Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
12-09-2024, 03:38 PM
(This post was last modified: 18-09-2024, 09:53 AM by Murugan siva. Edited 2 times in total. Edited 2 times in total.)
வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு காதல் கதையை தொடர்கிறேன்.
ராகுல் : ஹேய் சுதா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் டி. நீதான்டி வீட்ல சொல்லணும்
சுதா : டேய் என்ன விளையாடுறியா. அம்மா எண்ண அடிச்சிடுவாங்க. நம்ம ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே பிரண்டு. ஒரு பிரெண்டுக்கு நல்லது செய்றவள் தான் ஃபிரண்ட். இப்போ உனக்கு கல்யாணம் ஆனா. முதல் ஆளா சந்தோசப்படுவது நான் மட்டும்தான்.
ராகுல் : இங்க பாரு எனக்கு இப்போதே கல்யாணம் வேண்டாம் நீ பேசினா மட்டும் தான் இது செயல்படும்.
சுதா : நோ way அதுக்கு வாய்ப்பே இல்லை.. ஏன்டா நீ கல்யாணம் செஞ்சா தான் என்ன
ராகுல் : உனக்கு தெரியாதா நான் ஏன் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்கிறேன். எனக்கு பழைய காதல மறக்கவே முடியலடி
சுதா : டேய் இன்னுமாடா நீ அந்த தாரணியை நினைச்சுட்டு இருக்க. டேய் அவளுக்கு பணம் தான் முக்கியம்னு போனவள் அவளை விடு. ஒன் லைப் பாரு
ராகுல் : என்னால மறக்க முடியல டி. அவள் வேணா என் மேல பொய்யா காதல் வச்சிருக்கனா. ஆனால் நான் உசுரா தானே வச்சிருந்தேன். இப்படி பணம் தான் பெற சென்று போய்விட்டாளே.
சுதா : டேய் முட்டாள் மாதிரி பேசாத. அவள நினைச்சுகிட்டு உன் லைஃபை ஸ்பாயில் பண்ணாத. சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு. அம்மா எவ்வளவு ஓரத்த போட்டாங்க தெரியுமா என்கிட்ட போன் போட்டு
ராகுல் : எனது மனசே இல்லடி. நான் ஒரே பொடி தான் சொல்ல போறேன். சொல்லிக்கொண்டே பைக்கை எடுத்து வீட்டிற்கு சென்றான்.
வைதேகி : ஹேய் சுதா நீ உன் காதலை அவன் கிட்ட சொல்ல வேண்டியது தானே டி
சுதா : அவன் பிரண்ட்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்குறவன் டி. அவன் கிட்ட போய் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் எப்படி டி. அவன் என்ன என்ன நினைப்பான
வைதேகி : போடி போடி லூசு. ஏற்கனவே நீ உன் மனசுல காதல வச்சுக்கிட்டு. சொல்லாம இருந்ததுனால தான் அந்த தாரணி. காதல் சொல்லி அவனை ஏமாத்திட்டு போயிட்டா. அப்பவே நீ அவன்கிட்ட காதல் சொல்லி இருந்தால் கண்டிப்பா அவன் உன்னை ஏற்றுக் கொள்வாண்டி.
சுதா : என் மனசுல காதல் இருக்கு அதே மாதிரி அவன் மனசுல காதல் இருக்குமா. ஒரு நட்பை அது தப்பா செஞ்ச மாதிரி ஆகும் டி. அவன் எங்க இருந்தலும் நல்லா இருக்கட்டும் டி
வைதேகி : பெரிய தியாகி மாதிரி பேசாதடி. உன்னைய அவங்க குடும்பத்துக்கு அப்படி புடிக்கும். ராகுல உங்க குடும்பத்துக்கு அப்படி புடிக்கும். ரெண்டு பேரும் குடும்பத்திலும் அப்படி பழகி இருக்கீங்க. இத தாண்டி நல்ல சான்ஸ் சீக்கிரமே உன் காதலை சொல்லி. அந்த ஏமாற்றுக்காரி தாரணி நினைப்ப இல்லாம ஆக்கு
சுதா : என்னால முடியாதுடி ஒரு நட்புக்கு என்னோட துரோகம் செய்ய முடியாது. என் மனசுல என்னைக்கோ காதல் வந்துட்டு ராகுல் மேல. ஆனா அவன் இப்பவும் என்னைய ஒரு பிரண்ட்ஷிப்பா தான் பார்க்கிறான். அவன் கிட்ட போய் நான் உன்ன தோழனா பாக்கல காதலனா பார்க்கிறேன் என்றால். அப்புறம் அவன் என்னை வெறுத்துடுவான்டி.
வைதேகி : போடி கூறு கெட்டவளே. இப்ப நீ அவன் கிட்ட சொல்லல நான் போயி நீ காதலிக்கிற விஷயத்தை அவன் கிட்ட போய் சொல்லிடுவேன்
சுதா : தயவு செய்து அந்த மாதிரி எதுவும் பண்ணிடாத டி.. எனக்கு இருக்கிற அதே காதல் அவனுக்கும் இருந்ததுன்னா. கண்டிப்பா நா அவனை தான் கல்யாணம் செஞ்சிகுவேன் டி.
ராகுல் வீட்டில்
கவிதா : டேய் நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கல நா விஷம் குடிச்சி செத்துருவேன்
ராகுல் : மா என்று கத்தி கொண்டு அவளை பார்த்து இப்படி எல்லாம் சொல்லாத மா. எனக்கு உன்ன விட்டா வேற யாரும் இருக்கா.
கவிதா : அப்படின்னா கல்யாண செஞ்சுக்கோ.
ராகுல் : சரி உங்க இஷ்டம்
கவிதா : என் செல்லம். சொல்லிட்டு சுதாக்கு போன் போட்டு நீ சொன்ன மாதிரி அவன் கிட்ட பேசுனேன் அவன் சம்மதிச்சிட்டான் மா. நீ தானா கூட நின்னு எல்லாத்தையும் முடிச்சு வைக்கணும்
சுதா : மனதிற்குள் அழுது கொண்டு. கண்டிப்பா மா. நீங்க கவலைப்படாதீங்க நானே இந்த கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தி காட்டுறேன். சொல்லிக் கொண்டு போனை வைத்தாள்
வைதேகி : நீ எல்லாம் என்ன ஜென்மம். நீயே ட்ராவல் அம்மாகிட்ட இப்படி சொல்ல சொல்லி இருக்கியே டி ஏன் டி இப்படி செஞ்ச
சுதா : என்கிட்ட சொல்லி வருத்தப்படுறாங்கடி. நான் என்ன செய்ய முடியும். என்னால முடிஞ்சது இந்த மாதிரி சொல்லுங்க அவன் ஒத்துக்கிடுவான்னு சொன்னேன். அவங்களும் அதே மாதிரி பேசி இருக்காங்க ராகுல் கல்யாணத்துக்கு சம்பாதிச்சுட்டான்
வைதேகி : நீ என்னடி செய்ய போற
சுதா : அவன் கல்யாணத்தை ஏன் தலைமையில நின்னு நடத்தி காட்ட போறேன்.
