♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
#41
superb update
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Episode -6

ராஜா உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விசயம் பேசணும்

சொல்லு சுஜி,என்ன விசயம்.

நம்ம லவ்வ நாம் break up பண்ணிக்கலாம்.

ராஜா அவள் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.

ஹே சுஜி எப்ப பார்த்தாலும் உனக்கு விளையாட்டு தானா?

இல்ல ராஜா நான் நிஜமா தான் சொல்றேன்.எனக்கு வீட்டில் மாப்பிளை பார்த்துட்டாங்க,மாப்பிளை ஐடி கம்பனியில் வேலை.மாசம் 1.5 லட்சம் சம்பளம்.நீ வெறும் 25000 ரூபா சம்பளம் வாங்குற.அதுவும் ஒரு தங்கை கல்யாணத்துக்கு வாங்கிய கடன் இன்னும் நீ முடிக்கல,இன்னொரு தங்கை  கல்யாணம் வேறு நீ பண்ண வேண்டி இருக்கு.நீ வாங்கும் சொற்ப சம்பளத்தில் உன் வீட்டுக்கும் செலவு செய்து கொண்டு என்னை எப்படி வைத்து உன்னால் வாழ முடியும்?

இதை எல்லாம் தெரிஞ்சு தானே சுஜி நீ என்னை லவ் பண்ணே,

ஆமாம் லவ் பண்ணும் போது எதுவும் தெரியல.ஆனால் கல்யாணம் என்று வரும் போது தான் பயமாக இருக்கு.எனக்கு இப்போ கிடைக்க போகும் லைஃப் ஸ்டைல் கண்டிப்பாக உன்னால தர முடியாது.சரி உனக்காக வேணா நான் இறங்கி வரேன்.
நீ உங்க அப்பா,அம்மா,தங்கைகளை அப்படியே விட்டு விட்டு என்னுடன் வருவீயா சொல்லு.நான் என் அப்பாகிட்ட உன்னை பற்றி பேசறேன்.

ராஜா மௌனமாக இருந்தான்.

பின் அவளிடம் "இல்லை சுஜிதா யாருக்காகவும் என் தங்கைகளை நான் விட்டு விட்டு வர முடியாது"

"அப்ப நீ என்னை மறந்துடு"

"நீ சொல்வது சரி தான் சுஜி,கண்டிப்பாக உனக்கு கிடைக்க போகும் சொகுசு வாழ்கையை என்னால் தர முடியாது தான்.நீ எடுத்த முடிவு சரி தான்.Advance congratulations to your marriage.உனக்கு விருப்பம் இருந்தால் கல்யாண பத்திரிக்கை அனுப்பு.

"சுஜி என்னை விட்டு போகாதே"என்று அவன் மனம் மட்டும் கத்தி கொண்டே இருந்தது. அவள் போகும் திசையை மட்டும் கண்களில் கண்ணீரோடு நீண்ட நேரம் வெறித்து பார்த்து கொண்டு நின்று இருந்தான்.

அவன் மொபைல் ஃபோன் ரிங் ஒலித்து கொண்டே இருக்க அதன் சப்தத்தில் கண் விழிக்க கனவு கலைந்தது.ச்சே என்ன இது கனவிலா இவ்வளவு நேரம் கத்தி கொண்டு இருந்திருக்கிறேன்?

நான்கு வருடம் முன்பு நடந்த நிகழ்ச்சி நீண்ட நாட்கள் கழித்து இன்று ஏன் கனவாக வந்தது?புரியாமல் குழம்பினான்.ஒருவேளை நேரில் இது போல் கத்தி கூப்பிட்டு இருந்தால் சுஜி என்னை விட்டு விலகி இருக்க மாட்டாளோ?.அப்பொழுது அவளுக்கு வாழ்த்து மட்டும் கூறி விலகி வந்தது தப்போ?

மொபைல் மீண்டும் மீண்டும் ஒலிக்க தூக்கம் கலைந்து " ஹலோ யார் பேசறது" என்று கொட்டாவி விட்டு கொண்டே கேட்டான்.

சுஜிதா கனவின் வழியே வெளியே அவன் மனதில் இருந்து வெளியே செல்ல,இப்பொழுது அந்த இடத்தை பிடிக்க சஞ்சனா வந்து விட்டாள்.

ஹலோ நான் சஞ்சனா பேசறேன்.என்ன இப்ப தான் தூங்கி எந்திரிச்சிங்களா?

