05-01-2024, 09:18 PM
அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த கார் எங்கள் வீட்டு போர்டிகோவில் நின்றிருந்தது. ஆனால் புத்தம் புதிதாக கருப்பு நிறத்தில் மின்னிய அந்த புதுக் காரை பார்த்து முழுதாக மகிழ கூட முடியாத மனநிலையில் நானும் என் கணவரும் இருந்தோம்.
என் கணவரின் பலமும் பலவீனமும் எனக்கு நன்றாக தெரியும். செக்ஸ் விசயத்தில் அவர் பலவீனமானவர் இல்லை என்பதை நான் உணர்ந்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. சரி செய்யக் கூடிய ஒரு சின்ன குறையை அவர் தன் தாழ்வு மனப்பான்மையினால் அவராகவே பெரிதாக்கிக் கொண்டு, பின் அதை வைத்துக் கொண்டே, மனதில் வக்கிரமான காம எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, அந்த எண்ணங்களுக்கு என்னையும் பலியாக்கி, இன்று மீள முடியுமா? என்ற குழப்பத்தில், ருசி கண்ட பூனையாக காமத்தில் நானும் விழுந்து இரு தலை கொள்ளி எறும்பாக தவிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டார். இத்தனைக்கும் அவர் தான் ஆரம்பம் என்றாலும் அவரால் என்னை இழக்கவும் முடியாது. நானில்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அவரால் என்னை கர்ப்பமாக்க முடியாது என்ற உண்மையால் உண்டான தாழ்வு மனப்பான்மை, அதை மறக்க, மறைக்க, மனைவியையே இன்னொருவன் அனுபவிக்க அனுமதித்த மனதில் வக்கிரம், அதில் சுகம் காணும் வினோதம், உணர்ச்சிகள் வடிந்ததும், என்னை இழந்து விடுவேனோ என்ற பயம் என்று அவரும் என்னை போலவே எதை அனுபவிப்பது, எதை விடுவது என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார் என்பது எனக்கும் தெரியும்.
குப்தாவுடன் இருந்த நாட்களும், அவர் மாட்டி விட்ட தங்க சங்கிலி, என் கழுத்தில் என் கணவர் கட்டிய தாலிக்கு இணையாக தொங்கிக் கொண்டிருப்பதும், எதிர்பார்க்காத அளவு, நினைத்துப் பார்க்க முடியாத அளவு குப்தாவால் கிடைத்த தொகையும், இப்போது உச்சகட்டமாக, பரிசாக வீட்டுக்கு வந்த விலையுயர்ந்த காரும் என் கணவருக்கு என் மேல் நம்பிக்கை குறையவும், சந்தேகம் உண்டாகவும், பயப்படவும் காரணங்களாகி விட்டன. உடலளவில் சுகம் தேடிய நான் மனதளவில் குப்தாவிடம் விழுந்து விட்டேனோ என்று அவர் குழம்புவது அவருடைய நடவடிக்கைகளில் நன்றாகவே தெரிந்தது.
நான் அவரை விட்டு விட்டு குப்தாவுடன் சென்றாலும் சென்று விடுவேன் என்ற பயத்தை விட, நான் குப்தாவுக்கு என் மனதில் இடம் கொடுத்து விட்டேனோ, என் கணவர் இருக்க வேண்டிய இடத்தில் அவரை கொண்டு வந்து விட்டேனோ என்ற பயம் என் கணவரிடம் அதிகம் தென்பட்டது. தன்னை விட ஒருவன் தன் மனைவியின் மனதில் நிறைந்திருக்கிறான் என்ற எண்ணத்தை எந்த ஆணும் சகித்துக் கொள்ள மாட்டான் என்று தோன்றியது. விபசாரியாகவே இருந்தாலும், ஒரு பெண்ணின் மனதளவில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆண்கள் என்பது புரிந்தது.
குப்தாவுக்கு போன் செய்து ஏன் இப்படி என் வாழ்க்கையோடு விளையாடுகிறீர்கள் என்று கோபமாக கேட்டு விடலாமா என்று யோசித்த போது, என்னால் குப்தாவிடம் அப்படி கோபமாக பேச முடியாது என்பதோடு, அவருக்கு போன் செய்தால், அவர் எதையாவது பேசி குழப்பி என் மனதை இன்னும் கலைக்க முயல்வார் என்பதால், அந்த பயத்திலேயே நான் குப்தாவுக்கு போன் செய்யும் எண்ணத்தை கை விட்டேன்.
