Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: VMBG_104421000000.jpg]
[Image: VM_104343000000.jpg]
கேம் ஓவர் - சினி விழா ↓
[Image: 1539356354.jpg]


[color][size][font]
கேம் ஓவர் - வீடியோ ↓
[Image: GameOver_TamilOfficialTrailer_31052019_15.jpg]
[/font][/size][/color]



Advertisement
[color][size][font]
கேம் ஓவர்
நேரம் 1 மணி நேரம் 43 நிமிடம்
[/font][/size][/color]







2

  •   0  0 Google+

[color][size][font]

விமர்சனம்
[/font][/size][/color]
Advertisement

கேம் ஓவர் - விமர்சனம்


தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோஸ்


இயக்கம் - அஸ்வின் சரவணன்


இசை - ரோன் எதன் யோகன்


நடிப்பு - டாப்சி, வினோதினி


வெளியான தேதி - 14 ஜுன் 2019


நேரம் - 1 மணி நேரம் 43 நிமிடம்


ரேட்டிங் - 2/5


தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த தொடர் பேய் சீசன் எப்போது முடியப் போகிறதோ எனத் தெரியவில்லை. ஒவ்வொரு பேய்ப் படத்திலும் ஒரே மாதிரியான கதையை வைத்து, காட்சிகளை வைத்து நம்மை போரடித்துவிடுவார்கள். 99 சதவீத பேய்ப் படங்கள் பழி வாங்கும் பேய்ப் படங்களாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அப்படியே.


ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் பேய் வரும் அல்லது அது பேயாக வெளிப்படும் மீடியம் மட்டும் இதில் புதிது. அதாவது படத்தின் நாயகி அவரது கையில் குத்தியுள்ள டாட்டூ வழியாகப் பேய் வருகிறது. இறந்தவர்களின் அஸ்தியைக் கலந்து வரையப்படும் டாட்டூ அது. அப்படி ஒன்று இருக்கிறதா அல்லது படத்திற்காக இயக்குனர் இப்படி அமைத்திருக்கிறாரா என்பதை விசாரிக்க வேண்டும்.


சில வருடங்களுக்கு முன்பிருந்த வீடியோ கேம்களின் வடிவமைப்பாளர் டாப்சி. பெற்றோர்களுடன் ஏதோ ஒரு சண்டை போட்டுவிட்டு அவர்களுக்குச் சொந்தமான கடற்கரைப் பகுதி பங்களா ஒன்றில் வேலைக்காரி வினோதினியுடன் இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன் அவர் கையில் வரைந்துள்ள டாட்டூ அவருக்கு அடிக்கடி வலியைக் கொடுக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டு இறந்து போன ஒரு பெண்ணின் அஸ்தியை வைத்து வரையப்பட்ட டாட்டூ அது என டாப்சிக்குத் தெரிய வருகிறது. அந்த டாட்டூவை அழிக்க அவர் நினைக்கிறார். ஆனால், இறந்து போன பெண்ணின் அம்மா வந்து தன் மகள் எப்படிப்பட்டவள், அவள் எப்படி இறந்தால் என சொல்ல, தன் முடிவை மாற்றிக் கொள்கிறார் டாப்சி. இதனிடையே, டாப்சியைக் கொல்ல மூன்று சைக்கோ கொலைகாரர்கள் அவரது வீட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்களிடமிருந்து டாப்சி தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


நீண்ட இடைவெளிக்குப் பின் டாப்சி தமிழில் நடித்திருக்கும் படம். ஆடுகளம் படத்தில் வெளுத்தப் பெண்ணாக மட்டுமே வந்து போனவர், நடிப்பில் இவ்வளவு முன்னேறியிருக்கிறாரா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். ஒரு பக்கம் பயத்தைக் காட்ட வேண்டும், மறுபக்கம் மனப்பிரமையைக் காட்ட வேண்டும், இன்னொரு பக்கம் தன் டாட்டூவில் இருக்கும் இறந்த பெண்ணுக்காக பரிவு காட்ட வேண்டும். வீட்டு வேலை செய்பவராக இருந்தாலும் வினோதினியிடம் அன்பு பாராட்ட வேண்டும், என பல வேண்டும்களை சிறப்பாகச் செய்திருக்கிறார்.


ஒவ்வொரு வீட்டிலும் வினோதினி போன்ற பாசமான வேலை செய்யும் பெண்கள் இருந்தால் அது பலருக்குப் பேருதவியாக இருக்கும். சைக்கோ கொலைகாரர்கள் சுற்றி வளைத்தால் கூட தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் டாப்சி உயிரைப் பற்றி கவலைப்படும் பேரன்பு மிக்கவராக இருக்கிறார் வினோதினி. இந்தக் காலத்தில் அப்படி ஒரு நிலைமை வந்தால் விட்டு விட்டு ஓடிப் போய்விடுவார்கள். இயக்குனருக்கு இந்தக் கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் நிறையவே பேராசை இருந்திருக்கிறது.


டாப்சி, வினோதினி இவர்களைத் தவிர படத்தில் குறிப்பிடும்படியான கதாபாத்திரம் என்றால் டாட்டூ டிசைனராக வரும் ரம்யா, இறந்த பெண்ணின் அம்மாவாக வரும் மாலா பார்வதி ஆகியோரைச் சொல்லலாம். சில காட்சிகளே வந்தாலும் அவர்களது கதாபாத்திரங்களில் தனித்துத் தெரிகிறார்கள்.


ஒரு வீட்டுக்குள்ளேயே முழு படமும் நகர்கிறது. இரவுக் காட்சிகள்தான் அதிகம். ஒளியமைப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வசந்த். பயப்பட வேண்டிய காட்சிகளில் ரோன் எதன் யோகன் பின்னணி இசையும் பயத்தைக் கூடுதலாக்குகிறது. அதிலும் ஒரு காட்சியில் வினோதினியின் தலை மட்டும் தனியாக வந்து ஜன்னலில் அடிக்கும் போது பக் என அதிர்ச்சியாகிறது.


