14-02-2022, 04:32 PM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
Romance மீண்டும் உன்னோடு நான் (முடிவுற்றது)
|
15-02-2022, 06:59 AM
Nalla romantic story bro.. Konjama speed pannuna innum sirappa irukkum.. Ithuvarai oru sex kaatchikooda varalai athaiyum konjam sertha nalla irukkum..
Avanka pondatti, illa purushan kooda nadanthatha sonna kooda okthan..
15-02-2022, 09:37 AM
(This post was last modified: 15-02-2022, 09:37 AM by SamarSaran. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-02-2022, 06:59 AM)Ananthakumar Wrote: Nalla romantic story bro.. Konjama speed pannuna innum sirappa irukkum.. Ithuvarai oru sex kaatchikooda varalai athaiyum konjam sertha nalla irukkum.. ஹா.. ஹா.. நண்பா இது வயதானவர்கள் காதல். வெங்கடேசனுக்கு குடும்ப பொறுப்பு இல்லை. ஆனால் கோமதிக்கு அப்படி இல்லை. இரு பெண்களின் வாழ்க்கை பார்க்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். இதை எல்லாம் விட இந்த சமுகத்தில் இது மாதிரியான காதல் பல போராட்டங்கள் கஷ்டங்கள் இடைஞ்சல் எல்லாவற்றையும் கடந்த பிறகு தான் சேரும் என்பது என்னுடைய பார்வை.. காமம் மட்டுமே இருக்க கூடிய கதைகள் இந்த தளத்தில் நிறைய இருக்கிறது. அடுத்த பதிவு இதை விட அலுப்பு தட்டாத வகையில் பெரிய பதிவாக போடுகிறேன்.. காதல் பயணம் ஆரம்பித்ததற்கு முன்பு வரை பதிவிடுகிறேன்...
15-02-2022, 09:39 AM
(15-02-2022, 09:37 AM)SamarSaran Wrote: ஹா.. ஹா.. நண்பா இது வயதானவர்கள் காதல். வெங்கடேசனுக்கு குடும்ப பொறுப்பு இல்லை. ஆனால் கோமதிக்கு அப்படி இல்லை. இரு பெண்களின் வாழ்க்கை பார்க்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். இதை எல்லாம் விட இந்த சமுகத்தில் இது மாதிரியான காதல் பல போராட்டங்கள் கஷ்டங்கள் இடைஞ்சல் எல்லாவற்றையும் கடந்த பிறகு தான் சேரும் என்பது என்னுடைய பார்வை.. காமம் மட்டுமே இருக்க கூடிய கதைகள் இந்த தளத்தில் நிறைய இருக்கிறது. அடுத்த பதிவு இதை விட அலுப்பு தட்டாத வகையில் பெரிய பதிவாக போடுகிறேன்.. காதல் பயணம் ஆரம்பித்ததற்கு முன்பு வரை பதிவிடுகிறேன்...Kandippaka nanba.. Wait panren..
17-02-2022, 05:54 PM
கருத்து சென்ற அனைவருக்கும் என் நன்றிகள்...
17-02-2022, 05:55 PM
(This post was last modified: 17-02-2022, 05:56 PM by SamarSaran. Edited 1 time in total. Edited 1 time in total.)
சென்ற பகுதியின் தொடர்ச்சி...
நான் இருக்கும் நிலையை பார்த்து மனசாட்சி என் முன்னால் வந்து நின்று சிரித்தது.. மனசாட்சி சிரிப்பதை பார்த்ததும் "உனக்கென்ன எனக்கு பிரச்சனையில மண்ட காஞ்சி இருக்குறப்ப எல்லாம் உனக்கு சிரிப்பா தான் இருக்கும்.. பிரச்சனை எனக்கு தானே.. உனக்கா?" "என்னப்பா இப்படி எல்லாம் நம்மள பிரிச்சு வச்சு பேசுற" மனசாட்சி கேட்க "வேற எப்படி பேச சொல்ற.. நானே என் பொண்ணு சொல்றத செய்றதா இல்ல மதி போய் பாக்குறத தெரியாம குழப்பதுல இருக்கேன்.. இது புரியாம என் முன்னாடி நின்னு சிரிச்சு கடுப்பேத்துற.." "என்னப்பா இதுக்கு எல்லாம் போய் குழம்பினா எப்படி.? உன் காதல் இத விட இன்னும் எவ்வளவோ கஷ்டங்கள், சோதனைகள் வரலாம். அப்ப எல்லாம் என்ன பண்ணுவ? இடிஞ்சி போய் என்ன செய்றது தெரியாம உட்காந்திருப்பியா?" "அதெல்லாம் வரும் போது பாத்துக்கலாம்.. இப்ப நா என்ன பண்றது தெரியல. அதுக்கு வழி எதாவது இருந்தா சொல்லு.?" "இது யோசிக்க என்ன இருக்கு.? உன் பொண்ணு சொன்னத போய் முடிச்சிட்டு வந்து உன் மதிய பாரு.. இவ்வளவு தான." "என்ன இவ்வளவு சாதாரணமா சொல்ற.. நா இன்னிக்கு வருவேன் எதிர்பாத்திட்டு இருப்பாள? ந