♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
#1
Heart 
Episode 1

வருடம் 2016


பெங்களூர் சிட்டி இரயில்வே ஸ்டேஷன்.
காலை 7 மணி

பல ஊர்களுக்கு செல்ல வேண்டிய ரயில்கள் புறப்பட தயாராக இருந்தன.

அப்பொழுது ஒலி பெருக்கியில் மைசூரில் இருந்து காட்பாடி அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் வண்டி எண் 12610 சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்தில் பிளாட்பார்ம் நம்பர் 4 ஐ வந்தடையும் என்று அறிவிப்பு பல மொழிகளில் திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருந்தது.

 4 வது பிளாட்பாரம் அப்பா ,வாப்பா மெதுவாக படிக்கட்டு வழியா ஏறி இறங்கிடலாம் என்று அந்த பதினைந்து வயது மங்கை அழைக்க இருவரும் படிக்கட்டு ஏற தொடங்கினர்.தீடீரென அவருக்கு கண் இருட்டி கொண்டு வந்தது.மூச்சு விட சிரமப்பட்டு உடல் முழுக்க வியர்த்தது.கையை தூக்க முடியாமல் நெஞ்சை  பிடித்து கொண்டு அப்படியே உட்கார 

அப்பா என்னப்பா ஆச்சு அந்த இள நங்கை கதற 

தெரியலம்மா ,நெஞ்சு ஒருபக்கமா வலிக்குது என்று தந்தை கூற ,அந்த பெண் யாராவது உதவிக்கு வருமாறு அழைத்தாலும் யாரும் கிட்ட கூட வரவில்லை.ஏதும் அறியா ஊரில்
வெளியே ஓடி சென்று ஆட்டோவை அழைத்து வர அந்த பேதை பெண் ஓடினாள்.
அப்பொழுது ஊருக்கு செல்ல வந்த இரு வாலிபர்கள் கும்பலாக கூட்டம் கூடி இருந்ததை பார்த்து என்னவென்று எட்டி பார்க்க ஒரு வயதான மனிதர் நெஞ்சு வலியில் துடித்து கொண்டு இருப்பதை பார்த்து பதறினர்.

முதலில் எல்லோரும் அவர் மூச்சு விட கொஞ்சம் வழி விடுங்க என்று கத்தினர்.முதல் உதவி செய்தும்  அவர் வலி இன்னும் குறையாமல் இருக்க உடனே அவரை போர்டர் லக்கேஜ் தூக்கும் டிராலியில் வைத்து தள்ளி கொண்டு வெளியே பறந்தனர்.பார்க் செய்யப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தில் அவரை அமர்த்தி பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு triples அடித்து ,கை காட்டி தடுக்க முயன்ற ட்ராஃபிக் போலீஸுக்கு தண்ணி காட்டி விட்டு மின்னலேன பறந்தனர்.

பக்கத்தில் உள்ள MR ஹாஸ்பிடல் CASUALITY கொண்டு சென்று டாக்டரிடம் காண்பித்தனர். HEART ATTACK வந்ததை டாக்டரும் உறுதி செய்து உடனடியாக 15000 ரூபாயை கட்டினால் மேற்கொண்டு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும் என்று கூறினார்.

உடனே அதில் 25 வயது உள்ள ஒரு வாலிபன் கேஷ் COUNTER ஓடி சென்று தன் தங்கையின் கல்யாணத்திற்கு வாங்கி வைத்து இருந்த மோதிரத்தை கொடுத்து 
"மேடம்  இந்த மோதிரத்தை வைத்து கொண்டு கொஞ்சம் RECEIPT போட்டு கொடுங்க,Emergency patient க்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கனும்.கொஞ்ச நேரத்தில் நான் பணம் எடுத்து கொண்டு வந்து இந்த மோதிரத்தை திருப்பி வாங்கி கொள்கிறேன்."

ஆனால் cash counter இல் இருந்த பெண் "சார் அதெல்லாம் முடியாது.போய் பணம் எடுத்திட்டு வாங்க அப்போ தான் நான் RECEIPT போட முடியும்."என முரண்டு பிடித்தாள்.

மேடம் பிளீஸ் புரிஞ்சிக்கோங்க ,அவர் உயிருக்கு போராடி கொண்டு இருக்கார்.இங்க பாருங்க நேற்று தான் இந்த மோதிரம் வாங்கினேன் அதனோட receipt இது .அரை சவரன் மோதிரம் இது.சரியா ஒரு மணி நேரம் கழித்து நான் பணம் கட்டி விட்டு இந்த மோதிரம் வாங்கி கொள்கிறேன்.

