Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
விமர்சனம்
Advertisement


நடிப்பு - பிரியங்கா ருத், அசோக், வேலுபிரபாகரன்
தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சி.வி.குமார்
இசை - ஹரி டுபுசியா, ஷியாமளாங்கன்
வெளியான தேதி - 12 ஏப்ரல் 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த ரவுடியிசக் கதைகளிலோ அல்லது ஆக்ஷன் கதைகளிலோ இந்தப் படத்தில் காட்டியிருக்கும் அளவிற்கான ரத்தக் களறியான காட்சிகளையோ, கொடூரமான காட்சிகளையோ பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

ஏ சான்றிதழ் என்று முடிவு செய்துவிட்டு எப்படி வேண்டுமானாலும் படமெடுக்கலாமா?, இந்தப் படத்தில் உள்ள வன்முறை மற்றும் கொடூரத்திற்காக இரண்டு, மூன்று ஏ சான்றிதழ்களை சேர்த்துக் கொடுத்திருக்கலாம். 

தயாரிப்பாளராக சில நல்ல படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனராக அறிமுகமான மாயவன் படத்தில் கூட இப்படிப்பட்ட காட்சிகள் இல்லை. இந்தப் படத்தின் கதையை ரவுடிகளின் கதைக்களம் என முடிவு செய்துவிட்டு இப்படி கொலைக்களமாக, ரத்தக்களமாகக் காட்டியிருப்பது ரொம்பவே ஓவர். படம் முடிந்து வெளியில் வரும் போத நாமும் ரத்த வெள்ளத்தில் மிதந்தது போல் உள்ளது என்றுதான் சொல்வார்கள். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நம் மீது அடிக்கடி ரத்தம் தெறிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.

ராம்கோபால் வர்மா 20 ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்தி சினிமாவில் காட்டியதை இப்போது, தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சி.வி.குமார். பல காட்சிகளைப் பார்ப்பதற்கு வர்மாவின் படங்களில் உள்ள அந்தக் கலர் தெரிகிறது. அதற்கு ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார்கள்.

இந்துப் பெண்ணான பிரியங்கா ருத், முஸ்லிம் பையனான அசோக்கைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் அசோக்குடன் தனிக் குடித்தனம் நடத்துகிறார். போதை மருந்து கடத்தும் வேலுபிரபாகரனிடம் வேலைக்குச் சேர்கிறார் அசோக். ஆனால், சில நாட்களிலேயே அவர் போலீஸ் என்கவுன்டரில் பிரியங்கா எதிரிலேயே கொல்லப்படுகிறார். அசோக் கொலைக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க, வேலுபிரபாகரனின் எதிரியான மும்பையில் வசிக்கும் டேனியல் பாலாஜியிடம் சென்று உதவி கேட்கிறார் பிரியங்கா. பாலாஜியிடம் பயிற்சி பெற்று பிரியங்காவும் ஒரு ரவுடியாகி (?), கணவனைக் கொன்றவர்களைப் பழி வாங்க மீண்டும் சென்னை வருகிறார். அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அருவி படம் போல ஒரு பெண்ணே, அதாவது படத்தின் நாயகியே கையில் துப்பாக்கி தூக்கினால் படம் வெற்றி பெற்றுவிடும் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. பெண் ரவுடியாக பிரியங்கா ருத் நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். கண்களில் வெறுப்பு, கோபம், பழி வாங்கும் உணர்ச்சி என கேரக்டரில் அப்படியே பொருந்திப் போகிறார். ஆனால், அவருக்கான முடிவையும் சினிமாத்தனமில்லாமல் முடித்திருப்பது சரிதான் என்றாலும் பார்க்கும் ரசிகர்களுக்குப் பாவமாய்தான் இருக்கிறது.

படத்தின் நாயகன் அசோக். வழக்கமாக கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்வார். இந்தப் படத்தில் அடக்கி நடித்திருக்கிறார். ஆனாலும், அவரை சீக்கிரமே போட்டுத் தள்ளிவிடுகிறார்கள்.

படத்தின் மெயின் வில்லன் வேலுபிரபாகரன். போதைப் பொருள் கடத்தும் ராவுத்தர் கதாபாத்திரத்தில் நடையிலும், பார்வையிலும் மிரள வைக்கிறார். அதிலும், ஆரம்பத்திலேயே ஒருவன் வாயில் கேன் வழியாக பெட்ரோலை ஊற்றி பின்னர் அதில் நெருப்பைப் பற்ற வைத்து...யப்பா...தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு கொடூர வில்லத்தனமான கொலைக் காட்சி அது. அது மட்டுமா, அடுத்தும் எப்படியெல்லாம் கொடூரமாகக் கொல்லலாம் என தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார்கள். ஒருவருக்கு ஆணிகளைப் போட்டு பாட்டில்களால் அடுத்து கொல்லுவது, மற்றொருவருக்கு உயிர்நிலையில் இரும்பு ராடு எடுத்து துடிக்கத் துடிக்க அடித்துக் கொல்வது என படம் பார்ப்பவர்கள் கண்களை மூடிக் கொள்ளும் அளவிலான காட்சிகள். இப்படியெல்லாம் காட்சிகள் வைத்தால் வித்தியாசம் என ரசிகர்கள் பாராட்டுவார்கள் என சில இயக்குனர்கள் தப்புக் கணக்கு போடுகிறார்கள். வேலுபிரகாரன் மகன்களாக நடித்திருக்கும் இருவரும் கொடூரமான வாரிசு வில்லன்கள்.