வைதேகி : இங்க பாருடி ஒன்னே ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. நீ ராகுல் மேல வச்சு இருக்கிற காதல் உண்மையான காதல். அந்தக் காதலே உன்னை ராகுல் கிட்ட சேர்த்து வைக்கும். இது நிச்சயம் நடக்கும் பாரடி.
சுதா : போடி வாய மூடிட்டு..
இந்தக் கதையும்.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். அந்தக் கதையும். தொடர்ந்து பதிவுகள் வரும். இது சின்ன பதிவுதான். நாளை பெரிய பதிவுடன் வருகிறேன்
Posts: 2,629
Threads: 5
Likes Received: 3,188 in 1,466 posts
Likes Given: 2,862
Joined: Apr 2019
Reputation:
18
Please continue
Super story
வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 63
Threads: 2
Likes Received: 59 in 39 posts
Likes Given: 66
Joined: Sep 2020
Reputation:
0
Kaadhal kathaikku enathu manamarntha nandrikal
•
Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
(13-09-2024, 12:57 AM)alisabir064 Wrote: Please continue
Super story
நன்றி நண்பா
•
Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
(13-09-2024, 05:57 AM)Thamizhan98 Wrote: Kaadhal kathaikku enathu manamarntha nandrikal
நன்றி நண்பா
•
Posts: 84
Threads: 0
Likes Received: 46 in 37 posts
Likes Given: 339
Joined: Sep 2024
Reputation:
3
•
Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
கவிதா : ராகுல் சம்மதம் தெரிவித்ததை அடுத்து. ப்ரோக்கர் கிட்ட சொல்லி ஒரு பெண்ணை பார்க்க சென்றனர்
ராகுல் : ஹேய் சுதா நீ சொல்லித்தான் நான் சம்மதிச்சிருக்கேன். அது இல்லாம அம்மா தற்கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுறாங்க. எனக்கு சம்மதமே இல்ல இருந்தாலும் என் அம்மாவுக்காகவும் உனக்காக தான் சம்மதிச்சு இருக்கேன். இப்பவும் என் மனசு புல்லா தாரணி மட்டும்தான் இருக்கா. இது ஊருக்காக நடக்கிற கல்யாணம் எனக்காக நடக்கிற கல்யாணமே கிடையாது
சுதா : அவன் மனதில் தாரணி இருக்கிறார் என்று தெரிந்த பிறகு இவர் கொஞ்சம் வருத்தப்பட்டால். நான் எப்படா உன் மனசுக்குள்ள வருவேன் என்று மனசுக்குள்ளே ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தால்
ராகுல் : ஏய் என்னடி ஆச்சு நான் உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன் நீ சிலையா இருக்க.
சுதா : சுயநினைவுக்கு வந்து. ஹான் என்னடா சொன்ன.
ராகுல் : போச்சு போ முதல்ல நீ இங்க தான் இருக்கியா. இல்ல வேற லோகத்துக்கு போய்டியா டி
சுதா : ஹேய் அது ஒன்னுல்ல. விடு. இதான் பொண்ணு வீடா
ராகுல் : இப்போ அதுவாடி முக்கியம். இப்போ இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமே இல்லையடி. பாவம் அந்த பொண்ண கொஞ்சம் நினைச்சு பாருடி. விருப்பமே இல்லாத எனக்கு. அந்த பொண்ண கட்டி வச்சா. அந்தப் பொண்ணு கூட நான் எப்படி சந்தோசமா வாழ முடியும். இப்போ ஒன்னும் கெட்டுப் போகல டி நீயே அம்மா கிட்ட பேசி இதை எப்படியாவது நிறுத்த பாரேன்.
சுதா : அது எப்படி டா முடியும். அது அவ்ளோ ஈஸியான விஷயமாடா அது. டேய் இங்க வரைக்கும் வந்து. இப்படி சொல்ற. நா என்ன செய்ய முடியும். சாரி ராகுல். நீ அந்த பொண்ணு கூட சந்தோசமா வாழ பாரு டா.
ராகுல் : போடி லூசு உன்கிட்ட போய் சொன்ன பாரு. விதி என்ன எழுதி இருக்கோ பாப்போம்
வீட்டுக்குள் சென்று விரித்த பாய் மீது உக்காந்து கொண்டனர்.
கவிதா : இது என் மகன். அவள் என் மகனோட பிரண்ட். சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் ஒண்ணா தான் வளர்ந்தாங்க. பக்கத்து வீடு வேற. இப்போ ஒரே ஆபிஸ்ல வேற வேலை பாக்ராங்க
பெண் அம்மா : ரொம்ப நல்லது. நா எதுனாலும் நேரடியாக பேச கூடியவள். என் மனசுல பட்டது சொல்றேன் தப்பா நினைக்காதீங்க. உங்க மகனுக்கு பொண்ணு பாக்க வந்து இருக்கீங்க. கூடவே இந்த பொண்ண கூட்டிட்டு வந்து இருக்கீங்களே இது தப்பா தெரியலையா. அப்படின்னா கல்யாணத்துக்கு அப்புறமும் இவளும் உங்க மகன் கூடவே இருப்பாலோ. நான் தப்பா சொல்லல ஏதோ என் மனசுல பட்டுருச்சு அதான் சொன்னேன்.
ராகுல் : கோபத்தில் எழப்போனான.
கவிதா : சும்மா நிறுத்துங்கமா. பாய் இருக்குன்னு உங்க இஷ்டம் போல பேசாதீங்க. அவங்கள பத்தி தப்பா பேசினா நாக்கு அழுகிடும். ரெண்டு பேரும் எப்படி பழகுறாங்கன்னு எனக்கு தெரியும். சின்ன வயசுல இருந்தே அவங்க ரெண்டு வரி நான் பார்க்கிறேன். பிரண்ட்ஷிப்னா ஒரு ஆனா இவங்க ரெண்டு பேரும். மட்டும் தான். இப்பவே இப்படி பேசுறீங்களே கல்யாணம் ஆகிவிட்டது என்றால் என் மகனை எப்படி சந்தேகப்பட்டுட்டே தான் இருப்பீங்க. தெரியாம இந்த இடத்துக்கு வந்துட்டோம். டேய் கிளம்புடா
ராகுல் : சந்தோசமா எழுந்தான்...
அப்போ அங்கு பெண் வந்தால்
கனகா : ஐயோ உக்காருங்க eng அம்மா ஏதோ புரியாம பேசிட்டாங்க. அவுங்களுக்கு பதிலா நா மன்னிப்பு கேக்கறேன். யம்மா நீ சும்மா இருக்க மாட்டியா. இப்படி வர சம்மந்தம் எல்லாம் தட்டி கழிச்சா. என் தங்கச்சி எப்போ தான் கல்யாணம் ஆவும். வாய மூடிட்டு இருமா
கவிதா : நீ யாரு மா.
கனகா : நீங்க பாக்க வந்து இருக்குற பொண்ணோட அக்கா என் பெயர் கனகா. என் தங்கச்சி பெயர் திவ்யா இருங்க அவளை வர சொல்றேன் அவளை கூப்பிட்டானர்
திவ்யா : காபி கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தால்.. கனகா அருகில் உக்காந்து கொண்டால்.
