Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#41
[Image: maxresdefault__3_.jpg]

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ பழிவாங்கும் மசாலா என்றாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களைக் கட்டிப்போடும் திரைக்கதையால் ஓரளவு தப்பிப் பிழைத்திருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் சவலைப் பிள்ளை போல் இறங்கியிருக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ சின்ன பட்ஜெட் படம் என்கிற வகையில் பெரிய ஆபத்தில் இல்லை. ஆனால் ‘ராட்சசன்’ படத்தில் வாங்கிய பெயரிலும் சம்பாதித்த பணத்திலும்  பாதியைப் பறிகொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
[Image: Dhanush.jpg]

நடிகர் விஷாலின் நிறுவனம் வாங்கி வெளியிருக்கும் கன்னட டப்பிங் படமான ‘கே.ஜி.எஃப்’க்கு தரப்பட்ட பில்ட் அப் படத்தில் இல்லை. இத்தனை நேரடி ரிலீஸ்களோடு மோதும் தகுதிகள் இல்லாத படம் என்பதால் அதுவும் தேறுவது கஷ்டம். ஆக இந்த ரேசில் தரத்திலும் வசூலில் தனித்த கொடி நாட்டியிருப்பதென்னவோ சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’தான்.
Like Reply
#43
சினிமா பாடல்கள் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: இளையராஜா உரிமை கொண்டாட தடை விதிக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

[Image: 201812230055176947_The-case-in-the-Chenn...SECVPF.gif]

சினிமா பாடல்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கே சொந்தம் என்றும், தான் இசையமைத்த படங்களில் இடம்பெறும் பாடல்களை இளையராஜா உரிமை கொண்டாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Like Reply
#44
திரைப்பட தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், அன்புச்செல்வன், ஜெபஜோன்ஸ், மீராகதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏதேனும் திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கும் போது இயக்குனரை தீர்மானிக்கின்றனர். இயக்குனரின் அறிவுரைப்படி நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுனர்கள் முடிவு செய்யப்படும். கடந்த 80 ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் சினிமா துறையில் இருந்து வருகிறது

ஊதியம் பெற்று கொண்டு பணியாற்றும் இசையமைப்பாளர்கள் தங்கள் பணிக்கு எந்த உரிமையும் கோர முடியாது. படத்தில் அவர்களின் பங்களிப்புக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளர் தான். இந்த உரிமையை இந்திய காப்புரிமைச் சட்டம் வழங்கி உள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த படங்களில் இடம் பெற்ற பாடல்களின் காப்புரிமை தனக்கே சொந்தம் என கூறி வருகிறார்.

இளையராஜாவை இசையமைப்பாளராக நியமித்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் காப்புரிமையை அவருக்கு வழங்கி, எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் அவர் இசையமைத்த பாடல்கள் மீது உரிமை கோருவது சட்டவிரோதமானது.

இதை அனுமதித்தால் படத்தின் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், இயக்குனர் ஆகியோரும் காப்புரிமை கோர நேரிடும். பெரும் தொகையை முதலீடு செய்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இறுதியில் எதுவும் கிடைக்காத நிலை உருவாகும்

எனவே, சம்பந்தப்பட்ட திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களே அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சி, பாடல், என அனைத்திற்கு முழுமையான உரிமையானவர்கள் என அறிவிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும். திரைப்பட தயாரிப்பாளர்களின் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மூலம் இளையராஜா சம்பாதித்த பணம் குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஐகோர்ட்டுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இந்த மனு ஜனவரி மாதம் விசாரணைக்கு வர உள்ளது.
Like Reply
#45
தயாரிப்பாளர் சங்க ‘சீல்’ அகற்றப்பட்டது செயலாளர் கதிரேசன் பேட்டி

[Image: 201812222333334440_Producer-union-Seal-w...SECVPF.gif]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். இவருக்கு எதிராக ஒரு தரப்பு தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டார்கள்.
Like Reply
#46
சாவியை சங்க பதிவாளர் அலுவலக அதிகாரியிடம் ஒப்படைக்க முயற்சி செய்தார்கள். அதிகாரிகள் அந்த சாவியை வாங்க மறுத்துவிட்டார்கள். மறுநாள் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்த அதன் தலைவர் விஷால், பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின்னர் விஷால் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு ‘சீல்’ வைத்ததற்காகவும், போலீஸ் நடவடிக்கைக்காகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்றுமாறு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவின்படி, சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ நேற்று முன்தினம் அகற்றப்பட்டது. மேலும் தியாகராயநகரில் உள்ள மற்றொரு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீலும் அகற்றப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரரேசன் கூறியதாவது:-

“தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ ஐகோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது. அதிகாரிகள் கேட்டபடி தஸ்தாவேஜுகளை நாங்கள் கொடுத்து வருகிறோம். அவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். மீண்டும் யாராவது ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

சங்க அலுவலகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும்படி நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

இவ்வாறு கதிரேசன் கூறினார்.
Like Reply
#47
ஆஃப்பாயில்... அட்டூழியம்... அட்ரா சக்க கலாய்!- 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' விமர்சனம்

[Image: 145412_thumb.jpg]

ரு ஆஃபாயிலால் பூனையை புலியாகவும் கரப்பானை காண்டாமிருகமாகவும் சில்வண்டை சிங்கமாகவும் மாற்ற முடியும் என ஆஃபாயில் தியரி பேசுகிறது, 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'
Like Reply
#48
[Image: Regina-Cassandra-Silukkuvarupatti-Singam..._15123.jpg]

திண்டுக்கல் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர், போலீஸ் கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தி. ஒற்றை ஓடைக் கூட உடைக்க தெம்பில்லாத, சரியான பயந்தாங்கோளி போலீஸ்!. தான் உண்டு தன் பாட்டி உண்டு என இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சென்னையில் காவல் அதிகாரியையே நடுரோட்டில் வைத்துப் போட்டுத்தள்ளும் பிரபல ரௌடி, சைக்கிள் சங்கர். அவனைக் கைது செய்ய ஒட்டுமொத்த காவல்துறையும் தேடி அலைகிறது. டோனி, நிலக்கோட்டை நாராயணன், பாஸ்கி, ராஜீ, ஷேர் ஆட்டோ சந்திரன், கனகா என எண்ணற்ற பாத்திரங்களை இடைப்புள்ளியாய் வைத்து, சத்தி - சங்கர் இருவரையும் காலமென்பது கோலம் போட்டுக் கோர்த்துவிடுகிறது. பின், நடப்பதெல்லாம் கலர்ஃபுல் காமெடி களேபரம்! ரேஸிங், சேஸிங், மாறுவேடம், உருட்டுக்கட்டை, சாக்கு மூட்டை என சுந்தர்.சி, எழில் பாணியில் கிச்சு கிச்சு மூட்டுகிறது, திரைக்கதை.
Like Reply
#49
[Image: ss_1_15535.jpg]

கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தியாக, விஷ்ணு விஷால். 'ராட்சசனி'ல் சீரியஸ் போலீஸாக கெத்து காட்டியவர், 'சிலுக்குவார்பட்டி சிங்க'த்தில் வெத்து போலீஸாக சிரிப்பு காட்டியிருக்கிறார். காமெடி படங்களுக்கென அவர் கண்டுபிடித்து வைத்திருக்கும் அதே பழைய எக்ஸ்பிரெஷன்கள்தான் என்றாலும், ரசிக்க வைக்கிறது. வில்லனுக்குப் பயந்து விதவிதமான வேடங்களில் தலைமறைவாய்த் திரிவது, சரவெடி. அதிலும், குடுகுடுப்பைக்காரர் வேடம் போட்டு, பூம்பூம் எருமையோடு திரியும் இடம் அல்டிமேட்!. முறைப்பெண் ராஜீயாக, ரெஜினா கஸான்ட்ரா. அழகாய் இருக்கிறார்! வில்லன் சைக்கிள் சங்கராக, சாய்ரவி. படத்தில் ஒரு ஆஃபாயிலைத் தட்டிவிட்டு அவர் படும் பாடு! ஸ்டேஷன் லாக்கப்பில் சாய்ரவி அடைபட்டுத் தவிக்கும் ஒவ்வொரு ஃப்ரேமும் குபீர் சிரிப்பு. அவரின் வலது கை டோனியாக, யோகிபாபு. பல இடங்களில் காமெடி கவுன்டர்களைத் தெறிக்கவிட்டிருக்கிறார். வேற லெவல் தல! லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், கருணாகரன், லொள்ளு சபா மனோகர், மாரிமுத்து, வடிவுக்கரசி, சௌந்தரராஜா... என எல்லா நடிகர்களும் நிறைவான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். 'கனகா' எனும் கௌரவ வேடத்தில் ஓவியா. சார்... ஓவியா சார்!
Like Reply
#50
லாஜிக், மேஜிக் எல்லாம் தூக்கி பரணில் போட்டுவிட்டுப் படத்தைப் பார்த்தால், வாய்விட்டு சிரிக்கலாம். இல்லையேல், வாய்விட்டு அழுதாலும் ஆச்சரியமில்லை. கல்யாண வீடு, உருட்டுக்கட்டை, சாக்கு மூட்டை, டாடா சுமோ, ஜில்ஜில் பார், செல்போன் ஆதாரம், மாறுவேடம் என எல்லாமும் ஏற்கெனவே பார்த்துவிட்டதுதான். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகுமென ஆண்டாண்டு காலமாய் நாம் பார்த்துப் பதியவைத்த திரைக்கதை, அச்சு பிசகாமல் அப்படியே நகர்கிறது. ஆனால், அந்தப் படங்களில் இருக்கும் சுவாரஸ்யமான நீளமான  காமெடிகள் இதில் மிஸ்ஸிங். பாட்ஷா, கேப்டன் பிரபாகரனை வைத்து ஆனந்த ராஜுக்கும், மன்சூர் அலிகானுக்கும் பிடித்திருக்கும் ரீவண்ட் காட்சிகள் மட்டும் செம.  லேடீஸ் டாய்லெட்டுக்குள் தொடர்ச்சியாக ஆண்கள் நுழைந்துகொண்டே இருப்பதையெல்லாம் இன்னுமா காமெடியா என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
[Image: ss3_15103.jpg]
லியோன் ஜேம்ஸின் பின்னணி இசையில் புதுமை என்று ஒன்றுமில்லை. அதேநேரம் குறை என்றும் ஒன்றுமில்லை. பாடல்கள் ஓகே! ஜெ.லெக்‌ஷமனின் ஒளிப்பதிவிலும் அதேதான். புதுமை என்று ஒன்றுமில்லை, அதேநேரம் குறை என்றும் ஒன்றுமில்லை. ரூபனின் எடிட்டிங் சேஸிங் காட்சிகளில் கவனிக்கவைக்கிறது. மற்றபடி, அதிலும் புதுமை என்று... நீங்களே கம்ப்ளீட் செய்துகொள்ளுங்கள்!

காமெடி மட்டும் கைவிட்டிருந்தால், ஜவ்வாக இருந்திருக்கும் படம். காமெடி போதுமான அளவு கைக்கூடி வந்ததால், ஜிவ்வென்னு இருக்கிறது இந்த, 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'.
Like Reply
#51
''குடிசை மாற்று வாரியத்தில் இருந்து சொந்த வீட்டுக்கு குடியேறிருக்கேன்'' - விஜே சித்ரா

க்கள் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாய் வளர்ச்சியடைந்திருக்கிறார் சித்ரா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர், 'ஜோடி' டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய பர்சனல் விஷயங்களைப் பசுமை மாறாமல் பகிரச் சொல்லிக் கேட்டோம்.

''எங்க வீட்டுலேயே நான்தான் கடைக்குட்டி. என் அண்ணனும், என் அக்காவும் என்னைவிட ரொம்ப வயசு மூத்தவங்க. எங்க அம்மா வயித்துல நான் இருக்கும்போது இன்னொரு குழந்தை வேண்டாம்னு மருந்துலாம் சாப்பிட்டாங்களாம். ஆனாலும், எல்லாத்தையும் எதிர்த்து நான் பிறந்துட்டேன். எங்க பரம்பரையிலேயே முதல் தலைமுறை டிகிரி படிச்சது நான் மட்டும் தான். அதுவும் முதுகலைப் பட்டம் வரைக்கும் படிச்சிருக்கேன். அதுமட்டுமில்லாமல், யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்ன்னு எல்லா இடத்துலேயும் பெருமையா சொல்லுவேன். என்னை மீடியாவுக்கு அனுப்பவே மாட்டேன்னு சொன்னாங்க. நான் மீடியாக்குள்ளே வந்ததே ஒரு ஆக்ஸிடெண்ட்ல தாங்க!" புன்னகைக்குப் பின்னர் தொடர்ந்தார்.

