Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
செல்போன் எண்-ஐ பகிர்ந்த நபரால் பாலியல் ரீதியான தொல்லை தரும் அழைப்புகள்: சின்னத்திரை நடிகை நிலானி காவல் ஆணையரிடம் புகார்
நடிகை நிலானி
தன்னை ஒருவர் திருமணம் செய்வதாக ஏமாற்றி, தனது செல்போன் எண்-ஐ நண்பர்களுக்கு பகிர்ந்ததால் தனக்கு ஏராளமான ஆபாச அழைப்புகள் வருவதாக சின்னத்திரை நடிகை நிலானி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
கடந்த ஆண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கமிஷனர் உடையில் போலீஸை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியவர் சின்னத்திரை நடிகை நிலானி. பின்னர் தலைமறைவான அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இளைஞர் ஒருவருடன் அவர் பழக அந்த இளைஞரால் பாதிக்கப்பட்டு அவரைவிட்டு விலகினார்
[url=https://tamil.thehindu.com/tamilnadu/article28088630.ece][/url]
இதனால் அந்த இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். அதற்கு நிலானியை குற்றம் சாட்டியதற்கு அழுதுக்கொண்டே அவர் தன்னிலை விளக்கம் கொடுத்தது அப்போது பரபரப்பானது. பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.
பின்னர் சிறிதுகாலம் அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் ஒன்றை அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கடந்த ஆண்டு நடந்த சம்பவம் என் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. என்னை கேவலப்படுத்தி சில ஊடகங்கள் செய்தி போட்டதால் நான் குழந்தைகளோடு நடுத்தெருவுக்கு வந்தேன். சமூக வலைதளத்தில் என்னுடைய நம்பர் வெளியானது. அதன் மூலமாக என் நிலை அறிந்து உலகம் முழுவதும் இருந்து பலர் உதவி செய்தனர்.
அப்படி உதவி செய்ததில் ஒருவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தேன். ஆனால் அந்த நபர் உடனே திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார். கட்டாயப்படுத்தினார். அவரை பற்றி விசாரித்த போது அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்பது தெரியவந்தது. அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து அந்த நபரிடமிருந்து விலகினேன், அந்த நபர் என்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் என்னுடைய செல்போன் எண்ணை அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார், அதனால் தினமும் எனக்கு ஆபாச எஸ்எம்எஸ்களாக வருகிறது.
என்னை மிரட்டுகிறார்கள், பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாசமாக பேசி மிரட்டுகிறார்கள். என்னுடைய செல்போனை யாரோ ஹேக் பண்ணி உள்ளனர். எனக்கு தெரியாமலேயே என்னுடைய போன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆப்ரேட் ஆகுது.
நான் தனியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்து போனதால் அடையாளம் தெரியாத பலர் பேசி தொல்லை கொடுக்கிறார்கள். அது தொடர்பாக புகார் கொடுக்க வந்துள்ளேன்.
என்னுடைய படத்தை மார்பிங் செய்து ஆபாச படத்தை போடுவேன் என்று மிரட்டுகிறார்கள். ஏற்கனவே என்னுடைய பெயர் கெட்டு போய் உள்ளது. ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியதால் என் பேச்சை யார் நம்புவார்கள், எனது நிலையை விளக்கி என்னைக் காப்பாற்றிக் கொள்ள சட்ட உதவியை நாடி வந்துள்ளேன்.
ஜனநாயக மாதர் சங்கத்தின் துணையோடு புகார் கொடுக்க வந்துள்ளேன். தினமும் எனக்கு 500 போன் வருகிறது. எல்லாமே ஆபாச வார்த்தைகளால் மிரட்டுகிறார்கள். என்னை மிரட்டும் நபர் குறித்த அடையாளத்தையும் பெயரையும் வெளியிட விரும்பவில்லை.
அந்த நபர் என்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார். ஏற்கனவே ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அற்கு நீ தான் காரணம் என வெளியிடுவேன் என மிரட்டுகிறார்.
நான் யாருடனும் பழகவில்லை. ஏற்கனவே நடந்த சம்பவத்தால் எனக்கு சினிமா வாய்ப்பு வராமல் போய் விட்டது. என தெரிவித்தார் நிலானி.
பின்னர் காவல் ஆணையரிடம் தன்னை ஏமாற்றி தனது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவேன் என மிரட்டி, தனது செல்போன் எண்ணை பலரிடமும் பகிர்ந்த நபர்மீது புகார் அளித்தார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சிந்துபாத் படத்திற்கு சிக்கல்.?
'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் அருண்குமாரும், விஜய்சேதுபதியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'சிந்துபாத்'. விஜய்சேதுபதியுடன் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் இப்படம், தாய்லாந்த் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது.
'சிந்துபாத்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஜய் காத்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கே.புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் ராஜராஜன், 'வான்சன் மூவீஸ்' நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் கடந்த மாதமே வெளியாகவிருந்தது.
பின்னர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக இந்த மாதம் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சிந்துபாத் படம் வெளியாகாது என்ற தகவல் தற்போது படத்துறையில் பரவிவருகிறது.
பாகுபலி 2 படத்தை தமிழகத்தில் வெளியிட்ட விவகாரத்தில் அதன் தயாரிப்பாளர்களுக்கு 'கே.புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் பெரிய தொகை பாக்கி வைத்துள்ளதாம். அதன் காரணமாக சிந்துபாத் படத்தை வெளியிட பாகுபலி படத்தின் தயாரிப்பாளர்கள், தெலங்கானா நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
5 நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்தில் மிளிரும் தமிழ் பிக் பாஸ் 3 சீசன் வீடு!!
விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் 3 வீடு நிகழ்ச்சி வரும் 23ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செட் அமைப்பு என்ன என்பது பற்றி இங்கு பார்ப்போம்…
5 நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்தில் மிளிரும் தமிழ் பிக் பாஸ் 3 சீசன் வீடு!!
ஹைலைட்ஸ்
- புதிய தோற்றத்தில் தமிழ் பிக் பாஸ் 3 வீடு
- இந்த முறை 5 நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்தில் மிளிருகிறது பிக் பாஸ் வீடு
தமிழ்நாட்டில் எல்லாப் பிரச்சனைகளையும் மறக்கடித்து மக்களை பிக்பாஸை மாட்டுமே பேச வைக்கும், மயக்கத்தில் வைக்கும் ஒரு ஷோ. கமல்ஹாசனால் பட்டி தொட்டியெங்கும் பரவிய பிக்பாஸ் இப்போது மூன்றாவது சீசனுகுள் நுழைந்திருக்கிறது
சூர்யா, நயன்தாரா, ஆகிய இருவரில் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் கமலே இந்த சீசனையும் தொகுத்து வழங்க வருகிறார்.
பிக்பாஸ் இந்த ஞாயிற்றுகிழமை தொடங்க உள்ள நிலையில் நாம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. நமக்கு மட்டும் அல்லாமல் பல பத்திரிக்கை நண்பர்களும் இதற்காக கூடியிருக்க பிக் பாஸ் ஹவுஸ் அமைந்திருக்கும் பிவிபி அரங்கில் வெளியே தனி அறையில் அமர வைக்கப்பட்டோம். பிக் பாஸ் ஹவுஸ் எப்படியிருக்கும் என்கிற கற்பனை சுழன்றுகொண்டிருக்க அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டு செக்கிங் ஆரம்பித்தது.
