♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(19-07-2024, 01:47 PM)damien123456 Wrote: bro you restarted this masterpiece of yours so i am happy but don't ruin it like others you mentioned above

Sure bro,I will give my best
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(19-07-2024, 02:24 PM)Priya99 Wrote: வாவ்..என்னோட விருப்பமான ஸ்டோரி திரும்ப ஆரம்பித்தமைக்கு நன்றி

Thank you
Like Reply
(19-07-2024, 05:43 PM)omprakash_71 Wrote: நண்பா மீண்டும் இந்த கதையை எழுதுவதற்கு நன்றி நண்பா நன்றி

Ok நண்பா
Like Reply
Thank you so much for continuing this master piece nanba…one and only best story in this site bro…heroine selection super bro..she looks both cute and hot..
Like Reply
(19-07-2024, 12:54 PM)snegithan Wrote: Episode - 62

குறிப்பு :
     Part -2 Stories பெரும்பாலும் வெற்றி பெற்றது இல்லை.சந்திரமுகி 2, சாமி 2, இந்தியன் 2,பொன்னியின் செல்வன் 2, VIP 2,சண்டக்கோழி 2 போன்ற படங்கள் உதார்ணம்..
இருந்தாலும் சஞ்சனாவின் காதலை இன்னும் ஒருமுறை உயர்த்தி சொல்ல என் மனம் ஆசைப்பட்டது..அதனால் இந்த கதையை தொடர்கிறேன்.


"ஹனி...எல்லாம் ரெடியா..?ராஜா சஞ்சனாவிடம் கேட்டான்..

"டேய் நீ போய் தான் ஆகணுமாடா.."சஞ்சனா அலுத்து கொண்டே கேட்டாள்.

"ஏய் செல்லக்குட்டி..நான் முதலிலேயே உன்கிட்ட இந்த டிரான்ஸ்ஃபர் வித் புரொமோஷன் ஆஃபர் வேண்டாம் என்று சொன்னேன்.நீதான் கேக்கல..இப்போ வந்து அடம் பிடிச்சா எப்படி செல்லம்.."ராஜா கேட்க,

சஞ்சனா அவன் முகம் பார்த்து"டேய் எனக்கு அப்ப எதுவும் தோணலடா..நீ அடுத்த லெவல் போறத நினைச்சு சந்தோசமா இருந்துச்சு.ஆனா இப்ப பிரியும் போது தான் கஷ்டமா இருக்கு..நான் வேணா உன் கூட புறப்பட்டு வந்துடட்டுமா.."

ராஜா அவள் கன்னத்தை கிள்ளி,"அப்போ நம்மள நம்பி இங்கே 30 பேரு வேலை செய்யும் கம்பனி யார் பாத்துக்குவாங்க சொல்லு கண்மணி..கொஞ்சம் பொறுத்துக்க செல்லம்.. இப்போ நான் வேலை செய்யும் கம்பனி புதுசா தொடங்கி இருக்கும் கிளையை எப்படியாவது மூணு மாசத்துல கொஞ்சம் டெவலப் பண்ணிட்டு இங்கே டிரான்ஸ்ஃபர் வாங்கி ஒடி வந்துடறேன்..போதுமா"என அவன் கெஞ்சலாக கேட்டான்.

"டேய் இருந்தாலும்..."சஞ்சனா ராகம் இழுக்க,

"அடியே பொண்டாட்டி..நான் என்ன கடல் கடந்து வெளிநாடா போக போறேன்..இங்க இருக்கும் திருச்சிக்கு தானே..வெறும் 330 kms..வாரம் ஒருமுறை இங்கே என் கண்மணியை பார்க்க ஓடோடி வரப்போறேன்.அப்புறம் என்ன பிரச்சினை..சொல்லு.."

"டேய் உன்னை பிரிந்து சாரா எப்படி இருப்பா..சொல்லு.."

" நான் போவதால் சாராவுக்கு மட்டும் தான் கஷ்டமா..!இல்லை அவ அம்மாவுக்குமா "என ராஜா சொல்லி சிரித்தான்..

சஞ்சனா அவன் சட்டை பட்டனில் விரல் நுழைத்து,"சாராவுக்கு தான் கஷ்டம்..ஆனா அவ அம்மாவுக்கு கொஞ்சம் கூடுதல் வருத்தம்.."என அவள் சொல்ல,ராஜா சஞ்சனாவை கட்டி அணைத்தான்..

"எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா செல்லம்,இந்த நிலவு முகத்தில் தினமும் விழிக்கும் நான் ,இப்போ அந்த பிரிவை நினைத்து என் மனம் மட்டும் வாடாதா..!ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாளுக்காக காத்து இருப்பேன் கண்மணி,இந்த பொன் நிலவு முகத்தை காண.மற்றபடி வீடியோ காலில் பேசிக்கலாம்."என அவள் நெற்றியில் காதலுடன் முத்தம் வைக்க,கீழே கார் ஹாரன் சத்தம் கேட்டது..

ராஜா கீழே எட்டி பார்த்து"கேப் வந்து விட்டது செல்லம்,நான் கிளம்பறேன்.."என கிளம்பினான்..

சஞ்சனா கெஞ்சுதலாக"டேய் நானும் பஸ் ஸ்டாண்டு வரை உன் கூட வரட்டுமா.."

"வேற வினையே வேணாம் கண்மணி..அப்புறம் உன் அழுகிற முகத்தை பார்த்து விட்டு என்னால் ஊருக்கே போக முடியாது..இங்க பாரு கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் இந்த மூணு மாசம் ஓடிடும்..எப்படியாவது vp காலில் விழுந்தாவது நான் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்து விடுகிறேன்..அப்படியும் அவர் மாற்றல் கொடுக்கவில்லை என்றால் நான் வேலை resign பண்ணி விடுகிறேன் போதுமா..இப்போ கொஞ்சம் சிரிச்சு வழியனுப்பு என் கண்ணே..!"

சஞ்சனா கொஞ்சம் செல்ல கோபத்துடன் முறுக்கி கொண்டு நிற்க,ராஜா அவளிடம்"உனக்காவது துணைக்கு அம்மா,சாரா,சஞ்சய் எல்லோரும் இருக்காங்க..ஆனா எனக்கு அங்கே யாரும் இல்லை தானே..!என ராஜா முகத்தை பரிதாபமாக வைத்து கொண்டு,"இப்போ கொஞ்சம் சிரிம்மா..என் செல்லம் "என ராஜா காதில் விரலை வைத்து தோப்புக்கரணம் போட்டு கெஞ்ச சஞ்சனா சிரித்தாள்..

அதை பார்த்து ராஜா நிம்மதி அடைந்தான்.."சரி போய்ட்டு வா..வாராவாரம் கண்டிப்பா இங்கே வந்துவிடனும்.."

"உத்தரவு ராஜகுமாரி.."என ராஜா சொல்லி விட்டு திருச்சி கிளம்பினான்..

