Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
நன்றியை மறந்த தயாரிப்பாளர்கள்: சிவகார்த்திகேயன் வேதனை
[Image: mr-local-press-meet-23jpgjpg]

சில தயாரிப்பாளர்கள் நன்றியை மறந்துவிட்டதாக, 'Mr.லோக்கல்' பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் வேதனையுடன் குறிப்பிட்டார்.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, ரோபோ ஷங்கர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'Mr.லோக்கல்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜேஷ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஹிப் ஹாப் ஆதி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும் போது, “இந்த தருணத்தில் ஒரு முக்கியமான நன்றியை சிவகார்த்திகேயன் ப்ரதருக்கு சொல்ல வேண்டும். 14 ஆண்டுகளாக தயாரிப்பாளராக இருக்கிறேன்.
வாழ்க்கையில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் எனக்கு சிவகார்த்திகேயன் ப்ரதர் பண்ணிக் கொடுத்திருக்கார். அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. இதனை நேரிலும் சொல்லியிருக்கிறேன். அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இங்கு சொல்கிறேன். என் வாழ்க்கை முழுக்க நினைத்துப் பார்க்கக்கூடிய நன்றியாக இந்தப் படம் இருக்கும். என்னுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, எனக்கு அவர் சிரமம் கொடுக்கவே இல்லை” என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் தனது பேச்சில், “நீங்கள் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் என்பது தெரியும். ரொம்ப முக்கியமான காலகட்டத்தில் இந்தப் படத்தை பண்ணிக் கொடுத்ததாக நன்றியும் சொன்னீர்கள். நிறைய தயாரிப்பாளர்கள் நன்றியை நினைக்காமல், அதைப் பற்றிப் பேசாமல் அப்படியே போய்விட்டார்கள். எதெல்லாம் வெளியே பேசப்பட வேண்டுமோ, அதெல்லாம் பேசப்படுவதே இல்லை” என்று பேசினார்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Ayogya Collections: மகேஷ் பாபு படத்தை விட அதிக வசூல் குவித்த விஷாலின் அயோக்யா!

விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படம் சென்னையில் மட்டும் முதல் இரண்டு நாட்களில் ரூ.69.28 லட்சம் வசூல் குவித்துள்ளது.

[Image: ayogya.jpg]Ayogya Collections: மகேஷ் பாபு படத்தை விட அதிக வசூல் குவித்த விஷாலின் அயோக்யா!
விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படம் சென்னையில் மட்டும் முதல் இரண்டு நாட்களில் ரூ.69.28 லட்சம் வசூல் குவித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். இப்படியெல்லாம் பதவி வகிக்கும் விஷாலின் நடிப்பில் உருவாகியிருந்த அயோக்யா படம் கடந்த 10ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் பணப்பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை. 

விஷால் ரூ.1 கோடி கொடுக்க, 11ம் தேதி அயோக்யா படம் வெளியானது. தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.34 லட்சமும், 2ம் நாளில் ரூ.35 லட்சமும் வசூல் கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் முதல் இரண்டு நாட்களில் மட்டும் ரூ.7 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
Quote:[Image: st0aKoRG_normal.jpg]
[/url]Kaushik LM

@LMKMovieManiac





Chennai city weekend top grossers,

1 #Ayogya
2 #Maharshi
3 #Kee
4 #100TheMovie
5 #AvengersEndgame
6 #StudentOfTheYear2
7 #Kanchana3
8 #K13

2,021
9:27 AM - May 13, 2019
Twitter Ads info and privacy
[color][size][font]

316 people are talking about this

[url=https://twitter.com/LMKMovieManiac/status/1127784786842382336]




ஆனால், இப்படத்திற்கு முன்னதாக, தெலுங்கில் 9ம் தேதி வெளியான மகேஷ் பாபுவின் மகர்ஷி என்ற படம் ரூ.65.58 லட்சம் வசூல் குவித்து 2ம் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில், அயோக்யா படத்திற்கு போட்டியாக வந்த ஜீவாவின் கீ படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 159 திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.40.51 லட்சம் மட்டுமே வசூல் கொடுத்துள்ளது.[/font][/size][/color]
Like Reply
படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... ‘செருப்பால் அடிப்பேன்’ எனத் திட்டிய பிரபல பாடகி!

சென்னை: பிரபல தெலுங்கு பின்னணி பாடகி பிரணவி, இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருப்பவர் பிரணவி. ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட படங்களில் பாடி மிகவும் பிரபலமானவர் இவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது
படுக்கைக்கு அழைப்பு:
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார். படுக்கைக்கு வந்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை நிர்ப்பந்தித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
[Image: pranvi-4-1557893545.jpg]
 

ஓப்பனாகக் கேட்டார்:
அப்படி நடந்த சம்பவம் ஒன்று பற்றியும் அவர் கூறியுள்ளார். அதில், பிரபல இயக்குனர் ஒருவர் இவரை ஒரு பாடல் பாட வருமாறு ஸ்டூடியோவிற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற பிறகு படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே பாட வாய்ப்பு தருவதாக அவர் ஓப்பனாகவே கூறியுள்ளார்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
[Image: pranvi-3-1557893551.jpg]
 

பிரணவி அதிர்ச்சி:
இதனால் அதிர்ச்சியடைந்த பிரணவி, "நான் சின்ன பொண்ணு. இப்போது தான் இன்டர் படிப்பை முடித்திருக்கேன்" எனத் தெரிவித்துள்ளார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பிரணவியிடம் அவர் ஆபாசமாகவே பேசியுள்ளார். இதனால் பொறுமையிழந்த பிரணவி கோபத்தில், "செருப்பால் அடிப்பேன்" என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன் என அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
[Image: pranvi-2-1557893557.jpg]
 


மீண்டும் மீ டூ:
ஏற்கனவே தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார் கூறி நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சில காலம் இந்த மீ டூ பிரச்சினை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரணவி, சமீரா ரெட்டி போன்றோர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் பற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
Like Reply
திரை விமர்சனம்- அயோக்யா
[Image: 70f21416P2265815mrjpg]