ஆமாம் சொல்லு சஞ்சனா,என்ன விசயம்?

என்ன விஷயமா?நான் தான் உங்ககிட்ட சொன்னேனே இன்னக்கி உங்க கூட வரேன் என்று.லொகேஷன் நீங்க அனுப்பவே இல்ல

சஞ்சனா நீங்க விளையாட்டா கேட்டீங்க என்று நினைச்சேன்.சீரியஸா ஃபோன் பண்றீங்க.அதுவும் காலங்காத்தால.

என்னது காலங்காத்தாலயா சோம்பேறி,மணி ஏழு ஆச்சு.உனக்கு  இன்னிக்கி மீட்டிங் 8.30 மணிக்கு.அதாவது ஞாபகம் இருக்கா,

என்னது மணி ஏழா !,அய்யயோ நீ போனை வை நான் குளிச்சிட்டு கிளம்பனும்.

சரி நான் எங்கே வர வேண்டும் என்று லொகேஷன் அனுப்பு.

சஞ்சனா,உனக்கே வாரம் ஒருமுறை தான் லீவ் கிடைக்கும்.ஜஸ்ட் என்ஜாய் பண்ணுங்க.எதுக்கு பாவம் என்கூட வெயிலில் சுற்றனும் என்று ஆசைப்படறீங்க.

இங்க பாருங்க,நீங்க எனக்கு லொகேஷன் அனுப்ப வில்லை என்றால் அப்புறம் நான் மீட்டிங் நடக்கும் இடத்திற்கே வந்து விடுவேன்.

வேற வினையே வேண்டாம் தாயே ,நீங்க நம்ம ஆபீஸ் பக்கத்தில் உள்ள தெருவில் ஒரு டீ கடை இருக்கும்.அங்க 9.30 மணிக்கு வாங்க.நான் உங்களை மீட்டிங் முடித்து விட்டு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.போதுமா?

"ஓகே அப்படி வாங்க வழிக்கு"

வெயிட் சஞ்சனா எனக்கு மீட்டிங் இருப்பது உனக்கு எப்படி தெரியும்?இந்த மீட்டிங் நடப்பது எங்க டீமை தவிர வேறு யாருக்கும் தெரியாதே!

"அது சஸ்பென்ஸ் நான் சொல்ல மாட்டேன் "என்று சஞ்சனா போனை வைத்தாள்.

என்ன இது இவளை பார்த்தாலே என் மனம் அலைபாயுதே,இவளிடம் பேசும் போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உருவாகிறதே!வேண்டாம் ராஜா,ஏற்கனவே ஒரு தடவை காதலித்து பட்ட அவஸ்தை போதாதா?நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
எப்படியாவது இன்று ஒருநாள் மட்டும் கூட்டி போய் வந்துவிட்டு ,அவளை தவிர்க்க பார்.அது தான் உனக்கு நல்லது.இன்னக்கி எனக்கு மீட்டிங் இருப்பது எங்க north சேல்ஸ் டீம் தவிர வேற மற்ற sales டீமுக்கும் கூட தெரியாதே.இவளுக்கு எப்படி தெரிந்தது.?எவனோ ஒருத்தன் உளவாளி நம்ம டீமில் இருந்து அவளுக்கு துப்பு கொடுக்கிறான்.அவன் யார் என்று முதலில் கண்டுபிடிக்கனும்.என்று மனதில் எண்ணினான்.

ஹலோ சஞ்சனா,என்ன நான் சொன்ன மாதிரி செய்ஞ்சியா,அவன் ஓத்துகிட்டானா?

ராஜேஷ் அண்ணா,நீங்க சொன்ன மாதிரியே தான் என்னென்னவோ சொல்லி என்னை கழட்டி விட பார்த்தார்.அப்புறம் மீட்டிங் நடக்கிற இடத்திற்கு வருவேன் என்று மிரட்டினதும் தான் ஒத்துக்கிட்டார்.