கவிதா : ஏம்மா உன் பெயர் என்னம்மா
வைதேகி : ஏனடி என்ன இது. அவுங்க அக்கா தான் திவ்யானு சொன்னாங்களே. ஒரு வேலை அந்த பொண்ணுக்கு காது கேக்குதா செக் பண்ணுதோ
கவிதா : ஹேய் வைதேகி சும்மா இருக்க மாட்ட.
வைதேகி : பின்ன என்ன மா. இன்னும் பழைய காலத்துல இருக்கீங்க. திவ்யா உங்களுக்கு ராகுலை புடிச்சி இருக்கா
திவ்யா : புடிச்சிருக்கு. அவருக்கு
ராகுல் : முதல்ல நா சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிடறேன். இந்தா இருக்காளே சுதா இவள் தான் என் உயிர் தோழி. இவளை கஷ்டம் பட வைக்கிற மாதிரி எதாவது நடந்தா. அடுத்த நிமிடம் இந்த கல்யாணம் நடக்காது. கல்யாணம் அப்பறம் இவளை அவமானம் படற மாதிரி எதாவது நடந்தா. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் டைவர்ஸ் தான். ஏனா இவள் தான் எனக்கு முதல்ல. எனக்கு இவள் ஒரு கண்ணு என்றால் நீங்களும் ஒரு கண்ணும் தான். மனைவி ஸ்தானம் அது நீங்க மட்டும் தான். தோழி ஸ்தானம் இவள் தான். இப்போ உங்க முடிவு சொல்லுங்க
திவ்யா : முதல்ல உங்க பப்ரெண்ட்ஷிப் பாத்து நா பெருமை படுறேன்.. அது மட்டும் இல்ல. நீங்க நேர்மையா இருந்து.. அதுவும் நீங்க பொண்ணு பாக்க வந்த இடத்துல அந்த பொண்ணு கிட்ட நேரடியா. இப்படி உண்மையா இருக்கிறது எந்த ஒரு பொண்ணுக்கும் பிடிக்கும். நான் இப்ப சொல்றேன் எப்பவும் சொல்றேன் உங்க பிரண்ட்ஷிப்பை நான் தப்பாவே நினைக்க மாட்டேன். உங்க பிரண்ட்ஷிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.
ராகுல் : தேங்க்ஸ் என்னையும் என் பிரண்ட்ஷிப் பத்தியும் புரிந்து கொண்டதற்கு. சரி மா நீங்க மேற்கொண்டு விஷயத்தை பேசுங்க
சுதா : இங்க பாருங்க திவ்யா. ராகுல் ரொம்ப நல்லவன். அவன் என்ன பத்தி பெருமையா உங்க கிட்ட சொல்லி இருக்கான். அது உண்மையா அப்படிங்கறது எனக்கு தெரியாது. ஆனா நானும் இவனும் சின்ன வயசுல பிரண்ட்ஷிப். நான் என்னைக்குமே உங்களுக்கு இடைஞ்சலா இருக்க மாட்டேன். நீங்க இவனை நல்லா பாத்துக்கிட்டா போதும். மனதிற்குள் அழுது கொண்டு இந்த வார்த்தைகளை சொன்னால்
நிச்சயதார்த்தம் பேசி முடிக்கப்பட்டது
மறுநாள் ஆபிஸ்
விஜய் : டேய் பொண்ணு எல்லாம் பாத்தாச்சா. உனக்கு ஓகேவா பிடிச்சிருக்கா.
ராகுல் : என்ன வேணாலும் என் பழைய காதல மறக்கவே முடியலடா. என் பிரண்ட்ஷிப்பை அவ மதிக்கிறால் அதுக்காக நான் சம்மதிச்சிருக்கேன்.
விஜய் : உங்க பிரண்ட்ஷிப் பத்தி தான் இந்த ஊருக்கே தெரியுமே. யாருடா தப்பா பேசவா அப்போது அங்கு வைதேகி வந்தால்
ராகுல் : டேய் உன் ஆளு வந்து இருக்கா நீ பேசு
வைதேகி : என்னடா சொன்னா உன் பிரண்டு
விஜய் : அவனுடைய நிச்சயதார்த்தத்தை பற்றி பேசிக்கிட்டு இருந்தான். பொண்ணு ரொம்ப புடிச்சி இருக்கான. அவன் சந்தோஷமா இருக்கான்
வைதேகி : இதாண்டா ஆம்பளைங்கோட சைக்காலஜி. ஒரு பொண்ணோட மனசுல என்ன இருக்குன்னு நீங்க கண்டுபிடிக்க மாட்டீங்கடா. நான் உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு தெரியும் அதை நீ கண்டுபிடித்து அக்செப்ட் பண்ணிட்ட. அதே மாதிரி சுதா ஒருத்தனை காதலிக்கிறேன் டா அது தெரியுமாடா உனக்கு.
விஜய் : என்னடி சொல்ற சுதா ஒருத்தனை காதலிக்கிறேன் அது யாரு
வைதேகி : வேற யாரும் இல்லடா ராகுல் தான் காதலிக்கிறால் அது தெரியுமாடா உனக்கு. அவளுடைய காதலை உள்ளுக்குள்ளே வச்சு. ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஷ்ட படுறா தெரியுமா. இந்த லட்சணத்துல வேற ராகுலுக்கு வேற பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. அதுக்கு மூளை காரணமே இந்த சுதா தான்
விஜய் : என்னடி சொல்ற. ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் தானே இருந்தாங்க
வைதேகி : எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும் டா. அதுக்கு ஏதாவது ஐடியா கொடுடா.
சுதா : அப்போது அவர்கள் பக்கம் வந்தாள். நெனச்சேன் நீ தனியா ஒதுங்கும்போது இதைப்பற்றி தான் பேசுவேன் என்று. டேய் விஜய் ராகுல் கிட்ட எதுவுமே சொல்லிறாதே. அவனுடைய மனசுல இன்னமும் நான் பிரண்ட்ஷிப் போட தான் இருக்கேன். அந்த நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பல டா. ஒரு பிரண்ட்ஷிப்புக்கு நான் துரோகம் செஞ்ச மாதிரி ஆயிரும்
விஜய் : லூசு மாதிரி பேசாதடி. என்ன நினைச்சுட்டு இப்படி எல்லாம் பேசுற. ஏன் ஒரு பிரண்ட்ஷிப்பா இருந்து காதல போய் முடிய கூடாதா கல்யாணத்துக்கு முடிய கூடாதா. அதெல்லாம் தப்பே இல்லடி. பிரியாத வரம் வேண்டும் அப்படிங்கிற படம் பாத்தியா இல்லையா. பிரசாந்த் ஷாலினி ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸா இருக்காங்க கடைசில காதல முடிஞ்சுரும்.
சுதா : டேய் லூசு அது படம் டா. இது நிஜம் வாழ்க்கை டா. படத்தைப் பொறுத்தவரை சரியாக வரும் நிஜத்தில் பொறுத்தவரை சரியாக இருக்குமாடா.. நான் அவன்கிட்ட காதலை சொல்ல நேரத்துல தாரணி சொல்லிட்டா டா. அவனாவது உண்மையாய் இருப்பான்னு நினைச்சேன் ஆனா அவ
விஜய் : உன்ன பத்தி பேசும் போது அந்த தே....