டேனியல் பாலாஜி மும்பையில் இருக்கும் தாதா. சென்னையை மீண்டும் தன் கைக்குள் கொண்டு வருவதற்காக பிரியங்காவைப் பயன்படுத்தி திட்டம் போடுகிறார். ஒரு வீட்டு மாடியில் சாதாரண வீட்டில் இருக்கும் அவரை நாம் பெரிய தாதா என்று எப்படி நம்புவது எனத் தெரியவில்லை. அவரை சுலபமாகத் தேடிச் செல்கிறார் நாயகி பிரியங்கா. வழக்கமான வில்லத்தனம் என்பதால் டேனியல் பாலாஜி சுலபமாக நடித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் தலைவன் லாலா-வாக நடித்திருப்பவரும், அமைச்சராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் தேனப்பன், போலீஸ் அதிகாரி நரேன் சில காட்சிகளில் வந்தாலும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். அது எப்படி எல்லா கடத்தல்காரர்களிடம் ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ வேலை செய்யும் ஒருவர் சரியாக இருக்கிறார் என்பது தெரியவில்லை. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் ஈ.ராமதாஸ். 

பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத் தொகுப்பு இயக்குனரின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு படத்திற்கான உணர்வைக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் முடிவில் காதலிக்காதீர்கள், அதிலும் மதம் மாறி யாரையும் காதலித்துவிடாதீர்கள் என இயக்குனர் மறைமுகமாக சொல்வது போல் உள்ளது. சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு சாதாரண ரவுடிகளைப் பற்றிய படங்களைப் பார்த்த நமக்கு பல கோடி ரூபாய் போதைப் பொருளை சர்வ சாதாரணமாய் கடத்தும் கும்பலைப் பற்றிய ஒரு கதையைக் கொஞ்சம் டீடெயிலாகக் காட்டியிருப்பது மட்டுமே கொஞ்சம் புதிது. படத்தின் பட்ஜெட்டில் பாதியை ரத்தம் தெளிப்பதற்காக மட்டும் செலவு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. 

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் - ரிவெஞ்ச் ஆப் உமன்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
"நிச்சயமா இதுல மட்டும் நான் நடிக்கவே மாட்டேன்"... சாய் பல்லவி ரொம்பத் தெளிவு தான்!

சென்னை: எந்த நிலையிலும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
பிரேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து, இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் கரு, மாரி 2 என இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் இவர் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம், விரைவில் வெளிவர உள்ளது.

[Image: sai-pallavi22-1555301533.jpg]



இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தான் ஒருபோதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், அழகு சாதன பொருட்களை பயன்படுவதால் மட்டும் ஒருவருடைய அழக மாறிவிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேக்கப் போட்டால் தான் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என தனக்கு வேண்டியவர்கள் கூறுவதாகவும், அதன் காரணமாகவே தான் மேக்கப் போடாமல் நடிப்பதாகவும் சாய் பல்லவி கூறியுள்ளார். அதை தான் இயக்குனர்களும் விரும்புகின்றனா் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Like Reply
விவசாயம், கார்பரேட், பயங்கரவாதம் : அதிரடி காட்டும் காப்பான் டீசர்
[Image: NTLRG_20190414203707205835.jpg]

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா - கேவி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் காப்பான். மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமன் இராணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மோகன்லால் பிரதமராகவும், சூர்யா பாதுகாவலாராகவும் நடித்துள்ளனர். ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்க, லைகா நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காப்பான் படத்தின் டீசர் வௌியாகி உள்ளது. 1.33 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் சூர்யா பலவிதமான ரோல்களில் வருகிறார். விவசாயத்திற்கு குரல் கொடுப்பவர் போன்றும், பயங்கரவாதி போன்றும் சித்தரிக்கப்படுகிறார். அதோடு உளவாளி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரி போன்று வரும் காட்சிகளும் டீசரில் இடம் பெற்றுள்ளன. 

விவசாயம், கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் இந்த டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்களும் இந்தப்படத்தில் பேசப்படும் என தெரிகிறது. டீசர் வௌியான 1மணிநேரத்தில் 5லட்சம் பார்வைகளை கடந்தது. 
Like Reply
Atlee: தளபதி 63 கதை என்னுடையது... திருட்டு நடந்தது குறித்து குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா பேட்டி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குனர் கே.பி செல்வா பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil | Updated:Apr 15, 2019, 08:54PM IST




[/url]


[Image: thalapathy-63.jpg]Atlee: தளபதி 63 கதை என்னுடையது... திருட்டு நடந்தது குறித்து குறும்பட இயக்குநர் ...
‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றியை அடுத்து தற்போது [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D]விஜய்
 & அட்லிமூன்றாவதாக கூட்டணி அமைந்துள்ளனர். இது விஜய்யின் 63வது படமாகும். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் காட்சிகள் மைதானத்தில் பிரமாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டு வருகின்றது. 

கதை திருட்டு?
இந்நிலையில் தளபதி 63 படம் தன்னுடையது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா பேட்டி கொடுத்துள்ளார். 

அவர் பேசுகையில், “நான் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். இதை ட்ரீம் வாரியர் பிக்ஸர் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோ நிறுவனத்திடம் கூறியிந்தேன்.

நயன்தாரா, கங்கணா ரணாவத் போன்ற பெரிய நடிகைகளை வைத்து படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த கதையை அட்லி விஜய்யை வைத்து எடுப்பதாக தெரிந்து அதிர்ந்து போனேன். 

இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டேன். ஆனால் அவர்கள் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிடுங்கள் என அனுப்பி விட்டனர். இதையடுத்து திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிட்டதற்கு சங்கத்தில் 6 மாதத்திற்கு மேல் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கதை திருட்டு என புகார் தெரிவிக்க முடியாது என தெரிவித்து கடிதத்தை கொடுத்து அனுப்பிவிட்டனர். 

இந்நிலையில் பட கதை குறித்து அட்லியின் மேனேஜர் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் எக்ஸிகுடிவ் தயாரிப்பாளர் என்னிடம் பேசினார்கள். இந்த கதை விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம். உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என கூறினர். இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தேன். 

என்னுடைய நெருங்கிய நண்பரின் மூலம் இந்த கதையின் கரு அட்லிக்கு கிடைத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்
Like Reply





அவன் படமா... முடியவே முடியாது: மிஸ்டர் லோக்கலுக்கு நோ சொன்ன சந்தானம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 


இவர்களோடு சேர்ந்து ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இயக்குனர் ராஜேஷ் படங்களில் எப்போதும் அவர் படத்தில் இதற்கு முன்னர் நடித்த ஹீரோக்கள் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவார்கள். அதே போல மிஸ்டர் லோக்கல் படத்தில் ஜீவா, ஆர்யா, கார்த்தி, ஜிவி பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகிய 5 ஹீரோக்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர். 