[Image: 1500x900-857339-malvika-sharma-1.jpg]

yourock clps Heart கதை திரும்ப தொடங்கிய காரணம் எதோ  Sleepy சந்தேகமா இருக்கு ஆனா திரும்ப feel good story படிக்க விருப்பம் சோ ரொம்ப happy to see for restarted part-2
Konjam parts padikama vera iruken padichutu comments poduren dude

Keep rocking
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(19-07-2024, 09:41 PM)krishkj Wrote: yourock clps Heart கதை திரும்ப தொடங்கிய காரணம் எதோ  Sleepy சந்தேகமா இருக்கு ஆனா திரும்ப feel good story படிக்க விருப்பம் சோ ரொம்ப happy to see for restarted part-2
Konjam parts padikama vera iruken padichutu comments poduren dude

Keep rocking

இப்போ மனசு சரியில்லாத நேரத்தில் இந்த கதை தான் திரும்ப திரும்ப படிச்சிட்டு இருந்தேன் dude.அப்போ part - 2 க்கான ஒரு ஐடியா கிடைச்சது..காத்தவராயன் கதைக்கும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருப்பதால் அந்த இடைவெளியில் இதை எழுதி முடித்து விடலாம் என்று ஒரு ஆசை..இந்த கதை எழுதும் பொழுதே நடுநடுவே காத்தவராயன் கதைக்கும் update வரும்.
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
Episode - 63

புது பணிபுரியும் இடம்,புது  ஆட்கள் எல்லாமே ராஜாவுக்கு சவாலாக இருந்தது..எப்பவுமே புது இடம் பழகும் வரை கஷ்டமாக தான் இருக்கும் என்பதை ராஜா நன்கு அறிவான்..முன்பு அவன் பார்த்த வேலையில் sales dept மட்டுமே கவனித்தால் போதுமானதாக இருந்தது..ஆனால் இப்போ பிராஞ்ச் மேனேஜர் ஆக புரோமோட் ஆனதால் மற்ற டிபார்ட்மெண்ட் வேலைகளையும் அவனே கவனிக்க வேண்டியதாகி விட்டது..உண்மையில் இந்த பிராஞ்ச் மேனேஜர் போஸ்ட் திருச்சியை பூர்வீகமாக கொண்டு இருந்த தாமோதரன் என்கிற தாமுவுக்கு கிடைக்க வேண்டியது.அவன் ராஜாவை காட்டிலும் சீனியர்,மேலும் டெக்னிகல் டிபார்ட்மெண்ட்டில் இருந்து வந்ததால் அவனுக்கு தான் இந்த புரொமோஷன் கிடைக்கும் என மிகவும் நம்பி இருந்தான்.ஆனால் கடைசி நேரத்தில் திறமையின் அடிப்படையில் ராஜாவை செலக்ட் செய்து விட்டார்கள்.திருச்சி லே அவுட் தனக்கு மட்டுமே நன்றாக தெரியும்,தன்னை மீறி ராஜாவால் இங்கு ஒரு மயிரும் புடுங்க முடியாது என அவன் நினைத்த வேளையில் வந்த ரெண்டே நாளில் திருச்சி லே அவுட் முழுக்க ராஜா தெரிந்து கொண்டு விட்டான்.அதற்கேற்ப ராஜா திட்டமிட்டு வேலை செய்ய தாமுவின் கனவுகள் தவிடுபொடியாகி விட்டன..அதனால் அவன் மனதில் கெட்ட எண்ணங்கள் உருவாயின..

வழக்கம் போல ராஜா வேலை முடித்து விட்டு போகும் பொழுது,தாமு மற்றும் அவன் நண்பர்கள் முகமூடி அணிந்து காரில் பின் தொடர்ந்தனர்.சஞ்சனாவுடன் கொஞ்சி குலாவி போனில் பேசி கொண்டே சென்றதால் அவர்கள் பின் தொடர்வதை ராஜா கவனிக்கவில்லை.
ராஜா போனை கட் செய்யவும் ஒரு ஆள்அரவமற்ற சாலையில் பின் தொடர்ந்து வந்த கார் ராஜாவின் பைக் மீது மோதியது..ராஜா நிலைதடுமாறி விழ,காரில் இருந்து இறங்கிய தாமு மற்றும் அவன் நண்பர்கள் ராஜாவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்..ராஜா மயக்கம் ஆனவுடன்,தாமு உடனே,"போதும் நிப்பாட்டுங்கடா..அப்புறம் செத்து கித்து தொலைக்க போறான்..இந்த அடிக்கே அவன் ஊரை விட்டு ஓடி விடுவான்.."என்று சொல்லி விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

தன் கிளினிக் வேலை முடிந்து  அந்த வழியே ஸ்கூட்டியில் வந்த ஒரு அழகிய நங்கை,யாரோ அடிப்பட்டு கிடப்பதை பார்த்து வண்டியை நிறுத்தி அருகே சென்றாள்..அவன் முகத்தை பார்த்த உடன் ,ராஜா காரில் அடிப்பட்டு கிடந்த பழைய நினைவுகள் உடனடியாக வந்தன.கண்களில் நீர் பெருக ராஜா....ராஜா என பதறினாள்..

அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே கூட்டி சென்றாள்.டாக்டர் உடனே அவனுக்கு முதலுதவி செய்து விட்டு,"பயப்படுவதற்கு ஒன்னும் இல்லை..கொஞ்சம் நேரத்தில் கண் விழித்து விடுவார்"என சொல்லி விட்டு சென்றார்..

அவளின் கையில் ராஜாவின் ஃபோன் இருந்தது.கைபேசியில் ராஜாவின் கைரேகையை வைத்து ஒத்தி எடுக்க டிஸ்ப்ளே ஓபன் ஆகியது..அதில் கடைசியாக பேசிய  சஞ்சனா நம்பர் தெளிவாக தெரிந்தது.."பேசலாமா..வேண்டாமா.."என அவள் மனதில் பெரும் போராட்டமே நிகழ்ந்து கொண்டு இருந்தது..ஆனால் உடனே ராஜாவின் மொபைல் ஒலிக்க தொடங்க அவள் போராட்டம் முடிவுக்கு வந்தது..அழைத்தது சஞ்சனா தான்.

ஃபோன் அழைப்பை எடுத்தாலும் பேச அவள் நா எழவில்லை.."ஹலோ ராஜா...ராஜா என சஞ்சனா திரும்ப திரும்ப கூப்பிட,சில நொடி மௌனத்திற்கு பின் ஷன்மதி "ஹலோ"என்றாள்.

குரலை உடனே அடையாளம் கண்டு கொண்ட சஞ்சனா,"ஷன்மதி நீயா"என கேட்க,

ஷன்மதியும்,"நான் ஷன்மதி தான் சஞ்சனா..ராஜாவிற்கு இங்கே கொஞ்சம் அடிபட்டு இருக்கு..அவன்  மயக்கமா இருக்கான்.கொஞ்சம் நீ உடனே புறப்பட்டு திருச்சி வரமுடியுமா.."என கேட்டாள்..

"என்ன ஆச்சு ராஜாவுக்கு"சஞ்சனா பதறி கேட்க, ஷன்மதி சுருக்கமாக சொல்லி முடித்தாள்..

"பயப்பட ஒன்னும் இல்லை சஞ்சனா..ஆனா நீ இப்போ ராஜா கூட இருப்பது நல்லது.நீ மட்டும் வந்தா போதும்..வீட்டில் வேற யாருக்கும் சொல்லி வீணா அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க வேணாம்.."..என்று ஷன்மதி சொல்ல,சஞ்சனா உடனே திருச்சி கிளம்பி விட்டாள்.

வீட்டில் ராஜாவின் அம்மாவிடம் சாராவை மட்டும் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு,கைக்குழந்தையான சஞ்சயை மட்டும் தூக்கி கொண்டு சிலமணி நேரங்களில் காரை எடுத்து கொண்டு திருச்சி ஓடிவந்தாள்.

ஷன்மதி சொன்ன ஹாஸ்பிடல் உள்ளே சஞ்சனா நுழைவதை பார்த்த ஷன்மதி உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.அதுவரை அக்கறையோடு ராஜாவை பார்த்து கொண்டு இருந்த ஷன்மதி,சஞ்சனா முகத்தை எதிர்கொள்ள திராணி இல்லாமல் உடனே வீட்டுக்கு சென்று விட்டாள்..

