♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Boss viratham vera irukan Raja
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ராஜா மற்றும் சஞ்சனா இடையில் இருக்கும் காதல் சிறப்பாக உள்ளது. ஷன்மதி செய்யும் செயல் அவளை ராஜா வெறுக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறது.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
(12-09-2023, 09:28 PM)prrichat85 Wrote: Boss viratham vera irukan Raja

ஆமாம் ப்ரோ,உடலுறவு மட்டும் தான் கொள்ள கூடாது என நிபந்தனை.ஏற்கனவே மருத்துவமனையில் சஞ்சனா ராஜாவை முத்தம் இட்டு இருக்கிறாள்.உடலுறவு ஏற்படும் சமயத்தில் தான் அவளை தவிர்த்து இருக்கிறான்.என்ன தான் விரதம் இருந்தாலும் இது பிரம்மச்சரிய விரதம் அல்ல.அவளை தொடலாம்,முத்தம் இடலாம்.ஆனால் அவன் விந்துவை மட்டும் இழக்க கூடாது.விரதம் இருக்க காரணமே அவன் 60 நாட்கள் சேகரித்து வைத்த விந்துவை ஓரிடத்தில் இழக்க வேண்டும்.அது ஏன் என கடைசியில் உங்களுக்கு தெரிய வரும்.
Like Reply
(12-09-2023, 08:56 AM)mahesht75 Wrote: super duper updates bro

நன்றி நண்பா
Like Reply
(12-09-2023, 10:37 AM)Natarajan Rajangam Wrote: உண்மையான காதலை பிரித்து அதில் அடுத்தவர் அமர நினைத்தால் அவர்களின் நிலை அதளபாதளத்திற்கு செல்லும் அதை ஷன்மதி விரைவில் உணர்ந்து கொள்ள நேரிடும்

உண்மை நண்பரே
Like Reply
(12-09-2023, 09:45 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ராஜா மற்றும் சஞ்சனா இடையில் இருக்கும் காதல் சிறப்பாக உள்ளது. ஷன்மதி செய்யும் செயல் அவளை ராஜா வெறுக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறது.

நன்றி நண்பா,கதை இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது
Like Reply
Episode -53

நிகழ்ச்சி நடைபெறும் நாளும் வந்தது.
வாசு தனியாக ஒரு டப்பாங்குத்து நடனமும்,ராஜா மற்றும் சஞ்சனா இணைந்து சிவ சக்தி நடனமும் ஆடுவதென முடிவாகி இருந்தது.
ராஜாவிற்கு சிவனின் ஆடைஅமைப்பு என்பதால் புலித்தோல் ஆடை மட்டுமே அணிந்து ஆட வேண்டிய கட்டாயம்.

ராஜாவின் உடை அலங்காரத்தை பார்த்து வாசு விழுந்து விழுந்து சிரித்தான்.

டேய் அமைதியா இரு வாசு,சஞ்சனா வந்து பார்த்தால் உனக்கு உதை விழ போகுது.

மச்சான் என்னால சிரிப்பு அடக்கவே முடியலடா,எப்படிடா இதை போட்டு கொண்டு டான்ஸ் ஆட போறே.காலை தூக்கி ஆட வேண்டி வந்தால் உள்ளே இருக்கும் மொத்தம் தெரிய வருமே.

"டேய் லூசு நான் உள்ளே ஜட்டி போட்டு இருக்கேன்டா.."

இருந்தாலும் இந்த ட்ரெஸ்ஸை போட்டு கொண்டு நீ ஆடுவதை கற்பனை பண்ணி பார்த்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது..

வாசு தலையில் பட்டென்று குட்டு விழுந்தது.
"அம்மா" அன்று கத்தி கொண்டே வாசு திரும்பி பார்க்க,சஞ்சனா நின்று கொண்டு இருந்தாள்.

டேய் தேங்காய் முடி மண்டையா, அவன் டிரஸ்ஸையா கிண்டல் பண்ற,இந்தா உன் காஸ்ட்யூம்,இதை தான் இப்போ நீ போட்டு கொண்டு ஆட போறே...

வாசு அதை ஆவலோடு பிரித்து பார்க்க,வெறும் ஒற்றை பட்டாபட்டி டவுசர் மட்டுமே இருந்தது..

என்ன சஞ்சனா இது,வெறும் ஒரே ஒரு டவுசர் மட்டும் தான் இருக்குது..

பின்ன நீ ஆட போற பாட்டு,வாடி பொட்டை புள்ளை வெளியே என் வாலிபத்தை நோகடித்த கிளியே என்ற பாட்டு தான்.இதுக்கு இந்த ட்ரெஸ் தான் கொடுக்க முடியும்.அதுவும் இந்த பாட்டை உன் பொண்டாட்டியைப் நினைச்சி தான் ஆட போறே என்று சொன்னே இல்ல

ஆமாம் சஞ்சனா,அவள் என்னை வீட்டில் கொடுமைபடுத்துவதை எண்ணி தான் இந்த பாட்டு ஆட போறேன்.அப்படியே என் உள்ள குமுறல்களை மேடையில் கொட்டி ஆட போறேன்.நீ பாரு வெறித்தனமா இருக்கும்

