♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Actually story epovo mudinchi nenachen
Anaah idly kadai akka vachi oru lead adi patta pambunu oru cinematic George oru pakkam
Nadathunhal unhal virunthai
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
clps உங்கள் கதை இப்பொழுது தான் நான் முழுமையாக படித்தேன் அப்பப்பா என்ன ஒரு ரசனை என்ன ஒரு காதல். அதேபோல உங்கள் கதையில் நீங்கள் அமைக்கும் காதல் கவிதைகள் மிகவும் அருமை சிறந்த தமிழ் சொல்லாக அமைகிறது. இவர்கள் காதல் அடுத்த கட்டம் என்ன இருக்கும் என்று ஆவலாக உள்ளேன். இன்றிலிருந்து உங்களுடைய ரசிகை நான்.. clps
[+] 1 user Likes am.rathimeena's post
Like Reply
 Episode -21

Flashback

ஐ லவ் யூ சஞ்சனா என்று ஜார்ஜ் கூறி பூவை கொடுக்க சஞ்சனா வாங்கி கொண்டு"கீதா அங்கே ரங்கோலி நடுவில் வைக்க ரோஜா கேட்டீயே , இந்தா இதை use பண்ணிக்க..."சஞ்சனா கோலம் போட்டு கொண்டு இருந்த அவளிடம் கொடுக்க

ஜார்ஜ் அதை பார்த்து கோபமா"சஞ்சனா அந்த ரோஜா உனக்கு,காதலின் சின்னமா உன்கிட்ட கொடுத்தேன்.அதை போய் நீ தரையில் வைக்கிற...."

ஜார்ஜ், நான் ராஜாவை காதலிப்பது உனக்கு தெரியுமா?

ம்,தெரியும் சஞ்சனா,அவன் உன் அழகுக்கும் அறிவுக்கும் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன்

நான் அவனை காதலிப்பது தெரிந்தும் நீ என்னிடம் வந்து காதலை சொல்லுகிறாய் பலே.இதில் இருந்தே தெரியுது நீ எவ்வளவு சுயநலம் பிடித்தவன் என்று"சஞ்சனா பதில் தாக்குதல் தொடுத்தாள்

ஜார்ஜ் உஷாரானான்.இவ மத்த பொண்ணுங்க மாறி கிடையாது.கொஞ்சம் வார்த்தையை கவனமாக தான் விடனும் என்று நினைத்தான்.

அப்படி இல்ல சஞ்சனா,நான் விரும்புற பொண்ணை ராணி மாறி வைச்சிக்க ஆசைப்படறேன்.நீ என் வீட்டை பார்த்து இருப்பே.என் அப்பா,அம்மா எல்லோரும் உன்கிட்ட எவ்வளவு அன்பா நடந்துகிட்டாங்க என்று உனக்கு தெரியும்.அந்த ராஜா கூட போன உனக்கு என்ன கிடைக்கும்?.மாச சம்பளத்தை நம்பி பிழைக்கும் அன்றாடங்காச்சி அவன்.ஒரு லோயர் மிடில் கிளாஸ் அவனால் உனக்கு பெருசா என்ன சுகத்தை கொடுக்க முடியும் சொல்லு.ஒரு கார் கூட வாங்க முடியாது அவனால்.கடைசி வரை நீ அவனுடன் வாடகை வீட்டில் தான் குடும்பம் நடத்தனும்.

ஓ...அப்போ உன் வீடு,வசதி,ஆடம்பரம் இவற்றை பார்த்து மயங்கி அவனை விட்டு உன்னுடன் வந்து விடுவேன் என்று நினைத்து தான் உன் பிறந்த நாள் விழாவிற்கு கூப்பிட்டே இல்ல.

ஜார்ஜ் பொறுமை இழந்து"சஞ்சனா இப்போ கூட நான் "ம்"என்று சொன்னால் என் பின்னால் வர நூறு பெண்கள் இருக்கிறார்கள்.என்னோட உயரம் என்னவென்று தெரியாம நீ பேசாத.ஒரு ஆர்டர் விட்டு கொடுத்தான் என்பதற்காக எல்லாம் அவனை காதலிப்பது எல்லாம் டூ மச் சஞ்சனா.நான் அப்படி அல்ல,நீ என்னை காதலித்தால் கிடைக்கும் சொகுசு வாழ்க்கையை கொஞ்சம் நினைத்து பார்.அவனை விட நான் இரண்டு ஆர்டர் விட்டு கொடுத்து உன்னை பரிசு வாங்க வைத்துள்ளேன்.

அவனும்,நீயும் ஒண்ணா ஜார்ஜ்,அவன் நான் யாரென்றே தெரியாம ,எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்த உதவிக்கும்,விட்டு கொடுத்தால் நான் கிடைப்பேன் என்று பிரதிபலனை எதிர்பார்த்து நீ செய்த உதவிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.உன்னால் வாங்கிய பரிசு,உன் மேசை டிராயரில் தான் இருக்கு போய் எடுத்துக்கோ.இன்னொன்னு புரிஞ்சிக்க .நான் ராஜாவை காதலிப்பது அந்த ஒரு காரணம் மட்டுமல்ல, எங்களுக்குள் 7 வருஷ பந்தம் இருக்கு.அதை நானே அவனுக்கு இன்னிக்கு தான் சொல்ல போறேன்.

ஜார்ஜ்"வீடு, கார்,ஒழுங்கான படிப்பு இது எதுவும் இல்லாத அந்த பிச்சைக்காரனை நம்பி போனால் நீயும் பிச்சை தான் எடுக்கணும் சஞ்சனா.

