16-09-2023, 10:24 AM
Super update
♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
|
16-09-2023, 09:30 PM
Sema update sema twist athuvum sema thriller episode comedy add Pani atha insert Rasika vachu director sema super nanba
17-09-2023, 06:40 AM
மிகவும் அற்புதம் நண்பா நவின சத்தியவான் சாவித்திரி கதை நண்பா சூப்பர்
17-09-2023, 10:21 AM
Sema update waiting for what happened to Raja
17-09-2023, 08:57 PM
Hi நண்பர்களே,தொடர்ந்து 3 நாட்கள் லீவு கிடைத்ததால் ஒரு சின்ன டூர் பிளான் பண்ணி வந்துள்ளேன்.அதனால் எழுத நேரம் கிடைக்கவில்லை.முடிந்தால் நாளை எழுதி பதிவு போடுகிறேன்.நன்றி
19-09-2023, 01:41 AM
(This post was last modified: 19-09-2023, 01:41 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
19-09-2023, 01:42 AM
19-09-2023, 01:42 AM
19-09-2023, 01:43 AM
(This post was last modified: 19-09-2023, 01:43 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
19-09-2023, 01:44 AM
19-09-2023, 01:48 AM
(This post was last modified: 29-11-2023, 10:24 PM by Geneliarasigan. Edited 9 times in total. Edited 9 times in total.)
Episode -57
ராஜாவிற்கு தலையில் பலத்த அடிப்பட்டதால் டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.மேலும் 5 லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றனர். ஷன்மதி எப்படி பணத்தை புரட்டுவது ஒரு நிமிடம் யோசித்தாள்.ஆனால் சஞ்சனா யோசிக்கவே இல்லை. அரைமணி நேரத்தில் கட்டி விடுவதாக சொன்னாள். உடனே தன் அம்மா உடன் பிறந்தவர்களுக்கு ஃபோன் செய்தாள். "பெரியப்பா நீங்க என் பேரில் உள்ள நிலத்தை கேட்டீங்களே ,இப்போ நான் உடனே தரேன்.எனக்கு உடனே 5 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைக்க முடியுமா?. என்னம்மா சஞ்சனா,எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த நிலத்தை கொடுக்க மாட்டேன் என்று சொன்னே.இப்போ உடனே விக்கிறதா சொல்ற,கேட்கவே ஆச்சரியமா இருக்கு. நான் கல்யாணம் பண்ணிக்க போற பையன் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கான்.உடனே அறுவை சிகிச்சை செய்ய அவசரமா பணம் தேவைப்படுது பெரியப்பா.எனக்கு அவனை விட்டா வேற யாரும் இல்லை.அதனால் கொஞ்சம் உடனே பணம் போட்டு விடுங்க,நீங்க எப்போ வந்து கையெழுத்து போட சொன்னாலும் நான் போடறேன்.. அவள் பெரியப்பாவும்"ம் அப்ப சரி சஞ்சனா,எந்த ஹாஸ்பிடல் என்று சொல்லு.நான் நாளைக்கு பத்திரத்தோட வரேன்.இப்போ உன் அக்கவுண்ட் நம்பர் அனுப்பிச்சு விடு.நான் உடனே பணம் அனுப்புறேன்."என ஒப்பு கொண்டார். சஞ்சனா உடனே பணமும் கட்டி விட்டாள்.