08-08-2023, 06:00 AM
Supera eluti irukeenga
Wait pani padika toonuthu
Wait pani padika toonuthu
♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
|
08-08-2023, 06:00 AM
Supera eluti irukeenga
Wait pani padika toonuthu
08-08-2023, 12:11 PM
(This post was last modified: 03-11-2024, 12:47 AM by Geneliarasigan. Edited 10 times in total. Edited 10 times in total.)
Episode -17
சங்கீதா சஞ்சனாவிடம்,"சஞ்சனா இன்னிக்கு நம்ம டீமுக்கு ஒரு ஆஃபர் கொடுத்து இருக்காங்க." "என்ன ஆஃபர் சங்கீ," "இன்னிக்கு நாம 7 ஆர்டர்கள் எடுத்தால் 1500 ரூபா கிஃப்ட் voucher கிடைக்கும்." என்ன சங்கீ ,7 ஆர்டர் எப்படி எடுக்க முடியும்.? முயற்சி பண்ணு,பழைய follow up எதுனா இருந்தா எடுத்து பேசு.கஸ்டமருக்கும் இன்னிக்கு discount ஆஃபர் இருக்கு.அதை வைத்து பேசி எடு. சரி ஓகே முயற்சி பண்றேன். சஞ்சனா எவ்வளவு முயற்சி செய்தும் அவளால் 5 ஆர்டர் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் மாலை gift voucher கொடுக்கும் போது சஞ்சனா பெயர் அறிவிக்கப்பட,ஒன்றும் புரியாமல் திகைத்தாள். எப்படி சங்கீ ,நான் தான் 7 ஆர்டர் எடுக்கவே இல்லையே. சரி போய் முதலில் வாங்கு,பிரியா மேடம் கூப்பிடறாங்க பாரு. கைத்தட்டல்களோடு சஞ்சனா gift voucher வாங்கி கொண்டு வந்து, "எப்படி எனக்கு புரியலையே"என்று சஞ்சனா கேட்க, நீ இப்போ gift voucher வாங்க காரணம் ஜார்ஜ் தான்.அவன் எடுத்த 2 ஆர்டரை ,உன் பேரில் login பண்ணி உன்னை gift voucher வாங்க வைச்சு இருக்கான்.ராஜா என்ன பிஸ்கோத்து ஒரு ஆர்டர் தான் உனக்கு கொடுத்தான்.ஜார்ஜ் பாரு,உனக்கு 2 ஆர்டர் கொடுத்து பரிசு தொகையையும் வாங்க வைச்சுட்டான்.ஜார்ஜ் கிட்ட மட்டும் நீ நட்பு வைத்து கொண்டால் நீ நினைச்சே பார்க்க முடியாத பல நன்மைகள் வந்து சேரும் தெரிஞ்சுக்க. சஞ்சனா திரும்பி ஜார்ஜ்ஜை பார்த்து புன்னகைக்க,அவனும் புன்னகைத்தான். பார்க்கில், ஹாய் சஞ்சனா,சாரி இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு,ராஜா வர. ஏன் இன்னிக்கு லேட், அது tnagar போய் இருந்தேன் சஞ்சனா,ஒரு ஜூவல்லரி ஷாப் ஆர்டர் எடுத்துட்டு வரேன்.அப்படியே அங்கே ஒரு நகை பார்த்தேன்.அது உனக்கு சூப்பரா இருக்கும் என்று தோணுச்சு.அப்படியே வாங்கிட்டு வந்தேன். நல்லா இருக்கா பாரு. டேய் நிஜமாவே சூப்பரா இருக்குடா, கவரிங் தான் சஞ்சனா,தங்க முலாம் மட்டும் பூசப்பட்டு இருக்கு.கூடிய சீக்கிரம் தங்கத்தில் வாங்கி தரேன். டேய் இதுவே எனக்கு போதும்டா,கவரிங்கா இருந்தா என்ன,அருமையா இருக்கு. நான் உனக்கு முதல் முதலாக கொடுக்கிற gift. இல்லடா,நீ எனக்கு ஏற்கனவே ஒரு கிஃப்ட் கொடுத்து இருக்கே.