"Mind your words ஜார்ஜ்,இன்னொரு தடவை அவனை பற்றி தப்பா ஏதாவது பேசின அவ்வளவு தான்.அவன் கால் தூசிக்கு சமம் ஆக மாட்டே நீ எல்லாம்.அவன் கிட்ட நீ நினைக்கிற மாறி காசு இல்ல தான்.ஆனால் தன்னால் முடிந்த அளவு தினமும் முடியாதவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கிறான்.ஆனா நீ ஒரு பிச்சைகாரனுக்கு 5 பைசா கூட போட மாட்டே.உன்னை மாதிரி அப்பா,அம்மா சம்பாதித்து வைத்த காசில் வளர்ந்தவன் கிடையாது அவன். தன்னோட சுய முயற்சியில் வளர்ந்தவன்.எனக்கு அவன் கூட வாடகை வீட்டில் இருந்தால் கூட சந்தோஷம் தான்.இந்த கார்,வீடு இது எதையும் எதிர்பார்த்து நான் அவனை காதலிக்கல.

"சஞ்சனா, நான் சொன்னதால் தான் டீம் மெம்பர் எல்லோரும் உன்கிட்ட பேச ஆரம்பித்து இருக்காங்க.ஞாபகம் இருக்கட்டும்."

ச்சீ போடா,எனக்கு நீங்க யாருமே பேசவில்லை என்றாலும் எனக்கு கவலை கிடையாது.ராஜா ஒருத்தன் போதும்.அவனுக்காக நான் எதையும் இழக்க தயார்.

சஞ்சனா உனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தப்ப நான் தான் உன்னை காப்பாற்றினேன் தெரியுமா?

சஞ்சனா அதை கேட்டு வாய் விட்டு சிரித்தாள்.

என்ன அந்த கஸ்டமர் வந்து சத்தம் போட்டதை பற்றி சொல்றியா.

ஆமாம்.

அங்க தான் நீ என்கிட்ட வந்து மாட்டிகிட்ட ஜார்ஜ்.நீ என்னவனின் மூக்கை கிரிக்கெட் போட்டியில் வேண்டும் என்றே உடைத்ததற்கு உன்னை பழிவாங்க காத்து கொண்டு இருந்தேன்.சரியா நீயும் வந்து மாட்டின.எப்படி எப்படி ...நீயே உன் உறவினரை கால் பண்ண சொல்லி enquiry கொடுக்க வைத்து,அதை என் Basket இல் போட வைத்து ,என்னை அவரிடம் பேச வைத்து ,வேண்டும் என்றே அவரை பொய் சொல்ல வைத்து என்னை மாட்டி விட்டு நீ காப்பாற்றுவது போல் சூப்பராக நடித்தாய் ஜார்ஜ்.ஒரு சூப்பர் நாடகம் நடத்தின.
பிளான் எல்லாம் நல்லா தான் போடற,ஆனா கடைசியில் கோட்டை விடுகிறாயே.நான் கஸ்டமர் கிட்ட பேசிய call recording கேட்டா போதும் யார் மீது தவறு என்று.அதை எடுப்பதா எனக்கு சிரமம்.இதில் முட்டாள் மாறி , install பண்ணும் டெக்னீஷியன் கிட்ட என்னோட உறவினர் வீடு தான்,கொஞ்சம் நல்லா install பண்ணி கொடு என்று உன்னை நீயே வேற போட்டு கொடுத்துகிட்டே. நீ பண்ணின தில்லு முல்லு,எல்லாவற்றையும் ஆதாரத்தோடு call recording ,டெக்னீஷியன் கிட்ட எல்லா தகவலையும் வாங்கி நாராயணன் சார் கிட்ட மெயில் அனுப்பி ஆச்சு.இன்னும் கொஞ்ச நேரத்தில் ராஜா வந்து என்கிட்ட உன் முன்னாடி அவன் காதலை சொல்ல போறான்.நானும் அவன் காதலை ஏற்று கொள்ள போகிறேன்.ஒரே நேரத்தில் உனக்கு இரு தண்டனை.

துர்கா குறுக்கே "ராஜா வந்துட்டு போய்ட்டான்‌ சஞ்சனா "

எப்பக்கா?..

இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி சஞ்சனா,நீ ஜார்ஜ் கிட்ட இருந்து பூவை வாங்குவதை பார்த்து கண்ணில் கண்ணீரோடு திரும்பி போய்ட்டான்.

அப்பொழுது நாராயணன் சார்,சஞ்சனா,ஜார்ஜ் இருவரையும் தன் அறைக்கு உடனே வர சொன்னதாக ஆள் அனுப்பினார்.

நாராயணன்(vp)சார் அறையில்

நாராயணன் இருவரிடம்"சஞ்சனா,நான் உன் மெயிலை பார்த்தேன்.இதை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கு நன்றி.ஜார்ஜ் நீ இந்த மாறி கம்பனி பேரை உன்னோட சுயநலத்திற்காக damage பண்ணுவது மன்னிக்க முடியாத குற்றம்.நான் உனக்கு உடனே warning லெட்டர் hr மூலமா issue பண்ண சொல்லி இருக்கேன்.அடுத்த financial year வரை நீ அடுத்த லெவல் போக முடியாது.இன்னொரு தடவை இந்த மாதிரி நடந்தால் உன்னோட வேலையை உடனடியாக இழக்க நேரிடும்.மேற்கொண்டு நீ எங்கும் வேலை பார்க்க முடியாத படி உன் கேரியரில் பிளாக் மார்க் வந்து விழும்.This is the last warning.

சஞ்சனா தன் முயற்சியில் வெற்றி அடைந்து வெளியே வர,ஜார்ஜ் மனதில் மேலும் ராஜா,சஞ்சனா மேல் வன்மம் வளர்ந்து பற்றி எரிந்தது.

