Romance எப்போது என்னை புரிந்து கொளவாளோ
#1
வணக்கம் நண்பர்களே இது ஒரு காதல் கதை 

பகுதி 1
ரம்யா : டேய் சீக்கிரம் கிளம்புடா பொண்ணு பாக்க போகணும் 

முரளி : மா எவ்ளோ சொல்லியும் உங்களுக்கு புரியாதா திரும்ப திரும்ப ஏன் என்னை கஷ்ட படுத்துறீங்க எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் சொன்னா கேளுங்க மா 

ஜெயராம் : டேய் அம்மா சொல்றாளா போய் கிளம்புடா 

முரளி : என்னப்பா நீங்களும் புரிஞ்சிக்கல. எனக்குன்னு ஒரு ட்ரீம் இருக்கு 

ஜெயராம் : உன்னை கிளம்புனு சொன்னேன் 

கிளம்பி பெண் பார்க்க சென்றனர் 

செண்பகம் : என்னங்க மாப்பிளை வீட்ல இருந்து வந்துட்டாங்க 

வாசு : அவங்களை உள்ள கூப்பிடு டி நா ஒரு நிமிசத்துல வந்துடுறேன் 

முரளி : பாத்திங்களா நம்ம மட்டும் தான் வெளியே நிக்கிறோம். அவுங்க வீட்ல இருந்து யாரும் நம்மளை வரவேறக்க ஆள் வரல.உங்களுக்கு மரியாதை இல்லாத பொண்ணு எடுக்கணுமா  மரியாதை தெரியாத குடும்பம் 

ஜெயராம் : பாத்தியாடி நம்ம மகனை. நமக்கு மரியாதை இல்லாத குடும்பம் இவனுக்கு வேண்டாமா. காலேஜ்ல இவன் செஞ்ச தப்புக்கு நம்மளை எப்படி அசிங்க படுத்தினாங்க அப்போ நமக்கு மரியாதை இருந்துதா பேசுறது பாரு 

செண்பகம் வாசு : உள்ள வாங்க உள்ள கொஞ்சம் வேலையா இருந்துட்டோம் 

ரம்யா : ஐயோ பிறவால்ல விடுங்க 

அனைவரும் உள்ளே சென்றனர் 

செண்பகம் : ராதா வந்தவங்களுக்கு காபி  எடுத்திட்டு வா மா 

ரம்யா : பொண்ணு பேர் ராதா வா 

செண்பகம் : ஆமா சம்மந்தி பேசி கொண்டு இருக்கும் போது ராதா எல்லார்க்கும் காபி கொடுத்து செண்பகம் அருகில் உக்காந்து கொண்டால் 

ரம்யா : என்ன படிச்சிருக்க மா 

ராதா : பி காம் 

ரம்யா : இங்க பாரு மா நா உன் அம்மா மாதிரி பாத்துப்பேன். 

முரளி : லூசா மா நீ அந்த பொண்ணுக்கு நீ அம்மா மாதிரினா நா யாரு கொஞ்சம் சத்தமாகவே பேசி விட்டான் 

எல்லோரும் சிரித்து விட்டனர்.

ஜெயராம் : டேய் வாயை மூடிட்டு இருடா.

முரளி : அப்பாவை முறைத்து பார்த்தான் 

ரம்யா :சரிங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு  வரதட்சணை ஏதும் வேண்டாம்.

செண்பகம் : வரதட்சணை வேண்டாம் சொல்றது உங்க பெருந்தன்மை சம்மந்தி. நாங்க எங்க பொண்ணுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சி அனுப்புவோம் 

முரளி : நா பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் 

ஜெயராம் : டேய் சும்மா இருடா 

முரளி : பயப்படாதீங்க கல்யாணத்தை நிப்பாட்ட மாட்டேன் சொல்லி 

இருவரும் மாடிக்கு சென்றனர்.

