♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(20-07-2024, 06:02 AM)snegithan Wrote: உங்களின் விமர்சனத்திற்கு நன்றி ப்ரோ,ஷன்மதியும் சரி,சஞ்சனாவும் சரி இருவருமே ராஜாவை காதலிக்கிறார்கள்.ராஜாவின் பிரம்மச்சரிய ஜாதகத்தை சஞ்சனா உடைத்து விட்டாள்.அதனால் அவளுக்கு கண்டம் ஏற்படுகிறது. அதன் பிறகு தான் ஷன்மதி கதையில் வருகிறாள்.ஷன்மதிக்கு சஞ்சனா மீது பொறாமை உண்டாகிறது.அதாவது ஒரு குழந்தைக்கு தன் தாயிடம் இன்னொரு குழந்தை வந்தால் பொறாமை உண்டாகும் அல்லவா..!அது போல..ஆனால் புதிதாக வந்த குழந்தை மேல் வரும் கோபம் ஏனோ தாய் மீது வருவது இல்லை.அது போல ஷன்மதிக்கு சஞ்சனா மேல் வந்த கோபம் ராஜா மீது வரவில்லை.காரணம் ராஜா மீது கொண்டு இருந்த காதல். சஞ்சனாவிற்கு ஒருவேளை ஏதாவது தீங்கு செய்தாலும் அதை ராஜா தான் குறுக்கே புகுந்து ஏற்று கொள்வான் என்று சாம்பார் ஊற்றும் பொழுது நடந்த நிகழ்வை சொன்னேன்..பின்னாடி அது போல தான் நடந்தது.. சஞ்சனாவிற்கு வந்த ஆபத்தை ராஜா நடுவில் புகுந்து ஏற்று கொண்டு அவன் உயிர் போகும் அளவிற்கு சம்பவம் நடந்து விட்டது..அதனால் தன் காதலையே விட்டு கொடுத்து விட்டாள் ஷன்மதி என்று சொல்லி இருப்பேன்..ஆனால் அவளும் அவனை உண்மையாக காதலித்து இருக்கிறாள்.அதை தான் இரண்டாம் பாகத்தில் சொல்ல வருகிறேன்.இந்த இரண்டாம் பாகம் மொத்தமே 5 அல்லது 6 பாகங்கள் மட்டுமே வரும்..அதாவது இந்த கதை வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்றே முடிந்து விடும்

Dodgy enna tha vilakkam lokesh maari sonnalum enaku edho tv serial varah pola tha bro antha character add panna pola thonuchu... Ipo second part la adhku oru vidai kedaikumaa pakuren... Antha character edho vanthom ponum tha irunthchu pudusa irunthaa feel illa.... Adhu vera Priyanka look koduthu irukavum edho konjam banghead Angry Sleepy kadupu kovam vantruchu... importance illatha role ku edhku Ava nu.... Anyway waiting to know about shanmathi love depth...

Ninga sonna kuridula ok tha bro... Adhu antha bogar sonna pola move aachi anaah shanmathi role necessary ah thonuchu...

Padikum podhu.... Nice humors sariya padika mudila well placed using vaasu and Rajesh coffee shop la vevu partha scenes very good

Avangalku kulla kateena wavelength mind blowing... Real love feel thanthuchu...

Anaah ennavo shamanthi part padicha apo edhku intha character thonuchu 

Ninga sonna vilakkam la kurai solla virambala neenga nenachatha kadhai kondu poeye irukinga anaah enaku tha pala typical movie and serial thonudhu pola... Anyway waiting for few more episodes to justify on shanmathi love  Blush

yourock superb feel good story..
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(20-07-2024, 07:18 AM)krishkj Wrote: Dodgy enna tha vilakkam lokesh maari sonnalum enaku edho tv serial varah pola tha bro antha character add panna pola thonuchu... Ipo second part la adhku oru vidai kedaikumaa pakuren... Antha character edho vanthom ponum tha irunthchu pudusa irunthaa feel illa.... Adhu vera Priyanka look koduthu irukavum edho konjam banghead Angry Sleepy kadupu kovam vantruchu... importance illatha role ku edhku Ava nu.... Anyway waiting to know about shanmathi love depth...

