03-09-2023, 01:18 PM
செம காமெடி,I became a fan of vasu
♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
|
03-09-2023, 02:50 PM
செம்ம கலக்கல் காமெடி நண்பா. சூப்பர் நண்பா சூப்பர்
03-09-2023, 10:30 PM
கலக்கலான கலகல பாகம் மிக அருமை ஒருத்தனுக்கு வாந்தி இன்னோருத்தனுக்கு பேதி செம்ம செம்ம
04-09-2023, 04:41 PM
04-09-2023, 04:42 PM
04-09-2023, 04:42 PM
04-09-2023, 04:43 PM
04-09-2023, 04:45 PM
(This post was last modified: 08-11-2024, 03:44 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Episode -44
ராஜா சஞ்சனாவை கமிஷனரிடம் அறிமுகப்படுத்தினான். சார்,இவ தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு, பேர் சஞ்சனா என்று ராஜா சொல்லியவுடன் ஷன்மதி தலையில் இடி விழுந்தது.ஆனால் ஓரளவு எதிர்பார்த்து இருந்ததால் அதை பெரிதாக அவள் வெளிக்காட்டி கொள்ளவில்லை.ஆனால் முகம் சற்று சோபை இழந்தது. சஞ்சனா கமிஷனர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க,"எழுந்திரும்மா நீயும் என் பொண்ணு மாதிரி தான் இருக்கே,உண்மையில் நீ நல்ல பையனை தான் தேர்ந்தெடுத்து இருக்காய்.சீக்கிரமே ரெண்டு பேரும் கல்யாண சாப்பாடு போடுங்க." ராஜா ஷன்மதியை பார்த்து,"ஹாய் ஷன்மதி ஏன் டல்லா இருக்கே"என்று ராஜா கேட்டதும் அடுத்த தாக்குதலில் ஷன்மதி முற்றிலும் நிலைகுலைந்தாள்.இதுவரை ராஜாவாக வந்து அவளிடம் பேசியதே இல்லை. இவளாக சென்று தான் அவனிடம் பேசி இருக்கிறாள். முன்பெல்லாம் அவன் சிரிப்பில் ஒரு விரக்தி இருக்கும்.ஆனால் இன்று அவனிடம் இருந்து இன்று வெளிப்பட்ட புன்னகையை பார்த்து ஷன்மதி முற்றிலும் வசீகரிக்கபட்டாள். இதுவரை அவனிடம் இருந்து இப்படி ஒரு புன்னகையை அவள் பார்த்ததே இல்லயே.ராஜா தன் குடும்பத்தினரிடம் மிகவும் சகஜமாக எந்தவித கூச்சமும் இல்லாமல் பேசுவதை பார்த்து அவள் முகம் ஆச்சரியத்தில் மூழ்கியது.அவன் பேசும் போது காட்டிய உடல் மொழிகள் எல்லாம் அட்டகாசமாக இருந்தன.இதை எல்லாம் முதன் முறை அவனிடம் ஷன்மதி பார்க்கிறாள்.இந்த மாதிரி கலகலப்பான ராஜாவை தானே எதிர்பார்த்தேன்.எப்படி வந்தது இவனிடம் இவ்வளவு உற்சாகம்.!ஒருவேளை நான் என் காதலை முன்பே அவனுக்கு சொல்லி இருந்தால் அவன் இந்த மாதிரி கலகலப்பாக இருந்து இருப்பானோ என்ற எண்ணங்கள் ஷன்மதி மனதில் ஓடியது. ஆனால் புது அவதாரமாக எடுத்து இருக்கும் இந்த ராஜாவின் நடை, உடை,பாவனை,ஸ்டைல்,attitude என அனைத்தையும் மாற்றியவள் அவன் அருகே அமுத சுரபியாய் நின்று கொண்டு இருந்த சஞ்சனா அல்லவா..!அவள் தானே அவனை அவனுக்கு அடையாளம் காட்டினாள். "இல்லை எக்காரணம் கொண்டும் நான் ராஜாவை சஞ்சனாவிற்கு விட்டு கொடுப்பதாக இல்லை.i love very much this Raja 2.0" என்று முடிவெடுத்து ஷன்மதி ,சஞ்சனா அருகில் சென்றாள். ஷன்மதி சஞ்சனாவிடம் சென்று ,"வாங்க சஞ்சனா நான் உங்களுக்கு என் வீட்டை சுற்றி காண்பிக்கிறேன்" என்று கூப்பிட,சஞ்சனா அவனிடம் கண்களால் அனுமதி கேட்டாள். ராஜாவும் அவளை பார்த்து"போய்ட்டு வா சஞ்சனா, ஷன்மதி எனக்கு ஒரு நல்ல தோழி.நல்ல கலகலப்பான ஆளு.அவளிடம் பேசி கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாது.இது சாப்பாட்டு நேரம் அதனால் வாட்ச் மேல ஒரு கண் இருக்கட்டும்" ஷன்மதி ஆச்சரியமாக கண் இமைக்க மறந்து"ராஜா நீயா இந்த மாதிரி பேசறது,எனக்கே ஆச்சரியமாக இருக்கு.உன் காதலியை சரியா சாப்பிடும் நேரத்திற்கு அழைத்து வந்து விடுகிறேன் போதுமா? ராஜாவும்"இந்த வீட்டின் இளவரசியின் சொல்லுக்கு தடை ஏது?தாங்கள் தாராளமாக சஞ்சனாவை கூட்டி செல்லலாம்.!!என்று கூற, ஷன்மதி அவனுக்கு உதட்டை சுழித்து பழிப்பு காட்டி விட்டு சென்றாள். தன் அறைக்கு சஞ்சனாவை கூட்டி சென்று,அவளை பற்றியும்,அவர்கள் காதலை பற்றியும் அறிந்து கொண்டாள். பின் ஒரு ஆல்பத்தை எடுத்து அவளிடம் கொடுக்க,அதை ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே வர,அந்த ஆல்பத்தில் உள்ள போட்டோக்கள் அனைத்திலும் ராஜா அவர்கள் வீட்டு விசேஷத்தில் பங்கேற்ற போட்டோக்கள் மட்டுமே இருந்தது.என்ன இது ராஜா இருக்கும் போட்டோக்கள் மட்டும் இதில் இருக்கு என சஞ்சனா சந்தேகப்பட்டாள்.அதில் ஒரு ஃபோட்டோவில் ராஜா மிகவும் அழகாக இருக்க,சஞ்சனா அதை ஆசையாக பார்த்து,"ஷன்மதி இந்த ஒரு போட்டோவை மட்டும் நான் எடுத்து கொள்ளட்டுமா?என்று அனுமதி கேட்டாள்." ஷன்மதி அவளிடம் "நீ இந்த ஆல்பத்தை பார்த்த உடனே உனக்கு புரிந்து இருக்கும் என்று நினைச்சேன் சஞ்சனா,இந்த ஆல்பத்தில் உள்ள போட்டோக்கள் அனைத்திலும் ராஜா கண்டிப்பாக இருப்பான்.அவன் இருக்கும் இந்த போட்டோக்கள் அனைத்தும் எனக்கு சொந்தமானவை.அதில் ஒன்றை கூட நான் தரமாட்டேன்.அதே போல தான் ராஜாவும் எனக்கு தான் சொந்தம்.உனக்கு நான் விட்டு கொடுக்க மாட்டேன்." சஞ்சனா ஏற்கனவே ராஜாவை ஷன்மதி காதலிக்கிறாள் என்பதை ஓரளவு யூகித்து இருந்தாள். கொஞ்சம் கூட தயக்கமில்லாமல்"நீ வெறும் நிழலை தான் உன்வசம் வைத்து உள்ளாய் ஷன்மதி,நான் நிஜத்தையே என்வசம் வைத்து உள்ளேன். யாருக்காகவும் எதற்காகவும் நான் அவனை விட்டு கொடுக்க மாட்டேன்." ஷன்மதி "இங்க பாரு சஞ்சனா,நான் ஒன்னு ஆசைப்பட்டால் அதை அடையாமல் விட மாட்டேன். உனக்கு நானே நல்ல இடத்தில் ராஜாவை விட வசதியான மாப்பிள்ளையை என் அப்பாவை விட்டு பார்க்க சொல்கிறேன்.உனக்கு என்ன மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் சொல்லு,டாக்டரா இல்லை கலெக்டரா? இதில் எந்த மாதிரி மாப்பிளை வேண்டுமானாலும் சொல்லு,நான் என் அப்பாவிடம் சொல்லி உனக்கு பார்க்க சொல்கிறேன்.