Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#41
Super narration
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Super update
Like Reply
#43
Ithu vaerra level, oru movie script padikirra maari irrukku. Wow.
Like Reply
#44
Marvelous   yourock clps
Like Reply
#45
(25-12-2023, 04:32 AM)omprakash_71 Wrote: Semma Interesting and Fantastic Updates Nanba Super

(25-12-2023, 08:02 AM)Yesudoss Wrote: Excellent bro Smile

(25-12-2023, 08:27 AM)Sarran Raj Wrote: Super romantic

(26-12-2023, 04:14 AM)Raja Velumani Wrote: YOU ARE ROCKING

(26-12-2023, 05:35 PM)Steven Rajaa Wrote: Super narration

(29-12-2023, 05:54 AM)jiivajothii Wrote: Super update

(29-12-2023, 12:34 PM)Lashabhi Wrote: Ithu vaerra level, oru movie script padikirra maari irrukku. Wow.

(29-12-2023, 08:36 PM)Prabhas Rasigan Wrote: Marvelous   yourock clps

கதைக்கு கருத்து தெரிவித்து ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றி!
Like Reply
#46
திமிருக்கு மறுபெயர் நீதானே...!

4
 

நான்கு வருடங்களுக்கு முன்பு!
 
நான் எங்கள் ஊரில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
 
வகுப்பில் எவருடனும் அதிகமாக பேசாமல் படிப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவேன்.
 
அதனால் என்னிடம் பேசும் நபர்கள் மிக மிக குறைவு.
 
அப்படி இருக்கும்போது ஒருநாள் மதிய உணவு இடைவேளையில் என் அருகில் இருந்த இரு மாணவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.
 
"டேய் ரகு நேத்து டியூஷன் போன இடத்துல ரொம்ப அவமானமா போச்சுடா!"
 
"என்னாச்சுடா வாசு எதுவும் பிரச்சனையா?"
 
"ஆமா கொஞ்சம் பிரச்சனைதான்! அத சரி பண்ண போனதாலதான் எனக்கு ரொம்ப அவமானமா போச்சுடா!"
 
"என்ன நடந்துச்சுன்னு குழப்பாம தெளிவா சொல்லுடா!"
 
"டியூஷன்ல கமலான்னு ஒரு பொண்ணு இருக்கானு சொல்லிருக்கேன்ல!"
 
"ஆமா! எப்ப பாத்தாலும் பேசிகிட்டே இருப்பா! அவளுக்கு வாய் கொஞ்சம் நீளம்னு சொல்லுவியே அவளா?"
 
"அவளேதான்டா நேத்து என்ன பண்ணுனா தெரியுமா?"
 
"என்னடா பண்ணுனா? ரொம்ப இழுக்காம சீக்கிரம் சொல்லு."
 
"என் கூட டியூஷன்ல வினோத்னு ஒருத்தன் படிக்குறான்! டியூஷன் மிஸ் முதல் நாள் பாடம் எடுக்கும்போது அவன் வரல! அதனால என்ன நடத்தி இருக்குறாங்கன்னு பாக்குறதுக்கு கமலாவோட நோட்புக் எடுத்து பாத்துட்டு இருந்தான்!”
 
“ஓ... அப்பறம்..”
 
“அப்பறம் அந்த கமலா வந்துட்டா! என்கிட்ட பெர்மிசன் கேக்காம என்னோட நோட்புக்க எப்படி எடுக்கலாம்னு சொல்லிட்டு அவன் கன்னத்துல பளார்னு ஒரு அறைவிட்டா! அவன் கன்னத்த புடிச்சுகிட்டு பயந்து போயி உக்காந்து இருந்தான்!
 
“இத பாத்துட்டு நீ சும்மாவா இருந்தே?”
 
“இல்லடா எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு! உடனே எழுந்து போயி வினோத்துக்கு சப்போர்ட்டா பேசுனேன்!”
 
“அதுக்கு என்ன சொன்னா?”
 
“எதுவும் சொல்லாம அவ என்னையும் அறைஞ்சுட்டா!”
 
“ஐயய்யோ! நீ திரும்ப எதுவுமே பண்ணலையா?”
 
“எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல! அமைதியா வந்து என்னோட இடத்துல உக்காந்துட்டேன்!"
 
"என்னடா வாசு இதெல்லாம் டியூஷன் மிஸ் கிட்ட சொல்லலையா?"
 
"இல்லடா! அப்புறம் நாங்க அடிவாங்கினது டியூஷன்ல இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சு அவமானமா போயிடும்! அதான் அப்படியே விட்டுடோம்!"
 
"டேய்! ஒரு பொண்ணு கிட்ட போயி அடி வாங்கிட்டு வெக்கமே இல்லாம வந்துருக்க! உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரனையே இல்லையா?”
 
"ஹ்ம்ம்... அதுக்கு என்ன பண்ண சொல்லுறடா?"
 
"நீ திருப்பி அவள அடிச்சுருக்கணும்டா! அப்போதான் அவளுக அடங்கி இருப்பாளுங்க!"
 
"என்னடா சொல்லுற அப்படி பண்ணா தப்பு இல்லையா?"
 
"எந்த தப்பும் இல்லைடா! பொண்ணுங்களுக்கு சாதாரணமாவே திமிர் ரொம்ப இருக்கும்! அவளுக இப்படி எதாச்சும் பண்ணா சும்மா இருக்க கூடாது! அப்பவே திருப்பி கொடுத்துடணும்!"
 
