Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#21
Superb update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Awesome update
Like Reply
#23
அருமை அருமை
Like Reply
#24
Super
Like Reply
#25
Super padhivu
Like Reply
#26
Amazing updates and start
Like Reply
#27
(18-12-2023, 05:15 AM)omprakash_71 Wrote: மிகவும் அற்புதமான தொடக்கம் நண்பா நன்றி

(18-12-2023, 05:41 AM)jiivajothii Wrote: Super start friend.

(20-12-2023, 10:08 PM)Jayam Ramana Wrote: Awesome update

(21-12-2023, 04:09 AM)omprakash_71 Wrote: Fantastic update bro

(21-12-2023, 06:58 AM)Ragasiyananban Wrote: Marvellous nanba

(21-12-2023, 09:03 PM)Vasanthan Wrote: Superb update

(23-12-2023, 08:28 AM)Ajay Kailash Wrote: Awesome update

(23-12-2023, 10:16 AM)singamuthupandi Wrote: அருமை அருமை

(24-12-2023, 03:09 PM)Pushpa Purusan Wrote: Super

(24-12-2023, 09:30 PM)mulaikallan Wrote: Super padhivu

(24-12-2023, 10:07 PM)zulfique Wrote: Amazing updates and start

கதைக்கு ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றி!
Like Reply
#28
திமிருக்கு மறுபெயர் நீதானே...!

3


நான் அந்த பயத்துடன் அருகில் இருந்த தினேஷிடம் பேசினேன்.
 
"மச்சி! மதுமிதா என்னைய முறைச்சு பாத்துட்டு இருக்குறா! எனக்கு ரொம்ப பயமா இருக்குடா!"
 
"டேய் விக்ரம்! இப்ப அவள பாக்காம பாடத்தை கவனி!" என்று அறிவுறுத்தினான்.
 
எனக்கும் அதுதான் சரி என்று பட்டது. அதனால் அவளை மறந்து வகுப்பை கவனிக்க தொடங்கினேன்.
 
அதன்பிறகு வந்து ஆசிரியர்களும் என்னையே புகழ்ந்து பேசினார்கள்.
 
அவள் எதுவுமே பேசாமல் கோபத்துடன் இருந்தாள்.
 
அதனால் அவளை நான் திரும்பிக்கூட பார்க்காமல் பாடத்தை மட்டுமே கவனித்துக்கொண்டு இருந்தேன்.
 
தொடர்ந்து நான்கு வகுப்புகள் நடந்து முடிந்ததும் உணவு இடைவேளை வந்தது.
 
எங்கு சென்று சாப்பிடலாம் என தினேஷிடம் கேட்டேன்.
 
"கிரவுண்ட் பக்கத்துல நிறையா பெஞ்ச் இருக்கும் அங்கே போலாம்!"
 
அருகில் இருந்த கார்த்தியும் வெங்கட்டும் எங்களுடன் வருவதாக கூறினார்கள். உடனே சாப்பிடுவதற்கு எல்லோரும் கிளம்பினோம்.
 
அப்போது! பெண்கள் பகுதியில் இருக்கும் யாருக்கோ சைகை மூலம் கிரவுண்ட் செல்கிறோம் என்று தினேஷ் கூறிவிட்டு எங்களுடன் வந்தான்.
 
"டேய் தினேஷ்! யார்கிட்ட பேசுற?"
 
"நம்ம கிளாஸ்ல இருக்குற ரெண்டு பொண்ணுங்க என்னோட பிரண்ட்ஸ்டா!  எப்பவும் நாங்கல்லாம் ஒன்னாதான் உக்காந்து சாப்பிடுவோம்! அதான் அவங்களையும் கிரவுண்டுக்கு வர சொன்னேன்" என்று கூறிவிட்டு நடந்தான்.
 
எனக்கு இப்போது அந்த பெண்களுடன் அமர்ந்து எப்படி சாப்பிட போகிறேன் என்கிற பயம் தொற்றிக்கொண்டது.
 
என்னுடைய கூச்சத்தை பற்றி இனியும் மறைத்து எந்த பயனும் இல்லை என்று புரிந்தது.
 
தினேஷிடம் இதை கூறலாம் என்று முடிவு செய்தேன்.
 
கார்த்தியும் வெங்கியும் முன்னே சென்றுக்கொண்டிருந்தனர்.
 
அவர்களுக்கு சற்று பின்னால் நடந்து சென்ற தினேஷை வழி மறித்து பேசத்தொடங்கினேன்.
 
"மச்சி! உன்கிட்ட ஒன்னு சொல்லணும்டா!"
 
"என்னடா சொல்லணும்?”
 
"எனக்கு பொண்ணுங்ககிட்ட பேசி பழக்கம் இல்லைடா! உன்னோட பிரண்ட்ஸ் அதான் அந்த ரெண்டு பொண்ணுங்களும் வந்தா நான் எப்படி உக்காந்து சாப்பிடுறது?"
 
நான் முகத்தை பாவமாக வைத்துகொண்டு கேட்டேன்.
 