சென்னை நீலாங்கரையில் போதைப் பொருள், ஆள் கடத்தல், சொத்து களை அபகரிப்பது என சட்ட விரோதமான  செயல்களை செய்துவரு கிறார் காளிராஜன் (பார்த்திபன்). தன்னை எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் பகுதிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அந்த இடத்துக்கு எப்போதும் பணத்தாசை பிடித்த கர்ணனை(விஷால்) அமைச்சர் உதவியுடன் கொண்டுவருகிறார். பார்த் திபனுடன் விஷால் கைகோர்க்க  ஈவு இரக்கம் இன்றி எல்லா காரியங்களும் நடந்தேறுகின்றன.
ஒருகட்டத்தில் பார்த்திபனின் தம்பிகளால் ஓர் இளம்பெண்  கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்அந்த வழக்கை எதிர்கொள்ளும் விஷால், தன் காதலியின் மனம் கவர நல்ல போலீஸாக மாறவே, பார்த்திபனுடன் விரோதம் ஏற்படுகிறது. தன்தம்பி களைக் காப்பாற்ற விஷாலுடன் பார்த் திபன் மல்லுக்கட்டுகிறார். இந்தப் போட்டியில் யார் வென்றார்கள் என் பதை ஒரு திருப்பமான கிளைமாக் ஸுடன் பேசுகிறது ‘அயோக்யா’.
தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்துடைய மறுஆக்கம்தான் ‘அயோக்யா’. உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கடமை இருக்கிறது என்று டைட்டில் போட்டுவிடுகிறார்கள். அந்தக் கடமையைச் செய்து காட்ட எந்த எல்லைக்கு நாயகன் செல்கிறார் என்பதை உரக்கப் பேசுகிறது படம். ஓர் அவலமாக மாறிவிட்ட பாலியல் குரூரங்களை முன்னெடுத்து படத்தில் பேசியிருப்பது இயக்குநரின் சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறது. அதற்காக அவருக்கு சபாஷ் போடலாம்.
படத்தின் முதல் பாதி, நாயகன் பிம்பத்தை தூக்கியபடி திரைக்கதை நகர்கிறது. ஆனால், அதை அலுப்பூட்டாமல் படமாக்கிய விதத்தில் இயக்கு நர் வெங்கட் மோகன் வெற்றி பெற்றிருக்கிறார். பார்த்திபன் செய்யும் முறையற்ற எல்லா வேலைகளுக்கும் விஷால் துணையாக இருக்கிறார். அடாவடி செய்கிறார். ஆனால், கடிவாளம் இல்லாத குதிரையாக, ஒரு போலீஸ் இன்ஸ் பெக்டருக்கு இத்தனை வானளாவிய அதிகாரமா என மனதில் கேள்வி எழுவதைத்  தவிர்க்க முடியவில்லை.
இல்லாத ஆதாரத்தை நீதிமன்றத்துக்கு விஷால் எப்படி கொண்டு வரப் போகிறார் என்ற  பரபரப்பை அழகாகவே காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். அதற்காக  ‘உங்களால் தூக்குத் தண்டனை வழங்க முடியுமா?’ என்று நீதிபதிகளைப்பார்த்து நாயகன் கேட்பதும், அதன்படியே தீர்ப்பு எழுதப்படுவதும் அபத்தம்.
ஊகிக்க முடியாத ஒரு திருப்பத்தின் மூலம் கிளைமாக்ஸை நிறைவு செய்திருப்பது படத்துக்கு பலம். பணத்துக்காக எதையும் செய்ய அஞ்சாத விஷால், பாலியல் குரூரத்துக்காக மட்டும் மனம் மாறுவதாக காட்டும் காட்சிகள் நம்பும்படியாக இல்லை. விஷால், பார்த்திபன் பிரிவில் காட்டப்படும் காட்சிகளிலும் புதுமை இல்லை. அது வழக்கமான தமிழ் சினிமா டெம்ப்ளேட். 
சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட ஆதர வற்ற சிறுவனாகத் தொடங்கி, சுய நலத்தின் உச்சமாகி, பணவெறியில் அலைந்து திரியும் பாத்திரத்தில் விஷால் கச்சிதம்.  நான் அயோக் கியன்தான் என்று விளக்கம் கொடுக் கும் இடத்திலும், மனமாற்றத்துக்குப் பிறகு தடுமாறும் இடத்திலும் நன்றாக நடித்திருக்கிறார். சில இடங்களில் அவருடைய மிகை நடிப்பு சற்றே எரிச்சலைக் கூட்டினாலும், போலீஸுக்கே உரிய அவருடைய மிடுக்கானதோற்றம் ரசிக்க வைக்கிறது. படத்தின் நாயகி ராஷி கண்ணா அழகுப் பதுமையாக வந்துபோகிறார்.
 எப்போதும் குடிப்பது, சுற்றிலும் அடியாட்கள் என வழக்கமான வில்லனாக வருகிறார் பார்த்திபன். அவரு டைய வழக்கமான உடல்மொழி படத் தில் மிஸ்ஸிங். ஹெட் கான்ஸ்டபிளாக கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் கவர்கிறார். விஷால் நல்லவராக மாறிய பிறகு அவர் அடிக்கும் சல்யூட் ரசிக்க வைக்கிறது. திருடனாக இரு காட்சி களில் வந்துபோகிறார் யோகிபாபு. ராதாரவி, சச்சு, ஆனந்த்ராஜ், தேவ தர்ஷினி, ‘ஆடுகளம்’ நரேன், பூஜா தேவரியா என நட்சத்திரப்  பட்டாளங்கள் இருந்தாலும் நடிப்பை வெளிப் படுத்த வாய்ப்புகள் இல்லை. பின்னணி இசையில் சாம்.சி.எஸ். கவனம் கொள்கிறார். கார்த்திக் ஒளிப்பதிவில் குறையில்லை.
கூட்டுப் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு தூக்கு  தண்டனை வழங்க வேண்டும்; அதை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற ஒற்றை வரியில் படம் உயர்ந்து நிற்கிறது. மற்றபடி வழக்கமான மசாலா தூவப்பட்ட  அக்மார்க் படம் ‘அயோக்யா’
Like Reply
தளபதி-63 : 15 நிமிடம் கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா ஷாருக்கானுக்கு.!
நடிகர் விஜய் அட்லியுடன் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் தளபதி 63 இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் கால்பந்து மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்து வருகிறார்.
மேலும் படத்தில் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், என பலர் நடித்து வருகிறார்கள், படப்பிடிப்பு சென்னையில் மிகப் பிரமாண்டமான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 15 நிமிடம் நடிக்கயிருக்கிறார் இதற்காக ஷாருக்கானுக்கு 20 கோடி ரூபாய் சம்பளமாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
Like Reply
நட்புனா என்னானு தெரியுமா?: சினிமா விமர்சனம்
[Image: _106988172_wwww.jpg]


திரைப்படம்
நட்புனா என்னானு தெரியுமா?


