே தாங்கள் கேட்க வந்தது.."என கேட்டான்.
ரோஹிணி உடனே "இல்லை..உங்கள் வீரதீர சாகசத்தை என் கோட்டையில் இருந்து பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன் நான்.."என்று சொல்லி அவன் முகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று உற்று நோக்கினாள்.
இளங்கோ அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான்.
ரோஹிணி தன் பேச்சை தொடர்ந்தாள்."உண்மையில் உங்கள் ஒருவர் வீரத்தினால் தான் நாங்கள் வீழ்ந்தோம்.நீங்கள் மட்டும் எங்கள் பக்கம் இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் தான் வென்று இருப்போம்..என் அழகில் மயங்கி
என் காலடியில் பள்ளி கொள்ள உலகத்தில் உள்ள ராஜகுமாரர்கள் ஒவ்வொருவரும் ஏங்கி தவிக்கின்றனர்.ஆனால் ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என நான் கற்பனை செய்து வைத்து இருந்தேனோ அப்படியே நிஜத்தில் தாங்கள் உள்ளீர்கள்.இந்த தங்கப்பாவையின் அங்கங்கள் யாவும் உங்களுக்கு சொந்தம்.அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னை மணம் முடித்து கொள்ள சம்மதம் என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதும்.ஆறுதல் பரிசாக இலங்கை மணிமுடியும் தங்களுக்கு கிடைக்கும்."
"அப்போ உங்கள் தம்பி..!இளங்கோ கேட்க,
"அவன் என் பேச்சை தட்டாமல் கேட்கும் பொம்மை போன்றவன்.. இலங்கை அரசின் சக்கரவர்த்தியின் மணிமுடி மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தின் பேரழகியே உங்களை நாடி வந்து உள்ளாள்.இதற்கு தேவை ஒரேயொரு வார்த்தை சம்மதம் தான்..."என ரோஹிணி கூற இளங்கோ கலகலவென சிரித்தான்..
"மன்னிக்கவும் தேவி..!நீங்கள் அழகில் சிறந்தவர் மறுப்பதற்கு இல்லை..ஆனால் உங்களை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை.
நான் இங்கே கொடும்பாளூர் என்ற ஊரின் சிற்றரசன் அவ்வளவே..!"என்று இளங்கோ புறப்பட..
"நில்லுங்கள் இளவரசே..."என ரோஹிணி கத்த,அந்த குரல் அவ்வழியே சென்ற அருள்மொழியை இவர்களை நோக்கி வரவழைத்தது.
"என்னுடைய காலடியில் ஒரு இடம் கிடைக்குமா என ஏங்கும் பல நாட்டு ராஜ குமாரர்கள் உள்ளனர்.ஆனால் என்னை முதன்முதலில் நிராகரித்தது நீங்கள் தான் இளவரசே.இலங்கை மணிமுடியை விட்டு தள்ளுங்கள்.ஆனால் இந்த பொன்னிற மேனியின் விரலை மட்டுமாவது தொட முடியுமா என ஏங்கி தவிக்கும் பல ஆண் மகன்களை நான் கண்டுள்ளேன்..ஆனால் நீங்கள் என்னை உதாசீனப்படுத்துவது எனக்கு மிகுந்த கோபத்தை தூண்டுகிறது.நீங்கள் என்னை நிராகரிக்க வேறொரு காரணம் உள்ளது.அதை தாங்கள் இங்கே சொல்லியே ஆக வேண்டும்."
இளங்கோ திரும்பி அவளை பார்த்து,"தேவி,நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்..அவளை தவிர வேறு யாரையும் என் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது..போதுமா.."
"யார் அந்த அருள்மொழியா..!என ரோஹிணி கேட்க,
இளங்கோ அதிர்ச்சி அடைந்தாலும்,"ஆமாம்"என்றான்
இந்த வார்த்தைகளை கேட்ட அருள்மொழியின் காதில் தேன் வந்து பாய்ந்தது.கால்கள் தரையில் படவில்லை.
ரோஹிணி வெறுப்புடன்,"அவள் தான் வேங்கி நாட்டு இளவரசனுடன் மணம் புரிய போகிறாளே..",
"இங்கே பாருங்கள் தேவி,உங்களை ஏற்று கொள்ளாதற்கான காரணத்தை கேட்டீர்கள்..நான் சொல்லி விட்டேன்..இதற்கு மேல் இந்த விசயத்தை பேசுவது முறை ஆகாது.."என விறுவிறுவென திரும்பி நடக்க,
ரோஹிணி கத்தினாள்."என்னை உதாசீனம் செய்ததற்காக நீ மிகவும் வருத்தபடுவாய்"என அவள் கத்தினாள்.