சஞ்சனா அவனை பார்த்து,இங்க பாரு ,ராஜா நேரடியாக மட்டும் மோதுவான்.அப்புறம் போன போகுது என்று அப்படியே மறந்து விட்டு விட்டு போய்டுவான்.ஆனா சஞ்சனா மறக்கவும் மாட்டாள், போனால் போகுது என்று விடவும் மாட்டாள்.சந்தர்ப்பம் வரும் வரை பொறுமையா இருந்து சரியா உன்னை சிக்க வைச்சு எப்போ,எப்படி உன்னை பழி வாங்குவேன் என்று உனக்கு தெரியாது.விளைவுகள் ரொம்ப மோசமாய் இருக்கும்.கொலையும் செய்வாள் பத்தினி என்று தான் கேள்விப்பட்டு இருப்பே.ஆனால் ராஜாவுக்காக இந்த சஞ்சனா எதையும் செய்வாள் என்று எச்சரித்து விட்டு சென்றாள்.

இது தான் நடந்தது என்று சஞ்சனா சொல்ல, கேட்டு ராஜா அயர்ந்து போனான்.

"என்ன சஞ்சனா இப்படி பண்ணிட்டே,அவனுக்கு இன்னும் கொஞ்ச நாளில் steps.அவன் அடுத்த லெவலுக்கு போய் இருக்க முடியும்."

ராஜா எனக்கு தீங்கு செய்தால் போனால் போகுது என்று மன்னித்து விட்டுடுவேன்.ஆனா உனக்கு எதுனா தீங்கு நினைச்சா நான் சும்மா கூட இருக்க மாட்டேன்.அதை விடு உன் ஸ்டெப்ஸ் ரிசல்ட் எப்போ வருது.

ம்ம்.அது இன்னும் கொஞ்சம் லேட் ஆகும் என்று நினைக்கிறேன் சஞ்சு.எப்படியும் பதினைந்து நாளாவது ஆகும்.

சரி சரி நேற்று நீ சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லு,நான் என் காதால் அந்த வார்த்தையை கேட்கணும்.

ஐயோ இப்போ என்கிட்ட கிரீட்டிங்ஸ் கார்டும் இல்ல,பூவும் இல்லையே.ம் ஒரு நிமிஷம் சஞ்சனா,வேகமாக உள்ளே சென்றான்.
ஒரு பேப்பரை எடுத்து மடமடவென அவள் உருவத்தை வரைந்தான்.


[Image: IMG-20230811-WA0000.jpg]





அவள் முன்னே ஒரு கால் மடித்து உட்கார்ந்து அவள் படத்தை அவளிடமே நீட்டி"கண்மணி உன் தாமரை முகத்தை விட அழகான வாழ்த்து மடல் ஒன்று இந்த உலகிலே கிடையாது.அன்பே..!எந்தன் காதல் சொல்ல ஒரு கணம் போதுமே,அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே.எனக்கு அந்த வாய்ப்பை தருவாயா?I love you as forver " என்று சொல்ல அவள் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்து அவனை அள்ளி கட்டி கொண்டாள்.
இந்த ஒரு நிமிஷத்துக்காக தான் நான் இவ்வளவு நாள் காத்திட்டு இருந்தேன் என்று அவன் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தாள்.
அவள் முகத்தை அவன் ஒரு விரலால் தூக்கி,அவள் கண்ணை பார்த்து "என் சுட்டு விரல் உன் பூ மேனியில் பட்டவுடன் இதழில் வழியும் தேனை ருசிக்கவா"என்று அவன் கேட்க

ச்சீ போடா என்று அவள் வெட்கப்பட்டு ஓட, ராஜா அவள் கையை எட்டி பிடித்தான்.அவள் இதழோடு இதழ் கலக்க அவன் முகத்தை கொண்டு வர அவள் கண்களை மூடினாள்.இருவர் இதழ்களும் சந்தித்தன.இருவரும் யார் இதழில் சுவை அதிகம் என தேடி மெய்மறந்து இருவரும் முத்தம் தர,

எங்க ரெண்டு பேரை கீழே விளக்கு பிடிக்க வைச்சிட்டு மேல ரெண்டு பேரும் ரொம்ப நேரமா என்னடா பண்றீங்க என்ற ராஜேஷ் குரல் கேட்டு இருவரும் அவசரமாக விலகினர்.

நம்மை ரெண்டு பேரை பிரிப்பதற்கே வந்து விடுவாங்க உங்க பிரண்ட்ஸ் என சஞ்சனா மனதுக்குள் பொருமி கொண்டே "டேய் நான் தான் ஃபோன் பண்ற வரைக்கும் யாரும் மேலே வரக்கூடாது என்று சொன்னேன் இல்ல."என ராஜாவின் நண்பர்களை அதட்டினாள்.

இல்ல சஞ்சனா,வாசுவோட பேக் மேல இருக்கு.எடுத்துட்டு போலாம் என்று வந்தோம்.ராஜா....கொஞ்சம் முகத்தை இந்த பக்கம் திருப்பு.என்ன வழக்கத்திற்கு மாறாக உன் உதடு சிவந்து இருக்கு.இரத்தம் வேற வருது.

அது வந்து ஒன்னும் இல்லடா, உன் கண்ணில் பிரச்சினை எதுனா இருக்கும்.போய் கண் டாக்டரை பாரு.