ராதா : உங்க name 

முரளி : முரளி கிருஷ்ணா. ஆமா உங்க name 

ராதா : ராதா அப்போதே என் பெயரை சொன்னாங்க நீங்க கவனிக்கலையா. உங்க பெயர் அப்போ சொல்லல அதான் கேட்டேன் 

முரளி : நேரா விஷயத்துக்கு வரேன் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. என் parents வற்புறுத்தி தான் என்னை இங்க கூட்டிட்டு வந்து இருக்காங்க. எனக்குன்னு ஒரு ட்ரீம் இருக்கு 

ராதா : என்ன ட்ரீம் தெரிஞ்சிக்கிடலாமா 

முரளி : சொந்தமா ஒரு கம்பெனி வச்சி அதுல ஒரு 50 பேராவது வேலை பாக்கணும். அதான் ட்ரீம். இங்க வந்த உடனே உங்களை புடிக்கல. சொல்லி போக பார்த்தேன் 

ராதா : அப்போ என்னை புடிச்சிருக்கா 

முரளி : ஹ்ம்ம். நீங்க அமைதியா இருக்கிங்க. அப்பறம் 

ராதா : சொல்லுங்க என்ன அப்பறம் 

முரளி : என் அம்மா மாதிரி அழகா இருக்குறீங்க. 

ராதா : அழகாய் சிரித்தால் ஹ்ம்ம் 

முரளி : இங்க பாருங்க உங்களை கல்யாண செஞ்சிக்க எனக்கு சம்மதம். ஆனால் one கண்டிஷன் 

ராதா : சொல்லுங்க என்ன கண்டிஷன் 

முரளி : தனியா போகுற எண்ணம் இருக்க கூடாது. என் அம்மா அப்போ சொன்னது போல உங்களை மகள் மாதிரி பாத்துப்பாங்க 

ராதா : இதான் கண்டிஷன் உங்க கண்டிஷன் எனக்கு ஓகே. பட் எனக்கும் கண்டிஷன் இருக்கு.

முரளி : உங்களுக்கு கண்டிஷனா ஏங்க மாப்பிளை தான் கண்டிஷன் போடணும் 

ராதா : ஏன் நாங்க கண்டிஷன் போட்டா குடியா மூழ்கி போகும் 

முரளி : ஆத்தாடி என்ன இவ்ளோ வாயாடியா இருக்கு. இங்க பாருங்க நீங்க வாய் ரொம்ப பேசுறீங்க. எனக்கு நீங்க வேண்டாம் 

ராதா : ஹலோ என்ன நினைச்சிட்டு இருக்கிங்க. வருவீங்க. பொண்ணு பாப்பிங்க. மாடிக்கு கூட்டிட்டு வந்து பேசுவீங்க. நா வேண்டாம்னா ஏன் மாடிக்கு கூட்டிட்டு வந்து பேசுனீங்க. அப்பறம் என்னை யாரு கல்யாணம் செஞ்சிப்பா 

முரளி : யம்மா இருங்க மா விட்டா ஓவரா பேசுறீங்க. ஏங்க பொண்ணுன்னு இருந்தா ஒரு மூணு இல்ல நாலு பேரு பொண்ணு பாக்க வருவாங்க. போவாங்க. பாத்த உடனே உங்களை புடிச்சிருக்கு கல்யாணம் செஞ்சிக்கலாமா கேப்பாங்க. முதல பார்த்து. பேசி. அப்பறம் தனியா பேசி இரண்டு பேரு மனசு புரிஞ்சி அப்பறம் தான் கல்யாணமே 

ராதா : ஒரு மணி நேரத்தில என் மனச புரிஞ்சிருவீங்களா. அது இல்லமா நீங்க என்னை தனியா கூட்டிட்டு வந்து 

முரளி : யம்மா இருங்க எனக்கு நெஞ்சி எல்லாம் பதறுது உங்களை கூட்டிட்டு வந்து என்னமா செஞ்சிட்டேன் 

ராதா : பாருங்க கோவம் வருது. தனியா கூட்டிட்டு வந்து. கோவ பட்டா அப்பறம் யாரு கல்யாணம் செஞ்சிக்கவாi

முரளி : ஐயோ விடுங்க நானே கல்யாணம் பண்ணிடுறேன் என்னை ஆள விடுங்க சொல்லி கீழே ஓடி விட்டான் 