எதிரில் அவன் தோழன் வீரமல்லன் வந்தான்..
"என்ன நண்பா..!என்ன விசயம் சிங்கள இளவரசியின் முகம் சிவந்து காணப்படுகிறது.."வீரமல்லன் கேட்க,
'ஒன்றும் இல்லை நண்பா..காதலை அவள் சொன்னாள். நான் மறுதலித்தேன்.."
"அடப்பாவி..அவள் நடமாடும் பூலோக சொர்க்கமடா.. அவளையா வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாய்.. உலகத்திலேயே உன்னை போன்ற மூடன் யாரும் பார்க்க முடியாது."
"சரி அப்படியே இருக்கட்டும் போலாமா...."என்றான் இளங்கோ.
"நண்பா..நீ தான் யாரையும் காதலிக்கவில்லையே..அவளை ஏற்று கொள்வதில் உனக்கு என்ன தயக்கம்.இந்த வாய்ப்பு யாருக்குடா கிடைக்கும்.."
"இருக்கட்டும் வீரமல்லா..என் மனதில் வேறொரு நங்கை இருக்கிறார்."
"யாருடா..அந்த அதிர்ஷ்டசாலி..."வீரமல்லன் கேட்க
"அது தான் சொன்னேனே..!நங்கை என்று"
"அடேய் இளங்கோ..!பெண்கள் எல்லோரையுமே நங்கை என்று அழைப்பது தானே வழக்கம்..குறிப்பிட்டு எந்த பெண் என்று சொல்லடா என் உயிர் நண்பனே.."
"என் முட்டாள் நண்பனே..!அவள் பெயரே நங்கை தானடா..செவ்விதழ் தேன் மொழியாள்.செந்தாமரை, செந்தேன் மழை, சிற்றிடை உடையாள்.ரோஹிணி அழகில் கண்ணை கூசும் காட்டுத்தீ என்றால்,அவள் அழகில் அகல் விளக்கு போன்று கண்ணுக்கு இனிமையாக சுடர்விட்டு எரிபவள்.அவள் எனக்கு எட்டாக்கனி என்று தெரிந்தும் அவள் காண்பித்த ஒரு கடைக்கண் பார்வை போதும் என் ஜென்மம் முழுதும் வாழ "என்ற இளங்கோ சொன்னான்.
"நீ சொல்வது நம் அரசரின் புதல்வி அருள்மொழி நங்கையா.."என வீரமல்லன் கேட்டான்.
அப்பொழுது அருள்மொழியின் தோழி ஓடிவந்து இளங்கோவிடம்,"தேவி உங்களை அரண்மனை நந்தவனத்திற்கு அழைத்து வர சொன்னார்.உங்களுக்காக அவர் காத்து இருக்கிறார்."
வீரமல்லன் வாழ்த்துக்கள் சொல்ல,இளங்கோ மின்னல் போல அரண்மனை நந்தவனம் நோக்கி சென்றான்.
தொடரும்...
Posts: 182
Threads: 3
Likes Received: 131 in 105 posts
Likes Given: 27
Joined: Feb 2020
Reputation:
0
(16-10-2024, 05:03 PM)snegithan Wrote: பாகம் - 140
மன்னர் காலம்
ராஜேந்திர சோழன் அரண்மனைக்குள் சிங்கள அரசன்,மற்றும் அவன் மனைவி இளவரசி ரோஹிணி அழைத்து வரப்பட்டனர்.
சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த ராஜேந்திர சோழன் சிங்கள மன்னனுக்கும் உரிய சிம்மாசனம் கொடுத்து அமர செய்தான்.அவனை நோக்கி,"சிங்கள அரசே..உங்களுக்கும் எங்களுக்கும் பழைய பகை விரோதம் இல்லை.ஒரு தமிழ் மன்னனின் மணிமுடி தங்களிடம் சிறைப்பட்டுள்ளதே..!அதை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.அதற்காக தான் நாங்கள் உங்களிடம் மூன்று தலைமுறையாக யுத்தம் செய்தோம்.எங்களுக்கு தேவையானது கிடைத்தாகி விட்டது.இப்பொழுது உங்கள் நிலப்பரப்பை நாங்கள் ஒப்படைக்க வேண்டிய தருணம் இது"என ராஜேந்திர சோழன் வாய்மொழி வார்த்தைகளை கேட்ட உடன் சிங்கள மன்னன் கண்கள் ஒளிர்ந்தது.