"டேய்! சில பொண்ணுங்க என்கூட நல்லா சிரிச்சு பேசுவாங்களே! ஆனா நீ இப்படி சொல்லுறியே?"
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#47
"ஹ்ம்ம்... பாக்குறதுக்கு ரொம்ப நல்ல பொண்ணுங்க மாதிரிதான் இருக்கும்! அப்புறம் நமக்கே ஆப்பு வச்சுடுவாளுங்க! நாமதான் ரொம்ப உஷாரா இருக்கணும்!”

"சரிடா! இப்ப எனக்கு நல்லா புரியுது! இனிமே பொண்ணுங்ககிட்ட பேசவே மாட்டேன்! நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு மட்டும் இருக்க போறேன்!."
 
"சூப்பர்டா! இதே மாதிரி இரு! நமக்கு எந்த பிரச்சனையும் வராது!"
 
இவர்கள் பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்டதும் ஏன் பெண்கள் எல்லோரும் இப்படி இருக்கிறார்கள்? ஆண்கள் எல்லோரும் அப்படி என்ன பாவம் செய்தோம் என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன்.
 
இதனால் எனக்கு பெண்கள் மீது இருந்த கூச்சத்துடன் வெறுப்பும் இணைந்துக்கொண்டு மனதில் ஆழமாக பதிந்தது.
 
ஆண்கள் மட்டும் இருக்கும் பள்ளியில் படிப்பது நமக்கு கிடைத்த வரம் என்று பெருமிதம் கொண்டேன்.
 
ஆனால்! நான் அவர்கள் பேசியதை மட்டும் வைத்துக்கொண்டு முட்டாள்தனமான முடிவுக்கு வந்துள்ளேன் என அப்போது எனக்கு புரியவில்லை.
 
இப்படி இருக்கும் வேளையில், அன்றைய தினமே பள்ளியில் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது.
 
சென்னையில் அறிவியல் கண்காட்சி நடக்கப்போகிறது.
 
அதில் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தலாம் என்று எங்கள் ஆசிரியர் கூறினார்.
 
எனக்கு அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் வீட்டில் விடுவார்களா என்று பயம் தொற்றிக்கொண்டது.
 
அம்மாவிடம் சென்று விஷயத்தை சொன்னேன்.
 
நான் நினைத்தது போலவே சம்மதம் தெரிவிக்கவில்லை.
 
அதனால் அப்பாவிடம் சென்று முறையிட்டேன்.
 
இதுபோன்ற போட்டிகளில் பள்ளியில் படிக்கும்போது மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
 
இதற்கெல்லாம் தடை சொல்லக்கூடாது என்று தந்தை புரிந்துக்கொண்டு அம்மாவிடம் சம்மதம் வாங்க முயற்சித்தார்.
 
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு எனக்கு வெற்றி கிடைத்தது.
 
ஒருவழியாக அம்மாவை சம்மதிக்க வைத்துவிட்டோம். அடுத்து அறிவியல் கண்காட்சிக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
 
அந்த வேளையில் என்னுடைய அறையில் இருந்த அறிவியல் பாட புத்தகம் கண்ணில் பட்டது.
 
அதில் நான் படித்த சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையும் ஞாபகத்திற்கு வந்தது.
 
அது செய்வது எளிதான காரியம் இல்லை என்று தெரிந்தாலும் சிறிய அளவில் செய்வதற்கு முயன்று பார்க்கலாம் என்று தந்தையிடம் கூறினேன்.
 
நான் இவ்வளவு பெரிய ப்ரோஜெக்டை செய்ய போவதாக தந்தையிடம் கூறியதும் என்னை பாராட்டிவிட்டு அதை செய்வதற்கு தேவையான பொருட்களை அவருக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் எனக்கு வாங்கி தந்தார்.
 
வாங்கிய பொருட்கள் அனைத்துமே அதிகமான விலை கொண்ட பொருட்கள். அதனால் எப்படி செய்ய போகிறேன் என்ற பயம் கொஞ்சம் வந்தது.
 
ஆனாலும் என்னுடைய தந்தை கொடுத்த தைரியத்தால் அதை வெற்றிகரமாக செய்து முடித்து பள்ளியில் சென்று காண்பித்தேன்.
 
அதை பார்த்த ஆசிரியர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
 
என்னுடைய பெயரை அந்த கண்காட்சிக்கு அனுப்ப போவதாக கூறி என்னை உற்சாகப்படுத்தினார்கள்.
 
சில நாட்களுக்கு பிறகு அறிவியல் கண்காட்சிக்கு செல்லும் நாள் வந்தது.
 
எங்கள் பள்ளியில் இருக்கும் வெவ்வேறு வகுப்புகளில் இருந்து என்னையும் சேர்த்து பத்து மாணவர்களை தேர்வு செய்து துணைக்கு ஒரு ஆசிரியரையும் எங்களுடன் அனுப்பிவைத்தனர்.
 
நான் பெற்றோரிடம் ஆசீ பெற்று முதல் முறையாக வீட்டைவிட்டு தனியாக மாணவர்களுடன் செல்லபோகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் கிளம்பினேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#48
அடுத்தநாள் அதிகாலை கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சென்றோம்.

அங்கே எங்களுக்கென்று தனியாக ஒரு அறையை கண்காட்சி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
 
அங்கேயே நாங்கள் அனைவரும் காலை கடன்களை முடித்துக்கொண்டு கண்காட்சி நடைபெற போகும் அரங்கத்திற்கு சென்றோம்.
 