Ninga sonna kuridula ok tha bro... Adhu antha bogar sonna pola move aachi anaah shanmathi role necessary ah thonuchu...

Padikum podhu.... Nice humors sariya padika mudila well placed using vaasu and Rajesh coffee shop la vevu partha scenes very good

Avangalku kulla kateena wavelength mind blowing... Real love feel thanthuchu...

Anaah ennavo shamanthi part padicha apo edhku intha character thonuchu 

Ninga sonna vilakkam la kurai solla virambala neenga nenachatha kadhai kondu poeye irukinga anaah enaku tha pala typical movie and serial thonudhu pola... Anyway waiting for few more episodes to justify on shanmathi love  Blush

yourock superb feel good story..


உங்க ஃபீல் 100% correct.கண்டிப்பா பிரியங்காவிற்கு அந்த மாதிரி டம்மி role கொடுத்து இருக்க கூடாது தான்.அந்த ஃபீல் எனக்கும் இருந்தது.அதனால் தான் பிரியங்காவை வைத்து முழுக்க முழுக்க எழுதிய கதை காத்தவராயன் கதை. அப்ப கூட என் மனசு ஆறல‌. அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் part 2
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
ஷன்மதிய ராஜாவோட சேத்துவைங்க சகோ, நல்லா இருந்துட்டு போகட்டும்... பாவம் ❤
[+] 1 user Likes siva05's post
Like Reply
(20-07-2024, 08:04 AM)siva05 Wrote: ஷன்மதிய ராஜாவோட சேத்துவைங்க சகோ, நல்லா இருந்துட்டு போகட்டும்... பாவம் ❤

கதை நகர்வு அப்படி தான் வரும் ப்ரோ..
Like Reply
Episode -64

ஷன்மதி சஞ்சனாவை பார்த்து,"ராஜாவின் வாழ்வில் இருந்து உன்னை அகற்ற வேண்டும் என்று நினைச்சேனே தவிர,என்றுமே உன்னை அழிக்க நினைத்தது இல்ல சஞ்சனா..!எப்போ அவன் உனக்கு வந்த ஆபத்தை அவன் ஏற்று கொண்டு உனக்காக உயிரை விட துணிந்தானோ அந்த ஒரு நொடியே ,உங்க வாழ்வில் நான் தலையிட கூடாது என முடிவு பண்ணிட்டேன்.உங்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என நினைச்சு தான் நான் கல்யாணமும்  பண்ணி கொண்டேன்..ஆனால் என் மனசு முழுக்க ராஜா இருக்கும் பொழுது எப்படி இன்னொருத்தரை தொட அனுமதிக்க முடியும் சொல்லு..அதனால் என் புருஷன் கிட்ட,என்னோட காதலை சொல்லி கொஞ்ச நாளைக்கு மட்டும் என் மனசு மாறும் வரை உடலுறவை தள்ளி வைக்க சொல்லி அனுமதி கேட்டேன்..ஆனால் அவன் ஒத்துக்கல.என்னை உடலுறவுக்கு பலவந்தபடுத்தினான். நான் போராடி பாத்தேன்,என்னால் அவனை எதிர்க்க முடியல.கடைசியில் அவன் என்னை தொடும் பொழுது நான் ராஜா என்னை தொடுவதாக நினைத்து தான் கற்பனை பண்ணி கொண்டேன்.அவனுக்கு என் அழகு மேல தான் மோகம் என்பதை புரிந்து என் மனசு வலித்தது..தினம் தினம் சித்திரவதை,என்னை இழிவாக பேசினான்.வெறும் காதல் தானா..!இல்லை ரெண்டு பேரும் அதற்கு மேல் போய்ட்டீங்களா..!என்று கேட்டான்.அதுக்கு நான் அவனிடம் நான் மட்டும் ராஜாவை லவ் பண்ணேன்..அவன் என்னை லவ் பண்ணல என்று சொன்னேன்..ஆனா அவன் அதற்கு நம்பல..அது எப்படி இவ்வளவு அழகான பெண்ணே வந்து லவ் சொல்லும் பொழுது அதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஒன்று அவன் முட்டாளாக இருப்பான்,இல்லை அவன் ஆண்மை அற்றவனாக இருப்பான் என்று சொல்லி ராஜாவை திட்டும் பொழுது,என்னால பொறுக்க முடியல.அவனிடம் சண்டை போட்டு இந்தியா வந்தேன்..அவன் என் வீட்டில் என்ன சொல்லி இருப்பான் என்று தெரியல..!என் பிரியமான அப்பாவின் வெறுப்பை சம்பாதிக்க நேர்ந்தது..என்னை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.எனக்கு தெரிந்த ப்ரெண்ட் மூலம் திருச்சி வந்தேன்.விவாகரத்து வாங்கினேன்..என்னோட கற்பனை உலகத்தில் ராஜாவோடு சேர்ந்து நிம்மதியா வாழ தொடங்கினேன்..என்று அவள் சொல்ல கண்களில் கண்ணீர் வழிந்தது..சஞ்சனா அந்த அறையை நோட்டம் விட்டாள்..அந்த சிறு அறையில் திரும்பும் பக்கம் எல்லாம் ராஜாவின் உருவமே தென்பட்டது. கடிகாரம்,கப்,போர்வை என ஒன்றை கூட ஷன்மதி விட்டு வைக்கவில்லை..எல்லாவற்றிலும் ராஜாவின் உருவத்தை ஷன்மதி பொறித்து வைத்து இருந்தாள்..

