Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
அய்யனாருடன் கம்பீரமாக நிற்கும் தனுஷ்.. அசுர வேட்டை விரைவில்
அசுரன் குறித்து நடிகர் தனுஷ் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.  
[Image: D5UbzrBU0AAw7bI.jpg]
தனுஷ் - வெற்றிமாறன் ஹிட் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகிறார்.  ஆனால் இம்முறை நடிகர் தனுஷே புதிய போஸ்டருடன் அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த போஸ்டரில் `அசுர வேட்டை விரைவில்.. இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விரைவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில் ரத்த கரையுடன் வெறித்தனமாக நிற்கும் தனுஷின் பின்னணியில் அய்யனார் கம்பீரமாக நிற்கிறார்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைக்கோர்த்த விஜய், மேலும் ஒரு முன்னணி நடிகரும் உள்ளார்- தெறி மாஸ் அப்டேட்

ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.
அந்த படம் ரீமேக் படம் என்பதால் எப்படியாவது ஷங்கரின் கதையில் நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாம், தற்போது அதற்கு வாய்ப்பு வந்துள்ளது.
இந்தியன்-2 தொடங்காமல் உள்ளதால் ஷங்கர் விஜய் மற்றும் விக்ரமை சந்தித்து இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு கதையை சொல்லி ஓகே செய்துவிட்டாராம்.
இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Like Reply
வெள்ளை பூக்கள் - விமர்சனம்

நடிப்பு - விவேக், சார்லி, தேவ் மற்றும் பலர்
தயாரிப்பு - இன்டஸ் கிரியேஷன்ஸ்
இயக்கம் - விவேக் இளங்கோவன்
இசை - ராம்கோபால்
வெளியான தேதி - 19 ஏப்ரல் 2019
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கடத்தல், கொலை, விசாரணை என த்ரில்லர் வகைப்படங்கள் தமிழ் சினிமாவில் வருவது குறைவுதான். அப்படியே வந்தாலும் அவற்றில் பல லாஜிக் மீறல்கள் இருக்கும். 

த்ரில்லர் படங்களில் ரசிகர்களை இரண்டரை மணி நேரமும் நெளியாமல் உட்கார வைத்து ரசிக்க வைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இந்தப் படத்தில் முன்னணி ஹீரோ இல்லாமலேயே அதைச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விவேக் இளங்கோவன்.

அமெரிக்க வாழ் தமிழர்களின் சினிமா ஆர்வத்தால் உருவான படம் இது. இங்கிருந்து நடிகர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து அங்கும் ஒரு தமிழ்ப் பட உருவாக்கத்தை சிறப்பாகச் செய்திருக்கும் அவர்களது முயற்சிக்கு முதலில் வாழ்த்துகள்.

முன்னணி ஹீரோவை நடிக்க வைக்காமல் கதையின் நாயகனாக ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கி, அதில் நகைச்சுவை நடிகர் விவேக்கை நடிக்க வைத்து தங்களது வித்தியாசமான முயற்சியைப் பாராட்ட வைக்கிறார்கள். அவர்களது உருவாக்கத்தில் முதல் திரைப்படம்தான் என்றாலும் மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார்கள். 

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான விவேக், அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சியாட்டில் நகரில் வசிக்கும் தன் மகன் தேவ்-வைப் பார்க்க அமெரிக்கா செல்கிறார். அங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண் திடீரென காணாமல் போகிறார். அது பற்றி தெரிய வர, தன்னிச்சையாக அந்த வழக்கைப் பற்றி விசாரிக்க களத்தில் இறங்குகிறார் விவேக். அடுத்து ஒரு இளைஞன் காணாமல் போகிறான். அதன்பின் விவேக்கின் மகன் தேவ்வும் காணாமல் போகிறார். தீவிர விசாரணையில் இறங்கும் விவேக் குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை.

வழக்கமான ஹீரோக்கள் நடித்திருந்தால் இது ஹீரோயிசப் படமாக மாறியிருக்கும். ஆனால், அவர்களுக்குப் பதிலாக விவேக்கை நடிக்க வைத்திருப்பதால் இந்த 'வெள்ளைப் பூக்கள்' படத்திற்கு வேறு ஒரு நிறம் கிடைத்திருக்கிறது. தன் அனுபவ நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விவேக். வழக்கமான அவருடைய நடிப்பும் சாயலும் படத்தில் எங்குமே இல்லை. விவேக் இதுவரை கதாநாயகனாக நடித்த ஒரு சில படங்களில் இந்தப் படமும், கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கிறது. அமெரிக்க போலீசை விடவும், அவர்களுக்குத் தெரியாமலும் விவேக்கின் விசாரணை வேகமாக நகர்வது ஆச்சரியமாகவும், சினிமாத்தனமாகவும் இருக்கிறது. குற்றம் நடைபெற்ற இடங்களில் இப்படி போலீஸ் அல்லாதவர்கள் எளிதில் செல்ல முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

விவேக்கின் அமெரிக்க நண்பராக படம் முழுவதும் அவர் கூடவே வருகிறார் சார்லி. அவ்வப்போது கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது படத்தில் கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. 