உள்ளே சென்று பார்த்தோம் எங்களை போன்று பல பள்ளிகளில் இருந்து நிறைய மாணவர்கள் வந்திருந்தனர்.
 
அது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் எனது ப்ரோஜெக்ட் மீது நம்பிக்கை வைத்து காலியாக இருந்த இடத்தில் அமர்ந்துக்கொண்டோம்.
 
சிறிது நேரத்தில் அரங்கமே மாணவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
 
என் அருகிலும் வேறு பள்ளி மாணவர்கள் வந்து அமர்ந்தனர்.
 
நான் யாரையும் கவனிக்காமல் கண்காட்சி எப்போது தொடங்கும் என்ற ஆவலோடு மேடையையே பார்த்துகொண்டிருந்தேன்.
 
அப்போது!
 
எனது இடப்பக்கத்தில்...!
 
ஒரு இனிமையான குரல் கேட்டது.
 
"ஹலோ விக்ரம்!"
 
யார் என்னை அழைப்பது என புரியாமல் மெல்ல திரும்பினேன்.
 
என் அருகில்! வேறு பள்ளியில் படிக்கும் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள்.
 
அவள் என்னை பார்த்து அழகாக சிரித்தாள்.
 
எப்படி எனக்கு பக்கத்தில் ஒரு பெண் வந்து அமர்ந்துகொண்டாள்.
 
அதோடு இவளுக்கு எப்படி என்னுடைய பெயர் தெரிந்தது என நினைக்கும்போதே கைகால்கள் உதறியது.
 
இவளிடம் பயந்தவாறு காட்டிக்கொண்டு அசிங்கபடக்கூடாது என்று அவற்றை எல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தேன்.
 
"பேரு எப்படி தெரியும்னு யோசிக்கிறியா? இதுல தான் பாத்தேன்!"
 
அவள் என்னுடைய ஐடி கார்டை சுட்டிக்காட்டி சிரித்தாள்.
 
எனக்கு பெண்களிடம் பேசுவதற்கு கூச்சமும் வெறுப்பும் இருந்த காரணத்தால் இவளை பேச விடாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
 
ஆனால்! அதற்குள் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
 
“என்ன விக்ரம்! நீ யார்கிட்டயும் பேச மாட்டியா? சரி விடு நானே பேசுறேன்! நானும் நீ படிக்கிற அதே கிளாஸ்தான் படிக்கிறேன்! ஆனா இங்க சென்னைல இருக்குற ஸ்கூல்ல படிக்குறேன்” என்று அந்த பள்ளியின் பெயரை கூறினாள்.

என்ன இவள் யாரென்று தெரியாத என்னிடம் பேசி கழுத்தை அறுக்கிறாள் என்று நினைக்கும்போதே மேடையில் பேச ஆரம்பித்தனர்.
 
"என்னோட பேரு ம..." என்று சொல்ல வந்தாள்.
 
அதை கேட்க எனக்கு விருப்பம் இல்லை.
 
“இப்ப எதுவும் பேசாத! ஸ்டேஜ்ல பேசுறத கவனிக்கணும்” என்று அவளை தடுத்தேன்.
 
அவளும் அதற்கு சம்மதம் தெரிவித்து பேசாமல் அமைதியாக இருந்தாள்.
 
ஒரு வழியாக தொல்லை விட்டது என நினைத்துவிட்டு மேடையை பார்த்தேன்.
 
அறிவியல் கண்காட்சியில் எல்லோரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மேடையில் இருந்தவர் அறிவுரை வழங்கினார்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#49
அவர் பேசி முடித்ததும் அந்த அரங்கத்திற்கு பக்கத்தில் பெரிய ஹால் இருக்கிறது! அங்கே எல்லோரும் சென்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ப்ரொஜெக்டை வைத்து டெமோ செய்து பார்த்துகொள்ளுங்கள் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் கூறினார்கள்.

உடனே எல்லோரும் அங்கிருந்து செல்லத்தொடங்கினார்கள்.
 
நானும் இவளிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நாங்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று என்னுடைய ப்ரோஜெக்டுகாக கொண்டு வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வேகமாக அந்த பெரிய ஹாலுக்குள் விரைந்தேன்.
 
நான் செய்வது சூரிய ஒளி சம்பந்தபட்டது என்பதால் அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் இருக்கும் ஜன்னல் அருகே எனக்கு டேபிள் போட்டு இடம் ஒதிக்கியிருந்தனர்.
 
அந்த ஜன்னல் வழியாக ஊடுருவிய வெயில் மிகச்சரியாக டேபிள் மீது விழுந்தது.
 
நான் சந்தோஷமாக என்னுடைய பொருட்களை எடுத்து வைத்து டெமோ செய்து பார்த்தேன்.
 
எல்லாம் சரியாக வேலை செய்தது.
 
அப்போது எனக்கு பின்னால் அவளது குரல் மீண்டும் ஒலித்தது.
 
"உன்னோடது சோலார் எனர்ஜி ப்ரொஜெக்டா?"
 
அவள் கேட்டுகொண்டே அருகில் வந்து சிரித்தாள்.
 
அய்யோ! நானே விலகி சென்றாலும் இவள் என்னை விடமாட்டேன் என்று மீண்டும் வந்து தொல்லை செய்கிறாளே! திட்டிவிடலாமா என்று யோசிக்கும்போது மீண்டும் பேசத் தொடங்கினாள்.
 