இவற்றை எல்லாம் சஞ்சனா பார்ப்பதை அறிந்த ஷன்மதி,"சஞ்சனா என்னை மன்னிச்சிடு..உன்னோடவன் நிழலை நான் வைத்து மட்டும் வாழ அனுமதி கொடு..நான் உன்னோட வாழ்வில் கண்டிப்பா நான் எப்பவுமே குறுக்கே வர மாட்டேன்.."

சஞ்சனா அவளை கட்டி கொண்டு,"இப்பவும் ராஜாவோட வாழ உனக்கு ஆசையா ஷன்மதி.."என கேட்டாள்..

ஷன்மதி கலங்கிய கண்களுடன்,"இப்போ கூட என் ராஜாவையும்,அவன் குழந்தையையும் என்கிட்ட கொடுத்துடு என்று உன்கிட்ட கத்தனும் போல இருக்கு..ஆனால் இது தப்பு என்று என் மனசு சொல்வதால் கேக்க முடியல.."

அதற்குள் சஞ்சனா மொபைல் அழைக்க,அதை எடுத்து பேசினாள்."சரி உடனே வரேன்.."என்று போனை வைத்தாள்..

"வா ஷன்மதி ஹாஸ்பிடல் போலாம்..'

"இல்ல நான் வரல சஞ்சனா.."

"நீ கண்டிப்பா வந்து தான் ஆகனும் ஷன்மதி..! உன் ராஜா நல்லா இருப்பதை நீ பார்க்க வேண்டாமா..!"என சொல்லி அவளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றாள்.

உன் ராஜா என்று சஞ்சனா சொன்ன வார்த்தை ஷன்மதிக்கு உள்ளூர மகிழ்ச்சி தந்தாலும்,அவள் தன்னை மறந்து சொல்லி இருப்பாள் என்ற எண்ணம் வர,பொங்கி வந்த மகிழ்ச்சி உடனே வடிந்து போனது..

ராஜாவின் அறைக்குள் நுழைய,அவன் கண்விழித்து அமர்ந்து இருந்தான்..

ஷன்மதியை பார்த்து ராஜா அவளிடம்,"வா ஷன்மதி நீயா என்னை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணே..நான் எப்போ சென்னையில் இருந்து இங்கே வந்தேன்..நீ இங்கே எப்படி?என கேட்டான்..

ஷன்மதி,சஞ்சனா இருவரும்  ஒன்றும் புரியாமல் விழிக்க அடுத்த அதிர்ச்சி சஞ்சனாவிற்கு தாக்கியது..சஞ்சனாவை பார்த்து,"இவங்க யாரு உன்னோட ப்ரெண்ட்டா.. ஷன்மதி!"என அடுத்த தாக்குதலை தொடுத்தான்..