"ஏன்டா! மதுமிதாவ பாக்குறப்போ மட்டும் பல்லை இளிச்சுக்கிட்டு பாத்தே! ஆனா இப்ப வந்து இப்படி அப்பாவி மாதிரி நிக்கிறே!" என்று சிரித்தான்.
 
"டேய் மச்சி! அது வேற இது வேற!”
 
நான் கூச்சத்துடன் தரையை பார்த்துக்கொண்டு சொன்னேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#29
இப்போது என்னுடைய கூச்சத்தை உணர்ந்த அவன் என்னிடம் பேசினான்.

"விக்ரம்! நீ பொண்ணுங்ககிட்ட பேசுனாதான் மாற முடியும்! இன்னக்கி அவங்ககிட்ட பேசு! கண்டிப்பா உன்னோட கூச்சம் போகும்!”
 
அவன் சொன்ன வார்த்தைகள் மனதுக்கு ஆறுதல் அளித்தது.
 
மறுபேச்சு ஏதும் பேசாமல் அவனுடன் நடந்து சென்றேன்.
 
அங்கே ஒரு பெஞ்சை பிடித்து நாங்கள் நான்கு பேரும் அமர்ந்தோம்.
 
சில நிமிடங்களில் அந்த இரண்டு பெண்களும் வந்து அமர்ந்தார்கள்.
 
எனக்கு லேசாக கால் நடுங்கியது ஆனாலும் அதை மறைத்து குனிந்த தலை நிமிராமல் சாப்பிட ஆரம்பித்தேன்.

அந்த இரண்டு பெண்களும் என்னை தவிர மற்ற மூவரிடமும் நன்றாக சிரித்து பேச ஆரம்பித்தனர்.
 
அவர்கள் பேசுவதை வைத்து பார்க்கும் போது அவர்களின் பெயர் ரம்யா! காயத்ரி! என்று தெரிந்தது.
 
இருவரும் என்னிடம் பேச மாட்டார்களா என்று கொஞ்சம் ஏக்கமும் வந்தது.
 
அப்போது அதில் ஒரு பெண் பேசினாள்.
 
"விக்ரம் சார் எங்க கூடல்லாம் பேச மட்டாரோ?" என்று கேட்டாள்.
 
உடனே அவர்களை நிமிர்த்து பார்த்து புன்னகைத்தேன்.
 
அதில் ஒருத்தி குண்டாகவும் மற்றொருத்து கொஞ்சம் ஒல்லியாகவும் இருந்தாள்.
 
இருவரில் யார் என்னை அழைத்தது என்று புரியாமல் சற்று குழப்பத்துடன் தினேஷை பார்த்தேன்.
 
"ரம்யா! அவன் ரொம்ப அமைதியான பையன்! யாராச்சும் பேசுனாதான் பேசுவான்" என்று சமாளிக்க தொடங்கினான்.
 
"ஓ அப்படியா!"
 
என்னை ஆச்சர்யத்தோடு பார்த்தாள் அந்த குண்டுப் பெண்.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ரம்யா! நான் இந்த ஸ்கூலுக்கு புதுசுல! அதான் கொஞ்சம் அமைதியா இருந்தேன்!"
 
நான் கொஞ்சம் திக்கி திணறி கூறினேன்.
 
உடனே அனைவரும் சத்தமாக சிரித்தனர்.
 
எனக்கு ஏன் இப்படி சிரிக்கிறார்கள் என்று புரியாமல் தவித்தேன்.
 
"டேய் ஏன்டா இப்படி சிரிக்குறீங்க?" என்று கத்தினேன்.
 
அனைவரும் சிரிப்பை மெல்ல நிறுத்தினர்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#30
"விக்ரம்! என்னோட பேரு காயத்ரி! இவ பேருதான் ரம்யா!"

அந்த குண்டு பெண் சொல்லிக்கொண்டே புன்னகைத்தாள்.
 
நான் பேசமுடியாமல் இருவரையும் பார்த்து வழிந்தேன்.
 
அதன்பின் "ஸாரி ரம்யா! ஸாரி காயத்ரி" என்று இருவரிடமும் மன்னிப்பு கேட்டேன்.
 
இருவரும் ஒன்றாக சேர்ந்து பரவாயில்லை என்று சிரித்தனர்.
 
இப்போது ரம்யாவும் காயத்ரியும் என்னிடம் அன்பாக பேசத்தொடங்கினர்.
 
நான் ஆரம்பத்தில் திக்கிதான் பேசினான்.
 
ஆனால் பெண்களிடம் பேசாமல் இருந்த எனக்கு அவர்களிடம் பேசியவுடன் பயம் விலகியதை உணர்ந்தேன்.
 
"நீங்க எல்லாரும் சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸா ?" என்று ரம்யாவிடம் கேட்டேன்.
 