என் கணவரிடம் மனம் விட்டு பேசி, குப்தா என்னை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ள கேட்டதையும், அவருடைய கருவை வாங்கிக் கொள்ளத் தயாரா என்று கேட்டதையும் மறைக்காமல் சொல்லி, அதற்கெல்லாம் நான் உடன்படவில்லை, எதையுமே ஏற்க மறுத்து விட்டேன், அப்படி மறுத்ததற்கு ஒரே காரணம் நான் உங்களை நேசிப்பதுதான், உடல் சுகத்துக்காக நான் சிலருடன் படுத்து புரண்டிருந்தாலும், அவருடைய வாழ்க்கையின் இறுதி வரை அவருடன் தான் இருப்பேன் என்று அவருக்கு புரிய வைத்து விடலாம் என்று நினைத்தாலும், என் கணவர் என்னிடம் முகம் கொடுத்து பேசவே மறுத்து, விலகி விலகி சென்றது வருத்தமாகவும், பின் கோபமாகவும் இருந்தது.
கடைசியில் லாவண்யாவுக்கு போன் செய்து அவளிடமாவது பேசிக் கொண்டிருக்கலாம், அவளுடன் பேசினால் மனதுக்கு கொஞ்சம் இதமாக இருக்கும் என்பதோடு, எதாவது உருப்படியான யோசனைகள் சொன்னாலும் சொல்வாள் என்று நினைத்து அவளுக்கு போன் செய்தால், அந்த குட்டிக் குரங்கு போனை எடுக்கவே இல்லை. கோபத்தில் தேவுடியா சிறுக்கி, எவனையாவது வீட்டுக்கு வர வைச்சு கட்டில்லே புரண்டுட்டு இருக்காளோ என்னமோ என்று ஆத்திரமாக வந்தது.
அன்று இரவும் நானும் என் கணவரும் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டும் எந்த பேச்சும் இல்லாமல் தான் உறக்கத்தில் விழுந்தோம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. எக்ஸாம் வருவதால் அன்றும் அரை நாள் ஸ்கூல் வைத்திருந்திருந்தார்கள். ஆனால் இருந்த மனநிலையில் ஸ்கூலுக்கு செல்ல விருப்பமில்லாமல் நான் போனில் உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு வீட்டிலேயே இருந்துக் கொண்டேன்.
கணவருடன் பேசலாம் என்றாலும் அவருடைய அலட்சியமான போக்கு எரிச்சலை உண்டாக்க, எதற்காக அவரிடம் பணிந்து போக வேண்டும் என்ற ஈகோ பேச விடாமல் தடுத்தது. லாவண்யாவுக்கும் போன் செய்யவில்லை. காலை சமையலை முடித்து விட்டு கணவருக்கு எடுத்து வைத்தேன். அவர் அமைதியாக சாப்பிட்டு விட்டு செல்ல, நானும் எடுத்து வைத்து சாப்பிட்டு விட்டு ஹாலில் இருக்கும் என் கணவருடன் போய் உட்கார்ந்து குழப்பத்தில் சிக்கி இருக்கும் எங்களுக்குள்ளான உறவை சீராக்க முயற்சிக்கலாமா என்று யோசித்து பின் வேண்டாம் என்று முடிவு செய்து படுக்கையறைக்குள் நுழைந்துக் கொண்டேன்.
என்ன செய்வது என்ற சிந்தனையில் குழம்பியபடி படுக்கையில் சாயலாம் என்று நினைத்த போது தான் கையிலிருந்த செல்போன் சிணுங்க துவங்கியது. டிஸ்ப்ளே குப்தா என்று காட்ட நான் கொஞ்சம் திகைத்து தான் போனேன்.