கொஞ்சம் பேய்க் கதை, கொஞ்சம் திரில்லர் கதை, கொஞ்சம் சென்டிமென்ட் கதை என சில பல டிவிஸ்ட்டுகளுடன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன். ஆனால், படத்தில் பல விஷயங்களுக்கு எந்த ஒரு ஆரம்பத்தையும், முடிவையும் அவர் கொடுக்கவில்லை. டாப்சி அவர் பெற்றோரை விட்டு ஏன் பிரிந்து இருக்கிறார், ஒரு வருடத்திற்கு முன் புத்தாண்டு தினத்தில் அவருக்கு நடந்த கொடுமை என்ன, அந்த மூன்று சைக்கோ கொலைகாரர்கள் ஏன் இளம் பெண்களைக் கொலை செய்கிறார்கள் என்று நம் மனதில் எழும் கேள்விகளுக்கு படத்தில் விடை இல்லை. டாப்சியை ஒரு மனப் பிரமை பிடித்தவராகக் காட்டுவதன் காரணமும் புரியவில்லை. இருட்டைக் கண்டால் அவர் பயப்படுகிறார். அவருடைய மனப்பிரமையும், அவருடைய டாட்டூவில் இருக்கும் பேயும் ஏதோ ஒரு விதத்தில் லின்க் ஆகிறது, டாப்சிக்கு ஒரு வருடம் முன்பு நடந்த கொடுமையில் அந்த சைக்கோ கொலைகாரர்களுக்கும் தொடர்பு இருந்திருக்குமோ என நாமாகவே எதை எதையோ யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.


ஒன்றரை மணி நேரப்படம்தான், இன்னும் கூடுதல் நேரம் வந்தாலும் பரவாயில்லை என கேள்விகள் எழும் காட்சிகளுக்கு விடையாக சில காட்சிகளை சேர்த்திருக்கலாம்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா- விமர்சனம்

[Image: collageJPGjpg]

பொது இடத்தில், கொலையோ கொள்ளையோ, அத்துமீறலோ வன்முறையோ நடக்கும்போது, அதை செல்போனில் படம்பிடித்து, அப்லோடு செய்யும் இந்த உலகத்தில், தட்டிக்கேட்க ஒருவராவது வருவார்கள் என நம்பிக்கையும் ஆசையுமாகச் சொல்லியிருப்பதுதான் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ திரைப்படம்.
’பொது இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்சினை; ஆபத்து. அதைப் பார்த்து நமக்கேன் வம்பு’’ என்று இல்லாமல், அதைத் தடுத்து நிறுத்த மனிதர்கள், முஷ்டி மடக்கி வருவார்கள் என்கிற மெசேஜை, யு டியூப் சேனல் மூலம் பிரபலமானவர்களைப் படத்தில் நடிக்கவைத்திருப்பது புதுமை. ஆனால், இது மட்டுமே புதுமை என்பதுதான் யோசிக்கவைக்கிறது.
ரியோவும் விக்னேஷ்காந்தும் நண்பர்கள். அனாதை இல்லத்தில் வளர்ந்த இவர்களுக்கு அடைக்கலாம் கொடுத்து வளர்த்து வருபவரும் (அரவிந்த்) அங்கு வளர்ந்தவர்தான். ஜாலியும்கேலியுமாக யு டியூபில் ஏதாவது செய்து கொண்டிருப்பதுதான் இவர்களின் வேலை, பொழுதுபோக்கு. அப்படித்தான் ஒருமுறை, பிராங்க் ஷோ நடத்தும் போது, முக்கியப் பிரமுகரான ராதாரவியையும் ஊடக நிருபரான நாயகியையும் கத்திவைத்து ஷாப்பிங் மாலில் மிரட்டுகிறார்கள்.
அதையடுத்து, அவர்களின் தைரியத்தைக் கண்டு உணர்ந்த ராதாரவி, அவர்களுக்கு மூன்று பரிட்சைகள் வைக்கிறார். மூன்றிலும் ஜெயித்துவிட்டால், மிகப்பெரிய தொகையைத் தருகிறேன் என்கிறார். அந்த மூன்று விஷயங்கள் என்ன, அவர்கள் அவற்றை எப்படிக் கையாள்கிறார்கள், ராதாரவி இப்படிச் செய்வதற்கு என்ன காரணம், மூன்றிலும் இவர்கள் வென்றார்களா என்பதையெல்லாம் சொல்லிவிரிகிறது திரைக்கதை.
இணையதளம், ஊடகம், யுடியூப் சேனல் என கதையை எடுத்துக்கொண்டதாலேயே, படம் முழுக்க கலாய்த்து எடுத்துவிடுகிறார்கள். பிரேக்கிங் நியூஸ், அரசியல்வாதிகள் என எல்லாப் பக்கமும் ரவுண்டு கட்டி அடித்திருக்கும் விதம் ரசிக்கும்படி இருக்கிறது.  
படத்தின் நாயகனாக ரியோராஜ். காமெடி, டைமிங், கலாய் என இருப்பதால் அந்த வேடம் பொருந்திப் போகிறது இவருக்கு. மற்றபடி, சென்டிமென்ட், காதல், ஆக்ரோஷக்  காட்சிகளிலெல்லாம் இவரிடம் ரொம்பவும் எதிர்பார்த்தால் அது நம் தவறுதான்!
வழக்கம் போல், விக்னேஷ் காந்த். நாயகனின் நண்பன். ஓரிரு இடங்களில் வெளுத்து வாங்குகிறார். ஆனால், இன்னும் இந்தக் கேரக்டர் காமெடியில் சிக்ஸர் அடித்திருக்கவேண்டும். அது மிஸ்ஸிங். மற்றபடி, எப்படி பிரபலமாவது, பிரேக்கிங் நியூஸில் இடம்பெறுவது என்று இருவரும் யோசிப்பதாகக் காட்டி,. பலரையும் நக்கலடித்திருக்கிறார்கள்.
டிவி ரிப்போர்ட்டராக வரும் ஷெரின் நாயகி. இப்படியொரு கேரக்டரே இல்லாமல் கூட படம் எடுத்திருக்கலாம். நல்லவேளையாக ஆறுதல்... படத்தில் டூயட் இல்லை (அப்படியொரு காட்சியில் அதையும் கலாய்த்திருப்பது சூப்பர்). காதல் காட்சிகளும் இல்லை. காட்சிகளும் இல்லை.
அரசியல்வாதியாக வருகிறார் நாஞ்சில் சம்பத். வழக்கம் போல் கெட்ட அரசியல்வாதி. ஆர்.கே.நகரை யு.கே.நகர் என்று மாற்றிய விதம் ரசனை. அதேசமயம் திடீரென நாயகியை, அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்தின் மகள் என்று காட்டுவதும் இவரின் மகள் என்பதே யாருக்கும் தெரியாது என்று சொல்வதும் என்று விடுகிற கதை நம்பும்படியாக இல்லை. கதைக்கு வலு சேர்ப்பதாகவும் இல்லை. ’ஒரு மாநிலத்தில் ரெண்டு முதல்வர்கள் இருக்கும் போது, ஒரு தொகுதில ரெண்டு எம்.எல்.ஏ. இருக்கக்கூடாதா?’ என்பது போன்ற அரசியல் சரவெடிகள், கொளுத்திப் போடுவதெல்லாம் ஓகே. குறிப்பாக, ‘மக்கள்னா யாரு?’ என்று நாஞ்சில் சம்பத் பேசுகிற வசனம் பொளேர் ரகம். ’ஓட்டு போடுறவங்களுக்கு பணம் கொடுத்ததெல்லாம் போதும்; ஓட்டு எண்ணுறவங்களுக்கு பணம் கொடுத்தேன்’ என்பதும் மனநிலை பாதிக்கப்பட்ட நிறுத்தி, எம்.எல்.ஏ.வாக்குவதும் ரொம்பவே டூமச்.
அரவிந்த், மயில்சாமி, ராதாரவி, விவேக் பிரசன்னா என மிகக்குறைவான நடிகர் பட்டாளம். தெருவில் திரிந்துகொண்டிருப்பவர்களிடம் காட்டுகிற கரிசனம், நெகிழ்ச்சி. ஹவுஸ் ஓனர் மயில்சாமியின் நடிப்பு யதார்த்தம். தன் நடிப்பால், கேரக்டருக்கு வலுசேர்த்துவிடுகிறார் ராதாரவி. அவருக்கு ஒரு ப்ளாஷ்பேக். அதுதான் கதைக்கான கரு. இன்னும் கொஞ்சம் வலுவூட்டியிருக்கலாம்.
‘கனா’ தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார். யதார்த்தங்களை மீறிய காட்சிகளை, படம் முழுவதும் வைத்திருந்தாலும் அந்தக் கடைசி கால்மணி நேர காட்சிகளும் படம் சொல்ல வருகிற மெசேஜும்... இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலனை மன்னிக்கவைத்துவிடுகிறது. இசை ஷபீர். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம், இரைச்சல்கள் இல்லை என்பதே ஆறுதல். படத்தைத் தாங்கி நிற்கும் யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’... க்ளைமாக்ஸ் காட்சிக்காக, நல்ல மெசேஜுக்காகப் பொறுத்துக்கொண்டு பார்க்கலாம்
Like Reply
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி மாறுகிறது
[Image: NTLRG_20190616125334963871.jpg]

போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் அஜீத் வழக்கறிஞராக நடித்துள்ளார். வித்யாபாலன் அவரது மனைவியாக நடித்துள்ள இந்த படம் ஆகஸ்டு 10-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக புதிய படங்கள் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகி வரும் நிலையில், ஆகஸ்ட் 10-ந்தேதி என்பது சனிக்கிழமையில் வருகிறது.
மேலும், அஜீத் குமார் வியாழக்கிழமை செண்டி மென்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை வியாழக்கிழமைக்கு மாற்றுமாறு அவர் கூறியிருக்கிறாராம். அதன்காரணமாக, ஆகஸ்ட் 10-ந்தேதி வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 1-ந்தேதியே வெளியாகயிருப்ப தாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது
Like Reply
Hospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இப்போது உள்ள பல இயக்குநர்களுக்கும் மானசீக குரு அவர் தான். பல முன்னனி இயக்குநர்கள் தங்கள் ஆதர்ஷமாக கருதுவது அவரைத்தான்.

[Image: maniratnam.jpg]Hospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி!
தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியதில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு. உலக அரங்கில் அவரின் படங்களுக்கு மிகப்பெரும் மரியாதை உள்ளது. அவர் படங்கள் பாடமாக திரைப்பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. கமல் மற்றும் ரஜினியின் வாழ்வில் மறக்க முடியாத படங்களை தந்தவர். கமலுக்கு நாயகனும் ரஜினிக்கு தளபதியும் என்று அவர் இயக்கத்தில் வந்த இரு படங்களும் தமிழ் சினிமா பொக்கிஷங்கள்
அவர் கடைசியாக இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக தன் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார். அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக பொன்னியின் செல்வன் படத்தில் மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க உள்ளது. 
பொன்னியின் செல்வன் படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த மணிரத்னம் திடீர் நெஞ்சுவலி காரணமாக க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னரே மூன்று முறை ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இது சாதரண நெஞ்சு வலி என தகவல்கள் தெரிவிக்கிறது. 

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இப்போது உள்ள பல இயக்குநர்களுக்கும் மானசீக குரு அவர் தான். பல முன்னனி இயக்குநர்கள் தங்கள் ஆதர்ஷமாக கருதுவது அவரைத்தான்.
Like Reply
பீக்கில் இருக்கும் எந்த ஹீரோவும் கனவில் கூட நினைக்காத காரியத்தை செய்யும் விஜய் சேதுபதி

[Image: vijay-sethupathi326-1560708242.jpg]

மலையாளம்
இங்கேயே நடிக்க நேரமில்லையாம் இதில் தெலுங்கு, மலையாள படங்கள் வேறா என்று விமர்சனம் எழுந்துள்ளது. நடிக்கப் போகிறவர் அவர், எத்தனை மொழி படங்களில் நடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. நடிக்க தெம்பு இருப்பதால் அவர் தொடர்ந்து புதுப் படங்களை ஒப்புக் கொள்கிறார். அதற்காகஅவரை விமர்சிப்பதற்கு நாம் யார்?
[Image: vijay-sethupathi325-1560708249.jpg]
 

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட நினைப்பவர். அதனால் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் அல்லாமல் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை அசத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும் சரி ரசிகர்கள் ஒரே மாதிரியான வரவேற்பு கொடுக்கிறார்கள். வில்லனாக நடிப்பதால் அவரை யாரும் கழுவிக் கழுவி ஊற்றுவது இல்லை.

