Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#21
[Image: AP18345006816811_20552.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
விமர்சனம்

துப்பாக்கி முனை
[Image: 201812142113403086_Thuppakki-Munai-in-ci...SECVPF.gif]
Like Reply
#23
ஒரு கற்பழிப்பு குற்றமும், என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியும். படம் "துப்பாக்கி முனை" கதாநாயகன் விக்ரம் பிரபு, கதாநாயகி ஹன்சிகா, டைரக்‌ஷன் தினேஷ் செல்வராஜ் சினிமா விமர்சனம்.
கதையின் கரு:  
விக்ரம் பிரபு, என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரி. அவர் கடற்கரையில் நின்று கொண்டு தனது கதையை சொல்வது போல் படம் தொடங்குகிறது. அவர் ‘என்கவுண்ட்டரில்’ குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது, தாயாருக்கு பிடிக்கவில்லை. மகன், பல கொலைகளை செய்வதாக நினைக்கிறார். இதற்காகவே மகனை விட்டு பிரிந்து தனிமையில் வசிக்கிறார்.

இந்த நிலையில், ஏழை சவர தொழிலாளி எம்.எஸ்.பாஸ்கரின் ஒரே மகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில், கற்பழித்து கொலை செய்யப்படுகிறாள். குற்றவாளிகளில் ஒருவன், செல்வாக்கு மிகுந்த பிரமுகர் வேலராமமூர்த்தியின் மகன். மற்ற மூன்று பேரும் அவனுடைய நண்பர்கள். உண்மையான குற்றவாளிகளான அந்த நான்கு பேரையும் வேலராமமூர்த்தி தனது அதிகாரத்தை பயன்படுத்தி காப்பாற்ற முயற்சிக்கிறார்.

வடநாட்டை சேர்ந்த ஒரு ஏழை இளைஞர் மீது கற்பழிப்பு-கொலை குற்றத்தை சுமத்தி, அவரை என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ள முயற்சி நடக்கிறது. சவர தொழிலாளியான எம்.எஸ்.பாஸ்கர், விக்ரம் பிரபுவை சந்தித்து தனது மகள் அமைச்சரின் மகனால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவரத்தை சொல்கிறார். உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற அப்பாவி வடநாட்டு இளைஞர் பலிகடா ஆக்கப்படுவதை கண்ணீர் மல்க எடுத்து கூறுகிறார்.

வடநாட்டு இளைஞரை என்கவுண்ட்டரில் கொல்வதற்கு விக்ரம் பிரபு கூட்டி செல்கிறார். அவர், அந்த இளைஞரை என்கவுண்ட்டரில் சுட்டுத்தள்ளினாரா, உண்மையான குற்றவாளிகள் என்ன ஆகிறார்கள்? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

‘என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு. அவருடைய தோற்றமும், கனத்த குரலும் கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்துகின்றன. அந்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை விக்ரம் பிரபு உள்வாங்கி நடித்து இருக்கிறார். ஹன்சிகா மீது மென்மையான காதல், அம்மாவிடம் பாசம், அந்த அம்மாவின் பிரிவினால் ஏற்படும் உருக்கம் ஆகிய உணர்வுகளை விக்ரம் பிரபு மிக சரியாக வெளிப்படுத்துகிறார்.

அவருடைய காதலியாக ஹன்சிகா. அவர் ஒரு சில காட்சிகளே வந்து போனாலும், படம் முழுக்க இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.

ஏழை சவர தொழிலாளி கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார், எம்.எஸ்.பாஸ்கர். மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை இவர் விக்ரம் பிரபுவிடம் சொல்கிற காட்சியில், உருக்கி விடுகிறார். ‘கிளைமாக்ஸ்’சில் இவர் அமைச்சரின் வீட்டுக்குள் புகுந்து குற்றவாளிகளை தண்டிக்கும் காட்சியில், ஆக்ரோஷத்தின் உச்சம். அந்த காட்சியில் அவர் பேசுகிற வசன வரிகளுக்கு கைதட்ட தோன்றுகிறது.