[Image: 6b52bed8-ed60-4691-b2d9-36349f1686d2_14138.jpg]
Like Reply
#52
"விஜய் டிவியில் 'நண்பன்' இன்டர்வியூ ஃபங்ஷன் நடந்துச்சு. நான் விஜய் சாரோட தீவிர ரசிகை. அந்த சமயம் நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். விஜய் வர்றார்னு என் ஃப்ரெண்ட்ஸெலாம் சொன்னதும் நானும் அவரைப் பார்க்கலாங்குற ஆசையில் தான் அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். அந்த நிகழ்ச்சியை கோபிநாத் சார்தான் இன்டர்வியூ பண்ணாங்க. அங்கே போனப்போ ஒரு பிரேம்லயாச்சும் நம்ம மூஞ்சை காட்ட மாட்டாங்களான்னு ஏக்கமா இருந்துச்சு. இப்போ அந்த இடத்துலேயே நான் நிற்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. அதுக்கப்புறம்தான் எனக்கு மக்கள் டிவியில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு கிடைச்ச வாய்ப்பை முழுசா பயன்படுத்துக்கிட்டேன்'' என்றவரிடம் மீடியாவுக்குள்ளே நுழையும்போது வீட்டுல எதிர்ப்பு தெரிவிக்கலையான்னு கேட்க சிரிக்கிறார்.'ஆரம்பத்துல வீட்டுல சொல்லவே இல்ல. எங்க வீட்டுல மக்கள் டிவி வைக்கவே விடமாட்டேன். அவங்களுக்குத் தெரியாம தான் பண்ணிட்டு இருந்தேன். அவங்களுக்குத் தெரிஞ்சதுக்கு அப்புறம் கோபப்பட்டாங்க... சமாளிச்சிட்டேன். இப்போ அவங்களே என்ஜாய் பண்றாங்க. பொண்ணுங்களுக்கு மீடியா பாதுகாப்பு இல்லைங்குறது அவங்களுடைய எண்ணம். மீடியாதான் பொண்ணுக்கு பாதுகாப்புன்னு இப்போ தெரிஞ்சுகிட்டாங்க. என்னைப் பார்த்துட்டு எங்க ஃபேமிலியிலுள்ளவங்க அவங்களுடைய பசங்களையும் மீடியாவுக்கு அனுப்புறாங்க. நான் எல்லோருக்கும் ரோல் மாடலா இருக்கேன்னு நினைக்கும்போது நிஜமாகவே செம்ம ஹாப்பி!'' என்றவரின் எமோஷனல் பக்கங்கள் வலிமிகுந்தது! அதனைப் பகிர்ந்தார்

[Image: 43325521_498089177266568_162506699711900..._14476.jpg]
Like Reply
#53
''நாங்க ஆரம்பத்துல குடிசை வீட்டுல தான் இருந்தோம். அதுக்கப்புறம் குடிசை மாற்று வாரியம் மூலமா அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுத்தாங்க. அந்த வீடு பெட்டி சைஸ்ல தான் இருக்கும். எனக்குன்னு தனி பெட்ரூம் வசதியெல்லாம் கிடையாது. நான் காலேஜ் படிக்கும்போது என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குலாம் போகும்போது அவங்களுடைய பெட்ரூம்ல உட்கார்ந்து கதை பேசியிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் எங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாங்கன்னா கொஞ்சம் சங்கடமா இருக்கும். ஆரம்பத்திலிருந்தே எனக்காக என் அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களை ராஜா, ராணி மாதிரி பார்த்துக்கணும்னு ஆசை இருந்துச்சு. ரொம்ப ஹார்ட்ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். கிடைக்கிற பணத்தை குருவி சேர்க்கிற மாதிரி சேத்து வைச்சேன். எந்த ஈவண்ட்டிற்கு கூப்பிட்டாலும் பேசப் போயிடுவேன். இது சின்ன நிகழ்ச்சி நாம இப்போ ஹீரோயின் இங்கெல்லாம் போகக்கூடாதுன்னுலாம் யோசிக்க மாட்டேன். ராத்திரி. பகலா வேலைப் பார்த்து காசு சேமிச்சேன். முதல்ல சொந்தமா கார் வாங்கினேன். அந்த காரிலேயே மதுரை வரைக்கும் கூட டிரைவ் பண்ணிட்டு ஈவண்ட் பண்ணப் போயிருக்கேன். டிரைவர் வெச்சா காசு செலவாகும். நாமே ஓட்டிட்டுப் போயிடலாம்னுலாம் சிக்கனமா இருந்துருக்கேன். இப்படி மூணு வருஷம் சேமிச்சு இப்போ எங்க அம்மா, அப்பாவுக்காக ஒரு வீடுகட்டிக் கொடுத்திருக்கேன்.
தனி வீடா இருந்தா அவங்க மட்டும்தான் இருக்க முடியும். அவங்க வீட்டிலிருந்தே சம்பாதிக்கிற மாதிரி எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே இரண்டு சின்ன வீடு கட்டினேன். அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு அதில் கிடைக்கிற பணத்தை வைச்சு அவங்க உட்கார்ந்து சாப்பிட வழி ஏற்பாடு பண்ணிட்டேன். இப்போ என்னைப் பெண் பிள்ளையா பெத்ததுக்கு என் அம்மாவும், அப்பாவும் பெருமைப்பட்டுட்டு இருக்காங்க.
Like Reply
#54
[Image: 1beebf75-a798-4ee7-89dd-87a715792476_14216.jpg]