உன் அழகுக்கு கண்டிப்பாக கிடைப்பாங்க.ராஜாவை மட்டும் விட்டு விலகி விடு.. சஞ்சனா அவளை கூர்ந்து நோக்கி "ஏன் ஷன்மதி எனக்கு மாப்பிள்ளை பார்ப்பதை விட்டு, நீயே ராஜாவை விட அந்த வசதியான மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.." சஞ்சனா என் பொறுமையை சோதிக்காதே,உனக்கு ராஜாவை கடந்த மூன்று மாதமாக தான் தெரியும்.ஆனால் நான் ராஜாவை 4 வருஷமா லவ் பண்றேன்.நான் என் காதலை முன்னாடியே சொல்லி இருந்தால் நீ அவன் வாழ்விலேயே இருந்து இருக்க மாட்டாய்.புரிஞ்சிக்க.. ஷன்மதி நீ தான் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.உனக்கு அறிமுகமாகும் முன்பே அவன் எனக்கு 7 வருடம் முன்பே அறிமுகம் ஆகி விட்டான்.அவன் என்னை காதலிக்க ஆரம்பிச்சு 3 மாதம் ஆச்சு,ஆனால் நான் அவனை காதலிக்க ஆரம்பித்து 7 வருடம் ஆச்சு.அதிலும் நான் தான் உனக்கு சீனியர்.இப்போ வரை நீ அவனுக்கு தோழி மட்டுமே,ஆனால் நான் அவனின் சுவாசக்காற்று.அதனால் எங்கள் வாழ்வில் இருந்து விலக வேண்டியது நீ தான். சஞ்சனா,நீ ஒன்னு புரிஞ்சிக்கல.இப்போ கூட ராஜாவின் எதிரி ஜார்ஜ் என்று தெரிந்த பிறகு நான் அவனுக்கு அதிகமான தண்டனை வாங்கி கொடுக்க என் அப்பாவை வற்புறுத்தி இருக்கிறேன்.இதில் இருந்தே தெரிந்து கொள்,நான் அவனை எவ்வளவு லவ் பண்றேன்னு, சஞ்சனா விழுந்து விழுந்து சிரித்தாள். சஞ்சனா சிரித்து கொண்டே"நீ அவனுக்கு தண்டனை தான் வாங்கி கொடுக்க சிபாரிசு செய்தாய்,ஆனால் நான் உங்கள் வீட்டு குழந்தையை கடத்தி என் ராஜாவை இன்னல்களுக்கு உள்ளாக்கிய ஜார்ஜ்ஜின் காரில் போட்டு அவனை சிக்க வைத்ததே நான் தான்" என்று கூற ஷன்மதி என்ன சொல்வது என்று தெரியாமல் அயர்ந்து விட்டாள். "தன்னை விட இவள் ராஜாவை அதிகம் நேசிக்கிறாளே ..!விடவே கூடாது" சரி நம்ம ரெண்டு பேருக்குள்ள ஒரு ஜென்டில்வுமன் அக்ரீமென்ட் வைத்து கொள்வோம்.ராஜா உன்னை இப்போ விரும்புறான்.நான் என் காதலை சொல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்கல.இப்போ நீ விலகினால் தான் அவன் கவனம் என் மேல் திரும்பும். அதுக்கு என்னை அவனை விட்டு விலக சொல்றியா என்னால் முடியாது.சஞ்சனா உடனே மறுத்தாள். இல்லை நான் அப்படி சொல்ல வரல சஞ்சனா,உன்னை விட,நான் தான் அவனை அதிகமாக நேசிக்கிறேன் என்று புரிய வைக்க சில விசயங்களை செய்ய போறேன்.அதை பற்றி எதையும் நீ ராஜாகிட்ட சொல்லி அனுதாபம் தேடகூடாது.அதன் பிறகு அவன் என்னை விரும்ப ஆரம்பித்து உன்னை வெறுத்து விட்டால்,நீ ராஜாவை விட்டு விலகி விட வேண்டும்.. "அது எந்த காலத்திலும் நடக்காது ஷன்மதி,வீணா பகல் கனவு காணாதே,ராஜா எப்பவும் என்னை வெறுக்க மாட்டான்.நான் அவனை நேசிப்பது போல வேறு யாரும் வேறு யாரும் ...." என்ற வார்த்தையை மீண்டும் நன்றாக அழுத்தி "நேசிக்க முடியாது"என்று சஞ்சனா உரைக்க, "அதையும் பார்க்கலாம் சஞ்சனா,ஆனா ஒரு நிபந்தனை.இங்க நடந்த விசயம் நீ ராஜாவிற்கு சொல்ல கூடாது.இது தான் நமக்குள் இருக்கும் அக்ரீமெண்ட். சஞ்சனா "சரி நான் சொல்ல மாட்டேன்.ஆமா நீ என்ன சொன்ன ஷன்மதி? ஒருவேளை நீ முன்னாடி அவனிடம் லவ் சொல்லி இருந்தால் நான் அவன் வாழ்வில் இருந்திருக்க மாட்டேன் என்று தானே" ஆமாம்,இப்பவும் அதை தான் சொல்றேன்.நீ முன்னாடி லவ் சொன்னதால் மட்டும் தான் உனக்கு ஓகே சொன்னான்.இல்லை என்றால் அவனோட first choice நான் தானே சஞ்சனா சிரித்து"அவன் எனக்காக பிறந்தவன் ஷன்மதி,நீ முன்னாடி லவ் சொல்லி இருந்தாலும் அவனோட சாய்ஸ் நான் தான்.நீ என்ன வேணா முயற்சி பண்ணு,அவன் என்னை தவிர வேறு எந்த பெண்ணையும் ,உன்னையும் சேர்த்து தான் தன் மனைவியாக அவன் ஏற்று கொள்ளவே மாட்டான்.இது சவால். அதையும் பார்க்கலாம் சஞ்சனா.. ஷன்மதியின் அம்மா, சஞ்சனாவும்,நீயும் கீழே சாப்பிட வாங்க"என்று கீழே இருந்து கூப்பிட்டார். இவர்கள் இங்கே பேசி கொண்டு இருந்த வேளையில்,ராஜா கமிஷனரிடம் பேசி கொண்டு இருந்தான். சார் நான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்கலாமா? கமிஷனர் "கேள் ராஜா," "சார் ஜார்ஜ் மேல எதுவும் பொய் கேஸ் போட வேண்டாம்.இன்னும் சொல்ல போனால் அவன் உங்க வீட்டு குழந்தையை கடத்தவே இல்லை.அவனுக்கு வேண்டாதவங்க யாரோ அவனை இதில் சிக்க வைத்து இருக்காங்க அது எப்படி உனக்கு தெரியும் ராஜா? சார் அதுவந்து...., "நான் சொல்லட்டா ராஜா...,சஞ்சனா தான் என் வீட்டு குழந்தையை கடத்தியது,உன் மேல் உள்ள பிரியத்தில் அவள் செய்தாள் என்றும் எனக்கு தெரியும்.ஜார்ஜ் உனக்கு என்ன தீங்கு செய்தான் என்றும் எனக்கு தெரியும்." சார் இது எப்படி உங்களுக்கு தெரியும்? ராஜா,உன்னை அன்பரசு கைது பண்ண விசயம் அடுத்த நாளே எனக்கு இன்ஸ்பெக்டர் அருள் ஃபோன் பண்ணி சொல்லிட்டார்.நான் உனக்கு போனில் தொடர்பு கொள்ள try பண்ணேன்.ஆனா உன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப்.வேறு வழி இல்லாம நான் காத்து இருந்தேன்.அப்போ தான் இந்த ஜார்ஜ் என்னோட குழந்தை கேஸில் கைது செய்து இருப்பதாக கேள்விப்பட்டேன்.உடனே நானே இந்த கேசை நேரடியா கண்காணித்தேன்.அப்போ நம்ம cyber crime போலீஸ் அவன் மொபைலில் இருந்து சில டேட்டாக்களை மீட்டு எனக்கு அனுப்பினாங்க.அதில் அந்த பொண்ணு உனக்காக செய்த காரியம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தி விட்டது.உடனே அந்த டேட்டா எல்லாவற்றையும் அழித்து விட்டேன்.அவன் இந்த தப்பு செய்யவில்லை என்றாலும் உனக்கு எதிராக போலீஸ் டிபார்ட்மெண்ட்டை அவன் தவறாக பயன்படுத்தி இருக்கான்.