நடிகர்கள்
கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜா, ராஜு, இளவரசு, மன்சூர் அலிகான், ராஜேந்திரன், அழகம்பெருமாள்


இசை
தரண்


ஒளிப்பதிவு
யுவராஜ்


இயக்கம்
சிவா அரவிந்த்

சிறு வயதிலிருந்து நண்பர்களாக இருக்கும் மூன்று பேருக்கிடையில் காதல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சிவா அரவிந்த்.
கவின், அருண்ராஜா, ராஜு ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்து நண்பர்கள். பத்தாம் வகுப்புத் தேர்வின்போது காப்பியடிப்பதற்காக தன்னிடம் பேப்பரை வாங்கிய ஒரு பெண், அதனைத் திருப்பித் தராததால் தேர்வில் தோல்வியடைகிறார் கவின். இதனால், பெண்களை நம்பக்கூடாது என்ற முடிவில் இருக்கிறான் கவின். நண்பர்கள் மூவரும் சேர்ந்து திருமண ஏற்பாடுகளைச் செய்துதரும் நிறுவனம் ஒன்றைத் துவங்குகிறார்கள்.
அப்போது ரம்யா நம்பீசனைச் சந்திக்கும் அருண்ராஜா அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், ரம்யா நம்பீசன் கவினைக் காதலிக்கிறார். இதனால் நண்பர்கள் பிரிகிறார்கள். திருமணம் நடந்ததா, நண்பர்கள் இணைந்தார்களா என்பது மீதிக் கதை.
[Image: _106988170_natpunaaennanutheriyumaamoviestills-20.jpg]
சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான கப்பல் என்ற திரைப்படத்தை ஞாபகப்படுத்துகிறது இந்தப் படம். ஆனால், அந்தப் படத்திலிருந்து சற்று தெளிவான திரைக்கதை இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.
படத்தின் துவக்கத்தில் நண்பர்கள் தொழில் துவங்குவது விரிவாகக் காட்டப்படுவதால், படிக்காத மூன்று நண்பர்கள் தொழில் துவங்கி, பணக்காரர்களாவதுதான் கதையோ என்று நினைக்கும்போதே, ரம்யா நம்பீசனை அறிமுகப்படுத்தி காதல், பாடல் என்று படம் வேறு திசையில் செல்ல ஆரம்பிக்கிறது.
இந்தத் தடுமாற்றம் தவிர, மிகவும் தளர்வான திரைக்கதை ஏதோ தொலைக்காட்சி நாடகத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. சற்றே படம் சுவாரஸ்யமாக நகரத் துவங்கும்போது, பாடல்கள் குறுக்கிடுகின்றன.
படத்தில் ஆங்காங்கே தலைகாட்டும் நகைச்சுவை வசனங்கள்தான் படத்தின் ஒரே ஜாலியான அம்சம். குறிப்பாக ராஜுவின் அப்பாவித்தனம்மிக்க வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.
படம் நெடுகவரும் இளவரசு, இரண்டு காட்சிகளில் வந்துவிட்டு காணாமல்போகும் மன்சூர் அலிகான், ராஜேந்திரன் ஆகியோர் அவர்கள் வரும் காட்சிகளில் ரசிக்கவைத்தாலும், திரைக்கதையில் ஒரு தொடர்ச்சியில்லாமல் இருப்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
[Image: _106988174_mansoor.jpg]
படத்தில் மையப் பாத்திரமாக வரும் ரம்யா நம்பீசன், கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
பாடல்களைத் தவிர்த்துவிட்டு, திரைக்கதையில் இயக்குனர் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல நகைச்சுவைத் திரைப்படம் கிடைத்திருக்கக்கூடும்
Like Reply
2 வேடங்களில் ரஜினிகாந்த்


[Image: 201905170121420473_Rajinikanth-in-2-roles_SECVPF.gif]

[Image: t-max-icon.png] [Image: t-min-icon.png] Text Size [Image: print-icon.png] Print
ரஜினிகாந் தர்பார் படத்தில் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள். 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. 


சமீபத்தில் ரஜினிகாந்தின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் போலீஸ் மோப்ப நாய், போலீஸ் பெல்ட், தொப்பி, குற்றம் நடக்கும் இடங்களில் ஒட்டப்படும் மஞ்சள் டேப் ஆகியவை இருந்தன. அதைவைத்து ஐ.பி.எஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு கதாபாத்திரத்தை மும்பையை மிரட்டும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு வேடம் பாட்சா போன்று தாதாவாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. 

தாதா ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியான ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வருகிறார். தற்போது என்கவுண்ட்டர் போலீஸ் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
Like Reply
6 வருடங்களுக்கு பின் ஒரே நாளில் மோதும் அஜித் - விஜய் படங்கள்!
[Image: ajith_710x400xt.gif]
கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' படமும் அஜித் நடித்த 'வீரம்' படமும் பொங்கல் திருவிழாவை ஒட்டி ஒரே நாளில் ரிலீஸ் ஆகியது. இதை தொடர்ந்து மீண்டும் 6 வருடங்களுக்கு பின் 2020 ஆம் ஆண்டில் அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
[Image: image.jpg]
விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 63ஆவது படத்தை தொடர்ந்து, 'மாநகரம்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாக உள்ள ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தை விஜய்யின் உறவினரான சினேகா பிரிட்டோ தயாரிக்கவுள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகியது. இந்த படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
[Image: Ajith.jpg]
அதே போல் 'நேர்கொண்ட பார்வை' படத்தை முடித்து விட்டு, அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்திலேயே மற்றொரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படமும் கோடை விடுமுறையை டார்கெட் செய்து ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுவதால், ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அஜித் -விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Like Reply
விஜய் சேதுபதி கதை எழுதி, தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’
[Image: vijay-sethupathijpg]

விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் கதையையும் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. ‘கைலாசம்’ என்ற வயதான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார். மேலும், ‘விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் இந்தப் படத்தையும் அவரே தயாரித்தார்
இதுதவிர, இந்தப் படத்தின் கதையை பிஜு விஸ்வநாத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியும் எழுதினார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கையும் பிஜு விஸ்வநாத் கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்தார். விமர்சகர்களிடையே  இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். பிஜு விஸ்வநாத் இயக்கவுள்ள இந்தப் படத்தின் கதையை, விஜய் சேதுபதி - பிஜு விஸ்வநாத் இணைந்து எழுதியுள்ளனர்.
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைப் போலவே இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிடிங்கையும் பிஜு விஸ்வநாத்தே கவனிக்கிறார்.
மேலும், இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ஆனால், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. முதன்மைக் கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். நிரஞ்சன் பாபு இசையமைக்கும் இந்தப் படத்தில், 6 பாடல்களையும் விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் இசை உரிமையை திங்க் மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வருகிற 22-ம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார் விஜய் சேதுபதி.
Like Reply
பணம் புகழைக்காட்டிலும் மரியாதை ரொம்ப முக்கியம் - காஞ்சனா ரீமேக்கில் இருந்து ராகவா லாரன்ஸ் விலகல்
ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் தனது இந்தி படத்திலிருந்து வெளிவந்துள்ளார்  இயக்குநர் நடிகர் ராகவா லாரன்ஸ் 
[Image: Raghava-Lawrence_01079.jpg]
தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ரசிகர்களின் ஆதரவு பெற்ற சீரிஸ் திரைப்படம் 'காஞ்சனா' . முந்தைய படங்களான 'காஞ்சனா- 1', 'காஞ்சனா- 2' படங்களைக் காட்டிலும் அதிக ரசிகர்களை கவர்ந்து 'காஞ்சனா-3' ஸ்லீப்பிங் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் ஹிட் அடித்த 'காஞ்சனா'வின் முதல் பாகத்தை இந்தியில் ரீமேக் செய்ய  நடிகர் அக்‌ஷய் குமார் முடிவெடுத்தார். அந்த படத்தை இயக்கும் வேலையை லாரன்சிடமே கொடுத்தார். வீரம், விவேகம்,விஸ்வாசம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். 'லக்‌ஷ்மி பாம்ப்' என்று பெயர் வைக்கப்பட்டுப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. 
கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தமிழிலிருந்து  எட்டு வருடங்கள் கழித்து இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.  
[Image: laxmmi_bomb_01086.jpg]
 
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். .  அக்‌ஷய் குமார், கண்ணுக்கு மையிடுவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்துக்கொண்டிருக்கும் இப்படம் அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[Image: lawrence_01493.jpg]
இந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் விஷயம் தனக்கு தெரிவிக்கப்படவில்லை. தன்னைக் கேட்டு அலோசித்தும் செய்யவில்லை என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ள லாரன்ஸ் இப்படத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது என்னவென்றால் " மதியாதார் தலைவாசல் மிதியாதே என்ற தமிழ் முதுமொழி ஒன்று உள்ளது அதன் படி நான் 'லக்ஷ்மி பாம்ப் படத்திலிருந்து வெளியேறவுள்ளேன். பணம்,பெயர், புகழைக் காட்டிலும் சுயமரியாதை என்பது இந்த உலகத்தில் மனிதனுக்கு மிகவும் முக்கியமானது.
[Image: lawrence02_01273.jpg]
இப்படத்திலிருந்து வெளியேறுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. முக்கியமான ஒன்று ஃபர்ஸ்ட்லுக். என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்ததை மூன்றாவது ஆள் சொல்லிக் கேட்டேன். இந்த ஃபர்ஸ்ட் லுக் எனது கவனத்திற்கு கொண்டு வராமலேயே வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரின் டிசைனும் திருப்தியளிக்கவில்லை. தனது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாவதை இன்னொருவர் மூலம் அறிந்து கொள்வது ஒரு இயக்குநருக்கு மிகுந்த வேதனையளிக்கக்கூடிய ஒன்று.நான் மிகுவும் அவமதிக்கப்பட்டதாகவும் ஏமாற்றப்பட்டதாகவும் நினைக்கிறேன். இந்த கதை படமாவதை  நான் தடுக்கமுடியாது, அது தொழில் நேர்மையும் அல்ல. அக்‌ஷய் குமார் சார் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சீக்கிரமே அவரை பார்த்து இக்கதையைக் கொடுத்துவிடுவேன்.  இந்த  மாதிரி விஷயம் வேறு எந்த இயக்குநருக்கும் நடக்கக்கூடாது.' என்று தெரிவித்துள்ளார்
Like Reply
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் புதிய சிக்கல்கள்
 
முகப்பு  சினிமா  செய்திகள்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் புதிய சிக்கல்கள்!
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


[Image: ponniyin_selvan.jpg]
'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்க முயன்று எம்.ஜி.ஆர் கைவிட்டார். தொடர்ந்து இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்ட பலரும் அதைப் படமாக்க முயன்றனர். இருப்பினும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. :
[color][size][font]




கமலும் தன் பங்கிற்கு வேலைகளைத் தொடங்கினார். அது அப்படியே நின்று போனது. இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்க மணிரத்னம் முயன்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இரண்டு பாகங்களாக இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் முடிவெடுத்திருந்தார். 

[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2019%2Fmay%2F20%2Fmani-ratnams-next-project-ponniyin-selvan-dropped-3155250.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=458bd1ed27[/img]


[/font][/size][/color]
[Image: vikram_mani.jpg]