சஞ்சனா சிரித்து "அதுக்கு தான் ஸ்பெஷல் பெர்மிஷன் போட்டு  உன் பொண்டாட்டியை இந்த நிகழ்ச்சிக்கு ராஜேஷ் அண்ணா கூட்டி வந்து முதல் வரிசையிலேயே உட்கார வைச்சு இருக்காங்க பாரு,"

வாசு பதறி போய் விட்டான்."அய்யயோ என்னங்கடா இந்த  வேலை பார்த்து வச்சு இருக்கீங்க..அவ இதை பார்த்தால் என் நிலைமை என்ன ஆவறது.என்னால ஆட முடியாது போங்கடா.நீங்களும் உங்க நிகழ்ச்சியும்"

"டேய் வண்டுருட்டி தலையா,நீ மட்டும் ஆட முடியாது என்று சொன்னால் இந்த வீடியோவை இப்போ இங்கே ஸ்டேஜ்ஜில் போட்டு காட்டி விடுவேன்" என சஞ்சனா மிரட்டினாள்.

அப்படி என்ன வீடியோ?  என்று வாசு அதை அலட்சியமாக வாங்கி பார்க்க,ஒரு நிமிடம் அதை பார்த்து பதறி போய் விட்டான்.

ராஜா நீயும் இதை பாரு,என காண்பிக்க,"என்னடா வாசு இப்படி பண்ணி இருக்கே."என்று ராஜா கிண்டல் பண்ணினான்.

சார் ஒரே இரவில் ஒபாமா ஆயிட்டார் தெரியுமா ராஜா உனக்கு? நேற்று இரவில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ மட்டும் இதுவரை 2 லட்சம் பார்வை போய் இருக்கு.ஒரு டம்மி ஆல்கஹால் பாட்டில் வச்சு பிராங்க் பண்ணி இருக்காங்க.மத்த எல்லோரும் வராங்க அந்த பாட்டில எடுக்க முயற்சி பண்ணும் போது அங்கே உள்ள டம்மி பாம்பை பார்த்து பதறி அடிச்சு ஒடுறாங்க.ஆனால் நம்ம ஹீரோ மட்டும் பாம்பை அசால்ட்டாக தூக்கி போட்டு விட்டு அந்த குவார்ட்டர் பாட்டிலை திறந்து குடிக்கிறார்.போதாகுறைக்கு அந்த டம்மி பாம்பை side dish ஆ நினைச்சு கடிச்சு வேற சாப்பிடறான். ஆல்கஹாலும் டம்மி,பாம்பும் டம்மி ஆனா இவன் பண்ற அலப்பறையை பார்த்து இந்த வீடியோ தான் இன்டர்நெட்டில் இப்போ டிரெண்டிங்.

அடப்பாவி வாசு,டம்மி சரக்கு என்று கூட தெரியாம தான் இந்த ஆட்டம் போட்டியா?

அய்யோ அப்படி எல்லாம் இல்ல மச்சான்,எனக்கு எதுவுமே நினைவிலேயே இல்ல.அனேகமா அந்த நேரம் லேசா சரக்கு உள்ளே விட்டு இருப்பேன் என நினைக்கிறேன்.அதான் போதையில் இதுவும் சரக்கு என நினைச்சு குடிச்சு கொஞ்சம் ஓவரா ஆட்டம் போட்டுட்டேன்.இதை பார்த்தா என் பொண்டாட்டி என்ன செய்வாள் என்றே தெரியாது?இப்போ என்னடா பண்றது?

சஞ்சனா ஏதாவது பண்ணுடி,வாசு பாவம்,ராஜா கெஞ்ச

ஒழுங்கா அவனை டான்ஸ் ஆட சொல்லு ராஜா,நான் அவன் ஆட போகிற பாட்டு விஷயமா அவன் பொண்டாட்டி கிட்ட பேசறேன்.அதனால் எந்த பாதிப்பும் வராது.அவன் ஆடவில்லை எனில் இந்த வீடியோவை மேடையில் போட்டு விடுவேன்.அப்புறம் நடக்கிற சம்பவங்களுக்கு நான் பொறுப்பு இல்ல..

அம்மா தாயே நான் ஆடறேன் போதுமா?எப்படியோ கோர்ட்டுக்கு போகாம ,வக்கிலை பார்க்காம அஞ்சு பைசா செலவு பண்ணாம டிவோர்ஸ் வாங்கி கொடுக்க முடிவு பண்ணிட்டீங்க.. என புலம்பினான்.

டேய் வாசு,நீ தைரியமா போய் ஆடு.நீ வருவதற்குள் இந்த வீடியோ டெலீட் ஆகி இருக்கும்.இந்த பிராங்க் வீடியோ பன்றவன் நம்பர் என்கிட்ட  இருக்கு.இவன் வீடு வளசரவாக்கத்தில் தான் இருக்கு.நான் இவன் கிட்ட ஆர்டர் எடுத்து இருக்கேன்.ஒருத்தர் அனுமதி இல்லாம எந்த வீடியோவும் பதிவேற்ற முடியாது.நான் பேசி டெலீட் பண்ண வைக்கிறேன்.

தயவு செய்து பண்ணு மச்சான்,உனக்கு புண்ணியமா போகும்..இல்லனா என் பொழைப்பு நாறி போய் விடும்..