ராஜா அட்மிட் ஆகி இருந்த அறைக்குள் சஞ்சனா நுழைய,"டாக்டர் என்ன ஆச்சு இவருக்கு.."என பதறி கேட்க,

"ஒன்னும் இல்லம்மா..இவரை யாரோ நாலு பேர் சேர்ந்து அடிச்சி இருக்காங்க.. வலி அதிகமாக இருக்கும் என்பதால் ஸ்லீபிங் இன்ஜெக்சன் கொடுத்து இருக்கோம்..இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் விழித்து விடுவார்..பயப்பட ஒன்னும் இல்ல.."

சஞ்சனா சுற்றும் முற்றும் பாத்து விட்டு "டாக்டர்..!இவரை அட்மிட் பண்ண ஷன்மதி எங்கே.."

டாக்டரும்"அந்த பொண்ணு தான் நைட் எல்லாம் கண் முழிச்சு கூடவே இருந்து இவரை பார்த்து கொண்டது..இங்கே எங்கேயாவது தான் இருக்கும்..தேடி பாருங்க.."

சஞ்சனா ஷன்மதியை தேடி பார்க்க அவள் கிடைக்கவில்லை..அங்கு விசாரித்ததில் ஒரு வழியாக அங்கு இருக்கும் வார்டு பாய் மூலம் அவள் இருக்கும் இடம் தெரிந்தது..

ராஜா கண் விழிப்பதற்குள், ஷன்மதியை சென்று பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கிளம்பினாள்.

ஷன்மதி தங்கி இருந்த வீடு வசதியாக வீடாக இருக்கும் என சஞ்சனா நினைத்தாள்..ஆனால் அது ஒரு மிக மிக எளிய ஒரே அறை கொண்ட வீடாக இருக்குமென சஞ்சனா கனவிலும் நினைக்கவில்லை..அறைக்கதவு திறந்து உள்ளே நுழைய, ஷன்மதியின் அறைக்குள் ராஜா போஸ்டர் பெரிதாக ஒட்டபட்டு இருப்பதை பார்க்க நேர்ந்தது..

சஞ்சனாவின் வரவை ஷன்மதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.அவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

"சஞ்சனா...நீ எப்படி இங்கே ..!"அவள் அதிர்ச்சியோடு கேட்க..

"நான் இங்கே வந்தது ஒருபுறம் இருக்கட்டும் ஷன்மதி..என்ன இது..!ஏன் உனக்கு இந்த நிலைமை..?கல்யாணம் ஆகி வெளிநாட்டில் போய் நீ சந்தோசமாக இருப்பாய் என்று நாங்கள் நினைத்தோமே..!இங்கே ஏன் புறாக்கூண்டு போன்ற அறையில் வந்து கஷ்டப்படுறே..!"

ஷன்மதி அதற்கு பதில் சொல்லாமல்,சஞ்சனா கையில் இருந்த குழந்தையை ஆசையுடன் வாங்கி கொண்டு,"அப்படியே ராஜாவை உரிச்சு வைச்சு இருக்கான்..ஆமா உன்னோட முதல் குழந்தை யார் ஜாடை சஞ்சனா..!"என அவள் கேட்க..

"ஷன்மதி பிளீஸ் பேச்சை மாற்றாதே..!உன் கல்யாணத்திற்கு கூட நாங்க வந்தோமே..!நீ இந்த நிலைமையில் இருப்பதை பார்த்தால் கண்டிப்பா ராஜா உடைஞ்சு போயிடுவான்..என்ன தான் ஆச்சு உனக்கு..!தயவு செய்து சொல்லு ஷன்மதி.."

ஷன்மதி நடந்ததை சொல்ல அதை கேட்டு சஞ்சனா மனம் சுக்குநூறாக உடைந்து போனது..

[Image: IMG-20240719-WA0012.jpg]

[Image: IMG-20240719-WA0013.jpg]
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
நான் இந்த தளத்தில் பலதடவை மனம் தடுமாறும் போது படித்த வெகுசில கதைகளில் இந்த நினைவு ஒரு பறவை உள்ளது அந்த கதையை மீண்டும் பாகம் 2 ஆக துவங்கி உள்ளது மட்டற்ற மகிழ்ச்சி தங்களின் காத்தவராயன் கதையை ஆரம்பத்தில் படித்தாலும் எனக்குள் அந்த கதையை படிக்கும் எண்ணம் படிப்படியாக குறைந்து போனது காரணம் உங்களின் இந்த கதை கொடுத்த தாக்கத்தை எனக்கு அக்கதை கொடுக்கவில்லை பலதடவை மனம் நோகும்போது படிப்பேன் இந்த காதல் படைப்பை அதற்கு இப்போது மீண்டும் புத்துயீர் கொடுத்து துவங்கியது எண்ணிலடங்கா மகிழ்ச்சியை தருகிறது நண்பா வாழ்த்துக்கள் நண்பா
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
(19-07-2024, 10:10 PM)Natarajan Rajangam Wrote: நான் இந்த தளத்தில் பலதடவை மனம் தடுமாறும் போது படித்த வெகுசில கதைகளில் இந்த நினைவு ஒரு பறவை உள்ளது அந்த கதையை மீண்டும் பாகம் 2 ஆக துவங்கி உள்ளது மட்டற்ற மகிழ்ச்சி தங்களின் காத்தவராயன் கதையை ஆரம்பத்தில் படித்தாலும் எனக்குள் அந்த கதையை படிக்கும் எண்ணம் படிப்படியாக குறைந்து போனது காரணம் உங்களின் இந்த கதை கொடுத்த தாக்கத்தை எனக்கு அக்கதை கொடுக்கவில்லை பலதடவை மனம் நோகும்போது படிப்பேன் இந்த காதல் படைப்பை அதற்கு இப்போது மீண்டும் புத்துயீர் கொடுத்து துவங்கியது எண்ணிலடங்கா மகிழ்ச்சியை தருகிறது நண்பா வாழ்த்துக்கள் நண்பா

தாங்கள் மீண்டும் பதிவிட்டது மகிழ்ச்சி நண்பா,,ஆனால் காத்தவராயன் ஸ்டோரியும் நினைவோ ஒரு பறவை போல positive எண்ணம் தரக்கூடிய கதை..அதை தொடர்ந்து படிக்கும் பொழுது உங்களுக்கே புரியும்..அதில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பேன்..அந்த கதை உருவாக்க நிறைய ref எடுத்து தான் எழுதினேன்..மீண்டும் சொல்கிறேன் ஆரம்பத்தில் நடக்கும் கதையை வைத்து முடிவு செய்ய வேண்டாம்..முதலில் தோற்று கொண்டே இருந்த மதிவதனி, காத்தவராயனை ஒருமுறை அல்ல மூன்று முறை தோற்கடிப்பது போல காட்சிகள் வரும்.காத்தவராயன் யார்?அவனை கொல்லும் ரகசியம் என்ன?என்பதை எல்லாம் மெனக்கெட்டு எழுதி உள்ளேன்.அதை முழுவதும் படித்தால் தான் உங்களுக்கும் புரியும்
Like Reply
Shanmathi chapter vera padikla so kandipa revisit adichutu varen dude

Sirapana thodakkam
Like Reply
Storya நல்லா தான் கொண்டு போறீங்க.

ஆனா இந்த part2 தேவையில்லாத வேலையோன்னு தோணுது.