விவேக்கின் மகனாக தேவ், அமெரிக்க மருமகளாக பைஜ் ஹென்டர்சன். சார்லியின் மகளாக பூஜா தேவரியா. ஒரு கட்டத்தில் சார்லியின் மகளான பூஜா தான் குற்றவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகம் நமக்குள் வர, நாம் சிறிதும் எதிர்பார்க்காத வகையில் இவர்தான் குற்றவாளி என காட்டுவது திரைக்கதையில் எதிர்பாராத திருப்பம். அதற்குக் குழப்பம் வராமல் இருக்க படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒரு பிளாஷ்பேக்கை இப்போது நடப்பது போலக் காட்டி நம்மை ஏமாற்றுகிறார் இயக்குனர்.

சியாட்டில் நகரம், அதன் அமைதியான தெருக்கள் ஆகிய கதைக் களமே படத்திற்கு கூடுதல் பலத்தைத் தருகிறது. ஜெரால்ட் பீட்டர் ஒளிப்பதிவு ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது. ராம்கோபால் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் படத்தில். பின்னணி இசையில் காட்சியின் தாக்கத்தை கூடுதலாக்கியிருக்கிறார்.

முதல் முயற்சி என்பதால் சிற்சில குறைகளை பெரிய மனதுடன் மன்னிக்கலாம். நம் ஊர் படங்களையே பார்த்துப் போரடிக்கும் நமக்கு இப்படி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் வேறு ஒரு களத்தில் படங்களைத் தருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 

வெள்ளைப் பூக்கள் - வரவேற்பு 

[Image: 11253322937.jpg]
Like Reply
சினிமா விமர்சனம்: தேவராட்டம்

[Image: _106751748_devaratam11111111111.jpg]

திரைப்படம்
தேவராட்டம்


நடிகர்கள்
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, போஸ் வெங்கட், வினோதினி, ஃபெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி


இசை
நிவாஸ் கே பிரசன்னா


ஒளிப்பதிவு
சக்தி சரவணன்


இயக்கம்
முத்தைய்யா




`கொம்பன்', 'குட்டிப்புலி', `மருது', `கொடிவீரன்' படங்களுக்கு அடுத்து முத்தைய்யா இயக்கியிருக்கும் படம் தேவராட்டம்.
அவரது முந்தைய படங்களின் வரிசையை வைத்து இந்தப் படத்தின் பின்னணியை ஒருவாறாக யூகித்துக்கொள்ள முடியும்.
மதுரை மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வெற்றியை (கௌதம் கார்த்தி) அவரது சகோதரிகள் வளர்த்து, படிக்கவைக்கிறார்கள். வழக்கறிஞர் ஆகிறார் வெற்றி.
அதே மாவட்டத்தைச் சேர்ந்த கொடும்பாவி கணேசன் (ஃபெப்சி விஜயன்) தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவிக்கும் நபர்.
கணேசனின் மகன் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு பெண் விவகாரத்தில் தலையிட நேர்ந்தபோது, கணேசனின் மகனை வெற்றி கொலைசெய்துவிடுகிறான்.
அதற்கு பழிவாங்கத் துடிக்கும் கணேசன், வெற்றியின் சகோதரியையும் (வினோதினி) அவரது கணவரையும் (போஸ் வெங்கட்) கொன்றுவிடுகிறான். பிறகு என்ன நடக்கும்.. அதேதான்.
[Image: _106748140_devarattam.png]
அநியாயத்தைக் கண்டால் தட்டிக்கேட்கும் ஓர் இளைஞன், கொடூரமான வில்லனின் வழியில் குறுக்கிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன் - லைன்.
ஆனால், இதைத் திரைக்கதையாக்கும்போது ஏகப்பட்ட பாடல்கள், சண்டைகள், சிரிப்பே வராத காமெடி காட்சிகள் ஆகியவற்றைச் சேர்த்து ரொம்பவும் அலுப்பூட்டியிருக்கிறார் முத்தைய்யா.
அதுவும் கதாநாயகன் - கதாநாயகி இடையிலான காட்சிகள் படத்தில் புதிதாக எந்தக் கோணத்தையும் சேர்க்கவில்லை. திரைக்கதையில் அந்தக் காதலுக்கு எந்த இடமும் இல்லை.
கதாநாயகன் செய்த இரண்டு கொலைகளுக்காக கைதுசெய்யும் காவல்துறை, வில்லன் கணக்கே இல்லாமல் செய்யும் எந்தக் கொலையையும் கண்டுகொள்வதில்லை.
ஓர் ஆய்வாளாருக்குப் பணம் கொடுத்தால் மாவட்டம் முழுக்க செய்யப்படும் கொலைகளை காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா?
[Image: _106748144_devarattam-teaser.jpg]
தனது முந்தைய படங்களில் போகிறபோக்கில், ஒரு குறிப்பிட்ட ஜாதி சார்பை சுட்டிக்காட்டிய முத்தையா, இந்தப் படத்தில் காட்சிகள், வீடுகளில் மாட்டியிருக்கும் புகைப்படங்கள், சிலைகள் என வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார். பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, ஜீவா ஆகியோரையும்கூட விட்டுவைக்கவில்லை.
முந்தைய படமான கொடிவீரன் படத்திலேயே பல ரத்தக்களறியான காட்சிகளை வைத்திருந்த முத்தையா, இந்தப் படத்திலும் அந்த ட்ரெண்டைத் தொடர்ந்திருக்கிறார். படத்தில் உள்ள ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளில் குறைந்தது 40 - 50 கைகளாவது முறிந்திருக்கும்.
'நான் விட்டுக்கொடுத்துப் போறவன் இல்லை; வெட்டிப்புட்டுப் போறவன்', 'வெட்டுகுத்து எங்களுக்கு வென்னீர் வைக்கிறது மாதிரி', 'எதிர நின்னாலே விடமாட்டேன், எதிர்த்து நின்னா விட்டுறுவனா', 'மண்ணைத் தொட்டவனை விட்றலாம்; பொண்ணைத் தொட்டவன விடமாட்டேன்' - எனப் படம் நெடுக காது கிழியும் அளவுக்கு படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களும் பஞ்ச் வசனம் பேசுகிறார்கள். குறிப்பாக வில்லனாக வரும் ஃபெப்சி விஜயனுக்குத்தான் ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள்.
[Image: _106748146_gowtham.png]
படத்தில் பெண் ஒருவர் பேசுவதாக வரும் 'இவனுக 400 ரூவா ஜீன்சையும் 200 ரூபாய் பனியனையும் போட்டுக்கிட்டுவந்து வாழ்க்கையைக் கெடுக்குறானுக' என்ற வசனத்திற்கு தமிழக அரசியல் சார்ந்த அர்த்தங்களும் உண்டு.
"பெண்கள் பொக்கிஷங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைத் துன்புறுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல; கருவறுக்கப்பட வேண்டியவர்கள்" என்ற செய்தியுடன் படம் முடிகிறது.
முத்தையாவின் பட வரிசையை எடுத்துக்கொண்டாலே இந்தப் படம், கடைசி இடத்தைத்தான் பிடிக்கும்
Like Reply
த கர்ஸ் ஆஃப் வீப்பிங் வுமன் (அவளின் சாபம்): சினிமா விமர்சனம்
[Image: _106523097_df9c556c-a14d-4a5e-8327-50ec7445d110.jpg]
திரைப்படம்
The Curse Of The Weeping Woman (அவளின் சாபம்)


