♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Keep it up, tables are turning again.. I hope they will teach a good lesson to George. Waiting brother
[+] 1 user Likes Dirtyp's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
சதுரகிரி கோயில் சரியா நண்பா
Like Reply
(20-08-2023, 10:41 PM)karthikhse12 Wrote: Sema bro raja always great bro

Yes bro, ஆனா இதற்கு மேல் ராஜா மீது சஞ்சனாவின் ராஜாங்கம் தான்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(21-08-2023, 12:12 AM)am.rathimeena Wrote: ஆஹா மிக அருமை.. சஞ்சனா சரியா நேரத்தில் நாராயணன் sir ஐ சந்தித்து நடந்தை கூறினால்..அதனால் ராஜா வேலை தப்பித்தது..எல்லா நேரமும் சஞ்சனவால் ராஜா வை காப்பாத்த முடியுமா..??

இந்த கதையில் ராஜாவிற்கு என்றும் பக்கபலமாக இருக்க போவது சஞ்சனா தான்.ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் எப்போதும் ஒரு பெண் தான் இருப்பாள்
Like Reply
Mahesht75
Panniruvelkai
Omprakash_71

Super.அனைவரும் சதுரகிரி என சரியான விடையை கூறி உள்ளீர்கள்.
Like Reply
Super update
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
(21-08-2023, 02:12 AM)Dirtyp Wrote: Keep it up, tables are turning again.. I hope they will teach a good lesson to George. Waiting brother

GEORGE will get lesson in the climax bro, அவன் செய்யப்போகும் முட்டாள் தனமான விஷயங்கள் ராஜா மற்றும் சஞ்சனாவிற்கு நன்மையாக முடிய போகிறது.இப்போ சஞ்சனா ராஜாவிடம் தன்னை கொடுத்து அவனை வெற்றி கொள்ளும் நேரம்.
Like Reply
(21-08-2023, 06:32 AM)prrichat85 Wrote: Super update

Thank you
Like Reply
Good going
[+] 1 user Likes Siva.s's post
Like Reply
(21-08-2023, 07:46 AM)Siva.s Wrote: Good going

Thank you நண்பா.
Like Reply
Episode -27

குட் மார்னிங்டா வாசு,ராஜா சொல்ல,

ராஜேஷ் அதற்கு",குட் மார்னிங் இல்ல ராஜா,இன்னிக்கு அவனுக்கு bad மார்னிங்."

ஏண்டா என்ன ஆச்சு,

ஐயா,நேற்று வேலையை கட் அடித்து விட்டு நம்ம தலைவர் ரஜினிகாந்த் நடிச்ச ஜெயிலர் படத்துக்கு போய் இருக்கார்.அங்க தான் பிரச்சினையே.

ஏன் என்ன ஆச்சு,

நம்ம வாசு ஐயா படத்துக்கு போனோமோ,பார்த்தோமே என்று வந்து இருந்தால் பிரச்சினையே இல்ல.ஆனால் நம்ம ஆளு அங்கேயும் காசு சம்பாதிக்க பார்த்து இருக்கார்.

ஏன் என்ன பண்ணான்?,

ஐயா தெரிஞ்ச ஆளு மூலமா ஒரு 20 டிக்கெட் எப்படியோ உஷார் பண்ணிட்டார்.டிக்கெட் வாங்கி வெளியில் நின்று ப்ளாக்ல டிக்கெட்டை கூவி கூவி வித்து இருக்கார்.உனக்கு தான் தெரியுமே நம்ம மேனேஜர் விஜய் சார்,பக்கா ரஜினி வெறியன் என்று.அந்த நேரம் அவருக்கு டிக்கெட் கிடைக்காமல் ப்ளாக்ல டிக்கெட் கிடைக்குமா என்று தேடிட்டு இருந்து இருக்கார்.அப்ப நம்ம ஆளு முன்னாடி போய் நின்னது தான் தாமதம். ஐயா மூஞ்சி வெளிறி போச்சு."ஏண்டா பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல என்று லீவு போட்டுட்டு இங்க வந்து ப்ளாக்ல டிக்கெட்டா விக்கிற"என்று கேட்ட உடனே வாசுவோட மூஞ்சியை பார்க்கணுமே."

அய்யயோ அப்புறம் என்ன ஆச்சு,

சார் , நானாவது உங்க கிட்ட சொல்லிட்டு வந்தேன்,நீங்க என்ன எங்கிட்ட சொல்லிட்டா வந்தீங்க,நீங்க இங்கே தான் வரபோறீங்க என்று சொல்லி இருந்தால் நான் அப்படியே ஓடி போய் இருப்பேன் இல்ல என்று உளறி இருக்கான்.

அப்புறம் அவரே மொத்த டிக்கட்டையும் வாங்கிட்டு,"எனக்கு தேவையான டிக்கெட் சரியா இருக்குடா.வரட்டுமா"என்று கேட்டு இருக்கார்.

"சார் காசு" என்று இவன் கேட்க

சரி,இந்த மாசம் உனக்கு சம்பளம் வேணுமா,வேண்டாமா என்று கேட்டு இருக்கார்.அப்புறம் அவரே பாவம் பார்த்து இந்தா என்று டிக்கெட்க்கான MRP காசு மட்டும் கொடுத்துட்டு போய்ட்டார்.

சரி பரவாயில்லை வாசு,முதலுக்கு மோசம் இல்லை என்று விடு.

வாசு உடனே "ராஜா ஊரில் திருவிழா வருது,கொஞ்சம் இதில் வர காசை வைச்சு போய் நல்லா என்ஜாய் பண்ணலாம் என்று நினைச்சேன்."