கெட்ட வார்த்தை போட வந்தான்
சுதா : இங்க பாருடா வாய ஒடச்சிடுவேன் என்ன பேச்சு பேச வந்த. ஒரு பொண்ணு அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அது தப்பு. என் காதல் எனக்குள்ளே இருக்கட்டும் டா. ராகுல் அந்த திவ்யாவை கல்யாணம் செஞ்சி நல்ல சந்தோஷமா இருந்தா போதும்.
கனகா வீட்டில்
பெண் அம்மா : என்னடி அந்த பையன் வந்து இப்படி சொல்றான் நீ சரின்னு சொல்ற
திவ்யா : எல்லாமே ஒரு காரணத்துக்காக தான். உண்மையிலே அவங்க பிரண்ட்ஷிப்பை நான் மதிக்கிறேன். அதுக்காக ரெண்டு பேரும் ஒரே கண்ணு சொல்றது அது தப்பு இல்ல. கல்யாணம் முடியட்டும். அவன கொஞ்சம் கொஞ்சமா என் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வாரேன்.. நீ அப்புறம் அந்த சுதாவை அந்த ராகுல் கிட்ட பிரிச்சு விடுகிறேன்
கனகா : இதெல்லாம் தப்பா தெரியலையா டி. ஒரு பிரண்ட்ஷிப்பை பிரிக்கிறது ரொம்ப தப்பு
திவ்யா : நான் பிரிக்க மாட்டாங்க எந்த ஒரு பிரண்ட்ஷிப்பும் நான் மதிக்கிறேன். பட் என் புருஷன் எனக்கு மட்டும்தான் அப்படி நினைக்கிறது தப்பா. நான் அந்த சுதா கிட்ட பேச போறேன். பேசி இன்னைக்கு ஒரு முடிவு எடுக்க போறேன். சொல்லிட்டு உடனே சுதாவுக்கு போன் போட்டாள்
சுதா : ஹலோ சொல்லுங்க யாருங்க
திவ்யா : நான் திவ்யா பேசுறேன் இன்னைக்கு என்னைய பொண்ணு பாக்க வந்தாங்க இல்ல
சுதா : ஆமா ஆமா சரி என் நம்பர் எப்படி கிடைத்தது
திவ்யா : அவர் கிட்ட தனியா பேசும்போது அவர் மொபைல் வாங்கி அவர் நம்பரையும் உங்க நம்பரையும் சேவ் பண்ணிட்டேன். இப்போ அதான் உங்ககிட்ட பேச போன் பண்ணேன்
சுதா : சொல்லுங்க திவ்யா என்ன விஷயம்
திவ்யா : நான் சொல்றேன் வருத்தப்படாதீங்க. எங்க ரெண்டு பேருக்குள்ள நீங்க வர வேண்டாம். நீங்க அவர்கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலகுங்க அதான் நல்லது. உங்க பிரண்ட்ஷிப்பை நான் எப்பவும் மதிக்கிறேன். ஆனா கல்யாணம் முடிஞ்சா ஒரு மனைவி என்கிற ஸ்தானம் எனக்கு வேணும்.. ஆனா அவர் என்ன சொல்றாரு நீங்க ஒரு கண்ணு நான் ஒரு கண்ணு சொல்றாரு. எந்த ஒரு மனைவி ஏற்றுக் கொள்வார் சொல்லுங்க. ஒரு புருஷனுக்குள்ள மனதிலும் சரி எல்லா இடத்திலும் மனைவி மட்டும் தான் இருக்கணும்னு நினைப்பாள்.. நானும் அதைத்தான் நினைக்கிறேன், இதுல தப்பு இருக்கா சுதா
சுதா : உண்மையிலேயே ரொம்ப வருத்தப்பட்டு அழுதால். கண்ணீரை துடைத்து விட்டு. சரி கவலைப்படாதீங்க ராகுல் கிட்ட இருந்து. மன்னிச்சுக்கோங்க உங்களுடைய வருங்கால புருஷன் கிட்ட இருந்து நான் கொஞ்சம் கொஞ்சமா விலகுகிறேன். உங்க மனசு பாதிக்கிற அளவுக்கு நான் நடந்து இருக்கேன்னா என்ன மன்னிச்சுக்கோங்க. சாரி சொல்லிவிட்டு போனை வைத்தாள்
வைதேகி : சுதா கண்ணீர் விடுவதை பார்த்த அவள். என்னடி ஆச்சு ஏன் அழுகிறாய். நீ பேசுனது எல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். என்னடி சொல்றா. நீ ராகுல் கிட்ட பேச கூடாதுன்னு சொல்றாளோ
சுதா : இங்க பாரு. ராகுல் கிட்ட எதையும் சொல்லிடாத.. அப்புறம் அவன் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவான்
வைதேகி : ஏண்டி சொல்லக்கூடாது எதுக்கு சொல்லக்கூடாது. இப்பவே இப்படி மிரட்டுற அப்படி என்றால். ராகுல் கூட அவ எப்படி சந்தோசமா இருப்பா. இதெல்லாம் சரி வராத டி. ராகுல் வரட்டும் உன் காதலை சொல்லி உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு
சுதா : என்னடி பேச்சு பேசுற. இப்பவும் சொல்றேன் ஒரு பிரண்ட்ஷிப்பா இருந்துகிட்டு. காதல் செஞ்சா அது பிரண்ட்ஷிப்க்கு கேவலம் நினைக்கிறவளடி நான். தயவு செய்து என் காதலை அவன் கிட்ட சொல்லி.. என்ன வெறுக்க வச்சிடாதடி.
வைதேகி : நல்லா சொல்றேன் கேட்டுக்கோ. உன் காதல் உண்மைன்னு வை. அந்தக் கடவுளே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பார் டி. இது நடக்குதா இல்லையா மட்டும் பாரு
சுதா : அந்தக் கடவுளா சேர்த்தா பார்ப்போம். ஆனா வேற எந்த ஒரு மனுஷனும் இது சேர்க்கக்கூடாது. புரியுதுல்ல நான் உன்னையும் விஜய்யும் சொல்றேன்.
வைதேகி : சத்தியமா இது நடக்காது ஆனா. ஆனா நிச்சயமா. அந்தக் கடவுள் உங்களை சேர்த்து வைப்பார் அடி எழுதி வச்சுக்கோ. சொல்லிக் கொண்டு வைதேகி வெளியே சென்றாள்
சுதா : மனதிற்குள் அப்படி ஒன்னும் நடந்தா நான் என் வாழ்க்கையில் அவ்வளவு சந்தோஷமா இருப்பேன் டி. என்னுடைய ராவுல என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கிட வேண்டி. என்று மனதிற்குள்ளே சந்தோஷப்பட்டு கொண்டு இருந்தாள்
Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
(13-09-2024, 08:58 AM)Karthick21 Wrote: தொடக்கம் அருமையாக உள்ளது
நன்றி நண்பா
•
Posts: 514
Threads: 0
Likes Received: 178 in 161 posts
Likes Given: 267
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 84
Threads: 0
Likes Received: 46 in 37 posts
Likes Given: 339
Joined: Sep 2024
Reputation:
3
•
Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
(15-09-2024, 10:11 AM)Karthick21 Wrote: காதல் காவியம் தொடரட்டும்
செவ்வாய் கிழமை அடுத்த பதிவு
Posts: 2,629
Threads: 5
Likes Received: 3,188 in 1,466 posts
Likes Given: 2,862
Joined: Apr 2019
Reputation:
18
கதை அசத்தலாக போகிறது.
வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
(15-09-2024, 12:32 PM)alisabir064 Wrote: கதை அசத்தலாக போகிறது.
ரொம்ப நன்றி நண்பா
•
Posts: 12,502
Threads: 1
Likes Received: 4,702 in 4,229 posts
Likes Given: 13,178
Joined: May 2019
Reputation:
27
மிகவும் அருமையான தொடக்கம் நண்பா சூப்பர்
•
Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
16-09-2024, 07:57 PM
(This post was last modified: 16-09-2024, 08:51 PM by Murugan siva. Edited 1 time in total. Edited 1 time in total.)
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
சுதா : திவ்யா பேசிய பிறகு யோசனையில் இருந்தால. கடவுளே சின்ன வயசுல இருந்தே அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ வந்தவா திவ்யா. அவள் என்கிட்ட ராகுல் கூட பேச கூடாதுன்னு சொல்ற. எப்படியும் திவ்யா தான் ராகுல் கூட வாழ போறா. நாம ராகுல பொறுத்தவரை ஒரு பிரண்டு தான். அவ மனசுல நான் இருக்கணும் எப்படியோ எனக்கு தெரியல. ஆனா ஒரு தோழியா அவன் மனசுல நான் இப்பவும் இருக்கேன். அது என்னைக்கு காதலா மாறுமோ தெரியல. என் காதுல அவன்கிட்ட சொல்லவும் முடியல. இப்போ நான் பிரியக்கூடிய நேரம் வந்துடுச்சா. யோசித்துக் கொண்டிருக்கும் போது ராகுல் அங்கிருந்து வந்தான்.
சுதா : ஐயோ இவ வேற இப்ப வாரானே. எப்படி இவனை அவாய்ட் பண்றது
ராகுல் : என்னடி ரொம்ப யோசிச்சுட்டே இருக்க. எனக்கு இந்த கல்யாணத்துல ஒரு துளி கூட இஷ்டம் கிடையாது. உன்னாலயும் அம்மாவும் தான் நான் எதுக்கு நான் சம்மதிச்சிருக்கேன். இன்னொன்னு உன்னைய விட்டுக் கொடுத்துதான் இந்த கல்யாணம் நடக்கும்னா அது நான் நடக்க விட மாட்டேன். என்ன புரியுதா.
சுதா : கொஞ்சம் கோபப்பட்டு பேசுவது போல் பேசினால். டேய் என்ன விளையாடுறியா. அந்தப் பொண்ணு தான் உன் கூட கடைசி வரைக்கும் வாழ போகுது. நானா வாடா உன் கூட கடைசி வரை இருக்க போறேன். அந்தப் பொண்ணு உன் பொண்டாட்டி. நான் ஜஸ்ட் ஃபார் பிரண்டு மட்டும் தான் அதை புரிஞ்சுக்கோ. இன்னைக்கு சொல்றதன் கேட்டுக்கோ. அந்தப் பொண்ணு கிட்ட நீ பேசும்போது என்ன பத்தி உயர்வா பேசக்கூடாது. சொல்லிட்டேன்
ராகுல் : ஆமா இப்ப எதுக்கு உன் முகம் மாறி கோபப்படுற மாதிரி பேசுற மாதிரி தெரியுது. ஹலோ மேடம் நான் தான் கோபப்படனும். நீ இப்ப கோவப்பட்ட அடுத்த நிமிஷம் வந்த கல்யாணத்தை நிப்பாட்டி விடுவேன். என்ன பத்தி உனக்கு நல்லா தெரியும். நீ எனக்கு ஒரு கண்ணுன்னா என் அம்மா எனக்கு ஒரு கண்ணு. இப்ப வந்தவா திவ்யா அவள் எல்லாம் கொண்டு. உன் இடத்துல என்னைக்கு வைக்க மாட்டேன். அவள் இன்னும் எனக்கு பொண்டாட்டியை ஆகல. அவள் எனக்கு பொண்டாட்டியா ஆகி என் மனசுல இடம் புடிச்சா மட்டும் தான். உனக்கு கொடுக்குற அங்கீகாரம் அவளுக்கு கொடுப்பேன். அது அவள் நடந்து கொள்வது பொறுத்து தான் இருக்கு
சுதா : கல்யாணத்தை நிறுத்த போறியா நிறுத்து யார் என்ன செய்ய போற. இதனால வருத்தப்பட போறது நான் இல்ல நீ இல்ல உன் அம்மா தான். அவங்க ஏற்கனவே சொன்னதை செய்யக் கூடியவர்கள் நல்ல யோசிச்சு முடிவெடு.
ராகுல் : என்ன சொன்ன திரும்ப சொல்லு உங்க அம்மாவா. எனக்கு பொண்ணு மட்டும் தான் பார்த்து இருக்கு அதுக்குள்ள இனி பிரிச்சிட்ட. அம்மா அம்மானு நீ வாய் நிறைய கூப்பிடாத இப்ப எனக்கு மட்டும் அம்மா அப்படின்னா உனக்கு யாரு.
சுதா : உண்மைதானடா. எனக்கா அவங்க அம்மா உனக்கு தானே அவங்க அம்மா. எனக்கு என்னைக்குமே அம்மா தான் இருக்காங்க. நீ என் பிரண்டு உங்க அம்மா உன் நானும் அம்மானு கூப்பிட்டேன் இதுல என்ன இருக்கு. அதுக்காக உங்க அம்மா ஒன்னும் என்னை பத்து மாசம் வயித்துல சுமந்தங்களா.
ராகுல் : அவள் பேசிய வார்த்தைகள் அவளுக்கு இதயமே நொறுங்கியது போல இருந்தது. சுதா எப்படி பேசக்கூடியவள் ஆளே இல்லையே. ஏன் இப்படி எல்லாம் பேசுற. சுதா நீ ரொம்ப பேசுற அவனுடைய கண்கள் கலங்கியது
சுதா : யாருடா ரொம்ப பேசுறா. இங்க பாரு உனக்கு ஒரு லைப் வரப்போகுது ஒழுங்கா வாழ பாரு. இல்லன்னு வை உனக்கு தான் நஷ்டம் எனக்கு இல்ல.. உங்க வீட்ல ஒரு இழப்பு விழும் மனதை கல்லாக்கிக் கொண்டு சொன்னாள். ராகுல் தன்னை வெறுக்க வேண்டும் என்று
ராகுல் : ச்சி நீ எல்லாம் பிரெண்டா. உன்ன போய் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன் தெரியுமா. எங்க வீட்ல எப்ப வரும் எங்க அம்மா. இதுல நல்லாவே தெரியுதுடி எனக்கு. உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. நான் அந்த பொண்ண கல்யாணம் பண்றேன். அவள் கூட சந்தோசமா வாழ்வேன். நீ என் கண்ணுல கூட முழிக்காத. நான் ஒரு வேலை செத்தாலும். என் முகத்தை பார்க்க கூட வந்திராத. அழுது கொண்டே வெளியே சென்றான்
சுதா : சாரிடா நான் பேசுனது எல்லாமே உன் நல்லதுக்காக மட்டும் தான். என்ன வெறுத்து நீ சந்தோஷமா இருப்ப. அந்தப் பொண்ணு கூட நீ நல்லபடியா சந்தோசமா வாழனும். அதுதான் எனக்கு முக்கியம் அதுதான் எனக்கு வேணும்.