இல்லை இல்லை என் கண் நல்லா தான் இருக்கு ,வாசு நீ பார்த்து சொல்லு.அவன் உதடு சிவந்து தானே இருக்கு

டேய் ராஜேஷ், உன் கண்ணு தான் சரியில்ல.உதட்டில் மட்டும் இல்ல,அவன் முகம் முழுக்க தான்டா அங்கங்கு சிவந்து இருக்கு

சஞ்சனா உடனே"டேய் இப்போ ரெண்டு பேருக்கும் என்னடா தெரியணும்.நான் தான் அவனுக்கு முத்தம் கொடுத்தேன் போதுமா?

ஏன் சிஸ்டர்,இரத்தம் வர்ற அளவுக்கா இப்படி வன்முறை முத்தம் கொடுக்கறது?

"அது எங்க ரெண்டு பேரு சம்பந்தப்பட்டது,நான் ஒரு விசயம் உங்க ரெண்டு பேர்கிட்ட கேட்கணும்.ஒழுங்கா உண்மையை சொல்லுங்க."
சஞ்சனா பக்கத்தில் உள்ள கம்பை எடுத்து கொண்டு "நான் ராஜா மொபைலுக்கு ஃபோன் பண்ணும் போது அவ என்ன சொல்ல போறா,என்னை மறந்து விடு,உனக்கு வேறு ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா என்று தான் நான் சொல்வேன் என்று சொல்லி போனை கட் பண்ணினது யாரு"என்று கேட்க

ராஜேஷ் உடனே "அது நம்ம வாசு தான் சஞ்சனா"

ஓ அது நீ தானா,அப்புறம் ரெண்டாவது தடவை ஃபோன் பண்ணும் போது சஞ்சனாவை விட ஆயிரம் மடங்கு அழகிகளை கொண்டு வந்து லைனில் நிப்பாட்றேன்,நீ பொறுக்கிக்க என்று சொன்னது யாருடா

"அதுவும் நம்ம வாசு தான் சஞ்சனா"ராஜேஷ் உடனே பதில் சொல்ல

ஓ எல்லாமே சார் தானா,கொஞ்சம் முன்னாடி வந்து நில்லுங்க சார்.

வாசு ராஜேஷ் காதில்"டேய் நானா இதெல்லாம் சொன்னேன்."

"ஆமாடா நீ தான் பேசின"

வாசு மனதில்"அய்யயோ இந்த சரக்கு உள்ளே போய்ட்டா நான் என்ன பேசறேன் என்றே எனக்கு தெரியல.ரொம்ப கொடூரமா இல்ல பேசி இருக்கேன்.அடைமழை வெளுத்து வாங்க போகுது வாசு உடம்பை ரெடி பண்ணிக்க,"

சிஸ்டர் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.வன்முறை எல்லாம் கையில் எடுக்க கூடாது.அதுவும் நான் ஏற்கனவே காலையிலேயே உங்க கிட்ட அடி வாங்கிட்டேன்.இதுக்கு மேல இந்த பாடி தாங்காது.

டேய் அது அவனுக்கு சரக்கு ஊற்றி கொடுத்ததுக்கு விழுந்த அடி,சஞ்சனா அவன் காலில் ரெண்டு அடி போட,

சிஸ்டர் போதும் என்னை விட்டுடுங்க,அப்புறமா நடக்கறதே வேற

அப்புறம் என்னடா பண்ணுவ,

வாசு செத்துருவான் சிஸ்டர்,நீங்க அடிக்கிற அடி எல்லாம் இந்த பாடி தாங்காது.அப்புறம் நீங்க கொலை கேஸில் வீணா உள்ளே போக வேண்டி இருக்கும்.

ராஜேஷ் சஞ்சனாவை பார்த்து,ஓகே சிஸ்டர் உங்களை வீட்டில் விட்டுட்டு நாங்க ராஜாவை வெளியே கூட்டிட்டு போறோம்.

சஞ்சனா ராஜாவை கட்டி கொண்டு"முடியாது அவன் இன்னிக்கு முழுக்க என் கூட தான் இருப்பான்.நீங்க வெளியே போங்கடா"

சிஸ்டர் அவனுக்கு எப்பவுமே நாங்க தான் ஃபர்ஸ்ட்.அதுக்கு அப்புறம் தான் நீங்க,நீயே உன் வாயாலேயே சொல்லு மச்சான்.

ராஜா கட்டி கொண்டு இருந்த சஞ்சனா குளிர் நிலவு முகத்தை ஒரு நிமிடம் பார்த்து"டேய் ராஜேஷ் இன்னிக்கு ஒருநாள் என் கூட இருக்கணும் என்று அவ ஆசைபடுறா.நான் வேணா நாளை"

சஞ்சனா உடனே சந்தோஷத்தில் ராஜாவுக்கு முத்தம் கொடுக்க

"டேய் வாசு நைட் ஷோ ஆரம்பம் ஆயிடுச்சு,இதுக்கு மேல நாம எல்லாம் அவன் கண்ணுக்கு தெரிய மாட்டோம் வா கிளம்பலாம்,டேய் ராஜா பொண்டாட்டி ஆகாத காதலியை தாயாக மட்டும் ஆக்காம பார்த்துக்க"என்று ராஜேஷ் சொல்லி விட்டு ஓட

"ச்சீ போங்கடா பொறுக்கிஸ்"சஞ்சனா அவனை வெட்கபட்டு மேலும் அவள் மாங்கனிகள் நசுங்க இறுக்கி கட்டி கொண்டாள்.

