14-06-2024, 09:32 PM
(This post was last modified: 14-06-2024, 09:42 PM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 85
மன்னர் காலம்
காத்தவராயனின் அழிவு
மதிவதனி கால்கள் சரியாக நடக்க முடியாமல் கஷ்டப்பட்டாலும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என ஒரே எண்ணத்தில் அவனை பின் தொடர்ந்து குதிரையில் ஏறி சென்றாள்..
பிரசவம் பார்த்த பெண் மயக்கத்தில் இருந்து எழுந்து நடந்த விசயங்களை தன் தோழிகளிடம் சொல்ல,அவர்கள் உடனே ,"கவலை வேண்டாம் ,அந்த வில் அந்த பாதாள பைரவி கோவிலில் தான் நாங்கள் ஒளித்து வைத்து உள்ளோம்,உடனே அதை தேவியிடம் எடுத்து கொடுப்போம் விரைந்து வாருங்கள்"என்று அவ்விடம் சென்றார்கள்.
காத்தவராயன் முதலில் பாதாள பைரவி கோவிலை சென்றடைந்தான்.
அகோரி யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு மனதில்,எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் காத்தவராயன் குழந்தையை கொண்டு வந்து விடுவான்..பலிபீடத்தில் குழந்தையை பலி கொடுத்து விட்டு,காத்தவராயனை மயக்கபடுத்தி என்னோட காரியத்தை சாதித்து கொள்ள வேண்டியது தான்.."என கற்பனையில் மிதந்து கொண்டு இருந்தான்..
குதிரையின் காலடி சத்தம் கேட்டு ஆர்வமுடன் வெளியே ஒடி வந்து பார்த்தான்.
காத்தவராயன் கோபமுடன் வருவதை பார்த்தாலும்,அவன் கையில் குழந்தை இருப்பதை பார்த்து அகோரி கண்ணில் ஆசை மின்னியது..
"மன்னர் மன்னா..!குழந்தையை கொண்டு வந்து விட்டீர்களா.."என ஆவலாக கேட்டான்.
காத்தவராயன் சிவந்த கண்களுடன்,"மடையனே,நீ சொன்னது என்ன..?இப்போ நடந்தது என்ன..?என்று பார்" என குழந்தையை தலைகீழாக பிடித்து கொண்டு அந்த குகையே அதிரும்படி கத்தினான்..
அகோரி,குழந்தையை வாங்கி பார்க்க,அது பெண் குழந்தையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.அவன் தடுமாறி தடவி பார்க்க,
"அங்கே என்னடா தேடுகிறாய் மூடனே..!நான் கண்ட கனவு எல்லாம் வீணாய் போனதே..ஆசை காட்டி மோசம் பண்ணி விட்டாயே..!படுபாவி.."என திட்டினான்.
"மன்னா நிச்சயம் இப்படி நடக்க வாய்ப்பே இல்ல.நிச்சயம் மதிவதனிக்கு பிறந்து இருப்பது ஆண் குழந்தை தான் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.."
"மீண்டுமா என்னை ஏமாற்றுகிறாய் .. உன்னை ..."வாளை உருவி கொண்டு காத்தவராயன் வேகமாக முன்னே வந்தான்..
"மன்னா கிட்ட வரவேண்டாம்"குழந்தையை அகோரி அங்கேயே போட்டுவிட்டு அந்த கோவிலில் ஓட ஆரம்பித்தான்.
காத்தவராயன் யாகத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்து கொண்டே அவனை துரத்தினான்.
அகோரி சிலையின் பின்புறம் ஓட,அவன் காலில் ஏதோ தட்டுபட்டு தடுமாறி கீழே விழுந்தான்.வில்லை மூடி வைக்கப்பட்டு இருந்த துணி அவன் கால் பட்டு விலகியது.
வில்லை பார்த்த காத்தவராயன் கோபம் பன்மடங்கு அதிகமாகியது.
அகோரியும் இந்த வில் எப்படி வந்தது என புரியாமல் விழித்தான்.
வில்லை காட்டி காத்தவராயன்"உன்னோட களவாணித்தனத்திற்கு இன்னும் ஒரு சாட்சி இதோ...இந்த வில்லை தீமூட்டி அழித்து விட்டாய் என்று தானே நீ கூறினாய்..இப்போ எப்படிடா இங்கே வந்தது..!"காத்தவராயன் கோபம் பொங்க கேட்டான்.
இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் இந்த காத்தவராயன் நம்ப போவது இல்லை.இங்கு இருந்து தப்பித்து தான் ஓட வேண்டும் என பக்கத்தில் இருந்த தட்டை எடுத்து காத்தவராயன் முகத்தில் வீசி எறிந்து விட்டு குகை வாயிலை நோக்கி அகோரி ஓடினான்..அப்பொழுது மதிவதனி எதிர்வர அவள் காலில் விழுந்தான்.
"தேவி... அபயம்...! அபயம்..!என்னை காத்தவராயனிடம் இருந்து காப்பாற்றுங்கள்..தங்கள் குழந்தையை நான் பலி கொடுக்க முடியாது என்று சொன்னதால் மன்னர் என்னை கொல்ல வருகிறார்"என அவள் காலில் விழுந்து கதறினான்.
"குழந்தை எங்கே.."மதிவதனி கேட்க
"உள்ளே பலிபீடம் அருகே பத்திரமாக இருக்கு"என அகோரி கூற காத்தவராயன் உறுமி கொண்டு அவனும் வெளியே வந்தான் ...
அகோரி மதிவதனி பின்னால் ஒளிந்து கொண்டு இருப்பதை பார்த்த காத்தவராயன் அவளிடம்,"மதி ஒழுங்கா வழியை விடு..இது உனக்கு சம்பந்தமில்லாத விசயம்..!மீறி தடுத்தால் நான் என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது.."
"எது எனக்கு சம்பந்தமில்லாத விசயம்..என் குழந்தையை என் அனுமதி இல்லாமல் எடுத்து வந்து நீ பலி கொடுப்பாய்..அதை பார்த்து நான் சும்மா இருப்பதா..!இன்று நான் உனக்கு முடிவுரை எழுதவே வந்து உள்ளேன்."என மதிவதனி சொல்ல,
அதை கேட்டு காத்தவராயன் கடகடவென அந்த குகையே அதிரும்படி சிரித்தான்..அவன் போட்ட சத்தத்தை கேட்டு குகையில் இருந்த ஆந்தைகளும்,வெளவால்களும் அலறின.
"என்னை கொல்லும் ஆயுதம் இவ்வுலகில் இல்லவே இல்லை மதி..!.நான் மரணம் அற்றவன்..எனக்கு முந்தி விரித்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன்.ஒழுங்கா வழியை விடு..இல்லையெனில் எனக்கு சொர்க்கத்தை காட்டியவளாக இருந்தாலும் உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்."
காத்தவராயன் முன்னே அடி எடுத்து வைக்க மதிவதனி அவனை அம்பு விட்டு தடுத்தாள்.
இருவருக்குமே துவந்த யுத்தம் ஆரம்பமானது.அதை பார்த்த அகோரி ஆனந்தமாக பக்கத்தில் இருந்த உயரமான பாறையில் அமர்ந்து கொண்டு இருவரின் சண்டையை ரசித்தான்.
மதிவதனி விட்ட அம்புகள் யாவும் கடுகளவு கூட காத்தவராயனை பாதிக்கவில்லை.லேசான காயங்களை மட்டுமே உண்டு பண்ணியது.காத்தவராயன் ஒரு பெரிய பாறையை எடுத்து அவள் மேல் போட,மதிவதனி அதை சுக்குநூறாக உடைத்தாலும் பாறையின் ஒரு துண்டு அவள் வைத்து இருந்த வில்லில் மோதி வில்லை இரண்டாக உடைத்தது.
காத்தவராயன் அதை பார்த்து சிரித்து கொண்டே வாளால் அவளை வெட்ட வந்தான்.மதிவதனி தன் வாளை கொண்டு அதை தடுத்து அவனிடம் தீரத்துடன் போர் செய்தாலும் அவன் வலிமைக்கு ஈடு கொடுக்கவே முடியவே இல்லை..அவன் முழு பலத்தையும்,ஆக்ரோஷத்தையும் காட்டி அவள் வாளை தட்டிய உடன் அது கீழே விழுந்தது.வெறியில் இருந்த காத்தவராயன் மதிவதனியின் வயிற்றில் எட்டி உதைக்க அவள் குகைக்குள் பறந்து வயிற்றை அழுந்த பிடித்து கொண்டு பாறையின் மீது மோதி மயங்கி கீழே விழுந்தாள்..