"என்னோட ப்ராஜெக்ட் என்னனு தெரியுமா?”
 
நான் எதுவும் பேசாமல் அவளையே முறைத்தேன்.
 
அது அவளுக்கு புரிந்தாலும் “என்னோடது ஹைட்ரோ எனர்ஜி ப்ராஜெக்ட்" என்று அவளது டேபிளை சுட்டி காட்டினாள்.
 
அது தண்ணீரை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்வது சம்பந்தமான ப்ரோஜெக்ட்!
 
அவள் மிக அழகாக செய்து இருந்தாள்.
 
"நம்ம ரெண்டு பேருமே எனர்ஜி சம்பந்தமான ப்ராஜெக்ட்! சூப்பர்ல!"
 
அவள் கூறிவிட்டு இளித்தாள்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#50
அவளை பாராட்ட வேண்டும் என்று மனதிற்கு தோன்றினாலும் பெண்கள் மீது இருந்த வெறுப்பு என்னை அவளிடம் பேச விடாமல் தடுத்தது.

நான் அவளை கண்டுக்கொள்ளாமல் மற்ற மாணவர்கள் மீது என் பார்வையை செலுத்தினேன்.
 
அது அவளுக்கு தெரிந்ததும் என் மீது கோபம் அடைந்தாள்.
 
"போடா சம்ஸா மூக்கா" என்று திட்டிவிட்டு அவள் இடத்திற்கு சென்றுவிட்டாள்.
 
எனக்கு அது மேலும் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.
 
"என்னுடைய மூக்கு சம்ஸா மாதிரியா இருக்கு?" என்ற சந்தேகத்தோடு ஜன்னல் கண்ணாடியில் முகத்தை பார்த்தேன்.
 
அப்படி எதுவும் தெரியலையே என்று மூக்கை தடவிக்கொண்டு இருந்தேன்.
 
நான் இப்படி செய்ததும் என்னை பார்த்து அவள் சிரிப்பது போல் சத்தம் கேட்டது.
 
வேகமாக திரும்பி பார்த்தேன்.
 
உடனே அவளது ப்ரொஜெக்டை செக் செய்வது போல் தலையை குனிந்து நடித்துக்கொண்டிருந்தாள்.
 
"ச்சே... என்னையா சும்மா சும்மா கிண்டல் பண்ணிட்டு இருக்காளே!" என்று கோபம் வந்தது.
 
அதன்பிறகு அவளை கண்டுக்கொள்ளாமல் அமைதியாக இருந்தேன்.
 
சிறிது நேரத்தில் ஒவ்வொரு மாணவர்களின் ப்ரோஜெக்டையும் பரிசோதிப்பதற்கு நடுவர்கள் வந்தனர்.
 
நானும் என்னுடையதை பார்ப்பதற்கு எப்போது வருவார்கள் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.
 
அவர்கள் வரிசையாக எல்லாருடைய ப்ரோஜெக்டயும் பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரத்தில் அவளுடைய இடத்திற்கு வந்து ப்ரொஜெக்டை செய்து காண்பிக்க சொன்னார்கள்.
 
அவளும் சரியாக செய்து காட்டி பாராட்டு பெற்றாள்.
 
சிறிது நேரத்தில் என்னுடைய இடத்திற்கு நடுவர்கள் வந்தனர்.
 
நானும் ஆர்வமுடன் விளக்கம் அளித்து செய்து காட்டினேன்.

முதலில் சுவிட்சை ஆன் செய்தேன்.
 
சோலார் பேனலில் இருந்து மின்சாரம் பேட்டரிக்கு சென்று விளக்கை எரியச் செய்தது.
 
அனைவரும் ஆர்வமுடன் பார்த்தனர்.
 
எனக்கு அது மிகவும் பெருமையாக இருந்தது.
 
ஆனால்! அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
 
சில நொடிகளில் அந்த விளக்கு அணைந்து போனது.
 
எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் பதற்றத்துடன் இருந்தேன்.
 
எவ்வளவு முயற்சி செய்தும் விளக்கு மீண்டும் எரியவில்லை.
 
அவர்களும் எனக்காக நீண்ட நேரம் காத்திருந்து பார்த்தனர்.
 
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தெரிந்ததும் மற்ற மாணவர்களின் ப்ரொஜெக்டை பார்க்கச் சென்றனர்.
 
எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் விளக்கு ஏன் எரியவில்லை என்று மீண்டும் மீண்டும் பரிசோதித்தேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#51
அப்போதுதான் ஒன்றை கவனித்தேன்.

சோலார் பேனலுக்கும் பேட்டரிக்கும் நடுவில் இருக்கும் இணைப்பை காணவில்லை.
 
இரண்டையும் இணைக்கும் வயர் இல்லாத காரணத்தினால் விளக்கு சிறிது நேரத்தில் அணைந்துவிட்டது என்று புரிந்துக்கொண்டேன்.
 
எப்படி காணாமல் போனது என்று கீழே குனித்து தேடிக்கொண்டிருந்தேன் எங்கும் கிடைக்கவில்லை.
 
"இதத்தான் தேடிகிட்டு இருக்குறியா?"
 
அவளுடைய குரல் மீண்டும் என்னுடைய காதில் ஒலித்தது.
 
திரும்பி அவளை பார்த்தேன்.
 
கையில் அந்த வயரை வைத்திருந்தாள்.
 
"நான் அப்பவே இதை எடுத்துட்டு வந்துட்டேன்"
 
அவள் ஏளனமாக சிரித்தாள்.
 