ஷன்மதி சஞ்சனாவை பற்றி சொல்ல வாயை திறக்க,சஞ்சனா அவள் கைபிடித்து அழுத்தினாள். "ஆமா நான் இவளோட ப்ரெண்ட் தான்..நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..நாங்க கொஞ்சம் டாக்டரை பார்த்திட்டு வந்து விடுகிறோம்" என    சஞ்சனா சொல்லி விட்டு ஷன்மதியை வெளியே அழைத்து சென்றாள்..

சஞ்சனா டாக்டரை சென்று பார்த்து,"டாக்டர் என்னை அவருக்கு அடையாளம் தெரியல..ஆனால் ஷன்மதியை மட்டும் அடையாளம் தெரியுது.."என்று சொல்ல

"நீங்க அவருக்கு எவ்வளவு நாளா பழக்கம்"என டாக்டர் கேட்க,

'ஒரு நாலு வருஷம் இருக்கும் டாக்டர்.."என சஞ்சனா சொன்னாள்.

"அப்போ நீங்க" என ஷன்மதியை பார்த்து கேட்டார்.

"எனக்கு எட்டு வருஷம் மேல தெரியும் டாக்டர்.."

"அப்போ ரொம்ப சிம்பிள்.அவருக்கு பின் மண்டையில் அடிபட்டதால் சமீபமா நடந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து விட்டது..அது ஒன்னும் பிரச்சினை இல்ல..கொஞ்ச கொஞ்சமாக எல்லாம் ஞாபகத்திற்கு வந்து விடும்.உதாரணத்திற்கு அவர் செய்யும் வேலையில் இந்த நாலு வருஷத்தில் ஏதாவது கற்று கொண்டு இருந்தால் இப்போ அது அவருக்கு ஞாபகம் இருக்காது. ஆனா அவருக்கு அதை யாராவது ஒருவர் ஞாபகப்படுத்தினால் அந்த விசயம் மட்டும் உடனே ஞாபகத்திற்கு வந்து விடும்..அதே போல உங்க கூட அவர் பழகிய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா நீங்க ஞாபகப்படுத்தினால் அவர் பழைய நினைவுக்கு கூடிய சீக்கிரமே வந்து விடுவார்..நான் scan ரிப்போர்ட் எல்லாம் பார்த்துட்டேன்.பயப்படும்படி ஒன்னுமே இல்லை.."என்று சொன்னார்.

"அது போதும் டாக்டர்..மிச்சத்தை நாங்க பார்த்துக்கிறோம்"என ஷன்மதி சொன்னாள்..

டாக்டர் அறை விட்டு வெளியே வந்த உடன் சஞ்சனா, ஷன்மதி கைப்பிடித்து,"ஷன்மதி,நான் இப்போ ராஜா கிட்ட பேசும் பொழுது நீ குறுக்கே பேச மாட்டேன் என்று சஞ்சய் மேல சத்தியம் பண்ணி சொல்லு.."

"எதுக்கு சஞ்சனா..? இப்போ சத்தியம் எல்லாம் கேட்கிற.."

"எல்லாம் காரணமாக தான்..நான் கேட்பதை உடனே செய்.."

ஷன்மதி சத்தியம் செய்ய,சஞ்சனா தீர்மான முடிவோடு ராஜா அறையை நோக்கி நடந்தாள்.

[Image: Snapinsta-app-452023555-1433620490560008...n-1080.jpg]
[+] 6 users Like Geneliarasigan's post
Like Reply
good to read only you could put expectations in in readers mind in this forum without any sexual things in story
[+] 1 user Likes damien123456's post
Like Reply
இது எதோ படிக்க விட்ட குறை தொட்ட குறை மாறி இருக்கு brother...
Sorry lost interest...
Na shamanthi oru character irukarthaey mranthuduren..
Ninga restart edhku panni irukinha night padikum podhae 80-90% guess panen...

Adha keka venam vituten...

Ipo ninglae priyanka kagah restart solavum confirm aiduchu...

Story moving ok tha...

Anaah almost edho pala movies la parthaa scenes feel agthu onnum feel good ah terila bro sorry to say edvum otalah...