அது இப்பவும் என் உடம்பில் இருக்கு. உன் உடம்பில் இருக்கா,என்ன அது? நீயே பார்த்து சொல்லு, ராஜா மேலும் கீழும் அவளை பார்த்து,"தெரியலையே சஞ்சனா" சரி விடு,இன்னும் ரெண்டு நாள் தானே.நீயே தெரிந்து கொள்வாய்.டேய் நாளைக்கு நம்ம டான்ஸ் போட்டி,அடுத்த நாள் ஓணம்,நீ உன் காதலை வந்து உறுதிபடுத்துவே என்று சொல்லி இருக்கே. ம், மறப்பேனா கண்மணி.இந்த நாளுக்காக தானே நாம ரெண்டு பேரும் காத்துட்டு இருக்கோம். டேய் இந்த செயினை நீயே போட்டு விடு. ராஜா அந்த செயினை அவள் கழுத்தில் அணிவித்து "உனக்கென்றே அளவு எடுத்து செய்த மாறி இருக்கு சஞ்சனா" டேய் இந்த செயினை நீ போட்டது மூலமா,நான் உனக்கு பாதி பொண்டாட்டி ஆன மாறி தான்.இதில் ஒரு தாலியோ இல்ல மஞ்சளோ இருந்து இருந்தால்,இந்நேரம் உனக்கு முழு பொண்டாட்டியாகவே ஆகி இருப்பேன். அப்போ பாதி பொண்டாட்டி ஆனதுக்கு ,ஏதாவது சலுகைகள் கொடுக்கலாமே தேவி என்ன வேணும் சொல்லு. என்ன,நான் முன்னாடி கேட்டது தான்.இதழோடு இதழ் தரும் சூடான முத்தம் தான். அவ்வளவு தானே.! இன்னும் ரெண்டு நாள் தான் பொறுத்துக்க. ராஜா சஞ்சனாவை வீட்டில் விடும் பொழுது,.. சரி சஞ்சனா,நாளை மாலை நாம் இருவரும் ஒன்றாக ஆட போகிறோம்.போய் நல்லா ரெஸ்ட் எடு. ராஜா நீயும் நாளை வெற்றி பெற வேண்டும்.அதற்காக நான் உனக்கு ஒரு கிஃப்ட் தர போறேன். என்ன கிஃப்ட் சஞ்சனா, நீ உன் காதலை சொன்ன பிறகு தருவதாக சொன்னேன்.அதை இப்பவே தர போறேன்.சஞ்சனா நெருங்கி வந்து அவன் உதட்டோடு அவள் இதழ் பொருத்தி சூடான ஒரு முத்தம் கொடுக்க,ராஜா அந்த முத்தத்தில் மெய் மறந்து போனான்.இங்கிலீஷ் முத்தத்தில் இருந்து ஃப்ரெஞ்ச் முத்தமாக மாற, அவள் பூ இதழை திறக்க முற்பட்ட வினாடி ஒரு மோட்டார் பைக் சத்தம் வருவதை கேட்டு இருவரும் பிரிந்தனர்.சஞ்சனா good night சொல்லி விட்டு ஓடிவிட்டாள். ச்சே, இன்பம் தனை தந்து,உச்சம் வரை சென்று மிச்சம் வைத்து சென்று விட்டாளே...!அதுக்குள்ள யாருடா இவனுங்க,சிவ பூஜையில் கரடி புகுந்த மாறி என்று ராஜா புலம்பினான்.ம்.....இன்னும் கொஞ்ச நேரம் கொடுத்து இருந்தா நல்லா இருந்து இருக்கும். அடுத்த நாள் ராஜா,ராஜேஷ் இருவரும் ஒன்றாக போட்டிக்கு வந்து கொண்டு இருக்கும் பொழுது ராஜா மொபைலுக்கு சக ஊழியர் பொன்வண்ணன் அழைத்தான். ராஜா உன் இரத்த பிரிவு AB +ve தானே. ஆமா பொன்வண்ணன். ராஜா என் அம்மாவுக்கு ஆபரேஷன்.கொஞ்சம் நீ வந்து blood கொடுக்க முடியுமா? நீ எந்த ஹாஸ்பிடல் என்று மட்டும் சொல்லு.