அவ்வளவு தான் அகோரி இதை பார்த்த உடன் மீண்டும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தான்..உடனே காத்தவராயனும் மதிவதனியை விட்டு விட்டு அகோரியை துரத்தினான்.
அன்று மதிவதனியால் காப்பாற்றப்பட்ட மாயமலை பெண்கள்,காத்தவராயன் சென்ற உடன் மறைவில் இருந்து வெளிப்பட்டனர்.
அவர்கள் கொண்டு வந்த நீரை கொண்டு மதிவதனி முகத்தில் தெளித்து எழுப்பினர்..
மதிவதனி விழித்து,காத்தவராயன் எங்கே என கேட்க,"மன்னர் அந்த அகோரியை துரத்தி கொண்டு போய் இருக்கார் அரசி..."
"நான் உடனே சென்று அந்த அகோரியை காப்பாற்ற வேண்டும்.."மதிவதனி வயிற்றை பிடித்து கொண்டு எந்திரிக்க,
அந்த பெண்கள் "அமருங்கள் அரசி,நீங்கள் அந்த அகோரியை சென்று காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.அவனும் காத்தவராயனின் கூட்டாளி தான்.தங்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும்,அதை பலி கொடுத்தால் மிகப்பெரிய சக்திகள் கிடைக்கும் என அந்த அகோரி தான் சொன்னான்.அதை கேட்டு தான் மன்னர் தங்கள் குழந்தையை பலி கொடுக்க தீர்மானித்து இருந்தார்.ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை.அதனால் தான் அவனை கொல்ல மன்னர் சென்று உள்ளார்.இந்த பிரச்சினைக்கு மூல காரணம் அந்த அகோரி தான்.ஒழியட்டும்...விடுங்கள் ராணி.."
"என் குழந்தை எங்கே...!"என மதிவதனி கேட்க,அவர்கள் மௌனம் ஆனார்கள்...
"என்ன ஆச்சு...! எங்கே என் குழந்தை...!"மீண்டும் மதிவதனி கேட்க,
கூட்டத்தில் ஒருத்தி சென்று குழந்தையை எடுத்து வந்து கொடுத்து,"மன்னிக்கவும் மகாராணி,அகோரியை துரத்தி கொண்டு செல்லும் பொழுது மன்னர் யாகத்தின் பொருள்களை காலால் கலைத்தார்,அப்பொழுது குழந்தையின் கழுத்தில் அவர் காலை வைக்க,குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது.."
மதிவதனியின் கண்களில் கண்ணீர் பெருகியது.. பழிவாங்க வெறி கொண்டு எழுந்தாள்..அவள் கையில் எந்த ஆயுதமும் இல்லை..
உடனே மாயமலையின் பெண்கள்,அவளை சிலையின் பின்புறம் அழைத்து சென்றனர்.அங்கு இருந்த அவள் தெய்வீக வில்லை காட்ட,"இது எப்படி இங்கே வந்தது.."என மதிவதனி கேட்க,
"தேவி,இதுவும் அகோரியின் வேலை தான்.அவன் வேறொரு உரு எடுத்து வந்து உங்களிடம் இருந்து வில்லை அபகரித்தான்.ஆனால் அவனால் அதை தூக்க கூட முடியவில்லை..பின் இதை எரியூட்டினான்.ஆனால் அப்பொழுதும் இந்த வில் பாதிக்கப்படவில்லை.நாங்கள் தான் இந்த வில்லை இங்கே பத்திரப்படுத்தி வைத்து இருந்தோம்..எடுத்து கொள்ளுங்கள் உங்கள் வில்லை..இப்பொழுதே கணையை தொடுங்கள்."என்று அந்த பெண்கள் உரத்த குரலில் கூற, மதிவதனி அமைதியாக இருந்தாள்.
