Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#61
Super sago
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
super brother,waiting for next update
Like Reply
#63
சூப்பரா போகுது
Like Reply
#64
Nice, please update soon.
Like Reply
#65
Super. So it is madhumita. that is the reason and starting point she started hating the boys. But, why did she change the wires and made the project fail is fishy.
Like Reply
#66
Superb bro
Like Reply
#67
bro adutha update eppo
Like Reply
#68
What happened then?
Like Reply
#69
திமிருக்கு மறுபெயர் நீதானே...!

5


நான் எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டேன். மதுமிதாவிடம் இனி எப்படி பேச போகிறேன் என்று புரியாமல் தயக்கத்துடன் அவளது முகத்தை பார்த்தேன்.

அவளுடைய கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை அவளது கண்களே எனக்கு காட்டிக்கொடுத்தது.
 
இப்போதும் பேசவில்லை என்றால் பிரச்சனை வேறு விதமாக சென்றுவிடும் என்பதால் பேசிவிடலாம் என்று ஆரம்பித்தேன்.
 
"ஹே... மதுமிதா நீதான் அந்த பொண்ணுன்னு சத்தியமா எனக்கு தெரியாது! என்னோட அப்பாவுக்கு ஆபீஸ்ல ட்ரேன்ஸ்பர் பண்ணிடாங்க! அதுனாலதான் இந்த ஊருக்கு வந்தோம்! நான் உன்னைய பழிவாங்கணும்னு எதுவுமே பண்ணல!”
 
"போடா! நீ எதுவும் பேசாத! ஃபர்ஸ்ட் டே உன்னைய இங்க பாத்ததுமே, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு! அதை கஷ்டப்பட்டு அடக்கிட்டு இருந்தேன்! ஆனா என்னையவிட அதிகமா மார்க் வாங்கி அசிங்கப்பட வச்சுட்ட! அதுக்கு என்ன பண்றதுன்னு தெரியாமதான் இப்படியெல்லாம் உனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தேன்! அதையும் இப்ப கண்டுபிடிச்சுட்டே!" என்று வருத்தம் அடைந்தாள்.
 
அவள் முதல்நாள் எதற்காக என்னை பார்த்து முறைத்தாள் என்று இப்போதுதான் எனக்கு நன்றாக புரிந்தது.
 
"ப்ளிஸ் மதுமிதா இனிமே நாம ப்ரண்ட்ஸா இருக்கலாம் என்னைய மன்னிச்சுடு" என்று கெஞ்சினேன்.
 
“என்னது ப்ரெண்ட்ஸா? அதெல்லாம் இனிமே நடக்காது!”
“இனிமே நடக்காதா? என்னடி சொல்றே?”
 
“ஆமா! எல்லாமே நாலு வருசத்துக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு”
 
“ப்ளீஸ் மதுமிதா ஏன் இப்படியெல்லாம் பேசுறே? நீதான் அந்த பொண்ணுன்னு இப்ப தெரிஞ்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”
 
“ரொம்ப சீன் போடாத விக்ரம்! கண்காட்சில என் பக்கத்துல உன்னைய பாத்ததும் பேசணும்னு தோனுச்சு! அப்பறம் ப்ராஜெக்ட் பாத்ததும் உன்கிட்ட எவ்வளவு ஆசையா பேசலாம்னு வந்தேன் தெரியுமா? ஆனா நீ என்னைய புரிஞ்சுக்காம மனசை காயப்படுத்துனே! அதுனாலதான் அந்த வயரை எடுத்து வச்சேன்! அப்புறமா அந்த தப்ப உணர்ந்து எனக்கு கொடுத்த ப்ரைஸ உன்கிட்ட கொடுக்க வந்தேன்! அதையும் நீ புரிஞ்சுக்காம அடிச்சு என்னைய அசிங்கப்படுத்தி உன்னோட ஆத்திரத்தை தீர்த்துகிட்டே”
 
மதுமிதா கண்களை துடைத்துக்கொண்டு கூறினாள்.
 
"இல்ல மதுமிதா! நான் எல்லாமே லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன்! என்னைய மன்னிச்சுடு ப்ளீஸ்" என்று கெஞ்சினேன்.
 
என்னுடைய கெஞ்சலை பொருட்படுத்தாமல் மேலும் பேசத்தொடங்கினாள்.
 
"எனக்குதான் முதல் பரிசுன்னு அறிவிக்கும்போது நான் என்ன பண்ணேன்னு உனக்கு தெரியுமா விக்ரம்?
 
"என்ன பண்ணுனே?
 
நான் துயரம் நீங்காமல் கேட்டேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#70
“எனக்கு முதல் பரிசுன்னு சொன்னதும் எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு!”