Idhku shanamthi vera orthat love panna pola edvum track கொண்டு வந்தா better...
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(20-07-2024, 10:54 AM)krishkj Wrote: இது எதோ படிக்க விட்ட குறை தொட்ட குறை மாறி இருக்கு brother...
Sorry lost interest...
Na shamanthi oru character irukarthaey mranthuduren..
Ninga restart edhku panni irukinha night padikum podhae 80-90% guess panen...

Adha keka venam vituten...

Ipo ninglae priyanka kagah restart solavum confirm aiduchu...

Story moving ok tha...

Anaah almost edho pala movies la parthaa scenes feel agthu onnum feel good ah terila bro sorry to day edvum otalah...

Idhku shanamthi vera orthat love panna pola edvum track கொண்டு வந்தா better...

இன்னும் 3 பார்ட் தானே ப்ரோ..விடுங்க.. ஷன்மதி இன்னொருவரை காதலிப்பது போல வைத்தால் அது அவள் காதலை degrade பண்ணுவது போல ஆகிவிடும்..இதில் ஷன்மதி மற்றும் சஞ்சனா இருவரும் ராஜா மீது கொண்ட காதல் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்று தான் சொல்ல நினைக்கிறேன்.
Like Reply
(20-07-2024, 10:52 AM)damien123456 Wrote: good to read only you could put expectations in in readers mind in this forum without any sexual things in story

Thank you bro ,for your compliment
Like Reply
(20-07-2024, 11:13 AM)snegithan Wrote: இன்னும் 3 பார்ட் தானே ப்ரோ..விடுங்க.. ஷன்மதி இன்னொருவரை காதலிப்பது போல வைத்தால் அது அவள் காதலை degrade பண்ணுவது போல ஆகிவிடும்..இதில் ஷன்மதி மற்றும் சஞ்சனா இருவரும் ராஜா மீது கொண்ட காதல் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்று தான் சொல்ல நினைக்கிறேன்.

Ava vera orthar love panraa pola irukaanum solla varalah

Shamanthi ah vera oru person one side love panni irunthu iruklam solren bro

Oru short film parthen recent time la

Adhula ninga solraa pola tha love pogum one person melah

Anaah Avan love panrathu orthee tha sincere  ah

Adhae pola innoru ponnu love pannuva anaah avala innoru paiyan love pannitu irupaan adha Ava ta solla mudiyama irupaan 

Later avalukagah Ava kuda avala oru nizhal maari avalakae teriyama Ava nenapulae vazunthunuh irupaan

Anyway I already apdi oru character irukartha maranthhuduren soliten

Nalla kesari kindi vidunga Shy

Intha story munnavae ozunga padichu irunthaa shamanthi character venam solli irunthu irupen... Anyway mudinchathu mudinhi pochu ninga patch work pannunga  Sleepy
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Excellent update
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
Vera level bro neenga
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Very nice
[+] 1 user Likes Karmayogee's post
Like Reply
(20-07-2024, 11:45 AM)krishkj Wrote: Ava vera orthar love panraa pola irukaanum solla varalah

Shamanthi ah vera oru person one side love panni irunthu iruklam solren bro

Oru short film parthen recent time la

Adhula ninga solraa pola tha love pogum one person melah

Anaah Avan love panrathu orthee tha sincere  ah

Adhae pola innoru ponnu love pannuva anaah avala innoru paiyan love pannitu irupaan adha Ava ta solla mudiyama irupaan 

Later avalukagah Ava kuda avala oru nizhal maari avalakae teriyama Ava nenapulae vazunthunuh irupaan

Anyway I already apdi oru character irukartha maranthhuduren soliten

Nalla kesari kindi vidunga Shy

Intha story munnavae ozunga padichu irunthaa shamanthi character venam solli irunthu irupen... Anyway mudinchathu mudinhi pochu ninga patch work pannunga  Sleepy

காத்தவராயன் ஸ்டோரி எழுதி கொண்டு இருக்கிறேன்..ஆனா எனக்கு இன்னும் திருப்தியா வரல ப்ரோ,அதனால் அந்த இடைவெளியில் இந்த கதைக்கு சின்ன சின்ன பதிவாக போட்டு முடித்து விட போகிறேன்.கதை ஏற்கனவே யோசித்து வைத்து விட்டதால் பெரிதாக எதையும் மாற்றம் பண்ண முடியல..
Like Reply
(20-07-2024, 11:49 AM)Gopal Ratnam Wrote: Excellent update

Thank you
Like Reply
(20-07-2024, 12:46 PM)Ananthukutty Wrote: Vera level bro neenga

Namaskar
Like Reply
(20-07-2024, 05:08 PM)Karmayogee Wrote: Very nice

நன்றி
Like Reply
Episode - 65

சஞ்சனா மற்றும் ஷன்மதி ராஜாவிடம் சென்றனர்..