Previous season alavuku idhu intrestinga illana disappointment aagirum
[+] 2 users Like Samsd's post
Like Reply
(02-09-2023, 08:14 PM)snegithan Wrote: Episode -45

எல்லோரும் சாப்பிட உட்கார ஷன்மதியின் அம்மா, சஞ்சனாவிடம்,"சஞ்சனா நீ முதல் முறை வீட்டுக்கு வந்து இருக்கே,முதலில் நீ ஸ்வீட் எடுத்து சாப்பிடு.ராஜா நீ உன் ஸ்வீட் எடுத்து சஞ்சனாவிற்கு ஊட்டி விடு என்று சொல்ல,

ஷன்மதி உடனே,"அம்மா எதுக்கு இந்த பார்மலிடீஸ் எல்லாம்.இது எல்லாம் ஓல்ட் ஃபேஷன்.அதுவும் சஞ்சனா எப்படி புது ஆளுங்க முன்னாடி அப்படி செய்வா,அவளுக்கு கூச்சமா இருக்காது."என மறுப்பு தெரிவிக்க

சஞ்சனா உடனே "ஆன்டி,பெரியவங்க நீங்க சொல்றது தான் கரெக்ட்,ஆனா ஒரு சின்ன திருத்தம்.இவன் எச்சில் பட்ட சுவீட்டை தான் நான் சாப்பிடணும், அப்ப தான் எங்களுக்குள் அன்னியோன்யம் வரும்."

நீ சரியா சொன்னா சஞ்சனா,ராஜா நீ ஸ்வீட்டை எடுத்து ஊட்டு கமிஷனரும் சொல்ல,

ராஜா பாதி கடித்து மீதி ஸ்வீட்டை  சஞ்சனாவுக்கு ஊட்டி விட,சஞ்சனாவும் ஷன்மதியை பார்த்து கொண்டே ஆசையுடன் வாங்கி சாப்பிட்டாள்.அடுத்து தன் உதட்டில் ஸ்வீட்டை நன்றாக தேய்த்து ,கடித்து அவனுக்கு ஸ்வீட்டை ஊட்டி விட்டாள்.

இதை பார்த்த ஷன்மதிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன.

அப்புறம் ஆன்டி,வேற என்ன செய்யனும் சொல்லுங்க.சஞ்சனா கேட்க

ஷன்மதியின் அம்மாவும் "உன் தட்டில் இருக்கும் சாதத்தை பிசைந்து அவனுக்கு ஒரு வாய் ஊட்டுமா."

சஞ்சனாவும் வேகமாக தன் லோலாக்கு குலுங்க தலையாட்டி அவனுக்கு ஊட்ட,ராஜாவும் அவன் பங்குக்கு ஊட்டினான்.அப்பொழுது அவன் விரலை சஞ்சனா செல்லமாக கடிக்க "ஆ"என்று ராஜா வலியில் கத்தினான்.அதை பார்த்து எல்லோரும் சிரிக்க,
ஆனால் ஷன்மதி மட்டும் மிக கோபமாக இருந்தாள். ஷன்மதி வேண்டுமென்றே சாம்பாரை வேகமாக தட்டிவிட அது சஞ்சனாவின் ஆடையை நனைக்க தோட்டா போல் சென்றது.அதை கவனித்த ராஜா சாம்பாரை குறுக்கில் புகுந்து தன் ஆடையில் வாங்கி கொண்டான்.
ஷன்மதி சஞ்சனாவின் மேல் சாம்பார் ஊற்ற நினைத்தாள்,ஆனால் நடந்ததோ வேறு.இதே போன்று தான் எதிர்காலத்தில் நடக்க போகிறது.ஷன்மதி சஞ்சனாவிற்கு ஏற்படுத்த போகும் ஆபத்தை ,ராஜா  குறுக்கில் புகுந்து அதை வாங்கி கொள்ள போகிறான் என்று காலம் முன்கூட்டியே ஷன்மதிக்கு  இப்போது உணர்த்தியது.அதை அவள் இந்நேரம் உணர்ந்து இருந்தால் இப்பொழுதே ராஜாவை விட்டு ஷன்மதி விலகி இருப்பாள்.என்ன செய்வது?காலம் முன்னெச்சரிக்கை செய்யும் நிறைய விசயங்களை நாம் புரிந்து கொள்வதே இல்லை.அதே போல் சஞ்சனாவை ராஜாவும் தான் காதலிக்கிறான்.சஞ்சனாவின் மேல் வரும் கோபம் ஏனோ ராஜாவின் மீது ஷன்மதிக்கு துளியும் வரவில்லை.அவன் சட்டையின் மேல் சாம்பார் பட்டவுடன் அவள் பதறினாள்.உடனே ஓடி சென்று "ஐயோ சாரி ராஜா ,ஒரு நிமிஷம் என் கூட வா என்று வாஷ் பேசின் அருகே கூட்டி சென்று அவளே தண்ணீர் தொட்டு துடைக்க"

கமிஷனர் இதை எல்லாம் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தார்.

ஷன்மதி ஒன்னும் இல்ல விடு,என்று ராஜா மறுத்தாலும் அவள் விடவே இல்லை.

ஐயோ ,சாரி ராஜா சாரி ராஜா என்று பல முறை மன்னிப்பு கேட்டாள்.

"Hey ஷன்மதி cool down,இப்போ என்ன ஆச்சு என்று பதறுகிறாய்.just chill.இதுக்கு போய் எத்தனை தடவை சாரி கேட்ப,வெறும் சட்டை தானே.வீட்டுக்கு போய் சட்டை மாற்றி கொண்டால் போச்சு.அவ்வளவு தான்."

அவன் இங்கிலீஷ் கலந்து பேசும் தொனி கேட்டு ஷன்மதி ஆச்சரியம் அடைய அவனுக்காக வாங்கி வைத்து இருந்த ஷர்ட் ஞாபகம் வந்தது.

ஒரு நிமிஷம் ராஜா,ஓடி போய் தனது அறையில் இருந்து ஒரு புது சட்டையை எடுத்து கொண்டு வந்தாள்.

ராஜா இது உனக்காக தான் வாங்கி வைச்சேன்.இது போட்டுக்கோ.

நிஜமா எனக்காக வாங்கனீயா,இல்ல உங்க அண்ணன்களுக்கு கொடுக்க வச்சு இருந்தீயா.

அய்யோ உனக்காக தான் வாங்கினேன்.அவனுங்க ஒவ்வொருத்தனும் தடி மாடு மாறி இருக்கானுங்க.இந்த size எல்லாம் அவனுங்களுக்கு பத்தவே பத்தாது.அவனுங்களுக்கு ஃபேக்டரியில் இருந்து நேரா தைச்சி தான் தயாரிக்கனும்.

ராஜா போட்டு பார்க்க,கச்சிதமாக பொருந்தியது."ஷன்மதி ரியலி fantastic,பெர்பெக்ட்டா வாங்கி இருக்க,உன்னோட கலர் டேஸ்ட் சூப்பர்."

உனக்கு பிடிச்சு இருக்கா ராஜா,..

எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ஷன்மதி,வா போகலாம்.

ராஜா மீண்டும் டைனிங் ஹாலுக்கு வர,சஞ்சனா அவன் புது சட்டையை பார்த்தாள்.

"நீ ஊட்டி மட்டும் தானே விட்டே,இப்போ பாரு அவன் மேல் இருக்கிற சட்டையே நான் வாங்கி தந்தது தான்.இது ஆரம்பம் தான்.போக போக பார் இந்த ஷன்மதியின் லீலைகளை."சஞ்சனாவிடம் ஷன்மதி ஜாடையில் கூற,சஞ்சனா மனதுக்குள் சிரித்து கொண்டாள்.
அதே நேரத்தில் வீணாக ஏமாற போகிறாளே என்று அவள் மேல் பரிதாபமும் உண்டாக்கியது.

சஞ்சனா மீண்டும் ஷன்மதியை வெறுப்பேற்ற,ராஜாவை கூட்டி கொண்டு கமிஷனர் மற்றும் அவர் மனைவி காலில் தம்பதிகளாக  விழ,அவர்கள் ஒரு நிமிடம் திகைத்தனர்.

கமிஷனர் மனைவி ஷன்மதியை மஞ்சள் குங்குமம் எடுத்து வர சொன்னார்."குங்குமம் எடுத்துக் கொள் சஞ்சனா "என்று அவர் சொல்ல,

சஞ்சனா ராஜாவை பார்த்து,கண்களால் வைத்து விடு என்று கூற ராஜாவும் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைக்கும் போது ஷன்மதி முகம் சுருங்கி போனது.