ராதா : ஹா ஹா சிரித்து விட்டு போன் எடுத்து முரளி அம்மா க்கு போன் போட்டு மாடிக்கு வாங்க சொல்லி போனை வைத்தால் ஐந்து நிமிடம் ரம்யா மேலே வந்தால் 
ரம்யா : என்னமா என் மருமகளே என் மகன் ஓடி வந்த மாதிரி தெரிஞ்சிது 

ராதா : நா யாரு உங்க பிரென்ட் பொண்ணு ஆச்சே 
(ரம்யா செண்பகம் சிறு வயது தோழிகள் உன் மகள் என் மகனுக்கு என்று பேசி வைத்தவர்கள் முரளிக்கு ராதாவை சிறு வயதில் தெரியும்  இப்போ அவள் வெளியூர் தங்கி படித்தவள். அதிகமா இங்க இருந்ததில்லை.. ராதாக்கு முரளி தெரியும் .. முரளிக்கு ராதாவை சிறு வயது தோழினு இப்போ தெரியாது.)
ரம்யா : சூப்பர் டி 

ராதா : ஆமா அத்தை ஏன் உன் மகன் ( ராதா ரம்யாவை வா போ னு கூப்பிடுவாள் ) இப்படி இருக்கார் கம்பெனி ஆரம்பிக்கணுமா 50 பேருக்கு வேலை கொடுக்கணுமா. நல்ல ட்ரீம் தான் அத்தை. ஆனால் அது வரைக்கும். வாழ்க்கை ஆரம்பிக்காம எப்படி இருக்குறது. 

ரம்யா : அடி கள்ளி சரி கீழே வா. இங்க பாரு நீ என்னை தெரியாத மாதிரி காட்டிக்கோ. 

ராதா : ஆனா ஒன்னு. உன் பையன் இப்பவும் லூசு தான்.

ரம்யா : ஹேய் வாலு வாடி  கீழே 

கீழே சென்றனர் 

திருமணம் முடிந்தது 

மணமக்கள் வீட்டுக்குள் வந்து சம்பிருதாயம் முடித்து 
முதல் இரவு அரை 

பால் சொம்பு கொண்டு உள்ளே சென்று முரளியிடம் கொடுத்தால் 

முரளி : உக்காரு ( நிச்சயம் முடிவில் இருந்து கல்யாணம் வரை போன் பேசி மனசுகளை புரிந்து கொண்டனர் )

ராதா : சொல்லுங்க 

முரளி : என் ட்ரீம் பத்தி என்னை நினைக்கிற 

ராதா : நல்ல விஷயம் அதுக்கு 

முரளி : அதுவரைக்கும் 

ராதா : ஹ்ம்ம் 

முரளி : நமக்குள்ள ஒண்ணுமே வேண்டாமே 

ராதா : என்ன வேண்டாம் எனக்கு புரியல 

முரளி : இந்த மாதிரி முதல் இரவு எல்லாம் வேண்டாமே 

ராதா : சூப்பர் சரி உங்க இதுக்கே வாரேன், இப்போ என்ன போஸ்ட்ல இருக்கிறீங்க 

முரளி : மேனஜர் 

ராதா : சேவிங் எவ்ளோ இருக்கும் 

முரளி : பணத்தை அம்மா கிட்ட கொடுத்துருவேன். அவுங்க save பண்ணிருப்பாங்க 

ராதா : எவ்ளோ இருக்கும் தெரியுமா 

முரளி : தெரியாது ஆனா ஒரு கம்பெனி ஆரம்பிக்கிற அளவுக்கு இருக்கும்.