எனக்கு dhamaka achieve பண்ண காரணத்தால் ஒரு 2000 ரூபா கிரெடிட் ஆகி இருக்கு வாசு.நான் வேணா அதை தரேன்.போய் என்ஜாய் பண்ணு.ராஜா சொல்ல

வாசு " ரொம்ப தேங்க்ஸ் ராஜா"

எப்படா வாசு திருவிழா?

அடுத்த வாரம் ராஜா

அப்பொழுது சஞ்சனா ராஜாவிற்கு ஃபோன் பண்ண,

ராஜா எங்கே இருக்கே?

நான் இங்கே டீ கடையில் தான் சஞ்சனா.

சரி நம்ம விசயத்தை அப்பாகிட்ட  சொல்லிட்டேன்.உன்னை பார்க்கணும்னு சொல்றார்.

ம் சரி சஞ்சனா,நான் ஒரு அப்பாயின்ட்மென்ட் ரோஹிணி இன்டர்நேஷனல் லாட்ஜ் வரை போறேன்.சாயங்காலம் வேலை முடித்து விட்டு வரட்டுமா?

அவ்வளவு லேட் ஆகுமா?ராஜா அங்கே கீழே ஓட்டல் மாதிரி ஏதாவது இருக்கா?

அதே லாட்ஜில் கீழே ஓட்டல் இருக்கு சஞ்சனா.

அப்ப ஓகே,நான் அப்பாவை அங்கேயே கூட்டிட்டு வரேன்.நாம அங்கே பேசலாம்.

ம் சரி.என்று போனை வைத்தான்.

என்ன மச்சான் சஞ்சனாவா?ராஜேஷ் கேட்க

ஆமாடா,அவ அப்பாகிட்ட விசயம் சொல்லி ஆச்சாம்,நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்றார்.

"சூப்பர்டா,சீக்கிரமே சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையால் அடி வாங்கும் சங்கத்தில் சேரும் வழியை பாரு"ராஜேஷ் வாழ்த்தினான்.

Thank you டா ராஜேஷ்..

தாங்க்ஸ் மட்டும் பத்தாது மச்சான்,சங்கத்து வளர்ச்சி நிதிக்கு ஒரு 500 ரூபா பொருளாளர் வாசுவுக்கு கொடு..

ஏண்டா நைட்டு சரக்கு அடிப்பதற்கு என்கிட்ட ஆட்டைய போட பாக்கறீங்களா..நடக்காது மகனே..

டேய் இப்போ நீ கொடுக்கவில்லை என்றால் உன் லவ் புட்டுக்கும் பார்த்துக்க என்று ராஜேஷ் விளையாட்டாக தான் கூறினான்.

"பரவாயில்லை போடா" என்று ராஜா சிரித்து கொண்டே கிளம்பினான்.

ராஜேஷ் விளையாட்டாக கூறிய அந்த வார்த்தை நிஜமாக நடக்க போகிறது என்று தெரிந்து இருந்தால் அவன் அந்த வார்த்தையே கூறி இருக்க மாட்டான்.

ராஜா வரவேற்பாளரிடம்"Excuse me sir,மேனேஜர் என்னை வர சொன்னார்"

"நீங்க"

"என் பேர் ராஜா.coming from ....."

"Oh yes,அவர் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கார்.மேலே மூணாவது மாடி போங்க,ரூம் நம்பர் 301.."

ராஜா மேலே படியேறும் போது கால் தடுக்கி ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை உணர்த்தியது.ஆனால் அதை அலட்சியப்படுத்தி மேலே சென்றான்.

காலிங்பெல்லை அழுத்த "எஸ் உள்ளே வாங்க" என்று பெண் குரல் கேட்டது.

ஒருவேளை மேனேஜர், பெண்ணாக இருக்குமோ என்று நினைத்து கொண்டு ராஜா உள்ளே செல்ல,உள்ளே இருந்த பெண் அவனை பார்த்து ஒரு மாதிரி சிரித்தாள்.

ராஜாவிற்கு அவள் சிரித்த விதம் ஏதோ தவறாக தோன்றியது."மேடம் நீங்க தான் மேனேஜரா"என்று கேட்டான்.

அந்த பெண் விறுவிறுவென சேலையை அவிழ்க்க,"மேடம் என்ன பண்றீங்க"என்று ராஜா திரும்பி அவசரமாக வெளியேற முயற்சித்தான்.கதவில் கைவைத்த நேரம் வெளியில் இருந்து கதவு வேகமாக திறந்தது.சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு வேகமாக உள்ளே நுழைந்து "இவனை அரெஸ்ட் பண்ணுங்க"என்றார்.

"சார் நான் எதுவும் பண்ணல.இங்கே ஆர்டர் எடுக்க தான் வந்தேன்."

"அது இங்கே வர்றவங்க எல்லோரும் சொல்ற கதை தான்." என்று அவன் சட்டையை அவிழ்த்து தரதரவென இழுத்து சென்றார்.

இழுத்து செல்லும் போது கீழே சஞ்சனாவும் அவள் அப்பாவும் எதிரே வந்தனர்.சஞ்சனா ஓடிவந்து "சார் எதுக்கு இவனை இழுத்துட்டு போறீங்க"

நீ யாரும்மா முதல்ல,

நான் இவனை கல்யாணம் பண்ணிக்க போறேன்.

"என்னது போயும் போயும் இந்த பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்க போறீயா,உனக்கு வேறு எந்த நல்ல பையனும் கிடைக்கலையா?இந்த இடம் பலான தொழில் நடைபெறும் இடம்.இங்கே இவன் ரெகுலர் கஸ்டமர்.வசமா இன்னிக்கு தான் மாட்டினான்.போ போ"என்று விரட்டினான்.

