Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இளையராஜா பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை
இசையமைப்பாளர் இளையராஜா, 76, அனுமதியின்றி, அவர் இசைத்த பாடல்களை வேறு யாரும் பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில், இளையராஜா தாக்கல் செய்த மனுவில், என் இசையமைப்பில் உருவான பாடல்களை, அனுமதியின்றி, எக்கோ மியூசிக், கிரி டிரேடர்ஸ், அகி உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. நான் இசையமைத்த பாடல்களுக்கான உரிமை, எனக்கு உள்ளது. அந்த பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜாவின் அனுமதியின்றி, அவர் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ஒலிப்பதிவு நிறுவனங்களுக்கு, இடைக்கால தடை விதித்தது. தடையை நீக்கக்கோரி, அந்நிறுவனங்கள் தரப்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அவர், உத்தரவிட்டதாவது: ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை உறுதி செய்யப்படுகிறது. இளையராஜா இசையமைத்த பாடல்களை, தியேட்டர்கள் தவிர, வேறு எங்கும் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, ஆன்லைன் மற்றும் ரேடியோ நிறுவனங்கள், இசை போட்டிகள் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால், முறையான அனுமதி பெற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய தகவல்கள்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று சொல்கிறோம். அந்த எஸ்.பி.பி-யின் முழு பெயர் என்ன தெரியுமா? ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்.
இன்று ஜூன் 4ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும், சங்கீத உலகின் அத்தியாயம் பற்றியும், அவரது சுவாரஸ்ய பக்கங்கள் பற்றியும் தொகுத்து வழங்குகின்றோம்.
தனது 20வது வயதில் 1966ஆம் ஆண்டு ஒரு தெலுகுத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாலசுப்ரமணியம் பாடத் தொடங்கினார்.
பாடகர் மட்டுமல்லாது திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் என பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்L பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.
தமிழில் முதலில் பாடியது 'சாந்தி நிலையம்' படத்தில் வரும் 'இயற்கையெனும் இளையகன்னி' என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப் பெண்' திரைப்படத்தில் பாடிய 'ஆயிரம் நிலவே வா' வெளிவந்தது.
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி.
முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் 'சங்கராபரணம்' திரைப்படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்கும் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.
எஸ்.பி.பி.க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஒரு தேசிய ஒற்றுமை சின்னம். ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் பாடிய பெருமை அவருக்கு உண்டு. இன்று எஸ்.பி.பி. என்றும் பாலு என்றும் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் மனிதரின் வாழ்க்கை போராட்டங்கள் நமக்கு தெரியாது.
எஸ்.பி.பியின் இளம் வயதில் மெல்லிசை பாடல் போட்டி ஒன்றில் பாட எஸ்.பி.பி.க்கு தெரியாமலேயே அவருடைய நண்பர் ஒருவர் விளையாட்டாகப் பெயர் கொடுக்க எஸ்.பி.பி. அந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பாடினார்.
ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. கோதண்டபாணி என்ற இசையமைப்பாளர் அந்த போட்டியின் போது இருந்தார்.
எஸ். பி. பி.யிடம் 'உனக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்து விடுகிறேன்' என்று உற்சாகமூட்டி பாலுவை பல சினிமா இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார்.
எப்படி முதல் பாட்டு போட்டியில் எஸ்.பி.பி.க்கு பரிசு கிடைக்கவில்லையோ, அதே போல் முதல் சினிமா முயற்சியும் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.
எஸ்.பி.பி யும் அவரை அழைத்து சென்ற கோதண்டபாணியும் மனம் தளரவில்லை. அவர்களின் முயற்சி வெற்றியடைய பல நாட்கள் ஆயின. ஆனால் பல நாட்கள் காத்திருந்து, பலமான அஸ்திவாரத்தோடு எழுப்பப்பட்ட இசை மாளிகைதான் எஸ். பி. பி. யின் பாடல்கள்.
தனக்கு முதன்முதலில் வாய்ப்பிற்காக அழைத்து சென்ற இசையமைப்பாளரை இன்று வரையிலும் எஸ். பி. பி. மறக்கவில்லை.
20 ஆண்டுகளுக்கு பிறகு தான் உருவாக்கிய ரிக்கார்டிங் தியேட்டருக்கு 'கோதண்டபாணி ஆடியோ ரிக்கார்டிங் தியேட்டர்' என்று குருவின் பெயரையே சூட்டி தன் நன்றிக் கடனைச் செலுத்தினார்.
முதல் போட்டியில் பரிசு கிடைக்காதது பெரிய தோல்வி என்றால் அதைவிட சுவையான நிகழ்ச்சியையும் பாலு சந்தித்திருக்கிறார்.
ஒரு தெலுகு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கி கொண்டிருந்தார் எஸ். பி. பி.. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால் பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாக கிடைக்கும்.
இந்நிலையில் மூன்றாவது ஆண்டு போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ். பி. பி.யை இரண்டாவது பரிசுக்கு தள்ளி விட்டார்கள். நீதிபதிகளின் முடிவை பாலு மனமார ஏற்றார்.
போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ஒரு பிரபலமான பின்னணி பாடகி தலைமை தாங்கினார். பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாட மேடைக்கு அழைக்க, முதல் பரிசு பெற்ற இளைஞர் போட்டியில் பாடிய அதே பாடலை பாடிச் செல்ல, இரண்டாவது பரிசு பெற்ற எஸ்.பி.பி. தன் பாடலைப் பாடி முடித்தார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் ஏக கோபம். அவரே மைக் முன்னால் வந்து 'இன்று இரண்டாவது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட மிக நன்றாகப் பாடியுள்ளான். ஆகையால் போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை' என்று கூறி எஸ்.பி.பி. க்கு முதல் பரிசையும் அந்த வெள்ளிக் கோப்பையையும் வாங்கி தந்தார்.