அதுக்கு அவனுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கணும். சார் இதனால் அவன் எதிர்கால வாழ்க்கையே போய்டும், பாதிக்கபட்ட நானே தான் சார் அவனை விட்டுடுங்க என்று கேட்கிறேன் கமிஷனர் யோசித்து,"சரி உனக்காக அவன் மேல பொய் கேஸ் எதுவும் போட வேண்டாம் என்று சொல்றேன்.ஆனால் அவன் செய்த குற்றத்திற்கு ஒரு ரெண்டு மாசமாவது உள்ளே இருக்கட்டும்." இது போதும் சார்,ரொம்ப நன்றி.. கமிஷனர் ஃபோன் செய்து விவரங்களை தெரிவிக்க சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு மிக சந்தோஷப்பட்டார்.ராஜாவினால் தான் நீ இப்பொழுது தப்பினாய் என்று அன்பரசு மூலமாக ஜார்ஜ்ஜிற்கு விசயம் போய் சேர்ந்தது.இதில் அவமானத்தில் கூனி குறுகினான். Episode -45 எல்லோரும் சாப்பிட உட்கார ஷன்மதியின் அம்மா, சஞ்சனாவிடம்,"சஞ்சனா நீ முதல் முறை வீட்டுக்கு வந்து இருக்கே,முதலில் நீ ஸ்வீட் எடுத்து சாப்பிடு.ராஜா நீ உன் ஸ்வீட் எடுத்து சஞ்சனாவிற்கு ஊட்டி விடு என்று சொல்ல, ஷன்மதி உடனே,"அம்மா எதுக்கு இந்த பார்மலிடீஸ் எல்லாம்.இது எல்லாம் ஓல்ட் ஃபேஷன்.அதுவும் சஞ்சனா எப்படி புது ஆளுங்க முன்னாடி அப்படி செய்வா,அவளுக்கு கூச்சமா இருக்காது."என மறுப்பு தெரிவிக்க சஞ்சனா உடனே "ஆன்டி,பெரியவங்க நீங்க சொல்றது தான் கரெக்ட்,ஆனா ஒரு சின்ன திருத்தம்.இவன் எச்சில் பட்ட சுவீட்டை தான் நான் சாப்பிடணும், அப்ப தான் எங்களுக்குள் அன்னியோன்யம் வரும்." நீ சரியா சொன்னா சஞ்சனா,ராஜா நீ ஸ்வீட்டை எடுத்து ஊட்டு கமிஷனரும் சொல்ல, ராஜா பாதி கடித்து மீதி ஸ்வீட்டை சஞ்சனாவுக்கு ஊட்டி விட,சஞ்சனாவும் ஷன்மதியை பார்த்து கொண்டே ஆசையுடன் வாங்கி சாப்பிட்டாள்.அடுத்து தன் உதட்டில் ஸ்வீட்டை நன்றாக தேய்த்து ,கடித்து அவனுக்கு ஸ்வீட்டை ஊட்டி விட்டாள். இதை பார்த்த ஷன்மதிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன. அப்புறம் ஆன்டி,வேற என்ன செய்யனும் சொல்லுங்க.சஞ்சனா கேட்க ஷன்மதியின் அம்மாவும் "உன் தட்டில் இருக்கும் சாதத்தை பிசைந்து அவனுக்கு ஒரு வாய் ஊட்டுமா." சஞ்சனாவும் வேகமாக தன் லோலாக்கு குலுங்க தலையாட்டி அவனுக்கு ஊட்ட,ராஜாவும் அவன் பங்குக்கு ஊட்டினான்.அப்பொழுது அவன் விரலை சஞ்சனா செல்லமாக கடிக்க "ஆ"என்று ராஜா வலியில் கத்தினான்.அதை பார்த்து எல்லோரும் சிரிக்க, ஆனால் ஷன்மதி மட்டும் மிக கோபமாக இருந்தாள். ஷன்மதி வேண்டுமென்றே சாம்பாரை வேகமாக தட்டிவிட அது சஞ்சனாவின் ஆடையை நனைக்க தோட்டா போல் சென்றது.அதை கவனித்த ராஜா சாம்பாரை குறுக்கில் புகுந்து தன் ஆடையில் வாங்கி கொண்டான். ஷன்மதி சஞ்சனாவின் மேல் சாம்பார் ஊற்ற நினைத்தாள்,ஆனால் நடந்ததோ வேறு.இதே போன்று தான் எதிர்காலத்தில் நடக்க போகிறது.ஷன்மதி சஞ்சனாவிற்கு ஏற்படுத்த போகும் ஆபத்தை ,ராஜா குறுக்கில் புகுந்து அதை வாங்கி கொள்ள போகிறான் என்று காலம் முன்கூட்டியே ஷன்மதிக்கு இப்போது உணர்த்தியது.அதை அவள் இந்நேரம் உணர்ந்து இருந்தால் இப்பொழுதே ராஜாவை விட்டு ஷன்மதி விலகி இருப்பாள்.என்ன செய்வது?காலம் முன்னெச்சரிக்கை செய்யும் நிறைய விசயங்களை நாம் புரிந்து கொள்வதே இல்லை.அதே போல் சஞ்சனாவை ராஜாவும் தான் காதலிக்கிறான்.சஞ்சனாவின் மேல் வரும் கோபம் ஏனோ ராஜாவின் மீது ஷன்மதிக்கு துளியும் வரவில்லை.அவன் சட்டையின் மேல் சாம்பார் பட்டவுடன் அவள் பதறினாள்.உடனே ஓடி சென்று "ஐயோ சாரி ராஜா ,ஒரு நிமிஷம் என் கூட வா என்று வாஷ் பேசின் அருகே கூட்டி சென்று அவளே தண்ணீர் தொட்டு துடைக்க" கமிஷனர் இதை எல்லாம் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தார். ஷன்மதி ஒன்னும் இல்ல விடு,என்று ராஜா மறுத்தாலும் அவள் விடவே இல்லை. ஐயோ ,சாரி ராஜா சாரி ராஜா என்று பல முறை மன்னிப்பு கேட்டாள். "Hey ஷன்மதி cool down,இப்போ என்ன ஆச்சு என்று பதறுகிறாய்.just chill.இதுக்கு போய் எத்தனை தடவை சாரி கேட்ப,வெறும் சட்டை தானே.வீட்டுக்கு போய் சட்டை மாற்றி கொண்டால் போச்சு.அவ்வளவு தான்." அவன் இங்கிலீஷ் கலந்து பேசும் தொனி கேட்டு ஷன்மதி ஆச்சரியம் அடைய அவனுக்காக வாங்கி வைத்து இருந்த ஷர்ட் ஞாபகம் வந்தது. ஒரு நிமிஷம் ராஜா,ஓடி போய் தனது அறையில் இருந்து ஒரு புது சட்டையை எடுத்து கொண்டு வந்தாள். ராஜா இது உனக்காக தான் வாங்கி வைச்சேன்.இது போட்டுக்கோ. நிஜமா எனக்காக வாங்கனீயா,இல்ல உங்க அண்ணன்களுக்கு கொடுக்க வச்சு இருந்தீயா. அய்யோ உனக்காக தான் வாங்கினேன்.அவனுங்க ஒவ்வொருத்தனும் தடி மாடு மாறி இருக்கானுங்க.இந்த size எல்லாம் அவனுங்களுக்கு பத்தவே பத்தாது.அவனுங்களுக்கு ஃபேக்டரியில் இருந்து நேரா தைச்சி தான் தயாரிக்கனும். ராஜா போட்டு பார்க்க,கச்சிதமாக பொருந்தியது."ஷன்மதி ரியலி fantastic,பெர்பெக்ட்டா வாங்கி இருக்க,உன்னோட கலர் டேஸ்ட் சூப்பர்." உனக்கு பிடிச்சு இருக்கா ராஜா,.. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ஷன்மதி,வா போகலாம். ராஜா மீண்டும் டைனிங் ஹாலுக்கு வர,சஞ்சனா அவன் புது சட்டையை பார்த்தாள். "நீ ஊட்டி மட்டும் தானே விட்டே,இப்போ பாரு அவன் மேல் இருக்கிற சட்டையே நான் வாங்கி தந்தது தான்.இது ஆரம்பம் தான்.போக போக பார் இந்த ஷன்மதியின் லீலைகளை."சஞ்சனாவிடம் ஷன்மதி ஜாடையில் கூற,சஞ்சனா மனதுக்குள் சிரித்து கொண்டாள். அதே நேரத்தில் வீணாக ஏமாற போகிறாளே என்று அவள் மேல் பரிதாபமும் உண்டாக்கியது. சஞ்சனா மீண்டும் ஷன்மதியை வெறுப்பேற்ற,ராஜாவை கூட்டி கொண்டு கமிஷனர் மற்றும் அவர் மனைவி காலில் தம்பதிகளாக விழ,அவர்கள் ஒரு நிமிடம் திகைத்தனர். கமிஷனர் மனைவி ஷன்மதியை மஞ்சள் குங்குமம் எடுத்து வர சொன்னார்."