Episode -87
ஷெட்டி ரெண்டு பேரோடு போராட ,ஸ்ருதி ரெண்டு பேரோடு போராடினாள்.ஷெட்டியினால் இரண்டு பேரை சமாளிக்க முடிந்தது.ஆனால் ஸ்ருதியினால் இரண்டு பேரை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டு இருந்தாள்.
Ncc இல் கற்று கொண்ட தற்காப்பு கலையால் அவளுக்கு ஒருவரை மட்டுமே சமாளிக்கும் அளவு திறன் இருந்தது.அந்த நேரத்தில் தேவா தன் கத்தியை கண்ணிமைக்கும் நேரத்தில் பிரயோகித்து ஷெட்டி தோளில் இறக்கினான்.இதில் இரத்தம் தெறிக்க அவன் போராடும் வலு குறைந்தது.மேலும் ரூம் பாய் ஆக இருந்த இருவர் அந்த நேரத்தில் வந்து சேர ,ஷெட்டி நால்வரால் மடக்கி பிடிக்கப்பட்டான்.ஸ்ருதி இருவரால் தரதரவென்று இழுத்து செல்லப்பட,
சார் பிளீஸ் என்னை யாராவது காப்பாற்றுங்கள்,என்று கதறி கொண்டு இருக்க ,அங்கு இருந்த அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டே இருந்தார்கள்.
அந்த நேரத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அங்கு இருந்த மூன்று திருநங்கைகள் ஷெட்டியை பிடித்து இருந்த நால்வரை கிடைத்ததை கொண்டு தாக்கினார்கள்.இதில் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்ட ஷெட்டி உடனே துப்பாக்கி எடுத்து தேவாவின் காலை நோக்கி சுட்டான்.
ஷெட்டி கையில் துப்பாக்கி இருப்பதை பார்த்து அனைவரும் பஞ்சாக பறக்க ,ஸ்ருதி ஓடி வந்து ஷெட்டி அருகே நின்று கொண்டாள்.
அவர்கள் இருவரும் திருநங்கைகளுக்கு நன்றி கூற
திருநங்கைகள் இவர்களை பார்த்து,சார் அந்த பொறுக்கி பய இந்த பொண்ணை பொய் சொல்லி ஏமாற்றி கூட்டி செல்வதை பார்த்தோம் சார்.இந்த பொண்ணை பார்க்க எங்களுக்கு பாவமாக இருந்தது.யாராவது இந்த பொண்ணுக்கு உதவினால் நாங்கள் உதவுதற்கு தயாராக இருந்தோம்.நல்ல வேலை நீங்கள் வந்தீர்கள் .பத்திரமாக இந்த பொண்ணை கூட்டி செல்லுங்கள் சார்.அந்த பொறுக்கிகள் வந்து விட போகிறார்கள்.
அவன் தோள் பட்டையில் வழிந்த இரத்தத்தை பார்த்து , ஐயோ இரத்தம் என்று ஸ்ருதி பதற
பயப்படாதே இதெல்லாம் ஒன்னும் கிடையாது எனக்கு ,வா போலாம் என்று திருநங்கைகளுக்கு நன்றி கூறி புறப்பட்டான்.
ஷெட்டி தனக்கு தெரிந்த மருத்துவமனையில் சென்று முதல் உதவி செய்து கொள்ள சட்டையை கழற்றினான்.அப்பொழுது அவன் உடல் எங்கும் இருக்கும் காயங்களை பார்த்து வியப்பு அடைந்தாள்.
டாக்டர் ஷெட்டியை பார்த்து ,காயம் ஒன்னும் பெரியதாக இல்லை.DRESSING பண்ணி இருக்கேன்.NIGHT கொஞ்சம் வலி இருக்கும்.இந்த வலி மாத்திரை மட்டும் சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடுங்க .கொஞ்சம் நல்லா தூக்கம் வரும். அடுத்த DRESSING ஒரு வாரம் கழித்து அனிதாகிட்டேயே பண்ணிக்கோங்க.