இதற்கான வேலைகளிலும் அவரது உதவி இயக்குநர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மோகன்பாபு உள்பட பலர் நடிக்க பேச்சுவார்த்தையும் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தைத் தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் இந்த படத்திலிருந்து விலகியதாகத் தெரிகிறது. இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் காரணமாகவே லைகா விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை இப்போது ஒரு வேளை கைவிட்டாலும், மீண்டும் அம்முயற்சியைத் தொடர்வதாக முடிவெடுத்துள்ளனர். தனது அடுத்த படத்தை மல்டி ஸ்டார் படமாகவே இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.
Like Reply
கலவையான விமர்சனங்களிடையே Mr.லோக்கலின் முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா!
சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த படம் மிஸ்டர்.லோக்கல். சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி என காமெடி படங்களுக்கு புகழ்பெற்ற ராஜேஷ் இப்படத்தை இயக்கியிருந்தார்.
நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, ஹிப்பாப் ஆதி இசையமைத்திருந்தார். பாடல்கள் ஓரளவு பேசப்பட்டாலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் இப்படம் முதல்நாளில் தமிழகம் முழுவதும் சுமார் 6.28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
அப்படியிருந்தும் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, படம் வெளியான மூன்று நாட்களும் ஓரளவிற்கு நல்ல வசூல் தான் வருகின்றது.
இதில் சென்னையில் இப்படம் மூன்று நாட்களில் ரூ 1.85 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது, வார நாட்களாக இந்த வாரம் தான் படத்தின் ரிசல்ட் தெரியவரும்.
Like Reply
ஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்
காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் இந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் அது உண்மையாகும் படி காஞ்சனாவின் இந்தி மேக்கிங் தொடங்கி நடைபெற்றது. ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அந்த படத்திலிருந்து தற்போது வெளியேறிவிட்டதாக ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அக்‌ஷய் குமார் நடிக்க  இந்தியில் ''லட்சுமி பாம்'' என்ற பெயரில் வெளிவர இருந்தது இந்த திரைப்படம். 
 
[Image: raghava-with-lawrence.jpg]

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட அண்மையில் வெளியாகியது. அதில் அக்‌ஷய் குமார் கண்ணுக்கு கீழே காஜல் இடுகிறார். அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி படம் வெளியிட இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பபட்டிருந்தது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இந்த படத்தை கைவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
நேற்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உலகத்தில் பணத்தை விட மரியாதை தான் முக்கியம், அதனால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகுகிறேன். படத்தில் இருந்து விலகுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது அதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய அனுமதி இல்லாமல் நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது வேறொருவர் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. ஒரு இயக்குநருக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பது வேதனையை அளிக்கிறது. அந்த போஸ்டரும் எனக்கு பிடித்ததுபோல இல்லை. நான் நினைத்தால் இந்த படத்தை எடுக்கவிட முடியாமல் செய்ய முடியும் ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். அக்‌ஷய் குமார் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் இப்படத்தின் கதையை அவரிடம் தருகிறேன். அவர் வேறு யாரையாவது வைத்து எடுத்துகொள்ளலாம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், “படத்தின் இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது. அதற்காக நடிகர் அக்‌ஷய்குமார் 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். அதற்குள் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். வேறு இயக்குநரை வைத்து படத்தை இயக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் இயக்குநர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். லாரன்ஸுக்கும் தயாரிப்பாளர் தரப்புக்கும் தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை விரிவாக வெளியில் சொல்ல முடியாது” என்றார்.
Like Reply
முதல் பார்வை: நட்புனா என்னானு தெரியுமா
[Image: Natpunaa-Ennanu-Theriyumaa-Movie-Stills-2JPGjpg]

ஒரே பெண்ணைக் காதலிக்கும் மூன்று நண்பர்களின் கதை 'நட்புனா என்னானு தெரியுமா'.
கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் 10-ம் வகுப்பில் பெயிலாக, அத்தோடு படிப்புக்கு குட் பை சொல்கிறார்கள். ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்று யோசித்து யோசித்தே ஏழு வருடங்களை வீணாக்குகிறார்கள். அதற்குப் பிறகு நம்ம வீட்டு கல்யாணம் என்ற பெயரில் திருமண ஏற்பாடுகளைச் செய்து தரும் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். இதே தொழிலை பல ஆண்டுகளாக நடத்தி வரும் தொழிலதிபர் இளவரசு இதை எதிர்க்கிறார். இதனிடையே ரம்யா நம்பீசனைப் பார்த்ததும் காதல் வயப்படுகிறார் ராஜூ. தன் நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறார். ஒருதலைக் காதல் என்று தெரிந்ததும் கவினும் ரம்யாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அருண்ராஜாவையும் காதலிக்கத் தூண்டி விடுகிறார்.
இந்த மூன்று பேரில் ரம்யா நம்பீசன் யாரைக் காதலிக்கிறார், மற்ற இருவர் என்ன ஆகிறார்கள், மூவரும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததற்குக் காரணம் என்ன, இவர்கள் நட்பு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
அலட்டிக்கொள்ளாமல் கலகலப்பாக திரைக்கதையை நகர்த்திச் செல்லும் அளவுக்கு ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் சிவா அரவிந்த். மாஸ் ஆடியன்ஸைக் கவர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் வைக்காமல் நேர்த்தியாக கதை சொன்ன விதத்தில் அறிமுக இயக்குநரை தாராளமாக வரவேற்கலாம்.
'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' சீரியல்கள் மூலம் பிரபலமாகி, 'சத்ரியன்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த கவின் நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோ ஆகியுள்ளார். படத்தில் கவினுக்குப் பெரிய சவால்கள் எதுவும் இல்லை. புத்திசாலித்தனமான செயல்பாடுகளும் இல்லை.  முகபாவனைகளில் கூட முத்திரை பதிக்கவில்லை. முதல் படம் என்கிற தடுமாற்றமும் தயக்கமும் கவினிடம் எதிரொலிக்கிறது. அதை இனி வரும் படங்களில் சரிசெய்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.
'கனா காணும் காலங்கள்' ராஜூவுக்கு இது முக்கியமான படம். மூன்று நண்பர்களில் நடிப்பால் அழுத்தமாகத் தடம் பதிக்கிறார். காதலிக்காகப் பொங்குவது, நட்பே இல்லை என வெடிப்பது, மருத்துவமனையில் நண்பனிடம் பணம் இல்லை என்பதற்காக செயின் கொடுத்துப் பணம் புரட்டச் சொல்வது என நட்புக்கு இலக்கணம் வகுத்த விதத்தில் ராஜூவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரக்கூடும்.
அருண்ராஜா காமராஜ் குணச்சித்திரம் கலந்த நகைச்சுவை நடிப்பை  நல்கிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார். கவினிடம் அவரின் வீட்டு மொட்டைமாடியில் பேசும்போது நல்ல நண்பனாக ஸ்கோர் செய்கிறார்.
ரம்யா நம்பீசன் தான் படத்தின் மையம். படம் முழுக்க அவர் இருக்கிறார். ஆனால், அவரது நடிப்பு படத்துக்கு எந்தவிதத்திலும் பலம் சேர்க்கவில்லை.
அழகம்பெருமாள், மன்சூர் அலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், சுஜாதா, ரமா, தீப்பெட்டி கணேசன், இளவரசு என்று படத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். இதில் வழக்கமான கேரக்டர் என்றாலும் இளவரசு கொஞ்சம் தனித்துத் தெரிகிறார்.
யுவாவின் ஒளிப்பதிவு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. தரண் இசையில் ஜெயச்சந்திர ஹஷ்மியின் வரிகளில் அந்தர் பல்டி அடிக்க மாட்டேன் ரசிக்க வைக்கும் ரகம். பின்னணி இசையில் உறுத்தல் இல்லை. நிர்மல் முதல் பாதியில் சில இடங்களில் தயங்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.
படம் கதைக்களத்துக்குள் பயணிக்க வெகு நேரமாகிறது. இளவரசுவின் ஆரம்பகட்டப் பேச்சுகள் அலுப்பையும் சோர்வையும் வரவழைக்கின்றன. நம்ம ஊரு கல்யாணம் என்று ஷட்டரைத் திறந்த  பிறகே கதை சூடுபிடிக்கிறது. ரம்யா நம்பீசனின் வருகைக்குப் பிறகு கதையின் பயணம் மாறுகிறது.
நட்புக்கான முக்கியத்துவம் குறித்தோ, அவர்களுக்குள் இருக்கும் மறக்க முடியாத நினைவுகள் குறித்தோ படம் பேசவில்லை. பிரிவுக்கான வலியை சரியாகச் சொல்லவில்லை. ஆனால், இதையெல்லாம் மறக்கச் செய்கிற அளவுக்கு நகைச்சுவை வொர்க் அவுட் ஆகியிருப்பது படத்தின் பெரும் பலம்.
ஜாலியாகப் படம் பார்க்க நினைப்பவர்கள் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தை ரசிக்கலாம்.
Like Reply
போலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்
எல்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
[Image: Priya-Bhavani-Shankar-.jpg]பிரியா பவானி சங்கர்