“அந்த நேரத்துல நீயும் வெளியே போறத பாத்தேன்”
 
“எனக்கு அந்த பரிசை வாங்குறதுக்கு விருப்பமே இல்ல”
 
“வேண்டா வெறுப்பா வாங்கிட்டு அங்க இருந்தவங்க கிட்ட நான் பண்ணுன தப்ப சொல்லி திருப்பி கொடுக்க முயற்சி பண்ணேன்”
 
“பட் நீ பண்ணுனதும் நல்ல ப்ரொஜெக்ட்னு சொல்லி அவங்க என்னோட தப்ப மன்னிச்சு கொடுத்த பரிசை வாங்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க”
 
“உடனே அத உன்கிட்ட கொடுக்க வந்தேன்! ஆனா நீ என்னைய அடிச்சு அழ வச்சுட்டே”
 
“அதுக்கப்புறம் அவங்களே உன்னைய கூப்பிட்டு சிறப்பு பரிசு ஒன்னு கொடுத்தாங்க”
 
“நான் அத தூரத்துல இருந்து பாத்தேன்! அதுக்கு அப்புறம் வேகமா நடந்து என்னோட ஸ்கூல் பஸ்ல போயி உக்காந்துட்டேன்!”
 
“நீ கேம்பஸ்ல என்னைய தேடி அலைஞ்சுகிட்டு இருந்தே! அத பஸ்ஸுக்குள்ள இருந்து பாத்துட்டு இருந்தேன்!”
 
“அப்புறம் பஸ் கிளம்பிடிச்சு”
 
“இனிமே உன்னைய வாழ்க்கையில பாக்கவே கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்!
 
“ஆனா சொன்ன மாதிரியே நீ ஜெயிச்சு ஆம்பளைன்னு ப்ரூப் பண்ணிட்டே!"
 
அவள் ஒரே மூச்சில் பேசி முடித்துவிட்டு என் முகத்தை பார்த்தாள்.
 
நான் செய்தது இவளை இப்படி பாதிக்கும் என்று தெரியாமல் தவறு செய்துவிட்டேனே என்று வருந்தினேன்.
 
அப்போது என்னுடைய கையில் அணிந்திருந்த அந்த கடிகாரத்தின் நினைவு வந்தது அதை அவளிடம் காண்பித்து பேசினேன்.
 
"மதுமிதா இந்த வாட்ச்தான் உனக்கு அவங்க கொடுத்த பரிசு! உன்னோட ஞாபகமாதான் இத கையில கட்டிட்டு இருக்கேன்! எனக்கு உன் ஞாபகம் வரும்போதுலாம் இதுகிட்டதான் மன்னிப்பு கேட்பேன்”
 
நான் இப்படி சொன்னதும் அந்த கடிகாரத்தையே ஒரு வித ஏக்கத்துடன் பார்த்தாள். இப்போது கொஞ்சம் சாதரணமாக பேசி பார்க்கலாம் என்று நினைத்து அவளிடம் பேசினேன்.
 
"நீ சென்னைலதானே படிச்சே? அப்புறம் எப்படி இங்க வந்தே?" என்று கேட்டேன்.
 
உடனே அவளது முகத்தை கோபமாக மாற்றிக்கொண்டாள்
 
"அதெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல! நீ என்ன வேணாலும் பண்ணிட்டு போ! இனிமே உனக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்! ஆனா நீ செஞ்சதை என்னைக்கும் மறக்கவே மாட்டேன்"
 
அவள் அழுத்தத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்து சென்றாள்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#71
இத்தனை வருடங்களாக எவளோ ஒருத்தி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவள் இந்த மதுமிதாதான் என்று தெரிந்தும் என்னால் சகஜமாக பேச முடியவில்லையே!

இது தெரியாமல் இன்றும் இவளை அடித்துவிட்டேனே!
 
இனிமேல் நான் என்ன செய்ய போகிறேன் என்று புரியாமல் அவள் செல்லும் திசையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
 
அப்போது மதிய வகுப்பிற்கு நேரம் ஆனது!
 
முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக வகுப்பிற்குள் சென்றேன்.
 
அங்கே மதுமிதாவும் முகம் கழுவி தெளிவுடன் அமர்ந்திருந்தாள்.
 
என்னை ஏறிட்டு பார்க்கவேயில்லை.
 
நான் சென்று தினேஷ் அருகில் அமர்ந்தேன்.
 
"என்னடா ஸார் கூப்பிட்டாருன்னு சொன்னியே பாத்துட்டு வந்துட்டியா ?" என்று வினாவினான்.
 
"ஹ்ம்ம் பாத்துட்டேன்" என்று பொய்யாக பதில் கூறிவிட்டு மதுமிதாவை மீண்டும் பாத்தேன்.
 
அவளும் என்னை பார்த்தாள்!
 
இல்லை! இல்லை! முறைத்தாள்.
 
இனி அங்கே பார்வையை செலுத்தவேண்டாம் என்று முடிவு செய்து திரும்பினேன்.
 
அப்போது வெங்கியிடம் பேசவேண்டும் என்று மனதில் தோன்றியது.
 
ஆனால்! அதற்குள் ஆசிரியர் வந்து வகுப்பை ஆரம்பித்தார்.
 