டாக்டர்,அனிதா படிக்க ரஷ்யா போய் இருக்கா வருவதற்கு எப்படியும் ஒரு வருஷம் ஆகும்.நான் மங்களூர் போய் அங்கே dressing பண்ணிக்கிறேன் ஒன்னும் பிரச்சினை இல்ல .இந்த விசயம் மட்டும் அனிதா கிட்ட சொல்லி விடாதீங்க
ஏன்?
மறுபடியும் சண்டை சச்சரவுகளில் இறங்கி விட்டாயா என்று என்னை ஒரு வழி செய்து விடுவாள். ஊரே என்னை பார்த்து பயப்பட்டாலும் நான் பயப்படகூடிய ஒரே ஆள் அனிதா மட்டும் தான் என்று சொல்ல
Doctor சிரித்தே விட்டார்.
யார் இந்த பொண்ணு ?
இந்த பொண்ணை காப்பாற்ற போய் தான் இப்படி அடிபட்டது என்று கூறி ஷெட்டி விடை பெற்றான் .
கார் RESIDENCY TOWER க்குள் நுழைந்தது.
மணி ALREADY 10 மணி ஆச்சு ,இன்று இரவு மட்டும் இங்கே தங்கி கொள்.நாளை காலை உன் வீட்டில் விட்டு விடுகிறேன்.
எந்த வித மறுப்பும் இல்லாமல் ஸ்ருதி சரிங்க சார் என்றாள் .
ஷெட்டி RECEPTION சென்று ரெண்டு ரூம் வேண்டும் என்று கேட்க,ஸ்ருதி உடனே
சார் ஒரு ரூம் போதும் ,உங்க மேல நம்பிக்கை இருக்கு ,அதுவும் இல்லாம அடி வேறு உங்களுக்கு பட்டு இருக்கு .நான் உங்க கூடவே தங்கி கொள்கிறேன்.
சாவி வாங்கி கொண்ட ஷெட்டி ,முன்னே செல்ல ஸ்ருதி அவனை பின் தொடர்ந்தாள்.
அந்த ஓட்டலின் பிரமாண்டம் அவளுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ண
ஏன் சார் இவ்வளவு பெரிய ஓட்டலில் தங்கும் அளவுக்கு உங்களிடம் வசதி இருக்குது ,அப்புறம் ஏன் சார் போயும் போயும் அந்த கேவலமான ஓட்டலில் வந்து தங்கினீர்கள்
அங்கே வந்து நான் தங்கி இருக்கா விட்டால் யார் உன்னை காப்பாற்றி இருப்பார்?நான் அங்கே தங்கியதற்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருக்கு ,இப்பொழுதுக்கு அதை உன்னிடம் சொல்ல முடியாது.
எனக்கு புரியுது சார்
நீ நினைக்கிற மாதிரி காரணம் எல்லாம் கிடையாது.கங்கையில் குளித்தவன் திரும்ப சாக்கடையில் போய் விழ மாட்டான்.
ரூம் open செய்ய ,அந்த அறையின் ஆடம்பரத்தை பார்த்து ஸ்ருதி மூக்கில் விரல் வைக்க ,
சார் இவ்வளவு பெரிய அறையா ?
நான் எப்பவுமே வந்தால் இங்கே தான் தங்குவது என்று ஷெட்டி கூறினான்.
சரி நீ போய் refresh ஆகி விட்டு வா ,ஷெட்டி கூற
அவளிடம் இருந்த மாற்று துணிகளை எடுத்து கொண்டு bath room சென்று பார்க்கும் போது இன்னும் ஆச்சரியம் ஆகி
சினிமாவில் மட்டுமே பார்த்த Bath tub , எங்கு எதை அழுத்தி குளிப்பது என்று தெரியாமல் விழித்து ஒரு வழியாக எதை எதையோ அழுத்தி ஒருவாறு குளித்து வெளியே வந்தாள்.
அடுத்து ஷெட்டி குளிக்க செல்ல ,ஷெட்டி அவளை பார்த்து food order பண்ணி இருக்கேன் ,வந்தால் வாங்கி வை.
ok sir.
அறையின் காலிங் பெல் ஒலிக்க , ஸ்ருதி சென்று கதவை திறக்க
ரூம் BOY வந்து உணவுகளை அடக்கினான்.