ராதா : என்ன கம்பெனி 

முரளி : IT கம்பெனி 

ராதா : IT கம்பெனியை நடத்துறதுனா சும்மா இல்ல. Full ஆன்லைன் ஒர்க்.
வெளிநாடு இருந்து ஆன்லைன் ஒர்க் அதிக பணம் வேணும். அவசரம் வேண்டாம் பொறுமையா பண்ணுவோம் 

முரளி :: ஓஹோ இது எல்லாம் தெரியாம தான் நா சொல்வனா. எல்லாம் எனக்கும் தெரியும் அது வரைக்கும் ஏதும் வேண்டாம். சொல்லி படுத்து பெட்ஷிட் மூடி கொண்டான் 

ராதா : இவன் என்ன லூசா. இவனை யாரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டாம் சொல்றா இப்படி கோவப்படுறான் என் கோவத்தை பத்தி எனக்கு தெரியாது. என் அம்மா என்னை அடிச்சிட்டாங்க சொல்லி ஏழு வருஷம் பேசாம இருதேன்..நாளைக்கு பேசி பாப்போம் 




இந்த கதை காமம் அதிகமாக இருக்காது. இது முழுக்க காதல் கதை
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மறுநாள் 
ராதா : முதலில் எழுந்து குளித்து முடித்து கிட்சேன் சென்று அத்தை காபி 

ரம்யா : ஏனடி நீ மருமகளா இல்ல நானா 

ராதா : ஏன் அத்தை நா இந்த வீட்டு செல்ல மருமகள் நா லேட்டா தான் எந்திரிப்பேன் 

ரம்யா : ஏன் சொல்ல மாட்ட நானும் உனக்கு செல்லம் கொடுத்துடேன் 

ராதா : நீ என்ன அத்தை எனக்கு செல்லம் கொடுத்த 

ரம்யா : அடி கழுதை நீ சின்ன வயசுல எவ்ளோ சேட்டை பண்ணுவ தெரியுமா.அதுக்கு செண்பகம் உன்னை அடிக்க வருவா. நா தான் தடுப்பேன் ஏன்னா நீ எனக்கு அவ்ளோ செல்லம் 

ராதா :  நீ இருக்கும் போது அம்மா அடிக்க மாட்டா. ஆனா நீ போன பிறகு அடிப்பா. அதுக்கு கோவப்பட்டு ஏழு வருஷம் பேசாம இருந்தேன் 

ரம்யா : ஆமா உனக்கு ரொம்ப கோவம் வருமா. உங்க அம்மா தான் சொன்னா 

ராதா : எஸ் எனக்கு ஒன்னு புடிக்கும்னா உசுரே கொடுப்பேன். அதுவே எனக்கு புடிக்கலான அவுங்க கூட சாகுற வரைக்கும் முகத்துல கூட முழிக்க மாட்டேன் 

ரம்யா : ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ பெண்கள் ரொம்ப கோவ பட கூடாது மா. அது நல்லதுக்கு இல்ல.

ராதா : அத்தை தப்பு செஞ்சா தண்டனை உண்டு 

ரம்யா : சரி ஒரு பேச்சிக்கு சொல்றேன் ஒரு வேலை நீ கோவப்படுற மாதிரி முரளி நடந்தா 

ராதா : டைவஸ் 

ரம்யா : என்ன பேச்சு பேசுற அடிச்சி பல்ல உடைச்சிருவேன் ராஸ்கல் நேத்து தான் கல்யாணம் முடிஞ்சி இருக்கு. பேச்சை பாரு 

ராதா : கொஞ்சம் பயத்துடன் அத்தை ஏன் இப்படி கோவம் படுற எனக்கு கோவம் வந்தா தான். எனக்கு வராது. ஏன்னா நீ இருக்கல்ல அத்தை அப்பறம் என்ன 

ரம்யா : ஒரு வேலை நீ கோவப்பட்டா என்கிட்ட சொல்லு. அவனை கண்டிப்பேன் சரியா. இந்தா காபி கொண்டு முரளிக்கு கொடு போ 

ராதா : ஹ்ம்ம் சரி அத்தை காபி கொண்டு முரளிக்கு கொண்டு சென்றால் அவன் தூங்கி கொண்டு இருந்தான் எப்படி தூங்குது பாரு இவனை எதாவது செய்யணுமே நினைத்து ஹ்ம்ம் இப்படி செய்வோம் நினைத்து கையில் உள்ள காபி கிளாஸ் அப்படியே அவன் கன்னத்தில் வைத்து உடனே எடுத்தால் 