திரையுலகத்தின் ஒரு பிரபலமான பாடகியால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர் எஸ். பி. பி. பிற்காலத்தில் அன்று பரிசளித்த பாடகியுடனேயே பல பாடல்களைப் பாடியிருக்கின்றார் எஸ். பி. பி.
இன்றும் அந்தப் பாடகியின் மீது மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறார். சண்டை போட்டு எஸ். பி. பி.க்கு பரிசு வாங்கிக் கொடுத்த அந்தப் பாடகி யார் தெரியுமா?
பாலுவின் திறைமைக்காக போராடி முதல் பரிசை வாங்கி தந்த அந்த பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி தான். அன்றிலிருந்து இன்றுவரை சகோதரி திருமதி எஸ். ஜானகியை பெரிதும் மதித்து வருகிறார் பாலு.
எஸ்.பி.பி.க்காக காத்திருந்த எம்ஜிஆர் - ஆயிரம் நிலவே வா ரகசியம்
உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும்.
உண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்கு படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் 'இயற்கையென்னும் இளைய கன்னி' என்ற டூயட்.
இது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது. ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு.
அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் 'ஆயிரம் நிலவே வா' என்று 'அடிமைப் பெண்'ணில் ஒலித்த பாடல்தான்.
'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல காய்ச்சலில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார்.
பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கை ரத்து செய்துவிட்டார்.
இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.
இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை.
தன்னைப்போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.
பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் 'தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போறீங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க. உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது' என்று கூறி வழியனுப்பினார்.
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்-
- எஸ்.பி.பி பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற காதல் மனைவி. பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
-
- பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி', `காதலன்' இரண்டும் நினைவில் நிற்பவை.
- `ஏக் துஜே கேலியே' படத்தின் வெற்றிக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இவர்தான். எல்லா பாடகர்களையும் விட எஸ்.பி.பி-யின் வாழ்நாள் சாதனை இது.
- இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள். இடையில் இருவருக்கும் மனதாங்கல் வந்து நீங்கியிருந்தாலும், இப்பொழுதும் இருவரும் `வாடா, போடா' எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்.
- இதுவரை 45,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்.
- மூச்சுவிடாமல், `கேளடி கண்மணி'யில் `மண்ணில் இந்தக் காதல்' `அமர்க்களம்' பட `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிக பெரிதாக பேச பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பி கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்.
- எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரபியும் ஜேசுதாசும். முகமது ரபியின் பாடல்களை விரும்பி கேட்பார். டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்.
- பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா... ராஜாதான்' என்கிறவர்.
- `மழை' படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்து வைத்து. பாடி வெளியேறியது வரையில் மொத்த பாடலும் 12 நிமிடகளில் முடிந்துவிட்டது.
- கிரிக்கெட் விளையாட்டின் வெறியர். எஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசு அளித்திருக்கிறார்.
- `துடிக்கும் கரங்கள்' படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்.
- பிறந்த தினம் ஜூன் 4, 1946. இப்போது 73 வயதாகிறது. இன்றும் பிசியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை.
- `முதல் மரியாதை' படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்.
- ரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை. `எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு' என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொள்வார்.
- எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு.
- தெலுங்குப் படங்களில் நிறைய `ராப்' பாடல்கள் எழுதியவர். `கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு' என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!
- கடந்த 30 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கொலைகாரன் - விமர்சனம்
கொலைகாரன் - பட காட்சிகள் ↓
-
-
-
-
[color][font][color]
கொலைகாரன் - சினி விழா ↓
[/color][/font][/color]
-
-
[color][font][color]
கொலைகாரன்
நேரம் 1 மணிநேரம் 50 நிமிடம்
[/color][/font][/color]
3.25
[color][font][color]
விமர்சனம்
[/color][/font][/color]
நடிப்பு - அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால்
தயாரிப்பு - தியா மூவீஸ்
இயக்கம் - ஆண்ட்ரூ லூயிஸ்
இசை - சைமன் கே கிங்
வெளியான தேதி - 7 ஜுன் 2019
நேரம் - 1 மணிநேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5
படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான படம் என்பதை ஓரளவிற்குப் புரிய வைத்துவிடும். ஒரு கொலையைச் செய்த கொலைகாரனே தான்தான் கொலை செய்தேன் என சொல்லி போலீசில் சரண்டர் ஆனாலும், அவன்தான் கொலை செய்திருப்பானா என சந்தேகப்படுகிறது போலீஸ். அந்தக் கொலையில் உள்ள மர்மங்கள் எப்படி ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படுகிறது என்ற அழுத்தமான, யூகிக்க முடியாத திரைக்கதைதான் இந்த கொலைகாரன்.
இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ், ஒரு வித்தியாசமான த்ரில்லர் படத்தைக் கொடுக்க வேண்டும் என சரியாக பிளான் போட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். கேமரா கோணங்கள், எடிட்டிங் யுக்தி, சஸ்பென்ஸ் அவிழ்க்காத, நம்மையும் யூகிக்க வைக்காத திரைக்கதை என எழுத்தில் என்னவெல்லாம் எழுதினாரோ அதை திரையில் அப்படியே கொண்டு வந்திருக்கிறார். ஒரு இயக்குனருக்கான பெரிய வெற்றியே அதில்தான் அடங்கியிருக்கிறது. பேப்பரில் உள்ளதை திரையில் ரசனையுடன் கொண்டு வந்து ஒரு இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறார்.
உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு கொடூரமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்தக் கொலையை துணை போலீஸ் கமிஷனரான அர்ஜுன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். கொலை செய்யப்பட்ட நபருக்கும், கதாநாயகியான அஷிமா நர்வாலுக்கும் இடையில் பழைய பகை ஒன்று இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். ஆஷிமாவும், அவருடைய அம்மா சீதாவும் அந்தக் கொலையை செய்திருப்பார்களா என்ற சந்தேகம் அவருக்கு வருகிறது. யாரோ ஒருவர் உதவியுடன் செய்திருக்கலாம் என நினைக்கிறார். ஆஷிமாவின் எதிர் வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனி மீது அர்ஜுனுக்கு சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனியே அந்தக் கொலையை தான்தான் செய்தேன் என சரண்டர் ஆகிறார். அவர்தான் அந்தக் கொலையை செய்தாரா, அவர் செய்ய என்ன காரணம், அவருக்கும் ஆஷிமாவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை.
படத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் இருவரும் கதாநாயகர்கள்தான். இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். துணை போலீஸ் கமிஷனராக அர்ஜுன். எத்தனையோ படங்களில் அவரை போலீஸ் அதிகாரியாகப் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் கூடுதல் கம்பீரம், மிடுக்குடன் தெரிகிறார். அலட்டல் இல்லாத ஆர்பாட்டம் இல்லாத யதார்த்தமான ஒரு போலீஸ் அதிகாரியாக அவருடைய அனுபவத்தில் தனி முத்திரை பதிக்கிறார் அர்ஜுன். கூர்மையான பார்வை, கவனம், விசாரிக்கும் கோணம், நடை, உடை, உடல் மொழி என போலீஸ் கதாபாத்திரங்களில் இனி நடிக்கப் போகிறார்கள் கூட அர்ஜுனின் இந்த கார்த்திகேயன் கதாபாத்திரத்தை ஒரு ரெபரன்ஸ் ஆக வைத்துக் கொள்ளலாம்.
இறுக்கமான முகம், சிரிக்கத் தெரியுமா என கேள்வி கேட்கும் முகம், எப்போதும் ஒரு வெறுப்புடனே காணப்படும் தோற்றம், இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் சும்மா விடுவாரா விஜய் ஆண்டனி. அவருக்காகவே உருவாக்கிய கதாபாத்திரம் போல பிரபாகரன் கதாபாத்திரம். இவர் யார், இவர் பின்னணி என்ன ஒவ்வொன்றாக முடிச்சை அவிழ்க்கிறார் இயக்குனர். இவரும் ஒரு ஐபிஎஸ் ஆபிசர் என இடைவேளையில் நமக்கும் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார்கள். கடைசியில் சென்டிமென்ட்டிலும் நம்மைக் கொஞ்சம் கண்கலங்க வைக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் கடைசியாக நடித்த சில படங்களின் தோல்வியை இந்த கொலைகாரன் சரி செய்துவிடும். விஜய் ஆண்டனிக்கு இது ஒரு கம் பேக் மூவிதான்.
அறிமுக நாயகி அஷிமா நர்வால், படம் முழுவதும் பதட்டத்துடனேயே இருக்கும் ஒரு கதாபாத்திரம். தான்தான் தவறு செய்தவராக இருந்தாலும் அந்தத் தவறைச் செய்ததை காட்டிக் கொள்ளாமல் நடிக்க வேண்டும். முதல் படத்திலேயே ஒரு சவாலான கதாபாத்திரம்தான். மொழி தெரியாமல் அந்த முகபாவங்களில் நடிப்பதும் சிரமம்தான். ஆனால், அதையெல்லாம் துளியும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.
அர்ஜுனுக்கு உதவும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நாசர், அஷிமாவின் அம்மாவாக சீதா, இன்ஸ்பெக்டராக பகவதி பெருமாள் மற்ற கதாபாத்திர நடிகர்களில் குறிப்பிட வைப்பவர்கள்.
படத்தின் மிகப் பெரும் பலம் சைமன் கே கிங்-கின் பின்னணி இசை. அதிலும் படத்திற்கான தீம் மியுசிக்கில் அந்தக் காட்சிகளுக்கான டெம்போவை இன்னும் அதிகப்படுத்துகிறது. படப்பிடிப்புக்கு முன்பே காமிரா கோணங்கள் இப்படித்தான் அமைய வேண்டும் என டிராயிங் செய்து பின்னர் படப்பிடிப்பு நடத்தியிருக்க வேண்டும். அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் முகேஷின் ஒளிப்பதிவில் சிறப்பான நேர்த்தி இருக்கிறது.
ஒரு காட்சியை முழுவதுமாக முடிக்காமல், அதன் சஸ்பென்சை அப்படியே வைத்து, அதை பின்னர் வெளிப்படுத்தும் விதமான படத்தொகுப்பு டெக்னிக்கில் குழப்பமில்லாமல் படத்தைத் தொகுத்திருக்கிறார் எடிட்டர் ரிச்சர்ட் கெவின்.
இடைவேளைக்குப் பின்னும் படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஆகவே நகரும் என எதிர்பார்த்தால் விஜய் ஆண்டனியின் பிளாஷ்பேக், அவர் ஒரு மனநோயாளியோ என சந்தேகப்பட வைப்பது, அவருக்கும் அஷிமாவுக்கும் காதல், நாசர் விசாரிப்பது ஒரு கோணம், அர்ஜுன் விசாரிப்பது மற்றொரு கோணம் என நம்மை கொஞ்சம் ரிலாக்ஸ்டாக யோசிக்கவிடாமல் காட்சிகள் அடுத்தடுத்து திருப்பங்களுடன் கொஞ்சம் திணறவும் வைக்கிறது. இடைவேளை வரை அதிக சிக்கலில்லாமல் தெளிவாக நகர்கிறது திரைக்கதை. இடைவேளைக்குப் பின் அவ்வளவு திருப்பங்கள் வேண்டுமா எனவும் கேள்வி கேட்க வைக்கிறது. ஆரம்பம் முதல் கடைசி வரை படம் சீரியசான உணர்வுடன் மட்டுமே நகர்கிறது. கடைசியில் ஒரு பழிவாங்கும் கதையாக முடிவதும் எதிர்பாராதது.