கேஷ் கவுண்டரில் இருந்த பெண்ணும் சற்று மனம் இளக "சரியா ஒரு மணி நேரம் கழித்து வந்து பணம் கட்டிடனும் சார்"

கண்டிப்பாக மேடம்

மீண்டும் casualty ஓடி வந்து,

"டாக்டர் பணம் கட்டி விட்டேன் ,சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க இந்தாங்க பணம் கட்டிய ரசீது,"

டாக்டர் அவனிடம் "இந்தாங்க அவரோட ஃபோன் தொடர்ந்து அடிச்சிகிட்டே இருக்கு எடுத்து பேசுங்க அப்புறம் நீங்க சரியான நேரத்தில் அவரை கொண்டு வந்ததால் உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்ல.தேவையான ட்ரீட்மென்ட் கொடுத்து ஆச்சு"

ரொம்ப நன்றி டாக்டர்.

போனை அழுத்தி "ஹலோ" என்று அந்த வாலிபன் பேச 

மறுமுனையில் அந்த பெண் குரல் அப்பா அப்பா என்று தேம்பி தேம்பி அழுதது.

இந்தம்மா பொண்ணு அழாதே,உங்க அப்பா நல்லா இருக்கார்.இங்க பக்கத்தில் உள்ள MR ஹாஸ்பிடலில் தான் அட்மிட் பண்ணி இருக்கோம்.நீ பதட்டப்படாமல் இங்கே CASUALITY வா.

ரொம்ப நன்றி சார்.நான் உடனே வரேன்.

அந்த வாலிபன் அங்கு இருந்த நர்சிடம் சென்று அந்த போனை கொடுத்து "சிஸ்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இவரோட பொண்ணு வந்து விடுவார்கள்.நான் கொஞ்சம் அவசரமாக கிளம்ப வேண்டி இருக்கு.அவர்களிடம் இந்த போனை மட்டும் கொடுத்து விடுங்கள்."

சரிங்க சார்.அந்த நர்ஸ் வாங்கி கொண்டார்.

அவனிடம் கூட வந்தவன்"டேய் மச்சான் காலையில் வெறும் வயிற்றில் உன்னை ரயில் ஏற்ற வந்தது.ஒரு டீ யாவது வாங்கி கொடுடா."என்று கேட்க

அதுக்கென்ன மாமா, வா கேன்டீன் போவோம்.

கேன்டீனில் டீ அருந்தியவாறே,"டேய் உன் தங்கச்சிக்கு நாளைக்கு கல்யாணம் ஆசையா வாங்கி வைத்து இருந்த மோதிரத்தை இங்கே கொடுத்துட்டு அப்படியே போறே.அந்த பொண்ணு வருகிற வரை இருந்து வாங்கிட்டு போகலாம்டா."

ஆனால் அவனோ பதிலுக்கு "இல்ல மாமா,அவரை பார்க்கும் போதே தெரியுது.அவங்க கிட்ட காசு இல்லை என்று.ஏதோ நம்மால் முடிந்த சின்ன உதவி விடு."

உனக்கு எப்படி தெரியும்,அவங்க கிட்ட காசு இல்லையென்று,அதுவும் நீயே உன் தங்கச்சி கல்யாணத்திற்கு வேறு கடன் வாங்கி வைத்து இருக்கிறாய்.

டேய் மாமா,அவர் வைச்சிக்கிட்டு இருக்கிற போனை பாரு,பட்டன் மேல் நம்பர் எல்லாம் அழிந்து ரெண்டு பட்டன் உடைந்து 50 ரூபா key pad கூட மாற்றாமல் வைச்சு இருக்கார்.அதில் இருந்தே தெரியுது அவர் கிட்ட காசு இல்லையென்று.

சரி உன் தங்கச்சி கல்யாணத்திற்கு இப்போ என்ன பிரசெண்ட் பண்ணுவ,

அதுவா மாமா,இருக்கவே இருக்கான் நம்ம ஐந்து வட்டி அழகேசன்.ஏற்கனவே தங்கச்சி கல்யாணத்திற்கு ரெண்டு லட்சம் அவன் கிட்ட கடன் வாங்கி இருக்கேன்.இதுக்கும் சேர்த்து வாங்கிட்டா போச்சு.

என்னவோ பண்ணி தொலை 

சரி மாமா,ட்ரெயின் miss ஆயிடுச்சு.வேற ட்ரெயின் என் ஊருக்கு இப்போ உடனே கிடையாது.என்னை கொஞ்சம் மைசூர் சர்க்கிளில் ட்ராப் பண்ணிடு.

