Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#81
Super fantastic update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
Excellent
Like Reply
#83
Super update bro,  regular'a update podunga nanba
Like Reply
#84
arumaiyana update bro,regular update pota padikura flow nalla irukum bro
Like Reply
#85
Good updates
Like Reply
#86
Nice update
Like Reply
#87
Awesome updates bro
Like Reply
#88
திமிருக்கு மறுபெயர் நீதானே...!

6


அடுத்த நாள் காலை தினேஷ் சொன்னதுபோல் ஒரு பேப்பரில் எழுதி அதை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றேன். மதுமிதா எப்போது வருவாள் என்று தினேஷம் நானும் பெண்கள் வரிசையில் இருந்த சைக்கிள்களை பார்த்துக்கொண்டிருந்தோம்.
 
சிறிது நேரத்தில் அவள் பள்ளிக்கு வந்தாள்! சைக்கிளை நிறுத்திவிட்டு நாங்கள் இருப்பதை கவனிக்காமல் வகுப்பறைக்கு சென்றாள்.
 
"விக்ரம்! அவ போயிட்டா! சீக்கிரம் போயி வச்சுட்டு வாடா!"
 
"டேய்! நான் மட்டும் எப்படிடா தனியா போயி வைக்குறது? பயமா இருக்கு! நீயும் வாடா!"
 
"இதுக்கே இப்படி பயப்படுற அப்புறம் எப்படி பிரச்சனைய சரி பண்றது? என்னால ஐடியா மட்டும்தான் கொடுக்க முடியும்! நீ தனியாதான் எல்லாத்தையும் செய்யனும்!"
 
"அட போடா!" என்று எரிச்சலுடன் அவளுடைய சைக்கிள் அருகே சென்றேன்.
 
யாரும் என்னை பார்க்கவில்லை என்று உறுதி செய்துக்கொண்டு மதுமிதாவின் சைக்கிளின் முன்பக்கத்தில் இருக்கும் கூடையில் அந்த பேப்பரை சொருகி வைத்துவிட்டு வேகமாக வெளியில் வந்தேன்.
 
அப்போது சைக்கிளில் வந்த ரம்யாவும் காயத்ரியும் என் அருகில் வந்து நிறுத்தினர்.
 
இப்போது என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றேன்.
 
"விக்ரம்! இங்க என்னடா பண்ணிட்டு இருக்கே?" ரம்யா கேட்டாள்.
 
எனக்கு பேச்சு வராமல் திக்கி திணறினேன்.
 
"ஒ...ன்னும் இ...ல்ல ரம்...யா உங்களதான் பாக்க வந்தேன்!"
 
"எங்கள பாக்க வந்தியா எதுக்கு?"
 
காயத்ரி கேள்வி கேட்கும்போதே தினேஷ் எங்கள் அருகில் வந்தான்.
 
"இப்பதான் நானும் விக்ரமும் வந்தோம்! சரி நீங்களும் வந்துடுவீங்க ஒன்னா கிளாஸுக்கு போகலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்!" என்று சமாளித்தான்.
 
"ஓ அப்படியா!" என்று சந்தேகத்துடன் பார்த்தாள் காயத்ரி.
 
"அப்படிதாண்டி குண்டு பூசணிக்கா!" என்று தினேஷ் அவளை வம்புக்கு இழுத்தான்.
 
உடனே காயத்ரி வேகமாக சைக்கிளை நிறுத்திவிட்டு தினேஷ் தலையில் நங்க் என்று குட்டினாள்.
 
"ஹே வலிக்குதுடி பூசணி!" என்று தலையை தேய்த்துக்கொண்டு இருந்தான் தினேஷ். எனக்கு இதையெல்லாம் பார்க்கும்போது சிரிப்பாக வந்தது.
 
"வாங்க கிளாஸுக்கு போகலாம்" என்று அனைவரையும் அழைத்தேன்.
 
காயத்ரியும் தினேஷம் சண்டையை நிறுத்திவிட்டு என்னை பார்த்து சிரித்தனர்.
 
ஆனால்! ரம்யா சைக்கிளை நிறுத்தியா பிறகு என்னை பார்த்து புன்னகைத்துவிட்டு அமைதியாகவே இருந்தாள்.
 
நாங்கள் சொன்னதை நம்பினாளா! இல்லையா! என்று எனக்கு புரியவில்லை.
 
அதன்பின் இருவருடனும் சகஜமாக பேசிக்கொண்டே நானும் தினேஷம் வகுப்பறைக்குள் நுழைந்தோம்.
 
அங்கே ஏற்கனவே வெங்கட்டும் கார்த்தியும் வந்திருந்தனர்! எங்களை பார்த்து கை அசைத்தனர்.
 
நாங்கள் இப்படி சிரித்து பேசிக்கொண்டு வருவதை பார்த்த மதுமிதா கோபத்துடன் என்னை முறைத்தாள்.
 
இனி என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பெஞ்சில் அமர்ந்தேன்.
 
நான் பயத்துடன் இருப்பதை கவனித்த தினேஷ் ஆறுதல் கூறினான்.
 
சிறிது நேரத்தில் ஆசிரியர் வந்து பாடத்தை ஆரம்பித்தார்.
 
நான் அனைத்தையும் மறந்து வகுப்பை நன்றாக கவனித்தேன்.

அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் எப்போதும் போல் முதல் ஆளாக மதுமிதா வகுப்பறையில் இருந்து கிளம்பினாள்.
 
நானும் தினேஷம் யாருக்கும் சந்தேகம் வராதவாறு வகுப்பில் இருந்து கிளம்பி என்ன செய்ய போகிறாள் என்ற பயத்துடன் சைக்கிள் ஸ்டாண்ட் சென்றோம்.
 
தூரத்தில் இருந்து அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்தோம்.
 
அவள் வேகமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்றுவிட்டாள்.
 
"டேய் விக்ரம்! என்னடா அவ கிளம்பி போயிட்டா? அவ பாக்குற மாதிரி அந்த பேப்பர் வச்சியா?"
 
"எல்லாம் கரெக்டாதான் வச்சேன்! அவ எப்படி பாக்காம போனானு புரியலையே! ஒரு வேள கீழே விழுந்து இருக்குமோ?"
 