எனக்கு அந்த நேரத்தில் கோபப்படுவதா இல்லை அழுவதா என்று தெரியாத ரெண்டுங்கெட்டான் மனநிலை.
 
அதனால் இரண்டையும் அடக்கிக்கொண்டு! அவள் கையில் இருந்த வயரை பிடுங்கினேன்.
 
அதை மீண்டும் கனெக்ட் செய்து சுவிட்சை ஆன் செய்தேன்.

இப்போது அனைத்தும் நன்றாக வேலை செய்தது.
 
வேகமாக நடுவர்கள் இருக்கும் இடத்திற்கு ஓடினேன்.
 
"ஸார்! என்னோட கிட் இப்போ சரி ஆகிருச்சு! நீங்க வந்து பாக்க முடியுமா?”
 
“விக்ரம்! எங்களோட ரூல்ஸ் படி ஒருத்தரோட ப்ரொஜெக்டை ஒரு தடவைதான் பாக்கனும்! வெரி ஸாரிபா" என்று சொல்லிவிட்டு களைந்து சென்றனர்.
 
அன்றுதான் என்னுடைய வாழ்நாளில் மிகப்பெரிய துயரத்தை அடைந்தேன்.
 
கண்களை முட்டிக்கொண்டு அழுகை வந்தது.
 
இங்கே நின்று அழுதால் கேவலம் என்று புரிந்தது.
 
வேகமாக அங்கிருந்து கிளம்பி நாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு அழுதேன்.
 
எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியவில்லை.
 
திடீரென்று கதவை யாரோ தட்டினர்.
 
நான் கண்களை துடைத்துக்கொண்டு கதவை திறந்தேன்.
 
வெளியில் என்னுடைய ஆசிரியர் நின்றுக்கொண்டிருந்தார்.
 
"விக்ரம்! இங்க என்ன பண்ணிட்டு இருக்கே?"
 
அவளை பற்றி கூற எனக்கு மனம் வரவில்லை.
 
"ஸார்! என்னோட ப்ரொஜெக்ட் பெயிலியர் ஆகிருச்சு!" என்று மட்டும் கூறி அழுதேன்.
 
"டேய் இதுக்கெல்லாம் யாராச்சும் அழுவாங்களா? இன்னும் நீ வாழ்க்கைல சாதிக்க வேண்டியது நிறையா இருக்கு! எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அத எதிர்த்து போராடனும்! இப்படி கோழை மாதிரி அழக்கூடாது!”
 
“நீங்க சொல்றது கரெக்ட் ஸார்! இருந்தாலும் நல்லா பண்ணியும் பெயிலியர் ஆகிருச்சே!”
 
“விக்ரம் இந்த மாதிரியான போட்டி வர்றது முதல் தடவைங்கிறதுனால எந்த பிரச்சனையும் இல்ல! அடுத்த தடவ இந்த மாதிரி தப்பு நடக்காம பத்துக்கோ சரியா?" என்று ஆறுதல் கூறினார்.
 
அவர் பேசியது மனதில் இருக்கும் வலியை கொஞ்சம் போக்கியது.
 
"ஒகே ஸார்! இப்ப கொஞ்சம் தெளிவாயிட்டேன்!"
 
"ஹ்ம்ம் குட்! போயி முகத்த கழுவிட்டு வா சாப்பிட போலாம்" என்று சொன்னார்.
 
பிறகு நான் முகத்தை கழுவி கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் அவரோடு சாப்பிட சென்றேன்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#52
அப்போது! அவளும் அங்கு இருந்தாள்.

என்னிடம் பேசுவதற்கு முயற்சி செய்தாள்.
 
நான் அவளை கண்டுக்கொள்ளாமல் விலகி சென்றேன்.
 
சாப்பிட்ட பிறகும் என்னிடம் பேச அருகில் வந்தாள்.
 
அதை பொருட்படுத்தாமல் அவளிடம் இருந்து மீண்டும் மீண்டும் விலகிக்கொண்டே இருந்தேன்.
 
மதியத்திற்கு பிறகு பரிசளிப்பு விழா நடந்தது.
 
மாணவர்கள் அனைவரும் மீண்டும் அரங்கத்தில் அமர்ந்து இருந்தனர்.
 
நானும் விருப்பம் இல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
 
அவள் தூரத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
நான் அவளை கண்டுக்கொள்ளாமல் மேடையையே வெறித்து பார்த்தேன்.
 
மேடையில் பரிசுகளை அறிவிக்க நடுவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
 
முதலில் மூன்றாம் பரிசை ஒரு பள்ளி மாணவனுக்கு கொடுத்தனர்.
 
அனைவரும் கரகோஷங்கள் எழுப்பினர்.
 
எனக்கு எதுவும் செய்ய தோன்றாமல் அமைதியாக இருந்தேன்.
 
அதன் பிறகு இரண்டாம் பரிசும் வேறு ஒரு பள்ளி தட்டி சென்றது.
 
என்னால் அதற்குமேல் அங்கு இருக்க மனம் இல்லை.
 
அருகில் இருந்த ஆசிரியரிடம் இங்கே உட்கார முடியவில்லை தலைவலியாக உள்ளது. அதனால் பக்கத்தில் கண்காட்சி நடந்த ஹாலில் இருக்கிறேன். ஊருக்கு கிளம்பும்போது என்னை அழையுங்கள் வருகிறேன் என்றேன்.
 
