Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
11-04-2019, 10:57 AM
(This post was last modified: 11-04-2019, 11:04 AM by johnypowas. Edited 2 times in total. Edited 2 times in total.)
என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா
கொடைக்கானல்
”யாமினி எழுடி” என அவளது தோழி காவேரி எழுப்ப தூக்க கலக்கத்தில் எழுந்தவள்
”என்னடி” என கேட்க
”என்னவா எழும்மா கொடைக்கானல் வந்துடுச்சி”
”ஓ அப்படியா” என கண்கள் திறந்தவள் பஸ்ஸின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் வந்தாள்.
கொடைக்கானலின் மொத்த அழகும் அவள் கண்களில் நிறைந்து அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதை எல்லாம் பார்த்தவள் மெதுவாக பஸ்ஸிற்குள் பார்த்தாள்.
அவளின் கம்பெனியில் வேலை செய்பவர்கள் இந்த மே மாத டூர் அரேன்ஜ் செய்திருந்தார்கள். காவேரியின் வற்புறுத்தலால் யாமினியும் அந்த டூருக்கு வந்தாள். சென்னையிலிருந்து நேற்று நைட் கிளம்பி நேராக கொடைக்கானலுக்கு வந்தாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கும் இடம் வந்துவிடும், சொகுசு பஸ் காரணமாக இருக்கையும் வசதியாக இருந்தது. பஸ்ஸிற்குள் வீடியோவும் இருக்கவே அதில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது.
10 நிமிடத்தில் அவர்கள் தங்க வேண்டிய ஓட்டல் வரவும் அனைவரும் இறங்கினார்கள். அதில் யாமினியும் காவேரியும் இறங்கி தங்கள் லக்கேஜ்களை எடுத்துக்கொள்ள அவர்களிடம் வந்தான் நேத்ரன்
”ஹாய் யாமினி கொடு உன் லக்கேஜ் நான் கொண்டுவரேன்”
”நோ தேங்ஸ்”
”இட்ஸ் ஓகே கொடு” என அவளது பேக்கை பிடுங்கவும் அவள் தடுத்தாள்
”நோ நேத்ரன் ப்ளீஸ் நானே கொண்டு வரேன்” என சொல்லவும் காவேரி அவனிடம்
நேத்ரன் என் பேக் வேணும்னா கொண்டு வாயேன் ப்ளீஸ்” என்றாள் சிரித்துக் கொண்டே
அங்கு யாமினி இருப்பதால் வேறு வழியில்லாமல் விதியே என காவேரியின் பேக்கை வாங்கி சுமந்துக் கொண்டு ஓட்டலுக்குள் சென்றான் நேத்ரன். அவன் பின்னால் இவர்களும் வர அவனும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.
மொத்தம் 15 பேர் கொண்ட குழுவிற்கு ஒருவர் தலைமை தாங்கினார் அவர் அந்த கம்பெனியின் சீனியர் மேனேஜர் தாமோதரன். வருடா வருடம் இப்படி ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்வது வழக்கம் யாமினி அந்த கம்பெனியில் சேர்ந்து 6 மாதம் ஆகியிருப்பதால் இந்த முறை அவளும் டூருக்கு வந்தாள்.
யாமினி கம்பெனியில் ஜாயின் செய்ததிலிருந்து அங்கே ஹெச்ஆராக பணியாற்றும் நேத்ரன் அவள் மீது ஒரு கண்ணை வைத்திருந்தான். அந்த கம்பெனியில் அனைத்து பெண்களிடமும் பழகியவன் யாமினியிடம் மட்டும் அவனது வித்தை பலிக்கவில்லை. அதற்காக அவனும் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் விடாமல் அவளை மடக்க பலவிதமாக திட்டங்கள் தீட்டி தீட்டி ஒரு கட்டத்தில் இந்த டூரில் அவளை மடக்க நினைத்தவன் சொந்த செலவில் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்தான்.
நேத்ரன் தாமோதரனிடம் சென்று
”என்ன சார் ரூம்ஸ் கிடைச்சிடுச்சா”
”எங்க சார் நாமளே 15 பேர் இருக்கோம் ஆனா இங்க 3 ரூம்தான் இருக்குன்னு சொல்றாங்க”
”சரி லேடீஸ் 2 ரூம்லயும் ஜென்ட்ஸ் ஒரூ ரூம்லயும் தங்கட்டும். ஜென்ஸைவிட லேடீஸ் அதிகமா இருக்காங்களே”
”ஓகே சார் நான் அப்படியே செய்யறேன்” என சொல்லி அறைகளை புக் செய்து சாவிகளை நேத்ரனிடம் தர அவனும் அனைவரையும் அழைத்துக்கொண்டு அறைகளை நோக்கிச் சென்றான். ஒரு அறைக் கதவை திறந்து அங்கு பாதி பெண்களையும் அடுத்த அறையிலும் பாதி பெண்களையும் தங்க வைத்துவிட்டு கடைசி ஒரு அறையில் தன்னோடு சேர்த்து அனைத்து ஆண்களையும் தங்க வைத்தான்.
யாமினி உடனே ரெடியாக ஆரம்பித்தாள். அவள் பஸ்ஸிலேயே தூங்கிவிட்டதால் மற்றவர்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு பாத்ரூம்க்குச் சென்று குளித்துவிட்டு வேறு ஒரு உடையில் மாறினாள். அவளது உடையைக் கண்ட அந்த பெண்களும்
”என்னப்பா இது இங்கயும் நீ புடவைத்தான் கட்டனுமா”
”என்கிட்ட இருக்கறத்தானே போடமுடியும் ஓகே சீக்கிரமா ரெடியாகி வாங்க, நான் சாப்பிட போறேன்” என்றாள் யாமினி உடனே காவேரி எழுந்து
”ரொம்ப பசிக்குது நான் முதல்ல சாப்பிட போறேன் அதுக்குள்ள மத்தவங்க எல்லாரும் குளிச்சி முடிக்கட்டும் வா யாமினி” என அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
அந்த ஓட்டலில் கீழ் தளத்தில் உள்புறமாக சாப்பிடும் இடமும் இருக்க அங்கு செல்ல அங்கு ஏகப்பட்ட மக்கள் கூட்டம் இருந்தது
”சீசன்ங்கறதால ஏகத்துக்கும் மக்கள் வந்திருக்காங்க இப்ப என்ன செய்றது ஓகே அங்க மூலையில ஒரு டேபிள் காலியாகுது வா வா” என அவளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள் யாமினி
அந்த டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சாப்பிட்டு எழ உடனே இடம் பிடித்துக்கொண்டு அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்த ஓரிரு நொடிகளிலே ஒருவன் வந்து அமர்ந்தான். அவனை இருபெண்களும் வாயை பிளந்து பார்த்தனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வேட்டியும் நீலநிற சட்டையும் ஆஜானுபாகுவான தேகத்துடன் 6 அடிக்கும் குறையாமல் மாநிறத்தில் இருந்தான். அவனது உருவம் நல்ல பருமனாகவும் அதே சமயம் கட்டுமஸ்தாகவும் இருந்தான். அவனை பார்த்த காவேரி யாமினியிடம்
”இவன் பைட்டரா இருப்பானோ, அவனோட மசில்ஸ் பாரேன் ப்பா எப்படியிருக்கு பாரேன்” என அவள் கண் இமைக்காமல் பார்க்க யாமினியும் பார்த்தாள்.
அவனது சட்டை அவனது உடலுக்கு டைட்டாக இருந்ததா அல்லது அவன் உடல் அப்படி விரைப்பாக இருந்ததா தெரியவில்லை. அவன் முகம் தெளிவாக இருந்தது மாநிறத்தில் இருந்தான். முறுக்கு மீசை வைத்திருந்தான், நகைகள் எதுவும் இல்லை வாட்ச் கூட இல்லை அமைதியாக அமர்ந்திருந்தான். அவனிடம் ஒருவன் வந்தான் கூடவே பேரரையும் அழைத்துவந்தான்.
பேரர் இவனுக்கு 3 ஆள் சாப்பாடு வைச்சிடு, பில் நான் கட்டிடறேன்” என சொல்லிவிட்டு சென்றுவிட பேரர் காவேரியிடம்
”சாப்பிட என்ன வேணும்” என கேட்க
”இட்லி” என்றாள்
”2 செட்டுங்களா”
”ஆமாம்” என சொல்லவும் அவனும் சென்றுவிட காவேரி திரும்பி அவனைப் பார்த்தாள். அவனோ அக்கம்பக்கம் எதையும் யாரையும் பார்க்காமல் நேராக முகத்தை வைத்துக்கொண்டு கண்களை மட்டும் தாழ்த்தி டேபிளை பார்த்தவண்ணம் இருந்தான். நேராக நிமிர்ந்து அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அவனுக்கு சாப்பாடு கொண்டு வரப்பட்டு அவன் முன் அடுக்கினார்கள். பேரர் சென்றதும் அவனும் அந்த சாப்பாட்டை பார்த்து அதை சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிடும் அழகை கண்டு பிரமித்தார்கள் யாமினியும் காவேரியும். அதில் காவேரிக்கு அங்கிருந்து சென்றுவிடலாமா என்ற எண்ணமே வந்தது. ஒரு காட்டான் போல அதை அள்ளி அள்ளி சாப்பிட்டான். ஒரு கட்டத்தில யாமினியே அவனிடம்
”ஹலோ ஹலோ” என கூப்பிட அவன் அமைதியாக தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான் பதில் பேசவில்லை
”கொஞ்சம் மெதுவாக சாப்பிடுங்க, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுங்களேன் நாங்க ஒண்ணும் உங்க சாப்பாட்டை பிடுங்கிட மாட்டோம் ஓகே” என்றாள்
அவள் சொன்னதும் அவளை கேள்விக்குறியோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்த இட்லி வரவும் அதை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன் மீண்டும் பரக்காவெட்டியை போல சாப்பிட ஆரம்பித்தான்.
அவன் சாப்பிடுவதைக் கண்டு யாமினி காவேரியிடம்
”இவனுக்கு நாம சொன்னது புரியலை போல இருக்கு பாரேன் எப்படி சாப்பிடறான். இப்படி அள்ளி அள்ளி சாப்பிடறானே தொண்டையில சிக்காதா” என அவள் கேட்க அதற்கு காவேரி
”யாக் இவன் சாப்பிடறத பார்த்தே என் வயிறு நிறைஞ்சிடுச்சி என்னால முடியலைப்பா இடம் இல்லைன்னாலும் பரவாயில்லை நான் வேற இடத்தில நின்னுகிட்டு கூட சாப்பிட்டுக்கறேன்” என சொல்லிவிட்டு தட்டுடன் செல்ல யாமினி அவனிடம் தனியாக மாட்டிக்கொண்டாள். அவன் அப்படி அள்ளி சாப்பிடுவதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர். சிலர் அவன் சாப்பிடுவதை தங்கள் செல்போனில் படம்பிடித்து சிரித்துக் கொண்டனர். அவர்கள் செய்வதைக் கண்ட யாமினி அவன் கையைப் பிடித்தாள்.
”ஏய் அங்கபாரு எல்லாரும் உன்னை பார்த்து சிரிக்கிறாங்க மெதுவாதான் சாப்பிடேன்” என்றாள் அவன் அவளது கையை உதறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான். 5 நிமிடத்தில் மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்து சென்றான். அவன் சென்றதும் அவன் சாப்பிட்டதை பார்த்தாள். சுத்தமாக வழித்து சாப்பிட்டிருந்தான். வேஸ்ட்டுகூட வைக்கவில்லை. அவன் சென்றதும் யாமினி நிம்மதியாக சாப்பிட்டு எழுந்து சென்றாள். கவுன்டரில் பணம் கட்டிவிட்டு காவேரியிடம் வந்தாள்
எப்படிதான் அவன் முன்னாடி நீ சாப்பிட்டியோ”
”நான் எங்க சாப்பிட்டேன் அவன் போனதுக்கப்புறம்தான் சாப்பிடவே முடிஞ்சது”
”சரி நான் போய் குளிச்சிட்டு வரேன் ஆமா நீ என்ன செய்யப்போற”
”நான் ரூமுக்கு வரலை, இங்க கொஞ்சம் நேரம் இருந்துட்டு வரேன் அங்க பாரு பார்க் இருக்கு, அங்க இருக்கேன் நீங்க கிளம்பும் போது சொல்லு நான் வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன்” என்றாள் யாமினி காவேரியும் அதற்கு சரியென தலையாட்டிவிட்டு சென்றுவிட்டாள்.