வைதேகி : அப்போது அங்கு கோபத்துடன் வந்தாள். என்னடி ஆச்சு உனக்கு. ராகுல் கோபப்பட்டு அழுதுகிட்டு போறான். அப்படி என்னடி சொன்ன
சுதா : எனக்கு வேற வழி தெரியல டி. அவன் எப்பவும் நல்லா இருக்கணும். திவ்யா தான் நான் ராகுல் கிட்ட பேசுறது பிடிக்கலைன்னு சொல்லிட்டா அது உனக்கு ஏற்கனவே தெரியும். அதாண்டி அவனா என்னைய வெறுக்கிற மாதிரி நான் பேசி விட்டுட்டேன். இனி அவன் அந்த தாரணியம் மறந்து என்னையும் மறந்து அந்த திவ்யா கூட சந்தோஷமா வாழ்வான்.
வைதேகி : உன்னல்லாம் திருத்தவே முடியாதுடி. நீ என்ன பெரிய தியாகியா. ஆனா ஒன்னு ரொம்ப வருத்தப்படுவ டி. நான் சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உன் விருப்பம். ராகுல் கிட்ட உன் காதல சொல்லுடி அடுத்த நிமிஷம் நான் திவ்யா தூக்கி எறிஞ்சிட்டு உன் கூட வருவாண்டி.
சுதா : உன்கிட்ட ஆயிரம் தடவை சொல்லிட்டேன். நான் என் காதலை போய் ராகு கிட்ட சொன்னா பிரண்ட்ஷிப்பை கேவலப்படுத்தியான்னு நினைப்பான். அது வேண்டாம். எனக்கு ஒரு சத்தியம் பண்ணுடி. இந்த விஷயம் யாருக்குமே தெரியக்கூடாது. சொல்லிட்டேன்.
வைதேகி : சத்தியம் நான் பண்ண மாட்டேன்.
சுதா : அப்படினா இதோட என்கிட்ட பேசுறது நிப்பாட்டு
வைதேகி : என்னடி விளையாட்ரியா. நீ தான் என் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் டி சரி சத்தியம் பண்ணி சொல்றேன் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் போதுமா சொல்லி வெளியே சென்றால்
ராகுல் வீட்டில்
கவிதா : டேய் அந்த பொண்ணு கிட்ட போன் போட்டு பேசு டா.
ராகுல் : என்னமா நீ எந்த பொண்ணு கிட்ட என்ன பேச சொல்ற.
கவிதா : லூசாடா நீ உனக்கு பொண்ணு பாத்து வந்தோமே அந்த பொண்ணு கிட்ட் தான்.. வேற யாரு கிட்ட டா சொல்ல போறேன்
ராகுல் : சரி பேசுறேன். சொல்லி ரூம்குள்ள சென்றான்.
திவ்யா : ராகுலுக்கு போன் போட்டால்
ராகுல் : எரிச்சலில் போனை எடுத்து ஹலோ யாருங்க
திவ்யா : நா தான் திவ்யா பேசுறேன்.
ராகுல் : ஓஓஓஓ சரி. என் நம்பர் எப்படி உங்க கிட்ட
திவ்யா : என்ன மறந்துட்டீங்களா. நீங்க தான் போன் கொடுத்து நம்பர் சேவ் பண்ண சொன்னிங்க. மறந்துட்டீங்களா
ராகுல் : சாரி வேற ஒரு டென்ஷன். சரி சொல்லுங்க
திவ்யா : ஓஹோ அந்த சுதா. இவர்கிட்ட சண்டை போட்டு இருப்பாள் அதான் டென்ஷன்ல இருக்கார் போல. ஏன் என்னாச்சு
ராகுல் : ஒன்னுல்ல எதுக்கு போன் போட்டிங்க
திவ்யா : ஏன் நா பேச கூடாதா. நா தான் உங்க பொண்டாட்டி ஆக போறேன். அப்பறம் என்ன. சரி உங்களுக்கு என்ன கஷ்டமோ. இங்க பாருங்க கஷ்டம் எல்லாத்துக்கும் வரும். அதையே நினைச்சிட்டு இருந்தா மனசு தான் கஷ்டம். கவலை படாதீங்க
ராகுல் : சுதா கோபப்படுத்தியது. திவ்யா பேச்சு அதற்கு ஆறுதலாக இருந்தது. தேங்க்ஸ் திவ்யா
திவ்யா : விடுங்க. நமக்குள்ள என்ன தேங்க்ஸ்.வருத்தம் பட்டு இருக்கீங்க அதனால அப்படி பேசின.. சரி உங்க ப்ரெண்ட்ஷிப் பத்தி சொல்லுங்க. அவனிடம் போட்டு வாங்கினால்
ராகுல் : ஒரு நல்ல தோழிக்கு உதாரணம். அவள் மட்டும் தான். திவ்யாவிடம் சுதாவை விட்டு கொடுக்காமல் பேசினான்
திவ்யா : ச்ச இவங்க பிரச்சனை வெளியே சொல்ல மாட்டேன்கிறாரே. எப்படி கண்டுபிடிக்க நான் சொன்ன மாதிரி சுதா இவங்க கிட்ட சண்டை போட்டாங்களா எப்படி. சண்டை போடணும் போட்டா தான் எனக்கு நல்லது. என்று நினைத்துக் கொண்டு. உங்கள பாராட்ட வார்த்தையே இல்லைங்க நல்ல ஒரு பிரண்ட்ஷிப் இப்படியே கடைசி வரை மைந்தன் பண்ணுங்க
ராகுல் : கண்டிப்பா கண்டிப்பா
திவ்யா : அப்புறம் சொல்லுங்க சாப்பிட்டீங்களா
ராகுல் : சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா. சுதா மேலே இருக்கிற கோபத்தில். திவ்யாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக பேச ஆரம்பித்தான்
இருவரும் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தனர்.
திவ்யா : மனதில் அந்த சுதாவை உங்ககிட்ட இருந்து மொத்தமா பிரிக்கணும் அது ஒன்னு தான் என்னுடைய டார்கெட். சீக்கிரமாகவே அதை செஞ்சு காட்டுவேன். அப்படியே நினைத்துக் கொண்டு உறங்கினால்
சுதா வீட்டில்
லதா : ஏனடி உன் காதலை அந்த ராகுல் கிட்ட சொன்னியா இல்லையா
சுதா : விடுக்கா நான் சந்தோஷமா இருக்கிறது கடவுளுக்கு பிடிக்காது அக்கா
. சரி அத்தான் எப்போ வருவாங்க.