குப்தாவுடன் இருந்த அந்த இரண்டு நாட்களை பொருத்த அளவில் நான் அவருடைய வித்தியாசமான, அதே சமயம் என்னை மதிப்பாகவும் அன்பாகவும் நடத்திய வித்த்தினால் மயங்கி தான் கிடந்தேன். அதற்கும் மேலே அவரை போன்ற சமூகத்தில் பெரிய அந்தஸ்திலும், பொருளாதாரத்தில் மிக உயர்ந்த இடத்திலும் இருக்கும் ஒரு பெரிய மனிதர் என் காலடியில் மயங்கி கிடப்பது எனக்குள் ஒரு கர்வத்தை உருவாக்கியதால், அந்த கர்வம் இன்பமாக இருந்த காரணத்தாலும் நான் அவரிடம் கொஞ்சம் அன்னியோன்னியமாக தான் பழகினேன். மனதார என் உடலை அவருக்கு விருந்தாக்கினேன். இருந்தாலும், மனதில் ஒரு ஓரத்தில், எனக்கு, இந்த உறவின் மூலம் என் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளும் திட்டமும் இருந்தது என்பதை மறுக்கவே முடியாது.
அங்கிருந்து வெளியேறி இயல்பு வாழ்க்கைக்குள் சென்ற பின் குப்தாவிடம் இருந்த மயக்கம் மெல்ல மெல்ல விலக, என் மனம் இந்த உறவை மேலும் நீடித்துக் கொண்டு செல்ல விரும்பவில்லை. இதனால் உண்டாகக் கூடிய சிக்கல்களை நினைத்து, போதும், இனி பட்டும் படாமல் இருந்துக் கொண்டு, இது வரை கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டு, கணவருடன் இன்பமாக வாழவும், இருவரின் உழைப்பில் கிடைக்கும் வருமானத்தை வைத்து மெல்ல மெல்ல மற்ற தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளலாம் என்றும் தான் என் மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
என் மாணவர்களை பொருத்த அளவில், அவர்களுடைய நடவடிக்கைகள் இனி அவர்களால் தொல்லை இருக்காது என்று நினைக்க வைத்தது. உடல் சார்ந்த தேவைகளை பொருத்த அளவில், ஆசை தீர விதவிதமாக அனுபவித்தாகி விட்டது. இனியாவது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ முயற்சிக்கலாம், முடியவில்லை என்றால், கணவரும் தன் குணத்தை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால், நம்பிக்கையான ஆண் அமைந்தால், உடல் பசிக்கு தீனி போடலாம் என்றெல்லாம் தோன்றினாலும், எந்த நிரந்தர உறவையும் உண்டாக்கி வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ள மட்டும் என் மனம் விரும்பவே இல்லை. குப்தாவும் பத்தோடு பதினொன்றாக தான் இப்போது எனக்கு தோன்றினார்.
எல்லாம் அந்த கார் எங்கள் வீட்டு போர்டிகோவில் வந்து நிற்கும் வரைதான். குப்தாவின் பரிசு உண்மையில் இன்னொரு லாபம் என்ற விதத்தில் சந்தோஷத்தை கொடுத்தது என்றாலும், குப்தாவை அவ்வளவு எளிதாக கழட்டி விட்டு விட முடியாது என்ற அச்சத்தையும், அவருடைய அன்பை கண்டு நெகிழ்ச்சியும் உண்டானது நிஜம். மீண்டும் என் மனம் குழப்பத்தில் விழுந்திருந்தது.
இப்போது போன்...
என்ன பேச போகிறார்?
நான் என்ன பேசுவது? எப்படி ரியாக்ட் செய்வது? ஒன்றுமே புரியாமல் போன் டிஸ்ப்ளேவை நீண்ட நேரம் பார்த்தபடி குழப்பமாக நின்றிருந்தேன். போன் கட்டாவதாக தெரியவில்லை. வேறு வழியில்லாமல் காலை அட்டெண்ட் செய்தேன்.
போனை காதில் வைத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நான் அமைதியாகவே இருக்க, மறுமுனையில் சில நொடிகள் மெளனத்திற்குப் பின்...
மெல்லிய கரகரத்த குரல் அம்மு... என்று மெலிதான ஏக்கத்தோடு ஒலிக்க...
நான் எனக்குள் உடைந்தேன்.
மீண்டும் சில நொடிகள் மெளனத்திற்குப் பின் குப்தா தொண்டையை செரும, என்னை பதில் சொல்ல சொல்கிறாரோ, அதற்கு சமிஞ்சையாக தான் தொண்டையை செருமிக் காட்டுகிறாரோ என்று தோன்றினாலும், குப்தா தன் குரலை சரி செய்துக் கொள்கிறார் என்பதை அவர் இரண்டாவது முறை தொண்டையை செருமிய ஒலியில் புரிய...