"என்னடா இப்ப வந்து இப்படி சொல்றே! சரி வா அங்க போயி பாக்கலாம்!"
 
தினேஷ் என்னை மதுமிதா சைக்கிள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றான்.
 
வேகமாக சென்று கீழே தேடினோம்!
 
எங்கும் அந்த பேப்பர் கிடைக்கவில்லை!
 
திடீரென்று திரும்பி பார்த்த பொது அந்த பேப்பர் என்னுடைய கண்ணில் பட்டது.
 
அது அருகில் இருந்த சைக்கிள் கூடையில் சொருகி இருந்தது.
 
காலையில் யாரேனும் என்னை பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் வேறு ஒரு சைக்கிளில் தெரியாமல் வைத்துவிட்டேன் என்று அப்போது தான் புரிந்தது.
 
"மச்சி! வேற சைக்கிள்ல தெரியாம மாத்தி வச்சுட்டேன்டா!"
 
நான் இப்படி சொன்னதும் பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்த தினேஷ் என்னை பார்த்து முறைத்தான்.
 
"ஏன்டா இப்படி என்னைய சோதிக்கிற? நான் சொன்னத ஒழுங்காவே செய்ய மாட்டியா!"
 
"ஸாரி மச்சி! எல்லாத்துக்கும் இந்த பயம்தான் காரணம்" என்று சிரித்தேன்.
 
"ஒகே இன்னக்கி எதுவும் பண்ண முடியாது! முதல்ல இங்கருந்து கிளம்பலாம்! நாம நிக்கிறத வேற யாராச்சும் பாத்துட போறாங்க!" என்று எரிச்சலுடன் சொன்னான்.
 
உடனே இருவரும் வேகமாக அங்கிருந்து கிளம்பி சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றோம்.
 
வீட்டிற்கு சென்றதும் மதுமிதாவின் நினைவாகவே இருந்தது!
 
நாளை எப்படியாவது இந்த பேப்பரை அவளிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
 
அம்மாவிடம் நான் கண்காட்சியில் அறைந்த பெண் என்னுடன் படிக்கும் மதுமிதாதான் என்று கூறலாமா என்று யோசித்தேன். ஆனால் இப்போது கூறினால் நன்றாக இருக்காது.
 
என்னைப்பற்றி மதுமிதா நன்றாக புரிந்துக்கொண்டால் மட்டுமே அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.
 
அடுத்த நாள் பள்ளிக்கு சென்று எப்படி பேப்பரை வைப்பது என்று தினேஷிடம் கேட்டேன்.
 
"சைக்கிள்ல வைக்குறது இனிமே நடக்குற விஷயம் இல்ல! அதனால கொஞ்சம் பொறுமையா இரு வழி சொல்லுறேன்!"
 
சரி என்று நானும் பொறுமையாக இருந்தேன்.
 
அன்று மதியம் வகுப்பிற்கு வந்த ஆசிரியர் பாடம் எடுத்து முடித்ததும் என்னை அழைத்தார்.
 
"விக்ரம்! ஸ்டாப் ரூம்ல உங்களோட ரெகார்ட் நோட் இருக்கு! அத எடுத்து எல்லாருகிட்டயும் கொடுத்துடு!" என்று கூறிவிட்டு சென்றார்.
 
அப்போது என்னுடைய மனதில் ஒன்று உதித்தது!
 
இதை கவனித்துக் கொண்டிருந்த தினேஷம் என் மனதில் உள்ளதை புரிந்துக்கொண்டு "அதே மாதிரி செஞ்சிடு மச்சி" என்று சிரித்தான்.
 
நான் அந்த காகிதத்தை எடுத்துக்கொண்டு ஸ்டாப் ரூம் சென்றேன்.
 
அங்கே இருந்த ஆசிரியர்கள் எல்லோரும் வேறு வகுப்பிற்கு சென்ற காரணத்தால் அறை காலியாக இருந்தது.
 
அது நான் செய்யபோகும் வேலைக்கு மிகவும் வசதியாக இருந்தது.
 
எங்கள் ஆசிரியர் சொன்ன இடத்தில் ரெகார்ட் நோட் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
 
நான் மனதில் நினைத்தது போல் அதில் இருந்த மதுமிதாவின் நோட்டை தேடி எடுத்து முதல் பக்கத்தில் அந்த காகிதத்தை வைத்து மூடினேன்.
 
இப்போது அனைத்து நோட்டுகளையும் ஒன்றாக அடுக்கி வகுப்பறைக்கு எடுத்து சென்றேன்.
 
ஏதோ ஒரு வேகத்தில் அங்கு சென்றேன்! ஆனால் எப்படி அவளிடம் கொடுக்க போகிறேன் என்று கொஞ்சம் பதட்டமாக இருந்தது.
 
அதே பதட்டத்துடன் வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவருக்கும் நோட்டை எடுத்துக் கொடுத்தேன்.
 
இறுதியாக மதுமிதாவின் பெஞ்சில் அவளுடைய நோட்டை வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் என்னுடைய இடத்தில் வந்து அமர்ந்துக்கொண்டேன்.
 
"இப்பயாச்சும் ஒழுங்கா வச்சுட்டியா?" என்று தினேஷ் வினாவினான்.
 
"ஹ்ம்ம் வச்சுட்டேன்!".
 
என்னுடைய செயல் புரிந்து கார்த்தி என்னை பார்த்து புன்னகைத்தான். வெங்கட் எதை பற்றியும் கண்டுக்கொள்ளாமல் எதையோ படித்துக்கொண்டு இருந்தான்.
 
இப்போது மதுமிதா அந்த பேப்பரை பார்த்து என்ன செய்ய போகிறாள் என்று அச்சம் ஏற்பட்டது.
 
சில நொடிகளில் அடுத்த வகுப்பிற்கான ஆசிரியர் வந்து பாடம் எடுக்க தொடங்கினார். அதனால் இப்போது எதுவும் பிரச்சனை நடக்காது என்று நிம்மதியாக இருந்தேன்.
 