"ஆனால்..!"என ராஜேந்திர சோழன் சற்று இடைவெளி விட்டார்.
"உங்களிடம் யுத்தம் செய்ததின் விளைவு எங்களுக்கு பெருமளவு உயிர்சேதம்,மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது.அதை சீர்செய்ய வேண்டும் அல்லவா...அதனால் உங்கள் நிலப்பரப்பை சில காலம் எம் தளபதிகள் ஆண்டு மக்களிடம் வரி வசூலித்து வரட்டும்.நேரம் வந்த உடன் உங்கள் அரசை நான் உங்களிடமே ஒப்படைக்கிறேன்.அதுவரை தாங்கள் என் விருந்தினர் மாளிகையை அலங்கரியுங்கள்"என்று சோழன் சொல்ல சிங்கள மன்னன் முகம் வாடி போனது.
"ரோஹிணிக்கு இதை கேட்டு ஆச்சரியம்.வழக்கமாக எதிரி நாட்டு மன்னன் சிறைபட்டால் ஒன்று கொன்று விடுவார்கள்.இல்லையெனில் பாதாள சிறையில் தள்ளி விடுவார்கள்.இதென்ன ஆச்சரியம்..!விருந்தினர் போல உபசரிக்கிறார்களே..!என திடுக்கிட்டாள்..
ராஜேந்திர சோழன் தன் உதவியாளரை அழைத்து,"தாங்கள் சென்று அருள்மொழியை அழைத்து வாருங்கள் என்று சொல்ல அங்கிருந்து அவர் அகன்றார்.
சில நொடிகளிலேயே அருள்மொழி சபையில் பிரவேசிக்க,ராஜேந்திர சோழன் அவளிடம்,"மகளே,இவர்கள் நம் விருந்தினர்.இவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்,அது உன்னுடைய பொறுப்பு,விருந்தினர் மாளிகை அழைத்து செல்..என சொல்ல அருள்மொழி அவர்கள் முன்னே வந்தாள்..
ஒரே நேரத்தில் இரு பவுர்ணமி நிலவுகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன.அருள்மொழியின் தெய்வீக அழகை பார்த்து ரோஹிணி ஒரு கணம் மலைத்தாள்.ரோஹிணி மனதுக்குள்,நான் தான் உலகத்திலேயே மிகவும் அழகானவள் என்று இறுமாந்து இருந்தேன்..இவள் அழகில் என்னுடனே போட்டி போடும் அளவுக்கு அல்லவா இருக்கிறாள் என உள்ளுக்குள் பேசி கொண்டாள்.
அருள்மொழி அவளிடம்,"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.வாருங்கள் மாளிகை நோக்கி செல்லலாம்.."என்று அழைத்து சென்றாள்.
விருந்தினர் மாளிகையில்,அருள்மொழி பணியாட்களிடம் சரியாக வேலை வாங்கிய விதம் அவளின் திறமை பளிச்சிட்டது..இதை எல்லாம் ரோஹிணி உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தாள்.விருந்தினர் மாளிகை சுத்தம் செய்யப்பட்டு,வண்ணமயமான திரைச்சீலைகள் மாற்றப்பட்டு,நறுமண திரவியங்கள் தூவப்பட்டு,
சில மணித்துளிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ப மாளிகை தயார் ஆகி விட்டது..ஒரு மாபெரும் பேரரசின் இளவரசி என்ற தலைக்கனம் கொஞ்சம் கூட இல்லாமல் பணியாட்களிடம் சகஜமாக பழகி என்ன அழகாக அவர்களிடம் வேலை வாங்கி விட்டாள்..கொஞ்ச நேரத்தில் இந்த விருந்தினர் மாளிகையே இவள் சொர்க்கலோகம் போல் அல்லவா ஆக்கி விட்டாள் என்று ரோஹிணி வியந்தாள்.