[Image: 1555488175-8986.jpg]
இதில் புது விஷயம் என்னவெனில், இயக்குனர் ராஜேஷ் சந்தனத்தையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைத்தாராம். ஆனால், அவர் சிவகார்த்திகேயன் படம் என்பதால் நடிக்க மறுத்துவிடாராம். சந்தானம் சிவகார்த்திகேயன் இருவருக்கும் தொழில் போட்டி இருப்பதன் காரணமாகவே சந்தானம் இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. 

[Image: 1555488205-8546.jpg]
Like Reply
``நீங்களும் பார்க்காதீங்க, யாருக்கும் ஷேர் பண்ணாதீங்க!" - அவெஞ்சர்ஸ் எண்டு கேம் இயக்குநர்கள் வேண்டுகோள்!

[/url]வரும் 26-ம் தேதி வெளியாகவுள்ள `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' படத்தின் சில நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையைக் கிளப்பின. இந்நிலையில், ``இந்தக் காட்சிகள் படத்தில் இருப்பவையா?" என்று பலர் சந்தேகிக்கின்றனர். காரணம், படத்தின் இயக்குநர்கள் இப்படி லீக் செய்பவர்களைக் குழப்பியடிக்க 4 கிளைமாக்ஸ்கள் ஷூட் செய்ததாக முன்னரே பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

[Image: avengers-the-end-game-poster_10139.jpg]
[color][font]

மற்றொரு புறம், ஒரு சில ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ``இந்த லீக்கான சீன்ஸ் என் கண்ணுல படாம பார்த்துக்கணும். தியேட்டரில் பார்க்கும்போது அந்த ஜோர் இருக்காது" என்று விலகி ஓடுன்றனர். இந்த விஷயங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க இது சம்பந்தமான மீம்களும் சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்து வருகின்றன. இணையத்தில் படத்தின் ஃபுட்டேஜ் லீக்கானதை அடுத்து படத்தின் இயக்குநர் இரட்டையர்கள் ரூஸோ பிரதர்ஸ் அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர்.


[/font][/color]
[Image: Russo_brothers_10526.jpg]
[color][font]
அந்தக் கடித்ததில்,
``உலகின் தலைசிறந்த ரசிகர்களுக்கு,
கடந்த 11 வருடமாக 11 பிரான்சைஸ்களாக இருக்கும் இந்தக் கதை முடிவுக்கு வருகிறது. நண்பர்கள், உறவினர்கள் சூழ இப்படத்தின் கதையிலும், கதாபாத்திரங்களிலும் ஒன்றிப்போன ரசிகர்களுக்கு, ஆச்சர்யமான, அதேசமயம் திருப்திகரமான ஒரு படமாக நிறைவுற வேண்டும் என்றும் கடந்த மூன்று வருடங்களாக இந்த எண்டு கேம் படத்துக்கு எங்கள் இருவருடன் இணைந்து பல நூற்றுக்கணக்கானோர் வேலை செய்துள்ளனர். 
[/font][/color]
[Image: avengers-the-end-game-poster_10407.jpg]
[color][font]
எங்களின் இந்தப் பயணத்தில் நேரம், கவனம் என முழுமனதுடன் தொடர்ந்து பயணிக்கும் ரசிகர்களாகிய உங்களுக்கு ஒரு வேண்டுகோள். எதிர்வரும் நாள்களில் எண்டுகேம் தொடர்பான விஷயங்களைப் பார்க்க நேர்ந்தால், அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து 'ஸ்பாய்லர்' ஆக்காதீர்கள். நீங்களும் அந்த வீடியோக்களைப் பார்த்து அவெஞ்சர்ஸ் படத்தின் தியேட்டர் அனுபவத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். 
[/font][/color]
தானோஸ் உங்கள் அமைதியைக் கோருகிறான். 

#DontSpoilTheEndgame!"

என அந்தக் கடிதத்தை முடித்துள்ளனர். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.
[color][font]
[url=https://www.vikatan.com/author/3291-allaudin-hussain][/font][/color]
Like Reply
'இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை!'' - நக்கீரன் கோபால் வருத்தம்

[Image: 573530093168422789933056410649275268595712njpg]

''இயக்குநர் மகேந்திரனை கலைமேதை ஒருவர், கைகுலுக்க வரும் போது அவமானப்படுத்தினார். அதற்காக ரொம்பவே வருந்தினார் மகேந்திரன்'' என்று நினைவஞ்சலிக் கூட்டத்தில், நக்கீரன் கோபால் குறிப்பிட்டார்.
இயக்குநர் மகேந்திரன் சமீபத்தில் காலமானார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நக்கீரன் கோபால் கலந்துகொண்டு பேசியதாவது:
''1992-ம் வருடத்தில் இருந்தே மகேந்திரன் சாருக்கும் எனக்கும் நல்ல பழக்கம் உண்டு. அவரை அண்ணன் என்றுதான் அழைப்பேன். அப்போது ஒருமுறை அவர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. ‘மூணுநாளா ரூம்லேருந்தே வெளியே வரமாட்டேங்கிறாரு’ என்று சொன்னார்கள்.