மாலை வகுப்புகள் அனைத்தும் முடிந்து மாணவர்கள் அனைவரும் கிளம்புவதற்கு தயாரானார்கள். நான் மாதுமிதா என்ன செய்ய போகிறாள் என்ற பயத்துடன் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
 
"மச்சி கிளம்பலாமாடா?" தினேஷ் கேட்டான்.
 
"டேய்! மதுமிதா என்ன செய்ய போறானு தெரியல! கொஞ்சம் அவ என்ன பண்ணுறானு பாத்து சொல்லுடா."
 
தினேஷ் மதுமிதாவை பார்த்துவிட்டு என்னிடம் பேசினான்.
 
"விக்ரம் அவ எதுமே நடக்காத மாதிரி பேக்கை எடுத்துகிட்டு கிளம்பிட்டு இருக்காடா."
 
"என்னடா சொல்லுறே?"என்று ஆச்சர்யத்துடன் அவளை பார்த்தேன்.
 
வழக்கம்போல் முதல் ஆளாக எழுந்து வகுப்பை விட்டு வெளியேறினாள்.
 
"தினேஷ் இப்ப என்னடா பண்ணுறது?"
 
"ஹ்ம்ம்... கொஞ்சம் பொறுமையா இருடா யோசிக்கிறேன்" என்று அவன் சொல்லும்போதே கார்த்தியும் வெங்கட்டும் எங்களிடம் இருந்து விடைபெற்றனர்.
 
"நீங்க இன்னும் கிளம்பலையா என்று ரம்யாவும் காயத்ரியும்" என் அருகில் வந்தார்கள்.
 
நான் வேறு வழி இல்லாமல் "இதோ கிளம்பியாச்சு" என்று கூறிவிட்டு தினேஷை அழைத்துக்கொண்டு வகுப்பைவிட்டு வெளியில் வந்தேன்.
 
அங்கே தூரத்தில் மதுமிதா எந்த வித சலனமும் இன்றி சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளியைவிட்டு வெளியில் சென்றாள்.
 
ஏன் இவள் இப்படி செய்கிறாள்? ஒருவேளை அந்த பேப்பரை பார்க்கவில்லையோ என்று நினைத்தேன்.
 
அவள் வீட்டிற்கு சென்று நோட்டை பார்த்த பிறகுதான் இதனுடைய முடிவு நமக்கு தெரியுமோ?" என்று குழப்பத்தில் இருந்தேன்.
 
ரம்யாவும் காயத்ரியும் எங்களுடன் சிறிது தூரம் நடந்து வந்து பேசிவிட்டு அவர்களும் வீட்டிற்கு சென்றனர்.
 
இப்போது தினேஷிடம் பேசினேன்.
 
"மச்சி! என்னடா அவகிட்ட இருந்து ஒரு ரியாக்சனும் இல்ல!"
 
"எனக்கும் அதான் புரியல!"
 
அவனும் குழப்பத்தில் இருந்தான்.
 
நான் என்ன செய்வது என்று புரியாமல் என் சைக்கிளுக்கு அருகில் வந்தேன்.
 
அங்கே நான் கண்ட காட்சி மிகுந்த பரவசம் அடைய செய்தது.
 
"டேய் மச்சி! இங்க வந்து பாருடா!” என்று சந்தோசத்தில் கத்தினேன்.
 
"என்னாச்சுடா?"
 
தினேஷ் அருகில் வந்தான்.
 
"நான் அவளோட நோட்ல வச்ச பேப்பர என்னோட சைக்கிள்ல சொருகி வச்சுட்டு போயிருக்கா"
 
அதை கையில் எடுத்தேன்.
 
"விக்ரம்! நான்தான் அப்போவே சொன்னேன்ல கண்டிப்பா அவ ரெஸ்பான்ஸ் பண்ணுவானு! ஸாரி சீக்கிரம் என்ன எழுதிருக்கானு எடுத்து படிடா" என்று ஆர்வத்துடன் சொன்னான்.
 
உடனே மகிழ்ச்சியுடன் பேப்பரை பிரித்து படித்தேன்.
 
"நீ திரும்ப இது மாதிரி பண்ணே செருப்பு பிஞ்சிடும்!”
 
அதில் எழுதி இருந்ததை பார்த்ததும் எனக்கு சட்டென்று முகம் சுருங்கி போனது.
 
அருகில் இருந்த தினேஷை பார்த்தேன்! அவன் விளக்கெண்ணை குடித்தது போல் முகத்தை வைத்திருந்தான்.
 
"ஏன்டா ஐடியாவா சொல்றே!" என்று முறைத்தேன்.
[+] 4 users Like feelmystory's post
Like Reply
#89
"ஸாரி மச்சி! டெக்னிகல் ப்ராப்லம்! என்கிட்ட இன்னொரு பிளான் இருக்கு அப்படி செய்யலாம்!"

"போடா நாயே! நான் ஏற்கனவே அசிங்கப்பட்டது பத்தலயா இன்னும் அவகிட்ட திட்டு வாங்கனுமா?"
 
"இல்ல மச்சி! கோபப்படாத! எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்! இன்னொருவாட்டி முயற்சி பண்ணி பாக்கலாம்!" என்று கெஞ்சினான்.
 
என்ன இவன் நமக்கு உதவி செய்வதற்கு இவ்வளவு தூரம் கெஞ்சுகிறானே என்று மனதில் தோன்றியது.
 
"சரி தினேஷ் வேற என்ன பண்ணலாம்?"
 
"இனி களத்துல நானே இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்!"
 
"என்னடா சொல்லுறே! நீ என்ன பண்ண போறே?"
 
"அத நீ நாளைக்கு நேர்லயே பாத்துக்கோ" என்று சஸ்பென்ஸுடன் சொன்னான்.
 
"டேய்! பிரச்சனை எதுவும் ஆகிடப்போகுது! என்னனு சொல்லுடா ப்ளீஸ்!"
 
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது! என்னால இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது!" என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்தான்.
 
நிச்சயம் என்னிடம் இவன் சொல்லமாட்டான் என்று எனக்கு புரிந்தது அதனால் நானும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றேன்.
 
அடுத்தநாள் இவன் என்ன செய்யபோகிறானோ என்ற பயத்துடன் பள்ளிக்கு வந்தேன்.
 