"ஹ்ம்ம் ஆமா! நான்! தினேஷ்! காயத்ரி! எல்லோரும் சின்ன வயசுல இருந்த ஒரே கிளாஸ்லதான் படிக்கிறோம்! அப்போ இருந்து நாங்க ஃபிரண்ட்ஸா இருக்குறோம்! ஆனா கார்த்தி! வெங்கிட்! ரெண்டு பேரையும் எப்பயாவது எங்களோட செக்சன்ல போடுவாங்க! அப்பதான் இவங்க எனக்கு பழக்கம்! அதோட இன்னக்கிதான் முதல் தடவையா இவங்க ரெண்டு பேரும் எங்ககூட உக்காந்து சாப்பிடுறாங்க!”
 
“என்ன சொல்றே ரம்யா! டேய் வெங்கி இங்க சாப்பிடாம வேற எங்க போயி சாப்பிடுவே?"
 
நான் வெங்கியை பார்த்து கேட்டேன்.
 
"நாங்க ரெண்டு பேரும் கிளாஸ்லதான் உக்காந்து சாப்பிடுவோம்! நீ வந்து எங்கள கூப்பிட்டதுனால வந்தோம்!" என்று பேச வந்த வெங்கியை இடைமறித்து கார்த்தி பதில் கூறினான்.
 
"என்னடா தினேஷ் இவங்ககூடலாம் நீங்க யாரும் ஒழுங்கா பேச மாடீங்களா" என்று திட்டினேன்.
 
"அப்படி இல்லைடா! இவங்க ரெண்டு பேரும் எப்பவும் தனியாதான் இருப்பாங்க! கூப்பிட்டா வரமாட்டாங்கன்னு நினைச்சுதான் இத்தனை நாளா கூப்பிடல! ஏய் கார்த்தி! வெங்கி! ரெண்டு பேரும் என்னைய மன்னிச்சுடுங்கடா" என்று தினேஷ் சோகமாக கூறினான்.
 
உடனே ரம்யாவும் காயத்ரியும் சேர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டனர்.
 
"ஹே இதுல என்ன இருக்கு? உங்கள எப்பவும் நான் தப்பவே நினைச்சது இல்லயே" என்று வெங்கட் சிரித்தான்.
 
அதன் பின் கார்த்தியும் எங்களுடன் சிரித்து பேசினான்.
 
பின்பு அனைவரும் சந்தோசமாக பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தோம்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#31
"ஹ்ம்ம்... நான் கூட நல்லா படிக்கிற பையனா இருக்கான்! அதனால ரொம்ப திமிரா இருப்பான்னு நினைச்சேன்! ஆனா நீ ரொம்ப நல்ல பையனா இருக்கே! யூ ஆர் சோ ஸ்வீட் விக்ரம்!" என்றாள் ரம்யா.

எனக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.
 
ஆனால்! அப்போது பேச்சு வேறு திசைக்கு மாறிச்சென்றது.
 
அதற்கு காரணம் வெங்கட் தான்.
 
"நல்லா படிக்கிறோம்னு திமிருல அலையிறதுக்கு இவன் என்ன மதுமிதாவா! என்னோட நண்பன் அப்படிபட்டவன் இல்ல!"
 
வெங்கி பெருமிதமாக கூறினான்.
 
"ஆமா! நீ சொல்றது என்னமோ உண்மைதான்! ரொம்ப திமிருலதான் ஆடுறா உன் தங்கச்சி" இது காயத்ரி.
 
"போடி! அவளே என்னைய அண்ணனா நினைக்கல! நீ தங்கச்சினு சொல்லுறியா?"
 
வெங்கட் அவளிடம் சீறினான்.
 
"இப்ப எதுக்கு அவளை பத்தி பேசுறீங்க?  விடுங்க!" என்றான் கார்த்தி.
 
"பேசாம என்ன பண்றது? அவளோட திமிரு நாளுக்கு நாள் அதிகரிச்சுகிட்டே போகுது!" என்றாள் காயத்ரி.
 
"ஆமா! அதுக்கு என்னதான் பண்றது?"
 
ரம்யா ஏக்கத்துடன் கேட்டாள்.
 
"அவ திமிர அடக்கியே ஆகணும்! அதுக்கு ஒரு வழி கண்டுபிடிச்சுடேன்!" என்றான் தினேஷ்.
 
"என்ன வழிடா?"
 
ஆர்வத்துடன் அனைவரும் கேட்டனர்.
 
"நம்ம விக்ரம்தான் அதுக்கு ஒரே வழி!" என்றான்.
 
"டேய்! என்னடா லூசு மாதிரி பேசுறே? நான் என்னடா பண்றது?"
 
அவனை பார்த்து கோபமாக கேட்டேன்.
 
"நீ எதுவும் பண்ண வேணாம் மச்சி! அது தானா நடக்கும்!" என்றான்.
 
"என்னடா சொல்லுற எனக்கு ஒண்ணுமே புரியல!"
 
"தினேஷ்! நீ சொல்றது எங்களுக்கும் ஒண்ணுமே புரியலடா! ஒழுங்கா தெளிவா சொல்லு!" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.
 