ஏண்டா,சொந்த தங்கச்சி கல்யாணத்திற்கு கூட ஒரு நாள் முன்னாடி போகாமல் இப்படி லேட்டாவா போவே.ஒரு வாரம் லீவு எடுத்து போய் தொலைய வேண்டியது தானே

டேய் நான் என்னடா பண்ணட்டும்,அந்த கொம்பெரி மூக்கன் லீவே கொடுக்கல.என் பெரியம்மா ,பெரியம்மா பசங்க கூட நேற்றே கிளம்பிட்டாங்க.நான் இப்போ ஊருக்கு போய் இறங்கிய உடனே என் தங்கச்சி என்னை துரத்தி துரத்தி அடிக்க போறா

வாங்கு மச்சான் நல்லா வாங்கு .உனக்கு நல்லா வேணும்.அவ்வளவு கஷ்டமா இருந்தால் பேசாம இந்த வேலையை விட்டு வேற வேலை தேட வேண்டியது தானே.

அது தான் மச்சான்,சென்னையில் ஒரு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இருக்கேன்.maximum கிடைக்கும் என்று நினைக்கிறேன்.அப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர் சென்னை சென்று விடுவேன்.

சரி வாடா போலாம் நேரமாச்சு.

அந்த யுவதி வந்து,

சிஸ்டர் என் அப்பா எப்படி இருக்கார்.

எந்த பேஷண்ட்மா,

அப்பொழுது மேசையில் இருந்த செல்போனை பார்த்து " இது எங்க அப்பாவோட செல்ஃபோன் "என்று அந்த பெண் கூற

"ஓ இவரா,இவர் நல்லா இருக்கார்."

சிஸ்டர் எங்க அப்பாவை பார்க்கலாமா ?

ஒரு பத்து நிமிஷம் கழித்து பார்க்கலாம்.

அப்புறம் சிஸ்டர் எங்க அப்பாவை இங்கே அட்மிட் பண்ண நபர் யாரு,

"அவர் அப்பவே கிளம்பிட்டாரு" என்று சிஸ்டர் சொல்லும் போதே,அந்த இருவர் படிக்கட்டில் இறங்கியதை பார்த்து அதோ சிகப்பு கலர் பேக் மாட்டி  கொண்டு போறாரு பாரு அவர் தான் என்று சிஸ்டர் கை காட்டிய திசையில் அந்த யுவதி ஓடினாள்.

சார் ஒரு நிமிசம் நில்லுங்க என்று கத்தி கொண்டு அந்த பெண் ஓடி வர,அந்த இருவரும் கவனிக்காமல் பைக்கில் அமர்ந்து சிட்டாய் பறந்தனர்.இருந்தும் அவன் முகம் அந்த யுவதியின் மனதில் கல்வெட்டு போல ஆழமாக பதிந்தது.

வார்டுக்கு திரும்பிய அந்த யுவதியை பார்த்து சிஸ்டர் ,"உன்னை உடனே கேஷ் கவுண்டர் வர சொன்னாங்க"என்று சொல்ல அவள் கேஷ் கவுண்டர் சென்றாள்.

மேடம் நீங்க என்னை வர சொன்னீங்க..!!

நீ யாரும்மா?

நான் ஆறுமுகம் பேஷன்ட்டோட பொண்ணு.

என்னது ஆறுமுகமா? இங்கே அட்மிட் பண்ணவர் முருகேசன் என்று தானே சொன்னார்.

மேடம் எங்க அப்பா நினைவு இல்லாமல் இருந்தார்.அதனால் அட்மிட் பண்ண வேண்டும் என்று ஏதோ ஒரு பேரை சொல்லி இருப்பார்.

சரி சரி ஏதோ ஒன்னு,பணத்திற்கு பதிலாக இந்த மோதிரத்தை கொடுத்துட்டு போய் இருக்கார்.நீ பணத்தை கட்டிட்டு இந்த மோதிரத்தை வாங்கிட்டு போ.

ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க மேடம்.

விறுவிறுவென வெளியே போன போது அவள் பளிங்கு கழுத்தில் மின்னி கொண்டு இருந்த தங்க செயின் வரும் பொழுது காணாமல் போய் இருந்தது.

மேடம் இந்தாங்க என்று பணத்தை கட்டி விட்டு மோதிரத்தை பெற்று கொண்டு,அந்த மோதிரத்தை பார்த்து "யாருடா நீ ,மின்னல் போல வந்தே,எனக்கென்று இந்த உலகில் ஒரே ஒரு உறவாய் இருந்த என் அப்பாவை மீட்டு கொடுத்து விட்டு மின்னல் போல் மறைந்து விட்டாயே"என்று தனக்குள்ளேயே கேட்டு கொண்டு அந்த மோதிரத்தை பத்திரப்படுத்தி கொண்டாள்.

அவனோ தன் ஊருக்கு செல்ல வேலூர் பஸ் ஏறி தன் தங்கையின் கல்யாணம் காணும் ஆவலில் சென்று கொண்டு இருந்தான்.