இருப்பினும் சமீப காலத்தில் இப்படி ஒரு திரில்லர் படத்தை நாம் பார்க்கவில்லை என்பது படத்திற்கான பிளஸ் பாயின்ட்.
கொலைகாரன் - குற்றமும், தண்டனையும்...!
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இயக்குனர் பாக்கியராஜை புகழ்ந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
கடந்த 1985ஆம் ஆண்டு கமல் இரு வேடங்களில் நடித்த ஒரு கைதியின் டைரி படம் ரிலீஸாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்தது. ரேவதி மற்றும் ராதா இருவர் கமலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தனர். கே. பாக்யராஜ் எழுத்தில் பாரதிராஜா இப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து ஹிந்தியில் எடுக்க திட்டமிட்டார் கே. பாக்யராஜ். ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் அமிதாப் பச்சனை வைத்து இயக்கினார் பாக்யராஜ். இரண்டு வேடங்களில் நடித்த அமிதாப்புக்கு ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.
1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி பாலிவுட்டில் வெளியானது இப்படம். தமிழில் வசூலை வாரிக்குவித்ததை போலவே ஹிந்தியிலும் வாரிக்குவித்தது. நேற்றுடன் இப்படம் வெளியாகி 33ஆம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஹிந்தி அமிதாப் ரசிகர்கள் பலரும் இந்த படம் குறித்து ட்விட்டரில் பதிவுகளிட்டு வந்தனர். இந்நிலையில், “‘ஆக்ரி ரஸ்தா’ படம்தான் அமிதாப் பச்சன் நடித்ததிலேயே மிகச்சிறந்த படம் என என் அம்மா கூறுவார்” என்று ட்விட்டரில் ஒருவர் அமிதாப் பச்சனைக் குறிப்பிட்டு பதிவிட்டார்.
அந்த பதிவிற்கு ரீட்வீட் செய்த அமிதாப், “நன்றி... அதுவொரு மிகச்சிறந்த அனுபவம் மற்றும் அருமையான கதை. கே.பாக்யராஜ், அப்போது எனக்குப் புதியவர். ஆனால், இயக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்” என்று தெரிவித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சினிமா பிரியர்கள் இனி 24 மணிநேரமும் தியேட்டர்களுக்கு செல்லலாம்!
சுமாராக ஓடக் கூடிய படங்களையே 3 நாட்களில் தியேட்டர்களில் இருந்து தூக்கி விடுகிறார்கள்.
தமிழகத்தில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸாகும் முதல் நாள் அதிகாலையில் திரையிடப்படும்.
மற்ற படங்கள் பெரும்பாலும் காலை 8 மணிக்கு பிறகு தான். இதில் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் இறுதி காட்சி இரவு 10 – 10.30-க்குள் திரையிடப்படும்.
இந்நிலையில் திரையரங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. இதனால் எந்த பரபரப்புமின்றி, ரசிகர்கள் தங்களுக்கு ஏதுவான நேரத்தில் தியேட்டருக்கு செல்லலாம்.
குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் ரிலீஸாகும் போது முதல் நாளில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திணறுவார்கள். இனி அந்தப் பிரச்னை இருக்காது. 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் ரசிகர்கள் படம் பார்த்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் 24 மணி நேரம் தியேட்டர் திறந்திருப்பது சிறிய பட்ஜெட் படங்களுக்கும், வார நாட்களிலும் ஒர்க் அவுட் ஆகாது. தற்போதெல்லாம் சுமாராக ஓடக் கூடிய படங்களையே 3 நாட்களில் தியேட்டர்களில் இருந்து தூக்கி விடுகிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த மாதிரியான படங்களுக்கு லைஃப் டைம் வெறும் 24 மணி நேரம் மட்டுமே கிடைக்கும்.
இருப்பினும் இது அமலுக்கு வந்து ஓரிரு மாதங்கள் கழித்தே, இதன் வெற்றி தோல்வியை கணக்கிட முடியும்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
திஷா பதானியின் ப்ரீ ஷோ : கடும் விமர்சனம்
கடந்த 2016ல் எம்.எஸ்.தோனி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் திஷா பதானி. இவர், கவர்ச்சி காட்டுவதில் வல்லவர் என பெயர் எடுத்தவர். இவர், தற்போது இந்தி பட உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். இவர், கவர்ச்சியாக புகைப்படங்கள், வீடியோ எடுத்து அதை டுவிட்டரில் போட்டு, பரபரப்பாக்குவதில் கில்லாடி. அவ்வப்போது, தொடர்ச்சியாக இதே வேலையை அவர் செய்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும் இந்தி படமான பாரத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கானும் நடித்திருப்பதால், படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்துக்கான ப்ரீமியர் ஷோ இரு நாட்களுக்கு முன், மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய காதலர் டைகர் ஷிராப்புடன் வந்திருந்தார் திஷா பதானி.
