#கனவே_நிஜமாகு
தொடர் 24
கல்லிடைக் குறிச்சி
நாட்டாமை கண்ணாயிரம் பண்ணை வீடு
எதுக்காக அவசரமா வந்தே பிரியா
மகனுக்கு மூளைகட்டி அபரேசன் பன்னனுங்க
தாராளமா பன்னிடலாம் அதுக்கென்ன
அபரேசன் செலவுக்கு 25 வட்சம் ஆகும்னு சொல்றாங்க
அவ்வளவா இவ்வளவு பணம் இருக்கா உன்கிட்டே
என் பணம் நகை எல்லாமே உங்களிடம் தானே கொடுத்து வைச்சிருக்கேன்
நாசமா போச்சி அதையெல்லாம் என் பொண்டாட்டி உருவிட்டா
இப்போ பைசா கிடையாது
நீங்க தானே என்கிட்ட கொடு பையனுக்கு பயன்படும்னு கேட்டிங்க பையனும் உங்க பையன் தான்னு நம்பிக்கைல எல்லாத்தையும் கொடுத்தேன்
அதெல்லாம் தெரியாது பணமும் இல்லை வேணா இரண்டாயிரம் தர்றேன் வாங்கிட்டு போ
இதென்ன அக்கிரமம் என் அப்பா நிலத்தை விற்று 60 லட்சம் தந்திருக்கேன் என்னையே தந்திருக்கேன்
முனியப்பன் உங்களை பகைத்தான் என்று நானே முனியப்பன் மேல கறை பூசினேன்
எதுக்காக எல்லாம் உங்களுக்காக தானே
அது என்னோட குணம் தெரியாதா
சரி உன்னோட பணத்தில் நான் வாழ்நதேனா எங்க பரம்பரை சொத்தை நீங்க கேட்டதுக்காக தானே வித்து கொடுத்தேன்
அதெல்லாம் உன்னை போல பாய்விரிக்கும் பல பெண்களுக்கு கொடுத்தாச்சு இப்ப பணம் இல்லை போடி
ஓ என்பணம் உனக்கு ஜாலியா சுத்த செலவாச்சா சபாஷ்
என்னடி சாபாஷ் கிபாஷ்னு
பிரியா வெறுப்பாக சொன்னாள்
உன் போன்றவனால தானே முனியப்பன் போன்ற நல்ல பிறவிகளே கூனிகுறுகி போகிறது
நான் முனியப்பன் கிட்ட மடிபிச்சை ஏந்தினா தயங்காமல் ஒரு கோடியை அப்படியே தூக்கி கொடுத்துடுவார் அந்தளவுக்கு கருணைமனம் கொண்டிருக்கும் ஆனா நீ தூ
ஏய் என்ன வாய் நீளுது
அதுகிடக்கட்டும் என்மகன் பிழைக்கவாவது நான் கொடுத்த பாதி பணத்தையாவது கொடுத்திடு
என்ன மிரட்டறியா முனியப்பன் இருக்கானே அவனோடு படுத்து பணத்தை கேளு
ஆமா பாய்விரிக்கும் உனக்கு மகன் எதற்கு விசம் கொடுத்து கொன்றுவிடு
சபாஷ் நல்லா சொன்னியே மகனை கொல்லதான் போறேன்
முதலில் அதை செய்
அதுக்கு முன்னால பையனோட. அப்பனை கொல்லனுமே
ஓ முனியப்பனை யா தாராளமா செய்
அவரெல்லாம் பையனுக்கு அப்பனே இல்லைடா நீ தான்டா
அட சும்மா பூச்சாண்டி காட்டாதே ஒழுங்கா ஓடிப்போயிடு
ஓடி போகமாட்டேன் இப்ப பார்
சடனாக கார்மேகம் தலையை கொத்தாக பிடித்தாள் அசுர பலத்தோடு தரதரவென பண்ணை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தாள் பலங்கொண்ட மட்டும் போட்டுஉதைத்தாள்
முனியப்பன் மீது கறைபடுத்த காரணமான நாட்டாமை ஆலமர மேடைவரை தரதரவென இழுத்து வந்தாள் ஊரே கூடிவிட்டது
கார்மேகம் மனைவி காப்பாத்த ஓடிவர பலங்கொண்டு எட்டி உதைத்தாள் பறந்துபோய் வீழ்ந்தாள்
தன்னோட மகன் உயிருக்கு போராட கார்மேகம் நடந்து கொண்ட செயலையும் இவனுக்காக முனியப்பனை பலிகடா ஆக்கிய அனைத்து உண்மைகளையும் ஊரார் முன் கொட்டி தீர்த்தாள்
இப்படிப்பட்ட கேவலமான துரோகியை போலீஸ் ல பிடித்து கொடும்மா
பிரியா கசப்பாக சொன்னாள்
போலீசா பிடிப்பான் இவனோட பணத்துக்கு என்னை தான் உள்ளே தள்ளுவான் அதை நடக்க விடமாட்டேன்