சஞ்சனாவை பார்த்து மீண்டும் ராஜா ஈர்க்கபட்டான்.ஆனால் அவள்  கழுத்தில் இருந்த தாலி,அவள் வேறொருவரின் மனைவியோ என்ற எண்ணம் தோன்ற செய்தது.அதனால் அவன் பார்வையை ஷன்மதி பக்கம் திருப்பினான்.

சஞ்சனாவை ஏன் நான் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கிறேன் என புரியாமல் அவன் குழம்பினான்..

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் சஞ்சனா கை தேர்ந்தவள்..ராஜாவை பார்த்து,"ராஜா உங்களுக்கு இப்போ மண்டையில் அடிப்பட்டதால் நாலு வருஷமா நடந்த சம்பவம் எதுவும் உங்களுக்கு நினைவு இல்லை..நீங்களும், ஷன்மதியும் ஒருவரையொருவர் விரும்பி இருக்கீங்க.."என்ற ஒரு குண்டை தூக்கி போட்டாள்.

இதை கேட்டு ஷன்மதி அதிர்ந்தாள்..சஞ்சனா எதுவும் பேசக்கூடாது என்று சத்தியம் வாங்கி இருந்ததால் அமைதியாக இருந்தாள்.

அவள் சொல்வதை ராஜா நம்ப முடியாமல் பார்க்க,சஞ்சனா மேலும் தன் பேச்சை தொடர்ந்தாள்."உங்க காதலை தெரிந்து கொண்ட ஷன்மதி அப்பா வேறொருவருக்கு ஷன்மதியை திருமணமும் செய்து விட்டார். ஆனால் உன்னையே நினைத்து கொண்டு இருந்த ஷன்மதியால் அவனோடு வாழ முடியவில்லை.தினம் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்த ஷன்மதியால் மேற்கொண்டு அவனோடு வாழ முடியாமல் விவாகரத்து வாங்கி கொண்டு வந்து விட்டாள்.அவளோட உண்மை காதலை அறிந்த நீ ,நாளை ஷன்மதியை கல்யாணம் செய்து கொள்வதாகவும் இருந்தாய்..ஆனால் அதற்குள் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது. ஆனா இப்பவும் பாதகம் இல்ல,டாக்டர் உனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்..நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே முடிவு பண்ண படி நாளை கண்டிப்பா திருமணம் பண்ணிக்க முடியும்.."

"என்ன சொல்றீங்க நீங்க சஞ்சனா..!நீங்க சொல்றத என்னால் கொஞ்சம் கூட நம்ப முடியல..முதலில் என்னோட அம்மா எங்கே..?.."

"உங்களோட அம்மாவுக்கும் இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல ராஜா காரணம் ஷன்மதி வேறொருவருக்கு கல்யாணம் ஆனவள் என்பதால் மறுக்கிறாங்க.."என அடுக்கடுக்காக பொய்யை சஞ்சனா சொன்னாள்.

ராஜா சிரித்தான்.."நீங்க சொல்றத கொஞ்சம் கூட என்னால நம்ப முடியல..சஞ்சனா..!மேலும் உங்களுக்கும்,எனக்கும் ஏதோ தொடர்பு இருக்கு என நான் உணர்கிறேன்.."

சஞ்சனா உஷாராகி,"நான் சொன்னா நீ நம்ப மாட்டே ராஜா..!உன் அம்மா சொன்னா நீ நம்புவீயா.."என கேட்டாள்.

"ம்ம்..நம்புவேன்.."

"சரி அப்போ ஒரு நிமிஷம் இருங்க,நான் உன்னோட அம்மாவுக்கு நான் ஃபோன் பண்ணிட்டு வரேன்.."