மாலை வரை வகுப்புகள் தொடந்து நடந்து முடிந்தது.
 
மதுமிதா அனைவருக்கும் முன்பாக எழுந்தது வேகமாக வகுப்பைவிட்டு வெளியே சென்றாள். அதன்பின் மற்ற மாணவர்களும் வீட்டிற்கு கிளம்பினார்கள். கூடவே காயத்ரியும் ரம்யாவும் எங்களை விடைப்பெற்று சென்றார்கள்.
 
தினேஷ் என்னை கிளம்பலாம் என்று அழைத்தான்.
 
"மச்சி! வெங்கி கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்டா?" என்றேன்.
 
"என்னடா பேசனும் ?"
 
"நான் அப்புறம் சொல்றேன்! நீ சைக்கிள் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணு பேசிட்டு வரேன்"
 
தினேஷ் மறுப்பு எதுவும் சொல்லாமல் சைக்கிள் ஸ்டாண்டுக்கு சென்றான்.
 
இங்கே கார்த்தியும் வெங்கட்டும் வீட்டிற்கு கிளம்ப தயாரானார்கள்.
 
"வெங்கட் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்டா."
 
இதை கேட்ட கார்த்தி “நீங்க பேசுங்க நான் கிளம்புறேன்!” என்று டீசன்ட்டாக அங்கிருந்து நகர்ந்தான்.
 
"சொல்லுடா என்ன பேசனும் ?" என்று வெங்கட் கேட்டான்.
 
இப்போது நானும் வெங்கட்டும் மட்டுமே வகுப்பறையில் தனியாக இருந்தோம். அதனால் தைரியமாக பேசலாம் என்று பேச ஆரம்பித்தேன்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#72
“ஒன்னும் இல்லை வெங்கி! மதுமிதாவ பத்தி உன்கிட்ட கொஞ்சம் கேக்கணும்!"

“அவள பத்தியா என்னடா?"
 
"அதுவந்து... நீயும் மதுமிதாவும் எப்ப இருந்து இந்த ஸ்கூல்ல படிக்குறீங்க?"
 
"ஹ்ம்ம்... நான் ஸ்டார்டிங்ல இருந்து படிக்குறேன்! அவ நாலு வருஷமாதான் இங்க படிக்குறா."
 
"ஓ... அதுக்கு முன்னாடி எங்க படிச்சா.?"
 
"ஏன்டா கேக்குற?"
 
"சும்மா தெரிஞ்சுக்கதான்! சொல்லுடா!"
 
"சென்னைல எங்க பெரியப்பா வீட்டுல இருந்து படிச்சா!"
 
"அப்புறம் எதுக்குடா இங்க வந்தா?"
 
"என்னடா விக்ரம் கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு இருக்கே? இப்போ என்ன விஷயம்னு சொன்னாதான் இனிமே பதில் சொல்லுவேன்."
 
"இல்ல மச்சி! அவளோட கோபத்தை குறைச்சு சரி பண்ணனும்டா அதுக்குதான் கேக்குறேன்!"
 
"அதான் சரி பண்ணிட்டியே! இப்போ அவளோட திமிர் எல்லாம் அடங்கிருச்சுடா!"
 
புரியாமல் பேசிய வெங்கியை முறைத்தேன்.
 
"டேய் வெங்கி! திமிர் இல்லைனு எப்படிடா சொல்லுற? அவ உன்கிட்ட வந்து பேசுனாலா? அதோட நான் மார்க் அதிகமா வாங்கினதுல இருந்து அவ கொஞ்சம் கோபமா இருக்குற மாதிரி இருக்குடா!"
 
"நீ சொல்றதெல்லாம் சரிதான்டா! இன்னும் என்கிட்டே வந்து அவ பேசவே இல்ல! அப்போ இன்னும் திமிரோடதான் இருக்கானு சொல்லுறியா?"
 
"ஆமாடா அப்படிதான் நினைக்குறேன்!  நீ டைம் வேஸ்ட் பண்ணாம நான் கேக்குற கேள்விக்கு மட்டும் சீக்கிரம் பதில் சொல்லு!"
 
“ஹ்ம்ம்... கேளுடா சொல்றேன்”
 
வெங்கட் மீண்டும் என்னுடைய வழிக்கு வந்தான்.
 
"அவ எதுக்காக சென்னைல இருந்து இங்க வந்தா?"
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#73
“எதுக்குன்னு சரியா தெர்ல! பட் சென்னைல படிக்கும்போது ஒரு சைன்ஸ் எக்சிபிஷனுக்கு அவ போயிருந்தா! அங்க போயிட்டு வந்ததுக்கு அப்புறம் அவளோட முகமெல்லாம் ரொம்ப சோகமா இருந்துச்சுன்னு பெரியப்பா சொன்னாங்க!"

இப்போது என்னுடைய முகமெல்லாம் வேர்த்து உடலில் நடுக்கம் ஏற்ப்பட்டது.
 
"அதுக்கப்புறம் என்னடா ஆச்சு" கரகரத்த குரலில் கேட்டேன்.
 