என்னடா நடந்துச்சு? சஞ்சனா கேட்க

அவமானத்தில் வார்த்தை  வெளிவர மறுத்ததால் கண்களில் கண்ணீரோடு மௌனமாய் ராஜா பேச அவளுக்கு புரியவில்லை.எல்லாம் மொழிக்கும் கண்ணீர் புரியும் ஆனால் ஏனோ அவள் கண்களிலும் நீர் வழிந்ததால் அதை அவளால் உணர முடியவில்லை.

சஞ்சனாவின் அப்பா அருகில் வந்து,"நல்லவேளை நீ தப்பிச்சம்மா,வா வீட்டுக்கு போகலாம்.தலைக்கு வந்தது தலைபாகையோடு போனது விடு"

"அப்பா இல்லப்பா அவன் அந்த மாதிரி ஆள் கிடையாது"

"அதுதான் போலீஸ்காரங்களே சொல்றாங்களே,அவன் இங்கே ரெகுலர் கஸ்டமர் என்று,நீ வெகுளி பொண்ணு வெளி உலகம் தெரியாம ஏமாந்துட்ட.நீ ஒரு நல்லவனை தான் தேர்ந்தெடுப்பாய் என்று நினைத்து வந்தேன்.ஆனா இவன் பச்சை பொறுக்கியா இருப்பான் போல் இருக்கு."

"அப்பா ஒரு நிமிஷம் போலீஸ் ஸ்டேஷன் வரை போய்ட்டு என்னவென்று பார்த்து விட்டு வந்துடலாம்."

"சஞ்சனா நீ அம்மா இல்லாத பொண்ணு என்று நான் உன்கிட்ட கோபப்பட்டது கிடையாது. முதல் முறை என்னை கோபப்படும்படி செய்யாதே.வா வீட்டுக்கு போகலாம்."

சஞ்சனா அமைதியாக அவள் அப்பாவுடன் சென்றாள்.

பிரியா துர்காவிடம்"துர்கா சஞ்சனா வீடு உனக்கு தெரியும் தானே!கொஞ்சம் என் கூட வந்து அவ வீட்டை காண்பிக்க முடியுமா?"

எனக்கு தெரியும் மேடம்,என்ன விசயம் என்று நான் தெரிஞ்சுக்கலாமா?

"அதுவந்து என்னோட தம்பிக்கு அவளை ரொம்ப பிடிச்சு இருக்கு,அவளை பொண்ணு கேட்கலாம் என்று"

"ஆனா மேடம் அவ ராஜாவை லவ் பண்றா. இதுக்கு அவ ஒத்துக்க மாட்டா"

"என்னது ராஜாவா,அவன் மாச சம்பளக்காரன்.அவனால என்ன பெரிய வாழ்க்கை அவளுக்கு கொடுத்து விட முடியும்.என் தம்பி தனியா ஸ்டார்ட் அப் கம்பனி வைச்சு கை நிறைய சம்பாதிக்கிறான்.அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்?நாங்க பெரியவங்க பார்த்து பேசிக் கொள்கிறோம்.நீ வந்து வீட்டை மட்டும் காட்டு."

சஞ்சனா மற்றும் அவள் அப்பா வீட்டுக்கு வர,பிரியா தன் உறவினர் சிலருடன் துர்காவும் வாசலில் காத்து இருந்தாள்.

யாரு நீங்க ,சஞ்சனா அப்பா கேட்க,

நான் சஞ்சனாவோட மேனேஜர் ,உள்ளே போய் பேசலாமா?

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

பிரியா"எனக்கு ஒரு தம்பி இருக்கான்,அவன் ஸ்டார்ட் அப் கம்பனி தனியா வச்சு கை நிறைய சம்பாதிக்கிறான்.அவன் பேரு அர்ஜுன்.அவனுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு.அதனால் உங்க பொண்ணை பொண்ணு கேட்டு வந்து இருக்கோம்"

சஞ்சனா உள்ளே அதை கேட்டு திடுக்கிட்டாள்.துர்காவிடம்
"என்ன அக்கா இது,நான் போய் உடனே இதை நிப்பாட்டறேன்"

இரு இரு, முதலில் நீ ஏன் அழுவுற?

இல்லக்கா,நாங்க ராஜாவை பார்க்க போனோம் அப்போ ராஜாவை போலீஸ் விபச்சார வழக்கில் கைது பண்ணி அழைச்சிட்டு போனாங்க.

அப்போ நல்லதா போச்சு,அர்ஜுன் பார்க்க செம ஸ்மார்ட்டா இருக்கான்.கை நிறைய வேற சம்பாதிக்கிறான்.கடவுளா பார்த்து ராஜா கெட்டவன் என்று உன் கண்ணில் காண்பித்து இருக்கார்.

அக்கா ராஜாவை பற்றி தப்பா பேசாதீங்க,அவன் கண்டிப்பாக அந்த இடத்திற்கு போக மாட்டான்.

"அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ற,"

ஏனெனில் விபசார தொழிலில் ஈடுபட்ட ஒருத்தரை திருத்தி அவங்களுக்கு கடை வைச்சு மறுவாழ்வு கொடுத்து இருப்பதை நானே நேரில் பார்த்து இருக்கேன்.

அந்த இடத்திற்கு நீயா போனீயா,இல்லை அவனா கூட்டிட்டு போனானா?

அவன் தான் கூட்டிட்டு போனான்.

உன்னை இம்ப்ரஸ் பண்ண அந்த பொம்பளையை நடிக்க வைத்து இருக்கலாம் இல்லையா?

இல்ல அக்கா,அவன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

அப்பொழுது,பிரியா வீடியோகாலில் அர்ஜுனை அழைத்து சஞ்சனாவின் அப்பாவிடம் கொடுத்தாள்.

Hi uncle, எப்படி இருக்கீங்க?,

அர்ஜுனின் ஸ்டைலான உருவத்தை பார்த்தவுடன் சஞ்சனாவின் அப்பாவிற்கு அவனை ரொம்பவே பிடித்து விட்டது.