சஞ்சனா வெளியே வர, ஷன்மதி பின்னாடியே ஒடி வந்தாள்..

"சஞ்சனா நீ என்ன பண்றே.தெரிஞ்சு தான் பண்றீயா..",

"ஷன்மதி நான் என்ன பண்றேன் என்று நல்லா தெரிந்து தான் பண்றேன்..நீ கொஞ்சம் அமைதியா‌ இரு.நான் கடைசியாக உன்கிட்ட பேசறேன்.."

சஞ்சனா ராஜாவின் அம்மாவிற்கு ஃபோன் செய்தாள்..

"என்ன ஆச்சு சஞ்சனா..!நேற்று அவசரமா திருச்சி கிளம்பி போனே..ராஜாவிற்கு ஏதாவது பிரச்சினையா..!"

"ஆமாம் அம்மா.."என ராஜாவிற்கு நேற்று நடந்த விசயத்தை மட்டும் சுருக்கமாக சொன்னாள்.இப்போ ராஜாவிற்கு என்னையே அடையாளம் தெரியல.எனக்கும்,அவனுக்கும் நடந்த கல்யாணம் கூட ஞாபகம் இல்ல..நான் சொல்றத அவனை நம்ப சொல்லுங்க போதும்..அப்புறம் ரொம்ப பேச வேண்டாம்,அவன் ரெஸ்ட் எடுக்கணும் என டாக்டர் சொல்லி இருக்காங்க..அதனால் நான் சொல்றதுக்கு மட்டும் ஆமாம் என்று சொல்லுங்க.."

சரியென அவன் அம்மா தலையாட்ட,சஞ்சனா ராஜா அருகில் சென்றாள்..

அம்மா..! ராஜா பக்கத்தில் இருக்கிறான்,என ஸ்கிரீனை அவன் பக்கத்தில் திருப்பினாள்.."அம்மா ராஜாவுக்கு கல்யாண ஏற்பாடு நடந்தது உண்மை தானே."

"ஆமா..! சஞ்சனா சொல்றது எல்லாமே முழுக்க முழுக்க உண்மை தான். நீ சஞ்சனா சொல்றத முழுசா நம்பு"என அவன் அம்மா கூறினார்.

"அம்மா,திவ்யா எங்கே .?"என ராஜா கேட்க,

"அவளுக்கு கல்யாணம் கூட ஆகி விட்டது..நீ இப்போ ரெஸ்ட் எடு"என்று அவர் சொல்ல,ராஜா ஏதோ பேச வாயெடுக்க சஞ்சனா போனை துண்டித்து விட்டாள்..

இங்க பாரு ராஜா,"உங்க அம்மா உன்கிட்ட கோவித்து கொண்டு உன் தங்கை வீட்டில் தான் இருக்காங்க..சீக்கிரம் நீயும் ஷன்மதியும் கல்யாணம் செய்து கொண்டு ஒரு நல்ல விசயத்தோடு உன் அம்மாவை போய் பார்த்தால் அவங்க உன்கூடவே வந்து விடுவாங்க..இது ஒன்னு தான் நீங்க உன் அம்மாவோட ஒன்று சேர ஒரேயொரு வழி..எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ண வேண்டிய நிறைய வேலை இருக்கு..நீ ரெஸ்ட் எடு..நாளை காலை உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் "என்று மடமடவென சொல்லிவிட்டு வெளியே வந்தாள்..

"என்னது..! என் தங்கைக்கு கூட கல்யாணம் ஆகி விட்டதா..!அது கூட எனக்கு ஞாபகம் இல்லையே..!"என தலையில் கை வைத்து கொண்டு ராஜா குழம்பினான்..

"சஞ்சனா ஒரு நிமிஷம் நில்லு.."பின்னாடியே ஷன்மதி ஒடி வந்தாள்..

சஞ்சனா அவளிடம்,"இங்கே பாரு ஷன்மதி,கொஞ்சம் நேரம் முன்னாடி என்ன சொன்னே நீ..!ராஜாவையும்,குழந்தையும்  உன்கிட்ட கொடுத்திட்டு போ என்று சொன்னே தானே..!அதில் ஒரு பாதியை நானாக உனக்கு விரும்பி தரேன்.."