வரலேனா அவ மனசு கஷ்டபடும்ல." "ஆமா.. அப்ப உன் மதிய போய் பாரு.. உன் பொண்ணு சொன்னத அடுத்து பண்ணு." "என் பொண்ணு கேட்டா காரணம் என்ன சொல்ல? நீ தான் ஏதாவது சொல்லி சமாளிக்கனும்." "நானா?" "பின்னா நானா சொல்ல முடியும்?" மனசாட்சி நக்கலடிக்க "நா தான் சொல்லனும்.. ஆனா என்ன சொல்றது தான் தெரியல.. உனக்கு எதாவது தெரிஞ்சா சொல்லு." "என்ன சொல்ல?" "என்ன நக்கலா?" நான் திரும்பி மனசாட்சியிடம் கேட்க "என் பொண்ணு ஏன் போய் லேண்ட் பாக்கலேனு கேட்டா என்ன ரீசன் சொல்றது. அத தான் உனக்கு தெரிஞ்சா சொல்ல சொன்னேன்." "என்னைய கேட்டா நீ மொத உன் பொண்ணு சொன்னத பண்ணிட்டு இந்த டப்பாவ போய் குடுக்கலாம் தோணுது.." "ஹலோ மிஸ்டர் மனசாட்சி என்ன விளையாடுறியா? என் மனச்சாட்சியா இருந்திட்டு எனக்கு சப்போர்ட் பண்ணுவ பாத்தா நீயும் என் பொண்ணு மாதிரியே பேசுற." "ஏன் அத மொதல பண்ணினா என்ன ஆகிட போகுது?" "நீ தான சொன்ன மதியே அடுத்த தடவ வந்து பாக்குறதுக்கு சான்ஸ் குடுத்திருக்கா. நீ நல்லா யூஸ் பண்ணிக்கோ சொன்ன" "ஆமா இல்லைனு யார் சொன்னா? இப்பவும் அந்த சான்ஸ் இருக்கும்.. எங்கையும் ஓடி எல்லாம் போய்டாது." "ஓடாது தெரியும்.. பட் அத கரெக்ட் டைம்ல கரெக்டா யூஸ் பண்ணனும்ல" "ம்ம்.. ஆமா.. பட் உன் மதி உனக்கு சான்ஸ் மறைமுக கொடுத்தாலும் நேரடியா அடிக்கடி பாக்க வேணாம் சொல்லியிருக்காளா? இந்த தடவ போய் பாக்கும் போது அத சொன்ன நீ என்ன பண்ணுவ?" மனசாட்சி கேட்டதும் அதுவும் சரியென பட்டது. "சரி இப்ப என்னைய என்ன பண்ண சொல்ற?" "ம்ம்.. உன் பொண்ணு சொன்ன வேலைய முதல்ல பண்ண சொல்றேன்." "சரி என் பொண்ண சொன்ன மாதிரி லேண்ட் பாத்திட்டு வந்து போன மதி கோவிச்சுக்கமாட்டாளா? அவ மனசு கஷ்டபடாம இருக்கும்ல" "அது எப்படி இருக்கும்.? உன் மேல கொஞ்சம் கோபம், வருத்தம் எல்லாம் இருக்க தான் செய்யும்.. உன்ன எதிர்பாத்து வரலேனு ஏமாற்றம் கூட அடையலாம்." "உன்ன.. சரி அப்படி இருந்தா நா என்ன பண்ண? அதையாவது சொல்லு" "நீ தான் பேசி கன்வின்ஸ் பண்ணனும்?" "நா கன்வின்ஸ் பண்ணனுமா?" "கன்வின்ஸ் தான பண்ண சொன்னேன். ஏதோ கற்பழிக்க சொன்ன மாதிரி பயப்படுற." "இல்ல.. பொதுவா அவ சைலைண்ட் டைம் தான். ஆனா கொஞ்சம் பிடிவாதக்காரி.. எதையும் உடனே ஏத்துக்கமாட்டா.. அதான் எப்படி கன்வின்ஸ் பண்றது யோசிக்கிறேன்." "இதெல்லாம் ஒரு மேட்டரா? பேசினார் பேசினால் எந்த பொண்ணும் மனம் மாறி பேசுவாள்." "அதெல்லாம் சொல்ல நல்லா தான் இருக்கு.. பட் நடக்கனும்ல.. அதிக முக்கியம்." "அதெல்லாம் நடக்கும்.. மொத காதலுக்கு தேவை நம்பிக்கை.. அதுவே உன்கிட்ட கம்மியா தான் இருக்கு." "ஏன் அப்படி சொல்ற..?" "பின்ன என்ன ஏதாவது சொன்ன நடக்குமா? நடக்காதா? யோசிச்சிட்டே இருந்தா எப்படி நடக்கும்.. எல்லாமே முயற்சி செய்து பண்ணினா தான் நடக்கும்.." "ம்ம்.. என்னமோ சொல்ற.. இது மாதிரி அப்ப அப்ப வந்து தரிசனம் குடுத்து ஐடியா சொன்ன இந்த முறையாவது என் காதல் சக்கஸஸ் ஆகட்டும்." "டோன்ட் வொரி.. திஸ் டைம் கண்டிப்பா உன் மதி உனக்கு கெடைப்பா.. நீ தாராளமா உன் பொண்ணு சொன்னத செஞ்சிட்டு வா." "ம்ம் சரி.. உன்ன நம்பி போறேன்." "ஓகே குட் லக்" சொல்லி மனசாட்சி மறைந்தது.. அதன் பின் எழுந்து முகம் கழுவி ஆன்லைனில் இன்று செல்வதற்கு பாஸ் ரெடி செய்துவிட்டு அன்றைக்கான காலை வேலைகளை செய்தேன். என்ன தான் மதியை பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்தாலும் என்னால் அவளை சந்தித்த பின் அப்படி இருக்க முடியவில்லை. இடையிடையே அவளை பற்றி எண்ணங்கள் நினைவுகள் வந்துக் கொண்டே தான் இருந்தன. அதையெல்லாம் மீறி அன்றைக்கு மதியம் என்னுடைய கிராமத்திற்கு டிரெயில் சென்றேன்.. நான் பிறந்து வளர்ந்த அந்த சாந்தமங்கலம் என்னும் கிராமம். மதுரை