உடனே தினேஷ் அனைவரையும் அமைதிப்படுத்தி பேசத்தொடங்கினான்.
 
"நல்லா படிக்கிறோம்! நம்மல தோக்கடிக்க யாருமே இல்லைனு தைரியமா இருக்குறதுதான் அவளோட திமிருக்கு முக்கியமான காரணம்! அதனால அவள படிக்கிற விஷயத்துல வச்சே தோக்கடிக்கணும்”
 
“யெஸ் கரெக்ட்!” என்றாள் ரம்யா.
 
“செரிடா! அதுக்கு என்ன பண்ண போறே?” என்று காயத்ரி கேட்டாள்.
 
“அதுக்கு சரியான ஆள் விக்ரம்தான்! வரபோற டெஸ்ட் எல்லாத்துலையும் இவன் மதுமிதாவ விட அதிக மார்க் வாங்கணும்! கண்டிப்பா வாங்குவான்! அதுனால அவளோட திமிரு கண்டிப்பா குறையும்! அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு! என்று தினேஷ் கூறி முடித்தான்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#32
"டேய்! என்னைய வச்சு விளையாடுறியா ?"

நான் அவனை பார்த்து கத்தினேன்.
 
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மச்சி" என்று தினேஷ் சிரித்தான்.
 
அது எனக்கு மேலும் எரிச்சல் அடைய செய்தது.
 
"ப்ளீஸ்! விக்ரம் இத நீ செஞ்சே ஆகணும்! அப்பதான் எல்லாருக்கும் நல்லது!”
 
காயத்ரியும் ரம்யாவும் என்னிடம் கெஞ்சினார்கள்.
 
"ஹே! ரம்யா! என்ன இப்படி சொல்லுறே? பசங்களுக்குதான் பிரச்சனைன்னு நினைச்சேன்! உங்ககிட்டயும் அவ கோபப்படுவாளா?"
 
"ஆமா விக்ரம்! நாங்களே போயி பேசுனாலும் எங்க யார்கூடயும் அவ பேசவே மாட்டா! கேக்குற கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் சொல்லிட்டு அப்புறம் எங்கள கண்டுக்கவே மாட்டா” என்றாள் ரம்யா.
 
“அப்போ அவளுக்கு ப்ரண்ட்ஸ் யாரும் இல்லையா?”
 
“யாரும் இல்ல... எப்பவும் தனியா வருவா! தனியாவே சாப்பிடுவா! அப்புறம் தனியாவே வீட்டுக்கு கிளம்பி போயிடுவா!" என்றாள் காயத்ரி.
 
எனக்கு இப்போது மதுமிதா மீது இனம் புரியாத கவலை வந்தது.
 
அவள் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி தவிக்கிறாள்.
 
அதனால்தான் எல்லோரிடமும் இப்படி நடந்துக்கொள்கிறாள் என்று மனதில் தோன்றியது.
 
இப்படி நினைக்கும்போதே வெங்கட் என்னிடம் பேசத்தொடங்கினான்.
 
"மச்சி! என்னோட தங்கச்சி அவளா வந்து என்கிட்டே பேசுவானு ரொம்ப நாளா... இல்ல இல்ல ரொம்ப வருஷமா காத்துட்டு இருக்குறேன்! அதுக்கு நீ இந்த உதவிய பண்ணியே ஆகணும்டா! இல்லனா அவ மாறவே மாட்டா ப்ளீஸ்டா" என்று என்னிடம் கெஞ்சினான்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#33
"விக்ரம்! நீ இவன் சொல்றான்னு எதுவும் பண்ணிட்டு இருக்காத! உனக்கு எது தோணுதோ அத மட்டும் பண்ணு!"

இதுவரை பேசாமல் அமைதியாக இருந்த கார்த்தி அப்படி சொன்னான்.
 
"டேய்! அவனே பண்றேன்னு சொன்னாலும் நீ பண்ண விடமாட்ட போல" என்று வெங்கி கார்த்தியிடம் கத்தினான்.
 
கார்த்தி அவன் கத்துவதை கண்டுக்கொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
 
எனக்கு அது சிரிப்பை உண்டாக்கியது. அதை அடக்கிக்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.
 
இவர்கள் எதுவும் தவறாக செய்ய சொல்லவில்லையே! என்னை படிக்கத்தானே சொல்கிறார்கள்.
 
அதனால் இவர்கள் சொல்வது போல செய்து பார்க்கலாமே!
 
மதுமிதா மாறினால் எல்லோருக்கும் நல்லதுதானே என்று மனதிற்குள் தீர்மானம் செய்துக்கொண்டு பேசினேன்.
 
"சரி தினேஷ்! இதுக்கு நான் எதுவும் பெருசா ஹெல்ப் பண்ணுவேன்னு எனக்கு தோணல! ஆனாலும் நான் தொடர்ந்து நல்லபடியா படிக்க போறேன்! நான் மதுமிதாவ விட அதிக மார்க் வாங்கினா அவளோட திமிரு அடங்கும்னா நல்லதுதான்!”
 