"நீயேண்டா அதுக்கு இப்படி பயந்துகிட்டு கேக்குற?" என்று சிரித்தான்.
 
"ஒன்னும் இல்ல மேல சொல்லு!"
 
"அதுக்கு அப்புறம் அவளுக்கு அங்க இருக்கவே பிடிக்கலன்னு சொல்லி ஊருக்கு வந்து படிக்குறேன்னு சொன்னா! அதுனால அப்பாவும் நான் படிக்குற ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க!"
 
"ஹ்ம்ம் சின்ன வயசுல இருந்தே இப்படிதான் மதுமிதா பண்ணுவாளா? ஐ மீன் உன்னைய ஜியோமெட்ரி பாக்ஸ் வச்சு அடிச்சானு சொன்னியே அது மாதிரி?"
 
"இல்ல விக்ரம்! சென்னைல படிக்கும் போது லீவ் விட்டதும் ஊருக்கு வருவா! அப்போ என்கிட்ட ரொம்ப பாசமா இருப்பா! எனக்கு சாப்பாடுல்லாம் ஊட்டி விடுவா! அண்ணா அண்ணானு ரொம்ப அன்பு காட்டுவா! அது எல்லாமே இங்க வந்து நம்ம ஸ்கூல்ல சேந்ததும் மொத்தமா சேஞ்ச் ஆகிடுச்சு!!
 
“என்னடா சொல்றே?” என்று அதிர்ந்தேன்.
 
“ஆமாடா! அவளுக்கு என்னைய சுத்தமா பிடிக்காம போயிருச்சு! அதோட பசங்கள பாத்தாளே அடிச்சு விரட்ட ஆரம்பிச்சுட்டா!"
 
இதை கேட்டதும் என்னுடைய நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.
 
அப்படியென்றால் அடக்கமாக இருந்த மதுமிதா நான் அடித்தவுடன்தான் அனைவரையும் வெறுக்க ஆரம்பித்திருக்கிறாள்.
 
குறிப்பாக ஆண்களை கண்டாளே அவளுக்கு ஒரு வித கோபம் வருவதற்கு மூல காரணமே நான்தான் என்று புரிந்தவுடன் எனக்கு பேச்சே வரவில்லை.
 
சில நொடிகள் அப்படியே மெளனமாக இருந்தேன்.
 
"டேய் விக்ரம்! என்னாச்சு? பேசுடா!" என்று அவன் என் தோளை பிடித்து உலுக்கியவுடன்தான் நினைவுக்கு வந்தேன்.
 
"சொல்லு மச்சி!"
 
"என்ன சொல்றது? நான்தான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே! நீ ஏன் இப்படி பயந்துபோன மாதிரி இருக்குற?"
 
"ஒன்னும் இல்ல வெங்கி கொஞ்சம் தலைவலி! அது இருக்கட்டும் அவ இப்படி நடந்துகிறதுக்கு எல்லாம் நீ என்ன காரணம்னு நினைக்குறே?"
 
நான் அதே பயத்துடன் கேட்டேன்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#74
"வேற என்ன காரணம்? தூரத்துல இருந்த வரைக்கும் என் மேல பாசம் இருந்துச்சு! பக்கத்துல வந்ததும் அவளுக்கு என்னைய பிடிக்காம போச்சு! அதோட பொண்ணுங்க மட்டும் படிக்கிற ஸ்கூல்ல படிச்சுட்டு இங்க வந்து பசங்கள பாத்ததும் அவளுக்கு வெறுப்பு வந்துருக்கும்"

அவனது பதிலை கேட்டதும் நடந்தது என்னவென்று புரியாமல் இப்படி பேசுகிறானே என்று நினைத்தேன்.
 
"சரி கிளம்பலாம் வெங்கி!"
 
"ஹ்ம்ம் சரிடா! இதெல்லாம் கேட்டியே இனிமே என்ன பண்ணபோற?"
 
"தெரியலடா இனிமேதான் யோசிக்கணும்!"
 
"சரிடா பாத்து யோசி திரும்ப வந்து என்னைய அடிச்சுட போறா" என்று கோபமாக சொன்னான்.
 
இதுக்கே இப்படி சொல்கிறானே! இவன் வாங்கிய அடிக்கு நான்தான் காரணம் என்று தெரிந்தால் என்ன செய்ய போகிறானோ என்று பயம் வந்தது.
 
"அதெல்லாம் ஒன்னும் நடக்காது! இப்ப நாம கிளம்பலாம்" என்று சொன்னேன்.
 
அதன் பிறகு அவனும் நானும் வகுப்பறையில் இருந்து கிளம்பி சைக்கிள் ஸ்டாண்டுக்கு சென்றோம். அங்கே எனக்காக தினேஷ் காத்திருந்தான்.
 
வெங்கி எங்களிடம் இருந்து விடைப்பெற்று அவனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
 
நானும் என்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு தினேஷ் அருகில் வந்தேன்.
 