Uncle நான் சஞ்சனாகிட்ட பேசலாமா?

அவள் உள்ளே ட்ரெஸ் மாற்றி கொண்டு இருக்கிறாள் மாப்பிள்ளை.நானும் உங்க அக்காவும் பேசிட்டு உங்களுக்கு நல்ல முடிவை சொல்றோம்.

பிரியா சஞ்சனா அப்பாவிடம்"இங்க பாருங்க Mr.ஆறுமுகம்,எனக்கு எல்லாமே என் தம்பி விருப்பம் தான்.நாங்க பெருசா எதுவும் எதிர்பார்க்கல.உங்களால் என்ன முடியுமோ அதை செய்தால் போதும்."

"ஒரு நிமிஷம் இருங்க,நான் என் பொண்ணு கிட்ட போய் கலந்து பேசிட்டு வந்து விடுகிறேன்" என்று உள்ளே சென்றார்."சஞ்சனா எனக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சு இருக்கு,இது அவனோட ஃபோட்டோ பார்த்திட்டு சொல்லு"

சஞ்சனா அதை ஏறேடுத்தும் பார்க்காமல்"அப்பா ராஜா ரொம்ப நல்லவன்பா,"

சஞ்சனா திரும்ப திரும்ப அந்த ஊர் மேய்றவன பேசி என்னை கெட்ட கோபத்துக்கு ஆளாக்காதே,அப்புறம் நீ என்னை உயிரோடு பார்க்கவே முடியாது.அர்ஜுன் கூட தான் உனக்கு கல்யாணம்.இது தான் என் முடிவு அதை சொல்ல தான் வந்தேன்.

துர்கா உடனே "அங்கிள் நீங்க போய் பேச வேண்டியதை பேசுங்க,நான் அவ கிட்ட எடுத்து சொல்லி சம்மதிக்க வைக்கிறேன்".

ஆறுமுகம் வெளியே வந்து பிரியாவிடம் "எனக்கு இந்த சம்பந்தத்தில் முழு சம்மதம்" என்று கூற,

"ஒரு தடவை சஞ்சனாவையும் சொல்ல சொல்லுங்க"

என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டாள்,நாம தட்டை மாற்றி கொள்ளலாம்.

எதுக்கும் ஒரு தடவை சஞ்சனாகிட்ட கேட்டு சொல்லுங்க,பிரியா மீண்டும் வலியுறுத்தினாள்.

துர்கா சஞ்சனாவிடம்,"சஞ்சனா உங்க அப்பாவிற்கு ஏற்கனவே ரெண்டு அட்டாக் வந்து இருக்கு.மேலும் ஒரு அட்டாக் வரவைத்து அவரை இழந்து விடாதே.சீக்கிரம் சம்மதம் சொல்லு"

சஞ்சனா கலங்கிய கண்களுடன் துர்காவை பார்க்க,

பொண்ணுக்கு சம்மதம் என்று உள்ளே இருந்து குரல் வர,பிரியா தட்டை கொடுக்க ஆறுமுகம் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார்.

அங்கே போலீஸ் ஸ்டேஷனில் ராஜா ஜட்டியோடு உட்கார வைக்கப்பட,இங்கே சஞ்சனா - அர்ஜுன் நிச்சயம் நடைபெற்றது.

அன்பரசு ஜார்ஜ்ஜிற்கு ஃபோன் செய்து"டேய் ஜார்ஜ் நீ சொன்ன மாதிரியே நான் செய்ஞ்சிட்டேன்டா,உனக்கு இன்னும் ஒரு போனஸ் நியூஸ்,அவனோட காதலி அங்கே வந்தாள்.அவ முன்னாடியே அரெஸ்ட் பண்ணி கொளுத்தி போட்டு வந்து இருக்கேன்.இதுக்கு மேல அவன் பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டா.இன்னிக்கு நைட் அவனை லாக்கப்புல வைச்சு லாடம் கட்டறேன்.நீ ஜாலியா இரு."

சூப்பர் மாமா,ஒரே கல்லில் ரெண்டு மாங்கா,நீங்க அவனை லாடம் கட்டுவதில் கூட எனக்கு  சந்தோஷம் இல்ல, ஆனா அவ முன்னாடி அரெஸ்ட் பண்ணீங்க பாரு அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம்.அவளுக்கு இருக்கு இதுக்கு மேல கச்சேரி"என்று சந்தோஷத்தில் குதுகாலித்தான்.

ராஜா :-
பூமியில் நான் பிறந்த ஜாதகம் மாறுது,
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது,
வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது ,
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்த்தது
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது,
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே,
நேரம் ஒரு காலம் வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்...

சஞ்சனா :-
கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது
கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது
வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது
பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது
இருந்தால் இனி உன்னோடு தான்
இல்லையேல் உடல்   மண்ணோடுதான்
மாலை இடும் வேளை வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன்...