ஆசிரியர் என்னுடைய மனநிலையை புரிந்துக்கொண்டு அதற்கு சம்மதித்தார்.
 
நான் எழுந்து அரங்கின் வாயிலை அடைந்த போது! முதல் பரிசுக்கான அறிவிப்பு வந்தது.
 
என்னுடைய ப்ரொஜெக்டை செய்ய விடாமல் கெடுத்த பெண்ணின் பள்ளியின் பெயரை சொன்னார்கள்.
 
எனக்கு கண்களில் வெள்ளம் போல் கண்ணீர் பெருகியது.
 
அடுத்து அவளின் பெயரை சொல்லி அழைப்பதை கேட்க விருப்பம் இல்லாமல் இரண்டு காதை பொத்திக்கொண்டு அந்த ஹாலிற்குள் சென்றேன்.
 
அந்த ஹாலில் இருந்த எல்லா ப்ரோஜெக்டையும் அதை செய்தவர்கள் எடுத்து சென்றுவிட்டனர். அதனால் டேபிளும் சேர்களும் காலியாக இருந்தது.

ஆனால்! நான் மனம் முழுவதும் சோகத்தோடு காலையில் இருந்த இடத்திற்கு சென்று தனியாக அமர்ந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தேன்.
 
அப்போது அந்த ஹாலுக்குள் அவள் நுழைந்தாள்.
 
அவள் வாங்கிய முதல் பரிசை கையில் வைத்துக்கொண்டு சிரித்த முகத்துடன் என்னை நோக்கி நடந்து வந்தாள்.
 
எனக்கு கோபம் எல்லையை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது.
 
அவள் மட்டும் என்னிடம் வந்து பேசட்டும்! அதன் பிறகு என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது என மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
 
அவள் என் அருகில் வந்து பேசத்தொடங்கினாள்.
 
"ஐ ஆம் வெரி ஸாரி விக்ரம்! தெரியாம அப்படி பண்ணிட்டேன்! உனக்குதான் இந்த பரிசு கிடைச்சுருக்கணும்! ப்ளீஸ் இத வாங்கிகோ!" என்று பரிசை என்னிடம் நீட்டினாள்.
 
இதுவரை என்னுடைய மனதில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த கோபக்கனல் அனைத்தும் எரிமலை குழம்பு போல் பீரிட்டு வெளியே வந்தது.
 
அவள் கையில் இருந்த பரிசை வேகமாக தட்டிவிட்டேன்.
 
அது ஒரு மூலையில் சென்று விழுந்தது.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#53
அவள் என்னை ஒரு ஏக்கத்தோடு பார்த்தாள்.

இதற்கு மேலும் கட்டுபடுத்தக்கூடாது என்று அவளது இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறை விட்டேன்.
 
ஒரு ஐந்து அறை விட்டுருப்பேன்.
 
அவள் வலியால் துடித்து கீழே சுருண்டு விழுந்து அழுதாள்.
 
நான் அதை ஒரு பெரிய பொருட்டாக நினைக்காமல் பேசத்தொடங்கினேன்.
 
"ஏன்டி இப்படி பொண்ணுங்க எல்லாரும் பசங்கள சோதிக்கிறீங்க!”
 
“அப்படி என்னடி உங்களுக்கு இதுல சந்தோசம்?”
 
“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ப்ரொஜெக்ட் செய்யலாம்னு வந்தேன் தெரியுமா? எல்லாத்தையும் கெடுத்து நாசம் பண்ணிடியே!”
 
“பசங்க எல்லாரும் நீங்க எது பண்ணாலும் அமைதியா இருப்பாங்கன்னு திமிர் பிடிச்சு அலையிறீங்க!”
 
“நாங்களும் எங்களோட திமிர காட்ட ஆரம்பிச்சோம்னா நீங்கல்லாம் தாங்க மாட்டீங்கடி!"
 
இப்படியே வாய்க்கு வந்தபடி அவளை நீண்ட நேரம் திட்டிக்கொண்டிருந்தேன்.
 
அவள் அழுதுக்கொண்டே என்னை பார்த்தாள்.
 
இறுதியாக அவளிடம் ஒன்று கூறினேன்.
 
"நீ என்னைய இன்னிக்கி ஜெயிச்சுருக்கலாம்! ஆனா ஏதோ ஒருநாள் நிச்சயம் என்னைய மாதிரி ஒரு ஆம்பளகிட்ட தோக்கதான் போறே! அன்னக்கி தெரியும்டி என்னைய பத்தி!"
 
இப்படி ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் அந்த ஹாலிற்குள் என்னுடைய ஆசிரியர் நுழைந்தார்.
 
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
 
அவர் இவளை பார்த்து விடக்கூடாது என்று பயந்து அவரை நோக்கி வேகமாக ஓடினேன்.
 
"விக்ரம் சீக்கிரம் வா!" என்று அழைத்தார்.
 
"எங்க ஸார்? ஊருக்கு கிளம்பலாமா?"
 
"ஊருக்கு இல்ல! மேடைல உன் பேர சொல்லி கூப்புடுறாங்க! வா போலாம்!"
 
"எதுக்கு சார் கூப்பிடுறாங்க?" என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
 
"எனக்கு தெரியல வா!" என்று கூறிவிட்டு வேகமாக என்னுடைய கையை பிடித்து அவசரமாக அரங்கிற்குள் அழைத்து சென்றார்.
 
நான் ஹாலில் இருக்கும் அவளை மறந்துவிட்டு அங்கே சென்றேன்.
 