இப்ப என்ன தான் பன்ன போறே
கூட்டத்தில் ஒருவர் கேக்க
இனிதான் ஆரம்பம் இது போன்ற பிறவிகள் எங்கும் தலையெடுக்க கூடாது
பிரியா இடுப்பில் மறைத்து வைத்த கத்தியை வெளியே எடுத்தாள்
கார்மேகம் மனைவி அதிர்ந்து காப்பாத்துங்க காப்பாத்துங்க கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டாள் யாரும் பிரியா வை நெருங்கவில்லை
பத்ரகாளியாட்டம் இருக்கும் பிரியா முன் போய் உயிரை இழக்க விரும்பவில்லை
சடனாக பிரியா கார்மேகம் கழுத்தை கோழியை அறுப்பதுபோல அறுத்து தலையை மட்டும் கையில் எடுத்து பதட்டமே இல்லாமல் ஊரே பார்க்க போலீஸ் ஸ்டேசன் நோக்கி நடந்தாள்
போலீஸ் ஸ்டேசன் வாசலில் பரபரப்பு
பிரியா வந்த கோலத்தை கண்டு போலீசாரே அதிர்ந்தார்கள்
குறிப்பாக பெண் சப் இன்பெக்டர் தான் என்கவுண்டர் ல போட்டு வீழ்த்த நினைத்தவனை தனி மனுசியாக கழுத்தை அறுத்திட்டே வந்திருக்கா உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளிக் காட்டாமல்
யோவ் ஏட்டு அந்த தலையை வாங்கிக்கோ பிரியா கிட்ட வாக்குமூலம் எழுதி வாங்கிடு சரியா
சரிங்க மேடம்
பிரியா வை துன்புறுத்த கூடாது யாரும் அடிக்க கூடாது மீறி செய்த நடவடிக்கை பாயும்
மேடம் ஒரு உதவி செய்கிறீர்களா
என்ன உதவி
தன்னோட மகன் உயிருக்கு போராடுவதையும் தான் சேமித்த பணத்தை கார்மேகம் ஏமாற்றி விட்டதால் மகனை காப்பாத்த முடியாத பாவியானதையும் சொன்னவள்
மருத்துவமனை டாக்டர் ரதிமீனா விடம் போனில் பேச வேண்டும் என கைபேசி உதவியை கேட்டாள்
தாராளமா பேசு கைபேசி தந்தாள்
மறுமுனையில் ரதிமீனா
பிரியா எப்படி இருக்கே
ஏதோ இருக்கேன்மா எனக்கு ஒரு உதவி பன்னுங்க
சொல்லு பிரியா
அம்மா என் மகனை கொன்றுவிடு ரதிமீனா அதிர்ந்தாள் கூடவே கவனித்து இருந்த இன்பெக்டரும் தான்
மறுமுனையில் ரதிமீனா
பிரியா உனக்கு பைத்தியமா இன்றிரவு தான் பையனோட உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு துரிதமாக மூளை அறுவை சிக்கிச்சை செய்து கேன்சர் கட்டியை முற்றிலுமாக அகற்றி விட்டேன் பையன் அபாய கட்டத்தை தாண்டி விட்டான் மேற்படி உயிருக்கு ஆபத்தில்லை கஞ்சா பழக்கமும் இருக்காது
அப்படி போராடி பிழைக்க வைத்த பையனை போல் கொல்ல சொல்றே நீயெல்லாம் ஒரு தாயா
அம்மா தாயா இருப்பதால் தான்மா கொல்ல சொன்னேன் மகனை காப்பாத்த பணமே இல்லை இனிமேலும் நான் மகன் பக்கத்தில் இருந்து கவனிக்கும் தகுதியையும் இழந்துவிட்டேன் கார்மேகத்தை கொன்றுவிட்டு போலீஸ் ஸ்டேசன்ல இருக்கேன்
பிரியா என்ன காரியம் செய்துவிட்டாய்
நான் மருத்துவ செலவை தான் சொன்னேன் உடனே சென்றுவிட்டாய் ஆனா மாமா என்னை தான் கடிந்து கொண்டார் அவகிட்ட சுத்தமா பணம் இருக்காது அவ சேமிக்க சொல்லி கொடுத்த பணம் கூட கார்மேகம் கிட்ட இருக்காது ஒரே நாளில் ஒருகோடியை செலவழிக்கும் ஊதாரி பய அவன்னு சொல்லி உனக்கு 25 லட்சம் தானே வேணும் ஒரு கோடியே ஆனாலும் இவனை பிழைக்க வைக்கனும் ஏன்னா இவனும் என் மகன் தான்னு மாமா கோபபட்டாரு