[Image: IMG-20230817-WA0002.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
super update
Like Reply
Bye bye
Like Reply
இந்த கதை திருப்பத்திற்கு மேல் திருப்பமாக செம்ம வேகமாக பயணிக்கிறது நான் படித்த மற்றும் எழுதும் கதைகளில் நாயகனே நாயகிக்காக பல தியாகங்களை செய்வான் ஆனால் இக்கதை நாயகிக்கானது ஆகையால் என்னவோ இக்கதை படிக்க படிக்க ஆர்வம் தாங்கல அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் நண்பரே
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
(22-08-2023, 12:48 AM)Natarajan Rajangam Wrote: இந்த கதை திருப்பத்திற்கு மேல் திருப்பமாக செம்ம வேகமாக பயணிக்கிறது நான் படித்த மற்றும் எழுதும் கதைகளில் நாயகனே நாயகிக்காக பல தியாகங்களை செய்வான் ஆனால் இக்கதை நாயகிக்கானது ஆகையால் என்னவோ இக்கதை படிக்க படிக்க ஆர்வம் தாங்கல அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் நண்பரே
உங்கள் கமென்ட் எனக்கு மதி மயக்கத்தை கொடுக்கிறது நண்பரே.உங்கள் கமென்ட் மீண்டும் மீண்டும் வேண்டும் என்பதற்காகவே உடனுக்குடன் update கொடுக்க என்னை உந்துகிறது.என்னால் முடிந்த அளவு தினமும் இரவு update கொடுத்து கொண்டு இருக்கிறேன்.வேலை ஏதாவது அதிகமானால் மட்டுமே என்றாவது ஒருநாள் பதிவு தவற கூடும்.மற்றப்படி தினமும் update வரும்.நன்றி Namaskar
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Semma suspension Boss Super Boss Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(22-08-2023, 05:25 AM)omprakash_71 Wrote: Semma suspension Boss Super Boss Super

Thank you nanba
Like Reply
Music 
 Update - 28

F3 போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் அருள் வேகமாக உள்ளே நுழைந்தார்.அங்கு ஜட்டியோடு உட்கார வைக்க பட்டு இருந்த ராஜாவை பார்க்க,

டேய் ராஜா,என்னடா இது இப்படி வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கே,
யோவ் ஏட்டு,யாருய்யா இது இவனை இப்படி உட்கார வைத்தது?

ஐயா நம்ம சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு தான் விபச்சார வழக்கில் இவனை கைது பண்ணி கொண்டு வந்தாங்க,

யோவ் முதலில் இவனுக்கு ட்ரெஸ் கொடுங்க, எங்கேய்யா அந்த அன்பரசு?

ஏட்டு அதற்கு,"சார் அவர் வழக்கம் போல வெளியே... என்று ராகம் இழுக்க

என்ன மாமுல் வாங்க போய் இருக்கானா?

ஆமா சார்,

டேய் ராஜா எந்திரிச்சு ட்ரெஸ் போடு முதலில்,யோவ் அந்தாளு வந்த உடனே என் ரூமுக்கு வர சொல்லு.

சரிங்க சார்.

இன்ஸ்பெக்டர் அவர் அறையில் அவனை உட்கார வைத்து,..

ஏண்டா இந்த மாதிரி நடந்து விட்டது என்று எனக்கு ஒரு ஃபோன் பண்ண கூடாதா?

இல்ல சார்,நான் பழைய கம்பனி விட்டு வந்து 4 வருஷம் ஆச்சு.அதுவும் திடீரென்று நடந்த இந்த சம்பவத்தில் அதிர்ச்சியாகி எதுவுமே ஞாபகம் வரல. போனும் வாங்கி வைச்சுட்டாங்க.

சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு உள்ளே நுழைய,ராஜா நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இன்ஸ்பெக்டர் அருள், அன்பரசை பார்த்து"எதுக்குயா ராஜாவை அரெஸ்ட் பண்ண,?"

சார் ,பலான தொழில் நடக்கும் ரோஹிணி இன்டர்நேஷனல் ஓட்டல் நான் ரெய்டு போகும் போது இவன் கையும் களவுமாகப் மாட்டினான்.

சரி மாட்டிய மத்த ஆளுங்க எங்கே?

சார் அது வந்து,

ஓ ,இவன் மட்டும் தான் அந்த நேரத்தில் அங்கு இருந்தானா?சரி விடு,இவன் கூட இருந்ததா சொல்ற அந்த பொம்பளை எங்கே,

சார் அது வழக்கமாக மாட்டும் செண்பகம் தான்.

நான் கேட்டது அந்த பொம்பளை எங்கே,?

சார்....அது வந்து

ஓ ...,ரெண்டு பேர் மாட்டினாங்க,இவன் மட்டும் இருக்கான்.ஆனா அந்த பொம்பளைய மட்டும் வெளியில் விட்டுட்ட.

சார்....

என்னயா மென்னு முழுங்கற,முதலில் இவன் யாரு தெரியுமா?இவன் சிறந்த குடிமகன் என்று ஜனாதிபதி கையால் அவார்ட் வாங்கி இருக்கான்.
நான் இப்போ இன்ஸ்பெக்டராக இருப்பதற்கும் இவன் தான் காரணம் தெரியுமா?

எப்படி சார்?

நம்ம கமிஷனர் அலுவலகத்தில் போலீஸுக்கு தேவையான குரூப் சிம்கார்டு ....இவன் வேலை செய்த பழைய கம்பனி மூலமா ரெகுலரா இவன் தான் கொடுப்பான்.அப்போ தான் இவனுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.ஒருநாள் இவனிடம் எவனோ ஒருவன் வந்து பொய்யான proof கொடுத்து நிறைய சிம் கார்டு வாங்கி இருக்கான்.அது பொய்யான proof என்று இவன் கண்டுபிடித்து தன் உயிரையே பணயம் வைத்து ரகசியமாக அவனை ஃபாலோ பண்ணியதில் அது தீவிரவாதிகளுக்காக பயன்படுத்துவதை கண்டுபிடித்து எனக்கு தகவல் சொன்னதால் தான் அவர்களை நாங்கள் எளிதாக வளைத்து பிடிக்க முடிந்தது.அதனால் தான் எனக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைத்தது.அவனுக்கும் இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது கிடைத்தது.