இவர்கள் இருவர் எப்பொழுது மீண்டும் சந்திப்பார்கள்?அவன் பேர் ,அவன் எந்த ஊர் ,அவன் எங்கு வேலை செய்கிறான்?எதுவும் இவளுக்கு தெரியாது.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Disclaimer

இதுவும் ஒரு short ஸ்டோரி.ஒரு காதல் கதை.முடிவு சுபமாகவே இருக்கும்.நீங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சராசரி மனிதனின் ஏன் அது உங்கள் கதையாக கூட இருக்கலாம்.துளியும் காமம் வராது.ஆதலால் காமத்தை தேடி வரும் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.பிடித்து இருந்தால் படியுங்கள்.இல்லை என்றால் கடந்து விடுங்கள்.என்னோட இரண்டாவது கதை "சென்னையில் ஒரு நாள் இரவில் ஜெனி" நாளை கடைசி update வந்து முடிவுறும்.இந்த கதை தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு கமென்ட் செய்யுங்கள்
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply
#3
ஆரம்பம் நன்றாக உள்ளது நண்பா ஏதேனும் ஒரு சில இடங்களில் இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் காட்சிகள் வைத்தாள் நன்றாக இருக்கும்
[+] 1 user Likes Mr.Romeo's post
Like Reply
#4
(24-07-2023, 12:45 AM)Mr.Romeo Wrote: ஆரம்பம் நன்றாக உள்ளது நண்பா ஏதேனும் ஒரு சில இடங்களில் இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் காட்சிகள் வைத்தாள் நன்றாக இருக்கும்

காதல் வரும் நண்பா,ஆனால் காமம் வராது.இது ஒரு முக்கோண காதல் கதை.காதலில் தோல்வி அடைந்து இருப்பவர்களுக்கு இந்த கதை நிச்சயம் நெருக்கமாக உணருவர்
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply
#5
Very nice.
[+] 1 user Likes rainbowrajan2's post
Like Reply
#6
ஆரம்பமே மிகவும் அருமையாக இருக்கிறது சூப்பர் நண்பா சூப்பர்
[+] 3 users Like omprakash_71's post
Like Reply
#7
Nice start
[+] 2 users Like Steven Rajaa's post
Like Reply
#8
Good start bro
[+] 2 users Like M.Raja's post
Like Reply
#9
Heart 
Super
[+] 2 users Like Sree85221's post
Like Reply
#10
Episode -2

வருடம் 2023
ஏழு வருடங்களுக்கு பிறகு

"வினோத் ஒரு நிமிஷம் என்னோட கேபின் உடனே வாங்க" HR மிருதுளா அழைத்தாள்.

மிருதுளா வினோத்தை பார்த்து "ஹே வினோத்,இவங்க உங்க டீம்ல இன்னிக்கு ஜாயின் பண்ணி இருக்காங்க,இவங்களுக்கு  வேலை பற்றிய விவரம் எல்லாம் சொல்லி கொடுங்க."

Bye the bye சஞ்சனா. இவர் வினோத் உங்க TL,உங்க ROUTINE JOB பற்றி எல்லாம் சொல்லி கொடுப்பார்.BEST OF LUCK FOR YOUR JOB.மிருதுளா சஞ்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்தாள்.

YAA THANK YOU VERY MUCH மிருதுளா,என்று சஞ்சனா புன்னகைக்க அவள் முத்து பற்கள் பளீரென மின்னியது.

வினோத் சஞ்சனாவை அழைத்து சென்று,

சஞ்சனா உங்க சீட் இது.நம்ம கம்பெனி பல்வேறு வழிகளில் விளம்பரம் செய்யும்.அதை பார்த்து கஸ்டமர் ஃபோன் மூலமாகவும் நம் கம்பெனி website மூலமாகவும்  ENQUIRY செய்வார்கள். அவர்களின் DETAILS இந்த LEAD BASKET இல் வந்து பதிவு ஆகி கொண்டே இருக்கும்.நீங்கள் இதில் வந்து விழும் மொபைல் நம்பரை பார்த்து அவரிடம் நம்ம PRODUCT DETAILS சொல்லி அந்த ஆர்டர் எடுக்க வேண்டும்.உங்களுக்கான MONTHLY TARGET details நான் email பண்றேன்.அதை நீங்கள் முடிக்கும் பொழுது உங்களுக்கு ADDITIONAL INCENTIVE கிடைக்கும்.உங்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் நான் பக்கத்து கேபினில் தான் இருப்பேன்.என்னை அழையுங்கள்.BEST OF LUCK TO DO YOUR TARGET. என்று வினோத் கை நீட்ட

THANK YOU VINOTH என்று சஞ்சனாவும் கை குலுக்க ,அவள் பஞ்சு போன்ற உள்ளங்கையின் மென்மையை உணர்த்தியது.

உடனே அதை பார்த்து கொண்டு இருந்த இருவர்
"வினோத் உங்க பையனுக்கு வரும் பொழுது DIAPER வாங்கிட்டு வரணுமாம் என்று உங்க பொண்டாட்டி சொல்ல சொன்னாங்க என்று பக்கத்தில் உள்ள டீம் மெம்பர் கலாய்க்க

அடப்பாவிங்களா,கையை தான்டா குடுத்தேன்.அதுக்கேவா !சரி சஞ்சனா நீங்க உங்க வேலையை பாருங்க என்று விடை பெற்றான்.

பாலாஜி அரக்க பறக்க ஓடிவந்து"டேய் ஜார்ஜ்,நம்ம டீமில் ஒரு சூப்பர் ஃபிகர் வந்து இன்னக்கி ஜாயின் பண்ணி இருக்கு, "
தங்க நிற தேகம்,சுண்டி விட்டா சிவந்து போகும் கலர்,ஆரஞ்சு சுளை உதடுகள்,சிக்கென்ற இடுப்பு,செதுக்கி வைக்கப்பட்ட அவள் கனிகள்.ஆப்பிள் போல கன்னம்,கழுத்து,மூக்கு இன்னும் சொல்லி கிட்டே போகலாம்.எடுப்பான நாசியில் இருக்கும் சின்ன மூக்குத்தி, சிவந்த நெற்றியில் இரு புருவங்களுக்கு இடையே சின்ன சந்தன கீற்று.சாமுத்திரிகா லட்சணம் படி எது எது எப்படி இருக்கனுமோ அப்படி இருக்கா,சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தேவலோகத்தில் இருந்து வந்த தேவதை மாறி இருக்கா,என்று அவள் அழகை பாலாஜி வர்ணித்தான்.

"அப்படியா ,அப்ப உடனே  போய்  பார்க்கலாம் வாடா",ஜார்ஜ் தன் இருக்கையில் இருந்து எழுந்து அவளை பார்க்க பாலாஜியை துணைக்கு அழைத்தான்.

ஜார்ஜ் சென்று சஞ்சனா அழகை பார்த்து மயங்கி,"டேய் பாலாஜி நீ வர்ணிச்சதே ரொம்ப ரொம்ப கம்மிடா,அதை விட பல மடங்கு அழகா இருக்கா இவ. இவ்வளவு அழகான பொண்ணை நான் என் வாழ்கையில் பார்த்தததே இல்லடா

ஆமாடா ஜார்ஜ் ,இந்த பொண்ணை கட்டிக்க யாருக்கு குடுத்து வச்சு இருக்கோ

ஜார்ஜ் அவனை கோபமாக பார்த்து,"டேய் அந்த லக்கி person நான் தான்டா"

"டேய் அப்போ நீ இப்ப லவ் பண்ற காயத்ரி"

இதற்கு மேல் காயத்ரி என்னோட பத்தாவது exlover.இவ தான் இனிமே என்னோட புது லவ்வர்.

டேய் ஜார்ஜ் , இங்க இருக்கிற பொண்ணுங்க வேணா உன் பின்னாடி சுற்றலாம்.ஆனா இவ உன்கிட்ட அவ்வளவு சீக்கிரம் மடிய மாட்டா.

"டேய் கடலில் எந்த மீனுக்கு எப்படி வலை வீசனும் என்று எனக்கு தெரியும் போடா.",ஜார்ஜ் கூறினான்.

டேய் ஜார்ஜ் இது சாதாரண மீன் மாதிரி தெரியல,சுறாடா உன் வலையையே கிழிச்சி போட்டுடும்.

சுறா மீனுக்கு என்ன வலை விரிக்கணுமோ அந்த வலையை நான் விரிச்சி பிடிச்சுக்கிறேன்.நீ உன் வேலையை பாரு என்று ஜார்ஜ் ,பாலாஜியை விரட்டினான்.

ஜார்ஜ் ,இங்கு வேலை செய்யும் பல பெண்களின் கனவு நாயகன். தன் உடலை தினமும் ஜிம் சென்று கட்டு கோப்பாக வைத்து இருப்பவன்.இவனிடம் மடியாத பெண்களே கிடையாது.எந்த பெண்ணை எப்படி வளைக்க வேண்டும் என்ற ரகசியம் அறிந்தவன்.

Hi சஞ்சனா ,Have a coffee என்று அவளிடம் ஜார்ஜ்  ஒரு கோப்பையில் காபி அருந்தி கொண்டே இன்னொரு  காஃபி கோப்பையை அவளிடம் நீட்டினான்.

நீங்க.... ?சஞ்சனா புருவத்தை வளைத்து கேட்க

Meeee...ஜார்ஜ் சிரித்து கமான் சஞ்சனா என்னை பற்றி நானே சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன்.என்னை தெரியாதவங்க இந்த ஆபீஸ்ல யாருமே கிடையாது.டாப் performer in our team.என்ன ரேகா என்னை பற்றி எல்லாம் ஒன்னும் சொல்லவில்லையா?