:
லதா :அந்தக் கடவுள் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பார் டி.
சுதா : நான் உன்கிட்ட என்ன கேட்டேன் நீ என்கிட்ட என்ன சொல்ற. அத்தான் எப்ப வருவாரு.
லதா : அவர் வெளியூர் போயிருக்கான்டி உனக்கு தெரியும் இல்ல. அப்புறம் என்ன நான் இங்க இருக்கிறது பிடிக்கலையா உனக்கு
சுதா : அக்கா என்ன பேச்சு பேசுற. நான் வேலை பாக்குற இடத்துல ஒரு ஆறுதல் என்றால் அது வைதேகி, வீட்ல ஒரு ஆறுதல் தான் அது நீ மட்டும் தான் அக்கா. அத புரிஞ்சுக்கோ.
லதா : சரிடி வா சாப்பிட்டு தூங்குவோம்.
சுதா : மனதில் டேய் ராகுல் சாரிடா.உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு அதுல நீ சந்தோசமா இருக்கணும். நான் என் காதலை சொன்னால் பிரண்ட்ஷிப்புக்கு அவமானம் என்று நீ என்னை தப்பா நினைச்சு விடுவ. என் காதல் எனக்கு உள்ளே இருக்கட்டும். என்ன பொறுத்த வர நீ சந்தோஷமா இருக்கணும். அந்த தாரணி உனக்கு கொடுக்காத சந்தோஷத்தை. திவ்யா உனக்கு கொடுப்பாங்க. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். கடவுள் கிட்ட அதைத்தான் வேண்டுகிறேன்
சுதா இப்படியே நினைத்துக் கொண்டு உறங்கினால்.
பார்ப்போம் கடவுள் இவர்களை சேர்ப்பாங்களா என்று
அடுத்த பதிவு வியாழக்கிழமை
Posts: 84
Threads: 0
Likes Received: 46 in 37 posts
Likes Given: 339
Joined: Sep 2024
Reputation:
3
Posts: 12,502
Threads: 1
Likes Received: 4,702 in 4,229 posts
Likes Given: 13,178
Joined: May 2019
Reputation:
27
Seema Interesting Update Nanba Super
•
Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நிச்சயதார்த்தம் வேலைகள் நடைபெற்று கொண்டு இருந்தது
திவ்யா ராகுல் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டனர்
நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது. சுதா மட்டும் வரவில்லை. வீட்டில் வருத்தம் பட்டு அழுது கொண்டு இருந்தால்.
பத்திரிகை கொடுக்கும் வேலை மும்முரமாக ஆரம்பித்தது.
வைதேகி : ஹேய் என்னடி இன்னும் உன் காதலை சொல்லலையா டி. ஏன் டி
சுதா : விடு சுதா ப்ளீஸ் என்ன கஷ்டபடுத்தாத
வைதேகி : யாருக்கு டி கஷ்டம். உனக்கு இல்ல எங்களுக்கா, லூசு மாதிரி இருக்காத. கல்யாணம் பத்திரிக்கை வேற வந்துட்டு டி
சுதா : எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டி. இந்த அளவுக்கு நெருங்கி வந்துட்டு. எனக்கு இருக்கிற ஒரே பயம் நான் என் காதலை இதுக்கப்புறம் சொல்லவே முடியாது டி. செத்துரலாம் போல இருக்குடி.
வைதேகி : அப்படியா அடிச்சின்னா. லூசு மாதிரி பேசாத டி. நா வேணா ராகுல் கிட்ட பேச வாடி
சுதா : சும்மா இரு டி. வேண்டாம். எனக்கு இந்த ஜென்மத்துல ராகுல் எனக்கு கிடைக்கல. அடுத்த ஜென்மத்துல கிடைக்கட்டும்.
வைதேகி : யம்மா தியாகி. உன்ன மாதிரி யாராலும் இருக்க முடியாது. இந்த கடவுள் தான் உன்னை சேர்த்து வைக்கணும். Podi லூசு
ராகுல் : டேய் விஜய் நம்ம தாரணி வீட்டுக்கு போய் என் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கணும் டா.
விஜய் : லூசா டா நீ மெண்டல் மாதிரி இருக்க. அவள் வீட்டுக்கு எதுக்குடா
ராகுல் : ஒரு நல்ல பொண்ண நான் கல்யாணம் பண்றது அவ பாக்கணும். இப்படி ஒரு வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டோமே அவளுக்கு தோணனும். அதுக்கு தான்
விஜய் : வந்து தொலைகிறேன். இருவரும் தாரணி வீட்டுக்கு சென்றனர்.
வைதேகி : ஒரு விஷயம் தெரியுமாடி
சுதா : என்னடி விஷயம்
வைதேகி : ராகுல் தாரணி வீட்டுக்கு போயிருக்காங்க டி
சுதா : லூசா டி அவன். அவ வீட்டுக்கு ஏன்டி போறான். போய் அவமானப்பட்டு தான் வர போறான்
வைதேகி : நீ ஏண்டி இவ்வளவு கோவப்படுற. அவன் கல்யாணத்துக்கு தாரணி கூப்பிட போறான் உனக்கு என்ன டி. விடு
சுதா : ஆமா எனக்கு என்ன கவலை
ராகுல் சுதா வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்து கல்யாணத்துக்கு குடும்பத்தோட வரணும். சொல்லிட்டேன் என்று அன்பு கட்டளை விட்டான்.
லதா : கண்டிப்பா வரோம். ராகுல்.. எங்க ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு
திருமண நாள் வந்தது.
மனமேடையில் திவ்யா ராகுல் மாலை உடன் இருந்தனர்
சுதா : என்னால் இத பாக்க முடியல டி
வைதேகி : இங்க இருந்தா உனக்கு கஷ்டமா இருக்கும் டி நீ கிளம்புறது தான் நல்லது.
ராகுல் : யாரும் இங்கிருந்து போகக்கூடாது. என் கல்யாணத்தை பார்த்துட்டு தான் போகணும். மீறி யார் யார் இங்கிருந்து போனா அடுத்த நிமிடம் கல்யாணம் நிறுத்திடுவேன்
தாரணி : டேய் பாத்தியா என் பழைய ஆள் எவ்ளோ ஸ்ட்ரோங் பேசுறான்
விவேக் : சரி விடு எதுக்கு இப்படி எல்லாம் பேசுறான்
தாரணி : என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்
வைதேகி : ஹேய் வேற வழியே இல்ல நீ இருந்து தான் ஆகணும். இல்ல இவன் கல்யாணத்தை நிறுத்திடுவான்
சுதா : என்னால இது எல்லாம் பாக்க முடியலடி. கடவுள் ஏன் தான் என்ன இப்படி கஷ்டம் படுத்துறாரோ
வைதேகி : என்ன செய்ய நீ தான் முன்னாடியே உன் காதல் அவன் கிட்ட சொல்லி இருந்தா இந்த மாதிரி நடக்குமா டி.