அடர்ந்த காடுகள், மணல் மேடுகள், கடற்கரை என இயற்கை காட்சிகளை ஒளிப்பதிவாளர் ராசாமதி படம் பிடித்த விதம், அழகு. இசையமைப்பாளர்கள் முத்து கணேஷ், பின்னணி இசை மூலம் படம் முழுக்க பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. இடைவேளைக்குப்பின் கதை வேகம் பிடிக்கிறது. உச்சகட்ட காட்சி, சரியான முடிவு.
Like Reply
#24
mahaprabu.. neenga ingayum vanthutingala
Like Reply
#25
(16-12-2018, 10:01 PM)MrGhostRider Wrote: mahaprabu.. neenga ingayum vanthutingala

[align=center]யாம் பெற்ற  துன்பம் பெறுக இந்த xossipy  :D :D Big Grin/align]
Like Reply
#26
#Petta விஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்: பெயர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே

சென்னை: பேட்ட படத்தில் சசிகுமாரின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.


l[Image: petta4554-1545043223.jpg]
Like Reply
#27
இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாகத் தான் நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளார். அவரின் கதாபாத்திரத்தின் பெயர் ஜித்து. இந்நிலையில் சசிகுமார் கதாபாத்திரத்தின் பெயர் இன்று மாலை வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அறிவித்தபடி சசிகுமார் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. சசிகுமாரின் பெயர் மாலிக்.
.@SasikumarDir as #Maalik#PettaCharacterPoster@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers @Nawazuddin_S pic.twitter.com/A6bdWltVQe — Sun Pictures (@sunpictures) December 17, 2018
சசிகுமாரின் பெயர் மாலிக் என்று இருக்கும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை
Like Reply
#28
சீதக்காதி - சினிமா விமர்சனம்
 



[Image: _104855046_182e3955-10a0-4e15-a60f-a69cbf7ca68b.jpg]TWITTER


திரைப்படம்
சீதக்காதி


நடிகர்கள்
விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, மகேந்திரன், கருணாகரன், ரம்யா நம்பீசன், காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர்


இசை
கோவிந்த் வசந்தா


ஒளிப்பதிவு
டி.கே. சரஸ்காந்த்


இயக்கம்
பாலாஜி தரணிதரன்

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலாஜி தரணிதரனின் அடுத்த படம். விஜய் சேதுபதிக்கு இது 25வது படம். இத்தோடு, விஜய் சேதுபதியின் வயதான தோற்றமும் சேர்ந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது 'சீதக்காதி'.
படத்தில் வரும் எந்தப் பாத்திரத்திற்கும் சீதக்காதி என பெயர் கிடையாது. 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற பழமொழிதான் படத்தின் அடிப்படையான 'ஒன்லைன்' என்பதால் இந்தப் பெயர்.
தமிழில் நாடகக் கலை உச்சத்தில் இருந்தபோது புகழ்பெற்று விளங்கிய அய்யா ஆதிமூலம் (விஜய் சேதுபதி), தன் கண் முன்பே அந்தக் கலைக்கு மதிப்பில்லாமல் போவதைப் பார்க்கிறார். குடும்பத்தில் பணத் தேவை தொடர்பான நெருக்கடிகளும் அதிகரிக்கின்றன. ஒரு நாள் நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுகிறார். ஆனால், அவரது கலை இறப்பதில்லை. அது எப்படி நடக்கிறது, அதனால் நடக்கும் விசித்திரங்கள் என்ன என்பதையே எதிர்பாராத விதத்தில் சொல்கிறது.
இம்மாதிரியான ஒரு கதையை யோசிக்கும் துணிச்சலுக்காகவே இயக்குனரை ஒரு முறை பாராட்டிவிடலாம். படம் துவங்கியதும் கிட்டத்தட்ட அரை மணி நேரம்வரை விஜய் சேதுபதியின் நடிப்பில் நீள நீளமான நாடகக் காட்சிகள் வருவதும், மிக மோசமான, எதிர்பார்க்கத்தக்க பின்னணி இசையுடன் சோகமான சம்பவங்கள் நடப்பதும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன. ஆனால், ஆதிமூலம் பாத்திரம் இறந்தவுடன் முற்றிலும் மாறான திசையில் படம் செல்கிறது.
Like Reply
#29
[Image: _104855113_4481215a-9383-419b-88af-7007e309fbea.jpg]