வெள்ளை நிற கிராப் டாப்பும், ஆங்காங்கே கிழிந்து இருக்கும் நீல நிற ஜீன்ஸும் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திஷா பதானியை நோக்கித்தான், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரது கண்களும் இருந்தன. இருந்தாலும், நிகழ்ச்சி முடிந்த பின், திஷா பதானியின் இந்த ப்ரீ ஷோ குறித்து, பலரும் மோசமாக கருத்து கூறி வருகின்றனர். இருந்த போதும், நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட திஷா பதானியின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிற
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
7 - பட காட்சிகள் ↓
-
-
-
[color][font]
7 - சினி விழா ↓
[/font][/color]
[color][font]
7 - வீடியோ ↓
[/font][/color]
7
நேரம் 1 மணி நேரம் 57 நிமிடம்
- ஹவிஸ்
- நந்திதா , ரெஜினா
- 05 ஜூன், 2019
- நிசார் ஷபி
- 7 (ஏழு) - இன்னும் எழுதியிருக்கலாம்...
2.25
[color][font]
விமர்சனம்
[/font][/color]
நடிப்பு - ரகுமான், ஹவிஸ், ரெஜினா, நந்திதா மற்றும் பலர்
தயாரிப்பு - ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - நிசார் ஷபி
இசை - சைதன் பரத்வாஜ்
வெளியான தேதி - 5 ஜுன் 2019
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
ஒரு த்ரில்லர் படமாக ஆரம்பமாகும் படம், அப்படியே காதல் படமாக மாறி, பழி வாங்கும் படமாக முடிகிறது. அறிமுக இயக்குனர் நிசார் ஷபி கதையாக நன்றாக யோசித்து எழுதியிருக்கிறார். ஆனால், அதை திரைக்கதையாக மாற்றும் போது இடைவேளை வரை பரபரப்பைக் குறைத்துவிட்டார். இடைவேளைக்குப் பின்தான் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் படம் நகர்கிறது. இருந்தாலும் சில நம்பமுடியாத காட்சிகள் படத்தின் தரத்தைக் குறைத்துவிடுகிறது.
இப்படத்தின் கதை என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் யார் யார் படத்தில் நடித்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் படிப்பதற்கே ஒரு குழப்பம் வரும். ரகுமான் உதவி போலீஸ் கமிஷனர். ஹவிஷ் என்பவர்தான் படத்தின் நாயகன். படத்தின் திரைக்கதை வரிசைப்படி வரும் கதாநாயகிகளாக நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்புரோஸ், அதிதி ஆர்யா, த்ரிதா சௌத்ரி, ரெஜினா கசான்ட்ரா, புஜிதா பொன்னடா. இவர்களில் முதலில் உள்ள நால்வர் கதைப்படி ஹவிஷை தங்கள் கணவர் என்கிறார்கள். ரெஜினா, புஜிதா ஹவிஷின் காதலர்கள். ஹவிஷ் - ஆறு நாயகிகளுக்குள் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதை.
காவல் நிலையத்திற்கு தன் கணவர் ஹவிஷைக் காணவில்லை என்று வந்து புகார் கொடுக்கிறார் நந்திதா ஸ்வேதா. கணவரைப் பற்றி அவர் உதவி கமிஷனர் ரகுமானிடம் சொல்லி வரும் போது, அதே போன்று தன் கணவர் ஹவிஷைக் காணவில்லை என்று அனிஷா அம்புரோஸ் ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளதாகக் கூறி அதிர்ச்சி அளிக்கிறார். ஐதராபாத்திலும் அதிதி ஆர்யா என்பவர் கணவர் ஹவிஷைக் காணவில்லை என புகார் அளித்த விவரம் ரகுமானுக்குத் தெரிய வருகிறது. சீட்டிங் கேஸில் வழக்கு பதிவு செய்து சில பல தேடல்களுக்குப் பிறகு ஹவிஷைக் கைது செய்கிறார் ரகுமான். அவரை காவல் நிலையத்தில் விசாரிக்கும் போது, தனக்கும் அந்த மூன்று பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உறுதியாகச் சொல்கிறார் ஹவிஷ். அப்போது, நான்காவதாக த்ரிதா சௌத்ரி வந்து தன் கணவர் ஹவிஷைக் காணவில்லை என்கிறார். லாக்கப்பில் இருக்கும் ஹவிஷை ரகுமான் காட்ட, அவரைக் கொல்ல முயற்சிக்கிறார் த்ரிதா. இந்த குழப்பங்களுக்குத் தீர்வு என்ன என்பதுதான் மீதிக் கதை.
உதவி போலீஸ் கமிஷனராக ரகுமான். அவருடைய நடிப்பில் அவரது அனுபவம் பேசுகிறது. ஆனால், இந்தக் காலத்தில் எந்த ஒரு போலீஸ் அதிகாரி எப்போதும் குடித்துக் கொண்ட வழக்கு விசாரணையை மேற்கொள்கிறார். ஒரு காட்சியில் கூட அவர் யூனிபார்ம் அணியவேயில்லை.
ஆறு நாயகிகளுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கதாநாயகன் ஹவிஷுக்கு. நடிப்பில் ஆறு நாயகிகளும் அவரை ஓவர்டேக் செய்கிறார்கள். எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவத்தில் இருக்கிறார் ஹவிஷ். படத்தின் மைனஸ் பாயின்ட் இவரது நடிப்பு என தாரளமாகச் சொல்லலாம்.
ஆறு கதாநாயகிகளில் பிளாஷ்பேக்கில் வரும் ரெஜினா கசான்ட்ராவுக்குத்தான் நல்ல வாய்ப்பு. சந்திரமுகி ஜோதிகா கதாபாத்திரத்திலிருந்து இந்தக் கதாபாத்திரத்தை உருவியிருக்கிறார் இயக்குனர். ரெஜினா இதுவரை நடித்த தமிழ்ப் படங்களிலேயே இந்தப் படத்தில்தான் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். மற்ற நாயகிகளில் அனிஷா, நந்திதா, த்ரிதா ஆகியோருக்கு ஓரளவிற்கு நடிக்கவே வாய்ப்பு. அதிதி, புஜிதாவிற்கு படத்தில் பேசக் கூட வாய்ப்பு கிடையாது.