சஞ்சனா,இந்த ஏழு வருஷமா அவன் கூட நான் நெருக்கமாக பழகி கொண்டு இருக்கிறேன்.அவனின் ஒவ்வொரு அங்க அசைவுகளிலேயே அவன் என்ன நினைக்கிறான் அடுத்து என்ன செய்வான் என்று கண்டுபிடித்து விடுவேன்.நான் உறுதியாக சொல்றேன்,முதல் பார்வையிலேயே நீ அவனை சாய்ச்சுட்ட.என்கிட்ட எந்த ஒரு விசயத்தையும் அவன் மறைச்சது இல்ல ,முதல் காதல் உட்பட.அவன் எனக்கு சிறந்த நண்பன்.அவன் முதல் காதல் ரணத்தில் இருந்து இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா மீண்டு வந்து இருக்கான்.மீண்டும் அந்த ரணத்தை கீறி காயத்தை பெரிசாக்கி விடாதே.

என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க,உங்களுக்கு அவரை சென்னை வந்த பிறகு தான் தெரியும் என்றால் ,எனக்கு அவரை சென்னை வரும் முன்பே தெரியும்.கடந்த ஏழு வருடத்தில் ஒரு நாள் கூட அவரை நினைக்காமல் இருந்தது கிடையாது.அந்த நினைவு தான் இப்போ காதலா வளர்ந்து இருக்கு.நான் கண்டிப்பா அவர் காயத்தை ஆற்றும் மருந்தாக தான் இருப்பேன்.நீங்க கவலைபடாதீங்க.

"சரி சஞ்சனா,அவனை பற்றி ஒவ்வொரு தகவலும் அப்பப்ப தரேன்.உன் காதல் வெற்றி பெற எல்லாவகையிலும் உதவி செய்ய நானாச்சு.என் கண்ணையே நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன் சஞ்சனா,அதில் எப்பவும் நான் ஆனந்த கண்ணீரை தான் பார்க்கணும்" என்று ராஜேஷ் கிண்டல் பண்ண

"ச்சீ போங்கண்ணா" என வெட்கத்துடன் போனை வைத்தாள்.

சஞ்சனா தன் அப்பாவிடம் "அப்பா நான் வெளியே போய்ட்டு வரேன்."

என்ன சஞ்சனா இன்னிக்கு லீவ் என்று சொன்னே

ஆமாப்பா இன்னிக்கு லீவு தான்.நான் முக்கியமான ஒருத்தரை பார்க்க போறேன்.

ஒரு நிமிஷம் சஞ்சனா,என்ன இன்னிக்கு உன் தோற்றத்தில் மாற்றம் தெரியுது.

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே அப்பா

இல்ல என் பொண்ணை பற்றி எனக்கு தெரியாதா?உன் உள்ளத்தில் பொங்கி வரும் மகிழ்ச்சி தான் உன் முகம் நன்றாக காட்டி கொடுக்குதே

சஞ்சனா அவள் அப்பா அருகில் வந்து அமர்ந்து"நீங்க சொன்னது உண்மை தான்ப்பா,உங்களுக்கே நல்லா தெரியும்,எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு சொல்லாமல் நான் செய்ய மாட்டேன்.கூடிய விரைவில் நான் உங்களுக்கு ஒரு நல்ல விசயம் சொல்ல போறேன்.அது வரை கொஞ்சம் பொறுமையா இருங்க"என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்து விட்டாள்.

அவருக்கா விசயம் தெரியாமல் போகும்.அவரும் பருவ வயதை கடந்து வந்தவர் தானே. தன்னோட பெண் ஒருவனிடம் காதல்வயப்பட்டு இருக்கிறாள் என்று உணர்ந்து விட்டார்.கண்டிப்பாக ஒரு நல்லவனை தான் தேர்ந்தெடுப்பாள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.அவள் வாயாலேயே வந்து சொல்லட்டும் என்று சிரித்து கொண்டார்.

ராஜா சொன்ன இடத்தில் சஞ்சனா காத்து இருக்க,ராஜாவும் கொஞ்ச நேரத்தில் தூரத்தில் வருவது தெரிந்தது.

"ஹே சஞ்சனா இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க"என்ற குரல் கேட்டு ஒரு நிமிடம்  திரும்பினாள்.Royal enfield bike இல் ஒயிலாக அமர்ந்து இருந்தவனை பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட்டாள்.

சஞ்சனா முன் முதல் மோதல் ஆரம்பிக்குமா ?


[Image: images-30.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
#43
Semma Interesting and fantastic update bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#44
super update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
#45
Wonderful bro. Is he still earning 25k?
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
#46
(29-07-2023, 06:29 AM)Rangushki Wrote: Wonderful bro. Is he still earning 25k?

