Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நான் பெண்களை தான் சைட் அடிப்பேன், ஏனென்றால்- சா சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.
இந்நிலையில் சாய் பல்லவி NGK படத்தின் ப்ரோமோஷனுக்காக சில சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றார்.
அதில் ஒரு பேட்டியில் ‘பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டனர், அதற்கு அவர் ‘அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.
அதே நேரத்தில் ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும் உடை விஷயத்தை பார்ப்பேன்.
வித்தியாச வித்தியாசமாக பெண்கள் உடை அணிந்திருப்பதை கவனிப்பேன்’ என்று கூறியுள்ளார். ய் பல்லவி
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.
இந்நிலையில் சாய் பல்லவி NGK படத்தின் ப்ரோமோஷனுக்காக சில சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றார்.
அதில் ஒரு பேட்டியில் ‘பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டனர், அதற்கு அவர் ‘அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.
அதே நேரத்தில் ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும் உடை விஷயத்தை பார்ப்பேன்.
வித்தியாச வித்தியாசமாக பெண்கள் உடை அணிந்திருப்பதை கவனிப்பேன்’ என்று கூறியுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உடல்நலக் குறைவு: குஷ்பு, துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகிய இருவரும் தனித்தனியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்துவருகிறது
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக செய்தி ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள முடியாது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, ''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் செய்தி சேனல்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்துகொள்ள மாட்டேன். தேர்தல் முடிவுகளை மிஸ் செய்கிறேன். நாமொன்று நினைத்தால், இயற்கை ஒன்று நினைக்கிறது. மிகுந்த வருத்தத்தில் உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
துரைமுருகன். - கோப்புப் படம். | எம்.சத்தியமூர்த்தி
இதேபோல திமுக பொருளாளர் துரைமுருகன், காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
REVIEW
லிசா திரைவிமர்சனம்
திரைப்படம்
2.25
Cineulagam
0SHARES
[color][font] [/font][/color]
#Lisaa #Anjali #Yogi Babu #. andam
பேய் படங்களுக்கென ஒரு ஆடியன்ஸ் கூட்டம் இயல்பாக இருப்பதுண்டு. ஏற்கனவே பல பேய்கள் தியேட்டரில் வந்து போயுள்ளன. சற்று வித்தியாசமாக மக்களை கவரும் வகையிலான படங்கள் மட்டும் களத்தில் நிற்கிறது. தற்போது வந்துள்ள லிசா பேய் யார் என பார்க்க பேய் வனத்திற்குள் செல்லலாம்.
கதைக்களம்
அஞ்சலிக்கு ஒரு அம்மா. தன் அப்பா அம்மாவை விட்டு பிரிந்து நகரத்தில் வாழும் இவருக்கு அஞ்சலி தான் எல்லாமே. இவரை குடும்பத்துடன் சேர்த்து வைக்க அஞ்சலி ஆசைப்படுகிறார். அவருக்கு ஒரு பாய் ஃபிரண்ட். இவருடன் அஞ்சலி தங்கள் தாத்தா பாட்டியை காண மலைக்காட்டிற்கு செல்கிறார்.
அங்கு ஒரு வயதான ஜோடியிடம் தாத்தா, பாட்டி உறவு கொண்டாடுகிறார். இதற்கிடையில் எதிர்பாராத சில அமானுஷ்யங்களை உணர்கிறார் அவரின் பாய் ஃபிரண்ட். இதை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அஞ்சலி ஒரு நாள் திடுக்கிடும் விசயங்களை சந்திக்கிறார்.
ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்ட அழுகிய உடல்களை கண்டு பதறுகிறார். அந்த வீட்டில் நடந்தது என்ன, பேய் யார், உண்மையில் அவரின் தாத்தா பாட்டி என்ன ஆனார்கள் என்பதே முழுகதை.
படத்தை பற்றிய அலசல்
லிசா கேரக்டரில் வரும் அஞ்சலி இப்படத்தில் முழுமையான ரோலில் நடித்துள்ளார். படத்தின் அநேக காட்சிகளிலும் வரும் அவரையே இப்படத்தில் ஒரு பெரும் சம்பவம் புரட்டி போட, பேயாக மாறியிருக்கிறார். பேயாக மாறும் வேளையில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதோ என தோன்றலாம்.
படத்தில் பாய் ஃபிரண்டாக வரும் இளம் நடிகர் சாம் ஜோன்ஸ் அஞ்சலியுடன் தன் நடிப்பை ஈடுசெய்கிறார். யோகிபாபு படத்தின் சில காட்சிகள் உள்ளே புகுந்த சிரிப்பை வரவைத்துவிடுகிறார். அவர் அடிக்கும் கவுண்டர்கள் ரியல் லைஃபை பிரதிபலிக்கிறது.
அதே போல தெலுங்கு சினிமாவின் பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் வரும் காட்சிகள் காமெடிக்கு கியாரண்டி. அவருக்கு குரல் டப்பிங் பேசிய எம்.எஸ்.பாஸ்கர் அப்படியே ஒன்றிவிட்டார். பார்ப்பவர்களின் எனர்ஜி டவுனாகும் வேளையில் இவர்களின் காமெடி நமக்கு உற்சாகத்தை கூட்டுகிறது.
மலை வீட்டில் வாழும் மக்காரந்த் தேஸ்பாண்டே மிக முக்கிய கேரக்டரை பெற்றுள்ளார். இவர் விஞ்ஞானி போல தோன்றினாலும் விபரீதமாக செயல்படும் விதம் கொஞ்சம் சீரியஸ்னஸை கூட்டுகிறது.
அறிமுக இயக்குனர் ராஜு வசந்த்தின் 3D முயற்சிக்கு ஒரு நன்றி. வரவேற்கிறோம். ஆனால் இன்னும் பிளான் செய்திருந்தால் சூப்பரான பொழுதுபோக்காக படம் அமைந்திருக்கும். முதல் பாதி மிக நீளம். எப்போது முடியும் என தோன்ற வைக்கலாம்.
ஆனால் இரண்டாம் பாதியில் எதிர்பாராத வேளையில் அவர் வைக்கும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. முடியப்போகும் நேரத்தில் மேலும் ஃபிளாஷ் பேக் வருவது கொஞ்சம் பின்வாங்க வைக்கிறது.
ஆனால் அதிலும் ஒரு நல்ல மெசேஜ் சொல்ல முயற்சி செய்கிறார். ஒரு பேய் இருக்கும் போதே வேறொரு பேய்க்கான ஸ்டோரி ஓட எதையோ ஸ்கிப் ஆகி போன ஒரு ஃபீல்.
3 D படத்திற்கான ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓகே. திடீரென வரும் பேய கை, கால்கள் நம்மை ஒரு நிமிடம் பதறவைக்கிறது.
கிளாப்ஸ்
சொல்ல வேண்டிய அவசியம் கொண்ட சரியான மெசேஜ்.
யோகி பாபு, பிரம்மானந்தத்தின் காமெடி காட்சிகள் வேற லெவல்.
பெரியவர்களை திடுக்கிட வைக்கும் திடீர் பேய் எண்ட்ரி ரியல் ஃபீல்
பலப்ஸ்
படத்தின் நீளம் அதிகமாக இருப்பது போன்ற உணர்வு.
பிளானிங் மிஸ் ஆகிவிட்டதோ என கேள்வி.
மொத்தத்தில் லிசா ஒகே. அவளை பார்த்தால் கொஞ்சம் பயம் தான்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ்
தமிழில் தான் இயக்கி நடித்த காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்சய்குமாரை வைத்து இயக்கி வந்தார் ராகவா லாரன்ஸ். அந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என்று டைட்டீல் வைத்திருந்தார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் அதையடுத்து லக்ஷ்மி பாம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனக்கு உரிய மரியாதை தரவில்லை. படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டதுகூட எனக்கு தெரியாது. அதனால் சுயமரியாதையை இழந்து அந்த படத்தை நான் இயக்கப்போவதில்லை. படத்தில் இருந்து வெளியேறப் போகிறேன் என்று தகவல் வெளியிட்டிருந்தார் லாரன்ஸ்.