"தினேஷ் கிளம்பலாமாடா?"
 
"விக்ரம்! உன்கிட்ட ஒன்னு கேக்கணும்?”
 
“வெங்கட்கிட்ட என்ன பேசுனேன்னு தெரியனுமா? அத அப்பறமா சொல்றேன்டா”
 
“இல்ல அது நீயாவே சொல்லுவே! முதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு?”
 
“என்னடா சொல்லணும்?”
 
“நீ இந்த ஸ்கூலுக்கு வர்றதுக்கு முன்னாடியே உனக்கு மதுமிதாவ தெரியுமா?” என்று கேட்டான்.
 
தினேஷ் எதற்காக இப்படி கேட்கிறான் என்று புரியாமல் கொஞ்சம் தடுமாற்றத்துடன் பேசினேன்.
 
"இல்லடா! ஏன் அப்படி கேக்குறே?"
 
"அதுவா... மதியம் இங்க நின்னுதான் மதுமிதா அழுதுட்டு இருந்தா! நீ பக்கத்துல நின்னு கெஞ்சிட்டு இருந்தியே! அதான் கேக்குறேன்"
 
நான் அதிர்ந்தே போனேன்!
 
"தி...தினேஷ், உ...உனக்கு எப்படிடா தெரியும்...???"
 
என்னுடைய நாக்கு குழறியது.
 
"அத அப்பறமா சொல்லுறேன்! முதல்ல மதுமிதாவ உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு!"
 
"அது...வந்...து..."
 
"என்கிட்டே சொல்லுறதுக்கு விருப்பம் இல்லனா சொல்லவே வேணாம்"
 
"தினேஷ் என்னடா இப்படி சொல்லுற? எனக்கே அவளை தெரியும்னு இன்னிக்கி தான் தெரியும்!"
 
"என்னடா போட்டு குழப்புற! ஒண்ணுமே புரியலயே!"
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#75
"சரி எல்லாத்தையும் சொல்லுறேன்! அதுக்கு முன்னாடி நாங்க பேசுனது உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு."

“ஹ்ம்ம் சொல்றேன்! நீ டெய்லி எதாச்சும் படிக்கிற விஷயத்தை சொல்லி சீக்கிரமா சாப்பிட்டு ஓடிடுவ! இவன் எதுக்கு இப்படி சீக்கிரம் ஓடுறான்னு எனக்கு டவுட் வந்துச்சு! அத எப்படியாச்சும் கண்டுபிடிக்கணும்னு முடிவு பண்ணேன்! அதான் இன்னக்கி நீ மாட்டிகிட்டே!"
 
"ஓ... எப்படிடா என்னைய கண்டுபிடிச்சே?"
 
"இன்னிக்கி நீ ஸார பாக்கபோறேன்னு சொல்லிட்டு கிளம்பினதும் நானும் வேகமா சாப்பிட்டுட்டு ஒரு சின்ன வேலை இருக்குனு அங்க இருந்து கிளம்பினேன்!"
 
"வேற யாருக்கும் சந்தேகம் வரலையா?"
 
"யாருக்கும் எந்த டவுட்டும் வரலை."
 
"சரி அப்புறம் எப்படி கண்டுபிடிச்சே?"
 
"ஸ்டாப் ரூம் போயி பாத்தேன்! அங்க நீ இல்லை! ஸார் மட்டும் தனியாதான் இருந்தாரு! ஒருவேளை பேசிட்டு கிளாஸ்ரூம் போயிருப்பேன்னு நினைச்சு நம்ம கிளாஸுக்கு போனேன்! அங்கயும் நீ இல்ல! சரி பையன் எதையோ நம்மகிட்ட இருந்து மறைச்சுட்டு இருக்கான்னு அப்பவே எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு! உடனே ஸ்கூல் முழுக்க தேடுனேன்! எங்கயும் நீ இல்ல! கடைசியா நீ சைக்கிள் ஸ்டாண்ட்ல இருக்குறதா கார்த்திதான் சொன்னான்”
 
"என்னடா சொல்லுறே கார்த்திக்கும் தெரிஞ்சு போச்சா?"
 
நான் தலையில் கையை வைத்துக்கொண்டு அருகில் இருந்த கல்லில் அமர்ந்தேன்.
 
தினேஷ் சிரித்துக்கொண்டே பேசினான்.
 
"மச்சி கார்த்திக்கும் எனக்கும்தான் உன்மேல டவுட் வந்துச்சு! அவனுக்கு உடம்பு சரியில்ல மாத்திரை போடணும்னு சொல்லிதான் வேகமா சாப்பிட்டுட்டு அங்க இருந்து கிளம்புனோம்! அதான் யாருக்கும் எங்க மேல டவுட் வரலை! அப்புறமா நாங்க ரெண்டு பேரும் தனிதனியா தேடுனோம்! அதுனாலதான் உன்னைய சீக்கிரமா கண்டுபிடிக்க முடிஞ்சுது!"
 