சார் ஆனா எந்த நியூஸ் பேப்பர், டிவியில் எதிலும் இவன் முகம் வரவே இல்லயே

யோவ் நீயெல்லாம் எப்படி சப் இன்ஸ்பெக்டர் ஆன?இவன் தான் தீவிரவாதிகளை பிடித்து கொடுத்தான் என்று தெரிந்தால் அடுத்த நாள் இவன் உயிரோடு இருக்க முடியுமா?இவன் சாதாரண மனுஷன்யா,தினமும் அன்றாட வாழ்க்கையை வாழ வேண்டாமா?.அதனால் தான் இவனோட போட்டோ வெளியில் போட கூடாது என்று கமிஷனர் தெளிவா சொல்லிட்டார்.இவன் இப்போ நினைச்சா கூட கமிஷனர் கிட்ட நேரடியாக பேச முடியும்.
என்ன ராஜா,இவர் மேல complaint கொடுக்கறீயா‌.நான் ஆக்சன் எடுக்கிறேன்.

இல்லை வேண்டாம் சார்.நான் கிளம்பறேன்.

சரி, நான் வந்து ட்ராப் பன்றேன்ப்பா

அப்பொழுது ராஜேஷ் மற்றும் நண்பர்கள் விசயம் அறிந்து வந்து சேர்ந்தனர்.

சார் என்னோட ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க,நான் கொஞ்சம் உடனே போகனும்.

அன்பரசு வெளியே வந்து"சாரிப்பா என்னோட ரிலேஷன் ஒருத்தன் சொல்லி தான் இந்த மாதிரி எல்லாமே பண்ண வேண்டியதாகி விட்டது"

உங்களை சொல்லி குற்றமில்லை சார்,என் ராசி அப்படி..!நான் பிறந்ததில் இருந்தே ஆசைப்பட்டது எதுவுமே கிடைச்சது இல்ல,நான் ஆசைப்படற பொண்ணு மட்டும் எனக்கு எளிதாக கிடைத்து விடுமா என்ன?

தம்பி நான் வேணா வந்து அந்த பொண்ணு கிட்ட பேசட்டுமா?

வேண்டாம் சார்,நான் பார்த்துக்கிறேன்.

ராஜேஷ் வண்டியில் ராஜா கிளம்ப,சஞ்சனா வந்த ஆட்டோ அடுத்த இரண்டு நிமிடங்களில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்றது.

சஞ்சனா உள்ளே ஓடி வந்து இன்ஸ்பெக்டரிடம்,"சார் இங்கே ராஜா என்பவரை அரெஸ்ட் பண்ணி கொண்டு வந்தாங்க,நான் அவரை பார்க்க முடியுமா?"

நீ யாரும்மா?

நான் அவரை கல்யாணம் பண்ணிக்க போறவ சார்,

அப்படியா உட்காரும்மா

சார் அவரை நான் உடனே பார்க்கணும்.அவன் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டான்.பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க

அது எப்படிம்மா அவ்வளவு உறுதியாக சொல்ற,


சார்,அவன் உண்மையில் தப்பு செய்பவனாக இருந்தால் என்னையும்,என் அப்பாவையும் அவன் அங்கே வர சொல்லி இருக்க மாட்டான். நீங்க எதுக்காக அரெஸ்ட் அவனை பண்ணிங்களோ,அதே தொழிலில் இருந்த பெண்ணை மீட்டு அவளுக்கு மறுவாழ்க்கை தந்தவன் சார் அவன்.

ஓ,உனக்கும் அந்த விசயம் தெரியுமா?

நான் ஒரு மாதம் அவன் கூட நெருங்கி பழகி இருக்கேன் சார்.எந்த பெண்ணிடமும் கண்ணை பார்த்து தான் பேசுவான் சார்.என்னிடம் மட்டும் தான் இப்போ அவன் உரிமை எடுத்து கொள்கிறான்.அதுவும் என் அனுமதியோடு.

Good.ஆனா ஒரு பொண்ணு தனியா போலீஸ் ஸ்டேஷன் வருவது எல்லாம் தைரியம் வேணும்.

தைரியம் இல்ல சார்,அவன் மேல் இருக்கும் காதல்.அவனுக்காக என்ன வேணும் என்றால் செய்வேன்.இன்னொரு விசயம் சார்,வேறு எந்த பெண்ணும் கொடுக்காத சுகத்தை அவன் எப்ப விரும்பினாலும் நான் தருவேனே தவிர, அவன் என்னை விட்டு வேறு பெண்ணை தேடி செல்லும் நிலையை உருவாக்கவே மாட்டேன்.

என்னை நீ ரொம்ப ஆச்சரியப்படுத்திட்ட,உன் பேரு என்னவென்று நான் கேட்கவே இல்ல,

என் பேரு சஞ்சனா சார்,

அவன் நல்ல மனசுக்கு ஏத்த ஜோடி நீ தான்.உங்க கல்யாணத்திற்கு என்னை கூப்பிடுங்க.அவன் எந்த தப்பும் செய்யல.அவனை வீட்டுக்கு அனுப்பி ஆச்சு.

ரொம்ப தேங்க்ஸ் சார்

சஞ்சனா ராஜா வீட்டுக்கு விரைய,ராஜாவோ சஞ்சனா வீட்டுக்கு ராஜேஷின் பைக்கில் சென்று கொண்டு இருந்தான்.

சஞ்சனா வீட்டு காலிங்பெல்லை ராஜா அழுத்த சஞ்சனாவின் அப்பா வந்து திறந்தார்.அவனை வெளியேவே நிற்க வைக்க

மாமா,ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட பேசணும்.

மாமா கீமா என்று கூப்பிட்ட அவ்வளவு தான்டா உன் பல்லை பேத்துருவேன்.அதுக்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பி வந்துட்டியா.சரியான கிரிமினல் தான்டா நீ

சார் ,நான் தப்பித்து எல்லாம் வரல.நான் எந்த தப்பும் செய்யல என்று தான் என்னை வெளியில் விட்டாங்க..

அது எப்படிடா ,ரெண்டே மணி நேரத்தில் நீ எந்த தப்பும் செய்யவில்லை என்று போலீஸ் கண்டுபிடித்து உன்னை விட்டு விட்டார்களா..!!.எவனாவது காதில் பூ சுற்றி இருப்பான்.அவன் கிட்ட போய் உன் கதையை விடு.