குங்குமம் எடுத்துக் கொள் சஞ்சனா "என்று அவர் சொல்ல, சஞ்சனா ராஜாவை பார்த்து,கண்களால் வைத்து விடு என்று கூற ராஜாவும் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைக்கும் போது ஷன்மதி முகம் சுருங்கி போனது. பரவாயில்லையே கண் ஜாடை தான்,அதிலேயே அவன் புரிந்து கொள்கிறேன்.எப்பவும் இதே மாதிரி ரெண்டு பேர் இருக்கணும். கண்டிப்பா ஆன்டி,எப்பவும் என் ராஜாகிட்ட இப்படி தான் இருப்பேன் என்று அவள் தோளில் சாய்ந்து குழந்தைத்தனமாக சொல்ல "நல்ல விளையாட்டு பொண்ணு",என்று அவள் அம்மா சிரித்தார். சரி ஆன்டி,நாங்க போய்ட்டு வரோம். ஷன்மதியை மீண்டும் வெறுப்பேற்ற வேண்டும் என்றே சஞ்சனா பைக்கில் அவன் பின்னால் உட்கார்ந்து அவனை இறுக்க கட்டி கொண்டாள். நல்லா இருக்குங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தம் என்று ஷன்மதி அம்மா கூறவும், ஷன்மதி கோபத்தில் பொரிந்தாள்."அதெல்லாம் ஒன்னும் கிடையாது.ராஜாவின் ஸ்டைலுக்கும்,உடல்வாகுக்கும் அவள் பொருத்தமே கிடையாது.ஜோடி பொருத்தம் கேவலமா இருக்கு"என்று கூறினாள். இவ ஏன் இப்படி இதுக்கு போய் கோபப்படுறா.?சஞ்சனா அம்மா ஆச்சரியப்பட, ஷன்மதி ஒரு நிமிஷம் என்னோட ஆபீஸ் ரூமுக்கு வா என்று கமிஷனர் சொல்லி விட்டு சென்றார். ஷன்மதி அவரை பின் தொடர்ந்து சென்றாள். "ஷன்மதி இன்று உன் நடவடிக்கைகள் சுத்தமா சரியில்ல,நீ சஞ்சனா மேல பொறாமை படற என்று நான் நினைக்கிறேன்." "எனக்கா அவ மேல் எனக்கு என்ன பொறாமை,எதுவும் இல்லையே" என்று ஷன்மதி மழுப்பினாள். "எனக்கு என் பொண்ணை பற்றி நல்லா தெரியும்,நீ செய்யும் செய்கையில் இருந்தே நல்லா தெரியுது நீ ராஜாவை விரும்புற.நான் சொல்றது சரியா?." ஷன்மதி மௌனமாக இருந்தாள். இங்க பாரு ஷன்மதி,நீ ஒவ்வொரு தடவை ராஜாவை நம்ம வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட சொல்லும் போதே எனக்கு தெரியும்,உனக்கு அவன் மேல் ஆசை இருக்கு என்று.அது தெரிந்தும் நான் ஏன் அவனை கூப்பிட்டேன் என்றால் எனக்கும் அவன் மருமகனாக வருவதில் விருப்பம் தான்.ஆனால் எப்போ அவன் வாழ்க்கையில் ஒரு பொண்ணு இருக்கிறது,அதுவும் அந்த பொண்ணு,அவனுக்காக தன் வாழ்க்கையை பற்றி கூட கவலைபடாமல் ராஜாவின் எதிரியை பழிவாங்கினாள் என்று தெரிந்ததோ ,அப்பவே நான் புரிந்து கொண்டேன்,அந்த பொண்ணு அவன் மேல உசிரையே வைச்சு இருக்கு என்று.யாருக்காகவும் அவ அவனை விட்டு கொடுக்க மாட்டா,ஒரு அப்பாவா உனக்கு அறிவுரை சொல்றேன்,இதை புரிந்து கொண்டு நீ விலகி இருப்பது தான் உத்தமம். ஷன்மதி "சூப்பர்பா,நான் உங்க கிட்ட தான் எப்படி சம்மதம் வாங்குவது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.ஆனா உங்களுக்கே அவனை எனக்கு கட்டி வைப்பதில் உடன்பாடு இருந்து இருக்கு.நான் கடைசி வருடம் என்பதால் கொஞ்சம் படிப்பில் மும்முரமாக இருந்து வாழ்கையில் கோட்டை விட்டு விட்டேன்.எனக்கு கிடைக்க வேண்டிய ராஜாவை தான் அவ தான் தட்டி பறிச்சு இருக்கா.நான் தவற விட்ட ராஜாவை நான் தானே மீட்டு எடுக்கணும். 'வேணாம் ஷன்மதி உன் முடிவை மாத்திக்க,அவங்க ரெண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க.நீ அவனை மறப்பது தான் நல்லது.அவனை மாதிரியே ஒரு நல்ல பையனை நானே தேடி கண்டுபிடித்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" ஷன்மதி விடாப்பிடியாக "இல்லப்பா, அவனை மாதிரி இல்ல எனக்கு அவன் தான் வேண்டும்.அவ அவன் மேல் வைத்து இருக்கும் அன்புக்கு ,நான் அவன் மேல் வைத்து இருக்கும் அன்பு ஒன்றும் குறைஞ்சது கிடையாது." இப்போ நீ என்ன தான் சொல்ல வர, இங்க பாருப்பா,எனக்கு அவன்கிட்ட என் காதலை சொல்ல சந்தர்ப்பம் அமையல.அதை நான் ஏற்படுத்திக்க போறேன்.அவன் என்னை ஏற்று கொண்டால் சஞ்சனா அவனை விட்டு விலகி விடுவதாக சொல்லி இருக்கிறாள்.அப்படி விலகும் போது மட்டும் எனக்கு பார்ப்பதாக சொன்ன மாப்பிள்ளையை அவளுக்கு பாருங்க. "ராஜா அவளை விட்டு,உன்னை ஏற்று கொள்வான் என்று நீ நினைக்கிறீயா.." கண்டிப்பாக ஏற்று கொள்வான் அப்பா.எனக்கு நம்பிக்கை இருக்கு.சஞ்சனாவும் ராஜாவும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் தானே,அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது.அதனால் அவர்கள் காதல் வளருது.முதலில் ராஜாவை அந்த வேலையில் இருந்து எடுத்தால் மட்டுமே அவர்கள் சந்திப்பு தடைபடும்.அந்த இடைவெளியில் நான் உள்ளே நுழைந்து என் காரியத்தை சாதித்து கொள்வேன். எனக்கு புரியல ஷன்மதி,நீ என்ன சொல்ற..! அப்பா,ராஜாவின் விசாலமான மார்பு,வலிமையான உடலை பார்த்து அன்னிக்கு என்ன சொன்னீங்க.நீ போலீசில் இருக்க வேண்டிய ஆள்,உன்னை மாதிரி நேர்மையான ஆள் போலீசில் கம்மியா இருக்காங்க,வந்து சேருகிறாயா என்று கேட்டீங்க தானே.. ஆமா நான் தான் கேட்டேன்.ஆனால் அவன் தான் என்னால் போலீசில் சேர முடியாது என்று சொல்லி விட்டானே. இல்லப்பா நான் அவனை சம்மதிக்க வைக்கிறேன். ஆனா அவன் வெறும் டிப்ளமோ தான் படித்து இருக்கான்.அவனால் எப்படி மேல இருக்கிற பதவிக்கு எல்லாம் வர முடியும்? அவனை மேற்கொண்டு படிக்க வைச்சு உங்களை மாதிரி மேலே கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு.நீங்க ஆக வேண்டிய வேலை மட்டும் பாருங்க. சரி ஷன்மதி,அவனுக்கு தகுதி இருக்கு என்ற ஒரே காரணத்திற்காக அவனை நான் பரிந்துரை பண்றேன்.ஆனா முதலில் நீ அவன்கிட்ட சம்மதம் வாங்கு.அப்புறம் பார்க்கலாம். சரிப்பா.. ராஜா போலீசில் சேர ஒத்து கொள்வானா?சஞ்சனா தான் அதற்கு விடுவாளா.!!அவள் தான் அவனை செதுக்கி கொண்டு இருக்கிறாளே.ராஜா இப்பொழுது தன் வேலையில் முன்னுக்கு வர,சஞ்சனாவின் உதவியோடு தபால் வழி கல்வி மூலமாக டிகிரி படித்து கொண்டு இருப்பது ஷன்மதி இன்னும் அறியவில்லை.