That salary is 4 years back bro,and he is earning 70 % more now.And he have one problem to go to next level.Now sanjana will enter his life and rectify the issue he will get much more salary.that one by one in this story will happen.Sanjana will do much more wonders in his life.interestingly sujitha also will enter in the climax of the story .
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
#47
Awesome update
[+] 1 user Likes Yesudoss's post
Like Reply
#48
Good to read a romantic story after long time
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
#49
Wonderful bro,
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
#50
Episode -7

ஜார்ஜ் சஞ்சனாவிடம்"ஹே சஞ்சனா இங்க என்ன பண்ணிட்டு இருக்கே,இன்னிக்கு உனக்கு லீவு தானே?

சஞ்சனா ஜார்ஜ்ஜை பார்த்து திடுக்கிட்டாலும் உடனே சுதாரித்து "நான் இன்னிக்கு சேல்ஸ் டீமுடன் ஃபீல்டுக்கு போறேன் ."

ஓகே கமான் சஞ்சனா,நானே உனக்கு சவுத் டீமில் best guy arrange பண்ணி தரேன்.

வேண்டாம் ஜார்ஜ் , நான் ஏற்கனவே arrange பண்ணி ஆச்சு.யூ carry on

அதற்குள் ராஜா மற்றும் அவனது நண்பன் ராஜேஷ் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர்.

ஜார்ஜ்க்கு அவர்களை பார்த்தவுடனே முகமே இருண்டு விட்டது.

இந்த low class பசங்க கூடவா போக போறே, பார்க்கவே அருவருப்பா இருக்கு என்று ஜார்ஜ் கூறியவுடன்.

ராஜா உடனே வண்டியை விட்டு கீழே இறங்கி,ஏய் யாரை பார்த்துடா low class என்று கூறின?என்று சட்டையை மடித்து கொண்டு சண்டைக்கு வந்து விட்டான்.

சஞ்சனா உடனே குறுக்கில் புகுந்து"ஜார்ஜ் Mind your words.நீ பேசறது சுத்தமா சரி இல்ல.As a new joinee நான் ஒரு நாள் field visit போய் ஆகனும்.அது யார் என்று decide பண்ண வேண்டியது நீ கிடையாது,TL மற்றும் Hr மட்டுமே.நான் ஏற்கனவே இரண்டு பேருக்கும் கிட்ட யார் கூட போக போறேன் என்று சொல்லி ஆச்சு.நீ என்னோட வேலை பார்க்கும் சக ஊழியர் மட்டுமே.அந்த எல்லையோட நில்லு.தயவு செய்து இவங்ககிட்ட இப்போ மன்னிப்பு கேள்"

ஆனால் ஜார்ஜ் மன்னிப்பு எதுவும் கேட்காமல் அவர்களை முறைத்து கொண்டே வண்டியை முறுக்கி கொண்டு போய் விட்டான்.

"சாரி ஃப்ரெண்ட்ஸ் அவன் பேசிய பேச்சுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்",சஞ்சனா சொல்ல

அட விடுங்க சிஸ்டர்,இதுக்கு போய் நீங்க மன்னிப்பு கேட்டுட்டு.இது எங்களுக்கு ஜூஜுபி மேட்டர்.இதெல்லாம் எங்க அரசியல் வாழ்வில் சாதாரணம்.என்ன மச்சான் நான் சொல்றது என்று ராஜேஷ் சிரித்து கொண்டே ஸ்டைலாக,ராஜா தோளில் கை போட

ராஜா உடனே தோளில் போட்ட அவன் கையை எடுத்து முறுக்கி முதுகில் ஒரு செல்ல குத்து குத்தி"நம்ம டீமில் இருந்து இவளுக்கு துப்பு கொடுக்கும் களவாணி நீ தானா"

அய்யயோ எப்படி கண்டுபிடித்தான் என்றே தெரியலையே,என்ன பண்றது ஒரு ஆக்டிங் குடுப்போம் "அய்யயோ விடுடா வலிக்குது"ராஜேஷ் நடிக்க

"அய்யோ பாவம் அவரை விடுங்க நான் தான் உங்களை பற்றி அவரிடம் கேட்டேன்"சஞ்சனா சொல்ல ராஜா கையை விட்டு விட்டான்.

"பரவாயில்லயே,சிஸ்டர் பேச்சுக்கு மரியாதை இருக்குது "ராஜேஷ் கலாய்க்க

டேய் என்று மீண்டும் அடிக்க ராஜா கையை ஓங்க ராஜேஷ் உடனே  "சிஸ்டர் என்னை காப்பாற்றுங்க"என்று சஞ்சனா பின் ஒளிந்து கொண்டான்.

அப்பொழுது மேலும் ராஜாவின் இரு நண்பர்கள் வாசு மற்றும் சீனிவாசன் வந்து சேர்ந்தனர்.ராஜா அவன் நண்பர்களை அவளிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.ராஜேஷிடம் மட்டும் உங்க ரெண்டு பேருக்கு அறிமுகமே தேவை இல்லை என்று சிரித்தான்.

ராஜா அவளை பார்த்து "சஞ்சனா உனக்கு என்ன வேணும் டீயா இல்லை காப்பியா"

நீங்க என்ன சாப்பிடுவீங்க ?

இங்க நம்ம முருகேஷ் அண்ணன் ஸ்பெஷல் எப்பவுமே லெமன் டீ தான்.அதை தான் எப்பவுமே சாப்பிடுவேன்.

அப்ப எனக்கும் அதையே சொல்லுங்க

ராஜா உடனே முருகேஷ் அண்ணனை பார்த்து " அண்ணா 3 டீ ,2 லெமன் டீ போடுங்க

டீக்கடை அண்ணன் சுடுதண்ணீரில் டீ டிகாஷன்,லெமன்,புதினா மற்றும் இஞ்சியை தட்டி போட்டு கொடுக்க ,ராஜா சொன்னது போல் அமிர்தமாக இருந்தது.

"என்ன ரெண்டு பேரும் இன்னிக்கு மீட்டிங் வரவே இல்ல" ராஜா வாசுவை பார்த்து கேட்டான்

உடனே சீனிவாசன் "அந்த கொடுமையை ஏன் கேட்கிற ராஜா,நேற்று நானும் இவனும் சரக்கடிக்க வியாசர்பாடி பாருக்கு போனோம்.செமயா குடிச்சோம்.தலைவர் ஃபுல் மப்பு.நான் எப்படியோ தட்டு தடுமாறி வீட்டுக்கு போய்ட்டேன்.ஆனா இவரு மப்பாகி இவர் ஒட்டி வந்த வண்டியிலேயே படுத்துட்டார்.அப்போ தீடீர் என்று கண்ணில் லைட் வெளிச்சம் பட்டு என்னவென்று முழிச்சு பார்த்து இருக்கார்.அது இவர் ஏரியா போற பஸ்.உடனே தலைவர் வண்டியை எடுத்து வந்ததை மறந்து விட்டு பஸ்ஸில் தாவி ஏறி விட்டார்."என்று சீனிவாசன் கூறும் பொழுதே டீ குடித்து கொண்டு இருந்த சஞ்சனா குபுக்கென்று சிரித்து விட்டாள்.அதில் அவள் குடித்த லெமன் டீ துளிகள் அவன் மேல் பட்டு விட்டது.

அதற்கு உடனே சஞ்சனா சாரி சாரி என்று சொல்ல

ராஜேஷ் உடனே "என்ன சஞ்சனா எங்க மேல வாந்தி எடுத்தாலே நாங்க துடைச்சிட்டு ஜஸ்ட் லைக் தட் போவோம்.நீ என்னடான்னா தம்மாத்துண்டு டீ பட்டதுக்கு சும்மா சாரி சாரி என்று கேட்கிற"

ராஜாவும் "ஆமா சஞ்சனா எங்களுக்குள் என்ன நடந்தாலும் நாங்க சாரி கேட்கவே மாட்டோம்.நீயும் எங்க பிரெண்டா இருக்க விருப்பப்பட்டால் சாரி கேட்காதே"

"சரி இதுக்கு மேல் நான் சாரி கேட்க மாட்டேன் "

"நீ மேலே சொல்லு சீனி"ராஜா கேட்க.

தலைவர் காலையில் எழுந்து எனக்கு ஃபோன் பண்ணார்.டேய் சீனி  என் வண்டிய  எவனோ வீடு புகுந்து ஆட்டைய போட்டு விட்டான் என்று சொன்னான்.என்னடா சொல்ற உன் வண்டியை காய்லாங் கடை எடைக்கு கூட போட முடியாதே, அதை போய் எவன் எடுக்க போறான் என்று நான் கேட்டேன்.இல்லடா சீனி நேற்று wine ஷாப்பில் இருந்து நேரா பைக்கில் நான் வீட்டுக்கு தான் வந்தேன்.bike key கூட காணல என்று இவன் பேசும் போது இவன் பொண்டாட்டி பிடரியில் படாரென்று ஒரு அடி கொடுத்து டேய் லூசு வீட்டுக்கு பஸ்ஸில் தான் வந்தே என்று கூற ரெண்டு பேரும் அலறி அடித்து கொண்டு wine ஷாப் போய் பார்த்தா வண்டி விட்ட இடத்திலேயே சாவியோடு நிக்குது.
ஒரு ஈ,காக்கா கூட வந்து வண்டியில் உட்காரல.தலைவர் வண்டி கண்டிஷன் அப்படி என்று சீனு சொல்ல சொல்ல அங்கு இருந்த எல்லோரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

அப்புறம் என்ன ஆச்சு,ராஜா சிரித்து கொண்டே கேட்க

"அப்புறம் நடந்த கொடுமைய கேளு ராஜா,சாவியோடு வண்டி தனியா  இருப்பதை பார்த்து எவனோ ஒரு திருடன் ஸ்டார்ட் பண்ண பார்த்து இருக்கான்.அவனும் ரொம்ப சந்தோசமாக இன்னிக்கு சரியான வேட்டை தான் என்று ஸ்டார்ட் பண்ண பார்த்து இருக்கான்.எவ்வளவோ முயற்சி பண்ணியும் வண்டி ஸ்டார்ட் ஆகவே இல்ல.அய்யா வண்டி தான் லேட்டஸ்ட் edition ஆச்சே.வண்டி கிக்கர் அடிச்சா கூட ஸ்டார்ட் ஆகாது.தள்ளிட்டு 50 மீட்டர் தூரம் ஓடினா தான் ஸ்டார்ட் ஆகும் என்ற விவரம் அவனுக்கு தெரியல.கடைசியில் நொந்து கொண்டு வண்டியில் சாவி மட்டும் வைத்தா மட்டும் பத்தாது.பெட்ரோலும் போட்டு வைடா வெண்ணெய் என்று லெட்டர் எழுதி வைத்து விட்டு போய் இருக்கான் என்று கூற அங்கு பலத்த சிரிப்பொலி எழுந்தது.

ம்ம் ,அடுத்து என்ன ஆச்சு?

அப்புறம் என்ன வண்டி எடுத்து வருவதற்குள் மீட்டிங்கே முடிஞ்சு போச்சு என்று சொல்ல மீண்டும் அனைவரும் சிரித்தனர்..

"அப்படி என்ன வண்டி "சஞ்சனா கேட்க,.

உடனே சீனி,இந்த வண்டி தான் என்று காண்பித்தான்.இந்த வண்டி இந்தியா சுதந்திரம் அடைஞ்ச அப்போ வாங்கின வண்டி.

இந்த வண்டி எல்லாம் இன்னும் ஒடுதா?சஞ்சனா கேட்க

"நம்ம கரகாட்டக்காரன் படம் வண்டி மாதிரி தான்,எப்ப வேணா, எங்க வேணா நிக்கும்.யார் யார் கிட்ட இருந்தோ கைமாறி இப்போ நம்ம வாசுகிட்ட வந்து இருக்கு." ராஜேஷ் கிண்டல் பண்ண அங்கும் மீண்டும் சிரிப்பு எழுந்தது.

வாசு "டேய் ரொம்ப ஒட்டாதீங்கடா,இன்னும் கொஞ்ச நாளில் நானும் புது வண்டி வாங்கிடுவேன்."

ராஜா வாசுவிடம் "புது வண்டி வாங்குவது பெருசு இல்ல மச்சான்,அதை குடிச்சிட்டு இதே மாதிரி எங்கேயாவது விட்டுட்டு போன அவ்வளவு தான்.இப்போ கிடைச்ச மாதிரி அப்புறம் மீண்டும் கிடைக்காது"

ஓகே மச்சான்,இதுக்கு மேல அளவா குடிக்கிறேன் போதுமா?

அப்ப கூட குடியை விட மாட்டே இல்ல வாசு ?

அது எப்படி ராஜா விட முடியும்.கொஞ்ச கொஞ்சமாக கம்மி வேணா பண்ணிக்கிறேன்?

என்னவோ பண்ணி தொலை.