ஆனால் அதையடுத்து லக்ஷ்மி பாம் படத்தின் தயாரிப்பாளர் சென்னை வந்து ராகவா லாரன்சை பட வேலைகளை தொடர அழைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே இருந்த மனக்கசப்பு மறைந்து விட்டதாக தெரிகிறது. அதனால் தற்போது மீண்டும் லக்ஷ்மி பாம் படத்தில் தான் இணைந்து வேலை செய்யப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2
ஜெய், லட்சுமிராய், கேத்ரின் தெரசா, வரலட்சுமி நடித்துள்ள படம் நீயா 2. நேற்று முன்தினம் வெளியானது. எல்.சுரேஷ் இயக்கி உள்ளார். ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயா£ரித்துள்ளார்.
கடந்த 24ந் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 250 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. படம் திரையிடப்படுவதற்கு முன்பே அதாவது 23ந் தேதி இரவே படம் இணைய தளத்தில் லீக் ஆனது. அதனை பலரும் தங்கள் பேஸ்புக்கில் வெளியிட்டனர். முதல் காட்சி திரையிடப்படுவதற்கு முன்பே ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படத்தை பார்த்த விட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
புதிய படங்கள் இணைய தளங்களில் வெளியாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீசுக்கு முன்பே ஒரு படம் வெளியாகி இருப்பது. தமிழ் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ள
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
24 மே, 2019 - 17:42 IST
கருத்தைப் பதிவு செய்ய
0 0 Google+
எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பேரழகி ஐஎஸ்ஓ
நடிப்பு - ஷில்பா மஞ்சுநாத், விவேக், சச்சு, சரவண சுப்பையா
தயாரிப்பு - கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - விஜயன்
இசை - சார்லஸ் தனா
வெளியான தேதி - 24 மே 2019
நீளம் - 1 மணி நேரம் 58 நிமிடங்கள்
ரேட்டிங் - 1/5
அறிவியல் சார்ந்த சயின்ஸ் பிக்ஷன் கதைகளைப் படமாக்கும் போது அதற்கான பிரம்மாண்ட செலவைச் செய்து படத்தை ரிச் ஆக எடுக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான தாக்கத்தை ரசிகர்களிடம் கொடுக்க முடியும். ஆனால், இந்தப் படத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியை விடவும் மிகவும் மோசமான க்ரீன்மேட் காட்சிகளை வைத்து ஏதோ ஒப்பேற்றியிருக்கிறார்கள்.
கற்பனைக்கு எட்டாத ஒரு கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குனர் செல்வா, அதை திரைவடிவில் கொண்டு வரும் போது கோட்டை விட்டிருக்கிறார். அதற்கு அவருக்கு படத்தின் பட்ஜெட் காரணமாக இருந்தால் கூட காட்சிகள் ஒவ்வொன்றும் நகர்வதில் கூட சுவாரசியமில்லாமல் இருக்கிறது.
ஷில்பா மஞ்சுநாத்தின் பாட்டியான சச்சுவுக்கு இளம் பெண்களைப் போல இருக்க ஆசை. அதனால், பேத்தி ஷில்பா அளவிற்கு தன்னை இளமையாகக் காட்டிக் கொள்வார். அது பிடிக்காத அவருடைய மகன் லிவிங்ஸ்டன் அவரைத் திட்டி, வீட்டை விட்டு வெளியேறுகிறார் சச்சு.
ஸ்கின் கேர் கம்பெனி நடத்தும் சரவண சுப்பையா, வயதானவர்களை இளமையாக்கும் ஒரு அரிய வகை மன்னர் காலத்து மருந்து பார்முலாவைக் கண்டுபிடித்து எடுக்கிறார். வீட்டை விட்டு வெளியில் வந்த சச்சுவை வைத்து அதை சோதனை செய்து வெற்றியும் பெறுகிறார். இளமையாக மாறும் சச்சு, அவரது பேத்தி ஷில்பாவின் தோற்றத்திற்கே மாறுகிறார். பாட்டியும், பேத்தியும் ஒரே தோற்றத்தில் இருக்க அதனால் என்ன குழப்பங்கள் ஏற்படுகிறது என்பதுதான் படத்தின் கதை.
இளமையான பெண்ணாக ஒரு கதாபாத்திரம், தோற்றத்தில் இளமையாக இருந்தாலும் மனதளவில் பாட்டியாக இருக்க வேண்டிய மற்றொரு கதாபாத்திரம் என முடிந்தவரையில் இரண்டிலும் வித்தியாசம் காட்டி நடிக்க முயற்சித்திருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.
இளம் ஷில்பாவின் காதலராக, புகைப்படக் கலைஞராக நீ என்ன மாயம் செய்தாய், மித்ரா ஆகிய படங்களில் நடித்த விவேக் நடித்துள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் இளமைத் தோற்றத்தில் இருக்கும் பாட்டி ஷில்பாவையும் காதலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்தக் காட்சிகளை நன்றாகவே சமாளித்திருக்கிறார் இயக்குனர்.
கொஞ்ச நேரமே வரும் கதாபாத்திரங்களில் சச்சு, லிவிங்ஸ்டன். படத்தின் வில்லன் சரவண சுப்பையா. அவர் மிகப் பெரும் கோடீஸ்வரராம். ஆனால், அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றை மிகச் சாதாரணமாகக் காட்டுகிறார்கள்.
படத்தின் பல காட்சிகள் டிராமத்தனமாக இருக்கின்றன. ஒவ்வொருவரும் நடிக்க வேண்டும் என்று செயற்கையாகத் தெரியும் அளவில் நடித்திருக்கிறார்கள்.
சார்லஸ் தனா இசையமைத்திருக்கிறார். பல காட்சிகள் படத்தில் அமைதியாக நகர்கின்றன. தேவைப்படாத இடங்களில் பின்னணி இசையை அலறவிட்டிருக்கிறார்.
மொத்தமாக ஒரு அமெச்சூர்தனமான நாடகத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)]ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ்... இந்தியன் 2, இம்சை அரசன் அப்டேட்ஸ்
[color=var(--content-color)]எம்.குணா[/color]
[color=var(--title-color)]கமல், வடிவேலு படங்களுக்கு 50 கோடி செலவு செய்தது லைகா.[/color][/color]
[color=var(--meta-color)]ஷங்கர்[/color]
[color=var(--content-color)] 'இந்தியன் -2' படத்துக்கான வேலையை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை சோதனை மேல் சோதனை. முதலில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனையும், ஆர்ட் டைரக்டர் முத்துராஜையும் அழைத்துக் கொண்டு உக்ரைன், ஹாலந்து நாடுகளுக்குச் சென்று ஷூட்டிங் நடத்த இருக்கும் லொகேஷன்களை தேர்வு செய்துவிட்டு திரும்பினார், ஷங்கர்.[/color]
[color=var(--content-color)] indian 2[/color]
[color=var(--content-color)] ஏற்கெனவே திட்டமிட்டதைவிட '2.0' திரைப்படத்தின் பட்ஜெட் எகிறிப்போனது. அதனால் 'இந்தியன்-2' படத்துக்கான பட்ஜெட் எவ்வளவு என்று எழுதிக்கொடுங்கள் இப்போதே ஒப்பந்தம் போட்டுவிடலாம் என்று ஷங்கரிடம் கேட்டது லைகா.[/color]
[color=var(--content-color)] இந்த சூழ்நிலையில் 'இந்தியன்-2' படத்தையும் எடுக்காமல், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' முடிக்காமல் ஷங்கர் தெலுங்கு சினிமாவின் மேல் கவனம் செலுத்தியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது, லைகா. பென் மீடியா தயாரிக்கும் படத்தை இயக்குவதாக ஒப்புக்கொண்ட ஷங்கர் அந்தப்படத்தில் நடிப்பதற்காக 'பாகுபலி' பிரபாஸிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்[/color]
[color=var(--content-color)] இம்சை அரசன் 24[/color]
[color=var(--content-color)] கமல் படத்தையும், வடிவேலு படத்தையும் அந்தரத்தில், விட்டுவிட்டு பிரபாஸிடம் பேசும் ஷங்கரின் மேல் லைகா கடுங்கோபத்தில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் சினத்தின் உச்சிக்கே போன லைகா, 'இந்தியன் - 2' ' இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்துக்காக செலவு செய்த 50 கோடி பணத்தை உடனடியாக திரும்பி கொடுக்கும்படி ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 'லைகா'விடம் பணம் பெற்றதற்கான எழுத்துபூர்வமான அக்ரிமென்ட் ஆதாரம் எதுவும் இல்லாததால் ஷங்கர் தரப்பு ஷாக் ஆகவில்லை என்று சொல்கிறார்கள்.[/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
14 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்கும் சிம்பு: அதில் யார் நடிக்கிறார் தெரியுமா?