நான் வெங்கியிடம் பேச வேண்டும் என்று கூறியபோது கார்த்தி டீசன்டாக கிளம்பியது இதனால்தான் என்று இப்போது எனக்கு புரிந்தது.
 
"ஓ நாங்க பேசுனது எல்லாத்தையும் கேட்டீங்களா ?"
 
"நாங்க தூரத்துல இருந்துதான் பாத்தோம்! அதனால நீங்க பேசுனது எதுவும் எங்களுக்கு கேட்கவே இல்லை!”
 
“அப்பறம் என்னதான் பாத்தீங்க?”
 
“நாங்க பாக்கும்போது மதுமிதா அழுதுட்டு இருந்தா! அப்புறம் கண்ணை துடைச்சுட்டு உன்னைய திட்டுன மாதிரி இருந்துச்சு! நீ உடனே கையை நீட்டி காமிச்சு ஏதோ பேசுனே! அதுக்கப்புறம் அவளும் ஏதோ பேசிட்டு அங்க இருந்து கிளம்புனா! அதனால நீயும் கிளம்பி வந்துடுவேனு நானும் கார்த்தியும் கிளாஸுக்கு வேகமா போயிட்டோம்!"
 
நான் அவளிடம் கைகடிகாரத்தை காண்பித்து பேசியதைத்தான் தினேஷ் சொல்கிறான் என்று புரிந்து கொண்டேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#76
"மச்சி வேற யாருக்கும் இது தெரியாதுல்ல?"

"யாருக்கும் தெரியாதுடா! அங்க நானும் கார்த்தியும் மட்டும்தான் இருந்தோம்! சைக்கிள் ஸ்டாண்ட் பக்கத்துல வேற யாரும் இருக்காங்களான்னு பாத்து உறுதிப்படுத்திட்டுதான் கிளாஸுக்கு போனோம்!"
 
தினேஷ் இப்படி கூறியதும்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
 
நான் கல்லில் இருந்து எழுந்தேன்.
 
"மச்சி எல்லாத்தையும் உன்கிட்ட இப்பயே சொல்லிடுறேன்!"
 
"ஹ்ம்ம் ஓகேடா! ஆனா இங்க இருந்து சொல்ல வேணாம்! கிரவுண்டுக்கு பக்கத்துல இருக்குற பெஞ்ச்ல உக்காந்து பேசலாம்”
 
"ஏன்? இங்க நின்னு சொன்னா என்னடா?"
 
"இங்க நின்னு சொன்ன கார்த்திக்கு தெரியாதுல்ல?"
 
"டேய்! அவன் கிரவுண்ட்லதான் இருக்கானா?"
 
"ஆமா உன்கிட்ட பேசனும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருக்கான்"
 
எனக்கு இப்போது என்ன செய்வது என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஆனால் யாரிடமாவது இதைப்பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதுவே என்னுடைய நண்பர்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று மனதிற்குப்பட்டது.
 
"சரி மச்சி வா போலாம்!"
 
நாங்கள் இருவரும் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு மைதானத்திற்கு சென்றோம்.
 
அங்கே மைதானத்தில் மாணவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர் அதை கார்த்தி வேடிக்கை பார்த்தான்.
 
நாங்கள் அங்கு வருவதை கண்டதும் சிரித்த முகத்துடன் கையசைத்து எங்களை அழைத்தான்.
 
அப்போது தினேஷ் சிரித்துக்கொண்டே வந்தான்.
 
நான் இறுகிய முகத்துடனே அவனுடன் சென்றேன்.
 
இருவரும் கார்த்தி அருகில் அமர்ந்தோம்!
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#77
தினேஷ்தான் முதலில் பேச ஆரம்பித்தான்.

"ஹ்ம்ம் சொல்லுடா!"
 
"இருடா சொல்லுறேன்! இதபத்தி யாருக்கும் தெரியக்கூடாதுடா"
 
"நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்! நீ தைரியமா சொல்லு" என்று கார்த்தி கூறினான்.
 
"ஓகே கார்த்தி! டேய் தினேஷ் நீ எதுவுமே பேச மாட்டேங்குறே? உனக்கும்தான் சேத்து சொல்றேன்!"
 
"நானும் சொல்லமாட்டேன் போதுமா! முதல்ல விஷயத்தை சொல்லுடா" என்று தினேஷ் அலுத்துக்கொண்டான்.
 
உடனே எனக்கு தைரியம் வந்தது.
 
முதலில் நான் அவளை விட அதிக மதிப்பெண் வாங்கிய காரணத்தால் அவள் என்னிடம் செய்த சேட்டைகளை பற்றி கூறினேன்.
 
மேலும் அவளை கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் சைக்கிள் ஸ்டாண்டில் மறைந்திருந்தேன் எனக் கூறி முடித்தேன்.
 
இதை கேட்டதும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்து கேலி செய்தனர்.
 