கிளைமாக்சுக்கு முன்பாக மற்ற எல்லாரையும் விட தன் இயல்பான வில்லித்தனமான நடிப்பில் படத்தை சுமக்கிறார் அந்த வயதான பாட்டி.
படத்தை இரு மொழிகளில் எடுத்திருப்பதால் சென்னை, ஐதராபாத் என மாறி மாறிக் காட்டி கதை எந்த ஊரில் நடக்கிறது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்ப் படம் பார்ப்பவர்கள் அதை சென்னை என நினைத்துக் கொள்ள வேண்டும், தெலுங்குப் படம் பார்ப்பவர்கள் அதை ஐதராபாத் என நினைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு பதிவு வண்டிகளும், தெலங்கானா பதிவு வண்டிகளும் அடுத்தடுத்த காட்சிகளில் மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால், தமிழ்ப் படம் பார்க்கிறோமா, தெலுங்குப் படம் பார்க்கிறோமோ என்ற உணர்வு வருகிறது.
நந்திதா, அனிஷா, அதிதி ஆகியோர் ஹவிஷ் அவர்களின் கணவர் என்று புகார் கொடுத்ததன் காரணம் கடைசியில் தெரிய வரும் போது அது நம்பும்படி இல்லை.
இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருப்பதால் காட்சிகளை அழகான பிரேம்களில் காட்டுகிறார். ஆறு நாயகிகள் இருந்தாலும் படத்தில் கிளாமர் இல்லை என்பது ஆறுதல். நாயகிகளை கிளாமராகக் காட்ட வாய்ப்புகள் இருந்தாலும் அதைத் தவிர்த்திருக்கிறார். சைதன்யா பரத்வாஜ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார்தான்.
ஸ்கிரிப்பிட்டை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் இந்த செவன் சாதித்திருக்கும்.
7 (ஏழு) - இன்னும் எழுதியிருக்கலாம்..
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சிஷ்யனை மிஞ்சிய குரு! நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!
1996 ஆம் ஆண்டு இனிய உதயம் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் ஜுகிபா என்ற கதையை எழுதினார். இதனைத்தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது.
நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் வெளியான, இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எந்திரன் வெளியான பிறகு படத்தின் கதையை அறிந்த ஆரூர், தன்னுடைய கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்துவிட்டதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர் இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாறியது. இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது எனக்கூறிய நீதிமன்றம் கதை ஒரே மாதிரி இருப்பதால் காப்புரிமை மீறல் தெரிகிறது.
அதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், திருட்டுக் கதை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இயக்குநர்களில் இயக்குநர் ஷங்கர் இணைந்துள்ளார்.
மேலும், ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி மீதும் இதுபோன்ற பல்வேறு முறை திருட்டுக் கதை குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சம்பந்தமான தகவல் வெளியானதில் இருந்து, சிஷ்யனை மிஞ்சிய குரு என்று பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
என்ன அகந்தை, ஆணவம், கோமாவிலேயே இருங்க நேசமணி: வடிவேலுவை விளாசிய நவீன்
சென்னை: பேட்டி ஒன்றில் இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை விளாசிய வடிவேலுவை கண்டித்துள்ளார் இயக்குநர் நவீன்.
நேசமணி ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானதை அடுத்து வடிவேலு அளித்த பேட்டியில் அவர் இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை கடுமையாக விமர்சித்திருந்தார். இதை பார்த்த இயக்குநர் நவீன் கோபம் அடைந்து ட்வீட் செய்துள்ளார்.
வடிவேலு நல்ல கலைஞன் தான், இருந்தாலும் இந்த அளவுக்கு அகந்தை கூடாது என்கிறார் நவீன். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Quote:ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது#T2#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
சிம்புதேவன்
அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் @chimbu_deven சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது
#T2
#NesamaniStayInComa
Quote:உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் @chimbu_deven @shankarshanmugh இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்#T3#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
[color][font]
புலிகேசி
உங்களால் தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் @chimbu_deven @shankarshanmugh இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்
#T3
#NesamaniStayInComa
[/font][/color] Quote:புலிகேசி intervel sceneல VSRagavan 'திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது’ என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டைலாக் வந்துச்சுனா படம் flop என்றீர்கள். என் இயக்குனர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார்#T4#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
[color][font]
வசனம்
புலிகேசி intervel sceneல VSRagavan 'திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது' என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டைலாக் வந்துச்சுனா படம் flop என்றீர்கள். என் இயக்குனர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார்
#T4
#NesamaniStayInComa
[/font][/color] Quote:23ஆம்புலிகேசி நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நிங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குனர்#T5#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
[color][font]
வியப்பு
23ஆம்புலிகேசி நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நிங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குனர்
#T5
#NesamaniStayInComa
[/font][/color] Quote:வடிவேலு எனும் மகாகலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் என் இயக்குனர் @chimbu_deven sir & நான் பெரிதாக மதிக்கும் @shankarshanmugh sir பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது. #T6#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
[color][font]
மகாகலைஞன்
வடிவேலு எனும் மகாகலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் என் இயக்குனர் @chimbu_deven sir & நான் பெரிதாக மதிக்கும் @shankarshanmugh sir பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது.