போன் எடுத்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடாது. வீடியோ எடுக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரண்டு கட்டடங்களுக்கு நடுவே ஒரு சிறிய சந்தில் முன்னும் பின்னும் காவலர்கள் வாக்கி டாக்கியுடன் நடக்க நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம். பிக்பாஸ் ஹவுஸ் முன்னால் இருபுறமும் இரண்டு வாட்ச் டவர்கள் லைட்ட்டுடன் இருந்தது.
வாட்ச் டவர்
கடந்த இரு சீசன்களிலும் வெறும் லைட்ச்செட் மட்டுமே பிக் பாஸ் வீட்டின் முன் இருந்தது. ஆனால் இம்முறை அதில் ஆட்கள் நிற்கும் வாட்ச் டவராக மாற்றப்பட்டிருதது.
புகைப்பிடிக்கும் அறை!
அதே இடம் அதே வீடு ஆனால் முழுக்க மாற்றப்பட்ட அமைப்பு பிக்பாஸ் 3 முழுக்க புதிதாக இருந்தது. முதல் டோர் திறக்க உள்ளே இருளான ஒரு சிறுபகுதி அடுத்த டோர் திறந்தவுடன் பிக்பாஸின் முழுத்தோற்றமும் தெரிந்தது. ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நுழைந்த உணர்வு பொங்கியது. புல் தரையின் இடப்புற சுவற்றில் கோவில் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அதன் நடுவே இருந்த கதவு பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் திறக்கப்படவில்லை. அது சுமோக்கிங் ரூம் எனக் கூறப்பட்டது.
மருத்துவ முத்தம் அறை:
இந்த சீசனில் சுமோக்கிங் ரூம் இல்லையென்று சொல்லப்பட்ட நிலையில் அது இருப்பது உறுதியானது. புகழ் பெற்ற மருத்துவ முத்தம் நிகழ்ந்த இடம் இந்தத் தடவை வெளிப்புறம் கோவில் கடை வீதி பெயிண்டிங்கில் இருந்தது. அது முடியும் இடத்தில் கழிவறை இருந்தது. உள்நுழைந்தவுடன் வலப்புறம் நீச்சல் குளம் அதன் அருகே ஓய்வு எடுக்க சோபாவுடன் ஒரு இடம் இருந்தது.
புகை போக்கி அறை, ஜெயில் அமைப்பு:
பக்கத்தில் புகை போக்கி போன்ற ஒரு பித்தளை அறை. ஆனால் அது எதற்காக என்பது தெரியவில்லை. அதை ஒட்டி படுத்து ஓய்வெடுக்கும் அமைப்பு. இடப்புறம் முடிவில் கழிவறை போலவே வலப்புற முடிவில் ஜெயில் அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சீசனில் புகழ்பெற்ற ஜெயில் அமைப்பு இம்முறை அதே முறையில் அமைந்து இருந்தது.
கமல் ஹாசன் – விருமாண்டி ஓவியம்:
பிக்பாஸ் வீடு ஒரு கார்டூன் படத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது. சுற்றி சுற்றி எல்லா இடத்திலும் வித்யாசமான பெயிண்டிங் காட்சிகள். வீட்டுக்குள் நுழந்தவுடன் சுவற்றில் பாதி சைக்கிள் வெளியே பாதி சைக்கிள் என வித்தியாச அமைப்பு இருந்தது. பக்கத்தில் வலப்புறம் புகழ்பெற்ற படுக்கை அறை முழுக்க மாறிய தோற்றத்தில் பெண்களுக்கு தனியே, ஆண்களுக்கு தனியே ஆனால் இடையே கண்ணாடி தடுப்பு இல்லை. வெளியே கமல்ஹாசனின் விருமாண்டி ஓவியம் சுவற்றில் இருந்தது.
டைனிங் ஹால்
டைனிங் ஹாலும் புதிய டிசைன் எல்லா இடத்திலும் விளம்பரதாரர்களின் லோகோக்கள் நுணுக்கமாக பதிய வைக்கப்பட்டிருந்தது. 10 பேர் அமரக்கூடிய டைனிங் நடுவே கேமரா இடப்புறம் ஓய்வறை மாதிரியான ஒரு அமைப்பு முழுக்க அலங்காரம் செய்யப்பட்ட சுவற்றில் நம் தமிழ் கலாச்சார ஓவியங்கள்.
முந்தைய பிக்பாஸ் எதையும் ஞாபகப்படுத்தி விடக்கூடாது என்று பார்த்து பார்த்து செய்யப்பட்ட வித்தியாசங்கள் ஒவ்வொன்றிலும் புதிய டிசைன் பளிச்சிட்டது. கிச்சன் பெசண்ட் நகர் பீச்களில் பார்க்கும் பஸ் போன்ற அமைப்பில் இருந்தது. கிச்சன் டிசைனும் புதிது.
கன்பெஷன் ரூம் கிச்சனுக்கு பின்னே இடப்புறத்தில் இருந்தது. உள்ளே தங்க கலரில் மிகப்பெரிய ஷோபா. வெளியே ராவண தலை டெலஸ்கோப்பில் பார்க்கும் அமைப்பு பயன்படுத்தியது. அதன் எதிரே சுவற்றில் பத்து தலை ராவணன்.
ஸ்டோர் ரூம்:
கிச்சனுக்கு வலப்புறம் ஸ்டோர் ரூம் அதன் அமைப்பில் பெரிய மாறுதல ஏதுமில்லை. உள்ளே நுழைந்த கொஞ்ச நேரத்திற்குள்ளாக ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ரகசியங்களை உடைத்து விடாதீர்கள் என்கிற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பிக்பாஸ் அதி நவீன ஹோட்டல் போன்ற அனைத்து வசதிகளுடனும் இருந்தது. ரகசியங்கள் உடையும் தானே. அது விரைவில் அடுத்தடுத்த கட்டுரைகளில் நாம் ரகசியங்கள் உடைத்து ஒவ்வொன்றையும் விரிவாய் பார்ப்போம்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] திட்டமிட்டபடி நடக்கிறது நடிகர் சங்கத் தேர்தல்... ஆனால்?[/color]
[color=var(--meta-color)]நடிகர் சங்க தேர்தல் விஷால்[/color]
[color=var(--content-color)] பல பரபரப்புக்கும், திருப்பங்களுக்கும் நடுவே ஆளுங்கட்சி, ஆளுநர், நீதிமன்றம், காவல்துறை என இருந்த நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி ஜூன் 23ம்தேதி நடக்கவுள்ளது
[color=var(--content-color)]தென்னிந்திய நடிகர் சங்கம்[/color]
[color=var(--content-color)]முன்னதாக, ஜூன் 23ம் தேதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதில் பாதுகாப்புச் சிக்கல் என காவல்துறை சொன்னது. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது பாண்டவர் அணி. அதில் தேர்தலை ரத்து செய்யாமல் வேறொரு இடத்தில் நடத்திக்கொள்ளலாமெனக் கூறியது.[/color]
[color=var(--content-color)]சங்க உறுப்பினர் நீக்க விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சங்கங்கள் பதிவாளர்(மாவட்டம்) ரவீந்தரன் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.[/color]
[color=var(--content-color)]பாண்டவர் அணி![/color]
[color=var(--content-color)]இதனை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் பாண்டவர் அணி வென்றிருக்கிறது, நேற்று இரவு உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.அதன் இறுதியில் தேர்தலைத் திட்டமிட்ட 23ம் தேதி நடத்தலாம் எனக் கூறியது. தேர்தல் நடந்தாலும், வாக்குகளை அடுத்த உத்தரவு வரும் வரை எண்ணக்கூடாது என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. இதனால் நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தும் இடம் குறித்து இன்று அறிவிக்கப்படும்[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பஸ் முழுவதும் விஜயின் புகைப்படம்... எங்கு ஏறி இறங்கினாலும் இலவசம்...! வேற லெவலில் புதுச்சேரி ரசிகர்கள் கொண்டாட்டம்
Actor Vijay BirthDay | விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.