[Image: IMG-20230809-WA0008.jpg]





இவர்களது சந்தோஷம் நீடிக்குமா.?அடிவாங்கிய பாம்பு சும்மா 
இருக்குமா ?ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எவ்வளவு துன்பம் வந்தாலும் சஞ்சனா ராஜாவை விட்டு கொடுக்க போவது இல்லை.அடுத்தடுத்த பகுதிகளில்
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
super update
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
(15-08-2023, 07:52 PM)krishkj Wrote: Actually story epovo mudinchi nenachen
Anaah idly kadai akka vachi oru lead adi patta pambunu oru cinematic George oru pakkam
Nadathunhal unhal virunthai

இதற்கு மேல் தான் நண்பா,முக்கிய கதையே ஆரம்பமாக உள்ளது.கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த கதை முடிவு இருக்கும்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(15-08-2023, 08:18 PM)am.rathimeena Wrote: clps உங்கள் கதை இப்பொழுது தான் நான் முழுமையாக படித்தேன் அப்பப்பா என்ன ஒரு ரசனை என்ன ஒரு காதல். அதேபோல உங்கள் கதையில் நீங்கள் அமைக்கும் காதல் கவிதைகள் மிகவும் அருமை சிறந்த தமிழ் சொல்லாக அமைகிறது. இவர்கள் காதல் அடுத்த கட்டம் என்ன இருக்கும் என்று ஆவலாக உள்ளேன். இன்றிலிருந்து உங்களுடைய ரசிகை நான்.. clps

நன்றி தோழி.இந்த மாதிரி கருத்துக்கள் தான் என்னை போன்ற கதை எழுதும் நபர்களுக்கு உற்சாகமாக அமைந்து மேலும் எழுத தூண்டுகிறது.தங்கள் விமர்சனம் எதுவாக இருந்தாலும் கூறுங்கள்.நன்றி
Like Reply
யார் வெற்றி பெறுவர் ஆட்டம் அருமை நண்பா அருமை
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Sanjana characters very impressive bro, waiting for next episode eagerly
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
Very nice
[+] 1 user Likes Kartikjessie's post
Like Reply
First I disappointed in your story.but now I started to like very much
[+] 1 user Likes அசோக்'s post
Like Reply
(15-08-2023, 08:33 PM)Deepak Sanjeev Wrote: super update

Thank you bro
Like Reply
(15-08-2023, 09:19 PM)mahesht75 Wrote: super update

நன்றி நண்பா
Like Reply
(15-08-2023, 10:59 PM)omprakash_71 Wrote: யார் வெற்றி பெறுவர் ஆட்டம் அருமை நண்பா அருமை

இன்று தெரியும் நண்பா
Like Reply
(16-08-2023, 10:09 AM)M.Raja Wrote: Sanjana characters very impressive bro, waiting for next episode eagerly

Thank you
Like Reply
(16-08-2023, 01:36 PM)Kartikjessie Wrote: Very nice

Thank you
Like Reply
(16-08-2023, 09:22 PM)அசோக் Wrote: First I disappointed in your story.but now I started to like very much

நன்றி நண்பா
Like Reply
 Episode -22

சஞ்சனா ஒரு முக்கியமான விசயத்தை நீ சொல்ல மறந்துட்ட?என்னை ஏழு வருஷத்துக்கு முன்பே எப்படி தெரியும்?,இப்போ சொல்லு.!

நான் மறப்பேனா,உனக்கு ஞாபகம் வரட்டும் என்று அப்பப்ப என் விரலில் உள்ள மோதிரத்தை காட்டினேன்.இப்பவாவது ஞாபகம் வருதா என்று பாரு.

ராஜா உதட்டை சுழித்து, ஞாபகமே வரல சஞ்சனா.

இந்த மோதிரம்,ஒரு பேஷண்ட் பெங்களூரில் நீ அட்மிட் பண்ணப்ப கவுண்டரில் கொடுத்தது.

அப்போ அவரோட அந்த பொண்ணு நீதானா.!

ஆமா,எங்கப்பாவை காப்பாற்றிய காரணத்திற்காக மட்டும் நான் உன்னை லவ் பண்ணல.உன்னை எப்படியாவது பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது.ஆனால் உன்னை எப்போ நேரில் திரும்ப ஆபீஸில் பார்த்தேனோ,அந்த ஏழு வருட ஏக்கம் காதலா மாறிடுச்சு. ஆமா இந்த மோதிரத்தை அடிக்கடி உன் முகத்துக்கு நேரா பலமுறை காட்டினேனே அப்ப கூட உனக்கு ஞாபகம் வரலையா.

இல்ல சஞ்சனா,அந்த மோதிரத்தை செலக்ட் பண்ணினது என் தங்கை.அதுவும் அவசர அவசரமாக வாங்கினது.அது எப்படி இருக்கும் என்று சரியா கூட நான் பார்க்கல.அதனால் தான் எனக்கு ஞாபகம் இல்ல.

நான் முதலில் உன்னை பார்க்கும் போது இந்த மோதிரத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும் என்று தான் நினைத்தேன்.ஆனா இப்போ நான் கொடுக்க மாட்டேன்பா.இது என்னவன் கிட்ட இருந்து கிடைச்ச முதல் கிஃப்ட்.

அப்படியா.!வைச்சுக்க.என்றாவது என்னவளிடம் போய் சேர வேண்டியது தானே.

அப்பொழுது கண்ணாடியில் தொங்கவிடப்பட்ட செயினை பார்த்த சஞ்சனா,"டேய் இந்த செயின் எப்படி உனக்கு கிடைச்சது."