நான் உடனே போனேன். அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தேன். சமீபத்தில் ஒரு விழாவுக்குச் சென்றபோது, ஒரு கலைமேதையை அவர் சந்தித்ததாகவும் அப்போது கைகுலுக்க இவர் கையை நீட்டியதாகவும் உடனே அந்த மேதை, கையைத் தட்டிவிட்டதாகவும் ‘எனக்குள்ளே ஒரு வைப்ரேஷன் இருக்கு’ என்று அவர் சொன்னதாகவும் இதனால் மனசே சரியில்லை என்றும் மகேந்திரன் சார் சொன்னார். இதையெல்லாம் வைத்து, ஒரு கட்டுரை வெளியிட்டேன். அது அவருக்கு ஓரளவு வடிகாலாக இருந்தது.
அதேபோல, ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து ’மெளனராகம்’ படம் வெளியானது. ரஷ்ய திரைப்பட விழாவுக்கு இந்த இரண்டு படங்களில் எதை அனுப்புவது என பேச்சு நடந்துகொண்டிருந்தது.
அப்போது இயக்குநர் மகேந்திரன், ரஜினியை வைத்து ‘கைகொடுக்கும் கை’ படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தை அனுப்பினால், ‘கைகொடுக்கும் கை’ படவேலைகள் பாதிக்கும் என்பது உள்ளிட்ட சில அரசியலெல்லாம் விளையாடின. ஆகவே ‘மெளனராகம்’ படம் அனுப்பப்பட்டது. இதுகுறித்தும் என்னிடம் அவர் வேதனையாகச் சொன்னார். இதையும் ஒரு கட்டுரையாகப் பதிவு செய்தேன். இது இயக்குநர் மகேந்திரனுக்கு ஆறுதலாக இருந்தது.
ஒரு டஜன் அளவுக்குத்தான் படங்களை எடுத்திருக்கிறார் மகேந்திரன் சார். ஆனால் உலக அளவுக்கு இன்றைக்கும் அவரை பேசிக் கொண்டிருக்கிறோம். என்றைக்கும் பேசிக் கொண்டிருப்போம்.
பிரபாகரனை ஒருமுறை இரண்டுமுறை பார்த்தவர்களெல்லாம் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு, பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... பார்க்காதவர்கள் கூட கிராபிக்ஸில் போட்டோக்களை இணைத்து, விளம்பரப்படுத்துகிறார்கள்.
ஆனால், பிரபாகரனே விருப்பப்பட்டு அழைத்து, அங்கே சென்ற மகேந்திரன் சார், மூன்று நான்கு மாதங்கள் இருந்து பிரபாகரனின் தம்பிகளுக்கு திரைக்கதை குறித்தும் சினிமா குறித்தும் வகுப்புகள் நடத்தினார். தனி ஈழம் அமைந்ததும் இங்கே ஒரு கல்லூரி அமைக்கப்படும். அதில் நீங்கள் அடிக்கடி வந்து வகுப்புகள் எடுக்கவேண்டும் என்றெல்லாம் கேட்டுக்கொண்டார் பிரபாகரன்.
ஆனால் இவை எது குறித்தும் தம்பட்டம் அடித்துக்கொண்டதே இல்லை மகேந்திரன் சார். நானே பலமுறை கேட்டும் கூட, ‘பிறகு வெளியிடலாம் பிறகு வெளியிடலாம்’ என்றே சொல்லிவந்தார். இந்தப் புகைப்படங்களையெல்லாம் உலகுக்குக் காட்டி, பெயரும் புகழும் சம்பாதிக்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததே இல்லை. இப்படியொரு மனிதரைப் பார்ப்பது அபூர்வம்''.
இவ்வாறு நக்கீரன் கோபால் பேசினார்
Like Reply
பிரபல டிவி சீரியல் நடிகைகள் இருவர் சாலை விபத்தில் பலி - திரையுலகினர் அதிர்ச்சி!

டிவி சீரியர் நடிகைகள் பார்கவி மற்றும் அனுஷா ரெட்டி ஆகியோர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் ஷூட்டிங் முடிந்து, வீடு திரும்பி கொண்டிருந்த போது சோகமான நிகழ்வு நடந்துள்ளது.


Samayam Tamil | Updated:Apr 17, 2019, 08:43PM IST

[Image: tv-serial-died.jpg]பிரபல டிவி சீரியல் நடிகைகள் இருவர் சாலை விபத்தில் பலி - திரையுலகினர் அதிர்ச்சி!
  • டிவி சீரியல் நடிகைகள் இருவர் சாலை விபத்தில் பலி

  • ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது சோகம்
தெலங்கானா மாநிலம் விகரபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு தெலுங்கு டிவி சீரியல் நடிகைகள் பலியாகியுள்ளனர். அவர்கள் பார்கவி(20) மற்றும் அனுஷா ரெட்டி(21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் சீரியல் ஷூட்டிங் முடித்து விட்டு, ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிராக வந்த டிரக்கில் மோதாமல் இருக்க, காரை ஓட்டுநர் திருப்பியுள்ளார். 

இதில் சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இன்று அதிகாலை அப்பாரெட்டி குடா பகுதியில் விபத்து நடந்துள்ளது. இதில் பார்கவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

படுகாயம் அடைந்த அனுஷா ரெட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காயமடைந்த ஓட்டுநர் மற்றும் வினய் குமார் ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள ஆஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






பார்கவி “முத்யலா முகு” என்ற சீரியலில் நடித்து வந்துள்ளார். அனுஷா ரெட்டி புதுமுக நடிகை ஆவார். இருவரும் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விகாராபாத்தின் அனந்தகிரி வனப்பகுதியில் சீரியல் ஷூட்டிங்கிற்காக, கடந்த திங்கள் நடிகர், நடிகைகள் சென்றுள்ளனர். அந்த படப்பிடிப்பு முடிந்து, சீரியல் குழுவினர் ஐதராபாத் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. 


 


Like Reply
ராகவா லாரன்ஸின் எச்சரிக்கை! - வருத்தம் தெரிவித்த சீமான்
[Image: 72547a533625777fdc98cf13c6a7bc4d.jpg]

நடிகரும், இயக்குநருமான் ராகவா லாரன்ஸ், நேற்று சீமானின் பெயரை குறிப்பிடாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சீமான் மீதும், அவரது பேச்சு மீதும் பெரிய மாரியாதை வைத்திருக்கிறேன். அப்படி இருந்தும் அவர் தன்னை மேடை ஒன்றில் விமர்சித்து பேசியதாகவும், அன்றில் இருந்து அவரது கட்சி தொண்டர்கள் தன்னை பற்றி மோசமாக விமர்சிப்பதோடு, தனது மாற்றுத்திறனாளி பிள்ளைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தெரிவித்திருந்தார்.