"இங்க பாருடா கார்த்தி! நாம ஒரு பிளான் பண்ணா அவ வேற மாதிரி பிளான் பண்ணுறா சரியான திமிரு பிடிச்சவதான்! நம்ம பையன்தான் ரொம்ப பாவம்! என்ன பண்றதுனு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கான்"
 
அவன் ஏளனமாக என்னை பார்த்து சிரித்தான்.
 
"இதுக்காகத்தான் டெய்லி எங்கள ஏமாத்திட்டு போனியா?" என கேட்டுவிட்டு என்றுமே என்னை கிண்டல் செய்யாத கார்த்தியும் சேர்ந்து சிரித்தான்.
 
எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது.
 
"டேய்! ரெண்டு பேரும் சிரிக்கிறத முதல்ல நிறுத்துங்கடா!"
 
எரிச்சலுடன் கத்தினேன்.
 
"நீ சொன்னது செம காமெடியா இருக்குது மச்சி! அப்புறம் எப்படி சிரிக்காம இருக்குறது?" என்று தினேஷ் பதில் அளித்தான்.
 
"டேய் அங்க என்ன நடந்துச்சுன்னு இன்னும் முழுசாவே சொல்லி முடிக்கல! அதுக்குள்ள ஏன்டா இப்படி சிரிச்சு என்னோட மனச இன்னும் நோகடிக்கிறீங்க!" என்று கத்தினேன்.
 
இப்போது இருவரும் மெதுவாக சிரிப்பை நிறுத்திவிட்டு என்னை பார்த்தனர்.
 
"என்னடா சொல்லுற வேற என்ன நடந்துச்சு?"
 
கார்த்தி அதிர்ச்சியுடன் கேட்டான்.
 
நான் அமைதியாக இருவரது முகத்தையும் பார்த்தேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#78
“ஸாரி மச்சி! எதுவா இருந்தாலும் சொல்லுடா” என்று தினேஷ் சொன்னான்.

"ஹ்ம்ம்... அது நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்தது..."
 
"என்னது நாலு வருசத்துக்கு முன்னாடியா! என்னடா சொல்றே?" என்று இருவரும் அதிர்ந்தனர்.
 
"டேய் ரெண்டு பேரும் குறுக்க எதுவும் பேசாம அமைதியா இருங்கடா! அப்போதான் என்னால சொல்ல முடியும்!"
 
இருவரும் அதை புரிந்துகொண்டு நான் என்ன சொல்ல போகிறேன் என்று என்னையே ஆவலுடன் பார்த்தனர்.
 
நான் சென்னையில் எங்களுக்குள் நடந்த சண்டைகளை பற்றி கூறினேன்.
 
மேலும் அவள்தான் மதுமிதா என இன்றுதான் தெரிந்துகொண்டேன்!
 
நான் அன்று ஏதோ கோபத்தில் பேசியதை இப்போது நிரூபித்தேன் என்று தவறாக புரிந்துக்கொண்டு எனக்கு தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறாள் என்பதை கூறி முடித்தேன்.
 
இதை அனைத்தையும் கேட்ட இருவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் அமைதியாக என்னையே பார்த்தனர்.
 
"டேய் எதாச்சும் சொல்லுங்கடா! ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க?"
 
"என்னத்த சொல்லுறது? நீ சொன்னத கேட்டு மயக்கம் வர்ற மாதிரிதான் இருக்கு” என்றான் தினேஷ்
 
"ஏன்டா இப்படி சொல்லுற?"
 
"ஹ்ம்ம்... நீ சொல்லுறத வச்சு பாத்தா மதுமிதா இப்படி மாறுனதுக்கு...." என்று தினேஷ் ஆரம்பித்தான்.
 
"நீ சொல்ல வந்தது சரிதான்! மதுமிதா திமிரு பிடிச்சவளா மாறுனதுக்கு நான்தான் காரணம்! அது வெங்கட்கிட்ட பேசும்போதுதான் கண்டுபிடிச்சேன்! ஆனா வெங்கிக்கு இந்த விஷயம் பத்தி எதுவுமே தெரியாது! நீங்க எதுவும் அவன்கிட்ட உளறிடாதீங்க" என்று கவலை அடைந்தேன்.
 
"ஹ்ம்ம் புரியுதுடா! நாங்க எதுவும் அவன்கிட்ட சொல்லமாட்டோம்" என்று இருவரும் உறுதி அளித்தனர்.
 
"மச்சி! உன்னோட லைப்ல இவ்வளவு நடந்துருக்குனு நினைக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று கார்த்தி என் மீது பரிதாபம் காட்டினான்.
 
"பரவாயில்ல விடு! ஆனா என் மேல இருந்த கோபத்துலதான் அவ உன்னைய அடிச்சுருக்கா அதனால என்னைய மன்னிச்சுடு மச்சி!"
 
"டேய் லூசு மாதிரி பேசிட்டு இருக்காத! உன்னோட சூழ்நிலை அப்படி அதுனாலதான் அவள அடிச்சே! அதுக்காக அவ இப்படி மாறினது ரொம்ப தப்பு! நீ எதுவும் கவலைப்படாத” என்று கார்த்தி ஆறுதல் சொன்னான்.
 