முதலில் ஹைதராபாத்,பெங்களூர், டெல்லி என அந்தந்த ஊரில் இருந்து வந்தவர்கள் எல்லோரும் ஆடினர்.அதிலும் குறிப்பாக பெங்களூரில் இருந்து வந்தவர்கள் மட்டும் செமயாக கலக்கினர்.
தங்களை போல இனி யாரும் ஆட முடியாது இறுமாப்புடன் அவர்கள் இருந்தனர்.

வாசு மேடை ஏறினான்.அவன் தனக்கே உரிய சேஷ்டைகளுடன் நய்யாண்டி பண்ணி ஆட அனைவரும் வெகுவாக ரசித்தனர்.அதுவும் அவன் மனைவியே கை தட்டி விசில் அடிக்க வாசு குஷியாகி மேலும் நன்றாக ஆடினான். தன் கணவனுக்குள் உள்ள திறமையை கண்டு கை தட்டி உற்சாகப்படுத்த,வாசுவின் குழந்தையும் அவன் நடனத்தை கண்டு சந்தோஷத்தில் அதுவும் கன்னாபின்னாவென்று குதித்தது.
அந்த ஒரு பாட்டிலேயே அங்கு இருந்த அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விட்டான் வாசு.

வாசு மேடையை விட்டு கீழே இறங்கி வர சஞ்சனா அவனை பார்த்து " போதுமா வாசு ,உன் பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டேன்.இது மேடையில் அவன் ஆடுவதற்காக நான் தான் இந்த பாட்டை செலக்ட் பண்ணி கொடுத்தேன் என்று சொல்லி விட்டேன்.அவங்களும் கை தட்டி நல்லா ரசித்து பார்த்தாங்க.போ தைரியமாக இரு."

ஆமா ராஜா எங்கே,வாசு ஆர்வமுடன் கேட்க,

அவன் உனக்காக ஃபோன் செய்து விட்டு வரேன் என்று சொல்லி இருந்தான்.இன்னும் ஆளேயே காணோம்..

"சரி உன் பேரை கூப்பிடறாங்க பாரு.நீ உடனே மேடைக்கு போ, நான் ராஜா வந்த உடன் அனுப்பறேன்"என வாசு அவளை அவசரபடுத்தினான்.

சஞ்சனா திரும்பி திரும்பி பார்த்து கொண்டு மேடை ஏற,அங்கு ஒரு ஆள் உயர லிங்கம் மட்டும் வைக்கப்பட்டு இருந்தது.நடன இயக்குனர் வந்து அந்த லிங்கத்தை பார்த்து சிவனை நடனம் ஆடி நீ வரவழைக்க வேண்டும்.இது தான் கான்செப்ட் என கூறினார்.

சார் ராஜா எங்கே,?

அவன் நீ இந்த பாட்டு முடியும் போது வருவான்..நீ போய் ஆடு..அதுக்கு அப்புறம் அவனும் நீயும் சேர்ந்து ஆடுவீர்கள் என்று அவர் கூற அவனை நினைத்து கொண்டு ஏக்கமாக ஆட தொடங்கினாள்.

சக்தி சிவனை வரவழைப்பது போல் பாடல் பாட தொடங்க,சஞ்சனா அதற்கேற்ப நடனம் ஆட தொடங்கினாள்.அவள் ஒவ்வொரு அசைவும் அவனை நினைத்து ஏக்கமாகவே வெளிப்பட்டது.தலைவி, தலைவனை நோக்கி ஏங்கி பாடுவது போல் அவள் உணர்ச்சிகள் இருந்தது.கடைசியில் பாட்டு முடிந்து சஞ்சனா லிங்கத்தின் அடியில் விழ,அப்பொழுது லிங்கம் வெடித்து சிதறி அதில் இருந்து ராஜா பிரவேசித்தான்.

இதை சஞ்சனாவே எதிர்பார்க்கவில்லை.இந்த கான்செப்ட் ராஜாவும்,நடன இயக்குனரும் சேர்ந்து திட்டம் போட்டது.அவள் முகத்தில் மலர்ச்சியுடன் எழ,இருவரும் சேர்ந்து ஆட தொடங்கினர்.