சென்னை:14 ஆண்டுகள் கழித்து சிம்பு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
சிம்பு தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் படம் இயக்கும் ஆசை வந்துள்ளது.
2006ம் ஆண்டு வல்லவன் படத்தை இயக்கி, நடித்து வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்தார். சின்ன வயதில் இந்த பையனுக்கு இப்படி ஒரு திறமையா என்று பலரும் வியந்தார்கள்.
இந்நிலையில் அவர் மீண்டும் படம் இயக்குகிறார். அந்த படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் மன்மதன் படம் மூலம் பிரபலமான சந்தானம் தற்போது அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்.
ஹீரோவான பிறகு இனி அடுத்த ஹீரோக்களின் படங்களில் காமெடி பண்ணுவது இல்லை என்ற முடிவில் இருக்கிறார் சந்தானம். ஆனால் சிம்புவுக்காக தனது கொள்கையை தளர்த்தியுள்ளார்.
கையில் உள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு அடுத்த ஆண்டு படம் இயக்கும் வேலையில் ஈடுபடுவாராம் சிம்பு.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களின் வசூலை திரையரங்கு உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் குறிப்பிட்ட சதவீதத்தில் பிரித்துக்கொள்கின்றனர். இதில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு அதிகபட்சமாக 70, 75 சதவீதம் வரையும், சிறிய நடிகர்கள் படங்களுக்கு 45 சதவீதம் வரையும் வினியோகஸ்தர்களுக்கு பங்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது
இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி புதிய பங்கு தொகை பட்டியலை வெளியிட்டு உள்ளனர். அதன்படி ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 60 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 65 சதவீதம் தொகையும் வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.
இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 55 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 60 சதவீதம் தொகையும் வழங்கப்படும். சூர்யா, ஜெயம்ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 55 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 60 சதவீதம் தொகையும் வழங்கப்படும்.
இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 50 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 55 சதவீதம் தொகையும் வழங்கப்படும். இவர்கள் தவிர மற்ற நடிகர்கள் படங்களுக்கு அனைத்து சென்டர்களிலும் 50 சதவீதம் தொகையும், இரண்டாவது வாரத்தில் 45 சதவீதம் தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை அமல்படுத்துவது குறித்து அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறும் தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] பிக்பாஸ் வீட்டின் நெக்ஸ்ட் கெஸ்ட் இவர் தான்![/color]
[color=var(--meta-color)]பிக்பாஸ்[/color]
[color=var(--content-color)] பிக்பாஸ் -3 சீசன் ஜூன் இரண்டாவது வாரம் துவங்கப் போவதாகச் சொல்கிறார்கள். முதல் சீசனில் பிரபலமாகப் பேசப்பட்டவர் ஓவியா, இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா, யாஷிகா பரபரப்பாகப் பேசப்பட்டனர். அடுத்து மூன்றாவது சீசன் ஆரம்பிக்கக் கமலுக்காக காத்திருந்தனர். 'இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டால் பிக்பாஸ் ஷோவில் எப்படி கலந்துகொள்வார் என்று குழப்பநிலை நீடித்து வந்தது.[/color]
[color=var(--content-color)] கமல்[/color]
[color=var(--content-color)] ஷங்கர் படத்தின் ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை என்று தெளிவான முடிவுக்கு விஜய் டிவி வந்து விட்டதால் பிக்பாஸ் -3 நிகழ்ச்சிக்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. பிக்பாஸில் பங்குபெறுபவர்கள் வெவ்வேறு விதமான தளங்களில் பயணிக்கும் பிரபலங்களாக இருந்தால் நல்லது என்று திட்டமிட்டு தேர்வுசெய்து வருகின்றனர்.[/color]
[color=var(--content-color)] இந்தமுறை பிக்பாஸ் வீட்டில் தேமே என்று இருக்கும் சாஃப்ட் இயல்பு கொண்ட வி.ஐ.பி-க்களை தேர்வு செய்வதை தவிர்த்து சினிமாவில், தொலைக்காட்சியில், சோஷியல் மீடியாக்களில் வைரலான சண்டைக் கோழிகளை செலக்ட் செய்தால் டிஆர்பி ரேட் எகிறும் என்று கணக்கு போட்டு வருகின்றனர்.[/color]
[color=var(--content-color)] மதுமிதா[/color]
[color=var(--content-color)] ' ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்த ' ஜாங்கிரி' மதுமிதாவை செலக்ட் செய்துள்ளனர்.
[color=var(--content-color)]இப்போது டோலிவுட், கோலிவுட் சினிமாவை அதர பதற வைத்து, தமிழ் சினிமா பிரபலங்கள் சிலர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய ஶ்ரீரெட்டி தான் பிக் பாஸ் வீட்டின் அடுத்த கெஸ்ட்.[/color]
[color=var(--content-color)]ஶ்ரீ ரெட்டி[/color]
[color=var(--content-color)]இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான சம்பளம், நிபந்தனைகள் இத்யாதி, இத்யாதி என்று அனைத்தையும் ஶ்ரீ ரெட்டியிடம் பேசிவருகிறதாம், விஜய்டிவி. .[/color][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] சென்ற முறை விஷால், கார்த்தி... இந்த முறை? நடிகர் சங்கத் தேர்தல் அறிவிப்பு[/color]
[color=var(--title-color)]தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது[/color]
[color=var(--meta-color)]தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்[/color]
[color=var(--content-color)] நடிகர் நாசர் தலைமை வகித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது. முன்னதாக நடந்த நடிகர் சங்க நிர்வாகிகளின் கூட்டத்தில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் சங்கத் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களின் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.[/color]
[color=var(--content-color)] தென்னிந்திய நடிகர் சங்கம்[/color]
[color=var(--content-color)] முன்னதாக ஆனந்த விகடனுக்குப் பேட்டியளித்த நடிகர் நாசர், 'சென்ற பதவிக்காலத்தில் இருந்தவர்களில் துணைத் தலைவர் பொன்வண்ணன் தவிர, நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். எஞ்சியுள்ள பதவிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.[/color]
[color=var(--content-color)] அதேபோல், கடந்த முறை நாசர், விஷாலை எதிர்த்துப் போட்டியிட்ட சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் நாசர் அணியை எதிர்த்துப் போட்டியிட நடிகர் ஆர்.கே.சுரேஷ் திட்டமிட்டுள்ளார். இவரின் அணியினர் கார்த்தி போட்டியிடும் பொருளாளர் பதவியைத் தவிர மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளனர். அந்த நடிகர்களின் பட்டியலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/color]
[color=var(--content-color)] [/color]
[color=var(--content-color)] [/color]
[color=var(--content-color)] இந்த நிலையில், ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னனி நடிகர்கள் அங்கம் வகிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூன் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)] நடிகர் சங்கக் கட்டடம்[/color]
[color=var(--content-color)] ஒரு தலைவர், இரண்டு உப தலைவர், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், 24 செயற்குழு உறுப்பினர்களுக்கான இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல், வைப்புத் தொகை, வேட்பாளர் முன்மொழிவதற்குரிய தகுதி என அனைத்தும் அடங்கிய ஒரு அறிக்கையை இன்று நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரி நீதியரசர் பத்மநாபன் வெளியிட்டுள்ளார்[/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முதல் பார்வை: என்.ஜி.கே
சாதாரண இளைஞர் அரசியலில் சாதிக்க நினைத்து சாவுடன் சண்டையிட்டால் அவரே நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே).
ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு சில சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படுகிறார் சூர்யா. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் சூர்யாவுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் எதிரிகளால் முளைக்கின்றன. தான் ஒருவராக எதையும் இங்கே மாற்ற முடியாது என்று பிரச்சினைகளைத் தீர்க்க எம்.எல்.ஏவிடம் உதவி கேட்கிறார். அந்த உதவிக்கு பிரதிபலனை எம்.எல்.ஏ எதிர்பார்க்க, சூர்யா அவமானப்படுத்தப்படுகிறார். அவரின் ஒட்டுமொத்த சுயமரியாதையும் அடிபடுகிறது. இந்த சூழலில் அரசியல்வாதியின் எடுபிடியாக மாறும் சூர்யா, ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்கிறார். அவர் அடுத்தடுத்து என்ன செய்கிறார், சூர்யாவின் கனவும், திட்டமும் நிறைவேறியதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை
நந்த கோபாலன் குமரன் என்கிற கதாபாத்திரத்தை ஒட்டுமொத்தமாகத் தன் தோள்களில் தாங்கி நிறுத்துகிறார் சூர்யா. அரசியல் கனவு காணும் இளைஞனாகவும், அந்தக் கனவு உடையும் போது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும்போதும் அதிர்ச்சி விலகாமல் தனக்கு நேர்ந்ததை எண்ணி உறைந்துபோகும்போதும் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். மருத்துவமனை கழிப்பறை சண்டைக் காட்சி, மார்க்கெட் சண்டைக்காட்சியில் ஆக்ரோஷத்தைத் தெறிக்க விட்டிருக்கிறார்.
தொடக்கத்தில் சாய் பல்லவி படத்துக்கும் காட்சிக்கும் உறுத்தாமல் வந்து போனார். சூர்யா மீதான காதலை ஐஸ்க்ரீம் வழியாக வெளிப்படுத்தும்போது வெட்கத்தில் சிவந்தார். ரகுல் ப்ரீத் சிங்கின் வருகைக்குப் பின் அவரின் சத்தமும் சந்தேகமும் படத்துக்குத் தேவையில்லாத ஆணி.
ரகுல் ப்ரீத் சிங் கனமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். படத்தின் ஆகப் பெரிய பலம் இவரின் பாத்திர வார்ப்பு.
படத்தில் பாலா சிங்கும், இளவரசுவும் அரசியல்வாதிகளின் பரிமாணங்களைப் பளிச்சென்று காட்டி நடிப்பில் மிளிர்கிறார்கள். கட்சிக் கரைவேட்டியின் பவரை டெமோ காட்டி அசத்தும் பாலா சிங் சிறந்த வழிகாட்டின் தோரணையில் ஆலோசனைகள் வழங்குவதும், எம்.எல்.ஏவின் பந்தாவை இளவரசு வெளிப்படுத்தும் விதமும் ரசனை அத்தியாயங்கள்.
உமா பத்மநாபன், நிழல்கள் ரவி, பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், தேவராஜ், ராஜ்குமார் என படத்தில் பலரும் இருக்கிறார்கள். ஆனால், யாருக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய்க்கு குறைந்தபட்ச வசனங்களே இல்லாத அளவுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல வந்து போவதுதான் சோகம். நிழல்கள் ரவிக்கு மட்டும் ஒரு காட்சியில் சில வசனங்களைக் கொடுத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.
சிவகுமார் விஜயனின் கேமரா கோணங்களும், லைட்டிங் விதமும் படத்தின் தரத்துக்கு வலு சேர்க்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பொதைச்சாலும் பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் தனக்கு நிகர் யாருமில்லை என்ற அளவுக்கு யுவன் பின்னி எடுத்திருக்கிறார். திரைக்கதையில் இல்லாத அடர்த்தியை யுவன் தன் பின்னணியால் பூர்த்தி செய்கிற அளவுக்கு செல்வா- யுவன் கூட்டணி மேஜிக் செய்திருக்கிறது.
பிரவீன் கே.எல். அன்பே பேரன்பே பாடலுக்குக் கத்தரி போட்டிருக்கலாம். சூர்யா உடனான சாய் பல்லவியின் சில காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.
அரசியலில் நேர்மையாக முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனை மற்ற அரசியல்வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படி நடத்துகிறார்கள் என்பதை காட்சிப்படுத்திய விதத்தில் செல்வராகவன் தனித்து நிற்கிறார். அரசியலின் ஆழத்தையும் ஆபத்தையும் அவர் ஒருசேரக் காட்டிய விதத்திலும் தேர்ந்த இயக்குநரின் ஆளுமையை வெளிப்படுத்துகிறார். ஆனால், அந்த அரசியலை அறிந்த நாயகனின் வளர்ச்சியும், அதற்கான திட்டங்களும் என்ன என்பதை முழுமையாகச் சொல்லத் தவறியுள்ளார். நாயகனின் நோக்கம் என்ன என்பதை தெளிவாகச் சொல்லாததே படத்தின் பலவீனம். இதனால் இரண்டாம் பாதி திரைக்கதையில் ஏற்படும் தள்ளாட்டம் குழப்பத்தை வரவழைக்கிறது.
செல்வராகவன் படம் என்றால் நிச்சயம் பெண்களின் கதாபாத்திரம் ஆழமாகவும், பேசும்படியும் இருக்கும். இதில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தில் எந்த அழுத்தமும் இல்லை. ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரம் கச்சிதம் என்றாலும் அவர் பின்பு காதலில் விழுவதாகவும் கனவுப் பாடலில் மிதப்பதுமாகவுமே இருக்கிறார்.
ஒரு அமைச்சர் பாலியல் சர்ச்சையில் சிக்கி அவரைப் பதவி நீக்கம் செய்வதாகக் காட்டுகிறார்கள். அதை சமகால அரசியலைத் தொட்டுப் பார்ப்பதாக இயக்குநர் நம்பியிருக்கிறார். ஆனால், அது படத்துக்கு எந்தவிதத்திலும் உதவவே இல்லை. தீப்பந்தப் போராட்டம் நடத்திய சூர்யாவுக்கு திடீரென்று பாராட்டு விழா நடத்துகிறார்கள். அந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்க சைக்கிளில் மனைவியுடன் வருகிறார். இதெல்லாம் நம்பவே முடியாத விஷயங்கள்.
மிகப்பெரிய அரங்கத்தில் ரிகர்சல் பார்ப்பது, பாலா சிங்கை திடீரென்று எச்சரிப்பது, புதுக்கட்சி ஆரம்பிப்பது, கட்சியைக் கலைத்துவிட்டு தான் வளர்ந்த கட்சியிலேயே ஐக்கியமாவது என அநியாயத்துக்கு திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார்கள்.
செல்வராகவன் இயக்கிய இன்னொரு படம், சூர்யாவின் நடிப்பில் ஒரு படம் என்ற அளவில் மட்டும் என்.ஜி.கேவை வரவேற்கலாம்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
என் முடிவில் தவறானது 'தியா': சாய் பல்லவி ஓப்பன் டாக்
என் முடிவில் தவறானது 'தியா' என்று தன் படங்களின் தேர்வு குறித்து சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'என்.ஜி.கே'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
சூர்யாவின் தீவிர ரசிகையாக இருந்து, தற்போது அவருக்கே நாயகியாக நடித்திருப்பது குறித்து சாய் பல்லவி கூறுகையில், "சூர்யா மீது சிறு வயதிலிருந்தே ஈர்ப்பு இருந்தது. ஆனால் நான் அவரிடம் சொல்லவில்லை. முதல் முறை அவரைப் பார்த்த போது என் வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. வெறும் காற்று மட்டும் தான் வந்தது" என்று தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.
'கதை அவரைப் பற்றியதாக இருக்க வேண்டும் அல்லது அதில் இருக்கும் தாக்கம் இவரால் ஏற்பட்டதாய் இருக்க வேண்டும், அப்போதுதான் சாய் பல்லவி நடிக்க ஒப்புக்கொள்வார் என்று தனுஷ் சொல்லியிருக்கிறாரே. அப்படியென்றால் ’என்.ஜி.கே’ எப்படி என்று கேள்வி கேட்டபோது, "இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது கற்றுக்கொள்ள நல்ல அனுபவமாக இருக்கும் என்பதால் தான் நடித்தேன். பார்க்கும் ரசிகர்களுக்கு இது இரண்டரை மணி நேரப் படம். சாய் பல்லவிக்கு இது ஒரு வருட தனிப்பட்ட வாழ்க்கை. அதனால் அதற்குப் பலன் இருக்கும் என நம்புகிறேன்.