[Image: vijaysethipathi1-1560708191.jpg]
 

கதாபாத்திரம்
விஜய் சேதுபதி சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க டேட்ஸ் கொடுத்துள்ளார். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் என்னவென்று தெரிந்தால் அப்படியே ஷாக் ஆகிவிடுவீர்கள். புதுமுகம் புச்சு பாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், க்ரித்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். உப்பெனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் ஹீரோயின் க்ரித்தியின் அப்பாவாக நடிக்கிறாராம் விஜய் சேதுபதி.
[Image: vijaysethupathi-1560708198.jpg]
 


அப்பா
அந்த அப்பா கதாபாத்திரம் மிகவும் சுவராஸ்யமானதாக உள்ளதாம். அதனால் தான் துணிந்து ரிஸ்க் எடுக்க முடிவுசெய்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் இளைய மகன் தான் இந்த வைஷ்ணவ் தேஜ். உப்பெனா படம் மூலம் அவர் டோலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Like Reply
இயக்குனர் பாலாவுக்கு நேர்ந்த நிலை!

டிகர்கள் விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா ஆகியோர் இன்று முன்னணி நடிகர்களாக இருப்பதற்கு இயக்குனர் பாலா ஒரு முக்கியமான காரணம். பாலா இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், பரதேசி, நான் கடவுள் ஆகிய படங்கள் மக்கள் மத்தியிலும், சினிமா பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். இதில் பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் இவரது படங்களில் நடித்தால் அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் ஒரு கட்டத்தில் பாலா படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் போட்டி போட்டு கால் சீட் கொடுத்தனர். ஆனால் தற்போது அவரது இயக்கத்தில் வந்த படங்கள் எதுவும் சரியாக ஓடாத காரணத்தாலும், முன்பு மாதிரி பாலா படங்கள் தற்போது இல்லை என்பதாலும் அவரது படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வருகின்றன. 
 
[Image: 384.jpg]


இந்த நிலையில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகம் செய்து பாலா ரீமேக் செய்தார். ஆனால், பாலா இயக்கிய அந்தப் படம் தாங்கள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை என்று கூறி, தயாரிப்பு நிறுவனம் முழு படத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து புதிதாக படத்தை எடுத்தது. இப்படி, ஒரு பிரபல இயக்குனர் இயக்கிய படத்தை தரக்குறைவாக இருப்பதாகச் சொல்லி தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது தமிழ் சினிமா வரலாற்றில் இது முதல் முறை.  

இந்த சம்பவத்தால் பாலா அதிர்ச்சி அடைந்து அறிக்கை விட்டார். அதில் துருவின் எதிர்காலம் கருதி இந்த பிரச்சனையை நான் பெரிதாக்கவில்லை என்று கூறினார். இதனையடுத்து பாலா ஆர்யாவை வைத்து படம் எடுக்க பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் ஆர்யாவும் கால்சீட் இன்னும் தரவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இயக்குனர் பாலா தற்போது வரை எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வீடியோ விளம்பர சர்ச்சை: ராதிகா - வரலட்சுமிக்கு விஷால் பதிலடி

[Image: pjimagejpg]