பரவாயில்லையே கண் ஜாடை தான்,அதிலேயே அவன் புரிந்து கொள்கிறேன்.எப்பவும் இதே மாதிரி ரெண்டு பேர் இருக்கணும்.

கண்டிப்பா ஆன்டி,எப்பவும் என் ராஜாகிட்ட இப்படி தான் இருப்பேன் என்று அவள் தோளில் சாய்ந்து குழந்தைத்தனமாக சொல்ல

"நல்ல விளையாட்டு பொண்ணு",என்று அவள் அம்மா சிரித்தார்.

சரி ஆன்டி,நாங்க போய்ட்டு வரோம். ஷன்மதியை மீண்டும் வெறுப்பேற்ற வேண்டும் என்றே சஞ்சனா பைக்கில் அவன் பின்னால் உட்கார்ந்து அவனை இறுக்க கட்டி கொண்டாள்.

நல்லா இருக்குங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தம் என்று ஷன்மதி அம்மா கூறவும், ஷன்மதி கோபத்தில் பொரிந்தாள்."அதெல்லாம் ஒன்னும் கிடையாது.ராஜாவின் ஸ்டைலுக்கும்,உடல்வாகுக்கும் அவள் பொருத்தமே கிடையாது.ஜோடி பொருத்தம் கேவலமா இருக்கு"என்று கூறினாள்.

இவ ஏன் இப்படி இதுக்கு போய் கோபப்படுறா.?சஞ்சனா அம்மா ஆச்சரியப்பட,

ஷன்மதி ஒரு நிமிஷம் என்னோட ஆபீஸ் ரூமுக்கு வா என்று கமிஷனர் சொல்லி விட்டு சென்றார். ஷன்மதி அவரை பின் தொடர்ந்து சென்றாள்.

"ஷன்மதி இன்று உன் நடவடிக்கைகள் சுத்தமா சரியில்ல,நீ சஞ்சனா மேல பொறாமை படற என்று நான் நினைக்கிறேன்."

"எனக்கா அவ மேல் எனக்கு என்ன பொறாமை,எதுவும் இல்லையே" என்று ஷன்மதி மழுப்பினாள்.

"எனக்கு என் பொண்ணை பற்றி நல்லா தெரியும்,நீ செய்யும் செய்கையில் இருந்தே நல்லா தெரியுது நீ ராஜாவை விரும்புற.நான் சொல்றது சரியா?."

ஷன்மதி மௌனமாக இருந்தாள்.

இங்க பாரு ஷன்மதி,நீ ஒவ்வொரு தடவை  ராஜாவை நம்ம வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட சொல்லும் போதே எனக்கு தெரியும்,உனக்கு அவன் மேல் ஆசை இருக்கு என்று.அது தெரிந்தும் நான் ஏன் அவனை கூப்பிட்டேன் என்றால் எனக்கும் அவன் மருமகனாக வருவதில் விருப்பம் தான்.ஆனால் எப்போ அவன் வாழ்க்கையில் ஒரு பொண்ணு இருக்கிறது,அதுவும் அந்த பொண்ணு,அவனுக்காக தன் வாழ்க்கையை பற்றி கூட கவலைபடாமல் ராஜாவின் எதிரியை பழிவாங்கினாள் என்று தெரிந்ததோ ,அப்பவே நான் புரிந்து கொண்டேன்,அந்த பொண்ணு அவன் மேல உசிரையே வைச்சு இருக்கு என்று.யாருக்காகவும் அவ அவனை விட்டு கொடுக்க மாட்டா,ஒரு அப்பாவா உனக்கு அறிவுரை சொல்றேன்,இதை புரிந்து கொண்டு நீ விலகி இருப்பது தான் உத்தமம்.

ஷன்மதி "சூப்பர்பா,நான் உங்க கிட்ட தான் எப்படி சம்மதம் வாங்குவது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.ஆனா உங்களுக்கே அவனை எனக்கு கட்டி வைப்பதில் உடன்பாடு இருந்து இருக்கு.நான் கடைசி வருடம் என்பதால் கொஞ்சம் படிப்பில் மும்முரமாக இருந்து வாழ்கையில் கோட்டை விட்டு விட்டேன்.எனக்கு கிடைக்க வேண்டிய ராஜாவை தான் அவ தான் தட்டி பறிச்சு இருக்கா.நான் தவற விட்ட ராஜாவை நான் தானே மீட்டு எடுக்கணும்.

'வேணாம் ஷன்மதி உன் முடிவை மாத்திக்க,அவங்க ரெண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க.நீ அவனை மறப்பது தான் நல்லது.அவனை மாதிரியே ஒரு நல்ல பையனை நானே தேடி கண்டுபிடித்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"

ஷன்மதி விடாப்பிடியாக "இல்லப்பா, அவனை மாதிரி இல்ல எனக்கு அவன் தான் வேண்டும்.அவ அவன் மேல்  வைத்து  இருக்கும் அன்புக்கு ,நான் அவன் மேல் வைத்து இருக்கும் அன்பு ஒன்றும் குறைஞ்சது கிடையாது."

இப்போ நீ என்ன தான் சொல்ல வர,

இங்க பாருப்பா,எனக்கு அவன்கிட்ட என் காதலை சொல்ல சந்தர்ப்பம் அமையல.அதை நான் ஏற்படுத்திக்க போறேன்.அவன் என்னை ஏற்று கொண்டால் சஞ்சனா அவனை விட்டு விலகி விடுவதாக சொல்லி இருக்கிறாள்.அப்படி விலகும் போது மட்டும் எனக்கு பார்ப்பதாக சொன்ன மாப்பிள்ளையை அவளுக்கு பாருங்க.

"ராஜா அவளை விட்டு,உன்னை ஏற்று கொள்வான் என்று நீ நினைக்கிறீயா.."


கண்டிப்பாக ஏற்று கொள்வான் அப்பா.எனக்கு நம்பிக்கை இருக்கு.சஞ்சனாவும் ராஜாவும்  ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் தானே,அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது.அதனால் அவர்கள் காதல் வளருது.முதலில் ராஜாவை அந்த வேலையில் இருந்து எடுத்தால் மட்டுமே அவர்கள் சந்திப்பு தடைபடும்.அந்த இடைவெளியில் நான் உள்ளே நுழைந்து என் காரியத்தை சாதித்து கொள்வேன்.

எனக்கு புரியல ஷன்மதி,நீ என்ன சொல்ற..!

அப்பா,ராஜாவின் விசாலமான மார்பு,வலிமையான உடலை பார்த்து அன்னிக்கு என்ன சொன்னீங்க.நீ போலீசில் இருக்க வேண்டிய ஆள்,உன்னை மாதிரி நேர்மையான ஆள் போலீசில் கம்மியா இருக்காங்க,வந்து சேருகிறாயா என்று கேட்டீங்க தானே..

ஆமா நான் தான் கேட்டேன்.ஆனால் அவன் தான் என்னால் போலீசில் சேர முடியாது என்று சொல்லி விட்டானே.

இல்லப்பா நான் அவனை சம்மதிக்க வைக்கிறேன்.

ஆனா அவன் வெறும் டிப்ளமோ தான் படித்து இருக்கான்.அவனால் எப்படி மேல இருக்கிற பதவிக்கு எல்லாம் வர முடியும்?

அவனை மேற்கொண்டு படிக்க வைச்சு உங்களை மாதிரி மேலே கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு.நீங்க ஆக வேண்டிய வேலை மட்டும் பாருங்க.