ராஜா வெறுப்படைந்து "சார்,நீங்க சஞ்சனாவை கூப்பிடுங்க,நான் அவகிட்ட பேசிக்கிறேன்."

டேய் அவ என் பொண்ணு,எனக்கு இல்லாத உரிமை உனக்கென்னடா அவமேலே. அவ உன் முகத்தில் கூட விழிக்க விருப்பபடல,இந்த இடத்தை விட்டு உடனே நீ காலி பண்றீயா,இல்லை நான் போலீஸை கூப்பிடட்டுமா?

"சார் ,நானே இப்போ போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தான் வரேன்.நீங்க யாருக்கு வேணா ஃபோன் பண்ணுங்க,சஞ்சனா வெளியே வா சஞ்சனா" என்று கத்தினான்.ஆனால் அவள் உள்ளே இருந்தா தானே வெளியில் வர,

"டேய் நான் தான் சொல்றேன் இல்ல,அவ உள்ள தான் இருக்கா ஆனா உன்னை பார்க்க கொஞ்சம் கூட விருப்பபடல .இன்னொரு முக்கியமான விசயம் இன்னொரு தடவை அவளை பார்க்க வருகிற வேலை எதுவும் வச்சிக்காத,ஏன்னா அவளுக்கு இன்று ஒப்பு தாம்பூலம் நடந்து விட்டது.மாப்பிள்ளை யார் தெரியுமா?அவளோட மேனேஜர் பிரியா தம்பி அர்ஜுன் தான்.நீ ஏதாவது தகராறு பண்ணா அவ மேனேஜர் கிட்ட சொல்லி உன்னை வேலையை விட்டே தூக்கிடுவேன்.அப்புறம் சோற்றுக்கு பிச்சை தான் எடுக்கணும்.

ராஜேஷ் கோபப்பட்டு,"யோவ் நிப்பாட்டுயா,போனால் போகுது என்று பார்த்தால் ரொம்ப ஓவரா தான் துள்ளுற.இந்த வேலை போனால் எங்களுக்கு என்ன வேற வேலை கிடைக்காதா?.நாங்கள் எல்லாம் உழைக்கிற வர்க்கம்,எங்க போனாலும் எங்களுக்கு வேலை உண்டு.உன் பொண்ணு தான் முதலில் இவன் தான் வேணும்னு சுற்றி சுற்றி வந்துச்சு.இவன் விலகி விலகி தான் போனான் தெரிஞ்சுக்க.

என் பொண்ணு இவன் நல்லவன் என்று ஏமாந்து சுற்றி சுற்றி வந்தா,இப்போ பொறுக்கி என்று தெரிஞ்ச பிறகு வேண்டாம் என்று ஒதுக்கிறா.உன் நண்பன் யோக்கியவனா இருந்தால் என் பொண்ணு கிட்ட கூட நெருங்க கூடாது என்று நீ சொல்லு..

"யோவ் இன்னொரு தடவை என் நண்பனை பொறுக்கி என்று சொன்னே வயசானவர் என்று கூட பார்க்க மாட்டேன்.அப்புறம் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டி விடுவேன்.ஏய் சஞ்சனா உங்க அப்பா பேசறத கேட்டுட்டு உள்ளே உட்கார்ந்துக்கிட்டு என்னடி பண்ற.யோவ் கிழவா நீ இப்போ உயிரோடு இருப்பதற்கு காரணமே இவன் தான் ,"என்று கூற வந்தவனை ராஜா தடுத்தான்.

"வேண்டாம் ராஜேஷ் நாம போய்டலாம்".
ராஜா சஞ்சனா அப்பாவிடம்"தப்பு செய்ஞ்சவனுக்கு கூட தன் தரப்பு நியாயத்தை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும்.ஆனா நான் தப்பே செய்யாதவன் சார்.இனிமேல் உங்க பொண்ணு கண் முன்னாடி நான் வர மாட்டேன்.உங்களுக்கு என்னை வேலையை விட்டு தூக்க வேண்டிய அவசியமே இருக்காது.நானே பேப்பர் போட்டு போய்டறேன். "

ராஜா திரும்பி திரும்பி பார்த்து கொண்டு கண்ணில் கண்ணீரோடு வெளியேற,"ராஜேஷ் நான் போய்ட்டு வரேன்டா"

இருடா நான் உன்னை வீட்டில் ட்ராப் பண்றேன்.

இல்ல மச்சான் என் வண்டி ரோஹிணி ஓட்டல் கிட்ட நிக்குது.நான் அதை எடுத்துகிட்டு அப்படியே ஊருக்கு போறேன்.

டேய் அப்போ நீ நாளை வேலைக்கு வரலயா?

"இல்ல ராஜேஷ்,இதற்கு மேல் நான் இந்த வேலைக்கு வர மாட்டேன்.சென்னையை விட்டே போக போகிறேன்."

டேய் இவளுக்கு பயந்துகிட்டு நீ ஏண்டா வேலையை விட்டு போற,?

இல்ல ராஜேஷ்,சுஜிதாவாது நேரில் வந்து குறைந்தபட்சம் தன்னோட காதலை முறித்து விட்டு போனாள்.ஆனா இவ என் கண் முன்னாடி கூட வரல.அந்த அளவுக்கு இவகிட்ட நான் கெட்ட பேரை சம்பாதித்து இருக்கேன்.அதுவும் இவளை ரொம்பவே நேசித்து விட்டேன்.இங்கே இருந்தால் அவ ஞாபகமாகவே இருந்து நான் ஏதாவது என்னை பண்ணிக்கிடுவேன்.