நடிகர்கள்
லிண்டா கார்டெல்லினி, ரேமண்ட் க்ரஸ், பாட்ரீசியா வேலஸ்க்வெஸ், மாரிசோல் ராமிரெஸ், சீன் பாட்ரிக் தாமஸ்


இயக்குனர்
மிச்செல் சாவேஸ்


The Curse of La Llorona என்ற பெயரில் சில நாடுகளிலும் The Curse Of The Weeping Woman என்ற பெயரில் சில நாடுகளிலும் தமிழில் அவளின் சாபம் என்ற பெயரிலும் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். The Conjuring பட வரிசையில் ஆறாவது படம் இது.
மெக்ஸிகோவின் நாட்டுப் புறக் கதை ஒன்றை அடிப்படையாக உருவாக்கப்பட்ட படம் இது. மெக்ஸிகோவின் கிராமம் ஒன்றில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக மரியா என்ற அழகான, இளம்பெண் வசித்துவந்தாள். அந்த கிராமத்திற்கு வந்த பணக்கார இளைஞன் ஒருவன் அவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்துகொள்கிறான்.
இதனால் மனமுடைந்த மரியா, தன் மகன்கள் இருவரையும் நதியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு, அவளும் தற்கொலை செய்துகொள்கிறாள். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் அவள் அழுதபடி அலைவதாகவும் குழந்தைகளைத் தூக்கிச் சென்று தண்ணீரில் மூழ்கடிப்பதாகவும் கதைகள் உண்டு. இந்தக் கதையை அடிப்படையாக வைத்து ஏற்கனவே சில படங்கள் வெளியாகியிருக்கின்றன.
1970களின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம். விதவையும் சமூக சேவகியுமான ஆன்னாவுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு நாள், பாட்ரீஷியா என்ற பெண் தன் இரு குழந்தைகளைத் துன்புறுத்துவதாக செய்திவருகிறது. அதை விசாரிக்கச் செல்கிறாள் ஆன்னா. அந்தக் குழந்தைகளை மீட்டுவந்து காப்பகத்தில் வைக்கிறாள். ஆனால், அந்தக் குழந்தைகள் அடுத்த நாள் ஆற்றில் இறந்துகிடக்கிறார்கள்.
இந்த விபரீத சம்பவத்திற்குப் பிறகு, ஆன்னாவின் குழந்தைகளை ஒரு உருவம் கைப்பற்றிச் செல்ல முயற்சிக்கிறது. பாட்ரீசியாவின் குழந்தைகள் எப்படிக் கொல்லப்பட்டன, ஆன்னாவின் குழந்தைகளைத் துரத்துவது எது, ஆன்னா எப்படித் தன் குழந்தைகளைக் காப்பாற்றுகிறாள் என்பது மீதிப் படம்.
[Image: _106523099_022c2d21-2442-4c8e-bcf9-82cabfee5143.jpg]படத்தின் காப்புரிமைGOOGLE
ஹாலிவுட்டில் மார்வெல் பட வரிசைக்குப் பிறகு வெற்றிகரமான வரிசையாக இருப்பது The Conjuring பட வரிசைதான். ஆனால், இம்மாதிரியான படங்கள், பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதுபோல இருக்கிறது. அபாயத்தில் இருக்கும் குழந்தைகள், நிராதரவான அன்னைகள், ஏதோ சோகத்தால் இறந்துபோய், பழிவாங்கும் பேய்கள், பேயோட்டிகள் என எல்லாமும் இந்தப் படத்தில் உண்டு. இருந்தபோதும் இந்த The Conjuring பட வரிசையின் முதல் சில படங்கள் தந்த திகில் இந்தப் படத்தில் இல்லை.
படத்தின் துவக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நேரம் செல்லச்செல்ல மிகச் சாதாரணமான ஒரு பேய்ப் படமாக மாறுகிறது இது. The Conjuring பட வரிசையின் மிக முக்கியமான அம்சமே, பேய் வரும் காட்சிகள் மட்டுமல்லாது, படம் நெடுகவே ஒரு திகில் நீடித்திருக்கும் என்பதுதான். திடீர் திடீரெனக் குதித்து அச்சுறுத்துவதற்குப் பதிலாக, ஒரு சிறிய நிழல், ஒரு பட்டுப்போன மரம் ஆகியவைகூட முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும். ஆனால், இந்தப் படத்தில் ரொம்ப பழைய பாணியில் சத்தத்துடன் கோரமான பேயை கண்முன் நிறுத்துவது, கோரமான காட்சிகளின் மூலம் பயமுறுத்துவது என்றே படத்தை நகர்த்திக்கொண்டு போகிறார்கள்.
[Image: _106523101_132d0eb5-4f47-4ed2-b7ca-c6383ba08f63.jpg]படத்தின் காப்புரிமைGOOGLE
குறிப்பாக பேயோட்டும் சாமியாராக வரும் ரேமண்ட் க்ரஸ் ரொம்பவுமே கடுப்பேத்துகிறார். வீட்டிற்குள் பேய் திரிந்துகொண்டிருக்கும்போது, மொக்கையாக நகைச்சுவை வசனங்களைப் பேசுகிறார். படத்தில் உள்ள கொஞ்சநஞ்ச திகிலையும் இம்மாதிரி காட்சிகள் இல்லாமல் செய்துவிடுகின்றன.
The Conjuring வரிசை படங்கள் ஏதற்காக பிரபலமாயினவோ, அதற்கு எதிரான திசையில் செல்கிறது இந்தப் படம். ஆனாலும், வழக்கமான பேய்ப் படங்களைப் பார்த்து ரசிக்கும் விருப்பமும் மன திடமும் உள்ளவர்கள் ஒரு முறை பார்க்கலாம்.
Like Reply
கல்வீசி தாக்கும் கல்லூரி மாணவர்கள்... ரணகளமாகும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்..!

[Image: dharbar_710x400xt.jpg]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி ரஜினியை டென்ஷனாக்கி வருகிறது.
 [Image: dharbar.jpg]
இதை தடுக்க என்ன செய்யலாம் என்று படக்குழு மண்டையை போட்டு உடைத்துக் கொண்டாலும் வழியே தெரியவில்லை. காரணம் தர்பார் படப்பிடிப்பு நடக்கும் இடம் ஒரு கல்லூரி. பல ஆயிரம் மாணவர்கள் படிக்கிற இடம் என்பதால் அங்கே யார் எப்படி படங்களை எடுக்கிறார்கள் என்றெல்லாம் ஆள் போட்டு பார்க்க முடியாத நிலை. ஜிம் பாய்ஸ் எல்லாம் அங்கே எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் நிர்வாகத்திடம் சொல்லி மாணவர்களுக்கு கெடுபிடிகள் கொடுத்து இருக்கிறார்கள். [Image: dharbar.jpg]
இதனால் கடுப்பான மாணவர்கள் முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு கல்லூரி மாடிகளில் இருந்து கல் அடிக்கிறார்களாம். இதைப்பார்த்து ரஜினி, நயன்தாரா உட்பட படக்குழு கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பாக ரஜினிகாந்த் பயங்கர அப்செட் ஆகியிருக்கிறாராம் இயக்குனர் முருகதாசிடம் ‘பேசாமல் ஷூட்டிங் ஸ்பாட்டை மாத்திட்டா நல்லது என நச்சரித்து வருகிறாராம் ரஜினி..![Image: dharbar.jpg]
Like Reply
K 13 திரை விமர்சனம்

கதைக்களம்
திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும் அருள்நிதி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார். அந்த நேரத்தில் நண்பர்கள் வற்புறுத்தலால் க்ளப்பிற்கு செல்ல, அங்கு ஷரதா ஸ்ரீநாத் அறிமுகம் கிடைக்கின்றது.
ஷரதா ஒரு எழுத்தாளர், அவருக்கு அருள்நிதி மேல் ஒரு ஈர்ப்பு வர, அவரை தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார்.
அடுத்தநாள் காலை அருள்நிதி ஒரு சேரில் கட்டிப்போட்டு இருக்க, ஷரதா தன் கையை அறுத்துக்கொண்டு இறந்துள்ளார். அருள்நிதிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அவருக்கு மட்டுமில்லை நமக்கும் தான். இதை தொடர்ந்து நடக்கும் அடுத்தடுத்த திருப்பமே இந்த K-13.
படத்தை பற்றிய அலசல்
அருள்நிதி தொடர்ந்து ஒரு சஸ்பென்ஸ் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், அந்த வகையில் இதுவும் அவருக்கு ஒரு சிறந்த படைப்பே, படத்தில் அவரின் கதாபாத்திரமே பெரும்பாலும் வருகின்றது. அதனால் எந்த ஒரு இடத்திலும் கவனம் சிதறவிடாமல் அவரின் பதட்டத்தை நம்மிடம் கடத்துகின்றார்.
ஷரதா படத்தின் ஆரம்பத்தில் இறந்து போகின்றார், அதை தொடர்ந்து இடைவேளை வரை அவருக்கு பெரிய நடிக்கின்ற வாய்ப்பு இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவருக்கான காட்சி தொடங்கும் போது ரசிக்க வைக்கின்றார்.
படத்தில் எந்த ஒரு காட்சியையும் முழுமையாக விவரிக்க முடியாது, ஏனெனில் டுவிஸ்ட் உடைந்துவிடும். அதிலும் அட படம் முடிந்துவிட்டது இவ்வளவு தானா? என்று இருக்க, அதை தொடர்ந்து அருள்நிதி பார்வையில் கதை தொடங்க, அட என்னடா இது என்று சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது.
ஆனால், படத்தின் முதல் பாதியில் இருந்த பதட்டம், விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறுகின்றது. அருள்நிதியிடம் சேர்ந்து நாமும் கவுன்ஸிலிங் சென்றது போல் இருக்க, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.
படத்தின் மிகப்பெரும் பலம் சாம் இசை தான், பின்னணியில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவும் படம் முழுவதும் பெரும்பாலும் ஒரு ரூம் என்றாலும், எங்குமே நமக்கு சலிப்பு தட்டாமல் காட்சிப்படுத்தியுள்ளனர்.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி செம்ம விறுவிறுப்பு.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இன்னமும் விறுவிறுப்பு இருந்திருக்கலாம். கிளைமேக்ஸ் இன்னமும் எல்லோருக்கும் புரிவது போல் காட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் K-13 அருள்நிதி சேரில் கட்டியிருப்பது போல், நம்மையும் படத்தின் சீட்டின் நுனியில் கட்டிப்போட்டுள்ளார் இயக்குனர் பரத் நீலகண்டன்.
Like Reply
ரூ.800 கோடி செலவில் தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் புதிய மாற்றம்

[Image: 201905040024502188_Ponniyin-Selvan-in-th...SECVPF.gif]
சோழ சாம்ராஜ்யம் உருவாகி வளர்ந்த நிலையில் இருந்து ராஜராஜ சோழன் முடி சூடுவது வரையிலான கால கட்டத்தில் அரச குலத்தில் நடந்த நிகழ்வுகளை வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார்.
இந்த படத்தில் 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. இதற்கான நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பழுவேட்டரையர் கதாபாத்திரத்துக்கு சத்யராஜ் தேர்வாகி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கவும், பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் மணிரத்னம் திட்டமிட்டு உள்ளார். சரித்திர காலத்து அரண்மனை அரங்குகள், ஆடை ஆபரணங்களையும் பயன்படுத்துகின்றனர். இரண்டு பாகங்களையும் படமாக்க ரூ.800 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளனர்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவனமும் லைகா புரொடக்‌ஷனும் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் இப்போது தயாரிப்பில் மாற்றம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் பட்ஜெட்டை கேட்டு லைகா பட நிறுவனம் பின்வாங்கிவிட்டதாகவும், அதற்கு பதிலாக ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை தயாரிப்பாளராக சேர்க்க மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Like Reply
யோகி பாபுவின் மதிப்பு ரியல் எஸ்டேட் மாதிரி: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

[Image: gnanavel-raja-yogi-babujpg]

இன்னிக்கு யோகி பாபுவின் மதிப்பு ரியல் எஸ்டேட் மாதிரி எனத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ஜனினி ஐயர், ரமேஷ் திலக், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்மபிரபு'. யோகி பாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் முதல் படம் இதுவாகும். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இவ்விழாவில் யோகி பாபு நடித்த படங்களின் இயக்குநர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “இன்னிக்கு யோகி பாபுவின் மதிப்பு ரியல் எஸ்டேட் மாதிரி. நீங்க ஒரு நாளைக்கு 5 லட்சம்தான் சம்பளம் வாங்குறீங்கனு சொல்லிடணும். 10 லட்சம், 15 லட்சம் வாங்குறீங்கனு அவனவன் பயத்துல இருக்கான்.
யோகி பாபு, ரஜினி சார் கூட படம் நடிக்கிறார் என செய்திகள் வந்தன. அப்படின்னா கண்டிப்பா ரஜினி சார் யோகி பாபுவைப் புகழ்ந்து தள்ளிடுவார். அடுத்து படம் தயாரிக்கிறவர்கள் எல்லாம் செத்தான் அப்படினு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால், ‘தர்மபிரபு’ ட்ரெய்லரில் ரஜினி சாருக்கே ஒரு டயலாக் வச்சுருக்காங்க. அடுத்த ஷெட்யூல்ல ரஜினி சாரை சந்திக்கும்போது யோகி பாபுவுக்கு இருக்கு” என்று நகைச்சுவையாகப் பேசினார்.
Like Reply
என் மகளுக்கு விஜய் பட வாய்ப்பை தடுத்தேன் - தேவதர்ஷினி

ல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தேவதர்ஷினி, என் மகளுக்கு தளபதி 63 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தடுத்தேன் என்று கூறியிருக்கிறார். #Thalapathy63



[Image: 201905031729501707_Devadarshini-Says-I-b...SECVPF.gif]
கடந்த ஆண்டு வெளியான 96, சமீபத்தில் வெளியான `காஞ்சனா 3’ என வரிசையாக வெற்றிப் படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தேவதர்ஷினி. தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்து முடித்து இருக்கிறார். அந்த செய்தி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

அக்டோபர் மாதம் `96’ ரிலீஸ் ஆன நேரத்தில் என் மகளை தளபதி 63 படத்தில் நடிக்க முடியுமா என்று அட்லீ கேட்டார். `இப்போதான் 96 படம் நடிச்சி முடிச்சிருக்காங்க. மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு வருது. அதுக்கு அவங்க தயாராகணும்‘னு சொன்னேன். அதை புரிஞ்சுக்கிட்டார்.

[Image: 201905031729501707_1_devadarshini-2._L_styvpf.jpg]


கண்டிப்பாக எந்த ஒரு ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும், தளபதிகூட நடிக்க ஆவலாகத்தான் இருப்பாங்க. என் மகளுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. படத்தை விடவும், இப்போது படிப்பு ரொம்ப முக்கியம். அதனால்தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னேன். பிறகு கொஞ்ச நாள் கழித்து, `விஜய்க்கு அக்கா கேரக்டரில் நீங்க நடிக்க முடியுமான்னு கேட்டாங்க. ஓ.கே சொன்னேன். என்னுடைய ஷெட்யூல் பிப்ரவரி மாசமே முடிஞ்சிடுச்சு. ஐந்து நாட்கள் நடிச்சு முடிச்சிட்டேன். என்னுடையது முக்கியமான கேரக்டராக இருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார்.
Like Reply
எல்லாருக்கும் அவன பிடிக்கும்... முக்கியமாக கிட்ஸ்-க்கு.... கலக்கல் மிஸ்டர் லோக்கல் ட்ரெய்லர்
மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 17-ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

[Image: D5uddurU8AAt7od.jpg]
Like Reply
[Image: 201905040917377192_Avengers-Endgame-box-...SECVPF.gif]
Like Reply
பிரகாஷ் ராஜை தமிழ்ப்படங்களில் நடிக்கவிடமாட்டோம் – தயாரிப்பாளரின் பரபரப்பு அறிக்கை

தமிழர்களுக்கு எதிராக பேசிய பிரகாஷ்ராஜ் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரை தமிழ் படங்களில் நடிக்க விடமாட்டோம் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
சினிமாவில் நடித்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய டெல்லி சென்றுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, நான் தமிழன் அல்ல, கன்னடக்காரன் என்றும் தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோவது உண்மைதான் என்றும் கூறியிருக்கிறார்.
தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் பிறந்த பிரகாஷ்ராஜை கன்னட திரையுலகம் கைவிட்டபோது, தமிழகத்தில் வாய்ப்பு தேடினார். அப்போது பாலசந்தர் என்ற தமிழர் தான் அவருக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார்.
அதன்பிறகு 100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து பொருளும், புகழும் சேர்த்தார். இவரால் பல தமிழ் இளைஞர்களுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தமிழ் படங்களில் பறிபோனது.
தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓட்டல், கட்டிட வேலைகள் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தாய் தமிழகத்திலேயே பல லட்சம் தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை.
உண்மை நிலை இப்படி இருக்க பிரகாஷ்ராஜ் நன்றி மறந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இதற்காக தமிழர்களிடம் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும்.
இல்லை என்றால் புதிதாக எடுக்கப்படும் தமிழ் படங்களில் பிரகாஷ்ராஜை நடிக்க விடமாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Like Reply
டைட்டானிக்கின் பத்து வருட சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்...


கடந்த வருடம் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் வெளியான பின்பு அனைவரும் தானோஸை பற்றி பேசாமல் இல்லை. மீம்ஸ் தொடங்கி வீடியோக்கள் வரை தானோஸ் என்ற வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. உலகையே காப்பாற்றிய அவெஞ்சர்ஸ் டீமையே அடித்து நொறுக்கினால் யார்தான் தானோஸை பற்றி பேசாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட தானோஸிடம் இருந்து உலகை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்பதுதான் அவெஞ்சர்ஸ் எண்ட கேம் படத்தின் கதை.
 
[Image: avengers_3.jpg]
 

 

ஹாலிவுட் படமாக இருந்தாலும், அனைத்து மொழி பேசும் மக்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வசூல் வேட்டையில் இறாங்கியுள்ள படம்தான் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி வசூலை வாரிக்குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
 

இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சாதனை படைத்தது. குறிப்பாக இந்தியாவில் ஒரு நாளுக்கு பத்தலட்சத்திற்கு மேலான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. நொடிக்கு 16 டிக்கெட்டுகள் என்ற வீதம் விற்று தீர்ந்துள்ளது. உலகம் முழுவதும் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் என்று பார்த்தால் 169 மில்லியன் வசூல் செய்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 1,186 கோடி. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருந்ததாக சொல்லப்பட்டது.
 

தற்போது உலகம் முழுவதும் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி வசூல் செய்துள்ளதாகவும் மேலும் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. உலகளவில் அதிகம் வசுலித்த படங்களில் இரண்டாவது இடத்திலிருந்த டைட்டானிக் படத்தின் வசூல் சாதனை இப்படம் முறியடித்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் அவதார் படத்தின் வசூல் சாதனை விரைவில் முறியடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

 

டைட்டானிக் வெளியான 1994ஆம் ஆண்டில் 2 பில்லியனுக்கு மேல் வசூல் செய்து முதலிடத்தை பல வருடங்களாக தக்க வைத்திருந்தது. பின்னர் அவதார் வெளியானதும் முதலிடத்திலிருந்து தற்போதுவரை 10 வருடங்களாக இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. 
 

இப்படம் இந்தியாவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வரை வசூல் செய்துள்ளதாகவும். இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் இதுவே அதிகம் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 2500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Like Reply
விஜய் சூப்பர் ஆக்டர் இல்லை - மலையாள நடிகர் சித்திக்
[Image: NTLRG_20190507155352472320.jpg]

மீடியாவில் ஏதாவது பரபரப்பு வேண்டுமென்றால், முன்னணி நடிகர்களைப் பற்றி எதையாவது சர்ச்சையான கருத்துக்களைச் சொல்ல வேண்டும். அதன் பின்னர் அவை மீடியாக்களில் பரபரப்பாகி கருத்து சொன்ன நபருக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.