“சூப்பர் மச்சி!” என்று மகிழ்ச்சி அடைந்தான்.

“ஆனா! தமிழ்செல்வி மிஸ் என்னைய பத்தி பெருமையா சொன்னதும் மதுமிதா பயங்கரமா முறைச்சு பாத்தா! எனக்கு அத நினைச்சாதான் பயமா இருக்கு!"
 
"டேய் விக்ரம்! நீ இதுக்கெல்லாம் எதுவும் கவலைப்படாத! மார்க் அதிகமா வாங்குறதுக்கு மட்டும் முயற்சி பண்ணு!" என்று ஆறுதல் கூறினான்.
 
"ஹே விக்ரம்! நீ என்ன தப்பு பண்ணின? அவ முறைச்சா நீ எதுக்கு பயப்படனும்? நாங்க இருக்கோம் எதுக்கும் கவலைப்படாத!" என்று ரம்யா கூறினாள்.
 
அதை ஆமோதிப்பதுபோல் காயத்ரியும் எனக்கு ஆறுதல் சொன்னாள்.
 
வெங்கி நான் ஒப்புக்கொண்டதும் மகிழ்ச்சி கடலில் துள்ளினான். ஆனாலும் அவளிடம் அடிவாங்காமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்தான்.
 
“அய்யோ! அந்த பிரச்சனை வேற இருக்குதே” என்று மனது படபடத்தது.
 
"விக்ரம்! நீ எடுத்த முடிவுல தெளிவாக இரு! யாரையும் பாத்து பயப்படாத!" என்று கார்த்தி அறிவுரை வழங்கினான்.
 
இவர்கள் எல்லோரும் கொடுத்த தைரியத்தில் மனதை தேற்றிக்கொண்டு எப்போதும் படிப்பதைவிட சிறப்பாக படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
 
அதன் பிறகு அனைவரும் சாப்பிட்டு எழுந்து வகுப்பறைக்கு சென்றோம்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#34
அங்கே மதுமிதா ஏதோ புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருந்தாள்.

நாங்கள் வருவதை பார்த்ததும் எங்களை கண்டுகொள்ளாமல் அவள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.
 
எனக்கு பெண்கள் மீது இருந்த கூச்சம் மனதில் இருந்து கொஞ்சம் மறைந்துபோன காரணத்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக அமர்ந்தேன்.
 
அதன் பிறகு ஆசிரியர்கள் வந்து பாடத்தை நடத்தினார்கள்.
 
நான் முன்பைவிட அதிக அக்கறையுடன் கவனித்தேன்.
 
மாலை வகுப்புகள் முடிந்ததும் வீட்டிற்கு சென்றேன்.
 
அம்மாவும் அப்பாவும் பள்ளியை பற்றி விசாரித்தார்கள்.
 
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என பள்ளியில் நடந்ததை கூறிவிட்டு மதுமிதாவை பற்றி மட்டும் கூறாமல் தவிர்த்தேன்.
 
அதன் பிறகு வந்த நாட்களில் தினேஷ்! வெங்கட்! கார்த்தி! ரம்யா! காயத்ரி! என நாங்கள் எல்லோரும் வகுப்பில் சந்தோசமாக பேசுவது!  பின்பு மதியம் கொண்டு வந்த உணவை பகிர்ந்து உண்பது என எங்களின் நட்பு மேலும் வளர்ந்தது.
 
மாலையில் வீட்டுக்கு வந்ததும் அன்றைய பாடங்களை அன்றே படிப்பது.
 
ஆசிரியர்கள் சொல்வதை குறித்த நேரத்தில் செய்வது என வாழ்க்கை நல்லபடியாக சென்றுக்கொண்டிருந்தது.

இப்படியே மூன்று வாரங்கள் என்னை கடந்து சென்றது.
 
அப்போது பள்ளியில் மாதத்தேர்வுக்கான அறிவிப்பு வந்தது.
 
நண்பர்கள் அனைவரும் மதுமிதாவை மனதில் வைத்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அறிவுறித்தனர்.
 
நான் அதைபற்றி எல்லாம் நினைக்காமல் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே படித்து எழுதினேன்.
 
ஒரு வாரத்திற்கு பிறகு அந்த தேர்வின் முடிவு வந்தது.
 
எல்லோரும் எதிர்பார்த்ததுபோல நான்தான் முதல் மதிப்பெண் எடுத்திருந்தேன்.
 
அதுவும் மதுமிதாவை விட அதிக மதிப்பெண் எடுத்திருந்தேன்.
 
என்னுடைய நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்கள்.
 
ஆசிரியர்களும் என்னை பாராட்டினார்கள்.
 
ஆனால் இரண்டாம் மதிப்பெண் எடுத்த மதுமிதாவை ஆசிரியர்கள் எல்லோரும் திட்டினார்கள்.
 
அவளுக்கு எப்படி இருந்தது என்று எனக்கு தெரியவில்லை.
 