அறுவை சிகிச்சை முடிந்து ராஜா ICU வார்டு கொண்டு வரப்பட்டான். விவரம் கேள்விபட்டு ராஜாவின் அம்மா,தங்கை ஓடி வந்தனர்.ஆணிவேர் போல் வீட்டை தாங்கி கொண்டு இருந்தவன் அவன்.இப்போது மரமே அறுந்து விழும் நிலையில் இருந்ததால் துடித்தனர். ராஜாவின் நண்பர்கள் உடனே ஓடி வந்து விட்டனர்.அவர்கள் சஞ்சனாவிற்கு பக்கபலமாக இருந்தாலும் அவர்களும் மனதளவில் நொறுங்கி போய் இருந்தனர். ராஜாவிற்கு தெரிந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் குவிந்து விட்டனர்.மாலா அக்கா,அவள் குழந்தையோடு வந்து விட்டார்.உடன் வேலை செய்பவர்கள் என ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வந்து இருந்தனர்.எல்லோரும் அவன் கண் திறப்பதற்காக காத்து கொண்டு இருந்தனர். டாக்டர் வந்து பார்த்துவிட்டு " என்ன இது ஒரு பேஷன்டுக்கு இவ்வளவு கூட்டமா? "என்று ஆச்சரியப்பட்டார். இங்கு ராஜாவிற்கு சொந்தக்காரங்க மற்றும் நெருங்கியவர்கள் யார் என்று கேட்டார். ராஜாவின் அம்மா,தங்கை ,சஞ்சனா ,ராஜேஷ் மற்றும் வாசு முன்னே வர,டாக்டர் அவர்களை பார்த்து"இங்கே பாருங்க ராஜா நிலைமை கொஞ்சம் மோசமாக உள்ளது.அவனுடைய மூளை நரம்புகள் கொஞ்ச கொஞ்சமா செயல் இழந்து கொண்டே வருது.அவன் இன்னும் அரை மணி நேரத்திற்குள் கண் விழிக்க வேண்டும்.இல்லை என்றால் மூளை சாவு அடைந்து விடுவான்.அதனால் அவன் கிட்ட பேசி உடனே நினைவுக்கு கொண்டு வர வேண்டும்.இதில் ரொம்ப நாளாக யார் அவனுக்கு பழக்கமோ அவங்க முதலில் போய் பேச்சை கொடுங்க..என்றார் சஞ்சனா நான் போறேன் என்று சொல்ல,டாக்டர் நீ யாரும்மா என்று கேட்டார். சார் நாங்க இருவரும் உயிருக்குயிராக லவ் பண்றோம்,என்னால் அவன் நினைவை கொண்டு வர முடியும்.என்னை முதலில் போக விடுங்க.. எமன், தன் உதவியாளர்களிடம்,டேய் இப்போ அவளை உள்ளே விட கூடாது.அப்படி விட்டால் அவனை பிழைக்க வைத்து விடுவாள்.நாம டாக்டர் மூலமா இவளை தடுக்க வேண்டும்.அவன் இறந்தால் கூட அவளின் கோபம் இந்த டாக்டர் மீது தான் திரும்பும்.நாம தப்பித்து விடலாம்.எப்படி? சூப்பர் பிரபு, எப்படி பிரபு உங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் யோசிக்க தோணுது.நாங்கள் எல்லாம் எப்போ உங்ககிட்ட தொழில் கத்துகிட்டு மேல வருவது..?என பெருமூச்சு விட்டனர். சும்மா என்னை புகழாதீங்கடா..என எமனே வெட்கப்பட்டான். டாக்டர் அவளிடம் "இங்க பாரும்மா,முதலில் அவன் அம்மா,தங்கை போகட்டும்.உன்னோட ஆடை ,கன்னம் எல்லாம் இரத்தம் பட்டு காய்ஞ்சி போய் இருக்கு பாரு.முதலில் அதை போய் துடைங்க.இப்படியே அவன் கிட்ட போனால் அவனுக்கு தான் infection தான் ஆகும்.. ராஜாவின் அம்மா,தங்கை உள்ளே சென்று அவனிடம் பேச்சு கொடுத்து நினைவை வர வைக்க முயன்றனர். ஆனால் அவனிடம் அசைவே இல்லை.