ஒரு குறிப்பிட்ட பணியாளை ரோஹினியிடம் அருள்மொழி காட்டி," இவரிடம் உங்களுக்கு என்ன தேவையோ கூறுங்கள்.அவர் உடனே செய்து தருவார். நான் அவ்வப்போது இங்கே வந்து சரிபார்த்து கொள்கிறேன்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் நவராத்திரி விழா விசேஷமாக நடைபெறும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க,நீங்கள் காண பிரத்யேகமாக தங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன்.." என சொன்னாள்.
"ம்...சரி "என்று ரோஹிணி கூற அருள்மொழி விடைபெற்றாள்.
உடனே ரோஹிணி,"ஒரு நிமிஷம் நில்லுங்க.."என்றாள்.
அருள்மொழி திரும்பி,"ம்..சொல்லுங்க...!" என கேட்க,
ரோஹிணி அவளிடம்,"பட்டாபிஷேகம் முடிந்த உடன் உங்களுக்கும் வேங்கி நாட்டு இளவரசன் நரேந்திரனுக்கும் திருமணம் என்று பேசி கொள்கிறார்களே..!..?என கேட்டாள்..
இந்த கேள்வி கேட்டதும் அருள்மொழி முகம் மாறியதை ரோஹிணி கண்டுகொண்டாள்."மன்னிக்கவும்..இது என்னோட தனிப்பட்ட விசயம்..இதை தாங்கள் கேள்வியாக கேட்பது நன்றாக இருக்காது.."என நாசூக்காக பதில் அளித்து விட்டு அருள்மொழி சென்று விட ரோஹிணி தவித்தாள்..
"ஆகா..இவளை போன்ற பேரழகி ஒருத்தி இருப்பதால் தான் இலங்கையில் என்னை இளங்கோ ஏறேடுத்தும் பார்க்கவில்லையோ..!இவள் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று புரியவில்லையே..இவளுக்கும்,நரேந்திரனுக்கும் மணம் முடிந்து விட்டால் என் பிரச்சினை தீர்ந்து விட்டது என நினைத்தேனே..!இளங்கோவை வழிக்கு கொண்டு வர தாமே தான் களத்தில் இறங்க வேண்டும்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் விசேஷம் என்று அருள்மொழி சொன்னாளே..ஒருவேளை அங்கு இளங்கோ வருவானா..கண்டிப்பா வரக்கூடும்..கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விடக்கூடாது.."என மனதில் நினைத்து கொண்டாள்..
அடுத்த நாள் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுக்க அமர்க்களப்பட்டது.அதுவும் பட்டாபிஷேகம் ஒரு நாளுக்கு முன்பாக வந்த நவராத்திரி கொண்டாட்டம் இன்னும் விமர்சியாக மக்கள் கொண்டாடி கொண்டு இருந்தார்கள்.
தளிக்குலத்தார் ஆலயம் கோட்டையின் உள்ளே இருப்பதால்,(வேலூர் கோட்டையில் உள்ளே ஜலகண்டேஸ்வரர் ஆலயம் போல)அரசினர் குடும்பம் வந்து கும்பிட தனி வழி இருந்தது..மேலும் அரச குடும்பம் வந்து செல்லும் கோவில் என்பதால் அலங்காரங்கள், பூ மற்றும் ஒளி வேலைப்பாடுகள் மிக பிரமாதமாக இருந்தது.
மேலும் ஆடல் நிகழ்ச்சிகளை கண்டு களிக்க ஆடல் மண்டபமும் மிக பெரிதாக இருந்தது. ஒவ்வொரு ஊரில் உள்ள தலைமை கோவில்களில் மேடை போல் அமைத்து இருப்பார்கள்.அங்கு எப்பொழுதும் சொற்பொழிவு ,ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும்.அதற்கு தான் அதை அமைப்பது.அந்த மேடை முன்பு மக்கள் அமர விசாலமான இடம் இருக்கும்.அதில் மக்கள் அமர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள்.அந்த மேடையில் தான் நவராத்திரிக்கான கொலு அமைத்து இருந்தார்கள்.
இளங்கோவை காணும் ஆவலுடன் ரோஹிணி சென்றாள்.ஆனால் அங்கே இளங்கோ இன்னும் வரவில்லை.அரச குடும்பத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அவளுக்கும் கிடைத்தது.சற்று நேரத்தில் ராஜேந்திர சோழன் தன் அரசி மற்றும் மகள் உட்பட அவர்களுக்கான பிரத்யேகமான வழியில் வந்து முதலில் இறைவனை வழிபட்டனர்.