 

மேலும், இது பிரச்சினையை பேசி முடித்துக் கொள்ள தான் விரும்புகிறேன், ஆனால், அதற்கு நீங்கள் தயார் இல்லை என்றால், அதை வேறு விதத்தில் சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன், என்று எச்சரிக்கை விடும் தோனியில் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் அறிக்கை குறித்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் சீமானிடம், நேற்று மாலை நிருபர்கள் கேட்டனர்.

 

அதற்கு பதில் அளித்த சீமான், ”லாரன்ஸ் மீது எனக்கு எப்போதும் வருத்தமில்லை, மதிப்புதான். அவர் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாரு. உதவுறாரு. அவர் சேவை குணம் மீது எனக்கு மதிப்பு இருக்கு. யாராவது ரெண்டு பேர் புரிதலில்லாமல் விமர்சித்து இருக்கலாம். அப்படி இருந்தா அது தப்பு. அது யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கலாம். ஏன்னா, லாரன்ஸ் தம்பிய ஒரு எதிரியா பார்க்க வேண்டிய தேவையே நமக்கு இல்லை. யாராவது ஒருவர் நம்ம பேர்ல போட்டுவிட்டு வம்பு இழுப்பாங்க. போலியான முகநூல் பக்கங்களை வச்சிக்கிட்டு, நான் பேட்டு கொடுக்காமலேயே, நா பேசினதா போடுறாங்க. அந்த மாதிரி வேலைகள் நடக்க வாய்ப்பிருக்கு. அப்படி செய்திருந்தால் அது தவறு. அதற்காக நான் தம்பி லாரன்ஸ்கிட்ட என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்
Like Reply
ரஜினிக்கு இணையாக விஜய்யின் வளர்ச்சி வளர்ந்த நாள் இன்று, என்ன தெரியுமா?

தளபதி விஜய் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழகம் மற்றும் கேரளாவில் ரஜினியை விட அதிக வசூல் கொடுத்த நடிகராகிவிட்டார்.
இந்நிலையில் விஜய் இதற்கு முன்பே ரஜினிக்கு இணையான வசூலை கொடுத்துள்ளார், ஆம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் விஜய் நடித்த கில்லி படம் திரைக்கு வந்தது.
இப்படம் சுமார் ரூ 50 கோடி வரை வசூல் செய்து ரஜினி படங்களுக்கு இணையான மார்க்கெட்டை விஜய்க்கு பெற்றுக்கொடுத்தது.
கில்லி வந்து 15 வருடங்கள் ஆகியதை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்டு செய்
Like Reply
காஞ்சனா 3

[Image: 201904191703235367_Kanchana-3-Movie-Revi...MEDVPF.gif]
நடிகர்
ராகவா லாரன்ஸ்
நடிகை
வேதிகா
இயக்குனர்
ராகவா லாரன்ஸ்
இசை
டூபாடு - எஸ்.தமன்
ஓளிப்பதிவு
வெற்றி



ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீமன், தாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள் என அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்கிறார்கள்.

போகும் வழியில் மரம் ஒன்றில் அடிக்கப்பட்ட ஆணி ஒன்றை லாரன்ஸ் பிடுங்கி விடுகிறார். அதன்பின்னர் அதில் இருக்கும் பேய், அவர்களுடன் சேர்ந்து வருகிறது.

[Image: 201904191703235367_1_Kanchana-3-Review2._L_styvpf.jpg]
[size][font][size][font]

தாத்தா வீட்டிற்கு ராகவா லாரன்சின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸ் மீது காதலலுடன் அவரையே சுற்றி வருகிறார்கள். அவரும் மூன்று பேரிடமும் நெருக்கமாக பழகி வருகிறார்.

பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறார்கள். இதையடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை போட செல்ல அங்குள்ள அகோரி ஒருவர், அவர்கள் வீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறி, சில சோதனைகளை செய்யச் சொல்கிறார். அவர்களும் அதனை செய்ய, வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பது உறுதியாகிறது.

[/font][/size][/font][/size]
[Image: 201904191703235367_2_Kanchana-3-Review3._L_styvpf.jpg]
[size][font][size][font]

ஒரு கட்டத்தில் அந்த பேய் லாரன்சின் உடலை பயன்படுத்திக் கொள்ள, வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரிய வருகிறது. 
கடைசியில், லாரன்ஸ் உடலில் பேயாய் வந்தவரின் முன்கதை என்ன? எதற்காக லாரன்ஸ் உடலில் புகுந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே காமெடி கலந்த திகிலான மீதிக்கதை.

இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் தனது வழக்கமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ஆக்‌ஷன், நடனம், மாஸ் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். காஞ்சனா முதல் பாகத்திற்கு பிறகு கோவை சரளா - தேவதர்ஷினி கூட்டணி இதிலும் கலக்கியிருக்கிறது. கோவை சரளா தனது பாதி ஆங்கிலம் கலந்த பேச்சால் அனைவரையும் கவர்கிறார். அதேபோல் கணவன், மனைவியாக வரும் ஸ்ரீமன் - தேவதர்ஷினி கூட்டணியின் வழக்கமான காமெடியால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

[/font][/size][/font][/size]
[Image: 201904191703235367_3_Kanchana-3-Review5._L_styvpf.jpg]
[size][font][size][font]

வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகிய மூன்று நாயகிகளுக்கும் லாரன்சை காதலிப்பது மட்டுமே வேலை. கவர்ச்சியுடன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ், அனுபமா குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, சூரி தான் வரும் காட்சிகளில் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார். சாய் தீனா, கபீர் துஹான் சிங் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒரு இயக்குநராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் இயக்கியிருப்பது பெரிய பலம். படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காமெடியையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார். காஞ்சனா 2-க்கு ஓரளவுக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் காஞ்சனா முதல் பாகத்தை நியாபகப்படுத்தும்படி உருவாகி இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனலாம்.

[/font][/size][/font][/size]
[Image: 201904191703235367_4_Kanchana-3-Review4._L_styvpf.jpg]
[size][font][size][font]

திரைக்கதையின் வேகத்திற்கு படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் வேகத்தடையாக அமைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் சென்டிமெண்ட் காட்சிகளும் போரடிக்க வைக்கிறது. மற்றபடி படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக உருவாகி இருக்கிறது. படத்தின் முடிவில் காஞ்சனா 4-ஆம் வரும் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தமனின் பின்னணி இசையும், வெற்றியின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் `காஞ்சனா 3' கலகல பேய் கதை. #Kanchana3 #Kanchana3Review #RaghavaLawrence #Vedhika #Oviya #NikkiTamboli #KovaiSaral[/font][/size]
[/font][/size]
Like Reply
காஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் வேறொன்று ?

[Image: NTLRG_20190420164138667529.jpg]

ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் நேற்று வெளியான படம் 'காஞ்சனா 3'. முந்தைய இரண்டு பாகங்களம் நன்றாக வசூலித்ததால், இந்தப் படத்தைக் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு நேற்று வெளியிட்டார்கள். 

படத்தைப் பார்த்த பலரும் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் அதே மாதிரியான கதையில் இருப்பதாகச் சொன்னார்கள். மூன்று பாகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. சில நடிகர்கள் மட்டும்தான் மாறியிருக்கிறார்கள். மற்றபடி, பேய் பயமுறுத்தல், பழி வாங்குதல் எல்லாமே ஒன்றுதான் என்று பரவலான விமர்சனம் எழுந்தது. அரைத்த பேயையை மீண்டும் ராகவா லாரன்ஸ் அரைத்திருக்கிறார் என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது.

அதே சமயத்தில் நேற்றைய முதல் நாள் வசூலில் இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 10 கோடியை வசூலித்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு நேரடித் தெலுங்குப் படங்கள் அளவிற்கு வசூல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் அடுத்த சில நாட்களிலேயே இந்தப் படம் போட்ட முதலீட்டை வசூலித்துவிடும் என்கிறார்கள். முந்தைய பாகங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்
Like Reply
அஜித் லைனில் நிற்காததை கண்டித்த பெண்கள், என்ன நடந்தது அங்கு?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் செம்ம வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அஜித் சமீபத்தில் வாக்களிக்க வந்தார், அப்போது ரசிகர்கள் அனைவரும் கூடி பெரிய ரகளையே நடந்தது.
அப்போது கூட்டத்தை பார்த்து போலிஸார் அஜித்தை உடனே உள்ளே அனுப்பி வாக்களிக்க சொன்னார்கள், அதை பார்த்த சில பெண்கள் சண்டையிட்டதாக கூறப்படுகின்றது.
ஆனால், அத்தனை கூட்டத்தில் அஜித் லைனில் நின்று இருந்தால், கண்டிப்பாக பெரியளவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
அதை தடுக்கவே போலிஸார் அப்படி செய்துள்ளதாக தெரிகின்றது
Like Reply
ராஜபாளையத்தில் தொடங்கியது ஸ்ருதி ஹாசன்- விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படப்பிடிப்பு!

[Image: vijay_sethupathi_shruti_11417.jpg]
இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு எனும் பொதுவுடைமை' எனத் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணி மற்றும் இடத்தைப் பிடித்த இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் அடுத்த படம்,  'லாபம்'. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் தொடங்கியது. படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க, இவருக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.  இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். விஜய் சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான ஆறுமுகக்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார். சமூக அரசியல் பேசும்  படங்களைத் தந்துள்ள இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்,  தேசிய விருது பெற்றவர்.

[Image: D4u_raQU8AIlhbO_11207.jpg]


ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவில், டி.இமான் இசையில் உருவாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, மதுரை எனப் பல தென் மாவட்ட ஊர்களில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது
Like Reply
தன் சினிமா கரியரை உதவி இயக்குநராக ஆரம்பித்து, இப்போது ஹீரோவாக ஜொலிக்கும் பிரபலங்களைப் பற்றிய தொகுப்பு இது.
[Image: 155620_thumb.jpg]
"நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு தற்செயல்தான்!" என்பதைப் பல பிரபலங்களின் பேட்டிகளில் பார்த்திருப்போம். நடிகனாக வேண்டும், இயக்குநராக வேண்டும் என்று சினிமா துறைக்குள் நுழைந்து தங்களின் எண்ணத்தைச் சாத்தியப்படுத்தியவர்கள் மத்தியில், "நினைத்த துறை வேறு; இருக்கும் துறை வேறு. ஆனால், சினிமாவுக்குள் இருந்தால் போதும்" என்ற எண்ணமுடைய பலரும் இருக்கின்றனர். அப்படி தன் சினிமா கரியரை உதவி இயக்குநர்களாக ஆரம்பித்து, இப்போது ஹீரோக்களாக ஜொலிக்கும் பிரபலங்களைப் பற்றிய தொகுப்பு இது.

கார்த்தி : 

[Image: ioAdqTw_11060.jpg]




வெளிநாட்டில் மாஸ்டர் டிகிரி படித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிய கார்த்திக்கு, சினிமா இயக்குவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக 'ஆயுத எழுத்து' படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தில் கல்லூரி நண்பர்களில் ஒருவராக சில காட்சிகளில் தோன்றுவார். பிறகு, நடிக்க வாய்ப்பு வர 'பருத்திவீரன்' கதையில் நடிகராக அறிமுகமான கார்த்தி, இன்று கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். தன் இயக்குநரான மணிரத்னம் இயக்கிய படத்திலேயே (காற்று வெளியிடை) ஹீரோவாக நடித்துவிட்டார். தற்போது, 'கைதி', பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படம், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார், நடிகர் கார்த்தி.     

சித்தார்த் : 

[Image: siddhu_11471.jpg]

கல்லூரிப் படிப்பை முடித்த சித்தார்த்தை இயக்குநர் மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தியது ஜெயேந்திரா என்ற விளம்பரப் பட இயக்குநர். இவர் சித்தார்த்தின் அப்பாவுக்கு நண்பர் மற்றும் பின்னாளில் சித்தார்த்தை வைத்தே '180' படத்தை இயக்கியவர். மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். எழுத்தாளர் சுஜாதா மூலமாக ஷங்கருக்கு அறிமுகமான சித்தார்த், 'பாய்ஸ்' படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து, தனது குருவான மணிரத்னம் இயக்கத்தில் 'ஆயுத எழுத்து' படத்தில் நடித்தார். 2017-ஆம் ஆண்டு வெளியான 'அவள்' படத்திற்கு மிலிந்த் ராவுடன் இணைந்து கதை எழுதியுள்ளார். இப்போது இவர் வசம் 'சிவப்பு மஞ்சள் பச்சை', 'அருவம்' என இரு படங்கள் உள்ளன. 



விஷால் :

[Image: vishal_11479.jpg]

அப்பா தயாரிப்பாளராக இருந்தாலும், முறைப்படி சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த விஷால், அர்ஜுனிடம் 'வேதம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பின்னரே, 'செல்லமே' படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படி ஆரம்பித்த இவரது பயணம் இன்று 25 படங்களைக் கடந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த விஷாலுக்கு வில்லனாக 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார். 'அயோக்யா' ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது இதை முடித்துவிட்டு, 'இரும்புத்திரை 2' படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், நாய்களை மையமாக வைத்து ஒரு படத்தை விஷால் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன.     

நானி :

[Image: nani_11268.jpg]

ஆர்ஜே-வாக இருந்த நானி, லக்‌ஷ்மி நாராயணா இயக்கிய 'ராதா கோபாலம்' படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். பிறகு, 'அல்லரி புல்லோடு', 'தீ', 'அஸ்த்ரம்' உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார். தன் தோழி இயக்குநர் நந்தினி ரெட்டி ஒரு விளம்பரப் படத்தை இயக்க, அதில் நடித்துள்ளார். பிறகு இயக்குநர் மோகன் கிருஷ்ணா 'அஸ்ட சம்மா' என்ற காமெடிப் படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படம் ஹிட்டாக அடுத்தடுத்து நானிக்கு அடித்தது ஜாக்பாட். இப்போது 'நேச்சுரல் ஸ்டார்' என்ற அடைமொழியுடன் தெலுங்கு சினிமாவில் ஜொலித்து வருகிறார். 'பிக் பாஸ்' இரண்டாவது சீஸனைத் தொகுத்து வழங்கினார். 'டி ஃபார் டொப்பிடி', 'ஆவ்' என இரு படங்களை தயாரித்துள்ளார். இவரது நடிப்பில் இந்த வாரம் 'ஜெர்ஸி' வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக, விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

ரவி தேஜா :

[Image: ravi_teja_11150.jpg]

'அபிமன்யு', 'சைதன்யா', 'ஆஜ் கா கூண்டா ராஜ்' உள்ளிட்ட படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய ரவி தேஜா, பின் கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் வெளியான 'நின்னே பெல்லாடுதா' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அந்தப் படத்தில் ஒரு சின்ன ரோலிலும் நடித்திருந்தார். அவரின் அடுத்தடுத்த படங்களில் உதவி இயக்குநராகவே இருந்த ரவி தேஜாவை 'சிந்தூரம்' என்ற படத்தில் லீடு ரோலில் நடிக்க வைத்தார். அந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க, முழுநேர நடிகராக மாறி 60 படங்களுக்குமேல் நடித்துவிட்டார். 'அமர் அக்பர் ஆன்டனி' படத்தைத் தொடர்ந்து, 'டிஸ்கோ ராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

சந்தீப் கிஷன் :

[Image: Sundeep-Kishan-11_11469.jpg]

சென்னையில் பிறந்து வளர்ந்த சந்தீப் கிஷன், லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போதே சினிமா வாய்ப்புகள் தேடி அலைந்திருக்கிறார். அப்படி ஒருநாள் கெளதம் மேனனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, தன்னிடம் உதவி இயக்குநராகச் சேரச் சொல்லியிருக்கிறார், கெளதம். 'வாரணம் ஆயிரம்' படத்தில் பணியாற்றிய பன்னிரண்டு உதவி இயக்குநர்களுள் சந்தீப்பும் ஒருவர். அதன் பிறகு, 'சிநேக கீதம்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழில் 'யாருடா மகேஷ்' இவருக்கு முதல் படம். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் இவரின் கைவசம், 'நரகாசூரன்', 'கண்ணாடி', 'தெனாலிராமா பி.ஏ., பி.எல்.,' உள்ளிட்ட படங்கள் உள்ளன.  

டொவினோ தாமஸ் :

[Image: tovino_11201.jpg]

மாடலாக இருந்து பல விளம்பரப் படங்களில் நடித்த டொவினோ தாமஸ், 2012-ஆம் ஆண்டு வெளியான 'பிரபுவின்டே மக்கள்' என்ற படத்தில் சின்ன ரோலில் நடித்து அறிமுகமானார். அதற்கு முன்னர், ரோஷன் பீதாம்பரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'தீவ்ரம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மோகன்லால், ப்ரித்விராஜ், உன்னி முகுந்தன் போன்ற  மற்ற ஹீரோக்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதில் இவரது நடிப்பு பரவலாகப் பேசப்படவே, இவரை லீடு ரோலில் வைத்தே படமெடுக்கத் தொடங்கிவிட்டனர். 'மாரி 2' படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருந்தார். தான் ஒரு ஹீரோவாக இருந்தாலும், மற்ற நடிகர்களின் படங்களில் நல்ல கேரக்டர்கள் அமைந்தால் அதிலும் நடித்து வருகிறார், டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் 'வைரஸ்', 'கல்கி' எனப் பல படங்களில் வெளியாகக் காத்திருக்கின்றன.  