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மா, அப்பாவுடைய முப்பத்தி ஐந்தாவது திருமண நாள் வந்துச்சு. இதுவரை அவங்க திருமண நாளைக் கொண்டாடினதே இல்ல. அவங்களை சர்ப்ரைஸ் பண்ணனும்னு நினைச்சேன். என் அம்மாவுக்கு தங்கக் கொலுசு, தங்கக் கம்மல் எங்க அப்பாவுக்கு தங்க மோதிரம் வாங்கினேன். என் அப்பா அம்மாவுக்கு கொலுசையும், கம்மலையும் போட்டுவிட்டாங்க. அம்மா, அப்பாவுக்கு மோதிரம் போட்டுவிட்டாங்க. அதைப் பார்க்கவே அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அன்னைக்கு என்னை பெத்தவங்க முகத்துல பார்த்த அந்த சந்தோஷத்துக்கு எதை மாற்றாக் கொடுத்தாலும் ஈடாகாது!

இந்தச் சமூகத்துல பெண் குழந்தை வேண்டாம்னு நினைக்கிறவங்க கவனத்துக்கு, பெண் குழந்தைன்னால எதுவும் முடியாதுன்னு நினைக்காதீங்க.. பெத்தவங்களை நல்லா பார்த்துக்கணும்னு வெறித்தனமா உழைக்கிறதுக்கு பெண் குழந்தைகளால முடியும். நானே அதுக்கு எக்ஸாம்பிள். நிறைய பெண்கள் இதே மாதிரி அவங்களுடைய கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் உழைச்சிட்டு இருக்காங்க'' என்றார் பெருமிதமாக!
Like Reply
#55
ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்: ராம்கோபால் வர்மா பாராட்டு
[Image: rajinijpg]
ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான், ‘பேட்ட’ ட்ரெய்லரில் ரஜினிக்கு 20 வயசு குறைந்த மாதிரி இருப்பதாக பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா பாராட்டி இருக்கிறார்.

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பேட்ட’ படத்தின் ட்ரெய்லர் இன்று (டிசம்பர் 28) ரிலீஸ் ஆனது. இந்நிலையில், ரஜினிகாந்தைப் பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா..இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரஜினிதான் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தில் ரஜினி 20 வயசு இளமையா, 30 மடங்கு உற்சாகமாகத் தெரிகிறார்" எனப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம், பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனையொட்டி இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் வெளியான நிலையில் ட்விட்டரில் #PettaTrailer #GetRajinified #PettaPongalParak ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
Like Reply
#56
அதேபோல், ட்ரெய்லரில் வரும் "style ah irukena ah, naturally" என்ற வசனமும் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. "ஏய், எவனுக்காவது பொண்டாட்டி, புள்ள குட்டின்னு சென்டிமெண்ட்டு, கின்டிமெண்ட்டு இருந்தா அப்டியே ஓடிப்போயிடு. கொல காண்ட்ல இருக்கேன். மவனே, கொல்லாம உடமாட்டேன்... " என்ற டயலாக்கை சமூக வலைதளங்களில் ஆதரித்தும் விமர்சித்தும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
Like Reply
#57
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’


[Image: 201812290023472787_171-films-released-th...SECVPF.gif]

சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் 171 படங்கள் அதையும் மீறி  வந்தன. இவற்றில் குறைவான படங்களே லாபம் பார்த்தன. மற்றவை போட்ட முதலீட்டை கூட திரும்பப் பெற முடியாமல் நஷ்டத்தை சந்தித்தன. 