அதுவரையிலான திரைக்கதையும் பின்னணி இசையும் முழுவதும் உடைபட்டு, வேறு ஒரு அனுபவத்திற்கு கூட்டிச் செல்கிறது படம். இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்.

ஆனால், சில பலவீனங்களும் இருக்கின்றன. படம் துவங்கி நீண்ட நேரத்திற்கு படத்தின் திசையே புரியாமல் சோர்வளிக்கிறது. பிறகு வரும் பல காட்சிகளில் நம்பகத்தன்மை ரொம்பவுமே மிஸ்ஸிங். "ஃபேண்டஸி" என்று ஒப்புக்கொண்டால்கூட, அதற்கான லாஜிக்கும்கூட சில இடங்களில் இல்லாமல்போவது ஏமாற்றமளிக்கிறது.

ஆனால், இதனை தனது கலகலப்பான, எதிர்பாராத திருப்பங்களால் சரிசெய்கிறார் இயக்குனா்.

படத்தில் குறைந்த நேரமே வருகிறார் விஜய் சேதுபதி. எந்த ஒரு முன்னணி நடிகருமே மிகச் சாதாரணமாக நடித்துவிட்டுப்போகக்கூடிய பாத்திரம். விஜய் சேதுபதியும் அதைச் செய்திருக்கிறார்.

B3/production/_104855113_4481215a-9383-419b-88af-7007e309fbea.jpg
Like Reply
#30
[Image: _104854781_b26d3f39-8c54-4e77-a0be-1abab451153e.jpg]

ஆனால், படத்தில் வரும் பல சிறிய பாத்திரங்கள் பின்னியெடுக்கிறார்கள். அர்ச்சனா, மௌலி, புதிய ஹீரோக்களாக நடிப்பவர்கள், இயக்குனர் மகேந்திரன், ரம்யா நம்பீசன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு காட்சியில் முத்திரை பதிக்கிறார்கள்.
'96' படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்திலும் தனித்துத் தெரிகிறார். முன் பாதியில் ஒரு பாணியிலும் பிற்பாதியில் வேறு பாணியிலும் ஆச்சரியப்படுத்துகிறார்.
பல காட்சிகள் சிறியதாக இருந்திருக்கலாம். படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது. ஆனால், நிச்சயம் பொறுமையாக, நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய திரைப்படம்தான் 'சீதக்காதி'.
Like Reply
#31
அடங்க மறு' - விமர்சனம்

ஜெயம் ரவி, ராசி கண்ணா, ராமதாஸ், சம்பத் ராஜ் Director: கார்த்திக் தங்கவேல் சென்னை : ஒரு போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டதற்காக பழிவாங்கப்படுகிறான். தனது இழப்புக்கு காரணமான வில்லன்களை அந்த போலீகாரன் எப்படி திருப்பி அடிக்கிறான் என்பதே ஜெயம் ரவியின் 'அடங்கமறு'.

நேர்மையான காவல் உதவி ஆய்வாளரான ஜெயம் ரவிக்கு ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பிள்ளைகள், காதலி (ராஷி கண்ணா), நண்பர்கள் என சந்தோஷமான குடும்பம் ஜெயம் ரவியினுடையது. நேர்மையாக செயல்படும் அவருக்கு தனது டிப்பார்ட்மெண்ட் ஆட்களாலேயே பிரச்சினை வருகிறது. பண பலமும், அதிகாரமும் கொண்ட பெரிய ஆட்களிடம் எப்போதும் அடக்கி வாசிக்க சொல்கிறார்கள்.