சஞ்சனா அவர்களை பார்த்து"நீங்க எப்பவுமே இப்படி தான் ஜாலியா பேசிட்டு இருப்பீங்களா"

ராஜா"ஆமா சஞ்சனா,என்ன கஷ்டம் இருந்தாலும் சரி இவங்க கூட கொஞ்ச நேரம் இருந்தா போதும் உடனே மனசு லேசாகி விடும்.
சரி சஞ்சனா நாம கிளம்பலாமா?"

சஞ்சனா ராஜா வண்டியில் ஏறி உட்கார,
ராஜேஷ் ராஜாவிடம் ஓடிவந்து"டேய் மச்சான் நீ எப்படிடா நான் சஞ்சனாவுக்கு தகவல் கொடுத்தேன் என்று கண்டு பிடிச்சே"

"நான் எங்கே கண்டு பிடிச்சேன் நீயே தான் உளறி கொட்டின "

நானா..! எப்ப மச்சான் உளறினேன்.?

"சஞ்சனா மன்னிப்பு கேட்டப்ப,நீயா வந்து ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி பேச ஆரம்பிச்ச பாரு,அப்போ உன்கிட்ட சந்தேகமாக தான் கேட்டேன், நீ தானே என்னை சஞ்சனா கிட்ட மாட்டிவிட்டது என்று ! நீயும் உடனே ஒத்துகிட்ட. சிம்பிள்"

"அப்போ நீயா கண்டுபிடிக்க வில்லையா,நானா தான் உளறி கொட்டிடேனா!!

"இதுக்கு பேர் போட்டு வாங்கறது.வரட்டா"

சஞ்சனாவும் தன் பங்குக்கு"நீ ரொம்ப வேஸ்ட் அண்ணா போங்க,இப்படியா மாட்டிகிறது."

ராஜேஷ் பெருமூச்சுவிட்டு"அப்போ நான் தான் ஜோக்கரா,ரெண்டு பேரும் நல்லா இருங்கடா" என்று வாழ்த்தி விட்டு ராஜேஷும் கிளம்பினான்.

சஞ்சனா அருகில் அமர்ந்து வர, மே மாத வாடை காற்று கூட இதமான குளிர் தென்றலாய் தோன்றியது.நீண்ட நாட்கள் கழித்து மனம் முழுக்க உற்சாகத்தோடு வண்டியை ஓட்ட அது இறக்கை கட்டி பறந்தது.வறண்ட நிலமாய் மாறி இருந்த மனதில் மழை சாரல் போல் அவள் பெய்ய காதல் விதை மீண்டும் விழுந்தது.

அவ்வளவு சீக்கிரம் காலம் தான் இவர்களை ஒன்று இணைத்து விடுமா என்ன? இதற்கு மேல் தான் காலம் தன் விளையாட்டுக்களை நிகழ்த்த விருக்கிறது.காலம் இவ்விருவரையும் பிரித்து,சேர்த்து என்ற கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடி கடைசியில் காமத்தில் ஒன்று சேர்க்க போகிறது.வரும் பதிவுகளில்


Hi friends இந்த கதை ஒரே ஒரு வாசகரின் விருப்பத்திற்காக அவர் கொடுத்த oneline ஸ்டோரியை என் கற்பனை கலந்து எழுத தொடங்கிய கதை.நான் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைக்கிறது.உங்களுக்கும்பிடித்து இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.என்னால் முடிந்த அளவு தினமும் update தர முயற்சி செய்கிறேன்.
[Image: IMG-20230729-WA0008.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
#51
super and nice update
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
#52
Super comedy,friends portions are awesome
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
#53
Super update
[+] 1 user Likes Gandhi krishna's post
Like Reply
#54
very nice
[+] 1 user Likes NityaSakti's post
Like Reply
#55
Good one
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
#56
(29-07-2023, 10:02 PM)mahesht75 Wrote: super and nice update

Thanks brother
Like Reply
#57
(30-07-2023, 04:23 AM)M.Raja Wrote: Super comedy,friends portions are awesome

நன்றி நண்பா
Like Reply
#58
(30-07-2023, 05:01 AM)Gandhi krishna Wrote: Super update

Thank you
Like Reply
#59
(30-07-2023, 07:07 AM)NityaSakti Wrote: very nice

Thank you
Like Reply
#60
(30-07-2023, 09:28 AM)Deepak Sanjeev Wrote: Good one

Thank you
Like Reply




Users browsing this thread: 54 Guest(s)