வசூல் நிலவரம் குறித்து பிரபல வினியோகஸ்தரும், தியேட்டர் அதிபருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:–‘‘இந்த வருடம் அதிக படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே லாபம் பார்த்தன. பெரிய படங்களில் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் தமிழக அளவில் வசூலில் முதல் இடத்தில் இருந்தது. ரஜினிகாந்தின் 2.0 சென்னையில் வசூலில் முதல் இடத்தை பிடித்தது. இந்த படத்தை 3டியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். சென்னை தியேட்டர்களில் மட்டுமே அந்த வசதி இருந்தது. 


உலக அளவில் வசூலில் 2.0 முதல் இடத்தை பிடித்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியானதால் அதிக வசூல் ஈட்டியது. கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் வசூலில் 3–வது இடத்தை பிடித்தது. டிக்கெட் கட்டணம் குறைவாக இருந்த புறநகர் பகுதிகளில் இந்த படம் நன்றாக ஓடியது. 

இரும்புத்திரை, 96, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களும் நல்ல வசூல் பார்த்தன. சிறிய பட்ஜெட்டில் வந்த படங்களில் ‘ராட்சசன்’ அதிக வசூல் ஈட்டியது. மேலும் சில சிறிய பட்ஜெட் படங்களும் லாபம் கண்டன.’’

இவ்வாறு அவர் கூறினார்.
Like Reply
#58
Viswasam Trailer: தல ரசிகர்கள் ரெடியாக இருங்க: இன்று  பிற்பகல் 1.30 மணிக்கு வருது விஸ்வாசம் டிரைலர்!
[Image: Tamil-image.jpg]
வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 
 தம்பி ராமையா, சத்யராஜ், ஜகபதி பாபு, ராஜ்கிரண், போஸ் வெங்கட், கோவை சரளா, மைம் கோபி, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியாக உள்ளது. அண்மையில், இப்படத்தின் அடிச்சிதூக்கு, வேட்டிகட்டு மற்றும் தல்லே தில்லாலே ஆகிய பாடல்களின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி வைரலாது. மேலும், ஒட்டு மொத்த பாடல்களும் ஜூக் பாக்ஸாக வெளியானது. 


இந்த நிலையில் தலைவர் ரஜினிகாந்தின் பேட்ட மரணம் மாஸ் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து வருத்தத்தில் இருந்த தல ரசிகர்களுக்கு விஸ்வாசம் டிரைலர் தொடர்பான் அறிவிப்பு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஆம், இன்று  பிற்பகல 1.30 மணிக்கு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் விஸ்வாசம் டிரைலர் வெளியாகும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து. இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை தல ரசிகர்கள் தற்போதே கொண்டாட தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Like Reply
#59
விஷாலுக்கு கல்யாணம்; ஆந்திரப் பெண் அனிஷாவை மணக்கிறார்
[Image: vishalJPG]

விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

நடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். ஆனால், 'செல்லமே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி', 'தாமிரபரணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார்.

மேலும், தயாரிப்பாளராகவும் மாறி 'துப்பறிவாளன்', 'பாண்டியநாடு', 'ஆம்பள' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, "நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன். லட்சுமிகரமான பெண்ணைத் தான் திருமணம் செய்யவுள்ளேன்" என்று தெரிவித்து வந்தார் விஷால். நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் என தெரிகிறது.

இதனால், விஷாலுக்கு பெண் பார்க்கும் பணிகளில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தார். தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை முடிவு செய்துள்ளனர். இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஹைதராபாத்தில் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே திருமண தேதியையும் முடிவு செய்யவுள்ளனர்.
Like Reply
#60
[Image: Cute-Kittens-and-Babies-17-HD-Images-Wallpapers.jpg]

எல்லாரும் நல்ல இருக்கணும்.ஹாப்பி நியூ இயர்  Heart
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)