வீடியோ விளம்பர சர்ச்சை தொடர்பாக ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரின் அறிக்கைக்கு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முறை நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து, பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி களமிறங்குகிறது. இரு அணிகளுமே தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்
பாண்டவர் அணியை இணையத்தில் விளம்பரப்படுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சரத்குமார், ராதாரவி இருவரையும் கடுமையாக சாடியிருந்தார்கள். இருவரது சுயநலத்தால், நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரது முகமும் அந்த வீடியோ பதிவில் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ பதிவு வைரலாக பரவத் தொடங்கியது. இந்த வீடியோ பதிவு தொடர்பாக ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் விஷாலைக் கடுமையாக சாடியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 14) மாலை கமலைச் சந்தித்து ஆதரவு கோரியது பாண்டவர் அணி. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது வீடியோ விளம்பரம் தொடர்பாக ராதிகா மற்றும் வரலட்சுமி இருவரும் சாடியிருப்பது தொடர்பாக விஷாலிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு விஷால், “முந்தையத் தேர்தலில் ’நாங்கள் என்ன செய்யவில்லை’ என்று ராதிகா பேசினார். அதற்கான பதில் தான் அந்த வீடியோ. சும்மா ஏவி விடுவதற்கான வீடியோ அல்ல. நாங்கள் என்ன செய்தோமோ அதை வீடியோவில் காட்டியுள்ளோம். தவறு செய்திருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதைத்தான் செய்தோம். என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பது தான் அந்த வீடியோ. அதில் தவறில்லை.
வரலட்சுமி உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் ஒரு கருத்து உள்ளது. என்னிடம் சில விஷயங்களைக் கேட்டால், என் நண்பர்கள் மீது என்ன கோபம் என்பதை வெளிப்படையாகச் சொல்வேன். ஒவ்வொருவருக்கும் அவர்கள் நினைப்பதைச் சொல்வதற்கு உரிமையுள்ளது.
ஒரு விஷயம், காவல்துறையினர் ஒருவர் மீது சாதாரணமாக எஃப்.ஐ.ஆர் போடமாட்டார்கள். நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரணை செய்து அறிக்கை தர வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். அனைத்துமே நிரூபிக்கப்பட்டு தான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது” என்று பேசியுள்ளார் விஷால்.
மேலும், கமலுடனான சந்திப்பு குறித்து விஷால், “நடிகர் சங்கத் தேர்தல் என்றவுடன் ரஜினி சார், கமல் சாரைச் சந்திக்கும் போது புத்துணர்ச்சி, உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவொரு நல்ல தொடக்கமாக இருக்கும். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கமல் சாரின் ஆதரவோடு தான் பாண்டவர் அணியாக செயல்படத் தொடங்கினோம். ஜூன் 23-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்காக கமல் சாரின் ஆசிர்வாதம் வாங்கினோம். பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் நிற்கிறது. இன்னும் 6 மாதங்களில் கட்டிடம் முடியும் தருவாயில் இருக்கிறது.
எங்களுக்குள் பிரிவினை எல்லாம் கிடையாது. கலை நிகழ்ச்சி ஒட்டுமொத்த குடும்பமாக அனைத்து நடிகர்களும் ஒன்றாகச் சென்று, இவ்வளவு நிதி திரட்டியிருக்க மாட்டோம். ஓட்டுப் போட்டு முடித்தவுடன் அனைவரும் குடும்பமாகத்தான் பழகி வருகிறோம். ஆனால், அதில் தேர்தல் என்பது மிகவும் முக்கியம்.
நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பதை உறுப்பினர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மருத்துவ உதவி, கல்வி உதவி, நிதியுதவி, பென்ஷன் என உதவிகள் செய்கிறோம். இந்தக் கட்டிடம் ஏன் நிற்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு எத்தனையோ பேர் தடை போட்டார்கள். அதனால் எத்தனை நாள் பணிகள் நின்றது என்பது தெரியும்” என்று விஷால் கூறினார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]'ஆமாங்க, எனக்கு கல்யாணம் ஆகிருச்சு': பிக்பாஸ் வைஷ்ணவி!
[color=var(--content-color)]பிர்தோஸ் . அ[/color]
[color=var(--title-color)]'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான வைஷ்ணவிக்கு திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளது.[/color]
[/color]
[Image: vikatan%2F2019-06%2F9c5cd7b8-7db5-4b38-b...2Ccompress][color=var(--meta-color)]பிக் பாஸ் வைஷ்ணவி[/color]
[color=var(--content-color)]'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. எழுத்தாளர் சாவியின் பேத்தியான இவர் இந்த நிகழ்ச்சியின் பாதியிலியே எலிமென்ட் ஆனாலும் நிகழ்ச்சியின் வாயிலாக இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. இந்நிலையில் இவர் தற்போது தனது காதலரை கணவராக கரம்பிடித்துள்ளார். இவரது திருமணம் குறித்து வைஷ்ணவியிடம் பேசினேன்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-06%2Fa0cf1f16-4424-4fdc-9...2Ccompress]வைஷ்ணவி[/color]
[color=var(--content-color)]'' என்னோட நண்பர்கள் அனைவரும் போன் பண்ணி 'உனக்கு திருமணம் நடந்திருச்சாமே'னு கேட்குறாங்க. ஆமாங்க நான் திருமணம் பண்ணிக்கிட்டேன். என்னோட கணவர் பெயர் அஞ்சன். பைலட்டா இருக்கார். எனக்கு இவரை மூன்று வருடங்களாகத் தெரியும். எங்க ரெண்டு பேருக்கும் இடையே நிறைய மியூச்சுவல் நண்பர்கள் இருந்தாங்க. அவங்க மூலமாகத்தான் இவரை ஒரு பார்ட்டியில் சந்திச்சேன். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. வீட்டுல சொன்னோம் அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. அதனால கோவிலில் எங்க இரண்டு வீட்டார் பெற்றோர்கள் முன்னிலையில் எங்க திருமணம் நடந்தது. அதிகமான நண்பர்கள் யாருக்கும் சொல்லல. பிக் பாஸ் ரம்யா என்னோட திருமண நிகழ்வுகளில் கலந்துக்கிட்டாங்க. சந்தோஷமா வாழ்க்கை இருக்கு.'' என்றவரிடம் விரைவில் ஆரம்பமாக போகும் 'பிக் பாஸ்' குறித்து கேட்டால்,[/color]
[color=var(--content-color)]'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொடர்ந்து இதுவரைக்கும் பார்த்தது இல்லை. நான் கலந்துக்கிட்ட சீசன் 2கூட நான் பார்க்கல. இப்போ ஆரம்பமாக போற சீசனும் பார்க்க மாட்டேன். ஆனா, ட்விட்டரில் 'பிக் பாஸ்' பற்றி யாரெல்லாம் என்ன பேசுறாங்க, கருத்து சொல்றாங்கனு கண்டிப்பா பார்ப்பேன்.'' என்று சிரிக்கிறார் வைஷ்ணவி.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அஜித்தை தொடர்ந்து ரஜினியுடன் மோதும் விஜய்; சரவெடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினி உடன் நடிகர் விஜய் நேரடியாக மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

[Image: rajini-vijay.jpg]அஜித்தை தொடர்ந்து ரஜினியுடன் மோதும் விஜய்; சரவெடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
சமீபத்தில் ரஜினியின் ’பேட்ட’ படமும், அஜித்தின் ’விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இது சினிமா உலகில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்பட்டது. இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், ரசிகர்கள் வசூல் கணக்கில் சண்டை போட்டுக் கொண்டனர். 

தமிழகத்தில் விஸ்வாசமும், வெளிநாடுகளில் பேட்டையும், அதிக வசூலைக் குவித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ரஜினிவிஜய் படங்கள் அடுத்து மோதுவதாக தகவல் வந்துள்ளது. 

ரஜினி ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ’தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வரும் 2020 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் தற்போது அட்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது. இதனால் ரஜினியுடன் விஜய் மோதும் நிலை உண்டாகியுள்ளது. இந்த விஷயம் இப்போது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே இதற்குமுன் ஒருமுறை ரஜினி, விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டியை சந்தித்துள்ளன. ’சந்திரமுகி’ வெளியான அதே நாளில், விஜய் நடித்த ’சச்சின்’ படம் வெளியானது. சந்திரமுகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த முறை யாருடைய படம் ஜெயிக்கப் போகிறது. ரசிகர்கள் இதை எவ்வாறு அணுகுவார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது அரிதாகி விட்டது. வியாபார காரணங்களுக்காக பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதை விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் விரும்புவதில்லை.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஜேம்ஸ் கேமரூன் தயாரிக்கும் ’டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’
[Image: terminator-dark-fate-gabriel-luna-600x273jpg]

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பில் ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அர்னால்ட் நடித்து வெளியான படம் ’டெர்மினேட்டர்’. 1984 ஆம் ஆண்டு வெளியான இப்படம், உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு ‘டெர்மினேட்டர்’ படத்தின் இரண்டாம் பாகமான ’ஜட்ஜ்மென்ட் டே’ படம் வெளியானது. இதையும் ஜேம்ஸ் கேமரூனே இயக்கினார். முதல் பாகத்தைத் தாண்டி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது
இன்றுவரை வெளியான சிறந்த ஹாலிவுட் படங்களைப் பட்டியலிட்டால், அதில், ‘ஜட்ஜ்மென்ட் டே’ தவறாமல் இடம்பெறும். இதற்குப் பிறகு வெளியான ‘டெர்மினேட்டர் 3 - ரைஸ் ஆஃப் தி மெஷின்’, ‘டெர்மினேட்டர் சால்வேஷன்’,  ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ ஆகிய படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ‘ஜட்ஜ்மென்ட் டே’ படத்துக்குப் பிறகு வெளியான டெர்மினேட்டர் படங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கவில்லை.
இந்நிலையில், நேற்று டெர்மினேட்டர் பட வரிசையில் ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்தப் படத்தை, முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தயாரித்துள்ளார். ‘டெட்பூல்’ படத்தை இயக்கிய டிம் மில்லர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
திரை விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு
[Image: 8c01e52aP2349612mrjpg]