[Image: sficon.gif][Image: sticon.gif][Image: sgicon.gif][email=?subject=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&body=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D:%20https://tamil.news18.com/news/entertainment/cinema-priya-bhavani-shankars-reply-to-fake-twitter-profile-pv-157499.html][Image: email-icon.gif][/email]


தனது பெயரில் ட்விட்டரில் போலி அக்கவுண்ட் வைத்துள்ளவருக்கு பதிலளித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றார் பிரியா பவானி சங்கர்.


தற்போது சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து இன்னும் பிரபலமாகியுள்ளார். மேயாத மான படம் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். எல்.ஜே.சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரியா பவானி சங்கர் பெயரில் ட்விட்டரில் பல போலி அக்கவுண்ட்கள் இருக்கின்றன. அதிலிருந்து சில தகவல்கள் பகிரப்பட்டு அவருடைய பெயரை கெடுப்பது போல் சில விஷயங்கள் செய்து வரப்படுகிறது.

தற்போது இதேபோல் அவரது பெயரில் உள்ள அக்கவுண்ட் ஒன்றில் இருந்து, ‘மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்துள்ளது என்று நம்புகிறேன். உங்களது பாராட்டுகளுக்கு நன்றி என்று’ பதிவு செய்யப்பட்டுள்ளது.
Quote:Hope u all liked my performance in #M


And thanks for the compliments ? pic.twitter.com/riVSeB2CID


— Priya Bhavani Shankar (@PriyaBShankar_) May 20, 2019
[color][size]



இதுகுறித்து பிரியா பவானி சங்கர், ‘ உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், பொறுப்பையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் என்னை சங்கடப்படுத்துவதை உங்கள் வேலையாக வைத்துக்கொள்ளாதீர்கள். நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்
[/size][/color]
Quote:Dear fake profile! I understand your excitement and responsibility in posting something. But pls don’t make it as your duty to embarrass me in an hourly basis. Thanks but no thanks ?? https://t.co/teO1K1VC6w

— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 20, 2019
[color][size]



'றெக்க மட்டும் இருந்தா.. தேவதை!' - ப்ரியா பவானி சங்கர் ஆல்பம்...

[/size][/color]
Like Reply
ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்... மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை! வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்!
தமிழ் சினிமா வரலாற்றில் வாயால் பிழைத்துக் கொண்ட பிள்ளைகள் பட்டியலில் நிச்சயம் இவருக்கு பெயருண்டு. பிழைத்துக் கொண்டது மட்டுமல்ல, ‘ஹீரோ’ அந்தஸ்துக்கு உயர்ந்ததிலும் கூட. அவர், எஸ்கே எனப்படும் சிவ கார்த்திகேயன்.
இது அவரது புகழ்பாட எழுதப்படும் கட்டுரை அல்ல, நடப்பு நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கும் பதிவு. அவர் எப்படி சினிமாவுக்கு வந்தார், என்னவெல்லாம் செய்தார் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், இன்று இவரது நிலை என்னவென்பதை லேசாக விளக்கும் கட்டுரை இது.
மிஸ்டர்.லோக்கல் என்ற படம் கடந்த வாரம் ரிலீசானது. ஹீரோ சிவகார்த்திகேயன். ரிசல்ட் பிளாப். இங்கே ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. படம் நன்றாக இல்லை அவ்வளவு தான். ஆனால், படத்தின் ரிசல்ட் பற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமோ, இயக்குனரோ வருத்தப்பட்டிருப்பார்களோ என்னவோ நமக்கு தெரியாது. ஆனால், சிவ கார்த்திகேயனின் இந்த தோல்வியை விழா எடுக்காத குறையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் பலர்.
அந்த பலரில் எத்தனை பேருக்கு தெரியும் சிவா ஒரு Zero Movies இல்லாத நடிகர் என்று!.
ஒரு நடிகனின் படம் ரிலீசாகிறது… அந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ரசிகர் அல்லாதோருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், சுத்தமாக அடி வாங்காமல், இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமெனில் மரண ஃபிளாப் ஆகாமல் தியேட்டரில் ஓடுகிறது என்றால், அந்த படத்தின் நாயகனே Zero Movies இல்லாத நடிகர் ஆகிறார்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு கூட இல்லாத Zero Movies அந்தஸ்து ரஜினிகாந்துக்கு இருந்தது. அவரது ஃபிளாப் படங்கள் கூட, ஒரு கட்டம் வரை ஓடிய பிறகு தான் தியேட்டரில் இருந்து எடுக்கப்படும். A செண்டர், B செண்டர், C செண்டரிலிருந்து Z செண்டர் வரை அனைத்து வகை ரசிகர்களும் தியேட்டரில் வந்து பார்த்த பிறகு தான் படம் தூக்கப்படும்.
இப்போது வரை ரஜினி அதே ஸ்டேஜில் தான் இருக்கிறார் என்பது வேறு விஷயம். இருப்பினும், அவருக்கு பிறகு அந்த இடத்தில் முக்கால்வாசியை நிரப்பிய ஒரே நடிகர் அல்லது ஹீரோ விஜய் மட்டுமே. அவரது சக போட்டியாளரான அஜித் கூட பல Zero Movies கொடுத்திருக்கிறார். ஆனால், அஜித்தை கம்பேர் செய்கையில் விஜய்யின் Zero Movies எண்ணிக்கை மிக மிக குறைவு.
இப்போது விஜய்க்கு பிறகு, அந்த இடத்திற்கு வந்திருப்பவர் சிவ கார்த்திகேயன் மட்டுமே. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிவாவை தவிர, வேறு எந்த அவரது சம கால நடிகரும் Zero Movies இல்லாத ஹீரோவே கிடையாது.
நினைவில் கொள்ளுங்கள், மெரீனா முதல் மிஸ்டர்.லோக்கல் வரை சிவகார்த்திகேயன் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை. சிவாவுக்கு பண நெருக்கடி கூட கொடுத்திருக்கின்றன. ஆனால், எந்தப் படமும் Zero Movies கிடையாது. இது விஜய்யின் ஆரம்ப கால படங்களை விட மெர்சலான தொடக்கமாகும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, சிவ கார்த்திகேயனின் படங்கள் தோற்றாலும் சிவ கார்த்திகேயன் தோற்பதில்லை. மீண்டும் சொல்கிறேன், இது புகழ்பாடும் கட்டுரை அல்ல, புரிதலுக்கான கட்டுரை. அவ்வளவே!!
Like Reply
திரை விமர்சனம்- மான்ஸ்டர்
[Image: c289d6e7P2277704mrjpg]

சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றுபவர் எஸ்.ஜே.சூர்யா. அவருக்கு பெண் கிடைப்பது தாமதமாகிறது. ‘கல் யாணம் இருக்கட்டும். முதலில் வீடு வாங்கு’ என்று நண்பர் கருணாகரன் யோசனை சொல்ல, வீடு பார்க்கும் படலத்தில் இறங்கு கிறார் சூர்யா. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திருமண விஷயம் தொடர்பாக பிரியா பவானி சங்கரிடம் இருந்து அழைப்பு வரு கிறது. ராசியான அந்த வீட்டையே விலை பேசி முடிக்கிறார். உற்சாகமாக அங்கு குடியேறும் அவரது நிம்மதியை கெடுக் கிறது அந்த வீட்டை அதகளம் பண்ணும் ஓர் எலி. அதனால் அவர் அனுபவிக்கும் தொந்தரவுகள் என்ன? அந்த எலி ஏன் அவரை குறிவைக்க வேண்டும்? அவரது திருமணம் நடந்ததா? வள்ளலார் வழி செல்லும் எஸ்.ஜே.சூர்யா, எலியை என்ன செய்தார்? இது தான் ‘மான்ஸ்டர்’ படத்தின் மீதிக் கதை.
நாயகனுக்கு இணையாக ஓர் எலியை நடிக்கவைத்து, துளியும் போர டிக்காமல் கடைசி வரை ரசிகர்களை குஷிப்படுத்துகிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். எலி விஸ்வரூபம் எடுத்து மனிதனோடு சண்டை போடுவது, எதி ரியை பழிதீர்ப்பது, காதலிப்பது என்று கற் பனை பக்கம் திரும்பாமல், சாதாரண மாக வீடுகளில் எலி செய்யும் தொந்தரவு கள், சேட்டைகளை அப்படியே காட்சிப் படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். அதில் முடிந்தவரை வெற்றியும் பெறுகிறார். அதேசமயம், ‘இந்த இடத்தில் எலி நின்று மிரட்டினால் நன்றாக இருக்கும்’ என நாம் எதிர்பார்க் கும் இடங்களில்கூட அதன் சேட்டைகள் இல்லாதது ஏமாற்றமே.
எலி, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் - இந்த நான்கே கதாபாத்திரங்கள்தான் கதையின் மையம். அனைவரும் தங்கள்
பகுதியை சிறப்பாக செய்துள்ளனர். இரட்டை அர்த்த வசனம், முரட்டு வில் லத்தனம் இல்லாத, ‘அஞ்சனம் அழகிய பிள்ளை’யாக, அரசு உத்யோகம் பார்க் கும் நடுத்தர வீட்டு இளைஞன் பாத்திரத் தில் கச்சிதமாக பொருந்துகிறார் எஸ்.ஜே.சூர்யா. கொஞ்சம்கூட மிகையில்லாத நடிப்பு. கருணாகரனுடன் சேர்ந்து அவர் அரங்கேற்றும் காமெடி கலாட்டாக்கள் சிறப்பு. நாயகனை நகைக்கடையில் எதிர் கொள்வது, ஹோட்டலில் சந்தித்து அன்பை வெளிப்படுத்துவது, காவல் நிலையத்தில் நிற்பது என ஒவ்வொரு இடத்திலும் இயல்பாக நிற்கிறார் பிரியா பவானி சங்கர். காதல் காட்சிகள் கண் ணியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நெல்சன் வெங்கடேசன் - சங்கர் தாஸ் கூட்டு எழுத்தாக்கம் கவனிக்க வைக் கிறது. பெண் பார்க்கச் செல்லும் இடத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடக்கும் ஏமாற்றம், வாடகை வீட்டில் அனுபவிக் கும் பிரச்சினைகள், மின்வாரிய அலுவல ராக அவர் எதிர்கொள்ளும் சம்பவங் கள் ஆகியவை இயல்பாக இருப்பதால் கதைக்குள் முழுமையாக ஒன்றமுடி கிறது. ஆனால், கிளைக்கதைகளில் சுவா ரஸ்யம் இல்லை. வீட்டுக்குள் வைரத்தை மறைத்து வைத்துவிட்டு தேடும் வில்ல னின் பகுதிகளும், அதைச் சுற்றி நடக் கும் நிகழ்வுகளும் செயற்கை.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ‘தீரா காதல்’, ‘என்னைத் தேடி’ ஆகிய பாடல் கள் மெலோடி. எலி காட்சிகளில் பின்னணி இசை சேர்ப்பு கச்சிதம். சாபு ஜோசப் எடிட் டிங்கில் நல்ல உழைப்பு தெரிகிறது. வீடு முழுக்க எலியோடு பயணிக்கும் கோகுலின் கேமரா படத்துக்கு பலம்.
குழந்தைகளுக்கும், பெரியவர் களுக்கு இந்த கருப்பு ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ சுவாரஸ்ய அனுபவமாக இருக்கு
Like Reply
நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்
தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் ரஜினிகாந்த், விஜய் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.