பாடல் தக தக தகவென ஆடவா,சிவசக்தி சக்தியோடு ஆடவா என்ற பாடல் ஓட இருவரும் ஒரு சேர சிவ தாண்டவம் ஆட தொடங்கினார்கள்.அனைவரும் மெய்மறந்து நடனத்தை கண் இமைக்காமல் பார்த்து ரசிக்க அந்த இடமே பாடல் ஒலியை தவிர வேறு சத்தமே எழவில்லை.அவர்கள் இத்தனை நாள் பாடுபட்ட மொத்த உழைப்பும் அந்த மேடையில் தெரிந்தது.இருவருக்குள் இருந்த புரிந்து கொள்ளும் தன்மை ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றனர்.நாராயணன் சார் முகத்திலோ கொள்ளை பூரிப்பு.பெங்களூர் அணி முகம் முழுவதும் வாடி விட்டது.இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு முன் தங்களின் ஆட்டம் ஒன்றுமே இல்லை என அவர்களுக்கு தெளிவாக புரிந்து விட்டது.அதுவும் கடைசி இரண்டு நிமிடங்கள் அவர்கள் அர்த்தநாரீஸ்வரர் நடனம் ஆட அதை பார்த்து அனைவரும் மூச்சு கூட விட மறந்தார்கள்.ராஜாவின் வலது புறமும்,சஞ்சனாவின் இடது புறமும் ஒரு சேர ஒரே பாவனைகளை வெளிப்படுத்திய ஆட்டம் அனைவரையும் மயிற்கூச்செரிய வைத்தது.கடைசியாக பாடல் முடியும் போது ராஜாவின் இடது பாகத்தில் சஞ்சனா இடம் பெற,இருவரும் அர்த்தநாரீஸ்வரர் போல தோற்றம் அளித்தனர்.ராஜாவின் ஒரு பாதி மட்டுமே தெரிய,சஞ்சனாவின் உடலிலும் ஒரு பாதி மட்டுமே தெரிந்தது.சினிமாவில் பயன்படுத்துவது போல் இங்கு ஸ்கிரீன் மேஜிக்கை உபயோகித்து இருந்தனர்.அனைவரும் எழுந்து கை தட்ட ஸ்கிரீன் மூடப்பட்டது.எல்லோரும் சஞ்சனா மற்றும் ராஜாவை நோக்கி ஓடி வர இருவரும் கூட்டத்தில் மாட்டி கொண்டனர்.அது ராஜாவிற்கு மிகவும் வசதியாகி போனது.நைசாக கூட்டத்தை சாதகமாக்கி அந்த இடத்தில் இருந்து நழுவினான்.

நாராயணன் சார் நிகழ்ச்சியின் முடிவுரை வழங்கி கொண்டு இருந்தார் அதில் ராஜா மற்றும் சஞ்சனாவின் ஆட்டத்தை மிகவும் புகழ்ந்தார்.சிஇஓ ஶ்ரீவத்ஸன் அவரும் பேசும் போது இந்த மாதிரி ஒரு நடனத்தை நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை.அவர்கள் இருவரை நான் மேடைக்கு அழைக்கிறேன் என்று கூற,
சஞ்சனா ராஜாவை தேட ஆரம்பித்தாள்.அவள் அவன் மொபைலுக்கு கால் செய்ய அது ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.

சஞ்சனா ,ராஜா எங்கே ராஜா எங்கே என கேட்க,யாருமே தெரியவில்லை என கூறினார்கள்.

கூட இருந்தவர்கள் அனைவரும் சஞ்சனா நீ மட்டுமாவது மேலே போ என கூறினார்கள்.சஞ்சனா எப்படியும் ராஜா வந்து விடுவான் என நினைத்து மேடையேற,

ஶ்ரீவத்ஸன் அவளை பார்த்து,எங்கம்மா உன் ஜோடி என கேட்டார்.

சாரி சார் ,அவன் கொஞ்சம் அவசரமாக வெளியே போய் இருக்கான்.

ஶ்ரீவத்ஸன் மேடையில் பேச ஆரம்பித்தார்.

நாராயண் ,நான் இதுவரை என்னோட பெங்களூர் டீம் தான் இந்த மாதிரி கலை நிகழ்ச்சியில் கலக்குவாங்க என்று நினைத்தேன்.ஆனால் உங்க டீம் சேல்ஸ் மட்டும் அல்ல,இந்த மாதிரி போட்டிகளிலும் கலக்குவார்கள் என்று இன்னிக்கு தான் எனக்கு தெரிந்தது.இவங்க ரெண்டு பேர் ஆட்டம் அப்பப்பா அந்த சிவசக்தியின் நடனத்தையே நேரில் கொண்டு வந்து விட்டார்கள்.எங்க டீம் ஆட்டம் இவர்கள் ஆட்டம் முன்பு ஒன்றுமே இல்லை.ரியலி பென்டாஸ்டிக்.என்ன ஆடிய அந்த பையனை காணோம்.பரவாயில்லை நாராயண் இவங்க ரெண்டு பேருக்கும் எக்ஸ்டிரா ஒரு மாத சம்பளம் போட்டு விடுங்க..அவர் நினைவு பரிசை வழங்க சஞ்சனா பெற்று கொண்டாள்.பக்கத்தில் ராஜா இல்லாதது அவளுக்கு பெரிய குறையாக இருந்தது.ஶ்ரீவத்ஸன் மேலும் தன்னோட காஸ்ட்லி வாட்சை கழட்டி,இதை உன்னோட ஆடிய அந்த பையனுக்கு கொடுத்து விடும்மா என கூறினார்.

சஞ்சனா மேடையை விட்டு கீழே இறங்கும் நேரம் ,ராஜா விமான நிலையம் சென்று விட்டு இருந்தான்.அவசர அவசரமாக செக் இன் செய்து விட்டு அவன் உள்ளே செல்லவும் வாரணாசி செல்லும் விமானம் தயாராக இருந்தது.

விமானத்தில் ஜன்னல் வழியே பார்க்க சென்னை அவன் கண்களில் இருந்து மறைந்து கொண்டே வந்தது.அவன் கண்கள் சஞ்சனாவை நினைத்து கண்ணீர் துளிர்த்தது.அவள் பாவம் இந்நேரம் என்னை தேடி கொண்டு இருப்பாள்.சொல்லி கொண்டு கூட வர முடியாத சூழ்நிலை.