சரி ஷன்மதி,அவனுக்கு தகுதி இருக்கு என்ற ஒரே காரணத்திற்காக அவனை நான் பரிந்துரை பண்றேன்.ஆனா முதலில் நீ அவன்கிட்ட சம்மதம் வாங்கு.அப்புறம் பார்க்கலாம்.

சரிப்பா..

ராஜா போலீசில் சேர ஒத்து கொள்வானா?சஞ்சனா தான் அதற்கு விடுவாளா.!!அவள் தான் அவனை செதுக்கி கொண்டு இருக்கிறாளே.ராஜா இப்பொழுது தன் வேலையில் முன்னுக்கு வர,சஞ்சனாவின் உதவியோடு தபால் வழி கல்வி மூலமாக டிகிரி படித்து கொண்டு இருப்பது ஷன்மதி இன்னும் அறியவில்லை.

[Image: Malvika-sharma-coffee-with-kadhal-2-hot-...d-caps.jpg]

[Image: images-70.jpg]

Artificial feel  Sad

Edhku intha character add on aachi nu tha purila

Serial type dragging

First time cannot hide my disappointment on this story 

Too late about review on this part...
Like Reply
(04-09-2023, 04:45 PM)snegithan Wrote: Episode -47

சஞ்சனா வந்த முதல் வேலையாக ராஜா எங்கு இருக்கிறான் என்று கண்களால் ஆராய்ந்தாள்.ராஜாவை கண்டவுடன் அங்கு இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து மறைத்து கொண்டு அவன் கண்களில் அகப்படா வண்ணம் அவர்கள் பேச்சை ஒட்டு கேட்கும் தூரத்தில் அமர்ந்து கொண்டாள்.சிறிது நேரத்தில் ஷன்மதியும் வந்து விட்டாள்.

சாரி ராஜா,உன்னை ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனோ,என்று கேட்க,

ராஜா முறுவலித்து"என்ன ஆச்சு ஷன்மதி ,நேற்றில் இருந்து ஒரே சாரி மழை பொழியுது.நீ சரியான நேரத்திற்கு தான் வந்து இருக்கே.சாரி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.அதுவும் நான் உனக்கு சிறந்த நண்பனாக இருக்க ஆசைப்படுகிறேன்.நீ அடிக்கடி சாரி கேட்பதை பார்த்தால் நான் உனக்கு நண்பனாக இருப்பதில் பிடிக்க வில்லையோ.

அய்யோ அப்படி இல்லாம் இல்லை ராஜா,இதுக்கு மேல் நான் சாரி கேட்க மாட்டேன் போதுமா ?இப்போ நான் சாரி கேட்டதுக்கு சாரி என்று சொல்ல வந்து நாக்கை கடித்து கொண்டாள்.

ராஜா சிரித்து "பார்த்தியா மறுபடியும் சாரி உன் வாயில் வருது, நேற்றில் இருந்து உன் முகமும் வாட்டமா இருக்கு ஷன்மதி,அதுவும் பேச ரொம்பவே தடுமாறுகிற.இது நான் வழக்கமாக பார்க்கிற ஷன்மதியே இல்ல"

ஷன்மதி மனதுள்ளாகவே "உன்னுடன் சஞ்சனாவை  பார்த்ததில் இருந்து தான் இந்த தடுமாற்றம் ராஜா"என்று எண்ண,

ராஜா அவளிடம் சத்தமாக"ஷன்மதி இந்த உலகத்தில் தான் இருக்கியா?."

"அது வேற ஒன்னும் இல்ல ராஜா,உன்கிட்ட எப்படி பேச ஆரம்பிப்பது என ஒரு சின்ன சிந்தனை"

"சரி,உன் மனசு இலகுவாக ஆகிற மாதிரி சில விசயம் சொல்றேன்,நீ இன்னிக்கி பளிச்சுன்னு அழகாக இருக்கே,உன்னோட புருவங்கள் அழகாக மையிட்டு இருக்கே.உன்னோட அழகை நீ போட்டு வந்த உடை இன்னும் மெருகேற்றுகிறது "என சொல்ல

ஷன்மதி வெட்கப்பட்டு ,"ராஜா நான் உண்மையில் அழகாக இருக்கேனா."

"சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் ஷன்மதி அதுக்கு நீ வெட்கம் எல்லாம் படாதே,"

"யூ ராஸ்கல்" என்று அவள் சிரித்து செல்லமாக அடிக்க முயல,

ராஜா சிரித்து கொண்டே அவள் அடியை வாங்கி கொண்டு"நீ உண்மையில் ரொம்ப அழகாக தான் இருக்கே,நீ இந்த மாதிரி  கலகலப்பாக இருக்க வேண்டும் என்று தான் கிண்டல் பண்ணேன்.இப்போ உன் மைண்ட் ஃப்ரீ ஆயிடுச்சா.உனக்கு என்ன விருப்பமோ அதை முதலில் ஆர்டர் பண்ணு ."

"எனக்கு ஒரு மேங்கோ மில்க் ஷேக்,உனக்கு ராஜா,"

"எனக்கு எதுவும் வேணாம் ஷன்மதி,நான் இப்போ விரதம் இருப்பதால் காலையில் எதுவும் இப்போ சாப்பிட முடியாது."

"சரி, ராஜா நான் நேராக விசயத்திற்கு வரேன்.இப்போ போலீசில் உன்னை மாதிரி ஆட்கள் இருக்க வேண்டும் என்று அப்பா விருப்பப்பட்டார்.உனக்கு வேலை ரெடியாக இருக்கு.நீ "ம்" என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் உடனே உனக்கு வேலை கிடைக்கும்.அப்புறம் நீ ஒரு டிகிரி முடித்து ips மட்டும் பாசாகி விட்டால் நீ நல்ல ரேங்குக்கு சீக்கிரமா வந்து விட முடியும்.உன்னோட எதிர்காலமே மாறி விடும்.உனக்கு  கூட இருந்து நான் உதவி புரிகிறேன்.உனக்கு இருக்கும் திறமைக்கு நீ ips கண்டிப்பாக பாஸ் பண்ண முடியும்."

சஞ்சனா இதை கேட்டு அதிர்ந்தாள்.ராஜாவை தன்னிடம் இருந்து பிரிக்க அவள் கையாளும் முதல் வழி என்பது அவளுக்கு புரிந்தது.இருந்தும் ராஜா என்ன சொல்ல போகிறான் என்று கேட்க மிக ஆர்வமாக காதுகளை தீட்டி கொண்டு தயாராக இருந்தாள்.

ராஜா ஷன்மதியிடம்,"ரொம்ப தேங்க்ஸ் ஷன்மதி,என்னோட எதிர்காலத்திற்காக நீ மெனக்கெட்டு வந்து இருக்கே.ஆனா என்னால் இப்போ போலீசில் சேர முடியாது."சட்டென்று மறுக்க

இந்த வார்த்தையை கேட்டதும் சஞ்சனா முகம் மலர்ந்தது.

"ஏன் என்னாச்சு ராஜா,"ஷன்மதி கவலையோடு கேட்க

"நான் இப்போ என்னோட கம்பனியில் TL ஆக செலக்ட் ஆகி இருக்கேன்."

வாவ் சூப்பர்,வாழ்த்துக்கள்.

அப்புறம் என்னோட வேலையில் இன்னும் அடுத்த நிலைகளுக்கு செல்ல டிகிரியும் படித்து கொண்டு இருக்கிறேன்.

அருமை.நான் என்ன நினைத்தேனோ அதை நீ செய்து கொண்டு இருப்பது எனக்கு சந்தோஷம்.

இன்னொரு முக்கிய விசயம் ஷன்மதி,இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் சஞ்சனா தான்.அவ தான் பின்னாடி இருந்து ஒவ்வொன்றாக என்னை  இயக்கி கொண்டு இருக்கிறாள்.