Hey சஞ்சனா,இவர் தான் ஜார்ஜ் .இங்க இருக்கிற எல்லா பெண்களோட ஹீரோ இவன் தான்.நம்ம டீம்மேட் .and star
performer .

ஓ ,nice to see you george.and thanks for your coffee.

அப்புறம் சஞ்சனா,ஒரு முக்கியமான விசயம்  இங்க நம்மளோட முதல் எதிரி sales டீம் தான்.நம்ம telesales டீமுக்கும் அந்த bloody sales டீமுக்கும் ஒரே கஸ்டமருக்காக அடிக்கடி clash வரும்.அப்படி பிரச்சினை வரும் பொழுது என்னை கூப்பிடுங்க.நான் உங்க பிரச்சினையை solve பண்ணி தரேன்.

Thanks for your concern ஜார்ஜ், அந்த மாதிரி பிரச்சினை வந்தால் நானே handle பண்ணிக்கிறேன்.இந்த தடவை மட்டும் நீங்க கொண்டு வந்த காஃபியை எடுத்து கொள்கிறேன்.அடுத்த தடவை எனக்கு தேவை என்றால் நானே போய் குடிக்கிறேன்.நீங்கள் எடுத்து வர வேண்டாம் நன்றி.என்று சொல்லிவிட்டு அமைதியாக சஞ்சனா வேலை பார்க்க தொடங்கினாள்.

ஜார்ஜ் முதல் முறை தான் மூக்கறுப்பட்டது போல் உணர்ந்தான்.

ச்சே ! எந்த பெண் ஆனாலும் முதல் முறை என்னை பார்க்கும் பொழுதே  என் அழகு மற்றும் ஸ்டைலை பார்த்து விழுந்து விடுவார்கள்.ஆணழகன் ஆன என்னையே அசிங்கப்படுத்தி விட்டாளே என்ற கோபம் வந்தது.

வா மச்சான் போன காரியம் என்ன ஆச்சு?பாலாஜி ஆர்வத்துடன் கேட்க

ஜார்ஜ் அவனை பார்த்து "நீ சொன்னது சரி தான் பாலாஜி,சுறா மீனாச்சே,நேரம் பார்த்து தான் வலை வீச வேண்டும்.பேரழகி என்ற திமிர் வேற நிறைய இருக்கு.இரு அடக்கி காட்டறேன்"

சஞ்சனா தன் ஹேன்ட் பேகில் இருந்து மோதிரத்தை வெளியே எடுத்தாள்.அதை பார்த்து "டேய் ஏழு வருஷம் எப்படி போனது என்றே தெரியவில்லை.ஆனா ஒருநாள் கூட நான் நினைக்காமல் இருந்ததே இல்லை.தினமும் என் கனவில் நீ வருகிறாய்.கனவில் வந்த நீ கூடிய விரைவில்  மீண்டும் நேரில் வருவாய் என்று மட்டும் நல்லா தெரியும்" மனதில் சொல்லி கொண்டு மீண்டும் அந்த மோதிரத்தை எடுத்து உள்ளே வைத்தாள்.

யார் அவன்? எங்கு வேலை செய்கிறான்?சஞ்சனாவால் மீண்டும் அவனை பார்க்க முடியுமா?.

அடுத்த எபிசோடில் கதையின் நாயகன் அறிமுகம்
[Image: images-55.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
#11
Bro Genelia eppo varuva
Like Reply
#12
(24-07-2023, 11:34 PM)Mr.Romeo Wrote: Bro Genelia eppo varuva

இன்று இரவு நண்பா,வேலை முடித்து மழையில் நனைந்து வீட்டுக்கு வர மிகவும் லேட் ஆகி விட்டது.இந்த கதையின் கதாபாத்திரம் introduction மட்டும் தேவைப்பட்டதால் வெறும் 15 நிமிடத்தில் எழுதி விட்டேன்.ஆனால் ஜெனிலியா கதை எழுத வேண்டும் என்றால் கண்டிப்பாக 2 மணி நேரம் மேல் தேவைப்படும்.அதனால் கண்டிப்பாக இன்று இரவு update வரும்
Like Reply
#13
Semma Interesting start nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#14
super brother. fantastic begining
Like Reply
#15
Episode -3

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா,
நேரம் வரும் பார்த்து இருந்து பாடு ராஜா ,
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா,
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
என்ற பாடல் தன் ear phone இல் ஒலிக்க,அதை ஹம்மிங் பண்ணி கொண்டு ஜாலியாக வண்டி ஓட்டி கொண்டு இருந்தான் இந்த கதையின் நாயகன்.மாநிறம், அகன்ற நெற்றி,சற்றே கூரான நாசி, சதுர முகம்,விரிந்த மார்பு,உயரம் 6 அடிக்கு 1" குறைவு.மீசை ஒன்றிரண்டு நரைத்து அவன் வயது 31 முடிந்து 32 என கட்டியம் கூறியது.பெயரும் ராஜா தான்.