பார்க் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் யாமினி, ரோடு க்ராஸ் செய்யும் போது அதைக் கவனித்தாள். ரோடுக்கு நடுவில் அவனேதான் எதற்கு நிற்கிறான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறானா அதற்காகதான் அப்படி சாப்பிட்டானா என யோசித்தவள் அவன் பார்க்கும் திசையை பார்த்தாள். அங்கு சில பெண்கள் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். அதில் ஒருத்தி அவனை வீடியோ வேறு எடுத்துக் கொண்டிருந்தாள். யாமினி யோசனையுடன் அந்த பெண்களிடம் சென்று வேடிக்கை பார்த்தாள். அதில் ஒரு பெண் அவனிடம்
”டேய் ஆதி இன்னும் பின்னாடி போடா” என அவள் சொல்லவும் அவனும் பின்னாடி சென்றான். உடனே மறுபடியும் கத்தினாள்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டேய் முட்டாள் ரொம்ப பின்னாடி போற முன்னாடி வா” என கத்த அவனும் முன்புறமாக வந்தான். திரும்பவும் அவள்
”கையை முன்னாடி நீட்டு” என கத்த அவனும் அதே போல நீட்டினான்
”எங்க கண்ணை மூடு” என சொல்லவும் கண்களை மூடிக்கொண்டான். அதைப்பார்த்த யாமினிக்கு வியப்பாக இருந்தது
”என்ன இந்த பொண்ணு சொல்ல சொல்ல அவனும் செய்றானே, யார் இவங்க என்ன நடக்குது இங்க” என நினைக்கும் போதே அந்த பெண்களில் இருந்து ஒருத்தி எழுந்து சென்று தூரத்தில் பார்க் செய்த தன் காரை எடுத்தவள் வேகமாக எதிர்பக்கம் சென்று திருப்பிக்கொண்டு முன்னாடி வேகமாக வந்தாள். அதையும் ஒருத்தி படம் எடுத்துக்கொண்டிருக்க வேகமாக வந்த வண்டியையும் கண்களை மூடிக்கொண்டிருந்தவனையும் கண்டு பயந்தவள் சட்டென அந்த இடத்திற்கு சென்று ஒரு நொடியில் அவனது கையை பிடித்து இழுக்கவும் அவனும் பின்னாடி வந்தான். காரும் வந்த வேகத்தில் வேறு பக்கம் சென்று நின்றது.
கண்களைத் திறந்தவன் அருகில் யாமினியை பார்த்து தள்ளி நின்றான்
”அறிவிருக்கா உனக்கு இந்நேரம் அந்த வண்டியில நீ அடிப்பட்டு செத்திருப்ப, எதுக்கு நடுரோட்ல கண்ணை மூடிகிட்டு நிக்கற உனக்கு புத்தியில்லை” என்றாள் அதைக் கேட்டவன் மறுபடியும் அதே இடத்திற்கு சென்று கண்கள் மூடி கையை நீட்டிக்கொண்டு நிற்கவும் யாமினி மீண்டும் அவனிடம் சென்று அவனை உலுக்கினாள் கண்கள் திறந்தவன் அவளையும் எதிரில் இருந்த பெண்ணையும் பார்த்தான். யாமினி உடனே புரிந்துகொண்டு அங்கிருந்த பெண்ணைப் பார்த்தாள்
”என்ன செய்றீங்க நீங்க எல்லாரும் எதுக்கு இவரை இப்படி செய்ய வைக்கறீங்க” என்றாள்
”அவன் எங்க வீட்டு வேலைக்காரன் நாங்க என்ன வேணும்னாலும் செய்வோம் அதை கேட்க நீ யாரு?” என ஒரு பெண் கேட்க அதற்கு யாமினி
”இந்த மாதிரி செய்றது தப்பு ஒருவேளை இவர் மேல கார் மோதியிருந்தா என்னாயிருக்கும்”
”அதை தெரிஞ்சிக்கலாம்னுதான் நாங்க பார்த்தோம் அதான் நீ கெடுத்திட்டியே”
”இதெல்லாம் ஒரு விளையாட்டா” என யாமினி கத்தவும்
”ஏய் இதப்பாரு இதுல நீ தலையிடாத விலகி போ” என அதே பெண் சொல்லவும் யாமினிக்கு கோபம் வந்து அவளிடமே சென்றாள்
”பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி நீங்க செய்றத போலீஸ்ல சொன்னேனா என்னாகும்னு யோசிச்சிக்க” என சொல்லவும் கூட இருந்த பெண் ஒருத்தி அவளிடம்
”ஏய் அகிலா வாடி போலாம் போலீஸ் வந்தா நமக்குத்தான் பிரச்சனை வாடி” என சொல்லவும் அகிலா எழுந்தாள் எழுந்தவள் ரோடில் நிற்கும் அவனைப் பார்த்து
”ஏய் போ இங்கிருந்து அப்பா உன்னை தேடறாரு போ” என சொல்லவும் அவனும் கீ கொடுத்த பொம்மை போல அங்கிருந்து சென்றான். அவன் செல்வதைக் கண்டவள் திரும்பி அகிலாவை பார்க்க அவளோ சிரித்துக் கொண்டு
”அவன் எங்க வீட்டு அடிமை நாங்க என்ன சொல்றோமோ அதை அவன் செய்வான் அதான் அவன் தலையெழுத்து உன் வேலையை போய் நீ பாரு” என சொல்லிவிட்டு தன் தோழிகளுடன் வேறுபக்கம் சென்றாள்.
அவள் சென்றதும் யாமினி ஆதியை தேடி சென்றாள். ஓரிடத்தில் அவனைப் பார்த்தாள். அவனோ ஓட்டலில் அவனுக்கு சாப்பாடு கொடுக்கச் சொன்னவனிடம் இருந்தான். அந்த ஆள் சொல்ல சொல்ல அவர் சொன்ன வேலைகளை செய்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் கூட அலுப்பு படாமல் அவர் சொல்ல சொல்ல செய்து கொண்டிருந்தான். 3 பேர் செய்யும் வேலையை அவன் மட்டுமே செய்து கொண்டிருந்தான். அந்தாளும் அவனிடம்
”ஆதி அந்த பெட்டியையும் எடுத்து வைச்சிடு” என சொல்லவும் யாமினி அதை பார்த்தாள். பெரிய மரப்பெட்டி எப்படி ஒருவனால் தனியாகத் தூக்க முடியும் என நினைத்தவளுக்கு ஆச்சர்யம் அவன் சர்வசாதாரணமாக அதை தூக்கி லாரியில் வைத்துக் கொண்டிருந்தான். அவள் அதை ஆச்சர்யமாக பார்க்கும் போதே நேத்ரன் வந்தான் அவளிடம்
”ஹாய் இங்க என்ன செய்ற பார்க்ல இருக்கறதா நீ சொன்னியாமே நான் உன்னை அங்கல்லாம் தேடிட்டு வரேன்”
“சாரி எல்லாரும் ரெடியா போலாமா”
”போலாம் என்ன அவசரம் வாயேன் அப்படியே ஒரு வாக் போகலாம்”
”எதுக்கு”
”சும்மா பேசலாமே”
”இல்லை நான் வரலை காவேரிக்காக வெயிட் பண்றேன்”
”அவள் வரும் போது வரட்டும் நீ வா” என சொல்லவும் வேறு வழியில்லாமல் மெதுவாக ஆதியை பார்த்துக் கொண்டே நடந்தாள். நேத்ரனோ அவளிடம்
”நீ கம்பெனிக்கு வந்து 6 மாசமாகுது, நான் உன்னை கவனிக்கிறேன் கரெக்ட் டைம்க்கு வர்ற வேலைகளை செய்ற காவேரியை தவிர யார்கூடவும் நீ பேசறதில்லை எனக்கு உன்னோட இந்த அடக்கமான குணம் பிடிச்சிருக்கு ஒர்க்ல கூட நீ காட்டற சின்சியாரிட்டி வாவ் இதுவரைக்கும் இந்த மாதிரி யாரும் வேலை செய்யமாட்டாங்க” என அவன் புகழ்ந்துகொண்டே வர அது எதுவுமே காதில் விழாமல் யாமினி ஆதியையேப் பார்த்தாள். அவன் எல்லா சாமான்களையும் எடுத்து வைத்துவிட்டு அவர் முன் நின்றான். அவரோ
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”சரி நீ இங்கயே இரு” என சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல அவன் அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்துக் கொண்டான். அதைப்பார்த்த யாமினி நேத்ரனிடம்
”கால் வலிக்குது போலாமா” என்றாள்
”ஓகே ஷ்யூர் மத்தவங்களும் வந்துட்டாங்க போல வா”
நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன்” என சொல்லவும் அவனும் முன்னாடி சென்றான். அவன் பின்னாடியே வந்தவள் சட்டென ஆதி முன் வந்து நின்றாள்.
”ஹலோ” என்றாள்
அவளை ஏறெடுத்து பார்த்துவிட்டு சந்தேகமாக ஒரு நொடி பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்து கொண்டான்
”என் பேரு யாமினி உங்க பேரு என்ன” என கேட்க அவன் மறுபடியும் அவளை தலைநிமிர்த்தி பார்த்தான். அதற்குள் ஆதி என யாரோ அழைக்கவும் சடாரென எழுந்து வேகமாக கட்டிடத்திற்குள் சென்றான்.
”ப்பா என்ன இப்படி போறான் இவன் நடையே இவ்ளோதானா” என யோசித்துக்கொண்டு தன் ஓட்டலுக்குள் வந்தவள் அங்கு பஸ் ரெடியாக இருக்க அதில் ஏறி காவேரியின் பக்கத்தில் அமர்ந்தாள்
”என்னப்பா எங்க போன நீ, அந்த நேத்ரன் நீ எங்க எங்கன்னு கேட்டு என்னை தொல்லை பண்ணிட்டான்”
“அதுவா அது நாம சாப்பிடறப்ப ஒருத்தன் நமக்கு முன்னாடி உட்கார்ந்து சாப்பிட்டான் பார்த்தியா”
”ஆமா அந்த காட்டானா”
”அவன் பேரு ஆதி அவன் என்ன செய்றான்னு பார்த்துட்டு வந்தேன்”
”என்ன செய்வான் சாப்பிட்டுகிட்டு இருப்பான்”
”அதான் இல்லை” என அவள் அவனை ரோடில் பார்த்தது முதல் கடைசி வரை நடந்த கதையை சொன்னாள்.
”அடப்பாவி அவன் என்ன பைத்தியக்காரனா”
”தெரியலயே”
”எதுக்கும் நீ அவன்ட்ட இருந்து கொஞ்சம் தள்ளியிரு அவனை பார்த்தாலே எனக்கு பயமாயிருக்கு”
”எனக்கு அவனை பார்த்தா பாவமா இருக்கு அவனை மனுஷனா கூட யாரும் பார்க்கலை”
”இங்க பாரு அவனை பத்தி பேசாத ப்ளீஸ் இங்கேயும் வந்துட போறான்” என சொன்னாள். அதற்குள் கார்டன் வர அங்கு வண்டி நின்றது. அனைவரும் இறங்கி உள்ளே சென்று சுற்றி சுற்றி பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டு வந்தார்கள். அடுத்த இடம் போட்டிங் சென்றார்கள். அங்கு ஏற்கனவே ஏகப்பட்ட போட்களில் மக்கள் தண்ணீரில் மிதந்துக்கொண்டும் போட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தார்கள். மிதமான தட்பவெப்பமானாலும் ஒரளவு குளிரவும் செய்தது.
யாமினி அதை வேடிக்கை பார்க்கவே காவேரி வந்தாள் அவளிடம்
”ஏய் இங்க வாயேன் உனக்கு ஒண்ணு காட்டறேன்” என சொல்லவும் அவளும் அவளிடம் சென்றாள் ஓரிடத்தில் ஆதி மார்பு வரை தண்ணீரில் நின்று கொண்டிருந்தான். அதைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியே வந்தது. சுற்றி சுற்றி பார்த்தாள். அங்கு அதே பெண்கள் போட்டில் அமர்ந்துக்கொண்டு இருந்தார்கள். அவனை போட்டோ எடுத்துக் கொண்டிருக்க யாமினி மெதுவாக அந்த தண்ணீரை தொட்டுப்பார்த்தாள். ஜில்லென இருக்கவே உடனே கையை எடுத்தவள் காவேரியிடம்
”என்னடி இப்படி குளிருது இவன் எப்படிதான் இந்த தண்ணியில நிக்கறானோ”
”தெரியலைப்பா அந்த பொண்ணுங்களை பத்திதான் நீ சொன்னியா”
”ஆமாம் அதுங்கதான் அவனை எப்படி இம்சை பண்றாளுங்க பாரேன்”
”ஆமா அந்த பொண்ணுங்க சொன்னா இவன் ஏன் செய்யறான்”
”தெரியலைடி சீ பாவம்”
”என்ன பாவம் அவன் முகத்தை பாரு ஒரு ரியாக்ஷன் வரலை, என்னவோ சூடான தண்ணியில நிக்கற மாதிரி ஜாலியா நிக்கறான் பாரு” என காவேரி சொல்லவும் நேத்ரனின் குரல் கேட்டது
”என்ன செய்றீங்க வாங்க போட்ல போலாம் என்றான்.
அந்த பெண்களும் திரும்பி அவனுடன் வர அனைவரையும் போட்டில் ஏற்றிவிட்டு 2 போட் மட்டும் காலியாக இருக்கவே நேத்ரன் யாமினியை அழைத்தான்.
”வா யாமினி நாம ஒண்ணா போலாம்”
”ம் காவேரி”
”அவளுக்கு இன்னொரு போட் இருக்கே அதுல வரட்டும்”
“இல்ல நாங்க ஒண்ணா வரோம்” என சொல்லி அவசரமாக காவேரியை இழுத்துக்கொண்டு ஒரு போட்டில் இறங்கினாள்.