உங்க மகனா திகைப்போடு கேட்டேன்
மீனா இவன் எனக்கு பிறக்கலைனாலும்
குழந்தையில் இருந்து இன்றுவரை அப்பா ஸ்தானத்தில் வைத்திருப்பவன் அவனுக்கு நான் உண்மையான அப்பா தான்
பிரியா முறைதவறி போனாலும் இவன் அப்படி அல்ல கஞ்சா பழக்கம் தப்பான பசங்களால் ஏற்பட்டு இருக்கு நாமே சரிபன்னிடலாம்
முடிந்தா பிரியாவுக்கும் இங்கே வேலை போட்டு கொடு இவனும் நம்மோட இருக்கட்டும் மாமா சொன்னதை ரதிமீனா சொன்னால்
மறுமுனையில்
பிரியா உடைந்து அழ ஆரம்பித்து விட்டாள் இன்ஸ்பெக்டருக்கே என்னவோ போலானது
கைபேசி யை வாங்கி ஹலோ நான் சப் இன்பெக்டர் பேசறேன் நீங்க யாரு ஏன் இவ அழறா
மேடம் நான் டாக்டர் ரதிமீனா ரதிமீனா டிரவால்ஸ் மற்றும் பலகம்பெனி தொழிலதிபர் முனியப்பன் என்கிற சிவநேசன் மனைவி இதே முனியப்பன் தான் பிரியா கணவரா ஊரில்
ஓ முனியப்பன் அங்கே இருக்காரா அவர் எனக்கு நல்ல நண்பர் என்பேர் மைதிலி அவருக்கு தெரியும் என்னை
அப்படியா மேடம் இதோ மாமாவே வருகிறார் அவரோடு பேசுங்க
மாமாவிடம் பிரியா கொலை செய்து போலீஸ் ஸ்டேசனில் இருப்பதை சொன்னாள்
ஹலோ மைதிலி எப்படி இருக்கே
நான் இருப்பது இருக்கட்டும் எங்கடா ஓடி போனே
வேறெங்க என்னோட மாமா மகளை சைட் அடிக்க தான்
போடா மக்கா நான் என்கவுண்டர் ல போட்டுதள்ள நினைத்தவனை பிரியா தலையை பிடுங்கி கொண்டு வந்துட்டா டா
இந்த கேசை எப்படி மாற்றுவே
பிசியா யாருக்கும் தெரியாம கொலை செய்தா கூட கேசை திசை திருப்பிடலாம்
ஆனா தலைய எடுத்துட்டு ஊரை சுத்தி வந்திருக்கா இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி போச்சு நான் நினைத்தாலும் சட்டத்துக்கு மீறி ஏதும் செய்ய முடியாதுடா
ஏன் முடியாது மைதிலி
நீயே என்கவுண்டர் பன்னுமளவு அவன் எவ்வளவு குற்றம் செய்திருப்பான் எனக்குகூட தெரியும் பிரியா ஊரை சுற்றி வந்தாலும் குற்றபின்ணணி பிரியாவுக்கு சாதகமாகவே அமையும்
பிரியா தற்காப்புக்காக கொலை செய்ததாக ஸ்டெட்மெண்ட் போடு வழக்கறிஞர் தேவையில்லை நான் வாதாட களத்தில் குதிக்கிறேன் பிரியாவை துன்புறுத்தாதே கைபேசி வைத்துவிட்டார்
பிரியா முனியப்பன் உன்னை சிறையில் போகவிடாம செய்ய எல்லா வேலையையும் தொடங்கி விட்டார் அவர் நினைத்தா முடியாதது ஒன்றுமில்லை ஊரை கடிக்கும் நச்சு பாம்பை தான் நீ அடிச்சு கொன்றிருக்கே கவலை வேண்டாம் இந்த கேஸ் ஊருக்கே பாடமாகும்
கவலை இன்றி இருங்க உங்களை லாக்காப்ல எல்லாம் போடமாட்டேன் என் வீட்டிலும் தங்கலாம் நாளை கோர்ட்ல போகும் முன் உன்னை ஜமீன்ல எடுக்க முனியப்பன் தயாராக இருப்பான் சரியா
என்னதான் நீ போலி தாலி கட்டி கொண்டாலும் முனியப்பனி ன் முதல் மனைவி நீ அதைதான் முனியப்பன் சொல்றான் சரியா
பிரியா ஏதும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் அழுதாள்
கடவுளை பக்கத்தில் வைத்துக் கொண்டே கள்வனை கடவுளென வாழ்ந்த பாவியாகி விட்டேனே
தொடரும்