அடுத்து ராஜேஷ்,வாசு பேச்சு கொடுத்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.வாசு பெரும்பாலும் அழுவது இல்லை.ஆனால் அவனாலும் இன்று ராஜாவின் நிலையை பார்த்து அழுகையை அடக்க முடியவில்லை. நேரம் கடந்து கொண்டே இருந்தது.சஞ்சனா டாக்டரை தள்ளி விட்டு உள்ளே நுழைந்தாள்.டாக்டர் அவளை வெளியே இழுக்க முயற்சிக்க ,ராஜேஷிம் ,வாசுவும் டாக்டரை பிடித்து கொண்டனர். அங்குனி எமனிடம் "பிரபு அவள் டாக்டரை தள்ளி உள்ளே போய்ட்டா,என்ன பண்றது?", அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம தான்டா நான் முழித்து கொண்டு இருக்கிறேன்.இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நீ எமனாக இருக்கீயா.வேலை இன்னிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. "இல்ல பிரபு,நீங்க தான் எப்பவும் எங்க தல.எதுவாக இருந்தாலும் நீங்களே சமாளிங்க"என எமனை மாட்டி விட்டனர். வாசுவும் ,ராஜேஷிம் டாக்டரிடம் "சார் இந்த நேரத்தில் இன்ஃபெக்ஷன் அது இது என்று பார்க்காதீங்க.நேரம் ரொம்ப குறைவாக இருக்கு.அவள் மட்டும் தான் அவனுக்கு நினைவை கொண்டு வர முடியும்."என கெஞ்சினர். சஞ்சனா,அவன் கையை எடுத்து தன் கரங்களில் வைத்து கொண்டு "டேய் ராஜா,பிளீஸ் எந்திரிடா.எனக்கென்று இந்த உலகில் இருக்கிற ஒரே துணை நீ மட்டும் தான்.அன்று என் பூர்வீக வீட்டில் உன் மடியில் நான் படுத்து இருந்தது என் அம்மா மடியில் படுத்தது போல் இருந்ததுடா.எனக்கு அம்மாவா,தோழனா,கணவனா இருப்பது எல்லாம் நீ மட்டும் தான்டா,எனக்கு நீ வேணும்டா, பிளீஸ் கண்ணை திறடா" என்று அவள் கூறும் போதே அவன் கண்ணின் ஓரம் நீர் கசிந்தது. அதை பார்த்த டாக்டர் உற்சாகம் அடைந்து ,"கமான் விடாதீங்க சஞ்சனா.கொஞ்ச கொஞ்சமாக அவனுக்கு நினைவு வருது.தொடர்ந்து முயற்சி பண்ணுங்க" என்று கத்தினார். உடனே சஞ்சனா ,அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து,"டேய் எல்லா பெண்களும் இந்த விசயத்தை முதல்முறை தன் புருஷனிடம் தனியா சொல்ல ஆசைப்படுவார்கள்.நான் எல்லோர் முன்னிலையில் உன்னிடம் இந்த விசயத்தை சொல்றேன்.நீ அப்பாவாக போறேடா,உன் குழந்தை என் வயிற்றில் வளருது என்று அவள் சொல்ல அதை கேட்டு அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.சஞ்சனா அப்பா உட்பட.. வாசு ராஜேஷிடம் "டேய் மச்சான்,அவள் அப்போ சொன்னாலே ரெண்டு பந்து,ஒரு பொந்து,அதனோட அர்த்தம் இப்போ தான் எனக்கு புரியுது.பூனை மாதிரி இருந்துகிட்டு என்ன வேலை பார்த்து வச்சி இருக்கான் பாரு..அவன் கண் மட்டும் முழிக்கட்டும்,அவனுக்கு இருக்கு கச்சேரி."என வாசு கத்தினான். சஞ்சனா தொடர்ந்து பேச்சு கொடுத்தாள்.