விக்ராந்தின் மகள் காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறன் குழந்தை. அவளது அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால், நண்பர் சுசீந்திரன் மற்றும் இருவருடன் சேர்ந்து ஒரு வங்கியில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்புகிறார் விக்ராந்த். இவர்கள் 4 பேரையும் காவல் உயர் அதிகாரி மிஷ்கின் தனது போலீஸ் பட்டாளத்துடன் துரத்து கிறார். கொள்ளையரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட, எஞ்சிய மூவரும் அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்துவிடுகின்றனர். அவர்களை சிறப்பு கமாண்டோ படை, ராணு வம் சுற்றிவளைக்கிறது. நெரிசலான குடியிருப்புக்குள் கிளைமாக்ஸ் வரை போக்கு காட்டும் கொள்ளை யர்கள் போலீஸிடம் பிடிபட்டார்களா? விக்ராந்த் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததா? அந்த குடி யிருப்புக்குள் உண்மையிலேயே பின்னப்படும் சதிவலைகள் என்ன? அதை மிஷ்கின் எவ்வாறு கிளை மாக்ஸில் அவிழ்க்கிறார் என்பது மீதிக் கதை.
ஆங்கில ஆக்சன் திரில்லர் படப் பாணியில் தமிழில் ஒரு படம் கொடுக்க இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா முயற்சித்திருக்கிறார். அதற் கேற்ப, தொடக்கக் காட்சிகளும் பரபரப்பாக இருக்கின்றன. அதன் பிறகு லாஜிக் பற்றிய கவலையே இன்றி கட்டமைக்கப்பட்ட காட்சி அமைப்புகளும், சுவாரஸ்யமின்றி திரைக்கதை சொதப்பலாக நகர்வதும் ஒரு கட்டத்தில் ஆயாசத்தை தரு கிறது. கொள்ளையருக்கும், போலீ ஸாருக்கும் இடையில் பொழுது போக்கர்கள்போல வந்துசெல்லும் போராளிகள், பெண் பத்திரிகை யாளர் (கதாநாயகி) ஆகி யோர் திரைக்கதைக்குள் நுழைக் கப்பட்டதே வீண் என்று தோன்று கிறது.
ஆரம்பத்தில் இருந்து கிளை மாக்ஸ் வரை போலீஸாரும், கொள்ளையரும் மாறி மாறி சுட்டுக்கொண்டு, படத் தலைப்புக்கு நியாயம் சேர்க்கிறார்கள். கொள்ளை யரை போலீஸார் துரத்தும் சேஸிங் காட்சிகள் ஓரளவு நன்றாக எடுக் கப்பட்டுள்ளன. 
காவல் அதிகாரியாக கனத்த உடலுடன் உருட்டி மிரட்டி நடித் திருக்கிறார் மிஷ்கின். அதிரடி யாக கொள்ளையருடன் சண்டை போடுகிறார். விக்ராந்த் பொருத்த மான தேர்வு. நாயகி அதுல்யா ரவியும் பளிச்சென பார்வையாளர்களை ஈர்க் கிறார். முதல்முறையாக நடித்திருக் கும் இயக்குநர் சுசீந்திரனும் தேறி விடுகிறார்.
படத்தின் மிகப்பெரிய ஆறுதல், பாடல்கள் ஏதுமற்ற பின்னணி இசை. அதை திறம்பட வழங்கியிருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். அதேபோல ஓர் ஆக்சன் திரில்லர் கதைக் களத் துக்கு தேவையான துடிப்பான ஒளிப்பதிவை சாத்தியமாக்கித் தந் திருக்கிறார் சுஜித் சாரங். சண்டை மற்றும் ஆக்சன் காட்சிகளை ஈர்க் கும் வகையில் வடிவமைத்த தினேஷ் காசியின் பங்களிப்பும் படத்தை தாங்கிப் பிடிக்கிறது.
மிஷ்கின் ஆபரேஷனின் மர்ம முடிச்சுகள் அவிழ்கிற கிளைமாக்ஸ் காட்சி, பார்வையாளர்களிடம் ஒரு வித ஆச்சரியத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ‘இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா!’ என்று பெருமூச்சு விடவைக்கிறது.
மாறுபட்ட ஆக்சன் கதை, ஈர்க்கும் விதமான டைட்டில், பரபரப்பான தொடக்கம் ஆகிய நல்ல அம்சங்கள் கையில் இருந்தும், திரைக்கதையில் இயக்குநர் கோட்டைவிட்டதால், பார்வையாளர்களின் மனதைப் பிடிக்க தவறிவிடுகிறது படம்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று
[Image: NTLRG_20190618180703325059.jpg]

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சிந்துபாத். அவருடன் அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா, சூர்யா விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


நவீன ராமாயண கதையில் உருவாகியுள்ள இந்த படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியிருக்கிறது. ஜூன் 21-ந்தேதி திரைக்கு வரும் இந்தபடம் தணிக்கை சென்றது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளன
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஏன்னா ஆட்டம்… குடியும் குத்தனமாக ஒரு வருட கால நட்பை கொண்டாடிய ஐஸூ, யாஷு 

[Image: maxresdefault-3-7.jpg?resize=696%2C391&ssl=1]
ஒரு வருட காலமாக தொடர்ந்த நட்பை குடியும் குத்தனமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் பிக் பாஸ் ஐஷுவும் யாஷுவும்.
One Year Of Bigg Boss 2 Tamil :
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலமாக மக்களின் மத்தியில் ஆழமாக பதிந்து போனவர்கள் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக தோழிகளாக ஒன்றிணைந்த இவரால் 1 வருடமாகியும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் ஒன்றாகவே சுற்றி திரிந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அந்த புகைப்படங்களும் வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
யாரவது ஹிந்திய வெறுக்கறன்னு கமன்ட் பண்ணா நீக்கிடுவேன்.! கோபப்பட்ட வைஷ்ணவி.!