News18 | June 22, 2019, 7:33 AM IST
[/url]
நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் விஜய் படங்கள் ஒட்டிய பேருந்துகளில் இன்று மட்டும் இலவசமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (படம்: இளவமுதன் - புதுச்சேரி)
[color][size][font]
நடிகர் விஜய் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். (படம்: இளவமுதன் - புதுச்சேரி)
[/font][/size][/color]
[color][size][font]
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் பிறந்தநாளையொட்டி தனியார் பேருந்துகள் முழுவதும் விஜய் பாடங்களின் ஸ்டிக்கர்களை ஓட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர். (படம்: இளவமுதன் - புதுச்சேரி)
[/font][/size][/color]
[color][size][font]
பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பேருந்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் தொடங்கி வைத்தார். (படம்: இளவமுதன் - புதுச்சேரி)
[/font][/size][/color]
[color][size][font]
[url=http://twitter.com/share?text=%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.(%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF)&url=https://tamil.news18.com/photogallery/national/puducherry-travel-free-in-vijay-posters-bus-on-today-in-puducherry-vaij-170983-page-5.html]
[/font][/size][/color] மேலும் நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி இன்று விஜய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள பேருந்தில் இன்று நாள் முழுவதுமாக பயணிகள் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.(படம்: இளவமுதன் - புதுச்சேரி)
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிரபல மாடல் கொடுத்த மீ டு புகாரில் நடிகர் கைது!
கேரளாவை சேர்ந்த மாடல் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து, பிரபல நடிகர் விநாயகன் நேற்று கைது செய்யப்பட்டார்.
பிரபல மலையாள நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தமிழில் விஷாலின் ‘திமிரு’, சிம்புவின் ’சிலம்பாட்டம்’, தனுஷின் ‘மரியான்’ படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர், பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சர்ச்சையில் சிக்கி னார். இதனால், சமூக வலைத்தளங்களில் சாதி மற்றும் நிறம் தொடர்பான தாக்குதலுக்கு உள்ளானார்
இந்நிலையில் அவர் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடலுமான மிருதுளா தேவி, மீ டூ புகார் கூறியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரை அழைத்த போது, ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது புகார் சொன்னார். தன்னை மட்டுமல்லாது தன் தாயையும் அவர் விருப்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாக, விநாயகன் மீது அவர் கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் விநாயகன் அந்த காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பின்னர் ஜாமி னில் விடுதலை செய்தனர்.
’’விநாயகன் நேற்று காலை காவல் நிலையம் வந்தார். அவரது வாக்குமூலத்தை நாங்கள் பதிவு செய்துகொண்டோம். பின்னர் அவரை கைது செய்தோம். இது ஜாமினில் விடுவிக்கக் கூடிய குற்றம் என்பதால், ஜாமினில் விடுவித்தோம்’’ என்று கல்பட்டா போலீசார் தெரிவித்தனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பக்கிரி - பட காட்சிகள் ↓
-
-
-
-
[color][font]
பக்கிரி
நேரம் 1 மணி நேரம் 40 நிமிடம்
[/font][/color] - தனுஷ்
- 21 ஜூன், 2019
- கென் ஸ்காட்
- பக்கிரி - பார்க்கலாம்
-
3.25
[color][font]
விமர்சனம்
[/font][/color]
நடிப்பு - தனுஷ், பெரிநிஸ் பிஜோ, எரின் மொரியார்ட்டி
இயக்கம் - பென் ஸ்காட்
இசை - நிகோலஸ் எரெரா, அமித் திரிவேதி
தயாரிப்பு - பிரியோ பிலிம்ஸ், எம் கேபிட்டல் வென்சர்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், டிஎப்1 ஸ்டுடியோஸ்
வெளியான தேதி - 21 ஜுன் 2019
நேரம் - 1 மணி நேரம் 40 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5
“The Extraordinary Journey of the Fakir” என ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் எடுக்கப்பட்டு கடந்த வருடம் மே மாதம் வெளியான படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பக்கிரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
கனடா நாட்டைச்சேர்ந்த இயக்குனர் கென் ஸ்காட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன் ஸ்டிக்கி பின்ஜர்ஸ், ஸ்டார்பக், டெலிவரி மேன், அன்பினிஷ்ட் பிசினஸ் ஆகிய ஆங்கிலப் படங்களை இயக்கி உள்ளார்.
கனடா நாட்டு இயக்குனராக இருந்தாலும் இந்தியாவின் மும்பையில் வசிக்கும் ஒரு ஏழைக்குடும்பம், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் ஆசை என சென்டிமென்ட் டச்சுடன் இந்தப் படத்தைக் கொடுத்து ரசிக்க வைக்கிறார்.
மும்பையில் லாண்டரி துணிகளை வெளுக்கும் ஒரு பெண்மணி. பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துக் கரம் பிடித்து மகனுடன் தனியாக வசிக்கிறார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மகன் தன்னால் ஏழையாக இருக்க முடியாது என மேஜிக் செய்வதாகக் கூறி ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கிறார். அந்த இளைஞன்தான் தனுஷ். தன் அப்பா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று அம்மாவிடம் இருந்து தெரிந்து கொள்கிறான். அம்மாவின் மரணத்திற்குப் பிறகு தன் அப்பாவைத் தேடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்கிறார். அங்கிருந்து அவர் இங்கிலாந்து, ஸ்பெயின், லிபியா என சுற்ற வேண்டியிருக்கிறது. தன் பயணத்தில் அப்பாவைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ராஞ்சனா, ஷமிதாப் படங்களின் மூலம் இந்திய அளவில் பேசப்பட்டவர் தனுஷ். இந்தப் படம் மூலம் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பேசப்பட்டவராகி இருக்கிறார். தனுஷ் இதற்கு முன் நடித்த படங்களிலிருந்து இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு வேறு விதமாகத் தெரிகிறது. ராஜகுமரகுரு லட்சுமிபதி என்பதுதான் படத்தில் தனுஷின் பெயர். ஆனால், பக்கிரி என எதற்குத் தலைப்பு வைத்தார்கள் என்பதன் காரணம் தெரியவில்லை.
பாரிஸில் இறங்கியதும் ஒரு காதல், பின் அதில் பிரிவு, தெரியாமல் இங்கிலாந்திற்குள் நுழைந்து மாட்டிக் கொள்வது, ஸ்பெயினுக்கு அனுப்பப்படுவது, அங்கிருந்து லிபியாவிற்கு கடத்தப்படுவது என அவருடைய பயணத்தில் சிலவித அனுபவங்கள். லிபிய அகதிகளுக்காக தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுக்கும் போது நெகிழ வைக்கிறார். பிரெஞ்ச் ரசிகர்கள் இந்தப் படத்தையும் தனுஷையும் ரசித்தார்களோ இல்லையோ நாம் ரசிப்போம்.
தனுஷ் காதலியாக எரின் மொரியார்டி. இருவரும் பாரிஸில் முதல் நாள் சந்தித்துக் கொள்வதுடன் பிரிந்து விடுகிறார்கள். பின்னர் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டு மறுபடியும் பிரிகிறார்கள். இருவரும் இணைவார்களா மாட்டார்களா என்ற ஒரு ஏக்கத்தை நமக்குள் கொண்டு வந்துவிடுகிறார் இயக்குனர்.
தனுஷுக்கு உதவி செய்யும் நடிகையாக பெரிநிஸ் பிஜோ. தனுஷின் நல்ல மனதைப் புரிந்து கொண்டு அவருக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்க உதவி செய்கிறார். தனுஷ் உதவியால் பிரிந்த தன் காதலருடன் மீண்டும் இணைந்து தனுஷுக்கு அவர் நன்றி சொல்லும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.
குட்டி தனுஷாக நடித்திருக்கும் ஹார்ட்டி சிங், தனுஷின் அம்மாவாக நடித்திருக்கும் அம்ருதா சந்த் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ள படம் என்ற உணர்வே வரவில்லை. வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை சேர்த்து ரசிக்க வைத்துள்ளார்கள்.
ஒரு குடும்பக் கதையாக ஆரம்பமாகி, காதல் கதையாக மாறி, கடைசியில் அகதிகளின் அவலத்தைச் சொல்லும் ஒரு படமாக முடிவடைகிறது. தனுஷ் நடித்த எத்தனையோ படங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த பக்கிரியை வித்தியாசமான படம் என தாராளமாகச் சொல்லலாம்.
பக்கிரி - பார்க்கலாம்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தும்பா - விமர்சனம்
தும்பா - பட காட்சிகள் ↓
-
-
-
-
[color][font][color]
தும்பா
நேரம் 2 மணி நேரம் 3 நிமிடம்
[/color][/font][/color]
1.5
[color][font][color]
விமர்சனம்
[/color][/font][/color]
நடிப்பு - தீனா, தர்ஷன், கீர்த்தி பாண்டியன்
தயாரிப்பு - ரீகல் ரீல்ஸ், ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்எல்வி
இயக்கம் - ஹரிஷ் ராம்
இசை - அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி
வெளியான தேதி - 21 ஜுன் 2019
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
காடு, அதைச் சார்ந்த பகுதிகள் என அவற்றை மையப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்கள் மிக மிகக் குறைவு. இந்தப் படம் முழுவதும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் கதையைக் கொண்ட ஒரு படம். ஆனால், கதை என்பதும், திரைக்கதை என்பதும் வலுவாக இல்லாததால் அவர்களின் முயற்சி விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிட்டது.
இயக்குனர் ஹரிஷ் ராம், விஷுவலாகவும், விஎப்எக்ஸ் நிறைந்த படமாகவும் இதை யோசித்த அளவிற்கு கூடவே வலுவான கதையையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் யோசித்திருக்கலாம்.
டாப்சிலிப் பகுதியில் புலி சிலைகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலைக்குச் செல்கிறார் தீனா. அவருக்கு உதவியாக நண்பன் தர்ஷன் உடன் போகிறார். வைல்ட் லைப் போட்டோகிராபியில் ஆர்வமுள்ள கீர்த்தி பாண்டியன் அதே பகுதிக்கு புலியைப் போட்டோ எடுக்கச் செல்கிறார். இவர்கள் சென்ற சமயம், கேரள வனப் பகுதியிலிருந்து தும்பா என்ற புலி தப்பித்து டாப்சிலிப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்தப் புலியை சட்ட விரோதமாகப் பிடித்து விற்க முயல்கிறார் வனத்துறை அதிகாரி. அவரிடமிருந்து புலியைக் காப்பாற்ற தீனா, தர்ஷன், கீர்த்தி முடிவெடுக்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தில் நாயகன் யார் என்பதில் பெரும் குழப்பம். தீனா, தர்ஷன் இருவருமே படம் முழுவதும் வருகிறார்கள். படத்தின் டைட்டில் கார்டில் கூட தீனா பெயர்தான் முதலில் இடம் பெறுகிறது.
கனா படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தர்ஷன். அந்தப் படத்தில் நடித்த அளவிற்கு கால்வாசி கூட இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை.
டிவியில் வந்தாவது ஏதோ ஒரு காமெடி செய்து சிரிக்க வைப்பார் தீனா. ஆனால், படம் முழுவதும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஒரு காட்சியில் கூட சிரிக்க வைக்கவில்லை. ஒருவேளை படத்தில் அவர்தான் நாயகன் என சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.
நாயகியாக கீர்த்தி பாண்டியன். பத்து நாள் பட்டினி கிடந்தவர் போல அவ்வளவு ஒல்லியாக இருக்கிறார். குட்டையான டிரவுசர் போட்டுக் கொண்டுதான் படம் முழுவதும் சுற்றுகிறார். கொஞ்சமே கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார்.
படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து ஜெயம் ரவி ஏன் நடனமாடினார் என்றே தெரியவில்லை.
படத்தில் அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி என மூன்று இசையமைப்பாளர்கள் படத்தில் இருந்தும் ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை அமைத்துள்ள சந்தோஷ் தயாநிதி, ஏதோ ஒரு டிராமாவுக்கு இசையமைக்கக் கூப்பிட்டது போல பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
படத்தில் ரசிக்க வைக்கும் ஒரே விஷயம் நரேன் இளன் ஒளிப்பதிவு. டாப்சிலிப் அழகை அப்படியே நேரில் பார்த்தது போன்ற உணர்வை தன் ஒளிப்பதிவு மூலம் ஏற்படுத்துகிறார்.
புலியின் கிராபிக்ஸ் மட்டும் நம்பும்படி உள்ளது. குரங்கு ஒன்றையும் கிராபிக்ஸில் உருவாக்கியிருக்கிறார்கள். அது திடீரென குரங்காகத் தெரிகிறது, அடுத்த காட்சியில் குட்டி குரங்காக மாறிவிடுகிறது.
காடு என்ற நல்ல களம் கிடைத்திருந்தும் சிறப்பாக விளையாடத் தவறிவிட்டார் இயக்குனர்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தரணி ஆள வா... பிகில் சத்தம் - விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் வாரிசு என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய். 16 வயதில் சினிமாவில் அறிமுகமாகி இன்று 60 படங்களை தாண்டி நிற்கிறார் விஜய். விஜய்யின் திரை பயணத்தில் வெற்றி, தோல்வி சம அளவில் தான் இருக்கின்றன. இன்று(ஜூன் 22-ம் தேதி) நடிகர் விஜய் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ்த் திரையுலகத்தின் இன்றைய வசூல் நாயகர்களில் முக்கியமானவர் விஜய். தனக்கென மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உலக அளவில் வைத்திருப்பவர். சிறியவர் முதல் பெரியவர் வரை விஜய்யின் படங்களை ரசித்துப் பார்ப்பவர்கள் அதிகம்.
முழுக்க முழுக்க என்டெர்டெயின்மென்ட் என்பதை மட்டுமே மனதில் கொண்டு தன்னுடைய படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தால் மட்டுமே போதும் என்று முடிவெடுத்து அதற்கேற்றபடி நடித்தும் வருகிறார்.
விஜய்யின் திரைப்பயணம் பற்றி ஒரு சின்ன ரீ-வைண்ட்...
தொடர் தோல்வி
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் விஜய் நடித்திருந்தாலும், 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் முதல்படமே தோல்வியை கொடுத்தது. அதையடுத்து தனது மகனை விஜய்காந்த் உடன் செந்தூரபாண்டி படத்தில் நடிக்க வைத்தார் எஸ்ஏசி., இந்தப்படம் மூலம் விஜய்யும் ஓரளவுக்கு பேசப்படும் நடிகரானார்.
ஆனாலும், அதன்பின் அவர் நடித்த ரசிகன், தேவா, விஷ்னு, சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை படங்களும் தோல்வியை கொடுத்தன. இதனால் பொருளாதார நெருக்கடிக் ஆளானார் எஸ்.ஏ.சி., மகனை ஹீரோவாக்கமால் விடுவதில்லை என்று போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தினார் எஸ்.ஏ.சி., அதில் வெற்றியும் பெற்றார்.
திருப்பம் தந்த பூவே உனக்காக
விஜய்யும் தன் பயணத்தை மாற்றினார். விளையாட்டுத் தனமான கேரக்டர்களை விட்டுவிட்டு செண்டிமென்டுக்கு வந்தார். பூவே உனக்காக, வசந்த வாசல், காலமெல்லாம் காத்திருப்பேன், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் இப்படி அவர் தேர்ந்தெடுத்த பாதை அவருக்கு பெண் ரசிகைகளை உருவாக்கியது. தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக நினைக்கத் தொடங்கினார்.
லவ் டூ ஆக்ஷன்
அதன் பிறகு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரானார். மின்சார கண்ணா, லவ்டுடே, கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே போன்றவை அவரை ரொமாண்டிக் ஹீரோவாக்கியது. இளம் பெண் ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்தது. அடுத்துதான் ஆக்ஷ்ன் அவதாரத்தை ஆரம்பித்தார். பகவதி, தமிழன், திருமலை, சிவாகாசி, திருப்பாச்சி, கில்லி-யென விஜய் ஆடிய ஆக்ஷ்ன் ஆட்டத்தில் பாக்ஸ் ஆபீஸ்கள் கலகலத்தன.
வசூல் சக்கரவர்த்தி
அழகிய தமிழ் மகன், நண்பன், காவலன் போன்ற படங்களில் வேறு தளங்களில் தன் நடிப்பை நிரூபித்தார். துப்பாக்கி படத்தின் முதல் முதன்முறையாக ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்தார் விஜய். அதன்பின்னர் அவர் நடித்த கத்தி, மெர்சல், சர்கார் போன்ற படங்கள் வசூலில் பெரிய சாதனை படைத்தது அனைவரும் அறிந்தது. இன்று நடிகர் ரஜினிகாந்திற்கு அடுத்தப்படியாக வசூல் சக்கரவர்த்தியாக திகழ்வது விஜய் மட்டுமே. சில ஏரியாக்களில் ரஜினியையும் முந்தியிருக்கிறார் விஜய் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
நடனத்தில் வல்லவர்
கத்தி, மெர்சல் மாதிரியான படங்களில் சமூக அக்கறையை விதைத்தார். விஜய் தன் கேரியரை படிப்படியாக எப்படி வடிமைத்துக் கொண்டார் என்பதையே இது காட்டுகிறது. நடிப்பு மட்டுமல்லாது, தென்னிந்திய நடிகர்களில் சிறப்பாக நடனம் ஆடக்கூடிய நடிகர் என பெயரை பெற்றவர். அதுமட்டுமல்ல, தனது படங்களில் 30 பாடல்கள் வரை பாடி பாடகர் என நிரூபித்திருக்கிறார். தற்போது அடுத்தக்கட்டமாக தயாரிப்பாளராகவும் களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அசாத்திய வளர்ச்சி
பலமான சினிமா பின்னணி இருந்தாலும் முதல் படமே சூப்பர் ஹிட் அடுத்தடுத்து வாய்ப்பு, நான்காவது படத்தில் கோடியை தாண்டிய சம்பளம் என்ற புலி பாய்ச்சல் விஜய் கேரியரில் இல்லை. தன் சினிமா பயணத்தில் ஒவ்வொரு அடியையும் பக்குவமாக எடுத்து வைத்து வளர்ந்தார். விஜய்யின் இன்றைய வளர்ச்சி சாதாரணமாகக் கிடைத்ததும் இல்லை. அறிமுகமான நாளிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஏற்றத், தாழ்வுகளுக்குப் பிறகுதான் இப்படி ஒரு நிலையை அவர் அடைந்திருக்கிறார்.
சமூக அக்கறை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா தற்கொலை சம்பவம் போன்ற விஷயங்களில் தனது பங்களிப்பை காட்டி, சமூக அக்கறையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். வழக்கமாக தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் விஜய், கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். இந்தாண்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை.
அடுத்தக்கட்டம் அரசியல்?
விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. இதை படங்கள் வாயிலாகவும், தன் பட விழாக்களிலும் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். விஜய் ரசிகர்களும் அவ்வப்போது அவரை அரசியலுக்கு அழைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மதுரை ரசிர்கள், விஜய் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைத்து நகரம் முழுவதும் விதவிதமான போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்த நாளுக்கான டி.பி-யை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் அந்த டி.பி.க்கான போஸ்டரில் தரணி ஆள வா தளபதி என்ற வாசங்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிகில் சத்தம்
இந்தாண்டு விஜய் ரசிகர்கள் பிகில் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர். அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 63வது படமாக உருவாகி வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியிட்டனர். படத்திற்கு பிகில் என பெயர் வைத்திருக்கின்றனர். விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். நேற்று(ஜூன் 21) காலையிலிருந்தே இந்த முதல் பார்வை வெளியீட்டைப் பற்றி டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் லட்சக்கணக்கான பதிவுகளைப் போட்டார்கள். HBDEminentVijay என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 21 லட்சம் டுவீட்டுகள் பதிவிடப்பட்டன. அது 72 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளன. அதன் பிறகு மாலையில் படத்தின் பெயரை பிகில் என அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெயர் இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரென்டிங் ஆனது.
தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமூக வலைதளங்களில் முழுக்க ஒரே பிகில் சத்தமாகவும், விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து சத்தமும் அதிகளவில் ஒலித்து கொண்டிருக்கிற
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடங்கியது
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.
இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் வழங்குகின்றனர். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
தேர்தல் முடிந்தபின் இரவு 8 மணிக்கு மேல் பள்ளியை காலி செய்து விட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிக்கு வெளியில், சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது. பள்ளி வளாகத்துக்குள்தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். எந்த வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். இதனை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலானது சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விஜய்யின் "பிகில்" : தலைப்பு குறித்து விளக்கம்
பதிவு : ஜூன் 22, 2019, 08:06 PM
அட்லீ இயக்கத்தில் நாயகியாக நயன்தாரா தோன்ற, விஜய் இரு வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு பிகில் என பெயர் சூட்டி, ஃபர்ஸ்ட்லுக் மற்றும் 2 - வது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
அட்லீ இயக்கத்தில் நாயகியாக நயன்தாரா தோன்ற, விஜய் இரு வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு பிகில் என பெயர் சூட்டி, ஃபர்ஸ்ட்லுக் மற்றும் 2 - வது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இணையத்தில் இதனை பார்வை யிடும் ரசிகர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் எகிறி வருகிறது. வட சென்னை பகுதியில் குறிப்பாக ராயபுரம் ஏரியா வில், கால்பந்து போட்டிகளின் போது, நடுவர்கள் விசில் ஊதுவதை, பிகில் என அழைப்பதால், விஜய் படத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது நடித்துவரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கிவரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. பிரபாசுடன் ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல்நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப், மந்த்ராபேடி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஆகஸ்ட் 15-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரபாஸின் படம் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. அந்தவகையில், சாஹோ படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரூ. 25 கோடிக்கு விநியோகஸ்தர்கள் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங் படத்தில் நடிக்க ரூ.13 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபிகா படுகோனேவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் 83 என்ற படத்தில் நடித்து வருகிறார். இது 1983 ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற சம்பவத்தை தழுவி உருவாகும் படமாகும்.
இந்த படத்தில் கபில்தேவ் ஆக ரன்வீர் நடிக்கிறார். படத்தில் கபில்தேவ் மனைவியாக நடிக்க நாயகி தேவைப்பட்டது. எனவே, தீபிகாவிடம் இது குறித்து பேசப்பட்டது. ஆனால், தீபிகா சில நிமிட காட்சிகள் மட்டுமே என நடிக்க மறுத்துவிட்டாராம்.
இதைத்தொடர்ந்து படக்குழு தீபிகாவிற்கு ரூ.13 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதால் படத்தில் நடிக்க தீபிகா ஒப்புக்கொண்டாராம். அதோடு தயாரிப்பு செலவுகளையும் பார்த்துக்கொள்வதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கெஸ்ட் ரோலுக்கு ரூ.13 கோடி; தீபிகா ஆட்டம் ஓவரால இருக்கு...
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அவசர தேர்தல் - பலரால் வாக்களிக்க முடியவில்லை" - நடிகர் பாக்யராஜ் குற்றச்சாட்டு
தேர்தல் அவசரமாக நடத்தப்பட்டதால் பலரால் வாக்களிக்க முடியவில்லை என சுவாமி சங்கர தாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பாக்யராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் அவசரமாக நடத்தப்பட்டதால் பலரால் வாக்களிக்க முடியவில்லை என சுவாமி சங்கர தாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பாக்யராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசர கதியில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதால் பலரால் வாக்களிக்க வர முடியவில்லை கூறினார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டு களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.
2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்ற விஷாலின் பாண்டவர் அணியின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.
கடந்த மாதம் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்ம நாபனை நியமித்து தேர்தல் பணிகளை தொடங்கினர். 23-ந்தேதி (நேற்று) சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏற்கனவே பதவியில் இருந்த விஷாலின் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸும் மீண்டும் போட்டியிட்டனர். இன்னொரு துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகனை நிறுத்தினர்.
இந்த அணி சார்பில் குஷ்பு, லதா, பிரசன்னா, சிபிராஜ், ராஜேஷ், சரவணன், கோவை சரளா, மனோபாலா உள்பட 24 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இவர்களை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த், துணைத்தலைவர் பதவிகளுக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதே அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பரத், சின்னி ஜெயந்த், காயத்ரி ரகுராம், நிதின் சத்யா, பூர்ணிமா ஜெயராம், பாண்டியராஜன், கே.ராஜன், கே.எஸ்.ரவிக்குமார், சங்கீதா, ஷாம் உள்ளிட்ட பலர் களம் இறங்கினர். இரு அணியினரும் ஆதரவு திரட்டி வந்த நிலையில் எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீஸ் அனுமதி மறுத்தது.
இதற்கிடையே, தங்கள் வாக்குரிமையை பறித்து விட்டதாக 61 உறுப்பினர்கள் புகார் செய்ததன் பேரில் சங்க பதிவாளரும் தேர்தலை நிறுத்தினார். இதனால் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற பரபரப்பு நிலவி வந்த நிலையில் தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி நேற்று புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது.
பள்ளியை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அடையாள அட்டை வைத்திருந்த நடிகர் நடிகைகளை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். நடிகர்- நடிகைகள் வாக்குச்சாவடிக்கு செல்ல தனி பாதைகளையும் அமைத்து இருந்தனர். இரு அணி வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் பாதையில் திரண்டு நின்று வாக்களிக்க வந்தவர்களிடம் தங்களுக்கு ஓட்டு போடுமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நிர்வாகிகள் பதவிகளுக்கும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தனித்தனி வாக்குப்பெட்டிகள் வைத்து இருந்தனர். ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு நிறங்களில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றில் பிடித்த வேட்பாளர்கள் பெயர்களில் நடிகர்-நடிகைகள் முத்திரையை பதிவு செய்து வாக்கு பெட்டியில் செலுத்தினர்.
நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், பிரபு, நாசர், பாக்யராஜ், ஆர்யா, பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஜயகுமார், ஐசரி கணேஷ், ஆதி, பாண்டியராஜன், ஸ்ரீகாந்த், விவேக், பிரகாஷ்ராஜ், கராத்தே தியாகராஜன், நடிகைகள் கே.ஆர். விஜயா, குஷ்பு, சுஹாசினி, வெண்ணிற ஆடை நிர்மலா, மீனா, வைஜெயந்திமாலா, நளினி, அம்பிகா, ராதா, பூர்ணிமா பாக்யராஜ், சோனா, ரோகினி, வசுந்தரா, விந்தியா, சச்சு ஆகியோர் ஓட்டு போட்டனர்.
மேலும் வாக்களித்த முக்கிய நடிகர்-நடிகைகள் விவரம் வருமாறு:-
மன்சூர் அலிகான், மயில்சாமி, சந்தானம், அருண்பாண்டியன், நகுல், எஸ்.ஜே.சூர்யா, பொன்வண்ணன், வின்சென்ட் அசோகன், விக்ராந்த், சின்னி ஜெயந்த, சார்லி, சுந்தர்.சி, சாந்தனு, ராம்கி, செந்தில், ஏ.வெங்கடேஷ், போஸ் வெங்கட், ஜாகுவார் தங்கம், டி.சிவா, கலையரசன், ரஞ்சித், கயல் சந்திரன், ரகுமான், ஓ.ஏ.கே.சுந்தர், தியாகு, பாபு கணேஷ்
விசு, கும்கி அஸ்வின், வைபவ், பிளாக்பாண்டி, ஹரிஷ் கல்யாண், வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கமுத்து, சக்தி, சரத்பாபு, சந்தான பாரதி, இளவரசு, விஜய்பாபு, கஞ்சா கருப்பு, ஆர்.கே.சுரேஷ், கவுண்டமணி, விக்ராந்த், ஆர்.சுந்தரராஜன், நிரோஷா, பசிசத்யா, சஞ்சனா சிங், லலிதகுமாரி, நித்யா, விஜயகுமாரி, ஜெயபாரதி, கலா ரஞ்சனி, சச்சு, எம்.என்.ராஜம், கே.ஆர்.வத்சலா, ராகசுதா, மும்தாஜ், ஷகிலா, நீலிமா, ரித்விகா.
தபால் ஓட்டுகளையும் சேர்த்து நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுபோட தகுதி பெற்றவர்கள் 3,173 பேர் ஆவார்கள். ரஜினிகாந்த் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தபாலில் வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.
மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 1604 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. தபால் ஓட்டுகள் நீங்கலாக மொத்த வாக்குகளில் 50.55 சதவீத வாக்குகள் பதிவாயின.
ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்கு சீட்டுகள் இருந்த 12 ஓட்டுப் பெட்டிகளும் தேர்தல் அதிகாரி முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்டன. பின்னர் அவை போலீஸ் பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
ஓட்டு எண்ணும் தேதியை பிறகு அறிவிப்பதாக ஐகோர்ட்டு கூறி உள்ளதால் நேற்று வாக்குகள் எண்ணப் படவில்லை. ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
1970, 80-களில் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், உதய கீதம், இதய கோயில் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருந்த மோகன், நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க காலை 11 மணிக்கு வந்தார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது அவர் பெயரில் உள்ள வாக்கு ஏற்கனவே பதிவாகி இருந்தது.
அதை பார்த்து மோகன் அதிர்ச்சியானார். “எனது வாக்கை கள்ள ஓட்டு போட்டது யார்?” என்று வாக்குச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் ஓட்டு போடாமல் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றார்.
நடிகர் விஜய் ஓட்டுப்போட காரில் வந்து இறங்கியதும் அங்கு நின்ற கூட்டத்தினர் அவரை மொய்த்தனர். கேமராமேன்கள் மற்றும் போட்டோகிராபர்களும் படம் எடுக்க சூழ்ந்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விஜய் கூட்டத்தின் மத்தியில் சிக்கினார்.
போலீசார் விரைந்து வந்து விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச்சென்று ஓட்டுப்போட வைத்துவிட்டு வெளியே அழைத்து வந்து காரில் ஏற்றி அனுப்பினர்.
நடிகர் ஆர்யா ஓட்டுப்போட சைக்கிளில் வந்தார். போலீசாருக்கு அவரை அடையாளம் தெரியாததால் உள்ளே அனுமதிக்காமல் தடுத்தனர்.
பின்னர் அடையாள அட்டையை காட்டி தன்னை ஆர்யா என்று விளக்கிய பிறகு பள்ளி வளாகத்துக்குள் அனுமதித்தனர். அங்கு ஓட்டு போட்டுவிட்டு சைக்கிளிலேயே திரும்பிச் சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கிறார். அவருக்கு தபால் வாக்குச்சீட்டு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க முடியவில்லை. இதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தார்.
அஜித்குமார், ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ராதிகா, ஜோதிகா, நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, சிம்ரன், ஓவியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் ஓட்டுப்போடவில்லை.
நடிகர் சங்க தேர்தலை நடத்த விடக்கூடாது என்றும், ஓட்டுப்போட வருபவர்களை அடித்துவிரட்ட வேண்டும் என்றும் ஒருவர் பேசிய ஆடியோ நேற்று அதிகாலையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் தேர்தலில் வன்முறை ஏற்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்த புனித எப்பாஸ் பள்ளியை சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அடையாள அட்டையை சரிபார்த்தே ஒவ்வொருவரையும் பள்ளிக்குள் அனுமதித்தனர். கூட்டமாக நிற்பவர்களையும் கலைத்து அப்புறப்படுத்தினர்.
ஓட்டுப்போட வந்த நடிகர், நடிகைகளிடம் ஆதரவு திரட்ட பாண்டவர் அணியினரும், சுவாமி சங்கரதாஸ் அணியினரும் திரண்டு நின்றனர். அப்போது வேறு சிலரும் அங்கு வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இரு அணியின் ஆதரவாளர்களும் துண்டு பிரசுரங்கள் கொடுத்தபோது வாக்குவாதமும், மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவானது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் அறிமுகமாகி கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க சிவகங்கையில் இருந்து வந்து இருந்தார். ஆனால் அவருக்கு ஓட்டு இல்லை என்று வாக்குச்சாவடி ஊழியர்கள் கூறிவிட்டனர்.
இதனால் வருத்தமான கொல்லங்குடி கருப்பாயி கூறும்போது, “தேர்தலில் ஓட்டுப்போட வரும்படி இரண்டு அணியினரும் கடிதம் அனுப்பினார்கள். இங்கு வந்தபிறகு எனக்கு ஓட்டு இல்லை என்று முகத்தில் கரிபூசி விட்டனர். விஷால் எனக்கு உறுப்பினர் கார்டு வாங்கி கொடுத்தார். அதை காட்டியும் ஓட்டு போடவிடவில்லை” என்றார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Kamal Haasan: பிக் பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரி என்று வரிஞ்சு வரிஞ்சு எழுதுனவங்க வாக்கு பலிச்சுருச்சே: கஸ்தூரி!
பிக் பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரி என்று வரிஞ்சு வரிஞ்சு வரிஞ்சு எழுதுனவங்க வாக்கு பலிச்சுருச்சே என்று நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Kamal Haasan: பிக் பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரி என்று வரிஞ்சு வரிஞ்சு எழுதுனவங்க ...
பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விட்டது. கடந்த இரண்டு சீசன்கள் போலவே இந்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். பிகபாஸ் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நேற்று நுழைந்து விட்டார்கள். ப்ரோமோக்களில் சண்டை இப்போதே ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. 15 போட்டியாளர்கள் வித்தியாசமான பின்னணிகளில் இருந்து போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள்
பிக்பாஸ் ஆரம்பிக்கும் முன்னரே பலரும் பிகபாஸில் கலந்து கொள்ளப் போகிறவர்கள். இவர்கள் தான் என ஒரு லிஸ்ட் கூறி வந்தார்கள். அந்த லிஸ்ட்டில் நடிகை கஸ்தூரி கலந்து கொள்வதாக எல்லோரும் தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று உள்ளே சென்ற போட்டியாளர்களில் கஸ்தூரி இல்லாதது அவரது ரசிகர்கள் பலருக்கும் வருத்தமே.
Quote:
[/url]Kasturi Shankar
✔@KasthuriShankar
அட, ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா? [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f600.png[/img]
எப்படியோ, "பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி" ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே ! #BiggBossTamil3
Wishing all the participants the very best of luck. I know most of them, will try to watch every once in a while for their sake ! https://twitter.com/sowkarthi/status/1142809170862678016 …
sowkarthika@sowkarthi
The lady in the backdrop luks exactly lyk you @KasthuriShankar
338
11:01 AM - Jun 24, 2019
Twitter Ads info and privacy
[color][size][font]
73 people are talking about this
[url=https://twitter.com/KasthuriShankar/status/1143028806002847744]
இடையில் அவர் கலந்து கொள்வாரா என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரியை கண்டுபிடித்து ஒரு ரசிகர் போட்டோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். பிக்பாஸ் வீட்டு பெட் ரூமுக்கு வெளியே சுவரில் ஒரு புறம் விருமாண்டியின் கமல் படம் வரையப்பட்டிருந்தது. இன்னொரு புறம் ஒரு பெண்ணின் படம் வரையப்பட்டிருந்தது. அந்தப்பெண்ணின் முகம் கஸ்தூரியைப் போலவே இருந்தது. இந்த போட்டோவை ஷேர் செய்து தான் ரசிகர் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் எனக் கூறியிருந்தார்.
இதை ஆமோதித்த கஸ்தூரி “அட , ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா? எப்படியோ பிக்பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரின்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதுனவங்க வாக்கு பலிச்சுருச்சே!” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிரபல பாடகி சுதா ரகுநாதன் மதம் மாறினாரா ? சபாக்களில் பாட அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு
HIGHLIGHTS
பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் மகள், மாளவிகா, வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்ய உள்ளதால், இனி சுதா ரகுநாதனுக்கு சபாக்களில் பாட அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இசை உலகில் , மட்டுமல்லாமல் சினிமா,கர்நாடக சங்கீதத்தில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர் சுதா ரகுநாதன். இவரது மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் அதற்கான அழைப்பிதழ் சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியானது.
அதில் , சுதா ரகுநாதனின் மகள் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் ஒரு வெளிநாட்டுக்காரர். இதனால் பலரும்,சுதா ரகுநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாதன் கிருஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் அவரை இனிமேல் கோவில்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 5 நாட்களாகவே, இதுபோன்ற ஏச்சுக்களும், பேச்சுக்களும், சமூக வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.
அத்துடன் அவது மகள் மாளவிகா திருமணம் செய்துகொள்ளப்போகும், மைக்கேல் என்பவரது நிறத்தையும் குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.அதே நேரத்தில் சுதா ரகுநானுக்கு ஆதரவாகவும் ஏராளமான குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.
ஆனால் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதா ரகுநாதன் திருமணத்துக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டில், நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஓஎஸ் அருண் ஆகியோர், கர்நாடக இசையில், கிறிஸ்தவ பாடல்களை பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, சுதா ரகுநாதன் குறி வைக்கப்பட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
47 ஆண்டுகளுக்கு பிறகு வசூலை வாரிகுவிக்கும் வசந்த மாளிகை
சிவாஜி, வாணிஸ்ரீ நடிப்பில் 47 ஆண்டுகளுக்கு முன்பு (1972) வெளிவந்த படம் வசந்த மாளிகை. தமிழ் சினிமாவின் டாப் டென் காதல் கதைகளில் இப்போதும் இடம் பிடிக்கிற படம். கண்ணில் எடுத்து ஒற்றிக் கொள்ளும்படியான வண்ணத்தில் படமாக்கி இருந்தார் ஒளிப்பதிவாளர் வின்செண்ட், இன்றைக்கும் மனதை சுண்டி இழுக்கும் பாடல்களை கொடுத்திருந்தார் கே.வி.மகாதேவன். பிரபல தெலுங்கு இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். முதலில் இந்தப் படம் பிரேம நகர் என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது. அதில் நாகேஸ்வரராவ், வாணி ஸ்ரீ நடித்தனர். பிறகு தமிழில் வசந்த மாளிகை என்ற பெயரில் தயாரானது.
சிவாஜி நடிப்பில் அதிக நாட்கள், அதாவது 750 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம். இந்த படத்தை நவீன தொழில்நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். சென்னையில் வெளியிடப்பட்ட 20 தியேட்டர்களிலும் இந்த வாரம் முழுக்க படம் தொடர்கிறது.
முதலில் 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது 100 தியேட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆல்பட் தியேட்டரில் நேற்று நடந்த சிறப்பு காட்சியில் திரையுலக முன்னணியினர் படம் பார்த்தனர். 2013ம் ஆண்டும் மறுவெளியீடு செய்யப்பட்டு அப்போதும் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி! உண்மைகளை போட்டுடைத்த காஜல்
பிக்பாஸ் தமிழின் மூன்றாவது சீசன் இன்று முதல் ஆரம்பமானது. இதில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் ஒருவராக பிரபல டான்ஸ் மாஸ்டர் சேண்டியும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் சேண்டி பிக்பாஸில் கலந்து கொண்டதை அவரது முதல் மனைவியும் முந்தைய பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்
இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், பர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ்வா? என கேள்வி எழுப்ப, சேண்டி எனது முதல் காதலர் கிடையாது, கடைசி காதலர் அவர்தான். நான் அட்டக்கத்தி தினேஷ் மாதிரி என பதிவிட்டு ஷாக்காகியுள்ளார்.
எனது ப்ரேக்அப் பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான்... வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவாங்க எனவும் கூறியுள்ளார்.
Quote:
[/url]Kaajal Pasupathi@kaajalActress
Aiyooo [img=20.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f62f.png[/img]sandy first love illaye [img=20.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f601.png[/img][img=19.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f602.png[/img]last love... Nan attakathi Dinesh Maari [img=20.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f61c.png[/img][img=19.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f648.png[/img][img=20.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f648.png[/img][img=19.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f648.png[/img] https://twitter.com/tigersachi/status/1142909813669580800 …
tiger sachi@tigersachi
Replying to @kaajalActress
1st love is the best love uh [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f92a.png[/img]
108
10:20 AM - Jun 24, 2019
Twitter Ads info and privacy
17 people are talking about this
Quote:
Kaajal Pasupathi@kaajalActress
Breakup ah [img=19.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f62f.png[/img][img=20.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f622.png[/img]that's a long story.. namba love torture Dan... Vallavan reemasen Maari panna yaar tanguva[img=20.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f601.png[/img][img=19.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f602.png[/img] https://twitter.com/KingofRing02/status/1143018880597557248 …
ViJaY@KingofRing02
Replying to @kaajalActress
Aprm en break up??
248
10:25 AM - Jun 24, 2019
Twitter Ads info and privacy
68 people are talking about this
[url=https://twitter.com/kaajalActress/status/1143019731080736768]
first 5 lakhs viewed thread tamil
•
|