ஆனால் என்னுடைய நெஞ்சில் சுருக் என்று முள் குத்தியதுபோல இருந்தது.
 
இப்படியே தொடர்ந்து மூன்று மாதங்கள் நடந்த மாதத் தேர்விலும் நானே முதல் மதிப்பெண் எடுத்தேன்.
 
இதனால் தினேஷும் வெங்கட்டும் என்னைவிட அதிக சந்தோசத்தில் இருந்தனர்.
 
அது எப்படி என்றால் வெங்கட் என்னிடம் வந்து மதுமிதாவை பற்றி ஏதாவது கூறுவான்.
 
"மச்சி! மார்க் குறைஞ்சதுனால இன்னிக்கி அவ சாப்பிடவே இல்ல! அவ தூங்கவே இல்லை!" என்று ஏதாவது ஒன்றை பற்றி கூறி சந்தோசம் அடைவான்.
 
இதை கேட்கும்போது மதுமிதாவின் மீது எனக்கு இரக்கம்தான் வந்தது.
 
அவளிடம் சென்று பேசி பார்க்கலாம் என்று மனதில் தோன்றும்.
 
ஆனால் அவள் என்னை அடித்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அந்த எண்ணத்தை கைவிட்டு விடுவேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#35
கடந்த மூன்று மாதத்தில் நான் அதிக மதிப்பெண் எடுத்த காரணத்தினால் மதுமிதாவின் கோபம் உச்சத்தை தொட்டுவிட்டது என்று அவளது செயலை வைத்து கண்டுகொண்டேன்.

அது எப்படி என்றால்! அவள் என்னுடைய பேக்கில் இருக்கும் பேனாவை எடுத்துக்கொள்வது!
 
ரெகார்ட் நோட்டில் இங்கை ஊற்றி வைப்பது!

புத்தகத்தில் இருக்கும் பக்கங்களில் பேனாவால் கிறுக்கி வைப்பது என்று கிறுக்கு தனமான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
 
இதையெல்லாம் நாங்கள் மதிய உணவிற்கு செல்லும் வேலையில்தான் செய்கிறாள் என்று புரிந்துக்கொண்டேன்.
 
என்னிடம் இதுபோல் யாரும் விளையாடியதில்லை என்ற காரணத்தால் அவள் செய்த எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பித்தேன்.
 
அதனால் அவளிடம் இதைப்பற்றி எதுவும் கேட்பதற்கு மனம் வரவில்லை.
 
மேலும் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்து மறைத்து விட்டேன்.
 
இப்படியே காலாண்டு தேர்வும் வந்தது.
 
அதில் கடைசி தேர்வின்போது அவள் செய்த செயல் ஒன்றை ரசிக்க முடியவில்லை.
 
அதற்கு மாறாக உச்சபட்ச கோபத்தை எனக்கு உண்டாக்கியது.
 
என்னுடைய பேக்கில் இருந்த பேனாவை உடைத்து! அதற்குள்ளேயே போட்டு! இங்கை ஊற்றி நாசம் செய்து வைத்திருந்தாள்.
 
அந்த ஒரு பேனா மட்டும்தான் என் கையில் இருந்தது.
 
அதனால் வேறுவழி இல்லாமல் ஆசிரியர் ஒருவரிடம் பேனாவை கடன்வாங்கி எழுதினேன்.
 
ஆசிரியர் பேனா வாங்கியதற்கு என்னை எதுவும் சொல்லவில்லை.
 
இருந்தபோதிலும் இவள் செய்த செயலை எண்ணி எனக்கு அதிகமாக கோபம் வந்தது.
 
அதன் பிறகு காலாண்டு தேர்விலும் நானே முதல் மதிப்பெண் பெற்றேன்.
 
இப்போது அவளது பழிவாங்கும் சிந்தனை இன்னும் ஒருபடிக்கு மேல் சென்று மேலும் என்னை வெறுப்புக்குள்ளாக்கியது.
 
அது என்னவென்றால்! என்னுடைய சைக்கிளில் இருக்கும் காற்றை திறந்து விடுவது! இல்லையென்றால் பஞ்சர் செய்வது என்று அவளுடைய செயல் வலுத்தது.
 
இவளை எப்படியேனும் கையும் களவுமாக பிடிக்கவேண்டும்.
 
ஆனால் இதை மற்ற நண்பர்களிடம் கூறாமல் தனித்து செயல்படுவதே நல்லது.
 
இல்லையென்றால் பிரச்சனை வேறு விதமாக சென்றுவிடும் என்று என்னுடைய மூளை அறிவுறுத்தியது.
 
அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#36
கடந்த மூன்று வாரமாக... வாரத்திற்கு ஒருமுறை! என்னுடையை சைக்கிளுக்கு ஏதாவது ஒரு வகையில் சேதம் விளைவித்து வந்தாள்.

அதேபோல் நான்காவது வாரமும் ஏதேனும் செய்ய வருவாள் என்று மனதிற்குப்பட்டது.
 