முரளி : லேசா சுட்டு விட்டது ஸ்ஸ்ஸ்ஸ் சவுண்ட் விட்டு கண் முழித்து ராதாவை பார்த்தான் ஹ்ம் உன் முகத்துலையா முழிக்கணும் ச்சினு சொல்லி திரும்ப பெட்ஷிட் மூடினான் 

ராதா : என்னா கொழுப்பு இருக்கும் என் முகத்துல முழிச்சா இவனுக்கு பேதியா எடுக்கும். மவனே உன்னை காபி கொண்டு பெட்ஷிட் மேலே ஊற்றினால் அது பெட்ஷிட் வழியாக அவன் முகத்தில் பட்டது.

முரளி : சுட்டு விட்டது ஆஆஆஆ அம்மா கத்திட்டே எழுந்து ராதாவை தூரத்தினான் 

ராதா : ஐயோ ஓடு ராதா சொல்லிட்டே ஓடி ரம்யாக்கு பின்னாடி ஒழிந்து கொண்டால் 

ரம்யா : என்ன டி ஆச்சு இப்படி ஓடி வர 

ராதா : ஹ்ம்ம் உன் மகன் என்னை அடிக்க துரத்திட்டு வாரான் 

ரம்யா : வாரனா என்ன டி மரியாதையா பேசு அவன் உன் புருசன் 

முரளி : மா இந்த குரங்கு காபியை என் முகத்துல ஊத்திட்டு ஓடி வந்துட்டா 

ராதா : குரங்கா ஆமா குரங்கு அப்படித்தான் ஊத்தும் 

ரம்யா : ஹேய் சும்மா இரு டி. காபி அவன் முகத்துல ஊத்தினியா 

ராதா : நீ காபியை கொண்டு போய் இவருக்கு கொடுக்க சொன்னல்ல, நானும் போனேன் நா எழுப்பி காபி கொடுக்க நின்னேன் அவரு என் முகத்தை பாத்துட்டு. உன் முகத்துலயா முழிக்கணும் சொல்லி திரும்ப பெட்ஷிட் மூடிட்டார். அதான் அப்படி செஞ்சேன் 

ரம்யா : டேய் இவா வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி டா. இவள் முகத்துல தான் முழிச்ச நல்லதே நடக்கும் டா போய் பிரஷ் பண்ணிட்டு வா போ சொல்லி அனுப்பி வைத்தால் 
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
#3
முரளி : ராதாவை முறைத்து கொண்டே சென்றான் 

ராதா : அவனுக்கு நக்கல் செஞ்சி வாயை கோணி வலிச்சம் காட்டினால் 

முரளி : ரூம்க்கு வா உனக்கு இருக்கு சொல்லிட்டு சென்றான் 

ராதா : ரம்யா காதில் அத்தை உன் மகன் ரூம்க்கு கூப்பிடுறாரு 

ரம்யா : ச்சி போடி 

முரளி : குளித்து ஆபீஸ் க்கு கிளம்பிட்டு இருந்தான். மா டிபன் வை ஆபீஸ் க்கு நேரம் ஆகிட்டு 

ரம்யா : டேய் நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிது. இன்னைக்கு வேலைக்கு கிளம்பிட்ட. கொன்னுடுவேன் உன்னை மருமகளை கோயில் கூட்டிட்டு போய்ட்டு வா 

முரளி என்ன விளையாடுறியா ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்குkoilல்லாம புது கம்பெனி ஆரம்பிக்கணும்.அதுக்கு லீவு குறைக்கணும்.

ஜெயராம் : டேய் அம்மா சொல்றத கேளுடா. மருமகளை கோயிலுக்கு கூப்பிட்டு போ சொல்லிட்டேன் 

முரளி : என்னை சொந்தமா ஒரு முடிவு எடுக்க விட மாட்டிங்க சரி கோயிலுக்கு கூட்டிட்டு போறேன் சொல்லி ரூம்க்கு சென்று ஹேய் ராதா கிளம்பு கோயிலுக்கு போகணும் 

ராதா : ராதானு சொல்லி மட்டும் கூப்பிடுங்க. அது என்ன ஏய் எனக்கு பெயர் இருக்கு.