04-09-2023, 10:02 PM
(04-09-2023, 04:45 PM)Geneliarasigan Wrote: Episode -47 ஒவ்வொரு பதிவும் அருமை.
04-09-2023, 10:53 PM
என்ன ஆச்சு நண்பர்களே,போன பதிவில் ஏதேனும் குறையா?எதுவும் கமென்ட் வரவில்லை.குறை இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்.நன்றி
05-09-2023, 03:13 AM
மிக மிக மிக அருமையான காதல் கதைக்கு நன்றி நண்பா நன்றி
05-09-2023, 12:42 PM
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் ராஜா மற்றும் ஷன்மதி உரையாடல் மிகவும் தெளிவாக இருந்தது. அதுவும் சஞ்சனா வாசு மற்றும் ராஜேஷ் உடன் நடக்கும் உரையாடல் எழுதிய விதம் அருமை இருந்தது
05-09-2023, 10:16 PM
05-09-2023, 10:16 PM
06-09-2023, 12:17 PM
(This post was last modified: 08-11-2024, 03:47 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Episode -46
ராஜா ஒரு நிமிஷம் வண்டி நிப்பாட்ட முடியுமா? ராஜா வண்டியை ஓரமாக நிறுத்த,.. சஞ்சனா கீழே இறங்கி "உன் சட்டையை கழட்டு"என்றாள். ராஜா மறுபேச்சு பேசாமல் சட்டையை கழட்ட,இப்போ வண்டிய எடு போலாம். ராஜாவிற்கு புரிந்தது. ஷன்மதி கொடுத்த சட்டை போட்டு இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லையென. வெறும் பனியனோடு ராஜா வண்டி ஒட்ட,ரோட்டில் அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர். சஞ்சனா அருகில் வந்த துணிக்கடையை காட்டி,அங்கு நிறுத்த சொன்னாள். அங்கு அவளே சென்று,சில துணிகளை எடுத்து ராஜாவிற்கு போட்டு பார்க்க சொன்னாள். என்ன இதிலேயும் போட்டியா சஞ்சனா,? இல்லடா,உண்மையில் ஷன்மதி உனக்கு வாங்கி கொடுத்த ட்ரெஸ்ஸில் செம லுக்கா இருந்தே.நான் உன்னை அணு அணுவாக ரசித்தேன்.அதே மாதிரி நான் உனக்கு இதுவரை உனக்கு ஆடை வாங்கி கொடுக்க வில்லையே என்ற குற்ற உணர்ச்சி.அதனால் தான் கழட்ட சொன்னேன்.இப்போ அதே மாதிரி நான் உனக்கு வாங்கி கொடுத்துட்டேன்.முதலில் நான் வாங்கி கொடுத்த ட்ரெஸ் போட்டுட்டு அப்புறம் அவள் வாங்கி கொடுத்த ட்ரெஸ் போட்டுக்க ஓகேவா அடிப்பாவி நீ இப்போ வாங்கிய ட்ரெஸ்ஸே நாலு, ஐந்து இருக்கு.இது போட்ட பிறகு தான் அதை போடணுமா? அது தான் இல்லை,நாளைக்கு சம்பளம் நாள்,அப்போ ஒரு ஏழு,எட்டு ட்ரெஸ் என் ராஜாவுக்கு எடுத்து தருவேன்.அதையும் போட்ட பிறகு நீ அந்த ட்ரெஸ் போடணும்.அதுவும் நான் வாங்கி கொடுத்த ட்ரெஸ் குறைந்தது 3 தடவ போட்ட பிறகு தான். அப்போ அதுக்கு ஒரு மாசம் ஆகுமே. ஆமா கண்டிப்பா ஆகும். சரி அதுக்கு அப்புறம் ஷன்மதி வாங்கி கொடுத்த ட்ரெஸ் போடலாமா? அப்புறம் தான் அடுத்த மாதம் பொறந்துடுமே,திரும்ப சம்பளம் வருமில்லே..அப்போ திரும்ப என் செல்ல கண்ணனுக்கு மேலும் ஒரு பத்து ட்ரெஸ் எடுத்து கொடுத்து விடுவேன். ஓ புரிஞ்சுது,மறுபடியும் நீ வாங்கி கொடுத்த ட்ரெஸ் 3 தடவ போடணும்.10*3=,30 days.அப்புறம் மறுபடியும் மாசம் பொறக்கும்,திரும்ப ட்ரெஸ் வாங்கி தருவே.அப்போ அம்மணி மறைமுகமாக என்னை அவ வாங்கி கொடுத்த ட்ரெஸ் போடவே கூடாது என்று திட்டம் போடறீங்க,சரியா? "புரிஞ்சிக்கிட்டா சரி தான்",என வெட்கமுடன் சஞ்சனா வழக்கம் போல் தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தாள். ராஜாவின் ஃபோன் அடிக்க,எடுத்து பேசினான். சொல்லு ஷன்மதி, போனில் ஷன்மதி"ராஜா நான் உன்னை நேரில் பார்த்து பேசனும்.இன்னிக்கு ஈவ்னிங் நீ ஃப்ரீயா.? இன்னிக்கு முடியாது ஷன்மதி,நான் வேணா,நாளை காலை வீட்டுக்கு வரட்டுமா? இல்லை வேண்டாம்,நாம வெளியில் பார்க்கலாம்.நான் நுங்கம்பாக்கம் ரெஸ்டாரன்ட்டில் காலை பதினோரு மணிக்கு டேபிள் புக் பண்றேன்.நீ அங்கே வந்து விடு.ரொம்ப முக்கியமான விசயம்.மறந்து விடாதே.தனியா தான் வரணும். சரி கண்டிப்பாக வரேன். "என்னவாம் அவளுக்கு ?இப்போ தானே அவள் வீட்டில் இருந்து வந்தோம்", சஞ்சனா கேட்க, "நாளைக்கு ஷன்மதி நுங்கம்பாக்கம் ரெஸ்டாரன்ட் தனியா வர சொல்லி இருக்கா,." ஏன் என்ன விசயம்? போனால் தான் தெரியும் சஞ்சனா,போய்ட்டு வந்து நான் சொல்றேன்.நீ பயப்படும்படி ஒன்னும் இருக்காது.அவ எனக்கு ஒரு நல்ல தோழி மட்டுமே.என்னை நம்பு டேய் நான் உன்னை முழுசா நம்பறேன்.சரி நீ போய்ட்டு வா. அடுத்த நாள் காலை ,ராஜா மற்றும் அவன் நண்பர்கள் வழக்கம் போல் டீக்கடையில் நின்று இருக்க சஞ்சனாவும் வந்து சேர்ந்தாள். ராஜா உனக்காக கேசரி செய்து எடுத்து வந்து இருக்கேன்.நீ மட்டும் சாப்பிடணும்.வேற யாருக்கும் கொடுக்காதே என்று அங்கு இருக்கும் அவள் நண்பர்களை பார்த்து"ஏண்டா உங்களுக்கு வேற வேலையே கிடையாதா,எப்ப பார்த்தாலும் என் ராஜாவை சுத்தியே அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கீங்க.." வாசு ராஜேஷிடம் "மச்சான் அவளை போ சொல்லு,அப்புறம் மறுபடியும் நான் என் விஸ்வரூபத்தை காட்ட வேண்டி இருக்கும்" டேய் தேங்காய் மூடி தலையா,உன்னை தான்டா வாசு,உனக்கு இருக்குடி ஒரு நாளு, நான் ஆபீஸ் போய்ட்டு வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்,ராஜா மறக்காம உடனே சாப்பிடு.நான் வரேன். சஞ்சனா சென்றவுடன்,ராஜா அவன் நண்பர்களிடம் "டேய் இதை நீங்க சாப்பிடுங்க." ராஜேஷ் உடனே,"அய்யயோ வேணாம்ப்பா அவளுக்கு தெரிஞ்சது என்றால் எங்களை உண்டு இல்லை என்று பண்ணிடுவா," இல்ல ராஜேஷ்,நான் விரதத்தில் இருக்கேன்.மதியம் மட்டும் தான் சாப்பிடுவது.இப்ப சாப்பிட முடியாது அதனால் தான். உடனே வாசு மான் போல துள்ளி வந்து,அவனிடம் இருந்து டிபன் பாக்ஸை பிடுங்கி"அவன் கிடக்கிறான் மச்சான், கவலையை விடு,நான் சாப்பிடறேன்" சரிடா நீ சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை டீக்கடையில் கொடுத்துடு.