நான் உடனே வரேன். முகப்பேர் ஹாஸ்பிடல் தான் ராஜா, சரி நீ போனை வை உடனே வரேன். ராஜேஷ் ராஜாவிடம்"டேய் ராஜா,நீ blood கொடுத்துட்டு உடனே டான்ஸ் ஆட முடியுமா?" ஒரு பத்து நிமிஷம் ஓய்வு எடுத்தா போதும் ராஜேஷ்,அப்புறம் பிரச்சினை இல்ல. ராஜா blood donate செய்து விட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு வரவே தாமதமாகி விட்டது.அவசர அவசரமாக ரெடி ஆகி மேடை ஏற சஞ்சனா அங்கு தயாராக இருந்தாள். இருவரும் கண்களாலேயே பேசி ஆடினர்.ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.இரண்டாவது பாட்டு, மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் பாடல் வர பரத நாட்டியம் ஆட வேண்டும்.சஞ்சனாவின் அழகான நளினமான ஆட்டத்திற்கு ராஜா ஈடு கொடுத்து ஆட ரொம்பவே சிரமப்பட வேண்டி இருந்தது.மேலும் சில இடங்களில் அவள் மெல்லிய இடுப்பை அவன் பிடிக்க நேர்ந்தது.அவள் மேனியில் அவன் விரல்கள் கண்ட இடத்தில் வைக்க நேர்ந்தது.அதற்கான சந்தர்ப்பத்தை அவளே அமைத்து கொடுத்தாள்.காதல் ரசம் ததும்ப அவனை உரசி ஒட்டி கொண்டு ஆடுவதும், தன் நாயகனுடன் ஆடுவதும் சஞ்சனாவிற்கு மிக உற்சாகமாக இருந்தது.முதல் ரவுண்ட் முடிந்து இருவரும் சற்று உட்கார்ந்தனர். அப்பொழுது பாலாஜி ஜார்ஜ்ஜிடம் "என்ன ஜார்ஜ் ரெண்டு பேர் என்னவோ டூயட் பாட்டுக்கு ஆடுவது போல் ஆடுறாங்க.அதுவும் அவ ஒட்டி ஒட்டி உரசி ஆடுறா.இதிலேயே அவங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி ரொம்ப நெருங்கிடுவாங்க போல போல.இப்படி போச்சுன்னா நீ போட்ட திட்டம் எல்லாம் பாழாய் போய் விடும் போல் இருக்கே. ராஜா தன் பையை ஓபன் செய்யும் போது அவன் blood donate பண்ணியதற்கான சர்டிஃபிகேட் கீழே விழுந்தது.அதை ஜார்ஜ் பார்த்து எடுத்து விட்டான். டேய் பாலாஜி,அவன் இப்போ தான் இரத்தம் கொடுத்துட்டு வந்து இருக்கான்.நீ நான் சொல்ற மாதிரி உடனே செய். ராஜாவிற்கு ஜுஸ் வழங்கப்பட்டது,அது அப்பொழுது ராஜாவுக்கும் அவசியம் தேவைப்பட்டதால் உடனே அருந்தினான்.அதில் ஜார்ஜ்ஜின் சூழ்ச்சியும் அடங்கி இருந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்க,இருவருமே தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். நேரம் செல்ல செல்ல ராஜாவின் கண்கள் செருக தொடங்கியது.கால்கள் தடுமாறி ராஜா கீழே விழ,சஞ்சனா ராஜாவிடம் ஓடி வரும் முன் telesales டீம் அனைவரும் சஞ்சனாவை சூழ்ந்து கொண்டனர்.எல்லோரும் வெற்றி களிப்பில் கொண்டாட சஞ்சனா அவர்களிடம் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தாள்.ராஜேஷ் மற்றும் சீனி ஓடி வந்து ராஜாவை கைத்தாங்கலாக கீழே அழைத்து சென்றனர். என்ன ராஜா ஆச்சு உனக்கு?ராஜேஷ் வினவ, தெரியல ராஜேஷ்,ஜுஸ் குடிச்சதுக்கு அப்புறம் கண்ணை இருட்டி கொண்டு வருது.