"விக்ரம் மேடைக்கு போ" என்று கூறிவிட்டு அவர் சேரில் அமர்ந்து கொண்டார்.
 
நான் எதற்கு என்று புரியாமல் தயக்கதுடன் நடந்து மேடைக்கு அருகில் சென்றேன்.
 
அங்கே நின்ற ஒருவரிடம் என் பெயர் விக்ரம் என்று சொன்னவுடன் உன்னைத்தான் தேடுகின்றனர்! மேலே செல் என்று கூறினார்.
 
நான் மெல்ல நடந்து மேடையில் ஏறினேன்.
 
அங்கே இருந்த நடுவர்கள் என்னை பார்த்ததும் வா! என்று கை அசைத்து சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.
 
என்ன நடக்கிறது என புரியாமல் அவர்கள் அருகில் சென்றேன்.
 
உடனே நடுவராக இருந்த ஒருவர் எல்லோரையும் பார்த்து பேச ஆரம்பித்தார்.
 
"இவருதான் விக்ரம்!”
 
“இவர் செஞ்சது சோலார் எனெர்ஜி ப்ரொஜெக்ட்”
 
“அது ரொம்பவே கஷ்டமான ப்ரொஜெக்ட்”
 
“நல்லாதான் டிசைன் பண்ணிருந்தாரு ஆனா கடைசி நேரத்துல ஒரு சின்ன மிஸ்டேக்ல அவரோட ப்ரொஜெக்ட் பெய்லியர் ஆகிருச்சு!”
 
“இருந்தாலும் இந்த வயசுலேயே யாருமே செய்ய நினைக்காத ஒன்ன முயற்சி பண்ணிருக்காரு! அதுக்காக இவருக்கு இந்த சிறப்பு பரிசு கொடுக்குறோம்" என்று பரிசை என்னிடம் நீட்டினார்.
 
அதை கை நீட்டி வாங்கிக்கொண்டேன்.
 
அரங்கில் இருந்த எல்லோரும் பலத்த கரகோசங்களை எழுப்பினார்கள்.
[+] 4 users Like feelmystory's post
Like Reply
#54
இது கனவா இல்லை நிஜமா என்று சில நொடிகள் என்னால் நம்ப முடியவில்லை.

அவள் செய்த காரியத்தால் துவண்டு போயிருந்த என்னுடைய மனது கைதட்டல்களை கேட்டதும் உற்சாகம் அடைந்தது.
 
முதல் பரிசு வாங்கிருந்தாலும் இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்.
 
அதை விட பல மடங்கு மகிழ்ச்சியில் இருந்தேன்.
 
அந்த நேரத்தில்தான் அவள் என்னுடைய நினைவுக்கு வந்தாள்.
 
அய்யோ! தவறு செய்துவிட்டோமே என்று அப்போதுதான் தோன்றியது.
 
உடனே அவளை பார்க்கலாம் என்கிற ஆசையில் அந்த ஹாலை நோக்கி ஓடினேன்.
 
ஆனால்! அவள் இல்லை.
 
அவள் வாங்கிய பரிசு மட்டும் அதே மூலையில் கிடந்தது.
 
எனக்கு அதை பார்க்க பார்க்க கண்களில் நீர் வழிந்தது.

அவள் செய்தது தவறாகவே இருந்தாலும் நான் அவளை அடித்தது மிகப்பெரிய குற்றம் என்று மனதிற்குள் தோன்றியது.
 
கண்களை துடைத்துவிட்டு மூலையில் கிடந்த பரிசை எடுத்துக்கொண்டு அந்த வளாகம் முழுவதும் அவளை தேடினேன்.
 
என் கண்ணில் அவள் தென்படவில்லை.
 
அவள் பெயர் கூட எனக்கு தெரியவில்லையே!
 
மேடையில் பெயர் அறிவிக்கும் போதுகூட காதை பொத்திக்கொண்டு வந்துவிட்டேனே!
 
இப்போது நான் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றேன்.
 
அவளுடைய பள்ளியின் பெயர் மட்டும் எனக்கு நினைவில் இருந்தது.
 
கண்காட்சி அமைப்பாளர்களிடம் பள்ளியின் பெயரை சொல்லி அந்த பள்ளியில் இருந்து வந்தவர்கள் எங்கே என்று கேட்டேன்.
 
"அந்த ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் இப்ப தான் பஸ்ல கிளம்பி போனாங்க" என்று சொன்னார்.
 
எல்லாம் முடிந்தது...
 
இனி அவளை சந்திக்க வாய்ப்பே கிடையாது என்பதை புரிந்துக்கொண்டு விழா அரங்கில் கிடந்த நாற்காலியில் சோர்ந்துபோய் உட்கார்ந்தேன்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#55
அப்போது என்னுடைய ஆசிரியர் வந்து நேரம் ஆகிவிட்டது கிளம்பலாம் என்று அவசரப்படுதினார்.

அவளை காண்பதற்கு வேறு வழி எதுவும் இல்லை என்பதால் சோகத்துடன் அங்கிருந்து கிளம்பினேன்.
 
பஸ்ஸில் செல்லும்போது அருகில் இருந்த ஆசிரியரிடம் முதல் பரிசு வாங்கிய அந்த பெண்ணின் பெயர் என்ன என்று வினாவினேன்.
 
அவருக்கு தெரியவில்லை என்று கூறினார்.
 