அப்படி ஒரு கருத்தை மலையாள நடிகர் சித்திக் சொல்லியிருக்கிறார். “ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார்களை நம்பித்தான் திரையுலகம் இருக்கிறது. சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் மதுரராஜா, லூசிபர் போன்ற படங்களை உருவாக்க கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்களால்தான் திரையுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களால்தான் எங்களைப் போன்ற நடிகர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். தமிழில் விஜய் சூப்பர் ஸ்டார்தான், ஆனால், அவர் சூப்பல் ஆக்டர் இல்லை. கமல்ஹாசன்தான் சூப்பர் ஆக்டர் மற்றும் சூப்பர் ஸ்டார்,” என்று தெரிவித்துள்ளார். 

அவருக்கு பதிலளிக்கும் விதத்தில் விஜய்யுடன் 'மெர்சல்' படத்தில் நடித்த ஹரிஷ் பெரடி, 'விஜய் சூப்பர் ஸ்டார் மற்றும் சூப்பர் ஆக்டர். மற்ற சூப்பர் ஸ்டார்களைப் போல அல்லாமல் விஜய் ஒரு பணிவான சிறந்த மனிதர்,” என்று பாராட்டு தெரிவித்துள்ளா
Like Reply
மீண்டும் இணையும் இளையராஜா எஸ்.பி.பி... சென்னையில் பிரமாண்ட இசைக் கச்சேரி
இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியும், அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் வெளியாகியுள்ளன.
`இதைவிட வேறென்ன வேண்டும்' என இசை ரசிகர்களைக் கேட்கவைத்து விட்டனர் இளையராஜாவும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும். ஆம், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாடல்களில் ராயல்டி பிரச்னையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசை மேதைகளும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் மக்கள் முன் தோன்றப்போகின்றனர்.
[Image: 1_17195.jpg]
[color][font]
இந்த ஆண்டு, இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் ஆண்டாகும். அதற்காக, வெவ்வேறு கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து அவரை வைத்துப் பாராட்டு விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூடக் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது.


என்றாலும், அந்த நிகழ்ச்சியை நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டுகளித்த பல இசை ரசிகர்களுக்கு அதில், யேசுதாஸ், எஸ்.பி.பி, ஜானகி போன்ற இளையராஜாவின் ஆஸ்தான பாடகர்கள் பங்கேற்று ஒரு பாடல் கூடப் பாடவில்லையே என வருத்தத்துடன் கருத்தைப் பதிவு செய்தனர். அதிலும் எஸ்.பி.பி இல்லாத ஓர் இளையராஜா கச்சேரியா என்ற கேள்வி பலரால் கேட்கப்பட்டது. ஏற்கெனவே பாடல்களின் காப்புரிமை யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி-க்கும் இடையே சட்டச் சிக்கல்கள் நிலவி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் அவர் இல்லாதது மேலும் ஒரு குறையாகிப்போனது.




இந்நிலையில், தற்போது இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியும், அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் எஸ்.பி.பி மட்டுமல்லாது, யேசுதாஸ், பாம்பே ஜெயஶ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணிப் பாடகர்கள் இதில் பங்கேற்று பாடவிருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை உறுதி செய்யும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு செய்யும் இணையதளத்திலும் அங்கே பாடுபவர்களின் வரிசையில் எஸ்.பி.பி தொடங்கி அத்தனை பாடகர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. எது எப்படியோ, இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மீண்டும் இணைந்து இளைய நிலாவைப் பொழிந்தால் போதும் என ரசிகர்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.
[/font][/color]
Like Reply
SK 16: 2 ஹீரோ, 2 காமெடியன், 2 இயக்குனர்கள்.. சிவகார்த்திகேயன் படத்தில் புதிதாக இணைந்த 6 பிரபலங்கள்!

சென்னை: சிவகார்த்திகேயனின் 16வது படத்தில் பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர். சிவகார்த்திகேயனின் 16வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை சிவகாத்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் தயாரிக்கிறார். 
நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் ஆறு பிரபலங்கள் இணைந்துள்ளனர்
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடியன்கள் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும், ஹீரோவாக நடித்து வரும் நட்டி மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் இதில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
மேலும் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கின்றனர்.
கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படம் என்பதால் எஸ்கே 16 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், யோகி பாபு, சூரி, நட்டி, ஆர்.கே.சுரேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோரும் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
Like Reply
பிரியங்கா சோப்ராவை நடிகர் யோகி பாபுவுடன் ஒப்பிடும் இணையவாசிகள் - ஏன்?