டேய் நம்ம ரெண்டு பேரை நம்பி,ஒரு புது ஜீவன் உலகத்திற்கு வருது.அதுக்கு நாம ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டாமா..!இப்போ நீ மட்டும் எழவில்லை என்றால் அப்புறம் நானும் உன்னோடு வந்து விடுவேன் என்று அவன் மார்பில் விழுந்து அழுது கண்ணீரால் நனைத்தாள். அவள் தலையை யாரோ வருடுவது போல் இருந்தது..அந்த ஒரு கணம் சஞ்சனாவின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை.தொடுவதிலேயே ராஜா தான் என உணர்ந்து சஞ்சனா தலையை தூக்கி பார்க்க ராஜா கண் விழித்து இருந்தான்.ராஜாவின் நினைவுகளை பறவையாக சென்று சஞ்சனா மீட்டு கொண்டு வந்தாள். ராஜா அவளை பார்த்து, " மழலை சுமந்த மரகதம் ! மனதை சுமந்த தளிர் மரம் ! நிழலை கொடுத்த வளைக்கரம் ! உயிரும் அவளின் அடைக்கலம்! புண்ணியம் கோடி செய்தவன் நானோ ! ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர! உறவின் சிறகை விரித்தவள் !என்று கூற அவள் கண்களில் நீரோடு அவன் முகம் முழுக்க முத்த மழையில் நனைத்தாள் அங்கு இருந்த அனைவரும் சந்தோஷத்தில் கண்ணீர் சிந்தினர்.சஞ்சனாவின் அப்பாவும் தான் செய்த தவறை உணர்ந்து கொண்டு விட்டார்.இருவரும் ஒருவரையொருவர் உயிருக்குயிராக விரும்புகின்றனர்.இதற்கு மேல் இவர்களை பிரிப்பது பாவம்.சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைத்து விட வேண்டும் என நினைத்தார். அங்குனி,மங்குனி இருவரும் எமனை பார்த்து"பிரபு அவன் பிழைச்சிட்டான்.இப்போ என்ன பண்றது.இன்னிக்கு வெறும் கை வீசிட்டு நாம எமலோகம் திரும்ப முடியாது.நாம ஒன்னு பண்ணலாம்,இங்கே நிறைய பேர் அவனை பார்க்க வந்து இருக்காங்க,இதில் தினமும் நம்மிடம் அடி வாங்குவதற்கே ஒரு பீஸ் சிக்கி இருக்கு,அவனை தூக்கலாமா என்று வாசுவை நோக்கி கை காட்டினர். டேய் உதவாகரைகளா,வேண்டாம் விடு.அவங்க எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க.அப்படியே இருக்கட்டும்.நாம வெறுங்கையோடு திரும்பி போக தேவை இல்லை.அதற்கு ராஜாவே ஒரு வழி ஏற்படுத்தி கொடுத்து உள்ளான்.அவன் கங்கையில் விட்ட விந்தணுவை போய் கங்கையிடம் கேட்டால் கொடுப்பாள்.அதை வைத்து கணக்கை சீர் செய்ய வேண்டியது தான்.வா கிளம்பலாம். வாசு,ராஜாவிடம் வந்து "டேய் அன்னிக்கு என்னவோ உத்தம புத்திரன் போல பேசின,நான் கல்யாணத்திற்கு முன்னாடி சஞ்சனாவை கூட தொட மாட்டேன் என்று சொன்னே.ஆனா இப்போ என்ன வேலை பார்த்து வைச்சு இருக்கே என்று அவனை செல்லமாக மார்பில் அடிக்க நடுவில் செங்குத்தாக சஞ்சனா ஊசி நீடிலை வைத்தாள்.