கதாபாத்திரங்களை ஒப்புக்கொள்ள எனது இந்த விதிமுறையில் தவறான முடிவு என்பது தியா படத்தின் துளசி கதாபாத்திரம் தான். 19 வயதுப் பெண், கருக்கலைப்பு செய்வது பற்றிய படம் அது. அப்போது நான் இன்று இருக்கும் அளவுக்கு அவ்வளவு முதிர்ச்சியடையவில்லை என்று நினைக்கிறேன். நான் திரைக்கதை படித்தபோது என்னைச் சுற்றியே கதை நடக்கிறது என நினைத்தேன். ஆனால், இப்போது அந்தக் கதை வந்திருந்தால் சில விஷயங்களை மாற்றியிருப்பேன்" என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இப்போ ஒண்ணுல்ல ரெண்டு... கான்ட்ராக்ட் போட்டு கபடியாடும் பேய்கள்... தேவி 2! விமர்சனம்
Star Cast: பிரபு தேவா, தமன்னா, நந்திதா ஸ்வீதா, கோவை சரளா, ஆர் ஜே பாலாஜி
Director: ஏ எல் விஜய்
சென்னை: தனது நிறைவேறா காதல் ஆசையை தீர்த்துக் கொள்ள இரண்டு பேய்கள் போடும் கான்ட்ராக்ட் தான் தேவி 2.
தேவி முதல் பாகத்தின் க்ளைமாக்சில் இருந்து ஆரம்பமாகிறது தேவி 2. முந்தைய பாகத்தில் குடியிருக்கும் மும்பை வீட்டில் ரூபியின் அட்டூழியம் மீண்டும் ஆரம்பமாகிவிடுமோ என்ற அச்சம் பிரபுதேவாவை ஆட்டுவிக்கிறது. இதனால் தனது குழந்தையை மாமனார், மாமியாருடன் ஊருக்கு அனுப்பி வைத்து, ஒரு ஜோசியக்காரரின் ஐடியா படி, மொரிசியஸ் நாட்டுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு, தமன்னாவுடன் அங்கு செல்கிறார் பிரபு தேவா.
ரூபியின் ரெக்கமண்டேஷன் படி, அங்கு சுற்றித் திரியும் இரண்டு பேய்கள் பிரபுதேவா உடம்புக்குள் புகுந்துகொள்கின்றன. இந்த விஷயம் தமன்னாவுக்கு தெரிய வருகிறது. தங்களுடைய நிறைவேறாத காதல் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தமன்னாவுடன் கான்ட்ராக்ட் போடுகின்றன இரண்டுபேய்களும். அப்புறம் நடக்கும் லகலக ஆட்டம் தான் தேவி 2.
முதல் பாகத்தில் ஒரு பேய். இந்த பாகத்தில் இரண்டு பேய். தேவியின் கதை களம் மும்பை. தேவி 2வின் கதை களம் மொரிசியஸ். அந்தப் படத்தில் தமன்னாவுக்கு பேய் பிடிக்கும். பிரபு தேவாவுடன் பேய் கான்ட்ராக்ட் போடும். இந்த படத்தில் உல்டாவாக பிரபுதேவாவுக்கு பேய் பிடிப்பதால், தமன்னா ஒப்பந்தம் போடுகிறார். அவ்வளவு தான் வித்தியாசம். மற்றப்படி இரண்டும் ஒன்றும் தான்.
பேயை காட்டாமல் பேய் படம் எடுப்பது எப்படி என்று இயக்குனர் விஜய்யிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அந்தளவிற்கு இருக்கு ஆனா இல்லை என்ற அளவில் பேய் வந்து போகிறது. பேயைக் காட்டா காமெடி தான் படத்தின் மையம் என முடிவு செய்துவிட்ட பிறகு லாஜிக் எல்லாம் எதுக்கு. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கலகலப்பாக நகர்கிறது படம். குறிப்பாக குழந்தைகளுக்கு இப்படம் கட்டாயம் பிடிக்கும்.
பிரபு தேவாவுக்கு முகத்தில் தான் வயசு தெரிகிறது. மற்றப்படி தான் ஒரு கிங் ஆப் டான்ஸ் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். கிருஷ்ணா, அலெக்ஸ், ரங்கா ரெட்டி என மூன்று ரோல்களையும் சூப்பராக செய்து, அசத்துகிறார். மாஸ்டரின் ரசிகாஸ்க்கு நிச்சயம் பிடிக்கும்.
போன படத்தில் பிரபு தேவா செய்ததை, இந்தப் படத்தில் தமன்னா செய்து அசத்தி இருக்கிறார். காமெடி, சோகம், கோபம், கிளாமர் என எதற்கும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களுக்கு புல்மீல்ஸ் விருந்து படைத்திருக்கிறார். குறிப்பாக அந்த ஒரு பாட்டு போதும், ரசிகர்கள் முழு திருப்தியோட வீட்டுக்கு போவாங்க.
நீண்ட நாட்களுக்கு பிறகு படம் முழுவதும் வரும் ரோலில் நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. கிளாமர், டான்ஸ் என கலக்கியிருக்கிறார். அதேபோல் மூன்றாவது ஹீரோயினாக வரும் டிம்பிளும் நல்ல அறிமுகம்.
தமன்னாவுடன் சேர்ந்து காமெடி செய்திருக்கிறார் கோவை சரளா. காஞ்சனா அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு ஒர்க்கவுட் ஆகியுள்ளது. கொஞ்ச நேரமே வந்தாலும், சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறார் ஆர்ஜே பாலாஜி. அஜ்மல் உள்பட வில்லன் கும்பலில் வரும் அனைவரும் செம பிட்.
சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் எல்லாமே ஆட்டம் போட வைக்குது. ரொம்ப பயமுறுத்தாம சாஃப்டாக பின்னணி கோர்த்திருக்கிறார். அதனால் பயப்படாம படம் பார்க்கலாம்.
அயனங்கா போசின் கேமரா மொரிசியஸ் தீவை மிக அழகா படம் பிடிச்சிருக்கு. ஒவ்வொரு பிரேமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு. ஆண்டனியோட எடிட்டிங் படத்தை போரடிக்காமல் கொண்டு போகுது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
முதல் பாகத்தில் ஒர்க்கவுட் ஆனதால, நிறைய காட்சிகளை அப்படியே வெச்சிருக்கார் இயக்குனர். ஆனால் ரிப்பீட்டடா பாக்கும் போது, அது சலிப்பையே ஏற்படுத்துது. ஆர்ஜே பாலாஜிக்கு இன்னும் கொஞ்சம் அதிக ஸ்பேஸ் கொடுத்திருந்தா, காமெடி நிறைய கிடைத்திருக்கும்.
தேவி 2 பெருசா சந்தோஷப்படுத்தனாலும், ஏமாற்றத்தை கொடுக்கல.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வெட்டி எறியவா முடியும் : விமர்சித்தவருக்கு நடிகை பதிலடி
சமீபகாலமாக நடிகைகள் பலர் தங்களது கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ரசிகர்களின் விருப்பு, வெறுப்பு இரண்டுக்குமே நடிகைகள் ஆளாகி வருகிறார்கள்.
இப்படியான நிலையில், மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள திரிஷ்யா ரகுநாத், நதி ஒன்றில் குளியல் போட்டபடி ஈரமான உடையில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். ரசிகர் ஒருவர், இதுபோன்ற கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு உங்கள் இமேஜை நீங்களே ஏன் கெடுத்துக் கொள்கிறீர்கள். சகோதரனாகத்தான் சொல்கிறேன் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.
இந்த பதிவினால் செம டென்சனாகி விட்டார் திரிஷ்யா ரகுநாத். அதையடுத்து, நான் என் உடம்பை முழுமையாக மூடிக்கொண்டு தான் உள்ளேன். இதுபற்றி ஓப்பனாக சொல்ல வேண்டுமென்றால் எனது மார்பகத்தை மூடியபடிதான் இருக்கிறேன். அதை நான் வெட்டி எறிய முடியாது. உடலில் அது இயற்கையாக அமைந்தது. ஒருபோதும் நான் அதை வெளிக்காட்டவில்லை. முதலில் நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அந்த ரசிகருக்கு காட்டமாக பதில் கொடுத்துள்ளார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விஸ்வாசம் வசூலை முறியடித்த என்.ஜி.கே – ஆனாலும் அவ்வளவு கொண்டாட்டம் தேவையில்லை!
