Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
Nice update
[+] 1 user Likes Rochester's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Unga new story Enna aachu Rahul bro athukku yen update podala yen potta story kke update poduringe
[+] 1 user Likes Ragavan 2.O's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

மழை விடமால் பெய்ய இருவரும் அந்த பழைய நிழற் குடையில் விக்கியும் சுவாதியும் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டு இருந்தார்கள் .சொல்லு அது எப்படி உன் குழந்தைக்கு மழை பிடிக்கும்னு சொல்ற என கேட்டான் .

அதுவா அங்க மழை பெய்யும் போதே என் வயித்துக்குள்ள இருந்து ஒரு அசைவு ஏதோ அதுக்கு பிடிச்சு இருக்க மாதிரி ஒரு பிலிங் மனசுக்குள்ள ,சரி இங்க வந்ததுக்குப்புரம் எந்த அசைவும் இல்ல

அப்புறம் நான் சும்மா மேல இருந்த விழுந்த அந்த மழை துளிய சும்மா தொட்டேன் உடனே மறுபடியும் அசைவு ,அதான் நான் ஓயாம மழைதுளிகள பிடிச்சு விளையடாவும் அது ரொம்ப சந்தோசமா அசையற மாதிரி இருந்துச்சு அப்பதான் என் குழந்தைக்கு மழை பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டேன் .

அதான் நான் மழைய பிடிச்சு பிடிச்சு விளையாண்டேன் .மத்தபடி எனக்கு சுத்தமா மழையே பிடிக்காது .அதுல நனைச்சு யாரு காய்ச்சல் வந்து கிடைப்பா எனக்கு அதுனாலே மழை பிடிக்காது என்றாள் .

ம்ம் நீதான் மழை பிடிக்காதுன்னு சொன்ன ஒரே பொண்ண இருப்ப மத்த பொண்ணுக எல்லாம் ரொம்ப மழை பிடிக்கும்னு சொல்லுவாங்க என்றான் .ம்ம் அதலாம் சும்மா அவளுக படத்துல வர ஹீரோயின் பாத்துட்டு அதே மாதிரி எனக்கு மழைன்னா பிடிக்கும் அதுல நனைய பிடிக்கும் இயற்கைய ரசிக்க பிடிக்கும்னு பிலா விடுவாளுக என்றாள் .

அதை கேட்டு விக்கி சிரித்து கொண்டே சொன்னான் .ya you are right என்றான் உனக்கு மழை பிடிக்குமா என கேட்டாள் .ம்ம் ரொம்ப பிடிக்கும் என்றான் .ஏன் பிடிக்கும் என்றாள் .

அத சொன்னா திட்ட கூடாது என்றான் .திட்ட மாட்டேன் சொல்லு என்றாள் .சரி அப்ப கொஞ்சம் கிட்ட வந்து உன் காத கொடு என்றான் . அவளும் அவன் கிட்ட போனாள் .அது மழையில நனஞ்சு வர பொண்ணுக செமையா இருக்கும் மழைக்கும் அதுக்கும் சில நேரத்துல அதுக பார்ட்ஸ் சில சுப்பரா இருக்கும் என்றான் மெல்ல அவள் காதில் .

சீ கருமம் பிடிச்சவனே என்றாள் . பாத்தியா நீ திட்டுற இதுக்குதான் நான் சொல்ல மாட்டேன் சொன்னது என்றான் . அவள் சிரித்து கொண்டே சொன்னாள் அப்ப இதுக்குதான் உனக்கு மழை பிடிக்குமா என்றாள் .ஏ எனக்குன்னு இல்ல நாட்ல முக்கால்வாசி ஆம்பிளைக மழைய இதுக்குதான் பிடிக்கும்னு சொல்றாங்கே .

என்ன நான் வெளிபடையா சொல்லிட்டேன் .அவங்கே நடிக்கிறாங்கே மத்த படி அவேங்களும் மழைல நனஞ்சு வர பொண்ணுகள நல்லா சைட் அடிப்பானுக ஆனா வெளிய காட்டிக்கிற மாட்டானுக என்றான் .

யே இப்ப நான் மழைல நனஞ்சு இருக்கேன் அப்ப என்னையும் நீ சைட் அடிச்சியா என கேட்டாள் .அவள் அவ்வாறு கேட்கும் போது அவள் முகத்தை நன்கு பார்த்தான் .பின்பு சொன்னான் சே உன்ன போயி யாரு சைட் அடிப்பா என்றான் .யே பொய் சொல்லாத நீ பாத்தத நான் பாத்தேன் இப்பதான் சொன்ன நீ நடிக்க மாட்டேன்னு என்றாள் .

பாத்தேன் எந்த ஆங்கில்யாச்சும் நீ அழகா இருக்கியான்னு நீ எந்த ஆங்கில்யும் அழகா இல்ல என்றான் .ஒ அப்படியா என்றாள் சிரித்து கொண்டே ,எ முந்தி ஆச்சும் நீ சுமாரா இருந்த இப்ப நீ கர்ப்பமா இருக்கிறதுக்கும் அதுக்கும் குண்டாகி ரொம்ப அசிங்கமா இருக்க என்றான் .அதை கேட்டு சுவாதி சிரித்தாள் என்னடி உன்னையே அசிங்கமா இருக்கேன்னு சொல்ற நீ கோபப்படாம சிரிக்கிற என்றான் .

எனக்கு இதான் பிடிச்சுருக்கு என்றாள் .ஒ செண்டிமெண்டா நான் அந்த பக்கம் வரல என்னையே ஆள விடுப்பா என்றான் .உன்னையே யாரும் கூப்பிடுல என்று சொல்லி சிரித்தாள் .

அவனும் சிரித்தான் சரி உன் லைப் பத்தி சொல்லு என்றான் .மீண்டும் அவள் அமைதியாக அப்போது மழையும் விட்டது .சரி அத பத்தி அப்புறம் பேசுவோம் என்றாள் .அதான் மழை விட்ருசுல சொல்லு என்றான் .டேய் திரும்ப பெரிய மழை பிடிக்கிறதுக்குள்ள வீடு போயி சேருவோம் வாடா என்றாள் .

சரி நீ சொல்றதும் கரெக்ட் தான் வா போவோம் என்றான் .இருவரும் சிறிது தூரம் நடந்தார்கள் .பின் வழியில் சுவாதி ஒரு பஜ்ஜி கடையில் பஜ்ஜி சுடுவதை பார்த்து சுவாதி விக்கியை நிப்பாட்டினாள் .விக்கி விக்கி பஜ்ஜி சாப்பிட்டு போவோமா என்றாள் .எ லூசு நீதானா சொன்ன மழை திரும்ப பெய்ரதுகுள்ள வீட்டுக்கு போனும்னு சொன்ன இப்ப பஜ்ஜி சாப்பிடனும்னு சொல்ற என்றான் .

எ மழைல பஜ்ஜி சாப்பிட்டா நல்லா இருக்கும்டா என்றாள் .நீதான் உனக்கு மழை பிடிக்காதுன்னு சொன்ன அப்புறம் என்ன என்றான் .எ மழைதான் பிடிக்காது ஆனா இந்த கிளைமாட்ல பஜ்ஜி சாப்பிட பிடிக்கும் என்றாள் என்னமோ பண்ணு ஆனா சீக்கிரம் சாப்பிட்டு முடி என்றான் .

பின் இருவரும் அந்த பஜ்ஜி கடைக்கு சென்றார்கள் .சுவாதி சூடாக போடப்பட்ட பஜ்ஜியை வாங்கி ஆசை ஆசையாய் சாப்பிட்டாள் ,விக்கிக்கு வேண்டுமா என்று கேட்டாள் .

அவன் அதை பார்த்து வேண்டாம் என்று சொல்லிவிட்டான் ,சுவாதி சாப்பிட்டு முடித்து கடைகாரரிடிம் நூரு ரூபாயை நிட்டினாள் .கடைக்கறார் சில்லறை இல்லையாம்மா என்றார் .சுவாதி என்கிட்டயும் இல்லையே என்றாள் ,அதான் பக்கத்துல உங்க வீட்டுக்காரர் இருக்காரே அவர் கிட்ட வாங்கி கொடும்மா என்றான் .

அதை கேட்டு விக்கி கோபபடுவான் என்று எதிர்பார்த்தாள் .ஆனால் அவன் சாதரணமாக என்கிட்ட இருக்கு எவளோ ஆச்சு என்றான் .ம்ம் இருபது ரூபா சார் என்றான் .

பின் அதை கொடுத்து விட்டு வந்தான் .இருவரும் மீண்டும் வீட்டிற்கு நடந்தனர் .சுவாதி மெல்ல சொன்னாள் ம்ம் அதான் இன்னைக்கு மழை பெய்யுது என்றாள் .எதுக்கு பெய்யுது என கேட்டான் .அந்த கடைக்காரன் சொன்னத கேட்டு நீ கோபப்படாம இருந்ததால என்றாள்

அப்படி என்ன அந்த கடைக்காரன் சொன்னன்னு கோபபடனும் என்றான் .அந்த கடைக்காரன் சொன்னத நீ கேக்கலையா என கேட்டாள் .கேட்டேன் ரெண்டு பேர் இப்படி ஒண்ணா போனா சொல்லத்தான் செய்வாங்க நீ வேற கர்ப்பமா இருக்கியா அதானல நம்மள அப்படி அவன் புருஷன் பொண்டாட்டியாத்தான் பாப்பான் . அதுக்கு அவன் குறை சொல்ல கூடாது .என்றான் .