ரோஹிணியை பார்த்த அருள்மொழி,"எங்கே உங்கள் பெற்றோர்கள் வரவில்லையா" என கேட்டாள்.
"இல்லை..
அவர்கள் வரவில்லை.நான் மட்டும் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க வந்தேன்.."
ராஜேந்திர சோழன் தன் மகளிடம்,அவளுக்கே உரிய நாட்டிய திறமையை அரங்கேற்ற சொன்னார்.
அங்கே நரேந்திரனும் வந்து இருந்ததால்,"இப்போ வேண்டாமே" என அவள் மறுதலிக்க,இளங்கோ ஆலயத்தின் உள்ளே நுழைந்தான்.மக்கள் அவனை வரவேற்கும் சத்தம் கேட்டது.
ரோஹிணி அதை கவனித்து,இளங்கோவை கவர மேடை ஏறி தன் நாட்டியத்தை ஆட தொடங்கினாள்.அவளுக்கு தெரிந்த அனைத்து கலைகளையும் செய்து காட்டினாள்.மக்கள் அனைவரும் மெய்மறந்து அவள் நாட்டியத்திற்கு கை தட்டினர்.
ஆட்டம் முடிந்த பிறகு ராஜேந்திர சோழனும் பாராட்ட,ரோஹிணி சற்று திமிருடன்,"நான் ஆடிய ஆட்டத்தை போல இதே மேடையில் ஆட இந்த சோழ நாட்டில் யாரும் இருக்கிறார்களா.."என கேட்டாள்.
ஆனால் எல்லோரும் அமைதியாக இருக்க ரோஹிணி சிரிப்புடன்,"ஆயகலைகள் அறுபத்து நான்கு,அதில் சிறந்த நாடு சோழ நாடு என்று கேள்விபட்டு இருக்கிறேன்.ஆனால் என்னோட இந்த ஒரு கலைக்கே சோழ நாட்டினால் பதில் சொல்ல முடியவில்லையே.ஆடல் அரசன் ஈசனின் தலைமை தலம் சிதம்பரம் இருக்கும் சோழ நாட்டில் என் நாட்டியத்திற்கு பதில் சொல்லும் ஒருவர் கூட இல்லையா..கேவலம்..மிக கேவலம்"என்று இகழ்ந்து பேச,
ராஜேந்திர சோழன் உடனே"அவசரப்பட வேண்டாம் இளவரசி,உன் நாட்டியத்திற்கு என் மகள் அருள்மொழி மறுமொழி அளிப்பாள்"என்று அவர் சொன்ன உடன் அருள்மொழி,இளங்கோவை பார்க்க,அவன் பார்வையால் அனுமதி கொடுத்தான்.
அடுத்த நொடியே அருள்மொழி மேடை ஏறினாள்.திருவெம்பாவையை மனதில் நினைத்து கொண்டாள்.ஏனெனில் திருவெம்பாவை இறைவனை காதலனாகவும்,தன்னை காதலியாகவும் மாணிக்கவாசகர் நினைத்து கொண்டு பாடியது.அந்த வரிகள் மனதில் ஓட,தகுந்த தாளங்கள் வாசிக்க அதற்கேற்ப நளின அசைவுகளை அருள்மொழி ஆட ,மக்களுக்கு ரெட்டிப்பு சந்தோசம்.ரோஹிணியின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் அதில் தான் என்ற திமிர் வெளிப்பட்டது.ஆனால் அருள்மொழியின் ஆட்டத்தில் ஒரு நளினம் மற்றும் உயிர்த்தன்மை வெளிப்பட்டது..காரணம் அவள் நாயகனாக மனதில் இளங்கோவை வைத்து கொண்டு ஆடியதால் அந்த காதலின் தன்மை நன்றாகவே தெரிந்தது.
எல்லோருக்கும் சந்தேகமே இன்றி அருள்மொழி ஆட்டம் தான் சிறந்தது என கூற தொடங்கினர்...அருள்மொழி கண்கள் அடிக்கடி இளங்கோ பக்கம் சென்றதை ரோகிணி கண்டு பிடித்து விட்டாள்."ஆகா..!எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடக்கிறதே..!என அவள் மனம் சஞ்சலபட்டது.
ராஜேந்திர சோழன் எழுந்து,"உனக்கு பதில்மொழி கிடைத்து இருக்கும் என நம்புகிறேன் இளவரசி..!ஆனால் உங்கள் நடன திறமையும் அபாரம்.ஈடு இணையில்லாதது."என்று அவளையும் உயர்த்தி பேசினார்.