எனக்கு ஒரு உதவி பண்ணு ராஜேஷ். உதவி கிதவி எதுனா சொன்ன அடி விழும் பார்த்துக்க,என்ன செய்யனும் என்று மட்டும் சொல்லு. என்னால இப்ப கண்டிப்பாக bike ஒட்ட முடியாது.நீ எப்படினா என்னை வீட்டில் கொண்டு போய் சேர்த்து விடு ராஜேஷ். சரி வா என்று ராஜேஷ் அவனை அழைத்து சென்றான். சஞ்சனா பரிசு வாங்கும் பொழுது சுற்றும் முற்றும் அவள் விழிகள் ராஜாவை தேடி அலைந்தன. கீழே வந்த பிறகும் அவள் விழிகள் அவனையே தேடி கொண்டு இருப்பதை பார்த்து சங்கீதா"என்ன ராஜாவை தேடறீயா," "ஆமாம்" என்று சஞ்சனா கூற, அவன் தோற்று நீ ஜெயித்து விட்டாய்,என்று உன் மேல் உள்ள கோபத்தில் அப்பவே வெளியே போய்ட்டான்.சரியான selfish அவன். சஞ்சனா ராஜாவின் மொபைலுக்கு ஃபோன் செய்ய ,அவன் நல்ல உறக்கத்தில் இருந்ததால் அவள் போனை எடுக்கவில்லை. என்ன அவன் ஃபோன் எடுக்கலையா,இதற்கு மேல் அவன் உன் போனை எடுக்கவே மாட்டான்.நான் தான் சொன்னேன் இல்ல ,அவன் உன் மேல செம கோபத்தில் இருக்கான். சஞ்சனா கண்களில் லேசாக கண்ணீர் வர,அதை அடக்கி கொண்டு வெளியே ஓடினாள்.சங்கீதா,ஜார்ஜ்ஜை பார்த்து சக்சஸ் என்று சைகை காட்ட,ஜார்ஜ்ஜும் தன் பங்குக்கு thumps up காட்டினான். நாளை ராஜா,சஞ்சனாவிடம் தன் காதலை சொல்ல வரும் நாள்.நாளை என்ன நடக்க போகிறது?
08-08-2023, 02:16 PM
(This post was last modified: 08-08-2023, 02:46 PM by M.Raja. Edited 4 times in total. Edited 4 times in total.)
Excellent bro, சஞ்சனா ஏன் ஜார்ஜ் காதலை ஏற்றாள் என்று புரியாத புதிராக உள்ளது. செம twist. சஞ்சனாவோ,சுஜிதாவோ அவர்களாக தான் வந்து ராஜாவை விரும்பினார்கள்.அவர்களே ஆசை காட்டி மோசம் செய்து விட்டு செல்கிறார்கள். ராஜா ஏமாந்து கொண்டே இருக்க வேண்டுமா?எனக்கு ஜார்ஜ் character விட சங்கீதா கேரக்டர் மீது தான் அதிக வெறுப்பு வருகிறது
08-08-2023, 09:09 PM
09-08-2023, 08:03 AM
Ninga tha twist iruku sonalum natural ponaah episodes la edho sathaan vedham othinaa mathiri tha iruku
Twist and turns ipdi varum nenaikla sorry to say this
09-08-2023, 08:07 AM
(This post was last modified: 09-08-2023, 08:11 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-08-2023, 08:03 AM)krishkj Wrote: Ninga tha twist iruku sonalum natural ponaah episodes la edho sathaan vedham othinaa mathiri tha iruku அடுத்த episode நீங்கள் விரும்பும் மாதிரி இருக்கும்.கவலைபடாதீங்க.சஞ்சனா,ராஜா சந்திப்பு அடுத்த பதிவில் நிகழும் போது தெரியும்.
09-08-2023, 08:39 AM
(This post was last modified: 03-11-2024, 12:48 AM by Geneliarasigan. Edited 6 times in total. Edited 6 times in total.)