நான் நுங்கம்பாக்கம் வரை போய்ட்டு வந்துடறேன். ராஜேஷ் " என்ன விசயம் ராஜா" ஒண்ணுமில்ல ராஜேஷ், ஷன்மதி வர சொல்லி இருக்கா,ஏதோ முக்கியமான விசயமாம்? யாரு அந்த கமிஷனர் பொண்ணா? ஆமாம் ராஜேஷ்.. சரி நீ போய்ட்டு வா ராஜா வாசு டிபன் பாக்ஸை திறக்க,கமகமக்கும் நெய் வாசனையோடு கேசரி வாசனை வந்தது.வாசு எச்சில் ஊற,எடுத்து சாப்பிட, அதை பார்த்து ராஜேஷிக்கும் எச்சில் ஊறியது. டேய் எனக்கும் கொஞ்சம் கொடுடா வாசு, முடியாது போடா,வேண்டாம் என்று சொன்ன ஆள் தானே நீ. நல்லா பாதாம் பருப்பு,முந்திரி எல்லாம் போட்டு சூப்பரா இருக்கு,இதை நான் யாருக்கும் தர மாட்டேன் என மடமடவென காலி பண்ணி ஏப்பம் விட்டான். கொஞ்ச நேரத்திலேயே சஞ்சனா வர, ராஜேஷ் அவளிடம்,"என்ன சஞ்சனா வேலைக்கு போகல," இல்ல அண்ணா,நான் லீவு போட்டுட்டேன்.ராஜாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று வந்தேன். "ராஜாவா அவனுக்கு இன்னிக்கி வேலை இருக்கே," "அவனால தான் இன்னிக்கு வேலைக்கு இன்னிக்கு போக முடியாதே,அதுக்கு தானே நான் ஒரு வழி பண்ணி வைச்சு இருக்கேன் "என பொடி வைத்து பேசினாள். "ஏன் என்ன பண்ண சஞ்சனா," பின்ன என்ன அண்ணா,அந்த ஷன்மதி என்கிட்டேயே சவால் விடுறா,ராஜாவை என்கிட்ட இருந்து பிரிச்சி அவ எடுத்துக்க போறாளாம், வாசு அதற்கு,அவனவன் ஒரு பொண்ணு கூட கிடைக்காமல் ஏங்கிட்டு திரியறாங்க.இவன் பின்னாடி பாரு,ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணு பின்னாடி சுத்தறாங்க.எல்லாம் கலிகாலம்.. டேய் வாயை வச்சிக்கிட்டு கம்முன்னு இரு, இல்லன்னா,உனக்கு ஒரு பாயசத்தை ரெடி பண்ணிடுவேன் பார்த்துக்க,. வாசு முணுமுணுத்து "அய்யயோ நான் சும்மா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்க மாட்டேங்குதே,சஞ்சனா இதுக்கு மேல நான் வாயே திறக்க மாட்டேன்.யூ continue "இதுல ஓட்டை இங்கிலீஷ் வேற,கருவா பயலே".,சஞ்சனா அவனை திட்டி விட்டு ராஜேஷிடம் "அண்ணா அதற்கு தான் அவன் ஷன்மதியை பார்க்க போக கூடாதென்று கேசரியில் பேதி மாத்திரை கலந்து எடுத்து வந்தேன்"என்று சஞ்சனா சொல்லி முடிக்க, பைக்கில் உட்கார்ந்து இருந்த வாசு,வழுக்கி கீழே விழுந்தான். வாசுவை பார்த்து ராஜேஷ் "எஸ்கேப் கிரேட் எஸ்கேப்" என்று குலுங்கி குலுங்கி நன்றாக சிரித்தான். சஞ்சனா புரியாமல்"என்ன அண்ணா,ராஜா எங்கே,வாசு வழுக்கி விழுந்ததை பார்த்து நீங்க ஏன் இப்படி சிரிக்கீறீங்க. ராஜேஷ் சிரித்து கொண்டே "ராஜா ஷன்மதியை பார்க்க அப்பவே கிளம்பி போய்ட்டான் சஞ்சனா.நீ கொண்டு வந்த கேசரியை சாப்பிட்டது எல்லாம் வாசு தான்." என்னது இவனா ? இவனே தான் மொத்தமா சாப்பிட்டான். வாசு "அடிப்பாவி உங்க சக்களத்தி சண்டைக்கு நான் தான் கிடைச்சேனா,இப்பவே அடிவயிறு கலக்குது.வயித்துக்குள் சடுகுடு எல்லாம் நடக்குது. குடலே வெளிவந்து விடும் போல இருக்கு.காலையில் சாப்பிட்ட இட்லி பாயா ரெண்டும் போன வேகத்திலேயே ரிடர்ன் வந்துடும் போல இருக்கே.. சஞ்சனா அவனை முறைத்து "அடுத்தவங்க சாப்பாட்டை எடுத்து தின்னா இப்படி தான் நடக்கும்." வாசு புலம்பி கொண்டே"ராஜேஷ் அவ எத்தனை மாத்திரை கலந்தாள் என்று மட்டும் கேளு மச்சான்.கொஞ்சம் ஓவரா கலக்குது" அது வந்து முதலில் ஒரு மாத்திரை தான் போட்டேன்.அப்புறம் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது.அதனால் மேற்கொண்டு ரெண்டு மாத்திரை போட்டேன்.கடைசியில் அவன் என் கூட இன்னிக்கு முழுக்க...இருக்கணும்னு எக்ஸ்ட்ரா ஒரு நாலைந்து மாத்திரை போட்டு விட்டேன் .மொத்தம் .... அய்யோ எண்ணுகிற நேரமாடி இது,அடி சண்டாளி கடைசியில் பாயாசம் போட்டு என்னை பாடையில் போக ஏற்பாடு பண்ணிட்டீயே,மச்சான் சீக்கிரம் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணுடா. ராஜேஷோ"எதுக்கு ஆம்புலன்ஸை நாறடிப்பதற்கா,சீக்கிரம் கக்கூஸுக்கு போடா.அப்புறம் நட்டு லூசாகி இங்கேயே ஒழுகிட போகுது கருமாந்திரம் புடிச்சவனே.", வாசு தலை தெறிக்க ஆபீஸில் உள்ள டாய்லெட் நோக்கி ஓடினான். சஞ்சனா ராஜேஷிடம் "அண்ணா நீங்க எங்கே போறீங்க," இல்ல சஞ்சனா,வாசுவுக்கு என்ன ஆச்சு என்று பார்க்க போறேன். அவனுக்கு ஒன்னும் ஆவாது.நீங்க வண்டியில் உட்காருங்க . நானா..!! ஏன் ? அதுவும் உன் வண்டியிலா?முடியாது. "இப்போ நீங்க உட்கார போறீங்களா இல்லையா ...நேரமாச்சு"சஞ்சனா முறைக்க ராஜேஷ் உடனே "சரி எங்கே போறோம்,அதை மட்டும் சொல்லு," ராஜா இப்போ போன இடத்துக்கு போய் என்ன பேசறாங்க என வேவு பார்க்க போறோம்.எப்படி போனால் சீக்கிரமா போகலாம் சொல்லுங்க,வள்ளுவர் கோட்டம் வழியா போலாமா,இல்ல நார்த் உஸ்மான் ரோடு வழியாகவா சரி தான்,இப்ப வரை நானே என் வீட்டுக்கு கூகிள் மேப் போட்டு தான் போய்ட்டு இருக்கேன்.நீ வேற ஏதாவது ஒரு வழியில் போம்மா.. சுத்த வேஸ்ட் அண்ணா நீங்க ,உட்காருங்க. ராஜேஷ் உட்கார்ந்ததும் "எடு வண்டிய"என்று கூற சஞ்சனா வண்டி சீறி பாய்ந்தது. "அம்மா தாயே,கொஞ்சம் மெதுவா போ.எனக்கு பிள்ளை குட்டி எல்லாம் இருக்கு."ராஜேஷ் கெஞ்ச மெதுவா போனால் அவங்க ரெண்டு பேர் சந்திப்பே முடிந்து விடும்.நீ மூடிட்டு உட்காரு. "எனக்கு இது தேவை தான்" ராஜேஷ் புலம்பினான்.