ஆட்டம் முடிந்த உடன்,இளங்கோ கோவிலின் பின்புறம் சென்றதை பார்த்த ரோஹிணி,உடனே அவனை தன் வசப்படுத்த வேண்டும் என பின்தொடர்ந்து,"ம்ஹீம்...!என்று குரலை செருமி கொண்டு அழைக்க,இளங்கோ திரும்பினான்..
"என்ன தேவி..!இங்கே தனியா வந்து உள்ளீர்கள்..தங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா..இந்த கோவிலை சுற்றி பார்க்க வேண்டுமா.."என கேட்டான்..
"நான் தங்களிடம் சற்று பேச வேண்டுமே..கொஞ்சம் தனிமையில்.."என்று அவள் கூற..,
"சரி வாருங்கள்.."பக்கத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே அழைத்து சென்றான்.
"இப்பொழுது சொல்லுங்கள்..!என்ன விசயம்..உங்கள் தம்பி எங்கள் படையினரிடம் இருந்து தப்பி ஒடி விட்டான்.அவரை கண்டுபிடித்து தரவேண்டும்,அதுதானே தாங்கள் கேட்க வந்தது.."என கேட்டான்.
"இல்லை..உங்கள் வீரதீர சாகசத்தை என் கோட்டையில் இருந்து பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன் நான்.."
இளங்கோ அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான்.
உண்மையில் உங்கள் ஒருவர் வீரத்தினால் தான் நாங்கள் வீழ்ந்தோம்.நீங்கள் மட்டும் எங்கள் பக்கம் இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் தான் வென்று இருப்போம்..என் அழகில் மயங்கி
என் காலடியில் பள்ளி கொள்ள உலகத்தில் உள்ள ராஜகுமாரர்கள் ஒவ்வொருவரும் ஏங்கி தவிக்கின்றனர்.ஆனால் ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என நான் கற்பனை செய்து வைத்து இருந்தேனோ அப்படியே நிஜத்தில் தாங்கள் உள்ளீர்கள்.இந்த தங்கப்பாவையின் அங்கங்கள் யாவும் உங்களுக்கு சொந்தம்.அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னை மணம் முடித்து கொள்ள சம்மதம் என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதும்.ஆறுதல் பரிசாக இலங்கை மணிமுடியும் தங்களுக்கு கிடைக்கும்."
"அப்போ உங்கள் தம்பி..!இளங்கோ கேட்க,
"அவன் என் பேச்சை தட்டாமல் கேட்கும் பொம்மை போன்றவன்.. இலங்கை அரசின் சக்கரவர்த்தியின் மணிமுடி மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தின் பேரழகியே உங்களை நாடி வந்து உள்ளாள்.இதற்கு தேவை ஒரேயொரு வார்த்தை சம்மதம் தான்..."என ரோஹிணி கூற இளங்கோ கலகலவென சிரித்தான்..
"மன்னிக்கவும் தேவி..!நீங்கள் அழகில் சிறந்தவர் மறுப்பதற்கு இல்லை..ஆனால் உங்களை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை.
நான் இங்கே கொடும்பாளூர் என்ற ஊரின் சிற்றரசன் அவ்வளவே..!"என்று இளங்கோ புறப்பட..
"நில்லுங்கள் இளவரசே..."என ரோஹிணி கத்த,அந்த குரல் அவ்வழியே சென்ற அருள்மொழியை இவர்களை நோக்கி வரவழைத்தது.
"என்னுடைய காலடியில் ஒரு இடம் கிடைக்குமா என ஏங்கும் பல நாட்டு ராஜ குமாரர்கள் உள்ளனர்.ஆனால் என்னை முதன்முதலில் நிராகரித்தது நீங்கள் தான் இளவரசே.இலங்கை மணிமுடியை விட்டு தள்ளுங்கள்.ஆனால் இந்த பொன்னிற மேனியின் விரலை மட்டுமாவது தொட முடியுமா என ஏங்கி தவிக்கும் பல ஆண் மகன்களை நான் கண்டுள்ளேன்..ஆனால் நீங்கள் என்னை உதாசீனப்படுத்துவது எனக்கு மிகுந்த கோபத்தை தூண்டுகிறது.நீங்கள் என்னை நிராகரிக்க வேறொரு காரணம் உள்ளது.அதை தாங்கள் இங்கே சொல்லியே ஆக வேண்டும்."