முரளி : ராதா னு தான் கூப்பிட்டேன் உன் காது செவுடா 

ராதா : அப்படிதான் கூப்பிட்டீங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஏய் வந்தது. அத சொல்றேன் 

முரளி : சரி சாரி ராதா கோயிலுக்கு போவோமா 

ராதா : ஹ்ம்ம் கிளம்பி வெளியே சென்று மாமா அத்தை கோயிலுக்கு போய்ட்டு வரேன் 

இருவரும் : ஹ்ம்ம் சரி மா டேய் மருமகளை பார்த்து கூப்பிட்டு போ 

முரளி : ஹ்ம்ம் வா போகலாம் 

ஜெயராம் : டேய் காரை எடுத்துட்டு போடா 

முரளி : ஹ்ம்ம் சரி ப்பா 

ராதா : பின்னாடி சீட்டில் உக்கார போனால் 

ரம்யா : ராதா முன்னாடி உக்காரு 

ராதா : அத்தை அது 

முரளி : உக்காரு இல்ல அதுக்கும் என்னை தான் திட்டுவாங்க 

ஜெயராம் : என்ன சொன்ன 

முரளி : முன்னாடி உக்காந்துக்கோனு சொன்னேன் 

ஜெயராம் : ஹ்ம்ம் 

முரளி : ராதா உக்காரு 

ராதா : சிரித்து விட்டு மாமாவுக்கு பயம் போல நினைத்து முன்னாடி உக்காந்து கொண்டால் 

முரளி : சீட் பெல்ட் போட்டுக்கோ 

ராதா : போட தெரியாது. எங்க கிட்ட பைக்கே இல்ல

முரளி : அவளுக்கு சீட் போடும் அவள் மேல் சோப்பு வாசனை இவனை என்னமோ செய்தது. தன்னை அடக்கி கொண்டு அவளுக்கு சீட் பெல்ட் போட்டு விட்டான் 

கார் கோயிலுக்கு வந்தது 

முரளி : இங்க இறங்கி நில்லு கார் பார்க் செஞ்சிட்டு வாரேன் 

ராதா : இறங்கி  நின்றாள் 

ஒருவன் : நின்று சிகரெட் பிடித்து கொண்டு மச்சி அங்க பாருடா பிகர் சூப்பரா இருக்கு 

இன்னொருவன் : ஆமா டா வா போய் பேசி பாப்போம் எவ்ளோ பணம் கேட்டாலும் கொடுப்போம் 

ஒருவன் : டேய் ஐட்டமா டா இவா பார்த்தா அப்படி தெரியலையே 

இன்னொருவன் : இப்போ எல்லாம் இப்படி தான் வருவாங்க. போலீஸ் கெடுபிடி வேற அதான் கல்யாணம் முடிஞ்ச மாதிரி நிப்பாலுக வா போகலாம் அவளிடம் சென்று யம்மா எவ்ளோ மா 

ராதா : என்னுது ண்ணே எவ்ளோ கேக்கறீங்க 

இருவரும் : உன் விலை எவ்ளோ மா 

ராதா : கோவம் வந்து டேய் யார்கிட்ட என்ன பேசுற. இரு என் புருசன் வரட்டும் அப்பறம் இருக்கு உங்களுக்கு 

ஒருவன் : சும்மா சீன் போட்டுட்டு வாடினா அவள் கையை புடித்து இழுக்கும் போது 

முரளி : என்ன ஆச்சு யாரு இவங்க 

ராதா : என்னங்க இவங்க  நடந்ததை சொல்லி முடித்தால் அழுது கொண்டே 

முரளி : இங்க பாருங்க இவங்க என் மனைவி தப்பா பேசாதீங்க 

ஒருவன் : டேய் தள்ளி போ அடி வாங்கி செத்துராத 

இன்னொருவன் : டேய் நீ புருஷனாவே இருந்துட்டு போ. கமிஷன் வாங்கிட்டு போ 

முரளி : ராதா வா சண்டை வேண்டாம் சொல்லி கோயிலுக்கு கூட்டிட்டு சென்றான் 

ராதா : ச்சி இவன் எல்லாம் மனுசனா இவனை நம்பி என்னை அனுப்பி வச்சாங்க பாரு அத்தை மாமா வீட்டுக்கு போய் அவங்களுக்கு இருக்கு மனதில் நினைக்கும் போது 