பின்பு என்னுடன் வந்திருந்த சக மாணவர்களிடம் கேட்டதற்கு ஆளாளுக்கு ஒரு பெயரை கூறினார்கள்.
 
இதற்குமேல் என்ன செய்வது என்று புரியவில்லை.
 
அதே சோகத்துடன் அடுத்த நாள் காலை எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தேன்.
 
வீட்டிற்கு சென்று என்னுடைய பெற்றோரிடம் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினேன்.
 
நான் பரிசு பெற்றதை பார்த்து மகிழ்ந்தனர்.
 
ஆனால்! அவளை பற்றி சொன்னால் அப்பா ஏதேனும் கூறுவார் என்று பயந்து அந்த விஷயத்தை அம்மாவை மட்டும் தனியாக அழைத்து கூறினேன்.

"டேய் விக்ரம்! நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்புடா! பொண்ணுங்கள எல்லாம் இப்படி அடிக்கவே கூடாது! உனக்கு யாருடா சொன்னது? பொண்ணுங்க எல்லாருமே திமிரு பிடிச்சவங்கன்னு?”
 
அம்மா என்னை அதட்டி கேட்டார்கள்.
 
அப்போது என்னுடைய வகுப்பில் உடன் படிப்பவனை ஒரு பெண் அடித்துவிட்டாள்.
 
அவர்கள் அப்படி பேசியது முதல் பெண்கள் அனைவரும் கர்வம் கொண்டவர்கள் என நினைத்து வருகிறேன் எனக்கூறினேன்.
 
"விக்ரம் பொண்ணுங்க எல்லாருமே இப்படியெல்லாம் அடிக்க மாட்டாங்க!”
 
“அந்த பையனுக்கும் பொண்ணுக்கும் முன்னாடியே ஏதாச்சும் பிரச்சனை இருந்துருக்கும்”
 
“அந்த கோபத்துலதான் அவ அடிச்சிருப்பா! நீ சும்மா யாரோ சொன்னத கேட்டுட்டு எல்லாரையும் தப்பா நினைச்சுட்டு இருக்காத!”
 
“அதோட இனிமே இப்படியெல்லாம் நடந்துக்காதே! எனக்கு சுத்தமா பிடிக்காது!" என்று என்னை கடிந்துக்கொண்டார்கள்.
 
"கண்ணால் பார்ப்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரிப்பதே மெய்!" என்ற பழமொழி என்னுடைய நினைவுக்கு வந்தது.
 
உடனே இதுபோல் இனி நடந்துக்கொள்ளமாட்டேன் என்று அம்மாவிடம் மன்னிப்பு கேட்டேன்.
 
அவர்களும் என்னை மன்னித்தார்கள்.
 
அவள் என்னிடம் பேசுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தாள். நான்தான் அவளை வெறுத்து ஒதுக்கினேன்.
 
மேலும் தவறை உணர்ந்து அவள் வாங்கிய பரிசையும் என்னிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள்.
 
அது புரியாமல் வாய்க்கு வந்தபடி அவளை திட்டி அடித்திருக்கிறேன் என்று கவலை அடைந்தேன்.
 
அப்போது அந்த பரிசு என்னவென்று பிரித்து பார்க்கலாம் என்று திறந்தேன்.
 
அதில் ஒரு அழகான கைகடிகாரம் இருந்தது.
 
அது ஆண்கள் பெண்கள் என எவர் வேண்டுமானாலும் அணிந்து கொள்வதுபோல் டிசைன் செய்யப்பட்ட கைகடிகாரம்.
 
அவளுடைய நினைவாக அந்த வாட்சை என்னுடைய இடது கையில் அணிந்துக்கொண்டேன்.
 
எனக்கு கொடுத்த சிறப்பு பரிசை திறந்து பார்க்க கூட மனம் இல்லை,
 
அதை பிரிக்காமல் அப்படியே என்னுடைய அறைக்குள் வைத்துவிட்டேன்.
 
அதன்பிறகு நாட்கள் செல்ல செல்ல அவளுடைய முகமும் எனக்கு மறந்து போனது.
 
கண்காட்சியில் அவளை நான் சரியாக கண்டுக்கொள்ளவே இல்லையே! பின்பு எப்படி அவளது முகம் ஞாபகத்தில் இருக்கும் என்று வருத்தம் அடைந்தேன்.
 
பெயர் தெரியாத அவளின் நினைவு வரும்போதெல்லாம் கையில் அணிந்திருக்கும் வாட்சை பார்த்து மன்னிப்பு கேட்டு மனதை ஆறுதல் படுத்திக்கொள்வேன்.
 
என்றாவது ஒருநாள் அவளை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தேன்.
 
இப்படியே சில வருடங்கள் என்னை கடந்து சென்றது.
 
இனிமேல் அவளை பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அந்த சம்பவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தொடங்கினேன்.
 
ஆனால்! அவள்தான் இந்த மதுமிதா என்று எனக்கு தெரிந்ததும் என்னுடைய தவறை முழுமையாக உணர்ந்து வலது கையை எடுத்து நெற்றியில் பலமாக அடித்து கொண்டேன்!
[+] 5 users Like feelmystory's post
Like Reply
#56
Semma Interesting Update Nanba super
Like Reply
#57
Fantastic update
Like Reply
#58
நண்பா அருமையான கதை
Like Reply
#59
Super update
Like Reply
#60
What a storyline, appadiyae Mind La visual va Odathu, Super brother Continue. Intha maari stories padikoom bothu thaan manasu laesa irrukku, intresting ta irrukku.
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)