பரவல நீ ஓரளவு mature ஆகிட்ட என்றாள் .பின் வீடு வந்தது .அவளால் வீட்டிற்ககுள் போவதற்கு முன் சுவாதி தீடிரென வாந்தி வருவது போல வாயை பொத்தினாள் .

உடனே விக்கி என்ன ஆச்சு என்று அவளை பார்த்து கேட்க உடனே சுவாதியால வாந்தியை அடக்க முடியாமல் பக்கத்தில் இருந்த விக்கி மீது கக்கி விட்டாள் .உடனே கடுப்பாகி அவளை திட்ட போகும் முன் மயக்கமும் போட்டாள் .அதை பார்த்த விக்கிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .

அவளை எழுப்பி எழுப்பி பார்த்தான் அவள் எந்திரிக்கவில்லை பின் வெளியே நின்ற காரில் இருந்து தன்னீ பாட்டிலை எடுத்து அவள் மீது தண்ணியை தெளித்தான் .

அவள் முழித்தாள் .முழித்த உடனே மீண்டும் வாந்தி எடுக்க இந்த முறை வாந்தி விக்கி முகத்தின் மேலே பட்டது .விக்கி மிகவும் கோபப்பட்டான் . போடி லூசு அங்குட்டு போயி வாந்தி எடுரி என்றான் .பின் அவள் மெல்ல எழுந்தாள் .அவளால் நடக்க முடியவில்லை .மயக்கத்தால் தலையை பிடித்து கொண்டு விழ போனவளை விக்கி தாங்கி பிடித்து உள்ளே கொண்டு சென்றான் .

அவன் அவ்வாறு கொண்டு போகும் போது ஐ அம் சாரி விக்கி உன் மேல வாந்தி எடுத்ததுக்கு என்று மயக்கத்தில் சாரி சாரி என்று முனகி கொண்டே இருந்தாள் .

அவள் அவ்வாறு மயக்கத்திலும் இப்படி சாரி சாரி என்று சொல்வது விக்கி ஒரு மாதிரி அவள் மேல் பரிதாப உணர்வு ஏற்பட்டது .பின் கதவை திறந்து அவளை கை தாங்களாக பாத் ரூமில் கொண்டு போயி வாந்தி எடுக்க விட்டான்

மீண்டும் விழ போனவளை பிடித்து அவள் நெற்றியை பிடித்து கொண்டு அவளை வாந்தி எடுக்க விட்டான் .அவள் அன்று ஒரு நாள் எடுத்து போலவே பயங்கரமாக வாந்தி எடுத்தாள் .

பின் ஒரு வழியாக மூச்சு வாங்கி கொண்டே வாந்தியை நிறுத்தி விட்டு சாரி அண்ட் தேங்க்ஸ் விக்கி இனி நீ உன் ரூமுக்கு போ நான் பாத்துகிருவேன் என்றாள் .ஒன்னும் பிரச்சினை இல்லலே என்றான் .இல்ல ஒரு பிரச் என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் அவள் பாத் ரூம் போயி வாந்தி எடுத்தாள் .

பின் வாந்தி எடுத்து விட்டு விக்கி என்னால வாந்திய நிப்பாட்ட முடியல எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா என கேட்டாள் .என்ன ஹெல்ப் வேணும் என கேட்டான் .

எனக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு கொடுக்கிறியா என்றாள் .எதுக்கு ஆட்டோ என்றான் .நான் ஆஸ்பத்திரி வரைக்கும் போயி டாக்டர பாத்து என்ன காரணும்னு கேட்டு மருந்து வாங்கிட்டு வரேன் அப்பதான் சரியாகும் என்றாள் .

அதுக்கு எதுக்கு ஆட்டோ என் கார் இருக்கே அதுலயே போகலாம் என்றான் .இல்ல விக்கி வேணாம் உனக்குத்தான் பிடிக்காதே என்றாள் .எ அதுக்குன்னு இந்த மாதிரி நிலைமைல பரவல நீ வா கார்ல போவோம் என்றான் .பரவல நீ ஆட்டோவே பிடி என்றாள் .இந்த மழைல ஆடோவுக்கு எங்க போறது நீ வா கார்ல போலாம் என்றான் .

அதுக்கு இல்ல விக்கி ஆஸ்பத்திரில ஏற்கனவே உன் புருஷன கூப்பிட்டு வாங்கன்னு டாக்டர் சொல்றாங்க இப்ப நீ என் கூட வந்தா அப்புறம் நீ என் புருஷன்னு ரெஜிஸ்டர்ல பதிவாகிடும் அது உனக்கு பிடிக்காது அதுனால வேணாம் என்றாள் ,

எ நான் உள்ள வந்தாதானே பதிவாகும் நான் வெளிய நிக்குறேன் நீ மட்டும் போயிட்டு வா என்றான் .இல்ல விக்கி எனக்கு ஆட்டோவே போதும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மயக்கமானாள் .மீண்டும் விழ போனவளை பிடித்து அவளை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி போனான் .

தொடரும்...

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
[+] 2 users Like Rajiss's post
Like Reply
Romance sequence varum nu ninachen

Nice update
[+] 1 user Likes Maaran04's post
Like Reply
Super going
[+] 1 user Likes Rocky Rakesh's post
Like Reply
Very nice update
[+] 1 user Likes zulfique's post
Like Reply
Fantastic
[+] 1 user Likes Sankamithira's post
Like Reply
So good update
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
Miga Arumai
[+] 1 user Likes Muthiah Sivaraman's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி சுவாதியை காரில் உக்காரவைத்து ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போனான் .பின் ஆஸ்பத்திரி வந்ததும் அவளை எழுப்பினான் . அவளும் எழுந்து நடந்து வந்தாள் .

பின் அவளை டாக்டரிடிம் கூப்பிட்டு சென்றான் .டாக்டர் அவளை பார்க்கும் முன் விக்கியை பார்த்து நீங்கதான் இவங்க ஹஸ்பண்டா என்று கேட்டார்கள் .

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ஏற்கனவே ஒரு ஆஸ்பத்திரியில் சண்டை போட்டது ஞாபகம் வர எதுக்கு வம்பு ஆமா என்று சொல்லி தொலைப்போம் என்று மனதில் நினைத்து கொண்டு ஆமாம் எனபது போல் வெறும் தலையை மட்டும் ஆட்டினான்.

டாக்டர் அவனை முறைத்து விட்டு சுவாதியை தனியாக கூப்பிட்டு சென்று செக் ஆப் செய்தனர் .பின் சுவாதியை பார்த்து கோபமாக மதியம் என்ன சாப்பிட்ட என கேட்டார் .வேற ஏதாவது சாப்பிட்டியா என கேட்டார் . இல்ல டாக்டர் என்று சொல்லிவிட்டு ம்ம் சாயங்காலம் பஜ்ஜி சாப்பிட்டேன் என்றாள் .

அதை கேட்டு டாக்டர் மிகவும் கோபம் அடைந்தார் .சுவாதியை செல்லமாக தலையில் கொட்டி குழந்தைய வயுத்தில வச்சுக்கிட்டு இப்படி செமிக்காத எண்ணெய் பண்டமா சாப்பிடறது என்றார் கோபத்தோடு .

இல்ல டாக்டர் ஆசையா இருந்துச்சு அதான் என்று இழுத்தாள் .ஆசையா இருந்தா எத வேணும்னாலும் சாப்பிட்ட்ருவியா .இப்ப நீ மட்டும் இல்ல உள்ள ஒரு உயிர் இருக்கு அத மறந்துடாத.நீ சாப்பிட்ட எண்ணெய் பண்டம் குழந்தைக்கு ஒத்துகிறாமா தான் உனக்கு வாந்தியும் மயக்கமும் மாறி மாறி வந்து இருக்கு என்றார் .

சாரி டாக்டர் என்றாள் சுவாதி .ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல இரு உன் புருஷன் கிட்ட சொல்றேன் என்றார் .ஐயோ வேணாம் டாக்டர் என்று சுவாதி சொல்லி கொண்டு இருக்க அதை கேட்கமால் டாக்டர் திரையை விளக்கி விட்டு விக்கியிடம் போனார்கள் .

என்ன மிஸ்டர் பொண்டாட்டிக்கு ரொம்ப முடியாட்டி மட்டும்தான் ஆஸ்பத்திரிக்கு வருவிங்களோ என்றார் .அதை கேட்டு விக்கி புரியமால் முழிக்க சுவாதியை பார்த்தான் .

அங்க என்ன பாக்குறிங்க வீட்டுக்கு போனதும் திட்டலாம்னு பாக்குறிங்களா என டாக்டர் கேட்டார் .விக்கி சரி பொறுமையவே போவோம் என்று நினைத்து கொண்டு அப்படி இல்ல டாக்டர் ஆபிஸ்ல கொஞ்சம் வொர்க் பிஸி அதான் வர முடியல என்றான் .அதை கேட்டு சுவாதி ஆச்சரியப்பட்டாள் .என்ன இவன் இன்னைக்கு சுத்தமா எதுக்குமே கோபபடாம இருக்கான் என்று நினைத்தாள் .

எவளோ பிஸியா இருந்தாலும் அட்லிஸ்ட் மாந்தளி ஒரு தடவயாச்சும் வோயிப் கூட வாங்க அது உங்க குழந்தையும்தான அப்ப நீங்களும் அக்கறை காட்டனும் தான என்றார் .