NGK beats Viswaasam day 1 Chennai Collection
NGK beats Viswaasam day 1 Chennai Collection
விசுவாசம் திரைப்படம் முதல் நாளில் சென்னையில் 88 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது இதை வைத்து விசுவாசம் படத்தின் வசூலை முறியடித்து விட்டதாக சூர்யா ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாஅரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது
இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.
எனினும் எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்திற்கு ஓப்பனிங் நன்றாகவே கிடைத்துள்ளது குறிப்பாக சென்னையில் இப்படம் முதல் நாளில் ஒரு கோடியே 3 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
அதேசமயம் விசுவாசம் திரைப்படம் முதல் நாளில் சென்னையில் 88 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது இதை வைத்து விசுவாசம் படத்தின் வசூலை முறியடித்து விட்டதாக சூர்யா ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
ஆனால் விசுவாசம் திரைப்படத்துடன் பேட்டை படமும் வெளியாகி விட்டதால் வசூல் இரண்டாக பிரிந்து இருந்தது என்பதுதான் உண்மை.
அது மட்டுமில்லாமல் விசுவாசம் தமிழகத்தில் முதல் நாளில் பேட்ட வசூலையும் தாண்டி பெரிய அளவில் வசூல் செய்திருந்தது.
அதோடு தற்போது வரை தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் விசுவாசம்தான் அப்படி இருக்கும்போது என் ஜி கே திரைப்படம் விசுவாசத்தின் வசூலை நெருங்க கூட வாய்ப்பில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்
அம்மாவ மனமுருக வேண்டிக்கிட்டு, அங்கிருந்து கிளம்பி ஆறரை மணிக்கெல்லாம் ஏவி.எம்.ல இருக்க ஆர்.ஆர்.தியேட்டருக்கு வந்திட்டோம். யப்பா... எத்தன எத்தன மியூஸிக் டைரக்டர்கள் மியூஸிக் பண்ணின எடம் அது. நாங்க கூட பல மியூஸிக் டைரக்டர்கள்கிட்ட, நெறைய பாட்டுக்கு வாத்தியக் கலைஞர்களா வேலை செஞ்ச ஒரு தெய்வீக எடமாச்சே. எங்க மூணு பேருக்குமே அடி மனசுல ஒரு பயம். ஏன்னா... ஒரு பெரிய ஆளு எடுக்கிற படத்துக்கு, இசையமைப்பாளரா ஒரு புது ஆளு. பயம் வரத்தானே செய்யும்?
பந்தல்போட்டு, சாமி படங்களுக்கு அலங்காரம் பண்ணி, குருக்கள் வந்து மந்திரம் சொல்லி, பூஜை போட்டதும் படத்தோட ஸ்கிரிப்ட் ஃபைலை, டைரக்டர்கிட்டயும், பாட்டுப் பேப்பர்களை மியூஸிக் டைரக்டர்கிட்டயும் குடுப்பாங்க. இது வழக்கமான நடைமுறை. ராஜாண்ணன்கிட்ட பாட்டு பேப்பர்களை கொடுத்தப்போ... பதட்டமா வாங்கிக்கிட்டாரு. எங்க கூட இத்தனை வருஷமா ஒண்ணா டிராவலாகிக்கிட்டிருந்த வாத்தியக்காரர்கள்ல சில பேருக்கு நெஜமாவே சந்தோஷம். கொஞ்சம் பெரியவங்களுக்கு... "இவனுங்க என்ன சாதாரண வாத்தியக்காரனுங்கதான... என்னத்த பெருசா பண்ணிடப் போறாங்க'ன்னு ஒரு எளக்காரப்பார்வ.
"அன்னக்கிளி'’ படத்துக்காக ரெக்கார்டிங் வரை வந்தாச்சு. இதுக்கெல்லாம் என்னென்ன பாடுபட்டிருப்போம் இந்த சின்னாத்தாயி பெத்த மக்க. கதாசிரியர் ஆர்.செல்வராஜ்... இந்தப் பேரு ஒங்களுக்கெல்லாம் ரொம்பத் தெரிஞ்ச பேரா இருக்கும். 'அன்னக்கிளி', 'பதினாறு வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்'னு ஏகப்பட்ட படங்களுக்கு கதை எழுதியவர், வசனம் எழுதியவர். நாங்க மதுரையில இருக்கும் போதே செல்வராஜ் எங்களுக்கு பழக்கம். அதுவும் ராஜாண்ணனும், அவரும் ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட்டு. இந்தப் பழக்கம் எப்படி வந்துச்சுன்னா... எங்க அண்ணன் பாவலர் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சிக்காக பிரச்சார பாடகரா இருந்தாரு. மதுரையில் மண்டையன் ஆசாரி சந்துல, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் ஹால்ல நாங்க தங்கியிருந்தபடி கட்சி கச்சேரி செய்வோம்.
கட்சித்தலைவர்கள்ல ஒருத்தரான, ரொம்ப நல்ல மனுஷனான சங்கரய்யாவ ஒங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். அவரோட சகோதரரோட பையன்தான் ஆர்.செல்வராஜ். அப்பவே பல புத்தகக்கள்ல சிறுகதையெல்லாம் எழுதுவாரு. நாங்க மெட்ராஸுக்கு வந்த பின்னாடி, அவரும் பெட்டிபடுக்கையோட வந்து எங்ககூடவே தங்கி, அண்ணன் பஞ்சு அருணாசலம்கிட்ட உதவியாளரா சேர்ந்தாரு. கொஞ்ச நாள்லயே பஞ்சண்ணன்கிட்ட எங்களைப்பத்தி நல்லாச்சொல்லி ஏத்தி வச்சிருந்தாரு. "மியூஸிக் டைரக்டர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட எங்க ஊரைச் சேர்ந்த என்னோட ஃப்ரெண்டு ராஜாவும், ராஜாவோட அண்ணன் -தம்பியும் உதவியாளரா வேலை பார்த்துக்கிட்டிருக்காங்க. ‘"பாவலர்பிரதர்ஸ்'ங்கிற பேர்ல எஸ்.பி.பி.யோட கச்சேரிகள்லயும், டிராமாக்கள்லயும் வேலை செய்றாங்க. அவங்க போட்டு வச்சிருக்க பாட்டையெல்லாம் நீங்க கேட்டுப்பாருங்க... ரொம்ப நல்லாருக்கும்'னு சொன்னதோட, ராஜாண்ணனை கூட்டிட்டுப்போய் பஞ்சண்ணன்கிட்ட அறிமுகப்படுத்திவச்சாரு செல்வராஜ்.
நாங்க போட்டு வச்சிருந்த பாட்டையெல்லாம் டேபிள்ல தாளம் போட்டபடி பாடிக்காட்டினார் ராஜாண்ணன். "அன்னக்கிளி ஒன்னத் தேடுதே', "மச்சானப்பாத்தீங்களா?'’ பாட்டுகளைக் கேட்டுட்டு பாராட்டிய பஞ்சண்ணன், "சரியான நேரம் அமையுறபோது யூஸ் பண்ணிக்கிறேன்'னு சொல்லியனுப்பினார்.
கொஞ்ச நாளைக்கப்புறம்... தன்னோட தம்பி கே.என்.சுப்புபேரில் "அன்னக்கிளி'’படத்தைத் தயாரிக்கவும், எங்களை மியூஸிக் டைரக்டராகப் போடவும் முடிவு செஞ்சார் பஞ்சண்ணன். "பாவலர்பிரதர்ஸ்'’ என்கிறபேரு குழுவோடபேரா இருக்கு... என்பதால் "ராஜா'’ என்கிற பேரை பரிசீலனை பண்ணி... அப்புறமா... ஏற்கனவே மியூஸிக் டைரக்டர் ஏ.எம்.ராஜா பேரு பிரபலமாக இருந்ததால்... "இளையராஜா'வாக்கினார் பஞ்சண்ணன்.
பல சோதனய தாண்டித்தான்... தொடங்குச்சு "இளையராஜா'ங்கிற "பாவலர்பிரதர்ஸ்'ஸோட பயணம்.