இதுவா பெங்களூரில் உங்க அப்பாவை அட்மிட் பண்ண மோதிரம் கொடுத்து விட்டு வந்தேன் இல்ல,அப்போ மீண்டும் கடன் வாங்கி கொண்டு மோதிரம் வாங்க வந்தேன்.அப்போ இந்த செயினை பார்த்த உடனே என்னை ஏதோ ஈர்த்துச்சு.நல்ல வேலை அந்த நகையை யாரோ அடகு வைக்காம வித்துட்டு போய் இருந்தாங்க.என்கிட்ட போதுமான பணம் இருந்ததால் மோதிரம் வாங்காம இந்த செயினை வாங்கிட்டேன்.இந்த செயின் எனக்கு ரொம்ப ராசி தெரியுமா?இது வந்த உடனே நான் ஆசைப்பட்ட வேலை கிடைச்சது.என் தனிப்பட்ட வாழ்க்கையில் இழப்பு ஏற்பட்டாலும் என்னோட வேலை எல்லாமே நன்றாக செல்ல காரணம் இந்த செயின் தான்.இந்த செயினை எனக்கு ரொம்ப பிடிக்கும்,நான் இருக்கிற வேலையோ வெளியில் சுத்துற வேலை.ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது என்பதால் நான் போட மாட்டேன்.இங்கேயே வைத்து இருப்பேன்.அப்படி இல்லை என்றால் பர்ஸில் பத்திரமாக வைத்து இருப்பேன்.

சஞ்சனா அந்த செயினை எடுக்க கண்ணில் கண்ணீர் வந்தது.

டேய் இந்த செயின் என்னோடது.என் அம்மா எனக்கு ஆசையா போட்டது.அவங்க ஞாபகமாக வைத்து இருந்தேன்.என்னோட அப்பா ஆபரேஷனுக்காக தான் நான் பெங்களூரில் விற்றேன்.கொஞ்ச நாள் கழித்து திரும்ப வாங்க அதே கடைக்கு போகும் போது அதை அப்பவே விற்று விட்டதாக சொன்னார்கள்.ஆனால் உன்கிட்ட தான் வந்து இருக்கு.

பாரேன் சஞ்சனா,நமக்குள்ள செம wave length ஓடிட்டு இருக்கு.உன் அம்மா உனக்கு ஆசையா கொடுத்த செயினை எடுத்துக்கோ.

"இல்ல,இந்த செயின் என் அம்மாவுக்கு என்கிட்ட இருப்பதை விட,அவங்க மருமகன் கிட்ட இருப்பது விருப்பம் போல இருக்கு.இது உன்கிட்டேயே இருக்கட்டும்.ஆனா இதுக்கு மேல் தினமும் உன் கழுத்தில் தான் இருக்கணும்" என்று அவன் கழுத்தில் அணிவித்தாள்.
டேய் நேற்று நீ வேற என்கிட்ட கோவிச்சிட்டு போய்ட்ட,நான் இரவில் இருந்து சாப்பிடவே இல்லை தெரியுமா.ரொம்ப பசிக்குதடா"

என் செல்லத்துக்கு வேற ரொம்ப பசிக்குது,இங்கே கொஞ்ச தூரத்தில் மாலா அக்கா கடை இருக்கு.அங்கே போய் சாப்பிடலாம்.

சிவன் பார்க் அருகே போடப்பட்டு இருந்த ஒரு தள்ளுவண்டி கடைக்கு ராஜா அவளை கூட்டி செல்ல,அதை பார்த்து சஞ்சனா ஆச்சரியம் அடைந்தாள்.ராஜா உணவகம் என்று எழுதி இருந்தது.

"வா ராஜா வா என்ன இன்னிக்கு லேட்"மாலா அக்கா அன்புடன் வரவேற்க,

எல்லாம் இந்த தேவதையால் தான் அக்கா,அப்புறம் முக்கியமான விசயம் இந்த தேவதை தான் என்னை காலம் முழுக்க ஆள பிறந்தவள்.

அப்படியா வாழ்த்துக்கள்,உன் நல்ல மனசுக்கு உண்மையாவே தேவதை தான் கிடைச்சு இருக்கா.

டேய் என்னடா உன் பேர் வச்சு இருக்கு.

அதுவா நான் ஒரு உதவி செய்தேன் அதுக்காக அவங்க என்மேல உள்ள அன்பினால் வச்சி இருக்காங்க.என்ன உதவி என்று கேட்காதே.செய்த உதவியை எப்பவும் சொல்லி காட்ட கூடாது.

"அக்கா பாப்பா நல்லா இருக்கா,"ராஜா கேட்டான்.

"நல்லா இருக்கு ராஜா,ஸ்கூல் திறந்து 2 மாசம் ஆச்சு.இந்த ஸ்கூலில் தான் இன்னும் புக் கொடுக்காம இருக்காங்க.ஆனால் வெளியே கள்ள சந்தையில் எல்லாம் விலைக்கு ஈசியா கிடைக்குது.என்ன பண்றதுன்னே புரியல."

கவலைபடாதே அக்கா,நான் நாளைக்கு DPI வழியா தான் போறேன்.வரும் போது கண்டிப்பாக பாப்பாவுக்கு புக்ஸ் வாங்கிட்டு வரேன்.

சரி ராஜா.

பாப்பா ஏழாவது தானே படிக்குது.

இல்லப்பா இந்த வருஷம் எட்டாவது.

ம்,மடமடவென்று பாப்பா வளர்ந்துடுச்சு அக்கா.

ஆமாம்,அவ வேற அடிக்கடி ஏன் ராஜா மாமாக்கு கல்யாணம் ஆகல என்று கேட்குது.பொண்ணு கிடைக்கலனா சொல்லு,இன்னும் கொஞ்ச நாளில் சீக்கிரமா வளர்ந்து நானே கட்டிக்கிறேன் என்று சொல்லுது.

அதுக்கென்னக்கா கட்டிக்கிட்டா போச்சு,என்ன சஞ்சனா உனக்கு ஓகே தானே!

"உதை விழும் படுவா" என்று அவள் அவன் காதை திருகினாள்.