[Image: 201905211141315399_Rajinikanth-Vijay-top...SECVPF.gif]

இந்தியாவில் திரைத்துறை பிரபலங்கள் தான் அதிகம் பிரபலமாக உள்ளனர். அவர்கள் செய்யும் வி‌ஷயங்கள் உடனே தேசிய அளவில் டிரெண்டாகி விடுகின்றன.

டி.ஆர்.ஏ என்ற தனியார் அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி அதிக நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் 2019 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் மத்தியில் அதிகம் நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் அகில இந்திய அளவில் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும் ஆமீர்கான், சல்மான் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். அக்‌‌ஷய் குமார், ஷாருக்கான் முறையே 4-வது, 5-வது இடங்களில் இருக்கின்றனர்
[Image: 201905211141315399_1_Rajinikanth-VIjay2._L_styvpf.jpg]
[color][size][font][size][font]

நடிகைகளில் தீபிகா படுகோனே முதல் இடத்திலும் காத்ரீனா கைப், மாதுரி தீட்ஷித் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஐஸ்வர்யா ராய்க்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின் பிரியங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளார்.

தென்னிந்தியாவில் ரஜினிகாந்த் முதல் இடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார்.

இந்த பட்டியலில் நடிகர் அஜித் பெயர் இடம் பெறவில்லை. கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதல் இடத்திலும் சச்சின் தெண்டுல்கர் 2-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் தோனி பெயர் இடம் பெறவில்லை[/font][/size][/font][/size][/color]
Like Reply
அவெஞ்சர்ஸ் ப்ளாக் விடோ புகழ் ஸ்கார்லட் ஜான்ஸனுக்கு திருமணம், மாப்பிள்ளை யார் தெரியுமா? இதோ
அவெஞ்சர்ஸ் இந்த சீரிஸ் உலக முழுவதும் மிகப்பிரபலம். அதிலும் கடைசி பாகமாக வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வசூல் சாதனை செய்தது.
இந்த பாகத்தில் இறுதியில் அயன் மேன், ப்ளாக் விடோ கதாபாத்திரங்கள் இறந்தது ரசிகர்களை மிகவும் வேதனைக்கு ஆளாக்கியது.
இந்நிலையில் தற்போது இளம் ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சியாக்கும்படி ப்ளாக் விடோவாக நடித்த ஸ்கார்லட் ஜான்ஸனுக்கு திருமணம் என்ற செய்தி வந்துள்ளது.
ஆம், இவர் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் கோலின் ஜோன்ஸை விரைவில் திருமணம் செய்யவுள்ளாராம்.

[Image: 625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg]
Like Reply
லோக்கல்’...’விஸ்வாசம்’ சிவா, சூர்யா படம் கைமாறுகிறதா?...
[Image: user.png]
By Muthurama Lingam

First Published 22, May 2019, 11:53 AM IST

[Image: nayanthara_710x400xt.jpg]
[Image: facebook_icon.svg][Image: twitter_icon.svg][Image: redit_icon.svg]
HIGHLIGHTS

’மிஸ்டர் லோக்கல்’ படத்தின் படுதோல்வியால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் எனவே அவர் அடுத்து தொடங்கவிருக்கும் ‘விஸ்வாசம்’ சிவா, சூர்யா காம்பினேஷன் படம் கைமாற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் நடமாடுகின்றன.



’மிஸ்டர் லோக்கல்’ படத்தின் படுதோல்வியால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் எனவே அவர் அடுத்து தொடங்கவிருக்கும் ‘விஸ்வாசம்’ சிவா, சூர்யா காம்பினேஷன் படம் கைமாற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் நடமாடுகின்றன.[Image: Siruthai-Siva-and-Suriya.jpg]

ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் அதிபரான ஞானவேல் ராஜா, சூர்யா, கார்த்திகளின் பினாமியாக இருந்துகொண்டு அவர்களைத் தாண்டி வளர்ந்துகொண்டிருந்த சிவகார்த்திகேயனை ஒழித்துக்கட்டுவதற்காக துவங்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்ட ‘மிஸ்டர் லோக்கல்’ அவர் எதிர்பார்த்ததையும் விட மோசமாக தோல்வி அடைந்திருக்கிறது.
பொதுவாக பெரிய ஹீரோக்களின் படம் இப்படித் தோல்வி அடைந்தாலும் முதல் ஒரு வார வசூல் தயாரிப்பாளரையும் விநியோகஸ்தர்களையும் காப்பாற்றி விடும். ஆனால் ‘மிஸ்டர் லோக்கல்’ படு லோக்கலாக இருந்ததால், முதல் மூன்று நாட்களோடு தனது மூச்சை முற்ரிலும் நிறுத்திக்கொண்டது. இதனால் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கோடிக்கணக்கில் ஞானவேல் ராஜா பணத்தைத் திருப்பி கொடுக்கவேண்டிய நிலை.[Image: -------------------------------.jpg]
இந்நிலையில்’விஸ்வாசம்’ சிவா, சூர்யா காம்பினேஷனில் அவர் அறிவித்திருக்கும் அடுத்த படத்துக்கு யாரும் ஃபைனான்ஸ் பண்ண முன்வராததால் கடும் நெருக்கடியில் இருக்கிறாராம். நடுவில் இந்தப் படத்துக்குத் தேத்துவதற்காக அவசர பூஜை போடப்பட்ட சிம்பு படத்துக்கும் ஃபைனான்சியர்கள் மத்தியிலிருந்து பெரிய ஆதரவுக்கரம் நீளாததால் சூர்யா படம் கைமாறினாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை என்கிறார்கள்.
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)