தன் வண்டியை ஒரு டீக்கடையின் முன்பு நிறுத்தினான்.அங்கு ஏற்கனவே அவனின் நண்பர்கள் வாசு,ராஜேஷ்,சீனிவாசன், முத்து இருந்தனர்.

என்ன ராஜா இன்னிக்கி லேட்,ராஜேஷ் கேட்க

இல்ல மச்சான்,ஊருக்கு போய்ட்டு அப்படியே direct field வரேன்.அதான் லேட்.

டேய் அப்போ எனக்கு ஷூ வாங்கிட்டு வந்தீயா?ராஜேஷ் ஆர்வத்துடன் கேட்க

மறப்பேனா மச்சான்.ஆம்பூரில் இருந்து ஒரிஜினல் லெதர் ஷூ வாங்கி வந்து இருக்கேன்.சரியா இருக்கா என்று போட்டு பாரு?

ராஜேஷ் போட்டு பார்த்து விட்டு,சூப்பர்டா சரியா இருக்கு.எவ்வளவு விலை இது?

800 ரூபா மச்சான்.

ஓகே நான் gpay பண்ணி விடறேன்.

சீனிவாசன் அதை வாங்கி பார்த்து விட்டு "டேய் இதே பிராண்ட் husk puppies ஷூ தான் போன வாரம்  வாங்கினேன்டா.என்கிட்ட 1400 ரூபா ஷோரூம்காரன் புடுங்கிட்டான்."

மச்சான் ஆம்பூரில் எனக்கு தெரிந்த ப்ரெண்ட் கடை இருக்கு .அங்கே வாங்கினா நமக்கு விலை கம்மியா கிடைக்கும்.நெக்ஸ்ட் டைம் வேணும்னா சொல்லு,நான் என்னோட சொந்த ஊருக்கு போகும் போது வாங்கிட்டு வரென்.

ராஜா வாசுவை பார்த்து"அப்புறம் வாசு,காலையில் உன் பொண்டாட்டி துணியை எல்லாம் துவைச்சிட்டு வந்துட்டியா"

அதற்கு சீனிவாசன் "நீ வேற ராஜா பொண்டாட்டி துணி மட்டும் இல்ல,வீட்டை கழுவி தெருபெருக்கி கோலம் போடறது முதற்கொண்டு அய்யா தான்."

வாசு உடனே "டேய் சீனி நானாவது பொண்டாட்டி துணியை மட்டும் தான் துவைக்கிறேன்.ஆனா மாமியாரோட உள்பாவாடை,ஜாக்கெட் முதற்கொண்டு துவைக்கிற நீ என்னை பற்றி பேசலாமா? என்று சொல்ல அங்கு பலத்த சிரிப்பு அலை எழுந்தது.

"அவர்களாவது பரவாயில்லை,நம்ம முத்து நிலைமை இன்னும் மோசம்.காலையில் அவன் பொண்டாட்டிக்கு bed காஃபி கொடுப்பது முதற்கொண்டு சமையல் செய்வது வரை எல்லாமே    வீட்டில் தலைவர் தான் என்று ராஜேஷ் சொல்ல அந்த இடமே கலகலப்பானது.

அப்ப எல்லோர் வீட்டில் நடப்பது மதுரை ராஜ்ஜியம் என்று சொல்லுங்க .நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆகல.நான் தப்பிச்சேன் என்று ராஜா சிரிக்க

அதற்கு வாசு"டேய் performer ராஜா,ஜாலியா இருக்கிறேன் என்ற நக்கலா உனக்கு.கூடிய சீக்கிரம் உனக்கும் கல்யாணம் ஆகும்.அப்ப இருக்குடா உனக்கு"

அதெல்லாம் நடக்கும் போது பார்த்துக்கலாம் வாசு,சரி இன்னிக்கு மாசத்தோட கடைசி நாள்.நம்ம டீமில் எல்லோரும் incentive target achieve பண்ணி ஆச்சா?

இல்ல ராஜா,உன்னோட சேர்த்து நம்ம டீமில் ரெண்டு பேர் மட்டும் தான் target achieve பண்ணி இருக்கோம்.ஆமா இந்த மாசமும் நீ star award வாங்கிடுவே இல்ல.