அப்பொழுது ராஜாவின் மொபைலுக்கு அழைப்பு வர,"அய்யயோ நான் இவளுக்கு வேற காலையில் இருந்து ஃபோன் பண்ணவே இல்லையே.கண்டிப்பா திட்ட போறா"

"யாருடா ஃபோன்ல"சஞ்சனா கேட்க

"உன்னோட வில்லி"

"என்னது என்னோட வில்லியா"

"ஆமா பேசிட்டு வந்து சொல்றேன்."
ராஜா அந்த பக்கம் நகர

மாலா அக்கா சஞ்சனாவிடம் பேச்சு கொடுத்தாள்.

ஒரு நல்ல பையனை தான் தேடி பிடிச்சு இருக்கே.

சஞ்சனா வெட்கத்தில் குனிய

ஏன் அவன் பேரில் கடை இருக்கு என்று கேட்டே இல்ல,அதை சொல்ல வேண்டும் என்றால் என்னோட கடந்த கால வாழ்க்கையை பற்றி சொல்ல வேண்டி இருக்கும்.அது ஒன்னும் ஒழுக்கமான வாழ்க்கை கிடையாது.அதனால் அவன் சொல்ல மாட்டான்.எல்லோரும் என் உடம்பை மட்டும் பார்த்தாங்க.ஆனா அவன் மட்டும் தான் என்னை ஒரு அக்காவாக பார்த்தான்.ஆமா நான் ஒரு விபச்சாரி.ஒருநாள் நான் கைது செய்யப்பட்டு ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்தப்ப என்னோட குழந்தை அழுதுக்கிட்டு வெளியே நின்னுட்டு இருந்துச்சு.அவன் அந்த ஸ்டேஷன் sub இன்ஸ்பெக்டரை வேலை விசயமாக பார்க்க அடிக்கடி வருவது வழக்கம்.அப்போ அழும் என் குழந்தையை அவன் தான் சமாதானப்படுத்தி ஒரு நாள் முழுக்க அவன் வைத்து இருந்தான்.மறுநாள் கோர்ட்டில் எனக்காக காசு கட்டி வெளியே கொண்டு வந்துட்டு "அக்கா இந்த தொழில் செய்வது எல்லாம் தப்பு."என்று சொல்ல அதற்கு நான்"எனக்கு வேற வழி தெரியலப்பா,என்னோட குழந்தைக்காக உடம்பை விக்க வேண்டியதா இருக்கு."என்று சொன்னேன்.அப்புறம் அவன் தான் அவன் கம்பனியில் house keeping வேலை வாங்கி கொடுத்தான்.என்கிட்ட கொஞ்ச கூட தயக்கம் இல்லாம தம்பி மாறி சகஜமா பழகுவான்.ஒரு நாள் நான் எடுத்த வந்த இட்லியை சாப்பிட்டு விட்டு "அக்கா சூப்பரா இருக்கு,நீங்க இட்லி கடை போட்டால் சூப்பரா போகும் என்றான்.நான் அதற்கு அவ்வளவு காசுக்கு எங்கேப்பா போவேன் என்று கேட்க, அவன் எப்படியோ லோன் செக்சனில் இருந்த அவன் ஃப்ரெண்ட்ஸ் ஐ பிடிச்சு எப்படியோ லோன் வாங்கி இந்த கடையும் வைத்து கொடுத்து விட்டான்.தில்லு முல்லு பண்ணி தான் லோன் வாங்கி கொடுத்தான்.இதுவரை லோன் சரியாக கட்டி விட்டேன்.இன்னும் ஆறு மாதம் இருக்கு.நான் இப்போ என் குழந்தையோட சந்தோசமாக வாழ்கிறேன்‌ என்றால் அது அவனால் மட்டும் தாம்மா.அந்த அன்பினால் தான் நான் இந்த கடைக்கு அவன் பெயரை வைச்சேன்.நீ அவனுக்கு மனைவியாக வர போறே,அவனை பற்றி உனக்கு எல்லா விசயமும் தெரிய வேண்டும் என்பதால் தான் நான் வெட்கம் விட்டு என்னோட கடந்த கால வாழ்கையை உன்கிட்ட மட்டும் சொன்னேன்.

சஞ்சனா அவனை பெருமையுடன் பார்க்க,அவன் இன்னும் போனில் பேசி கொண்டு இருந்தான்.

பேசி முடித்து விட்டு வர,யாருடா எனக்கு அந்த வில்லி? என்று சஞ்சனா கேட்க,

உனக்குதாம்மா அவ வில்லி,எனக்கு இல்ல.என்னோட குட்டி ராட்சசி. நாளை மறுநாள் சென்னை வருகிறாளாம்.உன்னிடம் அவளை அறிமுகப்படுத்த போகிறேன்.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு:
இந்த பதிவில் வரும் மாலா அக்கா,மற்றும் இன்ஸ்பெக்டர் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.பின்பு ராஜாவுக்கு நடக்க போகும் சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் மாலா அக்கா தொடர்புபடுத்தி கதை வரும்.

அன்று முழுவதும் இருவரும் மால்,சினிமா உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

டேய் இதுவரை நீ என் வீட்டுக்குள் வந்ததே இல்ல.இப்போ வா.

வரலாமே என்று சொல்லி விட்டு ராஜா உள்ளே வர,

வீடு சின்னதா இருந்தாலும் உன் கைவண்ணத்தில் ரொம்ப அழகா இருக்கு சஞ்சனா. எங்கே உன் அப்பா இல்லையா?

அவர் வெளியூருக்கு போய் இருக்கார்.அடுத்த வாரம் வந்து விடுவார்.

அப்போ வீட்டில் யாரும் இல்லையா?