கார்த்தி என்னை பற்றி நன்றாக புரிந்துக்கொண்டான் என்று மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
 
“அவளும் பாவம்தான் மச்சி” என்றேன்.
 
ஆனால் தினேஷ் எதுவுமே பேசாமல் தீவிரமாக யோசித்தான்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#79
"தினேஷ் என்னடா திங் பண்றே?"

"அது ஒன்னும் இல்ல மச்சி! உன்னோட பிரச்சனைய எப்படி தீர்த்து வைக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்!"
 
"வேணாம்டா! ஒரு தடவ நீ சொன்ன ஐடியாவுக்கே இவ்வளவு பிரச்சனை வந்துருக்கு! இதுக்கு மேலேயும் வரனும்னு எதிர்பாக்குறியா?”
 
"டேய் நாயே! நான் பிளான்தான் சொன்னேன்! ஆனா நீ எப்பவும் போல படிச்சுதானே ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிட்டு இருக்கே!” என்று தினேஷ் கத்தினான்.
 
நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
 
ஆனால் தினேஷ் தொடர்ந்து பேசினான்.
 
"அதோட! நீ முதல் மார்க் வாங்குனது ஒரு விதத்துல ரொம்ப நல்லதுன்னு தோணுது மச்சி!"
 
"ஏன்டா அப்படி சொல்லுற?"
 
"அதனாலதான் மதுமிதாவுக்கு உன்மேல கோபம் வந்து எல்லா உண்மையும் உனக்கு தெரிஞ்சிது!"
 
"அட ஆமா! இது எப்படி எனக்கு புரியாம போச்சு?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன்.
 
"ஆரம்பத்துல இருந்தே நீ பொண்ணுங்க விஷயத்துல தத்தியாதான் இருக்கே! அதான் உனக்கு எதுவுமே புரியல" என்று தினேஷ் கிண்டல் செய்தான்.
 
"டேய் ரொம்ப ஓவரா பேசாதடா!" எழுந்து அவனை அடிக்க சென்றேன்.
 
கார்த்தி என்னை சமாதானம் செய்து அமர வைத்தான். ஆனால் தினேஷ் என் மீது கோபம் இல்லாமல் சிரித்துக்கொண்டே பேசினான்.
 
"விக்ரம் எதுக்கு இப்படி கோவப்படுற! இத சரி பண்ணுறதுக்கு நீ வேற எதுவும் வழி வச்சுருக்கியா?"
 
நான் மெல்ல தலையை அசைத்து இல்லை என்று பதில் கூறினேன்.
 
"அப்போ நான் சொல்லுறபடி செய்! எல்லாம் சரி ஆகும்!"
 
நம்மிடம் எந்த வழியும் இல்லை அதனால் தினேஷ் சொல்வது போல் செய்வதுதான் நல்லது என முடிவு செய்தேன்.
 
"ஒகே தினேஷ் நீ சொல்லுறபடி நடக்குறேன்டா! நான் இப்போ என்ன பண்ணனும்?"
 
"ஹ்ம்ம... அப்படி வா வழிக்கு! முதல்ல ஒரு பேப்பர் எடுத்து அதுல... ‘ஐ ஆம் வெரி வெரி சாரி மதுமிதா - பை விக்ரம்’ அப்படின்னு எழுதி நாளைக்கு காலைல அவளோட சைக்கிள்ல வச்சிடு அப்புறம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்!"

"ஏன்டா இதெல்லாம் ஒரு பிளானா? நான் நேர்லயே அவகிட்ட மன்னிப்பு கேட்டேன்! அதுக்கே அவ என்னைய மதிக்கல! இப்படி பண்ணுனா என்ன நடக்குமோ!" என்று எரிச்சல் அடைந்தேன்.
 
"விக்ரம்! நீ எத்தனை தடவ மன்னிப்பு கேட்டேனு அவசியம் இல்ல! அவ உன்னைய மன்னிக்கணும் அதுக்கான முதல் வழி இதுதான்! அதனால சொல்லுறபடி செய்! உன்னோட பிரச்சனை எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்! நீ எதுவும் கவலைப்படாத!"
 
"ஹ்ம்ம் செய்றேன்! என்ன நடக்குதுன்னு பாக்கலாம்" என்று ஒப்புக்கொண்டேன்.
 
அப்போது கார்த்தியும் நல்லபடியாக நடக்கும் என்று தைரியம் கொடுத்தான்.
 
அதன்பிறகு கொஞ்சம் தெளிவான மனதுடன் நாங்கள் மூவரும் வீட்டிற்கு கிளம்பினோம்.
 
இருவரும் எனக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தாலும் நான் வீட்டிற்கு சென்றதும் மனதில் ஒரு கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் எழுந்துக்கொண்டே இருந்தது.
 
நாளை நான் அப்படி செய்தால் மதுமிதா என்னை என்ன செய்ய போகிறாளோ...?
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#80
மிக மிக மிக அருமையான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)