[Image: _106820248_hi053791505.jpg]படத்தின் காப்புரிமைAFP
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற 'மெட் காலா' என்ற நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரம் இணையத்தில் பெரும் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதிலும் உள்ள பிரபல திரைப்பட நடிகர்களையும், ஆடை வடிவமைப்பாளர்களையும் ஒருசேர இணைக்கும் நிகழ்வுதான் மெட் காலா. நியூயார்க் நகரின் சிறப்பம்சமாக கருதப்படும் இந்நிகழ்வு, அங்குள்ள கலை ஆடை குறித்த பெருநகர அருங்காட்சியத்தின் நன்மைக்காக நடத்தப்படும் பிரம்மாண்ட விழாவாகும்.
ஒவ்வொரு ஆண்டும் விழாவில் பங்கேற்பவர்கள், குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ் வித்தியாசமான, மிகவும் விலைமதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான தீம் "Camp: Notes On Fashion".
ஹாலிவுட்டை சேர்ந்த பல நடிகர் - நடிகைகள் மிகவும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனாஸும் இதில் கலந்து கொண்டனர்.
[Image: _106820251_hi053791643.jpg]படத்தின் காப்புரிமைAFP[Image: _106820253_hi053790008.jpg]படத்தின் காப்புரிமைAFP[Image: _106820527_hi053792800.jpg]IMAGES
பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரம் குறித்து என்ன சொல்கிறார்கள்?
[Image: arts-and-culture-48184211]

Like Reply
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது - பிரமாண்ட செட்டில் பிக்பாஸ் 3 ஷூட்டிங்


[Image: BIGGBOS.jpg]பிக்பாஸ்


‘பிக்பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது நடிகர் கமல்ஹாசன். இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்புகளும், போராட்டங்களும் எழுந்தன. ஆனால் அவை அனைத்தும் நிகழ்ச்சிக்கான விளம்பரங்களாக மாறின.


[Image: bigg-boss-tamil.jpg]

ஒரே வீட்டுக்குள் 100 நாட்கள் 16 போட்டியாளர்கள் தங்கியிருந்து வெளி உலக தொடர்புகளின்றி,  பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை செய்ய வேண்டும். இதற்கு சில விதிமுறைகளும் விதிக்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஓவியா, சினேகன் உள்ளிட்டோர் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றனர்.

[Image: rajabheema.jpg]

இதையடுத்து 2018-ம் ஆண்டில் இரண்டாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் இந்தமுறை நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாக மாறியிருந்தார். யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத் என இளசுகள் பட்டாளங்கள் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வெற்றியாளர


தற்போது பிக்பாஸ் சீசன் 3 துவங்க உள்ளது. இன்று அதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு புரமொஷன் வீடியோக்களை படப்பிடிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சிக் குழுவினர். இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என தெரிய வருகிறது.

ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Like Reply
கர்மா இஸ் பூமராங்': ப்ளூ சட்டை மாறனை மட்டும் சும்மாவிட்டுவிடுமா?




சென்னை: ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்த்தவர்கள் கர்மா யாரை விட்டது என்கிறார்கள்.
சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் புதுப்படங்களை விமர்சித்து தனது யூடியூப் சேனலில் வெளியிடுகிறார். ப்ளூ சட்டை மாறன் என்றாலே அவர் படங்களை மோசமாக விமர்சிப்பார், நடிகர்கள், நடிகைகளின் நடிப்பை விளாசுவார் என்ற எண்ணம் உள்ளது.
பெரிய நடிகர்களின் படங்களை கிழித்து தொங்கவிட்டு அவர்களின் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் அவர் திட்டு வாங்கியது எல்லாம் பல முறை நடந்துள்ளது.


[Image: bluesattai-15482-1557467487.jpg]

புதுப்படங்கள்
திட்டுபவர்கள், திட்டுங்கள் அதுவும் எனக்கு பப்ளிசிட்டி தான் என்று ஜாலியாக எடுத்துக் கொண்டுவிட்டார் மாறன். புதுப்படங்கள் ரிலீஸானால் ப்ளூ சட்டை மாறன் அந்த படத்தையும், நடிகர்களையும் திட்டுவதை பார்க்கவே ஒரு கூட்டம் உள்ளது. அவர் பாராட்டி விமர்சிப்பது என்பது அதிசயமான விஷயம்.
[Image: blue-sattai-maaran-vivegam-review-26-1557467082.jpg]
 
[color][size][font]
சாபம்
அடுத்தவர்களின் படங்களை அசால்டா கேவலப்படுத்தும் நீங்கள் ஒரு படத்தை எடுத்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர். அவர்களின் விருப்பம், சாபம் ப்ளூ சட்டை மாறனை சும்மாவிடவில்லை.
[Image: petta2334-1557467088.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
தயாரிப்பாளர்
உதவி இயக்குநராக வேலை செய்த மாறனுக்கு படம் இயக்கும் ஆசை இருந்ததாம். அந்த ஆசை நிறைவேறாத விரக்தியில் அவர் விமர்சகராக மாறி படங்களை கிழித்து தொங்க விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மாறன் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். அவர் ஒரு படத்தை தயாரித்து, இயக்க கடந்த ஆண்டே திட்டமிட்டு அது நடக்கவில்லை.

[Image: bluesattai-1548-1557467281.jpg][/font][/size][/color]
 



Featured Posts
[color][size][font]
புதுப்படம்
மாறன் தயாரித்து, இயக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் 2வது வாரத்தில் துவங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் நடிக்உள்ளவர்கள் தங்களின் புகைப்படங்களை மாறனுக்கு இமெயில் மூலம் அனுப்பலாம். மே 13ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளத
[Image: bluesattai-25-1557467291.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
வெயிட்டிங்
மாறன் இயக்குநர் ஆகும் அறிவிப்பை பார்த்து பலரும் ஐ ஆம் வெயிட்டிங் என்று வில்லத்தனமாக சிரிக்கிறார்கள். எத்தனை பேர் படத்தை கிழி கிழின்னு கிழிச்சிருப்பீங்க, உங்க படம் வரட்டும் சும்மா விட மாட்டோம் என்று பலர் காத்திருக்கிறார்கள்.[/font][/size][/color]
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)