[Image: Vaishnavi-2-696x392.jpg]

பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் பெரும் புகழையும் ஏற்படுத்தி தந்துள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பார்வையாளர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு பின்னர் தனது பெயரை படு டேமேஜ் செய்து கொண்டவர் வைஷ்ணவி தான்.

பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஆர் ஜேவாக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. வைஷ்ணவி, அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்துவந்தார் . அஞ்சான், விமான ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்தனர்
இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீண்ட வருட காதலரான அஞ்சானை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைஷ்ணவி.மேலும் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டார் வைஷ்ணவி.
[Image: Vaishnavi-1.jpg]
அந்த வீடியோவில் இருவரும் கேக்கை மாறி மாறி ஊட்டிவிட அவர்கள் அருகில் இருந்தவர்கள் இந்தியில் ஏதோ பேசுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கடுமையாக வலுத்து வருகிறது. இதனை நன்றாக புரிந்துகொண்டுள்ள வைஷ்ணவி, இந்த பதிவில் ‘யாராவது கமெண்டில் ”இந்தியை வெறுக்கிறேன்'(i hate hindi ) என்று பதிவிட்டால் அதனை நான் கண்டிப்பாக டெலீட் செய்து விடுவேன்.
நானும் இந்தி தினிப்பிற்கு எதிரானவள்தான். ஆனால், வேறு ஒரு மொழியைப் பேசுவதில் எந்த தவறும் இல்லை. என்னுடைய குடும்பத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று அனைத்தையும் பேசுவார்கள். ஒரு மொழியை விட மற்றொரு மொழி சிறப்பானது அல்ல. ஆனால், மக்களை தெரியாத மொழியை பேச வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தான் தவறு. வாழு வாழ விடு என்று பதிவிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
`போஸ்டரை அகற்றுங்கள்; மன்னிப்பு கேளுங்கள்!'- ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

சமீபத்தில் வெளியான `சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் போஸ்டரில், மகாத்மா காந்தியின் படத்தை அவமதித்திருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
[Image: Ranipet_11394.jpeg]
மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி ஆகியோர் நடித்திருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படம், கடந்த 14-ம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தை ‘தமிழுக்கு எண்-1 ஐ அழுத்தவும்’ படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க சண்டை, துப்பாக்கிச்சூடு என த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டரில், மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றிருக்கிறது. அதில், துப்பாக்கிக் குண்டுகள் பாய்வதைப்போன்று தெரிவதால், 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.


[Image: Mysskin_Suttu_Pidikka_Utharavu_11055.jpg]
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள ராஜேஸ்வரி திரையரங்கம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் போஸ்டரில் வன்முறைக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அதில், எதற்காக மகாத்மாவின் படத்தையும், அவர்மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்வதைப் போன்றும் காட்டியிருக்கிறார்கள்? அதுமட்டுமின்றி, இந்திய ரூபாய் நோட்டையும் அவமதித்திருக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. சுட்டுப்பிடிக்க படக்குழுவினர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தப் படம் வெளியான திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ள போஸ்டர்களை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு!

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

[Image: karthi.jpg]
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு!
மனு நிராகரிப்பு: 

பாண்டவர் அணியில் போன முறை போட்டியிட்டவர்கள் அதே பதவிகளுக்கு இந்த முறையும் போட்டியிடுகின்றனர். மனுத்தாக்கல முடிந்து மனு பரிசீலனையின் போது ஐசரி கணேஷ் அணியை சேர்ந்த நடிகர் விமல், நடிகை ஆர்த்தி , நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்பட்டது. 

மனு செய்தவர்கள் அல்லது மனுவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டவர்கள் சந்தா தொகை கட்டாவிடில் அவர்களது மனு நிராகரிப்படும். அந்த வகையில்தான் இவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

ரஜினி, கமல் ஆதரவு:

இரு அணியினரும் ரஜினி, கமல், சரத்குமார் ஆகியோரது ஆதரவை கோரி வந்தனர். அப்போது விஷாலின் பாண்டவர் அணிக்கு கமல் ஹாசன் ஆதரவு அளிப்பதாகவும், பாக்யராஜ் அணிக்கு ரஜினி ஆதரவு தருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இது உண்மையில்லை என்று விஷால் கூறினார். 

எஸ் வி சேகர் 

எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில், நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் அன்று காலை 10.30 மணிக்கு எஸ்வி சேகர் தனது நாடகத்தை நடத்த அனுமதி வாங்கிய ஒப்புகைசீட்டை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அப்படியிருக்கும் போது எப்படி அன்று நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

சென்னை உயர்நீதிமன்றம்
 

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு வழங்கக் கோரி விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடந்தால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். இதனால், அங்கு நடிகர் சங்கத் தேர்தலை நடத்தக் கூடாது. அதற்கு பதிலாக கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் என்று இது போன்ற ஒரு இடத்தை தேர்வு செய்யவும். மேலும், நடிகர் சங்கத் தேர்தலை விட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம் என்று உத்தரவிட்டிருந்தது. 

ஆளுநர் சந்திப்பு
 

நடிகர் சங்கத் தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி விஷாலின் பாண்டவர் அணியினர் இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். 

ராதாரவி

ஏற்கனவே நடிகர் சங்கத் தேர்தல் நடக்கவே நடக்காது என்று கூறியிருந்த ராதாரவி, விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே தவறானவை. சட்டம் தன கடமையைச் செய்யும் என்று தற்போது கூறியுள்ளார். 


நடிகர் சங்கத் தேர்தல் ரத்து 

பாண்டவர் அணியின் ஆளுநரை சந்தித்து வந்த நிலையில், தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். 