சஞ்சனா ராஜா மொபைலுக்கு இரவு முழுக்க தொடர்ந்து ஃபோன் செய்து ஓய்ந்தாள்.

"ராஜா எங்கேடா சொல்லாமல் கொள்ளாமல் போனாய்.நாளைக்கு பிளீஸ் என்னை பார்க்க வந்து விடுடா.உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது" என்று புலம்பினாள்.

[Image: FB-IMG-1693641471416.jpg]
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
இது ஒரு வகையான ஏமாற்றம் சஞ்சனாவிற்கு அவனுக்கோ அவளை கண்டத்தில் இருந்து காப்பாற்ற கையேந்தி பிச்சைக்காரனாக வாரணாசிக்கு போகிறான் இந்த 12 நாள் போராட்டம் இருவருக்குள்ளும் தடுமாற்றத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்த கூடும் ஷன்மதி லூசு மாதிரி ஏதாவது செய்யக்கூட நேரிடும் என்னாகுமோ இந்த 12 நாள்
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
செம சூடான படைப்பு அதுவும் சஞ்சனா ஏக்கம் ராஜா மனதில் உள்ள வலி மற்றும் வாசு நடனத்தில் நடக்கும் நிகழ்வு அனைத்து அருமையாக உள்ளது
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
செம்ம சூடான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
super super words less update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
Fantastic writing
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
(13-09-2023, 12:02 AM)Natarajan Rajangam Wrote: இது ஒரு வகையான ஏமாற்றம் சஞ்சனாவிற்கு அவனுக்கோ அவளை கண்டத்தில் இருந்து காப்பாற்ற கையேந்தி பிச்சைக்காரனாக வாரணாசிக்கு போகிறான் இந்த 12 நாள் போராட்டம் இருவருக்குள்ளும் தடுமாற்றத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்த கூடும் ஷன்மதி லூசு மாதிரி ஏதாவது செய்யக்கூட நேரிடும் என்னாகுமோ இந்த 12 நாள்

இன்னும் கொஞ்ச எபிசோட் தான் நண்பரே.விரைவில் நல்ல முடிவு
Like Reply
(13-09-2023, 12:03 AM)karthikhse12 Wrote: செம சூடான படைப்பு அதுவும் சஞ்சனா ஏக்கம் ராஜா மனதில் உள்ள வலி மற்றும் வாசு நடனத்தில் நடக்கும் நிகழ்வு அனைத்து அருமையாக உள்ளது

நன்றி நண்பா
Like Reply
(13-09-2023, 08:41 AM)omprakash_71 Wrote: செம்ம சூடான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
(13-09-2023, 11:32 AM)mahesht75 Wrote: super super words less update

Thank you nanba
Like Reply
(13-09-2023, 04:10 PM)M.Raja Wrote: Fantastic writing

Thank you
Like Reply
Episode -54

காசி முற்றிலும் புது இடம் ராஜாவிற்கு.இப்பொழுது தான் முதல்முறை அவன் வட இந்தியாவே வருகிறான்.  கொஞ்சம் கொஞ்சம் மட்டும் தான் இந்தி தெரியும் அவனுக்கு.அதுவும் பெங்களூரில் வேலை பார்த்த பொழுது கற்று கொண்டது.சஞ்சனா அணிவித்த செயின் அவன் மார்பில் ஊஞ்சலாடி கொண்டு இருந்தது.அதை பத்திரமாக எடுத்து  உள்ளே வைத்து கொண்டு பின் காசி விசுவநாதர் ஆலயம் தரிசனம் செய்தான்.பைரவர் ஆலயம் சென்று,இந்த காசியில் 12 நாட்கள் தங்க அனுமதி கேட்டு மானசீகமாக வேண்டியும் கொண்டான்.கங்கை நதி ஓரம் சென்று அமர்ந்து அதன் அழகை ரசித்து கொண்டே இருக்க அவன் தோளில் ஒரு கை விழுந்தது.

என்ன தம்பி கங்கையில் முங்கி எழ வேண்டுமா? முகத்தில் சுருக்கங்களுடன் இருந்த வயதான நபர் 70 வயது நபர் கேட்டார்.

ஐயா,நான் தமிழ் என்று எப்படி தெரியும் உங்களுக்கு?

என்ன தம்பி,நீ சிவபுராணம் கோவிலில் தமிழில் தானே பாடினாய்?.அப்புறம் என்ன?நான் இந்த கும்பகோணம் பக்கம் தான்..நீ எந்த ஊரு? அந்த இடத்திற்கே உரிய பாஷையில் கேட்க

அவரை பார்த்தவுடன் ராஜாவிற்கு ஒரு அன்னியோன்யம் வந்தது."நான் சென்னையில் இருந்து வருகிறேன் அய்யா."

"உன்னை மாதிரி இளைஞன் தனியாக இறைவனை பார்க்க வந்தது சந்தோஷம்.இங்கே எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்?"

"ஒரு பன்னிரெண்டு நாள் இங்கே தங்க வேணும் அய்யா,நான் ஓட்டலில் எதுவும் தங்க கூடாது.இங்கே கோவிலில் எங்கேயாவது தான் தங்கனும்."

"இங்கே தங்குவதற்கு மடம் எல்லாம் இருக்கு தம்பி,அங்கே தங்கிக்க முடியும்.சாப்பாடு கூட பிரச்சினை கிடையாது.மூணுவேளை சாப்பாடு இலவசமாகவே  கிடைச்சிடும்.

"அய்யா நீங்க இங்கே எவ்வளவு நாள் இங்கே தங்கி இருப்பீங்க?"

நான் சாகிற வரை இங்கே தான் தம்பி,பெத்த பசங்க எனக்கு சோறு போடாமல் விரட்டி விட்டுட்டாங்க.அப்புறம் காசி வந்துட்டேன்.மூணு வேளை சோறு கிடைக்குது.காசியில் செத்தால் முக்தி என்று சொல்வார்கள்.எனக்கு இந்த பிறவியில் வந்த கஷ்டங்களே போதும்.அதனால் மறுபிறப்பு வேண்டாம் என்று சாகும் வரை இந்த காசியில் இருப்பதென முடிவு செய்து விட்டேன்.

"அய்யா எனக்கு தினம் ஒரு வேளை உணவு மட்டும் போதும்.எனக்கு நெருங்கியவர்களிடம் இருந்து நான் 12 நாள் மறைந்து வாழ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.அதற்காக தான் நான் இங்கே வந்து உள்ளேன்."

"சரிப்பா கங்கையில் மூழ்கி எழுந்து வா,நாம் நம் மடத்திற்கு செல்லலாம்.."

ராஜா அந்த முதியவரை தன் தந்தையாகவே பாவித்தான்.தியானம் செய்த நேரம் போக அவருடன் சிரித்து பேசி கலகலப்பாக இருந்தான்.தனிமையில் வாடிய அவருக்கு இது ஆனந்தமாக இருந்தது.ஆரம்பத்தில் இருந்து கஷ்டங்களை அனுபவித்து வந்த ராஜாவிற்கு மடத்தில் இருக்கும் அசௌகரியங்கள் கஷ்டமாகவே தெரியவில்லை.

நாட்கள் வேகமாக உருண்டு ஓடி கொண்டு இருந்தது..

சஞ்சனா,ராஜாவின் நண்பர்கள் எல்லோரிடமும் அவனை பற்றி விசாரித்தாள். அவனை பற்றி தகவல் எதுவும் கிடைக்க வில்லை.ஆபீஸில் மட்டும் நீண்ட விடுமுறை எடுத்து இருப்பதாக தகவல் சொன்னார்கள்.ஐந்து நாட்கள் போவதே தெரியாமல் போய் விட்டது.

சஞ்சனா மனதிற்குள்"அப்போ வேண்டுமென்றே தான் லீவு போட்டு எங்கோ சென்று இருக்கிறான்.தன்னிடம் கூட சொல்லாமல் போக அப்படி என்ன அவசியம் வந்தது.வரட்டும் வரட்டும் என்னை தவிக்க விட்ட  அவனை சும்மா விட கூடாது என அவன் மீது கோபம் கொண்டாள்.ஆனால் அந்த கோபம் கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை.

ராஜாவின் அம்மாவிடம் இருந்து சஞ்சனாவிற்கு ஃபோன் வந்தது.

சஞ்சனா ,ராஜா எங்கேயாவது முக்கிய விஷயமா வெளியே போய் இருக்கானா ?அவனுக்கு ஃபோன் போட்டால் ஸ்விட்ச் ஆஃப் என்றே வருது.அவன் தங்கச்சியை கேட்டாலும் தெரியல என்றே சொல்றா..

அப்பொழுது தான் ஒன்றை சஞ்சனா உணர்ந்தாள்.

அய்யயயோ இவன் அம்மா,தங்கச்சிகிட்டேயே சொல்லாம போய் இருக்கானே.அப்போ ஏதோ முக்கியமான விசயம் போல் இருக்கு.நான் தான் அவனை தவறாக நினைத்து விட்டேன்.அப்பப்ப சொல்வானே ஏதோ இந்த மாதம் 31 ந் தேதி வரை பொறு பொறு என்று.பாவம் என்ன மனதில் வைத்து கொண்டு கஷ்டப்படுகிறோனோ என தெரியவில்லையே..என சஞ்சனா மனசுக்குள் மறுகினாள்.

சஞ்சனா சஞ்சனா என மீண்டும் மீண்டும் அவன் அம்மா அழைக்கும் குரல் கேட்டது.உடனே சஞ்சனா நனவுலகுக்கு வந்தாள்.


சாரிம்மா கொஞ்சம் நெட்வொர்க் பிரச்சினை.  அவனை ஆபீஸ் விஷயமா ட்ரைனிங் வெளியூர் அனுப்பி இருக்காங்க.அவன் ட்ரைனிங்கில் இருப்பதால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்து இருக்கும். என்ன விசயம் சொல்லுங்க,நான் அவன் கிட்ட சொல்லிடறேன்..