பின்னாடி இருக்கும் கைப்பிடியை பிடித்து கொண்டு ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டி கொண்டு வந்தான். இவ போற வேகத்துக்கு எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல் இருக்கே. அய்யயோ வாசுவுக்கு பேதி மாத்திரை,எனக்கு ஹார்ட் அட்டாக்கா,சஞ்சனா கொஞ்சம் மெதுவா போம்மா... முடியாது,அமைதியா வா இல்லன்னா எதிரில் வரும் தண்ணி லாரி மேல மோதிடுவேன் பார்த்துக்க, அய்யயோ ,அது நோ என்ட்ரி போகாதே இன்னிக்கு எனக்கு எல்லாம் என்ட்ரி தான்,நீ வாயை மூடு. விரட்டு விரட்டிய வேகத்தில் பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்து விட்டனர். எப்படி என் டிரைவிங் ? சஞ்சனா கேட்க, டிரைவிங்கா இது பிளையிங் ,என்று ராஜேஷ் அலறி ஓரமாக ஓடினான். "ஏய் எங்கே ஒடற," அடிப்போடி ,எனக்கு வாந்தி வா ந்தியா வருது,நீ போய் உன் காதலனை பாரு,வ்வ்வ்வ்வவ்வ்க்க்.....என்று வாந்தி எடுத்தான். ஒரே நாளில் எனக்கு மேல வர வைச்சுட்டா, வாசுக்கு கீழ வர வைச்சுட்டா.பொண்ணா இது.. என்று புலம்பினான். Episode -47 சஞ்சனா வந்த முதல் வேலையாக ராஜா எங்கு இருக்கிறான் என்று கண்களால் ஆராய்ந்தாள்.ராஜாவை கண்டவுடன் அங்கு இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து மறைத்து கொண்டு அவன் கண்களில் அகப்படா வண்ணம் அவர்கள் பேச்சை ஒட்டு கேட்கும் தூரத்தில் அமர்ந்து கொண்டாள்.சிறிது நேரத்தில் ஷன்மதியும் வந்து விட்டாள். சாரி ராஜா,உன்னை ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனோ,என்று கேட்க, ராஜா முறுவலித்து"என்ன ஆச்சு ஷன்மதி ,நேற்றில் இருந்து ஒரே சாரி மழை பொழியுது.நீ சரியான நேரத்திற்கு தான் வந்து இருக்கே.சாரி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.அதுவும் நான் உனக்கு சிறந்த நண்பனாக இருக்க ஆசைப்படுகிறேன்.நீ அடிக்கடி சாரி கேட்பதை பார்த்தால் நான் உனக்கு நண்பனாக இருப்பதில் பிடிக்க வில்லையோ. அய்யோ அப்படி இல்லாம் இல்லை ராஜா,இதுக்கு மேல் நான் சாரி கேட்க மாட்டேன் போதுமா ?இப்போ நான் சாரி கேட்டதுக்கு சாரி என்று சொல்ல வந்து நாக்கை கடித்து கொண்டாள். ராஜா சிரித்து "பார்த்தியா மறுபடியும் சாரி உன் வாயில் வருது, நேற்றில் இருந்து உன் முகமும் வாட்டமா இருக்கு ஷன்மதி,அதுவும் பேச ரொம்பவே தடுமாறுகிற.இது நான் வழக்கமாக பார்க்கிற ஷன்மதியே இல்ல" ஷன்மதி மனதுள்ளாகவே "உன்னுடன் சஞ்சனாவை பார்த்ததில் இருந்து தான் இந்த தடுமாற்றம் ராஜா"என்று எண்ண, ராஜா அவளிடம் சத்தமாக"ஷன்மதி இந்த உலகத்தில் தான் இருக்கியா?." "அது வேற ஒன்னும் இல்ல ராஜா,உன்கிட்ட எப்படி பேச ஆரம்பிப்பது என ஒரு சின்ன சிந்தனை" "சரி,உன் மனசு இலகுவாக ஆகிற மாதிரி சில விசயம் சொல்றேன்,நீ இன்னிக்கி பளிச்சுன்னு அழகாக இருக்கே,உன்னோட புருவங்கள் அழகாக மையிட்டு இருக்கே.உன்னோட அழகை நீ போட்டு வந்த உடை இன்னும் மெருகேற்றுகிறது "என சொல்ல ஷன்மதி வெட்கப்பட்டு ,"ராஜா நான் உண்மையில் அழகாக இருக்கேனா." "சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் ஷன்மதி அதுக்கு நீ வெட்கம் எல்லாம் படாதே," "யூ ராஸ்கல்" என்று அவள் சிரித்து செல்லமாக அடிக்க முயல, ராஜா சிரித்து கொண்டே அவள் அடியை வாங்கி கொண்டு"நீ உண்மையில் ரொம்ப அழகாக தான் இருக்கே,நீ இந்த மாதிரி கலகலப்பாக இருக்க வேண்டும் என்று தான் கிண்டல் பண்ணேன்.இப்போ உன் மைண்ட் ஃப்ரீ ஆயிடுச்சா.உனக்கு என்ன விருப்பமோ அதை முதலில் ஆர்டர் பண்ணு ." "எனக்கு ஒரு மேங்கோ மில்க் ஷேக்,உனக்கு ராஜா," "எனக்கு எதுவும் வேணாம் ஷன்மதி,நான் இப்போ விரதம் இருப்பதால் காலையில் எதுவும் இப்போ சாப்பிட முடியாது." "சரி, ராஜா நான் நேராக விசயத்திற்கு வரேன்.இப்போ போலீசில் உன்னை மாதிரி ஆட்கள் இருக்க வேண்டும் என்று அப்பா விருப்பப்பட்டார்.உனக்கு வேலை ரெடியாக இருக்கு.நீ "ம்" என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் உடனே உனக்கு வேலை கிடைக்கும்.அப்புறம் நீ ஒரு டிகிரி முடித்து ips மட்டும் பாசாகி விட்டால் நீ நல்ல ரேங்குக்கு சீக்கிரமா வந்து விட முடியும்.உன்னோட எதிர்காலமே மாறி விடும்.உனக்கு கூட இருந்து நான் உதவி புரிகிறேன்.உனக்கு இருக்கும் திறமைக்கு நீ ips கண்டிப்பாக பாஸ் பண்ண முடியும்." சஞ்சனா இதை கேட்டு அதிர்ந்தாள்.ராஜாவை தன்னிடம் இருந்து பிரிக்க அவள் கையாளும் முதல் வழி என்பது அவளுக்கு புரிந்தது.இருந்தும் ராஜா என்ன சொல்ல போகிறான் என்று கேட்க மிக ஆர்வமாக காதுகளை தீட்டி கொண்டு தயாராக இருந்தாள். ராஜா ஷன்மதியிடம்,"ரொம்ப தேங்க்ஸ் ஷன்மதி,என்னோட எதிர்காலத்திற்காக நீ மெனக்கெட்டு வந்து இருக்கே.ஆனா என்னால் இப்போ போலீசில் சேர முடியாது."சட்டென்று மறுக்க இந்த வார்த்தையை கேட்டதும் சஞ்சனா முகம் மலர்ந்தது. "ஏன் என்னாச்சு ராஜா,"ஷன்மதி கவலையோடு கேட்க "நான் இப்போ என்னோட கம்பனியில் TL ஆக செலக்ட் ஆகி இருக்கேன்." வாவ் சூப்பர்,வாழ்த்துக்கள். அப்புறம் என்னோட வேலையில் இன்னும் அடுத்த நிலைகளுக்கு செல்ல டிகிரியும் படித்து கொண்டு இருக்கிறேன். அருமை.நான் என்ன நினைத்தேனோ அதை நீ செய்து கொண்டு இருப்பது எனக்கு சந்தோஷம். இன்னொரு முக்கிய விசயம் ஷன்மதி,இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் சஞ்சனா தான்.அவ தான் பின்னாடி இருந்து ஒவ்வொன்றாக என்னை இயக்கி கொண்டு இருக்கிறாள். சஞ்சனா பற்றி பேசியதும் ஷன்மதி முகம் வாடி போனது.நான் என்ன ராஜாவிற்கு செய்ய நினைத்தேனோ,அதை தான் சஞ்சனா கச்சிதமாக செய்து கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து அவள் மேல் மதிப்பும் வந்தது.ஆனால் ராஜாவை மட்டும் விட்டு கொடுக்க மனமில்லை. இதற்கு மேல் அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது.சமயோசிதமாக யோசித்து தான் செயல்பட வேண்டும்.நான் தான் ராஜாவிடம் இனிமேல் அடிக்கடி சந்திப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்து இருக்க வேண்டும் என ஷன்மதி மனதில் நினைத்து, "சரி ராஜா,நீ செல்வது தான் சரியான பாதை.