விக்கி திணறி கொண்டே ஆமா டாக்டர் சரி டாக்டர் என்றான் .பாருங்க நீங்க வொர்க் பிஸில இருக்கீங்க அதுனால உங்க பொண்டாட்டிய பாத்துக்க முடியாம அவங்க கண்டதையும் சாப்பிற்றுகாங்க அதுனால இப்படி உடம்புக்கு முடியாம இருக்காங்க என்றார் .

உடனே விக்கி சுவாதியை மாட்டிவிட்டு நம் தப்பி விடலாம் என்று நினைத்து நான் சொன்னேன் டாக்டர் இவதான் கேக்கல நானும் பாவம் ஆசபடுறாலேன்னு வாங்கி கொடுத்தேன் என்றான் .

அதை கேட்டு சுவாதி மனதிற்குள்ளே அடப்பாவி என்றாள் .ம்ம் புருஷன் சொல்லியும் நீ கேக்கல அப்ப உன்னதான் உதைக்கன்னும் என்று சுவாதியை திட்டினார் .அவள் சாரி டாக்டர் என்றாள் .

என்னையே கேட்டா உங்க ரெண்டு பேத்தையும் உதைக்கனும் ரொம்ப careless எஆ இருக்கீங்க சரி மருந்தும் சிரபும் கொடுக்கிறேன் ஒழுங்கா சாப்பிடு அப்புறம் இந்த மாதிரி கண்டதையும் சாப்பிடாத சரியா என்று சுவாதியை பார்த்து சொன்னார் டாக்டர் .அப்புறம் சார் வொர்க்லையே முழ்கி இருக்காம அப்ப அப்ப வோயிப்யையும் பாருங்க என்றார் .

சரிங்க டாக்டர் என்றான் .சரி ரெண்டு பேரும் அடுத்த மாசம் வாங்க என்றார் .thank you டாக்டர் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர் .

அப்போது டாக்டர் சுவாதி ஒரு நிமிஷம் உன் ஹஸ்பெண்ட் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றார் .உடனே சுவாதி விக்கி கிட்ட டேய் ப்ளிஸ்டா எதுவும் கோப பட்டு அன்னைக்கு மாதிரி கத்திராதடா மும்பைல எனக்கு இந்த ஒரு ஆஸ்பத்திரி தான் தெரியும் என்று கெஞ்சினாள் .ஓகே நான் பாத்துகிறேன் என்றான் .

என்ன சுவாதி பயப்படாத உன் ஹச்பண்ட் எதுவும் அடிக்க மாட்டோம் என்றார் சிரித்து கொண்டே .சுவாதியும் சிரித்து கொண்டே நான் வெளியே இருக்கேன் டாக்டர் நீங்க பேசிட்டு அனுப்புங்க என்று சொல்லிவிட்டு வெளியே போனாள் .

பிறகு விக்கி பயந்து கொண்டே நின்று கொண்டு இருந்தான் .அவனை பார்த்து டாக்டர் சொன்னார் வாங்க சார் வந்து உக்காருங்க என்றார் . அவனும் வந்து சேரில் உக்காந்தான் .

ம்ம் மிஸ்டர் உங்க பேரு என்றார் .என் பேரு விக்னேஷ் டாக்டர் என்றான் . மிஸ்டர் விக்னேஷ் எங்க வேலை பாக்குறிங்க என கேட்டார் .gnb கம்பனில டாக்டர் என்றான் .நல்லது பெரிய கம்பனிதான் என்று சொல்லிவிட்டு டாக்டர் சிறிது நேரம் யோசித்தார் .

பிறகு வீட்ல வேலைக்கு ஆள் இருக்கா எல்லா வேலையும் உங்க வோயிப் தான் பாக்குருங்களா என கேட்டார். வேலைக்காரி யாரும் இல்ல டாக்டர் எல்லா வேலையும் அவ தான் பாக்குறா என்றான் .

பிறகு டாக்டர் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார் .அதை பார்த்து விக்கி கேட்டான் என்ன டாக்டர் என்ன விஷயம் என்றான் .ம்ம் விக்னேஷ் உங்க வோயிப் கொஞ்சம் வீக்கா இருக்காங்க ஒன்னு அவங்க நிறைய வேலை செய்யணும் இல்ல மனசு அளவுல அவங்க கொஞ்சம் ஆப் செட்டா இருந்து இருக்கலாம் .

இது ரெண்டு நாலையும்தான் அவங்க உடம்பு வீக்கா இருக்கணும் .நான் நினைக்கிறேன் நீங்க வொர்க் பிஸில அவங்கள சரியா கவனிக்காம அவங்க கிட்ட சரியா பேசாம இருந்து இருப்பிங்க அதான் அவங்க மனசு அளவுல வருத்தப்பட்டு இருப்பாங்க அதான் அவங்க உடம்பு வீக் ஆகிருக்கும் என்றார் .

ஐயோ அப்படி எல்லாம் இல்ல டாக்டர் என்றான் .சும்மா சொல்லாதிங்க உங்க ரெண்டு பேர் முகத்த பாத்தாலே தெரியுது என்றார் .விக்கி ஒன்றும் சொல்லமால் இருந்தான் .

இங்க பாருங்க மிஸ்டர் விக்னேஷ் பொண்ணுகளுக்கு புருஷன் சப்போர்ட் எப்ப தேவைப்படதோ இல்லையோ இந்த மாதிரி பிரகன்ட் இருக்க நேரத்துல கண்டிப்பா தேவைப்படும் .

அதுனால அடிக்கடி உங்க வோயிப் கிட்ட ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுங்க அவங்க ஹெல்த் பத்தி விசாரிங்க அப்பதான் அவளும் மனசு அளவுல செப்பா பீல் பண்ணுவா என்றார் ,விக்கி சரி டாக்டர் என்றான் .சரி போயிட்டு வாங்க நிறைய பழங்கள் வாங்கி கொடுங்க அவங்களுக்கு .ம்ம் அப்புறம் ஆறுதலா பேசாட்டியும் பரவல அவங்கள இந்த 5 மாசத்துல எப்பயும் திட்டிராதிங்க அது ரொம்ப டென்ஜெர் என்றார் .

சரி டாக்டர் thank you என்றான் .ஓகே என்றார் .பின் வெளியே வந்தான் . வெளியே வந்த உடன் சுவாதி அவனை பார்த்து என்ன ஏதும் நீ இத்தன நாளா வரலைன்னு திட்டுனங்களா என கேட்டாள் .

விக்கி ஒன்றும் சொல்லமால் இல்லை எனபது போல் தலை மட்டும் ஆட்டினான் .டேய் சொல்றா அப்படி ஏதும் திட்டி இருந்தா என்னையே மன்னிச்சுகோடா என்றாள் .

அவள் அவ்வாறு சொல்லும் போது அவள் முகத்தை பார்க்க பரிதாபமாக இருந்தது ஏற்கனவே வாந்தி அதிகமாக எடுத்தால் களைப்பாக வேற இருந்தாள் .

சே நம்ம ரொம்ப இவள திட்டித்தான் இவ இப்படி உடம்பு வீக் ஆகி கிடக்கா பாவம் இவள இனி மேல எதுக்கு ஆகியும் திட்ட கூடாது என்று நினைத்தான் .அதனால் அவளிடிம் அவங்க ஒன்னும் சொல்லல என்றான் .டேய் சும்மா சொல்றா எதுவா இருந்தாலும் பரவல என்றாள் .ம்ம் என்னையே அடிக்கடி உன் கூட வர சொன்னங்க என்றான் .

அத பத்தி நீ எதுவும் கவலைப்படாத நான் டாக்டர கிட்ட பேசி சமாளிச்சுக்கிறேன் .வேற என்ன சொன்னங்க என்றாள் .வேற நீ அதிகமா உடம்புக்கு வேலை கொடுக்காம உடம்ப பாத்துகிவியாம் என்றான் .அத நான் பாத்துக்கிறேன் வேற எதுவும் சொல்லலே என்றாள் .

இல்ல வேற எதுவும் சொல்லல வா போவோம் என்றான் .சரி என்றாள் . பின் இருவரும் காரில் வீட்டுக்கு போனார்கள் .பின் ஒரு இடத்தில சிக்னல் போட்டார்கள் .

விக்கி அப்போது எதார்த்தமாக பின்னே உக்காந்து இருந்த சுவாதியை பார்த்தான் ,அவள் தூங்கி கொண்டு வந்தாள் .அப்போது அவள் முகம் மிகவும் களைப்பில் வாடி ஒரு மாதிரி இருந்தது .சன்னல் காற்றுக்கும் அதுக்கும் அவள் தலை முடிகள் ஒரு சில அவள் முகத்தில் அடித்து கொண்டு இருந்தது .

அவள் தூங்கி கொண்டு இருப்பதற்கும் அவள் தலை முடிகள் அவள் முகத்தில் அடிப்பதற்கும் அவள் ஒரு குழந்தை போலவும் cute ஆக இருந்தது .

விக்கி தன்னை மறந்து அவளை ரசித்தான் .பின் அவ்வோபோது அவள் முகத்தை மறைக்கும் அவள் முடிகளை ஒதுக்கி விட்டு அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்து கையை கொண்டு போனான் .

அதற்குள் சிக்னல் போட்டு பின்னே இருக்கும் கார்காரன் ஆரன் அடிக்க விக்கி முன்னே திரும்பினான் .பின் வீட்டிற்கு வண்டியை ஓட்டினான் . போகும் போது அடிக்கடி கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து கொண்டே வந்தான் .

பின் வீடு வந்ததும் அவளை எழுப்பினான் .அவளும் தூக்க கலக்கத்தில் அதுக்குள்ளே வீடு வந்துருச்சா என்றாள் .ஆமா என்றான் .சே டாக்டர் ஊசி போட்டதுனால தூக்கமா வந்து இருச்சு என்று சொல்லி விட்டு உள்ளே போனாள் .பின் இருவரும் வீட்டிற்கு உள்ளே போனார்கள் .

சரி விக்கி எனக்கு ரொம்ப டய்ர்ட்டா இருக்கு நான் போயி தூங்குரென் என்றாள் .ஓகே குட் நைட் என்றான் .ஹ by the bye தேங்க்ஸ் என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்ததுக்கா என்றான் .இல்ல இன்னைக்கு புல்லா கோப படாம இருந்ததுக்கு என்று சொல்லி சிரித்தாள் .

ஒ அப்படியா என்று அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு எ உனக்கும் தேங்க்ஸ் என்றான் .எதுக்கு என்றாள் . பிரண்ட்லியா மனசு விட்டு பேசுனதுக்கு என்றான் .

ஓகே என்று சொல்லி சிரித்தாள் . விக்கி மீண்டும் அவள் முகத்தை பார்த்தான் .அவள் முகம் மிகவும் களைப்பில் வாடி போயி பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும் என்னமோ அவனுக்கு அவள் என்னைக்கும் இல்லாத மாதிரி அழகாக தெரிந்தாள் .

அவள் அங்கு வெளியே சொன்னது போல எனக்கு இதுதான் பிடிச்சு இருக்கு என்று சுவாதி தன் கர்ப்ப மான தாய் அழகை பிடித்து இருக்கிறது என்று சொன்னது போல

விக்கிக்கும் அவள் அழககாக இருப்பதாக தோன்றியது .பின் அவளிடிம் குட் நைட் சொல்லி விட்டு அவன் ரூமிற்கு போனான் .அவனை அறியமால் வாவ் என்றான் .

பின் அந்த நாளை பற்றியும் ஸ்வாதியோடு பார்க்கில் மனம் விட்டு பேசியதை பற்றியும் நினைத்து பார்த்தான் .பின் சுவாதியின் குழந்தை முகம் அவன் கண்ணில் வந்து போனது .அவனுக்கு அந்த முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது .

படுத்து இருந்தவன் உடனே எழுந்து அவளை பார்க்க செல்ல எழுந்தான் . அப்போது யாரோ அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டது போல இருந்தது .

தொடரும்...

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 2 users Like Rajiss's post
Like Reply
Super update
[+] 1 user Likes veeravaibhav's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் .பின் அவள் முகத்தை பார்க்கலாம் என்று நினைத்த போது யாரோ அவன் கன்னத்தில் பளார் என்று அரை விட்டது போல் இருந்தது .

அது வேறு யாரும் அல்ல விக்கியின் மனசாட்சி தான் அது அவனை போல ஒரு உருவமாகவும் வெளியே வந்தது . வந்து அவனை இன்னொரு அரை விட்டு ஆமா என்ன தீடிருன்னு ரொம்ப நல்லவனா மாறிட்ட அவ கூப்பிட்ட உடனே வாக்கிங் போற

அவ கூட உன் பழைய லைப் பத்தி பேசுற அப்புறம் அந்த கடைகரான் உன்னையே அவ புருஷன் சொன்னதுக்கு கோப பட மாட்டிங்குற . அப்புறம் அவ வாந்தி எடுத்த உடனே அவள தாங்கி பிடிக்கிற அப்புறம் அவ மயக்கம் போட்ட தூக்குர அப்புறம் ஆஸ்பத்திரில உன்னையே புருஷன் சொன்னதுக்கு கோப பட மாட்டிங்குர டாக்டர் அவளுக்காக உன்னையே திட்டுனா கோப பட மாட்டிங்குற என்ன எதுக்குமே கோப பட மாட்டிங்குற சாப்பாட்டுல உப்பு சேக்கலையா என்று கத்தியது அவன் மனசாட்சி .

விக்கி எதுவம் சொல்லவில்லை சொல்றா ஏன் பேச மாட்டிங்குற என்றது மனம் .அது டாக்டர் அவ ரொம்ப வீக்கா இருக்காங்கன்னு சொன்னங்க அதான் கோபபப்படால என்றான் .அது மட்டுமா காரணம் என கேட்டது அவன் மனம் .ஆமா வேற என்ன என்றான் .வேற என்னவா கேப்படா ஒன்னும் தெரியாத மாதிரி நீதான் கார்ல இருக்கும் போது அவள ரசிச்சு பாத்தத எனக்கு தெரியுமே . என்ன அவ என்ன உன் கண்ணுக்கு அவளவு அழகாவா தெரிஞ்சா அப்படி சைட் அடிக்கிற என்றது மனம் .

அவ என்ன அவளவு அழகா என்று அவன் மனம் கேட்டவுடன் விக்கி மீண்டும் சுவாதியை நினைக்க ஆரம்பித்தான் .O God அவ என்ன என்னைக்கும் இல்லாத மாதிரி இன்னைக்கு அழகா இருக்கா பார்க்ல அவ சிரிச்சு பேசுனது அவ மழைய ரசிச்சது அப்புறம் பஜ்ஜி சாப்பிட்டது எல்லாத்தையும் விட அவ வாந்தி எடுத்துட்டு கொஞ்சம் டயர்டா வந்தா பாரு உண்மைலே அதான் அழகு இல்ல இல்ல கார்ல சின்ன குழந்தை மாதிரி தூங்கிட்டு வந்தா பாரு ஐயோ என்ன cute சான்சே இல்ல என்று தனக்கு தானே சொல்லி கொண்டு இருந்தான் .

மீண்டும் அவனை அவன் மனசாட்சி தட்டி எழுப்பியது .ஹலோ என்ன நான் இங்க ஒருத்தன் உன் கிட்ட பேசிகிட்டு இருக்கும் போதே அவள நினைச்சு உறுகுற என்ன ஆச்சு உனக்கு . என்னன்னு தெரியல எனக்கு திரும்ப அவ முகத்த பாக்கணும் போல இருக்கு அவளவுதான் என்றான் .டேய் என்ன மறுபடியும் லவ்வா ரெண்டு தடவ லவ்ல அடி வாங்கியும் உனக்கு புத்தி வரல பாரு உன்னையே எல்லாம் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் ஒரு தலையணையை எடுத்து அந்த மனசாட்சி உருவத்தின் மீது எறிந்து விட்டு அங்குட்டு போடா நான் போயி அவள பாக்க போறேன் .

என்று சொல்லிவிட்டு கதவை திறந்து விறுவிறுவென்று நடந்தான் .போயி அவள் ரூம் கதவை தட்ட போனான் . ஆனால் அவனால் என்னவோ முடியவில்லை அப்படியே மெல்ல திரும்பி போயி உக்காந்தான் . அப்படியே தலையில் கை வைத்து கொண்டு உக்காந்தான் .பின் தன் மனதிடிம் சொன்னான் நீ சொன்னது தான் சரி எனக்கு இனி லவ் வேணாம் . ஒரு வேல இன்னைக்கு அவ மேல வந்தது ஒரு attraction ஆ இருக்காலம் அதுனால எனக்கு அவ வேணாம் என்றான் .

அப்படி வா வழிக்கு என்றது மனம் . பின் கண்ணை மூடி தூங்க போனான் . ஆனால் அவன் கண்ணை மூடினால் சுவாதி தான் வந்தாள் .அவள் கண்களும் அவள் பாவமான முகமும் அவனுக்கு வந்து வந்து போனது . அவன் எல்லா பக்கமும் திரும்பி திரும்பி படுத்தான் .தலையணியை போட்டு அடித்தான் .பின் அவனை அவனே சுவரில் முட்டி கொண்டான் . அவள நினைக்காத அவள நினைக்காத என்று தன் கன்னத்தில் தானே அடித்து கொண்டான் .

ஆனால் அவனால் முடியவில்லை . கிட்டத்தட்ட மணி ஒன்னு ஆகி விட்டது அவனுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை . சரி போயி டிவி பாப்போம் என்று போனான் .வழக்கம் போல மூடு பாடல்கள் ஓடி கொண்டு இருந்தது .ம்ம் இவெங்கே ஒருத்தேங்கே இப்படி பலான பாட்டா போட்டு மூட கிளப்பி விட்டுரனுக அப்புறம் நம்ம கஷ்டப்பட வேண்டியாதா இருக்கு என்று சொல்லி கொண்டு வேற சேனலை மாற்றினான் . பின் ஒரு discoveri சேனல் வைத்து பார்த்து கொண்டு இருக்கும் போது அவன் மனசாட்சி மீண்டும் வந்தது .

என்னடா அவள மறக்க முடியலையா என்றது .ஆமா அவள நினச்சு தூக்கம் கூட வரல என்றான் .அவள மறக்க வழி சொல்லவா என்றது மனம் .சீக்கிரம் அத சொல்லி தொழ என்றான் .சிம்பிள் நீ எப்பவும் போல இரு என்றது மனம் .அப்படின்னா என கேட்டான் விக்கி .நீ எப்பவும் போல பல பேர கரெக்ட் பண்ணி போடு ,சுவாதிய அவளவா பாக்காத avoid பண்ணு அதையும் மீறி பாத்தா அவ கிட்ட கோபப்பட்டு நல்லா திட்டு முடிஞ்சா நீ திட்டுரதுல அவ ரோசப்பட்டு உன் வீட்ட விட்டே போகணும் அப்படி திட்டு என்றது மனம் .

சரி நீ சொல்றபடியே செய்யுறேன் அவள இனிமேல் அவலவா பாக்கவும் கூடாது பேசவும் கூடாது என்றான் .பின் ஒரு வழியாக ஒரு 3 மணியை போல தூங்கினான் .அதன் பின் காலையில் யாரோ அவனை தட்ட அவன் எந்திரக்க முடியமால் எந்திரித்தான் ,கண் முழித்து பார்த்த போது சுவாதி கையில் காபியை வைத்து கொண்டு அழகாக சிரித்து கொண்டு இருந்தாள் .ஒ என்ன இவள பாக்க கூடாதுன்னு நினச்ச கண் முன்னாடி வந்து நிக்குறா என்று நினைத்து கொண்டு இருக்கும் ஹலோ good morning சார் என்ன டிவி பாத்துட்டு அப்படியே தூங்கிட்ட என்றாள் .

விக்கி சும்மாதான் தூக்கம் வரல அதான் டிவி பாத்தேன் அப்படியே தூங்கிட்டென் என்றான் .பின் அவன் மனம் சொன்னது டேய் அவள பாக்காத இப்ப எதாச்சும் அவள கண்டபடி திட்டு என்றது .சுவாதி அவனுக்கு காப்பியை கொடுத்து விட்டு போயி கொண்டு இருந்தாள் .எதாச்சும் திட்டுடா என்று அவன் மனம் நச்சரிக்க சரி திட்டுறேன் என்று மனதிடம் கத்தி விட்டு ஏண்டி உனக்கு அறிவு இல்ல ஏன் இப்ப என்னையே எழுப்பி விட்ட அப்படின்னு திட்டவா என்றான் .ஓகே அப்படியே ஸ்டார்ட் பண்ணி பெரிய சண்டை ஆக்கு என்றது மனம் ,

போயி கொண்டு இருந்தவளை ஏ என்று சொன்னவுடன் அவள் திரும்பி பார்த்தாள் எதுக்கு என்று வாய் வரை வந்தது .ஆனால் அவள் முகத்தை பார்த்த உடனே அவனுக்கு திட்ட தோன வில்லை .எது என்று மட்டும் வாய் வரை வந்தது .வேற எதுவும் வரவில்லை என்ன விக்கி என்றாள் . ஒன்னும் இல்ல காப்பிக்கு தேங்க்ஸ் என்றான் .அது இருக்கட்டும் மணி 8 ஆச்சு ஆபிஸ்க்கு கிளம்பு என்றாள் .

ஒ ஷிட் என்று சொல்லி விட்டு எழுந்து கிளம்பினான் .ஓகே விக்கி நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு போனாள் ,இவனும் அவளுக்கு ஓகே பாய் என்றான் .பின் வேக வேகமாக குளித்து முடித்து ஆபிஸ்க்கு கிளம்பினான் . பின் வேகமாக காரை எடுத்து கொண்டு போனான் .காரில் போயி கொண்டு இருக்கும் போது மெயின் ரோட்டில் சுவாதி நின்று கொண்டு கை காண்பித்து ஆட்டோவை நிறுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தாள் . ஆனால் அது ரஷ் அவர் என்பதால் யாரும் அவளவாக நிப்பாட்ட வில்லை . சுவாதியும் பதற்றத்தில் நின்று கொண்டு இருந்தாள் .

சரி அவள இன்னைக்கு ஒரு நாள் அவள கார்ல ஏத்திட்டு போவோம் என்று நினைத்தான் .என்னது அவள கூப்பிட்டு போ போறயா டேய் அவள avoid பண்ணுனு சொன்னா அவகிட்டயே போற என்றது மனம் . அதுக்கு இல்ல பாவம் அவ உடம்பு வேற வீக்கா இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்காங்க அதான் அவள ஏத்தலாம்னு முடிவு பண்ணேன் என்றான் .என்னது பாவமா அதலாம் நீ எப்பயுமே பாக்க மாட்டியே இப்ப என்ன ஆச்சு என்று அவன் மனம் சொல்ல சொல்ல கேட்கமால் அவள் கிட்ட போயி காரை நிப்பாட்டி கார் சன்னலை திறந்தான் .

ஹ ஏறிக்கோ இன்னைக்கு ஒரு நாள் நான் உன்னையே உன் ஆபிஸ்ல விடுறேன் என்றான் .பரவல விக்கி நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன் என்றாள் .இந்நேரம் ஆட்டோ அவளவா கிடைக்காது அதுனால வண்டில ஏறு என்றான் .இருக்கட்டும் நான் பாத்துகிறேன் நீ போ என்றாள் ,ஹ வா ரெண்டு பேருக்குமே டைம் ஆகிடுச்சு அதுனால சீக்கிரம் வண்டில ஏறு என்றான் .என்னையே கொண்டு போயி விட்ரதால உனக்கு லேட் ஆகாதா என கேட்டாள் .

போற வழில தான இருக்கு அதுனால ஏறு என்றான் .அவளும் யோசித்து விட்டு சரி என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறினாள் ,பின் அவள் ஏறுவதற்குள் காரில் இருந்த கண்ணாடியை அவளை பார்ப்பது போல திருப்பி வைத்தான் .பின் காரில் போகும் போது அவளை அவ்வோபோது அந்த கண்ணாடி வழியே பார்த்து கொண்டே வந்தான் . பின் சுவாதியை அவள் ஆபிஸ் அருகே இறக்கி விட்டான் .ஓகே விக்கி ரொம்ப தேங்க்ஸ் நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள் .அவனும் சரி என்று சொல்லிவிட்டு போகமால் அவள் போகும் வரை நின்று அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .

போதும் அவள சைட் அடிச்சது ஆபிஸ் போ லேட் ஆகிடுச்சு என்றது மனம் . அவனும் வேகமாக வண்டியை ஒட்டி ஆபிஸ் வந்து சேர்ந்தான் .பின் ஆபிஸ் போயி மிகவும் களைப்புடன் வேலை பார்த்தான் .

ஏன் என்றால் முதல் நாள் சரியாக தூங்கததால் வந்த களைப்பு .அதன் பின் வேலை எல்லாம் அசதியோடு முடித்து விட்டு மதியம் லஞ்ச்க்கு போக பிடிக்கமால் அவன் ரூமில் அப்படியே டேபிளில் சாய்ந்து உறங்கினான் . அதன் பின் அவனை மணி வந்து எழுப்பினான் .என்னடா சாப்பிட வரலையா என்றான் .இல்லடா நைட் சரியா தூங்கல அதுனால ரொம்ப டயர்டா இருக்கு .இந்த கொஞ்ச நேரம் தூங்குனாதான் நல்ல இருக்கும் அதுனால நான் சாப்பிட வரல என்றான் .

சரிடா தூங்கு நான் லஞ்ச் டைம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்து எழுப்புறேன் என்று சொல்லிவிட்டு போனான் .சரி நைட் தான் ஸ்வாதிய நினச்சு தூங்கல இந்த அரை மணி நேரம் ஆச்சும் அவள நினைக்காம நிம்மதியா தூங்கனும் என்று நினைத்து கொண்டு கண் மூடினான் .ஒரு பத்து நிமிடம் அசதியில் தூங்கி இருப்பான் .உடனே மீண்டும் அவன் கனவில் சுவாதி சிரித்த முகத்தோடு வர இவன் கொஞ்ச நேரம் கனவிலே அவளை ரசித்து கொண்டு இருந்தான் .பின் அவசரமாக எழுந்து விட்டான் .இவளால பத்து நிமிஷம் கூட நிம்மதியா தூங்க முடியலையே ஏன் நாம அவள தூங்கும் போது கூட நினைக்கிறோம் என்று நினைத்தான்..

தொடரும்...

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்...
[+] 3 users Like Rajiss's post
Like Reply
Super story
[+] 1 user Likes Rocky Rakesh's post
Like Reply
Good going
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி சுவாதியை நினைத்து கொண்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து கொண்டு இருந்தான் ஐயோ அவள நினைக்காம இருக்க முடியலையே என்று சொல்லி கொண்டு இருந்தான் .

எப்படி தீடிருன்னு எனக்கு அழகா தெரியுறா இத்தனைக்கும் முந்தி ஆச்சும் அவ அழகா இருந்தா இப்ப கர்ப்பமானதால குண்டா ஆயிட்டான்னு நம்மாலே சொன்னோம் அப்புறம் எப்படி அழகா தெரியுறா என்று நினைத்து கொண்டு இருக்கும் போது மணி உள்ளே வந்தான் .

வந்து பார்க்கும் போது விக்கி அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருப்பதை பார்த்து என்னடா தூங்கலையா என கேட்டான் .இல்லடா என்றான் .ஏன் எதுவும் முக்கியமான விசயமா இப்படி யோசிச்சு கிட்டு இருக்க என்றான் .எ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல தூக்கம் வரல அதான் என்றான் .பின் எதையோ யோசித்து விட்டு மணி உன் கிட்ட ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்துக்க மாட்டியே என்றான் . கேளுடா எதுவா இருந்தாலும் என்றான் மணி .

டேய் உனக்கு இப்ப உன் பொண்டாட்டி பாக்க அழகா இருக்காளா என்றான் . என்னடா கேக்குற எனக்கு என் பொண்டாட்டி எப்பவுமே அழகுதான்டா ஏன் இப்ப இப்படி ஒரு கேள்வி கேக்குற என்றான் .ஒ இதுக்கு எப்படி பதில் சொல்ல சுவாதியும் வள்ளி மாதிரி கர்ப்பமா இருக்கா எனக்கு பாக்க அவ அழகா இல்ல ரொம்ப அழகா இருக்க மாதிரி இருக்கு அதான் கேட்டேன் அப்படின்னு இந்த ஒட்ட வாய் கிட்ட சொல்ல முடியுமா என்று மனதிற்குள்ளே நினைத்தான் .

பின் வெளியே அது ஒன்னும் இல்லடா நேத்து என் பிரண்டு ஒருத்தனுக்கும் எனக்கும் ஒரு சின்ன argument என்றான் விக்கி .என்ன argument என கேட்டான் மணி .ஒன்னும் இல்ல அவன் பொண்டாட்டியும் உன் பொண்டாட்டி மாதிரி கர்ப்பமா இருக்கா அவன் சொன்னான் அவன் பொண்டாட்டி எப்பயும் இல்லாம இப்ப ரொம்ப அழகா இருக்காளாம் அவள பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்காம் .இன்னும் சொல்ல போனா எல்லா பொண்ணுகளும் கர்ப்பமானதுக்கு அப்புறம் தான் அழகா இருப்பாங்களாம் அப்படின்னு சொன்னான் .

நான் சொன்னேன் அப்படி எல்லாம் கிடையாது பொண்ணுக கர்ப்பமா இருக்கும் போது தான் அசிங்கமா இருப்பாளுக குண்டா ஆகி பாக்கவே சகிக்க மாட்டலுக அப்படின்னு சொன்னேன் .ரெண்டு பேருக்கும் பயங்கரமான வாக்குவாதம் வந்துச்சு .அதான் நீ சொல்லு உன் பொண்டாட்டி கர்ப்பமாதான இருக்கா அவ முந்தி அழகா இருந்தாளா இப்ப அழகா இருக்கலா என கேட்டான் விக்கி .மணி சிறிது நேரம் யோசித்து விட்டு உன் பிரண்டு சொல்றதுதான் சரி உண்மைலே என் பொண்டாட்டி முன்ன விட இப்பதான் அழகா இருக்க மாதிரி இருக்கு

அது கர்ப்பமா இருக்கதால வந்த தாய்மை அழகுன்னு நினைக்கிறேன் , ppஅதுவும் என் குழந்தையா அவ வயித்துல சுமக்கிறதால எனக்கு பெருமையா இருக்கு அவ குண்டா இருக்க மாதிரியே தெரியல அவ வயிறு மட்டும் பெருசா இருக்கதால அத மட்டும் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு ,எல்லாத்தையும் விட நீ சொன்ன நம்ப மாட்ட அவ எப்ப தெரியுமா ரொம்ப அழகா இருப்பா என கேட்டான் மணி .

எப்ப என்றான் விக்கி .சில நேரம் கர்ப்ப வாந்தி பயங்கரமா எடுத்துட்டு மேல் மூச்சு கீல் மூச்சு வாங்கிட்டு வந்து அவ வாய் எல்லாம் துடைச்சுட்டு டயர்டா வந்து என் பக்கம் சாய்வ பாரு அப்ப அவ முகம் பாக்க குழந்தை மாதிரி இருக்கும் அப்ப அவளுக்கு ஆறுதலா தடவி கொடுத்து அவ நேத்தில ஒரு சின்னதா முத்தம் கொடுத்துட்டு அவ வயுத்துல வளர என் குழந்தைய தடவி கொடுப்பேன் பாரு பாரு அப்ப இருக்க சுகம்,நிம்மதி ,சந்தோசம் நீ பெருசா நினைக்கிற செக்ஸ்ல கூட கிடைக்காதுடா என்றான் மணி .

அங்கிட்டு போடா செக்ஸ்ல மட்டும்தான் சுகம் கிடைக்கும் என்றான் விக்கி .இன்னும் எத்தன காலத்துக்குத்தான் இதேயே சொல்லிக்கிட்டு இருக்க போரையோ என்றான் மணி .டேய் அதாண்டா உண்மை என்றான் விக்கி .சரி சரி லஞ்ச் டைம் முடிஞ்சுடுச்சு வா வேலைய பாப்போம் என்றான் மணி .

சரிடா என்றான் விக்கி .அது யாருடா மும்பைல எங்கள தவிர வேற பிரண்டு என கேட்டான் ,ஆஹா பயபுள்ள கரெக்ட்டா பாயிண்ட் பிடிக்குதே என்று நினைத்தான் விக்கி .அது மும்பை இல்ல சென்னை பிரண்டு போன் மூலம் பேசி சண்ட போட்டுகிட்டோம் .

அது சரி அடுத்த வாரம் பங்க்சென் வந்துரு என்றான் மணி .என்ன பங்க்சென் என்றான் விக்கி .என்ன பண்க்சனா வள்ளி வலைக்கப்புடா என்றான் மணி .ஓகே இத பத்தி டீ டைம்ல பேசுவோம் இப்ப நீ உன் கேபினுக்கு போ என்றான் விக்கி .

விக்கி சுவாதியை நினைத்து கொண்டு இருக்கும் அதே வேலையில் சுவாதி அவள் ஆபிசில் உக்காந்து வேறு ஒரு யோசனையில் இருந்தாள் .அதாவது இன்னும் அவள் கர்ப்பமாக இருப்பது ஆபிசில் யாருக்கும் தெரியாது .இப்போது அவளுக்கு 5வது மாதம் ஆரம்பிக்க போவாதால் ஓரளவு வயிறு நன்கு பெரிதாகி விட்டது அதையும் மீறி அவள் யாருக்கும் தெரியமால் தன் வயிற்ரை தன் சுடிதார் துப்பட்டாவை கொண்டும் தன் Handbag கொண்டும் ஓரளவு மறைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டாள் .

அதையும் மீறி யாரவது என்ன வர வர ரொம்ப குண்டாகி கிட்டே போற என்று கேட்டாள் ஒன்னும் இல்லையே சாப்பாடு கொஞ்சம் நிறைய சாப்பிடறேன் அவளவுதான் என்று சொல்லி சமாளிப்பாள் .சரி இதற்கு மேலும் சமாளிக்க முடியாது .அது மட்டும் இல்லாம டாக்டர் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாதுன்னு வேற சொல்லிருக்காங்க அதுனால வேலைய விட்டு நின்னுடுவோம் என்று நினைத்து கொண்டு இருந்த போது சித்தார்த் அவளிடிம் வந்தான் .

சித்தார்த் சுவாதியோடு ஏப் எம் ஸ்டேசெனில் வேலை பார்ப்பவன் . அவனும் தமிழன் .சுவாதி வேலைக்கு சேர்ந்ததில் இருந்து அவளை ஒரு தலையாக காதலிப்பவன் .எப்போதும் சுவாதியிடம் வந்து வழிந்து வழிந்து பேசுவான் .அனால் சுவாதி டேவிட்டை காதலிப்பது தெரிந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தவன் .

எப்போது சுவாதியும் டேவிட்டும் break up ஆனது தெரிந்ததோ அப்போது இருந்து மீண்டும் சுவாதிக்கு ட்ரை பண்ணிக்கொண்டு இருந்தான் . அதுவும் டேவிட்டுக்கு கல்யாணம் ஆனது தெரிந்ததும் அவன் ரொம்பவே நம்பிக்கையோடு சுவாதிக்கு ட்ரை பண்ணான் .

எப்போது பார்த்தாலும் அவளிடிம் வந்து கடலை போட்டு கொண்டே இருந்தான் .ஆனால் சுவாதிக்கு அவனை துளியும் பிடிக்காது .அவனை சமாளிப்பது எப்போதும் அவளுக்கு பெரும்படாகதான் இருந்தது .அன்றும் அப்படி அவன் சிரித்து கொண்டே வருவதை பார்த்து ஐயோ இந்த இம்சைய எப்படிதான் சமாளிக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தாள் .

சித்தார்த் அவள் கிட்ட வந்து hey swathi how do you do ? என்றான் ஜொள்ளு விட்டபடியே .ஸ்வாதி மனதிற்குள்ளே நல்லவே இல்லடா என்று நினைத்து கொண்டாள் பின் வெளியே அவனிடிம் சிரித்து கொண்டே fine என்றாள் . அவனும் பதிலுக்கு பலமாக சிரித்து விட்டு அப்புறம் சுவாதி இந்த ஃப்ரைடே என்ன பிளான் என்றான் .

இம்ச எங்கயோ கூப்பிட்டு போக பிளான் பண்ணுதே இப்ப என்ன பண்ண என்று யோசித்து விட்டு சரி அவன் வழிலேயே போயி அவன விட்டு பிடிப்போம் என்று நினைத்து கொண்டு nothing ஒரு பிளானும் இல்ல என்றாள் அவனிடிம் .

அவன் சிறிது அமைதியாக இருந்து விட்டு அப்ப சுவாதி நம்ம ஆபிஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் ஃப்ரைடே நியூ ரிலிஸ் படம் எதுக்கு ஆச்சும் போயிட்டு அப்படியே எங்கயாச்சும் டின்னர் சாப்பிடுவோமா என்றான் .அட பாவி கரெக்ட்டா கொக்கி போட்ரியாடா என்று நினைத்து கொண்டு சுவாதி ஒன்னும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் .என்ன சுவாதி ஒன்னும் சொல்லாம இருக்க நான் ஏதும் தப்பா கேட்டுடனா இல்ல நீ இன்னும் டேவிட்டையே நினச்சு கிட்டு இருக்கியா என்றான் .

சரி வேற வழி இல்ல இவன் மூலமா ஆபிஸ்க்கு தெரிய வச்சுட்டு அப்படியே வேலையவும் ரிசைன் பண்ணிடுவோம் .நம்ம என்ன இனி இந்தியா வரவா போறோம் இதுக முன்னாடி அசிங்கபடுரோம்னு நினைச்சுகிட்டு என்று நினைத்து கொண்டு இருந்தாள் .சுவாதி என்ன ஆச்சு என்று அவளை எழுப்பினான் சித்தார்த் .சித்தார்த் நான் ஃப்ரைடே ஆபிசுக்கு வர மாட்டேன் என்றாள் .ஏன் என்ன ஆச்சு வேற எதுவும் ப்ரோக்ராம் இருக்கா என்றான் .

ஐ மீன் உண்மைய சொல்ல போனா நான் இனிமேல் எப்பவுமே ஆபிஸ்க்கு வர மாட்டேன் ரிசைன் பண்ண போறேன் என்றாள் .அதை கேட்டு அதிர்ச்சி ஆன சித்தார்த் வாட் எதுவும் ப்ரபலாமா நான் எதுவும் தப்பா கேட்டுடேனா அப்படி ஏதும் இருந்தா நான் வேணா பேசல ஆனா நீ வேலைய விட்டு போகாத ப்ளிஸ் என்று கெஞ்சினான் .

நோ நோ உன் மேல ஏதும் தப்பு இல்ல நாந்தான் ப்ரக்னட்டா இருக்கேன் என்றாள் .வாட் என்று சொல்லி கொண்டு சித்தார்த் மேலும் அதிர்ச்சி ஆகி வாயை பிளந்தான் .யெஸ் சித்தார்த் ஐ அம் ப்ர்கன்ட் என்றாள் .பட் ஹாவ் உனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்றான் . சுவாதி அவனை கோபமாக முறைத்து விட்டு இவனிடிம் என்ன சொல்வது லவ்வர் மூலமான்னு சொன்னா அது யாருன்னு கேப்பான் ம்ம் என்ன சொல்லாலம் என்று யோசித்தாள் .

ஏன் கல்யாணம் முடிக்காட்டி ப்ரக்னட் ஆக முடியாதா என்றாள் ,ஆகலாம் இருந்தாலும் என்று கொஞ்சம் இழுத்து கொண்டே சுவாதி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத நீ ஏதும் டேவிட் கூட இன்னும் affair ல இருக்கியா என கேட்டான் .நோ யு இடியட் அவன எல்லாம் மறந்து பல நாள் ஆகுது என்றாள் .

அப்ப யாரு என்றான் .ஐயோ இவன் என்ன விட மாட்டின்கிறான் இதுக்கு காரணம் விக்கினு உண்மைய சொல்லலாம் ஆனா அவன் யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லிருக்கனே இப்ப என்ன சொல்றது என்று யோசித்து விட்டு சொன்னாள் .இதுக்கு யாரு காரணம்னு எனக்கே தெரியாது என்றாள் .

என்னது என்று மறுபடியும் அதிர்ச்சி ஆனான் .டேய் சும்மா சும்மா டென்சன் ஆகாத நான் ஒரு ஸ்பர்ம் டோனட்ட்ர் மூலமா ஆஸ்பத்திரி மூலமா கன்சீவ் ஆகிருக்கேன் போதுமா என்றாள் .எனக்கு இன்னும் ஒன்னும் புரியல ஏன் நீ இப்படி எல்லாம் பண்ற நான் உன்னையே விரும்புறேன் என்றான் .

ஐயோ என்ன இந்த இம்ச பிடிச்சவன் என்ன சொன்னாலும் விடவே மாட்டிங்குறான் .என்னதான் சொல்லி இவன கட் பண்ணி விடறது என்று யோசித்தாள் .

பின் எப்போதோ ஒரு முறை விக்கியிடிம் சுவாதி சண்டை போடும் போது விக்கி அவளை கிண்டலடித்து கொண்டே சொன்னது ஞாபகத்துக்கு வர அதை சொல்லுவோம் என்று சொன்னாள் .

சித்தார்த் ஐ அம் லெஸ்பியன் என்றாள் .

தொடரும்...

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்..
[+] 6 users Like Rajiss's post
Like Reply
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

எஸ் சித்தார்த்

ஐ அம் லெஸ்பியன் என்று சுவாதி சொல்லவும் அதை கேட்டு சித்தார்த் வாயடைத்து நின்றான் .பின் ஹ சும்மா ஏதோ சொல்லனும்னு பொய் சொல்லாத சுவாதி என்றான் .

டேய் இல்லடா நிஜமா நான் லெஸ்பியன் ஆனதுனால தான் எனக்கும் டேவிட்க்கும் பிரேக் ஆப்பே ஆச்சு என்றாள் .அப்ப அவன லவ் பண்ணது என கேட்டான் .அவன எங்க நான் லவ் பண்ணேன் உன்னையே மாதிரித்தான் அவனும் வந்து என்னையே லவ் பண்ண சொல்லி ஓவரா டார்ச்சர் பண்ணான் .சாக போறேன்னு ப்ளாக் மெயில் எல்லாம் பண்ணான் .

நான் எதுக்கு வம்புன்னு நினைச்சுகிட்டு சும்மா சரின்னு சொன்னேன் .ஆனா அவன் மேல எனக்கு எப்பவும் லவ் பீலிங்கே வந்தது இல்ல அப்புறம் ஒரு நாள் ஒரு பார்ட்டில ஒரு பொண்ணு கூட தொட்டு தொட்டு டான்ஸ் ஆடுனாப்பதான் எனக்கு லெஸ்பியன் பிலிங் இருக்கறது தெரிஞ்சுச்சு .

அப்புறம் இன்னொரு பார்ட்டில என்னையே மாதிரியே லெஸ்பியன் பீலிங் இருக்க பொண்ணு கூட நான் செக்ஸ் வச்சு கிட்டத பாத்துட்டுதான் டேவிட் என்னையே பிரேக் ஆப் பண்ணான் என்று சுவாதி சொல்ல சித்தார்த் ஒன்றும் பேசமால் பேய் அறைந்தது போல சொன்னான் . சுவாதி அவனை பிடித்து உளுப்பவும் சுய உணர்விற்கு வந்தான் .

இந்த லெஸ்பியன் கே எல்லாம் இந்தியாவுக்கும் வந்துடுச்சா என்றான் மெல்ல .அது எல்லாம் வெளிநாட்டுல இருந்து வரும் போது இதுவும் வந்துதானே ஆகணும் சித் என்றாள் சுவாதி சிரிப்பை அடக்கி கொண்டு .

இதுக்கு இந்தியாவுல எப்படி அதுக்கு தான் நான் வெளிநாடு போக போறேனே என்றாள் .என்ன சுவாதி அடுத்து அடுத்து அதிர்ச்சியா கொடுக்குற என்றான் .ஆமா என்னோட பார்டனர் வெளிநாட்டுல இருக்கா குழந்தை பொறந்த உடனே நான் அங்க போ போறேன் என்றாள் .

நீ லெஸ்பியன் சொன்ன அப்ப எதுக்கு குழந்தை பெத்துகுற என்றான் .அது எனக்கும் என் பார்ட்னர்க்கும் குழந்தை வேணும் அப்படின்னு தோனுச்சு . எங்களால செக்ஸ் மட்டும் தான் பண்ண முடியும் குழந்தை பெத்துக்க முடியாதுல அதுனால முகம் தெரியாத ஒரு ஸ்பெர்ம் டோனட்டார் மூலம் கன்சீவ் ஆகி இந்த வட்டம் நானும் அடுத்தவட்டம் அவளும் குழந்தை பெத்துக்குவா என்று சுவாதி சிரித்து கொண்டே சொல்ல

சித்தார்த் உன் சகவாசமே வேனமாம்டி என்னால முடியல என்று நினைத்து கொண்டு ஒன்றும் சொல்லாமால் அப்படியே ஒன்றும் சொல்லமால் போனான் .அவனை சித்தார்த் சித் என்று சுவாதி கூப்பிட அவன் திரும்பி பார்க்கமால் போனான் .சுவாதி சிரித்து கொண்டே அப்பா ஒரு வழியா இவன் இம்சைல இருந்து தப்பிச்சோம் .இனி சீப் கிட்ட போயி ரிசைன் லெட்டர் கொடுக்கணும் .அவர் கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்க போறேனோ என்று நினைத்து கொண்டு ரிசைன் லெட்டர் எழுதி விட்டு சீப்பை பார்க்க சென்றாள் .

பின் ஆபிஸ் சென்று சீப்டிம் ரிசைன் லெட்டர் கொடுக்க போனாள் ,அவள் ரிசைன் பண்ண போகிறேன் என்பதை கேட்டு சீப் ஏன் சுவாதி தீடிருன்னு இந்த முடிவு உனக்குத்தான் இந்த வேல ரொம்ப பிடிக்குமே அது மட்டும் இல்லாம உனக்கு பேன்ஸ் நிறையாவும் இருக்காங்களே அப்புறம் ஏன் இந்த முடிவு சம்பளம் ஏதும் அதிகமா வேணும்னு பீல் பண்ணேனே சொல்லு நான் எம் டி கிட்ட பேசுறேன் என்றார் .

சுவாதிக்கு சித்தார்த் கிட்ட சொன்னது போல இவரிடிம் சொல்ல முடியவில்லை . அது மட்டும் இல்லாம எல்லார் கிட்டயும் பிரக்னட் சொல்லவும் முடியல அப்புறம் நான் லெஸ்பியன்னு பொய் சொல்லவும் முடியல அதானால அவர் கிட்ட இல்ல சார் நான் பாரின் போறேன் சார் அதான் ரிசைன் பண்றேன் என்றாள் ஒரு சலிப்போடு . என்ன விஷயமா போற சுவாதி என்றார் . அது கொஞ்சம் பர்சனல் சார் என்றாள் .சரி உன் பர்சனல்னா சொல்ல வேணாம் நானும் அத பத்தி கேக்கல .ஆனா உன் ரிசைன் லெட்டர நான் இந்த மாசம் முழுக்க மேல் இடத்துக்கு கொடுக்காம வச்சுருக்கேன் .

உனக்கு ஒரு வேல திரும்ப வேலைல ஜாயின் பண்ணனும்னு தோணுச்சுனா நீ தாரளாமா பண்ணிக்கலாம் .you are always welcome என்றார் சிரித்து கொண்டே . ஓகே சார் தேங்க்ஸ் என்றாள் .ஓகே அப்புறம் இந்த மான்த் சம்பளத்த அடுத்த மாசம் 5 தேதி உன் அக்கவுண்ட்ல ஏத்தி விட்டுறேன் அப்ப எடுத்துக்கோ ஓகேவா என்றார் .

ஓகே சார் நான் வரேன் என்றாள் .பின் அவள் யாரிடமும் சொல்லமால் தன் டெஸ்க்கில் இருக்கும் தன் பொருள்களை எடுத்து கொண்டு கிளம்பினாள் .அப்போது மணி மதியம் இரண்டாகி இருந்தது சரி சம்பளம் வர வரைக்கும் பேங்க்ல இருக்க பணத்த கொஞ்சம் எடுத்துக்குவோம் என்று அவள் பேங்கிற்கு சென்று விட்டாள் . அவள் பேங்கில் பணத்தை எடுத்து விட்டு பின் வீட்டிற்கு போயி விட்டாள் .

வீட்டிற்கு போயி பிரஸ் ஆப் ஆகி விட்டு தன் அறையில் வந்து உக்காந்து தன் வயிற்ரை தடவி கொண்டே பேசினாள் . ஓகே டா செல்லம் அம்மா வேலைய விட்டுட்டேன் இனிமேல் முழுக்க உன் மேல மட்டும் தான் கவனம் செலுத்த போறேன் .சோ நீ பயப்படாம உள்ள இரு நீ வெளிய வந்ததும் நம்ம கனடா போயி சந்தோசமா இருப்போம் ஓகேவா என்று தன் கையில் முத்தம் கொடுத்து அதை தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தொட்டு வைத்து கொண்டு சந்தோஷ பட்டு கொண்டாள் .

அவள் நிம்மதியாக குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்கும் அதே வேளையில் விக்கியால் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை .

ஒரு பக்கம் நைட் புல்லா தூங்கமா இருந்த அலுப்பு இன்னொரு பக்கம் அடிக்கடி அவனுக்கு வந்த சுவாதி முகம் இது ரெண்டும் அவன ரொம்ப இம்ச பண்ணுச்சு ,ஒரு வழியா வொர்க் எல்லாம் கரெக்ட்டா பண்ணி ஒரு மூனு மணி வரைக்கும் சமாளிச்சான் .பின் மீண்டும் டீ பிரேக்கின் போது அவன் லேசாக கண்ணை மூட சுவாதி வாந்தி எடுத்து கொண்டே மூச்சு வாங்கி கொண்டு அவன் கனவில் வர அவன் தீடிக்கிட்டு எழுந்து உக்காந்தான் .

சே ஏண்டி இம்ச என்னையே நிம்மதியா ஒரு ரெண்டு நிமிஷம் கூட கண்ண மூட விட மாட்டிங்குற சரி கனவுல வந்ததுதான் வந்த அட்லிஸ்ட் அந்த மழை துளிய பிடிச்சு விளாண்டிய அப்படி வந்துருக்கலாம்ல ஏன் வாந்தி எடுத்து கிட்டே பாவமா வந்து நிக்குற சரி இருந்தாலும் நீ அப்பதான் அழகா இருக்க என்று நினைத்து கொண்டு பின் விக்கி தன சேரில் உக்காந்தான் .

ஏதோ தோன்றியது போல உக்காந்து யாரும் வருகிறார்களா என்று ஒரு முறை எட்டி பார்த்து விட்டு மெல்ல தன் கம்ப்யூட்டரில் facebook பேஜ் ஓபன் பண்ணான் .அப்படி நீ என்னதான் அழகா இருக்கன்னு நான் பாக்குறேன் என்று நினைத்து கொண்டு பின் அதில் சுவாதி இருக்கும் பக்கத்திற்கு போனான் .

பின் அதில் இருக்கும் அவள் பழைய போடோக்களை பார்த்தான் .அதை பார்த்து தன்னை மறந்து அவளை ரசித்தான் ,சே இவ எப்பவுமே அழகுதான் என்று அவள் போட்டோக்கள் ஒன்று ஒன்றாக பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் . பின் எதார்த்தமாக அவள் status பார்க்க அதில் அவள் ரிலேசன்ஷிப் சிங்கிள் என்று போட்டு இருப்பதை பார்த்தான்

மேலும் அதில் அவள் அவன் குரூப் விக்கி ,டேவிட் ,மணி ,வள்ளி என்று இவர்களோடு ஒன்றாக நின்று எடுத்த போட்டோ எதுவும் இல்லை . எல்லாத்தையும் நீக்கி இருந்தாள் . அதை எல்லாம் உணர்ந்து புரிந்து கொண்ட அவனுக்கு அப்போது தான் அவள் முன்பு தன் நண்பனின் காதலி ஆக இருந்தது ஞாபகத்திற்கு வர உடனே facebook பேஜை க்ளோஸ் பண்ணான் .

தன் தலையில் கை வைத்து கொண்டு சுவாதியை அவளவு நேரமும் நினைத்தை தன்னை மறந்து அவளை ரசித்தது எல்லாமே நினைத்து ஏதோ அவன் குற்றம் செய்தவன் போல் உணர்ந்தான் .பின் அப்போது டீ பிரேக்ம் முடியவும் அவளை மறந்து விட்டு வேலையை பார்த்தான் .பின் சாயங்காலம் வேலை முடிந்த பின் மணியிடம் சொல்லி விட்டு கிளம்பினான் .

அதன் பின் காரில் ஏறி அவன் வீட்டிற்கு போகும் போது போகும் வழியில் சுவாதியின் ஆபிஸ் பக்கம் வண்டியை நிறுத்தினான் .அவள கூப்பிட்டு போவோமா என்று யோசித்து கொண்டு காரை ஒரு ஓரமாக நிப்பாட்டினான் .

வழக்கம் போல அந்நேரம் அவன் மனசாட்சி வந்து அவனிடிம் பேசியது டேய் உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா இப்ப ஏன் அவள கூப்பிட்டு போகணும்னு நிக்குற என்றது .இவன் பாவம் அவ உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்கன்களா அதான் பாவம் அவள எதுக்கு ஸ்ட்ரைன் பண்ண வச்சுக்கிட்டு போற வழிலதான இருக்கு அவ ஆபிஸ் அதான் அவள கூப்பிட்டு போலாம்னு பாக்குறேன் என்று சொன்னான் .

என்னது பாவமா என்னடா நீ வர வர பாவம் எல்லாம் பாக்குற உனக்கு என்னதான் ஆச்சு ரொம்ப நல்லவனா மாறிகிட்டு வர நேத்து நைட் இருந்து சொல்ற என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி பண்ற என்றது மனம் .அவன் தெரியல எனக்கு ஒன்னும் புரியல என்றான் .

என்னது தெரியலையா இப்பதான் அவ யாருன்னு உன் facebook பாக்கும் போது உனக்கு ஞாபகம் வந்துச்சு மறந்துட்டியா என்றது மனம் .இல்ல என்றான் .அவ யாரு என்றது அவன் மனம் என் பிரண்டோட பழைய லவ்வர் என்றான் .அது உன் பிரண்டோட பழைய லவ்வர் அப்படி நினை என்று மனம் சொல்ல விக்கி அப்படியே ஸ்டீரிங்கில் சாய்ந்தான் .பின் அவன் சுவாதியை முதன் முதலில் பார்த்ததை நினைத்து பார்த்தான் .

தொடரும்....

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 6 users Like Rajiss's post
Like Reply
Super bro
[+] 1 user Likes zulfique's post
Like Reply
Lovely bro
[+] 1 user Likes Vasanthan's post
Like Reply
This is one of THE BEST stories i would say.
[+] 1 user Likes AjitKumar's post
Like Reply
Beautiful post
[+] 1 user Likes Dumeelkumar's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)