பத்து மாசம் தொடர்ந்து வாங்கிட்டேன் வாசு.இந்த மாசமும் நேற்று வரை கரெக்ட்டா ontrack இல் தான் இருந்தது.ஆனா நேற்று நான் லீவ்.south zone பையன் ஒரே நாளில் நாலு நம்பர் போட்டு என்னை விட ஒரு நம்பர் முந்தி விட்டான்.இன்னிக்கு அவன் பண்ற நம்பரை விட நான் ரெண்டு நம்பர் ஜாஸ்தி பண்ணா மட்டும் தான் நான் star அவார்ட் வாங்க முடியும்.

சரி ஓகே ராஜா.என்னால் முடிந்த அளவு இன்னிக்கு உனக்கு நம்பர் நான் support பண்றேன்.

ரொம்ப தாங்க்ஸ்டா வாசு.

சேட்டா 5 டீ 3 வடை காசு எடுத்துக்கோங்க ,ராஜா காசு கொடுக்க

அப்போ ஒரு முதிய பெண்மணி வந்து அவனிடம் "அய்யா ரொம்ப பசிக்குது சாப்பிட ஏதாவது வாங்கி கொடுங்க"என்று கேட்டாள்.

சேட்டா அப்படியே நாலு இட்லி ஒரு வடைக்கும் சேர்த்து காசு எடுத்துக்கோங்க.அம்மா நீங்க வாங்கிக்கங்க

நீ நல்லா இருக்கணும் ராசா என்று அந்த பெண்மணி வாழ்த்த

அவன் பேரே ராஜா தாம்மா என்று ராஜேஷ் கூவினான்.

அப்படியே நான் அடிச்ச சிகரெட்டுக்கும் சேர்த்து காசு கொடுக்கலாம் இல்ல என்று சீனிவாசன் அங்கலாய்த்தான்.

சாரி சீனு, ஒரு சில விசயங்களுக்கு கண்டிப்பா நான் காசு செலவு பண்ண மாட்டேன்.அது உனக்கே தெரியும்.

ராஜேஷ் சீனுவிடம்"டேய் சீனு அவனும் சிகரெட்,தண்ணி எதுவும் அடிக்க  மாட்டான்.மற்றவருக்கு வாங்கியும் கொடுக்க மாட்டான் என்று உனக்கு தெரியும் தானே.சும்மா திரும்ப திரும்ப அதையே அவன் கிட்ட கேக்குற.அவன் நமக்கு டீ வாங்கி கொடுக்கறதே போதும் விடு"

சரி ஓகே ஃப்ரெண்ட்ஸ் எனக்கு appointment உடனே இருக்கு . சாயங்காலம் பார்க்கலாம் என்று  சொல்லி விட்டு ராஜா பறந்தான்.

மதிய வேளைக்குள் மூன்று ஆர்டர் எடுத்து விட்டான்.அடுத்து ஒரு appointment சென்று கொண்டு இருக்க அவனது ஃபோன் ஒலித்தது.

வண்டி ஓட்டி கொண்டே Ear phonai அழுத்தி "ஹலோ யார் பேசறது?"

மறுமுனையில் ஒரு அழகிய பெண்ணின் குரல் கேட்டது.

"ஹலோ ராஜாவா,ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட பேசணும்.கொஞ்சம் வண்டியை நிறுத்த முடியுமா"

நான் ear phone இல் தான் பேசுகிறேன்.என்ன விசயம் சீக்கிரம் சொல்லுங்க.நான் அவசரமாக appointment போய் கொண்டு இருக்கிறேன்.

"அதை பற்றி தான் நான் உங்களிடம் பேச வேண்டும் மிஸ்டர்" என்று அந்த பெண் சொன்னாள்.

முதல் முறை இந்த கதையின் நாயகியும்,நாயகனும் போனில் பேசுகிறார்கள்.யார் என்று அறியாமலேயே இருவருக்கும் இடையே மோதல் ஆரம்பிக்கறது.

[Image: images-54.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply
#16
Very Nice Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#17
நான் வைத்த வேண்டுகோளை ஏற்று என் பெயரையே கதாநாயகனுக்கு வைத்ததிற்கு நன்றி ப்ரோ.கதையும் அருமையாக துவங்கி உள்ளது.
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
#18
Awesome update
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
#19
(26-07-2023, 03:31 AM)omprakash_71 Wrote: Very Nice Update Nanba

நன்றி ப்ரோ
Like Reply
#20
(26-07-2023, 11:37 AM)M.Raja Wrote: நான் வைத்த வேண்டுகோளை ஏற்று என் பெயரையே கதாநாயகனுக்கு வைத்ததிற்கு நன்றி ப்ரோ.கதையும் அருமையாக துவங்கி உள்ளது.

நீங்கள் pvt message இல் கேட்டு கொண்ட படி இந்த கதையில் கதாநாயகனாக உங்கள் பெயரையே வைத்து விட்டேன்.இந்த கதையின் நாயகனே நீங்கள் தான்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply




Users browsing this thread: