Romance மீண்டும் உன்னோடு நான் (முடிவுற்றது)
#1
Heart 
இந்த தளத்தில் நான் எழுதும் பத்தாவது தொடர். இந்த தொடரும் ஏற்கெனவே எழுதிய "ஜோதி தரிசனம்" தொடர் மாதிரி தான் இருக்கும். சிறு சிறு கதாபாத்திர வடிவமைப்பு மாற்றம் மற்றும் கால சூழல் மாற்றம் கண்டிப்பாக இருக்கும்.. மற்றபடி ஒரு உண்மையான காதல் அதனால் ஏற்படும் காமத்தை சொல்ல கூடிய கதை தான்.. கதையின் கரு என்ன என்பது தலைப்பிலே சிலர் ஊகித்து இருக்கலாம்.. அதனால் முடிவு கண்டிப்பாக  சுவாரசியமானதாக அமைய :வேண்டும் என நானும் நினைக்கிறேன். நம்புகிறேன்.  

முக்கியமான ஒன்று கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி கருத்து சொல்வதை தவிர்க்கவும்.. 

ஒரு கதையில் உயிரோட்டம் இருக்கிறதென்றால் அது அதிலிருக்கும் வார்த்தைகளினால் தான் என திடமாக நம்புகிறேன்.. வார்த்தைகள் புரிந்தால் கதையின் உண்மை தன்மை புரியும்.. 
உங்கள் ஆதரவை தவிர மற்றபடி வேறொன்றும் இல்லை.

முதல் பகுதி இன்று மதியம்...
[+] 2 users Like SamarSaran's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Romance is not favorite among readers here. you can try incest.
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
#3
(16-01-2022, 11:25 AM)Gopal Ratnam Wrote: Romance is not favorite among readers here. you can try incest.

பரவாயில்லை. ரசிப்பவர் ரசிக்கட்டும்.. எல்லோருக்கும் எல்லாம் பிடித்து விடாது.
[+] 2 users Like SamarSaran's post
Like Reply
#4
டிசம்பர் 31, 2021.

சென்னைக்கு புறநகரத்தில் உள்ள அந்த பழைய அபார்மெண்டில் புது வருடத்திற்கான கொண்டாட்டம் முந்தைய நாள் இரவிலிருந்தே ஆரம்பித்து கலை கட்டியிருந்தது. அந்த அபார்மெண்டில் இருந்த பூங்காவில் ஒரு மேடை அமைத்து அதில் ஆங்காங்கே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான நபர்கள் அவர்களின் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.. 
 
அந்த பூங்காவில் இருந்த மரத்திற்கு பக்கத்தில் குடும்பம் குடும்பமாக இல்லை என்றால் கணவன் மனைவியாக சேர்ந்திருந்து இன்னும் சிறிது நேரத்தில் வர போகும் புத்தாண்டை வரவேற்க ஆர்வமாக காத்திருந்தனர். அதில் என்னை போன்ற தனிநபராக யாரும் இருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றியது. அதனாலே அவர்களுக்கு மத்தியில் நிற்காமல் தனியாக ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.. ஓரமாக ஒதுங்கி நிற்கும் என்னை பற்றிய சில வரிகள்.. 

நான் வெங்கடேசன். வயது 50. இன்னும் சர்வீஸ் இருந்தாலும் என்னுடைய குடும்ப கடமைகளை நிறைவேற்றியதால் வாலன்டியராக ரிட்டர்மெண்ட் வாங்கிட்டு வந்து இந்த அபார்மெண்டில் குடியேறிக்கிறேன். என்னுடைய மனைவி என்னுடைய மகள் சிறுவயதாக இருக்கும் போது நெஞ்சு வலியிலால் அந்த புண்ணியவதி மேலே போய் சேர்ந்துவிட்டாள். எனக்கு இருந்த ஒரு பெண்ணை நன்றாக படிக்க வைத்ததால் அவளுக்கும் அமெரிக்காவில் வேலை கிடைக்க அவளுடைய வாழ்க்கையும் அங்கே அவளாகவே அமைத்துக் கொண்டாள். என்னையும் அவளுடனே வந்து தங்கி கொள்ள சொன்னாள். ஆர்மியில் இருந்ததால் நாட்டுப்பற்று அதிகமாகவே இருந்தது. அதனால் அமெரிக்காவிற்கு வர மறுத்துவிட்டேன் என்பதால் இந்த அபார்மெண்டில் இருந்த பணத்தில் எனக்காக மட்டும் ஒரு பிளாட்டை வாங்கி குடியேறி இருக்கிறேன்..

இதோ புத்தாண்டிற்கான நிகழ்ச்சிகள் துவங்க ஆரம்பித்துவிட்டது.. எல்லோரும் ஆர்வமாக இன்னும் 30நிமிடத்தில் பிறக்க போகும் புத்தாண்டை வரவேற்க காத்திருந்தனர். எல்லோருடைய கையிலும் மதுபானங்க பாட்டில்கள் இருந்தன.. அதில் இருந்த சில பெண்களின் கையில் இந்த பாட்டில்கள் இருந்ததை பார்க்க முடிந்தது. அதை பார்க்கும் போது காலத்தின் வளர்ச்சி பரிமாற்றம், நாங்களும் எங்களை ஆட்டி படைக்க நினைக்கின்ற ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாமல் சமமானவர்கள் தான் என்பதை காட்டுவதாக தெரிந்தது.. அங்கிருந்த ஆண்களும் பெண்களும் பிறக்க போகும் புத்தாண்டு மகிழ்ச்சியில் ஸ்பீக்கரில் ஒலிக்கின்ற பாடல்களுக்கு ஏற்ப நடனம் என்ற பெயரில் குதித்து குதித்து எதையோ செய்துக் கொண்டிருந்தனர்.. 

இதையெல்லாம் ஒரு ஓரமாக இருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.. என்னை தவிர எல்லோரும் மிக சந்தோஷமாக இருந்தனர். எனக்கு மட்டும் தான் இந்த புத்தாண்டு ஒரு வெறுமை, தனிமையை தர போகின்றது என்ற விரக்தியில் உட்கார்ந்திருந்தேன். ஆர்மியில் இருக்கும்  போது என் மகளை பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். கடைசி காலத்திலாவது அவளுடன் சேர்ந்து என் வாழ்நாட்களை கழிக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் நான் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்து வைத்திருக்கிறது.. அதனால் தான் என்னவோ இன்னும் சில நிமிடங்களில் பிறக்க போகும் புத்தாண்டில் இருந்து மீண்டும் குடும்பங்கள் அற்ற ஒரு தனிமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என விதி நினைத்து குடுத்திருக்கிறது. இதற்கு விதியை மட்டும் காரணம் சொல்ல முடியாது. நான் சுட்டு இறந்த எதிரி நாட்டின் மனிதர்களின் சாபமாக கூட இருக்கலாம் என நானே எனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்தேன். 

அந்த ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்தபடி மற்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.. இதுமாதிரியான சந்தோஷங்கள் எல்லாம்  என் வாழ்நாளில் இருப்பதைந்து வருடங்களுக்கு முன்பு அனுபவித்தது.. அதுவும் என் கிராமத்தில் இருந்த போது அனுபவித்தது தான். அதன் பிறகு இது மாதிரியான சம்பவங்களை பார்க்கும் வாய்ப்பு கூட இப்போது தான் கிடைத்திருக்கிறது. ஆர்மியில் இருக்கும் போது ஒவ்வொரு புதுவருடம் பிறக்கும் போதும் இந்த ஆண்டாவது நாடும் நாட்டு மக்கள் அமைதியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் தீர்மானம் எடுப்போம்.. எந்த ஒரு ராணுவ வீரனும் அவரவர் சொந்த குடும்ப வாழ்க்கையில் இனியாவது இப்படி இருக்க வேண்டும் என எப்போதும் பணியில் இருக்கும் போது தீர்மானம் எடுத்தது கிடையாது.. 

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகாவது குடும்பத்துடன் வாழ நினைத்த எனக்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். அந்த விரக்தியில் அமைதியாக உட்காந்திருக்க கூட்டத்தில் இருந்த அனைவரும் இன்னும் பத்து நிமிடத்தில் பிறக்க இருக்கும் புதுவருடத்தை வரவேற்க அவரவருக்கு ஏற்ற வகையில் தயாராகி கொண்டிருந்தனர்.. 

எனக்கு இந்த புதுவருடம் எப்படி இருக்க போகின்றது. இனி வருகின்ற நாட்களை எப்படி கடந்து செல்ல போகிறேன் என எதுவும் தெரியாமல், புரியாமல் ஒருவித விரக்தி கலந்த குழப்பத்தில் சந்தோஷமாக இருக்கும் மனிதர்களை பார்க்கும் போது எனக்குள்ளும் சற்று பொறாமை எட்டி பார்த்தது. இங்கு இது மாதிரியான மனிதர்கள் சந்தோஷமாக இருக்க அங்கு பார்டரில் நான் குடும்பத்தை வருட கணக்கில் பிரிந்து, சந்தோஷத்தை இழந்து, வருட கணக்கில் பாதுக்காப்பு கொடுத்திருக்கிறோம்.. ஆனால் இன்று எனக்கு எனக்கான வாழ்க்கையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், பிடிப்பும் இல்லாமல் உடம்பில் உயிர் மட்டும் இருப்பதால் இங்கு வந்து உட்காந்திருக்கிறேன்..

இனி வரும் வாழ்நாட்களில் எனக்கான பணி, சந்தோஷம் எதுவென்று தெரியவில்லை.. ஒருவேளை அதையும் தனிமையை தீர்மானித்த விதியே கூட தீர்மார்த்து இருக்குமோ என்ற கேள்வி மனதிற்குள் எழத் தான் செய்தது. ஆனால்  மனத்திற்குள் கேள்வி மட்டுமே இருந்தது. பதில் இல்லை. பதிலை அந்த விதியே வந்து சொல்லுமா என்ற சந்தேகம் கூடவே இருந்தது. அப்படி ஒருவேளை விதியே வந்து ஏதாவது ஒருவகையில் சொன்னாலும் எப்போது சொல்லும்? இந்த நிமிடமா? அல்லது இந்த இரவா? அடுத்து வரும் பகலா? அடுத்தடுத்த நாட்களா? மாதமா? என எதுவும் தெரியாமல் பெரிய குழப்பத்துடன் அமைதியாக இருக்க புத்தாண்டிற்கான கவுன்டன் பத்திலிருந்து ஆரம்பித்து ஒன்று ஒன்றாக குறைந்து கொண்டே வந்தது.. 

எனக்கு முன்னால் இருப்பவர்கள் எல்லாம் மிகவும் ஆர்வமாக எண்ணிக்கையை தன் குரலால் பலத்த கரகோஷத்துடன் சொல்லி கொண்டிருந்தனர்.. அந்த கூட்டத்தில் இருப்பவர்களில் நான் மட்டும் தான் அந்த புத்தாண்டை வரவேற்காமல் வரவேற்க பிடிக்காமல் உட்கார்ந்து கொண்டு அவர்களை விரக்தியுடன் வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.. இதோ பைவ், ஃபோர், திரி, டு, ஒன் "விஸ் யூ ஹேப்பி நியூ இயர்" எல்லாரும் சந்தோஷமாக இந்த வருட புத்தம் புது வருடத்தை வரவேற்றனர்.
ஆங்காங்கே காதை கிழிக்கும் அளவிற்கு வெடி சத்தம் விடாமல் கேட்டு கொண்டே இருந்தது. அங்கு தெரிந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி தங்களின் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர். 

அந்த இடமே அடுத்த பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு வெறும் வெடி சத்தமும், கை குலுக்கு வாழ்த்து தெரிவிப்பதுமாக இருந்தது.. புத்தாண்டை வரவேற்ற மனிதர்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி அவர்களின் மகிழ்ச்சியிலிருந்து வெளியேறி அவரவர் ப்ளாட்டுக்கு செல்ல ஆரம்பித்தனர்.. எனக்கு எதிரே என்னை போன்ற ஒரு பெண்மணி எந்தவித மகிழ்ச்சியும் இல்லாமல் தனியாக அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருப்பதை பார்க்கும் போது ஒரு பக்கம் சந்தோஷமாகவும், மறுபக்கம் கொஞ்சம் ஆச்சரியமாகவும் தான் இருந்தது.

பொதுவாக என்னை போன்று தனியாக விரக்தியில் உட்காந்திருக்கும் மனிதர்களுக்கு தன்னை போன்று இருக்கும் மனிதர்களை பார்த்ததும் தன்னையும் அறியாமல் அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். அது மாதிரி தான் அந்த பெண்மணி பார்த்த எனக்குள்ளும் அந்த ஆர்வம் வந்து தொற்றிக் கொண்டது. 

அந்த அபார்மெண்டில் நடுதர அந்தஸ்லிருந்து அதிக செல்வ செழிப்புடன் இருப்பவர்கள் வரை இருக்ககூடியவர்கள்.. இதில் யாரும்  என்னை போன்று வாழ்கையை வெறுத்து வாழக்கூடிய மனிதர்களாக இருந்தாலும் இங்கே வந்து தனியாக உட்கார வேண்டிய அவசியம் இல்லையே? எதற்காக இங்கே உட்காந்திருக்க வேண்டும்? என பல கேள்விகள் எனக்குள் அடுத்தடுத்து எழுந்து கொண்டே இருந்தது. 

அவர்களை பார்த்து பேசுவமா? என்ற நினைப்பு கூட இருந்தது. ஆனால் இன்னும் கூட்டம் முழுவதும் கலைந்து சென்ற பாடில்லை. ஆங்காங்கே மனிதர்கள் நின்று சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் கடந்து போய் பேசினாலும் அந்த பெண் யாரென்று கூட தெரியாது. தெரியாத பெண்ணிடம் இந்த இரவில் தனியாக இருக்கும் போது பேசுவது நாகரிமாக இருக்காது என்றாலும் அந்த பெண் யார்.? ஏன் இப்படி தனியாக வெறிக்க வெறிக்க உட்காந்திருக்க வேண்டும்? அவள் வாழ்க்கையில் எதுவும் சோகமாக நடந்திருக்கிறதா? என அந்த பெண்ணை பற்றிய அடுக்கடுக்கான கேள்விகள் மனதிற்குள்ளே வந்து எழுந்துக் கொண்டே இருந்தன. 

ஆனால் இந்த பெண்ணால் தான் என் வாழ்க்கை மாற போகின்றது என அப்போதைக்கு தெரியாது.. அந்த பெண் குளிர்க்காக தலையை சேலை வைத்து மறைத்து அதே கையில் பிடித்திருந்தாள். மார்கழி மாத இரவில் குளிமையில் பலமான பனிக்காற்று வீச அந்த பெண்மணியின் முகத்தை மறைத்திருந்த சேலையை காற்றினால் கொஞ்சம் விலக அந்த பெண்ணை முகம் இருவினாடி மட்டுமே தெரிந்தது. இரு வினாடிகள் மட்டும் தெரிந்தாலும் அந்த பெண்மணியை கூர்ந்து கவனித்து பார்த்த போது ஏற்கெனவே பார்த்து பழகிய முகமாக தான் தெரிந்தது. ஆனால் முகம் சரியாக தெரியாததால் யாரென்று தெரியவில்லை. அவ்வப்போது அடித்த சிறுசிறு தென்றல் பனிக்காற்றில் அவளின் முந்தானை தலைப்பு விலகி விலகி மறைந்தது. ஒவ்வொரு முறையும் விலகி மறையும் போதெல்லாம் அவளின் முகம் முழுமையாக தெரிந்துவிடாதா? என்ற ஏக்கம் இந்த வயதிலும் இருக்கத்தான் செய்தது. 

புத்தாண்டு கூட்டத்திற்கு வந்திருந்த குடும்பங்களில் இருந்து இன்னும் சில குடும்பங்கள் கலைந்து வீட்டிற்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இப்போதாவது அந்த பெண்மணி யார் என்று பக்கத்தில் போய் பார்க்கலாமா என்ற எண்ணம் வந்தது. பக்கத்தில் போய் நின்று பார்த்தால் தவறாக எடுத்துக் கொண்டால் இங்கு நமக்கென்று கூட இருந்து சப்போர்ட் செய்ய கூட ஆட்கள் இல்லை. வாழ்க்கையை உயிர் இருக்கும் வரை கழிக்க வந்த இடத்தில் தேவையில்லாமல் அசிங்கம் ஏதாவது நடந்தால் என்ன செய்வதென்று ஒரு சிறு பயமும் இருந்தது. எதிரியுடன் சண்டை போடும் போது கூட இது மாதிரியான பயம் வந்ததில்லை. ஆனால் இது மாதிரி நகர்புறங்களில் வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்கும் போதே அந்த சிறு பயமும் என்னையும் அறியாமல் வந்து விடுகிறது. இப்போது என்ன செய்யலாம் என யோசித்து கொண்டே அந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருந்தேன். 

அந்த பெண்மணி நான் இருக்கும் திசையை நோக்கி ஏதாவது திரும்பினால்  முகத்தையாவது பார்க்கலாம். அந்த பெண்மணி எனக்கு தெரிந்த நபராக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நட்பாசையும் கூடவே இருந்தது. குறைந்தபட்சம் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க வேண்டும் என்றால் கூட அந்த பெண்மணி மனது வைத்தால் தான் முடியும் என்ற கட்டாயத்தில் அப்போதைக்கான சூழ்நிலையை இருந்தது. 

அந்த பெண் அங்கே உட்காந்திருப்பது தனிமையை போக்க இல்லை என்பது இந்த முறை உற்று பார்க்கும் போது தான் புரிந்தது. அவள் அந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்து யாரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது. அது அவளுடைய கணவனாக இல்லை மகன், மகளாக கூட இருக்கலாம். ஆனால் அப்படி யாராக இருந்தாலும் இந்த அபார்மெண்டை விட்டு வெளியே யாரும் செல்வது போல் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது ஏன் இவள் இந்த இரவில் பனிப்பொழிவில் முக்காட்டு போட்டுக் கொண்டு உட்காந்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் மனதுக்குள் எழுந்தது. 

அந்த பெண்மணி தனியாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஒரு பெண் அவளின் அருகில் வந்து, 

"என்ன கோமதிம்மா இங்க பனியில உட்காந்திருக்கிங்க?" கேட்க அப்போது தான் அந்த பெண்மணியின் பெயர் கோமதி என்பது தெரிந்தது. இந்த பெயரை கேட்டதும் என் உடம்புக்குள் ஒரு வினாடி சில்லென்று ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு அடங்கியது.. 

மீண்டும் அவளோடு வருவேன்...
[+] 3 users Like SamarSaran's post
Like Reply
#5
Nice intro bro
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
#6
Good starting ..Continue bro..
[+] 1 user Likes haricha's post
Like Reply
#7
அழகான தொடக்கம்..
தனிமையிலே இனிமை காண முடியுமா...
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
#8
Thanks for your comments friends.
Like Reply
#9
சென்ற பகுதியின் தொடர்ச்சி... 

கோமதி என்ற பெயரையும் கேட்டதும் என் மனதிற்குள் ஒருவிதமான சிலிர்ப்பு ஏற்பட்டு அடங்கியது. அதற்கு காரணம் அந்த பெயர் என் வாழ்க்கை பக்கங்களை ஒரு வினாடியில் பின்னோக்கி எடுத்து சென்றுவிட்டது. திருமணத்திற்கு முன்பான இளமை காலத்தில் எப்போதும் கோமதி மயமாக தான் இருந்தேன். திரிந்தேன்.. அந்த பெயர் மீது அவ்வளவு காதல்.. அந்த பெயரை மட்டும் காதலிக்கவில்லை.. அந்த பெயருக்கு சொந்தக்காரியையும் சேர்த்து காதலித்தேன்.. அந்த காதல் காலத்தால் கை கூடவில்லை என்றாலும் அவளின் நினைவுகள் எல்லாம் அந்த ஒற்றை பெயரை கேட்டதும் மனதிற்குள் வந்து சென்றது.. மீண்டும் அந்த கோமதி என்ற பெண்மணியை பார்த்தேன்.. அவள் இன்னும் அதே இடத்தில் தான் உட்காந்திருப்பதை பார்த்ததும் என்னையும் அறியாமல் மனதிற்குள் ஒரு நிம்மதி... அவளுடன் பேசிக் கொண்டிருந்த பெண்,

"உங்க பொண்ணுங்களுக்காக நீங்க இந்த பனியில வந்து உட்கார்ந்து இருக்கனுமா?" கேட்க, அப்போது அவளுடைய பெண்ணிற்க்காக இந்த பனியையும் பொருட்படுத்தாமல் உட்காந்திருப்பது தெரிய வந்தது. 

"என்ன பண்ண அவளுக ரெண்டு பேரும் நா உட்காந்திருக்கிறத பாத்த தான் வீட்டுக்கு வரனும் நெனப்பாச்சும் வரும்.. இல்லைனா ஊரை சுத்திட்டு விடிஞ்சதும் தான் வீட்டுக்கு வருங்க.."

"ம்ம்.. உங்க பொண்ணுங்க என்ன இன்னும் சின்ன பொண்ணுங்களா? கல்யாணம் பண்ணிக் குடுக்குற வயசு வந்திடுச்சு.. அவங்களாவே வந்துடுவாங்க.. நீங்க வீட்டுக்கு போய் தூங்குங்க.."

"என்னம்மா கெளரி நீயும் அவங்களுக்கே சப்போர்ட் பண்ணி பேசுற.. உன்கிட்ட சொன்ன புருஞ்சுப்ப நெனச்சேன்.." சொல்லும் போது தான் அந்த கோமதி பக்கத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் கௌரி என்பது தெரிய வந்தது. அவள் பார்க்க இளம் வயதாக தான் தெரிந்தாள். ஆனால் அவள் திருமணம் ஆனவள். கழுத்தில் தாலி செயின் இருந்தது.. 

"உங்கள் மனசுல இருக்குற கஷ்டம், பயம் புரியதும்மா.. அவங்கள நெனச்சு உங்க உடம்ப கெடுத்துக்காதிங்க. பனி வேற கொட்டுது பாருங்க.."

"இந்த பனி என்னம்மா பண்ணிட போகுது.. அவங்க ரெண்டு பேரும் இல்லாம நா எப்போ போய் தூங்கியிருக்கேன்.. அவங்க ரெண்டு பேரையும் ஒருத்தன் கையில புடிச்சு குடுக்குற வரைக்கும் மனசு இப்படி தான்ம்மா அடிச்சிட்டே இருக்கும்.."

"ம்ம்.. சரிம்மா கையில மொபைல் வச்சுருப்பாங்கள.. கால் பண்ணி வேணா கேட்டு பாருங்க.. இப்படி எவ்வளவு நேரம் உட்காந்திருப்பிங்க."

"என்னத்த கால் பண்ணி கேட்க? நா கால் பண்ணுவேன் தெரிஞ்சே மொபைல்ல ரெண்டு பேரும் சொல்லி வச்சு வீட்டுல வச்சுட்டு போய்ட்டாங்க.."

"ஓ அப்படியா. நீங்க கவலைப்படாதீங்க.. இப்ப தான் ஃபங்சன் முடிஞ்சிடுல வந்துடுவாங்க.. இங்க தான் யார்கூடயாவது பேசிட்டு இருப்பாளுங்க.." கௌரி பேசிட்டு இருக்க அந்த சமயம் அந்த இடத்தில் கெளரி தேடி அவள் புருசன் ராம் வந்து, 

"இங்க ஆண்டி கூட நின்னு என்ன பேசிட்டு இருக்க" கேட்டதும்

"ஒன்னுமில்லைங்க.. இன்னும் அந்த வாலுங்க வரலனு கவலைபட்டு இங்கேயே இந்த பனியில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.."

"யாரு நந்தித்தா, நந்தனவா?" 

"ம்ம்.. ஆமா.. வேற யார பத்தி கவலைபட போறாங்க.." சொன்னதும் 

கோமதி, "நீயும் என் பொண்ணு தான்ம்மா." கன்னத்தை தடவ

கௌரி உடனே பதற, "அய்யோ அம்மா நா, இப்ப உங்களுக்காக தான் சப்போர்ட் பண்ணி பேசினேன்."

"ஓ.. சரி.. சரிம்மா.. நீ போய் படு.. நா அவங்கள தேடி கூட்டிட்டு வீட்டுக்கு போறேன்.." கோமதி சொன்னதும் 

கௌரி "நீங்க இருங்கம்மா.. இவர வேணா பாத்திட்டு வர சொல்றேன்.."

"அதலாம் வேண்டாம்மா.. நா போய் பாத்துக்கிறேன்.." கோமதி எழுந்து அந்த இடத்திலிருந்து கிளம்பியதும் கௌரியும் அவள் வீட்டுக்காரனுடன் சென்றுவிட்டாள். 

கோமதி தலையில் சேலையை முக்காட்டு போட்டபடி அவள் மகள்கள் இருவரையும் தேடி செல்ல எனக்கும் அந்த பெண்மணியின் முகத்தை காணும் ஆவலில் உட்காந்திருக்க பிடிக்காமல் எழுந்து பின்னாடி சென்றேன்.. அவள் அங்கிருக்கும் நபர்களிடம் தன் மகளை பார்த்தீர்களா? என கேட்டுக் கொண்டே இருந்தாள். யாரும் பார்க்கவில்லை என சொன்னதும் சற்று மனம் கலங்கி என்ன செய்வதென்று தெரியாமல் அந்த இடத்தியிலே நின்றாள்.. அப்போது அங்கு வந்த இவள் வயதை ஒத்த பெண்மணி வந்து இவள் இருக்கும் நிலையை பார்த்துவிட்டு,

"என்ன கோமதி நீ இன்னும் தூங்கலையா? இங்க நின்னுட்டு இருக்க" கேட்க 

"இந்த பொண்ணுங்க ரெண்டு பேரையும் காணோம். அத தான் தேடிட்டு வந்தேன்.. நீங்க எதுவும் பாத்திங்களா?" கோமதி கேட்க

"ஆமா கொஞ்ச நேரத்துக்கு முன்ன அவங்க ப்ரண்ட்ஸ் கூட நின்னுட்டு இருந்தாளுங்க.."

"ஓ அப்படியா? நீங்க எங்க பாத்திங்க?"

"புதுசா ஸ்டேஜ் போட்டு இருக்காங்கள அங்க தான் பாத்தேன்.."

"சரி.. நா போய் என்னானு பாக்குறேன்."

"சரி கோமதி.. எனக்கு தூக்கம் கண்ண கட்டுது" சொல்லிவிட்டு நகர கோமதி அந்த ஸ்டேஜ் போட்ட இடத்தை நோக்கி நடந்து சென்றாள். நானும் அவளுக்கு தெரியாமல் பின்னாடி சென்றேன். அவள் மகளை தேடும் அவசரத்தில் கொஞ்சம் வேகமாகவே நடந்து சென்றாள். அவளின்  வேகத்திற்கு ஈடுக் கொடுத்து நானும் அவளின் பின்னே சென்றேன்.. 

கோமதியின் மகள்கள் இருவரும் அந்த பெண்மணி சொன்னது போல் இன்னும் அந்த ஸ்டேஜ் பக்கத்தில் நின்று அவளின் ப்ரண்ட்ஸ்களோடு பேசிக் கொண்டு தான் இருந்தனர்.. நான் கோமதியை விட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று கொண்டேன். அவர்கள் இருவரும்  பார்க்க இரட்டையர்கள் போல் முக ஜாடையில் ஒரே மாதிரியாக இருந்தனர். அந்த பெண்கள் இருவரும் கோமதியை பார்த்ததும் பக்கத்தில் வந்து, 

"மம்மி நீ இன்னும் தூங்கலையா?" கேட்க 

"நீங்க ரெண்டு வரமா எப்போ தூங்கியிருக்கேன். இல்ல தூக்கம் தான் வருமா?" தாய் பாசத்தில் பேச 

"அய்யோ மம்மி உன் வில்லேஜ் புராணத்தை ஸ்டாப் பண்ணு.. நாங்க ஒன்னும் சின்ன பொண்ணுங்க இல்ல.."

"நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் ரெண்டு பேரும் எனக்கு இன்னும் சின்ன பிள்ளைங்க தான்.."

"சரி.. சரி.. நீ போய் தூங்கு.. நாங்க வந்துருவோம்.." 

"அதலாம் முடியாது.. நீங்க பேசிட்டு வேணா வாங்க.. நா இங்க பெஞ்ச்ல உட்காந்திருக்கேன்.." சொல்லி அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். 

"ஏன் மம்மி இப்படி படுத்துற.?"

"நா ஒன்னும் சொல்லல.. பேசிட்டு வாங்க வீட்டுக்கு போலாம்.." கோமதி சொல்ல இருவரில் ஒருத்தி, 

"இது சரிபடாதுடி.. வீட்டுக்கு கிளம்பலாம்." சொல்ல 

"ம்ம். எனக்கும் அதான் கரெக்ட் படுது.. சரி நா போய் சொல்லிட்டு வரேன்.. நீ கூட்டிட்டு போ.." 

"ம்ம்.. ஓகே.." சொல்ல 

ஒருத்தி, "வா மம்மி வீட்டுக்கு போலாம்" சொல்ல 

"அவ எங்க போறா?" கோமதி கேட்க 

"அய்யோ மம்மி அவ பேச ஒன்னும் போகல.. சொல்லிட்டு வர தான் போயிருக்கா.. நீ வா.."

"உங்கள ரெண்டு பேரையும் நம்ப முடியாது.. அவளும் வரட்டும் சேந்து போலாம்" சொல்ல அவளின் மகள் ஒருத்தி தலையில் கை வைத்து கொண்டு கோமதியின் பக்கத்திலே அந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். 

"நீ ஏன் தலையில இப்படி கைய வச்சிட்டு உட்காந்திட்ட"

"பின்ன வீட்டுக்கு கூப்பிட்டா வரனும்.. அவ வந்தா தான் வருவேன் அடம்பிடிச்சா. வேற என்ன பண்ண சொல்ற." கொட்டாவி விட

உடனே கோமதி, "உனக்கு தூக்கம் வந்தா போய் தூங்கு.. நா அவ வந்ததும் அவளையும் கூட சேந்து வரேன்.."

"ஏன் மம்மி இப்படி பண்ற..?"

"இப்ப உன்னைய என்ன பண்ணிட்டேன்?"

"உன்ன விட்டு நா மட்டும் போய் தூங்குனா.. வீட்டுக்கு வந்ததும் கத்துவா தெரியும்ல."

"சரி.. சரி.. அவள கூப்பிடு நாம போலாம்" கோமதி சொல்ல 

"ஏய் நந்தி" கூப்பிட அவள் காதில் விழாததால் வாயில் இரு விரலை வைத்து அந்த நிப்சதமான இரவில் அழகாக விசில் அடித்து கூப்பிட அங்கிருந்த கும்பலில் இருந்த எல்லோரும் திரும்பி பார்க்க இங்கிருந்து கையை காட்ட அவள் ஏதோ அவர்களிடம் சொல்லிவிட்டு இவர்கள் இருவரையும் நோக்கி வந்தாள்... 

இங்கே கோமதி தன் மகளிடம், "ஏன்டி இப்படி பசங்க மாதிரி நடந்துக்கிற" 

"பசங்க மாதிரியா அப்படி என்ன பண்ணேன்?"

"இப்ப சீட்டி அடிச்சியே அதெல்லாம் பசங்க தான பண்ணுவாங்க.."

"அய்யோ மம்மி அது சீட்டி இல்ல.. விசில் அடிக்குறது.. இத அடிக்க தெரிஞ்ச யாரு வேணாலும் அடிக்கலாம்.. நீ வேணா வாயில்ல விரல்ல வச்சு ஒன் டைம் ட்ரை பண்ணு மம்மி.." 

"எம்மா தாயே ஆள விடு" சொல்ல கோமதியுடைய இன்னொரு மகளும் வந்து சேர்ந்தாள்.. 

வந்ததுமே "ஏன்ம்மா இப்படி தூங்கமா இம்ச பண்ற.."

"நீங்க இல்லாம எப்போ தூங்கியிருக்கேன்.. உங்க ரெண்டு பேருக்கும் என்ட்ட கேட்க வேற கேள்வியே இல்லையா?" கொஞ்சம் கோவமாக கேட்க

இருவருமே "சரி.. சரி கூல்.. கோவபட்டா பிபிலாம் வந்துடும்." சொல்லி இருவரும் கோமதியின் தோளை பற்றியபடி ஆளுக்கு ஒரு கன்னத்தில் முத்தமிட்டு அழைத்து சென்றனர்.. இதுவரை அந்த கோமதியின் என்ற பெண்ணின் முகத்தை பார்க்கவில்லை. என்னுடைய வாலிப வயது காதலியாக இருந்த கோமதிக்கும் திருமணம் ஆகி இது மாதிரி குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பாள் என்ற எண்ணம் மனதில் வந்தது.. அவளுடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்ற வருத்தம் அவளை பிரிந்து தனிமையில் இருந்த நேரத்தில் அந்த துக்கம் என்னை வாட்டியது.. 

இப்போது அப்படியில்லை என் வாழ்க்கை தான் தனிமையில் கழிய போகிறது.. கோமதியுடைய வாழ்க்கையாவது இனிமையாக சந்தோஷமாக கழியட்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது. என்னை போல் இல்லாமல் அவள் குடும்பத்துடன் கடைசி வரை இருக்க வேண்டும் என மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொண்டேன்.. 

நானிருக்கும் அபார்மெண்டில் குடியிருக்கும் அந்த முகம் தெரியாத கோமதி இந்நேரம் அவள் மகள்களுடன் வீட்டினுள் நுழைந்திருப்பாள்.. அவள் பின்னாலே தொடர்ந்து சென்றிருந்தால் இந்த கோமதியின் ப்ளாக்கையாவது கண்டுபிடித்து இருக்கலாம்.. என் காதலி கோமதியின் சிந்தனையால் இந்த கோமதியை கூட தவறவிட்டு விட்டேன் என நினைக்கும் போதே எனக்கே என் மீது சற்று வெறுப்பு வந்தது. ஒவ்வொரு முறையும் கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் கோமதியை தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்.. 

இந்த அபார்மெண்டில் இருக்கும் கோமதியை பற்றிய சிந்தனை ஏன் அடிக்கடி வருகிறது என தெரியவில்லை.   இத்தனைக்கும் அந்த பெண்மணி யார் என தெரியாது. இன்னும் முகத்தை பார்க்கவில்லை. பனியில் கொஞ்சம் தொண்டை கட்டி கரகரவென பேசியதால் குரலும் மாறியிருந்தது. இவள் என் காதலி கோமதியா? இல்லையா? என்பதை தாண்டி கோமதி என்ற பெயருக்காகவே கண்டிப்பாக அந்த பெண்மணியின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவல் மட்டும் காரணமில்லாமல் மனதிற்குள் என்னையும் அறியாமல் இருந்துக் கொண்டே இருக்கிறது.

நாளைக்கு முதல் வேலை இந்த அபார்மெண்டில் இருக்கும் கோமதியை எந்த ப்ளாக், ப்ளாட் நம்பர் தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து என்னுடைய ப்ளாட்டிற்க்கு வந்து சேர்ந்தேன்.. அந்த நினைப்புடனே படுக்கையில் படுத்தேன். ஆனால் தூக்கம் தான் வரவில்லை.. என் காதலியுடன் இருந்த பசுமையான நினைவுகள் மற்றும்  இப்போது பார்த்த இந்த முகம் தெரியாத கோமதியை பற்றிய சிந்தனை மாறி மாறி வந்துக் கொண்டேயிருந்தது. 

இளம் வயதில் காதலின் ஆழம் என்னவென்று புரியவில்லை. வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்த பிறகு இந்த வயதில் கோமதி என்ற அந்த ஒற்றை வார்த்தை மீண்டும் அவள் மீதான காதலை உயிர்பித்து மலர செய்துள்ளது. அவளை மீண்டும் பார்ப்பேனா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் அவளை காதலித்த காலகட்டத்தை இப்போது நினைத்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என நினைத்துக் கொண்டே என்னையும் அறியாமல் கண் அயர்ந்தேன். 

காலையில் மொபைல் அடிக்கும் சத்தம் கேட்டு தான் விழித்தேன்.. மணியை பார்க்கும் போது ஏழாகி இருந்தது.. மொபைல் தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தால் அதை எடுத்து பார்த்தேன். என் மகள் தீப்தி தான் பண்ணியிருந்தாள்.. கால் செய்ததும்

"விஸ் யூ ஹேப்பி நியூ இயர்ப்பா." சொல்லி  கூடவே அன்பு முத்தத்தை குடுத்தாள்.. 

"சரிம்மா நீ எப்படி இருக்க.. மாப்பிள்ளை நல்லா இருக்காரா?" 

"ரெண்டு பேரும் நல்லா இருக்கோம்.. யூ டோன்ட் வொரி.. நீ இங்க இருந்தா நல்லா இருந்திருக்கும்.. எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்ல.."

"நா ஆர்மி மேன்ம்மா.. நா எப்படி என் நாட்ட விட்டு வருவேன்.." 

"பொண்ணு பக்கத்துல இருக்கனும் மனசு வச்சாலே எல்லாமே முடியும்.." 

"உன்கிட்ட பேசி ஜெயிக்க என்னால முடியாது.."

"ஹா.. ஹா.. சரிப்பா அந்த அபார்மெண்ட் எப்படி இருக்கு.. எல்லாம் ஓகே தான.."

"இப்ப தான்ம்மா திங்கஸ் ஸ்ப்ட் பண்ணி வந்திருக்கேன்.. பாக்கலாம்.. நேத்து நைட் இங்க நியூ இயர் செலிப்ரேட் பண்ணாங்க.." 

"ஓ சூப்பர்.. நீங்களும் போய் அட்டன் பண்ணிங்களா?" 

"இல்லம்மா அத உன்ன மாதிரி யூத் தான் இருந்தாங்க. சோ ஓரமா உட்காந்து பாத்திட்டு இருந்தேன்.. சரி இப்ப அமெரிக்காவுல நைட் தான" 

"ஆமாப்பா.. இனி தான் டின்னர் ரெடி பண்ணனும்.."

"சரிம்மா நீ போய் ரெடி பண்ணும்மா.. நானும் போய் என் வேலைய பாக்குறேன்." சொன்னதும் 

"சரிப்பா.. பை. டேக் கேர்" சொல்லி காலை கட் செய்ததும் என் வாழ்க்கை கொஞ்சம் சலிப்பாக தோன்றியது. சட்டென்று அபார்மெண்டில் இருக்கும் அந்த கோமதியை பற்றி நினைப்பு வந்ததும் எனக்குள் கொஞ்சம் சுறுசுறுப்பு வந்தது..

மீண்டும் அவளுடன் வருவேன்.
[+] 3 users Like SamarSaran's post
Like Reply
#10
Nice update
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
#11
Tamil kamaveri la nenga than update pandrengala ????
[+] 1 user Likes Vinoth128's post
Like Reply
#12
Awesome. So far he been alone. Now this military man got his lover and bonus her two girls. He is going to start his real life now.
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#13
Super Bro
nice update
keep going...............
[+] 1 user Likes skyscraper's post
Like Reply
#14
(19-01-2022, 01:46 PM)Vinoth128 Wrote: Tamil kamaveri la nenga than update pandrengala ????

Ama..
Like Reply
#15
(19-01-2022, 03:06 PM)zulfique Wrote: Awesome. So far he been alone. Now this military man got his lover and bonus her two girls. He is going to start his real life now.

ஒரு கதையில வரக்கூடிய ஆண் அதில் வரக்கூடிய அனைத்து பெண்களுடன் உறவு வச்சுக்கனும் எதிர்பார்க்காதீங்க.. இந்த கதை அது மாதிரி இல்ல..
[+] 2 users Like SamarSaran's post
Like Reply
#16
Ok start bro
[+] 1 user Likes Noor81110's post
Like Reply
#17
Nice beginning. Waiting to see what is more.
[+] 1 user Likes Sankamithira's post
Like Reply
#18
Miga arumai
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
#19
Super
[+] 1 user Likes krish00's post
Like Reply
#20
Interesting and realistic update.

Guess the daughters are not loving their mom means they must be in some affair with boyz.
[+] 1 user Likes Joseph Rayman's post
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)