”ஏன் யாமினி இப்படி செய்ற பாவம் நேத்ரன் உன்னை கரெக்ட் பண்ண பார்க்கறான், நீ என்னடான்னா இப்படி செய்றியே”
”போதும் வா அவனை விட முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு” என சொல்லிவிட்டு போட் ஓட்டுபவனிடம் ஆதியிருக்கும் பக்கம் செல்ல சொன்னாள்.
•
Posts: 39
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Mar 2019
Reputation:
3
அருமையான தொடக்கம் நண்பா.. தொடருங்கள்.. ஆதி தான் கதையின் நாயகன் போன்று தெரிகிறது.. பார்ப்போம்..
•
Posts: 20
Threads: 3
Likes Received: 2 in 2 posts
Likes Given: 6
Joined: Dec 2018
Reputation:
2
வித்தியாசமான தொடக்கம் அருமை தொடர வாழ்த்துக்கள்
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்-ராஜன்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காவேரி அவளிடம்
”எதுக்கு இப்ப அந்த காட்டான் பக்கம் போகனும் வேணாமே நமக்கெதுக்கு வம்பு”
”இருடி வா என்ன நடக்கதுன்னு பார்க்கலாம்” என்றாள் யாமினி
அதற்குள் அந்த பெண்களும் அவனை கேலி செய்தும் கிண்டல் செய்தும் போட்டோ எடுத்தும் ஓய்ந்து போய் அங்கிருந்து திரும்பினார்கள் பாதி வழியில் அவர்களைத் தடுத்தாள் யாமினி
”என்ன செய்றீங்க நீங்க அவர் அங்க நிக்கிறாரே அவரை நீங்க கூட்டிட்டு போகலையா” என்றாள்
”அவனே வருவான் நாங்க ஏன் கூட்டிட்டு போகனும்”
”எப்படி அவர் அங்க வந்தாரு”
”தண்ணியில குதிச்சி நீந்திவந்தான்”
”சரி அங்கயே ஏன் நிக்கனும்”
”நாங்க போன பின்னாடி வர சொல்லியிருக்கேன் வருவான்”
”அதான் எப்படி போட் இல்லாம”
”அவன் என்ன போட்லயா வந்தான் நீந்திதானே வந்தான் அப்படியே வரட்டுமே” என சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட யாமினி போட் ஓட்டுபவனிடம்
”அண்ணா அந்தாளுகிட்ட போங்கண்ணா” என சொல்லவும் அவனும் அவனிடம் சென்று போட்டை நிறுத்தினான்
ஆதியை பார்த்த யாமினி அவனிடம்
”ஏய் இங்கப்பாரு” என கை தட்டவும் ஆதி அவளை பார்த்தான்
வா வந்து போட்ல ஏறு உனக்கு குளிரலையா ஏறிவா” என சொல்லவும் அவன் அருகில் வர காவேரி அலறினாள்
”இதப்பாரு பொறுமையா ஏறனும் போட்டை கவிழ்த்திடாத புரியுதா” என சொல்லவும் அவன் யோசித்துவிட்டு மெதுவாக போட்டை பிடித்து ஏற போட் ஒரு பக்கம் சாயவும் காவேரி கத்தினாள்
அவள் கத்தலை பார்த்தவன் போட்டை விட்டான்.
”ஏன்டி கத்தற”
”ஏன் கத்தறேனா இந்நேரம் நாம தண்ணிக்குள்ள இருப்போம் இந்த விளையாட்டுக்கு நான் வரலை நான் நேத்ரன் கிட்டயே இருந்திருப்பேன்”
”சீ சும்மாயிரு பயமாயிருந்தா கண்ணை மூடி போட்டை கெட்டியா பிடிச்சிக்க” என சொல்லவும் அவளும் கண்களை மூடிக்கொண்டு போட்டையும் அவளையும் சேர்த்தவாறே பிடித்துக்கொண்டாள்.
போட் ஓட்டுபவன் கூட அச்சத்தில் இருந்தான்.
”அம்மா வேணாம்மா போட் மூழ்கிடும்”
”இல்லைண்ணா ஒண்ணும் ஆகாது நீங்க போட்டை கெட்டியா பிடிச்சிக்குங்கண்ணா” என சொல்லவும் அவனும் கெட்டியாக பிடித்துக்கொண்டான். மறுபடியும் யாமினி அவனைப்பார்த்து கை நீட்டவும் அவன் அவளை தள்ளிவிட்டு பார்த்தான்
”மேல வா” என கத்தவும் அவனும் மெதுவாக போட்டுக்கு அருகில் வந்து மற்ற இருவரையும் பார்த்துவிட்டு பலகையில் சட்டென ஏறி அமர்ந்தான். அவன் ஏறியதில் போட் பலமாக ஆடியது. காவேரி பயத்தில் அலறினாள்
”ஏய் கத்தாதடி கண்ணை தொறந்து பாரு” என சொல்லவும் அவளும் கண்களை திறக்கவே தன் முன்னால் அமர்ந்திருந்த ஆதியை பார்த்தான்.
”அடப்பாவி உனக்கு சூடு சுரணையே இல்லையா, ஜில் தண்ணியில நிக்கற உனக்கு குளிரல” என அவள் கேட்கவும் அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்துவிட்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.
அவனைப் பார்த்து முறைத்துவிட்டு யாமினியிடம் காவேரி
”இது சரியில்லை இவனுக்கு ஏன் நாம உதவி செய்யனும்”
”பரவாயில்லை விடு” என சொல்லிவிட்டு அவனிடம் யாமினி
”ஏய் இங்க பாரு” என்றாள் அவனும் அவளைப் பார்க்க
”உன் பேரு ஆதியா” என கேட்க அவன் பதிலே சொல்லாமல் பார்த்தான்
”என்னடி இவன் பேசமாட்டேங்கறான் ஊமையா” என காவேரி கேட்க
இருக்கலாம் என்னவோ தெரியலையே” என அவனை பார்த்தவள் அவனது உடலை பார்த்தாள். தண்ணிரில் நின்றும் அவனது உடல் குளிரில் நடுங்காமல் விறைப்பாக இருந்தான். யாமினி மெதுவாக அவனது கையை தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்று இருக்கவே அவனிடம்
”உனக்கு குளிருதா” என கேட்க அவனிடம் பதிலில்லை. அவனது உடைகள் முற்றிலும் நனைந்திருந்தது. அதைப்பார்த்தவள் அவனிடம் தான்போர்த்தியிருந்த ஷால்வையை அவனிடம் நீட்டினாள். அதை வாங்க மறுத்தான் ஆதி அவளே அதை அவன் மீது போர்த்திவிட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. போட்டும் திரும்பி கரையை அடைந்ததும் முதலில் இரு பெண்களும் இறங்கிக்கொள்ள பிறகு அவனும் கரையில் இறங்கி அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் சென்றதும் காவேரி யாமினியிடம்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”இது தேவையா எப்படியோ போறான்னு விட வேண்டியதுதானே இப்ப நீதான் குளிர்ல நடுங்கப்போற” என சொல்லும் போதே அங்கு வந்து நின்றான் ஆதி. திடீரென அவனைப் பார்த்த பயத்தில் காவேரி பின்னால் செல்ல அவளை பார்த்துவிட்டு ஆதி யாமினி முன் நின்று அவள் தந்த ஷால்வையை அவளுக்கே கொடுத்தான்.
”இல்ல பரவாயில்லை இது உனக்குதான் வெச்சிக்கோ” என்றாள். அவனோ அதை அவளிடம் நீட்டவும் அவள் மறுபடியும்
”பரவாயில்லை என்கிட்ட வேற இருக்கு இதை நீ எடுத்துக்க” என சொல்லியும் அவன் அந்த ஷால்வையை அவள் மேல் சுற்றி போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் சென்றதும் நேத்ரன் வந்தான்
”யாரு யாமினி அவன் எதுக்கு உனக்கு துணியை கொடுத்துட்டு போறான்” என கோபமாக கேட்கவும்
”இல்லை அப்படியில்லை நான்தான் அவருக்கு கொடுத்தேன், வேணாம்னு திருப்பிகொடுத்தாப்ல அவ்ளோதான்” என சொல்லிவிட்டு காவேரியுடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
மறுபடியும் அவர்கள் பல இடங்களுக்கு சென்றுவிட்டு ஓட்டலுக்கு வந்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கியதும் யாமினியின் கண்களுக்கு ஆதி தெரிந்தான். ஓட்டலின் வெளியே கார்டனில் போட்டிருந்த பென்ச்சில் படுத்திருந்தான்.
யாமினி நேத்ரன் இருப்பதால் அவனிடம் செல்லாமல் ஓட்டலுக்குள் சென்றவள் ரிசப்ஷனில்
”ஒரு ரூம் வேணும்” என்றாள்
”சாரி மேடம் டபுள் ரூம் இல்ல சிங்கிள்தான் இருக்கு இப்பதான் வெக்கேட் பண்ணாங்க”
“நோ ப்ராப்ளம் அந்த ரூம் சாவி கொடுங்க”
”எத்தனை நாளைக்கு”
”ஒரு நாளைக்குதான் இந்த நைட் தூங்கறதுக்காக மட்டும்தான்”
”உங்களுக்கே ஏற்கனவே ரூம் இருக்கே மேடம்”
”ஆமா ஆனா எனக்கு தனியா தூங்கி பழக்கம் அதான்”
”ஓகே மேடம்” என அவளுக்கு ஒரு ரூம்சாவி தரவும் அந்த நெம்பரை பார்த்துவிட்டு நேராக ஓட்டலுக்கு வெளியே ஆதி இருந்த இடத்திற்கு வந்து அவனை எழுப்பினாள்.
ஆதி ஆதி எழு” என அவனது தோளை உலுக்கவும் தூக்க கலக்கத்தில் எழுந்து அமர்ந்து அவளை பார்த்தான் வித்தியாசமாக
”வா” என்றாள் அவன் எழாமல் இருக்கவே அவனது கையை பிடித்து இழுத்தாள். அவன் நகராமல் அவளையே வேடிக்கை பார்த்தான். அவள் சிறிது நேரம் போராடி பார்த்துவிட்டு அவனிடம்
”இங்க ஏன் படுத்திருக்க வா உனக்காக ஒரு ரூம் போட்டிருக்கேன் அங்க வந்து படுப்ப வா” என அழைக்கவும் மெதுவாக எழுந்தவன் அவளை பார்த்தான். அவள் முன்னே செல்ல பின்னாடியே வந்தான் ஆதி.
அவனுக்காக வாங்கிய அறை முன் நின்றவள் கதவை திறந்து அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். உள்ளே வந்தவன் அந்த அறையை பார்த்தான் ஒரே ஒரு கட்டில் இருக்கவே அதில் சென்று அமர்ந்தான். அவனிடம் சென்றவள்
”நீ இங்க படுத்துக்க இந்தா சாவி காலையில எழுந்ததும் சாவியை ரிசப்ஷன்ல கொடுத்துடு நான் பணம் கொடுத்துட்டேன் ஓகேவா” என அவள் சொல்லவும் அவன் சாவியை வாங்கி அங்கிருந்த டேபிள் மீது வைத்துவிட்டு படுத்தான்.
அவனது நனைந்த உடையை கண்டவள் அவனை எழுப்பினாள்
”உன் ட்ரஸ் ஈரமாயிருக்கு எழுந்து ட்ரஸை காயை வை. காலையில போட்டுக்குவ” என்றாள் அவனும் எழுந்து சர்ட் கழட்டவும் திரும்பிக் கொண்டவள்
”ஏய் என்ன செய்ற நீ நான் இருக்கேன்ல நீ பாட்டுக்கு ஷர்ட் கழட்டற இரு நான் வெளியே போயிடறேன் அப்புறம் எதையாவது செய்” என சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து சென்றுவிட அவனும் அறைக்கதவை தாப்பா போட்டுவிட்டு தான் போட்டிருந்த ட்ரெசை கழட்டி அங்கு ஆறவைத்துவிட்டு மீண்டும் கட்டிலில் படுத்து உறங்கலானான்.
யாமினி தன் அறைக்கு வந்தாள். அங்கு நேத்ரன் மட்டும் இருக்க யாரும் இல்லாமல் போகவே அவள் யோசனையுடன்
”காவேரி எங்க?”