Episode -18
காலையில் ராஜா சஞ்சனா மொபைலுக்கு ஃபோன் செய்ய, சங்கீதா ஃபோன் எடுத்தாள்.காரணம் சஞ்சனா ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஆபீஸில் ரங்கோலி போடுவதில் மும்முரமாக இருந்தாள்.அதனால் சஞ்சனாவின் நம்பர் சங்கீதாவிடம் இருந்தது. என்ன இது hubby என்று save பண்ணி இருக்கு,என்று சங்கீதா போனை எடுக்க,.. ஹலோ சஞ்சனா,நான் ராஜா பேசறேன். யாரு ராஜாவா,நான் சங்கீதா பேசறேன்.. கொஞ்சம் சஞ்சனா கிட்ட ஃபோன் கொடு சங்கீதா, சாரி ராஜா,சஞ்சனா உன் மேல செம கோபத்தில் இருக்கா,அவ உன்கிட்ட பேசவே கூடாது என்று என்கிட்ட போனை கொடுத்து,இதுக்கு மேல இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணவோ இல்லை நேரில் சந்திக்கவோ வேண்டாம் என்று சொல்ல சொன்னா. ஏன் நான் என்ன பண்ணனேன் சங்கீதா? நீ என்ன பண்ணல ராஜா,அவ பரிசு வாங்கும் போது எவ்வளவு ஆசையா உன்னை தேடினா தெரியுமா?நீ அப்படியே விட்டுட்டு போய்ட்டே.அவ ஜெயிச்சிட்டா என்ற காண்டு அவ மேல உனக்கு. அது தான் உன் மேல செம கோபமா இருக்கா என்று பேசிக்கொண்டே போனை துண்டித்து விட்டாள். ராஜா மீண்டும் ஃபோன் செய்ய,அழைப்பு எடுக்கப்படமாலே துண்டிக்கப்பட்டது. "என்ன இவ,இந்த மாதிரி பண்ண மாட்டாளே"என்று ராஜா குழம்பினான். "என்னடா ஆச்சு" ராஜேஷ் ராஜாவிடம் கேட்க, தெரியல ராஜேஷ்,சஞ்சனா என் மேல கோபமா இருக்கா என்று சங்கீதா சொல்றா.இதுக்கு மேல ஃபோன் பண்ணவோ , சந்திக்கவோ வேண்டாம் என்று சஞ்சனா சொன்னதா சொல்றா. ராஜா ,இப்போ உன்கிட்ட சஞ்சனா பேசல,சங்கீதா தான் பேசி இருக்கா.எதுவாக இருந்தாலும் நேராக போய் பார்த்துக்கலாம்.இன்னிக்கு தான் உன் காதலை தெரியப்படுத்த வேண்டிய நாள்.வா உடனே கிளம்பு. அது தான் சரி ராஜேஷ்.என் பைக் நேற்று ஆபீஸில் தான் இருக்கு.நீ கொஞ்சம் என்னை ஆபீஸில் விட்டு விடு. விட்டு விடறதா,நான் நீங்க ரெண்டு பேர் ஒன்னு சேருவதை என் கண் கூடாக பார்த்திட்டு தான் போவேன்.அதுக்கு தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருக்கேன். சரி ராஜேஷ்,போகும் போது கோவிலுக்கு போய்ட்டு போவோம். சரி வா ராஜா கோவிலில், என் வாழ்வில் இதற்கு மேல் காதலும் வேண்டாம்,கல்யாணமும் வேண்டாம் என்று இருந்தேன்.சஞ்சனா என் வாழ்வில் வந்து பாலைவனமாக இருந்த மனதை சோலைவனமாக மாற்றினாள்.என்னை நம்பி வந்தவளிடம் முதல் முறையாக என் காதலை சொல்ல போகிறேன்.அவளை என் வாழ்வில் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி முருகா என்று வேண்டி கொண்டான். ராஜாவும் ராஜேஷூம் ஆபீஸில் நுழையும் பொழுது,சஞ்சனா இன்னமும் ரங்கோலி வரைந்து கொண்டு இருந்தாள். கேரள நாட்டு ஸ்டைலில் அவள் புடவை அணிந்து இருந்தாள்.ராஜா அவளை பார்த்து கொண்டே கையில் ரோஜா மற்றும் greetings card சகிதம் பக்கவாட்டில் வரும் பொழுது ஜார்ஜ் தன் இரு சகாக்கள் புடை சூழ சஞ்சனா நேர் எதிரே வந்தான்.ஜார்ஜ் கையிலும் ரோஜா மற்றும் greetings card. அவன் சஞ்சனாவின் முன் ஒரு கால் மடித்து சஞ்சனாவிடம் லவ் புரோபோசல் செய்ய,ராஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. "வாவ் லவ்லி புரோப்பொசல்.வாங்கிக்கோ சஞ்சனா"என்று சங்கீதா கத்த, சஞ்சனா புன்னகையோடு அவன் கொடுத்த ரோஜாவை வாங்க, ராஜா காலுக்கு கீழே பூமியே பிளந்தது போல் இருந்தது. கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வர,உடனே அங்கு இருந்து வேகமாக வெளியேறினான். ராஜேஷ் உடனே ஓடி போய் ராஜாவை நிறுத்தி,"இருடா.உன்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசி பழகி லவ் பண்ணிட்டு அவன் கொடுக்கிற ரோஜா பூவை வாங்குறா.அவளை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டுட்டு வரலாம்." வேண்டாம் ராஜேஷ்,ஏமாற்றம் ஒன்னும் எனக்கு புதுசு இல்லயே. நான் தான் முதலிலேயே சொன்னேனே.option என்று ஒன்று வருகிற வரை தான் நான் better ஆக தெரிவேன்.option என்று வந்து விட்டால் நான் குப்பை மாறி தூக்கி எறியப்படுவேன்.என்னோட வாழக்கை எப்பவுமே ஒரு மெழுகுவர்த்தி மாறி தான் ராஜேஷ்.என் தங்கை வாழ்வின் இருட்டுக்கு மட்டும் தான் ஒளி வீச படைக்கபட்டவன் நான்.ஆனால் கடைசி வரை நான் தனியா தான் உருகனும்.இந்த காதல் கல்யாணம் எல்லாம் என் வாழ்வில் வந்தால் இப்படி தான் நடக்கும்.சஞ்சனா சந்தோசமாக இருக்க வேண்டிய தருணம் இது.நாம எதுவும் தொந்தரவு பண்ண வேணாம்.வா போய் விடலாம். டேய் நீ சும்மா விட்டாலும், நான் சும்மா விட மாட்டேன்டா.என் நண்பனுக்கு ஒன்று என்றால் என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.போய் ரெண்டில் ஒன்று பார்த்திட்டு வரேன் இரு. டேய் ராஜேஷ்,நம்ம நட்புக்கு நீ மரியாதை கொடுக்க விரும்பினால் நாம இங்கே இருக்க வேண்டாம். வா கிளம்பி போலாம்.எனக்கு நீங்க போதும்டா.நம்மளோட நட்பை எவன்டா பிரிக்க முடியும். ராஜா எனக்கு மனசு கேக்கலடா. ராஜேஷ் எனக்கு ஒரு உதவி பண்ணுடா, சொல்லுடா நான் என்ன செய்யனும். எனக்கு இப்போ ட்ரிங்க்ஸ் சாப்பிடணும் போல இருக்கு.கொஞ்சம் வாங்கி கொடுக்கறீயா டேய் நீயாடா ட்ரிங்க்ஸ் சாப்பிடணும் என்று சொல்றே.சுஜிதா உன்னை விட்டு பிரிந்த பொழுது கூட அவளை மறக்க நான் வற்புறுத்தி சாப்பிடு என்று கெஞ்சியபொழுது வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துட்ட.இப்ப மட்டும் கேக்கற. தெரியல ராஜேஷ், ஆனா இப்போ மனசு ரொம்ப வலிக்குது.பிளீஸ் ராஜேஷ் எனக்கு வாங்கி கொடு. சரிடா வா, முதலில் உன் ரூமுக்கு போகலாம். ராஜேஷ் உடனே வாசுவுக்கு ஃபோன் செய்தான். வாசு உன் மொபைலுக்கு 2000 ரூபா அனுப்பி இருக்கேன்.உடனே நீ சரக்கு வாங்கிட்டு ராஜா ரூமுக்கு வா. என்னடா விசேஷம்? போனில் சொல்ல முடியாது.நேரில் வா சொல்றேன். சரக்கு ஓசியில் கிடைக்கிறது என்றதுமே வாசு குஷி ஆகி விட்டான்.