#T6
#NesamaniStayInComa
[/font][/color] Quote:புலிகேசி படப்பிடிப்பிற்கு முன்பே அதன் bound script படித்து புல்லறித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரக்ஷன் சொன்னால் மரியாதைக்காக சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குனர். ஆனால் கதையை மாற்றியதில்லை.#T7#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
[color][font]
சிரிப்பு
புலிகேசி படப்பிடிப்பிற்கு முன்பே அதன் bound script படித்து புல்லறித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரக்ஷன் சொன்னால் மரியாதைக்காக சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குனர். ஆனால் கதையை மாற்றியதில்லை.
#T7
#NesamaniStayInComa
[/font][/color] Quote:24ஆம்புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், @chimbu_deven சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன்#T8#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டிகை நந்தினி 2-வது திருமணம்
வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டி.வி. தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்தனர். ஆனால் திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
குடும்பத் தகராறில் மனம் உடைந்து உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நந்தினி கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக நந்தினி அறிவித்து உள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இரண்டாம் நாளில் அதிகரித்த வசூல்! கொலைகாரன் இத்தனை கோடியா!
விஜய் ஆண்டனி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். ஆனால், கடந்த சில படங்களில் கொஞ்சம் சறுக்கினார்.
ஆனால், தான் விட்ட இடத்தை கொலைகாரன் படத்தின் மூலம் பிடித்துவிட்டார், இப்படம் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துள்ளது.
கொலைக்காரன் தமிழகத்தில் முதல் நாள் ரூ 2 கோடி வசூல் செய்ய, நேற்றும் ரூ 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்றும் விடுமுறை என்பதால், எப்படியும் இப்படம் ரூ 7 கோடி வரை முதல் மூன்று நாட்களில் வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கொலையுதிர் காலம் படத்தை வெளியிட ஐகோர்ட் தடை
கமலின் உன்னைப்போல் ஒருவன், அஜித்தின் பில்லா 2 படங்களை இயக்கியவர் சக்ரி டோல்டி. இவர் நயன்தாரா நடிப்பில் இயக்கி உள்ள படம் கொலையுதிர் காலம். இதேப்படம் ஹிந்தியில் காமோஷி என்ற பெயரிலும் உருவாகி உள்ளது. அதில் தமன்னா, பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப்படங்கள் வரும் ஜூன் 14ம் தேதி வெளியாக உள்ளது. ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வரும் நிலையில் இப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்து இருக்கிறது. அதன் விபரம் வருமாறு...
பாலாஜி குமார் என்பவர் கொலையுதிர் காலம் படத்திற்கான தலைப்பை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார். இந்த தலைப்புக்கான உரிமை இவரிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் படம் வெளியாக இருக்கிறது. ஆகவே இந்தப்படத்தின் பெயரில் நயன்தாரா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார் பாலாஜி குமார்.
இந்த வழக்கு இன்று(ஜூன் 11) விசாரணைக்கு வந்தது. காப்புரிமை சட்டத்தின் படி இப்படத்தின் தலைப்பு பாலாஜி குமாருக்கு சொந்தம் ஆகவே, கொலையுதிர்காலம் படத்தை வெளியிட நீதிபதி இடைக்கால தடைவிதித்தார். மேலும் இப்பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 21-க்குள் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே பல பிரச்னைகளை கடந்து வந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த கொலையுதிர்காலம் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்திருப்பது அப்படக்குழுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாக்யராஜ் அணியில் ஐந்து பேரின் மனுதாக்கல் தள்ளுபடி...
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் நாசருடன் இணைந்து விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் போட்டியிட்டனர். வழக்கத்திற்கு மாறாக இந்த நடிகர் சங்கத் தேர்தல் பொதுத் தேர்தலை போல ஊடக கவனம் பெற்றது. இதனை அடுத்து நாசர் அணி நடிகர் சங்க கட்டிடப் பணிகளை முடித்துவிடுவோம் என்று உறுதியளித்தது. ஆனால், விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தலைவரானது என்று பல அதிருப்திகள் இந்த அணி மீதும் உள்ளது. தற்போது நடிகர் சங்க கட்டிடம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொருளாளர் கார்த்தி தன்னுடைய பணம் ஒரு கோடி ரூபாயை கொடுத்து கட்டிடப் பணிகளை முடிக்க உதவியுள்ளார்.
இந்நிலையில் இந்த அணியின் பதவி காலம் கடந்த வருடம் அக்டோபர் மாதமே முடிவடைந்துவிட்டது. ஆனால், கட்டிடப் பணிகள் முடிவடையும் வரை தேர்தலை தள்ளி வைக்கிறோம். அடுத்த ஆறு மாதம் கழித்து நடிகர் சங்கத் தேர்தலுக்கான தேர்தல் நடைபெறும் என்று நாசர் அணி அறிவித்தது. இதனையடுத்து 2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார்.
நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். இந்த அணியின் வேட்பாளர்கள் அனைவரும் மனுதாக்கலும் செய்துவிட்டனர்.
இந்நிலையில் பாண்டவர் அணியின் மீதுள்ள அதிருப்தியால் அவர்களை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துவிட்டனர். நேற்று இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மனு பரிசீலனை செய்தபோது நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட ஐந்து பேரின் மனு தள்ளபடி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சந்தா கட்டாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உள்ளாடையை வெளிச்சம்போட்டு காட்டி மட்டமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.
தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் படு மோசமான போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அதில் உள்ளாடை தெரியுமளவிற்கு மகா மட்டமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் திட்டி தீர்த்தும் சிலர் அவரின் அழகை வர்ணித்தும் வருகின்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் அதிர்ச்சியில் பாடகி சின்மயி!
பாடகி சின்மயிக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் கடும் அதிர்ச்சியாகி உள்ளார்.இதற்கு முன்பு மீ டூ மூலம் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த நிலையில் சமூக வலைத்தளம் மூலம் தனக்கு வந்த ஆபாச மெசேஜ்களை பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த நபர் பேசியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.