"டேய்! என்னதான் பண்ணபோற? ஒழுங்கா சொல்லுடா!" என்று அவனிடம் கேட்டேன்.
 
"மதியம் சொல்லுறேன்! இப்ப அமைதியா பாடத்தை கவனி" என்று எனக்கே அறிவுரை வழங்கினான்.
 
"எல்லாம் என்னோட நேரம்!" என்று கூறிவிட்டு அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தேன்.
 
மதியம் வந்தது! சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு வந்ததும் தினேஷ் என்னிடம் பேசினான்.
 
"மச்சி! ஈவினிங் கிளாஸ் முடிஞ்சதும் ரெடியா இருந்துக்கோ! நாமதான் முதல் ஆளா கிளம்பனும்!”
 
ஏதோ பெரிதாக ப்ளான் செய்திருக்கிறான் என்று புரிந்தது.
 
ஆனால் என்ன நடந்தாலும் சரி என்று அதற்கு ஒப்புக்கொண்டேன்.
 
அன்று மாலை வகுப்புகள் முடிந்தது.
 
மதுமிதா எழுந்து செல்வதற்கு முன்பு என்னை அவசரமாக தினேஷ் எழுப்பினான்.
 
நாங்கள் இருவரும் வெங்கட் கார்த்தியிடம் சொல்லிவிட்டு வேகமாக சைக்கிள் ஸ்டாண்ட் வந்து நின்றோம்.
 
இவன் என்ன செய்ய போகிறான் என்று தினேஷை பார்த்தேன்
 
அவன் பள்ளி கட்டிடத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
 
"தினேஷ்! இப்பவாச்சும் என்ன ப்ளான்னு சொல்லுடா!?"
 
"ஹ்ம்ம் சொல்றேன்! அவ இப்ப கிளாஸ்ல இருந்து வந்ததும் நான் போயி பேச போறேன்! "
 
"என்னடா பேச போற? எனக்கு ரொம்ப பயமா இருக்கு!"
 
"இப்ப பயந்துகிட்டு இருக்குறதுக்கு நேரம் இல்ல! அதோ பாரு அவ வந்துட்டா!"
 
நான் திரும்பி பார்த்தேன்,.
 
மதுமிதா வேகமாக நடந்து வந்தாள். எனக்கு கை கால்கள் எல்லாம் உதறியது.
 
"மச்சி! நான் வரலடா! நீ போயி பேசு!"
 
"நான்தான் பேச போறேன்! நீ சும்மா கூட வந்து நிக்க போற அவ்வளவு தான்!”
 
“அதான் எப்படிடா?”
 
“அதோ அந்த தூரத்துல ஒரு மரம் இருக்குல!”
 
“ஆமா இருக்கு!”
 
“அந்த மரத்துக்கு பக்கத்துல அவ வந்ததும் நிறுத்தி பேசனும்! அப்போதான் நாம பேசுறது வேறயாருக்கும் தெரியாது!" என்று தினேஷ் சொல்லிவிட்டு என்னுடைய பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் கையை பிடித்து இழுத்து சென்றான்.
 
நானும் அவனுடைய வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்து சென்றேன்.
 
நாங்கள் அவள் அருகில் செல்வதற்கும் அவள் அந்த மரத்தின் அருகே வருவதற்கும் சரியாக இருந்தது.
 
நானும் தினேஷும் அவளை வழி மறித்து எதிரே நின்றோம்.
 
திடீரென்று இப்படி செய்ததும் எங்கள் இருவரையும் எரிப்பது போன்ற ஒரு பார்வையுடன் பார்த்தாள்.
 
எனக்கு அடிவயிறு கலக்கியது.
 
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!"
 
தினேஷ்தான் அவளிடம் சொன்னான்.
 
அவள் என்ன பேசணும் என்பது போல் முறைத்துக்கொண்டே என்னிடம் கேட்டாள்.
 
"அய்யோ! நான் எதுவும் பேச வரல! இவன்தான் பேசணும்னு வந்தான்" என்று சொல்லிவிட்டு தரையை பார்த்த படி நின்றேன்.
 
இப்போது தினேஷ் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
 
"மதுமிதா வர வர உன்னோட திமிர் ரொம்ப அதிகமாதான் போயிட்டு இருக்கு! விக்ரம் ஏதோ தெரியாம உன்னைய அடிச்சுடான்! அதுக்காக நீ இப்படி பண்றதெல்லாம் நல்லாயில்ல!"
 
"என்ன விக்ரம்? ஆள கூட்டிக்கிட்டு வந்து ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியா?" என்று கேட்டாள்.
 
நான் மெதுவாக தலையை நிமிர்த்தி! இல்லை! என்பது போல் தலை அசைத்தேன்.
 
"ஹே! அவன பாத்து எதுக்கு இப்ப முறைச்சுட்டு இருக்கே? அவன் ஒன்னும் என்னைய கூட்டிட்டு வரல! எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு" என்றான் தினேஷ்.
 
"உன்கிட்ட இப்ப என்ன பேசணும்?" என்று கத்தினாள்.
 
"இப்படியெல்லாம் சத்தம் போட்டுட்டு இருக்காத! ஒழுங்கா விக்ரம மன்னிச்சுட்டு போ! டேய் விக்ரம் அவகிட்ட மன்னிப்பு கேளுடா!"
 
"ஸாரி மதுமிதா! என்னைய மன்னிச்சுடு" என்று தயக்கதுடன் சொன்னேன்.
 
அவள் என்னை ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு தினேஷிடம் பேசினாள்.
 
"மன்னிக்க முடியாது! என்னடா பண்ணுவ?"
 
"என்ன பண்ணுவேனா? அப்புறம் நடக்குறதே வேற!"
 
"என்னடா நடக்கும் அதையும்தான் பாக்குறேன்!"
 
"உன்னைய விக்ரம் திரும்ப அடிப்பான்!"
 
அவன் அப்படி சொன்னதும் மதுமிதா என்னை பார்த்தாள்
 
"டேய்! தினேஷ் சும்மா இருடா! மதுமிதா நான் அப்படில்லாம் பண்ண மாட்டேன்" என்றேன்.
 
இப்போது மதுமிதாவிடம் முன்பு இருந்த வேகம் இல்லை.
 
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
 
அவளுடைய கண்களில் இருந்து நீர் துளிகள் சொட்டு சொட்டாக கசிந்து தரையை நனைத்தது.
 
நானும் தினேஷும் அடுத்து பேச வார்த்தைகள் வராமல் அவளையே ஒரு வித கலக்கத்தோடு பார்த்தோம்.
 
அந்த அமைதியை கலைக்கும் விதமாக தினேஷ்தான் முதலில் பேசினான்.
 
"பாத்தியா மச்சி! இவளுக்கும் அழுகையெல்லாம் வருது! சரியான திமிரு பிடிச்சவ!"
 
அவன் சொன்ன அடுத்த நொடி! சப்பென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது.

தினேஷின் கன்னத்தில் மதுமிதா ஓங்கி அறைந்தாள்.
 
பிறகு கோபத்துடன் கண்களை துடைத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து நடந்து சென்றாள்.
 
நான் அவள் செல்லும் திசையை ஏக்கத்துடன் பார்த்தேன்.
 
"அய்யோ வலிக்குதே!"
 
தினேஷ் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு கத்தினான்.
 
"உனக்கு இதெல்லாம் தேவையா? நீ சும்மா மூடிட்டு இருந்துருக்கலாம்!" என்று கிண்டல் செய்தேன்.
 
"டேய்! காமெடி பண்ற நேராம இது! அவ என்னைய அடிச்சத வேற யாரும் பாக்கலையே?"
 
நான் சுற்றி முற்றி பார்த்துவிட்டு “அதெல்லாம் யாரும் பாக்கல...” என்று வாயை திறக்கும் நேரத்தில்தான் சற்று தூரத்தில் கவனித்தேன்.
 
அங்கே வெங்கட்! கார்த்தி! ரம்யா! காயத்ரி! நால்வரும் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
நான் உடனே பதற்றத்துடன் பேசினேன்.
 
"மச்சி! நீ அடி வாங்குனது நம்ம ப்ரெண்ட்ஸ் பாத்துட்டாங்க!"
 
"சூப்பர்டா!"
 
அவன் கன்னத்தை தடவியபடி சிரித்தான்.
 
நாங்கள் அவர்களை கவனித்தது தெரிந்ததும் எங்களை நோக்கி நடந்து வந்தனர்.
 
"தினேஷ்! என்னடா இப்படி சிரிக்கிறே? இப்ப என்னடா பண்ணுறது?"
 
"ஒன்னும் கவலைப்படாத மச்சி! நான் பாத்துகிறேன்!" என்று தெளிவாக கூறினான்.
 
அவர்கள் நால்வரும் எங்களிடம் வந்து மதுமிதா எதற்கு தினேஷை அடித்துவிட்டு சென்றாள் என்று வினாவினார்கள்.
 
நான் என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பி நின்றேன் அதனால் தினேஷ் பேச ஆரம்பித்தான்.
 
"எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க! என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன்!"
 
இப்போது அனைவரும் அமைதியாக தினேஷ் பேசுவதை கவனித்தனர். இவன் என்ன சொல்ல போகிறானோ என்ற பயத்தோடு அமைதியாக இருந்தேன்.
 
நான் அதிகமாக மார்க் வாங்கிய காரணத்தால் என்னுடைய சைக்கிள் டயரை மதுமிதா பஞ்சர் செய்தாள். அதை கேட்பதற்கு வந்த என்னை அடித்துவிட்டு சென்றாள் என்று கூறி சமாளித்தான்.
 
"இதுக்குதான் சைக்கிள் ஸ்டாண்ட்ல நேத்து பம்மிகிட்டு இருந்தியா?"
 
ரம்யா அவளது சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.
 
"என்ன பண்ணாலும் அவ திருந்தவே மாட்டா!" என்று காயத்ரி திட்டினாள்.
 
நான் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தேன்.
 
"ஏன்டா! அவகிட்ட பேச்சு வச்சுக்காத உனக்குதான் ஆபத்துன்னு பல தடவ சொல்லிருக்கேன்! எதுக்குடா இப்படி அடிவாங்கிட்டு இருக்கீங்க?"
 
வெங்கட் கோபத்தில் கொந்தளித்தான்.
 
"ஸாரி மச்சி! இனிமே பாத்து நடந்துக்குறோம்" என்றேன்.
 
"எப்படியோ பாத்து இருந்துகோங்க! நான் வீட்டுக்கு கிளம்புறேன்!"
 
"வெங்கி! நீ எதுவும் வீட்டுக்கு போயி இத பத்தி அவகிட்ட கேட்டுட்டு இருக்காதே."
 
"விக்ரம்! அவளா வந்து என்கிட்ட பேசுற வரைக்கும் நான் பேசவே மாட்டேன்! அதனால இத பத்தி நான் கேக்குறதுக்கு சான்ஸே இல்லடா!"
 
வெங்கி தெளிவுடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
 
அதன் பிறகு இங்கு இருந்த கார்த்திக்கு என்னுடைய நிலைமை புரிந்து அமைதியாக இருந்தான். ஆனால் ரம்யாவும் காயத்ரியும் வாய்க்கு வந்தபடி தொடர்ந்து மதுமிதாவை திட்டிக்கொண்டிருந்தனர்.
 
அது எனக்கு மனதில் சுருக் என்று முள் குத்தியதுபோல வலித்தது. இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன்.
 
ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை.
 
"ஹே! என்ன நடந்துச்சுன்னு தெரியாம இப்படி பேசாதீங்கடி!" என்று கத்தியே விட்டேன்.
 
நான் இப்படி சத்தம் போட்டதை கேட்டு ரம்யாவும் காயத்ரியும் பயத்துடன் அதிர்ந்து நின்றனர்.
 
தினேஷம் கார்த்தியும் நான் இப்படி சொன்னதை பார்த்து அமைதியாக இருந்தனர்.
 
"என்னடா நடந்துச்சு?"
 
காயத்ரி மிரட்சியுடன் கேட்டாள்.
 
"தினேஷுக்கும் கார்த்திக்கும் முன்னாடியே தெரியும்! உங்ககிட்ட சொல்லாம இருந்தது என்னோட தப்புதான் என்னைய மன்னிச்சுடுங்க!”
 
