Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நிறைவேறாத கனவும் தொடரும் மரணமும் - 'ஐரா' விமர்சனம் - Airaa" Movie Review
- பிரிவுவகை:
ஹாரர் த்ரில்லர்
- நடிகர்கள்:
நயன்தாரா, கலைரசன், யோகிபாபு,
- இயக்குனர்:
சர்ஜுன்
- பாடல்கள்:
சுந்தரமூர்த்தி கே.எஸ்
பிறந்த அடுத்த நொடியே தன் தந்தை இடிவிழுந்து இறந்து போக, அதற்கு காரணம் இந்த குழந்தைதான் என்று ஊரும், சொந்தமும் புறக்கணிக்கும் பெண்ணாக வளர்கிறாள் பவானி (நயன்தாரா). பிறந்தது, வயதுக்கு வந்தது என எதிலும் ராசியில்லாத பெண்ணாக இந்த ஊரும், உறவும் பவானியை ஒதுக்குகிறது.
வாழ்கையில் பவானிக்கு சோதனையும், துன்பமும் நிறைந்ததாக தன்னை சுற்றியுள்ள மனிதர்களால் அமைக்கப்படுகிறது. தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்த ஒரே ஆறுதல் அமுதன் (கலையரசன்).
எல்லோராலும் துன்புருத்தப்படும் பவானியை போரன்பு கொண்டு நேசிக்கிறான் அமுதன். இந்த உலகத்தில் பவானியின் வாழ்க்கையில் கிடைத்த ஒரே ஆறுதல் அமுதன்.
காலச்சக்கரம் அவர்களை பிரிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் பவானியும், அமுதனும் திருமணம் செய்துகொண்டு வாழ்கையை மகிழ்சியாக தொடங்க ஆயுத்தமாகிறார்கள். திருமணத்திற்கு வரும் வழியில் பவானிக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இறுதியில் பவானி விபத்தில் திருமணமாகமலே இறந்து போகிறாள்.
தன்னுடைய வாழ்க்கையில் இதுவரை எந்த மகிழ்ச்சியான வாழ்வையும் சந்திக்காத பவானிக்கு முதல் முறையாக மகிழ்ச்சியான வாழ்கை கிடைக்கும் போது இறந்து போகிறார். நிறைவேறாத கனவுகளோடு அவள் ஆத்மா தன் வாழ்க்கையை மாற்றி அமைத்த 6 பேரை தீர்துக்கட்ட புறப்படுகிறது. 5 பேரை தீர்த்துக் கட்டிய பவானி கடைசியாக யமுனாவை(நயன்தாரா) கொலை செய்ய முயற்சிக்கிறாள் பவானி.
பவானி ஆன்மா யமுனாவை கொலை செய்ததா யமுனாவுக்கும் பவானிக்கு என்ன தெடர்பு என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடமிட்டு இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதுவரை ஏற்று நடிக்காத, பல நடிகைகளும் நடிக்க யோசிக்கும் கருப்பான கிராமத்து பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.
நகரத்தில் வாழும் பெண்ணாக வரும் கதாபாத்திரத்திலும், கிராமத்தில் இருக்கும் பெண்ணாக வரும் கதாபாத்திரத்திலும் கனகச்சிதமாக பொருந்துகிறார் நயன்தாரா.
இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் அனைவரையும் ரசிக்க வைக்கிறார் கலையரசன். கலையரசன் ஏற்கனவே திகல் படத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவருக்கு புது ஒரு விதமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அந்த கதாபாத்திரமாகவே பொருந்தி போகிறார் கலை. பல்வேறு இடங்களில் நம்ம கலையரசனா இது என்று வியக்க வைக்கிறார்.
கோலமாவு கோகிலா படத்தைத் தொடர்ந்து நயன்தாராவுடன் இரண்டாவது முறையாக யோகி பாபு நடித்திருக்கிறார். திரையில் வரும் போதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார். தனக்கான இடத்தை கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் யோகி பாபு. ஒளிப்பதிவு பின்னணி இசை இரண்டும் படத்திற்கு வலு சேர்க்கிறது.
தான் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் போது எதிரிகளால் கொள்ளப்பட்டு அவர்களை பழிவாங்கும் ஆத்மா போன்ற கதைகள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால் இந்த படத்தில் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல யாருக்கும் யாரோடும் தொடர்பு இல்லை ஆனால் நாம் செய்யும் ஒரு சிறிய பிழை ஒருவரின் வாழ்க்கையே முடித்துவிடுகிறது என்பதுதான் இப்படத்தில் புதிதாக கையாண்டிருக்கக்கூடிய புதிய யுக்தி.
மா, லக்ஷ்மி குறும்படங்களை தொடர்ந்து இயக்குநர் சர்ஜுனுக்கு அமைந்த வாய்ப்பு ‘ஐரா’ தன்னால் முடிந்தவரை தனக்கு கொடுக்கப்பட்ட பொருப்புகளை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். மா, லக்ஷ்மி திரைப்படங்கள் சமூகத்தில் பெரும் விவாத்த்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படம் அப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம்தான்.
இது முற்றிலும் வேறு கதை, அழகான காதல், புறக்கணிப்பு, கோபம் அனைத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறார் சர்ஜுன். படத்தின் கதைக்கும் படத்தின் பெயருக்கும் எந்த காட்சிகயோடும் ஒட்டமுடியவில்லை. என்ற பேதிலும் ஏன் இந்த பெயரை வைத்தார் என்று தெரியவில்லை.இந்த படத்தில் இத்தனை நடிகர்களோடும் ஒரு பட்டாம்பூச்சியும் பயணிக்கிறது. அது நம்மையும் கதையோடு பயணிக்க வைக்கிறது. மொத்த்த்தில் ஐரா ஆதீத அன்புக்கும் நேர்மைக்கும் இடையே இருக்கும் நியாயத்தை பேசும் பட
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
“காதல் தோல்வியும் ஒரு அனுபவம்தான்” - ஜுலை காற்றில் திரை விமர்சனம்
- நடிகர்கள்:
அனந்த்நாத், அஞ்சு குரியண், சம்யுக்தா மேனன், இன்னும் பலர்
- இயக்குனர்:
கே.சி. சுந்தரம்
- தயாரிப்பாளர்:
காவ்யா எண்டர்டெயின்மெண்ட்ஸ்
- பாடல்கள்:
ஜோஷ்வா ஸ்ரீதர்
ஒருதலைகாதல், காதல் தோல்வி இதனால் தாடி வளர்த்துக்கொண்டு, காதலித்த பெண்ணை வசை பாடுவது போன்ற எந்தவித பிற்போக்கு தனமும் இல்லாத ஒரு காதல் தோல்விக்கான படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கே.சி. சுந்தரம். ஆனால் படம் முற்போக்குக்கான படமா என்றால் இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாங்களில் அபத்தம் நிறைந்து இருப்பதால் முற்போக்கு படமும் அல்ல. நம் சமூகம் இன்னும் பழக்கப்படுத்திக்கொள்ளாத ஒரு கலாச்சாரத்தில் நடைபெறும் காதல் தோல்விகளை அடுக்கும் திரைப்படம்.
நாம் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்துதான் வாழக்கையின் பல்வேறு அனுபவங்களை நாம் பெறுகிறோம். அதுதான் இந்த படம் சொல்லும் மய்யக்கருத்து.
ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார் அனந்த்நாக். தான் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒரு சுதந்திரமான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். அந்த நேரத்தில்தான் அஞ்சு குரியனை சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். இவர்களது காதல் நிச்சயம் வரை செல்கிறது. பணி நிமித்தமாக அஞ்சு குரியன் பெங்களூர் சென்று விடுகிறார்.
அந்த நேரத்தில் சம்யுக்தா மேனனை சந்திக்கிறார் தான் எதிர்பார்த்த கனவு தேவதை போலவே அவர் இருக்கிறார். முழு காதல் இல்லாத அஞ்சு குரியணை திருமணம் செய்துக்கொண்டு பொய்யாக வாழ்வதைவிட தனக்கு பிடித்த சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் அனந்த்நாக்.
இதனால் அஞ்சு குரியன் சென்னை வந்ததும் பிரிந்து விடலாம் என்று அதற்கான காரணத்தை சொல்லி இருவரும் பிரிந்து விடுகின்றனர். பிறகு சம்யுக்தாவும், அனந்த்நாக்கும் காதலிக்கிறார்கள். சம்யுக்தா தனிமனித சுதந்திரத்தை விரும்பும் பெண்ணாக இருக்கிறார் அதனால் தனக்கான சுதந்திரம் ஒரு போதும் தன்னுடைய காதலனால் உடையக் கூடாது என்று நினைக்கிறார். ஆனால் அனந்த்நாத் அதை உடைக்கிறார் இதனால் சம்யுக்தா இந்த காதல் சரிபட்டு வராது என்று கூறி அனந்த்நாக்கை விட்டு பிரிகிறார். காதல் பிரிவில் இருந்து விடுபட கோவா வரை பயணம் மேற்கொள்கிறார் அங்கு ஒரு பெண்ணை சந்திக்கிறார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
தனிமனிதனுடைய வாழ்க்கையில் ஒரு காதல் தோல்விக்கு பிறகு இன்னொரு காதல் வருவது என்பது இயல்பானது என்பதும் வாழ்கை ஒரு பயணம் போன்றது என்பதே படம் சொல்ல வரும் கருத்து. பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் திணிக்கப்பட்டிருக்கக்கூடிய சினிமா காதல் போல் இல்லாமல் இயல்பாக கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.
கதாநாயகன் முதலில் காதலிக்கும் அஞ்சு குரியனை உன் மீது முழுமையான காதல் இல்லை என்று நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பிறகு சொல்வது அபத்தம். அஞ்சு குரியன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தன்மையான பேச்சு, எளிமையான அழகு என அவருடைய கதாபாத்திரம் நம் மனதில் மிக ஆழமாக பதிகிறது. இப்படபட்ட பெண்ணை ஒரு மொக்கை காரணம் காட்டி தனக்கு பொருத்தமில்லாதவர் என்று அனந்த்நாக் சொல்லும் போது கோபம்தான் வருகிறது. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்சினிமாவில் அஞ்சு குரியன் தமிழ் சினிமாவில் தடம் பதிக்க வாய்ப்பிருக்கிறது.
புகைப்படக்கலைஞராக வரும் சம்யுக்தா மாடர்ன் பெண்ணாக இதில் நடித்திருக்கிறார். தனிமனித சுதந்திரத்தின் மீது முழு நம்பிக்கை உடையவராக இருக்கிறார் சம்யுக்தா. அதன் அடிப்படையில் தன்னுடைய சுதந்திரத்திற்கு யார் முட்டுகட்டை இட்டாலும் அதை விரும்பாதவராக சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் தன்னுடைய கதாபாத்திரத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார்.
கதாநாயகனின் நண்பனாக வரும் சதீஷ் வழக்கம் போல் நடித்து சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஜோஷ்வா இசையில் காற்றே..காற்றே…படல் மட்டும்தான் நினைவில் நிர்க்கிறது.
காதலன் காதலிப்பதற்கான காரணத்தை சொல்வதற்கும், காதலி இந்த காதல் வேண்டாம் என்று சொல்வதற்கும் தனித்தனியோ சொல்லி படத்தை நீண்ட நேரம் இழுப்பறி செய்திருக்கிறார் இயக்குநர்.
காதலித்து விட்டு பிரிவதற்கான சப்பை கட்டு காரணங்களில் முகம் சுளிக்க வைக்கிறது சில காட்சிகள். காதல் தோல்வி, ஒருதலை காதல் போன்ற விஷயங்களில் நேர்மை தன்மையோடு எடுத்திருக்கிறார் இயக்குநர் அந்த வகையில் பாராட்டை பெறுகிறார். ஒருவரை ஒருவர் சமரசம் இல்லாத ஈகோவால் காதல் பயணம் முடியாமல் நீள்கிறது ஜுலை காற்றில்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
- நடிகர்கள்:
விஜய்சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் ஃபாசில், காயத்ரி
- இயக்குனர்:
தியாகராஜன் குமாரராஜா
- பாடல்கள்:
யுவன் ஷங்கர் ராஜா
ஒருவரை ஒருவர் தொடர்பில்லாத வெவ்வேறு பகுதியில் இருப்பவர்களுக்கு ஏற்படும் வெவ்வேறு பிரச்சனையில் இருப்பவர்களை இணைக்கும் புள்ளியும் அதின் மூலம் கிடைக்கும் தீர்வும் தான் தியாகராஜன் குமாரராஜனின் இன்று வெளியாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’.
நியாயம் வேறு நடைமுறை வேறு, தனிமனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னை அனைத்திற்கும் சகமனித உயிரை ஒருவரை ஒருவர் தனக்கானது என சொந்தம் கொண்டாடுவதும், காமப் பொருளாக உடலை பார்ப்பதும்தான் என்பதை இப்படம் பேசியிருக்கிறது.
முன்னால் காதலனை கணவன் வீட்டில் இல்லாதபோது வீட்டிற்கு அழைக்கிறார் வேம்பு(சமந்தா). அப்போது இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். இரண்டாவது முறை தொடங்கி உடலுறவில் ஈடுபடும் போது இறந்து விடுகிறான் முன்னால் காதலன்.
இந்த நேரத்தில் கனவன் வீட்டிற்கு வருகிறான். இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது அவன் இறந்து விட்டான் என்று தன்னுடைய கனவனிடம் நேர்மையாக உண்மையை சொல்லும் கதாபாத்திரமாக சமந்தா நடித்திருக்கிறார்.
சமந்தாவின் கணவர் இயல்பான கணவர் கதாபாத்திரத்தில் இருந்து மாறுபட்டிருக்கிறார். உருவாக்கப்பட்டது போல் இருந்தது. தெளிவான கிறுக்கனாக தன்னுடைய கதாபாத்திரத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார் ஃபஹத் ஃபாசில். இறந்தவனின் உடலை யாருக்கும் தெரியாமல் அவர்கள் அதை மறைக்க முயற்சி செய்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பது கதையின் இன்னொரு ஸ்வாரஸயம்.
ஆபாச படம் பார்க்க நினைக்கும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் நண்பனின் வீட்டிற்கு செல்கிறார்கள். அந்த ஆபாச வீடியோவில் மாணவர்களில் ஒருவனின் தாய் அந்த படத்தில் நடிக்கிறார். இதை பார்த்த அந்த மாணவன் கோபத்தில் டிவியை உடைத்துவிட்டு தாயை கொலை செய்ய புறப்பட்டு செல்கிறான். அப்போது விபத்து ஏற்பட்டு, கொண்டு செல்லும் கொலை கருவியால் தாக்குதலுக்கு உட்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறார்.
உடைந்த டிவிக்கு பதிலாக மாற்று டிவியை மாலைக்குள் வாங்கி வைக்கும் கட்டாயத்தில் மற்ற மாணவர்கள் இறங்குகிறார்கள். பணத்திற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது படத்தின் இன்னொரு கதை.
திருமணமாகி குழந்தை பெற்று ஒருநாள் இரவில் வீட்டை விட்டு வெளியேறும் விஜய்சேதுபதி 8 ஆண்டுகள் கழித்து தன்வீட்டிற்கு வருகிறார். ஆனால் ஆணாக சென்றவர் திருநங்கையாக திரும்புகிறார். தன்னுடைய மகனுடன் ராசுகுட்டியுடன் பள்ளிக்கு செல்லும் ஷில்பா (விஜய்சேதுபதி) எதிர்கொள்ளும் பிரச்னை என்ன என்பது படத்தின் இன்னொரு திரைக்கதை.
சுனாமியில் லட்சக்கணக்கில் மக்கள் இறந்து போனார்கள். ஒரு சிலையை பிடித்துக்கொண்டு உயிர் தப்பும் மிஸ்கின் அது கிருஸ்துவ சிலை என்பதால் கிருஸ்த்துவ கடவுல்தான் தன்னை காப்பாற்றினார் என்று தீவிர கிருஸ்தவ மத போதகராக நடித்திருக்கிறார். இவருடைய மகன்தான் தீவிர அறுவைசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கம் பள்ளி மாணவன்.
இந்த நான்கு திரைக்கதையும் ஒன்றோடொன்று எப்படி இணைகிறது. இத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் மய்யக்கரு என்ன என்பதுதான் படத்தில் போடப்பட்டிருக்கும் முடிச்சு.
.வாழக்கையில் நியாயம் வேறு நடைமுறை வேறு என்று படத்தில் இடம் பெறும் வசனத்தை போலவே நியாயமும், நடைமுறையும், நடைமுறை சிக்களும், நியாயத்தின் சிக்கலும் எப்படி இருப்பினும் அவை அனைத்தும் வாழ்க்கையின் தேவைகளில் ஒன்றுதான். ஆனால் அவை அனைத்தும் கடந்துபோக வேண்டியவைதான். காலம் சிறந்த மருந்து, காலம் சிறந்த அனுபவம் என்பதை முடிவுகள் நமக்கு செல்கின்றன.
அரசியல் ரீதியான வசனங்கள் பல இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அவை தற்போதைய அரசியல் களத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. இருந்த போதிலும் பல்வேறு அபத்தங்களும் இப்படத்தில் இடம் பெறுகிறது.
தேசியமும், மொழிப் பற்றும், மதமும், சாதியும் ஒன்றுதான் என்று சொல்லப்படும் வசனங்கள் அடிப்படை சாதிய புரிதல் இல்லாத அரைகுறை தத்துவத்தில் இருந்து வெளியான வெளிபாடாக இருந்தது.
திருநங்கைகள் வாழ்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை துள்ளியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனாலும் இந்த சமூகம் இன்னும் திருநங்கைகளை ஒரு குறிப்பிட்ட எண்ணை செல்லி அழைத்து கிண்டல் செய்யும் போக்கு இதில் இடம் பெற்றிருக்கிறது.
காயத்ரி அவருக்கான கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக முடித்துக்கொடுத்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும், பக்ஸ் அவருக்கான கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருந்தியிருக்கிறார். அவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்கிறார். அப்பட்டமாக நடைமுறையில் இருக்கும் சிக்கல் என்னவாக இருக்கிறது என்பதை அவரது நடிப்பு காட்டுகிறது.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் இன்னொரு பலம். திரைக்கதை, வசனம், இசை, இவை அனைத்தும் சலிப்பை ஏற்படுத்தாமல் படத்தோடு நம்மை ஒன்றிட வைக்கிறது. எல்லா காட்சிகளிலும் அல்ல ஒரு சில காட்சிகளில். ஏனென்றால் இப்படி ஒரு சம்பவம் நம்முடைய வாழ்விலும் ஏற்பட்டிருக்க கூடும். அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு இவ்வாறு நடந்திருக்கும் என்பதால் கதயோடு ஒன்றிடமுடிகிறது. மொத்தத்தில் இது தத்துவப்படம் அல்ல தத்துவத்தை தாண்டும் படம்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79
1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும். இதில் அரவிந்த் சாமி, கெளதமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'நிமிர்', 'Mr. சந்திரமெளலி', 'சீதக்காதி', 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் 'புகழேந்தி எனும் நான்' படத்தில், அருள்நிதியுடன் நடித்து வருகிறார்.
இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது அதிகமாகிவிட்டதால், டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 2) அதிகாலை காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணியளவில் அவரது நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. இறுதிச்சடங்கு மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மகேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பலரும் தங்களுடைய இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
02-04-2019, 09:52 AM
(This post was last modified: 02-04-2019, 09:53 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
மாயந்தி, அர்ச்சணா, மந்திரா பேடி, ... ஐபிஎல்.,‘ஹாட்’ பெண்கள்... இவங்க தான்!
ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் கிளாமரான கிரிக்கெட் தொடர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதை தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஐபிஎல்., அரங்கில் 12 ஆண்டு கால கிரிக்கெட் தொடரில் இத்தொடரை தொகுத்து வழங்கிய சில செக்ஸியான பெண் தொகுப்பாளர்களைப்பற்றி பார்க்கலாம்.
2/12Video-மயக்கும் மாய்ந்தி, அசத்தும் அர்ச்சணா செக்ஸி மந்திரா பேடி, ... ஐபிஎல்., தொடரை இதுவரை தொகுத்து ...
ஐபிஎல்., அரங்கில் 12 ஆண்டு கால கிரிக்கெட் தொடரில் இத்தொடரை தொகுத்து வழங்கிய சில செக்ஸியான பெண் தொகுப்பாளர்களைப்பற்றி பார்க்கலாம்.
3/12மந்திரா பேடி:
கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர்களில், மிகவும் செக்ஸியானவர் மந்திரா பேடி. இவர் கடந்த 2003 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், சாம்பியன்ஸ் டிராடி 2004, 2006 மற்றும் ஐபிஎல்., 2009ல் தொகுத்து வழங்கினார்
ஐபிஎல்., தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர்களில் ஷிபானிக்கு ஹாட்டான தொகுப்பாளனி என்ற தனிச்சிறப்பு உண்டு. இவர் கடந்த 2011 முதல் 2015 வரையிலான ஐபிஎல்., தொடரை தொகுத்து வழங்கினார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’: யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள்?
மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது
கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என பெரிய நட்சத்திரங்களை வைத்துப் படமாக்க முயற்சித்தார் மணிரத்னம். ஆனால், அது கைகூடவில்லை.
எனவே, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம்.
அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
இந்நிலையில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
கதைப்படி நந்தினி கதாபாத்திரம் பேரழகி. கதையின் வில்லியான இந்தக் கதாபாத்திரம், பல்வேறு வேடங்கள் தரித்து ஏமாற்று வேலை செய்யும். எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயை விதவிதமான தோற்றங்களில் காணலாம்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மகேந்திரன் எனும் மகத்தான படைப்பாளியும் ரஜினியிஸமும்
சினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட அத்தனை பேருக்கும் ஆதர்சமாக இருப்பவர் மகேந்திரன். சினிமாவில் ஒரு வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் கூட அந்த இடத்துக்கு வந்த கதையை மாய்ந்து மாய்ந்து சொல்வது வழக்கம். வறுமையின் பின்னணி, பசியின் கொடுமை அல்லது வசதியான வாழ்க்கை, வேலையை விட்டு சினிமாவைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என தான் கடந்து வந்த பாதை குறித்து சிலாகித்துச் சொல்வார்கள். என்னுடைய இந்தப் படம் தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்குப் பேசும் படமாக இருக்கும் என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொல்பவர்களும் அநேகம். ஒரு படத்துக்கே ஓவர் பில்டப் தருகிற வியாபார உலகம் சினிமா. அங்கே தன்னை விற்கத் தெரிந்தவர்களே ஜாம்பவன்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆனால், இயக்குநர் மகேந்திரன் இந்த சினிமாத்தனமான நபர்களுக்கு மத்தியில் ஒரு குறிஞ்சி மலர் என்று சொல்லலாம். ஒரு முறையல்ல... இரு முறை அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பும் பேரனுபவமும் எளியவன் எனக்குக் கிட்டியது. அந்த அனுபவத்திலும் அவர் அணுகிய விதத்திலும் சொல்ல வேண்டுமென்றால் மகேந்திரன் சார் மென் மனசுக்குச் சொந்தக்காரர். துளியும் மிகைத்தன்மை இல்லாமல் பேசக்கூடிய யதார்த்தத்தின் வார்ப்பு அவர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, 'முள்ளும் மலரும்' திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தப் படத்தை தமிழ் சினிமா உலகம் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் இயக்குநர் மகேந்திரனை சந்தித்துப் பேசினேன். தமிழ் சினிமாவின் சத்யஜித்ரே மகேந்திரன் என்று சினிமா ஆர்வலர்கள் போற்றுவதை அவரிடத்தில் பெருமையுடன் பகிர்ந்த போது, ''நல்ல சினிமா எடுக்காத குற்ற உணர்வில் இருக்கிறேன். இது தன்னடக்கம் அல்ல. என் நிஜமான வாக்குமூலம்'' என்று சொன்னவர் மகேந்திரன். ஆனால், அவர் தான் தமிழ் சினிமாவில் அழியாத, சாகாவரம் பெற்ற படங்களைக் கொடுத்தார்.
ரஜினிக்குள் இருக்கும் மகா நடிகனைக் கண்டுகொண்டவர் நீங்கள். 'முள்ளும் மலரும்', 'ஜானி' படங்களின் மூலம் அவருக்கான ராஜபாட்டையை வகுத்துக் கொடுத்தவர். 36 படங்களுக்கு கதை, வசனம் எழுதி 12 படங்கள் இயக்கி தமிழ் சினிமாவை உற்று கவனிக்க வைத்த ஆளுமையான நீங்களே இப்படிச் சொல்லலாமா? நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்குத் திருப்தியில்லையா என்று கேட்டால், கண்களைச் சுருக்கிச் சிரித்தார். அந்த மகேந்திரனை நீங்கள் அருகிருந்து பார்த்திருந்தால் ரஜினியின் மேனரிஸம் எங்கிருந்து எப்படி வந்திருக்கும் என்று உங்களால் உறுதி செய்திருக்க முடியும்.
மகேந்திரன் சினிமாவுக்கு விரும்பி வந்தவர் அல்ல. அது ஒரு விபத்து என்று அவரே சொல்லியிருக்கிறார். அவருக்கு நடந்தது கட்டாயக் கல்யாணம்தான் என்றாலும் அவர் பிடிக்காத, கொடுமைக்கார கணவனாக நடந்துகொள்ளவில்லை. சினிமா என்ற காதலிக்கு அவர் பேரன்பையும், கருணையும், நேசத்தையும் அள்ளிக் கொடுத்தார். அவருக்கும் சினிமாவுக்குமான உறவு எல்லையற்ற மகோன்னத உணர்வுடனே கடைசி வரை இருந்தது. அதனால்தான் 'மோகமுள்' மீண்டும் மலரும் என்று தனக்கே உரிய பாணியில் திரைக்கதையை உருவாக்கினார். சத்யராஜ் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு படம் இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடந்து அது கைகூடாமலே போனது காலத்தின் இழப்புதான்.
ரஜினியிஸம்
சிவாஜி ராவ் ஆக இருந்தவரை ரஜினியாக மாற்றியவர் பாலசந்தர்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்த ரஜினிக்கு நடை, உடை, பாவனை உள்ளிட்ட உடல்மொழியில், உச்சரிப்பில் தனித்துவம் ஏற்படுத்தி, ரஜினிக்குள் இருக்கும் மகா நடிகனை அடையாளப்படுத்தியதில் இயக்குநர் மகேந்திரனுக்குப் பெரும் பங்கு உண்டு. ரஜினியின் அந்த அடையாளம் இன்று ரஜினியிஸமாக, சூப்பர் ஸ்டார் பிம்பமாக வளர்ந்துள்ளது.
இதன் பின்னணி என்ன?
ரஜினி நடித்த 'ஆடுபுலி ஆட்டம்' திரைப்படத்துக்கு வசனம் மகேந்திரன். பெங்களூரில் படப்பிடிப்பு நடைபெற்ற போது ரஜினிக்குள் இருக்கும் சினிமாவின் மீதான கனலை அப்படியே மகேந்திரனிடம் இறக்கினார். அதனால் ஆச்சர்யப்பட்டும் அகமகிழ்ந்தும்போன மகேந்திரன் பின்னாளில் இயக்குநராக அறிமுகமாகும்போது 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினிதான் நாயகனாக நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்தார். வில்லன் முத்திரை இருக்கும் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர் தயங்கிய போது ரஜினி நாயகன் என்பதற்குச் சம்மதம் என்றால்தான் படத்தை இயக்குவேன் என்று உறுதி காட்டினார்.
இதுகுறித்து மகேந்திரனிடம் கேட்ட போது, ''ரஜினி எப்போதுமே என் நண்பர். அவர் சினிமா மீதான அவரின் கனவு பரந்து விரிந்தது. சாண்டில்யனின் ஜலதீபம் சரித்திர நாவலில் வரும் கடல் தளபதி கன்னோஜியைப் பற்றி வாசிக்கும் போது ரஜினி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறேன். அதுபோன்ற படங்களில் ரஜினி நடிக்கும்போது அமிதாப் பச்சனை எளிதில் கிராஸ் செய்வார்'' என்று தன் ஆவலையும், ரஜினி செல்ல வேண்டிய பாதையையும் அழகாக விவரித்தார். இப்போது கூட ரஜினி இதை பரிசோதனையாக முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லைதான்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உறுதுணைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்
சினிமா யதார்த்தத்தின் பதிவாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் மகேந்திரன். அதனால் தான் நாயகன், நாயகி என்று இருவரைச் சுற்றி மட்டும் எந்தக் கதையையும் அவர் உருவாக்கவில்லை. 'முள்ளும் மலரும்' படத்தில் சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு உள்ளிட்ட எல்லோருமே ஜொலித்தார்கள். 'உதிரிப்பூக்கள்' சாருஹாசன் அதில் ஒற்றைப் பருக்கை. ''இந்த ஊரை விட்டு ஏன்பா போறீங்க'' என்று அஸ்வினி கேட்கும்போது, ''என்னை யாரும் இங்க இருக்கச் சொல்லலையேம்மா'' என்று வருத்த வார்த்தைகளில் கலங்க வைப்பார். உறுதுணைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் படைப்புகளில் மகேந்திரன் தன்னிகரற்று விளங்கினார்.
டூயட்களை வெறுத்தவர்
ஐ லவ் யூ சொல்வதுதான் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. டூயட் பாடல்கள் இல்லாமல் காதலைச் சொல்ல முடியாதா என்று ஒரு மூத்த படைப்பாளியாக விமர்சனம் செய்தவர் இயக்குநர் மகேந்திரன். அதே சமயத்தில் 'கை கொடுக்கும் கை' படத்தில் தாழம்பூவே டூயட் பாடலை வைத்ததற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனால், இசையை மையப்படுத்திய 'ஜானி' படத்தின் மூலம் மறக்க முடியாத மனதை வருடும் பாடல்களைக் கொடுத்தார். ராஜாவும் இசையில் தனி ராஜாங்கம் நடத்தி இருந்தார். 'உதிரிப்பூக்கள்' படத்தின் அழகிய கண்ணே பாடல் இப்போதுவரை மென்சோகத்தின் உச்சமாக உள்ளது.
பாலு மகேந்திரா- மகேந்திரனின் ஒத்த அலைவரிசை
'முள்ளும் மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. கன்னடத்தில் 'கோகிலா' படத்தை இயக்கிய பாலு 'முள்ளும் மலரும்' படத்துக்குப் பிறகுதான் தமிழ்ப் படங்களை இயக்கினார். பாலுவுக்கும் டூயட் பாடல்கள் பிடிக்காது. பொது இடத்தில் காதலிப்பது போன்ற காட்சிகளை வைக்கமாட்டார். 'வீடு' படத்தில் பானுசந்தர் - அர்ச்சனாவுக்கு இடையேயான காட்சிகளில் யதார்த்தக் காதலைப் பதிவு செய்திருப்பார். மான்டேஜ் பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 'அழியாத கோலங்கள்' படத்தில் ஷோபாவின் கதாபாத்திரம் தனித்துவமானது. வகுப்பறைக்குள் புதிதாக வந்த ஷோபா, ''என் பேரு இந்து. உங்க பேரைச் சொல்லுங்கம்மா'' என்று வெட்கமும், தயக்கமும், படபடப்புமாகக் கேட்பார். அந்த சாயலை நீங்கள் 'முள்ளும் மலரும்' வள்ளியிடம் பார்க்கலாம். 'உதிரிப்பூக்கள்' படத்தில் மிகையில்லாத, அசலான குழந்தைத்தன்மையோடு இருக்கும் குழந்தைகளைப் பார்க்க முடியும். அதன் நீட்சியாக 'நீங்கள் கேட்டவை' படத்தில் பூர்ணிமாவின் குழந்தைகளைப் பார்க்கலாம். மகேந்திரனின் திரை மொழியும், பாத்திரப் படைப்பும் பாலு மகேந்திராவையும் ஈர்த்திருக்கிறது அதனால் தான் இருவரும் ஒத்த அலைவரிசையில் இயங்கினர் என்பதை மறுக்க முடியாது.
நடிப்பின் மூலம் மறுவருகை
12 படங்களில் தன் தடத்தைப் பதித்த மகேந்திரன் 'காமராஜ்' படத்தில் அவரது தொண்டராக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து 'நிமிர்', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'பேட்ட' ஆகிய படங்களில் நடித்தார். கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் 'புகழேந்தி எனும் நான்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். இப்படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
திடீரென்று ஏன் மகேந்திரன் சார் நடிகர் ஆனார் என்ற கேள்வி 'தெறி' படம் ரிலீஸான போது எழுந்தது. அப்போது இயக்குநரும் நடிகருமான என் நண்பர் ஓர் அழகான பதிலைச் சொன்னார். ''சினிமா என்பது எல்லா கலைகளையும், கலைஞர்களையும், படைப்பாளிகளையும் விழுங்கக்கூடிய ஆக்டோபஸ். மகத்தான ஆளுமைகளை, மூத்த படைப்பாளிகளை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த வகையில் மகேந்திரன் சாரின் மறுவருகை நடிப்பால் நிகழ்ந்தது இளம் தலைமுறைக்கான தெரிவிப்புப் படலமாக இருக்கட்டும்'' என்றார். அது 100% ஏற்புடையது.
ஆவணப்படமும் ஆவணக் காப்பகமும்
சினிமாவுக்கென்று ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பாலு மகேந்திரா கடைசி வரை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். . ஆனால், இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. தமிழ் சினிமா உள்ளவரை மகேந்திரன் சார் நினைவுகூரப்படுவார், அவரது படங்களின் மூலம் மகேந்திரன் சார் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று சொல்லிவிடலாம்தான். ஆனால், அது மட்டுமே அவருக்கான இறுதி மரியாதையாக இருக்காது. இயக்குநர் மகேந்திரன் குறித்து ஒரு ஆவணப் படத்தை தமிழ் சினிமா முன்னெடுப்பதும், ஆவணக் காப்பகத்தை நிறுவுவதுமே அவர் நமக்கு விட்டு வைத்திருக்கும் கடமைகள். படைப்பாளியை இழந்த நாம் படைப்புகளை இழக்காமல் இருக்க அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசர அவசியம்.
தொடர்புக்கு: [email protected]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உயிர் கொல்லி ஆலைகளுக்கு எதிரான பெரும் கோபம் - “உறியடி 2” விமர்சனம் - "Uriyadi 2" Movie Review
- பிரிவுவகை:
அரசியல் திரைப்படம்
- நடிகர்கள்:
விஜயகுமார், விஸ்மயா, சுதாகர்
- இயக்குனர்:
விஜயகுமார்
- தயாரிப்பாளர்:
சூர்யா
- பாடல்கள்:
கோவிந் வசந்த்
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசாயன தொழிற்சாலைகள் இயக்கி வருகிறது. அவை அனைத்தும் முறையான அனுமதி பெற்று, மாசு கட்டுபாட்டு வாரியத்தின் சோதனைக்குட்பட்டுதான் இயங்குகிறதா…? சரியான பாதுகாப்புடன்தான் இயக்குகிறதா…? என்கிற கேள்வியை அந்த இரசாயன ஆலையில் ஏற்படும் ஒரு பெரும் விபத்திற்கு பிறகுதான் இந்த சமூகம் கேள்வி கேட்கிறது. இன்றைய சூழலில் எந்த நேரம் வேண்டுமானாலும் வெடித்துச்சிதறக்கூடிய எரிமலைப் போலவே இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு இரசாயன ஆலையும் அதற்கு அனுமதி வழங்கும் ஆட்சியாளர்கள், அதைத் தொடர்ந்து நடக்கும் அரசியல் பற்றிய படம் தான் ‘உறியடி 2’.
ஜனநாயக நாட்டில் நடக்கும் பெரும்பாலான பிரச்னைக்கு தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் நீதியும் தீர்வும் கிடைத்ததில்லை என்பது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடம். பெரும் பாதிப்புகளுக்கு பின் ஏற்படும் பெரும் கோபம் புரட்சியாக வெடிக்கிறது. ஆதிக்க வர்க்கத்தால் போராளிகள் கொல்லப்படுகிறார்கள், அல்லது காணாமல் ஆக்கப்படுகிறார்கள் என்பது இந்தியச்சமூகத்தில் நடந்துக்கொண்டிருக்கும் பேரவலம்.
மேலை நாடுகளில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால் புறக்கணிக்கப்படும் இரசாயன ஆலையை இந்தியா அனுமதிக்கிறது. தமிழகத்தில் ஒரு மலைவாழ் கிராமத்திற்கு பக்கத்தில் இந்த ஆலை அமைக்கப்டுகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் ஒரு சிறிய ரசாயனக்கசிவு காற்றில் கலந்தால் கூட சுவாசிக்க முடியாமல் இறந்து போகக்கூடிய அளவிற்கு நச்சுத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாமல் வெறும் லாப நோக்கத்திற்காக மட்டும் மனித உயிர்களை பற்றி கவலை கொள்ளாத ஆலையின் நிறுவனர் லஞ்சம் கொடுத்தும், அரசியல் வாதிகளின் ஆதரவாலும் இந்த ஆலையை நடத்துகிறார். ஆலையில் ஏற்படும் ஒரு சிறிய விபத்தில் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகை காற்றில் கலந்து அருகில் உள்ள கிராம மக்கள் பலர் ஒரே நாளில் கொத்துக்கொத்தாய் இறக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பிரச்னையாகி ஆலை நிறுவனர் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நீதி கோட்டு போராடும் இளையஞனாக இந்த படத்தின் இயக்குநரும், படத்தின் கதாநாயகனுமாக விஜயகுமார் நடித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்ததா ஆலையின் நிறுவனரும், அரசியல் வாதிகளும் தண்டிக்கப்பட்டார்களா..? இந்த பிரச்னையை சுற்றி நடக்கும் அரசியல் என்ன என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை.
விஜயகுமார் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியானஉறியடி 2 திரைப்படம் சமூகத்தில் புறையோடிக் கிடக்கின்ற சாதி அவலத்தையும், சாதி அரசியலின் கோரா முகத்தையும் வெளிபடுத்தியது. அந்த அனையா தீ கனல் பெரும் நெருப்பாய் இந்த படத்தில் வெளிபட்டிருக்கிறது.
இராசயன பொறியியல் பட்டதாரியான லெனின் விஜய் (விஜயகுமார்) படித்து முடித்துவிட்டு சென்னையில் வேளைக்கு செல்ல விருப்பப்படுகிறார். குடும்பமோ சொந்த ஊரிலே வேலை செய்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். இவருடைய அம்மாவும் அப்பாவும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களை அடுத்து லெனின் விஜய்க்கு முக்கியமானவர்கள் இவருடைய இரண்டு நண்பர்கள். சொந்த ஊரிலே இரசாயன தொழிற்சாயில் நண்பர்கள் மூன்று பேர் சேர்கிறார்கள். அங்கு ஏற்படும் சிறிய விபத்தில் நண்பன் ஒருவன் இறந்து போகிறான். அதன் பிறகுதான் இந்த தொழிற்சாலை மிகவும் ஆபத்தானது என்று லெனின் விஜய்க்கு தெரியவருகிறது. அதை எதிர்த்து போராடுகிறார். துடிப்பான இளைஞனாகவும் யதார்ததமாகவும் விஜயகுமாரின் நடிப்பு பாராட்டுக்குறியது.
சமூக அக்கரையும், பாதிப்பிலிருந்து கொதித்தெழும் போராளியாகவும் விஜயகுமார் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். விஜயகுமாரின் காதலியாக வரும் இசைவாணி( விஸ்மயா) ஆலையில் பணிபுரியும் மருத்துவராக எதார்த்தமாக நடித்து பாராட்டை பெறுகிறார். இவரது குடும்பம் சாதி ஆதிக்கம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தாலும் சாதி மறுக்கும் இளம் பெண்ணாக இதில் நடித்திருக்கிறார் விஸ்மயா. இயல்பான நடிப்பு, எதார்தமான பேச்சு என படத்தில் வரும் சில நேரங்களில் அனைவரின் மனதிலும் இடம் பெறுகிறார்.
விஜயகுமாரின் நண்பர்களாக வரும் சுதாகர், சங்கர் தாஸ் இருவரும் படத்தின் இன்னொரு பலமாக அமைகிறார்கள். சுதாகர் இருப்பதால் இந்த படத்தில் காமெடி நிறைய இருக்கும், அரசியல் நய்யாண்டி இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான். இந்த படத்தில் சுதாகருக்கு மிக முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் அது இசைஅமைப்பாளர்தான். கோவிந்த வசந்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பெரும் பலத்தை கொடுக்கிறது. இடைவெளிக்கும் முன்னும் பின்னும் படத்தோடு நம்மை பயணிக்க வைக்கிறது கோவிந்த் வசந்தின் இசை.
உணர்வுகளை தொட்டுப்பார்க்கும் புரட்சிகர வசனங்கள், புறையோடிக்கிடக்கும் சாதியின் வன்மம் என படத்தைப் பார்ப்பவர்களுக்கு இந்த சமூகத்தை கண்ணாடியக பிரதிபலித்து காட்டியிருக்கிறார் இயக்குநர். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டாம், கதிராமங்களம் போராட்டாம் என சமீக கால போராட்டங்களும் அதன் ஒடுக்கு முறையும் நினைவு படுத்துகிறது திரைப்படம். இந்த படம் இன்னும் இந்த சமூகத்தில் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் எரிமலைப் போல் ஆலைகள் இயங்கி வருகிறது, அதைச்சுற்றிதான் நாம் நடமாடிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் அதன் ஆபத்தையும் பேசியிருக்கிறது. ஜனநாயக நாட்டில் அகிம்சை போராட்டங்கள் மட்டுமே எழுதப்பட்ட விதியாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த கால சினிமாக்களில் கதாநாயகன் வில்லனை கொல்லும் அதே தோணி இந்த படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது எதனால் நடத்தப்படுகிறது என்பதற்கான நேர்மை இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு புரியும் அதே கோபம் பார்கையாளர்களுக்கும் வரும் என்பதுதான் எதார்த்தம்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
- பிரிவுவகை:
காமெடி டிராமா
- நடிகர்கள்:
ஜி.வி.பிரகாஷ், பூன பஜ்வா, பல்லக் லால்வானி,
- இயக்குனர்:
பாப பாஸ்கர்
- பாடல்கள்:
ஜி.வி.பிரகாஷ்
உழைக்கும் மக்கள் வாழும் வட சென்னையின் ஒரு பகுதியில் வாழ்ந்து வாழ்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதே பகுதியில் வாழும் பாத்திபன் அந்த பகுதியில் வாழும் மக்களின் மதிக்கத்தக்க ஒரு மனிதராக இருக்கிறார். அந்த பகுதி மக்களுக்கு உதவிகள் செய்து, இந்த மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டி கேட்பது என ராஜாவாக இருக்கிறார். பார்திபனும் ஜி.வி.பிரகாஷின் தந்தை எம். எஸ் பாஸ்கரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் இருக்கிறார்கள். இவர்களை பாண்டவர்கள் என்று மக்கள் அழைப்பார்கள்.
இவர்களுக்கும் ஜி.வி.பிரகாஷின் அணிக்கும் எப்போது ஆகாது முறைத்துக்கொண்டே இருப்பார்கள். இனிமேல் இந்த ஏரியாவில் நாங்கதான் என்று ஜி.வி. பிரகாஷ் அந்த ஏரியாவில் இடம் பிடிக்க நினைக்கிறார். அதனால் இவர்களுக்குள் நடக்கும் மோதல்களை காமெடியாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
அதே குப்பத்தில் வசித்து வரும் நாயகி பல்லக் லால்வானியும், ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு அருகில் குடிவருகிறார் பூனம் பாஜ்வா. இவரால் காதலர்களான ஜி.வி.பிரகாஷ் - பல்லக் லால்வானி இடையே அடிக்கடி சண்டை வருகிறது.அந்த பகுதியில் கவுன்சிலராக இருக்கும் கிரணை பொது இடத்தில் வைத்து எம்.எஸ்.பாஸ்கர் கிண்டல் செய்கிறார். மறுநாளே எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார் என்று தெரியாமல் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் குழம்பி இருக்கின்றனர். அதேபோல் அந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவனும் மர்மமான முறையில் காணாமல் போகிறான்.
கடைசியில், எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார்? காணாமல் போன சிறுவன் என்னவானான்? ஜி.வி.பிரகாஷ் - பல்லக் லால்வானி இணைந்தார்களா? என்பதே குப்பத்து ராஜாவின் மீதிக்கதை.
நடிப்பில் புதிய பரிணாமத்தை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் வடசென்னை இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். குப்பத்து தலைவனாக பார்த்திபன் தனது வழக்கமான நக்கலுடன் அதகளப்படுத்தியிருக்கிறார். சிறப்பான நடிப்பு. பல்லக் லால்வானி தைரியமான வடசென்னை பெண்ணாக தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்று கவனம் பெறுகிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சி தோற்றத்தில் வந்து செல்கிறார். இந்தளவிற்கு சித்தரித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. நல்ல கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை. படைப்பாளிக்கு அந்த பொருப்பு மிக அவசியம்.
ஜி.வி.பிரகாஷ் உடன் பெரும்பாலான காட்சிகளில் வரும் யோகி பாபுவின் காமெடியும் பெரிதாக எடுபடவில்லை. சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஆர்.என்.ஆர்.மனோகர், கிரண், அஜய் ராஜ், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் சில சம்பவங்களை கோர்த்து படத்தை இயக்கியிருக்கிறார். எனினும் அந்த சம்பவங்கள் படத்திற்கு பெரிதாக உயிர் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வடசென்னை பேச்சும் இயல்பானதாக தோன்றவில்லை, பெரும்பாலான இடங்களில் நாடகம் போல் தோன்ற வைக்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்வியலை மிகைமைப்படுத்தி காட்டியிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில். பாடல்கள் ரசனையாக இருக்கிறது.
மொத்தத்தில் எங்க ராஜா நீங்க இல்லை என்று உழைக்கும் மக்கள் சொல்லும் அளவிற்கு கற்பனையை திணித்திருக்கிறார் இயக்குநர். உழைக்கும் மக்கள் வாழும் பதியில் இருந்து வரும் ஒரு பெரும் சமூகம் ஆகச்சிறந்த மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார்கள். பல்வேறு துறைகளில் தங்களுக்கென் தனி இடத்தை அவர்கள் பெற்று வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் பொருளாரம் மேம்படாமல் இருக்கலாம் ஆனால் சுய ஒழுக்கத்திலும் மற்றவர்கள் உதாரணமாக இருப்பதிலும் வடசென்னை மக்கள் வாழ்கை உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் பார்க்கும் போது ஆதீத கர்ப்பனையில் பெரும் மக்களின் வாழ்வியலை சித்திரிக்கிறது இப்படம். மொத்தத்தில் “குப்பத்து ராஜா” கற்பனையில் உருவான கனவு.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மே 10ல் களம் காணும் விஷால் நடிக்கும் ‘அயோக்யா’
துனுக்குகள்
வெங்கட் மோகன் இப்படத்தை இயக்குகிறார்
இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்
இப்படம் வரும் மே 10ல் வெளியாகிறது
இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அயோக்யா' . இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இவர்களுடன் பார்த்திபன், சோனியா அகர்வால் இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கும் இப்படத்தை எடிட் செய்கிறார்ஆண்டன் ரூபன்.
படப்பிப்பை முடித்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு சன்னி லியோன் ஆடவிருந்ததாக இருந்தது. சில காரணங்களால் அவருக்கு பதிலாக வேறொரு மாடல் அழகி இந்த பாடலுக்கு ஆடவிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படம் எப்போது வெளியாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஷால்.
Quote:Here is the release date of #Ayogya#AyogyaFromMay10@RaashiKhanna@TagoreMadhu@ivenkatmohan @rparthiepan @soniya_agg @SamCSmusic @LahariMusic @Screensceneoffl @AntonyLRuben pic.twitter.com/Bpz1d26sT2
— Vishal (@VishalKOfficial) April 8, 2019
[color][size][font][size]
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஷால் அயோக்யா மே மாதம் 10ஆம் நாள் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.[/size][/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
துனுக்குகள்
இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்
அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியானது.
தர்பார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறை அதிகாரி வேடமிட்டு இப்படத்தில் நடிப்பதாக தெரிகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பேட்ட படத்தைத் தொடந்து அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திரையுலக பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தொரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யாருடைய படமாக இருந்தாலும் அந்த படம் வெளியான அன்றே தனது இணைதளபக்கத்தில் பதிவேற்றி படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ். தமிழ்ராககர்ஸ் இணையதளத்தை முடக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தும் திரைப்படங்கள் வெளியாவதை இதுவரை தடுக்க முடியவில்லை.
View image on Twitter
Quote:
[/url]A.R.Murugadoss
✔@ARMurugadoss
Here you go guys!!! The first look of our very own Thalaivar in #Darbar @rajinikanth @LycaProductions #nayanthara @santoshsivan @anirudhofficial #sreekarprasad #pongal2020
54.2K
8:30 AM - Apr 9, 2019
[color][size][font][size][color][size][font]
13.7K people are talking about this
Twitter Ads info and privacy
[/font][/size][/color]
[/size][/font][/size][/color] Quote:
A.R.Murugadoss
✔@ARMurugadoss
· Apr 9, 2019
Here you go guys!!! The first look of our very own Thalaivar in #Darbar @rajinikanth @LycaProductions #nayanthara @santoshsivan @anirudhofficial #sreekarprasad #pongal2020
Quote:
Tamil Rockers@tamilrockersN
Coming soon[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f601.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f601.png[/img]
26
12:14 PM - Apr 9, 2019
Twitter Ads info and privacy
[color][size][font][size]
See Tamil Rockers's other Tweets
[url=https://twitter.com/tamilrockersN]
தமிழ்சினிமாவிற்கு சாபக்கேடாக தமிழ்ராக்கர்ஸ் இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் ‘தர்பார்' படத்தின் அறிவிப்பை ஏ.ஆர். முருதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்ததும் கம்மிங் சூன் என்று பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள் தமிழ்ராக்கர்ஸ்.
நாளை படப்பிடிப்பு நாளை தொடங்கவிருக்கும் நிலையில் தமிழ் ராக்கர்ஸின் இந்த சவால் ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சவாலை படக்குழு எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்[/size][/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மார்வெல் உலகம் தமிழ் நாட்டிற்கு வந்தால்.... கோலிவுட் சூப்பர்ஹீரோ சப்ஜெக்ட்!!
நம்ம கோலிவுட் நடிகர்களை வைத்து அவெஞ்சர்ஸ் படம் உருவாக்கினால் எந்த ஹீரோ எந்த சூப்பர்ஹீரோவாக இருப்பார்கள் என கற்பனையாக...!
சூப்பர் ஹீரோக்களால் நிறைந்தது அவெஞ்சர்ஸ் படம். ஹாலிவுட்டை மட்டுமே கலக்கும் அவெஞ்சர்ஸ் படத்திற்கு போட்டியாக நம்ம கோலிவுட் நடிகர்களை வைத்து அவெஞ்சர்ஸ் படம் உருவாக்கினால் எந்த ஹீரோ எந்த சூப்பர்ஹீரோவாக இருப்பார்கள் என கற்பனையாக...!
ஐயன் மேன் (Iron Man) - தளபதி விஜய்
அதிரடியுடன் கலந்த ஹியூமர் தான் ஐயன் மேனின் ட்ரேட் மார்க். அதிரடியுடன் ஹியூமர் சென்ஸ் (கில்லி, வசீகரா, ஃப்ரண்ட்ஸ்) உடையவர்களில் விஜயை மிஞ்ச யார் உண்டு. அவெஞ்சர்ஸ் உலகின் மிக முக்கிய கிட்டதட்ட தலைவர் அந்தஸ்த் உடையவர் ஐயன் மேன், அதுவே கோலிவுட்டில் தளபதிக்கும். மேலும் ஐயன் மேனாக விஜய் தான் கரெக்ட் என நாங்கள் மட்டும் இல்லை கதாநாயகிகள் சமந்தா, காஜல் ஆகியோரும் மார்வெல் நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
கேப்டன் அமெரிக்கா (Captain America) - சூர்யா சிவக்குமார்
முன்னாள் இராணுவ வீரரான கேப்டன் அமெரிக்கா, சிங்கிள் பசங்களின் வழிக்காட்டி, அதுவே நம்ம சூர்யாவிற்கும் பொருந்தும். தனி ஆளாக போராடுவது, செதுக்கிய உடம்பு (வாரணம் ஆயிரம்), சிங்கிள் பாய் மற்றும் நண்பனுக்காக கர்ணனாக இருப்பது (ஃப்ரெண்ட்ஸ், பிதாமகன்) என சூர்யா கேப்டன் அமெரிக்காவாகவே மாறி விடுவார். ஹாலிவுட் உலகில் ஐயன் மேனை எதிர்த்து போராடுவார் கேப்டன் அமெரிக்கா. கோலிவுட் உலகில் அது நடந்தால், கோலிவுட் ஐயன் மேனை (விஜய்) எதிர்க்கும் திறன் இந்த கேப்டன் அமெரிக்கா (சூர்யா) விற்கு மட்டுமே.
தோர் (Thor Odinson) - தல அஜித் குமார்
அவெஞ்சர்ஸ் உலகின் உண்மையான கடவுள் தோர் தான். தனி ஆளாக ஒரு கிரகத்தையே காப்பாற்றும் வல்லமை படைத்தவர் தோர். லோகி, சொந்த அக்கா என பலர் முதுகில் குத்தினாலும் அதனை எல்லாம் தாங்கி எழுச்சி கண்டு, தானோஸை வீழ்த்தும் வல்லமை படைத்த ஒரே அவெஞ்சர் தோர். தோரின் அனைத்து குணாதிசயங்களும் ஒன்றே பெற்ற கோலிவுட் சூப்பர்ஹீரோ நம்ம தல தான் (வாலி, வேதாளம்) என்றால் அது மிகையாகாது. இடி கடவுள் தோர் என்றால், ஸ்கிரின் பிரசென்ஸ் மூலமே இடிக்கு சமமான பவரை (பில்லா) பாய்ச்ச கூடியவர் நம்ம தல அஜித்.
ஹல்க் (Hulk) - சீயான் விக்ரம்
அமைதியான ப்ரூஸாக ஒரு வடிவம், அட்டுழியம் செய்யும் ஹல்க் ஆக மற்றுமொரு பரிமாணம் பெற்றது ஹல்க் சூப்பர்ஹீரோ. ஹாலிவுட் ஹல்க்-க்கு சிஜிஐ பல செய்ய வேண்டும். ஆனால் நம்ம சீயான் (பீமா, ஐ) நினைத்தால், சிஜிஐ எதுவும் இல்லாமலே இரண்டு வெவ்வேறு பரிமாணங்களையும் அல்வா சாப்பிடுவது போல் செய்து விடுவார். ஒரு தலை காதல், தன்னை தானே கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை என ஹல்க்-க்கு உரிய அனைத்து அம்சங்களையும் தன் பாணியில் அசல்டாக விக்ரம் (சேது) செய்து விடுவார்.
ப்ளாக் விடோ (Black Widow) - சமந்தா
அழகான சூப்பர்ஹீரோ ப்ளாக் விடோக்கு கோலிவுட் உலகில் டாப் சாய்ஸ் சமந்தா தான். ப்ரூஸ் மீது ஒரு அக்கறை, ஸ்பையாக திறமை பெற்ற ப்ளாக் விடோ, வயசாகாமல் இருக்கும் சக்தியும் பெற்ற சூப்பர்ஹீரோ. பாணா காத்தாடி சமந்தாவை விட யூ டர்ன் சமந்தா இளமையாக தான் தெரிகிறார். முகத்தில் ஒரு அப்பாவி தனமும் சக்தியும் பெற்ற பெண் சூப்பர்ஹீரோ ப்ளாக் விடோ. கோலிவுட்டில் இவை பொருந்துவது சமந்தாவிற்கு தான்.
ஹாக் ஐ (Hawk Eye) - ஆர்யா
ஹாக் ஐ சூப்பர்பவர் இல்லாத மனித சூப்பர்ஹீரோ என கூறலாம். தன்னுடைய அசாத்திய பவர், அம்பு திறமை, கரெக்ட் எய்ம்களால் அவெஞ்சர்ஸ் உலகில் சூப்பர்ஹீரோவாக வலம் வருபவர் ஹாக் ஐ. கோலிவுட்டில் அதற்கு ஆப்ட் ஆர்யா தான். சாதாரண நடிகராக வலம் வந்த ஆர்யா, தன்னிடம் ஒரு அசாத்திய சூப்பர்ஹீரோ இருக்கிறான் என நான் கடவுள் படம் மூலம் நிரூப்பித்தார்.
நிக் ஃப்யூரி (Nick Fury) - ரஜினிகாந்த்
சூப்பர்ஹீரோகளாக இருப்பதை விட அந்த சூப்பர்ஹீரோகளை ஒருங்கிணைத்து அவர்களை வழி நடத்துவது தான் மிக கடினம். அதை நம்ம தலைவர் ரஜினிகாந்தை தவிர வேறு யாரால் செய்ய முடியும். நிக் ஃப்யூரி நினைத்தால் சூப்பர்ஹீரோகளை ஆக்கவும் முடியும் அழிக்க முடியும். கோலிவுட்டில் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர் நம்ம தலைவர் தானே.
தானோஸ் (Thanos) - கமல் ஹாசன்
அவெஞ்சர்ஸ் சூப்பர்ஹீரோகளை அழிக்கும் வல்லமை படைத்தவர் தானோஸ். கோலிவுட்டின் ஆண்டவரே கமல் தானே. அழிக்கும் வல்லமை படைக்கும் சிவனாக கல்ட் கிளாசிக் (அன்பே சிவம்) நல்லசிவம் கமல் தான். மேலும் தானோஸ் உடம்பில் மட்டும் வலிமையானவன் இல்லை, மதியிலும் வல்லவர். கோலிவுட்டின் ஆக சிறந்த கலைஞன் கமல் தானே. உடலிலும் உனர்விலும் மதியிலும் வல்லவர் (ஆளவந்தான்) கமல் தவிர வேறுயாறு.
ஸ்பைடர்-மேன் (Spider-Man) - ஜீவா
அனைவரது ஃபேவரட் சூப்பர்ஹீரோ, ஸ்பைடர்-மேன். ஐயன் மேனை தன் தந்தையாகவே பாவித்துவரும் சூப்பர்ஹீரோ ஸ்பைடர் மேன். உண்மையில் ஐயன் மேனும் ஸ்பைடர்-மேனும் சிறந்த நண்பர்கள். கோலிவுட் உலகின் ஜாலி நாயகன் (சிவா மனசில் சக்தி) ஜீவா தான். மற்றும் ஐயன் மேன் ஸ்பைடர்-மேன் காம்போவும் இதில் கரக்டாக இருக்கும் (நண்பன்) என்றால் அது இவராக தான் இருக்கும்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ப்ளாக் பேந்தர் (Black Panther) - விஷால்
அவெஞ்சர்ஸ் உலகின் வித்தியாசனமான தனித்துவமான சூப்பர்ஹீரோ ப்ளாக் பேந்தர். வாகாண்டா தலைவரான ப்ளாக் பேந்தர், தனக்கென ஒரு தனி உலகையே உருவாக்கியிருப்பார். மேலும் அவெஞ்சர்ஸ் உலகின் கருப்பு சூப்பர்ஹீரோ ப்ளாக பேந்தர் தான். கோலிவுட் உலகின் கருப்பு சூப்பர்ஹீரோ (ஆம்பள), விஷால் மட்டும் தானே. ஆக்ஸன் (திமிரு) மற்றும் எமோசன்ஸ் (இரும்புதிரை) ஒன்றே பெற்ற விஷால் நடிகர், தயாரிப்பாளர், தலைவர் என சூப்பர்ஹீரோவாகவே வாழ்ந்து வருகிறார்.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (Doctor Strange) - மாதவன்
அறிவான சூப்பர்ஹீரோ டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். அறிவுடன் அழகும் பெற்ற ஒரே கோலிவுட் சூப்பர்ஹீரோ மாதவன் தான். பல மேஜிக் வித்தைகளுடன் தந்திரமானவர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். தன் நடிப்பால் மேஜிக் செய்ய கூடியவர் மேடி (மின்னலே, இறுதிசுற்று). பல டைம் லூப்களில் பயணிக்க கூடியவர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். பல ஆண்டுகளாக 2000 யில் பார்த்த மாதிரியே இருக்கிறார் மேடி. உண்மையில் டைம் லூப்பை உபயோகிப்பவர் மேடி (அலைப்பாயுதே) தான் போல.
ஸ்டார் லோர்ட் (Star Lord) - கார்த்தி
பவர்ஃபுல் அதே நேரம் சிரிப்பூட்டும் சூப்பர்ஹீரோ ஸ்டார் லார்ட். சீரியஸாகவும் (தீரன் அதிகாரம் ஒன்று), கேலி கிண்டலுமாகவும் (சிறுத்தை) நடிக்க கூடியவர் கோலிவுட்டில் கார்த்தி தான். ஐம்புலங்களையும் கட்டுப்படுத்தும் திறன் பெற்றவர் ஸ்டார் லார்ட். சோழப்பரம்பரையின் தூதுவனாக (ஆயிரத்தில் ஒருவன்) நடித்து லைக்ஸ் பெற்றவர் கார்த்தி. மேலும் தன் கண்ணில் ஒரு துறுதுறு, கள்ளத்தனம் கூடிய கார்த்தி, ஸ்டார் லார்ட் செய்யும் சில மொக்கை காமெடிகளுக்கும் ஆப்டாக இருப்பார்.