அது சரக்கென்று வாசு உள்ளங்கையை பதம் பார்த்தது. "ஆ"வென வாசு வலியில் அலறினான். பக்கத்தில் உள்ள அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் கத்தியை எடுத்து கொண்டு"டேய் வாசு ஒழுங்கா ஓடி போய்டு,அவன் மேல ஏதாவது ஒரு சின்ன அடி பட்டுச்சு, இன்னிக்கு உன் வீட்டுக்கு சொல்லி அனுப்ப வேண்டியது தான்" என மிரட்டினாள். ராஜா அவனிடம்"டேய் வாசு,இப்போ அவளை எந்திரித்து பிடிக்க கூடாதா நிலைமையில் நான் இருக்கேன்டா.அவ முன்னாடி என்னை அடித்து தொலையாதே.." சஞ்சனா சிஸ்டர்,சும்மா செல்லமாக அடிக்க வந்ததிற்கு கத்தியை காட்டி மிரட்டினா எப்படி?நான் இவன் மேல கையையே வைக்க மாட்டேன் போதுமா? என ராஜேஷ் பின்னாடி ஒளிந்து கொண்டான். ஷன்மதி வந்து சஞ்சனாவின் கையை பிடித்து,"என்னை மன்னிச்சிடு சஞ்சனா.என்னால தான் இவ்வளவு பிரச்சினையும்.நீங்க பேருக்கு தான் ரெண்டு உடலாக இருக்கீங்க.ஆனால் உசிரு ஒன்னு தான் என்று புரிந்து கொண்டேன்"என்று அவளும் அழுதாள். ராஜாவை பார்த்து,"ராஜா இதற்கு மேல் பழைய மாதிரி என்னை ஒரு தோழியாகவாவது ட்ரீட் பண்ணுவீயா" என்று அழுது கொண்டே கேட்க, "அழாதே ஷன்மதி,நீ இப்பவும் எனக்கு நல்ல தோழி தான்.நீ தான் ஏதோ தப்பு தப்பா நினைச்சிக்கிட்டே" ஷன்மதி அழுகையை அடக்கி கொண்டு அறையின் வெளியே வர,அங்கே அவள் அப்பா கமிஷனர் நின்று கொண்டு இருந்தார். அவரை கட்டி பிடித்து கொண்டு அடக்கி வைத்து அழுகையை கொட்டி தீர்த்தாள்.அழுகையின் ஊடே,அப்பா ராஜா மாதிரியே எனக்கும் ஒரு மாப்பிள்ளை பாருங்க, சரிம்மா கண்டிப்பா பார்க்கிறேன்.ராஜா மாதிரி தானே,ராஜா இல்லையே என்று சிரித்து கொண்டே கேட்க அவளும் சிறு புன்னகையோடு "ஆமாம்ப்பா ,ராஜா மாதிரி தான் கேட்டேன்,ராஜாவே இல்ல என்று அழுத்தமாக சொன்னாள். இதுக்கு தான் அனுபவம் உடையவங்க சொல்ற பேச்சை கேட்கனும் ஷன்மதி.நான் முதல் சந்திப்பிலேயே தெரிந்து கொண்டேன்.அந்த பொண்ணு அவன் மேலே வெறித்தனமான அன்பு வைச்சு இருக்கு.அவனுக்காக என்ன வேண்டுமானாலும் அந்த பொண்ணு செய்யும். உண்மை தாம்ப்பா.அவன் என்னடாவென்றால் அவளுக்காக உயிரையே கொடுக்கிறான்.அவ இன்னும் ஒரு படி மேலே போய் சாக கிடந்த அவனை மீட்டு கொண்டு வந்துட்டா.சத்தியமா என்னால் இதை பண்ண முடியாது.கண்டிப்பாக அவங்க ரெண்டு பேர் ஒன்னு சேருவது நியாயம்.நான் சஞ்சனாவிடம் தோல்வி அடைந்தது கவலையே இல்ல.ராஜாவிற்கு சிறந்த ஜோடி அவள் மட்டும் தான். டாக்டர் வந்து "சரி சரி எல்லோரும் போங்க, பேஷன்ட்டை யாரும் கஷ்டபடுத்தாதீங்க.அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.யாராவது ஒருவர் மட்டும் கூட இருந்தால் போதும்.அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்,ராஜாவுக்கு கார் வந்து மோதியதில் வலது கால் எலும்பு கொஞ்சம் தாறுமாறாக உடைந்து இருக்கு.இப்பொழுது கட்டு போட்டு வச்சு இருக்கோம்.