[Image: adanga-maru-movie-review-3-1545357980.jpg]

இந்நிலையில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பெரிய இடத்து பசங்களை ஜெயம் ரவி கைது செய்கிறார். அந்த பசங்களுடைய அப்பாக்கள் பெரும் புள்ளிகள் என்பதால், சில நிமிடங்களில் வெளியே வந்துவிடுகிறார்கள். தங்களை கைது செய்ததற்காக ஜெயம் ரவியின் குடும்பத்தை அழிக்கிறார்கள். இதனால் ஆத்திரமடையும் ஜெயம் ரவி, போலீஸ் வேலையை துரந்து அந்த பசங்களை அவர்களின் அப்பாக்களின் கைகளினால் கொலை செய்ய வைப்பேன் என சவால்விடுகிறார். இந்த சவாலில் அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பதே சுவாரஸ்யமான பழிவாங்கும் படலம்.
Like Reply
#32
செம பிட் போலீஸாக ஜெயம் ரவி கலக்குகிறார். டெக்னாலஜியை கொண்டு எதிரகளை கதறவிடுவது, திமிறி எழுந்து சாவல்விட்டு திருப்பி அடிப்பது, காதலியுடன் கில்மா செய்வது, குடும்பத்துடன் பாசம் காட்டுவது என தனிஒருவனாக படத்தை சுமக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடலேடுக்கிறார். எத்தனை போலீஸ் படத்தில் நடித்தாலும், வித்தியாசம் காட்டும் உடல் மொழியை எளிதாக கையாள்கிறார். பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்ள வைக்கிறார் ராஷி கண்ணா. ஜெயம் ரவியுடனான கெமிஸ்ட்ரி செமையாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஜெயம் ரவிக்கு உறுதுணையாக படம் முழக்க பயணித்திருக்கிறார்.

[Image: adanga-maru-movie-review-2-1545357987.jpg]

ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், வழக்கறிஞராக முத்திரை பதிக்கிறார் பூர்ணா. பாய்கட் ஹேர்ஸ்டைல், கறுப்பு கோட் என கனகச்சிதமாக தெரிகிறார். படத்தில் ஒன்மேன் ஷோ ஜெயம் ரவி என்பதால் மற்றவர்களுக்கு குறைவான வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அட்ஜெஸ்ட் அருணாச்சலமாக அழகம் பெருமாளும், கரப்டட் போலீஸ் அதிகாரிகளாக சம்பத் ராஜ் மற்றும் மைம் கோபியும் ஸ்கோர் செய்கிறார்கள். இவர்களை தாண்டி முனிஸ்காந்த், வில்லன்கள் மற்றும் அவர்களது பசங்களுக்கும் பெரிய ஸ்கோப் இல்லை படத்தில். ஆண்ட்ராய்ட் போனில்
Like Reply
#33
ஆண்ட்ராய்ட் போனில் உள்ள டெக்னாலஜியை கரைத்து குடித்து காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். வழக்கமான போலீஸ் கதை தான் என்றாலும், டெக்னாலஜி உதவியுடன் புதிதாக காட்டுகிறார். முதல்பாதி படம் விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியிலும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

[Image: adanga-maru-movie-review-45-1545357973.jpg]

நிறைய ஆய்வு செய்து படத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார். அந்த மெனக்கெடலுக்காக தனி பாராட்டுகள். ஒரு நல்ல போலீஸ் அதிகாரி, மக்களின் போராட்டங்களை எப்படி கையாண்டிருப்பான் என்பதை டாஸ்மாக் போராட்டக் காட்சிகள் அழகாக காட்டுகிறது. ஆனால் நிறைய இடத்தில் லாஜிக் ஓட்டைகள் பளிச்சென தெரிகிறது. ஜெயம் ரவியை மாஸ் ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதற்காக, அவருடன் பணியாற்றும் அத்தனை போலீஸ்காரர்களையும் (முனிஸ்காந்த் மற்றும் அழகம்பெருமாளை தவிர) கெட்டவர்களாக காட்டியிருப்பது நியாயமாரே. அதிகார வர்கத்தின் ஆளுமையில், கீழ் நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் படும்பாட்டை மிகையில்லாமல் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். வசனங்களும் நச்சென இருக்கின்றன. அதேநேரத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். எப்போதும் கலக்கலான பாடல்களை தரும் சாம் சி எஸ் இதில் அடக்கி வாசித்து ஏமாற்றம் தந்திருக்கிறார். சாயாலி பாடல் மட்டும் பார்க்கும் போது கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை சாம். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்தை வேறு லெவலுக்கு எடுத்து சென்றிருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் மற்றொன்றில் இருந்து வேறுபடுவதை உணர முடிகிறது. குறிப்பாக டெக்னாலஜி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக துல்லியமாக காட்டியிருக்கிறார்.
Like Reply
#34
[Image: adanga-maru-movie-review-1-1545357994.jpg]

இந்த வாரம் ரிலீசாகும் ஆறு படங்களில் மூன்று படங்களுக்கு ரூபன் தான் எடிட்டர். இருந்தாலும் ஒவ்வொரு படத்தின் கதைக்கு தகுந்த மாதிரி படத்தொகுப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு ரூபனின் படத்தொகுப்பு நன்றாக உதவியிருக்கிறது. மிக யதார்த்தமான, அதேநேரத்தில் பவர்வுல்லான ஆக்ஷன் காட்சிகளை அமைத்த ஸ்டன் சிவாவுக்கு தனி பாராட்டுகள். ஜெயம் ரவிக்கு ஏற்ப நம்பகதன்மையுடன் ஸ்டன்ட் காட்சிகளை அமைத்திருக்கிறார். ஏற்கனவே வந்த பல நூறு போலீஸ் படங்களின் பட்டியலில் அடங்கிவடுகிறது இந்த 'அடங்க மறு'.

[Image: adanga-maru_1540969564180.jpg]
Like Reply
#35
[Image: adanga-maru_154337920410.jpg]
Like Reply
#36
[Image: adanga-maru_1540969564150.jpg]
Like Reply
#37
[Image: Master.jpg]
சிலுக்குவார்பட்டி சிங்கம் மினி விமர்சனம்
நடிகர்கள்விஷ்ணு விஷால்,ரெஜினா,கருணாகரன்,யோகி பாபு,ஆனந்த ராஜ்,மன்சூர் அலிகான்,ஓவியா
இயக்கம்செல்லா

தனது வேலையே மிக முக்கியம் என்று செயல்படும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் (விஷ்ணு விஷால்), எதிர்பாராத விதமாக முக்கிய ரவுடியை கைது செய்கிறார். அந்த ரவுடி, போலீஸ் கான்ஸ்டபிளை கொன்ற பிறகே ஊர் திரும்புவதாக உறுதியேற்கிறார். இவரிடம் இருந்து விஷ்ணு விஷால்தப்பிக்க என்னவெல்லாம் செய்கிறார்? இறுதியில் விஷ்ணு விஷால் சிக்கினாரா? ரவுடி பிடிபட்டாரா? என்பது தான் இப்படத்தின் காமெடி கலந்த கதை.

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

படத்தின் கதாபாத்திரங்கள்

ரெஜினா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் ரெஜினாவுக்கும் இடையேயான ரொமான்ஸ் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. ஜோடிப்பொருத்தம் செமையாக பொருந்தியுள்ளது. ஓவியா இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் இரண்டு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மற்றபடி படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை.

யோகி பாபுதான் படத்தை முன்னெடுத்து செல்கிறார். அவர், ரவுடியுடன் சேர்ந்து செய்யும் காமெடி காட்சிகள் அனைவரையும் வயிறு குலங்க சிரிக்க வைக்கிறது. ஆனால் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான ஜோக்குகளை மட்டும் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

லியோன் ஜேம்ஸ் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. படத்தின் பின்னணி இசை அனைவரையும் ஈர்த்துள்ளது.

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் எழுத்தாளர் செல்லா அய்யாவு இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். காமெடி படம் என்பதால் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படம் பார்ப்போரை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதை

சக்தி என்ற போலிஸ் கான்ஸ்டபிள் (விஷ்ணு விஷால்) பயந்த சுபாவம் கொண்டவர் . தனது வேலைதான் முக்கியம் என்று இருப்பார். யாரு வம்புக்கும் செல்லாத கதாப்பத்திரம். இப்படி இருக்கும் பட்சத்தில், காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய ரவுடி சைகிள் சங்கர் (சாய் ரவி ) சிலுக்குவார்பட்டிக்கு வருகிறார். அவர் வருவதே முன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்யத்தான்.

ஆனால் அவரை கான்ஸ்டபிள் சக்தி கைது செய்துவிடுகிறார். எப்படியோ சைகிள் சங்கர் சிறையில் இருந்து தப்பித்து தன்னை கைது செய்த சக்தியை கொலை செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்.

இவரிடம் இருந்து தன்னை காப்பற்ற சக்தி செய்யும் யோசனை காமெடியின் உச்சம். அவ்வப்போது வரும் காதல் காட்சியில் ரெஜினா மற்றும் விஷ்ணு விஷால் செமையாக நடித்துள்ளனர். விஷ்ணு விஷாலின் நடிப்பு ’அவசரப் போலீஸ் 100’ படத்தில் பாக்கியராஜின் நடிப்பை நினைவுப்படுத்துவதுபோல் இருக்கிறது. மேலும் விஷ்ணு விஷாலின் கெட்டப் ’உழைப்பாளி’ படத்தில் ரஜினியின் கெட்டப்பை நினைவுப்படுத்துகிறது.

ஆனால் படம் முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிற கதைக்கு இல்லை. மேலும் அதிக கதாபாத்திரம் இருப்பதால் எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. மேலும் ஓவியாவை படக்குழுவினர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