முரளி : போன் வந்தது ஒரு நிமிடம் இரு கோயில போன் பேச கூடாது சொல்லி வெளியே போய் போன் பேச போனான் 

ராதா : சாமி கும்பிட்டு உக்காந்து இருந்தால். இவனை நம்பி எங்கையும் போக கூடாது 

முரளி : போவோமா 

ராதா : கோவத்துல ஹ்ம்ம் போவோம். இங்க பாருங்க என்னை எங்கையும் கூட்டிட்டு வர வேண்டாம். உங்களை நம்பி நா உங்க கூட வந்தா எனக்கு பாதுகாப்பு இல்ல கோவத்துல கத்திட்டு வெளியே சென்றால் 

இவளிடம் தவறாக நடந்து கொண்ட இரண்டு பேரும் அக்கா எங்களை மன்னிச்சிருங்க இனி எந்த பொண்ணு கிட்டயும் தப்பா நடந்துக்க மாட்டோம் சொல்லிட்டு ரத்த காயங்கள் உடன் ஓடினர் 

ராதா : என்ன நடந்துச்சு யோசிச்சு கிட்டே பூ கடைக்கு சென்றால் 

பூ கடை பாட்டி : யம்மா உன்னை கார்ல இறக்கி விட்டு போனானே அவன் யாருமா 

ராதா : என்ன சொல்ல பொண்டாட்டி கிட்ட தப்பா பேசுறவனை தட்டி கேக்காம இருக்குறவனை எப்படி புருசன் சொல்றது அவன் என் அண்ணன் பாட்டி 

பாட்டி : இருந்தா அப்படி ஒரு அண்ணனுக்கு தங்கச்சியா பிறக்கணும் 

ராதா : ஏன்  பாட்டி 

பாட்டி : அப்போ உன்கிட்ட வம்பு இழுத்தாங்களா அவுங்க இரண்டு பேரையும் அடில வெளுத்து எடுத்துட்டான் மா 

ராதா : ஐயோ இவரை போய் விட்டு கொடுத்துட்டோமே நினைக்கும் போது முரளி 
வந்து போலாமா கேட்டான் 

ராதா : தகவல் அரை இருந்தது. அதில் தான் சாமி பாடல் போட்டு வெளியே பெரிய ஸ்பீக்கரில் கேட்கும். நேராக அங்கு சென்று மைக் சுவிட்ச் போட்டு 
இப்போ இரண்டு பேரும் என்கிட்ட வம்பு இழுத்தாங்க. அவங்களை அடிச்சி விரட்டுனது என் புருசன் கத்திட்டு வெளியே ஓடி வந்து. முரளியை கட்டி புடித்து எல்லார் முன்னாடியும் இவரு என் புருசன். எனக்கு எதாவது ஒண்ணுன்னா என் புருசன் அவுங்களை சும்மா விட மாட்டார் சொல்லி பாட்டி கிட்ட போய் சாரி பாட்டி பெரிய தப்பு பண்ண பார்த்தேன் சொல்லி முரளி கிட்ட போய் அவன் கண்களை பார்த்து என்னை மன்னிச்சிருங்க சொல்லி அவனை கட்டி புடித்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தால் 

பாட்டி : நல்ல ஜோடி இவுங்க என்னைக்குமே பிரியாம சந்தோசமா இருக்கணும் அவர்கள் இருவரையும் நோக்கி கைகள் நீட்டி அவள் கன்னத்தில் சொடக்கு போட்டால் யப்பா என்னா கண்ணு பட்டு இருக்கு. 