ஒரு வேளை எலும்பு கூடவில்லை என்றால் ஒரு கால் எடுக்க வேண்டி கூட வரலாம். எல்லோரும் இதை கேட்டு அதிர்ச்சியாக,சஞ்சனா இதை கேட்டு கொஞ்சமும் கலங்கவில்லை. சார் அவன் எமனையே எதிர்த்து போராடி உசிரோட திரும்பி வந்துட்டான்.அவன் போராளி சார்,அவன் கால் கண்டிப்பாக கூடி நல்லா நடப்பான்.நீங்க கவலைபடாமல் போய்ட்டு வாங்க..என அவள் டாக்டருக்கு தைரியம் கூறினாள். ராஜாவின் அம்மா அவளிடம் வந்து,"சஞ்சனா காலையில் இருந்து நீ பச்சை தண்ணி கூட குடிக்கல. வாயும் வயிருமா வேற இருக்கே நீ .இந்தா முதலில் காஃபி சாப்பிட்டு விட்டு நீ வீட்டுக்கு கிளம்பு.நான் இவனை நான் கூட இருந்து பார்த்துக்கிறேன். "இல்லம்மா நீங்க போங்க,நான் ஹாஸ்பிடலில் இருந்து ராஜாவோடு தான் வெளியே வருவேன்." ராஜேஷ் அருகில் வந்து ராஜாவின் அம்மாவிடம்"அம்மா நீங்களும் தங்கையும் என் வீட்டுக்கு வந்து இரவு தங்கிக்கோங்க,சஞ்சனா நீ ராஜாவை பார்த்துக்க.இந்த ட்ரெஸ் மட்டும் நீ மாத்திட்டு உன் பழைய டிரஸை கொடு.நாளைக்கு வரும் பொழுது நான் உன் வீட்டுக்கு போய் வேற ட்ரெஸ் எடுத்து வரேன்." எல்லோரும் ராஜா பிழைத்து விட்ட சந்தோஷத்தில் கிளம்பினர். ராஜா ,சஞ்சனா பிரச்சினை முடிந்ததா இல்லை இன்னும் ஒரே ஒரு சின்ன தடையை மட்டும் தாண்ட வேண்டி உள்ளது.பிறகு ராஜாவின் முன்னாள் காதலி சுஜிதா வந்து மொக்கை வாங்கி கொண்டு செல்வாள்.
19-09-2023, 06:43 AM
மிக மிக மிக அருமையான மற்றும் காதல் கதைக்கு நன்றி நண்பா நன்றி
19-09-2023, 06:46 AM
இந்த பாகம் கிட்டதட்ட தெலுங்கு படமான தருவு திரைப்படத்தை நியாபகம் படுத்தியது எனக்கு இந்த எமன் காதல் மக்கள் கூட்டம் என ஒருவனின் உயிரை காப்பாற்ற பலரும் போராடுவார்கள் ஆனால் அது வீடியோ இது எழுத்து எழுத்துக்கள் மூலமாக படிப்பவர்களை கட்டிபோடுவது சாதரண விஷயமல்ல அதை கட்சிதமாக செய்கிறீர் இந்த கதை கிட்டத்தட்ட முடிய போகிறது தங்களின் அடுத்தடுத்த கதைகளும் இதைவிட பலமாக பக்குவமாக (குடும்ப உறவு காமம் இல்லாமல் வேண்டாம்) இருந்தால் நல்லது
19-09-2023, 07:04 AM
(This post was last modified: 19-09-2023, 07:28 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(19-09-2023, 06:46 AM)Natarajan Rajangam Wrote: இந்த பாகம் கிட்டதட்ட தெலுங்கு படமான தருவு திரைப்படத்தை நியாபகம் படுத்தியது எனக்கு இந்த எமன் காதல் மக்கள் கூட்டம் என ஒருவனின் உயிரை காப்பாற்ற பலரும் போராடுவார்கள் ஆனால் அது வீடியோ இது எழுத்து எழுத்துக்கள் மூலமாக படிப்பவர்களை கட்டிபோடுவது சாதரண விஷயமல்ல அதை கட்சிதமாக செய்கிறீர் இந்த கதை கிட்டத்தட்ட முடிய போகிறது தங்களின் அடுத்தடுத்த கதைகளும் இதைவிட பலமாக பக்குவமாக (குடும்ப உறவு காமம் இல்லாமல் வேண்டாம்) இருந்தால் நல்லது.