கமோரா (Gamora) - தமன்னா
ஒரு மர்மத்தை தன்னுள் புதைத்து வாழும் அவெஞ்சர்ஸ் சூப்பர்ஹீரோ, கமோரா. ஸ்டார் லோர்ட்டின் காதலியான கமோரா, வில்லனின் வளர்ப்பு மகளும் தான். நார்மல் கோலிவுட் படங்களின் ஃபார்மூலாவாக இருக்கும் கமோராவின் குணாதிசயங்களை தமன்னாவால் அப்படியே வெளிகாட்ட முடியும். ஸ்டார் லோர்ட் (கார்த்தி) ஜோடியாக நடிக்க தமன்னாவை விட சிறந்த ஜோடி யாரும் இருக்க முடியாது.
ராக்கெட் ரக்கூன் (Rocket Raccoon) - விஜய் சேதுபதி (வாய்ஸ்)
அவெஞ்சர்ஸ் உலகில் கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸியில் வரும் சுட்டி சூப்பர்ஹீரோ தான் ராக்கெட். இதற்கு வின் டீசல் வாய்ஸ் கொடுத்திருப்பார். அனைத்து சூப்பர்ஹீரோக்களையும் சகட்டு மேனியாக கலாய்ப்பதையே ஃபுல் டைம் வேளையாக வைத்துள்ளது ராக்கெட். கோலிவுட்டில், தனக்குகென தனி வாய்ஸ் மாடுலேசன் கொண்டவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வாய்ஸ் மாடுலேசன் செய்தே காமெடியில் கலக்குபவர் விஜய் சேதுபதி (காதலும் கடந்து போகும், சூது கவ்வும்). ராக்கெட்டின் வாய்ஸ்க்கு விஜய் சேதுபதியை தவிர வேறு யார் வாய்ஸும் ஆப்ட்டாக இருக்காது.
கேப்டன் மார்வெல் (Captain Marvel) - நயன்தாரா
பெண் சூப்பர்ஹீரோகளில் முதன்மையானவர் கேப்டன் மார்வல். கோலிவுட் உலகின் பெண் சூப்பர்ஸ்டார், கேப்டன் மார்வெல் வேறுயாறு நயன்தாரா தான். ஐயன் மேன், கேப்டன் அமெரிக்கா என அனைத்து டாப் சூப்பர்ஹீரோக்களுக்கும் ஈடுக்கொடுக்கும் திறன் படைத்தவர் கேப்டன் மார்வெல். சூப்பர்ஹீரோ ஆகும் முன்பே சூப்பர்ஹீரோக்கள் செய்யும் தொழிலான விமான படையில் பணிபுரிந்தவர் கேப்டன் மார்வெல். சந்திரமுகி முதல் தளபதி 63 வரை அனைத்து கோலிவுட் சூப்பர்ஹீரோகளுடன் நடித்து அவர்களுக்கே டஃப் கொடுத்த நயன்தாரா தான் கோலிவுட்டின் கேப்டன் மார்வெல்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் தர்பார்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் பூஜையுடன் தொடங்கியது.
பேட்ட படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு தர்பார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மும்பையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியது.
2.O படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அஜித் திரைப்பயணத்தில் அதிக நஷ்டம் கொடுத்த படம் எது தெரியுமா?
தல அஜித் என்றால் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர். இவரது படங்கள் எப்படி இருந்தாலும் முதல் மூன்று நாட்கள் ஹவுஸ் புல் கட்சிகளுடன் தான் ஓடும்.
நிறைய தோல்வி படங்கள் கொடுத்தாலும் இவரது ரசிகர்கள் என்றைக்கும் கட்சி மாறுவது இல்லை, அதனால் தான் இன்று இவர் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கிறார்.
இவர் படங்கள் வெற்றி பெற்றால் பல கோடிகள் லாபத்தை கொடுக்கும். அதே வகையில் இவர் படங்கள் நஷ்டம் அடைந்தால் பல கோடிகள் இழப்பும் ஏற்படும்.
அஜித் திரைப்பயணத்தில் விவேகம் தான் அதிக நஷ்டத்தை கொடுத்த படம், இப்படம் சுமார் ரூ 14 கோடி வரை நஷ்டத்தை கொடுத்துள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விஜய் திரைப்பயணத்தில் அதிக நஷ்டம் கொடுத்த படம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் பாஸ் ஆபீஸில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இவரின் படங்கள் வெளியானால் பல சர்ச்சைகள் சேர்ந்தே வரும், அதையும் கடந்து வெற்றியை சந்திக்கும்.
பல கோடிகள் லாபத்தை தரும் இவரது படங்கள் அதே சமயத்தில் தோல்வியடைந்தால் பல கோடிகள் இழப்பும் ஏற்படும், அந்த வகையில் விஜய் திரைப்பயணத்தில் அதிகம் நஷ்டத்தை கொடுத்த படங்கள் எது என்பதை பார்ப்போம்.
விஜய் திரைப்பயணத்தில் மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படம் என்றால் புலி தான், இப்படம் சுமார் 11 கோடி வரை நஷ்டத்தை கொடுத்துள்ளது. இதற்கு காரணம் மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விஜய்யை விட சிரஞ்சீவி முக்கியம்! படப்பிடிப்பின் பாதிலேயே ஓடிய நடிகை!
நடிகர் விஜய் படப்பிடிப்பில் நடித்து வந்த பிரபல நடிகை ரம்பா, சிரஞ்சீவி படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
நடிகர் விஜய் தற்போது கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இவர் புதுபுது இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர். அவரை வைத்து இயக்கிய இயக்குனர்கள் எல்லோரும் ‘‘அவர் அதிகம் பேச மாட்டார். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்’’ என்று பெருமையாகத்தான் பேசுவார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய்யை வைத்து ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தை இயக்கியவர் செல்வபாரதி. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரம்பா. ஆனால் படத்தின் சில காட்சிகள் ஷூட்டிங் மீதம் இருக்கும் நிலையில் ரம்பா “நான் சிரஞ்சீவி படம் நடிக்க போகிறேன்” என்று படப்பிடிப்பின் பாதியிலேயே சென்று விட்டாராம்.
அதனால் இயக்குனர் செல்வபாரதி, டென்ஷன் ஆகிவிட்டாராம். ‘வண்ண நிலவே’ பாடலில் வருவது ரம்பா இல்லையாம், டூப் வைத்து தான் எடுத்தாராம். ரம்பா முகத்தை காட்டாமல் பாடல் முழுவதும் வருவது இதனால்தானாம். ஹிட் ஆன அந்த பாடல் இப்போதும் அதிகம் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வாட்ச் மேன் விமர்சனம்.!
Watch Man Review : டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வாட்ச் மேன்.
சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.வி பிரகாஷ். பண பிரச்சனையில் சிக்கி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.அதே சமயம் தன்னுடைய காதலியான சம்யுக்தாவையும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார். இதனால் மனமுடைந்து போன ஜி. வி பிரகாஷ் ஒரு பங்களாவுக்குள் திருட செல்கிறார்.
யாருமே இல்லாத பங்களாவில் உள்ள நாயிடம் சிக்கி கொள்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது? நாயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்? அந்த பங்களாவுக்குள் அப்படி என்ன தான் நடந்தது? தன்னுடைய காதலியை கரம் பிடித்தாரா? என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.
படத்தை பற்றிய அலசல் :
ஜி. வி பிரகாஷ் இந்த படத்தின் மூலமாக தன்னால் எப்படியான கதைகளிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
ஹீரோயிசம் பேசும் படங்களில் பொதுவாக நாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது. இது தான் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வருவது. இந்த படத்திலும் அதே தான் நடந்துள்ளது. சம்யுக்தாவிற்கு பெரிய அளவில் முக்கியதத்துவம் இல்லை. ஏன் டூயட் பாடல் கூட இல்லை.
யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பு, நேரத்திற்கு ஏற்றார் போல அவர் கொடுக்கும் கமெண்ட்கள் பிரமாதம். ரசிகர்களை சிரிக்க வைப்பது உறுதி.
இசை :
இந்த படத்திற்கும் ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். திரில்லர் படத்திற்கு ஏற்றார் போல பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளார்.
ஒளிப்பதிவு :
நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருடைய பணியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த படத்திலும் அப்படி தான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
எடிட்டிங் :
அந்தோணி இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சிறப்பான முறையில் தன்னுடைய பணியை முடித்து கொடுத்துள்ளார்.
இயக்கம் :
ஏ.எல் விஜய் இப்படத்தை முற்றிலும் மாறுப்பட்ட திரைக்கதையுடன் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார். இந்த படத்திற்கு பிறகு ஜி.வி பிரகாஷிற்கு குழந்தைகள் ரசிகர்களும் அதிகமாகி விடுவார்கள்.
தம்ப்ஸ் அப் :
1. ஜி. வி பிரகாஷ் நடிப்பு
2. நாயின் நடிப்பு
3. யோகி பாபுவின் காமெடி
4. பின்னணி இசை
தம்ப்ஸ் டவுன் :
1. காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாதது தான் குறை.
மொத்தத்தில் வாட்ச் மேன் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாய் சேர்ந்து ரசிக்க வேண்டிய படம்.
ஸ்டார் 3/5
•
|