சரக்கு மற்றும் சைடிஷ் வாங்கி கொண்டு ராஜா ரூம் நோக்கி பறந்தான். ராஜா போகும் போது தான் வேண்டி கொண்ட கோவில் கோபுரத்தை பார்த்து,"காதலிக்க எனக்கு ஒரு யோகம் இல்லையே,ஆண்டவனே உனக்கும் அனுதாபம் இல்லையே"என்று கண்ணீரோடு கடந்து சென்றான். ரூமில் மூவரும் உட்கார்ந்து சரக்கு அடித்து கொண்டு போதையில் இருக்கும் பொழுது ராஜா மொபைல் ஒலித்தது. ராஜா அதை பார்த்து "டேய் சஞ்சனா எனக்கு ஃபோன் பண்றாடா" வாசு ராஜா மொபைலை அவன் கையில் இருந்து பிடுங்க தவறுதலாக on ஆகி விட்டது.அது தெரியாமல் வாசு போதையில் "என்ன சொல்ல போறா அவ,ராஜா என்னை மன்னிச்சிடு.என்னை விட அழகான பொண்ணு உன் வாழ்வில் கிடைப்பா,என்னை மறந்து விடு என சொல்ல போறா"என்று சொல்லிவிட்டு மொபைலை தூக்கி எறிந்தான். அடுத்து ராஜேஷ் மொபைல் ஒலிக்க ,அவன் அதை கட் பண்ணுவதற்கு பதில் ஆன் செய்து விட்டான். அப்பொழுது ராஜா போதையில் பேசியது எதிர்முனையில் இருந்த சஞ்சனாவிற்கு தெளிவாக கேட்டது. "ராஜேஷ்,என்னோட வாழ்க்கைய பாரேன்.கடிகார முள் போல ஏன் ஓடுது,எதுக்கு ஓடுது என்றே தெரியல.சஞ்சனா எதுக்கு என் வாழ்வில் வந்தா,எதுக்கு விலகி போனா,எதுவுமே எனக்கு புரியல.வந்தா சந்தோசம் தந்தா,கொடுத்த சந்தோஷத்தை பறிச்சிட்டு போய்ட்டா". அதற்கு வாசு,"மச்சான் நீ வாங்கி கொடுக்கிற சரக்குக்காக நான் சொல்லல.நீ கவலைபடாதே மச்சான்.சஞ்சனா என்னடா சஞ்சனா அவளை விட நூறு மடங்கு இல்லை ஆயிரம் மடங்கு அழகு உள்ள பொண்ணை நான் லைனில் வந்து நிப்பாட்டறேன்.உனக்கு அதில் எது விருப்பமோ அதில் ஒண்ணை செலக்ட் பண்ணிக்க மச்சான்." என்று வாசு உளறியதை கேட்டு எதிர்முனையில் இருந்த சஞ்சனா கேட்டு போனை வைத்து விட்டாள். சஞ்சனா ஏன் ஜார்ஜ் காதலை ஏற்றாள்.?ராஜாவின் காதல் என்ன ஆனது.?விறுவிறுப்பான அடுத்த பதிவுக்கு காத்து இருங்கள். இடைவேளை upload photo to forum
09-08-2023, 10:18 AM
(This post was last modified: 06-10-2024, 02:07 PM by M.Raja. Edited 1 time in total. Edited 1 time in total.)
பைபைசுஙை
09-08-2023, 12:00 PM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
09-08-2023, 03:29 PM
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் ராஜா மற்றும் சஞ்சனா இடையே நடக்கும் உரையாடல் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் கதை ஒவ்வொரு பதிவு வசிக்கும் போது ஒரு காதல் கதை மற்றும் த்ரில்லர் நாவல் படித்து போன்று அருமையாக உள்ளது.
09-08-2023, 08:03 PM
(This post was last modified: 09-08-2023, 08:04 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
நன்றி நண்பா,அடுத்த 2 பதிவுகள், ராஜா மற்றும் சஞ்சனா உரையாடல்.சஞ்சனா ஜார்ஜ்ஜை எப்படி பழி வாங்கினாள்?மேலும் ராஜா,சஞ்சனாவிடம் தன் காதலை தெரிவிப்பது என அடுத்தடுத்து வரும்.முதல் பதிவு இன்று 9.30 மணிக்கு வரும்
09-08-2023, 08:22 PM
super update
09-08-2023, 08:34 PM
semma thala
09-08-2023, 08:49 PM
Super bro. He is going to fuck her in drunken state.
|
« Next Oldest | Next Newest »
|