"டேய் மன்னிப்புல்லாம் கேக்காம என்ன நடந்துச்சுன்னு சீக்கிரம் சொல்லுடா"
 
ரம்யா அவசரப்படுத்தினாள்.
 
அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் எனக்கும் மதுமிதாவுக்கும் இடையே நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் கூறி முடித்தேன்.
 
இதை அனைத்தையும் கேட்ட இருவரும் உறைந்து போய் நின்றார்கள்.
 
மேலும் மதுமிதாவின் மீது அவர்களுக்கு திடீரென்று அனுதாபம் ஏற்பட்டது.
 
"பாவம்டி மதுமிதா! இது தெரியாம அவள ரொம்ப தான் திட்டிருக்கோம்!" என்றாள் ரம்யா.
 
"ஆமா ரம்யா! இனிமே அவள எதுவுமே சொல்ல கூடாது!" என்றாள் காயத்ரி.
 
"விக்ரம்! அவ கோபத்தை மாத்துறதுக்கு நாங்க ஹெல்ப் பண்ணுறோம்!" என்று இருவரும் உறுதி அளித்தனர்.
 
இருவரும் புரிந்துக்கொண்டதை நினைத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
 
"நீங்க எதுவும் ஹெல்ப் பண்ண வேணாம்! தினேஷ் பண்ணதுக்கே அடி கிடைச்சுருக்கு!" என்று தினேஷை பார்த்தேன்.
 
அவன் அமைதியாக இருந்தான்.
 
"இனிமே எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்! நீங்க யாரும் எதுவுமே பண்ண வேணாம்!" என்று உறுதியாக சொன்னேன்.
 
"சரிடா! ஆனா ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா கண்டிப்பா கேக்கணும்!" என்றாள் ரம்யா.
 
"ஹ்ம்ம்... இப்போதைக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க! இப்ப நான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரிய கூடாது! முக்கியமா வெங்கிக்கு தெரியவே கூடாது!" என்றேன்.

"புரியுதுடா வெங்கட் கிட்ட நாங்க கண்டிப்பா சொல்லவே மாட்டோம்" என்று காயத்ரி சொன்னாள். கூடவே ரம்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
 
அதன்பின் இருவரும் அங்கிருந்து என்னை விடைப்பெற்று சென்றனர். கார்த்தியும் எனக்கு ஆறுதலான சில வார்த்தைகளை சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
 
இப்போது நானும் தினேஷும் மட்டும்தான் இருந்தோம்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#90
"மச்சி கிளம்பலாமாடா?" என்ற கேட்டேன்.

"ஹ்ம்ம்..." என்று கூறிவிட்டு சைக்கிள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
 
“அவ அடிச்சதுனால சோகமா இருக்கான் போல கொஞ்சம் ஆறுதலா பேசலாம்” என்று அவனுடன் நடந்தேன்.
 
"தினேஷ்! அவ அடிச்சத நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காத! உன்னோட ப்ளான்தான் சொதப்பல் ஆகிருச்சு! இனிமே எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்!"
 
இப்படி சொன்னதும் நடந்துக்கொண்டிருந்தவன் சைக்கிள் ஸ்டாண்ட் வெளியே நின்று பேச ஆரம்பித்தான்.
 
"டேய்! அவ அடிச்சதுக்கெல்லாம் நான் ஒன்னும் கவலைப்படல! ஆனா திரும்ப திரும்ப நான் போட்ட பிளான் சொதப்பிடிச்சுன்னு சொல்லுறியே அது தான் எனக்கு கடுப்பா இருக்கு! உண்மையா சொல்லனும்னா நான் போட்ட ப்ளான் சக்சஸ்தான் ஆகிருக்கு!"
 
அவன் கோபத்துடன் என்னை பார்த்து கத்தினான்.
 
என்ன இவன் அவளிடம் அடி வாங்கிவிட்டு இப்படி சொல்கிறான் என்று ஆச்சர்யமாக இருந்தது.
 
"தினேஷ்! நிஜமாதான் சொல்றியா? ப்ளான் சக்சஸா?"
 
"என்னடா இப்படி சந்தேகத்தோட கேக்குறே! முதல்ல இருந்து சொன்னாதான் உன்னைய மாதிரி தத்திக்கெல்லாம் புரியும்!"
 
தினேஷ் தத்தி என்று சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவன் தொடர்ந்து சொல்வதை ஆர்வமுடன் கவனித்தேன்.
 
"இன்னக்கி அவளை அடிக்க வைக்குறதுதான் என்னோட பிளானே! அதுக்குதான் அவள கோபப்படுத்தி அடிக்க வச்சேன்! நான் நினைச்ச மாதிரியே என்னை மட்டும்தான் அவ அடிச்சா! உன்னைய அவ அடிக்கவே இல்லயே பாத்தியா?"
 
"ஆமா! என்னைய அடிக்கலயே!" என்று ஆச்சர்யப்பட்டேன்.
 
"உன் மேல கோபமே இருந்தாலும் அடிக்குறதுக்கு மட்டும் அவளுக்கு மனசே வரல பாத்தியா! அதுனாலதான் ப்ளான் சக்சஸ்னு சொன்னேன்!"
 
"சூப்பர் மச்சி! நீ எங்கயோ போயிட்டே! உன்னோட அறிவ பத்தி நினைச்சாலே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு" என்று அவனது இரு தோள்களையும் பற்றினேன்.
 
"ரொம்ப பாசத்துல பொங்காத! அடச்சீ கைய எடு!"
 
என்னை தள்ளிவிட்டு சைக்கிளை வெளியில் எடுத்து வந்தான்.
 
"ஏன் மச்சி இப்படி கோபப்படுறே? நம்மளோட அடுத்த ஆப்ரேசன் என்ன?"
 
சிரித்துக்கொண்டே நானும் சைக்கிளை எடுத்து வந்தேன்.
 
"கொஞ்ச நாளைக்கு மூடிகிட்டு இரு! நானே பொறுமையா சொல்லுறேன்!" என்று என்னுடைய வாயை அடைத்தான்.
 
அதனால் நானும் வாயை மூடிக்கொண்டு அவனுடன் சேர்ந்து சைக்கிளை இயக்கி வீட்டிற்கு சென்றேன்.
 