ராஜேஷ் பதறி"டேய் வேண்டாம்டா"

"புரிஞ்சிக்க ராஜேஷ்,என் அம்மா மற்றும் தங்கைக்காக நான் உயிரோடு இருப்பது அவசியம்.இங்கே இருந்தால் என்னை தப்பான முடிவு எடுக்க வழி வகுக்கும்".அவன் மேலும் சில விசயங்களை கூற கூற ராஜேஷ் அதிர்ச்சியாகி நின்றான்.நான் கிளம்பறேன்டா

ராஜேஷ் ,ராஜா கூறுவதை கேட்டு தடுக்க முடியாமல் திகைத்து நின்றான்.தன்‌ உயிர் நண்பன் போவதை பார்த்து அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஆனால் சஞ்சனாவோ ராஜாவுக்காக அவன் ரூம் வாசலில் காத்து கொண்டு திரும்ப திரும்ப அவனுக்கு ஃபோன் அடிக்க அது ஸ்விட்ச் ஆப் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

[Image: IMG-20230817-WA0004.jpg]
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply
இந்த கதையை படிக்க மதியத்தில் இருந்து மணிக்கொருமுறை வந்து பார்த்துவிட்டு போகிறேன் நான் கதை எழுதுவதைவிட இக்கதை எனக்கு இன்பத்தை தருகிறது மனதளவில் இப்படி பட்ட பெண் மனைவியாக அமைவது கோடியில் சிலருக்கே அமையும் அது இக்கதையில் ராஜா கதாப்பாத்திரத்திற்கு அமையவிருப்பது சிறப்பு பொதுவாக பெண்கள் கதைகளில் அடுத்தவனிடம் கன்னித்தன்மை இழப்பது அடுத்தவரிடம் கள்ளத்தனமாக சேர்வது தான் அமைப்பார்கள் ஆனால் இக்கதை நாயகன் நாயகியுடன் சேர்வதற்காக நடக்கிறது அது தனிச்சிறப்பு இதற்கு முன்னதாக இத்தளத்தில் feelmystory நண்பர் எழுதிய கதை என் மனதை தொட்ட பொக்கிஷம் அதன் பிறகு இத்தளத்தில் நான் படிக்க ஆர்வம் காட்டுவது இக்கதையை தான் காமம் இல்லாத கதை வகைகளில் இக்கதையை மேலும் சில பாகங்களில் முடிக்காமல் அனைவருக்கும் நல்லது கெட்டது நடக்கும் படி முடித்தால் சிறப்பாக இருக்கும் கதாபாத்திரங்களை பாதியில் விட்டுவிடாமல் அனைத்து பாத்திரங்களுக்கும் முடிவுரை அமைப்பது தான் கதாசிரியரின் பெரிய விஷயம் எனது பல கதைகளை முடிவுரை அமைக்க முடியாமல் திணறிவருகிறேன் நண்பா அது போல தாங்கள் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
(22-08-2023, 09:25 PM)Natarajan Rajangam Wrote: இந்த கதையை படிக்க மதியத்தில் இருந்து மணிக்கொருமுறை வந்து பார்த்துவிட்டு போகிறேன் நான் கதை எழுதுவதைவிட இக்கதை எனக்கு இன்பத்தை தருகிறது மனதளவில் இப்படி பட்ட பெண் மனைவியாக அமைவது கோடியில் சிலருக்கே அமையும் அது இக்கதையில் ராஜா கதாப்பாத்திரத்திற்கு அமையவிருப்பது சிறப்பு பொதுவாக பெண்கள் கதைகளில் அடுத்தவனிடம் கன்னித்தன்மை இழப்பது அடுத்தவரிடம் கள்ளத்தனமாக சேர்வது தான் அமைப்பார்கள் ஆனால் இக்கதை நாயகன் நாயகியுடன் சேர்வதற்காக நடக்கிறது அது தனிச்சிறப்பு இதற்கு முன்னதாக இத்தளத்தில் feelmystory நண்பர் எழுதிய கதை என் மனதை தொட்ட பொக்கிஷம் அதன் பிறகு இத்தளத்தில் நான் படிக்க ஆர்வம் காட்டுவது இக்கதையை தான் காமம் இல்லாத கதை வகைகளில் இக்கதையை மேலும் சில பாகங்களில் முடிக்காமல் அனைவருக்கும் நல்லது கெட்டது நடக்கும் படி முடித்தால் சிறப்பாக இருக்கும் கதாபாத்திரங்களை பாதியில் விட்டுவிடாமல் அனைத்து பாத்திரங்களுக்கும் முடிவுரை அமைப்பது தான் கதாசிரியரின் பெரிய விஷயம் எனது பல கதைகளை முடிவுரை அமைக்க முடியாமல் திணறிவருகிறேன் நண்பா அது போல தாங்கள் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்

நன்றி நண்பரே உங்கள் பதிவுக்கு,ஒரு சின்ன விசயம்.என்னோட வேலை முடிய எப்போதும் மாலை 6 அல்லது 7 மணிக்கு மேல் ஆகி விடும்.அதற்கு மேல் தான் வந்து எழுதுகிறேன்.இரவு என் பதிவை தினமும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.இவர்கள் இருவரும் காமத்தினால் உடல் அளவில் இப்போது இணைந்தாலும் கதை இன்னும் சற்று நீண்டு அன்பினால் ஒன்றாக கடைசியில் இணைவார்கள்.இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கடைசி வரை வந்து தன் வேலையை சரியாக செய்யும்.ராஜாவின் முன்னாள் காதலி சுஜிதா முதல் இப்போ அறிமுகம் ஆன பாண்டி வரை அவரவருக்கு செய்கைகளுக்கு ஏற்ப பலன் பெறுவார்கள்.சஞ்சனா - சுஜிதா சந்திப்பும் நடக்கும்
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply




Users browsing this thread: 41 Guest(s)