அவர்கள் கார் ஏறி உக்காந்து கொண்டனர். ராதா பாட்டி க்கு டாடா போட்டு கிளம்பி சென்றால்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply
#4
Very Nice Start Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#5
(04-06-2024, 03:56 PM)omprakash_71 Wrote: Very Nice Start Bro

நன்றி நண்பா
Like Reply
#6
இருவரும் கோயில் இருந்து வீட்டுக்கு சென்றனர் 

ஜெயராம் : என்னமா சாமி கும்பிட்டியா மா 

ராதா : ஹ்ம் நல்ல தரிசனம் மாமா 

ஜெயராம் : சரி மா ரம்யா மருமகளுக்கு டிபன்  கொடு சொல்லி வெளியே வாக்கிங் சென்றான் 

ரம்யா : வா மா சப்பாத்தி வச்சிருக்கேன் சாப்பிட வா

முரளி : ராதா ரூம்க்கு வா சொல்லி ரூம்க்கு சென்றான் 

ராதா : பாத்தியா அத்தை உன் மகன் ரூம்க்கு கூப்பிடறான் 

ரம்யா : ச்சி கழுதை பேச்சை பாரு 

ராதா : அத்தை இன்னைக்கு கோயில்ல fight சீன் இருந்தது 

ரம்யா : சண்டையா  உன்கூடவா எதுக்கு மா 

ராதா : அத்தை பொரு. சண்டை என் கூட இல்லை. 

ரம்யா : பின்ன 

ராதா : என்னை இரண்டு பேர் அசிங்கமா பேசினாங்க. அவுங்களை அடி வெளுத்து வாங்கிட்டார் 

ரம்யா : என்னடி சொல்ற 

ராதா : ஆமா அத்தை கோயில்லில் நடந்ததை சொல்லி முடித்தால் 

ரம்யா : நாசமா போனவனுக 

ராதா : அட விடுங்க அத்தை அவனுக ஓடிட்டாங்க. சரி நாளைக்கு நா ஒரு ஆஃபீஸ்ர் பாக்க போறேன் 

ரம்யா : ஆஃபீஸரையா ஏன் மா 

ராதா : இவரு IT ஆபீஸ் சொந்தமா வைக்க நா என் அப்பா பிரென்ட் மூலமாக அவருக்கு லோன் வாங்கி கொடுக்க போறேன் 

ரம்யா : சூப்பர் மா. சொந்தமா கம்பெனி வைக்கிறது அவன் கனவு மா. அது இப்போ உன் மூலமாக நிறைவேற போகுது. என்கிட்ட பணம் கொடுத்து வச்சிருக்கான் லோன் சேர்த்து அவன் கம்பெனி வைக்க உதவியா இருக்கும் 

ராதா : ஹ்ம் சரி உன் மகன் என்னை ரூம்க்கு கூப்பிட்டான் போய்ட்டு வரேன் சொல்லி அவள் ரூம்க்கு சென்றால் 

முரளி : உக்காரு அவளும் உக்காந்தால் இங்க பாரு நீ அம்மா கிட்ட பேசுனது எல்லாம் கேட்டேன். தேங்க்ஸ் 

ராதா : எதுக்கு தேங்க்ஸ் நீங்க என் ஹஸ்பண்ட் ஓகே 

முரளி உணர்ச்சி வசப்பட்டு ராதாவை கட்டி புடித்தான் அவளும் கட்டி புடித்தால் இருவரும் தனது தாம்பத்தியம் வாழ்க்கைக்குள் நுழைந்தனர்.

மறுநாள் 

லோன் ஏற்பாடு செய்து கொடுத்து முரளி   சொந்தமாக கம்பெனி வைத்து அவனுடைய ட்ரீமை நிறைவேற்றறினான் 

ராதா முரளியின் கனவை புரிந்து கொண்டு முரளிக்கு உறுதுணையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் 


சுபம் 

இது சிறு கதை தான் 

இன்னொரு பெரிய புது கதையுடன் வருகிறேன். ஆதரவு அளித்து வந்த ஓம் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி 
[+] 2 users Like Murugansiva's post
Like Reply
#7
மிக அருமையான கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#8
I do not understand the purpose of writing this story.
Waste of time and expectation.
[+] 1 user Likes befriend007's post
Like Reply
#9
Nice story
[+] 1 user Likes Rangushki's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)