அந்த சம்பவத்திற்கு பிறகு வந்த நாட்களில் மதுமிதாவின் போக்கில் மாற்றம் தெரிந்தது.
 
முன்பெல்லாம் எப்போதும் என்னை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் என்னை சாதாரணமாகவே பார்த்தாள்.
 
அந்த பார்வையில் ஏக்கமும் தவிப்பும் இருந்தது மட்டும் எனக்கு நன்றாக தெரிந்தது. ஆனால் இதற்காக அவளிடம் மீண்டும் சென்று பேசலாம் என்று மனது நினைத்தாலும் தேவை இல்லாத பிரச்சனை வேண்டாம் என மூளை சொன்னது. பிறகு அவளை அதிகமாக கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்.
 
என்னைப்போல் தினேஷும் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தான்.
 
அவனுடைய அடுத்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்று என்னிடம் பேச வந்தான்.
 
"விக்ரம்! அடுத்த பிளான் என்னனு முடிவு பண்ணிட்டேன்!"
 
"சூப்பர் மச்சி! என்ன பிளான்டா?"
 
"சொல்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு! இருந்தாலும் இத நீ பண்ணா நல்லதுன்னு நினைக்குறேன்!"
 
"எதுவா இருந்தாலும் சொல்லுடா! நான் பண்ணுறதுக்கு ரெடி!"
 
"ஹ்ம்ம்... அடுத்த மாசம் எக்ஸாம் வருதுல்ல..."
 
"ஆமா வருது! அதுக்கு என்னடா?"
 
"நீ அந்த எக்ஸாம்ல மதுமிதாவ விட மார்க் கம்மியா வாங்கணும்!"
 
எனக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. பேசாமல் அமைதியாக இருந்தேன்.
 
"என்னடா சைலெண்டா இருக்கே? இத பண்ணறதுக்கு உனக்கு விருப்பம் இல்லையா?"
 
"ஆமாடா! எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு! இப்படி பண்ணா மதுமிதா மாறுவாளான்னு எனக்கு தெரியல! அதோட டீச்சர்ஸ் எல்லாரும் என்னைய தப்பா நினைக்க மாட்டாங்களா?"
 
“டேய்! அதெல்லாம் யாரும் உன்னைய தப்பா நினைக்க மாட்டாங்க! அதுக்கு அடுத்து வர்ற டெஸ்ட்ல நீ நல்ல மார்க் வாங்குனா இதை எல்லாத்தையும் மறந்துடுவாங்க!" என்று தைரியம் கூறினான்.
 
இந்த ஒருமுறை மட்டும்தான் மதிப்பெண் குறைவாக எடுக்க போகிறேன்.
 
அடுத்தமுறை விட்டதை பிடித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
 
"மச்சி! நீ சொன்ன ஒரே காரணத்துக்குதான் ஒத்துக்குறேன் எதாச்சும் தப்பு நடந்துச்சு..." என்று இழுத்தேன்.
 
"எதுவும் நடக்காது! எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்!"
 
அவன் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே சொன்னான்.
 
நானும் அவன் இருக்கிற தைரியத்தில் அதை செய்வதற்கு ஒப்புக்கொண்டேன். அதோடு நமது நண்பர்களிடமும் இதைப்பற்றி கூறவேண்டும். மதியம் உணவு இடைவேளையின்போது சொல்லலாம் என்றதும் தினேஷ் ஒப்புக்கொண்டான்.
 
கார்த்தி! ரம்யா! காயத்ரி! ஆகியோர் இந்த திட்டத்தை கேட்டதும் என்னுடைய மனநிலை புரிந்து நல்ல முடிவு என்று ஊக்கம் அளித்தனர்.
 
ஆனால் வெங்கட் இதை ஒரு பொருட்டாக எண்ணாமல் “நீ எது வேணாலும் செய் அவகிட்ட அடி மட்டும் வாங்காமா இரு” என்று எச்சரித்தான்.
 
நான் அதைபற்றி பெரிதாக எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்னுடைய முடிவில் தெளிவாக இருந்தேன்.
 
சில வாரங்களில் பரிட்சைக்கான நாளும் வந்தது.
 
நான் எல்லா தேர்வுக்கும் எப்போதும் போல் நன்றாகவே படித்தேன். ஆனால் தேர்வு எழுதும் போது சில கேள்விகளை மட்டும் நிராகரித்துவிட்டு மீதி இருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதினேன்.
 
இவ்வாறு அனைத்து தேர்வுகளையும் எழுதிவிட்டு எப்போதையும் விட அதிக ஆர்வத்துடன் முடிவுக்காக காத்திருந்தேன்.
 
சில நாட்களுக்கு பிறகு தேர்வின் முடிவு வந்தது.
 
நான் எதிர்பார்த்தது போலவே மதுமிதா முதல் மதிப்பெண் எடுத்திருந்தாள். அனைத்து ஆசிரியர்களும் விட்ட இடத்தை பிடித்துவிட்டாய் என்று வெகுவாக அவளை பாராட்டினார்கள்.
 
மதுமிதா மகிழ்ச்சி கடலில் தத்தளித்தாள்.
 
அவளுடைய முகமெங்கும் புன்னைகை ததும்பி வழிந்தது.
 
அன்றுதான் முதல் முதலாக அவள் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பை பார்த்தேன்.
 
அந்த சிரிப்பு என்னுடைய துயரினை நீக்கி மனதிற்கு நிம்மதியை அளித்தது.
 
மேலும் இரண்டாம் இடத்திற்கு வேறு ஒரு மாணவி வந்திருந்தாள். ஆகையால் நான் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தேன்.
 
இதனால் எல்லா ஆசிரியர்களும் முதல் இடத்தை விட்டு ஏன் இப்படி கீழே சென்றாய் என்று திட்டி தீர்த்து பல அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றனர். ஆனால் எனக்கு அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.
 
மதுமிதாவின் மகிழ்ச்சி என்னை எல்லாவற்றையும் மறக்க செய்தது.

முதல் மதிப்பெண் வாங்கும்போது கூட இப்படி ஒரு ஆனந்தத்தை அனுபவித்தது இல்லை.
 