மாவட்டத்தில் இருக்க கூடிய அழகான கிராமம்.. அப்போது எல்லாம் அங்கு நிலம் வைத்திருக்கும் பெரும்பாலனோர் விவசாயம் பார்த்தனர். அதனாலே பச்சை பசேலென்று இருக்கும்.. ஊருக்குள் நுழைந்ததும் இருக்கும் பனைமரங்கள், தென்னைமரங்கள் அன்றைக்கு வெயிலுக்கான குடைகள்.. அது மட்டுமில்ல என்னை போன்ற காதல் செய்தவருக்கு தன் காதலியை யாருக்கும் தெரியாமல் மறைவாக சந்திக்க உதவியது இந்த மரங்கள் தான்.. நான் பணியில் இருக்கும் போது என் பெற்றோரை பார்க்க நான்கைந்து முறை வந்திருக்கிறேன். கடைசியாக அவர்கள் இறந்ததற்கு வந்து காரியம் எல்லாம் செய்துவிட்டது போனது தான்.. அதன் பின் பன்னிரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் செல்கிறேன். கடைசி முறை சென்ற போதே நிறைய விஷயங்கள் சூழல் எல்லாம் மாறியிருந்தன. நிறைய வீடுகள் வர ஆரம்பித்திருந்தன. இப்போது வீடுகள் எல்லாம் நிறைய வந்திருக்கும் என பலவற்றையும் நினைத்துக் கொண்டே கிராமத்தை நோக்கி பயணித்தேன்.. இது மாதிரி இனியும் எத்தனை நினைவுகள் வந்தாலும் மதியுடனான அந்த காதல் நினைவுகள் என்றுமே பசுமையானது.. இனிமையானது.. சுகமானது.. இங்கு சென்னையில் மதியை பார்த்துமே பழைய காதல் நினைவுகள் எல்லாம் அந்த சூழலில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ற மாதிரி நினைவில் வந்து வந்து செல்ல தவறவில்லை.. அப்படி இருக்கும் போது மதியை ஐந்து வருடமாக காதலித்த இடத்திற்கு செல்லும் போது வராமல் இருக்குமா? இப்போதும் எங்களின் காதல் நினைவுகள் எல்லாம் பயோஸ்கோப் படம் போல் கண் முன்னால் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அந்த சுகமான நினைவுகளுடனே இரவு மதுரை வந்து சேர்ந்தேன். அன்று இரவு ஒரு லார்ட்ஜில் ரூம் எடுத்து தங்கி அன்றைய இரவு பொழுதை கழித்தேன். மறுநாள் காலையில் கிழம்பி என்னுடைய கிராமத்திற்கு சென்றேன். அங்கு இறங்கி கால் வைத்ததுமே இதற்கு முன் இல்லாத ஒரு சிலிர்ப்பு உடம்பில் ஏற்பட்டு கையில் இருந்த முடிகள் எல்லாம் சிலிர்த்து உற்சாகமாகி எழுந்து நின்றன. இந்த 12வருடத்தில் முன்பை விட நிறைய மாற்றங்கள் வந்திருந்தன.. அதை எல்லாம் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றேன்... ஏற்கெனவே முந்தைய நாள் இரவு பேசிய சந்திரனிடம் நான் வரும் தகவலை சொல்லிவிட்டேன்.. இருந்தாலும் வீட்டை பார்க்க வேண்டும் என்றால் அவர் இல்லாமல் போக முடியாது என்பதால் இப்போது திரும்பி கால் செய்ய ரிங் போய்க் கொண்டே தான் இருந்தது. எடுக்கவில்லை. அவர் கால் ஐ எடுக்கவில்லை என்றதுமே உள்ளுக்குள் ஒருவித கோவம் வந்தது.. "இவர நம்பி வந்தா கால் பண்ணா கூட எந்த ரெஸ்பான்ஸ் இல்லாம இருக்கே.. இந்த ஊர்ல இப்ப நமக்கு தெரிஞ்ச ஆள் யாரும் அப்படி இருக்கமாட்டாங்களே.. இங்க வந்ததுக்கு நேத்தே மதி பாக்க போய் இருந்திருக்கலாம்" என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஊருக்குள் செல்லும் வழியில் ஒரு ஓரமாக நிற்க என்னுடைய போன் அடித்தது.. இந்த கடுப்பான நேரத்தில் யார் என எடுத்து பார்த்தேன்.. அந்த சந்திரன் தான் பண்ணியிருந்தான்.. "ஹலோ சார் என்ன நேத்தே வரதா சொன்னிங்க." என்றான்.. "நேத்து நைட் தான் மதுர வந்தேன். அதான் வரமுடியல.. இப்ப உன் ஊர் எல்லையில தான் நிக்குறேன்.. இப்ப வர முடியுமா?" கேட்க "இதோ வரேன் சார்.. அஞ்சே அஞ்சு நிமிஷம் அங்கேயே செத்த நில்லுங்க.. வந்திடுறேன்" என்றான்.. அவன் வரும் வரை அங்கே இருந்த டீக்கடையில் ஒரு டீ வாங்கி குடித்துக் கொண்டே அங்கே இருந்த பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தேன்.. அந்த சமயம் பார்த்து என் முன்னால் இருந்து "டே வெங்கடேசா உன்ன பாத்து எத்தன வருசம் ஆச்சு" குரல் கேட்க நானும் ஒரு ஆரவத்துடன் "அது யார்டா நம்மள பேர் சொன்னதும் இல்லாம டே போட்டு கூப்பிடுறது" பார்க்க அந்த ஆளை பார்த்ததும் சில வினாடிகளிலே அடையாளம் கண்டுக் கொண்டேன். என்னை கூப்பிட்டது வேற யாரும் இல்லை. என்னுடைய பள்ளி கல்லூரி கால தோழன் சந்திரசேகர் தான்.. அவனை பார்த்ததும் மகிழ்ச்சியாக தான் இருந்தது.. "டே சேகர்.. நீ இன்னும் இங்க தான் இருக்கியா?" கேட்க "ஆமா.. பின்ன நா படிச்ச படிப்புக்கு வேற எங்க போக முடியும். இங்கையே இருந்துட்டு தான் வாழ்க்கை ஓட்ட முடியும்.." "சரி நீ எப்படி இருக்க.? ஆளே மாறி போயிட்ட.? என்ன விசயம் ஊர தேடி வந்திருக்க.?" அடுக்கடுக்காக கேள்வி கேட்க "நா நல்லா இருக்கேன். பின்ன வயசான ஆன ஆள் மாறாம அப்படியேவா இருப்பாங்க.. இங்க வீடு இருக்குனு ஒரு புரோக்கர் போன் பண்ணான்.. அதான் வீட்டையும் ஊரையும் பாத்துட்டு போலாம் வந்தேன்." "அட என்ன மாப்பிள்ளை.. நா தான் உனக்கு கால் பண்ணேன்." "அட அப்படியா..? போன்ல பேசும் போதே இந்த குரல்ல எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு நெனச்சேன்.. அந்த சமயம் பாத்து என் பொண்ணு போன் பண்ணால.. அப்படியே அவ கூட பேச போய்ட்டேன்." "அப்படியா.. சரி.. சரி.. ஒன்னுமில்ல.. வா வீட்டுக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு சாய்ங்காலமா போய் வீட்ட பாக்கலாம்." "நீ இப்ப காட்டுடா.. நா பாத்திட்டு ஊருக்கு போகனும்." "என்னது ஊருக்கு போகனுமா? ஏன் ஊருல யாரும் தனியா இருக்காங்களா?" "இல்ல." "இல்லைல.. பின்ன ஏன் வந்ததும் போகனும் குதிக்குற.. இருந்துட்டு நாளைக்கு போலாம் வா" சொல்லி கை பிடித்து இழுத்து கொண்டு போக நானும் வேறு வழியில்லாமல் அவன் பின்னால் சென்றேன்.. அவனுடைய டிவிஎஸ் எக்ஸ் எலில் வீட்டிற்கு போகும் வழியில் அவனைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் சொன்னான்.. என்னை பற்றியும் சில விஷயங்கள் கேட்டுக் கொண்டே வந்தான். அவன் வீட்டிற்கு சென்றதும் அங்கே அவனுடைய மனைவி கீதா, மகள் சஞ்சனா மகள் சஞ்ஜெய் என வீட்டில் இருப்பவர்களை பற்றி சொன்னான்.. அவனுடைய மகன் வேலைக்கு போயிருப்பதாகவும் மகளுக்கு வரன் பார்த்துட்டு இருப்பதாகவும் சொன்னான்.. நானாக எதுவும் அவனுடைய சொந்த வாழ்க்கை பற்றி கேட்கவில்லை. அவனாக தான் சில விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.. நேரம் மதியம் ஆனதால் ஏற்கெனவே வற்புறுத்தி கொண்டே இருந்ததால் கொஞ்சமாக சாப்பிட்டு எழுந்தேன்.. மதியம் மீண்டும் சிறிது நேரம் ஊரில் நடந்தவற்றை பேசிவிட்டு மாலை ஆனதும் வீட்டை பார்க்க சென்றோம்.. சேகர் அந்த ஏரியாவில் இருந்த வீட்டை எல்லாம் காட்டினான். எல்லா வீடும் பார்க்க அழகாக அம்சமாகவும் தான் இருந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை அவை எல்லாம் மனதிற்கு ஒட்டவே இல்லை. அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வரவேயில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. அவனிடம் பேசிக் கொண்டு வரும் போது கடைசியாக தனியாக இருந்த வீட்டை பார்த்தேன். அந்த வீட்டின் பின்னால் மூன்று பனைமரங்கள் இருந்தன. அந்த பனைமரத்தை பார்த்ததுமே அது நானிருந்த காலத்தில் இருந்தே இருக்கின்ற பனைமரம் தான் என்பது தெரிந்துவிட்டது.. சேகரை கொஞ்சம் நிற்க சொல்லிவிட்டு அந்த வீட்டின் பின்னால் ரோட்டை ஓட்டி இருந்த அந்த பனைமரத்தை போய் பார்த்தேன்.. அது கொஞ்சம் பாலடைந்து போய் இருந்தது. அதில் இருந்த தூசியை எல்லாம் தட்டி விட்டு பார்த்தேன். நான் நினைத்தது இருக்கிறதா என பார்த்தேன். முதல் இரு மரங்களில் இல்லை.
17-02-2022, 05:58 PM
(This post was last modified: 17-02-2022, 05:59 PM by SamarSaran. Edited 1 time in total. Edited 1 time in total.)
அந்த மூன்றாவது பனைமரத்தில் இருந்த தூசியை சுத்தபடுத்தி பார்த்த போது நான் நினைத்த மாதிரியே எங்களின் காதல் சின்னம் இருந்தது.. ஆம் இந்த பனைமரம் தான் காதலின் தூண்.. இந்த தூணில் எங்களின் காதலின் நினைவாக ஜி. வி என இருவரின் பெயரின் முதல் எழுத்தை ஹாட்டின் சிம்மலுக்குள் இருக்குமாறு இந்த மரத்தில் செதுக்கி வைத்திருந்தோம்.. அதை திரும்பி பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சேகர் வீட்டை காட்டும் போதெல்லாம் என்னை தடுத்ததற்கு இது கூட காரணமாக இருக்கலாம் என நான் நினைத்துக் கொண்டிருக்க என் நினைவுகள் பின்னோக்கி நகர தொடங்கின..
மதியை பார்த்து பேசி என் காதலை சொல்லி அவளும் அதை ஏற்றுக் கொண்டாலும் அன்றைய சூழலில் சந்திப்புகள் என்பது அடிக்கடி நிகழ வாய்ப்பே இருக்காது. காதலிக்க ஆரம்பித்த பின் சில சந்திப்புகள் காலத்தால் தானாக அமைந்தவை தான். நாங்களாக எதுவும் ஏற்படுத்திக் கொண்டவை எல்லாம் கிடையாது. இது மாதிரி காலங்களால் ஏற்பட்ட சந்திப்புகளில் சந்தித்து பேசி, பழகி காதலிக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆக போகின்ற சமயத்தில் தான் எப்போதும் போல காலம் எங்களுக்கான சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. மதி அப்போது 12th படித்துக் கொண்டிருந்தாள். அவள் வரும் நேரம் தெரிந்து அவளுக்காகவே பள்ளியின் பக்கத்தில் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். அன்று மாலை வழக்கம் போல ஸ்கூலில் ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து வெளியே சைக்கிளில் உருட்டியபடி வந்துக் கொண்டிருந்தாள்.. என்னை பார்த்ததும் கண் சைகையால் பின்னாலே வர சொல்லிவிட்டு முன்னால் அவளின் சைக்கிளை ஓட்டிக் கொண்டு போனாள்.. அவளின் தோழி அவளை விட்டு பிரிந்து சென்றதும் அவளுடன் சேர்ந்து சைக்கிளை ஓட்டினேன்.. "மதி.. மதி.." கூப்பிட அவள் என்னை பார்க்காமல் ரோட்டை பார்த்து சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தாள்.. "ஏய்.. மதி உன்ன தான் கூப்பிடுறேன்.. காதுல விழுதா?" கத்த "அய்யோ ஏன் இப்படி நடுரோட்டுல இருந்துட்டு கத்திட்டு இருக்கீங்க..?" "பின்ன நா கூப்பிட கூப்பிட பேசாம இருந்தா என்னைய பண்ண சொல்ற..?" "யாராவது நாம இப்படி சேந்து பேசிட்டு வரத பாத்தா நா இதோடு தொலைஞ்சேன்.." "அதலாம் எதுவும் நடக்காது. என் மேல நம்பிக்கை இல்லையா?" "அதலாம் இருக்கு.. இருந்தாலும் வெளியாட்கள் யாராவது பாத்த சிக்கல் ஆகிடும் பயம் தான்.." "இன்னும் எத்தனை நாளிக்கு இந்த பயம் இருக்க போகுதோ?" நான் கேட்க "ம்ம். என்னைய பொண்ணு கேட்டு வரவரைக்கும் இந்த பயம் இருக்கதான் செய்யும்." "ஓ.. அப்ப நாளிக்கே உன்ன பொண்ணு கேட்டு வரட்டா.?" பதிலுக்கு கிண்டலாக கேட்க "ஆ.. ரொம்ப ஆசை தான்.." "ம்ம் ஆமா. ஆசை தான்.. அதான் கேக்கறேன்.. வரட்டா?" "அதலாம் ஒன்னும் வர வேணாம்.." "ஏன் மதி வர வேணாம் சொல்ற?" "நாளிக்கு வந்தா அடுத்து என்னைய ஸ்கூலுக்கு கூட அனுப்பமாட்டாங்க.. அப்பறம் பாக்கவே முடியாது.. அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க." "சரிங்க மகாராணி உத்தரவு அப்படியே ஆகட்டும்" கிண்டல் பண்ண.. "ஓ.. நா உங்களுக்கு மகாராணியா?" "ஆமா. நீயே எந்தன் ராணி.. உந்தன் சங்கு கழுத்தில் தாளியிட்டு உந்தன் பொற்பாதத்தில் மெட்டியிட்டு உந்தன் சந்தன நெத்தியில் திலகமுட்டு உன்னை கட்டிலில் கட்டியணைத்து தினமும் ஆட்சி செய்வேன்" கவிதையாக சொல்ல "எப்பா உடம்பே புல்லரிக்குது." "அப்படியா?" "ஆமா.. பின்ன இருக்காதா?" "ஓ.. இருக்கும்.. இருக்கலாம்." கிண்டல் பண்ண "சொல்றதையும் சொல்லிட்டு பேச்ச பாரு." "சரிங்க.. மகாராணி நாளைக்கு காலையில இது மாதிரி சந்திக்க முடியுமா?" "என்ன புதுசா கேக்குறீங்க?" "ஆமா.. நீ சொல்லு மதி.." "தெரியலிங்க.. கண்டிப்பா முடியும் உறுதியா சொல்ல முடியாது." "என்ன மதி இப்படி சொல்ற.. உன்கிட்ட இதுவரை எதும் கேட்டது இல்ல.. இப்ப தான் மொத தடவ கேக்குறேன்.." "எனக்கு புரியுதுங்க.. ஆனா எதுக்கு பாக்கனும் சொன்னிங்கனா வர பாக்குறேன்." "நாளைக்கு என்ன நாள்..?" "மார்ச் பதிமூனு.. உங்க பொறந்தநாள்." "ம்ம். பரவாயில்ல.. இதெல்லாம் நியாபகம் வச்சியிருக்க" "பின்ன வச்சிருக்க மாட்டாமா?" "அதலாம் சரி.. ஆனா இன்னொன்னு இருக்கே.. அத சொல்லல." "இன்னும் என்ன இருக்கு?" "யோசிச்சு பாரு தெரியும்" சொல்ல வானத்தில் மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி கருத்துக் கொண்டு பெரிய பெரிய தூரல்களாக விழ ஆரம்பித்தன. மதி சைக்கிளை வேகமாக மிதித்து ஓட்ட அவளுக்கு ஈடுக் கொடுத்து நானும் ஓட்ட தூரல் இன்னும் அதிகமாக சடசட விழ ஆரம்பித்தது. அடுத்த ஒரு நிமிடத்திற்குள்ளாகவே இருவரின் உடலில் பாதி நனைந்துவிட்டது. அதனாலே அந்த வழியில் இருந்த பஸ்ஸாப்பின் முன்னால் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே நனையாமல் இருக்க மதியும் வேகமாக சைக்கிளை நிறுத்திவிட்டு ஸ்கூல் பேக்குடன் உள்ளே வந்து நின்றாள்.. "ஏய் மதி.. நா சொன்னத யோசிச்சியா?" "எனக்கு தெரியல.. நீங்களே சொல்லுங்க" சொல்லிவிட்டு மதி தன் கையில் விழுந்த மழைநீரை தாவணி வைத்துக் துடைத்துக் கொண்டிருந்தாள். வெளியே எட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு சட்டென அவளின் கையை பிடித்து இழுக்க என் மீது மோதி நிற்க அவளின் இடுப்பில் கை சுற்றி வளைத்து பிடித்திருந்தேன்.. இன்னும் அவளின் முகத்தில் விழுந்த நீரை துடைக்காமல் என் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் இருந்த நீர்துளி இரு புருவத்தின் நடுவில் வழிந்து மூக்கின் முனை அடைந்து உதட்டில் வந்து கோர்ந்து நிற்க அதை என் விரலால் அழுத்தி தடவ என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.. "இருக்காத பின்ன?" முதன்முதலாக நான் காதலித்த பெண்ணின் உதட்டை அதுவும் அவளை நெருக்கத்தில் வைத்துக் கொண்டு தடவும் போது உடம்பில் எழுகின்ற உணர்ச்சியை சொல்ல தமிழ் அகராதியில் இருக்கும் வார்த்தைகள் அப்போதைக்கு எனக்கு நியாபகத்திற்கு வரவில்லை. அதை வார்த்தையால் சொல்ல வேண்டும் என தோன்றவும் இல்லை. "என்ன மதி தெரியல சொல்ற?" "ம்ம்.. தெரியல.." என்றாள். அவள் சொல்லும் போது அவளின் மூச்சுக்காற்று அனலாக வந்தது. "நிஜமா தெரியலையா?" இன்னும் நெருக்கத்தில் வைத்துக் கேட்க "ம்கூகும்.. தெரியல.." "சரி.. இந்த இடத்துல இதுக்கு முன்ன நாம இப்படி இருந்தோமே நியாபகம் இருக்கா?" கேட்க அந்த சமயம் பார்த்து ஆட்கள் காலடி சத்தம் கேட்க மதி உடனே என்னை விட்டு விலகி மறைவாக நின்று கொண்டாள். நானும் வெளியில் எட்டி பார்த்தேன்.. ஆட்களின் நடமாட்டம் யாரும் இல்லை என தெரிந்ததும் திரும்பி அவளின் கையை பிடித்து இழுக்க "அய்யோ.. விடுங்க.. யாராவது பாத்தா வம்பாகிடும்.." "இந்த மழையில நம்மள யாரு பாக்க போற. நீயே சொல்லு.." "மழைக்கு ஒதுங்குறவங்க பாத்தா பிரச்சனை ஆகிடும்." "அதலாம் ஒன்னும் ஆகாது.. நீ பயப்படாம இருந்தாலே போதும்.. சரி நா கேட்டதுக்கு பதிலே காணோம்." "என்ன கேட்டிங்க?" "இந்த மழை, இந்த இடம், இந்த மாதிரி தனியா என அவளின் கண்களை பார்த்து சொன்னவுடன் அவளுக்கு புரிந்துவிட்டது.. "அட ஆமால." "என்ன ஆமால.?" "இந்த மாதிரி மழை பெய்யும் போது தானே சொன்னிங்க." "என்ன சொன்னேன்.?" "ஏன் சொன்ன உங்களுக்கு தெரியாதாக்கும் என்ன சொன்னிங்கனு?" "சொன்ன எனக்கு தெரியும்.. ஆனா உனக்கு தெரியுதா பாக்குறேன்.. சொல்லு" "அதலாம் தெரியும்." "அப்ப சொல்லு.." "அதலாம் சொல்ல முடியாது." "ஏய்.. மதி சொல்லு.. பிளீஸ்." "இல்ல எனக்கு வெட்கமா இருக்கு." "இதுவரை உன் வாயால சொன்னதே இல்ல.. இப்பவாச்சும் சொல்லேன்." "இல்ல என்னால முடியாது" வெட்கப்பட்டு தலையை குனிந்து நிற்க "ஏய் சொல்லு மதி பிளீஸ்.. நாளைக்கு என் பொறந்த நாள் ஆசையா வேற கேக்குறேன் சொல்லு" "அய்யோ என்ன இப்படி பண்றீங்க..?" "ஆசையில தானே கேக்குறேன்." "ம்கூகும்" சிணுங்கி கொண்டே "ஐ" "ம்ம்.. அடுத்து" "லவ்..." "ம்ம்.. அடுத்து சட்டு சொல்லு" சொன்னதும் "யூ" என்றாள்.. "சரி இப்ப சேத்து சொல்லு" என்றேன்.. "ம்ம்.. ஐ லவ் யூ.. வெங்கி அத்தான்" என்று சொன்னதும் அவளை விட என்னிடமிருந்து விலகி "நாளைக்கு நம்ம இடத்துக்கு வரேன்.. நீங்களும் வந்துருங்க" சொல்லிவிட்டு அந்த தூரலிலும் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றாள்.. இங்கு சேகர் அந்த மரத்தை ஓட்டி இருப்பதை பார்த்துவிட்டு "என்னடா இந்த மரத்தே பாத்திட்டு இருக்க" திடீரென கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்க பின் சுதாரித்து "இல்லடா.. இந்த மரம் நாம இருக்கும் போதே இருந்த மரம் மாதிரியே இருக்கு அதான் பாத்திட்டு இருந்தேன்." சொல்லி சமாளித்தேன் "ஆமாடா.. நீ சொல்றது சரி தான்.. நாம ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது இருந்த மரம் தான்." "ம்ம். இந்த வீடு என்ன பூட்டியிருக்கு.?" கேட்க "ஆமா இந்த வீட்டுல இருக்கறவங்க ராசியில்ல சொல்லி வெளியூர்ல இருக்காங்க.. இங்க திருவிழா நடக்குறப்ப மட்டும் வந்து தங்கிட்டு போவாங்க." "அப்படியா? இந்த வீட்ட வெலைக்கு கேட்டா குடுப்பாங்களா?" "இந்த வீடா..?" அவன் கேட்க "ஆமா. இந்த வீடு தான்." "இந்த வீடு ராசியில்ல சொல்லி தான் வெளியூர்ல வாடகை வீட்டுல இருக்காங்க.. நீ இந்த ராசியில்லாத வீட்டை போய் வெலைக்கு கேக்குற?" "ராசி மேல எனக்கு நம்பிக்கை இல்ல.. வெலைக்கு தருவாங்காளா மாட்டாங்களா?" "தெரியலைடா.. வேணா பேசி பாக்குறேன்.." "ம்ம். சரி.. பேசி பாத்திட்டு போன் பண்ணு.." "அப்ப இந்த வீட்ட தான் வாங்க போறியா?" "ஆமா.. வேற நல்ல வீடொல்லாம் இருக்குடா.. கொஞ்சம் யோசித்து பாத்துக்கோ." "எனக்கு இந்த வீடு தான் வேணும்.. அந்த பனை மரமும் இந்த எடத்தோட சேந்தது தான." "அப்படி தான் நெனக்குறேன்." "எனக்கு அந்த மரத்தோட சேத்து தான் வேணும்.. பணம் பத்தி கவலைபட வேணாம் சொல்லிடு." "சரி பேசிட்டு சொல்றேன்." சொல்ல அடுத்து அவன் வீட்டிற்கு கொஞ்ச நேரம் அவன் வீட்டில் இருந்தவர்களிடம் பேசிவிட்டு அங்கி கிளம்பி தங்கியிருந்த லாட்ஜ் வந்து சாப்பாடு ஆடர் செய்து சாப்பிட்டு மறுநாள் காலையில் போய் மதியை பார்க்க வேண்டும் என்பதற்காக அன்று இரவே டிராவல்ஸில் டிக்கெட் புக் செய்து கிளம்பினேன்.. பஸ் மாட்டுதாவணியில் இருந்து டோல்கேட் தாண்டி வேகம் எடுத்தது. ஜன்னல் வழியே சில்லென்று காற்று வந்து முகத்தில் பட்டு புது புத்துணர்ச்சி தந்தது.. சீட்டில் சாய்ந்து உட்காந்திருக்க என் மனமோ திரும்பி கிராமத்தில் நடந்த எங்களின் காதல் நினைவுகளை நோக்கி பயணித்தது. மறுநாள் என் பிறந்தநாள் காலையில் என் கடைக்கு ஏதோ வாங்க வந்தாள். அவள் வரும் போது என் அப்பாவும் கூட இருந்தாள். அதனால் எதும் பேசாமல் வெறும் ரூபாய் நோட்டை நீட்டி சீயக்காய் இன்னும் சில சாமான்களை கேட்க அதை எடுத்து குடுத்ததும் வாங்கி கொண்டு எதுவும் சொல்லாமல் போய்விட்டாள். பின் யோசித்து பார்த்தேன்.. அவள் ரூபாய் நோட்டை விரித்து கையில் வைத்தாள்.. உடனே அவள் குடுத்த நோட்டை எடுத்து பார்த்தேன். அதில் 8மணி என எழுதியிருந்தது. எனக்காக வருகிறாள் என நினைக்கும் போதே அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அந்த சந்தோஷத்துடனே போய் குளித்து ரெடியாகி அவளுக்காக அந்த பனைமரத்திற்கு பக்கத்தில் காத்திருந்தேன்.. மதி சொன்னது போல் சரியாக 8மணிக்கு ஸ்கூல்பேக் மற்றும் சைக்கிளுடன் வந்தாள். அவள் வரும் போதே சுற்றியிலும் ஆட்கள் யாராவது வருகிறார்களா என பார்த்துக் கொண்டே வந்தாள்.. என் அருகில் வந்ததும் ஒரு புன்னகை சிந்தி பிறந்தநாள் வாழ்த்தை சொன்னாள்.. அவளிடம் "வாழ்த்து சொன்னா போதுமா? வேற எதும் இல்லையா?" கேட்க "ஏன் இல்ல.. இருக்கே.." சொல்ல எனக்கு ஆர்வம் தாங்க முடியாமல் "என்ன தர போற?" கேட்க அவள் கண்ணை மூட சொன்னாள்.. நானும் நல்ல பையனா கண்ணை மூடிக் கொண்டு நிற்க அவளுடைய ஆள்காட்டி விரலால் நெற்றியில் திருநீறும் குங்குமமும் வைத்தாள்.. அவள் எனக்காக கோவிலுக்கு போய் வந்து வைத்தது சந்தோஷம் தான். இருந்தாலும் முத்தம் எதாவது குடுப்பாள் என எதிர்பார்த்தேன். என் ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் "எனக்காகவா கோவிலுக்கு போன." "ஆமா." "சரி சாமிக்கிட்ட என்ன வேண்டிகிட்ட" "ம்ம்.. நீங்க படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போகனும். அடுத்து நம்ம காதல் எந்த தடங்கலும் வராம நாம ஒன்னு சேரனும் வேண்டிகிட்டேன்." "சரி.. வேற எதுவும் இல்லையா?" "வேற என்ன வேணும்?" "நீயா பாத்து எத குடுத்தாலும் வாங்கிறேன்." "அப்ப அடி குடுத்தாலும் வாங்குவிங்களா?" "ம்ம்.. உன் கையால அடிச்சா அது கூட நா செஞ்ச பாக்கியம் தான்.. அப்படியாச்சும் உன் கை என் மேல படும்ல.." "ம்ம்.. உங்களுக்கு பேசவா சொல்லி தரணும்.. சரி ஒன்னு தரேன் கண்ண மூடுங்க.." சொல்ல "ஏன் இன்னும் எதாவது கோவிலுக்கு போய்ட்டு வந்தது பாக்கி இருக்கா?" கிண்டல் பண்ண "அய்ய.. அதெல்லாம் இல்ல.. வேற ஒன்னு.. வேணுமா? வேண்டாமா?" கேட்க "சரி நீயே ஆசைபட்டு தர.. வாங்கிறேன்." "அப்ப கண்ண மூடுங்க" சொல்ல மறுபடியும் கண்ணை மூட இந்த முறை என் பக்கத்தில் வந்து நின்றதும் அவள் விடும் மூச்சுகாற்று என் முகத்தில் பட்டது. அவளின் காலை தூக்கி நின்று கண்ணில் கை வைத்து நெற்றியில் இச்சென்று அழுத்தமாக உதட்டை பதித்து முத்தமிட்டாள். அவளின் முத்த சத்ததிற்கு ஏற்ப காலில் போட்டிருந்த கொலுசு முத்துக்களும் சத்தத்தை எழுப்பின. அவளின் உதட்டை நெற்றியில் எடுத்ததும் முகத்தை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டாள். "மதி என்ன கீழ குனிஞ்சிட்ட" கேட்டேன்.. அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவளின் முகத்தை கையால் தூக்கி பார்த்தேன். அவளின் முகத்தில் மகிழ்ச்சியும் வெட்கமும் நிறைந்திருந்தது. "மதி நீ குடுத்த மாதிரி நானும் குடுக்கவா?" கேட்டேன்.. அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கடைசியில் மௌனம் சம்மதம் என எடுத்துக் கொண்டு அவளின் இடுப்பில் கை வைத்து தூக்க அவளும் அதிர்ச்சியில் காலை தூக்கி நிற்க இருவரின் நெற்றியும் எதிரெதிரே இருக்க அதே போல் இருவரின் உதடுகளும் எதிரெதிரே பக்கத்தில் இருக்க என் நெற்றியை மதியின் நெற்றியில் வைத்து அழுத்த அதே சமயம் என் உதடும் அவளின் உதட்டை தொட்டு அழுத்தியிருந்தது. மீண்டும் அவளோடு வருவேன்...
17-02-2022, 06:01 PM
இந்த முறை படிப்பதற்கு சலிப்பு தட்டாமல் இருக்கும் என நம்புகிறேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லுங்கள்..
17-02-2022, 08:47 PM
19-02-2022, 04:30 AM
(17-02-2022, 05:58 PM)SamarSaran Wrote: அந்த மூன்றாவது பனைமரத்தில் இருந்த தூசியை சுத்தபடுத்தி பார்த்த போது நான் நினைத்த மாதிரியே எங்களின் காதல் சின்னம் இருந்தது.. ஆம் இந்த பனைமரம் தான் காதலின் தூண்.. இந்த தூணில் எங்களின் காதலின் நினைவாக ஜி. வி என இருவரின் பெயரின் முதல் எழுத்தை ஹாட்டின் சிம்மலுக்குள் இருக்குமாறு இந்த மரத்தில் செதுக்கி வைத்திருந்தோம்.. அதை திரும்பி பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சேகர் வீட்டை காட்டும் போதெல்லாம் என்னை தடுத்ததற்கு இது கூட காரணமாக இருக்கலாம் என நான் நினைத்துக் கொண்டிருக்க என் நினைவுகள் பின்னோக்கி நகர தொடங்கின.. Apadiye old love lifeku kondu poreenka nanba.. Thanks.. |
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 2 Guest(s)