என்ன சொல்லப் போகிறார் என்று நான் அமைதியாக காத்திருக்க...
மனதில்...
ஐயோ... இவர் பாடப் போகிறார் போல தெரிகிறதே. இந்த ஆர்வ கோளாறு இவரை விட்டு விலகவே விலகாதோ என்று நினைத்தவள், அவருடைய தமிழ் அறிவை ஏற்கெனவே நன்றாக அறிந்தவள் என்பதால், கண்டிப்பாக இவர் எப்படி பாடினாலும், பாடலின் வரிகளால் என்னை நிச்சயமாக உருக வைத்து விடுவார். பாடலுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத கட்டை குரல் என்றாலும் அதில் காதலையும் கனிவையும் கலந்து என்னை மயக்க முயற்சிப்பார், நானும் மயங்கி விடுவேன் என்று பயமாக இருக்க, எதையாவது பேச துவங்கி, அவர் பாடுவதை தடுக்க நினைத்த கணத்தில், குப்தாவின் குரல் கரகரவென ஒலிக்கத் துவங்கியது.
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் எணணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கி விட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய் ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்
கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும் கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...
குப்தா இந்த வரிகளை தன் கரகரத்த குரலில் சொல்ல சொல்ல என்னை அறியாமல் என் விழிகள் கசிய துவங்கின. கட்டிலில் அமர்ந்து தலையணையின் மீது முதுகை சாய்த்துக் கொண்டு, விழிகளில் நீர் மெல்ல கசிந்து திரண்டு முத்து போல கன்னங்களில் உருண்டோட, எதுவும் பேசாமல் அமைதியாக அவர் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டிருந்தேன்.
சொல்லி முடித்து விட்டு குப்தா சில நொடிகள் நான் எதாவது சொல்வேனா என்று காத்திருக்க, பேச முடியாமல் என் நாக்கு அசைய மறுத்து அடம் பிடிக்க, குப்தா அதே குரலில் பேச விருப்பமில்லையா அம்மு என்ற போது நான் உடைந்து போனவளாக விசும்பலோடு இப்படி எல்லாம் கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதீங்க என்றேன்.
குப்தா சில நொடிகள் அமைதிக்குப் பின் கார் பிடிச்சிருந்ததா? என்றார்.
ம்... என்று ஒற்றை சொல்லில் பதில் சொன்னேன்.
முழு தொகையும் நானே பே பண்ணிருப்பேன். உங்க பணமும் அதிலே சேர்ந்திருந்தா தான் உங்களுக்கும் ஒரு மனதிருப்தி இருக்கும்ன்னு தான் முழு தொகையும் கட்டலை.
ம்...
உங்களுக்கு எந்த ஹெல்ப்ன்னாலும் என்னை எப்ப வேணா கூப்பிடலாம் அம்மு...
ம்...
பதிலுக்கு நீங்க எனக்கு எதுவும் தரனும்ன்னு அவசியமில்லை.
சரி...
இது நீங்க என் மனசிலே வருடக் கணக்கா இருந்த பாரத்தை இறக்கி வைச்சதுக்காக நான் செய்ற நன்றி கடன்.
ம்...
வாய் திறந்து எதுவும் சொல்ல மாட்டீங்களா அம்மு...
குப்தாவுக்கு என் நிலைமையை புரிய வைக்க நினைத்தேன். அதே சமயம் அவர் மனதை புண்படுத்தவும் விரும்பவில்லை. வார்த்தைகளை யோசித்து தேர்ந்தெடுத்தேன்.
உங்க பரிசு எனக்கு பிடிச்சி இருந்தது. என் கணவருக்கு தான் கொஞ்சம் பிடிக்கலைன்னு நினைக்கிறேன் என்றேன்.
மறுமுனையில் நீண்ட மெளனம். குப்தா போனை வைத்து விட்டாரோ என்று சந்தேகமாகவும் வருத்தமாகவும் இருந்தது. டிஸ்ப்ளேவை பார்த்த பொழுது குப்தா இன்னும் லைனில் தான் இருப்பது தெரிந்தது. போனை மீண்டும் காதுக்கு கொடுத்து மிகவும் மெல்லிய குரலில்...
ஹலோ... சார்... ஸாரி... எதாவது தப்பா சொல்லிட்டனா என்ற வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் கண்களில் நீர் கசிய துவங்கி நான் விசும்பினேன்.