சுதா : ஐயோ என்ன கொள்ளாத டி. இப்போ என்ன செய்ய. எல்லாம் கை மீறி போச்சே
ஐயர் : கெட்டிமேளம் கெட்டிமேளம் சொல்ல
திவ்யா எழுந்து சுதாவை உக்கார வைத்த உடனே
ராகுல் சுதா கழுத்தில் தாலி கட்டினான்.
வைதேகி லதா கவிதா விஜய் அனைவரும் பூக்களை அள்ளி அள்ளி சந்தோசமாக போட்டனர்.
சுதாக்கு என்ன நடந்தது என்று புரியல.. ராகுலை பார்த்தால்.
ராகுல் : i love you டி என் பொண்டாட்டி
சுதா : அவளால் எதுமே சொல்ல முடியவில்லை. இன்ப அதிர்ச்சியில் இருந்தால்
ராகுல் எதுக்கு சுதா கழுத்தில் தாலி கட்டினான்.
என்ன நடந்து இருக்கும்.
அடுத்த பதிவில்.
இன்று எனக்கு உடம்பு சரி இல்ல அதான் சிறு பதிவு. அடுத்த பதிவு பெரிய பதிவாக போடுகிறேன்
Posts: 12,502
Threads: 1
Likes Received: 4,702 in 4,229 posts
Likes Given: 13,178
Joined: May 2019
Reputation:
27
Very Nice Update Nanba Super
•
Posts: 248
Threads: 4
Likes Received: 354 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
தாரணி வீட்டில் பத்திரிகை கொடுக்க போகும் போது
தாரணி : வாங்கடா நல்லா இருக்கிங்களா
ராகுல் ஏதும் பேச வில்லை
விஜய் : இருக்கோம். இந்தா பத்திரிகை இவனுக்கு கல்யாணம்
தாரணி : டேய் சூப்பர் டா. நா நினைச்சேன் எப்படியும் சுதாவை தான் கல்யாணம் செய்வ பத்திரிகை பார்த்து. டேய் என்னடா பொண்ணு பேர் திவ்யான்னு போட்டு இருக்கு
விஜய் : ஆமா
ராகுல் : டேய் அமைதியா இரு. தாரணி ஏதோ சுதான்னு சொன்னியே
தாரணி : ஆமா டா அவ தான் உன்ன உசுருக்கு உசுரா காதலிச்சா. எங்க ரெண்டு பேருக்கும் போட்டி. யாரு உன்கிட்ட காதல் சொல்ல. என்று. நா முந்தி உன்கிட்ட சொல்லிட்டேன். நீ அத ஏத்துக்கிட்ட. ஆனா சுதா தான் பாவம். உன்ன உண்மையா லவ் பண்ணா.
ராகுல் : என்னடி சொல்ற
தாரணி : ஆமா டா பேசும்போது அவள் கணவன் ராஜ் வந்தான்.வந்தவர்களை பார்த்து நலம் விசாரித்து உள்ள போக போனான். டேய் என் ப்ரெண்ட்ஸ்க்கு ஜூஸ் போட்டு கொண்டு வா.அவன் சரி என்று சொன்னான். இங்க பாருடா ராகுல். நா உன்ன உண்மையா காதலிக்கல. சுதாவை வெறுப்பு ஏத்த தான் உன்ன காதலிக்கிற மாதிரி நடிச்சேன். போக போக உன் உண்மை காதல் எனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி. ஆனா உன் காதலுக்கு நா தகுதி ஆனவள் இல்லன்னு தான்.. நா என் மாமன் மகன் இவனை கல்யாணம் செஞ்சேன் சுதா எப்படியும் அவள் காதல் உன்கிட்ட சொல்லுவான்னு நினைச்சேன். ஆனா இப்படி ஆகிடுச்சு. அவளுக்காக தான் டா உன்ன விட்டு விலகுன்னே.
ராகுல் : ஹேய் இது எல்லாம் சத்தியமா எனக்கு தெரியாது. தெரிஞ்சி இருந்தா. நா எப்படி அவளை வேண்டாம்ன்னு சொல்வேன்.
விஜய் : என்னடா சொல்ற
ராகுல் : டேய் அவளை தவிர வேற யாரு டா. என்ன நல்லா பாத்துப்பா. என்ன முழுசா புரிஞ்சது அவள் மட்டும் தான். அவளை எப்படி டா வேண்டாம்ன்னு சொல்லுவேன். ஏண்டா ஒரு நல்ல தோழி ஒரு மனைவியா வர கூடாதா
விஜய் : டேய் சூப்பர் டா. உன் ப்ரெண்ட்ஷிப் கெட்டு போகுமோ தான் அவள் நினைச்சி. உன்கிட்ட காதல் சொல்லல.
ராகுல் : டேய் உனக்கு தெரியுமா டா. நீ ஏண்டா என்கிட்ட மறைச்ச
விஜய் : சுதா சத்தியம் வாங்கிட்டா டா. அதான்
ராகுல் : தேங்க்ஸ் தாரணி இந்த உண்மை தெரியாம இருந்தா. சுதாவை மிஸ் பண்ணிருப்பேன். நீ உன் புருஷனை கூட்டிட்டு கல்யாணத்துக்கு வா. இங்க நடந்தது சுதாக்கு தெரிய வேண்டாம்.. கல்யாணம் அன்னைக்கு அவள் கழுத்துல தாலி கட்டுற வரைக்கும் தெரிய வேண்டாம். சரி வா கிளம்புவோம்.
தாரணி : டேய் ஜூஸ்
ராகுல் : ஜூஸ் விட இனிப்பாய் விஷயம் சொல்லிருக்க அது போதும்
நடந்ததை சுதாவிடம் சொல்லி முடித்தான்
சுதா : திவ்யாவை பார்த்தால்
திவ்யா : உங்க காதல் தெரிஞ்ச பிறகு. நா விலகுறது தான் சரி. அதான் நீங்க ப்ரெண்ட்ஷிப் பேசுனது தான் புடிக்கல. அதான் உங்கள விலகி இருக்க சொன்ன. இப்போ உங்க உண்மை காதல் முன்னாடி நா எல்லாம் ஒரு ஆளே இல்ல.
கவிதா : பல வருஷம் மனசுல நினைச்சுகிட்டு தான் இருந்தேன். நீ என் கூடவே இருந்தா. ரொம்ப நல்லா இருக்கும் நினைச்சேன். கடவுள் புண்ணியம் சீக்கிரம் நடந்துருக்கு.
லதா : ஏற்கனவே எல்லாம் எனக்கு தெரியும். ராகுல். உன் கலுத்துல தாலி ஏரும் வரைக்கும் எதுவுமே தெரியக்கூடாது அப்படின்னு சொல்லிட்டாரு. அதான் சொல்லல
வைதேகி : சாதிச்சிட்டியேடி என் தங்கம்
சுதா : ராகுலை அனைவரும் முன்னாடியும் அவனை கட்டி புடித்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்து. I லவ் you டா என்று. சொன்னால்
சுபம்
காமம் இல்லாத ஒரு சிறு காதல் காவியம் எழுதலாம் என்று நினைத்து எழுதிய கதை தான் இது. எனக்கு கருத்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
|