[Image: Master.jpg]




[Image: Master.jpg]





[Image: Master.jpg]





Quote:[Image: wGQQV40k_normal.jpg]

[/url]Johnson PRO@johnsoncinepro





#pandavarani campaign now at Salem . #nadigarsangam #nadigarsangamelection2019 #siaa #siaaelection2019


11
12:38 PM - Jun 18, 2019 · Egmore Nungambakkam, India
Twitter Ads info and privacy
[Image: D9U3WpbU4AA3GWL?format=jpg&name=360x360][Image: D9U3WpaUwAA53Iz?format=jpg&name=360x360][Image: D9U3WpjUcAAMJ4G?format=jpg&name=360x360][Image: D9U3WpkUIAA_L-m?format=jpg&name=360x360]
[color][font]

See Johnson PRO's other Tweets

[url=https://twitter.com/johnsoncinepro]


[/font][/color]
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் சுவாமி சங்கர்தாஸ் அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
“இருக்கு ஆனா இல்ல”.. அமலாபாலின் ‘ஆடை’யில்லா படத்தை வைத்து ஆராய்ச்சி செய்யும் ரசிகர்கள்!
சென்னை: படத்தின் தலைப்பில் மட்டும் ஆடையை வைத்து விட்டு, படம் முழுக்க அமலாபாலை ஆடையில்லாமல் பிறந்தமேனியாக அலையவிட்டிருக்கிறார் போல இயக்குநர்.
திருமண முறிவுக்குப் பின் மீண்டும் தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து ஆடை, அதோ அந்த பறவை போல மற்றும் சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஆடை படத்தை மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கி இருக்கிறார். வீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. அதில் அமலாபால் உடலில் ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு காயங்களுடன் நின்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.


[Image: aadai-1560920180.jpg]

ஆடை டீசர்:
இந்நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதிலும், கடைசிக் காட்சியில் அமலாபால் ஆடையின்றி இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பிறந்தமேனியாக அமர்ந்திருக்கும் அமலாபால், யாருக்கோ பயந்து கூனிக் குறுகி அமர்ந்திருப்பது போன்று அதில் காட்சிகள் உள்ளது.
[Image: aadai322-1560920173.jpg]
 
[color][size][font]
ஆடையில்லாமல் அமலாபால்:
பார்ப்பதற்கு அதில் அமலாபால் ஆடையில்லாமல் அமர்ந்திருப்பது போன்று இருந்தாலும், உண்மையில் அவர் ஸ்கின் டிரெஸ் அணிந்திருக்கிறார் என்பது ரசிகர்களின் வாதம். மற்றும் சிலரோ இல்லையில்லை நிஜமாகவே அமலாபால் தத்ரூபமாக வரவேண்டும் என ஆடையில்லாமல் நடித்திருப்பதாக சூடம் அடிக்காத குறையாக சத்தியம் செய்கின்றனர்.

[Image: aadai7889-1560920217.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
ரசிகர்கள் ஆராய்ச்சி:
இப்படியாக, டீசர் ஒருபுறம் வைரலாகிக் கொண்டிருக்க, அமலாபாலின் ஆடையில்லாக் காட்சிகளை வைத்து ரசிகர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். எது எப்படியோ பர்ஸ்ட் லுக் மூலம் படத்தைப் பற்றி பேச வைத்த படக்குழு, டீசரில் இன்னும் அதனை ஆழமாக்கியுள்ளனர்.


எதிர்பார்ப்பு:
ஏற்கனவே, இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு 'A'சான்றிதழ் அளித்துள்ளது. பர்ஸ்ட் லுக், டீசர், போஸ்டர்கள் என எல்லாவற்றிலும் அமலாபால் ஆடையில்லாமல் தான் இருக்கிறது. எனவே படத்தில் இன்னும் காட்சிகள் எப்படியெல்லாம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர்

[Image: saravanan1.jpg]
 

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான சரவணன், விரைவில் தமிழ்ப் படமொன்றில் நடிக்கவுள்ளார். 


சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உல்லாசம், விசில் ஆகிய படங்களை இருவரும் இயக்கியுள்ளார்கள். 

தான் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை சரவணனே தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று சமீபத்தில் பேட்டியளித்தார் சரவணன். எனினும் இப்படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும்போது முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். 

[Image: saravanan_901.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால்


[Image: 201906200553477679_20-Days-shoting-Witho...SECVPF.gif]


ஆடை படத்தில் அமலாபால் அறைகுறை ஆடையில் இருக்கும் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியான படத்தின் டிரெய்லரில் அமலாபால் நிர்வாணமாக தோன்றி ரசிகர்களை மேலும் அதிர வைத்துள்ளார். அமலாபாலை காணவில்லை என்று அவரது அம்மா போலீசில் புகார் அளிப்பதுபோல் டிரெய்லர் தொடங்குகிறது.
பிறகு போலீஸ் வாகனங்கள் தேடுதல் வேட்டையில் பரபரக்கின்றன. எல்லோரும் உயரமான கட்டிடத்தை பார்த்தபடி நிற்கின்றனர். அப்போது அமலாபால் உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார். தமிழ் பட வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த நடிகையும் நடித்தது இல்லை என்கின்றனர்.

நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். சமந்தாவும் பாராட்டி இருக்கிறார். ஆடை படத்தை ரத்ன குமார் இயக்கி உள்ளார். தணிக்கை குழுவினர் படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

படம் குறித்து டைரக்டர் ரத்ன குமார் கூறும்போது, “தனிமனித சுதந்திரம் மற்றும் சுய ஒழுக்கத்தை ஆடை படம் பேசுகிறது. அமலாபால் ஆடை இல்லாமல் தோன்றுவது சிறிது நேரம்தான். அதை தாண்டி படத்தில் பல விஷயங்கள் உள்ளன.

பைக் ஓட்டுதல் சண்டை காட்சிகள் என்று கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அமலாபால் திரையுலக வாழ்க்கையில் ஆடை முக்கிய படமாக இருக்கும்” என்றார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பதிவாளருக்கு அதிகாரமில்லை: விஷால் மனு

[Image: Tamil_News_large_2302192.jpg]

சென்னை: நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் விஷால் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், வரும், 23ல் நடக்க இருந்தது. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து, தென்சென்னை மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார். இதன் வாயிலாக, சங்கங்கள் பதிவு சட்ட விதிகள் மற்றும், பதிவுத்துறை தலைவர் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதுஇது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு , நடிகர் சங்கத்திற்கு பாதுகாப்பு வழங்காத அரசு பதிவாளர் மூலம் நிறுத்தியுள்ளது. தேர்தலை நிறுத்தியதால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் சட்டபடி தேர்தல் நடைமுறையில் பதிவாளர் தலையிட அதிகாரமில்லை. எனவே பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு விஷால் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நாளை ( ஜூன் 21) விசாரணைக்கு வருகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 24 Guest(s)