”அதுவா அவளுக்கு வேற ரூம் மாத்தி கொடுத்துட்டேன்”
”ஓ சரி நான் அப்ப காவேரிக்கிட்டயே போறேன்”
”இல்லை இரு இந்த ரூம் காலியாதானே இருக்கு”
”நீங்க இருக்கீங்களே”
”நான் இருந்தா என்ன வேலைகளை ஷேர் பண்ணிக்கிறோம் அப்படியே ரூமையும் ஷேர் பண்ணிக்கலாமே” என நேத்ரன் சொல்ல அதற்கு யாமினி
”இல்லை எனக்கு பிடிக்கலை நான் காவேரிகிட்ட போறேன்” என வெளியே சென்றவளை தடுத்தான் நேத்ரன்
”இரு எங்க போற கஷ்டப்பட்டு இந்த வாய்ப்புக்காக நிறைய செலவு செஞ்சி டூர் ஏற்பாடு செஞ்சிருக்கேன் உன்கூட நான் இருக்கனும்னுதான் அதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற”
”நீங்க நினைக்கற பொண்ணு நான் கிடையாது”
•
Posts: 3,160
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தெரியும் அதனாலதான் உன்னை நான் கல்யாணம் செஞ்சிக்கனும்னு ஆசைப்படறேன்”
”இல்லை வேணாம்”
“ப்ளீஸ் அப்படி சொல்லாத ஒரு நிமிஷம் இரு” என நேத்ரன் சொல்லிவிட்டு தன் பேக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து நீட்டினான்.
இங்க பாரு இதை உனக்காகத்தான் நான் வாங்கினேன், நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம் யாமினி”
”சே நீயெல்லாம் ஒரு மனுசனா, ஊர்மிளா சொன்னது சரிதான் அவள்கிட்ட கூட இப்படிதான் நீ தாலிய காட்டி அவளை ஏமாத்தி அனுபவிச்சிட்டு அவளை திருடின்னு பழியை சுமத்தி கம்பெனியை விட்டே வெளியே துரத்திட்ட இப்ப நான் கிடைச்சேனா உனக்கு”
”அய்யோ இல்லை அவள்தான் என்னை ஏமாத்தினா பணத்துக்காக என்னை அடையப் பார்த்தா என்னை நம்பு நான் உன்னைாதான் காதலிக்கிறேன் என்னை நம்பு இதோ இப்பவே உன் கழுத்தில தாலி கட்டறேன் அப்பவாச்சும் என்னை நீ நம்புவதானே” என அந்த தாலியை அவள் கழுத்தில் கட்டுவதற்குள் அதை பிடுங்கிக் கொண்டு அவனை உள்ளே தள்ளிவிட்டு அறையை விட்டு வெளியே ஓடினாள் யாமினி.
அவள் செல்லவும் அவள் பின்னாலே ஓடினான் நேத்ரன். வேகமாக ஓடியவள் லிப்டில் சென்றுவிட நேத்ரன் வந்து பிடிப்பதற்குள் லிப்ட் மூடிக்கொண்டது. நிம்மதியாக பெருமூச்சு விட்டவள் லிப்டிலேயே காவேரிக்கு போன் செய்தாள்
”ஹலோ”
“எங்கடி போன பாவி என்னை அந்த நேத்ரன் கிட்ட மாட்டிவிட்டிட்டியே நியாயமா இது”
”நானா இல்லையே நீதான் அந்த நேத்ரன் கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னியாமே அதனாலதான் அவன் என்னை வெளியே அனுப்பினான். ஆமா என்னாச்சி” என அவள் கேட்க நடந்ததை சொன்னாள் யாமினி
”அடப்பாவி அப்ப ஊர்மிளா சொன்னது உண்மைதானா, நான் கூட அவள் சொல்றது பொய்யின்னு நினைச்சேன். ஆமா நீ எங்க இருக்க”
”நான் லிப்ட்ல இருக்கேன் நீ எங்க இருக்க”
”நான் 103 ரூம்ல இருக்கேன்”
”சரி நான் வரேன்” என சொல்லிவிட்டு லிப்டை பார்த்தாள். அவசரத்தில் 5வது மாடியை அமுக்கியிருந்தாள். தலையில் அடித்துக்கொண்டவள் 1வது பட்டனை அழுத்தவும் லிப்டும் 5வது மாடிக்கு சென்று பின் கீழே இறங்கியது. கீழே வந்தவள் காவேரி சொன்ன அறையை தேடி செல்ல அங்கு தயாராக காத்திருந்தான் நேத்ரன். இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கவே அவனை பார்த்த உடனே வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடியவள் ஏதோ ஞாபகம் வர நேராக ஆதியின் அறைக்கு சென்று கதவை பலமாகத் தட்டினாள். அதற்குள் நேத்ரன் வந்து அவளது கையை பிடித்து இழுக்கவும் அவனிடம் போராடிக் கொண்டிருந்தாள் யாமினி
”டேய் விடுடா என்னை இல்லை போலீஸ்ல சொல்லிடுவேன்”
”பணத்தை கொடுத்தா கேஸ் இல்லாம செஞ்சிடுவாங்க வாடி எத்தனை நாள்தான் உன் பின்னாடி அலையறது ரொம்பவே பிகு பண்ற பெரிய இவளா நீ சீ வா” என அவளை இழுக்க அவள் கத்த ஆரம்பித்தாள்
”யாராவது இருக்கீங்களா ப்ளீஸ் காப்பாத்துங்க” என அவள் கத்தவும் நேத்ரன் சட்டென அவளை தன்னிடம் இழுத்து தன் கையால் அவளின் வாயை பொத்தினான். அவள் அவன் கைகளுக்குள் மாட்டிக்கொண்டு போராடிக்கொண்டிருந்தாள். அந்நேரம் நேத்ரன் தலையில் ஒரு அடி இறங்கி அவன் உடனே மயக்க நிலைக்கு சென்றுவிட்டான். அவன் கீழே விழுந்ததும் தலை நிமிர்த்தி பார்த்த யாமினி அங்கு ஆதி இருக்கவும் நிம்மதியடைந்தவள் அவனிடம் சென்று அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
ஆதியை அவள் கட்டிக்கொண்டு அழுவதைக் கண்டும் ஆதி அவள் பக்கம் பார்க்காமல் கீழே விழுந்து கிடந்தவனைப் பார்த்தான். அழுது ஓய்ந்தவள் தன்னிலை பெற்ற பின்புதான் தான் ஆதியை கட்டிப்பிடித்திருப்பதை உணர்ந்து அவனிடம் இருந்து விலகி நின்றாள். வெறும் ஜட்டியுடன் நின்றிருந்தவனைக் கண்டு வெட்கத்தில் முகத்தை திருப்பியவள் அவனிடம்
”ரொம்ப நன்றி நீங்க மட்டும் இல்லைன்னா இந்நேரம் இவன்” என அழுதுக்கொண்டே திரும்பிப் பார்க்க அங்கு ஆதி இல்லாமல் போகவே நேத்ரனை பார்த்துவிட்டு ஆதி அறைக்கு சென்றாள். அவன் அங்கு படுக்கையில் படுத்துவிட்டான். நிம்மதியாக அறைக்கதவை வெளிபுறமாகச் சாத்தியவள் காவேரியிடம் சென்று நடந்ததைக் கூறினாள்
”பரவாயில்லையே அந்த ஆதி நல்லவன்தான் போல ஆனா ஏன் பேசமாட்டேங்கறான்” என காவேரி சொல்ல அதற்கு யாமினி
”அதை விடு நேத்ரனை பத்தி சொல்லு அவன்ட்ட இருந்து நான் எப்படியாவது தப்பிக்கனும்”
”என்ன செய்யலாம் பேசாம கம்பெனி எம்டிக்கு போன் பண்ணி சொல்லலாம்”
”அவர் நம்புவாரா”
”நம்பலைன்னா என்ன செய்றது பேசாம ஊரை விட்டு கிளம்பிடு நேத்ரன் எழுந்தா நான் சமாளிச்சிக்கிறேன். இந்த டூர் எப்ப முடியறது மறுபடியும் அவன் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா ஆதி திரும்பவும் உன்னை காப்பாத்த வரமாட்டான்”
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”சரி அப்ப நான் இப்பவே கிளம்பறேன் என் லக்கேஜ் எங்க”
“இப்பவா இந்த குளிர்லயா பைத்தியமா நீ, பஸ் கூட போகாது விடிஞ்சதும் போ”
”அதுக்குள்ள நேத்ரன் வந்துட்டா”
“ஒரு ஐடியா பேசாம நீ உன் லக்கேஜ் எடுத்துக்கிட்டு ஆதி ரூம்ல தங்கிடு, யாருக்கும் சந்தேகம் வராது அப்படியே எம்டிக்கிட்ட போன்ல சொல்லிடு நானும் சொல்றேன்”
”சரி இரு இப்பவே நான் போன் பண்றேன்” என சொல்லிவிட்டு யாமினியும் போன் செய்தாள். ராத்திரி என்பதால் உறங்கிக் கொண்டிருந்தவர் கடைசி ரிங்கில் எடுத்து பேசவும் யாமினியும் காவேரியும் நடந்ததைக் கூறினார்கள். யாமினி கடைசியில் அழவே ஆரம்பித்தாள்
”சார் என்னால இங்க இருக்க முடியாது பயமாயிருக்கு சார்” என அவள் அழவும் எம்டி அவளிடம்
”வேணாம்மா நீ கிளம்பு நான் நேத்ரன் கிட்ட பேசறேன், இந்த டூரை கேன்சல் செய்யறேன் தாமோதரன்கிட்ட பேசி எல்லோரையும் ரிட்டர்ன் வர சொல்றேன்”
”அப்ப நானும் பஸ்லயே வந்துடறேனே”
“வேணாம்மா நேத்ரன் இருக்கான்ல நான் அவனை திட்டி அதனால அவன் உன்னை ஏதாவது செஞ்சிட்டா நான் தாமோதரன் கிட்ட பேசி நேத்ரன் சீட்டை கிழிச்சிடறேன் நீ ஊருக்கு கார் ஏற்பாடு செஞ்சிட்டு வந்துடும்மா அவன் மேல ஏற்கனவே இந்தமாதிரி நிறைய ரூமர்ஸ் இருந்தது ஆனால் அதுக்கு ஆதாரம் இல்லாததால நான் அமைதியாயிட்டேன் இந்த முறை நான் அவனை வேலையை விட்டே எடுத்துடறேன் நீ வாம்மா அவன்ட்ட மாட்டாத” என சொல்லவும் அவளும் நன்றி சொல்லிவிட்டு தன் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ஆதி அறைப்பக்கம் சென்றாள். இன்னும் அந்த நேத்ரன் அங்கேயே மயக்கமாக இருக்கவே பயத்தில் மூச்சு இருக்கறதா என பார்த்தாள். நேத்ரன் உயிருடன் இருப்பதை கன்பார்ம் செய்தவள் ரிசப்ஷனுக்கு போன் செய்தாள்
”ஹலோ இங்க பர்ஸ்ட் ப்ளோர்ல ஒருத்தர் மூச்சு பேச்சில்லாம இருக்காரு வந்து பாருங்க” என வேகமாக சொல்லிவிட்டு ஆதியின் அறைக்கதவை தட்டினாள். கதவு திறந்திருந்தாலும் எப்படி உள்ளே செல்வது என்ற நினைப்பில் அவள் கதவை தட்ட 5 நிமிடம் கழித்து தூக்க கலக்கத்தில் வந்து கதவை திறந்தான். அவன் இன்னும் அந்த கோலத்தில் இருக்கவே அவள் தலை குனிந்துக்கொண்டு அவனிடம்
”சாரி தப்பா நினைக்காதீங்க எனக்கு தங்க வேற ரூம் இல்லை இன்னிக்கு உங்க ரூம்ல தங்கட்டுமா ப்ளீஸ்” என்றாள் அவளையும் அவளது கையில் இருக்கும் லக்கேஜையும் பார்த்தவன் லக்கேஜை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல அவளும் பின்னாலே வந்து கதவை சாத்தி தாப்பா போட்டாள். லக்கேஜை டேபிள் மீது வைத்தவன் அவளை பார்த்துவிட்டு கீழே தரையில் படுத்துக்கொள்ள அவள் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
அங்கு நேத்ரனோ மெதுவாக சுய உணர்வு வந்து எழுந்தவன் சுற்றி சுற்றி பார்த்தான். அவன் முன்பு 2 பேர் இருக்க அவர்களிடம்
”நான் எப்படி இங்க”
”சார் நீங்க மயக்கமா இருந்தீங்க அதான்”
”என் கூட ஒரு பொண்ணு இருந்தாளே”
”இல்லை சார் நீங்க மட்டும்தான் இருந்தீங்க”
”அப்படியா” என எழுந்தவன் அந்த அறையை விட்டு வெளியே வந்து தன் அறைக்கு வர அங்கு யாருமில்லாமல் போகவே காவேரியிருந்த அறைக்கு வரவும் அங்கு தாமோதரன் இருந்தார்
”டேய் நேத்ரா பொறுக்கி இங்க வந்து உன் வேலையை காட்டறியா இப்பதான் எம்டி போன் பண்ணாரு உன் சீட் கிழிஞ்சிடுச்சி டூரையும் கேன்சல் செஞ்சிட்டாரு”
”சார் நான் எதுவும் செய்யலை சார் யாமினிதான் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா”
”போதும் இனி உன்னை நம்பறதா இல்லை போயிடு இங்கிருந்து போடா” என சொல்லி வெளியே தள்ளிவிட்டார்
நேத்ரன் கோபமாக தன் அறைக்குள் வந்து அமர்ந்தவன் யோசிக்கலானான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, குழம்பியவன் மணியை பார்க்க அது 1 மணி என காட்டவும் எம்டிக்கு போன் செய்தான். அவரோ அவனை நன்றாக திட்டி போனை வைக்கவும் கடுப்பானான் நேத்ரன்.
”சே அவளை விட்டது தப்பா போச்சி எப்படியாவது அவளை பழிவாங்கனும். இப்ப பஸ் கிடையாது இந்த குளிர்லயும் அவளால எங்கயும் போக முடியாது, இங்கதான் எங்கயாவது இருப்பா காவேரிக்கு தெரியும் ஆனா அவள் சொல்லமாட்டா என்ன செய்றது இப்ப” என யோசித்தவன் தூக்கம் வராமல் அந்த அறையை விட்டு வெளியே ரிசப்ஷனில் விசாரித்தான்
”ஹலோ என் கூட வந்த ஒரு பொண்ணு வேற ரூம்ல தங்கியிருக்காங்க அவங்ககிட்ட பேசனும் வெரி அர்ஜன்ட்”
”பேரு சார்”
”யாமினி”
”ஓ அவங்களா ஆமாம் சார் தனியா ஒரு ரூம் புக் பண்ணியிருக்காங்க”
”எப்ப புக் பண்ணா இப்பவா”
”இல்லை சார் 9 மணிக்கு புக் பண்ணாங்க”
“9 மணிக்கா யாருக்காக”
•
Posts: 365
Threads: 0
Likes Received: 41 in 37 posts
Likes Given: 150
Joined: Jan 2019
Reputation:
4
•
Posts: 3,160
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”சார் அவங்களோட ஒரு ஆள் போனதை பார்த்தேன்”
”ரூம் நெம்பர்”
”110 சார்”
”தாங்ஸ்” என சொல்லிவிட்டு யோசித்தான்.
”110 ஆ அப்ப அந்த ப்ளோர்லதானே நானும் மயங்கிகிடந்தேன். யாரு அந்த ஆளு அவள் கூட என்ன செய்றான் ஒருவேளை அவன்தான் என்னை அடிச்சானா இல்லை விடக்கூடாது பாவி யாமினி உன்னால என் வேலையும் போச்சி, மரியாதையும் போச்சி நேத்து வந்தவ நீ 5 வருஷமா வேலை செய்ற என்னை சொடக்கு போடற நேரத்தில பழியை போட்டு வேலையை விட்டு தூக்கிட்டல்ல இருடி உன் மானத்தை எப்படி கப்பலேத்தறேன்னு பாரு” என சொல்லிவிட்டு ஓட்டலுக்கு வெளியே சென்றவன் போலீசுக்கு போன் செய்தான்.
”ஹலோ”
”ஹலோ சார் ஓட்டல்ல விபச்சாரம் செய்றாங்க சார் நாங்க டூரூக்காக வந்தோம் ஆனா இங்க அவங்க தொல்லை தாங்க முடியலை சார். எங்க கூட வந்த பொண்ணுங்களை கூட கை பிடிச்சி இழுக்கறாங்க சார்”
”அப்படியா எந்த ஓட்டல் சொல்லுங்க இப்பவே ரெய்டு பண்றோம்” என சொல்லவும் அவனும் ஓட்டல் பேரை சொல்லிவிட்டு போனை கட்செய்தான்.
போலீஸ் வரட்டும் யாமினியும் மாட்டுவா காவேரியும் மாட்டுவா ஏன்னா காவேரி ரூம்லதானே தாமோதரன் இருக்கான் மாட்டிக்கட்டும்” என நினைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்று நிம்மதியாக உறங்கினான்.
ஆதியின் அறையிலோ வெறும் தரையில் படுத்திருந்த ஆதிக்கு குளிரவில்லை. நேத்ரனால் சிறிது நேரம் பயந்த யாமினிக்கு குளிரவும் அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். அவளின் முனகலால் கண் விழித்தவன் எழுந்து அவளை பார்த்தான். அவள் தூக்கம் வராமல் கட்டிலில் அமர்ந்துக்கொண்டு போர்வையை போர்த்திக்கொண்டு நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவன் மெதுவாக எழுந்து அவளிடம் வந்தான்
அவனைப் பார்த்தவள்
”அது பயத்துல எனக்கு ஜூரம் வந்துடுச்சி போல” என்றாள் ஆதி அவளது நெத்தியில் கைவைக்க பயங்கர ஜில்லென இருக்கவும் அவளது போர்வையை விலக்கி அவளை படுக்க வைத்தான்
”இல்லை எனக்கு குளிருது போர்வை வேணும் என்னால தூங்க முடியலை ப்ளீஸ் போர்வையை கொடு” என அவள் சொல்லவும் அசையாமல் அவளையே பார்த்தான். அவனது பார்வையில் அமைதியாகி படுத்து தன் உடலை சுருக்கிக் கொண்டவள் அவனைப் பார்த்தாள்.
ஆதியோ அந்த போர்வையை அவள் மீது நன்றாக போர்த்தி உடல் முழுவதுமாக மொத்தமாக கவர் செய்துவிட்டு மீண்டும் கீழே தரையில் படுத்து கண்கள் மூடி உறங்கலானான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத யாமினி ஆதி அருகில் இருந்த தைரியத்தில் நேத்ரனை பற்றி நினைக்காமல் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.
ஒரு மணி நேரம் கழித்து அந்த அறைக்கதவு தட்டப்பட அரக்க பரக்க எழுந்தாள். அந்த அசைவிலும் கதவு தட்டப்பட்ட சத்தத்திலும் எழுந்தான் ஆதி அவள் பயந்து போய் இருப்பதைப் பார்த்துவிட்டு திரும்பி கதவை பார்த்தான். யாரோ தட்டும் ஓசை கேட்டு எழுந்தவன் கதவை திறக்க அங்கு இன்ஸ்பெக்டர், 2 போலீசும் 1 ஏட்டு இருக்கவே புரியாமல் அவர்களைப் பார்த்தான். வந்தவர்களோ அவனது நிலையை பார்த்துவிட்டு உள்ளே நுழைய முயற்சிக்க அவர்களை வாயிலிலேயே தடுத்தான் ஆதி
”ஏய் வழியை விடு என்ன பிராத்தலா நடக்குது உள்ள வழியை விடு சோதனை போடனும்” என கத்தவும் அவர்கள் பேசியதை கேட்ட யாமினிக்கு பக்கென்றது
”அய்யோ போச்சி வசமா மாட்டிக்கிட்டேனே இப்ப என்ன செய்றது நான் என்ன செய்வேன்” என அவள் புலம்பும் போதே போலீஸ் உள்ளே வர வந்தவர்கள் யாமினியை பார்த்தார்கள். கலைந்து போயிருந்த அவளது உடையை சரிசெய்து விட்டு எழாமல் அப்படியே போர்வையை மட்டும் போர்த்திக்கொண்டு இருந்தவளிடம்
”ஏய் யார்மா நீ இங்க என்ன செய்ற யார் இவன்”
”சார் என் பேரு யாமினி நாங்க டூருக்கு வந்திருக்கோம்”
”டூரா என்ன பொய்யா சொல்ற உன்னை மாதிரி எத்தனை பொம்பளைங்களை நான் பார்த்திருக்கேன் இவன் யாரு கஸ்டமரா”
”சார் சத்தியமா இல்லை சார் இருங்க நான் என் ஐடியை காட்டறேன்” என அவள் எழுந்து தன் கைபையை திறந்து தன் கம்பெனி ஐடிகார்டை நீட்டினாள். அதை வாங்கி பார்த்தவர்கள் ஒரு ஏட்டு மட்டும் அறைக்கு வெளியே சென்று அந்த கம்பெனி எம்டிக்கு போன் செய்து கன்பார்ம் செய்தவன் இன்ஸ்பெக்டரிடம் ஏதோ சொல்ல அவரும் அவளை ஏற இறங்க பார்த்தார். அவள் அழகாக இருந்ததால் கூடவே பயந்தும் இருந்த காரணத்தால் வேண்டுமென்றே அவளிடம்
”ஏய் பொய் சொன்னது போதும் வா ஜீப்ல ஏறு”
”சார் சத்தியமா நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல சார் இங்க என் கூட வந்தவங்க கூட ரூம்ல இருக்காங்க அவங்களை வேணா கேளுங்க சார்”
”முடியாதும்மா கிளம்பு” என அவள் கையை பிடிக்கவும் ஆதி முன் வந்து அவர்களை தடுத்தான்.
”டேய் யாருடா நீ என்னடா வேணும் உனக்கு வாடா நீயும் ஸ்டேஷனுக்கு” என அவன் கையை பிடிக்கவும் யாமினி தடுத்தாள்
”சார் நீங்க பண்றது தப்பு நாங்க டூருக்குதான் வந்திருக்கோம் இவர் என்னோட ஹஸ்பென்ட் சார் எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி சார் நாங்க ஹனிமூன் வந்திருக்கோம்” என்றாள்
”கல்யாணமா எங்கம்மா உன் தாலியை காட்டு” என இன்ஸ்பெக்டர் சொல்லவும் உடனே அவள் நேத்ரன் தன்னிடம் கட்ட வந்த தாலியை அவனிடம் இருந்து பிடுங்கியவள் பத்திரமாக தன் கைபையில் வைத்திருக்க அதை எடுத்துக் காட்டினாள்
”இதோ சார் இங்க இருக்கு”
”அதை ஏன் பையில வைச்சிருக்கனும் கழுத்தில தானே மாட்டியிருக்கனும்”
”சார் கழுத்திலதான் சார் இருந்திச்சி அவர்தான் குத்துதுன்னு கழட்டிட்டாரு சார் ப்ராமிஸ் சார்” என அவள் சொல்லவும் இன்ஸ்பெக்டருக்கு பெருத்த ஏமாற்றமாகி ஏட்டிடம் பேசினார்
”என்னய்யா இது பிகர் சூப்பரா இருக்கு கூட்டிட்டு போலாம்னு பார்த்தா தாலியை காட்டறா அந்த கம்பெனி எம்டியும் உண்மையை சொல்றான் என்னய்யா செய்றது இப்ப”
”சார் எனக்கு சந்தேகமா இருக்கு சார், டூர் வந்ததா சொல்றா இப்ப ஹனிமூன்னு சொல்றாளே சார்”
“இப்ப என்ன செய்றது?”
“தாலியிருக்குல்ல அவனை அந்த பொண்ணு கழுத்தில கட்டச் சொல்லுங்க கட்டிட்டா போயிடலாம் கட்டலைன்னா இவளை இழுத்துட்டு போயிடலாம்” என சொல்லவும் இன்னொரு போலீசும் அதை ஒப்புக்கொள்ள இன்ஸ்பெக்டரும் அவளிடம் வந்து
”இதப்பாரு நீ சொல்றத எங்களால நம்ப முடியாது முதல்ல என்னடான்னா கம்பெனி டூர்ன்னு சொன்ன இப்ப ஹனிமூன்ங்கற என்ன எங்களை ஏமாத்த பார்க்கறியா”
“சார் இல்லை சார் கம்பெனி டூர்தான் சார் அப்படியே ஹனிமூன் கொண்டாடலாம்னு செலவு மிச்சம் பண்ண இப்படி வந்தோம் சார்”
“எதுக்கு சிங்கிள் ரூம் புக் பண்ணியிருக்க”
”சார் வேற ரூம் கிடைக்கலை சார் அதான் அவசரத்துக்கு இப்படி”
”நீ சொல்றது நம்பற மாதிரியில்லையே ஏன் இவன் பேசமாட்டானா“
”சார் அவருக்கு பேச்சு வராது சார் அதான் இங்கிருந்து நேரா கேரளாவுக்கு போய் அங்க சிகிச்சை செய்யலாம்னு”
“நீ சொல்றதெல்லாம் ஒரே பொய்யாவே தெரியுதே”
”இல்லை சார் நான் உண்மையைதான் சொல்றேன். இவரோட சொந்தக்காரங்க கூட இதே ஓட்டல்லதான் சார் இருக்காங்க அவங்களை வேணா கேட்டுப்பாருங்க சார்”
”இல்லை நீ எங்களை ஏமாத்தற சரி இந்த தாலியை அவனை உன் கழுத்தில கட்ட சொல்லு அவன் கட்டிட்டா சரி இல்லை ஸ்டேஷனுக்கு நட” என சொல்லவும் யாமினிக்கு திக்கென்றது
”சார் என்ன சார் இவ்ளோ சொல்லியும் எங்களை நீங்க நம்ப மாட்டேங்கறீங்களே”
“நீதானே சொன்ன அவன் உன் புருஷன்னு அவன்தானே கழட்டி வைச்சான் இப்ப கட்டமாட்டானாமா” என சொல்லிவிட்டு அவளை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்துக்கொண்டே
”ஏய் இதப்பாரு பொய்யா சொல்ற நீ எனக்கு தெரியும்டி உன்னை மாதிரி நான் எத்தனை பேரை பார்த்திருக்கேன் வா ஜீப்ல ஏறு” என அவள் கையை பிடித்தான் ஒரு ஏட்டு உடனே ஆதி அவனை தடுத்துவிட்டு இன்ஸ்பெக்டரிடம் இருந்த தாலியை வாங்கி சடாரென யாமினி கழுத்தில் கட்டிவிட்டு அவளை அணைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டரை முறைத்தான்.
அவனது உருவம் ப்ளஸ் முறைப்பை பார்த்து பயந்த ஏட்டு, போலீசுகளும் இன்ஸ்பெக்டரிடம்
”சார் வேணாம் சார் இவன் ஒருத்தனே 3 பேரை அடிப்பான் போலிருக்கு வாங்க போலாம்” என
சொல்லவும் அவரும் அவளிடம்
”சரி சரி ஒழுங்கா இருங்க கதவை சாத்திக்க” என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட ஆதி அறைக் கதவை சாத்திவிட்டு அவள் முன் வந்து நின்றான். அவளோ இன்னும் திக்பிரமையில் இருக்கவே அவளது முகத்தை தன் கைகளால் தூக்கிப் பார்த்தான். அவள் பயந்து போய் இருந்தாள். அந்த அறையில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து அவளிடம் தர இருந்த பயத்தில் தண்ணீரை மொத்தமாக குடித்துவிட்டு அவனிடம் நீட்டி மூச்சு வாங்கினாள்.
அவளை நிதானமாக பார்த்துவிட்டு தான் கட்டிய தாலியின் மீது கைவைத்து அதை கழட்ட நினைக்க கெட்டியாக அவன் கையை பிடித்தாள் யாமினி
”ஏய் என்ன செய்ற நீ”
அவன் புரியாமல் அவளை பார்த்துவிட்டு தாலியை கழட்ட முனைய
”ஏய் விடு என்ன நினைச்சிட்டு இருக்க நினைச்சா தாலி கட்டுவ நினைச்சா கழட்டுவியா விடு தூரம் போ” என விரட்டவும் அவன் யோசனையுடன் அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு சுவர் ஓரமாக சென்று நின்றுகொண்டான். யாமினியோ அவனை முறைத்துவிட்டு தன் தாலியை எடுத்து பார்த்துவிட்டு கெட்டியாக அதை பிடித்துக்கொண்டு கட்டிலில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு உறங்கலானாள்.
5 நிமிடம் கழித்து அவள் அருகில் வந்தவன் தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பாமல் போர்வையை விலக்கிவிட்டு அவன் கட்டியை தாலியை மெதுவாக கழட்டலானான். அந்த அசைவில் கண் திறந்தவள் அவனை தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தாள். தாலியையும் அவனையும் பார்த்தவள் கோபத்தில் அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். அது அவனை துளியளவும் பாதிக்கவில்லை அவளையே சந்தேகமாக பார்த்தான்.
எனக்கு புரியுது நீ என்னை காப்பாத்த தான் இப்படி தாலி கட்டின சரி அதுக்காக இப்படி செய்யறதா அவசரத்தில கட்டினியோ என்னை காப்பாத்த கட்டினியோ எப்படியோ தாலி கட்டிட்டல்ல விடு நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன். காலையில நான் சென்னைக்கு போயிடறேன்” என சொல்லவும் அவன் யோசனையுடன் அவளை படுக்க வைத்துவிட்டு போர்வை கொண்டு போர்த்தியவன் மீண்டும் தரையில் படுத்து உறங்கலானான்.
யாமினிக்கோ இன்று நடந்த விசயங்களால் துளி கூட தூக்கம் இல்லாமல் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள். அந்த தாலி வேறு அவள் நெஞ்சை அழுத்தமாக குத்திக்கொண்டிருக்க அவளுக்கு என்ன செய்வது என தெரியாமல் உறங்காமலே விடியலை எதிர்நோக்கினாள்.
Quote:முறையற்ற இத்திருமணத்தினால் யாமினி மற்றும் ஆதியின் எதிர்காலம் என்னவாகும்? ஆதியின் திருட்டு பழியை நீக்க யாமினி உதவுவாளா?? அல்லது ஆதியை விட்டு விலகுவாளா???
•
Posts: 365
Threads: 0
Likes Received: 41 in 37 posts
Likes Given: 150
Joined: Jan 2019
Reputation:
4
பயங்கரமான திருப்பமா இருக்கு
•
Posts: 3
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 0
Joined: Apr 2019
Reputation:
0
Super story semaya poguthu aduththa update epo ji ?
•
Posts: 365
Threads: 0
Likes Received: 41 in 37 posts
Likes Given: 150
Joined: Jan 2019
Reputation:
4
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா
கொடைக்கானல்
விடிந்தது
படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென விழிப்பு வர கண்களை மெல்ல விழித்து சுற்றிலும் பார்த்து கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்தாள் யாமினி.
சோம்பல் முறித்துவிட்டு தன் மீதிருந்த போர்வையை விலக்கியவள் கலைந்திருந்த தனது உடைகளை கண்டு திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தாள் யாரும் இல்லாமல் போகவே அவசரமாக உடைகளை சரிசெய்தவளுக்கு தனது கழுத்தை ஏதோ ஒன்று உறுத்துவதாக தோன்ற என்ன ஏது என தடவி பார்க்க அங்கு தாலி இருக்கவே அவளது மூளையில் ஒரு மின்சார தாக்குதல் உருவானது. சட்டென நேற்று இரவு நடந்த விசயங்களை கண் இமைக்கும் நேரத்தில் நினைத்துப்பார்த்து திகைத்தாள்
”நேத்ரனுக்கு பயந்து இங்க வந்து ஆதிகூட ஒரு நாள் நைட் தங்கியிருக்கோம் எப்படி நமக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சி. நேத்ரன் கிட்ட மறுபடியும் மாட்டிக்க கூடாதுங்கற ஜாக்கிரதையா இல்லை ஆதி மேல இருந்த நம்பிக்கையா ஆனாலும், ஆதி நம்மகிட்ட எதுவும் தப்பா நடந்துக்கலையே பார்க்க கரடு முரடா இருந்தாலும் அவனுக்கு இளகின மனசுதான் அர்த்த ராத்திரியில ஒரு பொண்ணு வந்தா வாய்ப்பு கிடைச்சதேன்னு அவள்கிட்ட முறையில்லாம நடந்துக்காம பாதுகாப்பு கொடுத்தானே பரவாயில்லை நல்லவனாதான் இருக்கான்” என நினைத்தவளின் கண்கள் மறுபடியும் தாலியைப் பார்த்துவிட்டு ஆதியின் நினைவு வரவே சட்டென அறையை பதற்றமாக சுற்றி சுற்றிப் பார்த்தாள்
அய்யோ என் திடீர் புருஷனை காணலையே இப்பதானே நல்லவன்னு சர்டிபிகேட் கொடுத்தேன் அதுக்குள்ள சொல்லாம கொள்ளாம போகலாமா அட்ரஸ் போன் நெம்பர் எதுவும் அவருகிட்டயிருந்து வாங்கலையே நான் எங்கேன்னு போய் அவரைத் தேடுவேன்” என அலறி அடித்துக் கொண்டு எழுந்தவள் அறைக்கதவை திறக்க முயல அது வெளிப்பக்கமாக பூட்டியிருக்கவும் அமைதியாக யோசித்தாள்
”என்னது கதவு வெளிய தாப்பா போட்டிருக்கு அப்படின்னா என்ன அர்த்தம் ஆதி திரும்பி வருவான்னு அர்த்தமா அதான் கதவை தாப்பா போட்டானா சரி சரி அவன் வர்றதுக்குள்ள குளிச்சிட்டு வந்துரலாம் அவன் வந்தப்பின்னாடி என்னென்ன பிரச்சனை வருமோ எதுக்கும் நாம தயாரா இருக்கனும் ஒருவேளை பசிக்குதுன்னு சாப்பிட போயிருப்பாரா நல்லவனா இருந்தா வர்றப்பவே எனக்கும் சேர்த்து ஒரு டிபன் பார்சல் வாங்கி வந்திரனும் ரொம்ப பசிக்குது அவர் வர்றப்ப நாம என்ன பேசனும்னு இப்பவே யோசிச்சி வைச்சிக்கனும் அப்பதான் டக்டக்னு பேசிட முடியும் அவர் முகத்தில எக்ஸ்பிரஷனே காட்டமாட்டேங்கறாரே அவர் எதை நினைக்கறார்ன்னு எப்படி நான் புரிஞ்சிக்கறது என்ன செய்யறது இப்ப” என பயங்கரமாக யோசித்தவள் சட்டென தன் செல்போனை தேடி எடுத்துப் பார்த்தாள். மணி காலை 9 என காட்ட
”சரி அவர் வர்றதுக்குள்ள ஒரு குளியல் போட்டு அப்புறமா யோசிப்போம்” என நினைத்தவள் தன் பெட்டியில் இருந்து டவலையும் நைட்டியையும் எடுத்துக்கொண்டு குளிக்க பாத்ரூமிற்குள் சென்றாள்.
அரை மணி நேரம் கழித்து கதவை திறந்து நைட்டியுடன் வெளியே வந்தாள் யாமினி. அங்கு கட்டிலில் ஒரு நடுத்தர வயது பெண்மணியுடன் ஆதி உட்கார்ந்து இருக்கவே அதை கவனிக்காமல் வெளியே வந்த யாமினைியைப் பார்த்தவன் அவளை நைட்டியில் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஷாக் அடித்தது போல் எழுந்து வெளியே ஓடி கதவை சாத்தினான் ஆதி.
அதைப் பார்த்தவள் தன்னையும் ஒரு முறை பார்த்துவிட்டு
”நான்தானே பொண்ணு நான் தானே ஓடனும் இவன் ஏன் ஓடறான் அவ்ளோ கேவலமாவா நாம இருக்கோம் இல்லை நம்மால பிரச்சனை வரும்னு பயந்து ஓடறானா” என கதவை பார்த்து முணுமுணுத்தவள் திரும்பி அந்த பெண்மணியை பார்த்தாள். அவரிடம் வந்து
”நீங்க யாருங்க” என கேட்க அவர் சிரித்தபடியே
”ஓ சாரி வணக்கம் சாரி நான் இன்னும் ட்ரெஸ் பண்ணலை 2 மினிட்ஸ் இருங்க இதோ வரேன்” என வேகமாக தன் பையில் இருந்து சுடிதார் எடுத்தவள் ஓடிச்சென்று பாத்ரூமில் நுழைந்து அவசர கதியில் அதை மாட்டிக்கொண்டு அவர் முன் வந்து நின்றாள்.
அவரோ அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு தான் ஏற்கனவே கையில் கொண்டு வந்திருந்த குங்கும சிமிழ் திறந்து தன் ஒரு விரலால் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டு
”நீ ரொம்ப அழகாயிருக்கம்மா” என பாசமுடன் சொல்ல அதற்கு யாமினியோ சிரித்தபடியே
”தாங்கஸ் அத்தை ஆங் உங்களை அத்தைன்னு நான் கூப்பிடலாமா” என தயக்கமாக கேட்க
“தாராளமா கூப்பிடும்மா ஆதி நேத்து ராத்திரி நடந்ததை சொன்னான்” என சொல்ல அவளோ சந்தேகமாக
”என்னது அவர் பேசுவாரா நான் அவரை ஊமைன்னு நினைச்சேன்”
”இல்லைம்மா நல்லா பேசுவான் இங்கிருந்து கத்தினான்னா தூரத்தில இருக்கறவனுக்கு கூட பிசிறுதட்டாம கேட்கும் நல்ல குரல்வளம் அவனுக்கு”
”அப்புறம் ஏன் எதுவும் பேசமாட்டேங்கறாரு”
”நான் ஆதியோட அம்மா என் பேரு சுமித்ரா”
அது ஒரு கதைம்மா” என சலிப்பாக சொன்னவரிடம் ஆர்வமாக கேட்டாள் யாமினி
”என்ன கதை”
”எங்க வீட்ல ஒரு திருட்டு நடந்திடுச்சி பரம்பரை நகைகள் திருடு போயிடுச்சி அதுக்கு காரணம் ஆதின்னு சொல்லி அவனுக்கு என் மாமனார் ஈஸ்வர மூர்த்தி தண்டனை கொடுத்திட்டாரு”
என்ன தண்டனை”
”நகைங்க கிடைக்கறவரைக்கும் அந்த வீட்ல வேலைக்காரனா மத்தவங்க சொல்றத செய்ற அடிமையா இருக்கனும்னும் யாருகிட்டேயும் ஒரு வார்த்தை கூட அவன் பேசாம இருக்கனும்னு சொல்லிட்டாரு”
“ஏன் இப்படி சொல்லனும் அவரா அந்த நகைகளை திருடினாரு”
”அவன் திருடலைம்மா ஆனா அந்த இடத்தில அந்நேரம் அவன் இருந்தான்.”
”சரி அதுக்காக இப்படியா தண்டனை தரனும் போலீஸ்க்கு போயிருக்கலாமே”
”மழைக்கு கூட எங்க குடும்பத்தை சேர்ந்தவங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுங்கமாட்டாங்க வீராப்பு அதிகம்”
”ஓ பாவம் சரி இது எப்ப நடந்திச்சி”
”இது நடந்து 5 வருஷமாச்சி”
”மைகாட் 5 வருஷமா இன்னுமா அந்த நகைகள் கிடைக்கலை”
”இல்லையே”
“தேடலையா”
”ஆதியும் தேடினான் ஆனா கிடைக்கலை”
”ஒரு வேளை திருடன் எடுத்துட்டு போய் வித்திருக்கலாம்”
”இல்லைம்மா அன்னிக்கு வீட்டை விட்டு யாரும் வெளிய போகலைன்னு ஆதி உறுதியா சொல்றான்”
”அப்ப திருடியவன் வீட்டுக்கு உள்ளதான் இருக்கான். திருடின பொருளும் உங்க வீட்லதான் இருக்கனும்”
”ஆமாம்மா ஆனா அது எங்கன்னுதான் தெரியலை ஆதியும் இந்த 4 வருஷத்தில எங்க வீட்டையே சலிச்சி தேடி பார்த்துட்டான். கிடைக்கலை அப்புறம்தான் தன் விதியை நினைச்சிட்டு 1 வருஷமா இப்படி மரக்கட்டை மாதிரி அலையறான்”
”ஓ அதானா குளிரான ஏரித் தண்ணியில நின்னப்ப கூட அவருக்கு சுரனையே வரலை”
“இந்த வீட்ல இருக்கறவங்க திட்டி அவனை அவமானப்படுத்தி பேசக்கூடாத பேச்செல்லாம் பேசி செய்யக்கூடாத வேலையெல்லாம் அவனை வைச்சி செஞ்சி சே அவனை உயிரோடவே பொணமாக்கிட்டாங்க” என வருத்தப்பட்டார் சுமித்ரா
”சரிங்க அத்தை என்னைப்பத்தி அவர் உங்ககிட்ட எப்படி சொன்னாரு உங்க கிட்ட மட்டும் பேசுவாரா”
”இல்லைம்மா யார்கிட்டயும் பேசமாட்டான். காலையில என்கிட்ட வந்து ஒரு பேப்பர்ல எழுதி காட்டினான். அதான் நான் உன்னை பார்க்க வந்தேன்”
”ஓ அப்படியா சாரி அத்தை என்னாலதான் உங்க பையன் மாட்டிக்கிட்டாரு. நேத்து போலீஸ் வராம இருந்திருந்தா இப்ப நான் என் வீட்டுக்கு போயிருப்பேன். இப்பவும் நான் என் வீட்டுக்கு போகலாம் ஏன்னா இப்படி ஆனது யாருக்கும் நான் சொல்லலை நீங்களும் வெளியே சொல்லிடாதீங்க”
”சரிம்மா நான் சொல்லலை அப்படி சொன்னா பாவம் உன்னையும் எங்க வீட்டுக்கு இழுத்துட்டு வந்து அவனை மாதிரியே உன்னையும் அடிமையாக்கிடுவாங்க ஏற்கனவே நானும் என் பையனும் வேலைக்காரங்களா ஆயிட்டோம் நீயும் வேலைக்காரியா ஆக வேணாம்மா நீ கிளம்பு உன் வீட்டுக்கு போ”
”இது வேறயா ஆமா நீங்க எப்படி இப்படி உங்களையுமா அடிமையாக்கிட்டாங்க”
”அவனோட அம்மாங்கறதாலயும் சரியான வளர்ப்பு இல்லைங்கறதாலயும் என்னை வீட்டு சமையல்காரியா மாத்திட்டாங்க. என்னோட மதிப்பு மரியாதையும் பறிச்சிட்டாங்க”
“ஓ அப்ப நான் வந்தாலும் அதே நிலைமையா சே இது அநியாயம்”
”சரி விடும்மா அந்த வீட்ல நியாயம் அநியாயம் எல்லாம் எடுபடாது”
”அதான் நகைங்க கிடைக்கலையே இன்னும் எத்தனை வருஷம்தான் ஆதி இப்படியே பேசாம இருப்பாராம் அந்த வீட்ல இருந்தாதானே இப்படியிருக்கனும் பேசாம அங்கிருந்து அவர் வீட்டை விட்டு வெளியே வந்துடலாமே வேற ஊர்ல பொழைச்சிக்கலாமே நீங்களும் அவர்கூட வந்துடுங்க அப்ப அவர் பேசுவார்ல” என ஆர்வமாக கேட்க
”நியாயம்தான் ஆனா ஆதிக்கு அவன் தாத்தான்னா உசுரு அவர் பேச்சை என்னிக்குமே அவன் மீறினதில்லை அவர் சொல்றதுதான் அவனுக்கு வேதவாக்கே அவரை விட்டு அவன் எங்கயும் போகமாட்டான். திருட்டுப்பழியோட அங்கிருந்து வெளியே வர அவனுக்கு பிடிக்கலை”
”ஓ அப்படியா” என வருந்தினாள் யாமினி அதற்கு சுமித்ராவும் பெருமூச்சுவிட்டு
”சரிம்மா நான் கிளம்பறேன் நேரமாச்சு” என சொல்ல
”ஆமா நீங்க எந்த ஊரு அத்தை”
”கடலூர்”
”இங்க ஏன் வந்தீங்க அத்தை”
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”எல்லாருக்கும் இப்ப லீவுன்னு டூருக்கு வந்தாங்க”
”பரவாயில்லையே உங்களையும் கூட்டிட்டு வந்திருக்காங்க”
”வேலை செய்றதுக்கு ஆள் இல்லைன்னு கூட்டிட்டு வந்தாங்கம்மா”
ஓ பாவம் நீங்களும் ஆதியும்”
”அதனாலதான் சொல்றேன் நீ வராத போயிடு இந்த தாலியை கழட்டிட்டு வேற ஒருத்தனை நீ கல்யாணம் செஞ்சிக்க”
”அது எப்படி முடியும் அது தப்பாச்சே என்னால அப்படி செய்ய முடியாது தாலி புனிதமானது எனனால கழட்ட முடியாது”
”இதப்பத்தி உன் வீட்ல தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சியா”
”அப்பா திட்டுவாரு வீட்டுக்கு போய் அவரை பார்க்கறேன் என் நிலைமைய எடுத்து சொல்றேன் அவர் என்னை புரிஞ்சிக்குவாருன்னு நினைக்கறேன் ஆதியையும் ஏத்துக்குவார்ன்னு நம்பறேன் அத்தை”
”அவர் இந்த கல்யாணத்தை ஒத்துக்கலைன்னா” என கவலையாக கேட்க
“தெரியலை திரும்பி ஆதிகிட்ட வர வேண்டியதுதான்”
”இதுதான் உன் விருப்பம் உன் முடிவுன்னா நான் உனக்கு உதவி செய்றேன் நான் எங்க வீட்டு அட்ரஸ் தரேன் ஃபோன் நெம்பரும் தரேன் ஒரு வேளை நீ வர்றதாயிருந்தா என் மாமியாரோட சொந்தக்காரங்கன்னு சொல்லிட்டு வா ஆதியோட மனைவியா வராத என்னிக்கு அந்த நகைகள் கிடைச்சி அவனோட தண்டனைக் காலம் முடியுதோ அப்ப நீதான் அவனோட மனைவின்னு ஊரறிய சொல்லிக்கலாம் நீ யார்ன்னு அவசரப்பட்டு சொல்லி அங்க வந்து அடிமையா மாட்டிக்காதம்மா” என கவலையாக சொல்லவும்
”இல்லைங்க அத்தை எங்கப்பா நான் சொல்றதை புரிஞ்சிக்குவார்னுதான் நினைக்கிறேன் ஆமா ஆதி என்ன சொல்றாப்ல என் விசயத்தில ஆமா அவரால பேச முடியாதுல்ல எப்படி சொல்வாரு”
”இல்லை அப்படியில்லை உன் வாழ்க்கையை உன் இஷ்டப்படி வாழ்ந்துக்கன்னு சொல்லிட்டான்”
”அவர் ஏன் அப்படி சொன்னாரு அத்தை”
”அவனே அடிமையா இருக்கான் இதுல பொண்டாட்டி வேற தேவையான்னு உன்னை ஊருக்கு போக சொல்லிட்டான்”
அப்ப அவரு வேற கல்யாணம் செஞ்சிக்க போறாரா”
”இல்லைம்மா அவன் மேல விழுந்த பழியால அவன் 5 வருஷமா தண்டனை அனுபவிக்கறத நினைச்சி நொந்து போயிருக்கான் இதுல அவன் எங்க கல்யாணம் செஞ்சிக்க போறான்”
”என்னால அவரோட பிரச்சனையை மாத்த முடியும்னு தோணுது நான் வேணா அவரை கூட்டிட்டு என் அப்பாகிட்ட போயிடறேனே”
“நகைகளை எடுத்ததால விழுந்த பழியை சுமந்துகிட்டு எங்கயும் ஓடி போக மாட்டேன்னு 5 வருஷம் முன்னாடியே சொல்லிட்டான். அந்த நகைகள் கிடைக்கற வரைக்கும் அவன் எங்கயும் போக மாட்டான்மா” என உறுதியாக சொல்ல அதற்கு யாமினியோ
”இப்ப என் தலையெழுத்து எங்கப்பா கையில இருக்கு நான் சென்னையிலிருந்து வந்திருக்கேன் நான் போய் அவர்கிட்ட பேசறேன் அவர் என்ன சொல்றாரோ பார்க்கலாம் அட்ரஸ் கொடுங்க ஆமா உங்க மாமியார் எப்படி எனக்கு உதவி செய்வாங்க”
”என் மாமியாருக்கு ஆதியை ரொம்ப பிடிக்கும் அவங்க சொன்னதாலதான் ஆதி இன்னும் அந்த வீட்ல இருக்கான் இல்லைன்னா”
”இல்லைன்னா”
”ஜெயில்ல இருப்பான்”
”உங்களுக்குதான் போலீஸ் பிடிக்காதே”
”எங்க வீட்டு மாப்பிள்ளைங்க இருக்காங்களே அவங்களுக்கு ஆதியை எப்பவுமே பிடிக்காது அவங்களால ஆதியை ஜெயில்ல தள்ளிட முடியும் ஏதோ என் மாமியார் கடைசி நேரத்தில கேட்டுக்கிட்டதால ஆதியை விட்டாங்கம்மா”
”ஏன் உங்க வீட்டு மாப்பிள்ளைங்களே அவரை அப்படி செய்ய நினைக்கனும்”
”ஆதி எங்க வீட்டோட ஒரே ஆண் வாரிசு மீதியெல்லாம் பொண்ணுங்க”
”சரி அதனால என்ன”
”எல்லா சொத்துக்கள் எங்க ஆதிக்கு போயிடுமோன்னு நினைச்சி அவன் மேல வெறுப்பா இருக்காங்க ஆதிபாவம்ன்னு நினைக்கிறவங்களும் அந்த வீட்ல இருக்காங்க”
”சரி யாரெல்லாம் அவர் மேல பாசமா இருக்காங்க”
”நானும் அவனோட பாட்டியும்”
”அவ்ளோதானா”
”ஆமாம்”
”அப்ப மீதி பேரு”
”ஆதியை எப்படியாவது ஒழிச்சிக்கட்டனும்னு திரியறவங்க”
”அத்தை இந்த அகிலா யாரு”
”அவனோட முறைப்பொண்ணு”
”அவளைதான் ஆதி கல்யாணம் செஞ்சிக்கனும்னு இருக்கானா” என சந்தேகமாக கேட்க
”இல்லைம்மா அப்படியில்லை ஏன் கேக்கற”
”இல்லை நான் முதல்ல ஆதியை பார்த்தப்ப அந்த அகிலாங்கற பொண்ணும் அவளோட கூட இருந்த பொண்ணுங்களும் ஆதியை டார்ச்சர் பண்ணிட்டு இருந்தாங்க அதான்”
அவள் அப்படிதான். அவளை பொருத்தவரை அவனை ஒரு பொம்மை மாதிரி அவள் ஆட்டிவைக்கிறா அவளோட அப்பன் சொல்லிக் கொடுத்து செய்ய வைக்கறான் அவனால ஆதியை எதுவும் செய்ய முடியலை அதான் பொண்ணை வைச்சி ஆதியை கொடுமைப்படுத்தறான்”
”இதையெல்லாம் யாரும் தட்டி கேட்கமாட்டாங்களா”
”தட்டி கேட்டா வீட்டை விட்டு போயிடனும்”
”சரி அப்ப நீங்க ஏன் அங்க இருந்து கஷ்டப்படனும் நீங்க வாங்க நாம சென்னைக்கு போலாம்”
”என் பையன் எனக்கு முக்கியம் அவனுக்காக நானாவது இருக்கனுமே நானும் இல்லைன்னா அவன் உடைஞ்சி போயிடுவான். அப்புறம் எதுக்கு வாழனும்னு நினைச்சிட்டா” என துக்கம் தொண்டையை அடைக்க அவர் கண்கள் கலங்குவதைக்கண்டு யாமினியோ
”சரிங்க அத்தை கண்கலங்காதீங்க ஆனாலும் இந்த தண்டனை ரொம்ப அதிகம் யார் இப்படி ஒரு ஐடியா கொடுத்தது”
”என் மாமியார்” என சொல்ல யாமினியோ புரியாமல் திகைத்து
”ஆதியோட பாட்டியா ஆனா அவங்களுக்கு ஆதியை பிடிக்கும்னு இப்பதானே சொன்னீங்க”
”சொன்னதாலதான் ஆதியை ஜெயிலுக்கு அனுப்பக்கூடாதுன்னு என் மாமனார்கிட்ட பேசி கெஞ்சி இந்த தண்டனையோட விட்டாங்க”
”சரி சரி புரிஞ்சிடுச்சி சோ அந்த நகைங்க கிடைச்சிட்டா ஆதியும் நீங்களும் ஃப்ரீயாயிடுவீங்க”
”ஆமாம்”
”ஆனா இன்னும் அந்த நகைங்க கிடைக்கலை”
ஆமாம்மா”
”கண்ணு கட்டுது இப்பவே, சரி நீங்க எப்ப இங்கிருந்து ஊருக்கு போறீங்க”
”இப்பதான் கிளம்பறோம் கிளம்பறதுக்கு முன்னாடி உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”
”என்னைப்பத்தி வேற யாருக்குமே தெரியாதே”
”தெரியாது நான் சொல்லமாட்டேன் நீ பயப்படாத”
”ஒருவேளை என்னிக்காவது ஒரு நாள் நான் உங்க வீட்டுக்கு வந்தா”
”அப்பவும் நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். அப்படி நீ வர்றதா இருந்தாலும் ஆதி மனைவியா வந்துடாத என் மாமியார் வழி சொந்தம்னு சொல்லிட்டு வா”
”அதுக்கு பாட்டி சம்மதிக்கனுமே”
”நான் அவங்க கிட்ட சொல்றேன் அவங்க எதுவும் சொல்லமாட்டாங்க அதேமாதிரி உன்னை பத்தியும் யார்கிட்டயும் சொல்லமாட்டாங்க. ஆதியை அவங்களுக்கு பிடிக்கும் அதனால நீ கவலைப்படாத நான் ஆதிகிட்ட சொல்லி அட்ரஸ் தரச்சொல்றேன் ஃபோன் நெம்பரும் தர சொல்றேன்” என சொல்லிவிட்டு எழுந்து நின்றவரின் காலில் சட்டென விழுந்து வணங்கினாள் யாமினி.