அது என்ன சோதனை? அத சொல்றதுக்கு முன்னாடி... இப்போவாங்க... ஏ.வி.எம்.ஆர்.ஆர். தியேட்டருக்கு. ரெக்கார்டிங் ஹால்ல எல்லாரையும் வச்சு ரிகர்ஸல் பார்த்தாச்சு. எல்லாரும் பாராட்டினாங்க. சிலவாத்தியக்காரர்கள் நம்பிக்கையோடவும், சிலவாத்தியக்காரர்கள் "இதுநூத்துல ஒண்ணுதான்'னும் நினைச்சுவாசிச்சாங்க. எங்க குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ், பஞ்சண்ணன், படத்தின் இயக்குநர்களான தேவராஜ்-மோகன் ஆகியோர் ரொம்ப மனநிறைவோட காத்துக்கிட்டிருந்தாங்க. ஒலிப்பதிவுக்கூடத்துல ராஜாண்ணனுக்கு உதவியா, இசைக்குழு நடத்துனரா ஆர்.கோவர்தனம் இருந்தார். இவர் ரொம்ப பெருமைக்குரியவர். ஏவி.எம். படங்களுக்கு ஆர்.சுதர்ஸனம் இசையமைப்பார்.. அவருக்குத் துணையா இருந்தவர் கோவர்தனம். அதுக்குப்பிறகு அண்ணன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசைக்குழுவிலும் உதவி இசையமைப்பாளரா இருந்தார். கோவர்தனமும் பெரிய மியூஸிக்டைரக்டர்தான். "நாதஸ்வரஓசையிலே', "அன்புள்ள அத்தான் வணக்கம்', ‘"அந்த சிவகாமி மகனிடம்...' இதுபோல பல பாடல்களால் இசையமைப்பில் சாதனை படைச்சவர். அப்படிப்பட்டவர் எங்களோட முதல் படத்துல வேலை செஞ்சது பெரிய பாக்கியம்.
ரிகர்ஸல் நடக்கும்போதே ராஜாண்ணனுக்கு வயிறு சரியில்ல. பயத்துலயும், பதட்டத்துலயும் ரொம்ப கஷ்டப்பட்டாரு. ஆர்க்கெஸ்ட்ரா வாசிச்சு, வாசிச்சுப் பழகினதும், பதினோரு மணிவாக்குல எஸ்.ஜானகி வந்தாங்க. அவங்க பாடின முழுப் பாடலோட ஒத்திகை பார்த்தப்ப... இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
ஆர்க்கெஸ்ட்ராவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்ல, ஒருமைக்குக்கு நாலு தாளவாத்தியங்கள்... தபேலா... டோலக்... பேஸ் டோலக்... காங்கோடிரம்ஸ்... வயலின்ஸ், பேஸ், புளூட்... நான்- ரிதம் கிடார்... இப்படி தனித்தனியாக மைக் முன்னால வாசிக்கணும். ஒவ்வொரு மைக்கும் செக் பண்ணி, பிறகு ஜானகியம்மாவோட சேந்து ரெண்டு, மூணு ரிகர்ஸல் பேலன்ஸிங்கா நடக்கும். அது முடிஞ்சதும்தான் நேரடி டேக், ரெக்கார்டிங் பண்ணப்படும். ஒத்திகை முடிஞ்சு, "டேக்போலாம்'னு ரெக்கார்டிங் சம்பத் சொன்னவுடனே தியேட்டருக்கு வெளியில் சைலன்ஸுக்காக ஒருபெல் அடிக்கப்படும். ரெட்லைட்டும் எரியும். இந்த சிக்னல் ஸ்டாப் ஆகுறவரை தியேட்டருக்கு வெளியே கார்சத்தமோ, சைக்கிள் சத்தமோ எதுவுமே கேட்கக்கூடாது.
வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு புதுவாழ்க்கை ஓப்பனாகப்போகுது....
"சைலன்ஸ்...''
“"என்னராஜா... டேக்போலாமா?''”
"ம்... தேங்கா ஒடச்சாச்சா?''”
"ஓ... ஒடச்சாச்சு''”
"ம்... அப்போ டேக் போலாம்... அமர் நீ அனவுன்ஸ் பண்ணு...’“ம்...ரோலிங்...''”
"அம்மா... அம்மா... அம்மா...''’என சொல்லிவிட்டு “"எஸ்.பி.டி ஃபிலிம்ஸ் அன்னக்கிளி... ஸாங் 1, டேக் 1 ரன்னிங்''’ என நான் சொல்லி முடிச்சதுமே...
கோவர்தனம் மாஸ்டர் "ரெடி... டிக்... டிக்... டிக்...'' என சொடக்கிட்டுவிட்டு "ஒன்... ரெடி... ஒன்... டூ... த்ரி... ஃபோர்''’ சொல்ல...
ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிம்பிக்கிறதுக்கும், "டப்பு'னு கரண்ட் கட் ஆகிறதுக்கும் சரியா இருந்துச்சு.
அதிர்ச்சி... நிசப்தம். அந்த அமைதியைக் கிழிச்சுக்கிட்டு எங்கிருந்தோ ஒரு கமெண்ட் பறந்து வந்தது.
"ம்க்ஹும்... இதுவௌங்குனமாதிரிதான்...''”
ஏவி.எம்.மில் இருக்க ஆர்.ஆர். தியேட்டரில் "அன்னக்கிளி'’ படத்துக்கான பாடல் பதிவு. ஆர்க்கெஸ்ட்ரா கண்டக்டரா இருந்த கோவர்தனம் மாஸ்டர் "டேக்ரெடி... ஒன்... டூ... த்ரீ... ஃபோர்...''’னு சொல்ல... ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிக்கிறதுக்கும், "டப்பு'னு கரண்ட் கட்டாகிறதுக்கும் சரியா இருந்துச்சு. அந்த எடமே அதிர்ச்சியில நிசப்தமாகிப் போச்சு.
"ம்க்ஹூம்... இதுவௌங்குனமாதிரிதான்...'’னுயாரோஅடித்த கமெண்ட் எங்க காதுகள்ல விழுந்ததும், எனக்கும், பாஸ்கரண்ணனுக்கும் ஒருவிதமான பயம்... நடுக்கம்... "இப்படி அபசகுனமாகிப்போச்சே'ங்கிற அழுகை. பஞ்சண்ணனின் தம்பிகளோ "இதுக்குத்தான் இவங்க வேணாம்னு சொன்னோம். ராசியில்லாத ஆளுங்க' என தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். "இளையராஜாவோட இசைவேணாம்'னு, முதலில் பஞ்சண்ணன்கிட்ட, அவரோட பிரதர்ஸ் வற்புறுத்தி சொன்னாங்களே.... அவங்க சொன்னதுக்கு ஏத்த மாதிரி இப்ப... சென்ட்டிமெண்ட்டா கரண்ட் கட்டாயிருச்சே'னு என்னோட நினைப்பு அங்க ஓடுச்சு. ராஜாண்ணன் மேஜையில போட்டுக்காட்டின தாளமும், பாட்டும் பஞ்சண்ணனுக்குப் பிடிச்சுத்தான் "இளையராஜா'னு பேர்மாத்தி "அன்னக்கிளி'க்கு ஓ.கே. பண்ணினார். ஆனா அவரோட தம்பிங்க விரும்பல. அந்தச் சமயத்துல பஞ்சண்ணன் கதையில வந்த படங்களுக்கெல்லாம் விஜயபாஸ்கர்தான் மியூஸிக். ‘"கனி முத்து பாப்பா', "எங்கம்மா சபதம்'னு பல படங்கள் ஹிட். அதனால் பஞ்சண்ணனோட தம்பிங்க சுப்பு, கே.என்.லட்சுமணன், கிட்டு... இவங்கள்லாம் எங்களோட இசைக்கு ஒத்துக்கல. "விஜயபாஸ்கரையே போடலாம். இல்லேன்னா... வி.குமாரைப்போடலாம்''னு சொன்னாங்க..
ஆனா பஞ்சண்ணனோ "இளையராஜாதான் மியூஸிக் பண்ணுவான்''னு சொல்லிவிட்டார். பஞ்சண்ணன்கிட்ட நாங்க உண்டாக்கின நம்பிக்கையை அவரோட தம்பிங்ககிட்டயும் ஏற்படுத்தணும்னு முடிவு செஞ்சோம். அதுக்கு முன்னாடி எந்த புது மியூஸிக்டைரக்டரும் அப்படிச் செஞ்சிருப்பாங்களா?னு தெரியல. ஆனா நாங்க அந்தக் காரியத்த செஞ்சோம். ஸாங் ரெக்கார்டிங்குக்கு ஒரு வாரம் முன்னாடி... தி.நகர்ல கண்ணதாசன் வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பாலாஜி கல்யாண மண்டபத்த பிடிச்சு, "அன்னக்கிளி'க்கு வாசிக்கப்போற மியூஸிஸியன்களையும், பின்னணிப் பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, எஸ்.ஜானகி... ஆகியோரையும் வரவழைச்சோம். பஞ்சண்ணனோட பிரதர்ஸையும் வரவழைச்சு அவங்க முன்னால படத்துல இடம்பெறப்போற பாட்டுக்களை லைவ்வா பாடவச்சோம். பாவலர் பிரதர்ஸான எங்கமேல பஞ்சு பிரதர்ஸுக்கும் முழு நம்பிக்கை வந்துருக்கும்னு நினைச்சுக்கிட்டு வேலைகள ஆரம்பிச்சோம்.
இதோ... எடுத்த எடுப்புலயே கரண்ட்டு கட்டாயிருச்சே.... "முதல்வாய்ப்பு. நல்லபடியா செஞ்சு முடிச்சிடணும்'னு ராஜாண்ணன் ஏற்கனவே பயமும், பதட்டமுமா இருந்தாரு. இப்ப... இன்னும் அதிகமா பாத்ரூமுக்கும், ஒலிப்பதிவு கூடத்துக்குமா அலஞ்சுக்கிட்டிருந்தாரு. அப்போ... டைரக்டர் பி.மாதவன் வந்தார். அண்ணன்கிட்ட ‘"இந்தா ராஜா... மாங்காடு கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்... பிரசாதம். டோண்ட் வொர்ரி ராஜா... எல்லாம் நல்லபடியா நடக்கும்''னு வாழ்த்தினார். கரண்ட் வந்தது. மறுபடி ரிகர்ஸல் பார்த்து டேக் போனோம். பாடல் பதிவானதும் போட்டுக் கேட்டோம். மொத மொதல்ல கேட்டவுடனே எங்களுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. முறைப்படி இசையை கத்துக்கிட்ட வாத்ய கலைஞர்களும், எங்களுக்கு முன்னால இருந்த சினிமா இசைத்துறையில் இருக்க கலைஞர்களும், வந்திருந்தவங்களும் ரொம்பவே பாராட்டினாங்க.
அந்த திருப்தியோட. வீட்டுக்குவந்தோம். அம்மா எங்களுக்கு ஆரத்தி எடுத்து, திருஷ்டி சுத்திப்போட்டு வீட்டுக்குள்ள அழைச்சாங்க. அப்பவெல்லாம் ஸ்பூல் டேப்ரெக்கார்டர்தான் இருக்கும். அதில் எங்கம்மா கேட்கிறதுக்காகவே ரெக்கார்ட் பண்ணியிருந்த பாட்டை போட்டுக்காட்டுனோம். பாட்டக் கேட்ட எங்கம்மா தாங்க முடியாத சந்தோஷத்துல... “"இதென்னப்பா ஏம்பாட்டப் போட்டுட்டீங்க?''னு கேட்டாங்க. "எல்லாமே நீங்க குடுத்தது தானம்மா... எல்லாமே ஒங்கபாட்டுத்தான்''னு நான் சொன்னேன். உச்சி குளிர அம்மாவோட மனசு வாழ்த்துச்சு. எக்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. "என்னோட பாட்டாருக்கே?'னு அம்மா கேட்டது முழுக்க உண்மை. முதன்முதலா நாங்க இசைங்கிற ராஜகோபுரம் கட்றதுக்கு அஸ்திவாரமே... எங்கம்மா எங்களுக்காக பாடின தாலாட்டுப் பாட்டுத்தான். அன்னக்கிளி ஒன்னத்தேடுதே...
ஆறுமாசம் ஒரு வருஷம்... ஆவரம்பூ மேனிவாடுதே....ங்கிற இந்தப் பாட்டு எங்க பக்க கிராமங்கள்ல பாடுற கிராமியப்பாட்டு. எங்கம்மா இந்தப் பாட்ட அப்படியே மெதுவா இழுத்து... "அன்னக்கிளி... ஒன்னத்தேடுதே...'னு ராகத்தோட பாடினா... தூங்காம இருக்க கண்ணெல்லாம் அப்படியே போய் சொறுகிக்கிரும்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வரலாற்று சாதனை படைத்த சூர்யா: 3 நாட்கள் முடிவில் ரூ.3.07 கோடி வசூல் குவித்த என்ஜிகே!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான என்ஜிகே படம் சென்னையில் மட்டும் ரூ.3.07 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
வரலாற்று சாதனை படைத்த சூர்யா: 3 நாட்கள் முடிவில் ரூ.3.07 கோடி வசூல் குவித்த என்...
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாநடிப்பில் கடந்த வாரம் வெளியான என்ஜிகேபடம் சென்னையில் மட்டும் ரூ.3.07 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் என்ஜிகே. அரசியல் கதையை மையப்படுத்திய இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், இளவரசு, குரு சோமசுந்தரம், வேல ராமமூர்த்தி, பாலாசிங் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 31ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் ஹிட் கொடுத்துள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.1.03 கோடி வசூல் கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. ஆம், இதுவரை சூர்யா நடிப்பில் வந்த எந்த படமும் முதல் நாளில் ரூ.1 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, 2ம் நாள் முடிவில் இப்படம் ரூ.1.07 கோடி வசூல் குவித்துள்ளது மேலும், 3ம் நாள் முடிவில் ரூ.0.97 கோடி வரையிலும் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக 3ம் நாட்கள் முடிவில் சூர்யாவின் என்ஜிகே ரூ.3.07 கோடி வசூல் கொடுத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 3 நாட்கள் முடிவில் சூர்யாவின் ஒரு படம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் வெளியான படங்களில் சென்னை சிட்டி ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் என் ஜி கே படம் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக வந்த ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் என்ட்கேம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
View image on Twitter
Quote:
[/url]Kaushik LM
✔@LMKMovieManiac
Breaking : #NGK Day1 Chennai city gross is a fantastic 1.03 CR.. First @Suriya_offl film to have a 1 CR+ opening in Chennai city [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f44c.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f525.png[/img]#NGKFire grand start..
7,748
11:05 PM - May 31, 2019
[color][size][font][color][font]
1,534 people are talking about this
Twitter Ads info and privacy
[/font][/color]
[/font][/size][/color] Quote:
Ramesh Bala
✔@rameshlaus
#NGK - $54K for Thursday Premieres.. Partial Gross on Friday - $30K..
Total - $84K.. At the #USA Box office..
1,792
7:51 AM - Jun 1, 2019
Twitter Ads info and privacy
[color][size][font]
296 people are talking about this
[url=https://twitter.com/rameshlaus/status/1134646120943050752]
[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சிவகார்த்திகேயன் சொன்ன திருத்தம்
மிஸ்டர் லோக்கல் படத்தின் படு தோல்வி சிவகார்த்திகேயனை ரொம்ப அப்செட்டாக்கி உள்ளது. இதை நேற்று தனது தயாரிப்பில் உருவாகி உள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியபோது தென்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்விக்குப் பிறகு எப்படிப்பட்ட படத்தில் நடிப்பது என்ற பயம் அவருக்கு வந்துள்ளது. அதனாலோ என்னவோ, 'இரும்புத்திரை'படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ'படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்று முடிந்தநிலையில் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருக்கிறாராம்.
ஆர்.டி.ராஜா தயாரிப்பில் தொடங்கப்பட்ட இப்படத்தை தற்போது நயன்தாராவின் மானேஜர் ராஜேஷ் அண்டர்டேக் பண்ணிவிட்டார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தான் திரைக்கதையில் மாற்றங்களை செய்யச் சொல்லி இருக்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பு சிவகார்த்திகேயன் சொன்ன திருத்தங்களை செய்வதாக உறுதி அளித்துள்ளாராம் இயக்குநர் மித்ரன்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாக நடிக்க இன்னொரு கதாநாயகியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடிக்கிறார்
•
|