ராஜாவின் அம்மா அவளிடம்"சஞ்சனா அவன் அப்பா இறந்து ஒரு வருடம் ஆக போகுது.அவன் அப்பாவின் திதி நவம்பர் 3 ந் தேதி வருது.அவன் வந்து தான் திவசம் கொடுக்கணும்.அதை சொல்ல தான் அவனுக்கு ஃபோன் பண்ணினேன்.."

"நீங்க கவலையை விடுங்க அம்மா,நான் விசயத்தை சொல்லி விடுகிறேன்.."

சஞ்சனாவிற்கு ராஜா எங்கே போய் இருக்கான்,எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை.டக்கென்று ஒரு யோசனை மனதில் உதித்தது.. உடனே அவன் தங்கைக்கு ஃபோன் செய்தாள்.

ஹலோ திவ்யா,எப்படி இருக்கே,?

நான் நல்லா இருக்கேன் அண்ணி,சொல்லுங்க என்ன விசயம்?

ராஜாவின் இ மெயில் பாஸ்வேர்டு என்னவென்று தெரியுமா உனக்கு?

அது ரொம்ப ஈஸி அண்ணி,என்னோட பேர் தான் Divya @123 என வரும்.அதில் ஃபர்ஸ்ட் லெட்டர் மட்டும் caps லெட்டர்.

சஞ்சனா போட்டு பார்க்க,அது incorrect password என வந்தது.

"இல்ல திவ்யா அது தப்பு என வருது.."

அப்போ என் பேருக்கு பதிலா உங்க பேரு போட்டு பாருங்க..அதுக்கு மேல அந்த டுபாக்கூருக்கு யோசிக்க தெரியாது.

Sanjana@123 என போட்டு பார்க்க,உடனே log in ஆகியது.

இப்போ ஓகே ஆயிடுச்சு திவ்யா.

பார்த்தீங்களா அண்ணி,நீங்க வந்த உடனே என் அண்ணன் உங்க பேரில் பாஸ் வேர்டு மாற்றி விட்டான்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல திவ்யா,இதுக்கு மேல என்னோட பாஸ்வேர்டு எல்லாம் உன் பெயரில் வைத்து கொள்கிறேன் போதுமா?

அய்யோ நான் சும்மா தான் கலாட்டா பண்ணினேன்.நான் போனை வச்சிடட்டுமா.கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுது?

ஓகே திவ்யா bye..

சஞ்சனா அவன் email அனைத்தையும் ஒன்று விடாமல் பார்க்க,ட்ரெயின் டிக்கெட் ஒன்று புக் செய்யப்பட்டு பின் கேன்சல் ஆகி இருந்தற்கான மெயில் வந்து இருந்தது.அந்த என்ன ட்ரெயின் என்று பார்க்க வாரணாசி எக்ஸ்பிரஸ் என்று இருந்தது..அதே தேதியில் ஒரு டிராவல்ஸ் கம்பனியில் இருந்து இ மெயில் வந்து இருந்ததை ஓபன் செய்து பார்க்க,அது வாரணாசி செல்வதற்கான  விமான டிக்கெட் மெயில்.ராஜா சென்ற இடம் வாரணாசி என சஞ்சனாவிற்கு தெளிவாக புரிந்து விட்டது..

அப்பொழுது சஞ்சனாவின் தோழி ஓடி வந்து ஒரு வீடியோவை காண்பித்தாள்..

அதில் ராஜா கோளாறு பதிகத்தை காசி கோவிலில் உருக்கமாக பாடுவதை எடுத்து ஒரு வட இந்திய பெண் பதிவேற்றி இருந்தாள்.அந்த பதிகம் தன்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது எனவும்,தமிழ் மொழி மிகவும் அழகான மொழி என்றும் கூறி இருந்தாள்.

இது போதுமே ,ராஜா காசியிலா ஒளிந்து கொண்டு இருக்கிறாய்.இதோ உடனே புறப்பட்டு வருகிறேன்.யாரை உடன் கூட்டி செல்லலாம் என்று யோசிக்க,அப்பொழுது வாசு ஆடிய நடனத்தை கம்ப்யூட்டரில் பார்த்து பக்கத்தில் இருந்த தோழிகள் சிரித்து கொண்டு இருந்தார்கள்.

"ம் இருக்கவே இருக்கான் நம்ம வாசு,"உடனே வாசுவுக்கு ஃபோன் அடித்தாள்.

சென்ட்ரல் ரயில் நிலையம்,

வாரணாசி செல்ல ரயில் தயாராக இருந்தது.

அப்புறம் சஞ்சனா,AC டிக்கெட் தானே புக் பண்ணி இருக்கே.AC இல்லனா இந்த வாசு ரயிலில் ஏற மாட்டான் பார்த்துக்க,வாசு மிரட்ட

சரி சரி வா,இந்த கோச்சில் ஏறு,சிக்னல் போட்டுட்டாங்க..

இது ஸ்லீப்பர் கோச் சஞ்சனா,நம்மளோடது Ac கோச் இன்னும் முன்னாடி போகனும்..

இந்த கோச் ஏறுடா சீக்கிரம்,நடந்து நடந்து அப்படியே உள்ளே போய் விடலாம்..

சஞ்சனா ஒரு சீட் நம்பர் சரி பார்த்து உட்கார,

"என்ன சஞ்சனா இங்கேயே உட்கார்ந்துட்ட,வா நம்ம கோச்சுக்கு போகலாம்..அங்கே ac குளு குளுவென இருக்கும்" வாசு கூப்பிட்டான்.

"நம்ம கோச் இதுதான்.."சஞ்சனா அமைதியாக சொல்ல.

"அடிப்பாவி ,அப்போ Ac டிக்கெட் புக் பண்ணலயா.."

டேய் மூடிட்டு உட்காரு,நானே என் ராஜாவை எப்போ பார்க்க போகிறேன் என்ற கவலையில் இருக்கேன்.நீ வேற.ஜாஸ்தி ஏதுனா பேசின ஓடுற ரயிலில் இருந்து உன்னை பிடித்து தள்ளி விடுவேன் பார்த்துக்க...

வாசு பயந்து அமைதியாக உட்கார்ந்தான்..

"டேய் முக்கியமான விசயம்,TTR வரும் போது மட்டும் சொல்றேன்.அப்ப மட்டும் கக்கூஸில் போய் ஒளிஞ்சிக்க"

என்னது அப்போ எனக்கு டிக்கெட் எடுக்கலயா நீ? வாசு பதறினான்.

சஞ்சனா சிரித்து கொண்டே ,சும்மா சொன்னேன் வாசு. கடைசி நேரத்தில் டிக்கெட் ஏற்பாடு பண்ண போதும் போதும் என்றாகி விட்டது.விமான டிக்கெட் புக் பண்ணலாம் என்று பார்த்தால் அங்கே சரியான பனி மூட்டம்,அதனால் பாதி விமானங்கள் கேன்சல் ஆகிடுச்சு.மீதி விமானங்கள் டிக்கெட்டே இல்லை என்று சொல்லிட்டாங்க..ராஜாவை திரும்ப கூட்டி வரும் போது விமானம் கிடைத்தால் அதில் வரலாம் போதுமா?

அய் சூப்பர் சஞ்சனா,முதல் முறை விமானத்தில் வர போகிறோமா ? அய் ஜாலி ஜாலி..

சஞ்சனா அவனிடம் "சரி நான் upper சீட் போய் படுத்துகிறேன்.நீ லோயர் எடுத்துக்கோ.."

"ஆமா சஞ்சனா,எனக்கு அடிக்கடி ஒன்னுக்கு வரும்.எனக்கு லோயர் தான் பெஸ்ட்.."வாசுவும் கூறினான்.

சஞ்சனாவிற்கு எப்பொழுது காசி சென்று அடைவோம் என்ற நினைப்பாகவே இருந்தது.என்ன தான் ரயில் வேகமாக சென்று கொண்டு இருந்தாலும் அந்த வேகம் சஞ்சனாவிற்கு ஊர்ந்து போவது போலவே தோன்றியது.விட்டால் அவளே சென்று ட்ரெயின் ஒட்ட வேண்டும் வெறியாக இருந்தது.

அடுத்த நாள் விடியற்காலை 5 மணி அளவில் ராஜா கங்கை கரையில் தியானம் செய்து கொண்டு இருக்க,அங்கு இரு அகோரிகள் வந்தனர்.

அதில் இளைய வயதுடைய நபர் முதியவரை பார்த்து"குருஜி,இந்த இளைஞனின் முகத்தை பாருங்கள்.என்ன ஒரு தேஜஸ்.என்ன ஒரு பொலிவு"என கூறினான்..

அந்த முதிய அகோரி அவன் முகத்தை உற்று பார்த்து ,"சிஷ்யா இது அணைய போகிற விளக்கு.அதனால் தான் பிரகாசமாக எரிகிறது.இந்த பையனுக்கு இன்னும் 7 நாட்களில் ஒரு பெரிய கண்டம் வர போகிறது.அதில் இவன் பிழைப்பது மிக மிக கடினம்.இதில் என்ன ஒரு கூத்து என்றால் இந்த மரணத்தை அவனே வேண்டி விரும்பி அழைக்கிறான்.பாவம் அல்பாயுசு,வா போகலாம்" என்று அவர்கள் கிளம்பி விட்டனர்.

ராஜா அவர்கள் பேசியதை கேட்டு மிகுந்த உற்சாகம் அடைந்தான்.அவர்கள் கூறியது அவன் இறக்க போகிறான் என,அதற்கு அவன் வருத்தபடுவதற்கு பதில் சந்தோஷமே அடைந்தான்.தான் எண்ணிய எண்ணம் ஈடேற போவதை எண்ணி அவன் மனம் சந்தோஷமே பட்டது.ஏன்?

[Image: images-56.jpg]
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply
ராஜா சஞ்சனாவிற்கு ஏற்பட போகும் கண்டத்தை தனக்கானதாக மாற்றி கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளான் ஆனால் அது நடக்கப்போவதில்லை அதை தடுக்க போவது யார் என்பதே கதையின் மீதியாக இருக்க கூடும் என்பது என் யூகம்
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
நண்பரே கதை மிகவும் அருமையாக கொண்டு வந்து கடைசியில் ராஜா இருக்கும் கண்டம் பற்றி சொல்லி அதை ஹீரோ தெரிந்த மாதிரி செய்து பல திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது நண்பா
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply




Users browsing this thread: 21 Guest(s)