இந்த மாதிரி கதைகளுக்கு வரவேற்பு குறைவு.உங்களை போன்ற ஒரு சில நண்பர்கள் மட்டும் தான் கமென்ட் செய்கிறீர்கள்.உங்களை போன்றவர்களுக்காக மட்டுமே இந்த கதையை விடாமல் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன்.57 episode நீங்கள் சொன்ன படத்தை நான் பார்க்க வில்லை நண்பரே,இதில் கதையில் முதல் பாகத்தில் இருந்தே ராஜாவை,பிறருக்கு உதவி செய்யும் நபராகவே காண்பித்து இருப்பேன்.அதனால் தான் சஞ்சனா என்ற பொக்கிஷம் அவனுக்கு கிடைத்தாள்.அவன் பணம் அதிகமாக சம்பாதிக்கவில்லை என்றாலும் மனிதர்களை சம்பாதித்து உள்ளான் என்றே நான் இந்த கதையில் சொல்ல வந்த விசயம்.இந்த கதை இன்னும் 3 episode வது வரும்.சஞ்சனா,ராஜா திருமணத்திற்கு முன் ஒரு சம்பவம் நடைபெற போகிறது..அது சீரியஸ் சம்பவமாக இருந்தாலும் காமெடி கலந்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.இந்த மாதிரி கதைகளுக்கு வரவேற்பு குறைவு.உங்களை போன்றவர்களுக்காக தான் விடாமல் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன்.அதாவது 56 நாட்களில் 57 Episode எழுதி இருக்கிறேன்.இந்த கதைக்கு comments ஓரளவு வந்து இருந்தாலும் நான் எதிர்பார்த்த views வரவில்லை.ஒரு episode எழுத மட்டும் குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் தேவைப்படுகிறது..மேற்கொண்டு புது கதை எழுதலாமா,வேண்டாமா என்ற மனநிலை உள்ளது.இப்பொழுது ஒழுங்காக இந்த கதையை மட்டும் எழுதி முடித்து விடுகிறேன்.வரவேற்பு இருந்தால் அடுத்த கதை என் மனதில் தயாராக உள்ளது.ஆனால் அது அமானுஷ்ய கதை.முன் ஜென்மம்,நிகழ்காலம் தொடர்பு உடைய பேய் சம்பந்தபட்ட கதை.முன் ஜென்மத்தில் நாயகியை அடைய முடியாமல் போனவன் அடுத்த ஜென்மத்தில் எப்படி ஆவியாக வந்து நிகழ் காலத்தில் பல முயற்சிகள் செய்து நாயகியை அடைகிறது என்பது தான் கதை சுருக்கம்.சொல்லபோனால் இந்த கதை என்னோட இரண்டாவது கதையாக வர வேண்டியது.ஆனால் இந்த கதைக்கு ஆவி சம்பந்தபட்ட விசயங்கள் நிறைய reference எடுக்க வேண்டும்.அதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது.வரவேற்பு கிடைத்தால் கண்டிப்பாக எழுதுவேன்.இல்லை என்றால் மன்னிக்கவும்.குடும்ப உறவு காம கதைகளை எப்பொழுதுமே நான் எழுதுவது இல்லை நண்பரே.என்னோட முதல் கதையை படித்தாலே உங்களுக்கு புரியும்.
19-09-2023, 07:05 AM
19-09-2023, 07:51 AM
The best story of now sema Fula love love and love athuvum anat Raja kanuka kaneeer vararathu elalm sema sanjana doctor talli vithu ula.pogarathu emotion alaga lines la kodndu vanthu irukeenga
Thanks for the beautiful love story ❤️❤️ |
« Next Oldest | Next Newest »
|