இளங்கோ திரும்பி அவளை பார்த்து,"தேவி,நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்..அவளை தவிர வேறு யாரையும் என் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது..போதுமா.."
"யார் அந்த அருள்மொழியா..!என ரோஹிணி கேட்க,
இளங்கோ அதிர்ச்சி அடைந்தாலும்,"ஆமாம்"என்றான்
இந்த வார்த்தைகளை கேட்ட அருள்மொழியின் காதில் தேன் வந்து பாய்ந்தது.கால்கள் தரையில் படவில்லை.
ரோஹிணி வெறுப்புடன்,"அவள் தான் வேங்கி நாட்டு இளவரசனுடன் மணம் புரிய போகிறாளே..",
"இங்கே பாருங்கள் தேவி,உங்களை ஏற்று கொள்ளாதற்கான காரணத்தை கேட்டீர்கள்..நான் சொல்லி விட்டேன்..இதற்கு மேல் இந்த விசயத்தை பேசுவது முறை ஆகாது.."என விறுவிறுவென திரும்பி நடக்க,
ரோஹிணி கத்தினாள்."என்னை உதாசீனம் செய்ததற்காக நீ மிகவும் வருத்தபடுவாய்"என அவள் கத்தினாள்.
எதிரில் அவன் தோழன் வீரமல்லன் வந்தான்..
"என்ன நண்பா..!என்ன விசயம் சிங்கள இளவரசியின் முகம் சிவந்து காணப்படுகிறது.."வீரமல்லன் கேட்க,
'ஒன்றும் இல்லை நண்பா..காதலை அவள் சொன்னாள். நான் மறுதலித்தேன்.."
"அடப்பாவி..அவள் நடமாடும் பூலோக சொர்க்கமடா.. அவளையா வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாய்.. உலகத்திலேயே உன்னை போன்ற மூடன் யாரும் பார்க்க முடியாது."
"சரி அப்படியே இருக்கட்டும் போலாமா...."என்றான் இளங்கோ.
"நண்பா..நீ தான் யாரையும் காதலிக்கவில்லையே..அவளை ஏற்று கொள்வதில் உனக்கு என்ன தயக்கம்.இந்த வாய்ப்பு யாருக்குடா கிடைக்கும்.."
"இருக்கட்டும் வீரமல்லா..என் மனதில் வேறொரு நங்கை இருக்கிறார்."
"யாருடா..அந்த அதிர்ஷ்டசாலி..."வீரமல்லன் கேட்க
"அது தான் சொன்னேனே..!நங்கை என்று"
"அடேய் இளங்கோ..!பெண்கள் எல்லோரையுமே நங்கை என்று அழைப்பது தானே வழக்கம்..குறிப்பிட்டு எந்த பெண் என்று சொல்லடா என் உயிர் நண்பனே.."
"என் முட்டாள் நண்பனே..!அவள் பெயரே நங்கை தானடா..செவ்விதழ் தேன் மொழியாள்.செந்தாமரை, செந்தேன் மழை, சிற்றிடை உடையாள்.ரோஹிணி அழகில் கண்ணை கூசும் காட்டுத்தீ என்றால்,அவள் அழகில் அகல் விளக்கு போன்று கண்ணுக்கு இனிமையாக சுடர்விட்டு எரிபவள்.அவள் எனக்கு எட்டாக்கனி என்று தெரிந்தும் அவள் காண்பித்த ஒரு கடைக்கண் பார்வை போதும் என் ஜென்மம் முழுதும் வாழ "என்ற இளங்கோ சொன்னான்.
"நீ சொல்வது நம் அரசரின் புதல்வி அருள்மொழி நங்கையா.."என வீரமல்லன் கேட்டான்.
அப்பொழுது அருள்மொழியின் தோழி ஓடிவந்து இளங்கோவிடம்,"தேவி உங்களை அரண்மனை நந்தவனத்திற்கு அழைத்து வர சொன்னார்.உங்களுக்காக அவர் காத்து இருக்கிறார்."
வீரமல்லன் வாழ்த்துக்கள் சொல்ல,இளங்கோ மின்னல் போல அரண்மனை நந்தவனம் நோக்கி சென்றான்.
தொடரும்...