நீங்க நன்றாக சிரித்து, ஜாலியாக படம் பார்க்க நினைத்தால் சிலுக்குவார்பட்டி சிங்கம் நல்ல சாய்ஸ் .
Like Reply
#38
தமிழ் சினிமாவிற்கும் ஸ்போர்ட்ஸ் படத்திற்கும் ஒரு ராசி உண்டு. பல ஸ்போர்ட்ஸ் படங்கள் இங்கு ஹிட் அடித்துள்ளது, ஆனால், அது அனைத்துமே ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக தான் இருக்கும். இந்த முறை பெண்களுக்கு அதுவும் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் படம் கனா. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு கனாவை நிறைவேற்றியதா இந்த கனா? பார்ப்போம்.[Image: 9k=]
கதைக்களம்
ஸ்போர்ட்ஸ் கதை என்றாலே டெம்ப்ளேட்டாக ஒரு சில ஒன் லைன் இருக்கும், அதே போல் தான், தமிழகத்தில் குக்கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் எப்படி இனடர்நேஷ்னல் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்ப்பிடிக்கின்றார் என்பதே இந்த கனா.
வெறும் விளையாட்டு என்று மட்டுமில்லாமல் அதில் ஒரு விவசாயி தன் மகளை எப்படி பல எதிர்ப்புகளை மீறி இந்தியாவே போற்றும் ஒரு வீரங்கனையாக மாற்றுகின்றார் என்பதை மிக உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளது கனா.
படத்தை பற்றிய அலசல்
கனா சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்கும் படம், அதுவும் தன் நண்பர் அருண்ராஜ் காமராஜிற்காக தயாரித்துள்ள படம், ஏதோ நண்பர் என்பதற்காக அவர் வாய்ப்பு கொடுத்தது போல் தெரியவில்லை, கண்டிப்பாக அருண்ராஜிடம் அதற்கு அனைத்து தகுதியும் உள்ளது, இந்த சிறு பட்ஜெட் படத்தையே எல்லோரும் கனேக்ட் செய்வது போல் எடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டிப்பாக இன்னும் சில வருடங்களில் அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை, படத்திற்கு படம் தன்னை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார் என்றே சொல்லலாம்.
அதிலும் இதில் கௌசல்யாவாகவே வாழ்ந்துள்ளார், அதற்காக அவர் எடுத்த பயிற்சி, மேலும் அவர் மேற்கொள்ளும் பவுலிங் ஸ்டைல் ரசிக்க வைக்கின்றது, பல பெண்களுக்கு இந்த கௌசல்யா ரோல் மாடலாக தான் இருப்பார்.
விளையாட்டு என்று மட்டும் இல்லாமல் அதில் விவசாயத்தை கொண்டு வந்த விதம், இந்த கதாபாத்திரத்தில் சத்யராஜ் போல் சீனியர் நடிகரை நடிக்க வைத்து, அவர் சொல்வது மூலம் பலருக்கும் அவருடைய வலிகள் சென்றடையும். ஆனால், விவாசயம் குறித்து பல படங்களில் பேச, கொஞ்சம் அதிகமாவே செயற்கை தனம் வெளிப்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.
படத்தின் கிளைமேக்ஸ் படக்குழு அனைவருக்கும் எழுந்து நின்று பாராட்டலாம், நிஜ மேட்ச் பார்ப்பது போன்ற உணர்வு, அட சிவகார்த்திகேயன் இத்தனை மெச்சூரான ரோலா, என்று அவரும் கேமியோவில் சபாஷ் அள்ளுகிறார். படத்தின் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் ரசிக்கும் ரகம், குறிப்பாக ப்ரோடோக்‌ஷன் கம்பெனிக்கு பாராட்டுக்கள். பெரிய பட்ஜெட் கதையை இந்த சிறுபட்ஜெட்டில் அழகாக எடுத்த விதம் சூப்பர்.
[Image: maxresdefault.jpg]
Like Reply
#39
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம், பலருக்கும் இந்த படம் குறிப்பாக பெண்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பு, அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லாம் கடும் உழைப்பு தெரிகின்றது.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சி.

பல்ப்ஸ்
ஒரு சில வசனங்கள் குறிப்பாக விவசாயத்திற்காக பேசுவது, வலித்து திணித்தது போலவே உள்ளது.

மொத்தத்தில் வாழ்க்கையில் வெற்றிகாக ஓடும் அனைவருக்கும் மேலும் உற்சாகத்தை கொடுக்கும் இந்த கனா.
Like Reply
#40
ரிலீஸான ஆறு படங்கள்ல யாரு ஹிட்டு யாரு ஃப்ளாப்பு...?

[Image: maxresdefault__2__710x400xt.jpg]

பெரும் பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் நேற்று வெள்ளியன்று ரிலீஸான ஆறு படங்களில் சிவகார்த்திகேயனின் ‘கனா’வும், ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ ஆகிய இரு படங்கள் மட்டுமே வசூல் ரீதியாகவும், ரிப்போர்ட் ரீதியாகவும் தேறியுள்ளன.

இந்த ரேசில் எடுத்த எடுப்பில் பலத்த அதிர்ச்சியோடு படுதோல்வியை சந்தித்த படம் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’. அவரது 25 வது படம் என்று விளம்பரம் செய்யப்பட்ட படத்தில் விஜய்சேதுபதி 25 நிமிடங்கள் வராதது ஒருபுறமிருக்க, அவரது போர்ஷன்கள் படு திராபையாக இருந்தன. அடுத்த அடி வாங்கியவர் திருவாளர் தனுஷ். நல்ல படங்கள் செய்துகொண்டிருக்கும் போதே நடுவில் அவ்வப்போது ‘மாரி2’ போன்ற குப்பைகள் வழங்குவது தனுஷின் வழக்கம்.
Like Reply




Users browsing this thread: 19 Guest(s)