சஞ்சனா பற்றி பேசியதும் ஷன்மதி முகம் வாடி போனது.நான் என்ன ராஜாவிற்கு செய்ய நினைத்தேனோ,அதை தான் சஞ்சனா கச்சிதமாக செய்து கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து அவள் மேல் மதிப்பும் வந்தது.ஆனால் ராஜாவை மட்டும் விட்டு கொடுக்க மனமில்லை.

இதற்கு மேல் அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது.சமயோசிதமாக யோசித்து தான் செயல்பட வேண்டும்.நான் தான் ராஜாவிடம் இனிமேல் அடிக்கடி சந்திப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்து இருக்க வேண்டும் என ஷன்மதி மனதில் நினைத்து,

"சரி ராஜா,நீ செல்வது தான் சரியான பாதை.நீ படிக்கும் டிகிரி சம்பந்தமாக நான் உன்னை அடிக்கடி சந்தித்து என்னால் ஆன உதவி செய்யறேன் இப்ப வரட்டுமா"

"சரி ஷன்மதி."

"பேரர் எவ்வளவு ஆச்சு", ஷன்மதி கேட்க

ஷன்மதி நீ கிளம்பு,கஸ்டமர் ஒருத்தர் இங்கே வரேன் என சொல்லி இருக்கார்.நான் அவருக்கும் சேர்த்து பில் பண்ணிக்கிறேன்.

ஓகே பை ராஜா.எதுக்கும் இந்த போலீஸ் வேலை பற்றியும் கொஞ்சம் யோசி.

சரி ஷன்மதி.பார்த்து போய்ட்டு வா

ராஜா அமைதியாக எழுந்து சென்று,சஞ்சனா டேபிள் முன் உட்கார்ந்து"சஞ்சனா ஒளிந்து இருந்தது போதும், கொஞ்சம் பேப்பரை கீழே இறக்குமா"

சஞ்சனா அசடு வழிய "அடப்பாவி நான் வந்தது உனக்கு முன்பே தெரியுமா?"

நீ உள்ளே வரும்போதே உன் கொலுசு பாடும் ராகத்தை வைத்தே அது நீ தான் என  கண்டுபிடித்து விட்டேன்.நியூஸ் பேப்பரை வைத்து முகத்தை மறைத்த என் கண்மணிக்கு ஏனோ கொலுசை மறைக்க தோன்றவில்லை.எங்களுக்கும் சில சமயம் உள்ளுணர்வு வேலை செய்யும் சஞ்சனா.என் கண்மணி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் வந்து விட்டால் எனக்கும் சிக்னல் வந்து விடும்.

"செம்ம உஷாருதான்பா நீ "

அது இருக்கட்டும்,நீ எதுக்கு வந்தே..?

அது வந்து ராஜா...என சஞ்சனா ராகம் இழுக்க,

என்ன என்னை வேவு பார்க்க வந்தியா சஞ்சனா,அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை கிடையாது.

"அப்படி இல்லடா,உன் மேல முழு நம்பிக்கை இருக்கு.ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி வந்துட்டேன்.நான் பண்ணது தப்பு தான்.என்னை மன்னிச்சிடுடா" என தலை கவிழ்ந்தாள்.

ராஜா அவள் முகத்தை விரலால் நிமிர்த்தி"என்னை சந்தேகபடுவது உன்னை நீயே சந்தேகப்படுவது மாதிரி தானே செல்லம்,உன்னையும் குறை சொல்ல முடியாது. ஷன்மதி என்னை விரும்புறா என்று தெரிந்து ,அவ என்னை கொத்தி கொண்டு போய் விடுவாளோ என்ற பயம் உனக்கு.

சஞ்சனா ஆச்சரியம் அடைந்து"ராஜா உனக்கு எப்படி தெரியும் அவ உன்னை விரும்புறா என்று"

என்ன சஞ்சனா,ஒருத்தர் பேசும் போது அவர்கள் கண்ணை பார்த்து சொல்லிவிட முடியாதா?அவங்களுக்கு நம்ம மேல லவ் இருக்கா இல்லையா என்று,அவ நல்ல பொண்ணு, நேரம் பார்த்து கொஞ்சம் பக்குவமாக எடுத்து சொல்லி அவளுக்கு நானே புரிய வைக்கிறேன்."

எனக்கு இது போதும் ராஜா,என சந்தோஷத்துடன் அவனை கட்டி கொள்ள வர,"சார் பில்" பேரர் குரல் கேட்டு அவளை தடுத்தது.

ராஜா உடனே ஏமாற்றத்துடன்"ஏன்யா... சரியான நேரத்தில் குறுக்கே வரீங்க."ம்"என்று பெருமூச்சு விட்டு போய் இவங்க சாப்பிட்ட பில்லையும் சேர்த்து போட்டுட்டு வாங்க"

மீண்டும் சஞ்சனா கட்டி கொள்ள வர இப்போ ராஜேஷ் குரல் கேட்டது.

ஒருத்தன கூட்டிட்டு வந்தோமே,அவனுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது எண்ணம் இருந்துச்சா சஞ்சனா உனக்கு.?

டேய் நீ எங்கேடா ராஜேஷ் இங்கே?ராஜா ஆச்சரியத்துடன் கேட்க,

எல்லாம் உன் ஆளை கேளுடா ராஜா,சும்மா இருந்தவனை கூட்டிட்டு வந்துட்டா.

சரி விடு ராஜேஷ்,அவ குழந்தை மாதிரி, வழி தெரியலன்னு துணைக்கு உன்னை கூட்டி வந்து இருப்பா,

என்னது அவளுக்கா வழி தெரியல,ஊரில் உள்ள சந்து பொந்தெல்லாம் அவளுக்கு நல்லா தெரியுது.

சரி சரி , உனக்கு என்ன வேணும் பார்த்து சாப்பிடு..

சாப்பிட்டு விட்டு கிளம்ப,

ராஜேஷ்"டேய் ராஜா என்னை ஒழுங்கா என் வண்டிகிட்ட கொண்டு போய் விடு,"

"அண்ணா வாங்கண்ணா,நான் கொண்டு போய் விடறேன்"சஞ்சனா கூப்பிட

என்னது.... மறுபடியும் உன் கூடவா?என்னால் முடியாது.. அவ ஒட்டும் போது வண்டியோட டயர் தரையிலேயே படல மச்சான்,அப்படியே அந்தரத்தில்  பறந்து வருது.அவ்வளவு வேகமா வண்டி ஒட்டுறா.

சஞ்சனா நீயா டபுள்ஸ் அடித்து வண்டி ஓட்டிட்டு வந்தே..ராஜா ஆச்சரியமாக கேட்டான்.

ஆமா ராஜா,முதல் தடவை ராஜேஷ் அண்ணாவை வைச்சு தான் சோதனை பண்ணேன்..

என்னது....! முதல் தடவையா,ராஜா என் உசிருக்கு உத்திரவாதம் இல்லை,ஒழுங்கா rapido புக் பண்ணு.நான் அதிலேயே போய்க்கிறேன்.

சரி சரி ஓகே,இந்தா நீ என் வண்டியை நீ ஒட்டி வா,நான் சஞ்சனா வண்டியில் போய்க்கிறேன்.

ராஜா வீணா ரிஸ்க் எடுக்காதே,அவ ரொம்ப மோசமாக வண்டி ஒட்டறா,நீயும் இந்த வண்டியிலேயே  வந்திடு.

டேய் ராஜேஷ்,அவளை மட்டும் தனியா விட்டுட்டு என்னால் எப்படி தனியா வர முடியும்..நீ போ,பரவாயில்ல நான் இதிலேயே வரேன்..

சஞ்சனாவிற்கு ராஜா பின்னாடி உட்கார்ந்து போவது சந்தோஷம்.இப்பொழுது அவனை பின்னாடி உட்கார வைத்து கூட்டி போவது டபுள் சந்தோஷம்.