ஆஹா மிகவும் அருமையான பதிவு நண்பா. சோழர் காலம் பற்றிய உங்கள் உரைநடை மிகவும் அற்புதம் நண்பா. தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் அதுவும் ஆடல், பாடல் பற்றிய வரிகள் அருமை நண்பா. இந்த பதிவு சோழர் காலத்திற்கே எங்களை கொண்டு சென்று விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ஆவலாக. நல்ல பதிவிற்கு நன்றி.
Posts: 2,622
Threads: 3
Likes Received: 4,132 in 1,261 posts
Likes Given: 2,162
Joined: Dec 2022
Reputation:
125
(16-10-2024, 06:33 PM)rameshsurya84 Wrote: ஆஹா மிகவும் அருமையான பதிவு நண்பா. சோழர் காலம் பற்றிய உங்கள் உரைநடை மிகவும் அற்புதம் நண்பா. தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் அதுவும் ஆடல், பாடல் பற்றிய வரிகள் அருமை நண்பா. இந்த பதிவு சோழர் காலத்திற்கே எங்களை கொண்டு சென்று விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ஆவலாக. நல்ல பதிவிற்கு நன்றி.
நன்றி நண்பா..அடுத்த பதிவு சோழர் காலத்தின் முக்கிய பதிவாக இருக்கும்.
Posts: 152
Threads: 0
Likes Received: 104 in 92 posts
Likes Given: 376
Joined: Oct 2019
Reputation:
0
Excellent update.. சோழர் காலத்தில் அருள்மொழி மற்றும் ரோஹிணி கேரக்டர் உருவகம் அருமை.அதுவும் இருவர் அழகை ஒப்பிட்டு சொன்னவிதம் சூப்பர்.
Posts: 249
Threads: 0
Likes Received: 149 in 132 posts
Likes Given: 145
Joined: Jan 2019
Reputation:
1
கதை சோழர் காலத்தில் காமம் இன்றி காதலுடன் செல்கிறது.
மிகவும் நன்றாக இருக்கிறது
Posts: 11,978
Threads: 1
Likes Received: 4,513 in 4,048 posts
Likes Given: 12,207
Joined: May 2019
Reputation:
24
ரோகிணியும் அருள்மொழியும் ஆடிய நடனம் வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் வரும் பாடல் பெற்ற உள்ளது நண்பா சூப்பர்
Posts: 2,622
Threads: 3
Likes Received: 4,132 in 1,261 posts
Likes Given: 2,162
Joined: Dec 2022
Reputation:
125
(16-10-2024, 09:56 PM)rkasso Wrote: கதை சோழர் காலத்தில் காமம் இன்றி காதலுடன் செல்கிறது.
மிகவும் நன்றாக இருக்கிறது
சோழர் காலத்திலும் காமம் உண்டு நண்பரே..நாயகன்,நாயகி இடையே காதலும்,காமமும் சேர்ந்தாற் போல வரும்.
•
Posts: 2,622
Threads: 3
Likes Received: 4,132 in 1,261 posts
Likes Given: 2,162
Joined: Dec 2022
Reputation:
125
(16-10-2024, 09:16 PM)M.Raja Wrote: Excellent update.. சோழர் காலத்தில் அருள்மொழி மற்றும் ரோஹிணி கேரக்டர் உருவகம் அருமை.அதுவும் இருவர் அழகை ஒப்பிட்டு சொன்னவிதம் சூப்பர்.
நன்றி நண்பரே
•
Posts: 2,622
Threads: 3
Likes Received: 4,132 in 1,261 posts
Likes Given: 2,162
Joined: Dec 2022
Reputation:
125
(16-10-2024, 09:57 PM)omprakash_71 Wrote: ரோகிணியும் அருள்மொழியும் ஆடிய நடனம் வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் வரும் பாடல் பெற்ற உள்ளது நண்பா சூப்பர்
நன்றி நண்பா
•
Posts: 1,588
Threads: 4
Likes Received: 1,155 in 910 posts
Likes Given: 2,626
Joined: Jun 2019
Reputation:
6
Review for update 139
Thodarchi sirapana sethukal sariyana kadhai kalam mattrum adhanai nerulil pakum padi
Kondu ponaah vithaam tharamanah seigai
As usual story la travel agah vachitinga brother
Ilango character konjam strong writing sirapah iruku
Ilangai ilavarasan nari thanthiram sirapana nagarvugal
History la nadkuraa feel chinna chinna vishyam kuda sirapagah irunthathu
Yaru antha rohini waiting for her look
|