வேற ஏதாவது வேண்டுமா MADAM?
ஸ்ருதி என்ன சொல்வது என்று திரு திரு வென்று முழுக்க ,பின்னாடி வந்த ஷெட்டி
போய் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து ரெண்டு மசாலா தோசை,மசாலா பால் எடுத்து கொண்டு வா
OK சார்...
அப்புறம் தம்பி ,அந்த ரூம் BOY மனோஜ் வரல இன்னிக்கு
சார் இன்னிக்கு அவனுக்கு DAY DUTY
சரிப்பா,வரும் பொழுது சூடு தண்ணீர் கொஞ்சம் கொண்டு வா
ஓகே சார் என்று அவன் விடை பெற்றான்.
என்ன பார்க்கிற ,எடுத்து வைத்து சாப்பிடு ,இங்கே ஊட்டி விட எல்லாம் யாரும் வர மாட்டார்கள் என்று ஷெட்டி கூற
இல்ல சார் எனக்கு இங்கே எல்லாம் பிரமிப்பா இருக்கு ,ஒரு ஆப்பத்திற்கு தேங்காய் பால் , இத்தனை வகை சட்னி , சாம்பார் எல்லாம் குடுப்பாங்க என்று இப்போ தான் எனக்கு தெரியுது.
.ஸ்ருதி எடுத்து வைத்து கொண்டு சாப்பிட ,ஷெட்டியும் அவளுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
மதியம் இருந்து சாப்பிடாமல் மிகுந்த பசியோடு இருந்த ஸ்ருதி இப்படி ஒரு அறுசுவை உணவு கிடைக்க இரண்டு,மூன்று ,நான்கு என ஆப்பம் வேக வேகமாக உள்ளே இறங்கியது.
பார்த்து பார்த்து மெதுவா சாப்பிடு உன்கிட்ட இருந்து பிடுங்கி ஒன்னும் சாப்பிட மாட்டேன் .தோசை வேறு ஆர்டர் பண்ணி இருக்கேன்
எல்லாம் கணக்கு வச்சிகோங்க சார்,நாளைக்கு எங்க பெரியம்மா கிட்ட திருப்பி வாங்கி தந்து விடுகிறேன்
ஷெட்டி இதை கேட்டு சிரிக்க
ஆர்டர் செய்த மண மணக்கும் நெய் மசாலா தோசையும் வந்தது.
கடைசியாக பாலும் குடிக்க ஸ்ருதியின் பசி முற்றிலும் பறந்து போனது.
டேப்லெட் எடுத்து கொண்ட ஷெட்டி ,சரி எனக்கு கொஞ்சம் tired ஆக இருக்கு,நான் தூங்க போறேன்.
உள்ளுக்குள் இருந்த மற்றொரு அறையை திறக்க ,
அறைக்குள் இன்னொரு அறையா சார்?
ஆமா ,இந்த ரூமில் சென்று நீ படுத்து கொள்.
Good night .
சார் என்று ஸ்ருதி அழைக்க
எதுவாக இருந்தாலும் காலை பேசி கொள்ளலாம் good night.
அவன் சென்ற பிறகு விலை உயர்ந்த மெத்தையில் உட்கார அது மெத்து மெத்தென்று இருந்தது.சிறு குழந்தை போல் ஆசை ஆசையாக அதன் மேல் எக்கி எக்கி ஸ்ருதி குதித்தாள்.
போதும் போதும் எகிறி குதிப்பது படுத்து தூங்கு வெளியே வரை ஸ்பிரிங் சத்தம் கேட்குது என்று ஷெட்டி கூற
ஸ்ருதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
மெத்தையின் சுகமும் ,நிம்மதியும் மனதில் வர உடனே தூக்கத்தை வர வைத்தது.
நாளை அவள் வீட்டில் ஒரு பெரிய பூகம்பம் வெடிக்க போவதை தெரியாமல் ஸ்ருதி நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தாள்.
சுட்டும் சுடர் விழி நாள் முழுதும் தூங்கலயே கண்ணா
தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட வந்தேன் கண்ணே
கனவில் உன்னை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையாய்