19-01-2022, 09:55 PM
Super bro continue
Romance மீண்டும் உன்னோடு நான் (முடிவுற்றது)
|
19-01-2022, 09:55 PM
Super bro continue
20-01-2022, 07:24 PM
20-01-2022, 07:24 PM
உங்களின் கருத்துக்கு நன்றி...
20-01-2022, 07:25 PM
சென்ற பகுதியின் தொடர்ச்சி...
கோமதி பற்றிய நினைப்பு வந்ததும் படுக்கை விட்டு எழுந்து சுறுசுறுப்பாகி பல் விளக்கி முகம் கழுவி ப்ளாட்டை விட்டு வெளியே வந்தேன். மணி ஏழுக்கு மேல் ஆகியிருந்தாலும் பனி மூடிய மேகங்களாக இருந்ததால் வெயில் அதிகமாக தெரியவில்லை.. சில்லென்று பனிக்காற்று தான் முகத்தில் பட்டது. நானிருக்கும் பிளாக்கு முன்னால் ஒரு நான்கு அடிக்கு தார் ரோடு நீளமாக போடபட்டு இருந்தது. அதில் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். இந்த அபார்மெண்டிற்கு புதிதாக குடி வந்திருப்பதால் பெரிதாக யாரும் பழக்கம் இல்லை. அதனாலே ஸ்டோன் பெஞ்சில் உட்காராமல் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தேன். இந்த நடைபயணத்திலும் கோமதி பற்றிய எண்ணங்கள் தான் முழுமையாக நிரம்பியிருந்தன. அந்த எண்ணங்களுடனே நடையை தொடர்ந்தேன். அந்த சில்லென்று காலையில் தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு மேலாக நடந்ததால் உடல் வியர்த்து வியர்வை வழிய ஆரம்பித்ததால் அங்கிருந்த பூங்காவில் சிறிய மரத்தை ஒட்டி போடபட்டிருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருந்தேன். அப்போது என்னுடைய வயதை தாண்டிய நபர் ஒருவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அவராக தன்னை "ஹாய் ஜென்டில்மேன் ஐயம் தனிகாச்சலம் ரிட்டயர்ட் கவர்மெண்ட் ஸ்டாப்" சொல்லிவிட்டு அடுத்தடுத்து அவராகவே அவருடைய குடும்பத்தை பற்றியும் குடும்பத்தில் இருப்பவர்கள் நடந்து கொள்வதை பற்றியும் புலம்பி தள்ளிக் கொண்டிருந்தார்.. அவருடைய பேச்சை முடித்ததும் "ஆமா நீங்க யாரு சொல்லவே இல்ல" ரொம்ப வெகுளியாக கேட்டார்.. "நா வெங்கடேசன் ரியர்ட் ஆர்மி." சொல்ல "உங்கள பாத்த ரியர்ட் ஆகுற வயசா தெரியலேயே?" கேட்க "ஆமா இன்னும் சர்விஸ் இருக்கு.. நா தான் வி. ஆர். எஸ் வாங்கிட்டேன்.." "ஓ.. அப்படியா.?" "ஏன் வி. ஆர். எஸ்..? "என்னுடைய பொண்ணுக்கான கடமை முடிஞ்சது.. அதான் போதும் சொல்லிட்டு வி. ஆர். எஸ்.." சொல்ல "ஓ.. சரி.. பொண்ணு எங்க இருக்கா?" "அவ மேரேஜ் ஆகி யூ.எஸ்ல செட்டில் ஆகிட்டா.." "அப்படியா.. இங்க யார் கூட தங்கியிருக்கிங்க.." "யாரும் இல்ல.. நா மட்டும் தான்." சொல்ல உடனே தனிக்காசலம்," நீ ரொம்ப பாக்கியம் பண்ணியிருக்கிங்க.. உங்களுக்கு எந்த பிக்கல் புடுங்கல் இல்ல. உங்கள் கடைசி காலத்த நிம்மதி கழிக்கலாம்" சொல்ல எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. என் மனத்தில் இருக்கும் தனிமை போராட்டம் பற்றி இவருக்கு என்ன தெரிய போகிறது என எனக்கு நானே சமாதானம் செய்துக் கொண்டேன். "இல்ல.. நா பாக்கியசாலி இல்ல.. தனிமையில வாழ்ந்து கடைசியில தனிமையில இருக்குறேன்.. உங்கள மாதிரி சிலர் தனிமை இனிமையானது சொல்லிடுவிங்க.. ஆனா அதை அனுபவிக்குற எனக்கு தான் தெரியும் அது இனிமையா? கொடுமையா?" "அட போங்க.. என்னோட வீட்டுல எப்ப பாத்தாலும் கசகச்ச சத்தமும் சண்டையுமா தான் இருக்கும். அதிலே எனக்கு இரிடேஷன் ஆகி பிபி எகிறிடும்.. இதெல்லாம் உங்க வீட்டுல இருக்காதுல சார்வாள்.." "ம்ம். ஆமா.. ஆனா எனக்கு என் குழந்தைங்க பேரன், பேத்தியோட இருக்க தான் ஆசை." "இந்த கடவுள் செய்யுற திருவிளையாடல் பாருங்க.. உங்களுக்கோ என் குடும்பம் மாதிரி வேணும்.. எனக்கோ உங்கள மாதிரி இருக்கனும் ஆசை" என்றார்.. இந்த தனிக்காசலம் நல்லா ஜாலியாக பேச கூடிய ஆளாக இருக்கிறார். இவரிடம் இந்த அபார்மெண்டில் இருக்கும் கோமதி பற்றி கேட்கலாமா என்ற யோசனை கூட வந்தது. முதலில் இவருக்கு அந்த பெண்மணி பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படியே தெரிந்திருந்தாலும் கேட்டதும் தவறாக எதுவும் எடுத்துக் கொள்ளாமல் பதில் சொல்லுவாரா என தெரியவில்லை. ஒரே குழப்பமான மனநிலையில் இருந்தேன். நானிருக்கும் நிலையை பார்த்துவிட்டு "என்ன சார்வாள் ஏதோ சிந்தனையிலே இருக்கீங்க..?" "அட அது ஒன்னுமில்ல. விடுங்க.." "சரி நீங்க எந்த ப்ளாக்ல எந்த பிளாட் சொல்லுங்க.." கேட்க நானும் நானிருக்கும் ப்ளாக் மற்றும் பிளாட் சொல்ல அவர், "நா மேலிருந்து கீழே இறங்கி மூனு ப்ளாக் நடந்து திரும்பி மேலே ஏறனுமா?" மூச்சு வாங்க சொல்ல எனக்கு சிரிப்பு தான் வந்தது.. "நீங்க கவலைபடாதீங்க. சும்மா இருக்குற நேரத்துல பால்கனி இருக்குல. அதுல தான் சேர் போட்டு உட்காந்து ஏதாவது படிச்சிட்டு இருப்பேன். நீங்க கீழே இருந்து கூப்பிடுங்க போதும்" சொன்னதும் அவருக்குள் ஒரு மகிழ்ச்சி.. "அப்பாடா.. ரொம்ப தேங்க்ஸ் சார்வாள். அப்போ நாம ஃபிரியா இருக்கும் போது பேசலாம்.. நா அப்படியே நடந்து ப்ளாட்டுக்கு போறேன்" என்றார்.. நானும் அவரை தடுக்காமல் சரி சொல்ல அவர் அந்த ஸ்டோன் பெஞ்சை விட்டு எழுந்து மெதுவாக நடந்து சென்றார். காலையில் அந்த நேரத்தில் எல்லோரும் அவரவர் வேலைகளை பரபரப்பாக செய்துக் கொண்டிருந்தனர். நான் மட்டும் தான் என்ன செய்வது என்று தெரியாமல் உட்காந்திருந்தேன். அங்கிருந்து எழுந்து செல்ல கூட மனமில்லாமல் அப்படியே கோமதியை பற்றி நினைத்துக் கொண்டே உட்காந்திருந்தேன். காலை வெயில் முகத்தில் பட அப்போது தான் சுயநினைவுக்கு வந்தேன். எவ்வளவு நேரம் அதே இடத்தில் உட்காந்திருந்தேன் என தெரியவில்லை. பின் அங்கிருந்து நடந்து வந்து என்னுடைய ப்ளாட்டிற்கு வந்து சேர்ந்தேன். உடல் கொஞ்சம் சோர்வாக இருந்ததால் பிரிஜ்ஜில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு சோபாவில் உட்கார்ந்து டிவி ஆன் செய்து செய்தி சேனல் வைத்து செய்தியை கேட்டேன். என்னால் ஒருமனதாக அந்த செய்தியை கூட கேட்க முடியவில்லை. இதற்கு காரணம் கோமதி.. இந்த அபார்மெண்டில் இருக்கும் கோமதி நான் காதலித்த கோமதியாக கூட இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் என் மனம் ஏன் அந்த பெண்மணியை பற்றி மட்டும் தெரிந்துக் கொள்ள ஒவ்வொரு வினாடியும் ஆவலாக துடித்துக் கொண்டிருக்கிறது என தெரியவில்லை. அந்த கோமதியை பற்றிய சிந்தனையிலே முழ்கியிருக்க டிவியில் ஆரம்பித்த செய்தி கூட முடித்துவிட்டது. ஆனால் இன்னும் என் மன பிரச்சனை தான் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் காலம் கண்டிப்பாக ஒரு பதிலை தரும் என்ற நம்பிக்கையோடு குளிக்க சென்றேன். குளித்து முடித்து வந்ததும் பிரிஜ்ஜில் இருந்த மாவை எடுத்து தோசை சுட்டு சாப்பிட்டு மீண்டும் பிளாட்டை விட்டு வெளியே வந்தேன். அந்த அபார்மெண்டில் பெரும்பலான குடும்பத்தில் இருப்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் ஆள் அரவமற்று இருந்தது. அடுத்து எந்த வேலையும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் வெளியே வந்து நிழலாக இருக்கும் மரத்திற்கு அடியில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருந்தேன்.. எனக்கு முன்னால் இருந்த ப்ளாக்கில் நிறைய வீடுகள் தெரிந்தன. இதில் எந்த ப்ளாக்கில் எந்த பிளாட்டில் அந்த கோமதி குடியிருக்கிறாள் என தெரியவில்லை. எனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பையும் வீணடித்துவிட்டதால் எப்படி கண்டுபிடிப்பது என ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்தேன். அதன் பின் அங்கிருப்பது வீண் என்பதால் கிளம்பி பிளாட்டிற்கு வந்து மதியத்திற்கு தேவையான சமையலை செய்து சாப்பிட்டு கோமதி நினைவுடனே கொஞ்சம் கண்ணை மூடினேன்.. மாலையில் வீட்டிற்கு தேவையான சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால் அபார்மெண்டிற்கு என்டர்ன்ஸ்க்கு வந்து வாட்ச்மேனிடம், "டிபார்மெண்டல் ஸ்டோர் எங்க இருக்கு?" கேட்டேன். அவனும், "பக்கத்தில ஒரு பலசரக்கு இருக்கு சார். அது பிடிக்கலனா ஒரு ஸ்டாப் தள்ளி நீங்க கேக்குற மாதிரி சூப்பர் மார்க்கெட் இருக்கு. அங்க எல்லாமே கிடைக்கும்" சொல்ல அவனிடம் "ரொம்ப தாங்க்ஸ்ப்பா" சொல்லிவிட்டு வெளியே வந்து ஷேர் ஆட்டோவில் அந்த சூப்பர் மார்க்கெட் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு திரும்பி அபார்மெண்டிற்கு வந்தேன். அபார்மெண்டில் நுழைந்ததும் திரும்பி அந்த வாட்ச்மேன் என்னை கூப்பிட, அவனிடம் "என்ன கேட்டேன்.?" "சார், ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா?" கேட்டான் "என்ன உதவி?" கேட்க "இந்த பார்சல் உங்க ப்ளாக்குல இருக்குற ஒரு வீட்டுல குடுக்கனும்.. பார்சல் வந்ததுல இருந்து நானும் போன் அடிக்குறேன். போன் ஸ்விட்ச் ஆப் வருது.. நீங்க குடுத்திருங்களா?" "இல்லப்பா நா இந்த அபார்மெண்டிக்கு புதுசு.. எனக்கு வேற யாரையும் தெரியாது." "அப்படியா சார்.. பரவாயில்ல சார் நா பாத்துக்கிறேன்" ஒருவித குழப்பத்துடன் கூடிய யோசனையிலே சொன்னான். "என்னப்பா யோசிக்குற..?" "இல்ல சார் இன்னும் கொஞ்ச நேரத்தில நான் டூட்டி மாறிவிடுவேன். அதான் இத எப்படி குடுக்குறது தான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்றான் "சரி பேரு, பிளாட் நம்பர் என்னனு?" கேட்க அவன் "நந்தனா" சொன்னதும் மனதுக்குள் ஒரு சந்தோஷம்.. இருந்தாலும் அம்மாவின் பெயர் என்னனு தெரிய வேண்டும் என்பதால் அவனிடம் "அந்த பொண்ணோட அம்மா பேரு என்னனு கேட்டேன்.?" "அதுவா சார் கோமதி அந்த பொண்ணோட அம்மா பேரு.." சொன்னதும் மனதிற்குள் இந்த வயதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சி ஒன்றாக பறப்பது போன்ற ஓர் இன்ப உணர்வு.. அதை அவனிடம் காட்டாமல், "சரி குடு. நானே குடுத்திறேன்" என்றதும் அவனுக்குள்ளும் ஒரு சந்தோஷம்.. உடனே "இருங்க சார் எடுத்துட்டு வரேன்" சொல்லி அவன் ரூமிற்குள் சென்று ஒரு சிறிய பார்சலை எடுத்து வந்தான்.. அதில் கோமதியின் ப்ளாட் நம்பருடன் ஒரு மொபைல் நம்பரும் இருந்தது. ஆனால் அது யாருடைய நம்பர் என தெரியவில்லை.. "சரி யார் நம்பரா இருந்தா என்ன பாத்துக்கலாம்" அந்த பார்சலை எடுத்துக் கொண்டு வந்து அந்த பிளாட்டின் கதவை தட்டினேன்.. உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. காலிங் பெல் அடித்து பார்த்தேன். அப்போதும் எந்த பதிலும் இல்லை. உடனே என் மொபைலில் அதிலிருந்த நம்பருக்கு கால் செய்து பார்த்தேன். அந்த வாட்ச்மேன் சொன்னது போல் ஸ்விட்ச் ஆப் தான் வந்தது. "என்னடா இது காலம் செய்யுற ஜாலம் நானாக நினைத்துக் கொண்டேன். இப்ப எப்படி இந்த பார்சல் குடுக்குறது. அந்த கோமதி பாக்குறது" ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றேன். இதை எதிர் பிளாட்டில் இருப்பவரிடம் சொல்லி குடுக்க சொன்னால் குடுத்து விடுவார்கள். ஆனால் நம்மால் அந்த கோமதியை பார்க்க முடியாதே என்ன வருத்தம் இருந்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை. இந்த பார்சலை நாம் குடுக்குறோம். அந்த கோமதி பார்க்குறோம் முடிவு பண்ணி அந்த பார்சலை எடுத்து கொண்டு என் பிளாட்டிற்கு வந்தேன். அந்த பார்சலை பத்திரமாக வைத்து விட்டு வாங்கி வந்த சாமானை எல்லாம் எடுத்து வைத்து விட்டு மீண்டும் ஒருமுறை அந்த பிளாட்டில் காலிங்பெல்லை அடிக்க மீண்டும் எந்த பதிலும் வரவில்லை என்பதால் கீழே இறங்கி வாட்ச்மேன் இருக்கும் இடத்திற்கு வந்து பார்த்தேன். வாட்ச்மேன் மாறியிருந்தனர்.. இந்த பார்சலை நாம் தான் குடுக்க வேண்டும் என காலம் தீர்மானித்து இருக்கிறது போல் அதான் இவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது என நினைத்துக் கொண்டு வந்து என் பிளாக்கின் முன் இருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருந்தேன். கிட்டதட்ட அரைமணி நேரமாக உட்காந்திருந்தேன். அந்த பிளாட்டின் பால்கனியில் எவரும் வந்து நிற்கததால் இன்னும் ஆட்கள் வரவில்லை என நானாக முடிவு செய்து கொண்டேன். இன்றைக்கு அந்த கோமதி பார்க்க முடியாது போல எழுந்து என் பிளாட்டிற்க்கு வந்து எனக்கு தேவையான தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு டிவி பழைய காதல் பாடல்களை ஓடவிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது போய் பார்க்கலாம் என நினைத்து அந்த பார்சலை எடுத்து கொண்டு அந்த பிளாட்டிற்கு போய் காலிங் பெல் அடிக்க இந்த முறை உள்ளிருந்து "யாரு இதோ வரேன் சொல்ல" எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் இந்த குரலை இதற்கு முன் எங்கையோ கேட்ட நியாபகம் வருகிறது. ஆனால் யாராக இருக்குமோ என யோசித்துக் கொண்டே வெளியில் அந்த பார்சலை வைத்துக் கொண்டு நின்றிருந்தேன். ஆட்கள் யாரும் வரவில்லை என்பதால் திரும்பி காலிங் பெல்லை அடிக்க உள்ளிருந்து "அய்யோ மம்மி பெல் அடிச்சிட்டே இருக்கான்.. யாரு போய் பாரு.." "இருடி டிரஸ் மாத்திட்டு இருக்கேன். நீ தான் போய் பாரேன்.." "போ மம்மி ஐயம் டயர்ட். நீயே போய் பாரு.." சொல்லி அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டிருக்க "இது என்னடா வெறும் சோதனையா வருது" நினைத்துக் கொண்டிருக்க இந்த முறை காலிங் பெல் அடிக்காமல் கதவில் கை வைக்க அந்த சமயம் பார்த்து கதவு திறக்க எனக்கு எதிரே இருந்த பெண்மணியை பார்த்த வினாடியில் அதிர்ச்சியோடு அப்படியே நின்றுவிட்டேன். மீண்டும் அவளோடு வருவேன்...
20-01-2022, 07:35 PM
Miga sirappu bro athurchiyaguralavukku pathathu avaroda munnal kathaliyo. Waiting
21-01-2022, 03:55 PM
நல்ல தொடக்கம் நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்......
My Threads:
தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed) தடுமாறியவள் II – Bold Decision of Beauties - Five Different Episodes - தனி தனி கதை - https://xossipy.com/thread-47592.html
23-01-2022, 11:00 AM
23-01-2022, 11:01 AM
தங்களின் கருத்துக்களை சொன்ன மற்றவருக்கும் நன்றிகள்..
23-01-2022, 11:03 AM
(This post was last modified: 23-01-2022, 11:04 AM by SamarSaran. Edited 1 time in total. Edited 1 time in total.)
சென்ற பகுதியின் தொடர்ச்சி...
நான் நினைத்து வந்தது இத்தனை வருடங்களுக்கு பிறகு மனதிற்கு பிடித்த 'கோமதி' என்ற பெயரை கேட்டதுமே மனத்திற்கு தன்னையும் அறியாமல் ஒரு பரவசம், மகிழ்ச்சி எல்லாம் அந்த ஒற்றை வினாடிக்குள் வந்து சென்றதே. இதையெல்லாம் நமக்குள் ஏற்படுத்திய அந்த பெண்மணியின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தான் இந்த பிளாட்டிற்கு வந்தோம்.. ஆனால் இங்கு முப்பது வருடங்களுக்கு முன் காதல் என்ற ஒளியை என் வாழ்வில் ஏற்றிய ஒளி விளக்கை நான் இத்தனை வருடங்களுக்கு பிறகு காண்பேன் என்பதை கனவிலும் நினைக்கவில்லை. நான் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் எந்த அசைவும் இல்லாமல் ஏதோ பிரம்மை பிடித்தவன் போல் கையில் அந்த பார்சலை வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தேன். எனக்கு எதிரே நெருங்கி நிற்கும் கோமதியின் முகத்திலும் எள் ஆடவில்லை. என்னை பார்த்து அவளுக்கு மகிழ்ச்சியா? இல்லை அதிர்ச்சியா? என தெரியவில்லை. அவளின் மனதில் எதுவாக இருந்தாலும் அந்த உணர்ச்சியை முகத்தில் முழுமையாக காட்டாமல் ஒரு வித அதிர்ச்சி கலந்த பயத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். எங்கள் இருவருக்கும் இடையே எந்த வித பேச்சும் நடைபெறவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சில வினாடிகள் பார்வையால் மட்டும் பார்த்துக் கொள்கிறோம். உள்ளிருந்து அவளின் மகளின் சத்தம் கேட்டதும் தான் இருவருமே கொஞ்சம் சுயநினைவுக்கு வந்தோம். அதிர்ச்சியிலிருந்து முழுமையாக வெளிவருவதற்கு முன்னால் கோமதியின் மகள் எங்களை நோக்கி கதவருகே வந்து, "நீங்க யாரு ?என்ன பார்சல் இது?" கேட்க, "இல்ல.. அபார்மெண்ட் வாட்ச்மேன் தான் இந்த பார்சலை இந்த பிளாட்டுல குடுக்க சொன்னான். பார்சல் இருந்த நம்பருக்கு கால் பண்ணியிருக்கான். ஸ்விச் ஆப் வந்தது.. நந்தனா.. இந்த பிளாட் தான.." பதற்றத்துடனே கேட்க "என் சிஸ்ட்ர் தான்.." சொல்லிவிட்டு சந்தேகத்துடன் மேலும் கீழும் பார்க்க.. பின், "ஒன் மினிட்" சொல்லிவிட்டு கால் பண்ணி கேட்டு சில வினாடிகளிலே பார்சலை புக் பண்ணியதை கன்பார்ம் செய்துவிட்டு அவள் அம்மாவிடம் பார்சலை வாங்கிக் கொண்டு உள்ளே வர சொன்னாள். ஆனால் கோமதியோ என்னை பார்த்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளாமல் அப்படியே நிற்க, நானும் பார்சலை என்ன செய்வது என்று தெரியாமலும் புரியாமலும் குழப்பத்துடனே கூட நிற்க நந்திதா அவள் அம்மா நிற்பதை பார்த்து விட்டு வந்து அவளின் தோளில் தட்ட பின் முழுமையாக சுயநினைவுக்கு வந்தாலும் நந்திதா திட்டிக் கொண்டே "ம்மா பார்ச்சலை வாங்க சொல்லிட்டேன். நீ என்னம்மா பார்சல் வாங்காம எதையோ திங் பண்ணிட்டு இருக்க.. பாரு. அங்கிள் எவ்வளவு நேரம் கையில வச்சிட்டு நிக்கிறார்.. சாரி அங்கிள்.. நீங்க குடுங்க அங்கிள்.." என என் கையில் இருந்த பார்சலை தன் கையில் வாங்கி கொண்டு உள்ளே சென்றாள். இனியும் அங்கே நின்றுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது என நினைத்து நானாகவே அந்த இடத்தை விட்டு நகர விருப்பம் இல்லையென்றாலும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வர வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மனமில்லாமல் அங்கிருந்து என் பிளாட்டிற்கு வந்து படுக்கையில் படுத்தேன். என்னுடைய நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது. கோமதியுடனான காதல் நினைவுகள் ஒவ்வொன்றும் காட்சியாக கண் முன்னால் ஃபோட்டா பிலிமில் பார்ப்பது போன்ற பிரம்மை. அது பிரம்மை இருந்தாலும் எல்லாம் இனிமையாக நினைவுகளாக இருந்ததால் கொஞ்சம் இனிமையாக இருந்தது. ஆனால் அவள் என்னை விட்டு பிரிந்த சென்ற தருணத்தை மீண்டும் நினைத்தும் இதயத்தில் மீண்டும் வலி.. ஐந்து ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் அழகாக காதலித்துக் கொண்டிருந்தோம். அந்த அழகான காதலில் யார் கண்பட்டதோ தெரியவில்லை ஒருநாள் இரவோடு இரவாக அவளின் குடும்பம் வீட்டை காலி செய்து கொண்டு வேறொரு ஊருக்கு சென்றுவிட்டனர். இருந்தாலும் கோமதி ஏதாவது ஒருவகையில் என்னை தொடர்பு கொள்வாள் என்ற நம்பிக்கையோடு அவளின் செய்திக்காக காத்திருந்தேன். நாட்கள் சென்றுக் கொண்டேயிருந்ததை தவிர அவளிடமிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. கிட்டதட்ட ஒரு வருடமாக அவளை பற்றியும் அவளின் குடும்பத்தை பற்றியும் ஊரில் இருக்கும் எவரும் எந்த சரியான தகவலும் கிடைக்காததால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு பிறகு அவளின் அண்ணனை ஊர்க்காரர் யாரோ சிலர் பார்த்து பேசியதாக தகவல் அடிபட்டது. கோமதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அவள் பிரிந்த சென்றதை விட எனக்கு இது மிகவும் மனதை பாதித்தது. அந்த துயரத்தில் இருந்து மீள நாட்கள் இல்லை இல்லை மாதக் கணக்கில் ஆனது. வீட்டிலிருந்த எல்லோரும் ஏதோ ஏதோ அவர்களுக்கு தெரிந்த அறிவுரையை கதையாக கொட்டி தீர்த்தனர். அந்த சமயத்தில் தான் ராணுவத்தில் ஆள் எடுப்பதாக பேச்சு அடிப்பட்டு தகவல் கிடைக்க என்னை அதற்கு விண்ணபிக்க சொல்லி கட்டாயபடுத்த நானும் வேறு வழியில்லாமல் கடனே என்று விண்ணபிக்க அதில் என் படிப்பும் தகுதிக்கும் ஏற்ற வகையில் பணி கிடைத்தது. எனக்கும் ஒரு மாறுதல் தேவைப்பட்டதால் அந்த பணியை ஏற்றுக் கொண்டு கோமதியின் பற்றிய எண்ணங்களுடனே பணியையும் தொடங்கினேன்.. நாட்கள் செல்ல செல்ல அங்கிருந்த வேலைப்பளுவில் கோமதி பற்றிய எண்ணங்கள், நினைவுகள் எல்லாம் மனதில் அதிகம் தோன்றுவதில்லை. காலப்போக்கில் அவளுடான காதல் நினைவுகள் சுவடுகளாகவே போய்விட்டன. அதன் பின் என்னுடைய வாழ்க்கையிலும் நிறைய நிறைய மாற்றங்கள் பணி சம்மந்தமாகவும், குடும்ப வாழ்க்கையிலும் அடுத்தடுத்த நிகழ்ந்து கொண்டே இருந்தது. இந்த காலத்தின் வேகத்தில் சிக்கிய நபர்களில் நானும் ஒருவன். ஒரு இரவில் கண்ணை மூடி படுத்து பகலில் முடித்தது போல் இருக்கிறது. ஆனால் இருப்பத்தைந்து ஆண்டுகள் மேல் வெகு இலகுவாக சென்றுவிட்டது. இத்தனை ஆண்டுகளுக்கு பின் என்னுடைய வாழ்க்கையின் வாழ்நாட்களை கழிக்க வந்த இடத்தில் மீண்டும் அவளை சந்திப்பேன் என நினைத்து கூட பார்த்ததில்லை. அவளை பார்த்தது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் என்னை தனியாக தவிக்க விட்டு சென்று ஏற்படுத்திய காயத்தை நானே கிளறி விட்டுக் கொண்டேனோ என்ற எண்ணமும் மனதில் எழ தவறவில்லை. கோமதியை மீண்டும் சந்தித்தது என் வாழ்வின் வரமா? சாபமா? என தெரியாமல் குழப்பத்தில் தூக்கம் பிடிக்காமல் தனியாக புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். முந்தைய நாள் மாதிரியே எப்போதும் கண்ணை மூடினேன் என்று தெரியாமலே இப்போதும் கண்ணை மூடியிருக்கிறேன் என்பதே நடு இரவில் முழிப்பு வர தெரிந்தது. கொஞ்சம் கோமதியின் பார்வையிலிருந்தும்... நானும் அந்த முகத்தை பார்த்தும் சந்தோஷபடுவதா இல்லை அவரை விட்டு பிரிவதற்கு நானே ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறேன் என நினைத்து வருத்தபடுவதா என தெரியாமல் அமைதியாக சோபாவில் உட்காந்திருந்தேன். ஆனால் அவரை விட்டு பிரிந்து வந்த நாட்களில் அவரை எப்படியாவது ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிய நாட்கள் பல உண்டு. அந்த ஏக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே என்னுடைய திருமணத்தை என் சம்மதமில்லாமல் பேசி முடித்து பதினைந்து நாட்களுக்குள்ளாகவே திருமணமும் முடிந்துவிட்டது. அதன் பின் அவரை சந்திக்கவே முடியாது என தெரிந்துவிட்டது. ஆனால் அவரின் நல்ல மனதுக்கு எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என அவரை பற்றி நினைக்கும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன்.. இத்தனை வருடங்கள் கழித்து என்னுடைய ஆருயிர் காதலனை மீண்டும் என்னுடைய வீட்டு வாசலில் வைத்து சந்திப்பேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால் இப்போது அது நடந்துவிட்டது. நடந்தது கனவா? இல்லை நிஜமா? என்ற சிறுகுழப்பம் கூட இருந்தது. என் எதிரே இருந்த டேபிளில் இருக்கும் பார்சல் இது கனவில்லை என்பதை உறுதிபடுத்துவிட்டது. இந்த சந்திப்பு எதனால் நிகழ்ந்தது என தெரியாது. காலத்தின் ஜாலத்தால் நிகழ வேண்டும் என இருந்திருக்கிறது. நிகழ்ந்திருக்கிறது. இந்த சந்திப்பால் என்னுடைய வாழ்வில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வமும் கூடவே சிறுபயமும் இருந்தது. எனக்கு ஏற்பட்ட சிறு பயத்தால் முகம் வியர்த்து வடிய அந்த சமயம் பார்த்து நந்திதா அவளுடைய ரூமில் இருந்து வெளியே வந்து நான் உட்காந்திருக்கும் நிலையை பார்த்து விட்டு என் பக்கத்தில் வந்து "மம்மி, என்ன ஆச்சு. ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க" கேட்க என்னை நானே சுதாரித்து கொண்டு "அதலாம் ஒன்னுமில்ல.. பங்சன்ல சாப்பிட்டது தான் ஒரு மாதிரியா இருக்கு.." "ஃபுட் பாய்சனா மம்மி.. வரியா டாக்டர்ட்ட போலாம்.." "இல்ல அதலாம் வேணாம்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த சரியா ஆகிடும்.." "சரி மம்மி நீ ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் ஆபிஸ் ஓர்க் பெண்டிங் இருக்கு. அத போய் நா பாக்குறேன்" சொல்லி சோபாவில் உட்கார்ந்தவள் எழுந்து அவள் ரூமை நோக்கி சென்றாள்.. அவள் எழுந்து போனதும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. என் உடம்பில் வழியும் வியர்வை நிறுத்த எழுந்து ஃபேனை போட்டு மீண்டும் சோபாவில் உட்காந்திருந்தேன். பேனில் இருந்த குளிர்ந்த காற்று பட்டதும் உடலும் மனதும் கொஞ்சம் ஆசுவாசபட்டிருந்தது. அப்படியே சோபாவில் சாய்ந்து கண்ணை மூடிய படி அவரை சந்தித்த முதல் தருணத்தில் இருந்து பிரிவதற்கான முந்தைய நாட்கள் வரை இருந்ததை அசைபோட அவையெல்லாம் என் முன்னால் இப்போதும் நடப்பது போன்ற பிரம்மை. அது பிரம்மையாக இருந்தாலும் அந்த ஐந்து ஆண்டு கால கட்டத்தில் பல தருணங்களில் என்னை பெண்ணாக பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படி உணருவதற்கும், உணர்த்தியதற்கும் அவர் மட்டும் தான் காரணம். இவ்வளவு சந்தோஷத்தை தந்த அவருக்கு எந்த ஒரு சந்தோஷத்தையும் நான் தந்ததில்லை. மாறாக எப்போதும் இருக்க கூடிய வலியை மட்டும் குடுத்திருக்கிறேன். காதலிக்கும் கட்டத்தில் அதிகபட்சமா அவரின் உதட்டில் முத்தமிட்டு இருக்கிறேன். அதை தவிர வேற எதையும் பெரிதாக செய்ததில்லை. என்னை பார்த்ததும் அவரின் மன எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும் என நினைத்து பார்த்தேன். என்னை பார்த்ததும் கண்டிப்பாக நான் ஏற்படுத்தி சென்ற வலிகளை திரும்பி நியாபகத்திற்கு வந்து மீண்டும் வலியை ஏற்படுத்தியிருக்கும் என நன்றாக தெரியும். இனி வரும் சந்திப்பு அந்த காயத்திற்கு மருந்தாக இருக்குமா? இல்லையா? என்றெல்லாம் தெரியாது. ஏன் மீண்டும் சந்திப்போமா? இல்லையா? கூட தெரியாது. எல்லாம் காலத்தின் கையில் தான் இருக்கிறது. காலம் இதற்க்கெல்லாம் வழிவகை ஏற்படுத்தி கொடுக்குமா? தெரியவில்லை. பொறுத்திருந்தால் பார்த்தால் தான் தெரியும்.. காலம் செய்யும் ஜாலம் என்னவென்று? திடீரென்று என் மனதில் ஏன் இது மாதிரியான எண்ணங்கள் தோன்றுகின்றன என எனக்கே தெரியவில்லை. ஒருவேளை அவரை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தால் ஏற்படுகிறதோ?. ம்ம் அப்படி கூட இருக்கலாம்.. இந்த காலம் மனிதர்களிடம் எப்படியெல்லாம் தன் ஜாலத்தை காட்டி திக்கு முக்காட வைக்கிறது என நினைக்கும் போதே வியப்பாக தான் இருக்கிறது. அந்த வியப்புடனே உட்கார்ந்திருக்க சிறிது நேரத்தில் மீண்டும் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் மீண்டும் ஒரு படபடப்பு வந்து தொற்றிக் கொண்டது. இரண்டாவது முறையும் அடிக்க கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு போய் கதவை திறக்க என் மகள் நந்தனா தான் நின்றுக் கொண்டிருந்தாள். அவள் தான் என தெரிந்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவள் உள்ளே வந்து பார்சலை பார்த்துவிட்டு, "வாவ்.. ஆடர் பண்ணது வந்திருச்சா?" சொல்லிக் கொண்டே அந்த பார்சலை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த சமயம் தன் அலுவலக வேலையை முடித்துவிட்டு வந்த நந்திதா "ஏன்டி ஆடர் பண்ணினா எங்ககிட்ட கொஞ்சம் சொல்லலாம்ல.." "இல்ல சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும் நெனச்ச.." "நல்லா நெனச்ச போ.." நாங்க பங்சன் முடிச்சிட்டு வந்த கொஞ்ச நேரத்துல ஒரு ஆள் வாட்டசாட்டமா இந்த பார்சலை வச்சிட்டு நிக்குறார். மம்மி அந்த ஆள பாத்ததுமே டம்மி ஆகிடுச்சு சொல்லி சிரிக்க எனக்கும் அந்த சிரிப்பை பார்த்ததும் கொஞ்சம் மனநிம்மதியாக இருந்தது. "உன் ஃபோன் என்ன ஆச்சு.? ஸ்விட்ஆப்ல இருக்கு." "ஆமா.. டுடே சார்ஜ் போடல.." "ம்ம். பட் உனக்கு லக்கி டே தான். ஆள் இல்லனாலும் பார்சல் வாட்ச்மேன் வாங்கி வச்சிருக்கான். அவன் அந்த வாட்டசாட்டமான ஆள்ட்ட குடுத்து குடுக்க சொல்லியிருக்கான். இவரும் வந்து குடுத்துருக்கார்" சொல்லி பேசிக் கொண்டிருக்க எனக்குள் வந்த நிம்மதி மீண்டும் காணாமல் போனது. இதுவரை எத்தனையோ நபர்கள் வந்து இது மாதிரி குடுத்திருக்கிறார்கள். அப்போது எல்லாம் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் ஏதோ நடப்பது போல் தோன்றுகிறது. அது ஏன்? என யோசித்துக் கொண்டிருக்க, "மம்மி, பசிக்குது.. தோச ஊத்திறியா?" என் மகள் நந்தனா கேட்க என் சிந்தனையை ஒதுக்கி எல்லாம் வைத்துவிட்டு கிச்சனுக்குள் சென்றேன்.. மீண்டும் அவரோடு வருவேன்...
26-01-2022, 04:00 PM
Old lovers ah serthu vai boss.. Orutharukoruthar othasaiya irukkatum
|
« Next Oldest | Next Newest »
|