இதே போன்று எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று மனது துடித்தது. ஆனால் இவ்வளவு நடந்தும் மதுமிதா என்னை ஒரு முறை கூட திரும்பி பார்க்கவே இல்லை. அது மட்டும் எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.
 
"தினேஷ்! அவ இவ்வளவு சந்தோசமா இருக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குடா! ஆனா ஒரு தடவ கூட என்னைய திரும்பி பாக்கவே இல்லடா!"
 
"மச்சி! எல்லாத்துக்கும் பொறுமை ரொம்ப அவசியம்! மனச போட்டு குழப்பாம அமைதியா இரு!"
 
இவன் இப்படி சொன்னதும் அமைதியாக என்னுடைய படிப்பு சம்பந்தமான மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். அதன் பிறகு ஆசிரியர் வந்து வகுப்பை தொடங்கினார். மாலை வரை வகுப்பு தொடர்ந்து நடந்து முடிந்தது.
 
இன்றும் வழக்கம் போல் முதல் ஆளாக எழுந்து மதுமிதா வீட்டிற்கு சென்றாள். அதனால் எனக்கு வகுப்பை விட்டு கிளம்ப மனம் இல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
 
தினேஷை தவிர மற்ற நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டனர். இப்போது நானும் தினேஷம் மட்டும் வகுப்பில் அமர்ந்திருந்தோம்.
 
"விக்ரம்! வாடா வீட்டுக்கு போலாம்! இங்க இருந்து என்னடா பண்ண போறே?”
 
"தெரியல மச்சி! இவ்வளவு நடந்தும் அவ பேசாம போனது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!"
 
"டேய்! ஸ்கூல்ல இருக்குற எல்லா ஸ்டுடெண்ட்ஸும் கிளம்பி வீட்டுக்கு போயிட்டாங்க! நாம மட்டும் இங்க இருக்குறது எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்குடா!".
 
"ஏன்டா! என்னைய நிம்மதியா இருக்க விடமாட்டியா? சரி வா போலாம்!" என்று வகுப்பை விட்டு வேகமாக வெளியேறினேன்.
 
"டென்ஷன் ஆகாம இருடா! அவ நிச்சயமா உன்கிட்ட பேசுவா!" என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே நடந்து வந்தான்.
 
நான் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தேன். சிறிது நேரத்தில் நாங்கள் இருவரும் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே வந்தோம்.
 
அப்போது அந்த அதிசயம் நடந்தது.
 
மதுமிதா எங்களை நோக்கி நடந்து வந்தாள்.
 
எனக்கு அது கனவா இல்லை நிஜமா என்று புரியாமல் கண்களை போட்டு கசக்கிக்கொண்டு பார்த்தேன்.
 
அவள் எங்களை நோக்கிதான் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
 
"விக்ரம்! உன்கிட்ட பேசுறதுக்குதான் மதுமிதா இங்க வர்றானு நினைக்குறேன்!"
 
"ஆமாடா! எனக்கும் அப்படிதான் தோணுது! என்ன பேசுறதுன்னு தெரியலையே! நீயும் என்கூட இருடா!"
 
"உங்களுக்குள்ள ஏதாச்சும் பர்சனல் விஷயம் இருக்கும்! அதனால நான் சைக்கிள் கிட்ட நிக்குறேன்! ஆல் தி பெஸ்ட் மச்சி!"
 
அவன் வாழ்த்து சொல்லிவிட்டு சைக்கிள் இருக்கும் இடத்திற்கு ஓடினான்.
 
நான் அவ்வளவு தடுத்தும் என்னுடன் நிற்காமல் இப்படி என்னை தனியாக விட்டு சென்று விட்டானே! இனி என்ன செய்வது என்று புரியாமல் கை கால்கள் உதறியது.
 
மெதுவாக அதை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும்போதே மதுமிதா என் அருகில் வந்து அமைதியாக நின்றாள்.
 
சரி நாம் முதலில் பேசலாம் என்று முடிவு செய்து பேச ஆரம்பித்தேன்.
 
"ஹாய்! மதுமிதா!"
 
அப்படி சொன்னதுதான் தாமதம்!
 
அவள் என்ன நினைத்தாளோ எனக்கு தெரியவில்லை!
 
மிக வேகமாக அவளது கையை எடுத்து பளாரென்று என்னுடைய கன்னத்தில் அறைந்தாள்.
 
நான் மதுமிதாவிடம் வாங்கும் முதல் அடி!
 
அவளது ஐந்து விரல்களும் நன்றாக பதிந்ததும் எனக்கு சுர்ரென்று வலித்தது.
 
அதை தாங்க முடியாமல் மிகுந்த வேதனையோடு துடித்தேன்.
 
மதுமிதா அறைந்துவிட்டு கண்கள் சிவக்க என்னை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
 
காலையில் மகிழ்ச்சியுடன் பார்த்த முகத்தை இப்படி ஒரு கோபத்தோடு மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை! சட்டென்று தலையை குனிந்துக்கொண்டேன்.
 
"அடப்பாவி தினேஷ்! எல்லாத்தயும் நான் பாத்துக்குறேன்! நான் பாத்துக்குறேன்னு சொல்லும்போதே எனக்கு சந்தேகம் வந்துச்சுடா! கடைசியா என்னையும் இவக்கிட்ட அறை வாங்க வச்சுட்டியே!"
 
அவன் சொன்னதை நினைத்தபடி சைக்கிள் ஸ்டாண்டை திரும்பி பாத்தேன்.
 
அங்கே தினேஷ்! எப்படியாவது தப்பித்து பிழைத்தால் போதும் என்று சைக்கிளை வேகமாக தள்ளிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினான்...
[+] 4 users Like feelmystory's post
Like Reply
#91
Superbbbb
Like Reply
#92
மிகவும் அருமையான மற்றும் வித்தியாசமான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#93
Super ? update
Like Reply
#94
Super ? update
Like Reply
#95
super update,nalla interestinga iruku.regular updates varuma?
Like Reply
#96
Nice update
Like Reply
#97
Awesome update
Like Reply
#98
Super update
Like Reply
#99
Marvelous updates
Like Reply
waiting for next update
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)