நிச்சயமாக அவள் காலை அல்லது மாலை நேரத்தில் எந்த சேதமும் விளைவிக்க முடியாது.
 
ஏனென்றால் சைக்கிள் ஸ்டாண்டில் அந்த நேரத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
 
அதனால் மதிய நேரத்தில் உணவு இடைவேளையின் போதுதான் அவள் இப்படி செய்திருக்க முடியும் என்று புரிந்தது.
 
மதிய நேரத்தில் நண்பர்களுக்கு தெரியாமல் எப்படி கண்காணிக்கலாம் என்று யோசித்தேன்.
 
அந்த வாரத்தின் முதல் நாள் மதியம் வேகமாக சாப்பிட்டுவிட்டு ஆசிரியர் ஒருவர் அழைத்தார் என்று பொய் சொல்லிவிட்டு சைக்கிள் ஸ்டாண்டிற்கு விரைந்தேன்.
 
அங்கே என்னுடைய சைக்கிள் நல்ல நிலைமையில் இருந்தது.
 
அவள் எதுவும் செய்யவில்லை என்று நிம்மதி அடைந்தேன்.
 
அங்கே எப்போதும் என்னுடைய சைக்கிள் பக்கத்தில் சில மாணவர்களின் பைக்குகள் இருக்கும்.
 
அந்த பைக்குகளுக்கு நடுவில் ஒளிந்துக்கொண்டு அவள் வருகிறாளா என்று பார்க்கலாம் என்று மறைந்திருந்து பார்த்தேன்.
 
நீண்ட நேரம் ஆனது!
 
அவள் வரவில்லை.
 
பின்பு வகுப்பிற்கு நேரமான காரணத்தினால் அங்கிருந்து கிளம்பிச்சென்றேன்.
 
அங்கே மதுமிதா நல்ல பிள்ளை போல புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருந்தாள்.
 
நான் கோபத்தை அடக்கிக்கொண்டு என்னுடைய பெஞ்சில் அமர்ந்தேன்.
 
அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் என்னுடைய கண்காணிக்கும் பணி தொடர்ந்தது.
 
மதிய வேளையில் நண்பர்களிடம் ஏதோ ஒரு படிப்பு சம்பந்தமான காரணத்தை சொல்லிவிட்டு சைக்கிள் ஸ்டண்டிற்கு சென்றுவிடுவேன்.
 
நன்றாக படிக்கும் ஒரே காரணத்தால் நான் எது சொன்னாலும் நண்பர்கள் நம்பிவிடுவதால் இந்த விஷயத்தில் எனக்கு சாதகமாக இருந்தது.
 
முதல் மூன்று நாட்கள் அவள் வரவேயில்லை.
 
நான் மனம் தளராமல் நான்காம் நாளும் பைக்கின் நடுவில் மறைந்திருந்து பார்த்தேன்.
 
அப்போது ஏதோ ஒரு பெண்ணின் கொலுசு சத்தம் கேட்டது.
 
அந்த சத்தம் மெல்ல மெல்ல என்னை நோக்கி வருவது போல் இருந்தது.

அவள்தான்!
 
வந்துவிட்டாள்...
 
இனி என்ன செய்வது என்று புரியாமல் கை கால்கள் எல்லாம் உதறியது.
 
எப்படியும் கோபத்தை மட்டும் விடக்கூடாது என்று முடிவுசெய்து தைரியமாக என்னுடைய பார்வை முழுவதையும் சைக்கிள் டயரில் செலுத்தி அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
 
சில நொடிகளில்...
 
நான் எதிர்பார்த்தது போலவே மதுமிதா என் சைக்கிள் அருகே வந்து நின்றாள்.
 
அவள் கையில் ஒரு ஆணி இருந்தது.
 
அதை வைத்து சைக்கிள் டயரை பஞ்சர் செய்ய முயற்சி செய்தாள்.
 
அப்போது அவள் எதிர்பார்க்காத தருணத்தில்!
 
ஆணி வைத்திருந்த அவளது கையை வேகமாக பிடித்தேன்!
 
அவள் கையில் வைத்திருந்த ஆணியை கீழே போட்டுவிட்டு என்னுடைய முகத்தை மிரட்சியுடன் பார்த்தாள்.

நான் அவளை கையும் களவுமாக பிடித்துவிட்ட காரணத்தால் பயம் கலந்த கோபத்துடன் என்னையே முறைத்துக்கொண்டிருந்தாள்.
 
அந்த நேரத்தில் இவள் வெங்கட் மற்றும் கார்த்தியை அடித்தது நினைவுக்கு வந்தது.
 
அதனால் என்னுடைய கோபம் மேலும் அதிகமானது.
 
உடனே அவளது கையை விடுவித்துவிட்டு மதுமிதாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டேன்.
 
இப்போது அவளுக்கு சப்த நாடியும் அடங்கி போனது.
 
கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியாமல் வலியால் துடித்தாள்.
 
"ஏன்டி! உனக்கு எவ்வளவு திமிரு? இதே மாதிரி எத்தன பேர அடிச்சுருப்பே? எப்படி வலிக்கும்னு இன்னைக்கு தெரியுதா?”
 
நான் வாயில் வந்ததையெல்லாம் திட்டி தீர்த்தேன்.
 
அடுத்த நொடி!
 
அவளது கண்களில் இருந்து நீர் தாரை தரையாக வழிந்தது.
 
மதுமிதா பயங்கர சத்ததுடன் அழுதாள்.
 
அய்யயோ! இவளை அவசரபட்டு அடித்துவிட்டோமே!

பேசியாவது அவளது கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து இருக்கலாமே.
 
கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு என்றுமே சரியாக இருக்காது என்று அந்த நொடிதான் எனக்கு புரிந்தது.
 
அடுத்து என்ன செய்யப்போகிறோம் என புரியாமல் இருந்த என்னுடைய மனம் அவளது கண்ணீரால் இளகியது.
 
இவள் இப்படி அழுவதை யாரும் பார்த்து விடக்கூடாது என்று சுற்றி முற்றி பார்த்தேன்.
 
நல்லவேளை யாரும் இல்லை என்று நிம்மதி அடைந்து அவள் கண்களை துடைத்து சமாதானம் செய்யலாம் என்று அருகில் சென்றேன்.
 
"மதுமிதா! பிளீஸ் அழாதடி! ஏதோ கோவத்துல அடிச்சுட்டேன்!"
 
கண்களை துடைக்க என் கையை அவள் முகத்தின் அருகே கொண்டு சென்றேன்.
 
உடனே என்னுடைய கையை தட்டிவிட்டாள்.
 
தொடர்ந்து அழுது கொண்டே திக்கி திக்கி பேசத்தொடங்கினாள்.
 
“ச்...சும்மா நடிக்காத விக்ரம்! நீ சொ...சொன்னபடி! என்னைய பழி வாங்கி! அவமானப்படுத்தி! நீ மட்டும் எல்லார்கிட்டயும் நல்ல பேரு வாங்கிடேல்ல!”
 
தினேஷ் சொன்னபடி நான் படித்து அதிக மதிப்பெண் வாங்கியது இவளுக்கு தெரிந்துவிட்டது போல என்று நினைத்தேன்.
 
"மதுமிதா உன்னைய விட அதிக மார்க் வாங்கி உன்னோட திமிர அடக்கனும்னு தினேஷ் சொன்னது உண்மைதான்! ஆனா அதுக்காக ஒன்னும் இப்படியெல்லாம் பண்ணல! நான் எப்பவும் போலதான் படிச்சேன்! அதான் நிறையா மார்க் வாங்கினேன்! இதுல என்னோட தப்பு எதுவுமே இல்ல!" என்று பாவமாக கூறினேன்.
 
"என்னடா சொல்றே! இதுவேற நடந்துச்சா?"
 
மதுமிதா மேலும் தேம்பி தேம்பி அழுதாள்.
 
என்ன இவள் என்னையே போட்டு குழப்புகிறாள்?
 
நான்தான் தெரியாமல் உளரிவிட்டேனா?
 
இல்லை! வேறு எதைதான் இவள் கூறுகிறாள் என்று புரியாமல் தவித்தேன்.
 
"மதுமிதா! நீ சொல்றது எனக்கு சுத்தமா புரியல! எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு!"
 
"என்ன விக்ரம்! திரும்ப திரும்ப தெரியாத மாதிரி நடிக்கிறியா? இல்ல நாலு வருசத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு மறந்துட்டியா?" என்று கேட்டாள்.
 
"என்னடி சொல்லுறே? நான் இந்த ஸ்கூலுக்கு வந்தே கொஞ்ச நாள்தான் ஆகுது! உனக்கு பைத்தியம் பிடிச்சுருச்சா?”

"டேய்! சும்மா நடிக்காத விக்ரம்! நாலு வருசத்துக்கு முன்னாடி! சென்னையில நடந்த கண்காட்சில நீ பண்ணுனத மறந்துட்டியா?"
 
மதுமிதா அழுதுக்கொண்டே என்னை பார்த்து பயங்கரமாக கத்தினாள்.
 
அவள் எதை கூறுகிறாள் என்று முதலில் புரியவில்லை.
 
ஆனால் சென்னையில் நடந்த கண்காட்சியை பற்றி சொன்னதும் எனது கை கால்கள் நடுங்கியது.
 
என்னுடைய மனக்கண்ணில் நான்கு வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் அனைத்தும் படமாக ஓடியது.
 
இப்போது என்னுடைய தவறை முழுமையாக உணர்ந்து வலது கையை எடுத்து நெற்றியில் பலமாக அடித்துக்கொண்டேன்!
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#37
Semma Interesting and Fantastic Updates Nanba Super
Like Reply
#38
Excellent bro Smile
Like Reply
#39
Super romantic
Like Reply
#40
YOU ARE ROCKING
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)