குப்தா பதற்றத்தோடு, அம்மு... ப்ளீஸ்... அழாதீங்க. எனக்கு எந்த கோபமும் இல்லை. உங்க மேலே எனக்கு கோபமே வராது. என் தேவதை நீங்க. ப்ளீஸ்... மனசை குழப்பிக்காதீங்க. ஒரு அஞ்சு நிமிசம் நான் சொல்றதை கேளுங்க என்றார்.
நான் விசும்பலை கட்டுப்படுத்திக் கொண்டு ம்... சொல்லுங்க என்றேன்.
உங்க நிலைமை எனக்கு புரியுது. நீங்க உங்க கணவரை நேசிக்கிற விதமும், அவர் உங்களை நேசிக்கிற விதமும் எனக்கு கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. அதே சமயம் என் வாழ்க்கைலேயும் எனக்கு இதே மாதிரி ஒரு மனைவி இருக்கா. அவளும் என்னை இதே அளவு நேசிக்கிறா. நான் அவ கிட்டே குறையா நினைச்சது செக்ஸ் விசயத்திலே அவ ஈடுபாடு காட்டாததை மட்டும் தான். இப்ப எத்தனையோ அனுபவிச்சாச்சு. யோசிச்சுப் பார்த்தா அது எல்லாமே என் மனைவியோட அன்புக்கு முன்னாடி ஒண்ணும் இல்லைன்னு தோணுது. வெறும் உடம்பு உணர்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்து உண்மையான அன்பை புரிஞ்சுக்காம இருந்துட்டேன். என் வாழ்க்கைலே இருந்த ஒரே ஏக்கமான உண்மையான அன்பும், காதலும் கலந்த ஒரு அழகான பெண் துணை எனக்கு சலிக்க சலிக்க செக்ஸ் சுகம் தராதா அப்படிங்கற ஏக்கமும் உங்களாலே ஒரு முடிவுக்கு வந்தது. என் மனசிலே இருந்து ஒரு கொடூர மிருகம் என்னை விட்டு ஓடிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்க். உங்க கூட இருந்த தருணங்களை என் மனைவி கூட பகிர்ந்துக்கிட்டேன். அவ சொன்ன பதில் தான் என்னை இந்த அளவுக்கு மாத்திடுச்சு. யாருக்கும் ப்ரசனை இல்லைன்னா நீங்க அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரதில்லை எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை, நான் அவளை என் தங்கச்சி மாதிரி பார்த்துக்குவேன். உங்க இரண்டு பேர் அந்தரங்கத்திலே தலையிடாம வீட்டுலே இருந்துக்குவேன்னு சொன்னப்ப நான் நிலை குலைஞ்சு போயிட்டேன். அவ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்டேன். பதறி போயிட்டா. நிறைய பேசினோம். நான் இனி பெண்களை தேடி போவேனான்னு தெரியலை. முடிவா உறுதியா எதையும் சொல்ல முடியலை. ஆனா இப்போதைக்கு எனக்கு எல்லாம் கிடைச்சிட்ட மாதிரி ஒரு திருப்தி வந்திருச்சு. இனி எதுவும் தேவையில்லைன்னு தோணுது. உங்க வாழ்க்கைலே கண்டிப்பா குறுக்கிட மாட்டேன். என்னாலே எந்த தொல்லையும் இருக்காது. நீங்களா எனக்கு போன் பண்ற வரைக்கும் நான் உங்களுக்கு இனி போன் பண்ண மாட்டேன். எந்த உதவின்னாலும் தயங்காம என்னை கேட்கலாம் நீங்க.
நீளமாக குப்தா பேசிக் கொண்டே செல்ல செல்ல அவர் வார்த்தைகளில் இருந்த அன்பிலும் ஏக்கத்திலும் மனம் கசிந்து உருகினாலும், இனி அவருடைய வாழ்வும் இனிமையானதாக மாறப் போகிறது, எனக்கும் அவரால் எந்த சிக்கலும் வராது என்ற எண்ணமும் மனதின் ஒரு ஓரத்தில் ஓட, நிம்மதியும், ஏக்கமும் கலந்த வினோத உணர்வில் நான் விழி மூடி குப்தாவின் குரலை கேட்டுக் கொண்டிருந்தேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.