[/url]
Quote:
Chinmayi Sripaada
✔@Chinmayi
It has been a minute since I shared stuff like this.
Dear Men - please make me understand. Why do some men do this? It will help me understand and explain to others girls better. BTW this is called gender-based violence.
Any psychological studies on men like this in India?[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f447-1f3fc.png[/img]
677
10:29 PM - Jun 9, 2019
[color][size][font]
406 people are talking about this
[url=https://twitter.com/Chinmayi/status/1137766095207583744]
Twitter Ads info and privacy
[/font][/size][/color]
சின்மயியிடம் மோசமான ஆபாச வார்த்தைகளால் முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ள அந்த நபரை பலரும் ட்விட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சிரிக்க வைத்தவருக்கு வருத்தம் தெரிவிக்காத நடிகர்கள்
நாடக ஆசிரியர், நடிகர், வசனகர்த்தா... இப்படி பன்முகம் கொண்டவர் கிரேசி மோகன் இரு நாட்களுக்கு முன் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்கள் பலரும் அவர்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டனர். பலர், கிரேசி மோகனின் நகைச்சுவை வசனங்களை பதிவு செய்து அவரது நகைச்சுவை உணர்வை பாராட்டினர்.
திரைப்பட ரசிகர்களுக்கு இருந்த இரங்கல் குணம் சினிமாவிலேயே இருக்கும் சில முன்னணி நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இல்லை என்பது வருத்தமான விஷயம். தங்கள் துறை சார்ந்த ஒரு பிரபலம் இறந்தால் கூட அவர்களது மறைவுக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் ஒரு வரி கூட இரங்கல் கூட தெரிவிக்காதவர்களைப் பற்றி நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, ஆர்யா, விஷால், கார்த்தி, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் எந்த இரங்கலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் வளர்ந்து வரும் நடிகர்களான சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்குமார், பிரசன்னா போன்றவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கிரேசி மோகன் வசனம் எழுதி வெற்றி பெற்ற அருணாச்சலம் படத்தில் நடித்த ரஜினி கூட நேரில் வரவில்லை. தர்பார் படப்பிடிப்பிற்காக அவர் மும்பையில் இருந்தாலும் டுவிட்டரில் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.
கிரேசி மோகன் வசனம் எழுதி வெற்றி பெற்ற படங்களில் நடித்த சில நடிகர்கள், நடிகைகள் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. மற்ற மொழித் திரையுலகத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. தமிழ்த் திரையுலகத்தில் சில ஆண்டுகளாக மறைந்த பிரபலங்களுக்கு பலர் இரங்கல் தெரிவிக்காமல் இருப்பது தொடர்கிற
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
2100 விவசாயிகளின் கடனை அடைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
பிஹாரைச் சேர்ந்த 2000க்கும் மேலான விவசாயிகளின் கடனை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அடைத்தார்.
“என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். பிஹாரைச் சேர்ந்த நிலுவை தொகையை கட்டமுடியாமல் இருந்த 2100 விவசாயிகளை தேர்வு செய்து, அவர்களுடைய கடனை ஒரே தவனையாக வங்கியில் செலுத்தப்பட்டுவிட்டது. அந்த விவசாயிகளில் சிலரை ஜானக்கிற்கு அழைத்து ஸ்வேத்தா மற்றும் அபிஷேக்கின் கைகளால் பணத்தை கொடுத்துள்ளோம்” என்று அமிதாப் தன்னுடைய பிளாக்கில் எழுதியுள்ளார்.
அமிதாப் பச்சன் விவசாயிகளின் கடனை செலுத்துவது இதுதான் முதல் முறை அல்ல, கடந்த வருடமே ஆயிரத்திற்கும் மேலான உத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 76 வயதாகும் அமிதாப் அடுத்து பிஹாரைச் சேர்ந்த விவசாயிகளின் கடனை செலுத்துவதாக வாக்குறுதி முன்னமே கொடுத்திருந்தார். அதை தற்போது நிறைவேற்றியுள்ளார்.
“புல்வாமா தாக்குதலில் தேசத்திற்காக தங்களுடைய உயிரை பறிகொடுத்த இந்திய படை வீரர்களின் குடும்பங்களுக்கு என்னால் இயன்ற சிறிய நிதி உதவி செய்வதுதான் என்னுடைய அடுத்த கடமை” என்றும் அந்த பிளாக்கில் தெரிவித்துள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முறியடிக்க முடியாத பெரும் சாதனை! விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்
விஜய் தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். அவரின் படங்கள் வர்த்தக அளவில் பெரும் வியாபாரங்களுக்கு நகர்ந்து வருகின்றன.
அந்த வகையில் அவரின் அடுத்த படமான விஜய் 63 ன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. டீசர், டிரைலர் விசயங்களிலும் அவரின் சாதனை பெருமளவில் உள்ளது.
அந்த வகையில் சர்கார் படத்திற்கு பின் 2.0, விஸ்வாசம், NGK, பேட்ட, காப்பான் படங்களின் டீசர் வந்த போதிலும் சர்கார் தான் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய டீசர் என 16 மில்லியன் பார்வைகளுடன் தொடர்ந்த முதல் இடத்தை பிடித்து சாதனையில் இருக்கிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆலியா மானஸாவின் போட்டோவை பார்த்து வியக்கும் ரசிகர்கள் – நீங்களே பாருங்க.!
Alya Manasa Childwood Photo : ஆலியா மானசா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்களும் ரசிகர்களிலும் ஏம்மா செம்பா நீயா இது என வியந்து வருகின்றனர்.
Alya Manasa Childwood Photo :
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா.
இவர் இந்த சீரியலின் நாயகனான சஞ்சீவை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து இருந்தது
•
|