"ஏன் இன்னும் தாமதம்..தேவி,உங்கள் வில்லை எடுத்து கொள்ளுங்கள்.."அந்த பெண்கள் மீண்டும் கோரசாக கூற,
"இல்லை இந்த வில் எனக்கு வேண்டாம் பெண்களே..!அகோரியாக இருந்தாலும் அவன் என் குருவின் வடிவில் வந்து யாசகம் பெற்று சென்று உள்ளான்.எனவே இந்த வில் என் குருவுக்கு கொடுத்தது போல தான்.நான் இந்த வில்லை உபயோகிக்க முடியாது."
அங்கே நின்று இருந்த பெண்களில் ஒருத்தி இதை கேட்டு கலகலவென சிரித்தாள்...
அவள் சிரிப்பை பார்த்து"ஏன் சிரிக்கிறாய்...பெண்ணே..!"என மதிவதனி கேட்க,
"பின்ன..சிரிக்கமால் என்ன செய்வது தேவி..!இதே அகோரி உங்கள் குருநாதர் வடிவில் வந்து உங்களுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டு இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்..."என கேட்க,
அவள் பேச்சை கேட்டு மதிவதனி குழம்பி நின்றாள்..
அந்த பெண் மீண்டும் மதிவதனியை பார்த்து,"நியாயமானவராக இருக்கலாம்,ஆனால் ஒரேயடியாக நியாயமானவராக இருந்தால் இவ்வுலகில் எந்த நல்லதையும் செய்ய முடியாது..ராமன் கூட தேவைப்படும் பொழுது வாலியை மறைந்து இருந்து தான் கொன்றார்.கண்ணன் மட்டும் நேர்வழியில் நடந்து இருந்தால் பாண்டவர்கள் ,கௌரவர்களை வென்று இருக்கவே முடியாது..அர்ஜூனன்,சிகண்டி என ரெண்டு பேரை தன் ரதத்தில் தோன்ற செய்து தான் பீஷ்மரை வீழ்த்த செய்தான் கண்ணன்.ஒரே ரதத்தில் ரெண்டு பேரை தோன்ற செய்வது தவறல்லவா..மேலும் பீஷ்மர் பெண்களுக்கு எதிராக போர் செய்ய மாட்டார் என தெரிந்து அர்ஜூனன் பக்கத்தில் சிகண்டி என்ற அலியை ஏன் உடன் வர செய்தார்?
மதிவதனி அவள் சொல்வதை உற்று கேட்க,
அந்த பெண் மேலும் தொடர்ந்தாள்,"இறுதியில் தருமம் வெல்ல வேண்டும் என தான் கண்ணன் இந்த செய்கையை செய்தார்.ஏன்..!உங்கள் குரு அஸ்வத்தாமன் தந்தையை எப்படி துருபதன் கொன்றான்..?துரோணர் போர் புரியும் பொழுது அவரை யாராலும் வீழ்த்த முடியாது.அதற்கும் கண்ணன் ஒரு வழி வைத்து இருந்தார்..அஸ்வத்தாமன் என்ற யானையை பீமனை விட்டு கொல்லவிட்டு அஸ்வத்தாமனை கொன்று விட்டோம் என்று பாண்டவ படை வீரர்களை கண்ணன் முழங்க செய்தார்.விளைவு இதனால் துரோணர் மனமுடைந்து தருமரிடம் உண்மை என்னவென்று கேட்க,தருமரோ கொல்லப்பட்டது அஸ்வத்தாமன் தான் ஆனால் அஸ்வத்தாமன் என்ற யானை சொல்ல வரும் பொழுது கண்ணன் ஏன் சங்கை முழங்க வேண்டும்.?ஏனெனில் தருமர் சொன்ன முழு வாக்கியம் துரோணர் கேட்ககூடாது என்பதற்காக தான்..கடைசியில் துரோணர் மனமுடைந்து நிராயுதபாணியாக நின்ற பொழுது துருபதன் கொன்றான்..இதே போல கர்ணனின் தேர் சக்கரத்தை இடற செய்து கண்ணன் சதி செய்து கொன்றார்.கதாயுதம் கொண்டு போர் செய்யும் பொழுது தொடைக்கு கீழே அடிக்க கூடாது என்பது விதி.
துரியோதனுக்கு அவன் அம்மா மூலம் கவசம் அணிவிக்கப்பட்டு இருந்ததால் அவனை கொல்ல பீமனால் முடியவில்லை.துரியோதனனுக்கு சொல்ல போனால் உடல் முழுக்க கவசம் கிடைத்து இருக்கும்..ஆனால் கண்ணன் அவனுக்கு அதை கிடைக்கவிடாமல் சூழ்ச்சி செய்து,கடைசியில் அவனை தொடைக்கு கீழ் பீமனை வைத்து அடிக்க செய்து போர் விதியை மீறி தானே கொன்றார்.ஒரு கடவுளே தருமம் வெற்றி பெற இத்தனை சூழ்ச்சி செய்யும் பொழுது தாங்கள் எம்மாத்திரம் தேவி..!என்று அவள் கூறி முடிக்க,
அதை கேட்டு மதிவதனி அயர்ந்தாள்.
"இப்போ நீ சொல்ல வருவது..?என்ன தான் அறிவு நிறைந்த பெண்ணே..!"
"நான் சொல்ல வருவது இது தான் தேவி,கெட்ட வழியில் செல்பவரை என்றுமே நேர்வழியில் மட்டுமே வெற்றி கொள்ள முடியாது.சில சமயம் அவர்கள் வழியிலேயே சென்று தான் வெற்றி கொள்ள வேண்டும்.அதை தான் நமக்கு கண்ணனே வழிகாட்டி உள்ளார்."
மதிவதனி உடனே அவள் காலில் விழுந்தாள்..
"தேவி என்ன இது..!எழுந்திருங்கள்.."
மதிவதனி எழுந்து அந்த பெண்ணிடம்"ஆதிசங்கரர் காசியில் ஒரு தெருவில் செல்லும் பொழுது ஒரு பிச்சைக்காரனை கண்டு ஒதுங்கி சென்றாராம்..அதை கண்ட பிச்சைக்காரன்,உன்னில் உள்ள பிரம்மம் தானே என்னில் உள்ளது..என்னை அவமானப்படுத்துவது நீ வணங்கும் அந்த பிரம்மத்தை அவமானபடுத்துவதை போல் அல்லவா...என்று கூறினார்..இந்த மேலான உபதேசத்தை கேட்ட உடன் அந்த பிச்சைக்காரன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் ஆதிசங்கரர்.அதுபோல தான் பெண்ணே,என்னுள் இருந்த குழப்பத்தை நீ தான் போக்கி உள்ளாய்.நீயும் என்னோட குரு தான் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என மதிவதனி வேண்டினாள்..
அந்த பெண்ணும் ஆசீர்வதிக்க,மதிவதனி எழுந்து தன் தெய்வீக வில்லை எடுத்து நாணேற்றி இழுத்து விசை எழுப்ப,அந்த ஒலி காடு முழுவதும் எதிரொலித்தது..
சரியாக அந்த நேரம்,காத்தவராயன் அகோரியை விரட்டி பிடித்து இருந்தான்..அவனை முட்டி போட வைத்து,அவன் கழுத்தில் காலை போட்டு காத்தவராயன் மடக்கி நெரித்து கொண்டு இருக்க,அவனுக்கு அந்த வில்லின் சத்தம் கேட்டது..
"இது மதிவதனியின் வில்லின் சத்தம் அல்லவா...!"என அவன் திகைக்க,அகோரி சிரித்தான்..
அகோரி அவனை பார்த்து,"எனக்கு எமன் என் கண்முன்னே வருவது தெரிந்து விட்டது காத்தவராயா.அடுத்து எமன் உன்னையும் கொல்ல வருகிறான்"என சிரித்தான்.
காத்தவராயன் அவனிடம்,"உன்னை எமலோகம் அனுப்பிவிட்டு,அவளையும் உனக்கு துணையாக பின்னே அனுப்பி வைக்கிறேன்"என காத்தவராயன் அவன் தலையை பிடுங்கி இரு கைகளால் பிடுங்கி எறிந்தான்..
இரத்தம் குபுகுபுவென காத்தவராயன் முகத்தில் பாய்ந்தது..
இரத்தம் தோய்ந்த முகத்தோடு காத்தவராயன்,மதிவதனியை எதிர்கொள்ள சென்றான்..தன் குழந்தையை கொன்றவனை பழிவாங்க மதிவதனியும் குகையை விட்டு வெளியே வந்தாள்..
இருவரும் மீண்டும் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்...
இருவருக்கும் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியது..
இம்முறை மதிவதனி விட்ட அம்புகள் காத்தவராயன் உடம்பை பதம் பார்த்தன..ஆனால் அவன் மார்பை மட்டும் துளைக்கவில்லை.
மதிவதனிக்கு அவனை கொல்ல மட்டும் வழி கிடைக்கவில்லை..அவன் உடம்பு முழுக்க ரத்தம் வழிய மயங்கி விழுந்தான்..ஆனால் சிறிது நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த தேனீக்கள் அவன் உடலில் பட்ட காயங்களுக்கு ஏதோ ஒரு மருந்தை இட்டன.அதை இட்டவுடன் அவன் காயங்கள் குணமாகி உடனே எழுந்து புத்துணர்ச்சி பெற்று மீண்டும் அவள் மீது கடுமையாக போர் செய்தான்.அங்கிருந்த பாறைகளை பெயர்த்து எடுத்து அவள் மீது எறிந்தான்..
"நீ எத்தனை முறை மூர்ச்சை ஆக்கி வீழ்த்தினாலும்,நான் மீண்டும் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று எழுவேன் மதி..!உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" என சிரித்தான்.
மதிவதனி மீண்டும் அவன் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் தவித்தாள்.எப்படி அவன் காயங்கள் குணமானது என வேடிக்கை பார்த்த பெண்களுக்கு புரியவில்லை.அப்பொழுது மதிவதனிக்கு உபதேசம் செய்த பெண்ணுக்கு ஒரு யோசனை உதித்தது..
அதற்குள் மதிவதனி மீண்டும் காத்தவராயனை மூர்ச்சையாக்க,அந்த பெண் ஓடிவந்து,"தேவி,எப்படியாவது காத்தவராயனை எரிமலை அருகே கொண்டு செல்லுங்கள்..எரிமலை இருக்கும் இடத்தில் தேனீக்கள் வராது" என்று கூறிவிட்டு ஓடி மறைந்தாள்.
மதிவதனிக்கும் ,காத்தவராயனை கொல்ல ஒரு அற்புதமான யோசனை கிடைத்தது..
காத்தவராயன் மீண்டும் எழுந்து யுத்தம் செய்ய,மதிவதனி அம்பு மழை பொழிந்து கொஞ்ச கொஞ்சமாய் அவனை பின்வாங்க செய்தாள்..அவன் பின்னே செல்ல செல்ல எரிமலையின் குழம்பில் உருகி அவன் உயரத்திற்கு நிகராக இருந்த பாறையை நோக்கி அம்பு விட்டு கொண்டே அவனை பின்வாங்க செய்தாள்.
இம்முறை அவள் விட்ட அம்புகள் அவன் கையை துளைத்து மறுபக்கம் வந்தது..காத்தவராயன் அந்த அம்பை எடுக்க முயல,அதற்குள் இன்னொரு அம்பு வந்து அவன் இன்னொரு கையை துளைத்தது.சரமாரியாக அம்புகளை விட அவன் கை,கால்,முகம்,கழுத்து எல்லாம் இடத்திலும் அம்புகள் துளைத்து அந்த பாறையோடு சேர்த்து அவனை கட்டியது.அவன் பாறையில் இருந்து தன்னை விடுவிக்க முயல,அவனால் முடியவில்லை.ஏசுவை சிலுவையில் அறைந்தது போல அந்த பாறையில் நூற்றுகணக்கான அம்புகளால் காத்தவராயனை அறைந்து விட்டாள்..
"மதி,ஒழுங்கா என்னை இந்த பாறையில் இருந்து விடுவித்து விடு..நீ ஏற்படுத்திய காயங்களால் வலி உயிர் போகுது" என கத்தினான்..
"உன்னை கொல்லும் ஆயுதம் என்னிடம் இல்லை காத்தவராயா..நீயாக உன் உயிரை விட செய்வது தான் எனக்கு இப்போ தெரிந்த ஒரே வழி.. ஒரு சொட்டு தண்ணீ,உணவு கூட இல்லாமல் துடிதுடித்து நீ சாக வேண்டும்.உன் மார்பை துளைக்கும் ஆயுதம் என்னிடம் இல்லை.ஆனால் உன்னோட உயிர் அங்கு தான் உள்ளது.உன் உயிரை பறிக்க எனக்கு வேறு வழி இல்லை.நான் என்ன செய்ய...!"