நீ படிக்கும் டிகிரி சம்பந்தமாக நான் உன்னை அடிக்கடி சந்தித்து என்னால் ஆன உதவி செய்யறேன் இப்ப வரட்டுமா" "சரி ஷன்மதி." "பேரர் எவ்வளவு ஆச்சு", ஷன்மதி கேட்க ஷன்மதி நீ கிளம்பு,கஸ்டமர் ஒருத்தர் இங்கே வரேன் என சொல்லி இருக்கார்.நான் அவருக்கும் சேர்த்து பில் பண்ணிக்கிறேன். ஓகே பை ராஜா.எதுக்கும் இந்த போலீஸ் வேலை பற்றியும் கொஞ்சம் யோசி. சரி ஷன்மதி.பார்த்து போய்ட்டு வா ராஜா அமைதியாக எழுந்து சென்று,சஞ்சனா டேபிள் முன் உட்கார்ந்து"சஞ்சனா ஒளிந்து இருந்தது போதும், கொஞ்சம் பேப்பரை கீழே இறக்குமா" சஞ்சனா அசடு வழிய "அடப்பாவி நான் வந்தது உனக்கு முன்பே தெரியுமா?" நீ உள்ளே வரும்போதே உன் கொலுசு பாடும் ராகத்தை வைத்தே அது நீ தான் என கண்டுபிடித்து விட்டேன்.நியூஸ் பேப்பரை வைத்து முகத்தை மறைத்த என் கண்மணிக்கு ஏனோ கொலுசை மறைக்க தோன்றவில்லை.எங்களுக்கும் சில சமயம் உள்ளுணர்வு வேலை செய்யும் சஞ்சனா.என் கண்மணி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் வந்து விட்டால் எனக்கும் சிக்னல் வந்து விடும். "செம்ம உஷாருதான்பா நீ " அது இருக்கட்டும்,நீ எதுக்கு வந்தே..? அது வந்து ராஜா...என சஞ்சனா ராகம் இழுக்க, என்ன என்னை வேவு பார்க்க வந்தியா சஞ்சனா,அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை கிடையாது. "அப்படி இல்லடா,உன் மேல முழு நம்பிக்கை இருக்கு.ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி வந்துட்டேன்.நான் பண்ணது தப்பு தான்.என்னை மன்னிச்சிடுடா" என தலை கவிழ்ந்தாள். ராஜா அவள் முகத்தை விரலால் நிமிர்த்தி"என்னை சந்தேகபடுவது உன்னை நீயே சந்தேகப்படுவது மாதிரி தானே செல்லம்,உன்னையும் குறை சொல்ல முடியாது. ஷன்மதி என்னை விரும்புறா என்று தெரிந்து ,அவ என்னை கொத்தி கொண்டு போய் விடுவாளோ என்ற பயம் உனக்கு. சஞ்சனா ஆச்சரியம் அடைந்து"ராஜா உனக்கு எப்படி தெரியும் அவ உன்னை விரும்புறா என்று" என்ன சஞ்சனா,ஒருத்தர் பேசும் போது அவர்கள் கண்ணை பார்த்து சொல்லிவிட முடியாதா?அவங்களுக்கு நம்ம மேல லவ் இருக்கா இல்லையா என்று,அவ நல்ல பொண்ணு, நேரம் பார்த்து கொஞ்சம் பக்குவமாக எடுத்து சொல்லி அவளுக்கு நானே புரிய வைக்கிறேன்." எனக்கு இது போதும் ராஜா,என சந்தோஷத்துடன் அவனை கட்டி கொள்ள வர,"சார் பில்" பேரர் குரல் கேட்டு அவளை தடுத்தது. ராஜா உடனே ஏமாற்றத்துடன்"ஏன்யா... சரியான நேரத்தில் குறுக்கே வரீங்க."ம்"என்று பெருமூச்சு விட்டு போய் இவங்க சாப்பிட்ட பில்லையும் சேர்த்து போட்டுட்டு வாங்க" மீண்டும் சஞ்சனா கட்டி கொள்ள வர இப்போ ராஜேஷ் குரல் கேட்டது. ஒருத்தன கூட்டிட்டு வந்தோமே,அவனுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது எண்ணம் இருந்துச்சா சஞ்சனா உனக்கு.? டேய் நீ எங்கேடா ராஜேஷ் இங்கே?ராஜா ஆச்சரியத்துடன் கேட்க, எல்லாம் உன் ஆளை கேளுடா ராஜா,சும்மா இருந்தவனை கூட்டிட்டு வந்துட்டா. சரி விடு ராஜேஷ்,அவ குழந்தை மாதிரி, வழி தெரியலன்னு துணைக்கு உன்னை கூட்டி வந்து இருப்பா, என்னது அவளுக்கா வழி தெரியல,ஊரில் உள்ள சந்து பொந்தெல்லாம் அவளுக்கு நல்லா தெரியுது. சரி சரி , உனக்கு என்ன வேணும் பார்த்து சாப்பிடு.. சாப்பிட்டு விட்டு கிளம்ப, ராஜேஷ்"டேய் ராஜா என்னை ஒழுங்கா என் வண்டிகிட்ட கொண்டு போய் விடு," "அண்ணா வாங்கண்ணா,நான் கொண்டு போய் விடறேன்"சஞ்சனா கூப்பிட என்னது.... மறுபடியும் உன் கூடவா?என்னால் முடியாது.. அவ ஒட்டும் போது வண்டியோட டயர் தரையிலேயே படல மச்சான்,அப்படியே அந்தரத்தில் பறந்து வருது.அவ்வளவு வேகமா வண்டி ஒட்டுறா. சஞ்சனா நீயா டபுள்ஸ் அடித்து வண்டி ஓட்டிட்டு வந்தே..ராஜா ஆச்சரியமாக கேட்டான். ஆமா ராஜா,முதல் தடவை ராஜேஷ் அண்ணாவை வைச்சு தான் சோதனை பண்ணேன்.. என்னது....! முதல் தடவையா,ராஜா என் உசிருக்கு உத்திரவாதம் இல்லை,ஒழுங்கா rapido புக் பண்ணு.நான் அதிலேயே போய்க்கிறேன். சரி சரி ஓகே,இந்தா நீ என் வண்டியை நீ ஒட்டி வா,நான் சஞ்சனா வண்டியில் போய்க்கிறேன். ராஜா வீணா ரிஸ்க் எடுக்காதே,அவ ரொம்ப மோசமாக வண்டி ஒட்டறா,நீயும் இந்த வண்டியிலேயே வந்திடு. டேய் ராஜேஷ்,அவளை மட்டும் தனியா விட்டுட்டு என்னால் எப்படி தனியா வர முடியும்..நீ போ,பரவாயில்ல நான் இதிலேயே வரேன்.. சஞ்சனாவிற்கு ராஜா பின்னாடி உட்கார்ந்து போவது சந்தோஷம்.இப்பொழுது அவனை பின்னாடி உட்கார வைத்து கூட்டி போவது டபுள் சந்தோஷம். முன்பு ஜெட் வேகத்தில் பறந்த வண்டி தற்பொழுது கப்பல் போல் மிதக்க தொடங்கியது. ராஜேஷ் வண்டியில் பின் தொடர்ந்து வந்து"என்ன சஞ்சனா,இப்போ மட்டும் வண்டி அப்படியே ஸ்மூத்தாக போகுது".. "பின்னாடி உட்கார்ந்து வருவது யாரு,அவன் என் உசிருடா.அவனுக்கு ஒன்னுன்னா நான் தாங்க மாட்டேன்.நீ முன்னாடி போடா" என கலாய்த்தாள். அவள் தோளின் மீது இருந்த அவன் கையை எடுத்து இடுப்பில் வைத்து "என்னை கெட்டியாக கட்டிக்கோட" என்று சொன்னாலும் அவன் அமைதியாகவே வந்தான். மேலும் விரித்து வைத்து இருந்த அவள் கூந்தல் அவன் முகத்தில் அலையாடினாலும் அவன் அவளுக்காக எளிதில் கட்டுபடுத்தி கொண்டான். ஆனால் நாளை நடைபெற போகும் ஒரு சம்பவம் அவன் ஆண்மைக்கே ஒரு சவால் விட போகிறது.அவன் விரதத்தை சோதனைக்குள்ளாக்கும் விதமாக அவள் அந்தரங்க பாகங்களை தொ ட வேண்டிய கட்டாயம் ஏற்பட போகிறது.அதில் மட்டும் வென்று விட்டால் இந்த விரதத்தை வெற்றிகரமாக அவன் முடிப்பது எளிது. அது என்ன சம்பவம்? |
« Next Oldest | Next Newest »
|