முன்பு ஜெட் வேகத்தில் பறந்த வண்டி தற்பொழுது கப்பல் போல் மிதக்க தொடங்கியது.

ராஜேஷ் வண்டியில் பின் தொடர்ந்து வந்து"என்ன சஞ்சனா,இப்போ மட்டும் வண்டி அப்படியே ஸ்மூத்தாக போகுது"..

"பின்னாடி உட்கார்ந்து வருவது யாரு,அவன் என் உசிருடா.அவனுக்கு ஒன்னுன்னா நான் தாங்க மாட்டேன்.நீ முன்னாடி போடா" என கலாய்த்தாள்.

அவள் தோளின் மீது இருந்த அவன் கையை எடுத்து இடுப்பில் வைத்து "என்னை கெட்டியாக கட்டிக்கோட"
என்று சொன்னாலும் அவன் அமைதியாகவே வந்தான்.

மேலும் விரித்து வைத்து இருந்த  அவள் கூந்தல் அவன் முகத்தில் அலையாடினாலும் அவன் அவளுக்காக எளிதில் கட்டுபடுத்தி கொண்டான்.

ஆனால் நாளை நடைபெற போகும் ஒரு சம்பவம் அவன் ஆண்மைக்கே ஒரு சவால் விட போகிறது.அவன் விரதத்தை சோதனைக்குள்ளாக்கும் விதமாக அவள் அந்தரங்க பாகங்களை தொட வேண்டிய கட்டாயம் ஏற்பட போகிறது.அதில் மட்டும் வென்று விட்டால் இந்த விரதத்தை வெற்றிகரமாக அவன் முடிப்பது எளிது.

அது என்ன சம்பவம்?

[Image: IMG-20230903-WA0003.jpg]

[Image: IMG-20230903-WA0005.jpg]

Antha kandam iruku solli shanmathi part extra fitting potu serial akkee irukinga pola
Like Reply
Shanmathi vachi lead eduthathu ennavo old story padichathum
Feels disappointed only brother...

Unga wish kadhai thodarunha anaah hot agurathu agaama
Poradhum inneee Vara porah episode tha

Actually shanmathi portion fully enaku edho usual serial varah character tha thonuchu

Thendral oru serial vanthuchu antha feel konjam

Too dramatic on her portions

Like unwanted fitting thevai illama oru lady character use panni adha degradation panna feel

Since antha character uyir iruku anaah sariya use panla

Again re intro tharinga adhu kadhai la second lead with her life lead agumaa enna poruthu irunthu paka waiting

Munnadi antha character dummy pannathku ipo valuable panringla paka waiting
[+] 1 user Likes krishkj's post
Like Reply
மிகவும் வித்தியாசமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(20-07-2024, 01:06 AM)krishkj Wrote: Shanmathi vachi lead eduthathu ennavo old story padichathum
Feels disappointed only brother...

Unga wish kadhai thodarunha anaah hot agurathu agaama
Poradhum inneee Vara porah episode tha

Actually shanmathi portion fully enaku edho usual serial varah character tha thonuchu

Thendral oru serial vanthuchu antha feel konjam

Too dramatic on her portions

Like unwanted fitting thevai illama oru lady character use panni adha degradation panna feel

Since antha character uyir iruku anaah sariya use panla

Again re intro tharinga adhu kadhai la second lead with her life lead agumaa enna poruthu irunthu paka waiting

Munnadi antha character dummy pannathku ipo valuable panringla paka waiting

உங்களின் விமர்சனத்திற்கு நன்றி ப்ரோ,ஷன்மதியும் சரி,சஞ்சனாவும் சரி இருவருமே ராஜாவை காதலிக்கிறார்கள்.ராஜாவின் பிரம்மச்சரிய ஜாதகத்தை சஞ்சனா உடைத்து விட்டாள்.அதனால் அவளுக்கு கண்டம் ஏற்படுகிறது. அதன் பிறகு தான் ஷன்மதி கதையில் வருகிறாள்.ஷன்மதிக்கு சஞ்சனா மீது பொறாமை உண்டாகிறது.அதாவது ஒரு குழந்தைக்கு தன் தாயிடம் இன்னொரு குழந்தை வந்தால் பொறாமை உண்டாகும் அல்லவா..!அது போல..ஆனால் புதிதாக வந்த குழந்தை மேல் வரும் கோபம் ஏனோ தாய் மீது வருவது இல்லை.அது போல ஷன்மதிக்கு சஞ்சனா மேல் வந்த கோபம் ராஜா மீது வரவில்லை.காரணம் ராஜா மீது கொண்டு இருந்த காதல். சஞ்சனாவிற்கு ஒருவேளை ஏதாவது தீங்கு செய்தாலும் அதை ராஜா தான் குறுக்கே புகுந்து ஏற்று கொள்வான் என்று சாம்பார் ஊற்றும் பொழுது நடந்த நிகழ்வை சொன்னேன்..பின்னாடி அது போல தான் நடந்தது.. சஞ்சனாவிற்கு வந்த ஆபத்தை ராஜா நடுவில் புகுந்து ஏற்று கொண்டு அவன் உயிர் போகும் அளவிற்கு சம்பவம் நடந்து விட்டது..அதனால் தன் காதலையே விட்டு கொடுத்து விட்டாள் ஷன்மதி என்று சொல்லி இருப்பேன்..ஆனால் அவளும் அவனை உண்மையாக காதலித்து இருக்கிறாள்.அதை தான் இரண்டாம் பாகத்தில் சொல்ல வருகிறேன்.இந்த இரண்டாம் பாகம் மொத்தமே 5 அல்லது 6 பாகங்கள் மட்டுமே வரும்..அதாவது இந்த கதை வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்றே முடிந்து விடும்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(19-07-2024, 11:37 PM)Samsd Wrote: Storya நல்லா தான் கொண்டு போறீங்க.

ஆனா இந்த part2 தேவையில்லாத வேலையோன்னு தோணுது.

Previous season alavuku idhu intrestinga illana disappointment aagirum

இதில் disappointment ஆகும் அளவிற்கு கொண்டு செல்ல மாட்டேன் ப்ரோ,ஏனெனில் இந்த கதை மொத்தமே 5 அல்லது 6 episode மட்டுமே..இன்னும் 2 அல்லது 3 நாளில் முடிந்து விடும்
Like Reply
(20-07-2024, 04:53 AM)omprakash_71 Wrote: மிகவும் வித்தியாசமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
ஷன்மதி அந்த கேரக்டர் மிகவும் வித்தியாசமானது காதலுக்குகாக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியது சஞ்சனாவுக்கு இணையாக ராஜாவை காதலித்த பாத்திரம் அது ஆனால் வேறு ஒருவனை மனந்த பிறகு அவள் யாருமின்றி தனியாக இருப்பது ஆச்சர்யம் அப்படி என்ன சோகம் அவள் வாழ்வில் ?
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
(20-07-2024, 06:13 AM)Natarajan Rajangam Wrote: ஷன்மதி அந்த கேரக்டர் மிகவும் வித்தியாசமானது காதலுக்குகாக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியது சஞ்சனாவுக்கு இணையாக ராஜாவை காதலித்த பாத்திரம் அது ஆனால் வேறு ஒருவனை மனந்த பிறகு அவள் யாருமின்றி தனியாக இருப்பது ஆச்சர்யம் அப்படி என்ன சோகம் அவள் வாழ்வில் ?

அது தான் part 2 ப்ரோ..இன்னொரு hint இதில் உள்ளது..அவள் தன் குடும்பத்தை விட்டும் தனியாக வந்து இருக்கிறாள்..நீங்கள் கேட்டதற்கான விடை அடுத்த பாகத்தில் வரும்
Like Reply




Users browsing this thread: 26 Guest(s)