பிரணவ் மோகன்லால் :

[Image: pranav_11056.jpg]

மோகன்லாலின் மகனான பிரணவ், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தார். பின், படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய பிரணவ், படிப்பு முடிந்தவுடன் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் 'பாபநாசம்', 'லைஃப் ஆஃப் ஜோஸுட்டி' படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நடிக்க வாய்ப்புகள் வர, 'இருபத்தியொன்னாம் நூட்டாண்டு' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது, ப்ரியதர்ஷன் இயக்கிவரும் 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் மோகன்லாலின் இளம் வயது கேரக்டரில் நடித்து வருகிறார். 

தவிர, பாலிவுட் நடிகர்கள் ஹ்ருத்திக் ரோஷன் அவரது அப்பா ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ரன்பீர் கபூரும் தனது தந்தை ரிஷி கபூர் இயக்கத்தில் 'அப் அப் லெளத் சலேன்' என்ற படத்திலும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த 'ப்ளாக்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளா
Like Reply
அனுசரிக்க சொன்ன இயக்குனர் ; அம்பலப்படுத்திய நடிகை

[Image: NTLRG_20190423190822778681.jpg]

மலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களாக குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் சஜிதா மாடத்தில். குறிப்பாக கடந்த 2013ல் வெளியான ஷட்டர் என்கிற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து நன்கு பிரபலமானவர். அதுமட்டுமல்ல மலையாள திரையுலகை சேர்ந்த பெண்கள் நல அமைப்பில் ஒரு உறுப்பினராக இருக்கும் இவர், நாற்பது வயதை தாண்டியவர் எப்போதுமே பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்து, மலையாள சினிமா பிரபலங்களை கூட தைரியமாக விமர்சித்து வருகிறார்..

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கார்த்திக் என்கிற உதவி இயக்குனர் ஒருவர் தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சஜிதாவை தொலைபேசி மூலமாக அணுகியுள்ளார்.. அதற்கு சரிதாவும் படம் குறித்த விபரங்களை எனக்கு ஈமெயில் அனுப்புங்கள் பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அந்த உதவி இயக்குனர் சற்றே வழிந்தபடி நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியிருக்கும்.. உங்களால் முடியுமா என்று கேட்டாராம் உடனே கோபமாக அவரை திட்டிய சஜிதா, உடனே தனது முகநூல் பக்கத்தில் அந்த நபரின் தொலைபேசி எண்ணை கொடுத்து இந்த நபரை அனுசரித்து நடிக்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.

இந்நேரம் அந்த நபரின் மொபைல் போனிற்கு எத்தனை கண்டன அழைப்புகள் பறந்தனவோ..
Like Reply
ஓரங்கட்டப்பட்ட இந்தியன் 2? ஷங்கரின் அடுத்த படம் – வெளியான அதிரடி தகவல்.!

[Image: Shankar-1-e1556076996287.jpg?resize=696%2C463&ssl=1]

Shankar Next : இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு ஷங்கர் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2 பாயிண்ட் ஓ படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.
விஜய், விக்ரம் வரிசையில் இணையும் விஜய் சேதுபதி – எதில் தெரியுமா?
ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.
இதனால் ஷங்கர் இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு அடுத்த படத்தின் வேளையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பாய்ஸ் படம் போல உருவாக உள்ள இந்த படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை ஷங்கரிடம் இருந்து இது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Like Reply
nice continue
Like Reply
அவெஞ்சர்ஸ்க்கு தானோஸாக மாறிய காஞ்சனா 3; வசூல் எத்தனை கோடி தெரியுமா?

உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 5000 கோடி வசூலை முதல் வாரத்தில் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் முதல்வாரத்தில் 180 கோடி வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஈட்டியுள்ளது.
[Image: 29042019blobid1556544547641.jpg]
ஆனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அவெஞ்சர்ஸ்க்கு காஞ்சனா 3 படம் வில்லன் தானோஸாக மாறியுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 கடந்த 19ம் தேதி வெளியானது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு பாடல்களில் மட்டும் ஆடுவடுவதற்காக ஓவியா, வேதிகா மற்றும் நிக்கி டம்போலி நடித்திருந்தனர். மேலும், கோவை சரளா, தேவதர்ஷினி, சூரி, ஸ்ரீமன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கடந்த 10 நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூல் 130 கோடியை தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
[Image: 29042019blobid1556544580498.jpg]
காஞ்சனா 2 படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை புரிந்த நிலையில், விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்ட காஞ்சனா 3 படம் காஞ்சனா 2 வசூலை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
பேட்ட, விஸ்வாசம் படங்கள் இந்த ஆண்டு 100 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில், காஞ்சனா 3 அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
Like Reply
பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை ஒரு சொடுக்கில் முறியடித்த எண்ட்கேம்! வசூல் எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசானது. சீனாவில் ஒரு நாள் முன்பே ரிலீசானது. இந்நிலையில், உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கடந்த இரு தினங்களில் 2,130 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[Image: 27042019blobid1556340446815.jpg]
இந்திய உள்பட நேற்று உலகில் உள்ள 45 நாடுகளில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஈட்டிய வசூல் 1,403 கோடி வசூலை ஈட்டியுள்ளது. சீனாவில் கடந்த 2 தினங்களில் 747 கோடி ரூபாய் வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் குவித்துள்ளது.
இந்த வார இறுதியில் 5 ஆயிரம் கோடி வசூலை உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ப்ரிவ்யூ காட்சிகளில் மட்டும் 419 கோடி ரூபாய் வசூலை ஈட்டி ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் படத்தின் அதிகபட்ச வசூலான 398 கோடி வசூலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
[Image: 27042019blobid1556340468896.jpg]
இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூலாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 45 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும், தமிழகத்தில், காஞ்சனா 3 ஓடி வருவதால், 5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது என்றும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ருசோ சகோதரர்கள் இயக்கிய மார்வெல் திரையுலகின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் மேலும், மிகப்பெரிய வசூல் சாதனையை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Like Reply




Users browsing this thread: 56 Guest(s)