ம்ஹீம் யாரும் இல்லை

வாவ்,அப்போ இது தான் சரியான சந்தர்ப்பம்.

எதுக்கு?

ஒரு perfect கிஸ் உன்னிடம் வாங்க,

டேய் திருட்டு பூனை கிட்ட வராதே,

ராஜா நெருங்கி வர,சஞ்சனா பின்னோக்கி செல்ல சுவற்றில் முட்டி கொண்டாள்.

டேய் காலையில் தானே உனக்கு தானே கொடுத்தேன், மறுபடியுமா?

சஞ்சனா பக்கவாட்டில் நகர,சுவற்றில் கை வைத்து தடுத்தான்.அவள் நெற்றியில் சரிந்த முடியை ஒற்றை விரலால் விலக்கி ஒரு முத்தம் வைத்து விரலால் அவள் முகத்தில் நெற்றியில் இருந்து நாசி வழியே நேராக அவள் இரு இதழ்களை விரலால் வருடி,
தினமும் காலையில் சூரியன் உதிக்கும் போது சூரியன் புதுசு தான்,அதுபோல உன் இதழை ஒவ்வொரு முறை சுவைக்கும் போதும் புது தேன் அல்லவா சுரக்குது.இந்த தேனுக்கு ஈடான சுவை இந்த உலகில் எங்குமே கிடையாது....! .

ம்.இந்த தேன் உனக்காகவே உருவாகியது ராஜா..சஞ்சனா வெட்கத்தில் தலை கவிழ 

அப்போ நான் எப்ப நினைத்தாலும் பருகலாம்?

ம் ,தடை ஏதும் இல்லை?வெட்கத்தில் அவள் கன்னம் சிவக்க

மீண்டும் இருவரும் இதழில் இதழ் கலந்தனர்.அவள் ஆரஞ்சு சுளை உதடுகள் அவன் உதட்டோடு கலந்தது. அவளின் பூ இதழாலும் பொன் இதழாலும் தேனை அள்ளி தெறிக்க அவன் ஆசை தீர பருகினான். அவன் கைகள் அவள் தோளில் இருந்து இறங்கி அவள் இடையை அழுத்தியது.அவள் அவன் பின்னந்தலையை மலர்கரத்தால் பின்னி கொண்டு முத்தத்தை வழங்கினாள்.அவன் நாக்கை அவள் உதட்டு பிளவுக்குள் நுழைக்க,எந்த வித தடையும் இன்றி அவள் வரவேற்றாள்.அவள் நாக்கின் நுனியை தொடவும் இருவருக்கும் எலக்ட்ரிக் ஷாக் உடல் முழுக்க பாய்ந்தது.அவன் நாக்கு அவள் நாக்குடன் வாய்க்குள் கபடி விளையாடியது.அடுத்து அவள் நாக்கு அவன் வாய் எல்லைக்குள் புகுந்து ஓடி பிடித்து கபடி விளையாடி அவன் நாக்கை தொட்டு வெற்றி கண்டது.இப்படி மாறி மாறி இருவரும் முத்த மழையில் நனைந்து சண்டை இட்டனர்.இருவருக்கும் பிரிய வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை.

கடைசியில் சஞ்சனா மூச்சு வாங்க ,அவன் முடியை பிடித்து இழுத்து "டேய் என் அப்பா ஊரில் இருந்து வந்த உடனே நீ வந்து பேசி என் கழுத்தில் மூணு முடிச்சு போடற, அப்புறம் பாரு,இந்த சஞ்சனாவின் திறக்காத சிப்பியின் கதவு உனக்காக கட்டில் மீது திறந்து இன்பகடலில் உன்னை மூழ்கடிக்கும் "

"வாவ்"அதற்காகவே காத்து இருக்கிறேன் கண்மணி.

சஞ்சனா அவன் இரு பாதத்தின் மீது ஏறி அவள் இரு கையை இருபுறம் விரித்து அதில் பின்னி பிணைய கண்ணால் சைகை காட்ட அதை பார்த்த ராஜா அவள் கரங்களில் அவன் கை கோர்த்து," செம கேடி தாம்மா நீ"என்று கூற அவள் சிரித்து கொண்டே தன் இதழை அவனுக்கு சுவைக்க கொடுத்தாள்.

சஞ்சனாவின் திறக்காத சிப்பியி்ன் கதவு கல்யாணத்திற்கு முன் திறக்க காரணம் என்ன?அவள் அப்பா, ராஜாவை சந்திக்கும் தருணம் ஒரு மிகப்பெரிய சம்பவம் ராஜாவுக்கு நிகழ போகிறது.அதன் மூலம் ராஜாவுக்கு உண்டாக போகும் கெட்ட பெயரை சஞ்சனா எப்படி போக்க போகிறாள்.?எப்படி அவள் அப்பாவை சம்மதிக்க வைத்து அவனை கர
ம் பிடிக்க போகிறாள்.?அதற்கு முன் ராஜா மற்றும் ஜார்ஜ் மோதல் வேறு நேரடியாக நிகழ போகிறது?அதனால் ஏற்படும் விளைவு என்ன?காத்து இருங்கள்.

[Image: FB-IMG-1691245672975.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
தங்களின் இந்த நினைவோ ஒரு பறவை கதை செம்ம செம்ம காமம் கலக்காமல் ஒரு அற்புத காதல் காவியம் பொக்கிஷமாக உள்ளது எந்த இடத்திலும் தொய்வில்லாமல் எழுத்துக்களை எழுதுகிறீர்கள் உங்களின் எழுத்துக்கு அடியேனின் சிறிய கருத்து பதிவு
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply




Users browsing this thread: 35 Guest(s)