காத்தவராயன் கோபம் பன்மடங்கு அதிகரித்தது."இந்த உடலை விட்டு,என்னோட உயிர் போனாலும் நான் பிரேத ஆத்மாவாக வந்து மீண்டும் இந்த உடலை பெற முயற்சி செய்வேன் மதி,என் உடல் மீண்டும் கிடைக்கும் பொழுது இந்த உலகில் பெரும் அனர்த்தம் நிகழும்.என்னை அழிக்கும் சக்தி அப்போ அந்த இறைவனுக்கு கூட இருக்காது.அந்த நிகழ்வுகளுக்கு நீ தான் பொறுப்பு.."என கத்தினான்..
மதிவதனி அவனிடம் பொறுமையாக,"அப்படி ஒரு சம்பவம் நிகழும் என்றால் இந்த மதிவதனி அதை தடுப்பாள்."
"அதையும் பார்க்கலாம்..."என காத்தவராயன் சீறினான்...
மதிவதனி அரண்மனை திரும்ப,சகுந்தலா தேவி வந்து அவள் காலில் வந்து விழுந்தாள்..
"என்னை மன்னிச்சிடு மதிவதனி,உன் குழந்தை என்னிடம் தான் இருக்கு..நான் செய்த சதிவேலையால் என்னோட குழந்தையை நான் இழக்கும் படி நேரிட்டு விட்டது."
மதிவதனி புன்னகை மாறாமல்,அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி ஆசையுடன் பார்த்து,அந்த குழந்தைக்கு பால் புகட்டினாள்.பின் சகுந்தலா தேவியிடம் அந்த குழந்தையை கொடுத்து விட்டு,"நீ தெரிந்தோ,தெரியாமலோ இந்த குழந்தைக்கு தாயாகி விட்டாய் சகுந்தலா..!இதற்கு மேல் இவனுக்கு தாய் நீ தான்..!எனக்கு சில கடமைகள் இருக்கு,நீ இந்த குழந்தையை எடுத்து கொண்டு உன் நாட்டுக்கு உடனே சென்று விடு..எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சில அனர்த்தங்களை தவிர்க்க நானும் தவம் செய்ய செல்ல வேண்டும்..என சொல்லிவிட்டு தான் காப்பாற்றிய நாலு பெண்களை மட்டும் அழைத்து சென்றாள்..
காத்தவராயன் உணவு,தண்ணீ இல்லாமல் துடித்து கொண்டு இருக்கும் பொழுதும் அவன் உடலை காக்க,அதர்வண வேதத்தின் ஒரு பகுதியை தினமும் ஜெபித்து கொண்டு இருந்தான்..தண்ணீ, உணவு இல்லாமல் அவன் ஏழு நாட்கள் வலியோடு துடிதுடித்து இறக்க,அவன் உடலில் இருந்து அவன் ஆத்மா வெளிவந்தது..அவன் ஜெபித்த மந்திரத்தால் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.அவன் ஆவி வெளிவந்த உடன் முதல் வேலையாக அவன் உடலை பாறையில் இருந்து பெயர்த்து எடுத்து ஒரு இடத்தில் பத்திரப்படுத்தியது..
அதே ஏழாவது நாள் விடியற்காலையில் மதிவதனி தவம் செய்த இடத்தை அந்த நாலு பெண்கள் வந்து பார்க்க,அங்கே மதிவதனி இல்லை.மாறாக,அங்கே புதிய மாமரம் முளைத்து இருந்தது..
"இது என்னடி ஆச்சரியமா இருக்கு,இங்கே எப்படி ஒரே நாளில் புது மாமரம் முளைத்து இருக்கும்..நம் தேவி எங்கே..?"என அதிசயத்தினர்.
அப்பொழுது அங்கே ஒரு அசரீரி குரல் கேட்டது..அதை கேட்டு அவர்கள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன..
லிகிதா பாகம் இன்னும் கொஞ்சம் எழுதலாமா என்று கேட்டேன்..!இன்னும் யாரும் சொல்லவில்லை.நேரடியாக நிகழ் கால பிரியங்கா கதைக்கு சென்று விடலாமா..!