அவளின் இந்த செயலைக் கண்டு அவளை தொட்டு தூக்கி அவளது நெற்றியில் அன்பாக முத்தம் தந்தவர்
”நீ நல்லாயிருக்கனும்மா உனக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது சரிம்மா நான் வரேன்” என சொல்லிவிட்டு அறைக்கதவை திறந்தவர் ரெடியாக வெளியே நின்றிருந்த ஆதியிடம்
”நான் பேசிட்டேன் இப்ப நான் கிளம்பறேன் அந்த பொண்ணுகிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் ஃபோன் நெம்பர் கொடு அவளோட அப்பா சம்மதிக்கலைன்னா நம்மகிட்டதான் வரனும் வேற வழியில்லை புரியுதா சீக்கிரம் வந்துடுப்பா எல்லாரும் உன்னை தேடுவாங்க அப்புறம் உன்னை திட்டப்போறாங்க” என சொல்லிவிட்டு அவர் முன்னாடி செல்லவும் ஏதோ குழப்பத்துடனே திரும்பி அறைக்கு வந்தவன் அவளைப் பார்த்தான்
”நீ போனப்ப என்னை எழுப்பியிருக்கலாம்ல” என அவள் உரிமையாக கேட்க அவன் அவளையே நிதானமாக பார்த்தான்.
”நான் போனப்ப நீ தூங்கிட்டு இருந்த எப்படி உன்னை எழுப்பறது அதான் போயிட்டேன்” என ஆதி தன் மனதுக்குள் தனக்குதானே பதிலைச் சொல்லிக் கொண்டான்.
”இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏன் என்னைப்பார்த்து அப்படி ஓடின நான் அழகாதானே இருக்கேன் உன் கண்ணுக்கு நான் பேய் மாதிரியா தெரியறேன்” என ஆதங்கமாக சொல்ல அவன் அவளை கூர்மையாக பார்த்தான்
”அடிப்பாவி வெறும் நைட்டியோட என் முன்னாடி வந்தா நான் என்ன செய்றது என் கூட அம்மா வேற இருக்காங்க நீ என் கூட வாழறதாயிருந்தா பார்த்திருப்பேன் நீதான் போறேன்னு சொல்லிட்டியே அப்புறம் என்னத்த” என ஆதி தன் மனதுக்குள் நொந்துக்கொண்டே தனக்குதானே சொல்லிக்கொண்டு பெருமூச்சு விட்டவன் திரும்பி அவளது லக்கேஜை பார்த்தான். அதில் அவளது கைப்பை இருக்கவே அதை எடுத்தவன் அதிலிருந்த சிறிய டைரியில் தனது வீட்டு அட்ரஸ் ஃபோன் நெம்பர் எழுதி அவளிடம் தந்துவிட்டு அவளைப் பார்த்தான்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”எதுக்கு பார்க்கற” என அவள் கேட்க அவன் அருகில் வந்து அவன் கட்டிய தாலியை கழட்ட நினைத்து கையை கொண்டு செல்ல அவனது எண்ணம் புரிந்த உடனே பின்னுக்கு சென்றாள் யாமினி
”என்கிட்ட நீ அடிவாங்காத போயிடு இங்கிருந்து போ” என அவள் கை நீட்டி விரட்டினாள்.
அதைப்பார்த்த அவன்
”என்னை போங்கறா அப்ப நான் கட்டின தாலி எதுக்கு அவளுக்கு, அதை வைச்சி என்ன செய்யப்போறாளாம் எப்படியும் அவளோட அப்பா ஒத்துக்கமாட்டான் அப்புறம் ஏன் இந்த வீம்பு இப்படியே தாலியோடவே தனியா வாழ்க்கையை ஓட்டப்போறாளாமா சரியான முட்டாளா இருக்காளே இப்பவரைக்கும் யாருக்கும் தெரியாது பேசாம அந்த தாலியை கழட்டிட்டா பிரச்சனை முடியும்ல கிட்டப்போனா அடிப்பா வேணாம் நாம திரும்பிப் போலாம் அவளா ஒரு நாள் மனசு மாறி தாலியை கழட்டிடுவாள்” என ஆதி தன் மனதுக்குள் தனக்குதானே சொல்லிக்கொண்டு அறையை விட்டு வேகமாக சென்றே விட்டான்.
அவன் சென்றதும் அவனை கோபமாக திட்டினாள்
”பாவி எவ்ளோ தைரியம் இருந்தா சர்வசாதாரணமா தாலியை கழட்ட வரான் சே சே நல்ல குடும்பத்து பையன்னு பார்த்தா இப்படி நடந்துக்கிறானே ம்ஹூம் இவன்ட்ட நாம தூரமா இருக்கனும் தூங்கும் போதே தாலியை கழட்ட வந்தவனாச்சே எதையும் பேசாமலே என்னென்ன வேலை செய்றான் பாரு இதுல இவன் பேசிட்டா என்னாகும் திட்டி தீர்ப்பானா இல்லை அப்படியாகாது பார்த்துக்கலாம் என்ன பேசினாலும் என்கிட்டயாவது பேசலாம்ல அவன் வீட்லதான் பேசக்கூடாது வெளியாள் கிட்ட கூடவா பேசக் கூடாது அட்லீஸ்ட் நான் அவனோட பொண்டாட்டி என்கிட்ட பேசலாம்ல” என புலம்பியபடியே அவன் தந்த அட்ரசை படித்தாள்
ஆதித்யவர்மன்
தபெ கேசவமூர்த்தி அதற்கு கீழ் கடலூர் வீட்டு முகவரியும் ஃபோன் நெம்பரும் இருக்கவே அதை பத்திரமாக கைப்பையில் வைத்துக்கொண்டு தனது செல்போன் மூலம் தனது தோழி காவேரியை தொடர்பு கொண்டாள். அவளுடைய அழைப்பிற்காகவே காத்திருந்தவள் போல உடனே எடுத்து
”ஹலோ” என கத்தினாள்
”ஏன்டி கத்தற”
”என்னாச்சி”
”எங்க இருக்கீங்க”
”நாங்க திரும்பி ஊருக்கு போறோம் ஆமா நீ எங்க இருக்க”
”நான் இன்னும் ஓட்டல்லதான் இருக்கேன் இனிமேதான் கிளம்பனும்”
”பார்த்துடி அந்த நேத்ரன் அங்க எங்கயாவது சுத்திக்கிட்டு இருக்கப்போறான்” என காவேரி சொல்ல அதற்கு யாமினி
”அய்யோ இது வேறயா சரி நான் எப்படியாவது எஸ்கேப் ஆகறேன்”
”வேலைக்கு வருவல்ல”
”தெரியலை அப்பாகிட்ட பேசிட்டு அப்புறம் சொல்றேன்” என சொல்லியவள் ஃபோன் கட் செய்துவிட்டு சோர்வாக அமர்ந்தாள்.
”நேத்ரன் கிட்ட மாட்டாம நான் சென்னைக்கு போயிடனும் முடியுமா முடியும் ஒரு பொண்ணால முடியாதது எது இருக்கு நைட்டுங்கறதால பயந்துட்டேன் இப்ப பகல்தானே அவன் என்கிட்ட வம்பு பண்ண வந்தா கூச்சல் போட்டு மக்களை துணைக்கு கூப்பிட்டு அவனுக்கு தர்ம அடி கொடுத்து விரட்டனும் அப்படி சுத்திலும் யாருமில்லைன்னா தனியாளா நின்னு அவனை விரட்டிடனும் ஒரு முறை அவனை தைரியமா அடிச்சி விரட்டினாதான் திரும்ப நம்ம பக்கமே வரமாட்டான் அவனுக்கு பயம் காட்டறதுக்கு நாம முதல்ல தைரியமா இருக்கனும் என்ன செய்யலாம்” என 5 நிமிடம் யோசித்தவள் தைரியமாக எழுந்தாள்
”வர்றதை பார்த்துக்கலாம் இங்கயே உட்கார்ந்தா வேலைக்கு ஆகாது எழு யாமினி கிளம்பு” என தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொண்டு எழுந்து தன் லக்கேஜ்களை சரியாக அடுக்கியவள் ரிசப்ஷனுக்கு சென்று அந்த அறையை வெக்கேட் செய்துவிட்டு ஓட்டலை விட்டு வெளியே வந்தாள்.
எங்காவது நேத்ரன் இருக்கிறானா என பார்த்துக்கொண்டே வந்தவளுக்கு அவன் கண்ணுக்கு தெரிய உடனே ஓட்டலுக்கு வெளியே இருந்த காரின் பின்புறம் சென்று மறைந்து எட்டி எட்டிப் பார்த்தாள். அவன் சரியாக வாசல் பக்கமே நின்று கொண்டிருந்தான். அவளுக்கு புரிந்துவிட்டது தனக்காகத்தான் காத்திருக்கிறான் என நினைத்தவள் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே நேத்ரனை எப்படி விரட்டலாம் என நினைத்தவள் அக்கம் பக்கம் பார்த்து அங்கிருந்த ஒரு பெரிய செங்கல்லை எடுக்க முயல அவள் கையை பற்றினான் ஆதி. திடுக்கென பயந்து அவனைப் பார்த்தவள்
”நீயா பயந்துட்டேன்” என சொல்லவும் அவளையும் நேத்ரனையும் மாறி மாறி பார்த்துவிட்டு அவளை இழுத்துக் கொண்டு ஓட்டலுக்கு மறுபக்கம் வந்தவன் அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ஆட்டோவை தடுத்து நிப்பாட்டி அதில் அவளை ஏற்றிவிட்டான்.
”தாங்ஸ்” என்றாள் சிரிப்புடன்
முதல்ல கிளம்பு உன் பின்னாடி சுத்தியே என்னால உனக்கு பிரச்சனை வந்துடும் போல இருக்கு” என தனக்குள் பதில் சொல்லிவிட்டு அவளை கோபமாக முறைக்க அவள் ஆட்டோ ஓட்டுபவரிடம்
”அண்ணா பஸ் ஸ்டான்டு போங்கண்ணா” என சொல்லவும் அந்த ஆட்டோவும் பறந்தது.
ஆட்டோவுக்குள் இருந்தவள் திரும்பி ஆதியை பார்க்க அவன் இன்னும் தன்னையே முறைப்பதைப் பார்த்துவிட்டு முகத்தை திரும்பிக் கொண்டாள்
யாமினியை அனுப்பிவிட்டு நிம்மதியாக தன் குடும்பத்துடன் கடலூர் நோக்கி பயணப்பட்டான் ஆதி. அவள் நினைவுகள் அனைத்தும் அவன் மனதில் நீங்காமல் இருந்ததையும் அவன் அவளுக்கு கட்டிய தாலியை கழட்ட நினைத்தவனை தடுத்து அவள் அடித்த அடியை அவன் மறக்காமல் அதை நினைத்து தனக்குள்ளே அவளை நினைத்து இதுவரை ஏற்படாத புரியாத ஒரு உணர்வு உள்ளுக்குள் உருவாவதை நினைத்து சிரித்துக்கொண்டான் ஆதித்யவர்மன்
•
|