"வேண்டாம் சஞ்சனா..!நீ வீணா ரிஸ்க் எடுக்கிறே.ராஜாவிற்கு பழைய நினைவு வந்து,உனக்கு துரோகம் செய்து விட்டதாக அவன் நினைத்தால் பிறகு விளைவுகள் மோசமாகி விடும்.."

"உன்னால் எவ்வளவு நாள் அந்த கற்பனை உலகில்  வாழ முடியும் ஷன்மதி,நானே உனக்கு ராஜாவை விட்டு தரேன்..ராஜா உன்னோடு சேர வேண்டும் என்பதால் தான் அவன் நினைவுகள் தற்காலிகமாக மறந்து போய் இருக்கு.
நான் ராஜாவின் மீது எவ்வளவு அன்பு வைத்து இருந்தேனோ,அதே அளவு அன்பு நீயும் வச்சி இருக்கே..என்கூட நீ போட்டி போடும் பொழுது ராஜாவை உனக்கு விட்டு தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.ஆனா உன் அன்பை பார்த்து நானா உனக்கு அவனை விட்டு கொடுக்கிறேன்.."

"அப்போ நீ மட்டும் ராஜாவை பிரிந்து இருப்பீயா சஞ்சனா"

"அவனுக்கு திரும்ப கண்டிப்பா நினைவு வரும் என நான் நம்புகிறேன் ஷன்மதி..அதுவரை அவன் உன்னோட ராஜாவாக இருக்கட்டும்.."

"இப்போ உன்னோட முடிவு என்ன தான் சஞ்சனா.."

"நான் இப்போ அவனோட ரூமுக்கு போய் நானும்,அவனும் சம்பந்தபட்ட  தடயங்களை அழிக்க போகிறேன்..ஏற்கனவே அவன் பர்ஸில் இருந்த என் போட்டோவை எடுத்து அதில் உன் போட்டோவை வைத்து விட்டேன்..நாளை உங்களுக்கு கல்யாணம் அவ்வளவு தான்.போய் ராஜாவுக்கு துணையாக இரு.."என்று அவள் வழியனுப்பி வைத்தாள்..

ராஜா,தன்னோட நண்பர்களுக்கு ஃபோன் அடிக்க நம்பரை அவன் மொபைலில் தேடினான்..ஆனால் அவன் நண்பர்கள் ஃபோன் நம்பர் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன சஞ்சனாவால்..

கொஞ்சம் கூட ராஜாவை யோசிக்க விடாமல் மடமடவென கல்யாண ஏற்பாடுகளை சஞ்சனா செய்து விட,அடுத்த நாள் காலை ஷன்மதி கழுத்தில் ராஜா தாலியை காட்டினான்.. ஆனால் ஷன்மதி கழுத்தில் தாலி கட்டும் பொழுது ஏனோ இதே நிகழ்வு அவன் வாழ்வில் ஏற்கனவே நடந்தது போல அவன் மனக்கண்ணில் விரிந்தது..

[Image: Snapinsta-app-449803448-443990141796711-...n-1080.jpg]
[+] 6 users Like Geneliarasigan's post
Like Reply
clps Ivanga love ku Raja pickle akeetan
Nalla kesari kindi vidunga sonen
Neigh muntri enaa kalavai oda panni irukinha sirapana 
Kadhai nagarvum...

Intha kadhai ozunga munnavae padichu apove en karthu solli iruntha intha force fitting patch work thevai pattu irukathu pola...

Nice narration dude Heart

Na change panna solahla just ennoda pov la sonen
Ipo unga karpanai vazhkai la rendu pondati enjoy sago happy
[+] 1 user Likes krishkj's post
Like Reply
சுந்தர் சி படத்தில் வருவது போல ஷார்ட் டைம் மெமரி லாஸ் பேஷண்ட் போல நம்ம நாயகன் ராஜா சஞ்சனாவின் இந்த முடிவு வருத்தமளிக்கிறது ஷன்மதி இதற்கு உடன்பட்டதும் வியப்பே ?
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply




Users browsing this thread: 21 Guest(s)